Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

alvayan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இதுதான் உண்மை ..அதாவது தமிழ் மொழியிள் ஆண்,பெண் ... மாணவ மாணவிகள் கல்வி பயிலும் பாடசாலை...
  2. முல்லைத்தீவு மட்டுமல்ல தீவகம்...வரை இந்த மடைமாற்று நடக்கும் ...வாக்கு வங்கிக்காக என்.பி.பி எம்பி ஒருவர் தலைகீழாய் நிற்கிறார் ....
  3. நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் - ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம் KilinochchiNorthern Province of Sri LankaNagalingam Vedanayagam 3 hours ago நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள மாறுபட்ட கோரிக்கைகள் குறித்து உரிய அரச ஆவணங்களின் அடிப்படையில் விடயத்தைத் தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்த பெயர் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இரு வார கால அவகாசம் வழங்கியுள்ளார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் கிளிநொச்சி, நாச்சிக்குடா அரசினர் கலவன் பாடசாலையின் பெயர் மாற்றம் மற்றும் அது சார்ந்த நடைமுறைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (03.09.2026) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இவ்விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகத்துக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அதன் கோரிக்கைக்கு அமைவாக உரிய அறிக்கையை சமர்ப்பிப்பதற்காகவே இக்கலந்துரையாடல் நடத்தப்படுவதாக ஆளுநர் ஆரம்பத்தில் தெரிவித்துள்ளார். பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பயன்படுத்தப்பட்ட பெயரே தொடர்வது பொருத்தமானதாக இருக்கும் என ஆளுநர் தனது ஆரம்பக் கருத்தில் குறிப்பிட்டார். அதேவேளை, இது இரு சமூகங்களைச் சார்ந்த உணர்வுபூர்வமான விடயம் என்பதால், கிடைக்கப்பெறும் அரச ஆவணங்கள் மற்றும் உறுதியான ஆதாரங்களின் அடிப்படையில் நிதானமாகவும் நியாயமாகவும் அணுகப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதன்பின்னர், தொடர்புடைய இரு தரப்புக் கிராம அபிவிருத்திச் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும் தமது நிலைப்பாடுகளை முன்வைப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. ஒரு தரப்பினர், பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே 'தமிழ் அரசினர் கலவன் பாடசாலை' என்ற பெயரிலேயே இயங்கி வந்ததாகவும், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரே பெயர் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர். மறுதரப்பினர், குறித்த பாடசாலை ஆரம்பத்திலிருந்தே 'முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை' என்ற பெயரிலேயே இயங்கி வந்ததாகவும், 1990ஆம் ஆண்டு முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் பின்னர், குறிப்பாக 2002ஆம் ஆண்டு முதல் சமாதான காலப்பகுதியில் மீண்டும் 'முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டதாகவும் தமது நிலைப்பாட்டை முன்வைத்தனர். இரு வார கால அவகாசம் இதன்பின்னர், வலயக் கல்விப் பணிப்பாளர், பிரதேச செயலாளர் மற்றும் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆகியோர் தங்களிடம் காணப்படும் அரச ஆவணங்களின் பிரதிகளை முன்வைத்து விளக்கமளித்தனர். அந்த ஆவணங்களில் 'முஸ்லிம் அரசினர் கலவன் பாடசாலை' என்ற பெயர் பயன்படுத்தப்பட்டமைக்கான பதிவுகள் காணப்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். இதேவேளை, 1990ஆம் ஆண்டுக்கு முன்னர் குறித்த பாடசாலை 'தமிழ் அரசினர் கலவன் பாடசாலை' என்ற பெயரில் இயங்கியமைக்கான ஆவணம் தங்களிடம் இருப்பதாக ஒரு தரப்பினர் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களை உரிய முறையில் சமர்ப்பிப்பதற்காக இரு வார கால அவகாசத்தை ஆளுநர் வழங்கினார். இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், பூநகரி பிரதேச செயலர், வலயக் கல்விப் பணிப்பாளர், ஆளுநரின் பிரத்தியேகச் செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர், நாச்சிக்குடா கிழக்கு, நாச்சிக்குடா மத்திய ஆகிய இரு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன் நாமல் கைதாவாரா..! அநுர தரப்பு அடுத்தது வெள்ளைக் கடற்கரை பாடசாலையாம்...
  4. இவர்களுக்கு ஒழுங்கான சீருடை இருக்கு ...கிழக்கில் இந்த மத சேவையாளர்கள் ... போடமாட்டினம் ...அதாவது கல்முனை ஆசுப்பத்திரி விடையம் போல..
  5. இப்ப அவர் தியாகி ஆகிவிட்டார் ...வடமராட்சி என்.பி.பி காரர் பொடியனுக்கு சிலைவைக்க னெல்லியடியில் இடம் பார்க்கினமாம்,,,அவரின் அடுத்தபடி முதலமைச்சர் பதவிதானாம் ....
  6. கண்டிப்பாக அவர் தான் ...செய்தியில்..பெயர் இல்லை ...கல்முனை எந்த பாடசாலை என்றுமில்லை ...சிவத்த தொப்பிகாரர் துள்ளவுமில்லை ...ஏன் மற்ற நானாக்கள் ... எழுப்பி வாசிக்கவுமில்லை ...எனவே..அவர்தான் இவர்
  7. இதென்ன சிறியர் ...அருச்சினா செய்யாத விளையாட்டுகளே இவை ...அவர் முதலமைச்சரா வரமுடியுமென்றால் ...இந்த தங்கத் தம்பி செய்தது பெரிய வேலையே...
  8. சுப்பர்.....ஆளுங்கட்சி தமிழ் எம்பிமாரும் நமதே... வாழ்க படமெடுத்தது மட்டுமில்ல ..படமும் காட்டியிருக்கிறான்...
  9. எல்லோரும் சேர்ந்து நடித்த ஓரங்க நாடகம் ...சபாஸ்
  10. அடிவிழாமல் ..சண்டிதனத்தால் வெல்லக்கூடிய நாடு கனடாதான் ...அமெரிக்கன் அப்புக்காத்து..அய்யா
  11. கனடாவை பாரு தங்காய் ....விரைவில் உந்த நிலை வரும் ...பக்தி கூடுனதல்ல ...அய்யர்மாரின் மூளைச்சலவை..
  12. முஸ்லிம் சுகாதார ஊழியர்களின் ஆடை: அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுதான் Thursday, August 20, 2026 செய்திகள் கல்முனை வடக்கு ஆதார மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள ஆடைப் பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டை நாடாளுமன்றில் வெளிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றில் நேற்று இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பரால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார். மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில், இந்தச் சம்பவத்தை அனைவரும் மிகவும் நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் பார்க்க வேண்டும் என்று அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார். சமூக ஊடகங்களிலோ அல்லது வெளியிலோ வாக்கு வங்கியைக் குறிவைத்து வெளியிடப்படும் அறிக்கைகளையோ நடத்தைகளையோ அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் தெரிவித்தார். "பல இன மக்கள் வாழும், பல மதங்களைப் பின்பற்றும் மக்கள் வாழும், சிங்களம், தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் நாடு இது என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். எனவே, பல கலாசாரங்களைக் கொண்ட ஒரு நாடான இலங்கையில் அந்தந்த கலாசாரங்களுக்கு ஏற்ப உடைகள், உணவுகள் மற்றும் பல்வேறு வழிபாட்டு முறைகள் உள்ளன. இவை அனைத்தின் சேர்க்கையும், ஒத்திசைவும், ஒற்றுமையும்தான் இலங்கை அரசாக நிலவுகிறது. இருப்பினும், இலங்கையின் அரசியல் வரலாற்றில், அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் இனவாதப் பூச்சைப் பூசி ஆட்சி செய்தவர்களின் துரதிர்ஷ்டவசமான அனுபவங்கள் உள்ளன. ஆனால், தேசிய மக்கள் சக்தி என்ற வகையில், மிகவும் கடினமான சூழ்நிலையிலும்கூட அதிகாரத்திற்கு வர இனவாதத்தைப் பயன்படுத்தவில்லை. நாட்டிலுள்ள இனவாதத்திற்கும் மத மோதல்களுக்கும் மீண்டும் இடமளிக்கவில்லை. இத்தகைய சிறிய சம்பவங்கள் நேர்ந்தாலும், தேவைப்பட்டால் சட்டத்தின் மூலமாகவும், விழிப்புணர்வின் மூலமாகவும், கலந்துரையாடல்கள் மூலமாகவும் தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. எனவே, கல்முனை மருத்துவமனை விடயம், தேவையில்லாத மோதல் நிலையாக வளர்ந்துவிடக் கூடாது என்பதிலும், சிறிய இனவாத குழுக்களுக்குப் பந்தடிக்கும் வாய்ப்பாக இது மாறக்கூடாது என்பதிலும் அனைவரும் கவனமாக நடந்துகொண்டனர்" என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அரச சேவையில் சீருடை அணிந்து பணியாற்றும் ஊழியர்களும், ஆடை நடைமுறை அல்லது ஒழுங்குமுறை பின்பற்றப்படும் ஊழியர்களும் உள்ளனர். சுகாதாரத் துறையைக் கருத்தில் கொள்ளும்போது: நோயாளிகளும் பொதுமக்களும் ஊழியர்களை எளிதாக அடையாளம் காண்பதற்காக, மருத்துவமனைகளுக்கும் சுகாதார நிறுவனங்களுக்கும் வருகை தரும் பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சீருடைகள் பயன்படுத்தப்படுகின்றன. சுகாதாரத் துறையில் சீருடைகளைத் தீர்மானிப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல. நீண்டகாலக் கலந்துரையாடல்கள் மற்றும் சீருடைக் குழுவின் ஆலோசனைகளுக்குப் பிறகே, நோயாளி பராமரிப்பை எளிதாக்கவும் கிருமி பரவலைக் கட்டுப்படுத்தவும் ஏதுவாகச் சீருடைகள் தீர்மானிக்கப்படுகின்றன. சுகாதார அமைச்சில் சீருடைக்கு உரிமையுள்ள ஊழியர்களுக்குச் சீருடைக் கொடுப்பனவுகளும் வழங்கப்படுகின்றன. இதன்படி, 2025 ஜனவரி 1 ஆம் திகதி முதல், செவிலியர்களுக்கு 30,000 ரூபாய், குடும்ப சுகாதார அதிகாரிகளுக்கு 28,000 ரூபாய், சுகாதாரப் பரிசோதகர்களுக்கு 30,000 ரூபாய் மற்றும் இளநிலை ஊழியர்களுக்கு 18,600 ரூபாய் எனச் சீருடைக் கொடுப்பனவுகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் நோயாளிகளுக்கான சேவைகள் தொடர்ந்து கிடைக்கவும், சில குழுக்கள் இனவாத உணர்ச்சிகளைத் தூண்டுவதைத் தடுக்கவும் தற்காலிக அடிப்படையில் ஊழியர்களின் இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. எனவே இந்த மோதல் பரவாமல் தடுக்க குறித்த நடவடிக்கை உதவியாக இருக்கும் என அரசாங்கம் நம்புவதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார். சீருடையில் ஏதேனும் மாற்றம் செய்வதாக இருந்தால், அதை அமைச்சின் சீருடைக் குழுவிற்குச் சமர்ப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். அதற்கான யோசனைகளைச் சமர்ப்பித்து, கலந்துரையாடி, சுற்றறிக்கையை மாற்றுவதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க முடியும். அதற்கு நாடாளுமன்றத்திலும் சுதந்திரம் உள்ளது. ஆனால், தற்போதைக்கு நடைமுறையிலுள்ள சுற்றறிக்கையின்படியே ஊழியர்கள் செயல்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார். சமீபகாலமாக முஸ்லிம் யுவதிகள் சுகாதாரத் துறையில் இணைவதில் ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரிய ஆடைகள் தொடர்பான பிரச்சினைகளால் ஒருவர் அரச சேவையில் இணைவது கட்டுப்படுத்தப்படுவதை அரசாங்கம் ஆதரிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் சுதந்திரமும் வழங்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் சிங்கள, தமிழ், முஸ்லிம் யாராக இருந்தாலும் சுகாதாரத் துறையில் இணைவதற்கும், அவர்களின் மத, கலாசார உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் தேவையான சீர்திருத்தங்கள் குறித்துக் கலந்துரையாட அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.