தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும் இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம். இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே