படக்குறிப்பு, AI2027, ஏஐ மூலம் இயங்கும் எதிர்கால உலகை கற்பனை செய்கிறது (Veo ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட படம்) 2 மணி நேரங்களுக்கு முன்னர் 2027ஆம் ஆண்டில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டுப்படுத்த முடியாததாக மாறி, அடுத்த பத்தாண்டுகளில் மனிதகுலத்தின் அழிவுக்கு வழிவகுக்கும் என்று கணிக்கும் ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை தொழில்நுட்ப உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. AI2027 எனப்படும் அந்த விரிவான கற்பனை நிகழ்வுகள், செல்வாக்கு மிக்க ஏஐ நிபுணர்கள் குழுவால் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் அதன் சாத்தியக்கூறு குறித்து