தமிழகச் செய்திகள்

ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்

Tue, 03/01/2017 - 07:14
ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்

 

 
 

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் தனது நண்பர் மூலம் ஒப்படைத்துள்ளார்.

 
 
 
 
ஜெயலலிதா பரிசளித்த பிரசார காரை நாஞ்சில் சம்பத் திருப்பி கொடுத்தார்
 
சென்னை:

அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளராக இருப்பவர் நாஞ்சில் சம்பத். 2 ஆண்டுகளுக்கு முன்பு ம.தி.மு.க.வில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் சேர்ந்தவர்.

அப்போது அவரது பிரசார பயணத்துக்காக ஜெயலலிதா இனோவா காரை பரிசாக வழங்கினார்.

இந்த காரில் நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. பிரசார கூட்டங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து நாஞ்சில் சம்பத் அ.தி.மு.க. கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் ஒதுங்கி இருக்கிறார். தி.மு.க. சேருவார் என்று பேசப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா பரிசளித்த இனோவா காரை நாஞ்சில் சம்பத் இன்று அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்தார். தனது நண்பர் மூலம் காரை ஒப்படைத்துள்ளார்.

இதுபற்றி நாஞ்சில் சம்பத் ‘மாலைமலர்’ நிருபரிடம் கூறியதாவது:-

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. பிரசாரத்துக்காக எனக்கு இனோவா காரை வழங்கி இருந்தார். அதை கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் பயன்படுத்தினேன். எனது சொந்த உபயோகத்திற்கு எடுத்தது இல்லை.

கடந்த 8 மாதமாக பிரசாரம் எதுவும் இல்லை. அதனால் கார் சும்மா நின்று கொண்டு இருந்தது. இதனால் அந்த காரை இன்று நண்பர் மூலம் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் ஒப்படைத்து விட்டேன்.

கேள்வி:- அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலா பொறுப்பேற்று உள்ளார். அடுத்து முதல்- அமைச்சராகவும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று பலர் வற்புறுத்துகிறார்கள். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- அது அவர்களது நடவடிக்கையை பொறுத்து அமையும்.

கே:- சசிகலா செல்லும் பாதை நல்ல திசை நோக்கி செல்கிறதா?

ப:- தெரியவில்லை. இப்போது எதுவும் சொல்ல இயலாது.

ப:- தை பிறந்தால் வழி பிறக்கும்.

ப:- எந்த முடிவும் எடுக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/03114635/1059809/Nanjil-Sampath-Return-to-Jayalalithaa-gift-Innova.vpf

Categories: Tamilnadu-news

தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்க

Tue, 03/01/2017 - 07:14
தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்க
 
 

தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் திரளும் அ.தி.மு.க. தொண்டர்கள் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

 
 
தியாகராயநகரில் உள்ள தீபா வீட்டில் குவியும் அ.தி.மு.க. தொண்டர்கள்
 
சென்னை:

ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க.வை வழி நடத்த வேண்டியது யார்? என்பதில் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே மாறுபட்ட கருத்து நிலவி வருகிறது.

ஜெயலலிதாவுடன் 33 ஆண்டுகளாக இருந்த அவரது தோழி சசிகலா பொறுப்பேற்றால்தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்பது அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் கருத்து.

ஆனால், அ.தி.மு.க.வை சேர்ந்த தொண்டர்களும், அ.தி.மு.க. அனுதாபிகளும் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான தீபா பொறுப்பேற்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

இது தொடர்பாக தொண்டர்களுக்கு தீபா தனது நிலைப்பாட்டை உறுதியாக கூறவில்லை. இப்போது நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. பொறுத்திருங்கள் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா அடுத்தகட்டமாக முதல்-அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கோ‌ஷம் வலுத்து வருகிறது. இது தொடர்பாக அமைச்சர்களும் ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தி.நகரில் உள்ள தீபா வீட்டிற்கு அ.தி.மு.க. தொண்டர்கள் தினமும் படையெடுக்கிறார்கள்.

வீட்டின் முன்பு குவியும் தொண்டர்கள் ‘புரட்சித் தலைவி வாழ்க’ என்று கோ‌ஷம் எழுப்புகிறார்கள். கட்சி பொறுப்புக்கு வரும்படி தீபாவை வலியுறுத்தி வருகிறார்கள். வெளி மாவட்டங்களில் இருந்தும் பலர் வருகிறார்கள். பெண்களும் பெருமளவில் வருகிறார்கள்.

இவ்வாறு குவியும் தொண்டர்கள் இரவு வரை நிற்கிறார்கள். தொண்டர்கள் குவிந்ததும் அவ்வப்போது வீட்டை விட்டு வெளியே வந்து அவர்களை பார்த்து கும்பிட்டு பொறுமையாக இருக்கும்படி கூறுகிறார்.

ஆனால் தொண்டர்கள் அவரிடம் கட்சிக்கு வாருங்கள் என்று வலியுறுத்துகிறார்கள். அவர்களிடம் முகவரி, மொபைல் எண் ஆகியவற்றுடன் அவர்களது கருத்தையும் பதிவு செய்யும்படி கூறுகிறார். நேற்று ஒரே நாளில் 3 பதிவேடுகள் நிரம்பியது.

அங்கு திரளும் தொண்டர்கள் ஜெயலலிதா வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்றும் தீபாவை வற்புறுத்துகிறார்கள்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/03121124/1059818/AIADMK-volunteers-crowd-in-TNagar-Deepa-house.vpf

Categories: Tamilnadu-news

'ஓட்டெடுப்புக்குச் செல்வாரா ஓ.பன்னீர்செல்வம்?!' -கார்டன் கொந்தளிப்பின் பின்னணி

Tue, 03/01/2017 - 07:00
'ஓட்டெடுப்புக்குச் செல்வாரா ஓ.பன்னீர்செல்வம்?!' -கார்டன் கொந்தளிப்பின் பின்னணி

ops_vardha_11495.jpg

' பொங்கலுக்குள் சசிகலா முதல்வர் ஆவார்' என மன்னார்குடி உறவுகள் பேசி வந்தாலும், முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இதுவரை எந்தப் பதிலும் இல்லை. 'முதலமைச்சர் பதவியை விட்டுத் தருவாரா என்பதைக் காட்டிலும் அவரது மௌனம்தான் தம்பிதுரை உள்ளிட்டவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். 

அண்ணா தி.மு.க.வின் புதிய பொதுச் செயலாளராக நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டார் சசிகலா. அதேநேரம், ' கட்சிக்கும் ஆட்சிக்கும் சின்னம்மாவே தலைமை தாங்க வேண்டும்' என அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜு உள்ளிட்டவர்கள் பேசி வருகின்றனர். நேற்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வெளியிட்ட அறிக்கை, அரசியல் கட்சிகள் மட்டத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியது. ' ஆட்சித் தலைமை ஒருவரிடமும் கட்சித் தலைமை இன்னொருவரிடமும் இருப்பது, இந்தியாவில் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதையும்; ஆட்சித் தலைமையும் கட்சித் தலைமையும் ஒன்றாக, ஒரே இடத்தில் ஒருவரிடமே இருக்கும் போது அந்த அரசு ஒருமித்த சிந்தனையோடும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல் திட்டங்களோடும் இயங்குவதை பார்த்திருக்கிறோம். ஆட்சியும் கட்சியும் வெவ்வேறு தலைமைகளைப் பெற்றதால் பல்வேறு சங்கடங்களுக்கும் செயல்திறன் இல்லாத நிலைக்கும் சில அரசுகள் தள்ளப்பட்டு, காலப்போக்கில் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்திருப்பதையும் வரலாறு நமக்குச் சொல்கிறது' என அதிர வைத்தார் தம்பிதுரை. ஜெயலலிதா சமாதியில் மொட்டை போட்டுக் கொண்டு மூன்று அமைச்சர்கள் சசிகலாவை முன்மொழிந்தபோதும் தலைமைக் கழகத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு அவசர அழைப்பு எனத் தகவல் அனுப்பிவிட்டு, பிறகு அப்படியொரு கூட்டமே திட்டமிடமில்லை என அறிவித்ததையும் சந்தேகத்தோடு கவனிக்கிறார்கள் அ.தி.மு.க தொண்டர்கள். 

thambidurai_11304.jpg"தம்பிதுரையின் கோபத்திற்கு சில காரணங்கள் இருக்கின்றன. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, துணைக் குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மோடி ஆகியோருக்கு புத்தாண்டு வாழ்த்துச் சொல்லியிருந்தார் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். பிரதமருக்கு எழுதிய வாழ்த்து கடிதத்தில், 'தங்களது தலைமையில் நாடு எல்லா வளங்களையும் பெற்றும் முன்னேற்றம் அடைய வாழ்த்துவதாக' தெரிவித்திருந்தார். இதுதான் கார்டன் வட்டாரத்தைக் கொதிக்க வைத்துவிட்டது. ' அடுத்தடுத்த ரெய்டுகளால் நம்மை வழிக்குக் கொண்டு வரும் வேளையில் மத்திய அரசு செயல்படுகிறது. மற்ற மாநில முதலமைச்சர்களே அமைதியாக இருக்கும்போது, இவர் எதற்கு தேவையில்லாமல் வாழ்த்த வேண்டும்; அவர் என்ன மனநிலையில் இருக்கிறார்?' எனக் கேள்வி எழுப்பினர் கார்டன் வட்டாரத்தில். இதையடுத்து, மக்களவை துணை சபாநாயகர் லெட்டர் பேடிலேயே, சசிகலாவை முன்னிறுத்தி அறிக்கை வெளியிட்டார். ' நீங்கள் பதவி விலகுங்கள்' என நேரடியாகவே ஓ.பி.எஸ்ஸைப் பார்த்துக் கேட்கிறார் தம்பிதுரை. இதை உணர்ந்துதான், ' துணை சபாநாயகர் லெட்டர் பேடை பயன்படுத்தி இப்படியொரு அறிக்கை வெளியிட்டிருப்பது மிகவும் வெட்கக்கேடான செயலாகும். ஆளுநர் அவர்கள் உடனடியாக மாண்புமிகு முதலமைச்சருக்கு உள்ள பலத்தை சட்டமன்றத்தில் நிரூபிக்க உத்தரவிட வேண்டும்' என அதிர வைத்தார் மு.க.ஸ்டாலின்" என விளக்கிய அ.தி.மு.க சீனியர் ஒருவர், தொடர்ந்து நம்மிடம் பேசினார். 

"நேற்று முதலமைச்சர் பன்னீர்செல்வத்திடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேசியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன். ஓ.பி.எஸ் முன்னால் இப்போது மூன்று விஷயங்கள் உள்ளன. நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் செல்வது; சபையைக் கலைப்பது; பதவியை ராஜினாமா செய்வது. இதில், நம்பிக்கை ஓட்டெடுப்புக்குச் சென்றால், பதவியை இழக்க விரும்பாத அமைச்சர்களும் எம்.எல்.ஏக்களும் ஓ.பி.எஸ்ஸுக்கு வாக்களிப்பார்கள். இன்னும் நான்கரை ஆண்டுகாலம் ஆட்சி மீதமிருக்கிறது. ஆளுநரின் பிடியும் இதில் அடங்கியிருக்கிறது. ஒருவேளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தால், ஓ.பி.எஸ்ஸுக்கு தி.மு.க ஆதரவு கொடுக்கலாம். இதையெல்லாம் உணர்ந்துதான், கட்சியின் சீனியர்கள் மூலம் பன்னீர்செல்வத்திடம் தூதுப் படலத்தை ஆரம்பித்திருக்கிறார்கள். எதற்கும் பதில் சொல்லாமல் மௌனமாகவே நாட்களைக் கடத்தி வருகிறார் அவர். அப்போலோ மருத்துவமனையில் இருந்த கடைசி நாளில், எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து வாங்கியதுபோல, பதவியை விட்டுத் தருவது குறித்து பன்னீர்செல்வத்திடமும் கடிதம் வாங்கியிருக்கிறார்கள். நேற்று மாலை கார்டனுக்குச் சென்றபோதும், இதுகுறித்து விரிவாகவே விவாதிக்கப்பட்டுள்ளது. ' எந்தவிதச் சிக்கலும் இல்லாமல் முதல்வர் ஆக வேண்டும்' என்பதில் உறுதியாக இருக்கிறார் சசிகலா. மத்திய அரசின் துணையோடு கோட்டைக்குள் நடக்கும் விஷயங்களையும் அவர் ரசிக்கவில்லை" என்கிறார் அ.தி.மு.க தலைமைக் கழக நிர்வாகி ஒருவர். 

'மௌனத்தைவிட மிகச் சிறந்த உபதேசம் எதுவும் இல்லை என்பார்கள். ஓ.பி.எஸ்.ஸுன் மௌனம் எதை உணர்த்துகிறது? அரசியல் காய் நகர்த்தல்களில் அவர் வீழ்வாரா? எழுவாரா?' என்ற கேள்விகளும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மத்தியில் எழாமல் இல்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/76680-will-chief-minister-opanneerselvam-go-for-trust-vote.art

Categories: Tamilnadu-news

முதல்வர் பன்னீர் ராஜினாமா?

Mon, 02/01/2017 - 20:14
முதல்வர் பன்னீர் ராஜினாமா?
 
Tamil_News_large_1682338_318_219.jpg
 

முதல்வர் பன்னீர்செல்வம், தன் ராஜினாமா கடிதத்தை, சசிகலாவிடம் வழங்கியதாக வெளியான தகவல், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
'அ.தி.மு.க., பொதுச் செயலராகி உள்ள சசிகலா, முதல்வராக பதவியேற்க வேண்டும்' என, தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். நேற்று, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, 'முதல்வர் பதவியேற்க, சசிகலா முன் வர வேண்டும்' என, வேண்டுகோள் விடுத்தார்.இந்நிலையில், மாலை, முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், போயஸ் கார்டன் சென்றனர். அங்கு, நீண்ட நேரம் ஆலோசனை நடந்தது. அப்போது, பன்னீர்செல்வம், முதல்வர் பதவி ராஜினாமா செய்யும் கடிதத்தை, சசிகலாவிடம் வழங்கியதாக கூறப்படுகிறது; ஆனால், அதை கட்சி நிர்வாகிகள் உறுதிப்படுத்தவில்லை.நீண்ட நேரத்திற்கு பின் வெளியே வந்த, அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் பொன்னையன், ''போயஸ் கார்டனில், ஜெயலலிதாவின் உருவப்படத்தை, சசிகலா திறந்து வைத்தார்,'' என்றார். நிருபர்களின் பிற கேள்விகளுக்கு, பதில் அளிக்க மறுத்து விட்டார். போயஸ் கார்டனில் இருந்து, மீண்டும் தலைமை செயலகம் சென்ற, முதல்வர் பன்னீர்செல்வம், இரவு, 8:00 மணி வரை, தன் அலுவலகத்தில் இருந்துவிட்டு, சென்றார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1682338

Categories: Tamilnadu-news

சசிகலாவுக்கு முக்கியத்துவம் : சொம்பு தூக்கும் செய்தி துறை

Mon, 02/01/2017 - 20:12
சசிகலாவுக்கு முக்கியத்துவம் :
சொம்பு தூக்கும் செய்தி துறை
 
 
 

மறைந்த முதல்வர், ஜெயலலிதா இறுதி ஊர்வல வீடியோ காட்சியில், அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை விளம்பரப்படுத்தி வருகிறது.

 

Tamil_News_large_1682256_318_219.jpg

அரசின் பணிகளை, திட்டங்களை, முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு விழாக்களை, மக்கள் மத்தியில் விளம்பரப்படுத்தி பரப்புரை செய்வது, செய்தி மக்கள் தொடர்பு துறையின் முக்கிய பணி. ஆனால், கழகங்கள் ஆட்சிக்கு வந்த பின், அது தனி மனித துதிபாடும் துறையாகிப் போனது.


அடி பணிந்து நிற்கின்றனர்இருப்பினும், ஆட்சியாளர்கள் என்பதால், யாரும் பெரிதாக கண்டு கொண்டதில்லை.
தற்போது, முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், எல்லாமே மாறியிருக்கிறது.

ஆட்சி பொறுப்பில் இல்லாத சசிகலா முன், துணைவேந்தர்களே அடி பணிந்து நிற்கின்றனர். அதிகாரிகள் பம்முகின்றனர். அமைச்சர்கள் யோகாசனம் செய்கின்றனர்.
இந்த வரிசையில், செய்தி மக்கள் தொடர்புத்துறையும், 'சொம்பு' துாக்குகிறது. அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்த செய்திகளின் வீடியோ தொகுப்பை, மாவட்ட தோறும், 'எல்.இ.டி., டிவி' யில் ஒளிபரப்புவது செய்தித் துறையின் வேலை.
 

எப்படி முக்கியத்துவம்


இதில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இறுதி ஊர்வல காட்சிகளை ஒளிபரப்பி வருகிறது. சமீபத்தில், கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், இதை மக்கள் வருத்தத்துடன் பார்த்து கொண்டிருந்தனர். இந்த வீடியோ காட்சியில், புதிதாக தேர்வு செய்யப்பட்ட, அ.தி.மு.க., பொதுச்செயலர், சசிகலாவுக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்திருந்ததை பார்த்து, பலரும் முகம் சுளித்தனர். ஆட்சி பொறுப்பில் இல்லாதவருக்கு, செய்தி துறை எப்படி முக்கியத்துவம் தரலாம் என, எதிர்ப்பு தெரிவித்தனர்.
 

துதிபாடும் நிலைக்கு


இது குறித்து, அரசுத் துறை அலுவலர்கள் கூறியதாவது:

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா இறுதி சடங்கில், அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து,
அவர் இருக்கும் வீடியோ காட்சிகளை நீண்ட நேரம் காட்டுகின்றனர். அவரை மையப்படுத்தி, மற்ற பதிவுகளை, 'எடிட்' செய்துள்ளனர். ஓர் இடத்தில் கூட, முதல்வர் பன்னீர்செல்வத்தின் முகத்தை பார்க்க முடியவில்லை.
அரசு பதவியில் எதுவும் இல்லாத, சசிகலாவுக்கு மறைமுகமாக, துதிபாடும் நிலைக்கு, செய்தி மக்கள் தொடர்பு துறை தள்ளப்பட்டுள்ளது தான், வேதனை அளிக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1682256

Categories: Tamilnadu-news

தம்பிதுரை அறிக்கை சீர்குலைக்கும் செயல்: ஸ்டாலின்

Mon, 02/01/2017 - 20:11
தம்பிதுரை அறிக்கை சீர்குலைக்கும் செயல்: ஸ்டாலின்
 
 
 

சென்னை : 'முதல்வருக்கு உள்ள பலத்தை, சட்டசபையில் உடனடியாக நிரூபிக்க, கவர்னர் உத்தரவிட வேண்டும்' என, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.
 

 

Tamil_News_large_1682344_318_219.jpg


அவரது அறிக்கை: முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்ற, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் அறிக்கை, அரசியல் சட்டத்தின் மாண்புகளையும், ஜனநாயகத்தையும் சீர்குலைக்கும் விதத்தில் உள்ளது.
 

கொச்சைப்படுத்தி விட்டார்


திடீரென, முதல்வர் பதவியை சிறுமைப்படுத்தி, அரசியல் சட்டப்படி, கவர்னர் செய்து வைத்துள்ள பதவிப் பிரமாணத்தை கொச்சைப்படுத்தி, சசிகலா முதல்வராக வேண்டும் என, ஒரு அறிக்கையை, தம்பிதுரை வெளியிட்டிருக்கிறார். எனவே, முதல்வருக்கு உள்ள பலத்தை, சட்டசபையில் உடனடியாக நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.


கட்சி விசுவாசத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில், தம்பிதுரை இருந்தால், துணை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, எவ்வளவு அறிக்கைகள் வேண்டுமானாலும் கொடுக்கட்டும். ஆனால், அரசியல் சட்டத்திற்கு எதிராகவும், அரசியல் சட்டநெருக்கடியை ஏற்படுத்தவும், துணை சபாநாயகர் பதவியை பயன்படுத்த வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

தம்பிதுரைக்கு வெங்கையா கண்டனம்


சென்னை:''சசிகலா, முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என, லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை, தன் அதிகாரபூர்வ, 'லெட்டர்பேடில்' அறிக்கை வெளியிட்டது தவறு,'' என, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு கூறினார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி:கறுப்புப் பண பதுக்கலை ஒழிப்பதற்காக, வேறு எந்த பிரதமரும் செய்யத் துணியாத நடவடிக்கையை, பிரதமர் மோடி மேற்கொண்டுள்ளார். இதற்கு ஆதரவு உண்டா, இல்லையா என, நேரடியாக கூறாமல், காங்கிரஸ்குழப்பி வருகிறது.
இதுபோன்ற திட்டத்தை, காங்கிரஸ் கொண்டு வராதது ஏன்; பொருளாதார நிபுணர் மன்மோகன் சிங், பிரதமராக இருந்தபோது, கறுப்புப் பணத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காதது ஏன்?

 

முதல்வர் பன்னீர்செல்வம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் பதவியேற்று, சில நாட்களே ஆவதால், அவரது செயல்பாடுகளை மதிப்பிடுவது சிரமம். தமிழக அரசின் செயல்பாடுகளில், மத்திய அரசு தலையிடாது.
சசிகலா, முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என, தம்பிதுரை கூறியிருப்பது, அவர்களது உட்கட்சி விவகாரம். ஆனால், அதை, துணை சபாநாயகர் லெட்டர்பேடில், அவர் அறிக்கையாக வெளியிட்டிருக்கக் கூடாது.
நான் மிகவும் மதித்த, ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுப்பது, எனக்கு மரியாதையாக படவில்லை. அப்பல்லோ மருத்துவர்கள் தந்த அறிக்கையில், சந்தேகப்படுவதற்கு எதுவும் இல்லை. இருப்பினும், உரிய ஆதாரங்களை யாராவது தந்தால், அதன் அடிப்படையில், ஆய்வு செய்வதையும் தவிர்க்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1682344

Categories: Tamilnadu-news

உதயகுமாரை தொடர்ந்து : தம்பிதுரை ராஜினாமா?

Mon, 02/01/2017 - 20:09
உதயகுமாரை தொடர்ந்து : தம்பிதுரை ராஜினாமா?
 
 
 

சசிகலாவுக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய, அமைச்சர் உதயகுமார் தயாராக இருப்பது போல, சசிகலா உறவினருக்காக, எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய, தம்பிதுரை முன்வந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
 

 

Tamil_News_large_1682334_318_219.jpg

ஜெயலலிதா வகித்து வந்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவியில், அவரது தோழி சசிகலா அமர்ந்துள்ளார். தற்போது, முதல்வர் பதவிக்கும் அவரே வர வேண்டும் என, அமைச்சர் உதயகுமார், முதல் குரல் எழுப்பினார். சசி, முதல்வரானால், தேர்தலில் போட்டியிட வேண்டும்.


ஆனால், ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், வாக்காளர்களின் மனநிலை, சசிகலாவிற்கு எதிராக உள்ளது. ஜெயலலிதா நினைவிடத்திற்கு, ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து வரும் பெண்கள்,

சசிகலாவிற்கு எதிராக கோஷமிட்டு செல்கின்றனர். இதன் காரணமாக, அங்கு போட்டியிட்டால், அவர் வெற்றி பெறுவது கடினம் என, உளவுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
 

தயாராக உள்ளார்


எனவே, அவர் பாதுகாப்பான தொகுதியான, மதுரை, திருமங்கலம் தொகுதியில், போட்டியிட முடிவு செய்துள்ளார். அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.,வான, அமைச்சர் உதயகுமார், சசிகலாவிற்கு ஆதரவாக, தன்எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளார் என, கூறப்படுகிறது.


அதேபோல, டில்லியில் கட்சிப் பணிகளை கவனிப்பதற்காக, தன் குடும்ப உறுப்பினரை எம்.பி.,யாக்க, சசிகலா முடிவு செய்துள்ளார்.

 

அந்த நபருக்காக, தன் கரூர் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய, தம்பிதுரை முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

எம்.பி., பதவியை ராஜினாமா செய்தால், அவரை எம்.எல்.ஏ.,வாக்கி, துணை முதல்வர் பதவி தருவதாக, சசிகலா தரப்பினர் உறுதி அளித்துள்ளனர்; அதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாகவே, அவர், சசிகலா முதல்வராக பதவியேற்க வேண்டும் என, அறிக்கை வெளியிட்டுள்ளார்.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1682334

Categories: Tamilnadu-news

தமிழக அமைச்சரவையில், அதிக முக்கியத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் கேட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள, ஆதி திராவிட எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர்.

Mon, 02/01/2017 - 20:07
gallerye_23461721_1682209.jpg

 

  • gallerye_221641413_1682209.jpg

 

தமிழக அமைச்சரவையில், அதிக முக்கியத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் கேட்டு, அ.தி.மு.க.,வில் உள்ள, ஆதி திராவிட எம்.எல்.ஏ.,க்கள் போர்க்கொடி துாக்கி உள்ளனர். கட்சியிலும், ஆட்சியிலும் மற்ற ஜாதியினரையே முன்னிறுத்துவதாக, அவர்கள் பகிரங்க புகார் கூறத் துவங்கியுள்ளதால், பிரச்னை வெடித்துள்ளது.

தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஜெயலலிதா இருந்த வரை, கட்சியிலும், ஆட்சியிலும் ஜாதி வேறுபாடு தலைகாட்டவில்லை. அவர், எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு, அமைச்சரவையில் இடம் கொடுத்தார். ஒரு அமைச்சரை நீக்கும் போது, அந்த சமுதாயத்தைச் சேர்ந்த வேறு ஒருவரையே, அமைச்சராகவும் நியமித்தார்.
 

அமைதி காத்தனர்ஜெயலலிதாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, அனைவரும் வேறுபாடுகளை மறந்து, அடங்கிக் கிடந்தனர். அவர் சொல்லுக்கு, யாரும் எதிர் குரல் எழுப்புவதில்லை. பதவி பறிக்கப்பட்டு, துாக்கி எறியப்பட்டவர்கள் கூட, அமைதி காத்தனர்; 'அம்மாவின் உத்தரவை ஏற்பேன்' என, அடிபணிந்தனர்.
அவரது மறைவுக்கு பின், கட்சிக்குள் ஜாதி ரீதியான பேதம் துவங்கி உள்ளது. முதல்வராக முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த, பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார். பொதுச் செயலராக, அதே சமூகத்தைச் சேர்ந்த சசிகலா, தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவரே முதல்வராகவும் முயற்சித்து வருகிறார். அவர் முதல்வரானால், பன்னீர்செல்வம், மீண்டும் அமைச்சர் ஆக்கப்படுவார்.இதன் காரணமாக, அமைச்சரவையில், முக்குலத்தோர் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும்.

அ.தி.மு.க.,வில் உள்ள, 135 எம்.எல்.ஏ.,க்களில், நடிகர் கருணாஸ், தனியரசு, தமிம்முன் அன்சாரி ஆகியோரும் அடங்குவர்; இவர்கள், வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்றாலும், அ.தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்டனர். எனவே, அவர்களும் அ.தி.மு.க., கணக்கில் வருகின்றனர்.
மொத்தம் உள்ள எம்.எல்.ஏ.,க்களில், 32 பேர் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அடுத்தபடியாக, கவுண்டர் சமூகத்தில், 27 பேர்; முக்குலத்தோர் சமூகத்தில், 20 பேர்; வன்னியர் சமூகத்தில், 19 பேர் உள்ளனர்.
 

மூன்று பேர் மட்டுமே


ஆனால், அமைச்சரவையில், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த, எட்டு பேர்; வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த, ஐந்து பேர்; கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த, ஐந்து பேர் உள்ளனர். ஆனால், அதிக எம்.எல்.ஏ.,க்கள் உள்ள, ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்களில், மூன்று பேர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். சபாநாயகர் தவிர்த்து, முக்கியத்துவம் இல்லாத பொறுப்புகளிலும் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

 

தேர்தலில் கொங்கு மண்டலத்தில், அதிக வெற்றி கிடைத்ததால் தான், அ.தி.மு.க., ஆட்சி அமைக்க முடிந்தது என, கொங்கு பகுதியினர் கூறி வருகின்றனர். ஜெ., மறைவுக்கு பின், யாருக்கு முதல்வர் பதவி என்ற பிரச்னை எழுந்தபோது, எடப்பாடி பழனிச்சாமியை முன்னிறுத்தினர்.
ஆனால், மத்திய அரசின் தலையீட்டுக்கு பின், அந்த வாய்ப்பு மீண்டும் பன்னீருக்கு கிடைத்தது. ஆனாலும், அடுத்த அமைச்சரவை மாற்றத்தின் போது, கொங்கு பகுதியினருக்கு கூடுதல் பதவிகள் கிடைக்கலாம் என, தெரிகிறது.
 

கூடுதல் பிரதிநிதித்துவம் வேண்டும்


இந்நிலையில், ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர்கள், இப்போது கூடுதல் பிரதிநிதித்துவம் கேட்டு, போர்க்கொடி துாக்கி உள்ளனர்.
இது குறித்து, ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த, சில எம்.எல்.ஏ.,க்கள் கூறியதாவது: ஜெயலலிதா இருந்தவரை, கட்சியில் ஜாதி பாகுபாடு கிடையாது; அனைவரையும் ஒன்றுபோல் நடத்தினார். எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு, சபாநாயகர் பதவி அளித்து கவுரவித்தார். அவர் மறைந்த நிலையில், சசிகலா பொதுச் செயலர் ஆனதோடு, முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார்.
 

போதிய பிரதிநிதித்துவம்


இதன் காரணமாக, அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், கொங்கு பகுதியினருக்கும், கட்சியில் அதிக முக்கியத்துவம் கிடைத்துள்ளது. அமைச்சரவையில், முக்கிய துறைகள் எல்லாம், முக்குலத்தோர், கவுண்டர், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் உள்ளது.
எம்.எல்.ஏ.,க்களில், அதிக எண்ணிக்கை உடையவர்களாக, நாங்கள் இருந்தும், அமைச்சரவையில் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்கிறோம். எனவே, மற்ற சமுதாயத்தினருக்கு ஈடாக, எங்களுக்கும் அமைச்சரவையில், கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்; முக்கிய துறைகளை ஒப்படைக்க வேண்டும் என, சசிகலாவை சந்தித்து, வலியுறுத்த உள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1682209

Categories: Tamilnadu-news

எந்தத் தொகுதி வெற்றித் தொகுதி?! - சசிகலாவுக்கு 'ஷாக்' கொடுத்த உளவுத்துறை

Mon, 02/01/2017 - 18:23
எந்தத் தொகுதி வெற்றித் தொகுதி?! - சசிகலாவுக்கு 'ஷாக்' கொடுத்த உளவுத்துறை

 

 

 

'தமிழக முதலமைச்சராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும்' என அ.தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். 'சமுதாய வாக்கு பலத்தோடு அதிக ஓட்டு சதவீதத்தில் எந்தத் தொகுதியில் வெற்றி பெற முடியும்' என மன்னார்குடி உறவுகள் ஆலோசித்து வருகின்றனர். 

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக கடந்த டிசம்பர் 31-ம் தேதி பதவியேற்றார் சசிகலா. கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் கார்டன் அறிவுறுத்தலின்படியே செயல்பட்டு வருகின்றனர். இதையடுத்து, எந்த எதிர்ப்பும் இல்லாமல் முதலமைச்சர் பதவியில் அவர் அமர வேண்டும் என்பதற்காக, காய் நகர்த்தி வருகின்றனர் மன்னார்குடி உறவுகள். "முதலமைச்சர் பதவியை ஏற்ற பிறகு, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நிர்வாகிகளை முடுக்கிவிட்டுள்ளனர். மதுரையில் இருந்து தேனி வரையில் பல தொகுதிகளை அலசி ஆராய்ந்தாலும், அடிமட்டத் தொண்டர்கள் பலத்த அதிருப்தியில் உள்ளனர். இதைத்தான் உளவுத்துறை அறிக்கையும் சுட்டிக் காட்டியுள்ளது" என்கின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர்.

அவர்கள் நம்மிடம் பேசும்போது, " ஜெயலலிதாவைப் போல, சென்டிமெண்ட் உள்ள தொகுதியாக ஆண்டிப்பட்டியைப் பார்க்கிறார்கள். 'ஜெயலலிதா மீதுள்ள அனுதாபமும் சொந்தக் கட்சி பலமும் கூடுதல் பிளஸ். தங்க தமிழ்ச்செல்வனை ராஜினாமா செய்ய வைத்துவிட்டுப் போட்டியிட வைக்கலாம்' என்ற பேச்சு எழுந்தபோது, 'அந்த மாவட்டத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவு. அடிமட்டத் தொண்டர்கள் முதல் பொதுமக்கள் வரையில் பெரிய ஆதரவு இல்லை' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, மதுரை, திண்டுக்கல் என பல தொகுதிகளை அலசி வருகிறார்கள். 'சமுதாய பலம் அதிகமுள்ள ஏதேனும் ஒரு தொகுதியைத் தேர்வு செய்து, அந்தத் தொகுதியில் திருமங்கலம் ஃபார்முலா அடிப்படையில் வேலை பார்த்தால் வெற்றி பெற்றுவிடலாம்' என யோசனை தெரிவித்தாலும், உளவுப் பிரிவு போலீஸார் கொடுக்கும் அறிக்கைகளில் திருப்தியான பதில்கள் இல்லை. நமக்கான தொகுதி எது என்பதை அடையாளம் கண்டுகொள்வதில் அவர்களுக்கு இன்னமும் சிரமம் நீடிக்கிறது" என்கின்றனர் விரிவாக. 

"அ.தி.மு.கவுக்கு செல்வாக்குள்ள பகுதியாக தஞ்சாவூர், திண்டுக்கல், தேனி உள்ளிட்ட சில மாவட்டங்கள் வருகின்றன. இந்தப் பகுதியில் ஜெயலலிதா மறைவையொட்டி, சர்வகட்சி பிரார்த்தனை ஊர்வலத்தை கட்சி நிர்வாகிகள் நடத்தினர். இதற்கு தொண்டர்கள் மத்தியில் எந்த ஆதரவும் இல்லை. கட்சியின் கிளை அமைப்புகளில் சசிகலா பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு ஆதரவு கிடைக்கவில்லை. புதிய பொதுச் செயலாளர் தேர்வு குறித்து, ஆதரவுக் கூட்டங்களை சீனியர் நிர்வாகிகளால் நடத்த முடியவில்லை. காங்கிரஸ் கட்சியைப் போல, நிர்வாகிகள் மத்தியில் சசிகலாவுக்கு பெரிய வரவேற்பு இருந்தாலும், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு இல்லை. இதை எப்படி சரிசெய்வது என்ற ஆலோசனையில் சீனியர்கள் இறங்கியுள்ளனர். கூடவே, தென் மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, மன்னார்குடி உறவுகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நாளொன்றுக்கு 25 முதல் 30 போன்கால்கள் வரையில் வருவதால், யாரை அனுசரித்துச் செல்வது என்ற குழப்பம்தான் அவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா இருந்தவரையில், இப்படியான எந்தச் சிக்கல்களும் அவர்களுக்கு இருந்ததில்லை. இந்தக் குமுறல்தான் கோட்டை வரையில் எதிரொலிக்கிறது. ஒருவேளை சசிகலாவை வேட்பாளராக அறிவித்தால், இந்த அதிகாரிகள் 'முறையாக' தேர்தல் வேலை பார்ப்பார்களா என்ற கேள்வியும் கார்டன் வட்டாரத்தில் எழுந்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாநிலம் முழுவதும் தொண்டர்கள் மத்தியில் அனுதாபம் இருக்கிறது. அதை அவர் பயன்படுத்துவாரா என்ற சந்தேகமும் தொண்டர்களுக்கு இருக்கிறது. எந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிட்டாலும், தொண்டர்கள் தேர்தல் வேலை பார்ப்பார்களா? மக்கள் ஆதரவைப் பெற முடியுமா என்ற கவலைதான் கார்டன் வட்டாரத்தில் வலம் வருகிறது" என்கிறார் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க சீனியர் ஒருவர்.

வெற்றித் தொகுதியை அலசிக் கொண்டே இருக்கின்றனர் மன்னார்குடி உறவுகள். கோட்டையை நோக்கிய கனவுகளும் தீவிரமடைந்துள்ளன. 'பதவிக்கு வருவாரா...? சோனியா காந்தியைப் போல் கட்சியை மட்டும் வழிநடத்துவாரா?' என்ற பட்டிமன்றங்களும் களைகட்டியுள்ளன.

http://www.vikatan.com/news/tamilnadu/76584-intelligence-report-reveals-in-which-constituency-sasikala-will-win.art

ஆர்.கே நகர் தொகுதியை சசிகலா தவிர்க்கச் செய்யும் காரணங்கள்!

 

 

சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதி, முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர்... அந்தத் தொகுதியை, காலியான தொகுதியாக தமிழக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதன்படி, 23.12.16 தொடங்கி, அடுத்த 6 மாத காலத்துக்குள் ஒரு தேதியை இடைத்தேர்தலுக்காக தேர்தல் கமிஷன் நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கும். ஜெயலலிதாவின் மறைவால்... சட்டசபையில் அ.தி.மு.க-வின் பலம் 135-ல் இருந்து, 134 ஆகக் (சபாநாயகர் தவிர்த்து) குறைந்துள்ளது.

சசிகலா

இரண்டு ஆண்டுகளில்... 4 தேர்தல்களைச் சந்தித்த ஆர்.கே. நகர்!

ஆர்.கே.நகர் தொகுதி 2011-16-ம் ஆண்டுகளில் இரண்டு இடைத்தேர்தல்களையும், இரண்டு இயல்பான தேர்தல்களையும் எதிர்கொண்டுள்ளது. ராதாகிருஷ்ணன் நகர் என்ற பெயர் கொண்ட ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதி, கடந்த 1977–ம் ஆண்டு உருவானது. ‘தி.மு.க-வின் கோட்டை’ என்று வர்ணிக்கப்பட்ட சென்னையில், 1977-ம் ஆண்டு எம்.ஜி.ஆருக்குக் கூடுதல் ஆறுதலாக... ஆர்.கே. நகர் தொகுதியில் வெற்றி கிடைத்தது. சென்னையில், அ.தி.மு.க. வெற்றி பெற்ற ஒரே சட்டமன்றத் தொகுதியும் அதுதான்.

9 தேர்தல்களில் 5-ஐக் கைப்பற்றிய அ.தி.மு.க.!

அன்றுமுதல் 2011 வரை ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் 9 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில், அ.தி.மு.க 5 முறை வெற்றிபெற்றுள்ளது. தி.மு.க மற்றும் காங்கிரஸ் தலா இருமுறை வென்றுள்ளன.

ஆர்.கே. நகரில் வென்றவர்கள் யார்யார்?

1977 - நடிகர் ஐசரி வேலன் (அ.தி.மு.க.) வெற்றி. 

1980 - வி.ராஜசேகரன், (இ.காங்கிரஸ்) வெற்றி 

1984 - வேணுகோபால் (காங்கிரஸ்) வெற்றி 

1989 -  எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) வெற்றி 

1991 - மதுசூதனன் (அ.தி.மு.க.) வெற்றி 

1996 - எஸ்.பி.சற்குணம் (தி.மு.க.) வெற்றி 

2001 - சேகர்பாபு (அ.தி.மு.க.) வெற்றி 

2006 - சேகர்பாபு (அ.தி.மு.க.) வெற்றி

2011 - வெற்றிவேல் (அ.தி.மு.க.) வெற்றி 

2016 - ஜெயலலிதா (அ.தி.மு.க.) வெற்றி

இந்தத் தொகுதியில், கடந்த 4 சட்டமன்றத் தேர்தல்களிலும், ஓர் இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க வெற்றிபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

2_12240.jpg

ஆர்.கே.நகர் சென்டிமென்ட்!

* ஆர்.கே. நகர் தொகுதி உருவான முதல் (1977) ஆண்டே நடிகர் ஐசரி வேலன் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்டு வென்றாலும், ஒரு விபத்தில் சிக்கி அவர் கால்கள் முறிந்தன. அதன் பின்னர், ஐசரிவேலனால் முன்புபோல் அரசியலில் தீவிரமாகச் செயல்பட முடியவில்லை. ஆகவே அதில் இருந்து மெல்லமெல்லத் தன்னை விலக்கிக்கொண்டார்.

* வி.ராஜசேகரன் மற்றும் வேணுகோபால் ஆகிய காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களுக்கும் பெரிய அளவில் ஏறுமுகம் ஏதும் இல்லாமலே போனது. ஒருமுறை மட்டுமே இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்து, பின்னர் காணாமல் போனார்கள்.

* தி.மு.க-வின் எஸ்.பி.சற்குணம் மட்டுமே இங்கே இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு... அதில், ஒருமுறை அமைச்சர் பொறுப்பையும் வகித்தவர். முதலில் எஸ்.பி.சற்குணத்தின் கணவர் மரணம் அடைய, அடுத்து அவரும் மரணம் அடைந்தார்.

* ஐசரிவேலனுக்குப் பின்னர் அ.தி.மு.க-வின் சார்பில்... இந்தத் தொகுதியில் இருந்து சட்டசபைக்குப் போனவர்  மதுசூதனன். அவர், கைத்தறித் துறை மந்திரியாக இருந்தபோதே ஊழல் வழக்கில் கைது ஆனார். 

* தி.மு.க-வின் எஸ்.பி.சற்குணத்துக்குப் பின்னால் ஆர்.கே. நகர் தொகுதியில் இரண்டுமுறை எம்.எல்.ஏ-வாக  இருந்தவர் அ.தி.மு.க-வின் சேகர்பாபு. தொடர்ந்து இரண்டு முறை வெற்றிபெற்றபோதும் அவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்படவில்லை. ‘‘அ.தி.மு.க-வில் என்னுடைய உயிருக்குப் பாதுகாப்பு இல்லை’’ என்று சொல்லிவிட்டு, கடைசியில், தி.மு.க-வில் இணைந்துவிட்டார். 

* அடுத்து, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் வெற்றிவேல். தி.மு.க-வில், ஆர்.கே. நகர் தொகுதியை சேகர்பாபுவுக்குத் தர இருந்தும்... அவர், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

ஜெ. தீர்ப்பு, சிறை, மரணம்!

ஆர்.கே.நகர் தொகுதி சென்டிமென்ட், வெற்றிவேலையும், விட்டு வைக்கவில்லை. கடந்த செப்டம்பர் 2014-ம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கின் சிறப்பு நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா தீர்ப்பின்போது... ஜெயலலிதா, முதல்வர் மற்றும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ. ஆகிய பதவிகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். மேல் முறையீட்டின் முடிவில், ஜெயலலிதாவை வழக்கிலிருந்து விடுவித்து, நீதிபதி குமாரசாமி தீர்ப்பளித்தார். இதையடுத்து, அப்போது ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த வெற்றிவேல், தன் பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட வழிவிட்டதோடு, தொகுதியில் சுற்றிச்சுற்றி வேலை பார்த்தார்.

ஜெயலலிதா ஆர்.கே. நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். 2016-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைப் பொதுத் தேர்தலிலும்... அதே, ஆர்.கே. நகர் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால், ஆர்.கே. நகர் தொகுதி எம்.எல்.ஏ-வாக நான்கு மாதங்கள்கூட முடியாத நிலையில் ஜெயலலிதா, செப்டம்பர் 22, 2016 அன்று உடல்நலக் குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா இறந்ததாக அறிவிக்கப்பட்டது.

1_12345.jpg

சசிகலா தேர்வில் ஆர்.கே. நகர் இல்லை!

அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா, ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்று ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கூறப்பட்டது. ஆர்.கே. நகர் என்பதை நிரந்தர முதல்வர் தொகுதியாக தக்கவைக்கவும் இதுவே சிறந்த வழி என்றும் சசிகலாவுக்கு ஆதரவு தரப்பினர் சொல்லி வந்துள்ளனர். ஜெயலலிதாவைப் போன்றே பூஜை, பரிகாரம், நேர்த்திக்கடன் என்ற விவகாரங்களில் தீவிரமாகக் கவனம் செலுத்தும் சசிகலா, ஆர்.கே. நகர் தொகுதியின் சென்டிமென்ட் குறித்தும் அலசிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. 

‘‘அதிக அளவு நாக கன்னிகைகள், சித்தர்கள், சமூக விரோதிகளின் கைகளில் சிக்கிக் கொண்டுள்ள கோயில் நிலங்கள் என்று ஆர்.கே. நகர் தொகுதியின் 90 சதவிகிதப் பகுதி சாபங்களால் சூழப்பட்டுள்ளது. அதிகாரத்துக்கு வருகிறவர்கள், இவைகளுக்குத் தீர்வு காணாமல் போய்க்  கொண்டே இருப்பதால்தான் மரணம், சிறை, உயிர்பீதி போன்ற துர்விஷயங்கள் நடக்கின்றன’’ என்று ஆர்.கே. நகர் தொகுதி குறித்து சசியிடம் அவருக்கு வேண்டப்பட்ட ஜோதிட வல்லுநர்கள் சொன்னதாக போயஸ் கார்டன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆழ ஆராய்ந்து குறி சொன்னவர்களின் தகவலால், ‘ஏதாவது தென்மாவட்டத்தைப் பாருங்கள்’ என்று சசிகலா தரப்புப் பின்வாங்க ஆரம்பித்துள்ளதாம்!

http://www.vikatan.com/news/tamilnadu/76587-this-is-why-sasikala-will-not-prefer-r-k-nagar-constituency.art

Categories: Tamilnadu-news

51 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு

Mon, 02/01/2017 - 16:02
51 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு
 

இலங்கையில் நடந்த இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் அந்நாட்டு சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

 
 
51 தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு
 
கொழும்பு:

தமிழக மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய இலங்கை இடையில் அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை கொழும்பு நகரில் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மத்திய விவசாயம் மற்றும் மீனவளத் துறை மந்திரி ராதா மோகன் சிங் மற்றும் இலங்கை மந்திரி மஹிந்தா அமரவீரா ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு இருநாட்டு அமைச்சர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையில் நீண்ட காலமாக இருநாட்டு சிறைகளிலும் வாடும் மீனவர்களை பரஸ்பரம் விடுதலை செய்வது என்று முடிவு செய்யப்பட்டது. அதேபோல் படகுகளையும் விடுவிக்க இருநாட்டு தரப்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதில், இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியா தரப்பில் இலங்கை மீனவர்கள் மூன்று பேர் விடுதலை செய்யப்பட உள்ளனர்.

முன்னதாக, இலங்கை சிறையில் உள்ள 51 தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டு நடவடிக்கை குழுவின் முதல் கூட்டம் கடந்த டிசம்பர் 31-ம் தேதி புதுடெல்லியில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அடுத்த கூட்டம் வருகின்ற ஏப்ரல் 17-ம் தேதி கொழும்பு நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/01/02204702/1059706/srilanka-to-release-51-Indian-fishermen.vpf

Categories: Tamilnadu-news

முட்டாள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் வி.கே.சசிகலா. ?

Mon, 02/01/2017 - 15:39
முட்டாள் தமிழகத்தின் அடுத்த முதல்வர் வி.கே.சசிகலா ?

sasikala natarajan

நேற்று நாம் நினைத்தது போலவே அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். இதுதான் நடக்கும் என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் நன்றாகத் தெரியும். ஆனால் மக்கள் தான் சிறிது கற்பனையில் இருந்தார்கள். இன்னும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் போன்றவற்றில் தீவிரமாக இயங்கும் கருத்துப்புலிகள் பொதுக்குழுவில் ஒரு பெரிய கலவரம் ஏற்படப் போவதாகவும், சசிகலா ஒ.பன்னீர்செல்வத்தால் விரட்டப்பட போவதாகவும், ஒ.பி.எஸ் தான் அடுத்த பொதுச்செயலாளராக பதவி ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் நம்பிக்கையோடு பேசினார்கள். இன்னும் சிலரோ தீபா தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக புளகாங்கிதம் அடைந்தார்கள். இது கூட பரவாயில்லை... இன்னும் சிலரோ சசிகலா புஷ்பாதான் அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர், அவருக்குப் பிஜேபியின் செல்வாக்கு உள்ளதால் அவர் பொதுச்செயலாளராக வருவது உறுதி என அரசியல் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் பொதுசெயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா சார்பாக மனுதாக்கல் செய்யப்போன அவரது கணவருக்கு மன்னர்குடி மாஃபியா கூட்டம் கொடுத்த தர்ம அடியைப் பார்த்து அவசர அவசரமாக அவர்கள் தங்கள் முடிவுகளை மாற்றிக் கொண்டார்கள்.

அடுத்த முதல்வர் நான்தான் என்று மனப்பால் குடித்துக்கொண்டிருந்த தீபா எங்கே இருக்கின்றார் என்ற அட்ரசே தெரியவில்லை என்கின்றார்கள் விவரம் தெரிந்தவர்கள். மன்னார்குடி மாஃபியா என்ற பட்டம் ஏதோ காழ்ப்புணர்ச்சியில் கொடுக்கப்பட்ட பட்டம் என்று மக்கள் இத்தனை நாளும் நினைத்துகொண்டு இருந்தார்கள் ஆனால் சசிகலா புஷ்பாவின் கணவருக்கு ஊடகங்களின் முன்னிலையில் கொடுக்கப்பட்ட தர்ம அடியைப் பார்த்த பின்னால் அந்தப் பெருமைமிகு பட்டத்திற்கு நூறு சதவீதம் அவர்கள் தகுதியானவர்கள் என்று மக்கள் முடிவு செய்திருப்பார்கள். அடி கொடுத்தது மட்டும் அல்லாமல் வழக்குவேறு தொடுத்திருக்கின்றார்கள். தமிழக ‘அம்மா காவல்துறை’ இப்போது ‘சின்னம்மா காவல்துறையாக’ மாற்றம் அடைந்துவிட்டதை இதில் இருந்து நாம் புரிந்துகொள்ளலாம்.

 ஆக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவிற்கும், எம்.பி சசிகலா புஷ்பாவிற்கும் மரண பயத்தைக் காட்டி பொதுக்குழுவில் எந்த எதிர்ப்பும் இன்றி மன்னர்குடி மாஃபியா கும்பலின் தானைத்தலைவி வி.கே. சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதிலே கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் பொதுமக்கள் மத்தியில் சுத்தமாக சசிகலாவிற்கு ஆதரவு இல்லை என்பதுதான். இது அதிமுகவின் எம்.எல்.ஏக்களுக்கும், அமைச்சர்களுக்கும், எம்.பிக்களுக்கும் நன்றாகவே தெரியும். இருந்தும் அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பையும் மீறி அவர்கள் ஏன் சசிகலாவை தேர்தெடுத்தார்கள் என்றால் அதிமுக தொண்டர்கள் மீதும், தமிழக மக்கள் மீதும் அவர்களுக்கு உள்ள அபரிமிதமான நம்பிக்கைதான். “முட்டாள்கள், பணம் வாங்கிக்கொண்டு ஓட்டுபோடும் அடிமைகள், இவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றார்கள் என்பதற்காக நாம் சின்னம்மாவை தேர்ந்தெடுக்காமல் விடமுடியுமா? இவர்கள் ஓட்டுபோடாமல் புறக்கணித்து விடுவார்கள் என்றெல்லாம் பயந்துகொள்ள தேவையில்லை, அடுத்து உள்ளாட்சி தேர்தல் வரப்போகின்றது, கொள்ளையடித்து வைத்திருக்கும் பணத்தில் ஒரு புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டை வீசி எறிந்தால் நாய்கள் காவ்விக்கொண்டு வந்து ஓட்டுபோட்டுவிடும், பிறகு அப்படியே சின்னம்மா அப்படி , இப்படி என்று அளந்துவிட்டு கட்அவுட்டர்கள், பேனர்கள் வைத்து தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்தோம் என்றால் காலப்போக்கில் அவர்களும் அம்மாவிற்கு பதில் சின்னம்மா, சின்னம்மா என உருக ஆரம்பித்துவிடுவார்கள், காசு கொடுத்தால் மொட்டை அடித்துக் கொள்வதற்கும், மீசை எடுத்துக் கொள்வதற்கும், அலகு குத்திக் கொள்வதற்கும், மண்சோறு தின்பதற்கும், பால்குடம் தூக்குவதற்கும், காவடி தூக்குவதற்கும் தயங்காத அடிமைக் கூட்டத்தை அம்மா உருவாக்கி தந்துவிட்டு போய் இருக்கின்றார், என்ன இப்போது கொஞ்சம் அதிகம் செலவு செய்யவேண்டி இருக்கும் போல, பரவாயில்லை பின்னால் சின்னம்மா தலைமையில் அதை எல்லாம் ஒரே தம்மில் சுருட்டிக் கொள்ளலாம்”. என்பதுதான் அவர்கள் தமிழக மக்கள் மீது வைத்திருக்கும் முடிவான நம்பிக்கையாகும்.

 சசிகலா தமிழகத்தின் அடுத்த முதல்வராக வருவதற்கான அனைத்து வாய்ப்புகளும் கண்ணுகெட்டிய தூரம்வரை பிரகாசமாகத் தெரிகின்றது. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பைப் பொருத்து இதில் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம். மற்றபடி அந்தக் கொடுமை நிகழாது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. மக்களின் கருத்துக்கெல்லாம் மயிரளவுக்குக்கூட மதிப்பு கொடுக்க வேண்டிய எந்த அவசியம் இந்த ஓட்டுப்பொறுக்கி அரசியலில் கிடையாது என்பததை அதிமுக அடிமைக்கூட்டம் தமிழக மக்களுக்கு நிரூபித்துக் காட்டியுள்ளது. மக்கள் தான் ஜனநாயகத்தின் எஜமானர்கள் என்பதெல்லாம் ஜனநாயகத்தை பற்றிய அடிப்படை அறிவே இல்லாத யாரோ உலுத்துப்போன நாய் சொன்ன தத்துவம் என்பது தற்போது ஊர்ஜீதப்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகத்தின் உண்மையான எஜமானர்கள் முதலாளிகள் தான், அவர்கள் தான் ஜனநாயகத்தை வழிநடத்துகின்றார்கள். தற்போது சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்து இருப்பதும் அந்த முதலாளிகள் தான். அதிமுக பொதுக்குழுவில் கூடிய எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் அனைவரும் நூற்றுக்கணக்கான கோடிகளுக்கு அதிபதிகள் என்பதும், கள்ளத்தனமாக கல்வி வள்ளல்களாகவும், தொழிலதிபர்களாகவும், உலகம் முழுவதும் உள்ள பல பெரு நிறுவனங்களில் பங்குதாரர்களாகவும் இருப்பவர்கள் என்பதுதான் உண்மை.

Sasikala Jaya poster

ஜெயலலிதாவிற்கு அரசியல் நடத்துவதற்கும், தமிழக மக்களை ஏமாற்றி ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளையடிப்பதற்கும் இந்த மன்னார்குடி மாஃபியா கும்பல் தான் உதவியது, அதன் மூலம் தன்னை தமிழ்நாட்டின் பெரும் அதிகார மையமாக உருவாக்கி வைத்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா அதிமுகவின் கடவுள் என்றால் சசிகலா அந்தக் கடவுளின் நிரந்தர பூசாரியாக இருந்தவர். எனவே அதிமுக அடிமைக் கூட்டதிற்குக் கடவுளைவிட அதன் பூசாரியிடம் எப்போதுமே பயம் அதிகம். யார் யார் எங்கு சொத்து வாங்கிவைத்திருக்கின்றார்கள், எவ்வளவு சொத்துவாங்கி வைத்திருக்கின்றார்கள், ஒவ்வொருவரும் செய்த அட்டூழியங்கள் என்னென்ன என்று எல்லாமே சின்னம்மாவின் கைவசம் உள்ளது. கடவுளைவிட பூசாரிகளுக்குதான் தன் அடிமைகளை பற்றி நன்றாக தெரியும் என்பது ஆன்மீகத்தின் தவிர்க்க முடியாத பொதுவிதி அல்லவா? அதனால் சசிகலா பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது ஒன்றும் ஆச்சரியமான விசயமில்லை. அதிமுக என்ற கொள்ளைக்கூட்டத்திற்கு தலைமை பொறுப்பு ஏற்க அனைத்து தகுதியும், திறமையும் வி.கே. சசிகலாவிற்கு உண்டு.

 இனி தமிழ் நாட்டில் எல்லாம் இப்படித்தான் நடக்கும். தமிழக மக்களால் இந்த அழிச்சாட்டியங்களை ஒன்றும் செய்ய முடியாது. அதிகபட்சமாக டீக்கடையிலும், சலூன் கடைகளிகலும் உட்கார்ந்துகொண்டு வெட்டி அரசியல் வேண்டும் என்றால் பேசிக்கொள்ளலாம். முடிந்தால் பேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவற்றில் மீம்ஸ் போட்டு தங்களது அரசியல் அரிப்பை தீர்த்துக்கொள்ளலாம். அதைத்தானே நாம் எப்போதும் செய்துகொண்டு இருக்கின்றோம். ‘நேர்மையற்றவர்களாய், பிழைப்புவாதிகளாய், மாற்று அரசியல் பற்றி சிந்திக்கும் திராணியற்ற மூடர்களாய் ஆளும்வர்க்கத்திற்கு எதிரான போராட்டம் என்றாலே அது ஏதோ தனக்குச் சம்மந்தம் இல்லாத அந்நியமான ஒன்று என நினைக்கும் வக்கிரப் பேர்வழிகளாய், எவனாவது அடிபட்டு, உதைபட்டு, வதைபட்டு போராடி உரிமைகளை வாங்கிக் கொடுத்தால் அதை நக்கித் தின்பதற்கு முதல்வரிசையில் முதல் ஆளாக போய் நின்றுகொள்ளலாம், இப்போதைக்கு நம்முடைய வீடு உண்டு, வேலை உண்டு என்று ஜாக்கிரதையாக இருந்துகொள்ளலாம்’ என்று உயிர்வாழ்ந்துகொண்டு இருக்கும் ஜந்துக்களாய் நாம் இருக்கும்வரை இனி தமிழ்நாட்டில் இப்படித்தான் நடக்கும். இப்படி இருந்தால் நம்மால் இந்தப் பொறுக்கி அரசியல்வாதிகளின் மயிரைக்கூட புடுங்க முடியாது. என்ன சொல்லி என்ன செய்வது. அங்கே பாருங்கள் ஒரு பெரும் கூட்டம் சின்னம்மா முதலமைச்சராக வர வேண்டும் என்று மொட்டை போடுவதற்கும், மீசையை மழித்துக் கொள்வதற்கும், பால்குடம் தூக்குவதற்கும் வேகமாக போய்க்கொண்டு இருக்கின்றது. தமிழக மக்களே, தமிழக மக்களே, உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா வருவீங்க கவலைப்படாதீங்க.

- செ.கார்கி

நன்றி : கீற்று

 

Categories: Tamilnadu-news

பதவி இறங்க மறுக்கிறாரா பன்னீர் செல்வம்? - Exclusive

Mon, 02/01/2017 - 15:32
பதவி இறங்க மறுக்கிறாரா பன்னீர் செல்வம்? - Exclusive

தமிழகம் இதுவரை பார்த்திராத பல அரசியல் கேவலங்களைப் பார்க்க ஆரம்பித்துள்ளது. 'முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் தோழி.. ' என்ற ஒரே தகுதி போதும், கோடிக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு பெரும் கட்சியை நிர்வகிக்கவும், ஏழரை கோடி தமிழர்களைக் கொண்ட தமிழ் நாட்டை ஆளவும் என்ற நிலையை உருவாக்கியுள்ளனர் அதிமுக நிர்வாகிகள்.

வெளியிலிருந்து பார்த்தால் கட்சி நிர்வாகிகள் எல்லாம் சசிகலாவை 'சீக்கிரம் சிஎம் ஆகுங்க... அப்பதான் எங்க ஜென்மம் சாபல்யமடையும்' என்று வற்புறுத்துவது போலத் தெரிந்தாலும், உண்மை நிலவரம் வேறு என்கிறார்கள். சசிகலா மற்றும் அவரது குடும்ப கேங்கின் வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் காரணமாகவே கட்சியினர் சசிகலாவுக்கு வேண்டுகோள் விடுத்து வருவதாக நம்பகமான 'சோர்ஸ்' ஒன்இந்தியாவிடம் தெரிவித்தது.

Is OPS denying to step down?

காரணம் வெளிப்படையானது. சசிகலா தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் சொத்துக் குவிப்பு வழக்கு. அந்த வழக்கின் தீர்ப்புத் தேதி நாளையோ நாளை மறுநாளோ வெளிவரவிருக்கிறது. அதற்குள் முதல்வராகிவிட்டால் தப்பிக்க வாய்ப்பிருப்பதாக மன்னார்குடி கும்பல் கொடுத்த அட்வைஸ் கம் நெருக்கடியால்தான் ஜெ இறந்து ஒரு மாதத்துக்குள் சசிகலா முதல்வராகத் துடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அதற்கு வாய்ப்புத் தரக் கூடாது என்பதில் மோடி ரொம்பத் தெளிவாக இருக்கிறார். கட்சியின் பொதுச் செயலாளராகிவிட்ட சசிகலா, நினைத்த நேரத்தில் முதல்வராகிவிட முடியும். காரணம் கட்சித் தலைமை உத்தரவை முதல்வராகவே இருந்தாலும் ஓபிஎஸ்ஸால் மீற முடியாது. ஆனால் அப்படி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தால், மத்திய அரசின் அடுத்த டார்கெட் ஓபிஎஸ்தான் என டெல்லியிலிருந்து சொல்லப்பட்டிருப்பதால், பதவியை விடாமல் தொடர்கிறார் என்கிறார்கள்.

'முதல்வர் பதவியை எக்காரணம் கொண்டும் ராஜினாமா செய்ய வேண்டாம். நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அமைதியாக இருங்கள்' என டெல்லியிருந்து வந்த உத்தரவைத் தொடர்ந்துதான், முதல் முறையாக குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமருக்கு புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார் ஓபிஎஸ். இதற்கு முன் இருமுறை அவர் முதல்வராக இருந்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் இப்படி வாழ்த்துச் சொன்னதில்லை அவர்.

மோடியின் சொல்படி கேட்டு நடக்கிறார் ஓபிஎஸ் என்பது சசிகலா அன்ட் கோவுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்பதாலேயே, முன்பு உதயகுமார் போன்ற அமைச்சர்களை 'சின்னம்மா... சீக்கிரம் முதல்வராகணும்' என்ற பல்லவியைத் தொடர்ந்து பாட வைத்தனர். அதற்கு ஓபிஎஸ் அசையவில்லை என்பது தெரிந்ததும், இன்று தம்பிதுரை அறிக்கை என்ற பெயரில் புதிய நெருக்கடியைத் தந்துள்ளனர். 'இந்த அறிக்கையை தம்பி துரை விடவில்லை... கார்டனில் நடந்த தில்லாலங்கிடி வேலைகளுள் ஒன்று' என்றொரு தகவலும் கசிந்துள்ளது.

ஓபிஎஸ் இந்த நெருக்கடிகளுக்குப் பணிவாரா.. அல்லது 'டிசம்பர் 6-ம் தேதி நிமிர்ந்த முதுகுடன்' முதல்வராகத் தொடர்வாரா?

நன்றி : தட்ஸ் தமிழ்

டிஸ்கி : சபாஷ் சரியான போட்டி !:rolleyes:

Categories: Tamilnadu-news

கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...!

Mon, 02/01/2017 - 12:09
கோபல்சின் மூன்று யுக்திகளும்... சசிகலாவும்...!

சசிகலா

‘கோபல்ஸ்’  (Goebbels), வரலாற்றின் பக்கங்களை இருள் சூழவைத்த ஹிட்லரின் பரப்புரையாளன்; எந்தப் பொய்யையும் நயமாகச் சொல்லி, மக்களை நம்பவைக்கும் வித்தை அறிந்தவன்; ஒரு கருத்தியலை, மெல்லமெல்ல மக்களிடம் திணித்து... அதை, பொதுக் கருத்தாக்கி... அந்தக் கருத்தைச் சுற்றியே மக்களை உரையாடவைப்பவன்; பெரும் தந்திரக்காரன். அவன், பிரசாரத்துக்காக 19 யுக்திகளை வகுத்துச் சென்றான். அதை, அப்படியே சுவீகரித்துக் கொண்டு... அ.தி.மு.க பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கும் சசிகலா, மிகத் தந்திரமாக காய்களைக் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் நகர்த்திக் கொண்டிருக்கிறார். 

பிரசாரத்துக்கு கோபல்ஸின் யுக்திகளும்... சசிகலாவின் நகர்வுகளும்!

கோபல்ஸ் வகுத்த சில பிரசார யுக்திகளை இங்கு பகிர்கிறேன். இதை, அப்படியே உங்களது இடது மூளையில் படரவிட்டுவிட்டு... சசிகலாவின் அரசியல் நகர்வுகளையும், அதனுடன் பின்னப்பட்டிருக்கும் சொற்களையும்  உற்றுநோக்குங்கள்... பகுப்பாய்வு செய்யுங்கள்! 

கோபல்ஸ்: ‘‘ஒரு பொய்யைத் திரும்பத்திரும்ப மக்களிடம் சொல். வேறுவேறு உணர்வு நிலைகளிலிருந்து சொல். அந்தப் பொய், வெறும் வார்த்தைகளால் மட்டும் கட்டமைக்கப்பட்டிருக்க கூடாது. உணர்வுகளால் அது, கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லை, நாம் சொல்வது பொய்யென்று எதிராளிகள் நிறுவ வேண்டுமென்றால், அந்த உணர்வுகளை கடந்து வரவேண்டும்.’’ 

சசிகலா: ‘அ.தி.மு.க-வில்.... சசிகலாவை தவிர்த்து பொதுச் செயலாளர் பொறுப்புக்கு தகுது உடையவர் யார்...?’ என்பது ஒரு வாதம். “அ.தி.மு.க என்ன, தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கித் தந்த தியாகக் கட்சியா... அதன் கரங்கள் என்ன கறை படியாததா... ஏன் இவ்வளவு விவாதம்? அந்தக் கட்சிக்கு அவர்தான் பொருத்தமானவர்... சசிகலாவே பொதுச் செயலாளர் ஆகிவிட்டுப் போகட்டுமே...’ என்பது இன்னொரு வாதம். அதாவது, 100-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், 40-க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள கட்சியில், சசிகலாவைத் தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் இல்லை என்ற பிம்பம் முதலில் கட்டமைக்கப்பட்டது. இந்தப் பிம்பத்தை நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்றால், ‘அவர் தன் வாழ்க்கையையே ஜெயலலிதாவுக்காகத் தியாகம் செய்தார்’ என்ற அரணை கடந்துச் செல்ல வேண்டி இருந்தது. நடுநிலையாளர்கள் கேட்ட நியாயமான கேள்வியை முறையாக அணுகாமல், உணர்ச்சி வசப்படவைக்கும் இந்த வார்த்தைகளையே பதிலாக முன்வைத்தார்கள். 
   
சரி... பொதுச் செயலாளர் என்பது அவர்கள் கட்சியின் முடிவு. இது, தமிழக மக்களை நேரடியாகப் பாதிக்கப்போவதில்லை. ஆனால், இந்தப் பிரசார யுக்தி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முதல்வர் பதவியை மையம்கொள்ளத் தொடங்கி இருக்கிறது. இப்போது... அவர்களின் வாதம், “ஜெயலலிதா உடனே இருந்து அரசியல் மற்றும் நிர்வாகத்தைப் பயின்றவர், சசிகலா. ஜெயலலிதா எந்த முடிவையும் சசிகலாவைக் கேட்காமல் எடுக்க மாட்டார். ஜெயலலிதாவைப் பார்க்கச் சென்றீர்கள் என்றால்கூட... ‘சசிகலாவைப் பார்த்தீர்களா’ என்று கேட்பார்’’ என்பது. 

o-JAYALALITHA-facebook_15163.jpg

கோபல்ஸ்: ‘‘நாம் விரும்பும் கருத்து, மரியாதைக்குரிய நபர்கள் மூலம் சொல்லப்படுபவை. அந்த மரியாதை, பொய்யுக்கு அரணாக நிற்கும். மெல்ல அந்தக் கருத்தை அங்கங்கு பேசவைத்து, ‘ஆம்... வேறு வாய்ப்பில்லை’ என்ற மனநிலையை உண்டாக்கு!’’   

சசிகலா: ‘சசிகலாதான் பொதுச் செயலாளர்... சசிகலாதான் முதல்வர் பொறுப்புக்கு தகுதியானவர்’ என்ற வாதமெல்லாம் முதலில் தொடங்குவது தம்பிதுரையிடமிருந்துதான். தம்பிதுரை பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளில் எல்லாம் சிக்காதவர்; பாராளுமன்ற துணை சபாநாயகராக இருப்பவர். அவரிடமிருந்து தொடங்கும் வாதத்தை ஒன்றன்பின் ஒருவராக வழிமொழியத் தொடங்குகிறார்கள். இறுதியில், ‘ஆம்... வேறு வழியில்லை’ என்ற மனநிலையில் கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.  

கோபல்ஸ்: சரியான நேரத்தில் காய்களை நகர்த்து! 

சசிகலா: எம்.ஜி.ஆர் இறந்து சில தினங்களில்... ஜெயலலிதா, நடராஜனிடம் சொன்னாராம்... “நான் முதல்வராக வேண்டும்” என்று. அதற்கு நடராஜன், “எதையும் எடுத்தோம்... கவிழ்த்தோம் என்று செய்ய முடியாது. ஆட்சியை எப்போது வேண்டுமானாலும் கைப்பற்றிக் கொள்ளலாம். முதலில், கட்சியைக் கைப்பற்ற வேண்டும். கட்சி கட்டுக்குள் வந்தால்... ஆட்சியும் வரும்” என்றாராம். வரலாறு மீண்டும் மீண்டும் நிகழ்கிறது. சசிகலா அவசரப்படவில்லை. முதலில் கட்சியைக் கட்டுக்குள் கொண்டுவந்தார். இப்போது நேரம் கனிந்துவிட்டது. அதனால் தம்பிதுரை சொல்கிறார், “கட்சியும், ஆட்சியும் வெவ்வேறு மனிதர்கள் கையில் இருப்பது மாநிலத்துக்கு நல்லதல்ல” என்று.   

இருளிலிருந்து, பேரிருளுக்கு!

15780764_1710557285867081_70775441131813“ஒப்பீடெல்லாம் சரிதான். இது அனைத்துக் கட்சிக்கும் பொருந்தும்தானே...? சசிகலாவுக்கு ஒரு வாய்ப்புத் தந்தால்தான் என்ன...?” நிச்சயம்... இது ஜனநாயக நாடு. இந்திய அரசியலமைப்பு வகுத்த கோட்பாட்டின்படி வென்று வருபவர்கள் அனைவரும் ஆட்சி செய்யலாம்தான்... மறுக்கவில்லை. ஆனால், அது நம்மை இருளிலிருந்து, பேரிருளுக்கு அழைத்துச் செல்வதாக இருக்கக் கூடாது. 

ஜெயலலிதா மீது அனைவரும் வைத்த குற்றச்சாட்டு, அவர் ஏதேச்சையாகச் செயல்படுகிறார் என்பதாகும்.  ஜெயலலிதா பாதையில் பயணிப்பதாகச் சொல்லும் சசிகலா, தெளிவாக அதே வழிமுறையையே பின்பற்றுகிறார். டிசம்பர் 30-ம் தேதி ஜெயலலிதா நினைவிடத்தைப் பார்த்துவிட்டு வந்து, அவர் வெளியிட்ட அறிக்கையில்... அவர் பெயரைத் தவிர, வேற யார் பெயரும் இல்லை. அந்த நிகழ்வில், தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்துகொண்டார் என்பதை நினைவில்கொள்க!

அதே நிகழ்வின்போது... அவர் சென்று திரும்புவற்காக, சென்னையின் மையச் சாலையில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் போக்குவரத்து முடக்கப்பட்டிருந்தது. சசிகலா தமிழக முதல்வர் எல்லாம் இல்லை... ஒரு கட்சியின் பொதுச் செயலாளர் மட்டுமே என்பதை இப்போது நினைவில்கொள்க!

இவை, இரண்டும் தமிழக மக்கள் விரும்பாத ஜெயலலிதாவின் குணங்கள். ஆனால், இதைத்தான் சசிகலா முதலில் சுவீகரித்துக் கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க அதிஉயர் சித்தாந்தத்தின்படி, ஜெயலலிதா உடன் இருந்தது வேண்டுமானால்... சசிகலா பொதுச் செயலாளர் ஆவதற்கு போதுமான காரணமாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தை ஆள இந்தக் காரணம்  மட்டும் போதாது. மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். அதனைப் பெறாமல்... எங்களிடம் போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கோபல்ஸின் தந்திரத்தை மட்டுமே நம்பி... காய்களை நகர்த்துவார்களாயின், அது நிச்சயம் தமிழக மக்களுக்கு பேரிருள் நோக்கியப் பயணமாகத்தான் இருக்கும்!

http://www.vikatan.com/news/coverstory/76606-comparative-study-of-goebbels-and-sasikala-strategies.art

Categories: Tamilnadu-news

முதல்வர் பதவி! சசிகலாவுக்கு தம்பிதுரை முக்கிய கோரிக்கை

Mon, 02/01/2017 - 06:11
முதல்வர் பதவி! சசிகலாவுக்கு தம்பிதுரை முக்கிய கோரிக்கை

sasikala_new_1a_11504.jpg

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார்.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வந்த சசிகலா, அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர் பேசிய சசிகலா, "மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று முழக்கமிட்ட அம்மாவின் வழியில் நம் பயணத்தை தொடருவோம்" என்றார்.

பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதற்கு முன்பே, அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள், முதல்வராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் என்று வலியுறுத்தினாரே தவிர, அவர் முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று கூறியதாக தெரியவில்லை.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள சசிகலா தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்க வேண்டும் என்று அதிமுக கொள்கைப் பரப்பு செயலாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை கோரிக்கை வைத்துள்ளார்.

அதிமுக தொண்டர்களின் மனநிலையை ஏற்று விரைவாக சசிகலா முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், கட்சித் தலைமையும், ஆட்சித் தலைமையும் தனித்தனியாக இருப்பது ஏற்புடையதல்ல, ஒருவரிடமே இருக்க வேண்டும் என்றும், ஒரே இடத்தில் இருந்தால்தான் அதிமுக பணிகள், அரசு திட்டங்களை செய்ய இயலும் என்றும் கூறியுள்ளார். 

மேலும், சசிகலா முதலமைச்சராவது தமிழகத்திற்கும், அதிமுகவுக்கும் மிகவும் இன்றியமையாதது என்று தெரிவித்துள்ளார்.

http://www.vikatan.com/news/tamilnadu/76562-thambi-durai-requests-saikala-to-take-tamilnadu-cheif-minister-charge.art

Categories: Tamilnadu-news

ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம்

Mon, 02/01/2017 - 05:53
ஜெயலலிதாவின் உடலை தோண்டி எடுக்க வேண்டுமா?- பிரபல தடயவியல் நிபுணர் ப.சந்திரசேகரன் விரிவான விளக்கம்

 

 
j_death_3111918f.jpg
 
 
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக வெவ்வேறு தளங்களில் கேள்வி எழுப்பப் படுகிறது. கேள்வி எழுப்பப் படுவதாலேயே, அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்கிறார் பிரபல தடயவியல் துறை நிபுணர் பேராசிரியர் ப.சந்திரசேகரன்.

பேராசிரியர் பக்கிரிசாமி சந்திர சேகரன், நாட்டின் தலைசிறந்த தடயவியல் துறை நிபுணர். ராஜீவ்காந்தி படுகொலையின்போது, தனு என்ற பெண்ணால் பெல்ட்பாம் முறையில்தான் அவர் கொல்லப்பட்டார் என்பதை உலகுக்கு எடுத்துக் கூறியவர் அவர். மத்திய அரசின் மிக உயரிய ‘பத்மபூஷண்’ விருது பெற்றவர்.

தமிழகத்தில் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த தடயவியல் துறையை தனியாகப் பிரித்து சுதந்திரமாக இயங்க வழிவகுத்து, அதன் தலைவராகப் பணியாற்றினார். ஜெய்ப்பூர் பல்கலைக்கழக துணை வேந்தராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய ‘உலகின் முதல் மனித வெடிகுண்டு’ நூல், பல்வேறு நாடுகளில் காவல்துறையினரின் பாடப் புத்தகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தடயவியல் துறையில் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் கொண்ட அவர், ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து எழும் சந்தேகங்கள் தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:

*

ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்ற கருத்து நிலவுகிறதே..

‘ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது’ என்று அவரது நெருங்கிய உறவினர்கள் ஆதாரத் துடன் புகார் செய்தால் மட்டுமே, இது சம்பந்தமாக மாஜிஸ்திரேட் உத்தரவிட முடியும். நீதிமன்ற ஆணையின் மீதும் இதைச் செய்யலாம். ஆனால், இது அவசியமா என்று ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். எடுத்தேன், கவிழ்த்தேன் என்று செய்ய இயலாது. இது தேவையில்லை என்பதே என் கருத்து.

*

ஒருவேளை, அதுபோல மாஜிஸ்திரேட் உத்தரவிட்டால் என்ன நடக்கும்?

முறையாகச் செய்யவேண்டும் என்றால், வெளி மாநில தடயவியல் நிபுணர் தலைமையில் 2 மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்வார்கள். அதன்மூலம், மரணம் எப்படி ஏற்பட்டது என்பதை துல்லியமாக கூறமுடியும். மண்டை ஓட்டை ஆராய்ந்தால், தலையில் ஏதாவது பலத்த காயம் ஏற்பட்டதா என்று கண்டுபிடிக்க முடியும். உடலை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று பிரேதப் பரிசோதனை செய்து, பிறகு மீண்டும் உடலை அடக்கம் செய்துவிடுவார்கள்.

*

அவர் இறந்து சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில், உடல் எந்த நிலையில் இருக்கும்?

சதை அழுகிப் போயிருக்கலாம். உடல் வற்றிப் போயிருக்கக்கூடும். ஆனால், சந்தனப்பேழையில் இருப்பதால் உடல் அதிக அளவு அரிக்கப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. உடலை மிகவும் கவனமாக வெளியே எடுக்க வேண் டும். திறமை வாய்ந்தவர்கள்தான் இதைக் கையாள வேண்டும். பின்னர் பரி சோதனை நடத்தினால், இறந்த தேதியைக்கூட துல்லியமாக கண்டு பிடித்துவிட முடியும்.

*

உடலைப் பதப்படுத்தும் ‘எம்பாமிங்’ செய்யப்பட்டதால், அவர் இறந்து பல நாட்கள் ஆகியிருக்குமோ என்ற சந்தேகம் எழுப்பப்படுகிறதே?

‘எம்பாமிங்’ என்பது மேலை நாடுகளில் சர்வ சாதாரணமான நிகழ்வு. பொது இடத்தில் மக்கள் பார்வைக்காக வைக் கப்பட வேண்டியிருப்பதால், எம்பாமிங் அவசியம். எதையோ மறைக்கத்தான் எம்பாமிங் செய்யப்பட்டுள்ளது என்று கூறுவது அர்த்தமற்ற வாதம்.

*

அவரது கால்கள் நீக்கப்பட்டிருக்கக் கூடும் என்று கூறப்படுவது பற்றி..

ஜெயலலிதா பல ஆண்டுகளாக நீரிழிவு நோய் முற்றி சிகிச்சை பெற்று வந்தார் என்பதை அறிவோம். இந்த நோய் முற்றினால் ‘கேங்கரின்’ எனும் நிலை ஏற்பட்டு, கால்களின் ஒரு பகுதியை அகற்ற நேரிடலாம். அப்படி எடுக்கவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து என்று மருத்துவர்கள் முடிவு செய்திருக்கலாம். இதுவரை வெளியாகியுள்ள புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தெல்லாம் அதைக் கண்டுபிடிக்க முடியாது.

ஒரு நோயாளி சிகிச்சை பலனின்றி இறந்தால், எந்தவொரு மருத்துவமனை யும் கிளினிக்கல் போஸ்ட் மார்ட்டம் என்ற பிரேதப் பரிசோதனை செய்தே, நோயாளி இறந்துவிட்டார் என்று இறப்புச் சான்றிதழ் வழங்குவார்கள். இதை ஒப் பிட்டுப் பார்த்து கண்டுபிடிக்க முடியும்.

*

ஒரு நோயாளி இறந்து ஒரு மாதம் வரையில் உயிருடன் இருப்பதாக ‘செட்டப்’ செய்து, அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்திருக்க இயலுமா?

இது ஒரு கற்பனை. மைனஸ் 4 டிகிரி குளிரூட்டப்பட்ட இடத்தில் உடல் இருந்தால்தான் கெடாமல் வைத்திருக்க முடியும். அவசர சிகிச்சைப் பிரிவில் அதுபோன்ற கோல்டு ஸ்டோரேஜ் (Cold Storage) வசதியை எப்படி செய்ய முடியும்? பல்வேறு மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட ஒரு மருத்துவமனையில் இவை எல்லாம் ரகசியமாக நடக்க சாத்தியம் இல்லை. அப்படி இருந்தால், எரியூட்டும்போதோ, புதைக்கும்போதோ அந்த தடயங்களை மக்கள் கண்டுபிடித்துவிட முடியும். சினிமாவில்தான், உயிரிழந்த உடலுக்கு சிகிச்சை அளிப்பதுபோன்ற காட்சிகள் இடம்பெறும். அதன் பின்விளைவுகள் அதிகம் என்பதால், மருத்துவர்கள் பயப்படுவார்கள்.

*

பிரபல தலைவர்களின் உடலைத் தோண்டி எடுத்து, இறப்பின் காரணம் கணிக்கப்பட்டதற்கு முன்னுதாரணம் இருக்கிறதா?

மாமன்னன் நெப்போலியன் உடல் புதைக்கப்பட்ட பிறகு, அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்று பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அறிஞர்கள் விவாதித்தார்கள். செயின்ட் ஹெலனா எனும் தீவில்தான் நெப் போலியன் சிறைவைக்கப்பட்டிருந்தார். அவரது உடலைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்தபோது, முதலில் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. 2 மி.மீ. நீளம் உள்ள அவரது தலைமுடியை ஆராய்ந்தபோது, அதில் ஆர்சனிக் என்னும் கொடிய விஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, நிபுணர்கள் சிறைக்குச் சென்று சோதனையிட்டபோது, அவர் சங்கி லியால் கட்டப்பட்டு சுவர் ஓரமாக நாற்காலியில் உட்கார வைக்கப் பட்டிருந்தார் என்று தெரியவந்தது. சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் இடத்தில் ஒரு காகிதம் ஒட்டப்பட்டிருந்தது. அது கொடிய விஷம் தடவப்பட்ட காகிதம். சுவரில் அவர் தலையைச் சாய்க்கும் போது, அந்த விஷம் சிறிது சிறிதாக அவரது தலைமுடியில் இறங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் அறிவியல் ரீதியான சோதனையில் இதைக் கண்டுபிடித்தனர்.

என் அனுபவத்தில், கடலூரில் விருப்பலிங்கம் என்பவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில்தான் இறந்தாரா என்று சந்தேகம் எழுந்தபோது, அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. என் தலைமையில் 2 மருத்துவர்கள் மறு உடல்கூறு ஆய்வு செய்து, பல உண்மைகளைக் கண்டறிந்தோம்.

இவ்வாறு சந்திரசேகரன் கூறினார்.

- பிரகாஷ் எம்.ஸ்வாமி, மூத்த பத்திரிகையாளர்

http://tamil.thehindu.com/tamilnadu/ஜெயலலிதாவின்-உடலை-தோண்டி-எடுக்க-வேண்டுமா-பிரபல-தடயவியல்-நிபுணர்-பசந்திரசேகரன்-விரிவான-விளக்கம்/article9454346.ece?homepage=true

Categories: Tamilnadu-news

சசிகலா எனும் alpha male

Sun, 01/01/2017 - 22:13
சசிகலா எனும் alpha male

ஆர். அபிலாஷ்

 

ஜெயலலிதாவின் இடம் யாருக்கு எனும் கேள்வி எழுந்த போது ஒரு நண்பர் சொன்னார்: “அதிமுக முழுக்க பா.ஜ.கவின் கையில் போய் விட்டது. அவர்கள் அதிமுகவை டம்மியாக பயன்படுத்தி ஆளப் போகிறார்கள். அடுத்த தேர்தலில் பா.ஜ.கவின் முதல்வர் வேட்பாளராக ஒரு பிரபலத்தை முன்வைப்பார்கள். அதற்குள் அதிமுகவின் தலைமையை முடிந்தவரை நிர்மூலமாக்கி விடுவார்கள். அதிமுகவின் கட்டமைப்பை, வாக்கு வங்கியை தமக்கு சாதகமாய் பயன்படுத்தி தமிழகத்தை கவர்வதே பா.ஜ.கவின் திட்டம்”.

 இது நாம் பலரும் அறிந்ததே. ஆனால் அடுத்த தேர்தல் வரையிலான கட்டத்தில் அதிமுகவுக்கு என்றொரு தலைவர் வேண்டுமே? அது யார்?

அது சசிகலாவாகத் தான் இருக்கும் என்றார் நண்பர். “ஏனென்றால் சசிகலா உறுதியானவர். துணிச்சலானவர். பன்னீர் யார் மிரட்டினாலும் பணிந்து விடக் கூடியவர். அவரால் கட்சியை ஒருங்கிணைத்து நடத்த முடியாது என பா.ஜ.க அறியும். அதனால் சசிகலாவே பா.ஜ.கவின் தேர்வாக இருக்கும்.”

ஆனால் ஜெயாவின் மரணத்திற்கு பின்பான மத்திய அரசின் போக்கு இக்கூற்றுக்கு எதிராக இருந்தது. சசிகலா தன்னை தலைவர் ஆக்கக் கோரும் ஒரு குழுவினரை தனக்காக கூச்சல் இடும்படி களத்தில் இறக்கினார். அதிமுக தலைவர்கள் சிலரே சசிகலாவுக்கு ஆதரவாக பேசினர். சசிகலாவே முதல்வராக வேண்டும் என்று கூட கோரிக்கைகள் எழுந்தன. பன்னீர் உடனே தில்லிக்கு சென்று பிரதமரை சந்தித்தார். அதிகாரிகள் கூட சசிகலாவுக்கு ஆதரவாக இருப்பதாகவும் தன்னை மதிப்பதில்லை என்றும் புகார் கூறினார். உடனே சசிகலாவுக்கு ஆதரவான தலைமைச்செயலாளர் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரியினர் ரெய்ட் செய்தார்கள். மிரட்டினார்கள். அடுத்து சசிகலாவின் சொத்துகளை ரெய்ட் செய்வார்கள் எனக் கூறப்பட்டது. சசிகலாவை வீட்டை காவல் காக்கும் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் நீக்க்கப்பட்டனர். சசிகலா கட்சியில் இருந்து விலக வேண்டும் என பா.ஜ.க நிர்பந்திப்பதாக கூட பத்திரிகைகள் எழுதின. ஆனால் சசிகலா அஞ்சி வெளியேறுவார் என நான் நம்பவில்லை. 

கட்சியின் மீது கணிசமான கட்டுப்பாட்டை வைத்திருக்கும், ஜெயாவின் சொத்துக்களை கைவசம் வைத்திருக்கும் ஒருவரை எளிதில் அகற்றி விட முடியாது. மேலும் மிரட்டினால் உடனடியாய் வெளியேறும் சுபாவக்காரர் அல்ல சசிகலா.

அதற்குப் பதிலாக சசிகலா – பன்னீர் – பா.ஜ.க தரப்பினர் இடையில் ஒரு சமரசம் நடக்கிறது. பன்னீரை தொந்தரவின்றி ஆட்சி செய்ய சசிகலா அனுமதிப்பார். சசிகலாவின் இடத்தை பன்னீர் கேட்க மாட்டார். (அவர் என்றுமே அந்த வம்புக்கு போக மாட்டார்.) முக்கியமாக, பா.ஜ.கவின் பிடியில் இந்த ஜல்லிக்கட்டு மாடு வந்து விட்டது. சசியை அடக்கியது பா.ஜ.கவுக்கு ஒரு குறியீட்டு வெற்றி. 

ஆனால் சசிகலாவை நீண்ட காலம் பா.ஜ.கவால் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இயலாது. பா.ஜ.கவுக்கு என்றும் அவர் மீது நம்பிக்கை இருந்ததில்லை என விகடன் இணையதளத்தில் சில கட்டுரைகள் சொல்கின்றன. ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போதே அவருக்கும் பா.ஜ.கவுக்கும் முழு ராசியில்லை. அவர் காங்கிரசுடன் சற்று இணக்கம் காட்டுகிறார். கலைஞரின் நலம் விசாரிக்கிறேன் எனும் சாக்கில் கலைஞர் குடும்பத்தை சந்திக்கிறார். அவர் தனக்கென ஒரு அணியை அமைக்க முயல்கிறார். ஏனென்றால் ஜெயாவுக்கு பிறகு பன்னீரை கொண்டு தான் பா.ஜ.க காய் நகர்த்தும் என சசிகலா அறிந்திருந்தார். இப்போது மோடிக்கு முன் முழுக்க தலைவணங்கி விட்டார். அதனால் அவரை பொதுச்செயலாளராக இருக்க அனுமதித்திருக்கிறார்கள்.

இப்போதே ஒரு வலுவான தலைவருக்கான சில அறிகுறிகளை அவர் காட்டி விட்டார். பதவியேற்கும் போது கண்கலங்குகிறார். எம்.ஜி.ஆர். ஜெயா சமாதிகளுக்கு சென்று வணங்குகிறார். அங்கு அதிமுக மந்திரிகளையும் வரச் செய்கிறார். பல இடங்களில் ஜெயலலிதாவின் பிம்பத்தை பின்னணியில் வைத்து சசிகலாவின் வணங்கி நிற்கும் படத்தை தாங்கிய சுவரொட்டிகள் பளிச்சிடுகின்றன. பன்னீர் செல்வம் இந்த பிம்பம் கட்டியமைக்கும் பணிகளில் இதுவரை ஒன்றை கூட செய்ய முயலவில்லை. ஆனால் ஒரு கட்சிக்கு தன்னை வலுவாக முன்னெடுக்கும் ஒரு தலைவர் தேவை. இப்போதைக்கு அது சசிகலா தான்.

ஒரு சிறந்த தலைவர் யார்? மக்களுக்கு நல்லது செய்கிற தலைவர் யார் என நான் கேட்கவில்லை. மக்களை வசீகரிக்கிற, கட்சியை கட்டுப்படுத்துகிற தலைவர் யார்? ஆணவமும், துணிச்சலும், பிடிவாதமும், சிறப்பாய் மீடியா பிம்பத்தை கட்டமைக்கிறவரும், கட்சியை விரல் நுனியில் வைத்திருக்கும் நிர்வாகத் திறனும் கொண்டவர் தான் சிறந்த தலைவர். அதாவது ஆங்கிலத்தில் alpha male என்பார்கள். இங்கு அது சசிகலா மட்டுமே. அவர் மீது எனக்கு எந்த மரியாதையும் இல்லை. ஆனால் அதிமுக ஒரு கட்சியாக நிலைபெற வேண்டுமென்றால் அது சசிகலாவின் எழுச்சியால் மட்டுமே சாத்தியமாகும் எனத் தோன்றுகிறது. தலைமைப் பண்பை நாம் ஒழுக்க, அற மதிப்பீடுகள் இன்றி அளவிட வேண்டும். இந்த மதிப்பீடுகளுக்கு அரசியலில் எந்த மதிப்பும் இல்லை. 

பா.ஜ.க இதை நன்கு அறியும். அதனால் சசிகலாவின் அடுத்தகட்ட வளர்ச்சியை அது சுலபத்தில் அனுமதிக்காது. பல முட்டுக்கட்டுகள் போடுகள். குழு அரசியலை வளர்த்து அவரை முடிந்த வரை தளர்த்த பார்க்கும். 

ஆனால் இப்போதைக்கு அதிமுகவிற்கு பன்னீர் செல்வத்தினால் பலன் இல்லை என தோன்றுகிறது. அவர் ஒரு பா.ஜ.க பினாமி மட்டுமே. மேலும் அவர் ஒரு இயல்பான தலைவரும் அல்ல. அவர் கீழ் அதிமுக நிர்மூலமாகி விடும். அவ்விதத்தில் சசிகலாவின் முதல் கட்ட வெற்றி திமுகவுக்கு ஒரு நெருக்கடியாக இருக்கும். அடுத்த தேர்தலில் திமுக வெல்லும் என்பது 99% உறுதி என்றாலும், திமுகவுக்கு தலைவலி கொடுக்கும் வண்ணம் அதிமுகவை முன்னெடுக்க சசிகலாவால் முடியும். இதை உணர்ந்ததனால் தான் ஸ்டாலின் ஜெயலலிதாவின் மரணம் குறித்த மர்மம் விலக வேண்டும், அதற்கான விசாரணை வேண்டும் என கோரி இருக்கிறார். ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது எனும் செய்தி வளர்வது சசிகலாவுக்கு பங்கமாக இருக்கும் என அவர் அறிவார். ஆனால் இந்த கோரிக்கை ஒரு விசயத்தை காட்டுகிறது: ஸ்டாலின் சசிகலாவை பொருட்படுத்த துவங்கி விட்டார்.

 

http://thiruttusavi.blogspot.co.uk/2016/12/blog-post_31.html?m=1

Categories: Tamilnadu-news

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை: துவங்கியது புதிய சர்ச்சை

Sun, 01/01/2017 - 20:25
ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை:
துவங்கியது புதிய சர்ச்சை
 
 
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்த தகவல்களை தர, மருத்துவமனை நிர்வாகம் மறுத்துள்ளது. கவர்னர் அலுவலகமோ, அரசின் பொதுத்துறை பதில் அளிக்க அறிவுறுத்திஉள்ளது.

 

Tamil_News_large_168166520170101233701_318_219.jpg

ஜெயலலிதாவின் மறைவில், மர்மம் உள்ளதாக, சென்னை உயர்நீதிமன்றம் வரை பிரச்னை சென்றுள்ளது.

இந்நிலையில், ஜெ.,க்கு அளித்த சிகிச்சை தொடர்பாக, நீலகிரி மாவட்டம், தும்மனட்டி கிராமத்தை சேர்ந்த ஆசிரியர் ராஜ்குமார்

என்பவர், அப்பல்லோ மருத்துவ மனையிடம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஒன்பது கேள்விகள் கேட்டிருந்தார்.இந்தக் கேள்விகளுக்கு, அப்பல்லோ மருத்துவ மனை தகவல் தர மறுத்துள் ளது. இது குறித்து ராஜ்குமாருக்கு, மருத்துவமனை யின் சட்ட மேலாளர், எஸ்.எம். மோகன் குமார் அனுப்பியுள்ள பதில் கடிதம்:

அப்பல்லோ மருத்துவமனை, இந்திய கம்பெனிகள் சட்டம், 1956ன் கீழ் பதிவு செய்யப்பட்டு, 'அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் என்டர்பிரைசஸ் லிமிடெட்' என்ற பெயரில் இயங்கும் பொது நிறுவனம். எனவே, எங்கள் நிறுவனம், தகவல் அறியும் உரிமை சட்டம், 2005ன், அதிகார எல்லைக்கு உட்படவில்லை. அதனால், தாங்கள் கோரிய விபரங்களை, எங்களால் வழங்க இயலவில்லை.இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
 

கவர்னர் பதில் என்ன?


சிகிச்சை, மரணம், இறுதி சடங்குகள் குறித்து, ஒன் பது வித தகவல்களை கேட்டு, ஆசிரியர் ராஜ்குமார், தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் அலுவலகத் துக்கு, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கடிதம்

 

அனுப்பி இருந்தார்.கவர்னர் அலுவலகம் அனுப்பிய பதில் கடிதம்:தங்கள் விண்ணப்பம், தகவல் அறியும் உரிமை சட்டம்-2005, 6வது பிரிவு, மூன்றாவது உட்பிரிவின் படி, தமிழக தலைமை செயலகத் தில் உள்ள, பொதுத்துறை யின், பொது தகவல் அலுவலருக்கு அனுப்பப் பட்டுள்ளது.

இது தொடர்பாக, பொதுத்துறை யின் மேல் முறை யீட்டு அலுவலருக்கு, மேல்முறையீடு செய்ய லாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1681665

Categories: Tamilnadu-news

எம்.எல்.ஏ., பதவியை துறக்கிறார் மந்திரி உதயகுமார்ராஜினாமா? :திருமங்கலம் தொகுதியில் போட்டியிட சசி திட்டம்:சென்னை ஆர்.கே.நகரில் தினகரனை களமிறக்க முடிவு

Sun, 01/01/2017 - 19:07
எம்.எல்.ஏ., பதவியை துறக்கிறார் மந்திரி உதயகுமார்ராஜினாமா? :திருமங்கலம் தொகுதியில் போட்டியிட சசி திட்டம்:சென்னை ஆர்.கே.நகரில் தினகரனை களமிறக்க முடிவு
 
 
Tamil_News_large_168168920170102000858_318_219.jpg
 

அ.தி.மு.க., பொதுச்செயலராகி உள்ள சசிகலா, திருமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

'சசிகலா முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றிய, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், அவருக்காக, எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்யவுள்ளார். அத்துடன், கட்சியில் பொதுச்செயலருக்கு அடுத்த இடத்திற்கு, தினகரனை கொண்டு வர வசதியாக, அவரை ஆர்.கே.நகரில் களமிறக்கவும், முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்ததை அடுத்து, பன்னீர்செல்வம் முதல்வரானார். அதே
நேரத்தில், ஜெ., வகித்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பதவிக்கு, சசிகலாவை கொண்டு வர, மன்னார்குடி குடும்பம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, கை மேல் பலன் கிடைத்துள்ளது. பொதுக்குழு தீர்மானப்படி, அ.தி.மு.க., பொதுச்செயலராக, அவர் நேற்று முன்தினம் பொறுப்பேற்றார்.

இதையடுத்து, சசிகலாவின் கவனம், ஆட்சியின் பக்கம் திரும்பியுள்ளது. அதற்கான முயற்சிகளும், கன கச்சிதமாக நடந்து வருகின்றன. பன்னீர்செல்வத்தை நீக்கி விட்டு, முதல்வராக பொறுப்பேற்பது குறித்து ஆலோசிக்கும் அதே நேரத்தில், எந்த தொகுதியில் போட்டியிடுவது என்ற, ஆலோசனைகளிலும், அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

'ஜெயலலிதா போட்டியிட்ட, ஆர்.கே.நகர் தொகுதி, பாதுகாப்பானது அல்ல; அங்கு போட்டியிட்டால், வெற்றி பெறுவது கடினம்' என்ற தகவல், சசிகலாவுக்கு சென்றுள்ளது. அதனால், மிகவும் பாதுகாப்பான, எளிதாக வெற்றி பெற வாய்ப்புள்ள தொகுதிகளை தேடும் பணி நடந்தது.
இதில், வருவாய்த்துறை அமைச்சர், உதயகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்ற, மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டசபை தொகுதி தான், சரியாக இருக்கும் என்ற முடிவுக்கு, மன்னார்குடி சொந்தங்கள் வந்துள்ளன.

'கட்சியின் பொதுச்செயலராகவும், முதல்வராகவும், சசிகலா பொறுப்பேற்க வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றியவர், ஜெ., பேரவை தலைவராக இருக்கும் உதயகுமார்.
அதனால், அவரின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்ய வைத்து, அங்கு சசிகலாவை போட்டியிட வைக்க, அவரின் உறவினர்கள் திட்டமிட்டுள்ளனர். அதற்கேற்ற வகையில், 'திருமங்கலம் தொகுதியில், சசிகலா போட்டியிடுவதாக இருந்தால், எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, அவருக்கு வழி விடுவேன்; அது, எனக்கு கிடைக்கும் பெரும் பாக்கியம்' என, அமைச்சர் உதயகுமார், தன் ஆதரவாளர்களிடமும், சசிஉறவினர்களிடமும் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து, அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

அமைச்சர் உதயகுமார், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி. ஜெ.,வை தெய்வமாக கருதினார். 'தெய்வம் நடமாடும் இடம் கோவில்; கோவிலுக்குள் யாரும் செருப்பு அணிய மாட்டர்கள்; அதனால், நானும் செருப்பு அணிவதில்லை' என, கோட்டைக்கு, செருப்பு அணியாமல் வந்தார். அதை நம்பி, ஜெயலலிதா, அவருக்கு மூன்று முறை அமைச்சர் பதவி வழங்கினார்.

ஜெயலலிதா இறந்த பின், இவரது பக்தி சசிகலா பக்கம் திரும்பியுள்ளது. 'சசிகலா முதல்வராக வேண்டும்' என, முதலில் தீர்மானம் நிறைவேற்றினார். திருமங்கலம் தொகுதியில், முக்குலத்தோர் அதிகம் உள்ளதால், சசிகலா போட்டியிடலாம் என, அவரே கார்டனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதற்காக, எம்.எல்.ஏ., பதவியையும் ராஜினாமா செய்யவும் தயாராக உள்ளார்.
இவ்வாறு அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேநேரத்தில், கட்சியிலும், ஆட்சியிலும், சசிகலாவுக்கு அடுத்த நிலைக்கு, தங்களின் சொந்தங்களைத் தவிர வேறு யாரும் வந்து விடக்கூடாது என்பதில், உறுதியாக உள்ள அவரது உறவினர்கள், சசியின் அக்கா மகனான தினகரனை, அடுத்த நிலைக்கு கொண்டு வர தீர்மானித்துள்ளனர். அதற்கு வசதியாக, தற்போது காலியாக உள்ள, ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனை போட்டியிட வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரன் வெற்றி பெற்று விட்டால், அவருக்கு கட்சியிலும், ஆட்சியிலும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.

திருமங்கலம் பாதுகாப்பானதா

திருமங்கலம் தொகுதியில், 2.60 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முக்குலத்தோர். அத்துடன், தொகுதியில் அதிக கிராமங்கள் உள்ளதும், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக கருதப்படுகிறது.இதுவரை, 1971 முதல், 12 முறை சட்டசபை தேர்தல் நடந்துள்ளது. இதில், ஏழு முறை, அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. 2016 தேர்தலில், அமைச்சர் உதயகுமார், 23 ஆயிரத்து, 590 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அத்துடன், 'திருமங்கலம் பார்முலா'வும், சசிகலாவுக்கு இங்கு பெரிதும் கை கொடுக்கும் என்றும், அ.தி.மு.க.,வினர் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

'ஜெ., இல்லாத கவலை மறைந்தது'

புத்தாண்டான நேற்று, ஜெ., நினைவிடத்தில், அமைச்சர்கள் உதயகுமார், சேவூர் ராமச்சந்திரன், கடம்பூர் ராஜு ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின், அமைச்சர் உதயகுமார் அளித்த பேட்டி:
ஜெயலலிதாவின் நிழலாக, உடன் இருந்த சசிகலா, அனைவரின் வேண்டுகோளையும் ஏற்று, கட்சியின் பொதுச் செயலராக பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு, அ.தி.மு.க.,வின் உண்மையான தொண்டர்கள் துணை நிற்பர்.

இன்று ஜெயலலிதா இல்லை என்ற கவலை, சசிகலா வரவால் மறைந்துள்ளது. அடுத்த கட்டமாக, ஆட்சி பொறுப்பையும் சசிகலா ஏற்று, தமிழகத்தை வழி நடத்த வேண்டும். அப்போது தான், ஜெயலலிதாவின் லட்சிய பயணம் நிறைவு பெறும். தொண்டர்களின் விருப்பத்தை ஏற்று, விரைவில் சசிகலா முதல்வர் பொறுப்பை ஏற்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1681689

Categories: Tamilnadu-news

சசி பாரதம் தொடக்கம்!

Sun, 01/01/2017 - 18:44
சசி பாரதம் தொடக்கம்!
 

 

 ‘மக்களால் நான்... மக்களுக்காக நான்’ எனச் சொன்ன ஜெயலலிதா, பொதுமக்களை கார்டனில் சந்தித்தது அபூர்வம்தான். எம்.ஜி.ஆரின் அரவணைப்பு, ஜெயலலிதாவின் பரிவு என நவரசங்களையும்
தொட்டார் சசிகலா. கொஞ்சம் கொஞ்சமாக சசிகலா பெரியம்மாவாக மாறிக்கொண்டிருக்கிறார்.

p5b.jpg

p5a.jpg

பொதுக்குழு நடந்த ஏரியாவில் ஜெயலலிதாவின் பிரமாண்டமான பேனர் இருந்தது. ‘சசிகலா பொதுச்செயலாளர்’ என்றதும் ஜெயலலிதாவை மறைத்துவிட்டு (!) சசிகலாவின் பேனர் உதயமானது. சட்டப்படிதான் நடக்குறாங்களாம்.

ராமரின் பாதுகையை சிம்மாசனத்தில் வைத்து ஆட்சி நடத்திய பரதன் காட்சி ரிப்பீட் ஆனது. ஜெ. இல்லாத பொதுக்குழுவுக்கு ஜெயலலிதா பயன்படுத்திய குஷன் நாற்காலியையும்
டீப்பாயையும் காரில் பத்திரமாகக் கொண்டு வந்தார்கள். அதை மேடையில் நடுநாயகமாக வைத்து ஜெயலலிதா படத்தை வைத்திருந்தார்கள்.

p5.jpgராமர் பாதம் பட்டதால் அகலிகை விமோசனம் அடைந்தது போல கட்சிக்காரர்களுக்கு ஆனந்தம். ‘நிரந்த பொதுச் செயலாளர்’ என நேற்று வரை சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ‘சின்னம்மாதான் பொதுச் செயலாளர்’ என ஸ்ருதி மாறினார்கள். பொதுச் செயலாளர் பதவியை ஏற்கச் சொல்லி போடப்பட்ட தீர்மானத்தை சசிகலாவிடம் தருகிறார் ஓ.பன்னீர்செல்வம்.

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news

“ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி

Sun, 01/01/2017 - 18:34
“ஜெ. வெற்றிடத்தை வைகோவால் நிரப்ப முடியாது! - திருமா அதிரடி
 

 

“மக்கள் நலக் கூட்டணியில் இருந்து ம.தி.மு.க வெளியேறினாலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் மக்கள் நலக் கூட்டணி தொடர்ந்து செயல்படும்” என்று சொல்கிறார், இந்த அணியைத் தொடங்குவதற்கு முன்முயற்சி எடுத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

திருமாவளவனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

p36.jpg

“மக்கள் நலக் கூட்டணியில் இருந்து விலகுவதாக வைகோ அறிவித்துள்ளாரே?”

“கூட்டணியில் இருந்து விலகுவதாக அண்ணன் வைகோ அறிவித்துள்ளது எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது. ஓராண்டுக்கும் மேலாக மக்கள் நலக் கூட்டணியை மிகச் சிறப்பாக வழி நடத்தியவர்.  ஒருங்கிணைந்து போராடுவது என்கிற புரிதலோடு இயங்கி வந்தோம். நான்கு கட்சிகளுக்குள் முரண்பாடு எழுகிறபோது, மனம் திறந்து பேசி ஒருமித்த முடிவை எடுத்து இருக்கிறோம். இந்த நிலையில், ஒருவர் கூட்டணியில் இருந்து வெளியேறுவது என்பது சற்று அதிர்ச்சியைத் தருகிறது. கூட்டணியில் இருந்து விலகினாலும் எங்களுடைய நட்பு தொடரும் என்று அவர் அறிவித்திருப்பதை வரவேற் கிறேன்.”

“வைகோவின் முடிவுக்குப் பின்னால் அரசியல் காரணங்கள் உள்ளனவா?”

“இதை என்னால் யூகிக்க முடியவில்லை. எங்களுக்குள் இருக்கும் ஒரே முரண்பாடு `500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது’ என்ற மோடியின் அறிவிப்பை அவர் வரவேற்று அறிக்கை வெளியிட்டதுதான். விடுதலைச் சிறுத்தைகள் இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டது. இடதுசாரிகளும் பிரதமரின்  நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்தனர். மக்கள் நலக் கூட்டணியில் மூன்று கட்சிகள் ஒரு நிலைப் பாட்டையும், ம.தி.மு.க வேறு நிலைப்பாட்டையும் எடுக்க வேண்டிய சூழல் அமைந்துவிட்டது.”


‘‘கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து வைகோ உங்களிடம் பேசினாரா?”

‘‘என்னிடம் இதுகுறித்துப் பேசவில்லை. இடதுசாரி கட்சிகளின் தலைவர்களோடு பேசினாரா என்பது எனக்குத் தெரியாது. விலக முடிவுசெய்துவிட்ட பிறகு விவாதிக்கத் தேவையில்லை என்றும் கருதியிருக்கலாம்.”

“காவிரிப் பிரச்னை தொடர்பாக தி.மு.க. கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கெடுப்பதா, வேண்டாமா என்பதில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தனவே?”

‘‘ம.தி.மு.க., இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய மூன்று கட்சிகளும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என்ற முடிவை எடுத்தார்கள். காவிரிப் பிரச்னை குறித்த கூட்டம் என்பதால் அதைத் தவிர்க்க வேண்டாம் என்று நாங்கள்தான் கூறினோம். பெரும்பான்மைக் கருத்து அடிப்படையில், தி.மு.க நடத்துகிற கூட்டத்தில் பங்கேற்பது இல்லை என்று முடிவு எடுத்தோம். வைகோ விரும்பியபடி, தி.மு.க கூட்டிய கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்கவில்லை. எனவே, இது மோதலுக்குக் காரணம் அல்ல.”

“மக்கள் நலக் கூட்டணியில் வைகோ இருந்தபோது, தி.மு.க-வை அவர் கடுமையாக எதிர்த்தார். இப்போது அவர் விலகிவிட்டதால், தி.மு.க-வுடன் மக்கள் நலக் கூட்டணி நெருங்குமா?”

“வைகோ இருந்தபோது ஒரு நிலைப்பாடு, இல்லாதபோது ஒரு நிலைப்பாடு என்றெல்லாம் கிடையாது. மக்கள் நலக் கூட்டணியைப் பொறுத்தவரை 5 கட்சிகளா, 3 கட்சிகளா என்பது அல்ல. மாற்றுசக்தியாக தமிழக  அரசியலில் வளர வேண்டும், புதிய திருப்பங்களை உருவாக்கவேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்.”

“ஜெயலலிதா மறைவு, பிரதமர் மோடியின் ‘செல்லாக்காசு’ அறிவிப்பு போன்றவற்றைவைத்து, அரசியல் நகர்வை வேறுபக்கம் கொண்டு செல்ல வைகோ இந்த முடிவு எடுத்துள்ளாரா?”

“அது அவருக்கு மட்டுமே வெளிச்சம். மோடியைப் பொறுத்தவரையில் பி.ஜே.பி தமிழகத்தில் வளரவேண்டும் என்றுதான் விரும்புவார். ஜெயலலிதா அம்மையார் மறைந்துவிட்ட காரணத்தினால், அ.தி.மு.க-வைப் பலவீனப்படுத்தி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், அ.தி.மு.க-வுக்குத்   தலைமை இல்லை என்ற காரணத்தினால், ம.தி.மு.க-வை வலிமைப்படுத்திவிட முடியும் என்று வைகோ இந்த முடிவுக்கு வந்திருக்கிறார் என்று என்னால் சொல்ல இயலவில்லை. அ.தி.மு.க-வில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை அந்தக் கட்சியே நிரப்பிக்கொள்ளும். மற்றொரு கட்சி வந்து அதனை நிரப்ப முடியாது. அ.தி.மு.க-வைத் தள்ளிவிட்டு தி.மு.க-வுக்கு எதிராக அந்த இடத்துக்கு வேறு ஒரு கட்சி  வரமுடியாது.”

 

p36a.jpg

“மக்கள் நலக் கூட்டணியின் அடுத்த செயல்பாடு?”

“புதுச்சேரி மாநாட்டுக்குப்பின் மூன்று கட்சிகளின் தலைவர்களும் கூடி, மக்கள் நலக் கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள், அதன் வளர்ச்சி உள்ளிட்ட விஷயங்களை குறித்து விவாதிக்க இருக்கிறோம். மக்கள் நலக் கூட்டணியின் செயல்பாடுகளைத் தீவிரப்படுத்துவோம்.”

http://www.vikatan.com/juniorvikatan

Categories: Tamilnadu-news