யாழ் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட்டால், அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருப்பதாக சோமரத்ன ராஜபக்ச (Somaratne Rajapakse) தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிருஷாந்தி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ச இவ்வாறு தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்குக் (Anura Kumara Dissanayake) கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.