அம்பாறை வீரமுனையில் முஸ்லிம் காடையர்கள் சிங்கள இராணுவத்தின் துணையுடன் நூற்றுக்கணக்கான தமிழர்களை உயிருடன் வெட்டியும் எரித்தும் படுகொலை செய்த நினைவு நாள் இன்று.   முஸ்லிம் காடையர்களாலும் தமிழ்ப் பிரதேசங்களில் வன்முறையான தாக்குதல்களும் படுகொலைகளும் நிகழ்த்தப்பட்டன. கிழக்கு மாகாணத்தில் மோசமான தாக்குதலுக்கு உள்ளான பிரதேசங்களாக வாழைச் சேனை, செங்கலடி ஆரையம்பதி, நீலாவனை, பாண்டிருப்பு முதலானவை காணப்படுகின்றன. குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களால் தமிழ்க் கிராமங்கள் பல அழிவுற்றன. பரம்பரை பரம்பரையாகத் தமிழர்கள் வாழ்ந்து சூறையாடப்பட்டு இன்று சிதைவுக்குள்ளான கிராமங்களாகப் பாலமுனை, பாணமை, மீனோடைக்கட்டு, ஒலுவில், நிந்தவூலீ, சம்மாந்துறை, கரவாகு, தீகவாவி, மாந்தோட்டம், கொண்டா வெட்டுவான், பூரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம் முதலானவை காணப்படுகின்றன. தமிழர்கள் வாழ்ந்தமைக்கான சுவடுகள் துடைத்தழிக்கப்பட்டு இக்கிராமங்கள் இன்று முஸ்லிம் கிராமங்களாக மாறியுள்ளன.   இச்சூழலில் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் தமிழ்க் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளக்கடை, திறாய்க்கேணி, சொறிக்கல்முனை, மீராச்சோலை முதலானவற்றைக் கூறலாம். இப்பூர்வீகக் கிராமங்களில் பிறந்த தமிழர்கள் பலர் இவ்வன்முறையோடு தாக்குதல்களுக்கு உள்ளானவராகவும் தம் சுயமிழந்து அகதி அந்தஸ்து அங்கீகரிக்கப்படாதவராகவும் காணப்பட்டனர். முஸ்லிம் இனவாதக் குழுக்களால் இக்கிராமப் பெண்கள் பலர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதோடு மிலேச்சத்தனமான முறையில் படுகொலையும் செய்யப்பட்டனர்.

1990களில் திறாய்க்கேணி, நிந்தவூர், வீரமுனை முதலான தமிழ்ப் பிரதேசங்களில் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்களால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் அறத்திற்குப் புறம்பானவை. திராய்க்கேணி பிள்ளையார் கோயிலில் உயிருக்கஞ்சி அடைக்கலம் புகுந்த தமிழ் இளைஞர்கள், யுவதிகளை அடித்தும் வெட்டியும் கொன்ற முஸ்லிம் இனவாதக் குழுக்கள் நிந்தவூர் முருகன் கோவிலில் 64 தமிழர்களையும் வீரமுனைப் பிள்ளையார் கோயிலில் 85 இளைஞர்களையும் படுகொலைசெய்தனர். மத வணக்கத்தலங்களில் நிகழ்த்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதல்கள் தமிழ், முஸ்லிம் உறவுக்குத் குந்தகம் விளைவிக்கும் செயல்களாக அமைந்தபோதிலும் எவராலும் தடுத்து நிறுத்தப்படவில்லை; கண்டிக்கப்படவில்லை.

இவை தவிர இக்காலப்பகுதியில் தமிழ், முஸ்லிம் இன மோதல்களால் ஏராளமான இந்து ஆலயங்கள் சுவடுகள் இன்றி அழித்தொழிக்கப்பட்டன. சம்மாந் துறைக் காளிகோயில், அட்டப்பள்ளம் மீனாட்சியம்மன் கோயில் கல்முனை கரவாகு காளிகோயில் மீனோடைக்கட்டுப் பிள்ளையார் கோயில் ஓட்டமாவடிப் பிள்ளையார் கோயில் எனப் பல இந்துக் கோயில்கள் முஸ்லிம்களால் சிதைக்கப்பட்டுக் கோயில்கள் பள்ளிவாசல்களாகவும் (கரவாகு காளிகோயில்), மாட்டிறைச்சிக் கடைகளாகவும் (ஓட்டமாவடி பிள்ளையார் கோயில்) இன்று மாற்றப்பட்டுள்ளன. முஸ்லீம்களின் செயலால் தூண்டப்பட்டு.. தமிழர்கள் செய்த செயல்கள் போலவே.. தமிழர்களால் தூண்டப்படாமல் சிங்களவர்களின் தூண்டுதலின் பெயரிலும் மதத்தின் பெயரிலும்.. முஸ்லிம்களும் ஜனநாயக விரோதச் செயல்பாடுகளில் ஈடுபட்டனர் என்பதை மறுப்பதற்கு இல்லை. // தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட முஸ்லிம் பயங்கரவதாதத்திற்கு ஒரு சாம்பிள் இது   (thanks: kalachuvadu) மற்றும் முகநூல்.)   ///கீழே முஸ்லிம்கள் தமிழர்களை சிங்களத்துடன் சேர்ந்து செய்த தமிழின அழிப்புகள் பற்றிய ஒரு தொகுதி பட்டியல் உள்ளது.

தவறு இருபக்கமும் நிகழ்நதன. புலிகளினதை மட்டும் முன்னிறுத்தி செய்யும் விவாதம் கண்டிக்கத்தக்கது. தற்போது முஸ்லிம்களுக்கு அதனை குத்திக்காட்ட இதை பதிவு செய்யவில்லை.

அடுத்த இன அழிப்பு இலக்கு தாம்தான் என்பதை உணராமல் சிங்களத்துடன் துணைக்கு நின்றதன் விளைவை இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வருகிறார்கள். தூர நோக்கற்ற பார்வையும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறுகிய பார்வைகளுமே இதற்கு காரணம். இருபக்க பகையை மறந்து முஸ்லிம்கள் தமிழர்களுடன் கைகோர்க்க வேண்டிய தருணம் இது./// - முகநூலில்.. பகிர்ந்துகொள்ளப்பட்ட ஒரு கருத்து.