சமூகவலை உலகம்

நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு.

3 hours 39 minutes ago

Nallur-Kandaswamy-Temple-Nallur-Kovil1.j

நல்லூர் கந்தசுவாமி கோவில் கட்டடக்கலை வரலாறு. ❤️


1917 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய கோயில் அதிகாரியான 4ஆம் இரகுநாத மாப்பாண முதலியார் சிந்தையில் முருகப்பெருமானுக்கான தீர்த்தக்கேணியைத் திருப்பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவானது.


அதன் பலனால் 1922 – 1923 ஆம் ஆண்டுப் பகுதியில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கான தீர்த்தக்கேணி சற்சதுர வடிவில் சுண்ணாம்புக் கற்களாலும் வெள்ளைக் கல்லாலும் அமைக்கப்பட்டது.
குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையார் காலத்தில் அமைக்கப்பட்ட தீர்த்தக்கேணியானது, கடப்பாக் கற்களைக் கொண்டு தற்போது திருப்பணி நிறைவேற்றப்பட்டுள்ளது.
குபேர கோபுரவாசல் கும்பாபிஷேகம் நிறைவடைந்த பின்னர் ஆரம்பிக்கப்பட்ட கேணித் தீர்த்தத் திருப்பணி இரண்டு வருடங்களில் நிறைவடைந்துள்ளதுடன்,சண்முக தீர்த்தக்கேணி பிரதிஷ்டா கும்பாபிஷேகம் கார்த்திகை உற்சவ தினத்தன்று (15.08.2017 செவ்வாய்கிழமை) நடைபெற்றது.
நல்லூர்க் கந்தசுவாமி பெருங்கோயிலுக்கான ஷண்முக தீர்த்தகேணியை உருவாக்கும் எண்ணம் 4 ஆவது இரகுநாத மாப்பாண முதலியாருக்கு 1917 ஆம் ஆண்டு ஏற்பட்டதுடன், தற்போது அச் சிந்தனையின் நூறாவது (100 ஆவது) வருடத்தில் புதிய திருக்கேணித் திருப்பணி நிறைவு பெற்று தீர்த்த பிரதிஷ்டை இடம்பெற்றது.
நல்லூர் கந்தசுவாமி கோயிலின் நிர்வாக உரிமை மாப்பாண முதலியார் குடும்பத்துக்கே உரித்தானது. இவ்வருடத் திருவிழாவானது (2022ஆம் ஆண்டு) மாப்பாண முதலியார் குடும்பத்தினரின் 288ஆவது நிர்வாக வருடமாகும்.


தற்போது மாப்பாண முதலியார் குடும்பத்தின் பரம்பரையில் வந்த குமரேஷ் சயந்தன மாப்பாண முதலியார் கோயில் 11ஆவது அதிகாரியாக நல்லூர் கந்தனுக்கு தன் சேவைகளை செய்து வருகிறார்.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் ஆலயத்தில் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்பவர்களுடைய வழிகாட்டலின் கீழ் அடுத்த சந்ததியைச் சேர்ந்தவர்கள் பணியாற்றி வருவது வழமையாகும். தந்தை, மகன் மற்றும் பேரன் என வழி வழியாக முருகனுக்கான சேவையை வழங்கும் பொருட்டு, அவர்கள் சிறுவயது முதலே பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.


சிறு வயது முதல் கிடைத்த தந்தையின் வழிகாட்டலில் வளர்ந்த குமாரதாஸ் மாப்பாண முதலியார், வெளியாட்களுடனான தொடர்பிற்கு முக்கியத்துவம் கொடுக்காது தெய்வப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தனக்கும் முருகனுக்கும் இடையிலான உறவை பிரபலப்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணம் கொண்டவர்.
முருகனுக்குக் கிடைக்கும் ஒரு சதமேனும் கவனமாகப் பாதுகாக்கப்பட்டு, முருகன் குடியிருக்கும் கோயில் வளர்ச்சிக்கு முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர். இவரது காலத்தில் நல்லூர்க் கோயில் பிரமாண்ட வளர்ச்சி பெற்றதுடன், மாப்பாணர் கட்டடப்பாணி என்னும் பெயர் நல்லூருக்குக் கிடைக்கக் காரணமாக விளங்கியவர். அதுமாத்திரமல்லாமல் முருகனுக்கு மிகவும் பிடித்த கோயில் அதிகாரி எனக் குறிப்பிடும் வகையில் கிட்டத்தட்ட ஜம்பது வருடங்களுக்கு மேலாக முருகனுக்குத் தொண்டாற்றி வந்தவர்.


தற்போதைய கோயில் அதிகாரியான குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அவரது மறைவிற்குப் பின்னர் கோயில் அதிகாரியாகப் பொறுப்பேற்ற குமாரதாஸ் மாப்பாண முதலியார், மிகவும் குறுகிய காலப்பகுதியில் அதாவது 6 – 7 மாதத்தில் பழைய வசந்த மண்டபத்தின் வாசலைப் பெரிதாக்கினார்.


ஒவ்வொரு வருடமும் கொடியேற்றத்திற்கு முன்னர் ஏதாவது ஒரு கோயில் திருப்பணி மேற்கொள்ளும் நடைமுறை அக்காலப் பகுதியில் இருந்து ஆரம்பிக்கப்பட்டதுடன்,அந்தப் பாரம்பரியம் இன்றும் நல்லூர்க் கோயிலில் தொடர்வது முருகனின் அருளே.


குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தந்தையான நான்காவது இரகுநாத மாப்பாண முதலியார் காலத்தில் நல்லூர்க் கோயிலுக்கு முன்பாகவுள்ள இராஜகோபுரம் மற்றும் சண்முகருக்கு முன்பாக அமைந்துள்ள கோபுரம் ஆகியவற்றின் திருப்பணிகள் வெள்ளைக்கல் கொண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அவரது காலத்தில் அக்கோபுரங்கள் இரண்டும் வியாழவரி வரைக்கு மாத்திரமே நிறைவு செய்யப்பட்டன.
தந்தையார் ஆரம்பித்திருந்த வெள்ளைக்கல் கோபுரத்திருப்பணிகளில் ஒன்றான இராஜகோபுரத் திருப்பணியை ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் பூர்த்தி செய்தார்.
அத்துடன் முருகனின் மனைவியரான வள்ளி தெய்வானையைக் குறிக்கும் வகையில் இராஜகோபுரத்திற்கு அருகில் இரண்டு மணிக்கூட்டுக் கோபுரங்களின் திருப்பணியையும் நிறைவு செய்தார். தந்தையார் விட்டுச் சென்ற சண்முகருக்கான கோபுரத் திருப்பணியை 1966 ஆம் ஆண்டு குமாரதாஸ் மாப்பாண முதலியார் நிறைவு செய்தார்.


தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கோயில் அமைப்பு ஆண்டுதோறும் மாற்றியமைக்கப்பட்டாலும், மூலஸ்தானத்தில் மாத்திரம் மாற்றங்களை ஏற்படுத்தாமல், அதைச்சுற்றியுள்ள பழைய மண்டபங்கள் அனைத்தும் புதிதாக்கப்பட்டன.


ஓவ்வொரு வருடமும் ஒவ்வொரு திருப்பணியை ஆரம்பித்து, அதை அடுத்த திருவிழாவிற்கு முன்னர் நிறைவேற்றும் வழக்கம் உருவானது. இவ்வளர்ச்சிப் படிமுறைகளில் மகா மண்டபம், ருத்திர மண்டபம் என்பன அமைக்கப்பட்டன.
சண்முகப் பெருமானுக்கு சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள நடராஜரைப் போன்று, ஒரு சபை அமைக்கப்பட்டது. ருத்திர மண்டபத் திருப்பணியின் போது, சிறிய கோயிலில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமிக்கு, விமானத்துடன் கூடிய கோயில் அமைத்துத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.
1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணக் கோயில் கட்டடக்கலை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டது. அதாவது வெளி மண்டபத்தை சொக்கட்டான் பந்தல் முறையில் அமைத்து கோயில் அழகுபடுத்தப்பட்டது.


தொடர்ந்து வந்த ஆண்டுகளில் ஒவ்வொரு திருப்பணிகளும் முருகன் அருளால் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுற்றன. குமாரதாஸ் மாப்பாண முதலியாரின் தமையனாரான ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் காலமான 1964 ஆம் ஆண்டு கோயிலுக்கான தேர்த் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.
ஈடுஇணையற்ற முறையில் அமைக்கப்பட்ட, அழகுப் பொக்கிஷமான தேரில் கந்தசுவாமியார் காலங்காலமாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் கொடுக்கப் போகிறார் என எண்ணிய காரணத்தால், குறித்த தேரை நீண்ட காலம் பாதுகாக்கும் பொருட்டு தேர்முட்டியை குமாரதாஸ் மாப்பாண முதலியார் அமைத்தார்.
நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் தேரும் மஞ்சமும் இலங்கையின் இருபெரும் கலைப்பொக்கிஷங்கள் ஆகும். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் படிகளுடனான தேர் மண்டபத் திருப்பணி நிறைவேற்றப்பட்டது.


குறித்த தேர் மண்டபத்தின் கட்டடக்கலை அமைப்பானது, நல்லூர்க் கோயில் அமைப்பிற்கும் சொக்கட்டான் பந்தல் அமைப்பிற்கும் பொருந்தக் கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டது.
நல்லூரில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருப்பணியையும் மூடிக்கட்டும் வழக்கம் கிடையாது. அனைத்து வேலைகளையும் கோயில் அதிகாரிகள் மேற்பார்வை செய்யும் அதேவேளை, அவற்றை பக்தர்களும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் நல்லூரில் பின்பற்றப்படுகின்றது.
கட்டடக்கலை வரைபடங்களுக்கு அப்பால் சென்று, கோயில் வளாகத்திலும் முருகன் முன்னிலையிலும் திருப்பணிகளுக்கான முக்கிய முடிவுகளை கோயில் அதிகாரிகள் எடுக்கும் வழக்கம் உள்ளது. இவ்வழக்கம் உலகில் உள்ள எந்தக் கோயிலிலும் இல்லாத வழக்கம் என்பதுடன், முக்கிய முடிவுகளை முருகனே எடுப்பார் என்பது ஜதீகமாகும்.


கோயில் திருப்பணிகளைக் கோயில் வளாகத்தில் வைத்து நிறைவேற்றுவதை எப்பொழுதும் கோயில் நிர்வாகத்தினர் ஊக்கப்படுத்துபவர்கள். திருப்பணியின் போது பணியாட்கள் பணத்தை மாத்திரம் இலக்கு வைக்காமல், பக்தியை முதன்மைப்படுத்தும் பொருட்டும், கோயில் வளர்ச்சியின் பொருட்டும் வேலைக் கட்டுப்பாடு மற்றும் உடைக்கட்டுப்பாடு என்பவற்றில் சில விதிமுறைகளை மிகவும் இறுக்கமாகப் பின்பற்றுபவர்கள்.


ஏழை – பணக்காரன் என்ற வித்தியாசம் இன்றி அனைவரும் திருப்பணியின் பொருட்டு முருகனை பக்தியுடன் நினைந்துருகிக் கொடுக்கும் பணத்துக்கும் பொருட்களுக்கும், அடுத்த கணம் முருகப் பெருமான் அதிபதியாகிறான். தனக்குத் தேவைப்படுகின்ற திருப்பணிகளை வருடா வருடம் நிறைவேற்றும் சர்வ வல்லமை நிரம்பியவன் நல்லூர்க் கந்தன். அதனால்தான் அவன் ஆலயத்திற்கு பெருங்கோயில் என்னும் சிறப்புக் கிடைக்கின்றது.


பக்தர்கள் பக்தியால் உருகி, முருகனுக்கு நேர்த்தி வைத்துக் கொடுக்கும் ஒரு பொட்டுத் தங்கமும் ஒன்று சேர்க்கப்பட்டு, முருகப் பெருமானுக்கான புதியதோர் நகையாக மாற்றம் பெற்று, அழகனை அலங்கரிக்கும் சிறப்பு நல்லூருக்கு மாத்திரம் உரித்தானது. வருடா வருடம் நடைபெறும் மகோற்சவ காலங்களில் புதிய அழகான நகையுடன் அலங்காரக் கந்தனாக தேருக்கு எழுந்தருளும் அவன் அழகைக் காணும் போது, கொடுத்தவனுக்கு மாத்திரமல்ல அனைவருக்கும் கண்கள் பனித்து, உள்ளம் உருகும்.
வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள், தையல்காரர், கொல்லாசாரியார் என அனைவரும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே தயாராகத் தொடங்குவார்கள். நல்லூரில் உற்சவங்கள் அனைத்தும் கண்ணைக் கவரும் வண்ணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றாலும், திருவிழாக்களுக்கும் அபிடேகங்களுக்கும் குறைந்த அளவான கட்டணமே உபயகாரர்களிடம் இருந்து பெறப்படுகிறது. ஆயினும் அனைத்துத் திருவிழாக்களும் எவ்வித வேறுபாடுமின்றி நடைபெறுவது நல்லூரின் அழகு.


கோடீஸ்வரர் செய்யும் திருவிழாக்களுக்கும் ஏழை செய்யும் திருவிழாக்களுக்கும் இடையில் வித்தியாசம் இல்லை. பாரம்பரியமும் பழைமையும் மாறாமல் உபயகாரர்களுக்கு திருவிழாக்கள் வழங்கப்பட்டாலும், அவற்றை முற்றுமுழுதாக கோயிலே பொறுப்பேற்று நடத்துவது நல்லூருக்கு மட்டும் உரித்தான சிறப்பு.
நல்லூர் கோயில் நடைமுறைகளை மிகவும் உன்னிப்பாகப் பார்ப்பவர்களுக்கு ஒரு விடயம் மிகவும் தெளிவாகப் புரியும். நல்லூரில் கோடி கோடியாகப் பணம் குவிவது இல்லை.


கோயிலில் திருப்பணி உண்டியல் மற்றும் வெளிமண்டப உண்டியல் என இரண்டு உண்டியல்கள் மாத்திரமே வைக்கப்பட்டுள்ளமையும் இங்குள்ள இன்னுமொரு சிறப்பாகும். ஆகவே ஒரு ரூபா அர்ச்சனையில் இத்தனை பிரமாண்டமான திருப்பணிகளும், வண்ணமயமான திருவிழாக்களும் நடைபெறுவதற்கு இன்றைய காலகட்டத்தில் சாத்தியமாகுமா? என்ற கேள்விக்கு முருகன் மட்டுமே பதில் அறிவான்.


நல்லூரானை மனதால் நெருங்குவதற்கு ஒரு செங்கல்லோ அல்லது ஒரு ரூபா அர்ச்சனையோ போதுமானது. கோயில் வளாகத்தில் அமைந்திருந்த வணிக நிலையங்ளையும் வியாபார நிறுவனங்களையும் 1980 களில் அகற்றி, நல்லூரைச் சுற்றி மிகவும் பிரமாண்ட மணற்பரப்பு வெளி உருவாக்கப்பட்டது. பின்னர் வந்த காலப்பகுதியில் கோயில் உள்வீதி சிறிது சிறிதாகப் பெருப்பிக்கப்பட்டது.


அத்திருப்பணிகளின் போது உள்வீதியின் அமைப்பானது, கோயிலின் ஏனைய கட்டடங்களுக்கும் மண்டபங்களுக்கும் ஒத்துப்போகும் வகையில் உருவாக்கப்பட்டது.
1978 ஆம் ஆண்டு புதிதாக அமைக்கப்பட்ட வசந்த மண்டபத்தில் இருந்து நேரெதிரில் வெளிவீதியை நோக்கியதாக கோயிலுக்கான வாசல் ஒன்று அமைக்கப்பட்டது. யுத்த காலத்தில் ஏற்பட்ட சீமெந்துத் தட்டுப்பாட்டின்போதும் திருப்பணிகள் நடந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


1984 ஆம் ஆண்டு அரசு வீதியின் காணிக்குப் பதிலாக கேணித்திருக்கோயிலுக்கு வெளியில் இருந்த காணி மாற்றீடாக வழங்கப்பட்டு, இரண்டு கோயில்களும் ஒன்றாக்கப்பட்டு கோயில் சுற்று வீதி உருவாக்கப்பட்டு நல்லூர் கோயிலின் அமைப்பை ஒரு கோட்டைக்கு ஒப்பானதாக மாறியது.


2008 ஆம் ஆண்டு சுற்றுக் கோயில்களுக்கு தனித் தனிக் கோயில்கள் அமைக்கப்பட்டதுடன், சபைகள் அமைக்கப்பட்டு, கோயில்கள் உலோகத் தகட்டால் வேய்ந்து திருப்பணி நிறைவேற்றப்பட்டது. அத்துடன் 2008 ஆம் ஆண்டு சண்முகருக்கான இராஜகோபுரத் திருப்பணி நவதானியம் இடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், 2011 ஆம் ஆண்டு இந்திய பேரரசர்கள் கட்டிய பெருந்திருப்பணிக்கு ஒப்பான நல்லூர் இராஜகோபுரக் குடமுழுக்கு இடம்பெற்றது.


முருகன் பார்வை நல்லவற்றில் முடிய வேண்டும் என்பதற்காக சண்முகருக்கு எதிரில் அமைந்திருந்த கோயில் பூந்தோட்டத்தில் அருணகிரிநாதர் ஸ்தாபிக்கப்பட்டார். தெற்கில் அமைக்கப்பட்ட கோபுரத்தை சமநிலைப்படுத்தும் பொருட்டு வடக்கில் ஒரு கோபுரம் கட்டப்பட்டு, திருப்பணி நிறைவேற்றப்பட்டது.

உமாச்சந்திரா பிரகாஷ்., Babu Babugi

வட்ஸ்அப் ஓடிபி மோசடிகள் தொடர்பில் பொதுமகளுக்கு சிஐடி எச்சரிக்கை

2 days 23 hours ago

Published By: DIGITAL DESK 3

30 JUL, 2025 | 03:51 PM

image

வட்ஸ் அப் பயனர்களை குறி வைத்து சைபர் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பயனர்கள் ஓடிபி (OTP) எனப்படும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய கடவுச்சொற்கள் உள்ளிட்ட எந்த தகவல்களையும் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என சிஐடி எனப்படும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைல்போனுக்கு ஓடிபியை குறுந்தகவல்கள் (SMS) ஊடாக அனுப்பி வைப்பார்கள். பின்னர் தெரியாத செல்போன் எண்ணிலிருந்து, நமது வட்ஸ்அப்பில் ஒரு செய்தி வரும். அதில் வட்ஸ்அப் கணக்கிற்கான ஆறு இலக்க குறியீடு உங்களது எண்ணுக்கு தவறாக அனுப்பப்பட்டுவிட்டதாகவும், அந்த ஓடிபி குறியீட்டை பகிருமாறு மோசடிக்காரர்கள் கேட்பார்கள். எந்த சூழ்நிலையிலும் ஓடிபியை பகிர்வதை தவிர்க்க வேண்டும்.

ஓடிபியை பகிர்ந்தால், வட்ஸ்அப் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அது சைபர் குற்றவாளிகள் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். அதன்பிறகு அவர்கள், வட்ஸ் அப்பை பயன்படுத்தி, ஆள் மாறாட்டம் செய்து, அவருடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு செய்தி அனுப்புவர். அவற்றில் அவசர உதவி, விபத்து செலவுகள், மருத்துவத் தேவைகள் போன்றவற்றிற்காக பண உதவி கோருவர்.

இதனால், தகவல் பெறும் நபர் பணத்தை அனுப்பிவிட்டு, பின்னர் தான் இது ஒரு மோசடி என்பதை உணர்கிறார். நீங்கள் ஓடிபி பெற்றால், அதை யாருடனும் பகிர வேண்டாம். 

இதுபோன்ற நிதி மோசடிகள் தொடர்ந்து இடம்பெறுவதால், பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறு சிஐடி வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு சூழ்நிலையிலும் எந்தவொரு ஒன்லைன் கணக்குகளின் OTP எண்கள் அல்லது சரிபார்ப்புக் குறியீடுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/221370

கறுப்பு ஜூலை : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா

1 week 1 day ago

கறுப்பு ஜூலை தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல் : 13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அது இடம்பெற்றிருக்கும் : கொல்லப்பட்ட தமிழர்களின் பல உடல்களை பார்த்தேன் என்கிறார் சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா

Published By: RAJEEBAN

23 JUL, 2025 | 12:44 PM

image

சட்டத்தரணி  ஸ்ரீநாத் பெரேரா தமிழ் மக்களிற்கான நீதி அவர்களின் அரசியல் அபிலாஷைகளிற்காக தென்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக குரல்கொடுத்து வரும் ஒருவர்.

வடக்குகிழக்கில் தமிழ் மக்கள் தங்களது உரிமைக்காக போராடும் இடங்களில் எல்லாம் பார்க்ககூடிய தென்பகுதி முகம் அவர்.

கறுப்புஜூலை குறித்த அவரின் மனப்பதிவுகள்.

srinath_3.jpg

அவ்வேளை நான் சட்டபீட மாணவனாகயிருந்தேன், 24ம் திகதி நாங்கள் சட்டபீடத்தில் இருந்தவேளை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பெரும் புகைமண்டலம் எழுந்ததை பார்த்தோம்.

என்ன நடக்கின்றது என்பது எங்களிற்கு தெரியாது,தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

சந்திரஹாசனின் துணைவியார் அவ்வேளை எங்களின்  சிரேஸ்ட விரிவுரையாளர்களில் ஒருவர். அவர் அச்சத்தினால் நடுங்கியது எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.

நான் அவரிடம் சென்று என்ன பிரச்சினை என கேட்டேன், அதற்கு அவர் தமிழர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன என தெரிவித்தார்.

அந்த நாட்களில் எங்களின் ஊடகங்களாக செய்தித்தாள்களும் வானொலிகளும் மாத்திரம் காணப்பட்டன, தொலைக்காட்சியின் ஆரம்ப நாட்கள்.

அன்று காலை முதல் நாள்( 23) 13 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்திருந்தோம்.

அதன் பின்னர் பௌத்தர்கள் கனத்தையில் கூடியது குறித்தும்  சிங்கள காடையர்கள் தமிழர்களின் வீடுகளிற்கு தீ வைத்தது குறித்தும் கேள்விப்பட்டோம். 

எங்களை பல்கலைகழகத்திலிருந்து செல்லுமாறு கேட்டார்கள், பேருந்துகள் இல்லை, நான் எனது நண்பியுடன் காரில்  எனது ஊரான வாதுவை நோக்கி பயணித்தேன்.

காரில் செல்லும் வழியில் நான் வெள்ளவத்தை தெகிவளை பகுதிகளில்  ஏழு எட்டு உடல்களை பார்த்தேன். கடைகள் வீடுகள் எரிவதையும் உடல்களையும் பார்த்தேன் - 

நாங்கள் பயணித்த காரை அவர்கள் நிறுத்தினார்கள், யாராவது தமிழர்கள் இருக்கின்றார்களா என கேட்டார்கள் எங்களுடன் தமிழர்கள் எவரும் பயணிக்கவில்லை.

இராணுவத்தினர் டிரக்குகளில் காணப்பட்டனர், ஆனால் அவர்கள் காடையர்களை தடுப்பதற்கான எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை.

கொழும்பு நான்கிலிருந்து தெகிவளை வரை 100க்கும் வீடுகள் கடைகள் எரிவதை பார்த்தேன்.

ஐக்கியதேசிய கட்சி அமைச்சர் சிறில்மத்தியு இதன் பின்னணியில் இருந்தார்.

எனது நகரான வாதுவையில்  தமிழர்கள் அதிகம் வசிக்கவில்லை, ஆனால் தமிழர் ஒருவரின் சுருட்டுக்கடையிருந்தது. வயதான தமிழ் தம்பதியினர் அந்த கடையை நடத்தினார்கள்.

சிறுவயதிலிருந்தே அவர்களை எனக்கு தெரியும், அப்பாவிகள்  அன்பாக நட்புடன் பழகுபவர்கள்.

அவர் எப்போதும் சாரம்தான் கட்டியிருப்பார்.

பகல் 12மணியளவில் அவரது கடை சிறிதளவு திறந்திருந்தது,

ஆனால் பகல் மூன்று மணியளவில் அந்த சுருட்டுக்கடையை எரித்துவிட்டார்கள் என்ற  தகவல் எனக்கு கிடைத்தது,

அந்த வயதான தமிழ் தம்பதியினர் அங்கிருந்து தப்பியோடி அருகிலிருந்த பொலிஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இது இனவெறியில்லை இனவெறி கலந்த சூறையாடல். அவ்வாறுதான் சம்பவங்கள் நடந்தன.

அன்று மாலை ஜேஆர் ஜெயவர்த்தன உரையாற்றினார், ஊரடங்கை அறிவித்தார், மூன்று அரசியல் கட்சிகளை தடை செய்தார்.

25ம் திகதி கொழும்பு வெலிக்கடை சிறையில் குட்டிமணி உட்பட தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர் என்பதை அறிந்தோம், அவர்களின் கண்கள் தோண்டப்பட்டன.

ஐக்கியதேசிய ஒரு கட்சியாக கறுப்பு ஜூலையுடன் தொடர்புபட்டிருக்கவில்லை, ஆனால் அந்த கட்சியின் இனவாத அணியின் சிறில்மத்தியு  கறுப்பு ஜூலைக்கு தலைமை வகித்தார்.

மிகவும் திட்டமிடப்பட்ட முறையிலேயே இது இடம்பெற்றது.

வாக்காளர் பட்டியலை வைத்தே தமிழர்களை அவர்களின் சொத்துக்களை தாக்கினார்கள், அது இல்லாமல் எப்படி அவர்களால் தமிழர்களை இலக்குவைத்திருக்க முடியும்.

ஆகவே இது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட விடயம்,

13 இராணுவத்தினர் கொல்லப்படாவிட்டாலும் அவர்கள் இவ்வாறான ஒரு கலவரத்தை வன்முறையை முன்னெடுத்திருப்பார்கள்,

நான் கொழும்பு அன்டர்சன் தொடர்மாடியில் வசித்து வந்த எனது நண்பியொருவரை கொழும்பு பம்பலப்பிட்டியில் இருந்த அகதிமுகாமிற்கு கொண்டுசென்று அங்கு விட்டுவிட்டு வந்தேன். அவர் மிகுந்த அச்சத்துடன் காணப்பட்டார். அன்டசன் தொடர்மாடியிலிருந்த  சிங்களவர்கள் அவருக்கு உதவினார்கள்.

அவ்வேளை வடக்கிற்கு தப்பிச்சென்ற தமிழர்கள் ஆயிரக்கணக்கில் பின்னர் வெளிநாடுகளிற்கு புலம்பெயர்ந்தார்கள்.

தமிழ் புலம்பெயர் சமூகம் என்பது அப்படித்தான் ஆரம்பமானது, 1958 கலவரத்தின் பின்னர் வெளிநாடுகளிற்கு தப்பிச்சென்றவர்களும் உள்ளனர். ஆனால் 1983ம் ஆண்டின் பின்னரே பெருமளவானவர்கள் வெளிநாடுகளிற்கு சென்றார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் வளர்ச்சியடைவதற்கு கறுப்பு ஜூலையே காரணமாக இருந்தது, பிரிந்து செல்வதை தவிர வேறுவழியில்லை என்ற நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டனர்.

இலங்கையின் வரலாற்றில் இதுவே மிகவும் இருண்ட பக்கம்.

ஆகவே இந்த நாளை நாங்கள் நினைவு கூருகின்றோம்,

இனிமேலும் இரத்தக்களறியில்லை. இனிமேலும் கறுப்பு ஜூலையில்லை என்ற கருபொருளில் கொழும்பில் நாங்கள் கறுப்பு ஜூலையை நினைவு கூரவுள்ளோம்.

கறுப்பு ஜூலை என்பது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல், தனித்தனியாக தமிழர்கள் தாக்கப்பட்டாலும் இது தமிழர் தேசத்தின் மீதான தாக்குதல்.

நான் சிங்களவன் நானும் எனது குழுவினரும்  அந்த நாட்களிற்காக எங்கள் கவலையை வேதனையை தெரிவித்துக்கொள்கின்றோம்.

எங்களை சேர்ந்தவர்களின் இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலிற்காக  வெட்கப்படுகின்றோம்.

https://www.virakesari.lk/article/220703

எழுத்தாளனின் பெயர் சூட்டப்பட்ட வீதி - மாத்தளை மலரன்பனுக்கு கௌரவம்!

1 week 2 days ago

24 JUL, 2025 | 12:47 PM

image

ஒரு எழுத்தாளனின் பெயரை ஒரு வீதிக்கு சூட்டி, அந்த எழுத்தாளனை கௌரவித்த நிகழ்வொன்று அண்மையில் மாத்தளையில் நடைபெற்றுள்ளது.

மாத்தளை மலரன்பன் என்ற எழுத்தாளன் நான்கு முறை அரச சாஹித்திய விருதை வென்றவர். அமைதியான குணப்பண்புடைய இவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். 

அவரது எழுத்துப்பணியை கௌரவிக்கும் வகையில் மாத்தளை மாவட்டத்தில் நோர்த் மாத்தளை என்ற இடத்தில் உள்ள அவரது இல்லத்தினை அண்மித்த ஆயுர்வேத மத்திய நிலையத்திற்குச் செல்லும் வீதி “ஆறுமுகம் மலரன்பன் வீதி” எனப் பெயரிடப்பட்டு, எழுத்தாளன் மாத்தளை மலரன்பனுக்கு பாரிய பாராட்டு விழாவும் அண்மையில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் புத்தசாசன சமய விவகார, கலாசார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் மத்திய மாகாண ஆளுநர்  பேராசிரியர் சரத் அபயகோன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

வாழும்போது வாழ்த்தப்படும், அங்கீகரிக்கப்படும் கலைஞர்கள், எழுத்தாளர்களின் பட்டியலில் மாத்தளை மலரன்பனும் இடம்பிடித்துள்ளார். 

Malaranpan_Road-__2_.jpg

Malaranpan_Road-__1_.jpg

Malaranpan_Road-__3_.jpg

https://www.virakesari.lk/article/220802

ஆடி அமாவாசை விரதம். உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.

1 week 2 days ago

maxresdefault.jpg

FB_IMG_1628535460653.jpg

ஆடி அமாவாசை விரதம்.

உங்கள் பகுதியில் இன்று காத்தோட்டிக் காய் என்ன விலை.

Sangaravel Pirabashithitan Piraba

மானிப்பாய் 1 காய் 150 ரூபாய்

Roopa Muraleetharan

வவுனியா ஒரு காய் 200/-

Tharsana Kumar

1kg 4000 ரூபாய் point Pedro

Kandeepan Rajathurai

10,150 Rupees. (London £25 per kg)

Ramalingam Bhaskaran

காத்தோட்டிக்காய் , இதன் சாதாரண விலை 50/=...70/= ஓகே. மேலதிகவிலை மடவேலை? காரணம் ஆடிஅமாவாசை அன்று மட்டுமே நாம் பாவிக்க உள்ளோம். We are not fools like others...in... marketing...

Giritharasharma RN

கிலோ 4600/- மருதனார்மடம்

Sweeththa Suvi Suvi

சாவகச்சேரி ஒரு காய் 500

Devi Sri

எலுமிச்சை போல் உள்ளது இதான் விலை இவ்வளவா

Dhayan Geeve

Kilinochchi poonakary oru kaai 300 ரூபாய்

Rasaiyah Naguleshwaran

கல்மடுவில்400 ரூபாய்

Suventhiny Pulenthirarasa

One Rs 50

Rupan Rupan

திருநெல்வேலி 1kg 10000/=

K.K Shanthirakumar

400 ரூபா

Thulasi Sana

சாவகச்சேரில 1kg 6000Rs

Sarogini Gnanasothiyan

யாழ்ப்பாணத்தில் வியாபாரிகள் பேய்களாக மாறிவருகின்றனர். எல்லாம் அழிவுக்குத்தான்.

1 காய் 500 ரூபாய்

Kulam Kulam

கொழும்பில் ஒரு காய் 15.00 ரூபா.

Chinniah Satheeshkumar

London -எட்டாயிரம் இலங்கை ரூபாய்

Sivabalan Siva

200 வவுனியா

நீங்கா நினைவுகள்

யாழ்ப்பாணம் ஒரு காய் 450/=

Nirojan Niroy

Thellipalai 1kg 6000

Suriya Ruba

400

Panchalingam Thusha

100g 600/=

Sundar Durai

இது என்ன காய்...பார்த்ததில்லை.... தமிழ்நாடு, இந்தியா

Sathees Thevarajah

தவிச்ச முயல் அடிப்பதில் நாங்கள் கெட்டி காரர் தானே???

Sivanuja Kugasooriyar

250

Perampalam Kanagaratnam

தவிச்சமுயல்.

Sangavy Sangavy Sangavy

100

Jeyamani Sivanadarajah

உடுப்பிட்டியில் ஒரு காய் 100/=

நம்ம யாழ்ப்பாணம் 

இன்றைக்கு இவன், நாளைக்கு எத்தனை பேரோ?

1 week 5 days ago

518983275_24171336192486458_441522761104

இன்னைக்கு இவன்..

நாளைக்கு எத்தனை பேரோ?

இந்த பையன் மூன்றாண்டுகளுக்கு முன்பு பள்ளி மாணவனாக இருந்த போது 'சிறுவன்'.

அப்பவே ஸ்கூல் ரவுடியாக ஆசிரியரை எதிர்த்து தம்பி பேசிய வீடியோ படு வைரல்.

அதாவது அந்த ஸ்டைல் பேச்சு என்னென்னா, "ஏறுனா ரயிலு.. இறங்குனா ஜெயிலு.. போட்டா பெயிலு"

அப்ப ஏதாவது பண்ணி இருந்தா சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு போய் இருப்பான். திண்டுக்கல் தம்பி இப்போ மாட்னது 19 வயசுல.

அதுவும் ஏடிஎம்முக்கு கொண்டு போன பணம் 29 லட்சத்தை கொள்ளையடித்த வழக்கில். ஸோ, நேரடியாக ஜெயில்.. ஒன்னே கால் வயசு தம்பிய ஏமாத்திடிச்சு..

தமிழ்நாடு முழுக்க பள்ளிகளில் இந்த மாதிரி தறுதலை மனநிலையோடு மாணவர்கள் ஏராளமான பேர் இருக்கிறார்கள்.

இவர்களுக்கெல்லாம், ஒரே நினைப்பு, சட்டம் நம்மளை ஒன்றும் புடுங்கி விட முடியாது. அப்புறம் கைது என்றால் ஏதோ கடைக்கு போய் டீ குடித்துவிட்டு வரும் சமாச்சாரம் என்று நினைக்கிறார்கள்..

இந்த மாதிரி தறுதலைகளுக்கும் இவைகளை வேடிக்கை பார்க்கும் பெற்றோருக்கும் சில விஷயங்கள் புரிவதில்லை.

கைது.. பின்னாடி இன்னான்னா?

ஜூம் பண்ணி பார்ப்போம்.

பல விஷயங்களில் இவர்கள் கைது , அவர்கள் கைது என பேப்பரில், கைது என்பதை செய்தியாக சர்வசாதாரணமாக படித்துவிட்டு கடந்து விடுவீர்கள்.

மற்ற குற்றவாளிகளை விட்டுவிடுங்கள்.

தற்செயலாய் சிக்கும் புதியவர்களின் நிலைமை இருக்கிறதே, அதுதான் இங்கே பெரும்பான்மை. ஆனால் அவர்களில் பலருக்கும் சட்டத்தின் பின்விளைவுகள் என்பது மருந்துக்கும் தெரியாது.

சட்டத்தால் நம்மை தொடக்கூட முடியாது என்று இந்த காலத்து தலைமுறையினர் எதற்கெடுத்தாலும் பொதுவெளியில் கெத்து காட்டுகிறார்கள்.

மாஸ் ஹீரோக்களின் பில்டப் சினிமாக்களை மட்டுமே பார்த்துப் பார்த்து கும்பலைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை.

சாதாரண அடிதடி என்று வைத்துக்கொள்வோம். விசாரணைக்கு என்று காவல் நிலையத்திற்கு கூட்டிக்கொண்டு போவார்கள். காவல் நிலையத்தில் நுழையும்போதே பின்னங்கழுத்தில் ... விழும்.

டூட்டிக்கு புதிதாக வருபவர்கள், என்ன கேசு இது என்று நாலு தட்டு தட்டிவிட்டுத் தான் மற்ற வேலையையே பார்ப்பார்கள்.

அதே மாதிரி, அடுத்த டூட்டிக்கு வரும்போது அக்யூஸ்ட்டை பார்க்க வாய்ப்பு இருக்காது என்று நினைத்து போகும்போது கொஞ்சம் விருந்து வைத்து விட்டு தான் செல்வார்கள்.

சுருக்கமா சொன்னா இருக்கிறவங்க, வர்றவங்க, போறவங்கன்னு எல்லார்கிட்டயும் விழும்.

இவ்வளவு விழுந்தாலும் குடும்பத்தினரும் உறவினர்களும் காவல் நிலையத்திற்கு அருகிலேயே காத்துக் கொண்டிருப்பதால் நிலைமை பற்றி சீரியஸாக பெரிதாய் தெரியாது.

யாரையாவது பிடித்து எப்படியாவது பேசி எதையாவது கொடுத்து வெளியே கொண்டு வந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்து கொண்டே இருக்கும். அதாவது அடித்ததோடு விட்டுடுவாங்க என்ற அசால்ட்டான நம்பிக்கை .

ஆனால் எப்ஐஆர் போட்டு ரிமான்ட் செய்தே ஆகவேண்டும் என்ற சூழல் உருவாகி காவல்நிலையத்தில் பலரும் பேசிக் கொள்ளும் போதுதான், லாக்கப்பில் இருக்கும் பார்ட்டிக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். அப்போதுகூட அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது தெளிவாகத் தெரியாது.

நீதிமன்றத்திற்கு அழைத்து கொண்டு செல்லும்போது கூட ஏற்கனவே தெரிந்த காவலர்கள்தான் வருவார்கள். கூடவே குடும்பத்தினரும் உறவினர்களும் வருவார்கள்.

மேஜிஸ்திரேட் ரிமாண்ட் செய்து ஜெயிலுக்காக வேனில் ஏற்றும் வரை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை அருகில் பார்க்க முடியும்.

இதற்குப் பிறகுதான் சோதனைகள் ஆரம்பிக்கும். வேனில் ஏற்றிய பிறகு குடும்பத்தினர் உறவினர்கள் கட் ஆவார்கள்.

ரிமாண்ட் க்கு பிறகு சகஜமாக பேசிக்கொண்டு கூடவே வரும் காவலர்கள் சென்ட்ரல் ஜெயிலில் ஒப்படைத்த உடன் காணாமல் போய்விடுவார்கள்.

ஜெயில்.. முற்றிலும் புதிய இடம்..

உள்ளே அட்மிஷன் போடுவதற்காக அங்க அடையாளங்களை கேட்கும்போதே விதவிதமாக சீர்வரிசை. புழுவை விட கேவலமாக கருதி அவர்கள் நடத்துகிற விதத்திலேயே ஜென்மம் செத்துப் போய்விடும்.

அதற்கப்புறம் சிறையில் பிளாக் என்கிற வகுப்பு. விதவிதமாக துர்நாற்றங்கள் கலந்து வீசும் அங்கு ஏகப்பட்ட பேருடன் விசாரணைக் கைதி என்ற அந்தஸ்தோடு குடும்பம் நடத்திய ஆக வேண்டும்.

டாய்லெட் காலியாக இருக்கும் நேரம் பார்த்து அதைப் பிடித்து போய் வருவதற்குள்..

மூன்று வேளையும் கியூவில் நின்று தட்டில் வாங்கித் தின்னுவதற்குள்..

கக்கூசை கழுவ விடலாம், துணிகளை துவைக்க விடலாம் தோட்ட வேலை செய்ய விடலாம் இன்னும் என்னென்ன வேலை இருக்கிறதோ அத்தனையையும் செய்யச் சொல்லலாம். வார்டன்கள் சொல்வதை செய்யாவிட்டால் அடுத்தடுத்த கட்ட நெருக்கடிகளுக்கு ஆளாகிக் கொண்டே போகலாம்.

ஜெயிலுக்குப் போன ஓரிரு தினங்கள் தொடர்ந்து குடும்பத்தினரும் உறவினர்களும் நண்பர்களும் பிஸ்கட் பழங்களுடன் வந்து அக்கறையாக பார்ப்பார்கள்..

ஜாமின் கிடைப்பதில் தாமதம் ஆகி உள்ளே இருக்க இருக்க, அக்கறை யோடு வந்து பார்த்துக்கொண்டிருந்த பார்வையாளர்களின் வருகை என்பது குறைந்து கொண்டே போகும். ஒரு கட்டத்தில் அடியோடு கூட நின்று போகும்.

ஜாமீன் கிடைத்து வெளியே வரும்வரை ஏண்டா இந்த தவறை செய்தோம் என்று நினைத்து வருந்தாதே தருணமே இருக்க முடியாது.

வாரங்கள் கழித்து மாதங்கள் கழித்து ஜாமீனில் வந்த பிறகு, பட்டதெல்லாம் போதும் என நொந்து போய் சொந்த வேலையை பார்க்க ஆரம்பித்து இருப்பார். அப்படியே ஜெயில் சமாச்சாரத்தையும் மறந்து விடுவார்.

ஆனால் சில ஆண்டுகள் கழித்து நீதிமன்றத்திலிருந்து நேரில் ஆஜராகும்படி சம்மன் வரும்.

அப்போது பார்த்தால், ஒரு நல்ல நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து இருக்கலாம். ஒரு வியாபாரம் ஆரம்பித்து நன்றாக போய்க் கொண்டிருக்கலாம். அல்லது புது மாப்பிள்ளையாக மாமனார் வீட்டில் கெத்து கூட காட்டிக் கொண்டிருக்கலாம்.

எல்லாமே தொலைஞ்சு போச்சு என்று மறந்துவிட்டிருந்தால் இந்த நேரத்தில் பார்த்தா இந்த எழவு வரவேண்டும் என நொந்து போய் தலையில் அடித்துக்கொண்டு உட்காருகிற கட்டம் அது.

குற்றப்பத்திரிகை தாக்கல் விசாரணை என நீதிமன்றங்களுக்கு வருடக்கணக்கில் அலைய நேரிடும்.

உள்ளூரில் வழக்கில் சிக்கி உள்ளூர் நீதிமன்றத்தில் அலைய நேரிட்டால் ஓரளவு சமாளிக்கலாம்.

ஆனால் வெளியூரில் தப்பு செய்துவிட்டு அங்கேயே அங்கேயே மாட்டி அந்த நீதிமன்ற எல்லைக்குள் வழக்கு நடந்தால், சுத்தம்.

ஒவ்வொரு முறையும், அன்றைய தின எல்லா வேலைகளுக்கும் குட்பை சொல்லிவிட்டு வழக்குக்காக ஊரு விட்டு ஊரு போய் வரும் வரை நாய் அலைச்சல்தான்.

சென்னையிலிருந்து குற்றாலத்திற்கு குளிக்கப் போய் அங்கு தகராறு செய்துவிட்டு வழக்கு பதிவாகி சென்னையில் இருந்து 650 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தென்காசி நீதிமன்றத்திற்கு இன்றைக்கும் நடப்பவர்கள் பலருண்டு.

இதேபோல நீண்டதூர மாவட்டங்களுக்கு பயணம் செய்யும்போது அங்கு ஏதாவது ஒரு விஷயத்தில் தகராறு வழக்கு பதிவாகி சொந்த ஊருக்கும் தகராறு நடந்த ஊர் நீதிமன்றத்திற்கும் அலையும் பரிதாபங்கள் பற்றிக் கேட்டுப் பாருங்கள். விதவிதமான கண்ணீர் கதைகள் கிடைக்கும்

சரி போகட்டும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை எல்லாம் முடிந்து தீர்ப்பு கட்டம். இதற்குப் பிறகு?

வேறென்ன? தண்டனை கொடுத்தால் உள்ளே போக வேண்டியதுதான். விடுதலை என்றால் ஆள விடுங்கடா சாமி என்று புத்தர் ரேஞ்சுக்கும் போகலாம்..

எல்லாமே பழகிவிட்டதால் அடுத்த ரவுண்ட்டையும் பார்த்துவிடலாம் என இன்னும் திமிர் அதிகமாகலாம்.

அப்புறம் வழக்குகளுக்கான செலவு, சமூகம் மற்றும் சொந்த பந்தங்கள் இடையே அவமானம்.. போன்றவை உள்ளூர் வரிகள்..

முக்கிய குறிப்பு.. சொன்னது கொஞ்சம் தான்.. சொல்லாமல் விட்டது தான் அதிகம்..

இதையெல்லாம் வீட்டில் பிள்ளைகளிடம் சொல்லி வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை.. பள்ளிகளில் சொல்லி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது ஆசிரியர்களின் கடமை.

சொல்ல வேண்டிய கடமை உள்ளதால்தான் திரும்பத் திரும்ப சொல்லி வருகிறோம்.

Ezhumalai Venkatesan

நீர் நிலை ஒன்றில் விழுந்த வாகனத்தில் இருந்து எப்படி தப்பிப்பது.

2 weeks 2 days ago

519548390_24356824977255068_191371777915

நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள் - நடக்கக்கூடாது 🤲🤲🤲 - முதலில் என்ன செய்வீர்கள்?
அது பற்றிய சில வழிகாட்டல்களையே இங்கு பார்க்கப் போகிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது. ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள்.
♦️நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை
திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும்.
♦️ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும்.
♦️உங்கள் வாகன இருக்கையில் காணப்படும் "ஹெட்ரெஸ்ட்டை" தலைத் தலையாணையை கழற்றி, அதிலுள்ள உலோக முனையை பயன்படுத்தி அல்லது வாகனத்தினுள் காணக்கிடைக்கும் ஏதாவது உடைக்கும் கருவிகளைப் பயன்படுத்தி வாகனத்தின் பின்புற கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் தப்பிக்க இலகுவான வழியாகும்.
♦️ஏன் பின்புறக் கண்ணாடி?
பெரும்பாலான வாகனங்கள் தணீணீரில் மூழ்கும் போது முதலில் பின்புறம் மிதக்கும்
படியாகவே வடிவமைக்கப்படுகின்றன.
♦️ஆதலால் தீங்கள் பின்புற கண்ணாடியால் தப்பிக்க முயற்சிப்பதே மிகவும் எற்றமான மற்றும் பாதுகாப்பான வழியாகும்.

பாதுகாப்பான பயணம் அமைய வாழ்த்துக்கள்.

Imran Farook 

LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு.

3 weeks 1 day ago

517735388_1183868433756013_7629288380249

517401546_1183868693755987_3110847641329

518291255_1183868843755972_3304296174434

517994984_1183868443756012_1160205699045

517753925_1183868700422653_1993448303160

518064344_1183868477089342_1969309974019

518388559_1183868483756008_1776805555238

517089367_1183868847089305_8614203021797

LTTE பாதுகாத்த இரகசிய பதுங்குக்குழி கண்டுபிடிப்பு, அகழ்வின் பல கண்டுபிடிப்புகளாம்!

தமிழீழ விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பாரிய அளவிலான நிலக்கீழ் பதுங்குக்குழி ஒன்றை அகழ்ந்தெடுக்கும் பணிகள் நேற்று (ஜூலை 10, 2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்புப் பகுதியில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பமாகியுள்ளன. போரின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாக இது அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுக்குடியிருப்பு, எட்டாம் வட்டாரம், மந்துவில் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் காணியில் அமைந்துள்ள இந்த நிலக்கீழ் பதுங்குக்குழி, விடுதலைப் புலிகளின் தலைவர் மற்றும் தளபதிகள் முக்கிய சந்திப்புக்களை மேற்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவிலான இந்தக் காணி, போர்க் காலத்தில் விடுதலைப் புலிகளின் முகாமாகச் செயற்பட்டுள்ளது. சுமார் 20 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்தப் பதுங்குக்குழியின் வாயில்கள், 2009 ஆம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னர் ஏற்பட்ட குண்டுத் தாக்குதல்களால் மூடப்பட்டிருந்ததால், மக்கள் இதன் இருப்பை பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

போருக்குப் பின்னர், இந்தக் காணியில் கண்ணிவெடி அகற்றும் இராணுவத்தினர் நிலை கொண்டிருந்தனர். அண்மைக் காலமாக, இந்தப் பதுங்குக்குழிக்குள் விடுதலைப் புலிகளின் தங்கம் அல்லது ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற வதந்திகள் பரவியதால், சிலர் காணி உரிமையாளர்களுக்குத் தெரியாமல் நிலத்தைத் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, புதுக்குடியிருப்புப் பொலிஸார் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு, நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை அடுத்து, புதன்கிழமை (ஜூலை 09, 2025) இந்த நிலக்கீழ் பதுங்குக்குழியை அகழ்வதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நேற்று மாலை சம்பவ இடத்திற்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன், குறித்த பகுதிகளை நேரில் பார்வையிட்டார். கிராம சேவையாளர், விஷேட அதிரடிப் படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவினர், பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில், கனரக இயந்திரங்கள் கொண்டு துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பதுங்குக்குழிக்குள் நீர் நிரம்பியிருந்ததால், அதனை வெளியேற்றும் நடவடிக்கைகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன.

நீதிபதி பிரதீபனின் பணிப்புரைக்கமைய, நேற்று காலை 10.30 மணியளவில் அகழ்வுப் பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்தப் பதுங்குக்குழிக்குள் என்னென்ன பொருட்கள் கண்டுபிடிக்கப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அப்பகுதி மக்கள் மத்தியிலும், பாதுகாப்புத் தரப்பினர் மத்தியிலும் நிலவி வருவதாகச் சொல்லப்பட்டாலும் நேற்று எதுவுமே அங்கே கண்டெடுக்கப்படவில்லை என்று தெரியவருகிறது.

Vaanam.lk

இறந்து போன குட்டியை 3 நாள் பிரியாத யானை - விலங்குகளும் துக்கம் அனுசரிக்குமா?

3 weeks 2 days ago

ஒரு பெண் ஆசிய யானை தனது இறந்த குட்டியை இழுத்துச் செல்லும் படம்.

பட மூலாதாரம்,BBC NEWS SINHALA

படக்குறிப்பு, தாய் யானை இறந்த தனது குட்டியை மூன்று நாட்களாக இழுத்துச் சென்றது.

கட்டுரை தகவல்

  • சுனேத் பெரேரா

  • பிபிசி உலக சேவை

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

காடுகளில் கரடிகள் அல்லது பெரிய பூனைகள் போன்ற சில பாலூட்டிகள், தங்களது குட்டிகளை வாயால் மெதுவாக தூக்கி, பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் எடுத்துச் செல்வதைப் பொதுவாகவே நாம் பார்த்திருக்கலாம். ஆனால் ஒரு யானை இதைச் செய்வது, அதிலும் குறிப்பாக, அது சுமந்து செல்லும் குட்டி ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில் இவ்வாறு செய்வது மிகவும் அபூர்வமானதாகக் கருதப்படுகிறது.

இலங்கையின் கவுடுல்லா தேசிய பூங்காவில் ஜூன் மாத இறுதியில், தாய் யானை ஒன்று, உயிரற்ற தனது குட்டியின் உடலை பல நாட்களாக தன்னுடன் எடுத்துச் செல்லும் மிகவும் வேதனையூட்டும் காட்சி ஒன்றை ஒரு உள்ளூர் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் பதிவு செய்திருந்தார்.

"அந்த யானை அக்குட்டியை கைவிட தயாராக இல்லை. அதனைப் பார்க்கவே கஷ்டமாக இருந்தது," என்று கூறுகிறார் புகைப்படக் கலைஞர் சஞ்சய மதுஷன்.

தன் வயிற்றில் ஏறக்குறைய இரண்டு வருடங்கள் சுமந்த, தற்போது இறந்துவிட்ட குட்டியை, அந்த தாய் யானை பிடித்துக் கொண்டிருந்தது கொஞ்ச நேரமல்ல.

"தாய் யானை அதை மூன்று நாட்கள் கைவிடாமல் பிடித்துக் கொண்டிருந்தது" என்று பிபிசியிடம் கூறுகிறார் மதுஷன் .

அப்போது பூங்காவில் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் நடந்து சென்ற தாய் யானையை அவர் கண்காணித்தார்.

"முந்தைய நாள் பிறந்தவுடனே அந்தக் குட்டி இறந்துவிட்டதாக பூங்கா அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள்," என்றும் அவர் கூறினார்.

மரணம் நிகழ்ந்தால் விலங்குகளுக்கு அது புரியுமா?

2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டின் சிறிய பரப்பளவைக் கருத்தில் கொண்டால் உலகிலேயே அதிக யானைகள் பரவல் உள்ள நாடுகளில் ஒன்றாக இலங்கை இருக்கிறது.

யானை

பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS

படக்குறிப்பு, யானை துக்கம் அனுசரிக்குமா என சமூக வலைதளங்களில் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்

இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட Elephas maximus maximus என்ற யானை இனம், ஆசிய யானைகளில் மிகப்பெரிதாகவும், மிகக் கருமையானதாகவும் அறியப்படுகிறது. இந்த யானைகள், கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் இடமாக கவுடுல்லா தேசிய பூங்கா உள்ளது.

"இங்கு 300க்கும் மேற்பட்ட யானைகள் கூடுவதை நான் பார்த்திருக்கிறேன். அதனால், யானைகள் கூட்டமாக கூடுவதை அடிக்கடி பார்த்திருந்தாலும், இதுபோன்ற உணர்ச்சிகரமான காட்சியை நான் கண்டது இதுவே முதல் முறை," என்கிறார் மதுஷன்

"ஆனால் அந்த யானை ஏன் இப்படி நடந்துகொள்கிறது? அது துக்கத்தை வெளிப்படுத்துகிறதா? அல்லது இது ஒரு தற்செயலான நிகழ்வா?" என்று சமூக ஊடகங்களில் வியப்பை வெளிப்படுத்தும் பலரைப் போலவே அவரும் ஆச்சரியப்படுகிறார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழகத்தில் விலங்கு நடத்தை மற்றும் நலன் தொடர்பான இணைப் பேராசிரியரான முனைவர் லீன் ப்ரூப்ஸ் பேசுகையில், "இந்த கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினம், இருப்பினும் இதேபோன்ற காட்சிகள் உலகம் முழுவதும் முன்னர் பதிவாகியுள்ளன" என்று கூறுகிறார்.

"மற்ற விலங்குகளின் மனதில் என்ன ஓடுகிறது என்பதை உணர்வது கடினம். அவை மரணத்தை எவ்வளவு தூரம் புரிந்துகொள்கின்றன என்பதும், மரணம் எல்லோருக்கும் வரும் ஒன்று, அது திரும்ப முடியாத ஒன்று போன்ற மரணத்தின் முக்கிய அம்சங்களையும் புரிந்துகொள்கின்றனவா என்பதைத் தெளிவாகச் சொல்ல முடியாது," என்று முனைவர் லீன் ப்ரூப்ஸ் பிபிசியிடம் கூறினார்.

ஒரு பெண் ஆசிய யானை தனது இறந்த குட்டியை வாயில் சுமந்து செல்லும் படம்.

பட மூலாதாரம்,SANJAYA MADUSHAN/CEYLON WILD TRAILS

படக்குறிப்பு, யானைகளின் கர்ப்ப காலம் மிக நீண்டது. இது 680 நாட்கள் நீடிக்கிறது.

இலங்கையில் உள்ள பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ துறையின் யானை நிபுணரான பேராசிரியர் அசோக தங்கொல்ல, இலங்கையில் ஒரு யானை இவ்வாறு நடந்துகொள்வதைப் பார்ப்பது இதுவே முறையாக இருந்தாலும், அது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை என்கிறார்.

"ஏனென்றால் அவற்றுக்கும் உணர்வுகள் உள்ளன. அந்த உணர்வுகளை யானைகள் பகிர்ந்து கொள்கின்றன. தாய்-குட்டி பிணைப்பு மிகவும் வலுவானது," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

"நான் இதை விலங்கினங்களில், குறிப்பாக குரங்குகளில் அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஆனால் யானைகள் இதைச் செய்வது கொஞ்சம் விசித்திரமானது," என்றும் அவர் விளக்கினார்.

அந்த யானை குழப்பமடைந்திருக்கலாம் என்றும் முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார்.

"ஆனால் யானைகள் ஒரு உயிருள்ள குட்டியை சாதாரணமாக இழுத்துச் செல்லாது. அதனால், இது ஒருவித உணர்ச்சிப்பூர்வமான எதிர்வினை தான் என நான் நினைக்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.

"விலங்குகள் இறப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுகின்றன என்பதைப் பற்றி, இப்போது கம்பேரெட்டிவ் தானடோலஜி(Comparative Thanatology) எனப்படும் ஒரு புதிய அறிவியல் துறையில் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த துறையில் விஞ்ஞானிகள் இந்த நடத்தைகளை நெருக்கமாகக் கவனித்து ஆராய்கிறார்கள்" என்று அவர் விளக்கினார்.

"விலங்குகள் இறப்பைப் பற்றி என்ன தெரிந்துகொள்கின்றன என்பதை உணர்வதற்காக, இதுபோன்ற அறிக்கைகள் மற்றும் நிகழ்வுகளை ஒன்று சேர்த்து, ஒரு முறையான வழியில் ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள்," என்று அவர் குறிப்பிட்டார்.

மற்ற விலங்குகளிலும் இதேபோன்ற நடத்தை உள்ளதா ?

யானைகள் மட்டும் இத்தகைய நடத்தையை வெளிப்படுத்துவதில்லை. விலங்குகள், திமிங்கலங்கள் மற்றும் டால்பின்கள் இறந்த அவற்றின் சக விலங்குகளின் அருகே தங்கியிருப்பது பல சந்தர்ப்பங்களில் கவனிக்கப்பட்டுள்ளது.

திமிங்கிலம் J35 (தஹ்லெக்வா என்று அறியப்படுகிறது)

பட மூலாதாரம்,KEN BALCOMB, CENTER FOR WHALE RESEARCH

படக்குறிப்பு, திமிங்கலம் J35 (தஹ்லெக்வா என்று அறியப்படுகிறது) 17 நாட்களுக்கு தனது இறந்த குட்டியின் உடலைத் தள்ளிக்கொண்டிருப்பது காணப்பட்டது.

தஹ்லெக்வா (Tahlequah) என்ற திமிங்கலம், 2018-ஆம் ஆண்டு, இறந்துவிட்ட தனது குட்டியின் உடலை 17 நாட்கள் தொடர்ந்து தள்ளிச் சென்றபோது, உலகளாவிய கவனத்தை ஈர்த்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதே திமிங்கலம் மற்றொரு குட்டியை இழந்த பிறகு மீண்டும் துக்கத்தில் இருப்பதாக அமெரிக்காவில் உள்ள திமிங்கல ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

"அந்தத் திமிங்கலம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டது. ஏனென்றால், அது இறந்த தன் குட்டியை தனது மூக்குப் பகுதியில் (ரோஸ்ட்ரம்) சமநிலையுடன் தக்கவைக்க வேண்டியிருந்தது. அது மிகவும் கடினமானது. ஆனால், அது தனது குட்டியை இரண்டு வாரங்கள் பிடித்துக்கொண்டிருந்தது," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ்.

இதற்கிடையில், இந்தியாவில் 2024 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில், யானைக் கூட்டங்கள் இறந்த குட்டிகளை மண்ணால் மூடுவதைக் காணும் நிகழ்வுகள் ஆவணப்படுத்தப்பட்டன. சிலர் இதை 'புதைப்பது போன்ற செயல்பாடு' என விவரிக்கின்றனர்.

"யானைகள் உருவாக்கும் புதைகுழிகள் பற்றிய இந்த தகவல்களை விளக்குவது மிகவும் சிக்கலான ஒன்று என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக, எறும்புகள் மற்றும் எலிகள் போன்ற பிற இனங்கள் உள்ளன. அவையும் இறந்தவற்றை புதைக்கும்," என்று முனைவர் ப்ரூப்ஸ் கூறுகிறார்.

இலங்கையில் சமீப காலமாக, காடுகளை அழிப்பது மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் காரணமாக மனித - யானை மோதல் அதிகரித்து வருகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் கொல்லப்படுகின்றன, மற்றும் பல இளம் குட்டிகள் தாய் யானைகளை இழந்துவிடுகின்றன.

யானைகள் தங்கள் அறிவை ஒரு தாய்வழி சமூகத்தின் ஒரு பகுதியாக ஒரு தலைமுறையிலிருந்து அடுத்து தலைமுறைக்கு கடத்துகின்றன. இளைய யானைகள் தங்கள் மூத்த யானைகளிடமிருந்து கற்றுக்கொள்கின்றன.

"ஒரு குழுவில் முதிய யானைகள் கொல்லப்பட்டால், மனிதர்களைப் போலவே, யானைகளுக்கும் கற்றுக்கொடுக்க யாரும் இருக்க மாட்டார்கள். அதனால், அவை புரிந்துகொள்ளவோ, அல்லது சரியான முறையில் நடந்து கொள்ளவோ முடியாது. அதனால், குடும்பங்கள் உடைந்துவிட்டால், அது மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தும்," என்கிறார் முனைவர் ப்ரூப்ஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c939nwgq93eo

செம்மணியில் புதையுண்டிருப்பது யார்? ஊடகவியலாளரின் சாட்சியம்

3 weeks 4 days ago

செம்மணியில் புதையுண்டிருப்பது யார்.. நேரடி சாட்சியத்தின் திடுக்கிடும் உண்மைகள்!

யாழ்ப்பாணம் - சிந்துபாத்தி செம்மணி மனித புதைகுழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித எச்சங்கள் தமிழ் மக்களிடையே பேரதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளன.

இதற்கிடையில், ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கங்களும் இராணுவமும் மேற்கொண்ட படுகொலைகளின் சாட்சியமே செம்மணி என குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மறுபக்கம், செம்மணியிலிருந்து தோண்டப்படும் பச்சிளங்குழந்தை உள்ளிட்ட மனித உடலங்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பினாால் கொன்று புதைக்கப்பட்டவை என கூறப்படுகின்றது.

உண்மையில் யார் தான் இதன் பின்னணியில் இருப்பது, இத்தனை காலமும் மனதில் அவலங்களை சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்களுக்கு இவ்விடயத்தில் தெரிய வேண்டிய உண்மைகள் பல.

செம்மணியில் நடப்பவை என்ன? அவர்கள்தான் இவர்கள்!! நேரடி சாட்சியம்!!!

பூநகரியிலிருந்து கொழும்புதுறைக்கு படகில் வந்தவர்களே எலும்புகூடுகளாக மீட்பு | Chemmani Mass Graves

https://tamilwin.com/article/chemmani-mass-graves-jaffna-1751829524

நாசாவின் Voyager 1 விண்கலம், 48 ஆண்டுகள் பயணித்து ஒரு ஒளிநாளை மட்டுமே அடைந்துள்ளது.

3 weeks 6 days ago

516105413_713694151382072_61115867575027

வோயஜர் 1 விண்கலம் – ஓர் அற்புதமான விண்வெளிப் பயணம்.
(Voyager 1 Spacecraft – A Journey Beyond the Stars)

நாசாவின் Voyager 1 விண்கலம், 48 ஆண்டுகள் பயணித்து ஒரு ஒளிநாளை மட்டுமே அடைந்துள்ளது.

ஒரு ஒளியாண்டு எவ்வளவு பெரியது என்று கற்பனை செய்து பாருங்கள்.
🔭 வரலாற்றுப் பின்னணி:
வோயஜர் 1 (Voyager 1) என்பது நாசாவின் மிக முக்கியமான விண்வெளிக் கவனிப்புத் திட்டங்களில் ஒன்றாகும். இது 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. அதன் முதற்கண் நோக்கம் – கிரகங்களை (Jupiter, Saturn) நேரடியாக ஆய்வு செய்வது.
ஆனால் இந்த செயற்கைக்கோள் தனது வேலை முடிந்த பிறகு கூட நம்முடைய சூரியக் குடும்பத்தை விட்டு வெளியே பயணித்து, இப்போது மனிதனால் உருவாக்கப்பட்ட மிக அதிக தூரம் சென்ற சாதனமாக மாறியுள்ளது.
🌌 வோயஜர் 1 இப்போது எங்கே?
இது சூரிய மண்டல எல்லையை (heliopause) கடந்த முதல் மனித உருவாக்கம்.
2025-இல், வோயஜர் 1 விண்கலம் புவியிலிருந்து சுமார் 162 ஏயு (AU) தூரத்தில் உள்ளது.
(1 AU = 1 Astronomical Unit = புவி முதல் சூரியன் வரை உள்ள தூரம் = சுமார் 15 கோடி கி.மீ.)
எனவே:
162 AU \times 150 மில்லியன் கி.மீ = சுமார் 24.3 பில்லியன் கி.மீ.
🚀 எவ்வளவு ஆண்டுகள் பயணித்தது?
1977 முதல் 2025 வரை = 48 ஆண்டுகள்!
இந்த 48 ஆண்டுகளில், வோயஜர் 1 இடைவிடாது சூரிய மண்டலத்திலிருந்து வெளியே சென்றுகொண்டே இருக்கிறது.
✨ ஒளி ஆண்டுகளில் வோயஜர் 1 எவ்வளவு தூரம் சென்றுள்ளது?
ஒளி ஆண்டு = ஒளி ஒரு ஆண்டில் பயணிக்கும் தூரம் = சுமார் 9.46 டிரில்லியன் கி.மீ.
வோயஜர் 1-இன் தூரம் = சுமார் 24.3 பில்லியன் கி.மீ.
\frac{24.3 \text{ பில்லியன் கி.மீ.}}{9.46 \text{ டிரில்லியன் கி.மீ.}} = \approx 0.0026 \text{ ஒளி ஆண்டு}
> 👉 அதாவது வோயஜர் 1 விண்கலம் சுமார் 0.0026 ஒளி ஆண்டுகள் தூரம் சென்றிருக்கிறது.
🛰️ வோயஜர் 1 – முக்கிய தகவல்கள்:
விவரம் மதிப்பு
ஏவப்பட்ட ஆண்டு 1977
பயணித்த ஆண்டுகள் 48 ஆண்டுகள்
சூரிய மண்டல எல்லை கடந்த ஆண்டு 2012
புவியிலிருந்து தூரம் சுமார் 24.3 பில்லியன் கி.மீ.
ஒளி ஆண்டுகளில் சுமார் 0.0026 light years
தற்போதைய வேகம் சுமார் 61,000 கி.மீ/மணிநேரம்
🌍 அது எதைக் நோக்கி பயணிக்கிறது?
வோயஜர் 1, சூரிய மண்டலத்தை விட்டு வெளியே சென்று "interstellar space" எனப்படும் நட்சத்திரங்களுக்கு இடையிலான வெளிக்கோளத்தில் பயணிக்கிறது. அது ஒரு சிறிய நட்சத்திரமாகிய AC +79 3888 (எண்) என்ற திசையில் பயணிக்கிறது. ஆனால் அந்த நட்சத்திரத்தை அடைய 40,000 ஆண்டுகள் ஆகும்.
📻 இன்னும் தொடர்பு உள்ளதா?
ஆம்! வோயஜர் 1 இப்போது மிகவும் மெல்லிய சிக்னல்களை NASA-வின் Deep Space Network மூலம் அனுப்பி வருகிறது. ஆனால் 2025க்கு பிறகு அதன் சக்தி முழுமையாக முடிவடையும், அதன்பின் தொடர்பு முடங்கும்.
📦 வல்லரசுகளுக்கான "கோல்டன் ரெகார்ட்":
வோயஜர் 1-இல் ஒரு தங்க பதிவுத் தட்டு (Golden Record) உள்ளது – இதில் பூமியைப் பற்றி ஒலிக்கோப்புகள், மொழிகள், இசை, மனிதன் மற்றும் இயற்கையின் படங்கள் உள்ளன. இது வெளிநாடிகளுக்கு ஒரு அறிவிப்பாகும் – “நாம் இங்கே இருக்கிறோம்!” என்று.
🔚 முடிவுரை:
வோயஜர் 1 என்பது ஒரு சாதாரண விண்கலமாக அல்ல, அது மனித அறிவு மற்றும் ஆர்வத்தின் ஒரு சிலை. 48 ஆண்டுகளாக பயணித்து இன்னும் தொடர்கிறது – புவியின் சிறிய உலகத்திலிருந்து பிரபஞ்சத்தின் நெடுந்தூரங்களை நோக்கி.
இது நமக்கெல்லாம் நினைவூட்டுவது:
> "அறிவும் கனவுகளும் இணைந்தால், நட்சத்திரங்களை தொட முடியும்!"
குறிப்பு : தற்போதைய வேகம்: 17 கி.மீ/விநாடி (அதாவது ஒரு விநாடிக்கு 17 கிலோமீட்டர் பயணம்!) 48 ஆண்டுகள் பயணித்துக் கொண்டிருக்கிறது
எனில் நம்முடைய சூரிய மண்டலமே எவ்வளவு பிரம்மாண்டம்..
இப்படி இருக்க பிரபஞ்சத்தை யாரால் கணிக்க முடியவில்லை.. ஆனால் அதற்குள் தான் நாம் இருக்கிறோம் அது நமக்குள் இருக்கிறது.. நாம் அதை பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றோம் என்பது மிகவும் சுவாரசியம்.

R Ahilesh 

'உயரம் செல்ல உருவம் தடையில்லை' - மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

4 weeks 1 day ago

ஐஐடிக்கு தேர்வாகியுள்ள விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

படக்குறிப்பு,அரசுப் பள்ளி மாணவியான 17 வயது யோகேஸ்வரி 125 செ.மீ உயரம் கொண்ட மாற்றுத் திறனாளி

கட்டுரை தகவல்

  • சாரதா வி

  • பிபிசி தமிழ்

  • 26 ஜூன் 2025

உருவத்தில் குள்ளமாக இருந்தாலும், 17 வயது யோகேஸ்வரி அடைந்திருக்கும் உயரம் அதிகமானது.

விருதுநகர் மாவட்டம் பரந்தாலூர் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயதான யோகேஸ்வரி. அவரது தந்தை செல்வம் டீக்கடையில் பணி புரிகிறார். அவரது தாய் பட்டாசு ஆலையில் பணியாற்றி வருகிறார். அவர்களின் மூன்றாவது பிள்ளையான யோகேஸ்வரி 125 செ.மீ மட்டுமே உயரம் கொண்ட ஒரு மாற்றுத் திறனாளி.

அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று வந்த அவர், ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வுகள் எழுதி, அதில் தேர்ச்சி பெற்று, மும்பையில் உள்ள ஐஐடி நிறுவனத்தில் ஏரோஸ்பேஸ் பிரிவில் பொறியியல் படிப்பதற்குத் தேர்வாகியுள்ளார்.

ஜேஇஇ தேர்வுக்காக தனியார் பயிற்சி மையங்களில் பலரும் நிறைய தொகையைச் செலவு செய்யும் நிலையில், அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்று வந்த யோகேஸ்வரி, அரசு வழங்கிய 40 நாள் பயிற்சியை மட்டும் பெற்று இந்த இடத்தைப் பெற்றுள்ளார். தற்போது ஏரோஸ்பேஸ் பொறியியல் படிப்பில் சேரவுள்ள யோகேஸ்வரி, ஏழாம் வகுப்பு முதல் அறிவியலில் ஆர்வம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி, "நான் சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்றுதான் நினைத்து வந்தேன். படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி அல்ல நான், சராசரியாகவே படிப்பேன். ஆனால் இந்தப் பயிற்சியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். நாற்பது நாட்கள் ஈரோட்டில் தங்கியிருந்து பயின்றேன். தமிழ் வழியில் பயின்ற எனக்கு ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் பயிற்சி மையத்தில் இருந்த ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்" என்கிறார்.

தனது தங்கைக்கு ஐஐடியில் இடம் கிடைத்துள்ளது குறித்து மிகுந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்திய யோகேஸ்வரியின் அண்ணன் பாண்டீஸ்வரன், "என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை. எங்களைப் போன்றோருக்கு ஐஐடி எட்டாத உயரத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டிருந்தேன். எனக்கும்கூட அங்கு படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இன்று என் தங்கைக்கு அந்த வாய்ப்பு கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

இன்று ஐஐடியில் இடம் கிடைத்த மகிழ்ச்சி யோகேஸ்வரியின் குடும்பம் முழுவதும் பரவியிருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை கடினமானது. ஏழாம் வகுப்பு வரை, மற்ற மாணவர்களைப் போலவே காணப்பட்டாலும், அதன் பிறகு யோகேஸ்வரி மற்ற பிள்ளைகளைவிட உயரம் குறைவாக இருப்பது வெளியில் கவனிக்கப்பட்டது.

இளமையில் சந்தித்த கேலியும் கிண்டலும்

ஐஐடிக்கு தேர்வாகியுள்ள விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

படக்குறிப்பு, அரசுப் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற யோகேஸ்வரி, ஐஐடி பாம்பேவில் ஏரோஸ்பேஸ் பொறியியல் படிக்கத் தேர்வாகியுள்ளார்.

"யோகேஸ்வரியைவிட இளையவர்கள் சில நேரங்களில் அவரைப் பார்த்து, வயதில் சிறியவர் என்று நினைத்துக் கொண்டு 'சொல்லு பாப்பா' என்று கூறிவிடுவார்கள். அவர்கள் தெரியாமல் கேட்டாலும் அதுபோன்ற தருணங்கள் வலி மிகுந்ததாக இருக்கும்" என்கிறார் பாண்டீஸ்வரன்.

விழாக்கள், திருமணங்களுக்குச் செல்லும்போது இன்னும் வேதனையாக இருக்கும் என்கிறார் பாண்டீஸ்வரன். "அவர் 12ஆம் வகுப்பு படிக்கிறார், உயரம் குறைவாக இருக்கிறார் என்று கூறியவுடன், அப்படியா என்று ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். ஏன் இதைச் சரி செய்ய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்று எங்களிடம் கேட்பார்கள். ஒரே பதிலை குறைந்தது 20 முறையாவது சொல்ல வேண்டியிருக்கும். அதுவும் வலியை மறைத்துக்கொண்டு, முகத்தில் புன்னகையுடன் பதில் சொல்வது இன்னும் துயரம்" என்கிறார் அவர்.

யோகேஸ்வரிக்கு 11 அல்லது 12 வயதாகும்போது அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பதைக் கவனித்த பெற்றோர்கள், அரசு மருத்துவமனை, தனியார் சிகிச்சை மையங்கள் எனப் பல இடங்களில் அவருக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

அவரது தாய் விருதுநகரில் உள்ள பட்டாசு ஆலையில் மருந்து துறையில் பணியாற்றி வருகிறார். "எப்படி மீனவர்கள் கடலுக்குச் சென்றால் உயிருடன் திரும்புவது உறுதி கிடையாதோ, அதே போலத்தான் எங்கள் அம்மா வீடு திரும்புவதும். அந்த ஆலைக்குச் சென்று வீடு திரும்பும் வரை பயமாகவே இருக்கும். எங்கள் குடும்பத்திற்குப் பல லட்சம் ரூபாய் கடன் உள்ளது" என்கிறார் பாண்டீஸ்வரன்.

யோகேஸ்வரியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளியில் படித்து வரும் எஸ்.ரேகா, அவருக்கு ஐஐடியில் சீட் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறுகிறார்.

"நாங்கள் இருவரும் பள்ளியில் எப்போதும் ஒன்றாக இருப்போம், நான் கணினி பாடப்பிரிவு படித்ததால், உயிரியல் வகுப்பில் மட்டும் அவரும் நானும் தனியாகச் செல்ல வேண்டியிருக்கும். தினமும் காலையில் நான் அவரது வீட்டுக்குச் செல்வேன், அங்கிருந்து இருவரும் பள்ளிக்கு ஒன்றாக நடந்து செல்வோம். அவரது அம்மா மிகவும் அன்பாகப் பேசுவார். எனக்கு என் வீட்டில் இருப்பது போலவே தோன்றும்," என்றார் ரேகா.

அவருக்கு சீட் கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும், அவர் தன்னை விட்டு வெகுதொலைவாகச் செல்லப் போவது குறித்த வருத்தம் சற்று இருப்பதாகக் கூறுகிறார் ரேகா.

யோகேஸ்வரியின் 12ஆம் வகுப்பு கணித ஆசிரியர் உமா மகேஸ்வரி, அவர் வகுப்பில் மிகவும் அமைதியானவராக இருப்பார் என்கிறார். "யோகேஸ்வரி மிக அமைதியாக இருப்பார், யாரிடமும் தேவையின்றிப் பேச மாட்டார். அவரால் வகுப்பில் எந்தத் தொந்தரவும் இருக்காது. பாடங்களைச் சிரத்தையுடன் கவனிப்பார்" என்கிறார்.

அரசுப் பயிற்சி மையத்தில் தங்கிப் படித்தவர்

ஐஐடிக்கு தேர்வாகியுள்ள விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

படக்குறிப்பு, பொது இடங்களில், விழாக்களில் வலி மிகுந்த வார்த்தைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாக யோகேஸ்வரியின் சகோதரர் பாண்டீஸ்வரன் கூறுகிறார்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி வழங்கும் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் அவர்களது பள்ளியில் இருந்து இரண்டு பேர் பங்கேற்றதாக ஆசிரியர் உமா மகேஸ்வரி கூறுகிறார்.

"ஜேஇஇ தேர்வுப் பயிற்சிக்கு விருப்பமாக இருக்கும் மாணவர்கள் பற்றிக் கேட்டவுடனே ஆர்வத்துடன் யோகேஸ்வரி முன்வந்தார். இன்று கிடைத்திருப்பது அவரது முயற்சிக்கான அங்கீகாரம்" என்கிறார் அவர்.

உயரம் தனக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி கூறினார். இதே கருத்தை அவரது தோழியும், ஆசிரியரும் குறிப்பிட்டனர்.

"அவர் எப்போதும் போலவே, எல்லா மாணவர்களையும் போலவே இருப்பார். படிப்பில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் தைரியமாக முதல் ஆளாக நிற்பவர். காலையில் மாணவர் கூட்டங்களில் பாடுவது, விழாக்களில் ஆடுவது என அனைத்திலும் பங்கேற்பார். ஒரு முறை சென்னைக்கு சுற்றுலா சென்றபோது, சில விளையாட்டுகளில் உயரம் காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த ஒரு நிகழ்வு தவிர வேறு எங்கும் அவருக்கு உயரம் ஒரு பிரச்னையாக இருப்பதை நான் பார்த்ததில்லை" என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

யோகேஸ்வரியை நேரில் அழைத்துப் பாராட்டிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், அவரது உயர் கல்விக்கான செலவுகளை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று உறுதி அளித்துள்ளதாக யோகேஸ்வரி கூறினார்.

உயரம் குறைவானவர்கள் யார்?

ஐஐடிக்கு தேர்வாகியுள்ள விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

பட மூலாதாரம்,GETTY IMAGES

வயது வந்தோரில் ஒருவர், அவர் எந்தப் பாலினமாக இருந்தாலும், 147 செ.மீக்கு (4 அடி,10 அங்குலம்) குறைவான உயரம் கொண்டவராக இருந்தால் அவர் உயரம் குறைவானவர் (dwarf) என்று கருதப்படுவதாக மத்திய அரசு வரையறுக்கிறது. இது மரபணு காரணமாகவோ அல்லது மருத்துவக் காரணங்களாலோ ஏற்படலாம்.

நான்கு அடி, 10 அங்குலம் உயரத்தில் இருந்து ஒவ்வொரு அங்குலம் குறையும்போதும், அது 4% இயலாமை என்று கருதப்படும். உதாரணமாக, 4 அடி 9 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 4% இயலாமை இருப்பதாகவும், 4 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவருக்கு 8% இயலாமை இருப்பதாகவும் கணக்கிடப்படும்.

அகோண்ட்ரோபிளாசியா என்பது எலும்பு வளர்ச்சியைப் பாதிக்கும் ஒரு மரபணுக் கோளாறு. மனிதர்கள் குள்ளமாக இதுவே 70% காரணமாக இருக்கிறது. மேலும் பலருக்கு, வளர்ச்சி ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கலாம். இவை தவிர வேறு சில காரணங்களும் இருக்க வாய்ப்பு உண்டு.

குள்ளமாக இருப்பவர்களில் இரண்டு வகை உண்டு. சிலருக்கு, உடலின் எல்லா பாகங்களும் சிறியதாக இருக்கும். சிலருக்கு தலை பெரிதாகவும், கை கால்கள் மட்டும் சிறியதாகவும் இருக்கும்.

குள்ளமாக இருப்பவர்களின் அறிவுத்திறனும் சராசரி வாழ்நாளும் இயல்பாகவே இருக்கும். பொதுவாக அவர்களால் குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும் என்று மத்திய அரசின் இயலாமை அறியும் வழிகாட்டு நெறிகள் கூறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cew0xv980j9o

வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு.

1 month ago

513982948_729562973364089_41111880944031

வல்வெட்டித்துறையின் வரலாறு: வீரர் குடியேறிய நாடு
50 களில் எழுதப்பட்ட வல்வெட்டித்துறையின் வரலாற்றுக் குறிப்புகள் என்ற கட்டுரை பல தகவல்களைக் கொண்டுள்ளன.
அவை பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன:

அமைவிடம் மற்றும் பொதுத் தகவல்கள்

வல்வெட்டித்துறை ஒரு துறைமுகப் பட்டினம்.

இது யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கே 16 மைல் தூரத்திலும், காங்கேசந்துறையிலிருந்து கிழக்கே 9 மைல் தூரத்திலும், பருத்தித்துறையிலிருந்து மேற்கே 5 மைல் தூரத்திலும், தென்னிந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாகத் தெற்கே 30 மைல் தூரத்திலும் அமைந்துள்ளது.

இதன் பரப்பு 1 சதுரமைல்.

1952 ஆம் ஆண்டு குடிசனமதிப்பின்படி, இங்கு 5,162 இந்து சமயத்தவர்களும் 122 கிறிஸ்தவ சமயத்தவர்களும் வாழ்கின்றனர்.

1947 ஆம் ஆண்டு முதல் பட்டின சபையாலும், அதற்கு முன் சுகாதார சபையாலும் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.

பெயர் வந்த காரணம்

'வல்லி' என்னும் கால்நடை வியாபாரி பட்டி வைத்திருந்த இடமாதலால் 'வல்லிபட்டி' என அழைக்கப்பட்டு, துறைமுகம் ஏற்பட்ட பின் 'வல்லிபட்டித்துறை' என வழங்கி, பின்னர் 'வல்லிவெட்டித்துறை' எனத் திரிந்து, தற்காலம் 'வல்லுவெட்டித்துறை' என்றும் 'வல்வெட்டித்துறை' என்றும் வழங்கிவருகின்றது.

இது சென்னபட்டினம் சென்னையெனச் சுருக்கி அழைக்கப்படுவது போல "வல்வை" என்றும் "வல்வை நகர்" என்றும் அழைக்கப்படுவதுமுண்டு.

ஆரம்பகால குடியேற்றம் - யுத்த வீரர்கள்

ஆதியில் இவ்வூரில் குடியேறியவர்கள் இந்தியாவிலிருந்து ஊர்க்காவலுக்காக வரவழைக்கப்பட்ட போர் வீரர்களே.

இவ்வீரர்கள் கடற்படை, தரைப்படை இரண்டிலும் சேர்ந்திருந்தவர்கள்.

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பாடிய "வல்வைக் கலித்துறை" எனும் செய்யுளில் இவ்வூரவர்கள் "ஊர்க்காவலர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் நாய்க்கன் படைகளுடன் வல்வெட்டித்துறைக் கரையில் இறங்கியதாகவும், பறங்கியர் தலைவன் தெமோற்றோ திடீரென்று தாக்கி தமிழரை வெருட்டியடித்த செய்தி "யாழ்ப்பாணவைபவ கௌமுதி"யில் காணப்படுகிறது.

இவ்வூருக்குப் பக்கத்திலுள்ள சமரபாகுதேவன் குறிச்சி, வென்றிபாகுதேவன் குறிச்சி, கல்லிடைத் தேவன் குறிச்சி போன்ற பெயர்களும் அப்பகுதிகளில் யுத்த வீரர்கள் இந்தியாவிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன.

தொழில்களில் மாற்றம்

நாட்டில் அமைதி நிலவியபின், யுத்த வீரர்களின் சேவை வேண்டப்படாமல் போனதால், அவர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபடலாயினர்.

கப்பல் கட்டுதல் மற்றும் கப்பலோட்டும் தொழில்:

பணக்காரராயிருந்தவர்கள் "திரைகடலோடியுந் திரவியம் தேடு" என்னும் ஔவையார் வாக்கின்படி கப்பல்கள் கட்டுவித்து வியாபாரம் செய்து பொருள் ஈட்டத் தொடங்கினர்.

கடற்படையிலிருந்தவர்கள் கப்பலோட்டும் தொழிலிலும் கப்பல்கட்டும் தொழிலிலும் ஈடுபட்டனர்.

"நாவாய் சாத்திரம்" என்னும் கப்பல் கட்டும் சாத்திரத்தைக் கற்ற மேத்திரிமார் பலர் வல்வெட்டித்துறையிலே இருந்தனர்.

பெரிய பாய்க்கப்பல்களைக் கட்டுவதில் வல்ல மேத்திரிமார் இலங்கையில் இவ்வூரிலன்றி வேறெங்கும் காண்பது அரிது.

திசைகாட்டும் கருவி, மணிகாட்டும் கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பே விண்மீன்களின் உதவியால் திசையையும் நேரத்தையும் அறிந்து கப்பல்களைப் பல தூர தேசங்கட்குமோட்டிப் பெயர்பெற்ற மாலுமிகள் பலர் இங்கு இருந்தனர்.

இந்தியாவிலுள்ள கப்பல் வர்த்தகர்கள் இவ்வூரிலுள்ள மேத்திரிமாரை அழைத்துக் கப்பல்கள் கட்டுவித்து பெரும் சீர்வரிசைகள் வழங்கியுள்ளனர்.

கீரிமலையில் ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலும் மடாலயமும் கட்டுவித்த வடிவேலு மேத்திரியார் மற்றும் எல்லாக் கிரகங்களினதும் கதிவக்கிரம் முதலியவற்றைக் காட்டவல்ல அதி நூதனக் கடிகாரத்தைச் செய்தவரும், தோட்டங்களுக்கு யந்திரம் மூலம் நீர் பாய்ச்சுவதற்குரிய யந்திரத்தை முதல் முதல் கண்டுபிடித்துச் செய்துதவியவருமாகிய வா. ஆறுமுகம் (பொன்னுச்சாமி மேத்திரியார்) ஆகியோர் இத்தகைய கௌரவம் பெற்றவர்களில் சிலர். வா. ஆறுமுகம் 1930 இல் காலமானார்.

நீண்ட காலமாக இவ்வூரவர்கட்கு நாட்டுக்கோட்டைத் தனவணிகர்கள் கப்பல் கட்டுவதற்குப் பணம் கடன் கொடுத்துதவி வந்திருக்கின்றனர்.

வேளாண்மை மற்றும் வியாபாரம்: தரைப்படையிலிருந்தோர் வேளாண்மை, வியாபாரம் முதலிய தொழில்களை மேற்கொண்டனர்.

ஆலயங்கள்

"கோயிலில்லா ஊரிற் குடியிருக்க வேண்டாம்" என்ற முதுமொழிக்கேற்ப இங்கு கோவில்களுக்குக் குறைவில்லை.

முக்கியமான பெரிய ஆலயங்கள்:

கிழக்குப் பகுதியில் நெடியகாட்டுத் திருச்சிற்றம்பலம் பிள்ளையார் கோவில்.

மேற்குப் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில்.

முத்துமாரியம்மன் கோயிலுக்குப் பக்கத்தில் வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவில்.

இம்மூன்று ஆலயங்களிலும் ஆண்டுதோறும் உற்சவங்கள் சிறப்புடன் நடைபெற்று வருகின்றன.

இலங்கையில் கோபுரம் கட்டப்பட்ட முதற் கோயில் இம்முத்துமாரியம்மன் கோயிலே.

வாலாம்பிகாசமேத வைத்தீசுவரன் கோவிலில் நடைபெறும் ஆறுகாலப் பூசைக் கிரமங்களும், ஆகமசாத்திரங்களிற் கூறப்பட்டபடி அமைந்திருக்கும் ஆலய அழகும் பெரிதும் போற்றற்குரியன.

சிறு ஆலயங்கள்: தில்லையன் மடத்து வயிரவர் கோவில், உலகுடைய பிள்ளையார் கோவில், சடையாண்டி வயிரவர் கோவில், வைகுந்தப் பிள்ளையார் கோவில், நறுவிலடிப் பிள்ளையார் கோவில், மீனாட்சியம்மன் கோவில், கப்பலுடைய பிள்ளையார் கோவில், புட்டணியுப் பிள்ளையார் கோவில் என வழங்கும் 8 சிறு ஆலயங்களும், ஓர் கத்தோலிக்க மதத்தினர்க்குரிய ஆலயமும் உள.

திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையின் பங்களிப்பு:

மேலே குறிப்பிட்ட சிவாலயம் திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையால் 1867 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1883 ஆம் ஆண்டு வைகாசியில் பிரதிட்டாபிடேகஞ் செய்விக்கப்பட்டது.

இவ்வாலயத்து லிங்கம் "பாணலிங்கம்". காசிக்குச் சென்று கங்கையாற்றிலிருந்து இவ்லிங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்துதவியவர் விசுவநாதர்.

ஆலயத் தூபித் தங்கக் கலசம், நடராஜர் முதலியவற்றை வார்ப்பித்துக் கொடுத்தவர் விசுவநாதரின் குமாரர் சரவணமுத்து.

திருமேனியார் வேங்கடாசலம் பிள்ளையை யாவரும் "பெரியவர்" என்றே அழைப்பது வழக்கம். இவரைப் பற்றிச் சிவசம்புப் புலவரவர்களால் பாடப்பெற்ற "வல்வைக் கலித்துறை"ப் பாடல்கள் உள்ளன.

வைகாசி மாதத்தில் நிகழும் வற்றாப் பழைப் பொங்கலுக்காக கடல் மார்க்கமாகச் செல்பவர்கள் தங்கி இளைப்பாறுவதற்காக முல்லைத்தீவுக் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டிருக்கும் மடாலயமும், ஒவ்வொருவரினதும் வருணாச்சிரமங்களுக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் வீடுகள் கூடங்களும் இவரால் அமைக்கப்பட்டனவே. இவர் 1892 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார்.

இவரது தம்பியார் திரு. குழந்தைவேல் பிள்ளைதான் கொழும்பு செக்கடித் தெருவில் யாழ்ப்பாணித்தார் கோவில் என வழங்கும் சுப்பிரமணியர் ஆலயத்தைத் தாபித்தவர். இவர் அக்காலத்து இந்துஸ்தான் வங்கியில் சிறாப்பராகவும் பிரபலமான வியாபாரியாகவும் இருந்து கொழும்பிலுள்ள தமிழ் மக்களுக்கு உறுதுணையாக இருந்தவர். இவர் 1905 ஆம் ஆண்டு சிவபதமடைந்தார்.

புலவர்களும் அட்டாவதானியும்

ஆதியில் வட மராட்சிப் பகுதி மணியகாரராயிருந்து கடமை பார்த்த புண்ணிய மூர்த்தி மணியகாரனின் மகளை மணந்தவர் ஏகாம்பரப் புலவர். (இப்புண்ணிய மூர்த்தியார் வேங்கடாசலம் பிள்ளை, குழந்தைவேல்பிள்ளை ஆகியவர்களின் தந்தையாகிய திருமேனியாரின் மூத்த சகோதரர்).

ஏகாம்பரப் புலவரின் சகோதரியுடைய மகன் ஏகாம்பரம் என்பவர்தான் இலங்கையில் முதல் முதல் "அட்டாவதானஞ்" செய்து காட்டி அரும்பெரும் புகழ் பெற்றவர். இவர் "அட்டாவதானியார்" என்றே அழைக்கப்பட்டு வந்தவர்.

இவர்களுக்குப்பின் ச. வைத்தியலிங்கம் பிள்ளை, த. அருணாசலம்பிள்ளை, கதிரவேற்பிள்ளை, பொன்னையாபிள்ளை, சுப்பிரமணிய பிள்ளை ஆகிய புலவர்கள் இருந்திருக்கின்றனர்.

இவர்களுள் ச. வைத்தியலிங்கப் புலவர் குறிப்பிடத்தக்கவர். இவர் நாற்பொருட் கவிராச நம்பியகப் பொருள், வள்ளியம்மை தெய்வயானையம்மை திருமணப் படலம், கந்தரலங்காரம், மறைசையந்தாதி, கல்வளையந்தாதி முதலிய நூல்கட்கு உரை எழுதி அச்சிட்டு வெளியிட்டதுமன்றி, "சிந்தாமணி நிகண்டு" என்னும் நிகண்டு ஒன்றும் யாத்து வெளியிட்டுள்ளார். ஈழ நாட்டில் நிகண்டு நூல் செய்த புலவர் இவரன்றி வேறு யாரும் இலர்.

இவர் தர்க்கத்தில் தமக்கு ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கியவர்.

இவர் காலத்து நிகழ்ந்த பல சண்டைகள் தொடர்பான கண்டனங்களையும் துண்டுப்பிரசுரமாக வெளியிட்டுள்ளார்.

"சைவாபிமானி" என்னும் பத்திரிகையொன்றைச் சொந்த அச்சியந்திர சாலை நிறுவி அச்சிட்டுப் பத்து ஆண்டுகள் வெளியிட்ட பின்னர் 1901 ஆம் ஆண்டு காலமானார்.

ஏனைய புலவர்கள் இயற்றியவை அச்சுவாகனம் ஏறாததால் ஒன்றும் தெரியவரவில்லை.

கவிக்குக் கனசுந்தருதல் (கவிஞர்களுக்கு சன்மானம்)

வல்வெட்டித்துறை கோ. கந்தசாமி என்பவர் மட்டக்களப்பில் பிரபல மர வியாபாரியாக விளங்கியவர்.

உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவரவர்கள் இவர் மீது "பிரபாவப் பாமாலை" ஒன்றை பாடிச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை புலவரை மட்டக்களப்புக்கு வந்தால் ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறி சிறு பொருளுதவி செய்தார்.

புலவர் சில மாதங்கள் கழித்து மட்டக்களப்புக்குச் சென்றபோது, கந்தசாமிப்பிள்ளை இல்லாத நிலையிலும், அவரது மனைவி சொன்ன சொற்படி ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

கல்விச்சாலைகள்

"சிதம்பர வித்தியாலயம்" என வழங்கும் ஓர் ஆங்கிலக் கல்லூரியும். இது 1896 இல் திரு. கு. சிதம்பரப்பிள்ளையவர்களால் நிறுவப் பெற்றது. பின்னர் அவரது மைத்துனர் திரு. ஞா. தையல்பாகர் அவர்களின் பரிபாலனத்தின் கீழ் வளர்ந்து வருகின்றது.

"சிவகுரு வித்தியாசாலை" என வழங்கும் ஓர் தமிழ்ப் பாடசாலையும். இத்தையல்பாகர்தான் சிவகுரு வித்தியாசாலையைத் தாபித்தவர்.

அமெரிக்கன் மிஷனரிமாரால் நடத்தப்படும் ஓர் தமிழ்ப் பாடசாலையும்.

கத்தோலிக்க மதத்தினரால் தாபிக்கப்பட்ட ஓர் தமிழ்ப் பாடசாலையும் உள.

திரு. ஞா. தையல்பாகர் தனது உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தையும் வித்தியாசாலைகளின் அபிவிருத்திக்காக அர்ப்பணம் செய்து அரும் பாடுபட்டு வருகின்றார்.

முக்கியமான சமூக மற்றும் பொருளாதார அம்சங்கள்

இவ்வூரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் கலப்பு மணம் செய்துகொள்ளும் வழக்கம் இல்லை.

உள்ளூரவர்களே எல்லாவிதமான வியாபாரங்களையும் ஏற்று நடத்தி வருகின்றனர்.

அரசாங்க சேவையில் ஈடுபாடு:

பண்டைக் காலம் தொடங்கி இவ்வூரவர்கள் அரசாங்க சேவையில் ஈடுபட்டுள்ளனர்.

திருமேனியாரின் தாயாருடன் கூடிப் பிறந்த பொன்னம்பலம் என்பவர் இந்தியாவிலும் இலங்கையிலும் பிரபல வியாபாரியாக விளங்கியதுடன், ஒல்லாந்த அரசாங்கத்தாரால் "முதலியார்" பட்டம் வழங்கப்பெற்றார்.

இவருக்குப்பின் வேலுப்பிள்ளை என்பவரும் அவருக்குப் பின் புண்ணியமூர்த்தி என்பவரும் மணியகாரராயிருந்தவர்கள்.

இன்னும் இவ் வல்வெட்டித்துறை வாசிகள் பலர் இலங்கை அரசாங்க சேவையில் எல்லாத் துறைகளிலும் அமர்ந்து சேவை செய்து வருகின்றனர்.

மலாயா, பர்மா முதலிய இடங்களிலும் பலர் இருக்கின்றனர்.

இந்தியாவுக்கும் இவ்வூரவர்கட்குமுள்ள தொடர்பு இன்றும் இருந்து வருகின்றது.

சமூக பங்களிப்புகள்:

இவ்வூரவரொருவர் (முகாந்திரம் அப்புக்குட்டியாபிள்ளை) ஒரு லட்சம் ரூபாய் செலவில் **"இந்திராணி வைத்தியசாலை"**யைக் கட்டி அரசினரிடம் ஒப்புவித்துள்ளார்.

"ஜனசமூக நிலையம்" (Community Centre) ஒன்று ஊரவர்களால் ரூ. 13,500 செலவில் கட்டிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண புலனாய்வு ·

இன்று உலக சமூக ஊடக தினம்

1 month ago

உலக சமூக ஊடக தினம் இன்று 

Published By: DIGITAL DESK 4

30 JUN, 2025 | 10:40 AM

image

மக்களின் வாழ்க்கையில் பின்னிபிணைந்துள்ள சமூக ஊடகங்களை பெருமைப்படுத்தும் விதமாக உலக சமூக ஊடக தினம் இன்று ஜூன் 30 ஆம் திகதி அனுஷ்க்கப்பட்டு வருகிறது.

தகவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. அந்த வகையில் இன்றைய சூழ்நிலையில் தகவல் பரிமாற்றத்தில் முக்கிய இடத்தை சமூக ஊடகம் வகிக்கின்றது.

அந்தவகையில், மக்கள் ஒருவருடன் ஒருவர் இணைவதற்கு, செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு மற்றும் தகவல்களை அறிந்தவர்களாக இருப்பதற்கு மிகவும் சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாக சமூக ஊடகம் மாறியுள்ளது.

சமூக ஊடகங்கள் உலகெங்கிலும் உள்ள மக்களை ஒருவருடன் ஒருவர் ஒன்றிணைத்து, உண்மையிலேயே உலகளாவிய சமூகத்தை உருவாக்கியுள்ளன. 

புதிய ஊடகப் போக்குகள் மூலம் சமூகக் குழுக்களின் இன்றியமையாத பகுதியாக, சமூக ஊடகங்கள்  மாறியுள்ளன. தகவல் மற்றும் பொழுதுபோக்கை வழங்குவதோடு, பொதுக் கருத்தை வெளிப்படுத்துவதில் தற்போது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சமூக ஊடகங்களின் பயணம் 2002 இல் ஃப்ரெண்ட்ஸ்டர் மற்றும் 2003 இல் மைஸ்பேஸ் போன்ற தளங்களுடன் ஆரம்பமானது.

அதன்பின்னர், 2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஸ்புக், விரைவில் தொழில்துறையில் ஒரு ஆதிக்க சக்தியாக மாறியது. டுவிட்டர் (தற்போது X என்று அழைக்கப்படுகிறது) பயனர்கள் தங்கள் சிந்தனைகளை 140 எழுத்துகள் அல்லது அதற்கும் குறைவாகப் பகிர்ந்து கொள்ள ஊக்குவித்தது. 

இன்ஸ்டாகிராம் மற்றும் பிளிக்கர் நம்மை காட்சி ரீதியாக வெளிப்படுத்துவதை எளிதாக்கின, அதே நேரத்தில் யூடியூப் மற்றும் டிக்டொக் வீடியோ பகிர்வில் புரட்சியை ஏற்படுத்தி கலாசார முக்கிய தளங்களாக மாறிவிட்டன.

சமூக ஊடகங்கள் தற்போது உலகளாவிய அரசியலிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் அது அன்றாட தொடர்புக்கு அவசியமாகிவிட்டது.

மக்களை ஒன்றிணைக்கும் சக்தி வாய்ந்த ஒன்றாக இருந்தாலும், பிளவுகளையும் உருவாக்கக்கூடும், இதனால் மக்கள் அதைப் பொறுப்புடன் கையாள்வது மிகவும் முக்கியம்.

சமூக ஊடக தினம் தொடர்பில் களனி பல்கலைக்கழகத்தில் வெகுஜன ஊ டகத்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் விஜயானந்த ரூபசிங்க கருத்து தெரிவிக்கையில்,

"எந்தவொரு நாட்டிலும், சமூக ஊடகங்களைப் பற்றி பலருக்கு எதிர்மறையான கருத்துக்கள் உள்ளன. ஆனால் அந்த எதிர்மறையான கருத்துக்களுக்குக் ஊடகங்களை கையாள்வது தொடர்பான தவறான புரிதல்களே காரணம் என நான் நினைக்கிறேன். முதலாவதாக, இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இதை ஒரு புதிய ஊடகமாகப் பயன்படுத்துவது, சுமார் 20 முதல் 25 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் வளர்ந்த ஒரு ஊடகம். ஆனால் இது ஊடகங்களில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திய ஒரு துறை. சமூக ஊடகங்கள் இல்லாமல், இன்றைய சமூகம் இருக்க முடியாது."

நாட்டின் சனத்தொகையில் 53 சதவீதம் பேர் தற்போது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இது சுமார் 1 கோடியே 20 இலட்சம்  பேரை குறிக்கின்றது. அண்மையில், 2025 ஆம் ஆண்டுக்குள் டிக்டொக் பயன்பாடு சுமார் 30 சதவீதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனைய தளங்களுடன் ஒப்பிடுகையில், பயனர் தளத்தின் அடிப்படையில் இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், டிக்டோக் வேகமாக வளர்ந்து வரும் சமூக ஊடக தளமாகும்.  விஜயானந்த ரூபசிங்க கூறினார், மேலும் இலங்கை இப்போது டிஜிட்டல் ஊடக எழுத்தறிவை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/218805

பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்த சின்னத்துரை தில்லைநாதன் - 75 வது  அகவை வாழ்த்துகள்

1 month ago

தில்லைக்கு இன்று 75

29 JUN, 2025 | 02:33 PM

image

வீரகத்தி தனபாலசிங்கம் 

வடமராட்சியில் எந்த சந்தியில் என்றாலும், எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத் தான் கேட்கி!றார்கள் உடனடியாகவே என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம். அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட மூத்த  செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப் பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் அந்த பேச்சு நிறைவுறாது.  

அரைநூற்றாண்டுக்கும் அதிகமான  காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து   இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் இன்று தனது 75 வது  அகவையில் பிரவேசிக்கிறார். இதுவரையான  முக்கால் நூற்றாண்டு வாழ்வில் அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலத்தை  தில்லை பத்திரிகைத்துறைக்கு அர்ப்பணித்திருக்கிறார்

வடமராட்சி மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களுக்கும  அதிகமான காலமாக எனக்கு நெருக்கமான நட்புறவு. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்து விடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே முளைவிட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட.

புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்த வேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர். ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில் வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம். அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. 

ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக் கொள்வார்.  ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம். அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம்.

தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள்  பத்திரிகைகளில்ாபிரசுரமாகியிருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக் கொண்டார்.இவ்வாறு தான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக் கொண்டதாக  கூறுவார் தில்லை. 

பாடசாலை முடிந்து  வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே அவர்  செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள்.

வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும்் செய்ய வேண்டி வந்தது. பத்திரிகைகளில்   இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டும் என்று விடாப்பிடியாக நிர்பார்களாம் அந்த குழைத்தரகர்கள். 

தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்து முடிந்த கையோடு  அந்த தரகர்கள் அருகில் தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் சுவாரஸ்யமாக கூறுவதுண்டு.

பாடசாலைக்  கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. கண்டியில் இருந்து அப்போது வெளியாகிய  ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித் துறையில் அவர் காலடி வைத்தார்.  அந்த பத்திரிகையின் ஆசிரியர் சில வருடங்களுக்கு முன்னர் காலமான  பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மனைவியின் தந்தையார். 

‘செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை அடுத்த பேச்சின்றி இணங்கிக்கொண்டார். பத்திரிகைத்துறையில் அன்று  பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப் பார்க்கவில்லை. அரைநூற்றாண்டுக்கும் அதிகமான காலமாக   நீண்டு இன்றும்  தொடருகிறது அவரின் செய்திப்பணி.

பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி  அந்த வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார். 

1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய தில்லையை  வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ் சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் பணியாற்றுமாறு பணித்தார்.

பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராகவும் மாற்றியது. ஆபத்து நிறைந்த அந்த காலகடடத்திலும்,  தில்லை எந்த தயக்கமும் இன்றி துணிவாற்றலுடன்  அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை செம்மையாகப் பணியாற்றினார்.

இலங்கையின்  உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களை  தேசியரீதியான முக்கியத்துவத்தைக் கொண்டர்களாக மாற்றியது. அன்றைய சூழ்நிலையில் அது தவிர்க்க முடியாதது.  பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன. அந்த வேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள்.

அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைக்கு் மத்தியிலும்,  அர்ப்பணிப்புச் சிந்தையுடன் செய்த  யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது.

1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.

அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும். அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார்.

போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். 

அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருது ஒன்றும் தில்லைக்கு  கிடைத்தது.

பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவசாலிகளின்  வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியில் தொடர்புகொண்டாலும், நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறைக்கு நகர்ந்து விடும்.

அந்த துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற தில்லையின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்துவடமராட்சியில் எங்காவது ஒரு சந்தியில் எவரிடமாவது ‘றிப்போர்ட்டரை ‘ கண்டீர்களா என்று கேட்டால், அவர்கள் உடனே தில்லையைத்தான் கேட்கிறோம் என்று பதில் சொல்வார்கள். அந்தளவுக்கு தில்லைநாதன் வடமராட்சியில் மகா பிரபல்யம்.

அங்கு மாத்திரமல்ல, யாழ்ப்பாணத்தின் சகல பகுதிகளிலும் பரவலாக அறியப்பட்ட செய்தியாளர் அவர். கொழும்பிலும் கூட பிரதான தமிழ்ப்பத்திரிகை நிறுவனங்களில் வடபகுதி செய்தியாளர்களைப் பற்றி பேசும்போது தில்லையின் கதை வராமல் இருக்காது. அரைநூற்றாண்டு காலமாக பத்திரிகைத்துறைக்கு தன்னை அர்ப்பணித்து இன்னமும் கூட சுறுசுறுப்புக் குறையாமல் செயற்பட்டுக்கொண்டிருக்கும் தில்லை என்று நாம் அன்புடன் அழைக்கும் சின்னத்துரை தில்லைநாதன் நாளைய தினம் 70 வது அகவையில் காலடிவைக்கிறார்.

மந்திகையை பிறப்பிடமாகக்கொண்ட தில்லையுடன் சுமார் நான்கு தசாப்தங்களாக எனக்கு நெருக்கமான நட்புறவு இருந்துவருகிறது. அவரது எளிமையான சுபாவமும் நகைச்சுவையுணர்வு நிறைந்த பேச்சும் எவரையும் எளிதாக அவர்பால் கவர்ந்துவிடும். தில்லைக்கு செய்தித்துறையில் நாட்டம் மிகவும் இளம் வயதில் அதாவது பள்ளிக்காலத்திலேயே ஏற்பட்டுவிட்டது. அது ஒரு சுவாரஸ்யமான கதையும் கூட.

புலோலி மெதடிஸ்த மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் தரம் ஐந்து படிக்கும்போது தில்லையின் வகுப்பாசிரியரான டி.எம்.இராசலிங்கம் அந்தவேளையில் வீரகேசரி, ஈழநாடு பத்திரிகைகளின் நிருபர்.ஓய்வான நேர இடைவெளியில் வகுப்பில்வைத்தே செய்திகளை எழுதிவிட்டு தினமும் அவற்றை தபாலில் சேர்ப்பதற்காக மாணவர்களிடம் கொடுத்து அனுப்புவது அவர் வழக்கம்.

அவ்வாறு செய்திகளை தபாலில் சேர்க்கும் வேலையை விரும்பிச்செய்த மாணவர்களில் ஒருவர் தில்லை. ஆசிரியர் மறந்தாலும் தில்லை அவரிடம் சென்று ‘ சேர் இன்று தபால் கந்தோருக்கு போகத்தேவையில்லையா ‘ என்று தானாகவே கேட்டு செய்திகள் அடங்கிய தபாலுறைகளை வாங்கிக்கொள்வாராம். ஊரில் உள்ள புதினங்களை இந்த ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்டு அவற்றை செய்தியாக்குவதிலும் இராசலிங்கம் வல்லவராம்.

அவ்வாறு புதினங்களை அவருக்குச் சொல்வதில் தில்லைக்கு ஒரு பிரியம்.தாங்கள் தபாலில் சேர்த்த செய்திகள் பத்திரிகைகளில் வந்திருக்கிறதா என்று தேடி வாசிக்கும் ஆர்வத்தையும் தில்லை நாளடைவில் வளர்த்துக்கொண்டார்.இவ்வாறுதான் பின்னாளில் பத்திரிகைத்துறையில் முழுமையாக தன்னை அர்ப்பணிப்பதற்கான விதையை ஊன்றிக்கொண்டதாக தில்லை கூறுவார்.

பாடசாலை முடிந்து தில்லை வீடு திரும்பும்போது மந்திகை வைத்தியசாலைச் சந்தியை கடந்தே செல்லவேண்டும். வைத்தியசாலையை சூழவுள்ள பகுதிகள் விவசாயிகள் நிறைந்தது. அந்த சந்தியில் தினமும் ‘ குழைத்தரகர்கள் ‘ கூடி நிற்பார்கள். அவர்கள் பெரும்பாலும் படிப்பறிவில்லாதவர்கள். வீடு நோக்கிச்செல்லும் தில்லையை அவர்கள் இடைமறித்து வீரகேசரியையும் ஈழநாட்டையும் கொடுத்து உரத்து வாசிக்கவைத்து நாட்டு நடப்புக்களை அறிந்துகொள்வார்கள். இதை தில்லை ஒரு நாள், இரண்டு நாள் அல்ல தினமும் செய்யவேண்டியேற்பட்டுவிட்டது.

இரு பத்திரிகைகளிலும் இருந்த சகல செய்திகளையும் ஒன்றுவிடாமல் வாசிக்கவேண்டுமாம். தில்லை ஒன்றும் விருப்பமில்லாமல் அதைச் செய்யவுமில்லை. செய்திகளை முழுமையாக வாசித்துமுடிந்த உடனடியாக அந்த தரகர்கள் அருகில் இருந்த தேநீர் கடையில் வடை, பகோடா போன்ற பலகாரங்களை வாங்கி தில்லைக்கு கொடுப்பார்களாம். சிறு வயதில் இருந்தே தனக்கு பத்திரிகை வாசிப்பில் அக்கறை வளர்ந்ததற்கு அந்த ‘ மந்திகைச்சந்தி செய்திவாசிப்பு ‘ முக்கியமான ஒரு காரணம் என்று தில்லை தனது அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பங்களில் கூறுவார்.

பாடசாலை கல்வியை முடித்துக்கொண்ட உடனடியாகவே தில்லை ஒரு செய்தியாளராக வேண்டும் என்பதைத் தவிர வேறு தொழிலில் நாட்டம் காட்டவில்லை. அவர் கண்டியில் இருந்து வெளியாகிக்கொண்டிருந்த ‘ செய்தி ‘ என்ற பத்திரிகையின் நிருபராகவே செய்தித்துறையில் காலடி வைத்தார்.

அதன் ஆசிரியர் பேராசிரியர் சோ.சந்திரசேகரனின் மாமனாராவார். ‘ செய்தி ‘ நடத்திய கட்டுரைப்போட்டிக்கு தில்லை எழுதிய அனுப்பிய கட்டுரைக்கு பரிசு கிடைத்தது. 50 ரூபா பரிசைப் பெறுவதற்காக அவர் 1968 ஆண்டு கண்டிக்கு சென்றபோது அந்த பத்திரிகையின் செய்தி ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற கே.ஜி.மகாதேவா ( பிறகு அவர் ஈழநாடு பத்திரிகையின் செய்தி ஆசிரியராக பல வருடங்கள் சேவையாற்றினார்) நிருபராகப் பணியாற்றுமாறு கேட்கவே தில்லை மறுபேச்சின்றி இணங்கிக்கொண்டார். அன்று பத்திரிகைத்துறையில் பிரவேசித்த அவர் அதற்குப் பிறகு திரும்பிப்பார்க்கவில்லை. 52 வருடங்களாக நீண்டு இன்றும் தொடருகிறது அவரின் செய்திப்பணி.

பிறகு 1969 ஆம் ஆண்டில் ஈழநாடு பத்திரிகையின் நெல்லியடி செய்தியாளராக இணைந்துகொண்ட தில்லை மூன்று வருடங்களில் (1972) வீரகேசரியின் புலோலி செய்தியாளரானார். வடமராட்சியின் திக்கம் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் வி.பி.சுந்தரலிங்கம் அன்றைய வீரகேசரி ஆசிரியர் கே. சிவப்பிரகாசத்துடன் தனக்கிருந்த நட்புறவை பயன்படுத்தி வாய்ப்பை தனக்கு பெற்றுக்கொடுத்ததாக நன்றியுணர்வுடன் தில்லை அடிக்கடி கூறுவார்.

1987 வரை புலோலி செய்தியாளராக பணியாற்றிய அவரை வடமராட்சி ‘ லிபறேசன் ஒப்பரேசன் ‘ இராணுவ நடவடிக்கைக்கு பிறகு வீரகேசரியின் அன்றைய செய்தி ஆசிரியர் காலஞ்சென்ற செ.நடராஜா வடமராட்சி செய்தியாளராக கூடுதல் பொறுப்புகளுடன் மாற்றினார்.

பிறகு யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பற்றியதை அடுத்து 1997 ஆம் ஆண்டில் அன்றைய வடபகுதி போர்நிலைவரங்களுக்கு மத்தியில் யாழ்ப்பாண செய்தியாளராக அனுபவமும் பொறுப்பும் வாய்ந்த ஒருவரே செயற்படவேண்டும் என்று முடிவெடுத்த வீரகேசரி நிறுவனம் தில்லையை யாழ்நகரை தளமாகக்கொண்டு பணியாற்றும் யாழ்ப்பாண செய்தியாளராக பணியாற்றவைத்தது. அது ஆபத்து நிறைந்த காலகட்டம் என்றபோதிலும், தில்லை எந்தவிதமான தயக்கமும் இன்றி துணிச்சலுடன் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு 2009 வரை பணியாற்றினார்.

இலங்கை உள்நாட்டுப்போர் பிராந்தியச் செய்தியாளர்களுக்கு தேசியரீதியான முக்கியத்துவத்தை தவிர்க்கமுடியாமல் கொடுத்தது. பிராந்தியங்களில் இடம்பெற்ற சம்பவங்களே போர்க்காலத்தில் பெரும்பாலும் தேசிய மட்டத்தில் மாத்திரமல்ல, வெளியுலகினதும் கவனத்துக்குரியவையாக இருந்தன.

அந்தவேளையில் பிராந்திய செய்தியாளர்கள் உள்நாட்டு ஊடகங்களினால் மாத்திரமல்ல, சர்வதேச ஊடகங்களினாலும் பெரிதும் நாடப்பட்டவர்களாக இருந்தார்கள்.அவர்களது செய்திகள் வடக்கு, கிழக்கில் போரின் விளைவான அவலங்களை உலகறியச்செய்தன. அத்தகைய பணியை இடர்மிகுந்த சூழ்நிலைகளுக்கு மத்தியிலும் அர்ப்பணிப்புடன் செய்த யாழ்ப்பாணச் செய்தியாளர்களில் தில்லைக்கு ஒரு முக்கிய இடமுண்டு.உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகும் அவரின் பணி சுறுசுறுப்பாகத் தொடருகிறது.

1970 களின் பிற்பகுதியில் பருத்தித்துறையில் இடம்பெற்ற கமலம் கொலைவழக்கு, 1990 களின் பிற்பகுதியில் நடைபெற்ற செம்மணி கிருசாந்தி குமாரசாமி பாலியல் வல்லுறவு, கொலை வழக்கு விசாரணைகள் தொடர்பான செய்திகளை விரிவான முறையில் தில்லை அறிக்கையிட்டபோது முதலில் வீரகேசரியிலும் பின்னர் தினக்குரலிலும் நான் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அந்த வழக்கு விசாரணைகளின் தொகுப்புக்களை மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாசித்தார்கள்.அந்த விசாரணைகள் பற்றிய செய்தி ஒரு நாள் பத்திரிகையில் வெளியாகத் தவறினாலும் உடனே வாசகர்களிடமிருந்து பத்திரிகை அலுவலகங்களுக்கு தொலைபேசி அழைப்பு வந்துவிடும்.அந்தளவுக்கு சிறப்பான முறையில் தில்லை செய்திகளை தொகுத்தளித்தார்.

போர்க்கால கட்டத்தில் இடர்பாடுகளுக்கு மத்தியில் பணியாற்றிய பத்திரிகையாளர்களுக்கு இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியம் 2004 ஆம் ஆண்டில் விருது வழங்கிக் கௌரவித்த போது யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அந்த விருது தில்லைக்கு கிடைத்தது. அடுத்து அதே ஆண்டு ஜூலை மாதம் இலங்கை பத்திரிகை ஆசிரியர்கள் அமைப்பும் இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து கொழும்பில் நடத்துகின்ற பத்திரிகைத்துறைக்கான உயர்விருது விழாவிலும் தில்லை கௌரவிக்கப்பட்டார். அவரின் ஊடகத்துறைச் சேவையை பாராட்டி பருத்தித்துறை பிரதேச செயலகம் 2013 ஆம் ஆண்டில் ‘ கலைப்பருதி ‘ பட்டம் வழங்கியது. கல்வி அமைச்சின் விருதொன்றும் அவருக்குக் கிடைத்தது.

பத்திரிகைத்துறைக்கு தங்களது வாழ்க்கையை அர்ப்பணித்த காலஞ்சென்ற வீரகேசரி யாழ்ப்பாணச் செய்தியாளர் செல்லத்துரை போன்று அனுபவம் மிக்கவர்களின் வரிசையில் வைத்து ஒப்பிடக்கூடிய ஒருவரான தில்லையை எந்த நேரத்தில் நேரடியாகக் கண்டாலும் அல்லது தொலைபேசியல் பேசினாலும் நலம் விசாரித்துவிட்டு அடுத்து உடனடியாக கதை பத்திரிகைத்துறை பற்றியதாக நகர்ந்துவிடும். அந்த 

துறைக்கு தன்னாலான பணியை தொடர்ந்தும் செய்யவேண்டும் என்ற அவரின் ஆழமான ஆர்வத்தின் வெளிப்பாடே அது. 

தில்லை மிகுந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்து பத்திரிகைத்துறைப் பணியை செவ்வனே  தொடர வேண்டும் என்று மனமார வாழ்த்துகிறோம்.

https://www.virakesari.lk/article/218728

மூட்டில் பிரச்னை: 70 வயதிலும் தடகளத்தில் பதக்கங்களை குவிக்கும் Shakuntala Pandya

1 month ago

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தைச் சேர்ந்த சகுந்தலா பாண்ட்யா. இவருக்கு 45 வயதில், முழங்கால் மூட்டில் குருத்தெலும்பு கிழிந்திருந்தது. முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல், பிசியோதெரபிஸ்ட் நிபுணரின் உதவியுடன் உடற்பயிற்சி செய்து 70 வயதில் தடகள வீராங்கனையாக 30-க்கும் பதக்கங்களை வென்றுள்ளார்.

#Shakuntalapandya #Sports #Athlatic

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும்.

1 month ago

640x340_sc_maxnewsspecialtwo106302-6822d

விழித்து கொண்ட பிரான்ஸும், மத அரசியலுக்கு செருப்படியும்
சும்மா....கலக்கு கலக்கி விட்டார்.. மெக்ரான் .......
தங்கள் நாட்டுக்கான....சட்டதிட்டங்களில்... கலக்கி பிழிந்து எடுத்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் 👌👌👌
இஸ்லாத்திற்கு புதிய சட்டங்க ளை கொண்டு வந்திருக்கிறார் பிரான்ஸ் அதிபர் மெக்ரான் ......
புதிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க 15 நாட்கள் கெடு வைத்திருக்கிறார் அதிபர் மெக்ரான்..
புதிய சட்டதிட்டங்களை மீறுபவர்கள் ..... 5ஆண்டு சிறை தண்டனை, குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப்படுவார்கள் .....

அதிபர் மெக்ரான் கொண்டு வந்த புதிய சட்டதிட்டங்கள்......
1.இஸ்லாம் என்பது ஒரு மதம் மட்டுமே,..... பிரான்சின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே இஸ்லாம் இருக்க வேண்டும்....., இஸ்லாத்திற்கு என்று தனி உரிமையோ சலுகைகளோ கிடையாது......
2.மத அரசியல் நடத்த இஸ்லாத் திற்கு அனுமதி கிடையாது.....,
அரசியலில் மதம் கலப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியா து. மீறினால் சம்பந்தபட்ட நபர்களுக்கு 5ஆண்டு சிறை......, குடியுரிமை ரத்து .. மற்றும் பிரான்சிலிருந்தே வெளியேற்றப் படுவார்கள்......
3.எல்லா இஸ்லாமிய குழந்தை களும் ஸ்டுடென்ட் ID எடுக்க வேண்டும்......,ஒழுங்காக வகுப்பறைக்கு வருகை தந்து.... பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்......வகுப்பு நேரத்தில் நமாஸ் செய்ய அனுமதி கிடையாது......
ஹோம்கிளாஸ்...... ,மதரசாக்களில் படிக்க அனுமதி இல்லை....
.. மீறும் பெற்றோர்களுக்கு 5 ஆண்டு சிறை,..... குடியுரிமை ரத்து மற்றும் பிரான்சை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.......
4.மதரசாவுக்கு அனுமதி கிடையாது...... இஸ்லாம் படிக்க அரசு கண்காணிப்பில் தரும்..... மதம் சார்ந்த பாடத்திட்டங்களையே படிக்க அனுமதி.....,மதம் படிப்பிக்கும் இடங்களை அரசிடம் பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல்,...... பாடம் நடத்தும் வீடியோக்களை அரசிற்கு அனுப்பி வைக்க வேண்டும்......மீறும் நபர்களுக்கு 5ஆண்டு சிறை....,குடியுரிமை ரத்து.... மற்றும் பிரான்சை விட்டே வெளியேற்றப்படுவார்கள்......

பிரான்சில் இஸ்லாமியர்கள் எப்படி வாழ வேண்டும் என்பதை தீர்மானிப்பது..... இஸ்லாமிய தீவிரவாதிகள் அல்ல.....,
நானும் எனதும் அரசும் தான் தீர்மானிக்கும் என்று கூறியிருக்கிறார்..... பிரான்ஸ் அதிபர் மெக்ரான்.....
உலகிலேயே இந்தியா என்ற இளிச்சவாய் நாடு தான் மதச் சார்பின்மை பேசி பெரும்பான் மை மக்களை அழிக்கும் அரசியல்வாதிகள் உள்ள ஒரே நாடு....என்ற உண்மை அனைவருக்கும் உரைக்கும்படி செய்ய வேண்டும்....

Radhakrishnan Radha

கல்வித்துறையில் கத்தரிக்காய் வியாபாரிகள்

1 month 1 week ago

கத்தரிக்காய் வியாபாரிகள்

 

AVvXsEgLKt1AuRXQM6SQYq6q-N0pjjVFLvqtiuQ54lgakMDxfo-iQZZzzkAHmuBHwGu4tDuDhRuEmbLvxEY4XxS3Z1WYwwts5chrQClhIN-52cv2Bp20y8hjQkKQkEOyDGtIAMXy0OqbleBwU0lqShrQL1yqZ4oNZrL6tAVTQ_64mC8HygVzra7t_zUFzezsxG8H=w640-h336

முன்னாள் பேராசிரியர் ஜான் ஜோசப் கென்னடி இக்கட்டுரையில் பேசியிருப்பது அப்பட்டமான உண்மை - தனியார்மயமாக்கலில் வெகுவாக குழம்பிப் போயிருப்பது கல்வித்துறைதான். மாணவர்களை நுகர்வோராகப் பாவிப்பதால் அவர்களை முதிர்ச்சியும் பயிற்சியும் அற்றவர்களாகப் பார்க்க உயர்கல்வித்துறை தயாரில்லை. பதிலுக்கு மாணவர்களை அனைத்தும் கற்றறிந்த மேதைகளாகவும், அவர்களை வேலைக்குத் தயாரித்து அனுப்பும் பொறுப்பு மட்டுமே ஆசிரியர்களுடையது எனும் நம்பிக்கை பரவலாகத் தோன்றியுள்ளது. யு.ஜி.ஸியே அதைத்தான் பரிந்துரைக்கிறது - அவர்கள் மாணவர்கள் வேலை செய்து கற்பதை ஊக்கப்படுவது கல்வி போதனை குறித்து அவநம்பிக்கையினாலே. கல்லூரியில் கற்பிக்கப்படும் எதுவும் இளைஞர்களுக்கு வேலை செய்யப் பயன்படுவதில்லை என்று அதிகமாக தொழிற்துறையைச் சார்ந்தவர்களும் முதலீட்டாளர்களும் நம்புகிறார்கள். மெல்லமெல்ல உயர்கல்வியே தேவையில்லை, பள்ளிப்படிப்புக்குப் பின்பு நேரடியாக வேலைக்கு எடுக்கலாம் என்பதே திட்டம். மிகமிக அடிப்படையான திறன்களை மட்டுமே கொண்ட எந்திரத்தனமான கூட்டம் இன்றைய தொழிற்துறைக்கு, தனியார் நிறுவனங்களுக்குப் போதும்.

செயற்கை நுண்ணறிவு பொறியியலில் கைவைத்துவிட்ட பின்னர் இன்று பலரும் வேலை இழந்து வருகிறார்கள். வருங்காலத்தில் மருத்துவர்களும் வேலை இழப்பார்கள் என ஒரு அமெரிக்க மருத்துவர் பேசுவதைக் கேட்டேன். அதுவும் நிச்சயமாகச் சாத்தியமே. பத்திற்கு ஒரு மருத்துவரே இருப்பார்கள். செவிலியரும் செயற்கை நுண்ணறிவுமாக இணைந்து மருத்துவரின் இடத்தை எடுத்துக்கொள்வார்கள். நாட்டில் மிக அதிகமாக சம்பாதிக்கிற, கௌரவமான வேலைகளையே செயற்கை நுண்ணறிவு கபளிகரம் பண்ணும்போது மற்ற வேலைகளில் உள்ளவர்கள்?

இது முதலில் பாதிக்கப் போவது உயர்கல்வித்துறையைத்தான்: மாணவர்களுக்கு கல்வி போதனையோ பயிற்சியோ அவசியம் இல்லை என நிர்வாகிகள் நம்பத் தொடங்கியுள்ளதால் நூற்றில் இருந்து பலநூறு மாணவர்களுக்குப் பாடமெடுக்க வகுப்புக்கு ஒரே ஒரு ஆசிரியரையே நியமிக்கிறார்கள். சர்வதேச அளவில் தரம் நிர்ணயிக்கும் நிறுவனங்களிடம் உயர்வான மதிப்பீடு பெறுவதற்கு பேராசிரியர்கள் ஆய்விதழ்களில் பிரசுரித்தால் போதும் என நினைக்கும் நிர்வாகங்கள் இன்று அவர்களுடைய கற்பிக்கும் திறனைப் பொருட்படுத்துவதில்லை. சில நிறுவனங்களில் ஆசிரியர் ஒரே சமயம் கன்னாபின்னாவெனப் பிரசுரிக்கவும் வேண்டும், நன்றாகப் போதிக்கவும் வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆனால் ஆளைத் தேர்வு பண்ணும்போது போதிக்கும் திறனைச் சோதிப்பதில்லை. ஆய்வேட்டில் பிரசுரம் உள்ளதா என்று மட்டுமே பார்க்கிறார்கள். மாப்பிள்ளைக்கு வெளிநாட்டில் வேலை, கார், சொத்து உள்ளதா, அவர் ஆணாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை என பெண் வீட்டார் எதிர்பார்ப்பதைப் போல நிலைமை மாறிவிட்டது.

தனியார் கல்வி நிறுவனங்கள் அதனாலே இன்று மாணவர்களை ஈர்க்க மாணவர்களுக்கான ஈவெண்ட் மெனேஜ்மெண்ட் கம்பனியாக மாறிவருகிறது. ஒரே ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், தொடர்ச்சியாக கவனத்தைச் சிதறடிக்கும் போட்டிகள் என வகுப்பறைக்கு வெளியே மாணவர்களை வைத்திருக்க முயல்கிறார்கள். இது முதலில் அமெரிக்காவிலேயே ஆரம்பித்தது. அதுவும் ஹார்வெர்டில். அங்கு தத்துவத் துறையில் ஆசிரியராகப் பணியாற்றிய ஜேரெட் ஹேண்டர்ஸன் ஒவ்வொரு மாணவருக்கும் ஐந்து நிர்வாகிகள் அங்கு பணியாற்றுகிறார்கள், ஆனால் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவு என்கிறார். மாணவர்கள் இன்று எதையும் சிரமப்பட்டு வாசிக்க விரும்புவதில்லை எனில் அதை ஒரு குறையாகவோ பிரச்சினையாகவோ ஹார்வெர்ட் நிர்வாகம் பார்ப்பதில்லை, அவர்களுக்கு ஏற்றபடி மேலோட்டமாக ஜாலியாகப் பேசிவிட்டு வந்தால்போதும் என அது ஆசிரியர்களைக் கேட்பதாகச் சொல்லும் அவர் கற்பித்தலில் தனக்கு மகிழ்ச்சியே இல்லாமல் போக வேலையை விட்டுவிட்டு யுடியூபராகிவிட்டதாக சொல்கிறார். இனிமேல் தான் கல்வித் துறைக்கே போகப் போவதில்லை என்கிறார் (இவரது தத்துவச் சேனல் பிரசித்தமானது: https://www.youtube.com/@_jared). இந்தப் போக்கு இந்தியாவுக்கும் உலகின் பல பகுதிகளுக்கும் பரவிவிட்டது.

குறைவாக முதலீடு செய்து கட்டாயத்தின் பெயரில் கல்லூரிக்கு வரும் மாணவர்களைச் சுரண்டி நூறு மடங்கு சம்பாதிப்பதே தனியார் உயர்கல்வித்துறையின் உத்தேசம் ஆன பின்னர் எந்த அடிப்படையான படிப்புக்கும் மதிப்பற்றுவிட்டது - கணிதத்தை செயற்கை நுண்ணறிவு பார்த்துக்கொள்ளுமா அதைக் கற்பிக்கவே தேவையில்லை, நேரடியாக வேலையில் தேவைப்படும் ஒன்றை மட்டுமே கற்பித்துக்கொடு என்று நிர்வாகங்களும் கம்பெனி சி.இ.ஓக்களும் சொல்கிறார்கள். இதையே இன்றைய இளைஞர்களுக்கு வேலைத் தகுதியின்மை எனச் சொல்லி வலியுறுத்துகிறார்கள். ஒவ்வொரு ஐந்தாண்டுகளும் மாறப் போகிற வேலைச் சந்தைக்குப் பொருத்தமான கல்வி எந்த கல்வி நிறுவனமும் அளிக்க முடியாது. பொறியியலின் அடிப்படையே தேவையில்லை, செயற்கை நுண்ணறிவை நிர்வகிக்கும் திறன் மட்டும் போதும், யாரும் பேசவோ எழுதவோ மொழியைக் கற்கத் தேவையில்லை, செயற்கை நுண்ணறிவே அதைச் செய்யும் என ஒரு கம்பெனி சி.இ.ஓ சொன்னால் அதைப் பின்பற்றி அரைகுறையாகக் கற்கும் ஒரு மாணவர் நாளை வேலையின் தேவை முழுக்க மாறும்போது நிர்கதியாக நிற்பார். அவரால் சொந்தமாகச் சிந்தித்து புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடிக்க, புதிய கட்டமைப்புகளை உருவாக்க இயலாதவராக இருப்பார். நான் இன்று அப்படியானவர்களை அதிகமாகப் பார்க்கிறேன் - அண்மையில் என்னிடம் ஒரு பேராசிரியர் சொன்னார்: அவர் ஒரு மாணவர் தேர்வு நேர்முகத்தில் இருந்தார். வணிகப் பயன்பாட்டுத் தரவுகளைப் பரிசோதித்து அவர்களைக் கட்டுப்படுத்தும் நிரல்களை எழுதக் கற்றுக்கொடுக்கும் படிப்பு அது. வந்த மாணவர்களில் 98% பேர்களுக்கு நிரலாக்க, வணிகவியல் படிப்போ அறிவோ இல்லை. ஆனாலும் அப்படிப்பை முடித்து வேலைக்குப் போக வேண்டும் என வருகிறார்கள். இவர்களுக்கு உயர்கல்விக்குப் பிறகு எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாமல் ஆச்சரியமில்லை. அது போதும் என்றே யு.ஜி.ஸியும் தனியார் கல்வி நிறுவனங்களும் ஒருசேர நினைக்கிறார்கள். உ.தா., நீங்கள் இளங்கலைப் படிப்பில் பொறியியல் படித்துவிட்டு நேரடியாக - எந்த அடிப்படையும் தெரியாமல் - மொழியில் முனைவர் பட்ட ஆய்வு பண்ணலாம். இதை கல்விச் சுதந்திரம் என்று யுஜிஸி நினைக்கிறது. ஆனால் இது படுமுட்டாள்தனம் என யுஜிஸி மண்டைகளுக்கு விளங்கவில்லை.

தனியார் கல்வி நிறுவனங்கள் அதிகமாகச் சம்பாதிப்பதற்கு எந்தப் படிப்பிலும் எவரையும் சேர்க்கலாம் என விதிமுறையை யுஜிஸி கொண்டு வந்தது. இப்போது ஆன்லைனில் பட்டப்படிப்பை யுஜிஸி அனுமதிக்கிறது. இது மேலும் பல பெருங்குழப்பங்களைக் கொண்டு வரும். வேலையளிக்கும் நிறுவனங்கள் இந்த ஆன்லைன் படிப்பை நிராகரிக்கும் நிலை வரும். ஏனென்றால் நமது மாணவர்களுக்குத் தாமாகப் படிக்கிற பொறுப்பும் சுயக்கட்டுப்பாடும் இல்லை. கிடைக்கும் வாய்ப்பில் எல்லாம் மோசடி செய்து பட்டம் வாங்கி விடுவார்கள். நான் அண்மையில் ஒரு முதுகலைப் பட்ட நேர்முகத்தில் ஒரு மாணவரைப் பார்த்தேன். அவர் பெங்களூரின் பிரசித்தமான தனியார் பல்கலையில் இளங்கலை ஆங்கிலப் படிப்பில் 83% மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். நான் மாணவராக இருந்தபோது 60-70% மதிப்பெண் வாங்க மிகச்சிறந்த மாணவராக இருக்க வேண்டும். அவர்களுக்கே தங்கப்பதக்கம் கிடைக்கும் (நான் என் இளங்கலையிலும் முதுகலையிலும் தங்கப்பதக்கம் பெற்றேன்.). சரி பெரிய புத்திசாலி போல என நினைத்து நான் அம்மாணவரிடம் அவர் ஒரு மாதத்திற்கு முன்பு அவர் தேர்வு எழுதிய பாடத்தில் இருந்து ஒரு கேள்வி கேட்டேன். ரொம்ப சாதாரணமான கேள்விதான். அவருக்குத் தெரியவில்லை. "மறந்துவிட்டது சார்" என்றார். சரி பரவாயில்லை. உங்கள் பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருந்தன என்று கேட்டால் அதுவும் தெரியவில்லை. அதெப்படி மறந்துபோகும்? எனக்கு நான் 25 ஆண்டுகளுக்கு முன் படித்ததெல்லாம் நினைவிருக்கிறதே. அவர் நூற்றுக்கு 82 மதிப்பெண்கள் வேறு அப்பாடத்தில் பெற்றிருந்தார். இன்னொரு மாணவர் கேரளாவைச் சேர்ந்தவர். அவர் 85%. ஆனால் ஒரு வாக்கியம் பேசினால் 10 தவறுகள் செய்கிறார். இவர்களுக்கு எப்படி இவ்வளவு மதிப்பெண்கள் கொடுக்கப்படுகின்றன என்றால் அதை 'வாடிக்கையாளர் திருப்தி' எனும் பெயரில் நிர்வாகங்கள் நியாயப்படுத்துகின்றன. மதிப்பெண்ணை நியாயமாக அளித்தால் மாணவர் சேர்க்கை குறையும் என அஞ்சுகிறார்கள். அரசுப் பள்ளிகளில் அனைவரையும் தேர்வு செய்யும் முடிவை நாம் விமர்சிக்கையில் தனியாரில் நடக்கும் மோசடிகளைக் கண்டுகொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் நீங்கள் மாணவர்களையே குற்றம் சொல்ல முடியாது - பல்கலைக்கழகத்தில் இன்று ஒருவர் துணைவேந்தர் ஆவதற்கு எந்த கல்வித்தகுதியும் தேவையில்லை, தொழிற்துறையில் உயர்பொறுப்பில் இருந்த அனுபவம் போதும் என யுஜிஸி கூறுகிறது. நமது பிரதமர் ஒரு சிறந்த நடிகர்தான், ஆனால் அவர் தொழில்முறை நடிகர் அல்லர். அதற்காக அவருக்கு பால்கே விருது கொடுக்க முடியாதில்லையா. இரண்டுக்கும் வித்தியாசமுள்ளது. யுஜிஸியோ கல்வித் தகுதியை விட பணம்தான் முக்கியம் எனும் கொள்கையை வைத்திருக்கிறது. மாணவர்களின் எதிர்காலத்தைவிட தனியாரின் லாபத்தையே அது பிரதானப்படுத்துகிறது. அதற்குத் தோதாக மட்டுமே விதிமுறைகளை இயற்றுகிறது. இப்படி எல்லா விதங்களிலும் அது உயர்கல்வியை அழிக்கும் பணியை ஆற்றுகிறது. இதுவும் அமெரிக்கப் பண்பாடுதான் - அங்கு தேர்தலிலே நிற்காத டெஸ்லா முதலாளி சற்று காலத்திற்கு முன்வரை அரசைக் கட்டுப்படுத்தவில்லையா!

கத்தரிக்காய் வியாபாரிகளும் தக்காளி வியாபாரிகளுமாக உயர்கல்வித் துறையை நாசம் பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

Posted 23 hours ago by ஆர். அபிலாஷ்

https://thiruttusavi.blogspot.com/2025/06/blog-post_66.html

Checked
Sat, 08/02/2025 - 08:39
சமூகவலை உலகம் Latest Topics
Subscribe to சமூகவலை உலகம் feed