ஜெனீவாவில் கோரிக்கைகளை முன்வைக்க யாழ்.மக்களுக்கு வாய்ப்பு ஜெனீவா மனித உரிமை பேரவையில் முன்வைக்க வேண்டிய கோரிக்கைகளை எதிர்வரும் 13ஆம் திகதி வரை மக்கள் கையளிக்க முடியுமென வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். நேற்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே சுரேன் ராகவன் இதனை குறிப்பிட்டுள்ளார். குறித்த கோரிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் எழுத்து மூலமாகவோ அல்லது நேரடியாகவோ மக்கள் வந்து வழங்க முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு மக்களின