எங்கள் மண்

அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி

1 month ago

புதிதாக திறக்கப்பட்ட பலாலி நோக்கிய அச்சுவேலி தோலகட்டி வீதியில் அமைந்துள்ள தமிழீழ மருத்துவப்பிரிவின் மூடு பதுங்ககழி பற்றி பல யூரியூப்பர்கள் சென்று பார்த்து அதிசயிக்கின்றனர்.

இது 90 ஆண்டு 7மாதம் வெட்டத் தொடங்கப்பட்டது. அதை வெட்டியவர்களுள் நானும் ஒருவன் ஆவேன்.

இது ஏறத்தாழ 6அடி அகலமும் 8 அடி ஆழமும் இருக்கும். 100 மீட்டர் நீளத்தில் அளவுகொண்டது. ஒரு பக்க வாசல் கொண்டது.  

அரணத்திற்காக மேலே தண்டவாளம் வைத்து அதன் மேல் காங்கேசன் சீமெந்து தொழில்சாலையில் எடுக்கப்பட்ட சீமெந்தில் கொங்குறீட் போடப்பட்டது. அந்தக் கொங்குறீட் இடைக்கிடை போடப்பட்டிருக்கும். இதன் பக்கவாட்டிலிருந்து எறிகணை வீச்சில் அதிர்வால் கற்கள் கொட்டுப்படாமல் இருக்க அதன் மேல் கம்பிவலை அடிக்கப்பட்டது. உச்சியில், நிலமட்டத்தோடு, சீமெந்தாலான குழாய் போன்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது; இருபக்கத்திலும் முறையே நான்கு போடப்பட்டது. 

Achchuveli Tholakatti Closed Bunker of LTTE Medicine Unit.png

 

சில மீற்றர் தூரத்தில் சிங்களப் படையினர் காவலரண் அடித்து இருப்பான். இந்த ஒரு கல்லை - இவ்விடம் கண்டக்கற்கள் நிறைந்த பகுதியாகையால் - நாங்கள் நிலத்திலிருந்து வெட்டும்போது கொந்தாலி ஓசை கேட்டால் தலைக்கு மேலால் பகைவரின் சன்னம் கூவிச் செல்லும். எங்கள் மிகுதி சாப்பாட்டுக்கு காகம் வந்தாலும் இதே கதிதான். 

பதுங்ககழிகள் தெல்லிப்பளையில் தொடங்கி வசாவிளான் பாடசாலையையும் தாண்டி அச்சுவேலியின் தொடக்கம் வரையும் வெட்டப்பட்டன.  

இந்த பதுங்ககழி அமைக்க அரசியல்துறை போராளிகள் பொதுமக்களையும் மாணவர்களையும் கூட்டிவந்து கொடுப்பார்கள்.

ஒருமுறை யாழ்பாணத்திலிருந்த பரவலறியான பாடசாலையில் இருந்து மாணவர்கள் வேலைசெய்ய வந்தார்கள். மதியம் 12மணியானதும் சாப்பாடுகேட்டு நச்சரித்தார்கள். அவர்களில் பிழையில்லை; அவர்கள் களமுனை வாழ்விற்கு பழக்கப்படாதவர்கள் என்பதோடு எல்லோரும் வசதியான குடும்பத்தில் இருந்து வந்தவர்களாவர். 

அங்கு காவலிற்கு நின்ற போராளிகள் மாணவர்களை சமாளித்து பார்த்தார்கள். அவர்களால் இயலவில்லை. எனவே பொறுப்பாளருக்கு வோக்கியில் தகவல் அறிவிக்கப்பட்டது. அவர் சிறிது நேரத்தில் வந்து சமாதானப்படுத்த முற்படும்போது சொன்னார், "தம்பியவை எங்கட போராளிகளும் இன்னும் சாப்பிடவில்லை. சாப்பாடு வந்திடும் பொறுங்கோ!". அவர் கூறியதைக் கேட்ட மாணவர்கள் சொன்னார்கள், "உங்கள் போராளிகள் 11 மணிக்கே சாப்பிட்டுவிட்டார்கள்." என்று. பொறுப்பாளர் சிரித்துக்கொண்டு சொன்னார், "அது காலைச் சாப்பாடு" என்று. மாணவர்கள் முகத்தில் ஈயும் ஆடவில்லை!

1991ஆரம்ப பகுதியில் பதுங்ககழியின் பின்பகுதியால் வந்து சிங்களப் படைத்துறை கைப்பறியது. நேரடியாக அடித்து பிடிக்க முடியாது பிற்பகுதியால் சுற்றிவளைத்தபோது பதுங்ககழியில் இருந்த போராளிகளை பின்வாங்கச்சொல்லி பிரிகேடியர் பானு அவர்களிடமிருந்து தகவல் வந்ததும் பின்வாங்கினர்.

 

  • தகவல் வழங்குநர்: "நிக்சன்" 

(இவர் பதிந்திருந்த யூரியூப் கருத்தை, அவரது முதல் தர அனுபவமாகையால், இங்கே வரலாற்று ஆவணக் காப்பிற்காக பதிவாக மாற்றி இடுகிறேன்). 

தொகுப்பு & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

 

 

 

றெட்பானா மக்களும் பாண்டியன் வாணிபத்தின் குட்டி அண்ணையும்

1 month ago
“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ? இங்கே இருக்கின்ற மக்களுக்கு தெரியும். பரந்து வாழும் உலகத்தமிழினம் வரைக்கும் எங்களைப்பற்றி பலதும் பேசுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது. நீங்கள் காணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ!!!!” -றெட்பானா மக்கள்..!
 
kutti.jpg
சமாதான காலத்தின் முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளின் தளபதி ஒருவர் மக்கள் மத்தியில் உரையாற்றும் போது “ நீங்கள் ஒன்றை விளங்கிக்கொள்ளவேணும், சிங்கள இராணுவம் தன்னுடைய மக்களை எங்களுடைய பிரதேசங்களில் குடியேற்றி அவர்களின் பாதுகாப்புக்கு ஆயுதங்களையும் கொடுத்திருக்கிறது, இன்று நாம் சிங்கள இராணுவம் மட்டுமல்ல எல்லைக்கிராமங்களில் உள்ள ஊர்காவல் படையின் தாக்குதல்களையும் எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இருக்கின்றோம்” என்று பேசியதை நான் கேட்டிருக்கின்றேன். வடக்கையும் கிழக்கையும் பிரிக்கும் மணலாறு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களிலேயே அத்துமீறி குடியேறிய சிங்களமக்களிற்கு ஆயுதங்களை சிங்கள இராணுவம் வழங்கியிருந்தன. இவர்களை ஊர்காவல் படை என்று அழைப்பர். இந்த ஊர்காவல் படையே பின்னர் சிவில் பாதுகாப்பு படை உருவாக்கத்தின் ஆரம்பம். இலங்கை சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் நேரடி ஆளுகையின் கீழ் இயங்கும் இப்படைப்பிரிவு பல கட்டமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது.
 
கடந்த சில நாட்களாக றெட்பானா விசுவமடு CSD பற்றி பேச்சு தான் அனேகமானவர்களின் சமூகவலைத்தளங்களில் காணப்பட்டது. பலரின் விசனங்களையும் கோபங்களையும் அம் மக்கள் பற்றிய கவலைகளையும் தங்களுக்குரிய முறையில் வெளியிட்டிருந்தனர்.
 
வன்னியிலும் எல்லைகளை பாதுகாக்க எல்லைப்படை, கிராமியப்படை,துணைப்படை என மக்கள் கட்டுமானப்பிரிவுகளை விடுதலைப்புலிகளின் காலத்தில் காணப்பட்டது. இப்படைகளின் பணியாக சுழற்சி முறை எல்லைப்பாதுகாப்பு மற்றும் உள்ளகப்பாதுகாப்பு காணப்பட்டிருந்தன. விடுதலைப்புலிகளின் படைய கருவிகள் தொழிற்சாலைகள் மற்றும் முன்னரங்கப்பகுதிகளில் பணியாற்றுபவர்களில் சிறிலங்கா படையினர் மற்றும் எதிர்பாராத வெடிவிபத்துகள் மற்றும் விமானத்தாக்குதலில் கொல்லப்பட்டால் அவர்களை “போருதவிப்படைவீரர்” என்ற நிலை வழங்கி துயிலுமில்லங்களில் விதைக்கப்படுவார்கள். இது பற்றிய முழுமையான விளக்கத்தினை இங்கே நான் தரவில்லை.
 
2008 இல் போர் உக்கிரமான நிலைக்கு சென்றிருந்தது. வன்னியின் அனேகமான பிரதான வீதிகள் சிறிலங்கா படையின் ஆழஊடுருவும் தாக்குதல் அணியினரின் (Long-range reconnaissance patrol-LRRP) தாக்குதல் மேலோங்கியிருந்தது. ஒருமுறை கிளிநொச்சி அறிவியல்நகர் அருகில் உள்ளகப்பாதுகாப்பு அணியினருக்கும் எல்.ஆர்.ஆர்.பி அணிக்கும் சண்டை மூண்டது. இதில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் விசுவமடு றெட்பான மக்கள். கிட்டத்தட்ட ஒரு கிலோமீற்றர் வரை துரத்திச்சென்றதுடன் அவர்களிடம் இருந்த ஆயுதங்களை மீட்டனர். இதேபோன்று பல்வேறு சம்பவங்கள் நடந்திருந்தது.
இளங்கோபுரம், வள்ளுவர்புரம்,மாணிக்கபுரம்,குமாரசாமிபுரம், தோரவில் மூங்கிலாறு உடையார்கட்டு, குரவில், இருட்டுமடு, சுதந்திரபுரம் விசுவமடு, புன்னைநீராவி, கண்ணகிநகர் (தட்டுவன்கொட்டி), பிரமந்தனாறு மயில்வாகனபுரம், கொழுந்துபுலவு, நாச்சிக்குடா, தொட்டியடி, பாரதிபுரம், தருமபுரம், உழவனூர் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் பல பொதுமக்கள் எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் கிராமிப்படைகளில் இருந்தவர்கள். அதில் எல்லைப்பாதுகாப்பு படையில் இருந்த றெட்பான மக்கள் சிறிலங்கா படையினரின் மோதல்களில் கொல்லப்பட்டு மாவீரர்களாக துயிலுமில்லங்களில் விதைக்கப்பட்டிருந்தனர். இது அங்கிருக்கின்ற அனேகமானவர்களுக்கு தெரிந்த விடயம்.
 
இதனை விட மட்டக்களப்பு,திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களைச்சேர்ந்த போராளிகள் குடும்பங்களோடு விசுவமடு, உடையார்கட்டு, வள்ளிபுனம் தேவிபுரம், கைவேலி, புதுக்குடியிருப்பு வரைக்குமான பிரதேசங்களிலே வசித்து வந்திருந்தனர்.
 
போர் முடிந்தவுடன் சிறைவாழ்க்கையில் இருந்து விடுதலைசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் போராளிகள் பலர் எதிர்கொண்ட பிரச்சினை -தாங்கள் என்ன வேலை செய்வது என்பதே. முன்னாள் போராளிகள் மற்றும் ஏற்கனவே இப்பிரதேசங்களில் விடுதலைப்புலிகளின் நிறுவனங்களில் பணியாற்றியவர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் அதாவது பண்ணைகளில் பணியாற்றியவர்கள் என பல ஆயிரக்கணக்கானவருக்கு வாழ்வாதாரப்பிரச்சினைக்கு முகம்கொடுத்திருந்த காலப்பகுதி அது.
 
பரந்தனில் இருந்து புதுக்குடியிருப்பு வரைக்குமான பிரதேசங்களில் வசிக்கும் போராடும் வலுவுள்ள அத்தனைபேரும் ஆயுதப்பயிற்சி பெற்றவர்களே! (இது 2008 காலப்பகுதி)
 
அத்துடன் விடுதலைப்புலிகள் போர்கருவித்தொழிலகங்கள் மற்றும் தளபாட உற்பத்தியகங்களில் பணியாற்றியவர்களும் இப்பிரதேசங்களைச்சேர்ந்தவர்களே!
 
இந்த நேரத்தில் தான் சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்றம் மற்றும் இராணுவமயமாக்கல் என குற்றச்சாட்டுக்களை சந்தித்திருந்த போதிலும் அவர்கள் தந்திரோபாயமாக அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே CSD. "உள்ளகக்கிளர்ச்சி" ஒன்றினை உருவாகாமல் பாதுகாக்கும் திட்டமாகவே இது காணப்பட்டது.
அதாவது சிறிலங்கா அரசாங்கம் படையியல் ரீதியாக அச்சம் நிறைந்த பொதுமக்களின் பகுதிகளில் பணிபுரியும் படைப்பிரிவான சிவில் பாதுகாப்பு படைப்பிரிவினை ஆரம்பித்திருந்தது. போரின் பின்னரும் இவ்வாறான மக்களை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவேண்டிய தேவையின் நலன் கருதி முன்னாள் போராளிகள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. வேளாண் பிரிவு(பண்ணை), கராத்தே பிரிவு , நடனப்பிரிவு, உதைபந்தாட்டப்பிரிவு என மற்றும் முன்பள்ளிகளையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தது.
 
இதற்கு ஆரம்பத்தில் குறைவானர்களே இணைந்திருந்தனர். முன்னாள் போராளிகள் தங்கள் பாதுகாப்பு கருதியும் மற்றும் சம்பளம் உயர்வானது என்பதன் அடிப்படையிலேயே இப்படையில் இணைந்துள்ளனர்.

இதில் இணையாவிட்டால் அடிக்கடி இராணுவ புலனாய்வு விசாரணைக்கு போய்வரவேண்டிய நிலை. தனியார் நிறுவனங்களில் பணியாற்றினால் அங்கே உள்ள முதலாளிகளை புலனாய்வு படையினர் பணியாற்றும்; முன்னாள் போராளிகளைப்பற்றி விசாரணை என்ற பேரில் தொந்தரவு கொடுப்பது என உளவியல் ரீதியாகவே அவர்களை மக்களிடம் இருந்து தனித்துவமாக்கும் முயற்சி சிறிலங்கா அரசுக்கு சாகதமாகவே இருந்துள்ளது. முன்னாள் போராளிகள் பலர் தாங்களாகவே சமூகப்புறக்கணிப்பு ஒன்றுக்குள் இட்டுச்செல்லப்பட்ட நிலையிலேயே CSD என்ற பாதைக்குள் செல்ல நேரிட்டது.
 
றெட்பான விசுவமடு மக்கள் சிலருடன் பேசியிருந்தேன். நண்பர்கள் பலர் அங்கே தான் இருக்கின்றார்கள். நான் விசுவமடு மாகாவித்தியாலய பழைய மாணவன். இந்த மக்களையும் மக்களின் அப்போதைய வாழ்வாதார நிலைப்பாடுகளும் நன்கு அறிந்திருந்தேன். அனேகமான கிராமங்களுக்கு நண்பர்களுடன் சென்றிருக்கின்றேன். இரவில் நண்பர் ஒருவரின் தோட்டத்தில் உள்ள கொட்டிலில் தான் நாங்கள் படிப்பது வழமை. விசுவமடு குளத்தில் குளிப்பதும் வழமை. நான் விசுவமடு மக்களோடு நானும் சில காலம் வாழ்ந்திருந்த அடிப்படையில் மண்ணுக்காக அந்த மக்கள் கொடுத்த விலைகள் எனக்கு தெரியும்.
 
றெட்பான மக்களோடு பேசும்போது.. அவர்கள் சொன்ன முதல் வார்த்தை “குட்டி அண்ணை”….

இன்றளவும் மறக்காமல் அந்தப்பெயரை உச்சரிக்கும் மக்களுக்கு அந்தப்பெயர் ஒரு வேதம்…
 
அவர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்றதையும் அனைவரும் அறிந்துகொள்ளுங்கள்.
 
“குட்டி அண்ணை இருந்திருந்தா இந்தளவு சனம் எங்களை பேசுங்களோ” றெட்பான மக்களின் மனக்குமுறல்களை தொலைபேசியில் கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. என்னால் எந்த பதில்களையும் திருப்பி சொல்லமுடியாத அளவுக்கு சில கதைகளை சொல்கின்றார்கள். அந்த மக்களுக்கு ஒரு நிச்சயம் மாற்று திட்டங்களை ஏற்படுத்தவேணும் என்பதையும் இங்கே குறிப்பிடுகின்றேன்.
 
அவர்கள் மேலும் சொல்லியது….
 
“பலரும் பலவிதமான கதைகள். பலவித விளங்கங்களுடன் விசுவாசம் பற்றி எங்களுக்கு வகுப்பு எடுக்கிறார்கள். ஒரு நாள் எங்கள் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்திட்டு எல்லாரையும் கதைக்கசொல்லுங்கோ”
 
“நாங்கள் வாழ்க்கையில் சந்திக்காத ஒரு சமூகப்புறக்கணிப்பைச் சந்தித்திருந்தோம். யுத்தம் எங்களுக்கு வறுமையை மட்டுமல்ல மிகப்பெரிய தனிமையையும் தந்துவிட்டது. அதற்கான சூழல்களை சிறிலங்கா புலனாய்வாளர்கள் செய்து வந்தமையையும் நாங்கள் அறிவோம். ஆனால் நாங்கள் சாப்பிடவேணுமே. காலகாலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வறுமையை வரித்து கொண்டே தேசத்திற்காய் உழைத்தோம். யுத்தம் முடிந்த பின்னர் சமூகத்தில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலத்தப்பட்டு நின்ற நேரத்தில் தான் எங்கள் முடிவு CSD குள் போனோம்.”
 
உங்களுக்கு தெரியுமா? நீங்கள் எல்லோரும் வருசத்திற்கு ஒரு தடவை மட்டும் தான் துயிலுமில்ல பாடலை கேட்பீர்கள். நாங்கள் வித்துடல்கள் விதைப்படுகின்ற ஒவ்வொரு தடவையும் எங்கள் காதில் கேட்கும். ஒரு பூவை கூட மூன்றாக பிரிச்சு வீதியால் எடுத்துச்செல்லப்படும் மூன்று வித்துடல்களுக்கும் மலர் தூவி அனுப்பி வைத்திருக்கின்றோம். எங்கள் வாழ்க்கை சாதாரணம் தான். அந்த சாதாரணத்தை கூட வாழமுடியவில்லை.
“நாங்கள் இப்பொழுது சூழ்நிலை கைதிகள். விழுங்கவும் முடியவில்லை. துப்பவும் முடியவில்லை. நாங்கள் எப்படி வாழ்ந்தோம் தெரியுமோ? இங்கே இருக்கின்ற மக்களுக்கு தெரியும். பரந்து வாழும் உலகத்தமிழினம் வரைக்கும் எங்களைப்பற்றி பலதும் பேசுகிறார்கள். நாங்கள் என்ன செய்வது. நீங்கள் காணாமல் போன குட்டி அண்ணையை ஆவது மீட்டுத்தாங்கோ!!!!” என்று றெட்பான மக்கள் கேட்கின்றார்கள்.
 
யார் இந்த குட்டி? குட்டி அண்ணையை ஏன் இந்த மக்கள் இன்றும் நேசிக்கிறார்கள்.
 
தமிழீழ போக்குவரவு ஆணையர் குட்டி (MRS குட்டி) றெட்பானா மக்களால் இந்திய இராணுவ காலப்பகுதியில் சோறூட்டி வளர்க்கப்பட்டவர். பின்னர் அதே மக்களுக்கு சோறூட்டியவர். வன்னிப்பெருநிலப்பில் வேலை இல்லையென்று யாரும் இருந்திருக்கவில்லை. அவரவர் தகைமைக்கேற்ப வேலைகளை குட்டி அண்ணையின் ஆளுகைக்குள் இருக்கின்ற நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளமுடியும்.

அந்த நிறுவனங்களின் விபரங்கள் பின்வருமாறு:
  1. பாண்டியன் நடுவப்பணியகம்
  2. பாண்டியன் வாணிபம்
  3. பாண்டியன் சுவையூற்று
  4. பாண்டியன் வேளாண் பண்ணை
  5. பாண்டியன் திரையரங்கம்
  6. பாண்டியன் எரிபொருள் வாணிபம்
  7. பாண்டியன் புடவை வாணிபம்
  8. பாண்டியன் பதிப்பகம்
  9. பாண்டியன் உதிரிகள் வாணிபம்
  10. பாண்டியன் முகவராண்மை
  11. பாண்டியன் ஊர்தி சுத்திகரிப்பு நிலையம்
  12. பாண்டியன் களஞ்சிய சாலைகள்
  13. பாண்டியன் மரக்கறி வழங்கல்.
  14. தமிழீழ போக்குவரவு கழகம்
  15. தமிழீழ போக்குவரவுக்கழக ஊர்தி சீர்களம் (காட்டுக்கராச்)
  16. பணியாளர்களுக்கான உணவகம் (குறைந்த செலவில் மூன்று நேரச்சாப்பாடு)
என்று நிறுவனங்களை உருவாக்கி பல ஆயிரக்கணக்கான மக்களுக்கான வேலைவாய்ப்பினை வழங்கியவர்.
 
இதில் குறிப்பாக தமிழீழ போக்குவரவுக்கழகம் நடாத்திய பேருந்துச்சேவை பற்றி..
  • வெளிநாடுகளில் பேருந்துகளில் மாதாந்த பாஸ் நடைமுறை வன்னியிலும் இருந்தது.
  • வெளிநாடுகளில் பாடசாலை மாணவர்களுக்கான பேருந்து சேவை போன்றே வன்னியிலும் இருந்தது.
  • வெளிநாடுகளில் சாரதிக்கு சீருடை உள்ளது போல பேருந்து சாரதிகளுக்கான தனியான சீருடை.
  • வெளிநாடுகளில் பேருந்து நேரக்காப்பாளர்கள் போலவே வன்னியிலும் இருந்தது.
  • வெளிநாடுகளில் பயணச்சிட்டைகளை போக்குவரவு பொலிசார் பரிசோதிப்பார்கள். ஆனால் வன்னியில் சிறப்பு பரிசோதர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். இதில் அனேகமானவர்கள் பெண்களே உள்வாங்கப்பட்டிருந்தனர்.
  • குறிப்பாக பேருந்துக்கு மேலே மக்கள் ஏறியிருக்கமுடியாது. (முன்னைய காலத்தில் மேலே இருப்பது வழமை)

 

இந்தளவு கட்டமைப்புக்களுக்குள் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு யுத்தம் முடிந்து ஊருக்கு வந்த போது வேலையில்லா பிரச்சினை உருவாகியது. இன்றும் அவர்கள் குட்டி அண்ணையை சொல்லியே மனம் ஆறுகின்றார்கள். தன்னுடன் பணியாற்றியவர்கள் மட்டுமல்ல அந்த கிராமங்களைச் சேர்ந்த 700 வரைக்குமான மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுத்தவர். இன்று காணாமல் போனவர்களில் ஒருவராக அவரை தேடிக்கொண்டிருக்கின்றார்கள்.
 
பலரும் இம்மக்களை குறை கூறி வருகின்றார்கள். அவர்கள் உண்மையில் சூழ்நிலைக்கைதிகள். CSD என்ற இராணுவ மயமாக்கல் ஒரு வடிவமாகவே காணப்படுகிறது. 2002 இல் ஏற்படுத்தியிருந்த சாமாதானம் எவ்வாறு ஒரு பொறியாக அமைந்திருந்ததோ. அதேபோல CSD இன்னொரு பொறி…
 
யுத்தகால வன்னி  ஊடகவியலாளர் 
சுரேன் கார்த்திகேசு
2018
 
 

தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரப்பும் கலைஞர் தேனிசை செல்லப்பா

1 month ago

"நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்

நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்

போரில் வெற்றி முரசம் முழங்கும்

புலிகள் கழுத்தில் மாலை துலங்கும்"

இப்படியாக உத்தேச தமிழீழத்தின் உதயத்தைப் பற்றிய பூரண நம்பிக்கையைத் தரும் கவிஞர் காசி ஆனந்தனின் பாடலைத் தனது மதுரக்குரலால் மக்களுக்கு எடுத்துக் கூறி வருபவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். 1960 களில் தமிழ்நாட்டில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நமது கவிஞர் சாசி ஆனந்தன் அவர்கள் காலஞ்சென்ற சி. பா. ஆதித்தனார் அவர்களது தலைமையில் இயங்கிய 'நாம் தமிழர்' இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு இயங்கிய காலத்தில் அவரால் இயற்றப்பட்ட கவிதைகளுக்கு தேனிசை செல்லப்பா அவர்கள் இசைவடிவம் கொடுத்து மேடைகள் தோறும் பாடி தமிழக மக்கள் மத்தியில் தமிழ் உணர்வையும் விழிப்புணர்ச்சியையும் வளர்த்து வந்ததோடு ஈழத்தமிழர்களது அபிலாஷைகளையும் இசைவடிவில் எடுத்துச் சொல்லலானார். தமிழகத்தின் கிராமங்கள், நகரங்கள் தோறும் தேனிசை செல்லப்பா அவர்களது நாவசைவில் காசி ஆனந்தன் பாடல்கள் நாத வடிவாகப் பிரவாகிக்கலாயிற்று.

"மறவர் படைதான் தமிழ்ப்படை - குல

மானம் ஒன்றுதான் அடிப்படை

வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர்

வெல்வார் என்பது வெளிப்படை"

இந்தப் பாடல் அறுபதுகளில் தமிழகத்தில் பிரபல்யமாகக் காரணமாக இருந்தவர் தேனிசை செல்லப்பா அவர்களாகும். அறுபதுகளில் தமிழகத்தில் பிரபலமான இப்பாடல் எழுபதுகளில் தமிழ் ஈழத்திலும் பிரபலமடையலாயிற்று. 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு விசுவாசம் தெரிவிக்க மறுத்து கவிஞர் காசி ஆனந்தன் தனது அரச பதவியைத் துறந்ததைத் தொடர்ந்து ஈழத்து அரசியல் மேடைகளிலும் மேடைப் பேச்சுகளுக்கான முன்னோடி ஒலிபெருக்கி அறிவித்தல்களிலும் இப்பாடல் இடம்பிடித்துக்கொண்டது.

எழுபதுகளின் நடுப்பகுதியில் தமிழ்ப் போராளிகள் 'தமிழீழ விடுதலைப் புலிகள்' என்ற பெயரில் விடுதலை ஸ்தாபனத்தை உருவாக்கிய போது அந்த ஸ்தாபனத்தை அக்காலகட்டத்தில் 'புலிப்படை' என்று சுருக்கமாக அழைக்கும் வழக்கம் இருந்தது. கவிஞர் காசி ஆனந்தனின் பாடலில் வரும் "வெறிகொள் தமிழர் புலிப்படை" என்ற வரிகளைப் படித்த இலங்கையின் இரகசிய பொலிசார் சி. ஐ. டி. பஸ்தியாம்பிள்ளை போன்றவர்கள் கவிஞரை விசாரணைக்குட்படுத்திய போது கவிஞரிடம் "நீ புலிப்படைக்காகத் தானே இப்பாடலைப் பாடினாய்" என்று மிரட்டிய போது கவிஞர் காசி ஆனந்தன் கவிஞர் கண்ணதாசனின் திரைப்படப் பாடலான

"கொடி அசைந்ததும் காற்று வந்ததா

காற்று வந்ததும் கொடி அசைந்ததா!'"

என்ற பாடலைச் சுட்டிக்காட்டி "நான் பாடியமையால் புலிப்படை என்ற தீவிரவாத அமைப்பு உருவானதா? அல்லது தீவிர அமைப்பு உருவான பின்னால் நான் பாடினேனா?" என்று பதில் கேள்வி எழுப்பினார். கவிஞர் காசி ஆனந்தன் பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடலுக்காக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார். ஆனால் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களது இப்பாடலையும் இது போன்ற வேறு தமிழ் உணர்ச்சிப் பாடல்களையும் பாடியமைக்காக தேனிசை செல்லப்பா அவர்களோ தமிழகப் பொலிசாரால் முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே கைதாகி விசாரிக்கப்பட்டார். ஈழத்தமிழர் உரிமைக்குக்குரல் கொடுத்தமைக்காக தமிழக அரசியல்வாதிகள் கைதுசெய்யப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னரேயே ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுத்தமைக்காகத் தேனிசை செல்லப்பா அவர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்பது இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விடயமாகும்.

நாம் தமிழர் இயக்க ஸ்தாபகரும் முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகருமான சி.பா. ஆதித்தனார் அவர்கள் தான் செல்லப்பாவுக்கு தேனிசை செல்லப்பா என்ற பட்டத்தினை வழங்கிக் கௌரவித்தார்.

தமிழ் நாட்டின் திருநெல்லி மாவட்டத்தைச் சேர்ந்த தேனிசை செல்லப்பா அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள வானொலி நிலையங்களிலும் தூரதர்ஷன் தொலைக்காட்சியிலும் பிலிப்பைன்சிலிருந்து ஒலிபரப்பாகும் வெரித்தாஸ் வானொலியிலும் வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

பல்துறை ஆற்றல் பெற்ற செல்லப்பா அவர்கள் பால வயதில் பிரபல திரைப்பட நடிகரும் நாடகக் கலைஞருமான நடிகவேள் எம். ஆர். எம்.ஆர். ராதா அவர்களது நாடகங்களிலும் நடித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் தலைவர் வே. பிரபாகரன் தளபதி மாத்தயா மற்றும் பேபி ஆகியோரைத் திரு. செல்லப்பா 1981 ஆம் ஆண்டு சென்னையில் சந்தித்து அவர்களுக்கு அறிமுகமானதோடு நெருங்கிய நண்பருமானார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் கிடைத்த தொடர்பானது தேனிசை செல்லப்பா அவர்களது பாடல்களை ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தியது. 1981 ஆம் ஆண்டில் சென்னையில் தங்கியிருந்த விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி தலைவர் அஜித் மாத்தயா அவர்களின் அயராத முயற்சியால் திரு. செல்லப்பா அவர்களது தமிழீழ விடுதலை பற்றிய பாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு நாடாவில் வெளியிடப்படலாயிற்று. அக்காலகட்டத்தில் இவ்வாறாக பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொள்வதற்கு ஆயிரம் ரூபா மட்டுமே செலவாகியது. பின்னர் தேனிசை செல்லப்பா அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் 'தமிழீழக் கீதங்கள்', 'புயல்கால ராகங்கள்', 'அந்நியர் வந்து புகல் என்ன நீதி' ஆகிய ஒலிப்பதிவு நாடாக்களுக்கு குரல் கொடுத்தார். இந்த ஒலிப்பதிவு நாடாக்களில் கவிஞர் காசி ஆனந்தன், புதுவை இரத்தினதுரை, கவிஞர் இன்குலாப் ஆகியோரின் பாடல்களை அவர் இசைத்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் ஆதரித்தமையால் இந்திய வானொலியும் இந்திய தொலைக்காட்சியும் இவரை முற்றாக புறக்கணிக்கலாயின. ஆனால் அவர் மனம் தளர்ந்துவிடவில்லை. தொடர்ந்து தமிழ் ஈழ விடுதலைக்காகக் குரல் கொடுத்து வருகின்றார்.

தூரதர்சன் காட்சி வானொலி ஒளிபரப்பாகாத குக்கிராமங்களில் அவரை நேரில் பார்க்க முடிகிறது. இந்திய வானொலியை செவிமடுக்காத தமிழக கிராமத்து மக்களது செவிகளில் எல்லாம் அவரது குரல் கேட்கிறது. இன்று அவர் பாடாத நகரங்களோ கிராமங்களோ தமிழ் நாட்டில் இல்லை என்று சொல்லும்படியாக அவர் பாடல்கள் எங்கும் கேட்கின்றன. விடுதலைப் புலிகளின் கருத்துக்களை தமிழக மக்களுக்கு இசைவடிவில் எடுத்துச் சொல்லும் ஊடகமாக இன்று அவர் விளங்குகின்றார்.

உலகத்தில் தமிழர்கள் எங்கிருந்தாலும் அங்கெல்லாம் இன்று தேனிசை செல்லப்பாவின் குரல் கணீரென்று ஒலிக்கின்றது. அன்று வண. பிதா தனிநாயகம் அடிகளார் தமிழ் இலக்கியத் தூதுவராக தமிழர் வாழும் நாடுகளுக்கெல்லாம் சென்று வந்ததைப் போல் இன்று தமிழ் இசைத் தூதுவராக உலகை வலம் வந்து இவரது குரல் தமிழ் உணர்வைத் தட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறது.

இவரது குடும்பமே ஒரு இலட்சியக் குடும்பம். இன்று மேடைக் கச்சேரி என்றால் திரைப்படப் பாடல்களையும் துள்ளிசைப் பாடல்களையும் தான் காணமுடிகிறது. அப்படிப்பட்ட காலகட்டத்தில் இவரும் இவரது இரண்டு பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் கிராமம் கிராமாகச் சென்று துவிச்சக்கர வண்டியில் தமிழ் உணர்ச்சிப்பாடல்களை மட்டுமே பாடிவருகிறார்கள். இவர்கள் செய்கின்ற பணி புனிதமான விடுதலைப் பணியாகும்.

ஈழம் வருகின்ற இவர்கள் இலங்கையில் தமிழ் மண்ணில் எட்டு மாவட்டங்களிலும் தலா இரண்டு சங்கீதக் கச்சேரிகள் வீதம் பதினாறு கச்சேரிகள் செய்யவுள்ளார்கள். தேனிசை செல்லப்பா குழுவினரோடு தற்போது தமிழகத்தில் பிரபல்யமாகிவரும் சுவர்ணலதாவும் வருகின்றார். இந்த இசைக்குழுவினருக்கு முழுத் தமிழினமும் கடமைப்பட்டுள்ளது. இவர்களது முதல் இசைக்கச்சேரி எதிர்வரும் திங்கட்கிழமை 23ஆம் திகதி யாழ்ப்பாண முற்றவெளி மைதானத்தில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. முழுத் தமிழினமும் திரண்டு வந்து இவர்களுக்கு ஆதரவு கொடுப்பதே இவர்கள் செய்து வரும் தமிழீழ விடுதலைப் பணிக்கு சிறந்த கைமாறாகும். பன்னிரண்டு ஆண்டுகளின் பின் யாழ். முற்றவெளி மைதானம் தேனிசை செல்லப்பா குழுவினரின் தேனிசை மழைக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது. பன்னிரண்டாண்டில் மலரும் குறிஞ்சிமலரைப் போல் பன்னிரண்டு ஆண்டுகளின் பின் முற்றவெளியில் ஓர் இசைமலர் மணம் வீசுகின்றது.

தலைவர் பிரபாகரன் மீது அளவு மீறிய பேரன்பும் பெரும்பற்றும் கொண்டவர் தேனிசை செல்லப்பா அவர்கள். இவர் 1983இல் பாடிய பாடல்களில் தலைவர் பிரபாகரனுக்கு பிடித்த பாடல் "நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்" என்ற பாடலாகும்.

நன்றி: ஈழநாதம்-1990.04.22

https://tamileelamarchive.com/article_pdf/article_ee9cbcbbaf7938994b0cbe8b92440aaa.pdf (பக். 11)

கேரதீவு - கிழக்கரியாலை தரையிறக்கம்

1 month 1 week ago

ஓயாத அலைகள் மூன்று வடபகுதி நோக்கி திருப்பப்பட்ட போது அதன் கட்டம் மூன்று தொடங்கப்பட்டது. கட்டம் மூன்றின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணத்தில் புதிய கேந்திர சமர்முனை ஒன்றைத் திறப்பதற்கான திட்டத்தை தேசியத் தலைவர் அவர்கள் கேணல் வீமன் அவர்களிடத்தில் வழங்கியிருந்தார்.

தலைவரின் திட்டத்தை கேணல் வீமன் (அப்போது லெப். கேணல் தரநிலையுடையவர்) போராளிகளுக்கு தெளிவாக விளக்கப்படுத்தி தயார்ப்படுத்தினார்.

Keeratheevu-ArukuveLi Landing during the operation Unceasing Waves - 3 Phase 3 under Col. Veeman.jpg

தனங்கிளப்பிலிருந்த தளம் ஒன்றின் மீதான அதிரடித்தாக்குதலுக்கான திட்டத்தை கேணல் வீமன் அவர்கள் போராளிகளுக்கு விளங்கப்படுத்துகிறார். அருகில் தினேஸ் மாஸ்டர் நிற்கின்றார்

 

keeratheevu - kizhakku ariyaalai landing (3).jpg

தரையிறக்கத்திற்கு முன்னர் இறுதியாக அறிவுரைகள் புலற்றுகிறார் கேணல் வீமன் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

இத்தாக்குதலின் முக்கிய நோக்கமானது வன்னி-யாழ்ப்பாணத்‌ தொடர்பை துண்டித்திருந்த சங்குப்பிட்டி-கேரதீவு களப்பைக் கடந்து கேரதீவு கடற்தளத்தை கைப்பற்றிப்‌ பாதுகாப்பதாகும். இப்பரப்பை மீட்பதன்‌ மூலம்‌ சங்குப்பிட்டி - கேரதீவு தொடர்பும் பேணப்படுவதோடு யாழ்ப்பாணம் நோக்கிய பின்னாளைய நகர்விற்கான ஒரு முன்கூட்டிய சமர்முனையையும் திறந்து வைத்திருத்தலாகும்.

அதன் படி 12/12/1999 அன்று காலை பத்துமணியளவில் கேணல் வீமனின் தலைமையில் (இறுதிப் போரில் சரணடைந்து காணாமலாக்கப்பட்டார்) கேரதீவு-கிழக்கரியாலையில் தரையிறக்கமொன்று இருவேறு பிரிவுகளாக மேற்கொள்ளப்பட்டது.

இத்தரையிறக்கத்தில் ஜெயந்தன் படையணியின் (Regiment) கொம்பனிகள் (Company) சில, மாலதி படையணியின் கொம்பனிகள் சில, இம்ரான்-பாண்டியன் படையிணியின் சில பிரிவுகள் (Units) என்பவற்றைக் கொண்ட படைத்தொகுதியொன்று (Brigade) ஈடுபடுத்தப்பட்டது. மொத்தம் 600 போராளிகள் இதில் களமிறக்கப்பட்டனர்.

தரையிறங்கப் போகும் தமிழரின் படைகளிற்கான கடல்வழி நகர்விற்கான பாதுகாப்பை கடற்புலிகள் வழங்கினர். அவர்களோடு இதில் தமிழீழத்தின் அதிரடிப்படையான சிறுத்தைப்படையின் கடற்சிறுத்தை அணியினர் லெப். கேணல் சேரமான் தலைமையில் முக்கிய பங்காற்றினர். 

விடுதலைப்புலிகளின் கிட்டு பீரங்கிப் படையணியின் சேணேவித் தொகுதி (Artillery battery) ஒன்றின் கட்டளையாளரான மேஜர் பாலனின்‌ தலைமையில் தரையிறங்கப் போகும் இடத்திலிருந்த சிறிலங்கா படைநிலைகள் மீது செறிவான சேணேவி சூட்டாதரவு நடாத்தப்பட கடற்புலிகள் தரையிறக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டனர். 

keeratheevu - kizhakku ariyaalai landing (4).jpg

தரையிறக்கத்திற்காக ஆளணி காவி கட்டைப்படகொன்றில் களப்பில் பயணிக்கும் போராளிகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (10)  - Small Boats.jpg

கரையை அண்மிக்கும் ஆளணி காவி கட்டைப்படகுகள் (Dhingies) | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (8).jpg

கரையை அண்மித்து ஆளணியை தரையிறக்கும் கட்டைப்படகுகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (9).jpg

தரையிறங்கியோர் கரையைக் கடக்கும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (1).jpg

மாலதி படையணிப் போராளிகள் தத்தமக்கென ஒதுக்கப்பட்ட குறித்த இடங்கள் நோக்கி நகர்ந்து செல்லும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

சில படகுகள், குறிப்பாக மாலதி படையணியினரைக் காவிச் சென்றவை படையினரின் இரு முகாம்களுக்கு இடையில் தான் கொண்டுசெல்லப்பட்டு தரையிறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தாக்குதலை சிங்களம் கிஞ்சித்தும் எதிர்பார்த்திருக்கவில்லை. புலிகளால் களப்பை கடக்க முடியாதென்றே சிங்களம் நம்பியிருந்தது. அந்தளவிற்கு சிங்களக் கடற்படை வலிமையாக கிளாலி, கேரதீவு, கோயிலாக்கண்டி, குருநகர்‌ ஆகிய இடங்களில் தமது கடற்தள கதுவீ ஏந்தனங்களை நிறுவியிருந்தது. இவற்றின் கண்களில் படாமல் எம்மவரால் எதுவித களப்புக் கடப்புகளை மேற்கொள்ளமுடியாது என்றே சிங்களம் உறுதியாகயிருந்தது.

இவற்றையும் மீறு நகர்ந்தால் அதனை முறியடிப்பதற்கென்று சிங்களக் கடற்படையின் சிறப்பு படகுச் சதளம் (Special Boat Squadron) நிலைநிறுத்தப்பட்டிந்தது. மீறி தமிழர் சேனை ஒரு தரையிறக்கத்தை செய்துவிடின், அதனை முறியடிப்பதற்கான அரணத்தையும் தரையிறங்கியோர் பின்வாங்கிடாதபடி கடற்படையின்‌ தடுப்பு இருக்குமாறும் ஒரு பாரிய ஏற்பாட்டை சிங்களம் செய்திருந்தது.

தரையிறங்கிய எமது படைகள் தாக்குதல் திட்டத்திற்கு ஏற்றவாறு வேகமாகவும் பாணித்தும் (சமற். நிதான) தாக்குதலை மேற்கொண்டபடி முன்னகர்ந்தன. 

இதில் குறிப்பிடத்தக்க மோதல் ஒன்று; முன்னர் குறிப்பிட்ட இரு முகாம்களுக்கு நடுவில் தரையிறக்கப்பட்ட புலிகளின் அணிகளின் இரு நிலைகளுக்கு நடுவால் ஊடறுத்து அவர்களுக்குப் பின்பக்கமாக சென்ற சிறிலங்காப் படையினர் பின்னருந்து முன்னோக்கி புலிகள் மேல் தாக்குதல் மேற்கொண்டனர். இதற்கு புலிகளுக்கு சூட்டாதரவு வர வேண்டுமெனில் கடல்வழியாகத் தான் வர வேண்டும். எனினும் கடலிலும் கடற்புலிகளுடன் சிங்களக் கடற்படை சமராடிக்கொண்டிருந்தது. இருப்பினும் மனம்தளராது புலிகள் தமது நிலைகளையும் அணிகளையும் மீளொழுங்குபடுத்தி மீண்டும் முயற்சித்து படையினரை விரட்டியடித்தனர். அத்துடன் தமது நிலைகளையும் மீட்டனர். இம்மோதலில் கொல்லப்பட்ட படையினரில் ஐந்திற்கும் மேற்பட்ட படையினரின் சடலங்களும் பல படைக்கலன்களும் புலிகளால் கைப்பற்றப்பட்டிருந்தன.

keeratheevu - kizhakku ariyaalai landing (2).jpg

சமரின் நடுவே நடைபேசியில் கட்டளை வழங்கும் புலிகளின் அதிகாரி ஒருவர் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

தரையிறங்கிய போராளிகளின் அடிபாட்டு உருவாக்கமொன்று தரைவழியாக நகர்ந்து அறுகுவெளியிலிருந்த தளமொன்றைத் தாக்கிப் பரம்பியது (overrun). 

இன்னொரு அடிபாட்டு உருவாக்கம் கடற்புலிகளின் கடல்வழித் தாக்குதலின் துணையோடு கேரதீவிலிருந்த கடற்தளத்தை தாக்கிக் கைப்பற்றினர். அத்துடன் இங்கிருந்த கதுவீ (RADAR) மற்றும் பல படைக்கலன்களையும் புலிகள் கைப்பற்றியிருந்தனர். 

keeratheevu - kizhakku ariyaalai landing (10)  - Suudai Class boat.jpg

சூடை வகுப்புப் படகிலிருந்து கேரதீவு கடற்தளம் நோக்கிச் சுடும் கடற்புலிப் போராளி ஒருவர் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (5)- Kfir Class boat - special attack team.jpg

கடற்சிறுத்தை அணியின் அதிரடிக்காரனொருவன் கவிர் வகுப்பு படகிலிருந்து கேரதீவு கடற்தளம் மீது ஆர்.பி.ஜி உந்துகணை செலுத்தும் காட்சி | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

 

keeratheevu - kizhakku ariyaalai landing (6).jpg

சிங்களக் கடற்படையின் கேரதீவு கடற்தளம் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து

அற்றைநாள் மாலைக்குள் விடுதலைப்புலிகள் கேரதீவிலிருந்து அறுகுவெளி வரையிலான நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். 

அடுத்த நாளும் தொடர்ந்த சமரில் அறுகுவெளி படைத்தளம் விடுதலைப்புலிகளால் பரம்பப்பட்டு அறுகுவெளியும் மீட்கப்பட்டது. அதே நேரம் கிழக்கரியாலையிலிருந்து முன்னகர்ந்து சில பரப்புகளை மீட்டிருந்தனர்.

keeratheevu - kizhakku ariyaalai landing (7).jpg

சமரின் நடுவே சேதமடைந்திருக்கும் கோவிலினூடே முன்னகர்ந்து செல்லும் போராளிகள் | படிமப்புரவு: தவிபு - இன் ஆவண நிகழ்படமொன்றிலிருந்து


உசாத்துணை:

  • 'விடுதலைப்புலிகள்', தை-மாசி, 2000, பக்கம்: 4-5 & 8-10
  • ஓயாத அலைகள்- 3 கட்டம்- 1,2,3 நிகழ்பட ஆவணத்தின் 54:50 - 57:30 நிமிடங்கள் வரை

ஆக்கம் & வெளியீடு:
நன்னிச் சோழன்

 

"தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?"

1 month 1 week ago
"தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?" / பகுதி: 01
 
 
அண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019 என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, "வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150 இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்" / "Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone " என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தமிழர் பகுதியில், நடந்துள்ளதாகவும் எடுத்து காட்டுகிறது. ஏன் தமிழர்கள் கூடுதலாக தற்கொலை செய்கிறார்கள்? என்ற என் கவலையின் தேடுதலே இந்த கட்டுரையாகும்.
 
முதலில் நாம் தற்கொலை என்றால் என்ன என்று பார்ப்போம். நீங்களே உங்கள் சொந்த வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையை தற்கொலை எனலாம். இது அநேகமாக மக்கள் தமது வலி அல்லது துன்பத்தில் [pain or suffering] இருந்து தப்பிக்க வேறு மாற்று வழிகள், அந்த கணத்தில் தெரியாத நிலையில், சடுதியாக கடைபிடிக்கும் ஒரு வழி என்றும் கூறலாம். ஆனால் எல்லோரும் அப்படி என்று நாம் அறுதியாக கட்டாயம் கூறமுடியாது. தற்கொலை மூலம் இறந்த மக்கள் பொதுவாக நம்பிக்கையற்ற தன்மை, விரக்தி மற்றும் உதவியின்மை [feelings of hopelessness, despair, and helplessness] போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப் பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. மற்றது, தற்கொலையை ஒருவரின் ஒரு தார்மீக பலவீனம் அல்லது அவரின் ஒரு ஒழுக்க குறைபாடு [a moral weakness or a character flaw] என்றும் கூறமுடியாது.
 
ஒருவர் தன்னுயிரை தானே மாய்துகொள்வதையும் கொலை என்று அர்த்தம் தொனிக்க தற்கொலை என்றே நாம் இன்று கூறுகிறோம். அது போலவே, The Oxford English Dictionary முதல் முதல் suicide என்ற சொல்லை 1651 இல் சேர்த்து கொண்டாலும், அந்த சொல்லை மிகவும் வெறுப்புடன் பொதுவாக பார்க்கப்பட்டு, பலர் தமது அகராதியில் அதை போடாமல் சொல்லகராதியில்[vocabulary] மட்டும் விட்டுவிட்டு, அதற்கு பதிலாக “self-murder”, “self-killing”, and “self-slaughter” என்ற வார்த்தைகளை, அன்று பாவித்தனர். ஏன், 2450 ஆண்டு களுக்கு முன்பு வாழ்ந்த புகழ்பெற்ற கிரேக்க நாட்டின் தத்துவஞானி சோக்கிரட்டீஸ் (Socrates) கூட "மனிதன் என்பவன் கடவுளின் உடைமைகளில் ஒன்று, எனவே ஒரு மனிதன் தன்னை கொல்ல முடியாது" / "a man, who is one of the god’s possessions, should not kill himself " என்று வாதாடுகிறார்.
 
என்றாலும் பிளாட்டோ [Plato] மற்றும் அரிஸ்டோட்டல் [Aristotle] தற்கொலை சில சூழ்நிலைகளில் ஏற்றுக்கொள்ளலாம் என்கின்றனர். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட எமது திருவள்ளுவரும் "மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்"[969]. என உடலில் உள்ள உரோமம் நீக்கப்பட்டால் உயிர் வாழாது கவரிமான் என்பார்கள் அதுபோல் மானம் அழிய நேர்ந்தால் உயர்ந்த மனிதர்கள் உயிரையே விட்டு விடுவார்கள், அதாவது தற்கொலை செய்வார்கள், என்று அதற்கு ஒரு பெருமையே சேர்க்கிறார். அது மட்டும் அல்ல , தமிழரின் அன்றைய கலாச்சாரத்தில் வடக்கிருத்தல் என்று போற்றப்படும் ஒரு செயலையும் காண்கிறோம்.
 
வடக்கிருத்தல் பண்டைய தமிழரின் நம்பிக்கை சார்ந்த ஒரு பழக்க வழக்கமாகும். ஊருக்கு வெளியே ஓரிடத்தில் வடக்கு திசை நோக்கி அமர்ந்த வண்ணம் உண்ணா நோன்பிருந்து தமது உயிரை சில காரணங்களுக்காக துறப்பர். இப்படி இறந்தோருக்கு அன்று நடுகல் இட்டு, அவரின் மன உறுதியை பெருமைப் படுத்தும் முகமாக, அவருக்கு நினைவுச் சின்னம் அமைத்து வழிபடுவதும் உண்டு. உதாரணமாக, கி.மு. 3 ஆம் நூற்றாண்டு புறநானூறு 66 ,
 
"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
சென்றுஅமர்க் கடந்தநின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப் புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே."
 
களிப்புநடை போடும் யானைமேல் தோன்றும் கரிகால் வளவ! கடலில் நாவாய்க் கப்பல் ஓட்டிக் காற்றையே ஆண்ட வலிமையாளரின் வழிவந்தவன் நீ. நீ போரில் வென்றாய். அதனால் நீ நல்லன். எனினும் வெண்ணிப் பறந்தலைப் (போர்க்களத்தில்) போரில் உன் வலிமை மிக்க தாக்குதலால் புறப்புண் பட்டு அதற்காக நாணி அப் போர்க்களத்திலேயே வடக்கிருந்து உயிர் துறந்த மன்னன் (பெருஞ்சேரலாதன்) உன்னைக் காட்டிலும் நல்லவன் அல்லனோ?
 
என்று தற்கொலைக்கு ஒரு புகழாரம் சூட்டுகிறது. அதேபோல இன்றும் தன்னுயிரை தான் ஈயும் சான்றாண்மை தற்கொடையாம் என்று தற்கொலையை தற்கொடை என்று சில சந்தர்ப்பங்களில் புகழ் பாடுவதையும் தமிழர் கலாச்சாரத்தில் நாம் காணுகிறோம். இவைகளை இளம் பருவத்தினர் தொலைக்காட்சியிலோ, திரை அரங்கிலோ அல்லது பத்திரிகை அல்லது புத்தக வாயிலாகவோ பார்த்து இருப்பார்கள், உளவியல் எச்சரிப்பது இவையும் அவர்களின் தற்கொலைக்கு ஒரு தூண்டுதலாகவும் அமையலாம் என்று.
 
நல்லதங்காள் வறுமையின் காரணமாகவும் தனது அண்ணியின் சுடுசொல் தாளாமலும் தான் பெற்ற பிள்ளைகளைக் கிணற்றில் வீசிக் கொன்று விட்டு, பின் தானும் அக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும், அவளது மரணத்தைத் தாளாத அவளது அண்ணன் நல்லதம்பியும் அதே கிணற்றில் விழுந்து தற்கொலை செய்ததாகவும் கூறும், அவளின் புகழ் பாடும் நாட்டுப்புறக் கதை, தமிழரின் மத்தியில் சர்வசாதாரணமாக புழங்குவதுடன், அவளுக்கு கோயில் அமைத்து சிறு தெய்வமாக திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள அர்ச்சுனாபுரத்தில் வழிபடுவதையும் காண்கிறோம்.
 
அது மட்டும் அல்ல தமிழர்களுடன் தொடர்புடைய மாயன்கள் தற்கொலைக்கு என, ‘இக்ஸ்டாப்’ (Ixtab) என்னும் பெயருடைய ஒரு கடவுளையும் வைத்திருந்தவுடன் தற்கொலையை தப்பானதாக மாயன்கள் கருதவில்லை. எனினும் நான் முழுக்க முழுக்க இவையையே தமிழர்களை கூடுதலாக தற்கொலைக்கு தூண்டும் காரணம் என்று சொல்லவில்லை, ஆனால் அவர்களுக்கு இது ஒரு தென்பை, வலிமையை, பயமின்மையை கட்டாயம் கொடுத்து இருக்கும்.
 
தற்கொலை என்பது திடீரென, ஒருவர் எடுக்கும் சாவுக்குரிய அபாயகரமான முடிவு அல்லது ஒரு செயல் என்றும் மற்றும் தூண்டுதலின் பங்கே இப்படியான சோகமான விடயங்களில் முக்கியமான ஒன்று என்றும் [The role of impulsiveness is one of the saddest things about suicide] அடிக்கடி விவரிக்கப்படுகிறது. ஆனால் உண்மையில், தங்களைக் கொல்ல முயற்சிக்கும் பெரும்பாலான மக்கள் அவ்வாறு செய்ய முதலே திட்டமிடுகின்றனர் என்றும் மனக்கிளர்ச்சி அல்லது உந்துதலே என்று வரையறுக்கப் படுபவை கூட, அவர்கள் முயற்சி செய்வதற்கு முன்பு அப்படியான எண்ணம் அவர்களிடம் இருந்ததாகவும் ஒரு 2007 ஆண்டு ஆஸ்திரேலிய ஆய்வு கூறுகிறது. ஆனால் அவர்களின் எண்ணத்திற்கு செயல் வடிவத்தை , வலிமையை அதிகமாக உந்துதல்களே கொடுத்து இருக்க வாய்ப்பு அதிகம்.
 
இவை ஒரு வரலாற்று ரீதியான ஒரு முக்கியமான காரணம். ஏனேன்றால் மற்ற சமூகங்களுடன் ஒப்பிடும் பொழுது , தமிழர் சமுதாயம் ஒரு கொள்கைக்காக , நோக்கத்திற்காக தம் உயிரை விட்டவர்களுக்கு நடுகல் வைத்து வணங்கியதையும், அவர்களை சிறு தெய்வமாக்கியதும் மற்ற சமூகங்களில் காண்பது அரிது. அது மட்டும் அல்ல, அந்த பண்பாட்டிற்கு, குறிப்பாக ஈழத்தில் 1980 க்கு பிறகு மீண்டும் உயிர் கொடுத்து இன்று அந்த கலாச்சாரம் மீண்டும் புத்துயிர் பெற்றிருப்பது வேறு எங்கும் காண்பது அரிது. எனவே இவைகள் கட்டாயம் தமிழர் மத்தியில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்று நம்பலாம். என்றாலும் தற்கொலை - தமிழர் மத்தியில் ஏன் அதிகம்? என்பதை புள்ளிவிபரங்கள் மற்றும் அதற்கான இன்றைய காரணங்கள் பற்றியும் அடுத்த பகுதியில் பார்ப்போம்.
 
உலக தற்கொலைத் தடுப்பு சங்கமும், உலக சுகாதார நிறுவனமும் இணைந்து ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 10-ம் தேதியை சர்வதேச தற்கொலைத் தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அறிவித்து உள்ளது. நாமும் எம்மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் தற்கொலைக்கான காரணத்தை ஓரளவாவது புரிந்து, சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எல்லாம், சிறிது நேரம் ஒதுக்கி, தற்கொலை எண்ணமுடைய ஒரு நபரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வர முயலுவோம் !
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
57441820_10213940980741409_3376984187566292992_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=f7fc3c&_nc_ohc=kCGVpDpkkMoQ7kNvgG_IDTD&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AJ8kaztsBJScM0o7KMnIQFC&oh=00_AYDG-qZdD4JNyzP5H4RJLDil3l7PUD6gcdds_mi7mfsy1Q&oe=6756AD45
 
 

"கரை சேர்த்த கல்வி"

1 month 1 week ago

"கரை சேர்த்த கல்வி"

 

"அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை இன்மையா வையா துலகு" - [குறள் 841]


அறிவு இல்லாத நிலையே இல்லாமையிலும் இல்லாமை. மற்றபடி வேறு பல இல்லாமையை பொருட்டாக உலகம் கருதாது. ஆகவே அந்த அறிவு , அந்த கல்வி தான் எல்லாத்தையும் இழந்த முல்லைமலரை கரை சேர்த்தது மட்டுமல்ல, அவளை வாடிய நொந்த மக்களுக்கு ஒரு கலங்கரை விளக்காக, ஒரு விடிவெள்ளியாக மாற்றியது! அவளின் கதைதான் "கரை சேர்த்த கல்வி"!!   

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு கிராமத்தில், முல்லைமலர் என்ற தமிழ்க் குடும்பம் ஒரு காலத்தில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்தது. பரம்பரை பரம்பரையாக உழவர்கள் மண்ணை உழுது வந்த அவர்களது பூர்வீக நிலம் அவர்களின் இருப்பின் இதயமாக இருந்தது. ஆனால் இலங்கையின் உள்நாட்டுப் போர் அவர்களைச் சூழ்ந்தபோது எல்லாம் எதிர்பார்க்காதவாறு மாறிவிட்டது. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் குடும்பங்களுக்கு போரின் இறுதி ஆண்டுகள் குறிப்பாக மிக கொடூரமானவை. அதில் இருந்து முல்லைமலரின் குடும்பமும் விதிவிலக்கல்ல.

அது மட்டும் அல்ல, ஆயுதப் படைகளுக்கும் கிளர்ச்சிப் போராளிகளுக்கும் இடையில் சிக்கி, அதனால், அவர்கள் தங்கள் வீடு அழிக்கப்பட்டதையும், அவர்களின் நிலம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டதையும், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டதையும் அல்லது காணாமல் போனதையும் உதவியற்றவர்களாகப் அன்று பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்கள் சொத்து, அன்புக்குரியவர்கள் மற்றும் அவர்கள் ஒரு காலத்தில் அறிந்த வாழ்க்கை உட்பட எல்லாவற்றையும் இழந்தனர். தப்பிச் செல்வதைத் தவிர அவர்களுக்கு அந்த நேரம் வேறு வழிதெரியவில்லை, அவர்கள் ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த தமிழர்களுடன் சேர்ந்து தாமும் தெற்கே ஒரு ஆபத்தான பயணத்தில் சென்று இறுதியில் வவுனியாவை அடைந்து அங்கு அவர்கள் தஞ்சம் அடைந்தனர்.

வவுனியா பயணம் ஒரு பெரும் பயணமாகவே இருந்தது. தொடர்ச்சியான சோதனைச் சாவடிகள், இராணுவத் துன்புறுத்தல் மற்றும் பசி ஆகியவை அவர்களின் தன்னம்பிக்கைக்கும் மற்றும் உயிர்வாழ்வதற்கான விருப்பத்தையும் சோதித்தன. ஒவ்வொரு திருப்பத்திலும், ஒவ்வொரு தடைகளிலும் அவர்கள் ஒரு இன முரண்பாடான நாட்டில், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட  காலத்திலேயே இலங்கை நாட்டின் பழங்குடியாக இருந்தும், இன்று தமிழர் என்ற கடுமையான யதார்த்தத்தை எதிர்கொண்டனர். ஒரு காலத்தில் செழித்துக் கொண்டிருந்த சமூகம் இப்போது பாதுகாப்பிற்காக பிச்சைக்காரர்களாக மாறிவிட்டது போல அவளுக்கு தெரிந்தது. வடக்கில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் மூலம் தமிழ்க் குடும்பங்களின் பல காணிகள், ஏதோதோ காரணங்கள் கூறி  கைப்பற்றப்பட்டன, அவை இப்போதைக்கு திரும்பி வரும் என்ற நம்பிக்கையை அவள் இழந்து இருந்தாள். நெரிசலான சூழ்நிலைகள், உணவுப் பற்றாக்குறை மற்றும் அடிப்படைத் தேவைகள் இல்லாததால் அகதிகள் முகாம்களில், குடிசைகளில் வாழ்க்கை பொதுவாக எல்லோருக்கும் கடினமாக இருந்தது.

இந்த இறுதிப்போரில் அழிவுகளுக்கு மத்தியில், போரில் கணவனையும் இரண்டு மகன்களையும் இழந்த முல்லைமலரின் தாய், ஒரு கனவில் என்றும் ஒட்டிக்கொண்டார்: தனது இளைய மகள் முல்லைமலர் இந்த துன்பத்தை தாண்டி எழுவாள். கல்விதான் ஒரே வழி என்று அவள் திடமாக நம்பினாள். அவள் முல்லைத்தீவில் ஒரு ஆரம்ப பாடசாலை ஆசிரியரும் கூட. அவளின் அந்த பாடசாலை குண்டு மழையால் இடிமுழக்கத்துடன் இடித்து உடைத்தெறிந்த பொழுது, அவள் கண் முன்னாலேயே பல அந்த பாடசாலை மாணவ மாணவிகளும் உடல் சிதறி சாவை அழுகைக் குரலுடன் சந்தித்த அந்த சம்பவம் இன்னும் அவள் கண்ணில் அப்படியே இருந்தது.  முல்லைமலரைப் பள்ளிக்கு அனுப்ப தன்னால் முடிந்த வேலைகளைச் செய்தும் மற்றும் அருகில் இருந்த ஆரம்ப பாடசாலையில் தற்காலிக ஆசிரியர் பொறுப்பை பெற்றும் கடுமையாக நீண்ட நேரம் உழைத்தாள். முல்லைமலரின் கல்வியை அவள் தனிப்பட்ட வெற்றியாக மட்டும் பார்க்கவில்லை, மாறாக தமிழ் சமூகத்தின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் ஒரு வழியாக. முல்லைமலர் தனது கல்வியை நீதிக்காகப் போராடவும், அவர்களிடமிருந்து திருடப்பட்ட நிலங்களை மீட்டெடுக்கவும், தங்கள் மக்களுக்கு கண்ணியத்தை மீட்டெடுக்கவும் உதவ வேண்டும் என்பது தான் அவளது கனவாக இருந்தது. 


"கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லா தவர்" -  [குறள் 393] 


 
கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். அதை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டு இருக்கும் முல்லைமலரின் தாய் தன் மீது சுமத்திய பொறுப்பு சுமையாக இருந்தாலும், தன் அசைக்க முடியாத நம்பிக்கையால் ஈர்க்கப்பட்டு, தன் மகளை எப்படியும் படிப்பிற்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். முல்லைமலரும் அதை உணர்ந்து, படிப்பிற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டாள். அவள் தினமும் பள்ளிக்கு இரண்டு மைல்கள் நடந்தாள், அடிக்கடி வெறும் வயிற்றில். ஆனாலும், அவளது மனம் படிப்பில் கூர்மையாக இருந்தது, அவளது உறுதிப்பாடு தளரவில்லை. விரக்தியால் சூழப்பட்ட அகதி முகாம்களின் கடுமையான சூழ்நிலையில், முல்லைமலர் தனது புத்தகங்களில் ஆறுதல் கண்டாள். முள்வேலி மற்றும் இராணுவ ரோந்துகளுக்கு அப்பாற்பட்ட ஒரு எதிர்காலத்தை அவள் விரும்பினாள்.  

"கல்வி கரையில, கற்பவர் நாள் சில
மெல்ல நினைப்பின் பிணிபல- தெள்ளிதின்
ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
பால் உண் குருகில் தெரிந்து." 
[நாலடியார்: 135]  

நாம் கற்கவேண்டிய நூல்கள் மற்றும் பெறவேண்டிய அறிவு அளவில்லாதது. ஆனால் நம் வாழ்நாளோ குறைவு. எண்ணிப்பார்த்தால் இதிலும் நோய், நொடிகள். எனவே வாழ்நாளை வீணாக்காமல், அன்னப்பறவை எப்படி நீரைப் பிரித்து பாலை மட்டும் உண்கிறதோ, அதுபோல நாம் சிறந்த நூல்களை மட்டும் கற்றுப் பயன்பெறவேண்டும் என்பதை முல்லைமலர் என்றும் மறக்கவில்லை. 

"வயிற்றுக்குச் சோறிடவேண்டும்- இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்"

என்கிறான் மகாகவி . கல்வி மூலமே உயர்வு காணமுடியும் என்பதை அழுத்த மாக சொன்னான் பாரதி. இதையும் நன்றாக உணர்ந்த முல்லைமலர், இடைவிடாத முயற்சியால் அவள் தனது தேர்வில் சிறந்து விளங்கினாள். அவளது வெற்றி ஒரு மதிப்புமிக்க பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்க உதவித்தொகையைப் பெற்றது.

போரினால் பாதிக்கப்பட்ட பின்னணியில் இருந்தும் அவள் ஒரு அரிய சாதனையை கல்வியில் படைத்தாள். அதனால் அம்மாவின் மகிழ்ச்சி எல்லையற்றது என்றாலும் அவள் முல்லைமலருக்கு முன்னால் இருக்கும் பொறுப்புகளை மீண்டும் நினைவுபடுத்தினாள்.

"மலர்," அவளது பாசமான, செல்லப்பெயரைப் பயன்படுத்தி அவளுடைய அம்மா கூறினார், "இந்த உயர் படிப்பு உனக்கோ எங்களுக்கோ மட்டுமல்ல. இது நிலம், வீடு, குடும்பம் இழந்த அனைவருக்கும் பயன்படவேண்டும். உங்களுக்காக மட்டுமல்ல, முடியாதவர்கள் அனைவருக்காகவும் நீங்கள் எழ வேண்டும். உங்கள் கல்வியின் மூலம், எங்கள் மக்களுக்கு நீதி கிடைக்க நீங்கள் உதவுவீர்கள். நீங்கள் அவர்களுக்கு நம்பிக்கையைத் தருவீர்கள்." என்று அறிவுரை வழங்கினார்.

"திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே!"


"வாழி கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே!"

சிறப்பான கல்வி மூலம் ஞானம் பெற்று, செல்வத்தை தருகிற ; மன மகிழ்ச்சி தருகிற, பிணக்கமின்றி ஒருவரை ஒருவர் கூடி வாழவைக்கிற  கல்வி மூலம் மக்கள் அனைவரும் சமம் என்ற சிந்தனை மேலோங்கி நாங்கள் வாழ்வோம் என்கிறான் பாரதி . ஆனால் மலரின் தாயோ ஒரு படி மேலே போய்விட்டாள்!

முல்லைமலர் சட்டம் படிக்க பல்கலைக் கழகத்தில் நுழையும் போது, தனக்காக அல்ல, தன் சமூகத்திற்காக கல்வியில் வெற்றி பெறுவதைத் தவிர வேறு நோக்கம் இல்லை என்பதைத் தன்னுடன் எடுத்துச் சென்றாள். ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும், அவர்களின் நிலத்தை மீட்பதற்காகவும், அவர்களை நீண்டகாலமாக ஒதுக்கிவைத்திருந்த அமைப்பில் சமத்துவத்திற்காகவும் போராடும் ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்ற உறுதியுடன், தன்னை ஆர்வத்துடன் படிப்பில்  ஈடுபடுத்திக் கொண்டாள்.

ஆனால் பல்கலைக்கழக வாழ்க்கை எதிர்பாராத தொடர்புகளையும்  கொண்டு வந்தது. ஒரு நாள் முல்லைமலர் தன்னைப் போலவே, அங்கு  போரினால் இடம்பெயர்ந்த மூத்த தமிழ் மாணவரான ஆரூரானை தற்செயலாக நூலகத்தில் சந்தித்தாள். அவன் புத்திசாலியாகவும், இரக்கமுள்ளவனாகவும், மக்களின் நலனில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவனாகவும் இருந்தான். தமிழ் சமூகத்தின் எதிர்காலம், அவர்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் மற்றும் தமிழர்கள் தங்கள் மானத்தையும் மண்ணையும் மீட்டெடுக்கும் ஒரு சமூகத்தின் தொலைநோக்குப் பார்வையைப் பற்றி இருவரும் அதன் பின் பல மணி நேரம், பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக விவாதித்தனர்.

அதேவேளையில், அவர்களின் சந்திப்புக்கள், அவர்களுக்கிடையில் ஒரு ஆழமான பிணைப்பை ஏற்படுத்தி, அது நாளடைவில் காதலாக பரிணமித்தது. ஆரூரனும்அவளுடைய அன்பை, வலியை  புரிந்துகொண்டு, அவளது கனவுகளைப் பகிர்ந்து கொண்டான், அவர்களின் வாழ்க்கையின் குழப்பங்களுக்கு மத்தியில் அவனின் துணை அவளுக்கு அமைதியை அளித்தான்.

ஆனால் பரீட்சைகள் நெருங்க நெருங்க அவளது படிப்பும்  தீவிரமடைந்தது, அதேநேரம் தாயின் எதிர்பார்ப்புகளின் கனம் அவளை அழுத்தியதால், முல்லைமலர் தன்னால் எந்த கவனச்சிதறலையும் படிப்பில் ஏற்படுத்தக் கூடாது என்பதில் கவனமாகவும் இருந்தாள். அவளுடைய மக்களின் தேவை மிகவும் அவசரமானது. அதனால் கூடுதலாக படிப்பில் அக்கறை செலுத்தியதால், ஆரூரனுடனான அவளின் தொடர்புகள் குறைந்தன. 

"மன்னனு மாசறக் கற்றோனுஞ் சீர்தூக்கின்
மன்னனிற் கற்றோன் சிறப்புடையன்-மன்னற்குத்
தன்தேச மல்லாற் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றவிட மெல்லாம் சிறப்பு"

மன்னனையும் மாசு போகக் கற்றவனையும் சீர்தூக்கிப் பார்த்தால் மன்னனைக் காட்டிலும் கற்றவன் சிற்றப்புடையவன். எப்படி என்றால், மன்னனுக்கு அவனது ஆட்சிக்கு உட்பட்ட நாட்டில் மட்டுமே சிறப்பு. கற்றவனுக்கோ அவன் சென்ற இடத்திலெல்லாம் சிறப்பு. அந்த சிறப்பை கொடுப்பது சிறப்பு சித்தியடைதலால் ஏற்படும் மதிப்பே என்பது அவளுக்கு நன்றாகப் புரிந்தது. 

ஒரு நாள் மாலை, வவுனியாவில் உள்ள அவர்களது சிறிய அறையில், முல்லைமலர் தனது தாயிடம் தனது இதயத்தில் ஏற்பட்ட மோதலைப் பற்றி வெளிப்டையாகப் பேசினாள்.

"அம்மா," அவள் மெதுவாக தயக்கத்துடன் ஆரம்பித்தாள், "நான் பல்கலைக்கழகத்தில் ஒருவனை சந்தித்தேன். அவன் பெயர் ஆரூரன், எங்களுக்கிடையில் நல்ல புரிந்துணர்வு இருப்பதுடன் நாம் இருவரும்  நெருக்கமாகியும் விட்டோம். அவனும் என்னை மாதிரியே  எங்கள் மக்களின் போராட்டத்தைப் புரிந்துகொண்டு, நான் செய்ய முயற்சிப்பதை ஆதரிக்கிறான் என்றாலும், எனக்கு ஒரு பயமும்  இருக்கு..." என்றாள். 

மகளின் முகபாவத்தில் தெரிந்த அவளின் அவாவையும் விருப்பத்தையும் தெரிந்து கொண்ட அவளின் அம்மா அவளைப் உற்றுப் பார்த்தாள். "எதற்கு பயப்படுகிறாய், மலர்?"

“உங்களுக்கும் எங்கள் மக்களுக்கும் நான் என் மனதில் அளித்த வாக்குறுதியிலிருந்து, அந்த எங்கள் இலக்கிலிருந்து, காதல் ஒருவேளை  என்னைத் திசைதிருப்பும் என்று நான் எனோ பயப்படுகிறேன். நீங்கள் எனக்காக மிகவும் தியாகம் செய்துள்ளீர்கள், நான் உங்களை வீழ்த்த, உங்களுக்கு கவலை கொடுக்க விரும்பவில்லை. என் கவனத்தை, இந்த தருணத்தில்  இழக்க என்னால் முடியாது, அது தான் அந்தப் பயம்." என்றாள்.

அம்மா கையை நீட்டி மகளை கிட்ட அழைத்தவாறு, “என் குழந்தை, காதல் ஒரு அழகான விடயம். ஆனால் உங்கள் இதயம் இப்ப பிளவுபட்டதா என்று நீங்களே உங்களை கேட்டுக் கொள்ள வேண்டும். நாங்கள் முல்லைத்தீவில் இருந்து பல இழப்புகளுடன் வெகுதூரம் இன்று வந்துவிட்டோம், அதிக தியாகம் செய்துவிட்டோம் . நீ தான் என் ஒரே நம்பிக்கை. இந்த காதல் உன்னை  தடுத்து நிறுத்தும் என்று நீ  நம்பினால் மட்டும், நீ ஒரு தேர்வு கட்டாயம் விரைவில் செய்ய வேண்டும். உன் காதலா அல்லது உன் இலட்சியமா என்பதை என்றாள். 

அன்னையின் பேச்சைக் கேட்ட முல்லைமலரின் கண்கள் கண்ணீர் வழிந்தன. “எங்கள் மக்களை நான் தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்களுக்காக நான் போராடத் தேர்ந்தெடுக்க வேண்டும்" என்று உறுதியாக தாயிடம் சொன்னாள். 

பல்கலைக்கழகத்துக்கு திருப்பிய ஓரிரு நாட்களுக்குப் பிறகு, முல்லைமலர் ஆரூரானை வளாகத்தில் சந்தித்தாள். அவர்கள் இருவரும் ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்தனர், அங்கு அவர்கள் தங்கள் கனவுகள் மற்றும் எதிர்காலத்தைப் பற்றி பல உரையாடல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

“ஆரூரன்,” முல்லைமலர், உணர்ச்சியால் கனத்த குரலில், “நான் உன்னுடன் ஒன்று பேச வேண்டும்” என்று ஆரம்பித்தாள்.

ஆரூரன் அவளை ஏறிட்டு பார்த்தான். “என்ன தப்பு, மலர்? ஏன் நீ இன்று தள்ளி , இடைவெளி விட்டு இருக்கிறாய்" கவலையுடன் கேட்டான்.  

"நான் எங்களைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்," அவள் குரல் கொஞ்சம் நடுங்கியது. "நான் உன்னை ஆழமாக நேசிக்கிறேன், உன்னை என்றும் மறக்க மாட்டேன், ஆனால் எனக்கு ஒரு பொறுப்பு இருக்கிறது - அதை என்னால் புறக்கணிக்க முடியாது. என் மக்களுக்கு நான் தேவை. நான் படித்து, பட்டம் பெற்று, எழுந்து நீதிக்காக போராட வேண்டும் என என் அம்மா எல்லாவற்றையும் தியாகம் செய்தார். அதிலிருந்து என்னைத் திசைதிருப்ப எதையும் அனுமதிக்க முடியாது, அதனால்த்தான் காதலை, அதன் உணர்வை கொஞ்சம் மறக்க முயலுகிறேன்" என்றாள்.


 
அவன் அமைதியாக இருக்க முயன்றாலும் ஆருரனின் முகம் வாடியது. “மலர், உங்கள் அர்ப்பணிப்பு எனக்குப் புரிகிறது. ஆனால் காதலுக்கும் சேவைக்கும் இடையே நாம் தேர்வு செய்ய வேண்டியதில்லை. நாங்கள் ஒன்றாக வலுவாக இருக்க முடியும், அருகருகே ஒன்றாக அங்கே வேலை செய்யலாம்" என்றான்.

முல்லைமலர் ஒரு தயக்கத்துடனும் அதேநேரம் ஒருவித உணர்வுடனும் தன் தலையை ஆட்டினாள், கண்களில் கண்ணீர் வழிந்தது. "அது உண்மையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எனவே இரண்டு தோணியில் இப்ப கால் வைக்க விருப்பவில்லை. என் கவனம் உடனடியாக இன்று வாடி இருக்கும் எம் மக்களுக்கு செலுத்த வேண்டும், அதில் உறுதியாக இருக்கிறேன். நான் தோல்வியுற்றால், அவர்களின்  நம்பிக்கையை மட்டுமல்ல எல்லாவற்றையும் நான் இழக்க வேண்டி வரும், என் அம்மாவின் தியாகம் உட்பட. நான் அதை நடக்க அனுமதிக்க முடியாது." என்றாள்.

ஆரூரன் மெல்ல தலையசைத்தான், இதயம் கனத்தது. “நான் உன்னை மதிக்கிறேன், மலர். நீங்கள் செய்ய வேண்டியது இதுதான் என்றால், நான் உன் வழியில் தடையாக என்றும் நிற்க மாட்டேன். தூரத்தில் இருந்தாலும், கட்டாயம்  நான் உன்னை அங்கிருந்து ஆதரிப்பேன், நேசிப்பேன்." என்றான்.  

அதன் பிறகு தன் தனிப்பட்ட உணர்வுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, முல்லைமலர் படிப்பில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டாள் . அவளுடைய கடின உழைப்பும் உறுதியும் பலனளித்தன. அவள் கௌரவ பட்டம் பெற்றாள், ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காக நிற்பதற்காக ஒரு இளம் வழக்கறிஞராகப் புகழ் பெற்றாள். போரினால் பாதிக்கப்பட்ட வடக்கிற்குத் திரும்பிய அவள், அங்கு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட காணிகளை மீட்பதற்காகவும், இடம்பெயர்ந்த தமிழ்க் குடும்பங்களுக்கு நீதி கிடைக்கவும் அயராது போராடத் தொடங்கினாள்.

முல்லைமலரின் பெயர் விரைவில் நம்பிக்கை அடையாளமாக  மாறியது. அவள்  சந்திப்புகளை ஏற்பாடு செய்தாள், விழிப்புணர்வை ஏற்படுத்தினாள் மற்றும் வேறு யாரும் செய்யத் துணியாத வழக்குகளை எடுத்துக் கொண்டாள். அவளது பேரார்வம் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு முழுவதும் உள்ள தமிழர்களுக்கு சம உரிமை கோரி ஒரு இயக்கத்தைத் தூண்டியது. அவளின் அம்மாவின் கனவு நனவாகி விட்டது - முல்லைமலர் தன் மக்களின் முதன்மைக் குரலாக மாறினாள்.

காதலை தற்காலிகமாக அல்லது நிரந்தரமாக துறந்தாலும் முல்லைமலர் தன் பணியில் அதேநேரம் நிறைவு கண்டாள். நீதிக்கான காரணத்திற்காக தன்னை முழுமையாக அர்ப்பணிக்க அவள் தேர்வு செய்தது முற்றிலும் சரி என்று உணர்ந்தாள், எல்லாவற்றையும் இழந்தவர்களுக்கு கண்ணியத்தை மீட்டெடுக்க அவளுடைய முயற்சிகள் உதவியது. அவள் மூலமாக, முல்லைத்தீவு மற்றும் அதற்கு அப்பால் உள்ள மக்கள் தமது உரிமைகள் மீட்கப்பட்டு, தமது நிலம், தமது வலிந்து காணாமல் போனவர்கள் மற்றும் அன்றாட அத்துமீறலுக்கு ஒரு முடிவு காணும் வரை ஓயாத ஒரு அலையைக் கண்டனர்.

முல்லைமலர் தன் மக்களுக்கு நம்பிக்கையை அளிக்க தன் இதயத்தில் மலர்ந்த காதலை துறந்தாள். இறுதியில், தன் மக்கள் மீதான அவளுடைய காதல் எல்லாவற்றிலும் மிகப்பெரிய அன்பாக மாறியது. அவள் பெற்ற அந்த கல்வி தான் அவளை வாடிய நொந்த மக்களுக்கு ஒரு விடிவெள்ளியாக, ஒரு கலங்கரை விளக்காக மாற்றியது. அவளை, அந்த பெருமை மிக்க நிலைக்கு, "கரை சேர்த்த கல்வி" யை அவள் என்றும் மறக்கவில்லை! "கற்ககசடறகற்பனவகற்றபின் நிற்கஅதற்குத்தக" என்பது அவளின் உள்ளத்தில் என்றும் நிலைத்து இருந்தது!!  

 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

465985912_10227021821474252_7814779757882291476_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=Io1xzmWNvC0Q7kNvgHfo03M&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AiWDFppMjSk_QBpX0AJcSgn&oh=00_AYC1_FJxfRRGXMUtocIXzSders9Yp181yntsSOSnoJ8MBg&oe=6734E6C7  466110537_10227021821354249_7829604073022100222_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=1cxm9vpSfIMQ7kNvgFGZrJa&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AiWDFppMjSk_QBpX0AJcSgn&oh=00_AYCXSS7U9n4RVWzLleSJ0HR_3GBrwxWvrmc-y3txpbDz0Q&oe=6734F31A  466010385_10227021819514203_566653461614785471_n.jpg?_nc_cat=110&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=op227vqp9NgQ7kNvgHYdx65&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=AiWDFppMjSk_QBpX0AJcSgn&oh=00_AYD3F3gB3y0HSoAO_JCBcEhXHEmDiyO9XUtTArqUJZFFqw&oe=6734F7D3

 

பூனைத்தொடுவாய் தளத்தை தாக்க தரையிறங்கிய படையினர் மீதான முறியடிப்பு சமர்

1 month 3 weeks ago

https://irruppu.com/2022/11/01/முல்லைத்தீவு-பூனைத்தொடு/

 

கடற்புலிகளின் முல்லைத்தீவு பூனைத்தொடுவாயில் அமைந்திருந்த கடற்கண்காணிப்புத் தளம் அப்போது வெற்றிலைக்கேணி மற்றும் கட்டைக்காடு இராணுவ கூட்டுதளத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. இதனை அழித்தொழிக்க  சிங்களப்படை பல முயற்சிகள் மேற்கொண்ட போதிலும் அவை வெற்றிபெறவில்லை.

இருந்தும் சிங்களக் கடற்படை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் கடல்வழி மூலம் தரையிறங்கி தாக்குவற்காக அமெரிக்காவில் கடற்பயிற்சி பெற்று நாடுதிரும்பிய சிங்களக் கடற்படையை வைத்து சிறப்புப் படகு படை (Special Boat Squadron ) ஒன்றை உருவாக்கி அதன் முதலாவது தாக்குதலாக சிங்களக் கடற்படை முல்லைத்தீவு பூனைத்தொடுவாய் கடற்புலிகளின் கடற்கண்காணிப்புத்தளத்தை தெரிவு செய்தது.

அதற்கமைவாக 20.10.1996  அன்று காலை வெற்றிலைக்கேணி முகாமிலிருந்து ஆட்லறி மற்றும் மோட்டார் சூட்டாதரவுடனும் கடற்படை மற்றும் விமானப்படையின் பலமான சூட்டாதரவு வழங்க தனது கன்னித்தரையிறக்கத்தை மேற்கொண்டது.

இச் சிறப்புக் கடற்படை மீது  கண்காணிப்புத்தளப் பாதுகாப்பிற்காக நின்ற கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான சூட்டி படையணியினர்  சிங்களப்படைகளின் செறிவான தாக்குதலுக்கும் மத்தியில் ஒரு வீரம்செறிந்த மின்னல்வேக முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர்.

இவ்வெற்றிகர முறியடிப்புத்தாக்குதலில் இரண்டு படகு மூழ்கடிக்கப்பட்டதுடன் பல கடற்படையினர் கொல்லப்பட்டனர் , பல நவீனரக ஆயுதங்களும் கைப்பற்றப்படன. இத் தாக்குதலிலிலேயே கடற்புலிகளால் இலகுவாகக் கையாளக்கூடிய அதி நவீன ஒட்டோ டொங்கான் முதன்முதலாகக் கைப்பற்றப்பட்டது.

இந்த வெற்றிகர முறிப்புத்தாக்குதலில் நாற்பத்தியிரண்டு போராளிகள் பங்கேற்றனர். இத் தக்குதலில் மூன்று போராளிகள் வீரச்சாவடைந்தனர். 

இத்தாக்குதலில் அப்போதைய சூட்டி படையணித் தளபதி களத்தை வழிநடாத்த அனைத்து நடவடிக்கைளையும் ஒருங்கினைத்து கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழிநடாத்தியிருந்தார்.

பல கற்பனைகளோடும் தொடர்ந்து கடல்வழிமூலம் தரையிறங்கி விடுதலைப்புலிகளுக்கு தொல்லை கொடுக்கலாம் என நினைத்த சிங்கள தலைமைக்கும் கடற்புலிகளின் தரைத்தாக்குதற் படையணியான லெப். கேணல் சூட்டி படையணிப் போராளிகள் கொடுத்த தக்க பதிலடியால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இனிமேல்  தரையிறங்கித் தாக்க முடியாது என்பதால் சிங்களத்தின்  சிறப்புப் படையணியும் கலைக்கப்பட்டது.

இத்தாக்குதலில் பங்குபற்றியவரின் உறுதுணையுடன்,
எழுத்துருவாக்கம், சு,குணா,

சமாதான காலத்தில் தமிழீழத்திற்கு வந்து போராளியான தமிழ்நாட்டுப் பெண்

2 months ago

சமாதான காலத்தில் தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலாவிற்கு வந்தார் அன்னார். அப்போது தனது குடும்பத்தினருடன் இவர் வந்ததாக அறியக் கூடியதாக உள்ளது. இவரின் குடும்பத்தில் தந்தையார் ஒரு தமிழ்ப் பற்றாளர் என்று அறியப்படுகிறார். 

பின்னர் இவரின் தந்தையால் ஓமந்தை வழியாக வன்னிக்கு அழைத்து வரப்பட்டார். அங்கு புலிகளின் அரசியல்துறையினரிடம் தமிழீழத்தின் விடுதலைக்காக போராடவென அன்னார் ஒப்படைக்கப்பட்டார். 

பின்னர் ஒரு புதிய போராளிக்குச் செய்யப்படும் அடிப்படைத் தகவல்கள் இவரிடமும் எடுக்கப்பட்டு பயிற்சிமுகாமிற்கு அனுப்பட்டு போராளியானார். 

பின்னாளில், 2006இல் நான்காம் ஈழப்போர் வெடித்த போது இவர் மன்னார் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலையில் (Forward Defence Line) களமிறக்கப்பட்டார். அங்கு மாலதி/சோதியா படையணியின் ஒரு பகுதியில் (9 பேர்) போராளியாக களமாடினார். 

ஏறத்தாழ 10ம் மாதத்திற்குப் பின்னர் நடந்த சமரொன்றின் போது இவரின் பகுதியில் ஒருவர் தவிர்ந்து ஏனையோர் அனைவரும் வீரச்சாவடைந்ததாக ஒன்மரில் பிழைத்த அந்த ஒரேயொரு போராளி தெரிவித்தார். எனவே இவர் வீரச்சாவடைந்து விட்டதாகவே தெரிகிறது.  

இவரின் இயக்கப்பெயர் "இசைநிலா" என்பதாகும்.

 

தகவல் மூலம்:

  • ஒன்மரில் பிழைத்த அந்த ஒரே போராளி

ஆக்கம் & வெளியீடு
நன்னிச் சோழன்

"தனிமரம்"

2 months ago

"தனிமரம்"

மாங்குளம் என்ற அமைதியான, போர் சூழல் இன்று மறக்கப்பட்ட,  கிராமத்தில் ஒரு தனி ஆலமரம் நின்றது, அதன் வேர்கள், குண்டுகளாலும் ஷெல்களாலும் எரிந்த பூமியில் ஆழமாக மண்ணுக்குள் நீண்டு இருந்தது. அதன்  கீழ் ஒரு தமிழ்த் தாய் சுந்தரி அமர்ந்திருந்தாள். அவளது வாழ்க்கை தன்னைச் சுற்றியுள்ள நிலத்தைப் போல வாடி, தனிமையாகி இருந்தது. போர் முடிந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன, ஆனால் சுந்தரிக்கு அவள் இதயத்தில் போர் இன்னும் முடியவில்லை, ஏனென்றால் அவள் குடும்பம் - அவளது கணவர் மற்றும் மூன்று குழந்தைகள் - விசாரணைக்காக இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள். ஆனால் அதன்பின் இன்னும்  திரும்பி வரவில்லை.

உள்நாட்டுப் போரின் முடிவு அமைதியின் கொடூரமான சாயலைக் கொண்டு வந்தது. போர் நிறுத்தத்தை தொடர்ந்து வந்த நாட்களில், தாங்கள் சந்தேகிக்கப்படும் ஆண்கள், பெண்கள்  மற்றும் சிறுவர்கள் அனைவரையும் விசாரணைக்காக சரணடையுமாறு கோரி சீருடை அணிந்த அரச ஆயுத படையினர் அவளது கிராமத்தின் வழியாக ஊர்வலமாக சென்றனர். சுந்தரியின் கணவர் ராகவன், சிவா மற்றும் அர்ஜுனன் என்ற இரு மகன்களுடன் அவளது மகள் மீனா, வெறும் பதினேழு வயதுடையவளும் அழைத்துச் செல்லப்பட்டாள். சுந்தரி "அவள் ஒரு சிறிய பெண்" என்று கெஞ்சினாள், அழுதாள். ஆனால், வீரர்கள் காது கேளாதவர்களாக மாறி, எண்ணற்ற மற்றவர்களுடன் அவர்களை ஒரு டிரக்கின் [ஒரு பெரிய சாலை வாகனம்] பின்புறத்தில் தள்ளினார்கள். வழக்கமான விசாரணைக்குப் பிறகு திரும்பி அனுப்புவோம் என்று ராணுவ வீரர்கள் உறுதியளித்தனர். ஆனால் நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் மாறி, இப்போது பதினைந்து வருடங்கள் வேதனையளிக்கின்றன.

பதினைந்து ஆண்டுகளாக சுந்தரி  கிராமத்தில் "தனிமரம்" மாக இன்னும் தன் கணவனும் மூன்று பிள்ளைகளும் வருவார்கள் வருவார்கள் என்று கண்ணீருடன், அதிகமாக  அவள்  விடியற்காலையில் இருந்து மாலை வரை ஆலமரத்தின் அடியில் அமர்ந்து, தனது அன்புக்குரியவர்களின் பார்வைக்காக தினம் காத்திருந்தாள். மாங்குள கிராமவாசிகள், அவள் முதுகுக்குப் பின்னால் பரிதாபமான வார்த்தைகளைக் கிசுகிசுத்தாலும், அவளுடைய வலிமையைப் பாராட்ட என்றும் தயங்கவில்லை. ஆனால் சுந்தரியின் இடைவிடாத தேடல் மற்றும் அதற்காக அவளின் பரந்தப் பட்ட  குரலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கவனத்தை ஈர்த்ததால், அது ஒரு அகிம்சை போராட்டமாக வலுப்பெற தொடங்கியது.  

அவளுடைய போராட்டம் வெறும் துயரம் மட்டுமல்ல, அவளை மௌனமாக்க விரும்பும் சக்திகளுக்கு எதிரான ஒரு நிலையான போராட்டம் ஆகும். சில மாதங்களுக்கு ஒருமுறை, அவள் தலைநகருக்குச் சென்று, அரசாங்கத்திடம் மனு தாக்கல் செய்வாள், இராணுவ முகாம்களின் கதவுகளைத் தட்டுவாள், மனித உரிமை அமைப்புகளின் அலுவலகங்களுக்குச் செல்வாள். ஆனால் ஒவ்வொரு முறையும், அவள் சரியான பதில் ஒன்றையும் பெற முடியவில்லை. அவள் பலவழிகளில் பயப்படுத்தப்பட்டும் மோசமாகவுமே கையாளப்பட்டாள். அது மட்டும் அல்ல,  அவளது குடும்ப உறுப்பினர்கள் எவருமே  இதுவரை காவலில் வைக்கப்படவில்லை என மறுத்தது. "அவர்கள் வேறு நாட்டிற்கு தப்பிச் சென்றிருக்க வேண்டும்" என்றும் "ஒருவேளை அவர்கள் இறந்திருக்கலாம்." என்றும் ஏளனமாக கூறியும் வந்தது. ஆனால் சுந்தரிக்கு உண்மை தெரியும் -  அவளுடைய குடும்பம் தனக்கு முன்னாலேயே அழைத்துச் செல்லப்பட்டது, அவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. 

சுந்தரி தனது பல வருட தேடுதலில் இறுதியாக உள்ளூர் இராணுவத் தளபதியுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய முடிந்தது. அவனுடன் சில நிமிடங்கள் அனுமதிக்கப்படுவதற்காக அவள் பல நாட்கள் அங்கு பயணம் செய்துள்ளாள், கொளுத்தும் வெயிலில் மணிக்கணக்கில் வெளியே காத்து நின்று இருக்கிறாள். அவள் இறுதியாக ராணுவ முகாமுக்குள் உள்ள சிறிய அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அங்கு மேசைக்குப் பின்னால் இருந்த அலுவலகர் அவள் சமர்ப்பித்த அத்தாட்ச்சிகளையோ அல்லது அவளின் வேண்டுகோள் நிறைந்த கடிதத்தையோ ஏறிட்டு  கூட பார்க்கவில்லை.

ஆனால் அவள் தளரவில்லை. ஔவையின் மூதுரையை தனக்குள் முணுமுணுத்தாள் 

"அடுத்தடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா – தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா"

ஒரு காரியம் நிறைவேற வேண்டுமென்று தொடர்ந்து முயற்சிகள் செய்தாலும், ஆக வேண்டிய காலம் வந்தால்தான் ஆகும். மரம் உயரமாக வளர்ந்துவிட்டது என்பதற்காக உடனே பழம் பழுக்கத் தொடங்கிவிடுமா? பூப்பூத்துக் காய் காய்த்துப் பழுக்கிற காலத்தில்தான் பழுக்கும் என்று அவளுக்கு தெரியும். ஆனால் அந்த காலத்தை விரைவில் கொண்டுவர முடியும் என்ற நம்பிக்கை, அவளின் முயற்சியை ஊக்கிவித்துக் கொண்டே இருந்தது. தளர்ச்சியடையாமல் தொடர்ந்து முயல்க. ஒரு முறை, இருமுறை அல்ல, ஓராயிரம் முறையானாலும் முயல்க. அயராமல் செய்கிற முயற்சி உரிய பயனைத் தரும் என்ற வள்ளுவரின் குறள் - "ஊழையும் உப்பக்கம் காண்பர், உலைவுஇன்றித் தாழாது உஞற்று பவர்" - அவளுக்கு மனம் சோராமல் தொடர்ந்து போராட பலம் கொடுத்தது.

"ஐயா, பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என் கணவரையும் மூன்று குழந்தைகளையும் உங்கள் ஆட்கள் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அவர்கள் திரும்பி வருவார்கள் என்று பல முறை என்னிடம் கூறினார்கள், ஆனால்  எதுவும் இன்னும் நடக்கவில்லை. நான் உங்களிடம் கெஞ்சுகிறேன், தயவுசெய்து அவர்களைக் கண்டுபிடிக்க எனக்கு உதவுங்கள்."

தளபதியின் குரல் எந்த தயக்கமும் கருணையும் இல்லாமல் . "நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். மோதலின் போது பலர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். உங்கள் குடும்பம் அரசுக்கு எதிராக தொடர்புபட்டிருந்தால், அவர்கள் ஒருவேளை வேறுவிதமான விதியை சந்தித்திருக்கலாம்? "

சுந்தரியின் இதயம் இறுகியது. "ஆனால் அவர்கள் போராளிகள் இல்லை ஐயா. அவர்கள் சாதாரண மனிதர்கள். என் மகளுக்கு பதினேழு வயதுதான். நான் எல்லா இடங்களிலும் தேடினேன். தயவுசெய்து அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று எனக்குத் தெரிய வேண்டும். நீங்கள் தான் பிடித்துக்கொண்டு போயிருந்தீர்கள் , அப்படியென்றால் என்ன நடந்தது கட்டாயம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும், எதுவாகினும், அவர்களும் இந்த நாட்டின் மூத்த குடிகள் "

தளபதி இறுதியாக மேலே பார்த்தார், அவரது கண்கள் கடினமாகவும் அலட்சியமாகவும் இருந்தன. "இந்த வழக்குகள் பொதுவானவை, பெண்ணே. பலர் காணாமல் போனார்கள். இதை வைத்து உங்கள் நேரத்தை வீணடிக்கிறீர்கள். பதிவுகள் இல்லை. வேண்டும் என்றால் மரணச்சான்றிதலும் இழப்பீடும் தரலாம். அதற்க்கான வழியை பாருங்கள். அதை பெற்று  இதை மறந்துவிட்டு, உங்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருங்கள்." 

"ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியும் வரை என்னால் நகர முடியாது," சுந்தரியின் குரல் உடைந்தது, ஆனால் அவள் அவன் முன் அழாமல், ஒரு கண்ணகியாக நின்றாள். "தயவுசெய்து, என் மகள் ஒரு குழந்தை, பெண் குழந்தை, அவளை என்ன செய்தீர்கள்? ,பொய் சொல்லவேண்டாம் ? உங்களுக்கு குழந்தைகள் ஒன்றும் இல்லையா?"அவள் கோபத்தில் கேட்டாள்.  

தளபதி நாற்காலியில் சாய்ந்தார், கண்ணை மூடினார், பின் வேறு பக்கம் பார்த்துக்கொண்டு  "அம்மா வீட்டுக்குப் போ. உன் புரிதலுக்கு அப்பாற்பட்ட விடயங்களில் உன்னை ஈடுபடுத்தாதே." அதட்டிப் பேசினான். புத்த சமயம் வாழ்வதாக கூறும் பூமியில், நீதி, மனிதம் இறந்துவிட்டது!!

பல ஆண்டுகளுக்குப் பிறகு, அவளின் விடாமுயற்சியின் பயனாக, சுந்தரி நீதிமன்ற அறையில் நீதிபதியின் முன் நின்றாள். இது தமிழரினதும் உலகத்தினதும் கவனத்தை ஈர்த்த ஒரு வழக்கு - அவளைப் போன்ற தாய்மார்களின் சாட்சியம் மற்றும்  யாருடைய மகன்கள், மகள்கள், கணவர்கள் வலிந்து காணாமல் போனார்களோ அவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர், இதுவே அவளுடைய கடைசி நம்பிக்கையாக இருந்தது. இறுதியாக இது அரசாங்கத்தை, உண்மையை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தும் என நம்பினாள்.   

நீதிபதி, சோர்வான கண்களுடன் கூடிய ஒரு முதியவர், அவளது வழக்கறிஞர் தனது வழக்கை முன்வைப்பதைக் உற்றுக் கேட்டார். மனித உரிமை மீறல்கள், இதுவரை விசாரிக்கப்படாத வலிந்து காணாமல் போனவர்கள் பற்றி வழக்கறிஞர் மிக விபரமாக சாட்சிகளுடன் பேசினார். அவள், சாட்சியாகவும், வழக்கிட்ட நபராகவும்  தனக்கு வரும் பேசும் தருணத்திற்காக காத்திருந்த சுந்தரியின் இதயம் துடித்தது.

நீதிபதி அவளை முன்னோக்கி அழைத்தபோது, சுந்தரி தொண்டையில் ஒரு கட்டியை உணர்ந்தாள். "நான் பதினைந்து வருடங்களாக என் குடும்பத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்," என்று அவள் ஆரம்பித்தாள், அவள் குரல் தளதளத்தது, கண்ணீர் வடிந்தது, ஆனால் உறுதியாக சாட்சி கூட்டில் நின்றாள். "என் கணவர், என் மகன்கள், என் மகள் அனைவரையும் இராணுவம் பிடித்துச் சென்றது. நான் ஒவ்வொரு அரச அதிகாரத்தையும் கேட்டேன், கெஞ்சினேன், ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று யாரும் என்னிடம் இதுவரை சொல்ல மறுத்தார்கள், எனக்கு உண்மை மட்டுமே வேண்டும்."

நீதிபதி பெருமூச்சு விட்டார். "அம்மா, இது நடந்தது ஒரு கடினமான காலத்தில் , நீண்ட மற்றும் இரத்தக்களரி போரில். பலர் காணாமல் போனார்கள்." என்று அவளைப்பார்த்து கூறினார்.

அவள், சுந்தரி , வாய்விட்டு சிரித்தாள், "கணம் நிறைந்த நீதிபதி அவர்களே, நான் கேட்பது போர் முடிந்தபின், முடிவிற்கு வந்தபின், விசாரணைக்கு என, அரசின் கோரிக்கைக்கு இணங்க சரணடைந்து, அவர்களால் அழைத்துச்செல்லப்பட்டு வலிந்து காணாமல் போனவர்களையே, அதை நீங்கள் முதலில் விளங்கி கொள்ளுங்கள்" என்றாள். அதைத்த தொடர்ந்து 

"உங்கள் குடும்பம் வீட்டிற்கு வருவதற்கு ஒவ்வொரு நாளும் காத்திருப்பது என்னவென்று உங்களுக்கு புரிகிறதா?" சுந்தரியின் குரல் வலுத்தது. "நான் ஒவ்வொரு நாளும் அந்த மரத்தின் அடியில் உட்கார்ந்து, அவர்கள் திரும்பி வரவேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். ஆனால் ஒருபோதும் இதுவரை நடக்கவில்லை . அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை நான் அறியும் வரை நான் ஓய்வெடுக்க மாட்டேன்." என்றாள். 

நீதிபதி சங்கடமான நிலையை உணர்ந்தார்.  "நீதிமன்றம் உங்கள் மனுவை பரிசீலிக்கும். நாங்கள் இந்த விடயத்தை மேலும் விசாரிப்போம், ஆனால் இந்த வழக்குகள் சிக்கலானவை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நேரம் ஆகலாம்." அவரின் கவனம் நீதியை நிலைநாட்டுவதை விட, சமாளிப்பதிலேயே முழு கவனமாக இருந்தார். 

"நான் ஏற்கனவே பதினைந்து வருடங்கள் காத்திருக்கிறேன்," அவள் சொன்னாள், அவள் குரல் ஆத்திரமும் சோகமும் கலந்து நடுங்கியது. "நான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டும்?", ஆனால் நீதிபதி எந்த பதிலையும் வழங்காமல் வழமை போல் வழக்கை ஒத்திவைத்தார். 

மெதுவாக நகரும் சட்ட அமைப்பில் சுந்தரியின் விரக்தி இறுதியில் அவளை எதிர்ப்பில் சேர வழிவகுத்தது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் முழுவதிலும் தொடர்ந்து நடைபெறும் வலிந்து காணாமல் போனோர் சங்கத்தின் ஆர்ப்பாட்டங்களில் அவள் முதல் முறையாக இணைந்துகொண்டாள், என்றாலும் தனிமரமாக தன் நடவடிக்கைகளையும் தொடர்ந்தாள். சுந்தரி , மற்ற தாய்மார்கள் மற்றும் விதவைகளுடன் சேர்ந்து, காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்களின் படங்களைப் பிடித்தபடி தெருக்களில் அணிவகுத்துச் செல்லத் தொடங்கினார்.

அத்தகைய ஒரு போராட்டத்தில், ஒரு நாள், சுந்தரி ஒரு அரசாங்க கட்டிடத்தின் முன் நின்று, “எங்கள் குழந்தைகள் எங்கே?” என்று எழுதப்பட்ட ஒரு பதாகையை வைத்திருந்தார். கூட்டம் பதட்டமாக இருந்தது, அவர்களின் குரல்கள் தெருக்களில் எதிரொலிக்கும் கோஷங்களில் எழுந்தன.

போராட்டக்காரர்கள் சத்தம் எழுப்பியதையடுத்து, ஆயுதம் ஏந்திய போலீசாரும் ராணுவத்தினரும் அவர்களை சுற்றி வளைத்தனர். ஒரு அதிகாரி சுந்தரியையும் மற்ற பெண்களையும் அணுகினார். அவன் முகம் கடினமாக இருந்தது, அவமானத்தால் கண்கள் சுருங்கியது. "இந்த போராட்டம் சட்டவிரோதமானது," என்று அவன் நாயைப் போல  குரைத்தான். உடனே கலைந்து செல்லுங்கள், இல்லையெனில் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டினான். 

ஆனால், சுந்தரி குரலை உயர்த்தி முன்னேறினாள். "நாங்கள் நீண்ட நேரம் அமைதியாக காத்திருந்தோம், உண்மை தெரியும் வரை நாங்கள் வெளியேற மாட்டோம்." என உறுதியாக கூறி, அந்த இடத்தில் மற்றவர்களுடன் அமர்ந்தாள். 

அதிகாரி ஏளனமாக சிரித்த படி  "எதுவும் இல்லாத இந்த  இடத்தில் நீங்கள் சிக்கலை ஏற்படுத்துகிறீர்கள். உங்களுக்கு நிலைமை மோசமாகும் முன் வீட்டிற்குச் செல்லுங்கள்." மீண்டும் தன் துப்பாக்கியை காட்டி எச்சரித்தான்.  

"விடயங்கள் ஏற்கனவே மோசமாக உள்ளன," சுந்தரி மீண்டும் கத்தினாள். "நீ என் குடும்பத்தை அழைத்து சென்றாய். எனக்கு இழப்பதற்கு எதுவும் இல்லை. உனக்கு வேண்டுமானால் என்னை கைது செய். ஆனால் எங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே என்று கேட்பதை நாங்கள் நிறுத்த மாட்டோம்!" அவளும் எச்சரித்தாள். 

கூட்டத்தினர் கைதட்டல் மற்றும் முழக்கங்களுடன் தமது போராட்டத்தை தொடர்ந்தனர். அவர்களின் எதிர்ப்பின் சத்தம் அந்த சூழலில் எங்கும் காதுகளில் ஒலித்தது. அவள் பல வருட போராட்டத்தின் வலியை ஆழமாக உணர்ந்தாள். இராணுவத்தால், அரசாங்கத்தால், நீதிமன்றத்தால் தாம் எந்த தீர்வும் இன்றி அவதிப்படுவதை உணர்ந்தாள். தன்னந்தனியாக அவள் மீண்டும் தினமும் காத்திருக்கும்  தனி ஆலமரத்தின் அடியில் போய் அமர்ந்தாள். 

அவளது குடும்பம் அரசபடையால் கொண்டு செல்லப்பட்டு  பதினைந்தாவது ஆண்டு நிறைவை நெருங்கும் வேளையில், சுந்தரியின் பலவீனமான உடல் மீண்டும் தலைநகருக்கு பயணத்தை மேற்கொண்டது. இம்முறை, போரின் போது காணாமல் போன பொதுமக்கள் தொடர்பில் விசாரணை செய்வதாக உறுதியளித்த புதிதாக உருவாக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு அவள் சென்றாள். அவள் இதன் தந்திரத்தை, உலகை ஏமாற்றும் வேலையை கேள்விப்பட்டிருந்தாள், ஆனால் அவளுடைய இதயத்தில் ஏதோ ஒன்று, ஒருவேளை கடைசி நம்பிக்கையின் மினுமினுப்பு, கடைசியாக ஒரு முறை முயற்சி செய்ய அவளை வற்புறுத்தியது.

சுந்தரி தனது குடும்பத்தின் மங்கலான புகைப்படத்தை அங்கு வழங்கினாள், பல வருடங்கள் தன்  மார்போடு நெருக்கமாக வைத்திருந்த படங்கள் அவை. "இவர்கள் என் அன்புக்குரியவர்கள்," அவள் குரல் கரகரப்பான ஆனால் நிதானமாக இருந்தது. "அவர்களுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரிய வேண்டும். நான் அவர்களை, நான் இறக்கும் முன்பு எம்  வீட்டிற்கு அழைத்து வர வேண்டும்." அவள் கெஞ்சினாள். 

அதிகாரிகள் அவளை இம்முறை கொஞ்சம் அனுதாபத்துடன் பார்த்தார்கள், ஆனால் இது உண்மையான அனுதாபமா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது? அவர்களின் கண்கள், அவள் மீண்டும் மீண்டும் பார்த்த, அதே உதவியற்ற கருணையற்ற  தன்மையால் நிரம்பியிருந்தன. அவர்கள் விசாரிப்பதாகவும், காப்பகங்களை மறுபரிசீலனை செய்வதாகவும், சாட்சிகளை அணுகுவதாகவும் உறுதியளித்தனர். அவர்களின் வார்த்தைகளின் பழக்கமான ஓட்டை அவளுக்குத் தெரிந்திருந்தாலும், சுந்தரியால் நம்புவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.  

நீண்ட பயணத்தை மீண்டும் மாங்குளம் நோக்கிச் சென்றபோது, உடல் வலுவிழந்தாலும், நம்பிக்கையும் எதிர்பார்ப்பும்  இன்னும் அந்த பலவீனமான உடலில் ஒட்டிக்கொண்டிருக்க, தன் போராட்டம் இன்னும் வெகு தொலைவில் இருப்பதை சுந்தரி அறிந்தாள். தனி ஆலமரம், தனிமரமான  அவளுக்காகக் காத்திருந்தது, அதன் வேர்கள் அவளுடன் பிணைக்கப்படாத விடாமுயற்சியின் பிணைப்பில் பின்னிப்பிணைந்தன.

அதனால் அவள் அந்தத் தனிமரம் போலத் தொடர்வாள் - காலத்தின் காற்றுக்கு எதிராக தனித்து நின்று, காத்திருந்து, தேடி, தன் குடும்பத்தின் நினைவை மங்க விட மறுத்து, எத்தனை சக்திகள் அவளை அலைக்கழித்தாலும், அவளுடைய அன்புக்குரியவர்கள் திரும்பி வரும் வரை, போர் முடிக்க மாட்டாள்,  ஓய்வெடுக்க மாட்டாள் என்று எல்லோரும் நம்பியிருந்த அந்த வேளையில் ...  

நேற்று கனவில்

"புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார்.
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் கொன்றனர்.
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே
அவரது சடலம் குருதியில் கிடந்தது!"

இன்று நனவில்

"தனிமரம் சுந்தரி நீதிமறுக்கப்பட்டார் 
சிவில் உடை அணிந்த
அரச காவலர் அவரைக் மிரட்டினர் 
ஆல மரத்தின் அடியருகே
அவளது சடலம் வாள்வெட்டுடன் கிடந்தது!"  

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

463833041_10226617057835414_7360188848925289759_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=3ZAMXppWKecQ7kNvgGGOwZk&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=Agh8C_zPuMirsa4Brd1miVO&oh=00_AYAvBJ0TRx42v_qeYMJzmx0dArSDn8mDujxSxqzS9T1ayg&oe=6719282F


 

"கல்லூரிக் காதல்"

2 months ago

"கல்லூரிக் காதல்"

யாழ்ப்பாணம், இலங்கை மிக நீண்ட வரலாற்று பாரம்பரியமுள்ள ஒரு பிரதேசமாகும். குறிப்பாக, இப் பிரதேசப் பாரம்பரிய பண்பாட்டம்சங்கள் மிக நீண்ட வரலாற்றை உடையதுடன் தனித்துவமானவையாகவும் காணப்படுகிறது. உதாரணம் மொழி, மதம், சடங்கு சம்பிரதாயங்கள், விவசாயம் தொழில்நுட்ப முறைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், கட்டிடஅமைப்பு முறை, மடம் , சுமைதாங்கி, ஆவுரஞ்சி, ஆலயங்கள் போன்றற்றை குறிப்பிடலாம். அது மட்டும் அல்ல எதிர்பாராத அன்பின் ஒரு இடமாகவும் கூறலாம். 

அப்படியான இலங்கையில் யாழ்ப்பாணத்தில் 2000 களின் நடுப்பகுதியில், உள்நாட்டு உரிமைப் போரின் காயங்கள் இன்னும் பசுமையாக, மறக்கமுடியாமல் வடுக்களுடன் இருந்த அந்த காலத்தில் நகரம் மெதுவாக மீண்டும் தன்னைக் கட்டியெழுப்ப முயன்றுகொண்டு இருந்தது. அப்படி இன்று எதிர்கொள்ளும் பல சவால்களுக்கு மத்தியில், இந்த பழமைவாத சமூகத்தில் உள்ள இளம் இதயங்கள் பெரும்பாலும் அன்பின் சிக்கல்களுடன் போராடுவது பெரும்பாலும் வழமையாகிவிட்டது. 

"யாழ்‌ தேவி ரெயில்‌ ஏறி வருவேனே உனை தேடி 
பெண்ணே உன்‌ முகம்‌ காணவே 
சுன்னாக மின்சாரம்‌ கள்ளுறும்‌ உன்‌ கன்னம்‌ 
அதில்‌ ஊர்வேன்‌ ஏறும்பாகவே 
முல்லை பூக்காரி என்‌ கை சேர வா நீ 
காங்கேசன்துறை பக்கம்‌ போவோமடி அங்க 
பனந்தோப்புக்குள்ள ஒடியல்‌ கூழ்‌ காய்ச்சி 
அத ஒன்றாக ஊத்தி நீ தாடி பிள்ள 
நீ தாவணி சோலை கிளி இந்த மச்சானின்‌ மல்லி கொடி 
காரை நகரில்‌ மாலை வயலில்‌ கண்ணாம்‌ புச்சி விளையாடினோமே 
சாரல்‌ மழையில்‌ வாழை இலையை குடையாய்‌ பிடித்து நனைந்தோமடி 
உன்‌ கூந்தல்‌ துளி போதும்‌ என்‌ வாழ்வின்‌ தாகம்‌ தீரும்‌ 
உன்‌ சேலை நுனி போதும்‌ என்‌ ஜீவன்‌ கரை சேரும்‌ 
கொடிகாமம்‌ மாந்தோட்டம்‌ போவோமடி அங்க தோள்‌ சாய்ந்து புளி மாங்காய்‌ தின்போமடி 
நீ வாய்‌ பேசும்‌ வெள்ளி சிலை உன்‌ அழகிற்கு இல்லை விலை 
வல்லை வெளியில்‌ பிள்ளை வயதில்‌ துள்ளி முயலாய்‌ திரிந்தோமடி 
ஈச்சம்‌ காட்டில்‌ கூச்சம்‌ தொலைத்து லட்சம்‌ முத்தம்‌ பகிர்வோமடி 
உன்‌ ஒற்றை மொழி போதும்‌என்‌ நெஞ்சில்‌ பூக்கள்‌ 
உன்‌ கத்தி விழி போதும்‌என்‌ ஆயுள்‌ ரேகை நீளும்‌ 
உன்‌ காதல்‌ என்ற சிறையில்நான்‌ ஆயுள்‌ கைதி ஆனேன்‌ 
உன்‌ சுவாசம்‌ நீங்கும்‌ வரையில்‌ நான்‌ சுவாசம்‌ கொண்டூ வாழ்வேன்‌ 
நாம்‌ ஊர்விட்டு ஊர்‌ சென்று வாழ்ந்தாலும்‌ யாழ்‌ மண்‌ வாசம்‌ மனம்‌ விட்டு போகாதே 
யாழ்‌ தேவி ரெயில்‌ ஏறுவோம்‌ எங்கள்‌இதயத்தின்‌ மொழி பேசுவோம்‌" 


[-சதீஸ்‌] 

யாழ்.பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு இலக்கிய மாணவியான சாந்தினி, புத்திசாலித்தனத்திற்கும் அழகுக்கும் பெயர் பெற்றவள். அவள் அவளைப் பற்றி ஒரு தீவிரத்தன்மை தன்னகத்தே கொண்டிருந்தாள். அவளுடைய குடும்பம், அந்தப் பகுதியில் உள்ள பெரும்பாலானவர்களைப் போலவே, கண்டிப்பான மற்றும் தமிழ் பாரம்பரியமாக இருந்தது. அத்துடன் அவள் படிப்புக்கு முன்னுரிமை கொடுத்து குழந்தைப் பிள்ளையில் இருந்து வளர்க்கப்பட்டாள், காதல் அல்லது காதல் பற்றிய எண்ணங்கள் அவளின் குடும்பத்தில் என்றும் ஊக்குவிக்கப்படவில்லை. தன் வாழ்க்கையில், சாந்தினி இவ்வளவு சீக்கிரமாக  குறிப்பாக தன் கல்வி அழுத்தங்களுக்கு மத்தியில், யாரிடமும் விழுந்துவிடுவாள் என்று நினைத்துக்கூட பார்த்திருக்கவில்லை. ஆனால் அப்படி ஒன்று விரைவில் நடந்தது! 

மறுபுறம் அருள் இரண்டாம் ஆண்டு மருத்துவபீட  மாணவன். அவன் மற்றவர்களிடமிருந்து வித்தியாசமாக இருந்தான் - வசீகரமாகவும், நகைச்சுவையாகவும், எப்போதும் மற்றவர்களின் கவனத்தின் மையமாகவும் இருந்தான். அவன் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தில் இருந்து வந்தவன், அவன் வடக்கு கிழக்கு போரின் போது, ஒரு தமிழ் இளைஞனாக பல துன்பங்களைக் கண்டவன், ஆனால் பெண்களைக் பொறுத்தவரையில், அவனிடம் மிகவும் மென்மையாக இருந்ததுடன்  அவனது ஆளுமை மற்றும் கம்பீரமான பேச்சும் மிடுக்கான நடையும் அவர்களுக்கு காந்தமாக இருந்தது, எனவே கொஞ்சம் தூரத்தில் இருந்து பெண்கள் அவனை அடிக்கடி பாராட்டுவது ரசிப்பது ஒன்றும் புதினம் இல்லை. என்றாலும் அருள் அதைப் பெரிதாக என்றும் எடுத்துக் கொள்ளவில்லை. அவன் தன் படிப்பிலும் குடும்பத்திற்கு உதவுவதிலும் மட்டுமே கவனம் செலுத்தினான்.

ஒரு நாள், அவர்களின் விதி தலையிட்டது. இது பல்கலைக்கழகத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் இடைநிலைக் கல்லூரி விழாவிற்கான முதல் நாள் ஏற்பாட்டில் தான் நடந்தது, அனைத்து பீடங்களிலிருந்தும் மாணவர்கள் ஒன்று கூடிய கலகலப்பான நிகழ்வு அது. சாந்தினி தயக்கத்துடன், தன் பாடங்கள் முடிய, அடுத்தநாள் நிகழ்விற்காக ஒழுங்கு செய்யும் ஏற்பாட்டிற்கு உதவ முன்வந்தார், அதே நேரத்தில் அருள் எப்போதும் போல முன்னணியில் கம்பீரமாக ஒழுங்குபடுத்திக் கொண்டு இருந்தான். அவனின் அழகில் மிடுக்கில் கவனம் செலுத்தினவள், ஆனால் படியை பார்க்க மறந்து விட்டாள். தடுமாறி விழுந்தேவிட்டாள். அவன் உடனே கை கொடுத்து தூக்கினான். அந்த நேரம் இருவரின் கண்களும் ஒருவரை ஒருவர் நோக்கின. இதைத் தான் விதி என்றனரோ?  

“ஓதிமம்  ஒதுங்கக் கண்ட உத்தமன் உழையல் ஆகும்
சீதையின் நடையை நூக்கிச்  சிறியதோர் முறுவல் செய்தான் 
மாதவள் தானும் அங்கு  வந்து நீர் உண்டு மீளும் 
போதகம் நடப்ப நோக்கிப்  புதியதோர் முறுவல் செய்தாள் ” 

அன்னத்தின் நடையை சாந்தினியின் ஒய்யார நடையுடன்  ஒப்பிட்டு அருள் சிரிக்க, கம்பீரமாக நடக்கும் யானையின் நடையைத் தன் மனத்தைக் குழப்பிய அருளின் நடையுடன் ஒப்பிட்டு அவளும் மகிழ்ந்தாள். காதல் வாழ்வில் அவனில் அவளும், அவளுள் அவனும் கலந்து கரைகின்ற தன்மை ஒன்றும் புதிதல்ல! அந்தக்கணமே 'செம்புலப் பெயல்நீர் போல அன்புடை  நெஞ்சந் தாங்கலந் தனவே!!'

அன்று மாலை, ஒரு கவியரங்கத்தின் போது, மேடையில் அருளின் வசீகர பேச்சிலும் அவனின் பாணியிலும் சாந்தினி தன்னை அறியாமலே மீண்டும் மயங்கினாள். அவனது குரல் பார்வையாளர்களை வசீகரிக்கும் விதத்தைக் கொண்டிருந்தது, மேலும் அவள் இதயத்தில் ஒரு படபடப்புடன் தனது வாழ்க்கையில் முதல்முறையாக, சாந்தினி தன்னால் விவரிக்க முடியாத ஒன்றை, அவள் உள்ளத்தே தோன்றி, வெளியே புலப்படுத்த முடியாத ஒரு உணர்வை,  இன்பத்தைக் உணர்ந்தாள்.

நிகழ்ச்சிக்குப் பிறகு, நிகழ்ச்சியை மேடைக்குப் பின்னால் நிர்வகிப்பதற்குப் பொறுப்பான சாந்தினி, அருளுடன் அவனது அடுத்த நிகழ்ச்சி நிரலின் நேரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது. அவர்களின் கண்கள் மீண்டும் மிக அருகில் சந்தித்தபோது, மறுக்க முடியாத ஒரு தீப்பொறி அதில், அந்த பார்வைகளில் இருந்தது. அருளின் எளிதான புன்னகை அவளை நிராயுதபாணியாக்கியது, அந்தச் கணப்பொழுதில், ஒரு இணைப்பு இருவருக்கும் இடையில் மீண்டும் உருவானது. இது நுட்பமானது, ஆனால் அது அவர்களின் வாழ்க்கையின் போக்கை இனி மாற்ற போதுமானதாக இருந்தது.

இருண்ட கூந்தலையும் மையுண்ட கண்களையும் உடையைவளுமான  சாந்தினியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட அருளும், சாந்தினியும் அடுத்த சில வாரங்களில், பல்கலைக்கழக வளாகத்தில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். தொடக்கத்தில் தயக்கத்துடன் ஆரம்பித்த சந்திப்பு, விரைவில் நீண்ட சந்திப்பாக மாறியது. கவிதை, மருத்துவம், யாழ்ப்பாணத்தின் வரலாறு, அவர்களது குடும்பங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான அவர்களின் கனவுகள் போன்ற அனைத்தையும் பற்றி வெளிப்படையாகப் பேசினர். சாந்தினியின் புத்திசாலித்தனம் மற்றும் காதலால் அருள் ஈர்க்கப்பட்டார், அதே நேரத்தில் சாந்தினி அருளின் வாழ்க்கை ஆர்வத்தையும் அவளை மகிழ்வாக்கும் அவனின்  திறனையும் பாராட்டினார்.

அவர்களின் ஒருவர் மேல் ஒருவரின் நம்பிக்கை, புரிந்துணர்வு, அன்பு பெருகினாலும், அவர்களின் உறவு, பல தடைகளை அல்லது படிகளை தாண்டுவது  சிரமம் நிறைந்தது என்பதை இருவரும் அறிந்திருந்தனர். யாழ்ப்பாணத்தின் பழமைவாத சமூகத்தில், ஒரு காதல் உறவு, குறிப்பாக வெவ்வேறு சமூக மட்டங்களைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கு  இடையிலான உறவு கடினமாகவே இருந்தது. மேலும், சாந்தினியின் குடும்பத்தினர் ஏற்கனவே அவளது எதிர்காலத்தைப் பற்றி, திருமணத்தைப் பற்றி பேசத் தொடங்கி விட்டனர், அருளையும்  தனது படிப்பிலும் தொழிலிலும் மட்டுமே கவனம் செலுத்தும்படி , அவனின் குடும்பத்தினர் அழுத்தம் கொடுத்தனர்.

என்றாலும் அவர்களின் காதல் பெற்றோர்களின் கட்டுப்பாட்டை தெரிந்தோ தெரியாமலோ அங்கொன்றும் இங்கொன்றுமாக மீறிக்கொண்டு இருந்தது. பல்கலைக்கழக நூலகத்தின் அமைதியான மூலைகளிலும், பண்ணைக் கடல் காற்று அவர்களுடன் முட்டி மோதி அவர்களின் ரகசியங்களை கிசுகிசுக்கும் பாறைக்கற்களிலும், ஒரு சிறிய ஓடையைக் கடக்கும் வளாகப் பாலத்திற்கு அருகிலுள்ள பழைய ஆலமரத்தடியிலும் அவர்கள் ரகசியமாக தன்னந்தனியாக சந்திக்கத் தொடங்கினர். இங்கே, அவர்களின் காதல், நட்பு நெருக்கமாக மேலும் மேலும் உண்மையிலேயே மலர்ந்தது.

ஒரு அமைதியான மாலை நேரத்தில், ஆலமரத்தடியில், சூரியன் மறையத் தொடங்கியதும், சாந்தினியும் அருளும் ஒருவருக்கொருவர் நெருங்கி அருகில் அமர்ந்தனர், இலைகளின் மெல்லிய சலசலப்பு மட்டுமே காற்றில் ஒலித்தது. உரையாடல் மெதுவாக அவர்கள் இருவரது மனதையும் பெரிதும் எடைபோடும் விடயத்திற்கு மாறியது - உள்நாட்டுப் உரிமைப் போர் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் அதன் நீடித்த தாக்கம் அவர்களின் உரையாடலின் கருவாக இருந்தது.

சாந்தினி: "போர் நடக்காமல் இருந்திருந்தால் எங்கள் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?"


அருள்: பெருமூச்சுடன்  "ஒவ்வொரு நாளும், இப்போது நினைத்தால் உண்மையில் வினோதமாக இருக்கிறது - எங்கள் குழந்தைப் பருவம் எப்படி சோதனைச் சாவடிகள், பயம் மற்றும் தலைக்கு மேலான ஹெலிகாப்டர்களின் சத்தம் ஆகியவற்றால் நிறைந்திருந்தது. என் பெற்றோர்கள் பலவற்றை இழந்தார்கள், ஆனால் அவர்கள் அதைப்பற்றி அந்த நேரம் ஒன்றும் பேசவில்லை, அவர்களின் எண்ணம் முழுவதும் தங்கள் பிள்ளைகளும், எப்படி பாதுகாப்பாக நாளைய நாளை கழிப்பதும் என்பதே. வலியை எங்கோ ஆழத்தில் புதைத்து வைத்தது போல, முகத்தில் எந்த பயத்தையும் எமக்கு காட்டிட மாட்டார்கள் "

சாந்தினி: "எனக்குத் தெரியும்... எங்க குடும்பத்தை காப்பாறுவதற்காக என் அப்பா ரொம்ப பாடுபட்டார். அதனால்  சில சமயம் அவங்க கடினமாகவும் இருந்தார்கள். எப்படி இதுக்குள்ளால் தப்பி பிழைப்பது மட்டுமே அவர்களின் எண்ணமும் கனவுமாக இருந்தது. அம்மாவும் கூட ..  என்மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருப்பதாக அடிக்கடி சொல்லுவார், ஆனால் இப்போது ... பாரம்பரியங்களைப் பின்பற்றுவது, குடும்ப பெருமையை  பேணுவது, அயலில், அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் மரியாதைக்கும் உடன்பட்டு இருப்பது ... என்பதிலே கூடிய கவனமாக இருக்கிறார். 

அருள்: "நானும் அப்படித்தான் உணர்கிறேன். நம் பெற்றோர்கள் நம்மைப் தீங்கு அல்லது ஆபத்திலிருந்து பாதுகாப்பாகப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால் நமக்கென்ன கிடைத்தது ? நம் கண்ணியம், கனவுகள் பற்றி மாற்றம் வந்ததா ? போர் முடிந்திருக்கலாம், ஆனால் உண்மையில் எங்களுக்கு ஏதாவது மாறியதா?  நமது உரிமைகள், சுதந்திரமாக வாழும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் எதையும் சாதித்துவிட்டோம் என்று நினைக்கிறீர்களா?"

சாந்தினி: மேலே மேகத்தை உற்றுப் பார்த்து "உண்மையில் இல்லை.  நாங்கள் நேரடி மோதலில் இருந்து சற்று விடுபட்டுள்ளோம், ஆனால் ... நாங்கள் இன்னும் உரிமை பெறாமல் கட்டுண்டு இருக்கிறோம். அதே பழைய எதிர்பார்ப்புகளும் தீர்வும் இல்லாமல் அப்படியே இருக்கிறது . அது போகட்டும், இத்தனை அடிபாடுகளுக்குப் பிறகும், தமிழரான எமக்குள் ஒற்றுமை இல்லை. அதுமட்டும் இல்லை, இன்னும் பழைமைவாதம் அப்படியே இருக்கிறது. அதிலும் குறிப்பாக  என்னைப் போன்ற பெண்களுக்கு - நாங்கள் இன்னும் பெற்றோர்  யாரைத் தேர்ந்தெடுப்பார்களோ அவர்களை திருமணம் செய்து கொள்ளவேண்டும், அப்படி இப்படி என்று இன்னும் பெற்றோரின் எதிர்பார்ப்பில் மாற்றம் இல்லை 

அருள்: "என்னைப் போன்ற ஆண்களுக்கு எல்லாமே பொறுப்புதான். உழைப்பது, சம்பாதிப்பது, குடும்பத்தை காப்பாற்றுவது, தலைமைவகிப்பது என நீண்டுகொண்டு போகிறது. எனக்கு ஆறுதலுக்கும் அன்புக்கும் - சாந்தினி, நீ தான் வேண்டும்  நான் ஒரு மருத்துவராக மட்டுமே இருக்க விரும்பவில்லை. மாற்றங்களை விரும்புபவனாகவும் இருக்க விரும்புகிறேன். பழைமைவாதம் எங்கள் காலத்துக்கு ஏற்றவாறு மாற்றப்படவேண்டும் அப்பத்தான் நாம் மனிதர்களாக வாழ முடியும். ஆனால் போர்… இருந்ததையும் பறித்துவிட்டது 

சாந்தினி அருளின் மார்பின் மீது தன் தலையை சாய்த்து அவன் கைகளை அழுத்தமாக பிடித்தாள், அவர்களுக்கிடையேயான காதல் உணர்வு குளிர்ந்த காற்றையும் சூடாகியது. தங்கள் தலைமுறை கடந்த காலத்தின் வடுக்களை இன்னும் மறக்கவில்லை என்பதை அவர்கள் இருவரும் அறிந்திருந்தனர், மேலும் உடல்ரீதியான வன்முறைகள் இன்று முடிவுக்கு வந்தாலும், சமூக வேறுபாடும் மற்றும் சம உரிமைப் போர்களும் அப்படியே இருந்தன.

சாந்தினி: "நம்முடைய காதல் எம் நாட்டைப் போன்றது என்று நினைக்கிறன். நாம் விரும்புவதற்கும் பெற்றோர் எதிர்பார்ப்பதற்கும் இடையில் கிழிந்துவிட்டது. நாம் எப்போதாவது, இந்த பழமைவாதத்தில் இருந்து சுதந்திரமாக இருப்போம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? - நாம் சுதந்திரமாக விரும்பியபடி வாழ, விரும்பியவரை நேசிக்க??  

அருள்: "எனக்குத் தெரியாது. நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்று நான் நினைக்க விரும்புகிறேன். ஆனால் அது மெதுவாகத்தான் இருக்கிறது. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது, ஆனால் சமத்துவமும் கண்ணியமும்... நம்மில் பலருக்கு இன்னும் தொலைதூரக் கனவுகள்.  இங்கே, யாழ்ப்பாணத்தில், சம உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்கிறது, ஆனால் ... 

சாந்தினி: "இது வருத்தமாக இருக்கிறது, இல்லையா? எல்லாவற்றிற்கும் மேலாக, நாங்கள் இன்னும் போராடுகிறோம். அங்கீகாரத்திற்காகவும், அமைதிக்காகவும், அடிப்படை மனித உரிமைகளுக்காகவும். இங்கே நாங்கள் ... காதலிக்கும் உரிமைக்காகவும் போராடுகிறோம்."

அருள்: "அதனால்தான் நாம் ஒருவருக்கொருவர் வலுவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர்கள் நம்மிடமிருந்து எல்லாவற்றையும் பறிக்க அனுமதிக்க முடியாது. நம் கண்ணியம், நம் கனவுகள், இப்போது நம் அன்பு... ஒருவேளை நம்மால் உலகத்தை உடனடியாக மாற்ற முடியாது, ஆனால் நம்மிடம் இருப்பதைப் இழக்காமல்  பற்றிக்கொள்ளலாம்?"

யுத்தம் அவர்கள் இருவருக்கும் கண்ணுக்குத் தெரியாத வடுக்களை ஏற்படுத்தியது, உலகில் இன்று அவர்களின் இடத்தை மட்டுமல்ல, அவர்களின் எதிர்காலத்தையும் ஒன்றாகக் கேள்விக் குள்ளாக்கியது.

ஒரு நாள் மாலை, வகுப்பு முடிந்து சாந்தினியும் அருளும் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகே நடந்து கொண்டிருந்தபோது, குடும்பத்தின் பெண் உறவினர் ஒருவர் அவர்களைக் கண்டார். வார்த்தை விரைவாக பரவியது. 

"சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி
மறுகில் பெண்டிர் அம்பல் தூற்றச்
சிறுபோல் வலந்தனள்"

சாந்தினி உயர்ந்த குடியில் பிறந்தவள். ஆகையால் நேரடியாகப் பழிக்க அச்சமுற்ற அயல் பெண்கள், கடைக்கண் சார்த்தியும், மூக்கு நுனியில் விரலைச் சேர்த்தியும் தமக்குள் மறைவாகப் பேசியபடி அலர் உரைத்தனர். அது எப்படியோ அவளின் பெற்றோருக்கு எட்டிவிட்டது. தாயும் தன் மகள் மீது ஐயம் கொண்டு அவளை கட்டுப்படுத்தினாள் என்பதை விட, பிறர் சுட்டிக்கூறும் அளவிற்கு நடந்து, பிறந்த குடிக்கு இழிவைத் தந்துவிட்டாளே என்ற எண்ணத்திலேயே அப்படி செய்ததுடன் தந்தைக்கும் தெரியப் படுத்தினாள்.  
 


அவளுடைய தந்தை, ஒரு கண்டிப்பான மனிதர், பாரம்பரிய விழுமியங்களை கடைப்பிடிப்பவர், கோபமடைந்தார். மீண்டும் அருளைப் பார்க்கக் கூடாது என்று தடை விதித்து, அவள் படிப்பில் கவனம் செலுத்தி, பெற்றோர் பார்க்கும் பொருத்தமான திருமணத்திற்குத் தயார் ஆக வேண்டும் என்று கட்டளையிட்டார்.   

சாந்தினி அந்தக் கணமே மனம் உடைந்து போனாள், ஆனால் எதிர்த்து ஒன்றும் பேசவில்லை. மௌனமாக தன் அறைக்குள் போய் கதவைப் பூட்டினாள். கட்டிலில் கிடந்தபடி, தன் தொலைபேசியில் அருளின் படத்தைப் பார்த்தபடி ஏதேதோ தனக்குள் முணுமுணுத்தாள். தன் குடும்பத்திற்க்கும் அருள் மீதான காதலுக்கும் இடையில், கண்ணீருடன் மனதில் போராடினாள். சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் பெற்றோரின் பாசமும் அவள் மனதின் மீது அதிக எடையைக் கொடுத்தன. மேலும் அவளுடைய குடும்பத்தின் விருப்பத்திற்கு எதிராகச் செல்வது அவமானத்தைத் தரும் என்பதை அவள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. அதேநேரம் அருளும் சாந்தினியின் முடியாத சூழ்நிலையின் கனத்தை உணர்ந்தான். அவன் சாந்தினியை ஆழமாக நேசித்தாலும் அவன், தன்னால் சாந்தினி தனது குடும்பத்திலிருந்து விலகுவதற்கு  காரணமாக இருக்க விரும்பவில்லை.

நாட்கள் வாரங்களாக மாறியது, அவர்களுக்கிடையான தூரம், அவர்கள் ஒருவரை ஒருவர் சந்திப்பதை நிறுத்தியதால் அதிகரித்தது. ஒரு காலத்தில் துடிப்பான இணைப்பு இப்போது வறண்டு, கோடைக்காலம் போல தோன்றியது. சாந்தினியின் பெற்றோர்கள் இதனால் நிம்மதியடைந்தாலும் மற்றும் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டதாக அவர்கள் நினைத்தாலும், உண்மையில் சாந்தினி மற்றும் அருள் இருவரும் மௌனமாகவே தவித்துக் கொண்டிருந்தனர் என்பதே உண்மை.

மாதங்கள் கடந்தன, அருளின் இறுதி ஆண்டு படிப்பை நெருங்கியது. ஒரு நாள், அருளுக்கு மதிப்புமிக்க இன்டர்ன்ஷிப்பிற்காக [ஒரு தொழில்முறை கற்றல் அனுபவத்துக்கு ] கொழும்பு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அவன் யாழ்ப்பாணத்தின் கட்டுப்பாடுகளிலிருந்தும், அனுபவித்த மனவேதனைகளிலிருந்தும் விலகி, ஒரு அமைதியை, சாந்தினியை இழந்த வேதனையில் இருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பாக, இதைக் கருதினான். 

கொழும்பிற்குப் புறப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, அருள் பாலத்தின் அருகே உள்ள பழைய ஆலமரத்தைக்  கடைசியாகப் பார்க்க முடிவு செய்தான். அவன் அங்கே நின்று, தனது மனது திருடப்பட்ட தருணங்களை நினைவு கூர்ந்தபோது, அவனுக்குப் பின்னால் ஒரு பழக்கப்பட்ட  குரல் கேட்டது. அது சாந்தினி.

அவள் கண்களில் கண்ணீர் நிரம்பி வழிந்தது. அவன் புறப்பட்டதைக் கேள்விப்பட்டு விடைபெற வந்திருந்தாள். அவர்கள் ஒரு கணம் மௌனமாக நின்றார்கள், அவர்களுக்கிடையில் தொங்கிக் கொண்டிருந்த எல்லா வேதனையும் பாரமும் கண்களில் தெரிந்தன. சாந்தினி இறுதியாகப் பேசினாள்: “உண்மையைச் சொல்லாமல் உன்னை அம்மோ என்று விட்டுவிட முடியாது. நான் உன்னை முழுதாக நேசிக்கிறேன், அருள். என்னிடம் எப்போதும் உன்மேல் காதல் இருக்கிறது, நான் என்றும் உன்னை மறக்க மாட்டேன்.

அருள் திடுக்கிட்டான். அவள் தன்னை மறந்துவிட்டாள், குடும்பத்தின் முடிவை ஏற்றுக்கொண்டாள், என்று நினைத்தவன், இப்ப இதோ அவள் அவன் முன் நின்று, தன் இதயத்தை முழுமையாக கொட்டிக்கொண்டு இருந்தாள்.

சிறிது நேரம், எல்லாம் சரியாகிவிடும் என்று தோன்றியது. ஆனால் யதார்த்தம் தலைகீழாக மாறியது. காதல் இருந்தபோதிலும், அவர்கள் ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது என்று அருளுக்குத் தெரியும். அவன், சாந்தினியின் இரு கையையும் பிடித்து, தனது கனத்த இதயத்துடன், இருவரையும் உடைத்து பிரிக்கும் வார்த்தைகளை அவளிடம் சொன்னான்: “நானும் உன்னை நேசிக்கிறேன், சாந்தினி. ஆனால் நம்மால் இணைய முடியாது. இங்கே இல்லை, எப்போதும் இல்லை."

அவர்கள் ஒன்றாக இருக்கும் கடைசித் தருணம் என்பதை அறிந்து ஆலமரத்தடியில் இருவரும் கட்டித்தழுவினர். அருள் பாலத்தைக் கடந்து, நடந்து செல்வதை,  இரவில் மறைவதை சாந்தினி பார்த்துக்கொண்டே இருந்தாள். 

அவ்வளவுதான் - அவர்களின் காதல் காலப்போக்கில் மனதில் இருந்து கரைந்து கரைந்து போனாலும் ஒரு மூலையில் ஒழிந்து இருந்தது, உண்மையில் ஒருபோதும் சந்திக்க முடியாத இரண்டு நிலங்களை இணைக்கும் ஓடையின் மேல் பாலம் போல, அவர்களின் இதயங்களை இன்னும் இணைத்துக் கொண்டே இருக்கிறது 

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்] 

463594479_10226571738022447_8048086620468118097_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=8HuCQkPT0o4Q7kNvgHcKsjR&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=A8FnjNtLYmlDqHnHsTNbA9D&oh=00_AYCZw9XHSJfUQlAA-p_xAkiAegkl_JqtijRjxugMed27Xg&oe=6715501F  May be an image of 2 people and text

 

"ஈரம் தேடும் வேர்கள்"

2 months ago
"ஈரம் தேடும் வேர்கள்"
 
 
"கடலின் அலைவந்து கரையில் விளையாடும்.
கரிய முகில் வந்து மலையில் சதிராடும்.
கடலின் இளங்காற்று எமது தலைசீவும்.
தமிழர் திருநாடு அழகின் மொழி பேசும்
கோயில் வயல் சூழ்ந்த நாடு - திருக்
கோண மலையெங்கள் வீடு."
 
என மார்புதட்டி பெருமையாக வாழ்ந்தவர் தான், முன்னைய கணித ஆசிரியை கண்மணி என்ற மூதாட்டி ஆகும். இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான திருகோணமலையில், உயர்ந்து நிற்கும் சிவனின் சிலையை முன்னுக்கு கொண்டிருக்கும் திருக்கோணேஸ்வரத்திற்கு அண்மையில் இவரின் வீடு இருந்தது. கண்மணி தனது அறிவு மற்றும் சிரமங்களைத் தாங்கும் அல்லது விரைவாக அதில் இருந்து மீளும் விரிவாற்றலுக்கும் அறியப்பட்டார், வாழ்க்கையின் பல பருவங்களை அல்லது கட்டங்களை எதிர்கொண்டவர் . அவளது சுருக்கம் விழுந்த முகமும் வெள்ளை முடியும் எண்ணற்ற அனுபவங்களையும் கதைகளையும் அவள் இதயத்திற்குள் சுமந்து கொண்டு இருக்கின்றன.
கண்மணிக்கு இன்று நேற்று இல்லை, பல ஆண்டுகளாக இயற்கையோடு ஒரு தனிப் பிணைப்பு என்றும் இருந்தது. அவள் தன் ஓய்வு நாட்களை தோட்டத்தைப் பராமரிப்பதிலும், செடிகளையும் பூக்களையும் கனிவான கவனத்துடன் வளர்ப்பதிலும் ஆர்வமாக இருந்தாள். அவளுக்குப் பிடித்த தாவரங்கள் ஆழமான வேர்களைக் கொண்டவை, அவை செழிக்கத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டறிய மண்ணுக்கு அடியில் நீண்டிருந்தன, ஈரம் தேடும் வேர்களாக.
 
இலங்கையில், வடக்கு கிழக்கில் அன்று நிலவிய ஒரு போர் சூழ்நிலை மற்றும் அடக்குமுறைகளில் கண்மணி தன் கணவரை இழந்தார். அதனால் மிகவும் பயந்துபோன கண்மணி, தன் மூன்று இளம் பிள்ளைகளையும் வெளிநாட்டுக்கு படிப்பிற்காகவும் மற்றும் பாதுகாப்புக்காகவும் அனுப்பிவிட்டார். தான் தனித்துப்போவேன் என்று அவள் சிந்திக்கும் நிலையில் அப்ப கண்மணி இருக்கவில்லை. அவள் எண்ணம் செயல் இரண்டும் பிள்ளைகள், பிள்ளைகள், பிள்ளைகள், அது மட்டுமே!
 
வருடங்கள் செல்ல செல்ல, கண்மணி தன் சொந்த வாழ்க்கைக்கும் தன் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கும் ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டார். ஈரத்தைத் தேடும் வேர்களைப் போலவே அவளும் வாழ்வு மலர.. வாசணை துளிர.. வேதனை மறைய..சந்தோஷங்கள் நிறைந்த நேரத்தை தேடும் ஏக்கம் இருப்பதை அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் அருகில் இல்லாதது இப்ப பெரும் குறையாகவே அவள் உணர்ந்தாள். பிள்ளைகள் எத்தனைப் பணம் அனுப்பினாலும், வசதிகளை அமைத்து கொடுத்தாலும், அவள் எதையோ இழந்து தவிப்பது தெரிந்தது. ஈரத்தைத் தேடும் வேர்களைப் போல, நேரடியான பாசம், அன்பு ... என்ற ஈரங்களை தேடி மனம் அலைந்து கொண்டே இருந்ததை அவள் உணர்ந்தாள்.
 
ஒரு கோடை நாளில், கண்மணி தனது தோட்டத்தில் அமர்ந்திருந்த போது, ஒரு இளம் மரக்கன்று வறண்ட மண்ணின் மத்தியில் வளர போராடுவதைக் கண்டாள். அது பலவீனமாகவும் வாடிப்போகக் கூடியதாகவும் தோன்றியது, அதனால் உயிர்வாழத் தேவையான ஈரப்பதத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. என்றாலும் அந்த மரக்கன்று பிடிவாதமாக அதன் வேர்களை தரையில் ஆழமாக நீட்டிக்கொண்டு இருப்பதைக் கண்டாள். அந்த மரக்கன்றின் உறுதி கண்மணிக்கு ஒரு தெம்பை கொடுத்தது.
 
கடினமான அல்லது சவாலான வாழ்க்கை அனுபவங்களை வெற்றிகரமாக மாற்றியமைக்கும் மரக்கன்றுகளின் செயல்முறையால் [மீள்தன்மையால்] ஈர்க்கப்பட்ட கண்மணி , தானும் அப்படியான ஒரு கண்டுபிடிப்புக்கான பயணத்தைத் தொடங்க முடிவு செய்தார். வேர்கள் தண்ணீரைத் தேடுவதைப் போல, அவளும் தனக்கான நேரடி ஆதாரங்களைக் கண்டு பிடிக்க ஏங்கினாள். கையில் ஒரு கைத்தடியை [வாக்கிங் ஸ்டிக்கை] எடுத்துக் கொண்டு கொண்டு, தன் ஆர்வத்தாலும், அசையாத உள்ளத்தாலும் வழிநடத்தப்பட்ட அவள், போரினால் கடுமையாக பாதிக்கப்படட, திருகோணமலையின் ஒரு எல்லைக்கிராமமான முல்லைத்தீவு சென்றாள்.
 
அவள் கிராமத்தின் பழக்கமான எல்லைகளைத் தாண்டிச் சென்றபோது, கண்மணி பல்வேறு சவால்களையும் தடைகளையும் பாதுகாப்பு படையிடம் மற்றும் புலனாய்வு அலுவலர்களிடம் எதிர்கொண்டார். வாழ்க்கை அடிக்கடி அளிக்கும் கஷ்டங்களையும் சோதனைகளையும் அவள் அறிவாள். எனவே தன் ஒவ்வொரு அடியிலும், கண்மணி உடல் ரீதியாகவும் உணர்ச்சி ரீதியாகவும் வலுவாக தன்னை திடப்படுத்திக் கொண்டார்.
தனது பயணத்தில், கண்மணி, பெற்றோர் இல்லாத பிள்ளைகளையும், கணவன் இல்லாத ஒற்றைத் தாய்களையும், கை அல்லது கால் இழந்த ஆண்களையும் கண்டார். என்றாலும் அந்த வேதனையிலும், இழப்பிலும் கஷ்டத்திலும் கூட அவர்களின் அன்பை, ஆதரவான பேச்சை பார்த்து , கேட்டு அதிசயப் பட்டாள். அங்கு ஈரத்தை கண்டாள்! அது அவளுக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்ததுடன், தன் தேடல் வெற்றி அடைந்ததை உணர்ந்தாள். எதை தேடினாலோ அது அங்கு கிடைத்தது. அவள் இதயம் அந்த ஈரத்தில் நனைத்தது!
 
தன்னிடம் உள்ள பணம், வசதிகளை முதலீடாக அமைத்து, கண்மணி அங்கே ஒரு அநாதை இல்லம் அமைத்து, அவர்களுக்கு சேவை செய்ய முடிவு எடுத்தாள். அவளை சுற்றி குழந்தைகள் முதல் வயதானவர்கள் இருந்தனர். அவள் தேடிய நேரடிப் பாசம், அன்பு, துணை என்ற ஈரங்கள் அவளை நனைத்து மகிழ்வைக் கொட்டிக்கொண்டே இருந்தன!
 
ஈரப்பதத்தைத் தேடும் வேர்கள் தங்கள் சுற்றுப்புறங்களுக்குத் தகவமைத்துக் கொள்வது போல, அதாவது, புற மாற்றங்களுக்கேற்ப ஒர் உயிரி தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் போல, ஒவ்வொரு மனிதனும் வாழ்க்கையின் அனுபவங்களை மாற்றியமைத்து கற்றுக் கொள்ளவதுடன், ஏற்படும் சவால்களைத் எதிர்த்து, வாழ்வு மலர தேவையான ஆதாரங்களைக் தேடிக் கண்டறியவேண்டும் என்ற தன் அனுபவத்தை மற்றவர்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக கண்மணி பாட்டி தனது எண்பதாவது அகவையிலும் வாழ்ந்துகொண்டு இருக்கிறாள்.
 
ஈரம் தேடும் வேர்களைப் போலவே, அவள் தன் சொந்த ஆவியையும் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் தொடர்ந்து வளர்த்து, வாழ்க்கைத் தோட்டத்தில் அழகாக மலர்ந்துகொண்டு இருக்கிறாள்!
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
369777203_10223814320688737_8922528683139689191_n.jpg?stp=dst-jpg_p235x165&_nc_cat=100&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=fYxnnSDB5ooQ7kNvgHJEYim&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AVL8QLsv7xLo3TntUr6OF9W&oh=00_AYBHX3okCtPZqIK49tgm1Kmr_XU8JToLhc9U9h7EKayOEA&oe=67146FA7 370796929_10223814321528758_2871346473377818814_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=soZ6m1eWhcEQ7kNvgHSV6IA&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AVL8QLsv7xLo3TntUr6OF9W&oh=00_AYDto18ZwVbpLWEZ5bCKFAULDyYaT3E39RvRZfs5F_ITZA&oe=67145E3A 
 

"நம் பெற்றோர்களின் கதை"

2 months 1 week ago
"நம் பெற்றோர்களின் கதை"
 
 
ஒரு சிறுவன் தினமும் வந்து அந்த மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டு ஆடிப்பாடி விளையாடி விட்டு போவான். அவனை பார்த்தாலே அந்த மரத்துக்கு ஆனந்தம் பொங்கும். திடீரென்று ஒரு நாள் அந்த சிறுவன் வரவில்லை. மரமும் அவனை எதிர்பார்த்து காத்திருந்தது. சில நாள் கழித்து அந்த சிறுவன் வந்தான்.  அந்த மரம் சந்தோஷத்துடன் அவனை பார்த்து ஏன் இவ்வளவு நாள் வரவில்லை? உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்டது..........
 
என் நண்பர்கள் எல்லோரும் அழகழகாய் பொம்மைகள் வைத்திருக்கிறார்கள், ஆனால் என்னிடம் மட்டும் ஒன்றும் இல்லை, என்றான். கவலைப்படாதே இந்த மரத்தில் உள்ள பழங்களை எடுத்துச் சென்று கடையில் விற்று பொம்மை வாங்கிக்கொள். என்னை பார்க்க அடிக்கடி வந்து கொண்டிரு என்றது..........
 
அவனும் மகிழ்ச்சியுடன் பழங்களை பறித்து சென்றான்.
 
மறுபடியும் அவன் வரவேயில்லை. மரம் அவனுக்காக ஏங்கியது. பல வருடம் கழித்து ஒரு நாள் வந்தான். அவன் முகத்தில் கவலை தெரிந்தது, இப்போது அவன் வளர்ந்தி ருந்தான். அவனை பார்த்ததும் மரத்துக்கு ஏக சந்தோஷம். வா என்னிடம் வந்து விளையாடு இந்த கிளையில் ஏறி அமர்ந்து பாட்டு பாடு என்றது. அதற்கு அவன்_ இல்லை இப்பொது வயதாகி விட்டது_ எனக்கு மனைவி குழந்தைகள் உள்ளனர், ஆனால் நாங்கள் வசிக்க சொந்தமாக நல்ல வீடு இல்லை, வீடு வாங்க என்னிடம் பணமில்லை,........
 
மரம் உடனே சொன்னது பரவாயில்லை உனக்கு கொடுக்க என்னிடம் பணம் காசில்லை அதற்கு பதில் என்னுடைய கிளைகளை வெட்டி எடுத்துச் செல் அதில் ஒரு வீடு கட்டிக் கொள் என்றது......
 
அவனும் கோடாரியால் கிளைகளை வெட்டத் தொடங்கி னான். இப்படி ஒரேயடியாக என்னை பார்க்காமல் இருக்காதே முடிந்த வரை வருடம் ஒரு முறையாவது வந்து பார்த்து செல் என்றது. வேண்டிய கிளைகளை வெட்டி எடுத்துச்சென்றான். அதற்கு பின் பல வருடங்கள் வரவில்லை. அவன் வருவான் வருவான் என்று மரமும் நித்தமும் காத்திருந்தது. பல வருடங்கள் கழித்து பார்க்க வந்தான்.......
 
மரம் அவனை பார்த்து ஆனந்த கூத்தாடியது. அவன் எப்போதும் போல் சோகமாக இருந்தான். ஏன் இப்படி இருக்கிறாய் என்று மரம் கேட்டது. என் மீன் பிடி படகு உளுத்து விட்டது, படகு இல்லாத்தால் மீன் பிடிக்க முடியவில்லை, அதனால் வருமானம் இல்லை நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம் என்றான். மரம் துடித்து போனது, நான் இருக்கிறேன். என்னுடைய அடி மரத்தை வெட்டி எடுத்துக்கொள், இதை வைத்து நீ பெரிய படகு கட்டிக்கொள் என்றது..........
 
அவன் அடி மரத்தை வெட்டும் போது, மறக்காதே வருடத்திற்கு ஒரு முறை என்றில்லாமல் எப்போதாவது என்னை பார்க்க வா என்றது. ஆனால் அவன் வரவே யில்லை. மரத்துக்கு நம்பிக்கை மெல்ல மெல்ல மறைய ஆரம்பித்தது. அப்போது அவன் வந்தான். தலையெல்லாம் நரைத்து கூன் விழுந்து மிகவும் வயதான தோற்றத்துடன் அவன் இருந்தான்........
.
அவனை பார்த்து மரத்துக்கு அழுகையே வந்து விட்டது.
 
இப்போது உனக்கு கொடுக்க என்னிடம் பழங்கள் இல்லை.. கிளைகள் இல்லை.. அடி மரமும் இல்லை.. உனக்கு கொடுக்க என்னிடம் ஒன்றுமே இல்லையே என வருந்தியது. அவன் சொன்னான் நீ பழங்கள் கொடுத்தாலும் அதை கடிக்க எனக்கு பற்கள் இல்லை, வீடு கட்டவும் படகு செய்யவும் என்னிடம் சக்தி இல்லை. எனக்கு இப்போது ஓய்வு மட்டுமே தேவைப்படுகிறது என்றான்..........
 
அப்படியா இதோ தரையில் கிடக்கும் என் வேர்களில் படுத்துக்கொள் என்றது. அவனும் அந்த வேர்களில் தலை வைத்து படுத்துக் கொண்டான். இந்த சுகத்துக்கு தான் அந்த மரம் பல வருடங்கள் ஏங்கி தவித்தது. இப்போது அந்த ஏக்கம் நிறைவேறியது, அந்த மரம் ஆனந்த கண்ணீர் விட்டது.......
 
இது மரத்தின் கதையல்ல நிஜமான நம் பெற்றோர்களின் கதை, இந்த சிறுவனை போல் நாமும் சிறு வயதில் தாய் தந்தையோடு விளையாடுகின்றோம் வளர்ந்து பெரிய வனானதும் தமக்கென்று குடும்பம், குழந்தை என்று ஒதுங்கி விடுகின்றோம். அதன் பின் ஏதாவது தேவை அல்லது பிரச்சனை என்றால் தான் அவர்களை தேடி போகின்றோம். நம்மிடம் இருப்பவை எல்லாம் அவர்கள் கொடுத்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். நம்மால் அவர்களுக்கு எதுவும் கொடுக்க முடியாது, நம்முடைய பாசம், அன்பு, நேரம் தவிர. அவர்கள் விரும்புவதும் அது தான்
 
170546007_10219038752622520_2913796096959340405_n.jpg?_nc_cat=104&ccb=1-7&_nc_sid=e06c5d&_nc_ohc=nXQsKDPyIigQ7kNvgF8n1LL&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A6nX1TeLG38ioYbcBbddkY1&oh=00_AYBx2oJma8lfnmQkztcJc9TfOzjkju0qIHAPMQ2kpHm5dw&oe=673478AB   171234265_10219038753062531_7324012399917504280_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=e06c5d&_nc_ohc=ROEZMlVBcn0Q7kNvgGSaw4w&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=A6nX1TeLG38ioYbcBbddkY1&oh=00_AYBG1xDndppaJ8ycoUztwni1TDiX0HPHq-7C5fkN-Pi7kQ&oe=67348642 

கடற்புலிகளின் படைய நடவடிக்கை - பழிவாங்கல் 1 & 2

2 months 1 week ago

‘புவியியல் ரீதியாகத் தமிழீழத்தின் நிலப்பரப்பு கடலோடு ஒன்றிப் போயுள்ளது’. இது விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் கடலின் முக்கியத்துவம் தொடர்பாகக் கதைக்கின்ற போதெல்லாம் அடிக்கடி கூறுகின்ற வசனம். விடுதலைப் புலிகளினுடைய வளர்ச்சிக்கு கடற்போக்குவரத்து என்பது மிகவும் இன்றியமையாததாகவே இருந்தது. விடுதலைப்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கிவிடுவதில் விடுதலைப்புலிகளினுடைய ஆயதப்போராட்டத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அந்த ஆயுதப்போராட்டம் முடிவுறும் நாட்கள் வரையிலும் இலங்கைக் கடற்படையும் இந்தியக் கடற்படையும் கடும் பிரயத்தனத்தனங்களில் இறங்கியிருந்தன. ஆனாலும் இத்தகைய சவால்களுக்கு முகம் கொடுத்து எதிர்ப்பட்ட தடைகளையும் தாண்டி எத்தனையோ உயிர்விலைகளைக் கொடுத்து அன்று தமிழ்நாட்டை ஆட்சி செய்த சோழப் பேரரசன் வைத்திருந்த கடற்படைக்கு ஒப்பான கடற்படையொன்றைக் கட்டி வளர்த்திருந்ததார் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்.

விடுதலைப்புலிகளின் கடற்படையாகிய கடற்புலிகள் படையணி வெளியே தெரிந்துவாய் உள்ளே அறிந்ததுவாய் எத்தனையோ அரியபெரிய சாதனைகளை நிலைநிறுத்தி விடுதலைப்போருக்கு வலுச்சேர்த்திருந்தது. விடுதலைப்போராட்டத்திற்குத் தேவையான மூலாதாரங்களையும் வளங்களையும் கடல்கடந்த தேசங்களிலிருந்து சர்வதேசக் கடல்வழியாக தாயக்திற்கு கொண்டு வருவதில் கடற்புலிகள் படையணி பிரதான கதாபாத்திரத்தை வகித்துக்கொண்டது. இந்த நடவடிக்கைகளின் போது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் செய்த உயரிய தியாகங்கள் வரலாற்றில் பதியப்பட வேண்டியவைகளாகும்.

2006ம் ஆண்டில் நடுப்பகுதியில் நோர்வே அரசின் அனுசரணையுடன் விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசிற்கும் இடையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த புரிந்துணர்வு உடன்படிக்கை செயலிழக்கத் தொடங்கியிருந்தது. இந்தச் சூழ்நிலையிலேயே கடற்புலிகளின் கடற்போக்குவரத்தை முடக்கி அதற்கு ஊடாக விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்து விடுவதில் கங்கணம் கட்டி நின்றது இலங்கை அரசு.

இதன் முதற்கட்டமாக இரண்டு ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்கள் கொள்வனவு செய்த இலங்கை கடற்படையினர் இந்த ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களை வடபகுதிக் கடற்பரப்பில் முழுநேரக் கடற்கண்காணிப்பில் ஈடுபடுத்தியது. இந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளும் அரச படைகளிடம் விழத் தொடங்கியிருந்தன. வுழமையாக கடற்புலிகள் முல்லைத் தீவுக்கடல் வழியாக மேற்கொள்ளப்பட்ட கடல் விநியோக நடவடிக்கை இலங்கை கடற்படையினரின் தீவிர கடற்கண்காணிப்பினால் தடைப்பட்டுப்போனது. இதன் அடுத்த கட்டமாகவே கடற்புலிகள் விடுதலைப் போராட்டத்திற்கு தேவையான மூலாதாரங்களைத் தாயகத்திற்கு கொண்டுவரும் நோக்கோடு மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு-சிலாவத்துறைப் பகுதிகளைத் தளமாக வைத்துக்கொண்டு மட்டுப்படுத்தப்பட்டளவிலான கடல்வழி விநியோகத்தினை மேற்கொண்டனர். இந்தக் கடல் நடவடிக்கையின் போதும் இலங்கை கடற்படையும் இந்தியக் கடற்படையும் பல்வேறுபட்ட இடையூறுகளை விளைவித்தன. இத்தகைய சவால்களுக்கெல்லாம் முகம் கொடுத்து போராட்டத்தை முன்னெடுப்பதற்கான மூலவளங்களை தாயகக்கரையில் கொண்டு வந்து சேர்த்தார்கள் கடற்புலிகள். இந்த உயரிய நடவடிக்கைகளின் போது இலங்கை கடற்படையினருடன் சமரிட்டு கடற்புலிப்போராளிகள் பலர் கடலன்னையோடு கலந்து விட்டதுவும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது கட்டமாகவே சர்வதேசக் கடற்பரப்பில் கடல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்ற கடற்புலிகளின் கப்பல்களை தாக்கி அழிக்கின்ற நடவடிக்கைகளில் இறங்கியது இலங்கை அரசு. கடற்புலிகளின் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவை பயணிக்கின்ற கடற்பாதைகள் தொடர்பாகவும் இந்தியாவும் மேற்குலக நாடுகளும் புலனாய்வு ரீதியாக சகல தரவுகளையும் திரட்டி இலங்கை அரசிற்கு கொடுத்திருந்தது.

இந்தத் தரவுகளையெல்லாம் அடிப்படையாக வைத்து இலங்கை கடற்பரப்பினர் 16.09.2006 அன்று அம்பாந்தோட்டைக்கு நேராகவுள்ள சர்வதேசக் கடல் எல்லையில் முதலாவது நாடகத்தை அரங்கேற்றினர். கடல் நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கியழிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் லெப் கேணல் ஸ்ரீபன், லெப் கேணல் அந்தணன், லெப் கேணல் விதுசன் உட்பட இன்னும் சில கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.
இரண்டாவது நாடகத்தை தேவேந்திரமுனைக்கு அப்பாலுள்ள சர்வதேசக் கடற்பரப்பில் அரங்கேற்றியிருந்தனர் இலங்கை கடற்படையினர். அதாவது 28.02.2007 அன்று தேவேந்திரமுனைக்கு அப்பால் பயணித்துக்கொண்டிருந்த கடற்புலிகளின் கப்பலை வழிமறித்த இலங்கை கடற்படையினர் அதைத் தாக்கி மூழ்கடித்தனர். இந்தச் சம்பவத்தின் போது லெப். கேணல் இளமுருகன் உட்பட பதினைந்து கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.

இரண்டாவது சம்பவம் நடந்து சரியாக பதினாறு நாட்கள் கழிந்து 16.03.2007 சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் மற்றுமொரு கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தின் போது ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியில் காவியமானார்கள்.

LTTE.sea-tigers.jpg

மூன்றாவது சம்பவம் இடம்பெற்று ஆறு மாதகால இடைவெளியின் பின்னர் 10.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இரண்டு கப்பல்கள் ஒரே சந்தர்ப்பத்தில் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இதற்கு மறுநாளான 11.09.2007 அன்று சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து கடற்புலிகளின் இன்னுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த மூன்று கப்பல் சம்பவங்களிலுமாக லெப். கேணல் சோபிதன் லெப். கேணல் செண்பகச்செல்வன், லெப். கேணல் வீமன் உட்பட முப்பதிற்கும் மேற்பட்ட கடற்புலிகள் கடலோடு கலந்து போனார்கள்.
இந்தத் துயரச் சம்பவங்கள் இடம்பெற்று ஒரு மாதகாலம் நிறைவடைவதற்கு முன்னர் சரியாக இருபத்தாறு நாட்கள் கடந்த நிலையில் 07.10.2007 அன்று அவுஸ்ரேலியா நாட்டின் கடல் எல்லைக்கு அண்டியதாக சர்வதேச கடற்பரப்பில் கடற்புலிகளின் மற்றுமோர் கப்பல் இலங்கை கடற்படையினரால் முற்றுகையிடப்பட்டு தாக்கி மூழ்கடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் லெப் கேணல் கபிலன் உட்பட ஒன்பது கடற்புலிகள் கடலன்னையின் மடியை முத்தமிட்டார்கள்.

இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக கடற்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவும் இந்த சம்பவங்களின் கப்பல்கள் மூழ்கடிக்கப்படதுவும் இந்த சம்பவங்களின் போது நீண்டகால கடல் அனுபவம் வாய்ந்த அறுபத்தெட்டு கடலோடிகளின் வீரச்சாவு நிகழ்வும் கடற்புலிகளுக்கும் கடற்புலிகளின் விசேட தளபதி சூசை அவர்களுக்கும் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருந்தது. 2007ம் ஆண்டில் மட்டும் கடற்புலிகளின் ஆறு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டிருந்தன. இவற்றுக்கு ஈடாக ஆறு பழிவாங்கல் தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டுமென்ற ஆக்ரோசமான உணர்வு கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்களிடம் மேலோங்கியிருந்ததை அந்தக் காலகட்டங்களில் அவதானிக்க முடிந்தது.

2006ம் ஆண்டைப் பொறுத்தவரையில் கடற்புலிகள் பல கடற்சமர்களை மேற்கொண்டு குறிப்பிடக் கூடிய வெற்றிகளைக் குவித்திருந்தார்கள். அவற்றில் 2006 ஜனவரி மாத்தின் முற்பகுதியில் திருமலைக் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருந்த டோறா கடற்கலம் வஞ்சியின்பன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் பத்து இலங்கை கடற்படையினருடன் டோறா மூழ்கடிப்பு 11.05.2006 அன்று வெற்றிலைக்கேணிக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்கரும்புலிகளான லெப். கேணல் கவியழகி, லெப் கேணல் சஞ்சனா, லெப் கேணல் அன்பு, மேஜர் மலர்நிலவன் ஆகியோர் மேற்கொண்ட கரும்புலித்தாக்குதலில் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு, 16.10.2006 அன்று தென்னிலங்கையிலுள்ள காலித்துறைமுகத்தில் கடற்கரும்புலிகள் ஊடுருவிச் சென்று மேற்கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த கரும்புலித்தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் வீரயா கட்டளைக்கப்பல் உட்பட இன்னும் பல கடற்கலங்களும் அழிக்கப்பட்டன. இந்த இழப்புகளையெல்லாம் அன்றைய நாட்களில் இலங்கை அரசு மூடி மறைத்திருந்தது. அத்துடன் 09.11.2006 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலங்களின் தொடரணி மீது கடற்புலிகளும் கடற்கரும்புலிகளும் மேற்கொண்ட தாக்குதலில் இலங்கை கடற்படையினரின் இரண்டு டோறா கடற்கலங்கள் மூழ்கடிப்பு என 2006 ம் ஆண்டில் கடற்புலிகள் ஈட்டிய வெற்றிகளை பட்டியலிட்டுக் குறிப்பிட முடியும்.

2007ம் ஆண்டில் கடற்புலிகள் மேற்கொண்ட கடற்சமர்கள் எவையும் அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. 26.12.2007 அன்று நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரின் டோறா கடற்கலம் ஒன்றின் மீது கடற்கரும்புலி லெப் கேணல் சங்கரி தலைமையிலான நால்வர்’ அடங்கிய கடற்கரும்புலிகள் மேற்கொண்ட கரும்புலித் தாக்குதலில் அந்த டோறா கடற்கலம் மூழ்கடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல் அன்றைய தினம் பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றது. கடற் சண்டையைப் பொறுத்தமட்டில் பகல் சண்டைக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பது விமானத்தாக்குதல் ஆகும். நீண்ட நாட்களாக இலக்குக்காகக் காத்திருந்து அன்றைய தினம் காலை வேளையிலே அந்த இலக்கு கிடைத்ததால் விமான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கினர் கடற்புலிகள். கட்டளை மையத்தில் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசைக்கு அடுத்த நிலையிலான தளபதிப் பொறுப்பை நிர்வகித்துக்கொண்டிருந்த நரேன் அவர்கள் தாக்குதலை நெறிப்படுத்த வெற்றிகரமாக கடற்கரும்புலித்தாக்குதலை மேற்கொண்டு டோறாக் கடற்கலத்தை மூழ்கடித்துவிட்டு வெற்றிவாகையுடன் தளம் திரும்பிக்கொண்டிருந்தன. கடற்புலிகளின் சண்டைப் படகுகள். படகுக்கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவனின் படகு கிராஞ்சிக் கடலில் கரை தட்டிய வேளை திடீரென வான்பரப்பிற்குள் நுழைந்த கிபிர் விமானங்கள் இந்தப் படகின் மீது தாக்குதலை மேற்கொண்டதில் படகுக் கட்டளை அதிகாரி லெப். கேணல் நிலவன் உட்பட பதினேழு கடற்புலிகள் ஒரே சந்தர்ப்பத்தில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். ஆகவேதான் ஒரே சம்பவத்தில் இவ்வாறான பேரிழப்பு ஏற்பட்டதால் இந்த டோறா மூழ்கடிப்புச் சமர் வரலாற்றில் வெற்றிச் சமராகப் பதியப்படவில்லை.

t_aucw_06.jpg22.03.2008 அன்று முல்லைத்தீவு நாயாற்றுக் கடற்பரப்பில் வைத்து கடற்கரும்புலிகளான லெப். கேணல் அன்புமாறன்இ மேஜர் நிறஞ்சினி, மேஜர் கனிநிலா ஆகிய மூவர் அடங்கிய கரும்புலிப்படகு இலங்கை கடற்படையினரின் டோறாக்கலம் மீது மோதி அந்த டோறாக்கலம் நாயாற்றுக்கடலில் மூழ்கடிக்கப்பட்டது. இந்த தாக்குதலும் அன்றைய தினம் பகல்வேளையிலேயே இடம்பெற்றது. இத்தாக்குதல் ஒரு வித்தியாசமான கோணத்தில் நடைபெற்றது. அது என்னவென்றால் சண்டைப் படகு மட்டும் களத்தில் இறங்கி டோறாக்கலத்துடன் மோதியது. டோறாக்கலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டது. கரும்புலிகள் நாயாற்றுக்கடலில் வரலாற்றைப் படைத்தார்கள். இதுதான் அன்றைய தினத்தில் நடந்த சம்பவம். இந்த டோறா மூழ்கடிப்பு சம்பவமானது அன்றைய நாட்களில் இலங்கை கடற்படையினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தது. குறிப்பாக கடலில் சண்டை எதுவும் இடம்பெறவில்லை. இந்த நடவடிக்கைக்கு ‘பழிவாங்கல்- 01′ என கடற்புலிகளால் பெயரிடப்பட்டது.

அடுத்ததாக ‘பழிவாங்கல் – 02′ நடவடிக்கை திருகோணமலை துறைமுகத்திலேயே மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டது. விடுதலைப்புலிகளின் கப்பல்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்படையினரால் சர்வதேசக் கடற்பரப்பில் மூழ்கடிக்கப்பட்டபோது இந்த நடவடிக்கையில் நேரடியாகப் பங்கெடுத்த கடற்படையினருக்கு வழங்கல் பணி மேற்கொண்டதுதான் இலங்கை கடற்படைக்குச் சொந்தமான யு-520 துப்புக்காவிக் கப்பல். இந்த துருப்புக்காவிக்கப்பலை தகர்ததெறிவதே ‘பழிவாங்கல் – 02′ திட்டம். இந்த நடவடிக்கைக்கான வேவுத்தரவுகளை எடுத்து நடவடிக்கைக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வதற்கென தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகிய இருவரும் சிறப்புத்தளபதி சூசை அவர்களால் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டார்கள். கப்பலைத் தகர்ப்பதற்கான கரும்புலித்தாக்குதலை மேற்கொள்வதற்கென கங்கையமரன் நீரடி நீச்சல் பிரிவிலிருந்து லெப். கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பயிற்சிகள் அனைத்தும் நீரடி நீச்சல்ப் பிரிவுப் பொறுப்பாளர் சின்னவன் அவர்களால் முல்லைத்தீவு – சிலாவத்தைப் பகுதியில் வைத்து வழங்கப்பட்டது. இந்த இரண்டு கரும்புலி மறவர்களும் கடுமையான பயிற்சிகளால் புடம்போடப்பட்டு ஒத்திகைப் பயிற்சிகளும் திருப்தியாக அமையவே இருவரும் தாக்குதலுக்காக திருகோணமலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

 

திட்டமிட்டபடி தாக்குதல் தளபதிகளான லெப். கேணல் கதிரவன் மற்றும் சீலன் ஆகியோர் எடுத்த தரவுகளின் படி யு-520 துருப்புக்காவிக்கப்பலும் திருகோணமலைத் துறைமுகத்தில் நங்கூரமிட்டிருப்பதுவும் உறுதி செய்யப்பட்டது. இந்த தாக்குதலுக்கென தேர்வு செய்யப்பட்ட செம்பியவளவனும் அற்புதனும் சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன் வெடி குண்டுகளையும் உடம்பில் கட்டி கடலின் அடியால் நீந்திச் சென்று யு-520 துருப்புக்காவிக் கப்பலின் கீழ் அடிப்பகுதியில் வெடிகுண்டுகள் இரண்டையும் பொருத்தி வெடிக்க வைத்து கப்பலைத் தகர்த்தெறிவதுவே தாக்குதலினுடைய திட்டம்.

குறிப்பிட்ட தாக்குதலுக்கான திகதியும் குறிக்கப்பட்டது. 09.05.2008 அன்று இரவு தாக்குதலுக்கான ஏற்பாடுகள் திருகோணமலையில் யாரும் அறியாத இடமொன்றில் மிகவும் இரகசியமான முறையில் இவர்களால் மேற்கொள்ளப்படுகின்றது. அந்த நேரத்தில் செம்பியவளவனின் பெற்றோர் தென்னிலங்கையில் தங்கியிருந்தார்கள். தாக்குதலுக்குப் புறப்படுவதற்கு முன்னர் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசையுடன் செய்மதித் தொலைபேசியில் இரண்டு கரும்புலி வீரர்களும் கதைத்தார்கள். அப்போது செம்பியவளவன் ‘அம்மாவுடன் தொலைபேசியில் ஒருமுறை கதைக்கட்டா அண்ணை’ என்றார் அதற்கு சிறப்புத்தளபதி சூசை அவர்கள் தாக்குதலுக்கு பங்கம் ஏற்படாத வகையில் கதைக்கும்படி அனுமதி வழங்கினார். தாய்மண் விடிவிற்காக சாவிற்கு நேரம் குறித்த பின்னர் அந்த வீரனுக்கு தாயின் நினைவு வந்ததது தவறு இல்லைதானே. அனுமதியைப் பெற்றுக்கொண்டு அம்மா, அப்பா, அக்கா என எல்லோருடனும் அரைமணி நேரமாக தொலைபேசியில் கதைத்தான். இன்னும் சிறிது நேரத்தின் பின்னர் கடிலின் அடியில் வெடிக்கப்போகின்றேன் என்று தெரிந்தும் எந்தவித பதற்றமும் இல்லாமல் உறவுகளோடு கதைத்து முடித்தான்.

10.05.2008 அதிகாலை 3.00 மணி. வெடிகுண்டுகளை உடலில் கட்டிக்கொண்டு சிலிண்டரில் அடைக்கப்பட்ட ஒட்சிசன் உதவியுடன்ட அந்த இரண்டு கரும்புலி வீரர்களும் காரிருள் வேளையில் கடலில் அடியால் நீந்திச்சென்றனர். நீந்திச் சென்று குறித்த இலக்கான யு-520 துருப்புக்காவிக்கப்பலை இருள் வேளையிலும் இனங்கண்டு உடம்பில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை கப்பலின் கீழான அடிப்பகுதியில் பெருத்தியதும் குண்டுகளை வெடிக்க வைத்தனர். யு-520 துருப்புக்காவிக்கப்பல் திருமலைத் துறைமுகத்தில் தகர்ந்தது. கடற்கரும்புலிகளான லெப் கேணல் செம்பியவளவன், மேஜர் அற்புதன் திருமலைக்கடலில் வரலாறானார்கள். வெற்றிச் செய்தி காற்றலையில் கலந்தது. பழிவாங்கல் – 02 வெற்றிகரமாக நிறைவேறியது.

2009 மே மாதம் 18ம் திகதி முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதற்கு 2007ம் ஆண்டில் விடுதலைப்புலிகளின் கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதுவே ஒட்டுமொத்த புலிகளின் தோல்விக்கு காரணமாக அமைச்ததெனவும் கூறலாம்

https://eelampakkam.blogspot.com/2012/03/blog-post_04.html

செங்கோ

"தூரத்துப் பச்சை"

2 months 2 weeks ago

"தூரத்துப் பச்சை"

 

போரின் பின் தன்னம்பிக்கையும் வலிமையும் வளர்ச்சியும் மிக்க நகரமாக இன்று மாறி வரவேற்கும் இலங்கை வடபகுதியின்  எல்லையில் இன்னும் துயரமுகத்துடன் யுத்த வடுக்களை தங்கியவண்ணம் அந்தக் கிராமம் இருக்கிறது. விரல்களற்ற கைகளை நெற்றியில் வைத்து பார்த்தபடி,  முகத்தில் யுத்தம் கொடுத்த கொடும் காயங்களை வரைந்தபடி அவள் தன் மகன் கண்ணனுடன் நின்றாள். வயல்களும் பயன்தரு மரங்களும் கோயில்களும் என்று முன்னைய நீண்டகால வாழ்வை உறுதியுடன் சொல்லும் எச்சங்கள் இன்னும் அந்தக் கிராமத்தில் நிற்கின்றன.  யுத்தகால மண்மேடுகளும் அழிவுகளும் மிகுந்திருப்பதுடன் பேரழிவுகளின் காட்சிகளுடன் இன்னும் அதன் எல்லைப் பகுதி காணப்படுகிறது. 

இந்த கிராமமும் அதனை சுற்றிய கிராமங்களும் நம்பிக்கையுடன் மீளக் குடியேறி சில ஆண்டுகளுக்கு  மேலாகின்றன. ஆனால், அன்றைய மனதை குளிரச் செய்த காட்சிகளும் இதமான காற்றையும் வீதிக்கு அருகாக கூட வரும் ஆற்றையும் இன்று காணவில்லை.  நீண்ட கால விவசாயக் கிராமமான அது 1950களில் மக்கள் குடியேறி,  கிட்டத்தட்ட ஆறு தலைமுறைகளை கடந்த  கிராமம் இது. அப்படிச் சொல்வதைவிட ஆறு தலைமுறைகளின் உழைப்பில் வளர்ந்த கிராமம் என்றே சொல்லலாம். அது தான் இன்று பச்சையை இழந்து இப்படி வாடி இருக்கிறது.

இலங்கையின் வறண்ட வட சமவெளிகளுக்கு இடையில் அமைந்துள்ள தமிழ் கிராமமான அங்கு,  மக்கள் எளிமையான வாழ்க்கை இன்று வாழ்கின்றனர். அவர்களின் நிலம் இப்ப கடுமையாகக் காணப்படுகிறது. விளைநிலங்கள் பயிர்களை விளைவிக்க போராடுகின்றன. ஒவ்வொரு நாளும் கொளுத்தும் வெயிலுக்கும், மழைக்குப் பதிலாக புழுதியை வீசிய காற்றுக்கும், போருக்கு முந்தைய சிறந்த காலத்தின் நினைவுகளுக்கும் இடையில் இன்று அந்தக் கிராமம் தன்னை மீண்டும் கட்டியெழுப்ப போராடிக்கொண்டு இருந்தது. ஆனாலும், அந்த  மக்கள் தங்களிடம் உள்ளதைக் குறித்து பெருமிதம் கொள்வதில் எள்ளளவும் குறையவில்லை. 

மாலை நேரங்களில், அன்றைய வேலை முடிந்ததும், கிராமத்து பெரியவர் அப்பா சுந்தரத்திடம் கதைகள் கேட்க, கிராம மக்கள் ஆலமரத்தடியில் கூடுவார்கள். அவரது கதைகள் புனைவுகளால் நிரம்பியுள்ளன, சில பழமையானவை, சில போரினால் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அவர் அடிக்கடி சொன்ன ஒரு கதை இருந்தது, அது "தொலை தூரத்துப் பச்சை [பசுமை]" கதையாகும். 

"இது மலைகளுக்கு அப்பால் உள்ளது," அப்பா சுந்தரம், தொலைதூர அடிவானத்தை சுட்டிக்காட்டி, "மிகவும் செழிப்பான, மிகவும் வளமான நிலம், சிறிய விதை கூட வலிமையான மரமாக வளரும். அங்குள்ள ஆறுகள் தெளிவாகவும் குளிர்ச்சியாகவும் ஓடுகின்றன, மேலும் மண் வளமானது. பசி தெரியாத இடம், பூமி தாராளமாக செழிப்பை கொடுக்கிறது" என்றார்.

தங்கள் சொந்த முயற்சிப் போராட்டங்களால் சோர்வடைந்த இளைய கிராம மக்கள் இந்தக் கதைகளால் மயங்கினர். அன்றாட வாழ்க்கையின் சுமைகள் மறைந்து போவதாகத் தோன்றும் அந்த தொலைதூர இடத்தில் அவர்கள் வாழ்வதாக அவர்கள் அடிக்கடி கற்பனை செய்தனர். இந்த இளம் கிராமவாசிகளில் ஒருவரான அந்த கண்ணன் என்ற வாலிபன் குறிப்பாக இந்த கதையில் முற்றாக தன் மனதைப் பறிகொடுத்தான்.  

போர் அவர்களின் வயல்களையும், அவர்களின் எதிர்காலத்தையும் பறித்தது. ஒரு காலத்தில் பசுமையாக செழித்து வளர்ந்த இடத்தில், இப்போது வறண்ட பூமி மட்டுமே, விரிசல் மற்றும் தரிசாக உள்ளது அது தான் கண்ணனின் தாயின் முக்கிய கவலை. அதை அவள் தன் மகன் கண்ணனிடம் பலதடவை கூறியுள்ளாள். 

அப்பா சுந்தரத்தின் ஒவ்வொரு சொல்லும் அவன் காதில் மோதிக்கொண்டு இருந்தன. "பரம்பரை பரம்பரை பரம்பரையாக பெரிய மரங்கள் உயர்ந்து நிற்கும் , ஆறுகள் தாராளமாக ஓடும். மோதலுக்கு முன்பு, தமிழ் விவசாயிகள் அந்த நிலத்தை நோக்கிப் போனதாகவும் அப்பா சுந்தரம் கூறியதை கண்ணன் மறக்கவில்லை. 

கிராமத்தில் மூத்தவரான அப்பா சுந்தரம், அடிக்கடி புளியமரத்தின் நிழலில் அமர்ந்து, தொலைந்து போன சொர்க்கத்தைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பார். அதை கண்ணனும் குந்தி இருந்து கேட்பான். 

“அங்கு, சூரிய ஒளி அரிதாகவே தரையைத் தொடும் அளவுக்கு மரங்கள் அடர்ந்து வளர்கின்றன. புதிய மல்லிகைப்பூவின் வாசனையுடன் காற்று இனிமையானது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நிலம் பசுமையானது. ஆனால்…” அப்பா சுந்தரத்தின் குரல் சற்று நின்றது, “இது தூரத்து பச்சை. அதனால் நாம் இன்னும் அங்கு பொதுவாக போகவில்லை. கனவில் மட்டுமே, கதையில் மட்டுமே நின்றுவிட்டது" என்றார் 

பெரியவரின் பேச்சைக் கேட்டதும், கண்ணன் மலைகளை ஏக்கத்துடன் பார்த்தான். வறண்ட வயல்கள் மற்றும் இடைவிடாத வெப்பம் கொண்ட அவனது  கிராமம், தொலைதூர பசுமையைப் பற்றிய ஒவ்வொரு வார்த்தையும் அணுஅணுவாக உணர்ந்தது.

பல மாதங்கள் கனவு கண்டு, ஒரு நாள் கண்ணன் ஒரு முடிவெடுத்தான். அவன் தன் கிராமத்தை விட்டு வெளியேறி மலைகளுக்கு அப்பால் உள்ள அந்த பசுமையான நிலத்தைக் கண்டுபிடிக்க ஆசைப்பட்டான் . ஆனால் பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. 

"கண்ணன், இந்த நிலம் எங்கள் வீடு" என்று அவன் தந்தை கூறினார். "இது கடினமாக இருக்கலாம், ஆனால் இது நம்முடையது. நம்மிடம் இருப்பதைக் கொண்டு நாங்கள் வாழப்பார்க்க வேண்டும். நீ  தேடுவது  பொய்யாகக் கூடப் போகலாம்?" என்கிறார். ஏன் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று உனக்கு தெரியாதா என்று முடித்தார். 

ஆனால் கண்ணன் மனதை உறுதி செய்தான். அடிவானத்திற்கு அப்பால் வாழ்க்கை நிறைந்த ஒரு நிலத்தை கற்பனை செய்துகொண்டிருக்கும் போது அவனது கால்களுக்குக் கீழே விரிசல் விழுந்த பூமியைப் பார்க்க அவனால் சகிக்க முடியவில்லை.

ஒரு விடியற்காலையில், அவன் தனது பயணத்தைத் தொடங்கினான். அவன் போகும் வழியில், செழித்த தென்னை மற்றும் மா மரங்களுக்கு இடையில் எறிகணையால் உயிரிழந்த மரங்களும் முகத்தை காட்டிக் கொண்டு நிற்கின்றன. அவனுக்கு  பல ஞாபகங்களை அந்தத் தெருக்கள் கிளறிக் கொண்டிருந்தன. 

அவன் இன்னும் கொஞ்ச தூரம் செல்லும் பொழுது, அண்மையில் குடியேறி பாம்பு தீண்டியதனால் மரணித்த சிறுவனின் வெற்றுடல் வைக்கப்பட்டிருந்தது. இவ்வளவு தூரம் உன்னை பொத்திப் பொத்தி கொண்டு வந்த பிறகு பாம்பு உன்னை தின்று விட்டதே? என்ற அந்த சிறுவனது தாயின் அழுகை அந்தப் பகுதியை மட்டும் அல்ல அவனையும்  உறைய வைத்தது. 


மேலும் பாடசாலையடி கடுமையான போர் நடந்த களமுனை போலும்,  பக்கத்தில் உள்ள பல வீடுகள் சிதைந்திருந்தன. பாடசாலையின் பக்கத்தில் உள்ள முன்பள்ளிகள் கூரை அலுவலகங்கள் கூரை  பொது மண்டபங்கள் எல்லாம் அழிந்த நிலையில் வீழ்ந்து கிடந்தன மிதிவெடிகள் விதைக்கப்பட்ட நிலம் என்று, பார்க்கும் இடமெல்லாம் ‘மிதிவெடிகள் கவனம்’ என்ற வார்த்தைகள் தொங்கிக்கொண்டு இருந்தன. 


மிதிவெடி அபாயப்பலகைகள் உக்கி உடைந்து போகும் நிலையிலும் அந்தப் பகுதிகளில் மக்கள் பெரியளவில் குடியேறவில்லை என்பதைக் கவனித்தான். பல குடும்பங்கள் திரும்பி வந்து அறிந்த தெரிந்த வர்களின் காணிகளில் கூடாரம் அமைத்திருந்தார்கள் . அந்த தெருவின் தொடக்கத்தில் ஒரு காணியில் கூடாரத்தை நட்டு ஒரு குடும்பம் இருந்ததது. அதன் முற்றத்தில் குழந்தைகள் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் காணிகளுக்கு மிதிவெடி அபாயம் காரணமாக இன்னும் குடியிருக்க அனுமதிக்காத காரணத்தினால், அந்தக் காணியில் கூடாரம் அமைத்து தங்கியிருக்கிறார்கள் போலும். அப்படி பல குடும்பங்களைப் பார்த்துக்கொண்டு தன் பயணத்தை கண்ணன் தொடர்ந்தான்.  


சனங்களறற்ற பல காணிகளை தாண்டிச் சென்ற பொழுது ஒரு குடி ஆற்றங்கரை ஒன்றின் பக்கத்தில் தங்கள் காணியில் உள்ள தென்னைகளில் விழுந்த ஓலைகளை பின்னி அழகான வீடு ஒன்றை அமைத்துக் கொண்டிருந்தார்கள். வயதான தாய் ஓலைகளை பின்னிக் கொண்டிருக்கிறார். பழைய வீடு இடிந்தபடி அப்படியே பக்கத்தில் இருக்கிறது. குழந்தையும் தாயும் மண்ணெடுத்து வந்து வீட்டிற்கு கொட்டுகிறார்கள். அழகான மண் அடுப்பு ஒன்றை அமைத்திருக்கிற அந்த குடியைச் சேர்ந்த மூதாட்டி இந்த நிழலில் வந்து கிடக்க எத்தனை இடர்களுக்கு முகம் கொடுத்தோம் என கண்ணனிடம் சொல்லி பெரு மூச்சு விட்டார்.


இவற்றை எல்லாம் தாண்டி மலைகளில் ஏறிய அவன் தனது கிராமத்தை திரும்பிப் பார்த்தான். கிராமம் சிறியதாகவும் சோர்வாகவும் காணப்பட்டது, அதன் வயல்கள் பல வருட போராட்டத்தால் பச்சை இழந்து இருந்தது. அதை விட்டுவிட்டு போவது அவனுக்கு ஒரு நிம்மதி உணர்வைக் கொடுத்தது,  

மலைகளின் உச்சியை அடைந்ததும் அவன் இதயம் எதிர்பார்ப்பில் துடித்தது. கற்பனை நிலத்தை, தன் கனவுகளை நிரப்பிய தொலை தூரப் பசுமையைப் பார்க்க எதிர்பார்த்து அங்கேயே நின்றான். ஆனால் கீழே உள்ள பள்ளத்தாக்கைப் பார்த்தபோது, அவனதுஉற்சாகம் குழப்பமாக மாறியது. அந்த தூரத்து  நிலம் கதைகள் கூறியது போல் பசுமையாக இல்லை. உண்மையில், அது அவன் கிராமம்  போலவே இருந்தது. தன் கிராமத்தைப் போல,அதே கடுமையான வெயிலால் காய்ந்து, வாடி, தேய்ந்தது இருப்பதைக் கண்டான், ஆனால் அங்கு யுத்தத்தின் வடுக்கள் மட்டும் இல்லை.  


கண்ணன் பள்ளத்தாக்கில் இறங்கினான், ஒருவேளை அவன் போதுமான தூரம் செல்லவில்லை என்று நம்பினான். ஆனால் நாட்கள் செல்ல செல்ல, நிலம் அவன் விட்டுச் சென்றதை விட வேறு எதையும் வழங்கவில்லை. அங்கு அவன் சந்தித்த கிராம மக்கள் அதே போராட்டங்கள், அதே வறண்ட மண், அதே மழைக்கான ஏக்கம் பற்றி பேசினர். 


கேட்காத கானங்கள் இனிமையானது.பார்க்காத ஒன்று பச்சையாக தெரியும். அருகில் சென்றால் நம்மை முகம் சுளிக்க வைக்கும். 'தெரிந்த பேய்க்கு பழகிய நிலையில் தெரியாத தேவதையை நாடுவது ஆபத்தானது' என பழமொழி உண்டு. அக்கரை பச்சைக்கு நாட்டம் இல்லை. இக்கரை எதுவோ அதுவே பூஞ்சோலை. அது அவனுக்கு அப்பத்தான் காலம்கடந்து புரிந்தது!


கண்ணன் விரைவில் உண்மையை உணர்ந்தான். அவன் கனவு கண்ட பசுமையான நிலம், குறைந்தபட்சம் அவன் கற்பனை செய்த விதத்தில் இல்லை. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு மிகவும் சரியானதாகத் தோன்றியது, உண்மையில், அவனுடய  சொந்த வீட்டிலிருந்து வேறுபட்டதல்ல. இந்த மண்ணின் போராட்டங்கள் தனது கிராமத்தில்  நடந்ததைப் போலவே இருந்தன. பசுமையான மேய்ச்சல் நிலங்களின் கதைகள் அவனது  சொந்த ஆசைகளின் பிரதிபலிப்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பதைக் கண்டறிந்தான். 


கனத்த இதயத்துடன் கண்ணன் தனது கிராமத்துக்கு  திரும்பினான். கிராம மக்கள் அவனை  மீண்டும் வரவேற்றனர், அவன் தனக்கு பழக்கமான தன்னுடைய கிராம வயல்களில்  நடந்து செல்லும் போது, அவனது பார்வையில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. விரிசல் விழுந்த பூமியும் வறண்ட காற்றும் ஒரு காலத்தில் அவனை விரக்தியில் ஆழ்த்தியது, இப்போது பழைய தோழர்கள் போல் தோன்றியது. கடினமான இந்த நிலம் அவனுக்குச் சொந்தமானது.


அன்று மாலை, கிராம மக்கள் மீண்டும் ஒருமுறை ஆலமரத்தடியில் கூடியபோது, அப்பா சுந்தரம் கண்ணனிடம் தன் கதையைப் பகிர்ந்து கொள்ளச் சொன்னார். கண்ணன் தன் மக்களின் முகங்களைப் பார்த்தான், ஒரு காலத்தில் தான் வெறுப்படைந்த நிலத்தைப் பார்த்து, பேசினான்.


மனம் எப்போதுமே இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க
ஆலாய் பறக்கும்.

தூரத்திலிருந்து  பார்ப்பதற்கு எல்லாமே அழகாகத்தான் தெரியும்.


மலையும் அதன் காட்சிகளும் தொலைவிருந்து பார்க்கும்போது அழகாக இருக்கும்.


பசுமையான  புல்வெளிகள் நாம் இருக்கும் இடத்தில் இருந்து பார்ப்பதைவிட தொலைவில் இருந்து பார்க்கும் போது தான்
கொள்ளை அழகு என்று சொல்லி பிரமிக்க வைக்கும்.


இக்கரையோ அக்கரையோ எதுவாக இருந்தாலும் பசுமையாக வைப்பது நம் கையில்தான் உள்ளது.


இருப்பதில் திருப்தி கொண்டு வாழ அக்கறை எடுத்துக்
கொண்டாலே போதும்.


அக்கரையைப் போல இக்கரையையும் பச்சைப் பசேலென்று பசுமையாக வைத்துக் கொள்ளலாம். 


அவன் மனம் தனக்குள்ளே பேசிக்கொண்டது


"நான் மலைகளுக்கு அப்பால் சென்றேன், நான் எதிர்பார்த்தது இல்லை, என்பதை நான் அங்கு கண்டேன். அங்குள்ள நிலம் நமது நிலத்தை விட பசுமையானது இல்லை. நம்மிடம் இல்லாதது சிறப்பாக இருக்க வேண்டும் என்று நாங்கள் கற்பனை செய்கிறோம், ஆனால் உண்மை என்ன வென்றால், ஒவ்வொரு இடத்திற்கும் அதன் அதன் போராட்டங்கள் உள்ளன. இந்த எம் நிலம், அதன் எல்லாக் கஷ்டங்களோடும், நான் தேடியதை விடக் குறைவான தகுதியுடையது அல்ல.


கிராம மக்கள் அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர், மெதுவாக அவர்களிடையே புரிதல் பரவியது. வேறொரு வாழ்க்கையை, ஒரு சிறந்த இடத்தைப் பற்றி அவர்கள் நீண்ட காலமாக கனவு கண்டார்கள், அவர்கள் ஏற்கனவே வைத்திருந்தவற்றின் மதிப்பை மறந்து விட்டார்கள் என்பதை உணர்ந்தார்கள்.


அன்று முதல் கண்ணன் புதிய நோக்கத்துடன் வயல்களில் வேலை செய்தான். சிறு சிறு வெற்றிகளைப் பார்த்தான். வறண்ட பூமியில் உந்தித் தள்ளும் பச்சைத் தளிர்களையும்  தென்றல் மழையின் வாசனையையும் கண்டான். 'உன்னிப்பாகக் கவனித்தால், நிலத்திற்குத் திரும்பும் பச்சைப் பளபளப்பைக் காண்பீர்கள். ஒரு நாள், அது எங்களிடம் திரும்பி வரும்' என்று அவன் வாய் முணுமுணுத்தது.

அவனது கிராமத்தின் நிலம் தொலைதூர நாடுகளின் கதைகள் போல் பசுமையாக இருந்திருக்காது, ஆனால் அது அவர்களுடையது. மற்றும் சில நேரங்களில், பார்க்க கடினமான விடயம் என்ன வென்றால், நம்மிடம் ஏற்கனவே இருப்பது உண்மையில் எமக்கு போதுமானது என்பதேயாகும்.  எனவே, தொலைதூரக் கனவில் அல்ல, இழந்தவற்றின் சாம்பலில் கூட பசுமை மீண்டும் வளரும் என்ற நம்பிக்கையில்  கண்ணனும் அவனது கிராம மக்களும் வாழத் தொடங்கினர்.  


"இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை
என் வீட்டு கண்ணாடி
என் முகத்தை காட்டவில்லை
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"
.

"சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
சம்சாரியின் ஆசை சன்யாசம் - அந்த
சன்யாசியின் ஆசை சம்சாரம்
கானலுக்கு மானலயும் கண்கண்ட காட்சி
கண் முன்னே காணுங்கள் ஒரு கோடி சாட்சி"


"இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"


"கடல் மீது விழுந்தோர்கள் நீந்துங்கள்
கனி மீது விழுந்தோர்கள் உண்ணுங்கள்
வழிச்சாலை கண்டோர்கள் செல்லுங்கள் - போக
வழியின்றி நிற்பவர்கள் நில்லுங்கள்
கல் தரையில் கை போட்டு நீந்துகின்ற மனிதா,
காலம் இட்ட கட்டளையை மாற்றுவது எளிதா,"


"இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"


"மழை நாளில் உன் எண்ணங்கள் வெயில் தேடும் - கோடை
வெயில் நாளில் உன் மேனி குளிர் தேடும்,
அது தேடி, இது தேடி அலைகின்றாய், - வாழ்வில்
எது வந்து சேர்ந்தாலும் தவிக்கின்றாய்,
அவரவர்க்கு வைய்த்த இடம் அவன் போட்ட பிச்சை,
அறியாத மானிடர்க்கு அக்கரையில் இச்சை
இல்லாத பொருள் மீது
எல்லோர்க்கும் ஆசை வரும்
இக்கரைக்கு அக்கரை பச்சை - என்றும்
இக்கரைக்கு அக்கரை பச்சை"


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]

462083870_10226456579983568_3098453754963058734_n.jpg?stp=dst-jpg_p526x395&_nc_cat=106&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=H0Dbl-R2SW4Q7kNvgFNqbOj&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYDlpXQa_xGaI6zxLLbiIqLEvvyn4STFX30-qez_GHChpQ&oe=6706B7F3 461992859_10226456579703561_6319706617794498210_n.jpg?_nc_cat=101&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=e53AcwcPwEQQ7kNvgH4DOq7&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYANzWIcyng8V4A5wWHN7b8cIw3Hli1rhKyHFp2gSzlvrA&oe=6706B031 

462114802_10226456579823564_3642911581399452722_n.jpg?stp=dst-jpg_s600x600&_nc_cat=104&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=MKjzZv8UpMMQ7kNvgFR3hvs&_nc_ht=scontent-lhr6-2.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYDIosVV1Pjiouht7Ghyk4hKWRxIRsj_ghYGWx1k6hBs_Q&oe=6706A66E 461966375_10226456581783613_3841185650237887503_n.jpg?_nc_cat=111&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=2z-sx3cwrukQ7kNvgHEdzg3&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AXXdZqQ8eje9Mqk7uZqrggo&oh=00_AYDoR1QQ695IkM2bhpquhgO1MU4y14mK11iwc2mxsWDnVA&oe=6706AC57

 

 


 

எமது மண்ணின் இன்றைய நிலை குறித்த தமிழ் கவி அம்மாவின் செவ்வி

2 months 2 weeks ago

எமது தாயகத்தின் இன்றைய நிலை தொடர்பாக கவிஞரும் எழுத்தாளருமான தமிழ் கவி  அவர்களின் செவ்வி.   2009 வரை போராட்டத்திற்க்காக  தன்னை  முழுமையாக அர்பணித்ததுடன் போராட்டத்திற்து தனது பிள்ளைகளையும் கொடுத்த தமிழ்கவி அம்மாவின் ஆதங்கங்களை இந்த செவ்வியில் தெரிவித்துள்ளார். 

Checked
Sun, 12/22/2024 - 12:59
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed