Everything posted by goshan_che
-
சில ஐரோப்பிய செப்டம்பர் மாத கச்சா எண்ணெய் விநியோகத்தை அராம்கோ ஒத்திவைத்தது
சீன வரவுகாளால் டெஸ்லா விலை நன்றாக குறைத்துள்ளார்கள். தாக்குதல் எண்டால் நேரடியாக அல்ல - நிலைகுலைய செய்யும் மறைமுக தாக்குதல்கள்.
-
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
யாழ்களத்தில் கருத்து பல்லினத்துவம் ஆரோக்கியமாக இருக்கிறது என நினைப்பார்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
இதில் எதிலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் இந்த காரணிகள் எதுவும்…. “எனவே ஒன்றுபட்டு இலங்கையராக வாழுங்கள்” என்ற முடிவுக்கு சம்பந்தமில்லாதவை. நான் மேலே பட்டியல் இட்ட பிரச்சனைகள் இல்லாது போனால், யாரும் சொல்லாமலே தமிழர்கள் தமிழராக உணர்வார்கள். இல்லை என்றால் அவர்களுக்கு தம் அரசியலை வேறாக்கி நிலை நிறூதுவதை தவிர வேறு வழியில்லை.
-
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
இல்லை…இருதரப்பிலும் பல வருட கணக்குகளை காட்டி பகையை வளர்க்கும் போக்கை இடித்துரைக்க, நேரம் காலம் தேவையில்லை என நான் நினைக்கிறேன். இது யாழில் முஸ்லிம்கள் மீது வன்மத்தை கக்குவோருக்கும் பொருந்தும்.
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
ரணிலை மகிந்தவும், மைத்திரியும், இப்போ ஜேவிபியும் வெட்டி ஆடினார்கள். ரணில் அப்படி ஒன்றும் வெல்ல முடியாத இராஜதந்திரி அல்ல. எமக்கு நாம் அப்படி செய்வோம் என்ற தன்னம்பிக்கை இருக்கவில்லை. ஏன் என்றால் நாம் ஒருபோதும் இராஜதந்திரத்தால் சாதிக்கலாம் என நம்பவில்லை. ரணிலை பார்த்து அதீதமாக பயந்து மகிந்தவிடம் மாட்டி கொண்டோம்.
-
தேர்தல் களம் காணும் சக்ஸனி - வெல்லுமா AfD
ஆம்…மட்டற்ற குடியேற்றத்தை நிச்சயம் கட்டுப்படுத்த்வே வேண்டும். மேர்ஸ்சுக்கு கொஞ்சம் அவகாசம் கொடுத்தால் செய்வார் என் எண்ணுகிறேன்.
-
சில ஐரோப்பிய செப்டம்பர் மாத கச்சா எண்ணெய் விநியோகத்தை அராம்கோ ஒத்திவைத்தது
விரைவில் ரஸ்யா நேட்டோ நாடு ஒண்டை தாக்கும் என நினைக்கிறேன். இன்னும் ஒரு இருபது வருடங்களில் மூன்றாம் உலக போருக்கான உடனடி காரணம், நீண்டகால காரணம் என பள்ளி மாணவர்கள் படிக்க போகும் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கிறது என் உள்ளுணர்வு. இங்கே டீசல் லீட்டர் £1.98
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
இதில் இந்தியாவின் வகிபாகம் மறுக்க முடியாதது. ஆனால் இதில் இந்தியாவின் வேலை நீங்கள் சொன்னது போல் வெளி அளுத்தங்களில் இருந்து கவர் எடுத்ததுதான். இதை இப்படி செய்தே தீருவது என்ற கங்கணம், முதல் கோடு ராஜபக்ச சகோதரர்கள் போட்டது. நாடாயணனும், மேனனும் இந்தியா அதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவதை உறுதி செய்தார்கள்.
-
தேர்தல் களம் காணும் சக்ஸனி - வெல்லுமா AfD
பால்டிக் கடலை அண்டிய முன்னாள் கிழக்கு ஜேர்மனிய மாநிலமான மென்லென்பேர்க் மேற்கு பொமரேனியாவில் AfD கட்சி 38% எடுத்துள்ளதாம். இங்கே மத்தி-இடதுசாரி SPD 36% எடுதுள்ளதாம். தலைநகரும் ஜேர்மனியின் மாநிலங்களில் ஒன்றுமான பேர்லினில் AfD 16% மேர்சின் CDU 20%, இடதுசாரி Di Linke 26%. இரெண்டு மாநிலங்களிலும் முறையே 62%, 84% வாக்காளர் ரஸ்ய சார்பு, இனவாத கட்சியான AfD யை ஆதரிக்கவில்லை. இது ஜேர்மன் மக்களில், குறைந்த பட்சம் இந்த மாநில மக்களாவது, மிக பெரும்பான்னையானோர் ரஸ்ய ஆதரவு, அதீத குடியேற்றவாதிகள் வெறுப்பு அரசியலை ஏற்கவில்லை என காட்டி நிற்கிறது. AfD வாக்கு வீதம் அதிகரித்தகை, CDU மரண அடிவாங்குவதால் மேர்ஸ் எதிர்காலம் ஊசல் ஆடுவது கவலையான விடயங்கள். ஆனால் பெரும்பாலான மக்கள், இந்த மாநிலங்களிலாவது நவநாஜி அரசியலை ஏற்கவில்லை. பிகு எமது ஊரில் புசு புசு என இருக்கும் பொமரேனியன் நாய்குட்டி இனம், பொமரேபியாவின் இயற்கையான நாய் இனம்.
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
அப்படியே ஆயினும் 1991 - 2008 வரை இந்தியாவில் அதிகம் ஆட்சியில் காங்கிரஸ்தான் இருந்தது. அவர்களுக்கு சொன்னதை செய்து முடிக்கும் ஜனாதிபதியாக கூட மகிந்த மட்டுமே இருந்தார். பிகு நான் இது இந்தியா சொல்லி மகிந்த செய்தது என நினைக்கவில்லை. மகிந்த இப்படித்தான் இதை முடிக்கப்போகிறேன் - உங்கள் அசையாத ஆதரவு இல்லாமல் இது முடியாது, எனவே உங்கள் கவர் தேவை என கேட்க, இந்தியா ஓம்பட்டு, கவரும் கொடுத்தது என்றே நான் நினைக்கிறேன்.
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
ரணில் மெதுவாக புலிகளை பலவீனமாக்கினார் என்பது உண்மையே… ஆனால் இறுதிப்போர், முள்ளிவாய்க்கால் போல் ஒரு பெரும் அனர்த்தத்தை செய்து வெற்றியை அடைய தயாராக இருந்த ஒரே தலைமை மகிந்தவே. ஜே ஆர், பிரேமதாசா, சந்திரிகா, ரணில் எல்லோரும் ஒரு அளவுக்கு மேல் மேற்கின் அழுத்தத்துக்கு பணிந்து போரை நிறுத்தி இருக்க கூடும். ஆனால் மேற்கு, இந்தியா, ரஸ்யா, சீனா என அனைவரையும் வாயை அடைத்து புலிகளை அழிப்பதில் இப்போ நெத்தன்யாகு செயல்படுவது போல் மகிந்த செயல்பட்டார். மகிந்த ஜனாதிபதியாகி இராவிடில்… புலிகளும், தலைவரும் கூட இன்றும் இருந்திருப்பார்கள். தலைவர் இயற்கையாக இறந்தால் கூட அவர் கைகாட்டிய ஒரு தலைமை, புலிகளுக்கு இருந்திருக்கும். புலிகளை வேரோடும், வேரடி மண்ணோடும் மகிந்தவை தவிர வேறு எந்த சிங்கள தலைவரும் இப்படி அழித்திருப்பார்கள் என நான் நினைக்கவில்லை.
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
இந்த ரணிலிலின் இராஜதந்திரத்தை எதிர்கொள்ள முடியாமல், மகிந்த மொக்கன் என நினைத்து செயல்பட்டார். ஆனால் மகிந்த தான் அப்படி இல்லை என காட்டி விட்டார். ஒரு போதும் எதிரியை குறைத்து மதிப்பிடல் ஆகாது. என்பது இதைத்தான் போலும்.
-
பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்!
நான் உட்பட பிரபல வைத்தியர்கள் எல்லோரும் கருத்து சொல்லி விட்டோம். இனி வழக்கை மரண விசாரணை இல்லாமல் முடிக்கலாம் என நினைக்கிறேன்😂.
-
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
யாழில் ஒவ்வொரு முறையும் இலங்கை முஸ்லிம்கள் மீது வன்மத்தை கக்குவோர், இந்த விடயத்தில் அவர்கள் எடுக்கும் முயற்சியை எழுத முன் ஒரு தரம் நினைத்து பார்க்க வேண்டும்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
எங்கள் இருவரின் வங்கி இருப்பு கணிசமாக கூடி இருக்கும் என்பதை நீங்கள் ஊகித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
“இலங்கை தேசியத்துள் கரைதல்” தான் ஒருவரது நிலைப்பாடு எனில் - அதை அவர் யாழிலோ வேறு வெளியிலோ சொல்ல, முன்வைக்க கூடியதாக இருக்க வேண்டும். அதுவும் மக்கள் நிம்மதியாக வாழ ஒரு வழி என ஒருவர் மனதார நம்பினால் - அதை அவர் முன்வைக்க வேண்டும், எதிர்ப்போர் கேள்வி கேட்க வேண்டும். என்னிடம் மன்னிப்பு கேட்க ஒரு காரணமும் இல்லை ஐலண்ட். நான் என்ன ஈழத் தமிழ் தேசியத்தின் ஏக உரிமையாளரா. அப்படி யாரும் இருந்தால் கூட கேட்கத்தேவையில்லை. உங்கள் கருத்து நிலை இதுதானா என நான் பலதடவை வினவியது உண்மைதான். உங்கள் கருத்துக்கள் அப்படி ஒரு மயக்கத்தை எனக்கு சில சமயம் தந்தமையால். ஆனால் அருமையான முற்போக்குவாதியான யாழின் பொக்கிசங்களில் ஒன்றான நீங்கள், அப்படியான நிலைப்பாட்டில் இருக்க கூடாது என் பிரார்தனையாக இருந்தது. அப்படி இல்லை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
-
மத்திய கிழக்கில் திடீரென அதிகரித்த பதற்றம் (உறுதிபடுத்த படாத செய்தி)
அமெரிக விமானங்களின் பறப்பு அதிக்ரித்துள்ளதாக… டிரம்ப் - காம்ப் டேவிட் மீட்டிங்கை விரைந்து முடித்து வெள்ளை மாளிகை திரும்பியதாக… நெதன்யாகு - டெக்சஸ் பயணத்தை இடை நிறுத்தி, நியோர்க்கில் இருந்து டெல் அவிவ் திரும்புவதாக… முதலில் இஸ்ரேல், பின் சவுதி, பின் மத்திய கிழக்கு எங்கினும் அமரிக்க பிரசைகளுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக… பிரிதானிய தளம் ஒன்றில் இருந்து போர் விமானம் புறப்பட்டதாக… டுவிட்டர் கணக்குகள் சொல்கிறன.
-
நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது – ரணில்
மொனே, யார் மொனே உங்கள இப்ப கூப்பிட்ட? 😂 நாடு கவிழ்ந்தாவது தான் திரும்ப வரமுடியுமா எண்ட நப்பாசை😂.
-
தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிராகரித்த றிஷாட்!
அந்த வேலைக்கார பிள்ளையை கொடுமை செய்த வழக்கில் தப்பியது போல் இதிலும் தப்புவாரோ?
-
போர்ச்சூழலுக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இன்று பொதுத் தேர்தல் ஆரம்பம்
ரஸ்யாவில் கருத்து சுதந்திரம் உண்டு - புட்டினுக்கு ஆதரவாக பேச மட்டும். ஜேர்மனியில் கருத்து சுதந்திரம் உண்டு - ஜேர்மனியின் அரசியல் சட்டத்தை மீறாத வகை. உங்களை போல ஒரு குடியேறி, மட்டும் இல்லை, ஒரு ரஸ்யனே, நீங்கள் எழுதுவது போல் இப்படி நாட்டின் தலைவர்களை விமர்சித்தால் என்ன நடக்கும் என்பதற்கு, புசி ரயட் பாடல் குழுவும், அலெக்சேய் நவால்நிக்கும் நடந்ததுதான் நடக்கும். ஜேர்மனியில் இருக்கும் அரசியல் கருத்து சுதந்திரம் = ரஸ்யாவில் இருக்கும் அரசியல் கருத்து சுதந்திரம் என நீங்கள் எழுதும் போதுதான், குமாரசாமி வரட்டு குதர்கம் கதைக்கிறார் என என் போன்றோர் எழுதும்படி ஆகிறது. ஒரு நடைமுறை அரசை ஸ்தாபித்து, பொலிஸ், நீதிமன்றம் என அரசின் அலகுகள் பலதை ஸ்தாபித்த புலிகள்.. அந்த நடைமுறை அரசுக்கு தேர்தல் மூலம் தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்றம் ஏன் நிறுவவில்லை? அதே காரணம்தான் இங்கேயும். பிகு பாராளுமன்ற ஜனநாயகத்தின் தாய் என பீத்தி கொள்ளும் பிரித்தானியாவில் உலக போர் 1,2 நடந்த காலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு என்ன நடந்தது என தேடிபார்க்கவும்.
-
போர்ச்சூழலுக்கு மத்தியிலும் ரஷ்யாவில் இன்று பொதுத் தேர்தல் ஆரம்பம்
ஆனால் போரில் எல்லாமும் இழந்த மக்களிடம் இலாபம் பார்க்கும் ஓநாய்கள் புஷ்டியாகத்தான் இருக்கிறார்கள்😂.
-
கிரீன்லாந்து பாதுகாப்பு தொடர்பில் அமெரிக்கா – டென்மார்க் இடையே புதிய ஒப்பந்தம்!
1952 இல் இருந்தே இருக்கும் ஒப்பந்ததத்தை டிங்கரிங் பார்த்து, ஈயம் பூச்சி, விசர் தம்பர் புதிது போல் நாடகாடுகிறார். எல்லாம் நவெம்பர் எலக்சனை நினைத்து. அமரிக்கன் மாகா மொக்கராசுகள் இதையும் நம்பகூடும்.
-
கல்கிசை கடற்கரையோரத்தில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 27 ஹோட்டல்கள் இருவாரத்துக்குள் அகற்றப்படும் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்
ஒரு கதை உள்ளது. பெயர்கள் மாற்றி யாழில் எழுதவேண்டும்.
-
பொலிஸார் மறித்ததும் நிலத்தில் விழுந்து உயிரிழந்த இளைஞன்!
ம்ம்ம்… விளையாட்டு மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கும் போது மயங்கி விழுந்த இளையோரே உள்ளனரே?
-
விண்வெளிப் போர் வெடித்தால் ரஷ்யாவே வெல்லும் என்று நிபுணர் கணிப்பு - என்ன காரணம்?
இதென்ன கதை? பிச்சைகாரனிடம் கார் இல்லை எனவே டயர் விலை ஏற்றம் வந்தால் அவனே குறைந்த பாதிப்படைவான் என்பது போல் உள்ளது இந்த கூற்று😂.