Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32123
  • Joined

  • Days Won

    264

nedukkalapoovan last won the day on November 23 2021

nedukkalapoovan had the most liked content!

4 Followers

About nedukkalapoovan

  • Birthday February 23

Contact Methods

  • Website URL
    http://www.tamilnet.com/
  • ICQ
    0

Profile Information

  • Gender
    Male
  • Location
    எனக்கே தெரியாது எங்கே என்று.
  • Interests
    nothing

Recent Profile Visitors

25480 profile views

nedukkalapoovan's Achievements

Grand Master

Grand Master (14/14)

  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • Week One Done

Recent Badges

6.4k

Reputation

  1. சிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)
  2. வெள்ளி விழா காணும் யாழ் இணையத்திற்கும் அதன் கருத்துக்களத்திற்கும் சவால்கள் தாண்டி நீண்டு நீடித்து நிலைக்க வாழ்த்துக்கள். யாழில் ஏ ஐயில் உரையாடும் காலமும் வர வேண்டும். இந்த இடத்தில் யாழின் ஸ்தாபகர் மோகன் அண்ணா.. யாழில் இயக்கத்தின் ஆரம்பத்தில் அவருக்கு துணை நின்ற சுரதா யாழ்வாணன் அண்ணா.. மற்றும் மறைந்த உறவுகளான சோழியன் அண்ணா.. சோம்பு அண்ணா உள்ளிட்ட யாழின் வளர்ச்சியோடு காலத்துக்கு காலம் கூடிப் பயணித்த பயணித்துக் கொண்டிருக்கும் சக யாழ் சொந்தங்களுக்கும் வாழ்த்துக்கள் உரித்தாகுக.!
  3. நாங்க எங்கும் அமைச்சர் பிரக்சிட்டை காரணியாக்கியுள்ளார் என்று எழுதவே இல்லை. பிரக்சிட்டை இங்கு முதன்மைப்படுத்தியது வேறொரு கருத்தாளர்.
  4. உங்கள் கருத்துப் புரிதலில் தவறுள்ளது. அமைச்சர் பிரக்சிட் பாதிப்புப்பற்றிச் சொல்லவில்லை. சொன்னது OBR chairman Richard Hughes. அமைச்சர் உக்ரைன் யுத்தத்தை முதன்மையாகவும்.. கோவிட் பான்டமிக்கை அடுத்தும் குறிப்பிட்டுள்ளார்.
  5. அமைச்சரே போரை தான் முதன்மையாகக் குறிப்பிட்டுள்ளார். இணைத்தவர் எல்லாக் கருத்தையும் தான் இணைத்துள்ளார். அமைச்சரின் முதல் காரணியே.. உக்ரைன் போர் தான்.
  6. நேற்றுவரை மகிந்தரோடு நின்று நாட்டைக் கொள்ளையடிச்சதும் இதே இனவாதி தான். இவருக்கு நாடு என்ற ஒன்றிருந்தால் தானே. அது இப்ப சீனாவுக்கும்.. ஹிந்தியாவுக்கும்.. ஐ எம் எவ்வுக்கும் அடமானம் வைக்கப்பட்டுவிட்டது தெரியாது போலும்.
  7. அவையே ஒத்துக்கொள்ளினம் இந்த பிச்சைக்கார நிலைக்கு உக்ரைன் யுத்தமும் பகுதிக்காரணம் என்று.. நீங்க என்னடான்னா. அப்ப வரியை வாங்காமல் விடலாமே..??! ஆக்களும் வேணும்.. சேவையும் வேணும்.. வரியும் வேணும். சும்மாவா இருக்க விடினம்.
  8. UK is poorer as a country, says Michael Gove. The UK is poorer than it would have been, partly due to the war in Ukraine, but also the pandemic, Levelling Up Secretary Michael Gove has admitted. But he said ministers were taking action on the soaring cost of living, including giving help on energy bills. The head of the independent forecaster, the Office for Budget Responsibility (OBR), said living standards were seeing their biggest squeeze on record. Richard Hughes said Brexit and poor productivity had also hurt growth. And he warned living standards would not return to pre-pandemic levels for at another five to six years. https://www.bbc.co.uk/news/business-your-money-65079792 உக்ரைன் யுத்தத்திற்கு அமெரிக்க வாலாகப் போய் வால்பிடிக்கப் போய் வளர்ந்த நாடுகளில் ஏழை நாடானது தான் மிச்சம். ரஷ்சியா கூட இவ்வளவு நெருக்கடிகளை சமாளிச்சுக் கொண்டு முன்னேறி வர. இவைக்கு அமெரிக்காவா கைகொடுக்கப் போகுது. இருக்க விட்ட பாவத்திற்கு உழைச்சு 40 சதவீதத்திற்கும் மேல் வரியாக் கட்டிக்கிட்டு இருக்கமே அது போதாதா. அதையும் உக்ரைன் யுத்தத்தில் கொட்டி கரியாக்குவதற்கும் நாமா பொறுப்பு. பொறுப்பற்ற கொள்கை வகுப்பாளர்களும்.. அவர்தம் எடுபிடி அரசியல்வாதிகளினதும் விளைவு.. பிரிட்டனை பிச்சைக்கார நாடாக்கியது தான்.
  9. தென்சீனக் கடல்.. தாய்வான்.. வடகொரியான்னு பூச்சாண்டி காட்டினாலும்.. சீனா அசையுற மாதிரி இல்லை. இப்ப ஐரோப்பாவும் பாதுகாப்பில்லாத இடமாப் போச்சு. ரஷ்சியா சோவியத் வீழ்ச்சியின் பின் முதல்முறையாக தனது அணு ஆயுதங்களை பெலரூசுக்குள் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
  10. முன்னர் ஆகாயத்தில் இருந்து செய்ததை இப்போ தரையில் நின்று கொண்டு செய்கிறது பெளத்த பேரினவாதம். உபயம்: அமெரிக்கா.. இஸ்ரேல்.. ஹிந்தியா.. சீனா.. ஐரோப்பா. இதில் மோடி என்பவர் புத்த சாசன விரிவாக்கத்திற்கு காசு வேற கொடுத்திருக்கிறார். அதன் பலன் கச்சதீவும் புத்தர் வந்த இடமாச்சுது.
  11. எங்களுக்கு அண்ணன்.. தலைவர். பொதுவாக உலகிற்கு தம்பி என்றே ஆரம்பத்தில் அறியப்பட்டிருந்தார். அதனால்.. தம்பியானார். யாழின் அகவை ஆக்கத்தில் அடைக்க முடியாது. ஏனெனில் இது ஏலவே பிரசுரிக்கப்பட்ட ஆக்கம். கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றி.
  12. பிரிட்டன் தெருவில் ஒற்றை மரணம்..! ஊடகங்கள் விம்புகின்றன ஊர்கள் அழுகின்றன..!! கொன்றவன் சரணடைய தயாராய் நின்ற போதும்.. சுட்டு வீழ்த்தி வீரம் காட்டி பிடித்து நீதி கேட்கிறது… ஊரையே கொல்ல கொள்கை வகுக்கும் உலகம்..! அடுத்தவன் நிலத்தில் குண்டுகள் கொட்டி பிடித்து அடித்து அழித்து… வளர்த்த பகை தேடி வந்து உயிர் எடுத்தால் அது… பயங்கரவாதம்..! இருந்தும்… மானுட உலகில் கேள்விகள் ஆராய்ச்சிகள் முளைக்கும்..! அதுவே…. மனிதனை இயந்திரம் கொன்றால் “Just war”..! நோபலின் நாயகன் சமாதானப் புறா ஒபாமாவின் தாரக மந்திரம் இது..! ஏவி விட்டு தூர இருந்து கொன்று விட்டால் இல்லை இல்லை.. ஊரையே அழித்திட்டால் சாட்சியும் இல்லை குற்றவாளியும் இல்லை அழுவதற்கும் ஆளில்லை ஒப்பாரி வைக்க… ஊடகங்களும் தயார் இல்லை..! அதுமட்டுமா றோனுக்கு என்ன சனநாயகம்..?! மனித உரிமைகள்..??! இயந்திரத்திற்கு என்ன சிறைச்சாலை..???! நீதி கேள்வி கேட்கும்..! ஒப்பற்ற கண்டுபிடிப்பு அணு குண்டால் மனிதனை அழித்த பரம்பரை… இன்று றோன்களால் மிச்சம் மீதி தொடர்கிறது..! இதுவரை… அழித்த உயிர்களின் கணக்கு மட்டும் பல ஆயிரங்கள்..! “குற்றவாளி” அமெரிக்காவின் சந்தேகம் ஒன்றே போதும் ஓர் உயிர் எடுக்க.. இத்தனை ஆயிரம் சாவுகளும் அவ்வழி வந்தவையே.! பச்சிளம் குழந்தை முதல் பள்ளிப் பாலகர் வரை அதில் அடங்கும்..! இவை கண்டு… ஐநாவும் மூச்சின்றி கிடக்கும் யுனிசெப்பும் வாய்மூடிக் கிடக்கும்..! நீதிக்கும் அங்கு வேலை.. பூச்சியம்..! நாளை வாசிங்கடனில் லிங்கனின் உரையாம்… றேகனின் பரம்பரை றோனால் உலகை ஆள்வதே றோனாயகம்..! அதுவே அமெரிக்காவின் 21ம் நூற்றாண்டின் சனநாயகம்..! இதுதான் தலைப்பாம்..! வாக்குச் சீட்டும் போறடிச்சுப் போச்சு றோனால் அடிச்சு சாவுகளை எண்ணுவதே மேற்குலகின் தர்மமாய் ஆச்சு..! நாளை இது பஞ்சசீலம் வரை படர்ந்து விடும்..! தம்பி பிரபாவும் தமிழர் உயிர் எடுக்க வந்த இஸ்ரேலின் றோன்களுக்கு அடிக்கடி வன்னியில் ஆப்படிச்சதுண்டு..! அதனாலும்.. அவனைக் காலி செய்யும் திட்டம் றோனாயகத்திற்கு வந்திருக்கும்..! (2013 இல் எழுதியது.. மீள்பிரசுரம்.. ஆண்டுகள் ஓடினாலும்.. வல்.. ஆதிக்க சக்திகளின் எண்ணங்கள் மாறுவதில்லை.) https://kuruvikal.wordpress.com/2013/05/24/நாளை-வாஷிங்டனில்-லிங்கனி/
  13. நயினாதீவு எப்படி சைவர்களிடம் இருந்து பறிபோச்சோ.. அப்படி எனி இது அந்தோனியார்களிடம் இருந்து பறிபோயிடும். நாம சிங்களத்துக்கு முதலீடு செய்து உழைச்சுக் கொடுப்பம். அவன் போட்டு எங்களை மிதிக்கட்டும்.
  14. காபனீரொக்சைட்டை அளவுக்கு அதிகம் குறைத்தாலும் தீமை.. பூமி குளிரில் உறைய ஆரம்பித்துவிடும். எல்லாம் ஒரு சமநிலைக்குள் இருக்கனும். மனிதர்களின் பயன்பாட்டால்.. வெளியேறும்.. நிகர வெப்பமாதல் வாயுக்கள் எல்லாமே கட்டுப்படுத்தப்பட வேண்டும். காபனீரொக்சைட் மட்டுமல்ல.. மீதேன்.. உட்பட. குறிப்பாக மாட்டுப்பண்ணைகளில் இருந்து அதிக மீதேன் வெளியேறுகிறது. ஏன் நீராவி கூட.. வெப்பமாதல் வாயு தான். ஆனால் அது இலகுவாக இயற்கைச் சுழற்றிச்சிக்குள் சிக்கி விடுகிறது.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.