Everything posted by nochchi
-
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஈரான் உடன்படிக்கை வெள்ளிக்கிழமை கைச்சாத்தாகிறது.
நன்றி, மேற்கிடம், அமெரிக்க வாலாக இருந்து மத்திய கிழக்கை அச்சுறுத்திவரும் இஸ்ரேலிடமும், ஏனைய பிறநாடுகளிடமும் அணுவாயுதம் இருக்கலாமென்றால், முல்லாக்களும் தமது பாதுகாப்பிற்காக அணுவாயுதத்தை வைத்திருப்பதில் நியாமுள்ளதுதானே. அதேவேளை ஈரான் மீது ஒரு மூலோபாய அணுவாயுதத் தாக்குதலை மேற்கொள்வது குறித்துப் பரிசீலிக்கப்பட்டதாகவும் ஒரு காணொனி உரையாடல் இடம்பெற்றது. மதவாத அடிப்படைவாதிகளை வளர்த்துவிட்டதே அமெரிக்காதானே. இராக்கை அழிக்க ஈரானையும், மத்திய கிழக்கில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவும், மேலாதிக்கத்தை எதிர்ப்போரை அழிக்கவும் காலத்துக்குக் காலம் அமெரிக்காவின்(அல்கைடா முதல் ஐ.எஸ்.ஐ.எஸ்) நரிவேலைகள் உலகறிந்ததே. ஆனால், இன்று அமெரிக்காவுக்கு ஈரானூடாக இஸ்ரேலால் வலிந்து இறுக்கப்பட்ட ஆப்பால் நெளிந்துகொண்டிருக்கிறது. மத்திய கிழக்கின் வலுச்சமநிலையில் ஒரு மாற்றம் நிகழத்தொடங்கியுள்ளது.; அது நிலைக்குமா அல்லது குலையுமா என்பதை ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்து, அதனைத் தொடர்ந்துவரும் 60 நாட்களுமே தீர்மானிக்கும். 60 நாட்களில் ஈரானின் உள்ளே கொந்தளிப்புகளை ஏற்படுத்தி மக்களைத் தூண்டிவிட்டு ஒரு ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தவே அமெரிக்க-இஸ்ரேல் கூட்டு முயற்சிக்கும். அதற்கான தயாரிப்புகளைச் செய்யவே கால அவகாசத்தைத் தேடுகிறது. அதுவரை தற்போதை ஆட்சியாளர் நிலைத்துத் தமது நிலைப்பாட்டில் இறுக்கமாக நீடித்தால் அப்போது தாமொரு வெற்றியைப் பெற அணுவாயுதத்தை அமெரிக்கா நாடும். தொழில்நுட்ப வளர்சியால் முன்னைய தாக்குதல் உத்திகள் படுதோல்வியைக் கண்டுள்ளது. அதேவேளை அமெரிக்காவின் ஆயுதச் சந்தையும் கேள்விக்குள்ளாகி வருவதோடு, பொருண்மிய வீழ்ச்சி மற்றும் சரிந்துவரும் டம்பரின் செல்வாக்கு இவற்றைத் தூக்கி நிறுத்த சமாதான வழியிலோ அல்லது அணுவாயுத வழியிலோ மத்திய கிழக்கில் ஒரு மூலோபாய வெற்றியைப் பெறவே முயற்சிக்கும். ஆனால், வளைகுடா நாடுகளும் உலகும் இனிப்போருக்குத் தயாரா? நீடித்த போரைத் தடுப்பதற்கு அமெரிக்கா தேடப்போவது அணுவாயுதத்தையே. அதனை முல்லாக்கள் தடுக்க அவர்களும் அணுவாயுதத்தை அடைய முயற்சிக்கிறார்கள். அல்லது தயாரித்து விட்டார்களோ யாரறிவார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி அப்ப ஜப்பானிலை வெடிச்ச அணுகுண்டு தானாத்தோன்றித் தானா வெடிச்சதோ? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஈரான் உடன்படிக்கை வெள்ளிக்கிழமை கைச்சாத்தாகிறது.
யூதர்கள் இனவழிப்பை ஆதரிப்பதன் ஊடாகத் தம்மீதான இனவழிப்பை நியாயப்படுத்தும் தகமையை இழந்தவிட்டார்கள். இவர்கள் இரக்கத்திற்குரியோரல்ல அரக்க மனம் படைத்தோர் என்பதை 2023 முதல் 50000-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது காயமடைந்தோ உள்ளதாகக் கூறப்படுகிறது.உலகில் மிகமோசமான கொலைவெறிபிடித்த நாடாக, கிட்லரையே மிஞ்சும் வகையில் யூத அரசு செயற்படுவதை ஏனிந்த உலகம் இன்னும் வேடிக்கை பார்க்கிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஈரான் உடன்படிக்கை வெள்ளிக்கிழமை கைச்சாத்தாகிறது.
ரஞ்சித் அவர்களே, நீங்கள் முல்லாக்களிடம் அணு ஆயுதம் வந்துவிடக்கூடாது என்றால் இஸ்ரேல் வைத்திருக்கலாமா? இஸ்ரேல் அவளவு நீதியும் சாந்தமும் கொண்ட நாடா? இன்றுவரை வகைதொகையின்றி இனவழிப்பையும் நிலப்பறிப்பையும் செய்து அகண்ட இஸ்ரேலை அமைக்கும் நோக்கோடு அரச பயங்கரவாதத்தை விதைத்து வரும் நாட்டினது போக்கினால் உலக பொருண்மியம் முதல் உலக ஒழுங்குவரை மாற்றத்திற்குள்ளாகி வருகிறது. ஈரான் மீதான வலிந்த தாக்குதலைத் தொடங்கி இன்று உலகின் வளர்ந்துவரும் நாடுகளை மீண்டும் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளிவிட்டுள்ளதோடு மிகமோசமான உலகின் பலச்சமநிலை மாற்றத்திற்கும் வழிகோலியுள்ளதை எப்படி நோக்குகிறீர்கள்? லெபனான் மீதான தாக்குதலும் ஆக்கிரமிப்பும் சரியானதா? உலகின் அனைத்து நாடுகளும் அணுவாயுதங்களைக் கைவிடுவதோடு, புதிய அணுவாயுதங்களைத் தயாரிப்பதையும் கைவிட்டால் உலகிலே அச்சுறுத்தலுக்கு வாய்ப்பில்லையல்லவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி Map Card of Disappearing Palestine – AUPHR.org 1946 முதல் தற்போதுவரையான பலஸ்தீனத்தின் வரைபடம்.
-
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஈரான் உடன்படிக்கை வெள்ளிக்கிழமை கைச்சாத்தாகிறது.
வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்க-ஈரான் உடன்பாடு எட்டப்படுமாயின், ஈரான் - அமெரிக்க தரப்புகளிடையே அமைதி நிலவலாம். ஆனால், குழந்தைகள் முதல் வயதுவேறுபாடின்றிக் கொலைவெறியாட்டம்போடும் இஸ்ரேலியக் கொலைவெறியனான நெட்டன் ஓய்வதற்கு வாய்ப்பில்லை. தன்னையும் ஒருதரப்பாக அமெரிக்க-ஈரான் உடன்பாட்டில் இணைக்காத கடுப்பில் அமைதியைக் குலைக்க அனைத்தையும் செய்யவே வாய்ப்புள்ளது. உடன்பாட்டிற்கு வருமுன் ஈரான் ரஸ்யா-சீனாவுடன் கலந்தாலோசித்தே முடிவெடுத்திருக்கும். ஆயுத மற்றும் தொழில் நுட்ப உதவிகளை செய்த நாடுகளை விட்டு முடிவெடுத்திருக்காது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
2029 நாமல் ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு - அர்ச்சுனா இராமநாதன்
உண்மை, தமிழினம் சிங்களத்தால் ஏமாற்றப்பட்டதைவிடத் தமிழர் தலைமைகளால் ஏமாற்றப்பட்டதே அதிகம். பட்டறிவின்பால் தமிழினம் எதையுமே கற்றுக்கொள்ளாதநிலை தொடர்கிறது. அது தாயகம் முதல் தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள்வரை வேறுபாடின்றியுள்ளது. நாம் உலவுகின்ற இந்தக்களமும் சான்றாக உள்ளது. விவரித்துச் சுட்டுவதால் பயனொன்றுமில்லை பல தசாப்த உணர்ச்சி அரசியலால் கட்டுண்ட தமிழினத்தை நிகழ்நிலை அரசியலைப்புகட்டி நெறிப்படுத்தக்கூடிய அணியொன்று இதுவரை தென்படவில்லை. அதுவரை இந்த அவலத் தலைமைகளின் பின்னால் மக்களும் இழுபட்டுச் செல்வதே விதியாக இருக்கப்போகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
2029 நாமல் ஜனாதிபதி; தமிழர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு - அர்ச்சுனா இராமநாதன்
22ஆம் நூற்றாண்டிற்குமான தமிழர் பிரச்சினைக்கான தீர்வை தனது ஆய்வகத்தில் பை(வை)த்தியர் அருச்சுன கண்டுபிடித்துச் சாதனை. நாமல் நல்ல குளிசையாம். மகிந்த அதைவிடச் சிறந்த குளிசையாம். 'ராசபக்ச பிராண்ட்' டுக்கு நல்லாத்தான் ஆள் முட்டுக்குடுக்கிறதைப்பார்த்தால் சிங்களத்தின் சரியான வாலென்று தெரிகிறது. பூனைகளால் நெடுகவும் கண்ணைமூடி ஏமாற்ற முடியாது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உவர்மலை ஆலயத்தில் கட்டுமானங்கள் அகற்றம்
உண்மையிலே இன்றைய சூழலை மதிப்பீடுசெய்து அதனைக் கருவாக்கிச் செயலாக்க ஒரு தலைமையோ கட்டமைப்போ இல்லாத கையறுநிலையில் ஈழத்தமிழினம். அதன் அங்கலாய்ப்பே வெளியேசென்று தலைவர்களைத் தேடும் அவலம். சரியான தலைமை இருந்து உறுதியோடு வழிகாட்டினால் தமிழினம் மீளும் சூழல் உருவாகும்.பிற்போக்குத்தனமான உரையாடல்களோடும் திட்டுவதோடும் திருப்தியடையும் நிலைக்குச் சென்று இறுதியாக உறைந்து இறுகிவிடும்போலவே தோன்றுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன். - டக்ளஸ் தேவானந்தா. -
நன்றி, உண்மை தமிழ்சிறியவர்களே, மே18 தமிழினவழிப்பநாள் முதல் சங்கீதனின் விடுதலைவரையான இந்தக்காலத்தில் சில செய்திகளையும் பின்னூட்டங்களையும் பார்க்கும்போது இலங்கையின் சகல அரசியல் குமுகாயச் செயற்பாடுகளிலும் இல்லாத புலிகளை இழுத்துவந்து நிறுத்தி அரசியல் செய்வதில் யாரும் பின்னிற்கவில்லை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
செயற்கை நுண்ணறிவு யுகத்தில் சுயாதீனச் சிந்தனையும் ஆளுமைச் சிதைவும்
இணைப்புக்கு நன்றி. ஒன்றுக்குப் பலமுறை ஆழமான வாசிப்புக்கும் திறந்த விவாதங்களை ஏற்படுத்துவதற்கும் தேவையான கட்டுரை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
பாலசந்திரன் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் நிச்சயம் காப்பாற்றியிருப்பேன். - டக்ளஸ் தேவானந்தா. -
சாத்தான்கள் வேதமோதும் கலியுககாலத்துள் நுளைந்துள்ளோம். 2009 புலிகளின் மறைவோடு எவனெவனெல்லாம் புனித அவதாரம் எடுக்கிறார்கள். ஒருபுறம் JVP to NPP, EPDP என இன்னும் இந்தப் பட்டியல் நீளுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
உவர்மலை ஆலயத்தில் கட்டுமானங்கள் அகற்றம்
இதே வேகத்தில் சட்டவிரோதமாக வைத்துள்ள புத்தர் சிலைகள் மற்றும் தொல்பொருள் திணைக்களமென்ற போர்வையில் சிங்களவர்கள் வாழாத தமிழரது பூர்வீக வாழ்விடங்களில் அடாத்தாக புத்ததாதுக்களை நிறுவும் குருந்தூர்மலை, கண்ணியா போன்ற ஆக்கிரமிப்புகளையும் அகற்ற வேண்டும். இப்படி இந்துக் கோவில்களைச் சட்டவிரோதக் கட்டுமானமென உடைப்பதுபோல், புத்தனின் பெயரால் செய்யப்படும் சட்டவிரோதக் கட்டுமானங்களையும் நீக்குவீர்களா? இலங்கைத்தீவின் எதிர்கால அமைதிக்கான அடிப்படையே பௌத்தமத அடிப்படைவாதத்தை இல்லாதொழித்தலே. அதற்கு புத்தசிலை நடுவது முதல் சைவக் கோவில்களை ஆக்கிரமிப்பதுவரையான ஆக்கிரமிப்புகள் நிறுத்தப்பட வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
ஆளை முடிச்சு தனது முன்னாள் கூட்டாளிகளை அனுர காப்பாற்றுவார்போலவே உள்ளது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
நந்திக்கடல் வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்கிறது ; சானி அபேசேகரவின் சித்திரவதையால் மாவீரன் சலேவை இழக்க போவதில்லை - விமல் வீரவன்ச
தேசிய மக்கள் சக்தி NPPஎன்ற போர்வையுள் ஒழிந்திருக்கும் மக்கள் விடுதலை முன்னணியின்JVP ஈரும் பேணும் அவர்களது முன்னாள் சகாவாலேயே வெளிவருகிறது. பச்சை இனவெறியனான வீரவன்ச நந்திக்கடலை இழுப்பதின் ஊடாகச் சிங்களவரைத் தூண்டிவிட்டுத் தனது சிங்கள இனவாத வெறியைத் தீர்க்கத் தமிழரின் குருதியைச் சுவைக்கத் துடிக்கின்றானா? நந்திக்கடல் இன்றும் சோகத்தோடு அமைதியாக அழுகிறது. அந்த அழுகை சிங்களத்தை ஒருநாள் தண்டிக்கும். ஆனால், மீண்டும் மீண்டும் ஏமாறும் தமிழர்களும், தமிழர்களைத் தவறாக வழிநடாத்தித் தமிழினப் படுகொலையாளர்களைக் கைகாட்டுவதும், சிங்களத் தலைமைத்துவத்தை நோக்கித் தமிழினத்தைத் தள்ளுவோரையும் தமிழினம் இனங்கண்டு விழிப்படையும்போதே வீரவன்ச, கமின்பில போன்ற இனவாதிகள் அடங்குவர். அமைதியாக அழும் நந்திகடலைக்கூட இனவாதிகள் அழவிடமாட்டார்களோ? அனுரவை மீட்பராக நம்பி 3 நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்பிய தமிழர்களே மீண்டும் மீண்டும் பரிதாபத்துக்குரியோராகும் நிலை. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
முற்போக்கு தேசியவாதத்துடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தத் தயார் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
ஆள் உறைநிலையிலிருந்து இப்பதான் எழும்பி நிற்கிறாரோ. முற்போக்குத் தேசியவாதம்(?) என்றால் என்ன? டட்லி செனநாயக்கா முதல் தனது தந்தை ர.பிரேமதாச உட்பட இன்றைய தேசிய மக்கள் சக்தி ஆகிய மக்கள் விடுதலை முன்னணி அரசுத் தலைமைவரை பிற்போக்குத்தனமான பௌத்த தேசிய வாதத்தின் ஆட்சிக்கூறுகள் என்பதை ஒத்துக்கொள்கிறாரா? அல்லது அடுத்த தேர்தலுக்கான பாட்டா? அல்லது 60ஆகும்போது பிறக்கும் ஞானமா?அல்லது காலம்தான் பதில் சொல்லுமா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி இலங்கைத்தீவிலே தமிழர்களிடம் அவித்த கொழுக்கட்டையும்,மோதகமும் விற்ற சிங்களத் தலைமைகளை தூக்கி எறிந்த தமிழர்கள் பெரும்பாடுபட்டு, இந்த புதிதாய் பரவிய யூரூப் வியாபாரிகளால் பொரித்த கொழுக்கட்டையை வாயில்வைத்தவாறு கடிக்கமுடியாமல் திண்டாடும்நிலை. அதற்குள் தானுமொரு பொரித்த மோதகத்தை விற்றுவிடத் துடிக்கிறார். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை
நன்றி, தங்கள் ஆதங்கம் புரிகிறது. கடந்த 78ஆண்டுகளில் தமிழினத்தைக் கடித்துக் குதறியதையே அரசுகள் செய்தன. அதில் அரசுகள் குறியாக இருக்க மறுவளமாக நாடு பல்வேறு சீரழிவுகளை உள்வாங்கிக் கொண்டது. அந்தச் சீரழிவுகளுக்கான தண்டணைகள் கொடுக்கப்படாமையும் இதுபோன்ற குற்றவாளிகளைத் துணிவுபெறச் செய்தது. கடந்த இவர்கள் தூக்கிலிடப்பட வாய்ப்பில்லை. கடந்த 50ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட எவரும் தூக்கிலிடப்படவில்லை. இவர்களும் சிறையில் இருந்து இறந்துபோகக்கூடும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை
நன்றி, இவர்களொன்றும் அனுதாபத்திற்குரியோரல்ல. போகட்டும். ஆனால் சிறைகளில் நடைபெறும் மர்மக்கொலைகளில் ஒன்றாக இருக்கலாம் அல்லவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
வித்தியா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை
இது கொலையா அல்லது தற்கொலையா? ஏனென்றால் அரைஞாண்கயிற்றைக்கூட கழற்றிவிட்டே சிறைக்குள் விடும்போது எப்படி? எதை வைத்துத் தற்கொலை செய்திருபர்பார் என்ற வினா எழுகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: 2 பேர் கைது - கோவை அதிர்ச்சியும், காவல் துறை நடவடிக்கையும்
நன்றி, யோ.வியின் தேர்வுகள் சீமானின் சிந்தனைகளாக இருக்க வாய்ப்பில்லை. அவர் தனது வாக்குறுதிகளை நோக்கி நகரவே இந்த ஆட்சிக்காலம் (ஒருவேளை இழுத்து விழுத்தாது விட்டால்) போதுமா தெரியவில்லை. அவரைச் சுற்றியுள்ள சக்திகளின் போக்கு, அவரது அரசியல் தேர்வுகள் என ஒரு வலைப்பின்னலுள் நிற்பதாகவே தெரிகிறது. ஆனால், புதிய கட்சியாக பெரும்பான்மை இடங்களைப் பெற்றபோதும் சாதுரியமாகக் கூட்டணிக்கட்சிகளுக்கும் அமைச்சுகளில் இடமளித்து ஒரு சமண்பாட்டை ஏற்படுத்தியுள்ளமை ஒரு நல்ல வியூகமே.என்றாலும் பல்வேறு இன,மத, சாதிகளைக் கொண்ட தமிழகத்தினை ஆள்வது எளிதல்ல. நல்லாட்சியாக இருந்தால் மத்தியில் இருக்கும் இந்துத்துவாக் குழுகள் என்ன குடைச்சலை எதிர்காலத்தில் கொடுக்க உள்ளார்களோ தெரியாது. இலவசங்களைக் கொடுக்கவே அரசுக்குப் பணமீட்டும் பெரும் செயற்றிறன் தேவைப்படும். அண்மையில் ஒரு காணொளியில் முன்னாள் காவல்துறை அதிகாரி, அரசு வருமானத்தில் அரச ஊழியருக்கான படி முதல் ஏனைய நிருவாகச் செலவுகளைக் கழித்துப் 18வீதமே தேறுமென்று கூறினார். இதனை வைத்து யோ.வி யின் திட்டங்களை அடைய முடியாதென்றார். ஓரளவு இலவசங்களை அனுபவித்தவர்களுக்கு மேலதிக இலவசங்களைத் தருவதாகக் கூறிவிட்டுக் கொடுக்காது விட்டால் அதுவே ஒரு விமர்சன அலையாக எழலாம். அந்த அலைக்கு ஈடுகொடுத்து நிற்கவேண்டிய தேவையும் உள்ளது. இந்த இடத்திலே இன்னுமொரு விடயத்தையும் சுட்டலாம். இலவசத்துக்கு எதிரான பரப்புரையும் சேர்ந்தே சீமானவர்களை வெளியே தள்ளிவிட்டுள்ளது எனது பார்வை. மீள் வாக்குப்பதிவொன்றை செய்திருந்தால் மேலதிக ஆசனங்களை யோ.வி சூட்டோடு சூடாக எதிர்கொண்டு நிலையான ஆட்சியை உறுதிப்படுத்தியிருக்கலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
சிறுமி பாலியல் வன்கொடுமை கொலை: 2 பேர் கைது - கோவை அதிர்ச்சியும், காவல் துறை நடவடிக்கையும்
வணக்கம், நீங்கள் இன்னும் பழைய நினைவில் இருக்கிறீர்கள். இனி 20 ஆண்டுகளுக்கு யோ.வி ஆட்சிதான்.👍
-
முள்ளிவாய்க்கால் நினைவு நாள் இன்று!
ஒரு தேசமாகத் தமிழினம் நிமிர்ந்திட இறுதிப்போரில் தம்மை அர்பணித்து வீரச்சாவடைந்த தலைவர், போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அகமேந்திய வீரவணக்கம்! நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
`விஜய்யின் முதன்மை செயலாளரான ஆஸ்தான ஜோதிடர்' - ஊத்துக்குளி வெற்றிவேல்
நதியில் நீந்திக் கடலை அடையாது கரையால் நடந்து கடலை அடைந்திருக்கிறார். கடலில் மிதக்க சில மிதவைகளோடு கூட்டிணைந்து மிதக்கிறார். எப்போது இந்த மிதவைகள் வலுவிழக்கச் செய்யுமென்று தெரியாது. ஒருவேளை ஐந்து ஆண்டுகள் நீந்திக் கடந்துவிட்டால், அதனூடாகத் தமிழகத்தை நெறிப்படுத்தி நின்றுநிலைக்கவும் வாய்புள்ளதல்லவா? கொள்கைத் தலைவர்களைச் சிலையாக்கி மாலைபோட்டால் மட்டும்போதாது அதனைச் செயலாக்க வேண்டும். செயலாக்க முடியுமா? காங்கிரஸின் கூட்டு பா.ஜ வுடன் சமரசம் என்று ஐந்து ஆண்டுகள் ஓடிவிடும். மீண்டும் ஒரு வாய்ப்பு என்று மக்கள் முன்வரும்போது தற்போது வாக்களித்த இளசுகள் குடும்பம் பிள்ளை குட்டியென்றாகி வளர்ந்து ஒரு மனநிலை மாற்றத்துள் வந்து நிற்பார்கள். அப்போது அவர்களை யார் அரசியல் மயப்படுத்துகிறார்களோ அவர்களே அறுவடையாளர்களாக இருப்பர். திராவிடப் பெயர் நீக்கமா? தமிழக வெற்றிக் கழகமென்ற பெயரில் திராவிட மாதிரி ஆட்சியா என்பதையும் மக்கள் பார்த்துவிடுவர். காலக் கணிதனுக்காய் காத்திருப்போம். நட்பாரந்த நன்றியுடன் நொச்சி
-
தொடருமா....
வணக்கம் புத்தரே, தொடருங்கள்.. எழுதுவதுகூட ஒருவகை உற்சாகத்தைத் தரும். உங்களின் ஆக்கம் சிங்களத்தின் தீவிர இனவழிப்பிற்கு முன்னான காலத்தில், சிங்களவர்கள் பேரூந்துகளில் சுற்றுலா வருவதும் போவதுமான காலங்களை நினைவுபடுத்தகிறது. நாம் மறந்துவரும் கிராமிய மணம் கமழும் எழுத்துநடை நன்று.
-
யாழ் கள உறவு பெருமாள் காலமானார்
அதிகம் உரையாடாவிட்டாலும் பெருமாள் அவர்களின் கருத்துகளை வாசிப்பதுண்டு. இளம்வயதிpல் அவரது மறைவு மிகுந்த அதிர்ச்சிக்குரியது. அன்னாரின் பிரிவாற்றாமையால் துயருறும் குடும்பத்தினருக்கும், உற்றார், உறவுகள், நண்பர்கள் மற்றும் யாழ்க்கள உறவுகளோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்ந்து கொள்கின்றேன். இறுதி வணக்கத்திற்கு மலர்வளையத்தை வைத்து மேன்மை செய்த யாழ்க்கள நிருவாகத்தினருக்கும் உளமார்ந்த நன்றி.
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
எல்லைதாண்டி இஸ்ரேல் செய்யும் பயங்கரவாதத்தை நிறுத்தாதவரை, பலஸ்தீனர்களது நிலங்களை ஆக்கிரமமிப்பதை நிறுத்தாதவரை, பச்சைக்குழந்தைகளைக் கொல்வதை நிறுத்தாதவரை எதிர்தரப்பு செய்வதை தடுக்கமுடியுமா?. இன்று வளைகுடா நாடுகளைப் பாதுகாப்பது என்ற போர்வையில் இஸ்ரேலைப் பாதுகாக்கவே இவளவு அமெரிக்கப்படைகள் இருந்தனவா என்ற வினா எழுந்துள்ளமை உற்று நோக்க வேண்டிய வினா. எனவே எதிர்காலத்தில் தமது நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களால் தம்மையோ தமது நாட்டையோ பாதுகாக்க முடியாதநிலையில் அவை தேவையா என்ற கேள்வியும் சேர்ந்து எழுந்துள்ளமையானது சிறந்த மாற்றமே.
-
போரில் வெற்றி பெற்றதாக ட்ரம்ப் அறிவிப்பு; எண்ணெய் கப்பல்களை தீக்கிரையாக்கும் ஈரான்!
மேற்குத் தனது ஆயுதங்களை ரஸ்யாவில் பரீட்சிக்கலாமென்றால் சீனா இஸ்ரேலில் பரீட்சகக்கூடாதென்று இல்லைத்தானே.(இஸ்ரேலிய நேசர்கள் கோவிக்கப்போகிறார்கள்) போர் முடிவில் எந்தத் தரப்பிற்கும் சாதகமாக இருக்கப்போவதில்லை என்பதை நிகழ்நிலை நேரநகர்வு உணர்த்துகிறது. ஒருவேளை இறங்கவுள்ள ஈரூடகப்படையணி எண்ணைப்போக்குவரத்துப் பாதையைக் கைப்பற்றினாலும் பாதுகாக்க முடியுமா(?) என்பது வினாவாகவே நிற்பதை ஆய்வாளர்கள் சுட்டுகிறார்கள். இரண்டுவாரத்தைக் கடந்தும் இரண்டு நாடுகள் கூட்டுச் சேர்ந்து ஒருநாட்டை அடிஅடியென்று அடித்தும் ஒருபயனையும் காணமுடியவில்லை. அமெரிக்கத்தலைமை ஆயுத உற்பத்தியாளர்களோடு உரையடியுள்ளதைப் பார்க்கும்போது போர் நீண்டு செல்லப்போகிறதா அல்லது ஆயுதப்பற்றாக்குறையேற்பட்டள்ளதா என்ற வினாவும் உள்ளது. முத்தரப்பும் மக்களை அழித்து உலக பொருண்மியத்தை சிதைக்கும் வேலையைச் சிறப்பாகச் செய்கிறார்கள். இதில் எந்தத் தலைமையும் வெளியே சென்று மக்களது அவலங்களைப் பார்போரல்லவே. ஐ.நாவும் 2008இலேயே தோல்வியுற்ற அமைப்பாகிவிட்டது. உலகம் இப்படியே மாறிமாறி அடிபட்டு அழிந்துபோகும்போலவே தோன்றகிறது. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி