Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

தமிழீழத்தை முதலில் கோரியவரும் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையும்

இக்கட்டுரையானது மொத்தம் மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்படுகிறது. இதன் முதல் பாகத்தில் யார் தனிநாட்டை முதலில் கோரினார்கள் என்றும் இரண்டாவது பாகத்தில் யார் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பின்னர் அக்கொள்கையை தூக்கிப் பிடித்தார்கள் என்றும் இறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் எவ்வாறு பிறந்தது என்றும் காணலாம்.

இதை எழுதுவதற்கான முதற் காரணம், எமது மக்கள் நடுவணில் மேற்கொள்ளப்படும் தவறுத்தகவல் பரப்புரையின் தாக்கத்தை இயன்றளவு தணித்தலே ஆகும்.

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 1

தனிநாடு கோரப்படுகிறது:-

ஈழத் தமிழர்க்கொரு தனி நாடு வேண்டும் என்று முதன் முதலில் கோரியவர் சிலோன் நாடாளுமன்றத்தில் டி.எஸ். சேனனாயக்காவின் முதலாவது அமைச்சரவையில் பதவி வகித்த செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் செப். 8, 1947 தேர்தலில் வவுனியாவில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றவராவார் [5.1] [1.1].

இவரைப் பற்றிய சிறு முன்குறிப்பு யாதெனில், இவர், டி.எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையினுள் அமைச்சர் பதவி ஆசை காட்டப்பட்டு உள்வாங்கப்பட்டவராவார்; வணிகம் மற்றும் பண்டமாற்று அமைச்சு வழங்கப்பட்டது [5.1]. தமிழரை நிகராளித்துவப்படுத்தி இவர் சிறிலங்கா சுதந்திரம் அடைவதற்கு டி.எஸ் சேனநாயக்காவிற்கு ஆதரவு அளிப்பதை தமிழரசுக் கட்சியினர், எஸ். ஜே. வி. செல்வநாயகம் தலைமையில், கடுமையாக எதிர்த்தனர் [1.2]. இருப்பினும் தனது ஆதரவை சிங்களவருக்கு கொடுத்து சிங்கக் கொடியேறுவதற்கு வழி வகுத்தார் [2].

பின்னர் தனது தவறையுணர்ந்தோ என்னவோ மார்ச் 3, 1951 இல் சிங்கக் கொடி ஏற்றப்பட்டதிற்கு எதிர்ப்புத் தெரிவித்து இவர் தனது பதவியைத் துறந்தார் [5.2]. இவர் மீண்டும் 1952 நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று நாடாளுமன்றம் சென்றார் [6]. இத்தேர்வின் போது கிடைத்த ஆசனத்தைக் கொண்டுதான் பிரிவோம் என்பதை அறிவித்தார்!

main-qimg-0b0ecb2bda4d0891242085e452f17441

'அடங்காத் தமிழர்' செ. சுந்தரலிங்கம் | படிமப்புரவு: விக்கி

இவர் 1956ம் ஆண்டு சூன் மாதம் 24ம் திகதி, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிலோன் நாடாளுமன்றத்தில் செய்த அரியணை உரையின் உச்சக்கட்டத்தின் போது எமக்கான தனி நாடு உருவாக்கப்படல் வேண்டும் என்றார்[4]. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்படும் மாற்றங்கள் நடக்குமாயின்,

"the formation of a separate independent autonomous state of "Tamil Ilankai" composed of Tamil speaking peoples in Ceylon, within the Commonwealth"

  • தமிழ் மொழிபெயர்ப்பு: "சிலோனில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட "தமிழ் இலங்கை" என்ற தனியான பந்தப்படா(independent) தன்னாட்சி நாடு பொதுநலவாய நாடுகளுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்"

என்றார், ஆங்கிலத்தில்[4]. இதன்மூலமே தான் முதன் முதலில் எமக்கு தனி நாடு வேண்டும் என்றும் அறிவித்தார்.

தனிநாட்டிற்காக குழுசேருமாறு முதலில் அழைத்தவர்:-

இத்துடன் தனிநாட்டிற்காக குழுசேருமாறு தமிழர்களிற்கு முதலில் அழைப்புவிடுத்தவரும் செ. சுந்தரலிங்கம் ஆவார். இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 19/20ம் திகதி நடைபெற்ற வெசாக் பண்டிகை நாளன்று அவர் வெளியிட்ட 'EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM' என்ற தலைப்பிலான கடிதத்தின் உள்ளடக்கத்தின் இறுதிப் பந்தியில் கீழ்வருமாறு எழுதியுள்ளார் [3.1].

"I humbly ask all Tamils to subscribe to a Solemn Resolve that, until we regain our lost liberty, we shall dedicate ourselves to the task of promoting the cause and prosperity of a Free, Independent, Tamil Nation State of Eylom"

  • தமிழ் மொழிபெயர்ப்பு: இழந்த எழுவுதியை (liberty) மீண்டும் பெறும் வரை, பரியான (free), பந்தப்படா (independent), தமிழ் தேச ஈழ அரசின் காரணியத்தையும் செழுமையையும் மேம்படுத்தும் பணிக்கடத்திற்கு நம்மை நேர்ந்தளித்துக்கொள்வோம் என்ற ஒரு முறைசாரானதும் கண்ணியமானதுமான தீர்மானத்திற்கு அனைத்து தமிழர்களும் குழுசேருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

அழைத்தது மட்டுமின்றி 1958இல் வவுனியாவின் எல்லைகளிலிருந்த தமிழ் சிற்றூர்களினுள் சிங்களவர் ஊடுருவுவதைத் தடுக்க தமிழரை திரட்டி சிங்களவருக்கு எதிராக சண்டைக்கு களமிறக்கியதும் இவரே ஆவார். தமிழருக்கு வேட்டைச்சுடுகலன்களை இவர் வழங்கியதாக கூறக்கேள்வி. அதற்காக இவர் 'அடங்காத் தமிழர் முன்னணி' என்றவொரு அமைப்பையும் தோற்றுவித்திருந்தாராம். இதன் மூலம் தான் இவருக்கு "அடங்காத் தமிழன்" என்ற பட்டமும் கிடைக்கப்பெற்றதாக கருத்தப்படுகிறது. இதன் பின்னர் 1959 இல் 'ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி' என்றவொரு தேர்தல் திணைக்களத்தில் பதியப்படாத அரசியல் கட்சியினையும் தோற்றுவித்தார்.

தனிநாட்டிற்காக சண்டைக்கு வருமாறு முதலில் அழைத்தவர்:-

தனிநாட்டிற்கான சண்டைக்கு வருமாறு தமிழர்களிற்கு முதன் முதலில் அறைகூவல் விட்டவரும் செ. சுந்தரலிங்கமே ஆவார். "Eylom: Beginning of the Freedom Struggle; Dozens Documents" (1967) என்ற நூலின் பின்குறிப்பில் [3.2] இல் இவ்வாறு எழுதியுள்ளார்:

"I propose to invite those Eyla Thamils who accept the policy that the time has come for the partition of Ceylon and for the restoration of the Thamil state that existed before the Treaty of Amiens of 1802, to come forward and join the fight for the Freedom and Independence of the Eyla Thamil Nation."

  • தமிழ் மொழிபெயர்ப்பு: சிலோனின் பிரிவினைக்கும் 1802 ஆம் ஆண்டு அமியன்ஸ் உடன்படிக்கைக்கு முன்னரிருந்த தமிழ் அரசை மீட்டெடுப்பதற்குமான நேரம் வந்துவிட்டது என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ளும் ஈழத் தமிழர்களை, ஈழத் தமிழ் தேசத்தின் பரியுடைமையானதும் (freedom) பந்திலாமையானதுமான (Independence) சண்டைக்கு சேர முன்வருமாறு அழைக்க முன்மொழிகிறேன்.

'கிளாப்' என்பவர் வகைப்படுத்திய 17 வகையான நாயகன்களில் இவரை "குமுகாய மரபொழுங்குக்குப் புறம்பானவர்"/Bohemian என்று எழுதுவினைஞர் சச்சி சிறிகாந்தா அவர்கள் ஈழத்தமிழர் வரலாற்றில் வகைப்படுத்தினார், தனது நூலான "The Pirabhakaran Phenomenon" இல் [7.1].

எனினும் இவர் "தேசத் தந்தை" எனப்படாமைக்கு இவர் செய்த ஊத்தை நாச வேலைகளே காரணமாகும்!

உசாத்துணை:

  1. The Fall And Rise Of The Tamil Nation (1995) - V. Navaratnam

    1. Chapter 2

    2. pg. 41-42

  2. It Happened 65 Years Ago: When two independent Tamils pawned Eelam rights - Sachi Sri Kantha, October 12, 2012

  3. Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham

    1. EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM

    2. The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73

  4. C. Suntharalingam - Reminiscences - Prof. Bertram Bastiampillai - Ceylon Daily News - 20 August 2005

  5. Sri Lanka: The Untold Story - K T Rajasingham

    1. Chapter 12: Tryst with Independence

    2. Chapter 14: Post-colonial realignment of political forces

  6. 1952 Election Result

  7. The Pirabhakaran Phenomenon - Sachi Sri Kantha

    1. Part 53

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 2

தந்தை செல்வாவின் தனிநாடு கொள்கை எதிர்ப்பு:-

இந்த தனிநாட்டுக் கோரிக்கையினை ஆரம்பத்திலிருந்தே தந்தை செல்வா எதிர்த்து வந்தார். அவர் சமஸ்டி கொள்கையையே தூக்கிபிடித்தார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப் போர் நிலவியது. பின்னர் இருவரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர்.

சூலை 26, 1957 அன்று பண்டா-செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், கோவத்துடன் இருந்தார் "அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் [2b]. (இவ்வுடன்படிக்கை மூலம் "தந்தை செல்வா" அவர்கள் தாம் கொண்டிருந்த கூட்டாட்சி எ சமஸ்டி கொள்கையைக் கூட தூக்கியெறிந்துவிட்டு அதைவிட மலிவான ஒன்றான "பிரதேச சபை"யையே பெற்றார் சிங்களவரிடமிருந்து. இதனால் கடும் கோபத்திற்காளானார்.)

ஜூலை 28, 1957 தேதியிட்ட திறந்த கடிதத்தில், தந்தை செல்வாவிற்கு எழுதிய சி.சுந்தரலிங்கம் [2b],

"…. Into what a sorry pass have you led the Tamils? I differed from your party in this regard [establishment of one or more linguistic states] to the extent that I wanted an autonomous Tamil state which would constitute a Commonwealth of Dominion of Tamil Ilankai as set out in terms of a motion I moved in Parliament by way of amendment to the Throne speech of 1956. I was all-in-all with your party in regard to the ‘Autonomous Tamil Linguistic State’. I repeat, while your party wanted federation, I wanted separation, because I am convinced since 1955, that no Tamil should trust a Sinhalese politician and certainly not Prime Minister Bandaranaike, to protect Tamil interests…."

  • தமிழ் மொழிபெயர்ப்பு: “நீங்கள் தமிழர்களை எவ்வளவு கழிவிரக்கமான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள்? “1956 ஆம் ஆண்டு அரியணை உரையில் திருத்தம் மூலம் நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் அரசாட்சியையுடைய பொதுநலவாய தமிழ் இலங்கையை உருவாக்கும் ஒரு தன்னாட்சி தமிழ் நாட்டை நான் விரும்பும் அளவிற்கு, இந்த விடயத்தில் மாத்திரம் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியியல் மாநிலங்களை நிறுவுதல்] உங்கள் கட்சியிலிருந்து நான் வேறுபட்டேன். ‘தன்னாட்சி தமிழ் மொழியியல் அரசு’ தொடர்பாக நான் உங்கள் கட்சியுடன் முழுமையாக உடன்பட்டிருந்தேன். மீண்டுமுரைக்கிறேன், உங்கள் கட்சி கூட்டாட்சியை விரும்பியபோதும், நான் பிரிவினையை விரும்பினேன், ஏனென்றால் 1955 முதல், தமிழர் நலன்களைக் காக்க எந்த தமிழரும் ஒரு சிங்கள அரசியல்வாதியை நம்பக்கூடாது, நிச்சயமாக முதன்மை அமைச்சர் பண்டாரநாயக்கவை நம்பக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

என்றார்.

பின்னர் மீண்டும் தந்தை செல்வா சமஸ்டி கொள்கையை ஆதரித்தார்.

தமிழரசுக் கட்சியின் செயற்குழு டிசம்பர் 26 1960 அன்று கூடியது (பம்பல் என்னவென்றால் அக்கட்சியின் தமிழ்ப் பெயர் "தமிழரசு", தமிழில். எனினும் ஆங்கிலத்தில் அதன் பெயர் "Federal Party"; அதாவது சமஸ்டி கட்சி. கட்சியின் பெயரிலேயே முரண்பாடுகளை உடைய கட்சி இதுவாகும் [2a]). அதன்போது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை [5]. அவர் அதற்கு சொன்னது [5],

"இது வன்முறையில் முடியும். ஆயுதப் போர் பிரச்சினையைத் தீர்க்காது".

இதே போன்று இன்னொரு நிகழ்வு கட்சியின் 11ஆவது மாநாட்டில் அரங்கேறியது. கட்சியின் 11ஆவது மாநாடு உடுவிலில் நடந்தது. அதன்போது இளைஞர் அணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றனர் [5]. அப்போது அதை தடுத்த தந்தை செல்வா,

" இதனை நீங்கள் முன்மொழிய வேண்டாம், இதனை நான் எதிர்த்தவன் அல்லன், இது எமது மக்களுக்குப் பாதகமாக முடியும்"

என்றார் [5].

தொடர்ந்து கூட்டாட்சியை தந்தை செல்வா ஆதரித்து வந்ததால் செ. சுந்தரலிங்கம் இவரைக் தொடர்ந்து சாடி வந்தார். 1963இல் செ. சுந்தரலிங்கம் எழுதிய கடிதமொன்றில் தந்தை செல்வாவின் கூட்டாட்சி திட்டத்தை சாடினார். திசம்பர் 20, 1963 என்று எழுதிய கடிதமொன்றில் எதிர்வுகூறல் போன்று எழுதியிருந்தார் [1.1]:

I am satisfied that if the Federal Party [Ilankai Thamil Arasu Kadchi] under Mr Samuel Chelvanayakam continues to claim that their Federal Policy and their Sathyagraha and Ahimsa and Patha-Yathirai plans are alone acceptable to the general body of Eyla Tamils, the Eyla Thamil Nation will take a long time to be reborn. The sufferings and tribulations of the rising generation can hardly be described. But what future generations will have to undergo cannot be imagined.

  • தமிழ் மொழிபெயர்ப்பு: "திரு. சாமுவேல் செல்வநாயகம் தலைமையிலான கூட்டாட்சி கட்சி [இலங்கை தமிழ் அரசு கட்சி] தங்கள் கூட்டாட்சி கொள்கை, சத்தியாக்கிரகம், அஹிம்சை மற்றும் பாதை-யாத்திரைத் திட்டங்கள் மட்டுமே ஈழத் தமிழர்களின் பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று தொடர்ந்து கூறி வந்தால், ஈழத் தமிழ் தேசம் மீண்டும் பிறக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதில் நம்பிக்கை அடைகிறேன். வளர்ந்து வரும் தலைமுறையின் துன்பங்களையும் இன்னல்களையும் விரிக்க முடியாது. ஆனால் எதிர்கால தலைமுறையினர் என்னென்ன அனுபவிக்க நேரிடும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது."

"அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் தேர்தல்களில் தொடர் தோல்விகளின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்ட போது,

"கூட்டாட்சியின் கொள்கை, திட்டம் அல்லது நிகழ்ச்சிநிரலுடன் எனக்கு எந்த தொடர்பும் இருக்காது."

என்று இடித்துரைத்தார் [6]. இதன் மூலம் அவர் தனது தனிநாட்டுக் கொள்கை கொண்டோர் தவிர வேறு யாருடனும் கூட்டு வைக்கவிரும்பவில்லை என்பது தெரிகிறது.

"நாட்டுப்பற்றாளர்" வை. நவரட்ணம் அவர்கள் 1969 ஆகஸ்ட் 27 இல் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டார். அதன் போது தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். இத்தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கோரியிருந்தனர் [5]! இதனால் மக்களின் ஆதரவு இவரிற்கு பெரும்பான்மையாக கிட்டாமல் போக இவர் தோல்வி கண்டார். அதே நிலைமை தான் 1977 தேர்தலிலும் இவருக்கு நேர்ந்தது.

அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோதும் கூட்டாட்சி அடிப்படையிலான மாற்று யாப்பையே முன்வைத்தார் [5].

கால மாற்றம்:-

1973 செப்டம்பரில் மல்லாகத்தில் நடந்த தமிழரசுக் கட்சியின் 12வது ஆண்டு மாநாட்டில், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது [3].

இத்தனிநாட்டுக் கோரிக்கையை முதலில் ஏற்காத சமஸ்டியை தூக்கிப் பிடித்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். தொண்டமான் ஆகியோர் கூட்டுத்தலைவர்களாகி தமிழர் விடுதலைக் கூட்டணி என்றொரு கட்சியை 1975இல் தோற்றுவித்து ஒரு கட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டனர்.

"தந்தை" செல்வா அவர்கள் மட்டு நகரில் ஆற்றிய உரை ஒன்றின் போது கீழ்க்கண்டவாறு தனது தனி நாட்டிற்கான கோரிக்கைக்கு ஆதரவை அறிவித்தார்.

"எனக்கு இப்போது எழுபத்தேழு வயதாகிறது, இந்த முதுமையிலும் கூட நான் தமிழர்களின் விடுதலைக்காகப் போராடுகிறேன், ஏனென்றால் கிழக்கு மாகாணத்தில் தமிழ் சமூகத்திற்கு பதுங்கியிருக்கும் ஊறுகளை நான் அறிவேன். தமிழர்கள் தன்மரியாதையுடன் வாழ, ஒரு தமிழ் நாட்டிற்காக இறுதிவரை போராடுவதைத் தவிர வேறு வழியில்லை."

- மே 11, 1975 இல் மட்டக்களப்பில் ஆற்றிய உரையில். [4]

தனிநாடு மக்கள் ஆணை பெறுகிறது:-

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கையானது மக்கள் ஆணைக்கு விடப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது.

இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் 19 நவம்பர் 1976 அன்று நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரையில் [4]

"….கூட்டாட்சி/சமஷ்டி அரசியலமைப்பு கோரிக்கையை நாங்கள் கைவிட்டுவிட்டோம். எங்கள் இயக்கம் முழுவதும் வன்முறையற்றதாக இருக்கும்... சிங்கள மக்கள் ஒரு நாள் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார்கள் என்பதையும், தீவின் மற்ற பகுதிகளிலிருந்து தனித்து ஒரு நாட்டை நிறுவ முடியும் என்பதையும் நாங்கள் அறிவோம்..."

இவ்வுரையின் போது இவர்,

"……. இது இலேசான காரியம் அன்று, வில்லங்கமானது என்பதை நாம் அறிவோம்."

என்றும் கூறினாராம் [5].

பின்னர் 1977 தேர்தலில் இதையே தமது கொள்கையாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் ஆட்புலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இவ்வாணைக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது!

உசாத்துணை:

  1. Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham

    1. The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73

  2. Sri Lanka: The Untold Story - K T Rajasingham

    1. Chapter 14: Post-colonial realignment of political forces

    2. Chapter 16 ‘Honourable wounds of war’

  3. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வெள்ளி விழா மலர்

  4. The Tamil People’s Struggle to be Free

  5. தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை

  6. C. Suntharalingam – Part II: Grandfather’s Letters - S. Ratnajeevan H. Hoole - Colombo Telegraph

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

பாகம் - 2

தந்தை செல்வாவின் தனிநாடு கொள்கை எதிர்ப்பு:-

இந்த தனிநாட்டுக் கோரிக்கையினை ஆரம்பத்திலிருந்தே தந்தை செல்வா எதிர்த்து வந்தார். அவர் சமஸ்டி கொள்கையையே தூக்கிபிடித்தார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப் போர் நிலவியது. பின்னர் இருவரும் வார்த்தை மோதல்களில் ஈடுபட்டனர்.

சூலை 26, 1957 அன்று பண்டா-செல்வா உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர், கோவத்துடன் இருந்தார் "அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் [2b]. (இவ்வுடன்படிக்கை மூலம் "தந்தை செல்வா" அவர்கள் தாம் கொண்டிருந்த கூட்டாட்சி எ சமஸ்டி கொள்கையைக் கூட தூக்கியெறிந்துவிட்டு அதைவிட மலிவான ஒன்றான "பிரதேச சபை"யையே பெற்றார் சிங்களவரிடமிருந்து. இதனால் கடும் கோபத்திற்காளானார்.)

ஜூலை 28, 1957 தேதியிட்ட திறந்த கடிதத்தில், தந்தை செல்வாவிற்கு எழுதிய சி.சுந்தரலிங்கம் [2b],

  • தமிழ் மொழிபெயர்ப்பு: “நீங்கள் தமிழர்களை எவ்வளவு கழிவிரக்கமான நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறீர்கள்? “1956 ஆம் ஆண்டு அரியணை உரையில் திருத்தம் மூலம் நான் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒரு தீர்மானத்தின் அடிப்படையில், தமிழ் அரசாட்சியையுடைய பொதுநலவாய தமிழ் இலங்கையை உருவாக்கும் ஒரு தன்னாட்சி தமிழ் நாட்டை நான் விரும்பும் அளவிற்கு, இந்த விடயத்தில் மாத்திரம் [ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழியியல் மாநிலங்களை நிறுவுதல்] உங்கள் கட்சியிலிருந்து நான் வேறுபட்டேன். ‘தன்னாட்சி தமிழ் மொழியியல் அரசு’ தொடர்பாக நான் உங்கள் கட்சியுடன் முழுமையாக உடன்பட்டிருந்தேன். மீண்டுமுரைக்கிறேன், உங்கள் கட்சி கூட்டாட்சியை விரும்பியபோதும், நான் பிரிவினையை விரும்பினேன், ஏனென்றால் 1955 முதல், தமிழர் நலன்களைக் காக்க எந்த தமிழரும் ஒரு சிங்கள அரசியல்வாதியை நம்பக்கூடாது, நிச்சயமாக முதன்மை அமைச்சர் பண்டாரநாயக்கவை நம்பக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்."

என்றார்.

பின்னர் மீண்டும் தந்தை செல்வா சமஸ்டி கொள்கையை ஆதரித்தார்.

தமிழரசுக் கட்சியின் செயற்குழு டிசம்பர் 26 1960 அன்று கூடியது (பம்பல் என்னவென்றால் அக்கட்சியின் தமிழ்ப் பெயர் "தமிழரசு", தமிழில். எனினும் ஆங்கிலத்தில் அதன் பெயர் "Federal Party"; அதாவது சமஸ்டி கட்சி. கட்சியின் பெயரிலேயே முரண்பாடுகளை உடைய கட்சி இதுவாகும் [2a]). அதன்போது வவுனியாவைச் சேர்ந்த சிற்றம்பலம் தனிநாடுதான் ஒரே வழி என்ற தீர்மானத்தை முன்வைத்தார். அப்போது தந்தை செல்வா அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற விடவில்லை [5]. அவர் அதற்கு சொன்னது [5],

இதே போன்று இன்னொரு நிகழ்வு கட்சியின் 11ஆவது மாநாட்டில் அரங்கேறியது. கட்சியின் 11ஆவது மாநாடு உடுவிலில் நடந்தது. அதன்போது இளைஞர் அணியினர் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைக்க வேண்டும் என்றனர் [5]. அப்போது அதை தடுத்த தந்தை செல்வா,

என்றார் [5].

தொடர்ந்து கூட்டாட்சியை தந்தை செல்வா ஆதரித்து வந்ததால் செ. சுந்தரலிங்கம் இவரைக் தொடர்ந்து சாடி வந்தார். 1963இல் செ. சுந்தரலிங்கம் எழுதிய கடிதமொன்றில் தந்தை செல்வாவின் கூட்டாட்சி திட்டத்தை சாடினார். திசம்பர் 20, 1963 என்று எழுதிய கடிதமொன்றில் எதிர்வுகூறல் போன்று எழுதியிருந்தார் [1.1]:

  • தமிழ் மொழிபெயர்ப்பு: "திரு. சாமுவேல் செல்வநாயகம் தலைமையிலான கூட்டாட்சி கட்சி [இலங்கை தமிழ் அரசு கட்சி] தங்கள் கூட்டாட்சி கொள்கை, சத்தியாக்கிரகம், அஹிம்சை மற்றும் பாதை-யாத்திரைத் திட்டங்கள் மட்டுமே ஈழத் தமிழர்களின் பொதுக்குழுவால் ஏற்றுக்கொள்ளத்தக்கவை என்று தொடர்ந்து கூறி வந்தால், ஈழத் தமிழ் தேசம் மீண்டும் பிறக்க நீண்ட காலம் எடுக்கும் என்பதில் நம்பிக்கை அடைகிறேன். வளர்ந்து வரும் தலைமுறையின் துன்பங்களையும் இன்னல்களையும் விரிக்க முடியாது. ஆனால் எதிர்கால தலைமுறையினர் என்னென்ன அனுபவிக்க நேரிடும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது."

"அடங்காத் தமிழன்" செ. சுந்தரலிங்கம் தேர்தல்களில் தொடர் தோல்விகளின் பின்னர் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளும்படி அழைக்கப்பட்ட போது,

என்று இடித்துரைத்தார் [6]. இதன் மூலம் அவர் தனது தனிநாட்டுக் கொள்கை கொண்டோர் தவிர வேறு யாருடனும் கூட்டு வைக்கவிரும்பவில்லை என்பது தெரிகிறது.

"நாட்டுப்பற்றாளர்" வை. நவரட்ணம் அவர்கள் 1969 ஆகஸ்ட் 27 இல் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கி 1970 ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டார். அதன் போது தனிநாடு கோரிக்கையை முன்வைத்தார். இத்தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தன் தேர்தல் அறிக்கையில் தனிநாட்டுக் கோரிக்கையை முன் வைப்பவர்களிற்கு வாக்களிக்க வேண்டாம் என்றும் கோரியிருந்தனர் [5]! இதனால் மக்களின் ஆதரவு இவரிற்கு பெரும்பான்மையாக கிட்டாமல் போக இவர் தோல்வி கண்டார். அதே நிலைமை தான் 1977 தேர்தலிலும் இவருக்கு நேர்ந்தது.

அதே தந்தை செல்வா 1972 ஆம் ஆண்டு புதிய அரசமைப்பு தொகுக்கப்பட்டபோதும் கூட்டாட்சி அடிப்படையிலான மாற்று யாப்பையே முன்வைத்தார் [5].

கால மாற்றம்:-

1973 செப்டம்பரில் மல்லாகத்தில் நடந்த தமிழரசுக் கட்சியின் 12வது ஆண்டு மாநாட்டில், தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமை கோரும் தீர்மானத்தை நிறைவேற்றியது [3].

இத்தனிநாட்டுக் கோரிக்கையை முதலில் ஏற்காத சமஸ்டியை தூக்கிப் பிடித்த எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் எஸ். தொண்டமான் ஆகியோர் கூட்டுத்தலைவர்களாகி தமிழர் விடுதலைக் கூட்டணி என்றொரு கட்சியை 1975இல் தோற்றுவித்து ஒரு கட்டத்தில் தனிநாட்டுக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டனர்.

"தந்தை" செல்வா அவர்கள் மட்டு நகரில் ஆற்றிய உரை ஒன்றின் போது கீழ்க்கண்டவாறு தனது தனி நாட்டிற்கான கோரிக்கைக்கு ஆதரவை அறிவித்தார்.

- மே 11, 1975 இல் மட்டக்களப்பில் ஆற்றிய உரையில். [4]

தனிநாடு மக்கள் ஆணை பெறுகிறது:-

வட்டுக்கோட்டைத் தீர்மானம் மூலம் தனி நாடு கோரிக்கையானது மக்கள் ஆணைக்கு விடப்பட்டு அதில் வெற்றியும் காணப்பட்டது.

இத்தீர்மானமானது யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள தொல்புரம் வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயிலிற்கு அருகில் பண்ணாகத்தில் நிறைவேற்றப்பட்டது. அங்கு 1976 மே 14 ம் திகதி எஸ். ஜே. வி. செல்வநாயகம், ஜீ. ஜீ. பொன்னம்பலம், சௌ. தொண்டமான் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் ஒன்றுகூடி நடாத்திய தமிழர் விடுதலை கூட்டணியின் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

இதன் பின்னர் 19 நவம்பர் 1976 அன்று நாடாளுமன்றத்தில் தந்தை செல்வா ஆற்றிய உரையில் [4]

இவ்வுரையின் போது இவர்,

என்றும் கூறினாராம் [5].

பின்னர் 1977 தேர்தலில் இதையே தமது கொள்கையாகக் கொண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழர் ஆட்புலங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் இவ்வாணைக்கு மக்களின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றது!

உசாத்துணை:

  1. Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham

    1. The Prophesy of Mr. C. Suntheralingham, December 20, 1963 - Pg 72-73

  2. Sri Lanka: The Untold Story - K T Rajasingham

    1. Chapter 14: Post-colonial realignment of political forces

    2. Chapter 16 ‘Honourable wounds of war’

  3. https://noolaham.net/project/96/9539/9539.pdf

  4. The Tamil People’s Struggle to be Free

  5. தந்தை செல்வாவின் 47வது நினைவேந்தலில் எம்.ஏ. சுமந்திரன் பேசிய உரை

  6. C. Suntharalingam – Part II: Grandfather’s Letters - S. Ratnajeevan H. Hoole - Colombo Telegraph

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

இந்த வரலாற்றை அண்மையில் திருகோணமலையில் சுமத்திரன். பேசி உள்ளார் ஏன்?? பேசினார் என்றால் வாக்கு கேட்ப்பதற்கு ..வென்றால் நாங்கள் என்ன செய்வோம்’’ என்று எதுவும் சொல்லவில்லை இருந்தால் தான் சொல்வது,.....நாங்கள் தான் இளைஞர்களை உசுப்பேற்றி போரட வைத்து கொன்றோம் எனபதும். வரலாறு தான் அதை ஏன் சொல்லவில்லை ?? இதற்கு வாக்கு போடுவார்களா ?? என்ன ??

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

பாகம் - 3

இவ்விறுதிப் பாகத்தில் தமிழீழம் என்ற சொல் பிறந்த கதையை பார்ப்பதற்கு முன்னர் எமது தாய்நாட்டை குறிக்க வழங்கப்பட்ட ஒவ்வொரு சொல்லாக காண்போம்.

தாய்நாட்டைக் குறிக்கும் பெயர்கள்: ஈழத் தமிழகம், தமிழ் இலங்கை, தமிழிலங்கை, ஈழம், தமிழ் ஈழம், தமிழீழம், தமிழ் சிலோன்

  • ஈழத் தமிழகம்:-

முதலிலிருந்தது “ஈழத்‌ தமிழகம்‌" என்ற சொல் தான் [3.1]. இது எப்புராமன் என்ற இயற்பெயரையுடைய பரமஃகம்சதாசனின் பாடலில் இடம்பெற்றுள்ளது. பரமஃகம்சதாசன் ஓர் தமிழ்நாட்டுத் தமிழன் ஆவார். இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திலுள்ள அதிகாரம் என்ற ஊரில் பிறந்தவர் ஆவார் [1].

"வாழ்க "ஈழத்‌ தமிழகம்‌"

வாழ்க இனிது வாழ்கவே!

…….."

பரமஃகம்சதாசன் இயற்றிய இப்பாடல் தான் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தொடக்கக்காலத் தலைவர்களில் ஒருவராகயிருந்த "கோப்பாய் கோமான்"[2] அமரர் கு. வன்னியசிங்கம் அவர்கள் காலத்திலிருந்து அவரது தலைமையில் நியமிக்கப்பட்ட தேசியப்பண் அவையால் தெரிவுசெய்யப்பட்ட பாடலாகும்.

இப்பாடல் தான் கூட்டாட்சி/ சமஸ்டி கோரிய தமிழரசுக் கட்சியின் பாடலாகவும் இருந்தது. அதனால் இது தேசியப் பண் என்ற நிலைக்கு உயர்ந்தது!

இன்னும் சொல்லப்போனால் முதலில் சமஸ்டி கோரி, பின்னர் அதைக் கைவிட்டு பிரதேச சபையை பெற்று, கட்சிக்கு வெளியிலிருந்து தனிநாட்டுக் கோரிக்கை எழுந்த போது அதை எதிர்த்து, பேந்து 1976இல் தனிநாட்டையே தேர்தல் அறிக்கையாகக்கொண்ட ஓர் கட்சியின் பாடலாகயிருந்த பாடல் தான் இதுவாகும்!

அப்பேர்பட்ட இப்பாடலிலுள்ள "ஈழத் தமிழகம்" என்ற சொல்லானது கூட்டாட்சியை ஏற்கும் போதில் வரும் மாநிலத்தினைக் குறித்து பின்னரே பந்தப்படா தனித் தமிழ் நாட்டைக் குறித்தது, கட்சியின் கொள்கை மாறியதால்.

  • தமிழ் இலங்கை:-

இச்சொல் தான் தமிழருக்கு தனிநாட்டை கோரிய முன்னாள் சிலோன் நாடாளுமன்ற உறுப்பினர் "அடங்காத் தமிழர்" சுந்தரலிங்கம் அவர்களால் முதன் முதலில் எமக்கான நாட்டை குறிக்க பாவிக்கப்பட்ட சொல்லாகும்.

இவர் 1956ம் ஆண்டு சூன் மாதம் 24ம் திகதி, தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து சிலோன் நாடாளுமன்றத்தில் செய்த அரியணை உரையின் உச்சக்கட்டத்தின் போது எமக்கான தனி நாடு உருவாக்கப்படல் வேண்டும் என்றார்[4]. தனிச் சிங்களச் சட்டம் இயற்றப்படும் மாற்றங்கள் நடக்குமாயின்,

"the formation of a separate independent autonomous state of "Tamil Ilankai" composed of Tamil speaking peoples in Ceylon, within the Commonwealth"

  • தமிழ் மொழிபெயர்ப்பு: "சிலோனில் தமிழ் பேசும் மக்களைக் கொண்ட "தமிழ் இலங்கை" என்ற தனியான பந்தப்படா(independent) தன்னாட்சி நாடு பொதுநலவாய நாடுகளுக்குள் உருவாக்கப்படல் வேண்டும்"

என்றார், ஆங்கிலத்தில்[4].

இதில் அவர் மொழிந்த வாக்கியத்திலுள்ள "தமிழ் இலங்கை" என்ற சொல் தான் பரியான (free) பந்தப்படா தனித் தமிழ்நாட்டை குறிக்க எழுந்த முதற்சொல்லாகும். இதன் ஆங்கில எழுத்துக்கள் "Tamil Ilankai" என்பவையாகும்.

இச்சொல் வழக்கிற்கு வந்த போதும் "ஈழத் தமிழகம்" என்ற சொல்லானது கூட்டாட்சி என்ற கொள்கையையுடைய தமிழரசுக் கட்சியின் தேசியப்பண்ணில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • தமிழிலங்கை:-

மூன்றாவதாக இந்தியாவிலிருந்து "தமிழிலங்கை" என்ற சொல்‌லும்‌ வழங்கப்பட்டது, ஈழத்தமிழரொருவரால்[3.1]. 1960ஆம்‌ ஆண்டில்‌ "மாமனிதர்" கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பச்சையப்பன்‌ கல்லூரியில்‌ கல்வி கற்றுக்கொண்டிருந்தார். அப்போது அவருக்கு சி. பா. ஆதித்தனார் அவர்களின்‌ தொடர்பு கிடைத்தது. அப்போது அவரைப்‌ பற்றி எழுதிய ஓர் பாடலில்‌ இச்சொல்லைப்‌ பாவித்திருந்தார், எமக்கான நாட்டை அன்னவர் ஏற்படுத்த சொன்னதாக [3.1].

"அலைகடலுக்கு அப்பாலும்‌

தமிழிலங்கை மண்ணில்‌

அரசமைக்க வழி சொன்னான்‌

அவனன்றோ தலைவன்‌"

இச்சொல்லானது சேர்த்தெழுதப்பட்ட சொல்லாகும்.

  • ஈழம்

மூன்றாவதாக வழங்கியது ஈழம் என்ற சொல்லாகும். இதை மொழிந்தவரும் செ. சுந்தரலிங்கம் ஆவார். இதற்கு இவர் பாவித்த ஆங்கிலச் சொல் "Eylom" என்பதாகும். இது தற்போது பாவனையிலுள்ள "Eelam" என்ற ஆங்கிலச் சொல்லின் எழுத்துக்களிலிருந்து வேறுபட்டதாகும்.

இச்சொல்லை இவர் 1962ம் ஆண்டு மே மாதம் 19/20ம் திகதி நடைபெற்ற வெசாக் பண்டிகை நாளன்று அவர் வெளியிட்ட 'EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM' என்ற தலைப்பிலான கடிதத்தின் உள்ளடக்கத்தின் இறுதிப் பந்தியில் பாவித்துள்ளார் [5.1].

Quote

"I humbly ask all Tamils to subscribe to a Solemn Resolve that, until we regain our lost liberty, we shall dedicate ourselves to the task of promoting the cause and prosperity of a Free, Independent, Tamil Nation State of Eylom"

  • தமிழ் மொழிபெயர்ப்பு: இழந்த எழுவுதியை (liberty) மீண்டும் பெறும் வரை, பரியான (free), பந்தப்படா (independent), தமிழ் தேச ஈழ அரசின் காரணியத்தையும் செழுமையையும் மேம்படுத்தும் பணிக்கடத்திற்கு நம்மை நேர்ந்தளித்துக்கொள்வோம் என்ற ஒரு முறைசாரானதும் கண்ணியமானதுமான தீர்மானத்திற்கு அனைத்து தமிழர்களும் குழுசேருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

large.89638639_2741012092634861_42254424

படிமப்புரவு: இது வேசுபுக்கிலிருந்து எனக்குக் கிடைத்த படிமம் | குறிப்பு: இஃது கொண்டு வெளியாகியுள்ள நூலெதுவென்று என்னால் அறியமுடியவில்லை.

மேலும் இச்சொல்லானது சிறிலங்காவின் தமிழ் தேசியப்பண்ணிலும் இடம்பெற்றுள்ளது. எனினும் அங்கு இது ஒட்டுமொத்த தீவையும் குறித்து நிற்கிறது.

"...... ஈழ சிரோமணி

வாழ்வுறு பூமணி...."

எனினும் இதன் பொருளானது ஈழபோர்களின் போதும் பின்னரும் மாற்றம் கண்டுள்ளது.

என்னதான் சிறிலங்காவின் தமிழ் மொழி விருத்து (version) தேசியப் பண்ணில் "ஈழம்" என்ற சொல் இடம்பெற்றிருக்கும் போதிலும் போரின் போதும் போருக்குப் பின்னரான காலப் பகுதியிலும் இச்சொல் தமிழீழத்தை குறிக்கவே வழங்கப்பட்டு வருகிறது. சிங்களவர் கூட இச்சொல்லை எப்பொழுதும் தமிழீழத்தின் சூழமைவில் வைத்தே கதைப்பர்!

இத் தமிழ் மொழி விருத்தை எழுதியவர் மு. நல்லதம்பி ஆவார். அதனை 1950ம் ஆண்டில் எழுதினார்.

  • தமிழ் ஈழம்:-

இச்சொல் முதன் முதலில் யாரால் எங்கு எப்போது முன்மொழியப்பட்டு பாவனைக்கு வந்தது என்பது குறித்து எனக்குத் தெரியவில்லை. எனினும் இது 1970களை அண்டியே பாவனைக்கு வந்திருக்கலாம் என்று துணிபுகிறேன்.

இச்சொல்லைக்கொண்டு தான் "மாமனிதர்" ஆ. இராசரத்தினம் அவர்கள், எல்லாளன் என்னும் புனைபெயரில், தாம் எழுதிய "Tamils Need a Nation, Why?" (1975/1976) என்ற நூலில் "The Socialistic Fedaral Republic of Tamil Eelam" என்பதை எமது நாட்டின் பெயராக முன்மொழிந்தார் [6].

large.firstsymbol.jpg.27fc8beb01bef019ac

'புலிகளின் முதலாவது இலச்சினை, 1978ம் ஆண்டு | படிமப்புரவு: விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1'

பின்னாளில், 1978ம் ஆண்டில், புலிகளின் இலச்சினையில் இந்த 'Tamil Eelam' என்பதின் ஆங்கில எழுத்துக்கள் 'Thamil Ealam' என்று மாறியது. இம்மாற்றமானது 1985ம் ஆண்டு சனவரி வரை தொடர்ந்தது. பின்னர் 1985ம் ஆண்டு சனவரியிலிருந்து மீளவும் 'Tamil Eelam' என்று மாற்றப்பட்டு இன்று வரை அப்படியே பாவிக்கப்பட்டு வருகிறது.

  • தமிழீழம்:-

உணர்ச்சிக் கவிஞர்‌ காசி ஆனந்தன்‌ தலைமையில் மே 19, 1972 அன்று மட்டக்களப்பில்‌ தமிழர்‌ கூட்டணி கட்சியின் மாநாடு நடைபெற்றது. மாநாட்டு மேடையில்‌,

"தமிழீழம்‌ தமிழர்‌ தாகம்‌"

என்ற சொற்றொடர் கொண்ட பதாகை கட்டப்பட்டிருந்தது [3.1]. இதில் தான் முதன் முதலில் "தமிழீழம்" என்ற சொல் பாவிக்கப்பட்டிருந்தது. இச்சொற்றொடரை யார் எழுதினார் என்பது அறியில்லை. மேலுமொரு சுவையான தகவல் யாதெனில் இதுவே வரலாற்றில் பதியப்பட்ட தமிழரின் முதலாவது "தாகம்" முழக்கமுமாகும்.

இச்சொல் நாளடைவில் மக்கள் நடுவணில் புழக்கத்திற்கு வந்து இன்றுவரை ஆளுகை வகையில் நாமிழந்துவிட்ட எமது தாய்நாட்டை குறித்து நிற்கும் சொல்லாக விளங்குகிறது.

  • தமிழ் சிலோன்:-

இச்சொல்லானது "நாட்டுப்பற்றாளர்" வி. நவரத்தினம் அவர்களால் 1991 இல் எழுதப்பட்டு 1995ம் ஆண்டு வெளியான "The Fall and Rise of Tamil Nation" என்ற நூலின் பல பக்கங்களிலும் 'Tamil Ceylon' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டு பாவிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை:

  1. தமிழர் தேசிய கீதம் படைத்த பரமஃகம்சதாசன், தினமணி

  2. "கோப்பாய் கோமான்" அமரர் கு.வன்னியசிங்கம் (கோப்பாய் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

  3. தமிழீழம் சிவக்கிறது - பழ. நெடுமாறன்

    1. பக்கம் 229

  4. C. Suntharalingam - Reminiscences - Prof. Bertram Bastiampillai - Ceylon Daily News - 20 August 2005

  5. Eylom: Beginning of the Freedom Struggle; Dozens of Documents (1962) - C Suntheralingham

    1. EYLA THAMILS! DEDICATE YOURSELVES FOR A FREE INDEPENDENT THAMIL NATION-STATE OF EYLOM

  6. Tamils Need a Nation, Why? - A. Rajaratnam - 1975/1976

ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

முற்றும்🙏

Edited by நன்னிச் சோழன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.