Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Paanch

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. எங்கள் சிறுவயதில் இடிஓசை கேட்டுப் பயந்தால் “அர்சுனா அபயம்” என்று சொன்னால் இடி விழாது என்றுசொல்லி அம்மா எங்கள் பயத்தைப் போக்குவார். இன்று அர்ச்சுனா அபயம் என்று சொன்னால் வானமே இடிந்து விழும்போல் தெரிகிறது.😳
  2. நான் நேரில் பார்த்தவன். ஆவரங்கால் கூட்டத்தில் “போராட்டம் வெற்றிபெற இளைஞர்களே இந்தப் படிவத்தில் கையெழுத்திட்டு எங்களுடன் இணையுங்கள்” என்றார். நாங்கள் தெல்லிப்பளை சேர்ந்த பல இளைஞர்களும் கையெழுத்திட்டோம். இதுபற்றி அறிந்த யாழ் உறவுகளும் இங்கு இருக்கலாம். பின்பு எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. சிறிது காலத்தில் கட்டுவனில் அமிர்தலிங்கம் தலைமையில் ஒரு கூட்டம் நடந்தது, அதில் வீரவசனங்கள் எல்லாம் பேசினார். நாங்கள் நண்பர்கள், சொந்தங்கள், பந்தங்கள் பலர் போயிருந்தோம். நண்பர்களில் ஒருவன் “ஆவரங்கால் கையெழுத்து என்னாயிற்று” என்று கேட்டான். அவர் மேடையிலே தடுமாற்றம் கொண்டது தெரிந்தது. மூன்று தடியன்கள் எங்களை நோக்கி வந்தார்கள். “தம்பியவை இங்கே நிற்கவேண்டாம் போய்விடுங்கள்” என்று மிரட்டினார்கள். அங்கு நின்ற சிலரும் அவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கவே நாங்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறினோம். நான் யேர்மனி நாட்டிற்கு வந்த சிலகாலத்தில் கைல்புறோன் என்ற நகரில் அமிர்தலிங்கம் வந்து ஒரு கூட்டம் நடத்தினார். அங்கு பல்வேறு தமிழ் போராட்ட அமைப்புத் தலைவர்களுக்கு ஆதரவானவர்களும் கூடியிருந்தார்கள். “நீங்கள் ஏன் பிரபாகரன் போராளிகளுக்கு ஆதரவு கொடுக்கவில்லை” என்று வெளிப்படையாகக் கேட்டேன். அவர் ஏதும் சொல்லவில்லை, என்னை ஏளனமாகப் பார்த்தார். கூட்டத்தில் இருந்த சிலரும் என்னை ஏளனமாகப் பார்த்தார்கள்.
  3. அனைவருக்கும் நன்றி! நன்றி! நன்றி!” என்று விஜய் தெரிவித்துள்ளார். மக்களின் ஆதரவில் மிகுந்த அவதானம் தேவை முதல்வர் விஜய் அவர்களே! “நந்த வனத்திலோர் ஆண்டி” பாடல் நினைவில் வருகிறது!😲
  4. “பல எலிகள் சேர்ந்தால் புத்தெடுக்காது” இந்தப் பழமொழியை இவர்கள் படித்ததில்லையா? ஒரு செயலைச் செய்வதற்குப் பல தொழிலாளர்கள் இருந்தாலும், அவர்களை வழிநடத்த ஒரு தகுதியான தலைமை இல்லை என்றால் அந்தச் செயல் தோல்வியில் முடியும்.
  5. இன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வீட்டு வேலைகளிலும், பெண்கள் பொருளாதார ரீதியாகவும் ஒருவருக்கொருவர் சமமாகப் பங்களித்து வருகின்றனர். தலைமத்துவம் இருவரிடமும் உள்ளது.🙋‍♂️🙋‍♀️ படித்ததில் பிடித்தது. ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான். எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா...? அல்லது அப்பாவா...? அதற்குத் தாய், இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கஷ்டமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்துகொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீ பிறந்த பின்னர் தன் விருப்பு வெறுப்புகளை மாற்றி உங்களுக்காக உங்கள் நலனுக்காக, உணவு, உடை, மருந்து மற்றும் உங்கள் கல்விக்கு என பல தேவைகளுக்காக சம்பாதித்தார். நீங்களும் நானும் இந்த குடும்பமும் உன் தந்தையின் வியர்வையில் உருவானவர்கள். மகன் இதே கேள்வியை தன் தந்தையிடம் கேட்டான். அவரின் பதில் வேறு மாதிரி இருந்தது. உங்கள் தாயார் எவ்வளவு தியாகம் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. உன்னை வளர்ப்பதற்காக அவள் எவ்வளவு கஷ்டப்பட்டாள் என்றுகூட எனக்குத் தெரியவில்லை. அவளுடைய பொறுமையும் விடாமுயற்சியும் தான் இந்த குடும்பத்தை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தது. என்னுடைய வருமானத்திற்கு ஏற்ப செலவுகளை செய்தாள். தனக்கு தேவையான எதையும் அவள் இதுவரை என்னிடம் கேட்டதில்லை. உங்களுக்காக தான் என்னுடன் சண்டையிட்டிருக்கிறாள். அவளது தியாகத்தை விட நான் ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்றார். மகன் தனது சகோதரர்களிடம் சொன்னான். நம்மைவிட இந்த உலகில் அதிர்ஷ்டசாலிகள் யாரும் இருக்க முடியாது. தந்தையின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தாயும், தாயின் தியாகத்தைப் புரிந்துகொள்ளும் தந்தையும் இருக்கும் ஒவ்வொரு குடும்பமும் சொர்க்கம்தான். பெற்றோர்கள் இருவர் அல்ல, ஒரு கிரீடத்தில் இருக்கும் இரண்டு வைரக்கற்கள். அவர்களை நம்முடனேயே வைத்து அவர்களது ஆயுட்காலம் முழுவதும் பாதுகாப்போம்.
  6. இலங்கையில் 1939ல் உருவான மாணவர்களின் கட்டாயக் கல்வி வயது எல்லை 5 வயது முதல் 16 வயது வரை என்பது சட்டபூர்வமாக உள்ளபோது எப்படி 2 இலட்சத்து 65 ஆயிரம் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து விலக முடிந்தது? விலகிய மாணவர்கள் 16 வயதிற்கு மேற்பட்டவர்களா??.
  7. நீண்ட காலமல்ல. இலங்கையைச் சிங்களத் தீவாக மாற்றும் எண்ணம் கொண்ட சிங்கள அரசின் தலைவியாக வந்த சிறீமாவோவும், இலங்கையை தங்களுடைய ஆதிக்கத்திற்குள் கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட இந்திய அரசின் தலைவியாக வந்த இந்திராகாந்தியும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பின்புதான் பிரச்சனைகள் உருவானது. அதுவரையில் இந்தியர்களும், இலங்கையரகளும் கச்சதீவில் ஒன்றுகூடி கோவில் திருவிழா கொண்டாடுவதும், அதனிடையே பொருட்களைப் பண்டமாற்றுச் செய்து மகிழ்வதும் இனிய நிகழ்வாக இருந்தது. பிறர் வாழ்விற்கோ, தன்வாழ்விற்கோ கேடுவிளைவிக்காது செய்யும் சில செயற்பாடுகளும் மகிழ்வு தரும்.
  8. அப்போ அரைச்சதமும் பெறுமதியாக இருந்தது. கடையில் கொடுத்து இனிப்பு வாங்கிச் சுவைத்த ஆனந்தம். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்வெளியிட்ட 1/2 சதம் முன் பக்கம்: முடியுடன் விக்டோரியா இராணி. பின் பக்கம்: பெறுமதி, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனபெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
  9. இலங்கை சுதந்திரமடைந்து பண்டாரநாயக்க ஆட்சிக்கு வரும்வரையில் ரயில்வே திணைக்களம் நட்டமின்றி இயங்கிவந்தது. யாழ் கொழும்பு சேவையே அதற்குப் பெருமளவு வருமானம் ஈட்டிக் கொடுத்தது.
  10. செய்தி மனதுக்குக் கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. ஆனாலும் பூரணநம்பிக்கை வரவில்லை, உண்மையில் இலங்கை அரசில் மாற்றம் வந்துள்ளதா?.
  11. நீங்கள் எந்தத் தமிழ்மக்களைச் சொல்கிறீர்கள்?. தமிழ்நாடு: இந்தியாவின் தெற்கே உள்ள தமிழ்நாட்டில் பெரும்பான்மையான தமிழர்கள் வாழ்கிறார்கள். இலங்கை: இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் பூர்வீகத் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றனர். உலகளாவிய புலம்பெயர் வாழ்வு: மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐக்கிய நாடுகள், பிரான்ஸ், ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் லட்சக்கணக்கான தமிழர்கள் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் வணிகம் நிமித்தம் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சிறீலங்கா குடியுரிமை கொண்டவர்கள், வாக்களிக்கும் தகுதியும் உள்ளவர்கள் உள்ளனர்.
  12. மதகுருமார் அரசியலில் ஈடுபடுவதை முற்றாகத் தடுக்க வேண்டும். இது நடந்தாலே நாடு ஓரளவேனும் முன்னேற்றம் அடைவதைக் காணலாம்.
  13. இன்று தெல்லிப்பளையில் உள்ள உறவினர் ஒருவருடன் தொடர்புகொண்டு தந்தை செல்வா அவர்களின் தூபி அழிப்பைப்பற்றிக் கேட்டபோது அவர் கூறியதும் நம்பக்கூடியதாக உள்ளது. தூபியானது பல விலையுயர்ந்த உலோகங்களைக் கொண்டும் உருவாக்கப்பட்டது, பொன்னின் விலை ஏறியதுபோல் இரும்பு, செம்பு போன்ற பலஉலோகங்களின் விலைகளும் ஏறியுள்ளன, அவற்றை விற்றால் அதிக பணமும் கிடைக்கிறதாம், ஆகவேதான் தந்தை செல்வா அவர்களின் தூபியானது, அதிலுள்ள விலையுயர்ந்த உலோகங்களை எடுப்பதற்காகக் கொள்ளையர்களால் உடைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் தெரிவித்தார்.
  14. தலைவரின் உறவே! நலம்பெற்றுவர வேண்டுகிறேன்!!.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.