யாழில் உள்ள பலர் யூத வெறுப்பாளர்கள் என்பதை நான் அறிவேன். அதன் பின்னால் உள்ள காரணங்களையும் நான் புரிந்து கொள்கிறேன். முரண் நகையாக, அதே ஆட்களில் சிலர் இலங்கை முஸ்லிம்கள் மீது பொது பல சேன செய்த அட்டூழியங்களை நான் எதிர்த்த போது என்னை பழித்தவர்களாக இருந்தனர். மேலும் சிலர் யசீதிகள் மீது ஐசில் செய்த அட்டூழியங்களை கண்டும் காணதவராய் இருந்தனர். ஐம்பதை தொடப்போகும் எனக்கு, வாழ்க்கை கற்றுத்தந்த முக்கிய பாடங்களில் ஒன்று, இந்த உலகில் நாம் அறச்சீற்றம் கொள்வது கூட தேர்ந்த எம் நிலைப்பாடுகளின் அடிப்படையில் மட்டுமே