எங்கள் மண்

"என் இனமே என் சனமே” (செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)

2 weeks 2 days ago

"என் இனமே என் சனமே”

(செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழிகளில் புதைந்த வரலாற்றைப் பிரதிபலிக்கும் ஒரு கற்பனைச் சிறுகதை)

மேல் வானம் தாழ்வாகத் தொங்கியது, அதுவும் துக்கம் அனுசரிப்பது போல. சிவப்பு பூமியின் அடியில், நீண்ட நேரம் அலறல்கள், பிரார்த்தனைகள் மற்றும் கனவுகளுடன் மங்கின. முப்பத்தி மூன்றாவது மண்டை ஓடு மெதுவாகத் தோண்டி எடுக்கப்பட்டதால், இந்த வாரம் அமைதி மீண்டும் உடைந்தது. அதன் அருகில் - ஒரு சிறு குழந்தையின் பள்ளிப் பை, காலத்தால் மங்கிப்போனது, ஆனால் அதன் இருப்பு பல கதைகளைச் சொல்லப்போகுது. மறக்கப்பட்ட ஒரு தாலாட்டை உச்சரிப்பது போல, தமிழ் எழுத்துக்கள் அதன் குறுக்கே நடனமாடின.

அந்தக் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் அருகே, கூடியிருந்த பார்வையாளர்களிடையே, ஐம்பது அகவை மதிக்கத்தக்க அனந்தி என்ற பெண், 1996 ஆம் ஆண்டு ஒரு சோதனைச் சாவடியில் அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காணாமல் போன தனது தம்பி சிவகுமாரின் புகைப்படத்தை கையில் ஏந்தி நின்றாள். "கண்ணா, நீ அழுதாயா? உன்னைப் பேச அனுமதித்தார்களா? நீ இறந்தபோது நீ தனியாக இருந்தாயா?" இப்படியான அவளின் மனஉளைச்சலுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை, அவள் பதில்களை எதிர்பார்க்கவும் இல்லை.

ஆனால் இன்று, ஏதோ மாற்றம் ஏற்பட்டது. குழந்தையின் எலும்புகளுக்கு அருகில் ஒரு சிறிய கண்ணாடி கண்டுபிடிக்கப்பட்டது. அவளுடைய இதயம் பதைபதைத்தது. அவள் கண்கள் கலங்கின. ஒருகாலத்தில் தம்பி அந்தக் கண்ணாடியை, பக்கத்து வீட்டுக்காரரின் குழந்தைக்கு வாங்க உதவியிருந்தார் என்பது, அவளுக்குத் திடீரென நினைவில் வந்தது.

1948-இல் சுதந்திரம் வந்தபின் தொடங்கியது – ‘சிங்களமொழி மட்டும்’, கல்வித் தரப்படுத்தல், நில ஆக்கிரமிப்பு, மற்றும் சிறைகள் இல்லாத கொலைகள்!

அதன் உச்சியில் – 1996: கிருஷாந்தி குமாரசுவாமி. ஒரு பள்ளிச்சிறுமி. செம்மணி இராணுவத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டது. தாயார், சகோதரர், உறவினரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது வரை முறையான விசாரணை அல்லது அதற்கு ஏற்ற நீதி இல்லை. எதோ ஆரம்பித்தார்கள். தீர்ப்பளித்தார்கள். கிடங்கில் போட்டார்கள். புண்ணிய புத்த பூமியில் புத்தரின் முறையான போதனையைக் கேட்க ஒருவரும் இல்லை. அங்கொன்று இங்கொன்றாக பலர் பரந்து இருக்கிறார்கள். ஆனால், மௌனமாக? ஏன் புத்த சிலைகள் கூட ஆக்கிரமிப்பில் தான் ஈடுபடுகிறது! அவர்களின் உடல்கள் செம்மணியில்த் தான் புதைக்கப்பட்டன. அவள் எண்ணங்கள் பின்னோக்கி நகர்ந்தன.

இன்று, தடயவியல் நிபுணர் எச்சங்களின் மீது மண்டியிட்டு எதோ தேடுகிறார். அவருடன், கூட இருந்த தொல்பொருள் பேராசிரியர் மண் வடிவங்களை ஆய்வு செய்கிறார். மேலும் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் அறிவியலைப் பயன்படுத்தி திகிலை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் அவ்வளவு மட்டும் தான். அது மட்டும் தான் அவர்களால் முடியும் !

இவை சாதாரண மரணங்கள் அல்ல. இவை போரில் உயிரிழந்தவை அல்ல. இவர்கள் பொதுமக்கள் - பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள், கடைக்காரர்கள் - கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள். மீட்கப்பட்ட எலும்புகள், பழிவாங்கலைப் பற்றி கிசுகிசுக்கவில்லை ஆனால் அவை சாட்சியைக் கோருகின்றன. அவை நீதியைக் கேட்கின்றன. ஆனந்திக்கு அவை தன்னிடம் கேட்பது போலவே இருந்தது!

அவள் செம்மணியில் கூடியது துக்கம் பின்பற்ற மட்டுமல்ல, உண்மை அறிந்து நினைவு கூருவதற்காகவும். மண்ணில் உள்ள எலும்புகள் வெறும் அட்டூழியத்தின் சான்றுகள் மட்டுமல்ல - அவை தமிழ் தேசத்தின் ஆன்மாவின் துண்டுகள் என்பதை எடுத்துக் காட்டவுமே!

அவள் அந்தக் கண்ணாடியைப் பற்றி சொல்ல நினைத்தாள், ஆனால் கேட்கத்தான் அதிகாரிகள் இல்லை. அங்கு இருந்த படை வீரர்களும் அரச அதிகாரிகளும் அவளை, அகழாய்வு செய்பவர்களிடமோ, அதை மேற்பார்வையிடம் நீதிபதியிடமோ செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், அவளை காவல் நிலையத்தில் வந்து சொல்லும்படி கட்டளையிட்டனர்.

காவல் நிலையத்தில் எத்தனை முறைப்பாடுகள், சான்றுகள் தூங்கிக் கிடக்கின்றன என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். அது அவளின் அனுபவம் கூட.

அவள் அன்று இரவே மக்களுக்கு தன் இணையத் தளத்தின் மூலம் வேண்டுகோள் விடுத்தாள்.

என் இனமே என் சனமே …

நம்மை அழிக்க முயன்றவர்கள், நம்மை மறக்கச் சொல்லுகிறார்கள்.

ஆனால், இந்தக் குழந்தைகளின் எலும்புகள் பேசுகின்றன. கண்ணாடியும் பாடசாலைப் பையும் சத்தமில்லா சாட்சிகள்!

சம தருமம் இல்லா நீதியின் முகத்தை, நீதி மன்றமில்லாத இராணுவ கெடுபிடியை, இன அழிப்பின் பிசாசை, இந்த செம்மண் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது!

நாம் அழக்கூடாது. நாம் பேச வேண்டும். நாம் பதிவு செய்ய வேண்டும்.

செம்மண் நாம் உறங்கும் இடமல்ல — நம் சத்தியத்துக்கான மன்றம்!

அங்கு புதைந்துள்ள ஒவ்வொரு எலும்பும், “நீதி” என்றொரு குரல்!

நீதி ஒரு நாள் பிறக்கும். அந்த நாளுக்காக — நாம் மறவாமலிருப்பதே நாம் செய்யும் பெரிய போராட்டம்!

நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]


"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10

2 weeks 3 days ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 10

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 10 / 'மே பௌர்ணமி நாளில் விஜயன் இலங்கையில் தரையிறங்க முடியுமா?'

புத்தர் ஒரு முழு மதி நாளில் மே மாதம் இறந்ததாக நம்பப் படுகிறது. வடகிழக்கு பருவமழை [The Northeast monsoon] நவம்பர், டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி காலங்களில் பொதுவாக செயலில் இருக்கும். ஆனால், மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில், இலங்கையை நோக்கி பயணிக்க துணையாக எந்த பருவக்காற்றும் [Monsoonal wind] இருக்காது. எனவே கப்பல் காற்று துணை இல்லாமல், சும்மா கடலில் மிதக்கத் தான் விடமுடியும் [as the ship was left to drift], அப்படி என்றால், நீரிழப்பு மற்றும் பட்டினியால் [de-hydration and starvation] அவர்கள் இறக்கவேண்டிய சூழ்நிலைதான் இருந்து இருக்கும். திரும்பியும் இந்தியாவின் மேற்கு கடற்கரையை உடனடியாக அணுகவும் முடியாது. காரணம் அவர்கள் தென்மேற்கு பருவக்காற்றுக்கு [South-West Monsoonal wind] காத்திருக்க வேண்டும். பருவக் காற்று ஒரு ஆண்டு நிகழ்வாகும். [Monsoonal wind changes are annual events] தென்மேற்கு பருவக்காற்று அவர்களை மீண்டும், ஆரம்பித்த இடத்துக்கே [இந்தியா] கொண்டு போகும். எனவே, விஜயன் புத்தர் பரிநிர்வாணம் (பொதுவாக பரிநிர்வாணம் என்ற சொல் உடல் இறப்பிற்கு பின்னர் பிறவிச் சுழற்சியிலிருந்து விடுபட்டு பிறவா நிலையை அடைவதே ஆகும் / parinirvana) அடைந்த மே மாத பௌர்ணமி தினத்தில் கட்டாயம் இலங்கையை அடைந்து இருக்க முடியாது என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப் படுகிறது.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் நம்பிக்கை வேறு, அறிவியல் வேறு. எவரின் நம்பிக்கையையும் நான் திறனாய்வு செய்யவில்லை, ஆனால் அறிவியல் ரீதியாக அதற்கான உண்மையான வாய்ப்பு உண்டா இல்லையா என்று மட்டும் அலசி ஆராய்ந்தேன்! தீபவம்சத்தின் 17 ஆவது பாடத்தின் தொடக்கத்தில், இலங்கை ஒரு நீல் சதுர வடிவானது [rectangular shape] என்று குறிப்பிடுகிறது. அதாவது, இலங்கை எனும் சிறந்த தீவு முப்பத்திரண்டு யோசனை நீளமும், பதினெட்டு யோசனை அகலமும் கொண்டது, அதன் சுற்றுப்பாதை நூறு யோசனை; அது கடலாலும், ஒரு பெரிய புதையல் சுரங்கத்தாலும் சூழப்பட்டுள்ளது. அது ஆறுகள், ஏரிகள், மலைகள் மற்றும் காடுகளைக் கொண்டுள்ளது என்கிறது. இங்கு யோசனை என்பது பழங்காலத்தில் தூரத்தை அளக்க பயன்படுத்தப் பட்ட ஒரு வேத கால அலகாகும். இதன் சரியான அளவு சரியாகத் தெரியவில்லை. அறிஞர்களிடையேக் கருத்து வேறுபாடே நிலவுகிறது. இது 4 மைல்களிலிருந்து 9 மைல் வரை இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. எனவே தீபவம்சத்தை எழுதியவர்களுக்கு அனுராதபுரத்தின் வடக்கு பக்கத்தைப் பற்றி தெரியாது அல்லது அதைப் பற்றி அறிவு இல்லை என்று கருதலாம். இணைக்கப்பட்ட இலங்கை படத்தில், அனுராதபுரத்தில் இருந்து இலங்கையின் வடக்கு பக்கம் குறுகிப்போவதை காண்க. அதை, கீழே உள்ள இலங்கை வரைபடத்தில், தடித்த கோட்டில் குறித்து காட்டப்பட்டுள்ளது.

இதுவரை, விஜயனின் வருகை, அவரது தோழர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடையவை விவாதிக்கப்பட்டது. விஜயனைத் தொடர்ந்து, விஜயனின் பின் ஆட்சி செய்த மன்னர்களும் அது தொடர்பான விபரங்களும் தொடரும்.

Part: 10 / 'Can Vijaya land in Sri Lanka on May full moon day?'

The Buddha died on a full moon day in the month of May. The Northeast monsoon is active in the months of November, December, January and February, see the Lanka map given below. There is no prevailing Monsoonal wind during March, April and May to assist them towards Lanka, and they would have died of de-hydration and starvation, as the ship was left to drift. There is no way that they could have turned around to reach the Western coast of India, to the ports of Suppara and Bharukaccha, as they had to wait for the South-West Monsoonal wind. Monsoonal wind changes are annual events. The South-West Monsoon would have brought them back to the place where they started. The story of Vijaya is a hoax and it is invented by the monks for their wellbeing, and to erase the trace of the aboriginal inhabitants of Lanka.

The starting verse of the chapter 17 of the Dipavamsa describes Lanka as rectangular shape country. The author or the authors of the Dipavamsa never had the knowledge of the country North of Anuradhapura. See the Lanka map below with the narrowing landscape North of Anuradhapura with thicker outline. Arrival of Vijaya, his companions, and its historical relevance have been discussed so far, and the narrative about the consequent kings and the related affairs will follow.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 11 தொடரும் / Will Follow


“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 09

2 weeks 6 days ago

“அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 09

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 09 / 'தம்பபாணி எங்கே ?, விஜயன் எப்போது இலங்கையில் இறங்கினான்? குவேனி யார்?'

இலங்கையில் வரலாற்றில், தம்பபாணி என்று அழைக்கப்படும் கடற்கரை நகரம் ஒன்றும் இல்லை. இருப்பினும் இந்தியாவில், தமிழ் நாட்டில், எதிர் கடற்கரையில், தாமரபரணி என்ற நதி இருந்து உள்ளது. தீபவம்சம் மற்றும் மகாவம்சம் இரண்டின்படி புத்தர் இறந்த நாளில் விஜயனும் அவரது தோழர்களும் இலங்கையில் தரையிறங்கினர். இருப்பினும், இராசாவலியத்தின்படி, புத்தர் இறந்த ஏழாவது நாளில் அவர்கள் இலக்கில்லாமல் அல்லது தெளிவான திசையின்றி நகரத் தொடங்கி, ஒரு வியாழன் அன்று, புத்தர் இறந்த சிறிது சிறிது காலம் கழித்து, இலங்கையில் தரையிறங்கினார்கள். இராசாவலியவில் கொடுக்கப்பட்டுள்ள விவரம், வான சாஸ்திரம் [வானியல்] ரீதியாக விஜயன் தரையிறங்கும் நாளை ஒருவேளை கணிக்க உதவலாம். அப்படி இல்லை என்றால், விஜயன் என்றுமே தரையிறங்கவில்லை.

முதலில் எழுதப்பட்ட தீபவம்சத்தில், விஜயன் திருமணம் செய்யவில்லை என்று கூறும் அதே நேரத்தில், மகாவம்சம் மற்றும் இராசாவலிய அவன் இருமுறை திருமணம் செய்ததாகவும், அவன் பாண்டிய இளவரிசியை மணப்பதற்காக, தனது முதல் மனைவி குவேனியையும், குவேனி மூலம் பெற்ற இரு குழந்தைகளையும் துரத்தியதாகவும் கூறுகிறது. எனவே கட்டாயம் விஜயனும் குவேனியும் [குவேணியும் / குவண்ணவும்] கட்டாயம் மனிதர்களாக இருக்கவேண்டும். இருவரும் வெவ்வேறு உயிரியல் இனமாக இருந்தால், அவர்கள் இணைந்து ஏதேனும் சந்ததி பெறமுடியாது.

மேலும் இராசாவலியின்படி, குவேனிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தனவென்றும், அவள் விஜயனைப் பார்த்த நொடியில் ஒன்று மறைந்து, சாதாரண பெண் போல் இரு மார்பகங்களுடன் தோன்றினால் என்கிறது. இன்னும் ஒரு அமானுஷ்ய நிகழ்வைக் [இயல்பான வாழ்வில் காணாத விடயங்கள்] இங்கு காண்கிறோம். இது திருவிளையாடல் புராணத்தில் காணப்படும் மீனாட்சி தேவியிலிருந்து நகலெடுக்கப்பட்டதாக இருக்கலாம்? மீனாட்சி பிறப்பில் மூன்று மார்பகங்களுடன் பிறந்ததாகவும்; தன்னை மணம் முடிப்பவரை பார்த்தவுடன் நடுவில் இருக்கும் மூன்றாவது மார்பகம் மறைந்து போகும் என்ற நிலையில், கயிலை மலையில் சிவன் மீனாட்சியை கண்டவுடன் மூன்றாவது மார்பகம் மறைந்தது என இந்து புராணம் கூறுகிறது.

மேலும் விஜயனும் அவனின் நண்பர்களும், நாடு கடத்த முன்பே திருமணம் செய்திருக்க வேண்டும். ஏன் என்றால், மகாவம்சத்தில், பிள்ளைகளை வேறாக ஒரு கப்பலிலும், மனைவிகளை வேறாக இன்னும் ஒரு கப்பலிலும் நாடு கடத்தியதாக கூறுகிறது. எனவே விஜயன் மூன்று தரம் திருமணம் செய்திருக்க சந்தர்ப்பம் இருக்கிறது என்று தோன்றுகிறது? மேலும் துரத்தப்பட்ட குவேனி, அவளின் உறவினர்களாலேயே கொல்லப்பட்டதாகவும் அவளின் மகனும் மகளும் மலை நாடு ஒன்றுக்கு தப்பி ஓடி, அங்கே இருவரும் ஒருவரை ஒருவர் திருமணம் செய்தார்கள் என்கிறது. இதேபோல, முறையற்ற சகோதரர்களுக்கு இடையான திருமணம் மூலம் தான் விஜயன் பிறந்ததும் குறிப்பிடத் தக்கது. இலங்கையில் வியாஜனுக்கு பிறந்த அந்த இரு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமலே போய்விடுகிறார்கள். அது ஏன் என்று புரியவில்லை ? விஜயனுக்கு பாண்டிய இளவரசி மூலம் பிள்ளைகள் இல்லாத சந்தர்ப்பத்திலும், தனக்கு அடுத்ததாக ஆட்சி பொறுப்பை ஏற்க, குவேனி மூலம் அல்லது இன்றைய மேற்கு வங்காளப் பகுதியில் அமைந்த லாலா நாட்டில் முறையான திருமணத்தின் பொழுது குழந்தை பிறந்து இருந்தால், அந்த வாரிசுகளை, கண்டுபிடித்து கூப்பிடாதது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது?

குரூரமான தர்க்கம் என்னவென்றால், துறவி ஆசிரியர்கள் தங்கள் பரம்பரையில், பூர்வீக இரத்தத்தை ஒப்புக் கொள்ள விரும்பவில்லை என்பதே, அதனாலதான், குவேனியின் இரண்டு பிள்ளைகளும் அதன் பின் கதையில் இல்லாமல், முற்றாக மறைந்து போகிறார்கள்.

Part: 09 / where is Tambapanni ?, When Vijaya landed ? Who is Kuveni?

It is strange to note that there is no coastal town called Tambapanni in Lanka, however there is a river called Tamaraparani on the opposite coast in the Tamil country in India. Vijaya and his companions landed in Lanka on the day the Buddha died as per both the Dipavamsa and the Mahavamsa. As per the Rajavaliya, however, they were set to drift on the seventh day after the death of the Buddha, and they landed on a Thursday, must be after quite some time of the Buddha’s death. The detail given in the Rajavaliya may help to pin point the arrival of Vijaya to Lanka astronomically, if at all he ever landed! Vijaya did not marry as per the Dipavamsa, but he married twice as per the Mahavamsa and the Rajavaliya. He sent away the first wife, Kuvanna (Kuveni in the Rajavaliya), and the kids from her to marry a royal princess from the Pandya kingdom. Vijaya and Kuvanna must be of human species to have offspring. If two belong to different species then there will not be any offspring from their union. Incidentally, Kuveni had three breasts and one disappeared the moment she saw Vijaya as per the Rajavaliya, another supernormal happening.

Incidentally, Vijaya and his companions must have married before their deportation too, as kids were put on one ship and the wives were put on another ship and landed at Naggadipa and Mahilaratrha (Mahiladipaka as per the Mahavamsa) respectively. Vijaya must in fact, may have married thrice, once in his native place and twice in Lanka. They were all forgotten thereafter, a usual practice in the chronicles. Kuveni left with her two kids when Vijaya asked her to leave so that he could marry the Tamil princess from the Pandya kingdom, and her relatives promptly murdered her. Her two kids, the son and the daughter escaped to the hill country, married each other; another incestuous marriage typical of the Lanka chronicles. The two Lanka born kids of Vijaya have simply disappeared into oblivion. The cruel logic is that the monkish authors did not want to acknowledge the native blood in their lineage and simply made them disappear in their story, rather in the chronicles.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 10 தொடரும் / Will Follow

01.11.1990 முந்திரிகைக்குளம் சிறிலங்காப் படைமுகாம் தாக்குதல் !

3 weeks 1 day ago

01.11.1990 மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட சிறிலங்காப்படைமுகாம் தாக்கியழிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான ஒரு பார்வை….

தமிழீழத்தின்.இதயபூமியான மணலாற்றில் தமிழர்களின் பாரம்பரிய நிலப்பரப்பிலிருந்து தமிழர்களை விரட்டிவிட்டு அதாவது வடக்குகிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்காக தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதிற்கான நோக்கத்திற்காகவும் சிங்களபௌத்த பேரினவாதத்தின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை அதாவது சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்காகவும் அச்சிங்கள மக்களைப் பாதுகாப்பதற்காகவும் அமைக்கப்பட்ட பல மினிமுகாம்களில் மணலாறு முந்திரிகைக்குள மினிமுகாமும் ஒன்றாகும்.இம்மினிமுகாமில் நூற்றிற்க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இருந்தனர்.1990 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இப்பகுதியில் பெருமளவான சிங்களமக்களை குடியேற்றுவதற்கான முயற்சிகளில் இம்முகாம் படையினர் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இத்தகவல்களை மணலாற்று வேவு அணிகள் தளபதி லெப்.கேணல்.அன்பு அவர்களிடம் கொடுத்தனர்.வேவுத்தரவுகளை தீவிரமாக ஆராய்ந்த தளபதி அன்பு அவர்களும் தளபதி மேஐர். வீமன் அவர்களும்நிலமையின் விபரீதத்தை உணரந்து இம்முகாமை தாக்கி அழிக்கவேண்டும். எனமுடிவெடுத்து தலைவர் அவர்களிடம் இத்தகவல்கள் அனைத்தையும் தெரிவித்தனர்.அனைத்துத்தகவல்களையும் அதன் சாதகபாதக நிலைகளையும் எவ்வாறு தாக்குதல் நடாத்தவேண்டும் எனவும் அத்தாக்குதலின்போது பொதுமக்களுக்குச் சிறுசேதமேற்படக்கூடாதெனவும் கூறிய தலைவர் அவர்கள்.இம்முகாம் கட்டாயம் அழிக்கப்படவேண்டும் எனக் கூறியதோடு அதற்கான ஆலோசனைகளையும் வழங்கி தளபதிகளை வழியனுப்பிவைத்தார்.

தலைவர் அவர்கள் கொடுத்த ஆலோசனைகளுக்கமைவாகவும் தலைவர் அவர்களின் சிந்தனைக்கேற்ப கடும்பயிற்சி இலகுவான சண்டை என்றதன் அடிப்படையில் வேவுநடவடிக்கைகளில்பெறப்பட்ட தகவல்களுக்கேற்ப தாக்குதலுக்கான பயிற்சிகள் தொடங்கப்பட்டன. தாக்குதலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட போராளிகளுக்கு மேஐர் செங்கோல் அவர்கள் தலைமையிலான போராளிகளால் முறையே நிசாம் வெட்டை மற்றும் ஐீவன் ஆகிய முகாம்களில் பயிற்சிகள் நடைபெற்றன.பயிற்சிகள் முடிவடைந்து தாக்குதற் திட்டம் தளபதி அன்பு அவர்களால் விளங்கப்படுத்தப்பட்டதுடன் தலைவர் அவர்களால் கொடுக்கப்பட்ட அறிவுரைகளையும் அன்பு அவர்கள் தெளிவாகக் கூறினார்.

தாக்குதலுக்கான இருநூறுபேர் கொண்ட அணிகள் தாயர்படுத்தப்பட்டன.இவ்வணிகள் கொக்குத்தொடுவாயிலிருந்து படகுகளில் சென்று கொக்கிளாய் கடல்நீரேரியைக்கடந்து தரையிறங்கி அங்கிருந்து நடந்துசென்று 01.11.1990அன்று அதிகாலை ஒரு மணிவரை முந்திரிகைக்குளமுகாமருகில் காத்திருந்து. அதிகாலை ஒருமணியளவில் மணலாறு முந்திரிகைக்குளத்தில் அமைக்கப்பட்ட இலங்கைப்படையின் முகாம் மீது ஒரு வெற்றிகர அதிரடித்தாக்குதலைத் தொடுத்து வெற்றிகொண்டனர்.குறிப்பிட்ட சிலநிமிடத்தில் முகாம் புலிகளின் பூரணகட்டுப்பாட்டிற்க்குள் வந்தது.

தொடர்ந்து அந்தமுகாமை தக்கவைத்திருந்த போராளிகள் படைமுகாமை முற்றுமுழுதாக அழித்தொழித்துவிட்டு கைப்பற்றிய ஆயுதங்களுடன் தளம் திரும்பினார்கள்.இதன் பின்னும் இதனை அண்டியபகுதிகளில் பல்வேறு தாக்குதல்கள் விடுதலைப்புலிகளால் படையினர் மீதுமேற்கொள்ளப்பட்டதால் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வெற்றிகர அதிரடித் தாக்குதல்களுக்கான வேவுத்தகவல்களை மேஐர் .ரம்போ கப்டன்.விமல்ராஜ் தலைமையிலான போராளிகளால் சொல்லமுடியாத அர்ப்பணிப்புக்களுடன் சிறுகச்சிறுகச் சேகரித்துக்கொடுத்தனர். படைமுகாமின் தாக்ககுதல்களை களத்தில் நின்று மேஐர்.சங்கர் அவர்கள் வழிநடாத்த களமருத்துவத்தை கப்டன் இளங்கோ அவர்கள் தலைமையிலான போராளிகள் செவ்வனவே செய்தனர்.

இவ் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கினைத்து முல்லை மணலாறு மாவட்டத் தளபதி(1991ம் ஆண்டு முற்பகுதியின் பின்னர் தான் இயக்கத்தின் வளர்ச்சியும் அதன் நிர்வாககட்டமைப்புக்காகவுமாக ஒருமாவட்டத்தில் சிறப்புத்தளபதி, தளபதி, துணைத்தளபதி எனும் கட்டமைப்பு வந்தது.) அன்பு அவர்கள் வழிநடாத்தியிருந்தார். இவ்வெற்றிகரத்தாக்குதலை களத்தில் நின்று வழிநடாத்திய.. மேஜர் சங்கர் (அரியரட்ணம் லோகிதன் தம்பலகாமம், திருகோணமலை.) அவர்களுடன் 2ம்லெப்ரினன்.மதுவன் ( 2ம் லெப்டினன்ட் மதுவன் தவராஜசிங்கம் விஜயசேகரன் மீசாலை தெற்கு, சாவகச்சேரி, யாழ்ப்பாணம்.) வீரவேங்கை .முசோலினி (வீரவேங்கை முசோலினி ஆபிரகாம் தயாசீலன் 7ம் வட்டாரம், கட்டைபறிச்சான், திருகோணமலை.) ஆகியோர் வீரச்சாவடைந்தனர்.

நீண்டகாலமாக 2ம் லெப்.மதுவனைப் பார்க்காத பெற்றோர் மதுவனைப் பார்பதற்காக மணலாற்று முகாமிற்க்கு வந்திருந்தனர். ஆனால் வெற்றிச்சமரில் வீரச்சாவடைந்த மகனின் வித்துடலுடனே மதுவனின் பெற்றோர் வீடுதிரும்பினர்.இப்படியான பல்வேறு அர்பணிப்புக்கள் தியாகங்கள் நிறைந்த போராட்டமாக தமிழீழவிடுதலைப்போராட்டம் திகழ்கிறது. கிட்டத்தட்ட முப்பதான்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற இச்சம்பவமானது அன்று இக்களமுனையில் நின்றவர்களால் மறக்கமுடியாத நிகழ்வாக இன்றும் அப்போராளிகளால் நினைவுகூரப்படுகிறது.

-அக்களமுனையில் நின்று இன்று புலம்பெயர்ந்து வாழ்பவர்களின் உள்ளத்திலிருந்து……

https://irruppu.com/2021/01/20/01-11-1990-%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81/

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08

3 weeks 2 days ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 08

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 08 / 'தீபவம்சம், மகாவம்சம் இரண்டிலும் சிங்கபாகு கதையின் வேறுபாடு'

சிங்கபாகு தனது தந்தையான சிங்கத்தை கொன்றதாக தீபவம்சம் கூறவில்லை. அதேவேளை, சிங்கபாகு தன் சகோதரியை தகாத முறையில் திருமணம் செய்து கொண்டார் என்றும் வெளிப்படையாகக் கூறவில்லை. மேலும் விஜயனுக்கு எழுநூறு கூட்டாளிகள் இருந்ததாகவும் கூறவில்லை. தீபவம்சத்தின்படி, 9-10 மற்றும் 9-16, எழுநூறு பேரில் விஜயன், அவனது வேலையாட்கள், அவனது உறவுகள் மற்றும் கூலிக்கு அமர்த்திய வேலையாட்களும் அடங்குவர் என்கிறது. ஆனால், சிங்கபாகு தனது சிங்க தந்தையைக் கொன்றதாகவும், எந்த வருத்தமும் இல்லாமல் தனது சிங்கத் தந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை வெகுமதிக்காக மன்னரிடம் வழங்கினார் என்றும் மகாவம்சம் வெளிப்படையாகக் கூறுகிறது. விஜயனுக்கு, விஜயனைப் போலவே தீய குணங்கள் கொண்ட, அவனைப் பின்பற்றும் எழுநூறு பேர் இருந்தனர் என்றும், தீபவம்சத்தில் கூறப்பட்டுள்ளபடி அவர்கள் அனைவரும் வேலையாட்களோ, கூலிக்கு அமர்த்திய வேலையாட்களோ அல்ல என்றும் அது கூறுகிறது. விஜயன் பிறந்த அதே நாளில் இந்த எழுநூறு ஆண்களும் பிறந்ததாக இராசாவலிய வெளிப்படையாகக் கூறுகிறது. காலப்போக்கில் ஒரு கதை எப்படி திரிக்கப்படுகிறது என்பதை நீங்கள் இங்கு பார்க்கலாம். தீபவம்சத்தின்படி, விஜயனும் அவனது ஆட்களும் சென்ற கப்பல், வழி தவறி, முதலில் சுபாரா [Suppara] அடைந்தது, அங்கே, கப்பலில் இருந்த அனைவரையும் சுபாரா மக்கள் விருந்தோம்பல் செய்தனர் என அறிகிறோம்.

எவ்வாறாயினும், விஜயன் மற்றும் அவரது தோழர்கள் காட்டுமிராண்டித் தனமாக அங்கும் செயல்பட்டனர். எனவே விருந்தோம்பல் வரவேற்பு விரைவில் விரோதமாக மாறியது. அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி, மீண்டும் பாருகாச்சாவில் [Bharukaccha] இறங்கினர். அவர்கள் மீண்டும் தவறாக நடந்து கொண்டதால் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப் பட்டனர். சுபாரா மற்றும் பருகச்சா ஆகியவை இந்தியாவின் மேற்கு கடற்கரையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் உள்ள பண்டைய வர்த்தக துறைமுகங்கள் ஆகும். மேலும் அசோகரின் ஆணைகள் இந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றன. என்றாலும் மகாவம்சம் பருகச்சாவில் இரண்டாவது தரையிறக்கத்தைத் முற்றாகத் தவிர்க்கிறது. மகாவம்சத்தின் 6 ஆம் அத்தியாயம் விஜயனின் பிறப்பு மற்றும் அவரது வருகையைப் பற்றி பேசுகிறது. மகாவம்சத்தின் இந்த அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கமான கதை தீபவம்சத்தில் இல்லை. மகாவம்சத்தின் ஆசிரியரான மகாநாமா, ஒவ்வொரு அத்தியாய முடிவிலும், 'இது புத்த மதத்தின் பக்திமான்களின் அமைதியான மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிக்காக' என்று கூறி முடிக்கிறார். மகாவம்சத்தில் கொடுக்கப்பட்டுள்ளதை விட, விஜயனின் பிறப்பு மற்றும் திருமணம் பற்றிய விபரங்கள், இன்னும் விரிவாக இராசாவலிய கொண்டுள்ளது. விஜயனும் அவனது கூட்டாளிகளும் வேறு எந்த இடத்திலும் இறங்காமல் நேராக இராசாவலியின்படி இலங்கைக்கு நகர்ந்து, மற்ற இரண்டு நூல்களுக்கு மாறாக, தம்மன்னா-தோட்டாவில் [Tammanna-tota] இறங்கினர். தம்மன்னா-தோட்டா இருந்த இடத்தில் எதுவுமே இல்லை! இலங்கையைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகள் செப்பு நிறமுடைய மண் அல்ல, ஆனால் சில இடங்களில் சுத்தம் செய்யப்பட்ட மணல் மண்ணாகும். மற்ற இடங்களில் சுத்தமில்லாத மணல் மண்ணாகும். அவர்கள் இறங்கிய இடம் செப்பு நிற மண் என்றும் அந்த இடம் தம்பபாணி [Tambapaṇṇi (copper-palmed)] என்றும் அழைக்கப்பட்டது என்று தீபவம்சம் 9 - 30 கூறுகிறது. அதாவது, தரையின் சிவப்பு நிற தூசி அவர்களின் கைகள் முழுவதையும் மூடியது; அதனால் அந்த இடம் தம்பபண்ணி (செப்பு நிற பூமி / copper coloured earth ) என்று அழைக்கப்பட்டது. அவர்கள் தம்பபாணி என்ற பகுதியில் இறங்கியதாக மகாவம்சம் 6 - 47 கூறுகிறது. அதாவது விஜயன் என்னும் பெயர் பெற்ற வீரனான இளவரசன் இலங்கையில் தம்மபாணி என்றழைக்கப்படும் பகுதியில் கரையேறினன். தகாகதர் [Tathagata] நிர்வாணமடைவதற்காக இரட்டை சால விருட்சங்களிடையே [two twinlike sala-trees] அமர்ந்த அதே நாளில் இது நடந்தது என்கிறது

சுபாரா (சோபரா) மற்றும் பாருகாச்சா (Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha)) ஆகிய இரண்டு இடங்களும் அசோகரின் பேரரசின் பரப்பளவைக் காட்டும் வரைபடத்தில் கீழே காட்டப்பட்டுள்ளது.

Part 08 / 'How Sihabahu story in both Dipavamsa & Mahavamsa varies?'

The Dipavamsa does not say that Sihabahu killed his lion father. It also does not explicitly say that Sihabahu incestuously married his sister. It also does not say that Vijaya had seven hundred companions. As per the Dipavamsa, 9-10 and 9-16, the seven hundred included Vijaya, his manservants, his relations and hired workmen. The Mahavamsa explicitly says that Sihabahu killed his lion father, and without any remorse presented the severed head of his lion-father to the king for a reward. It also says that Vijaya had seven hundred followers of same character as of Vijaya, and not servants or workmen as stated in the Dipavamsa. The Rajavaliya explicitly says that seven hundred boys were born on the day Vijaya was born. One can see how a story is twisted and turned on and on with the passage of time. The ship on which Vijaya and his men were forced to drift lost her way and bearings reached Suppara first as per Dipavamsa and all in the ship were hospitably welcome by the people of Suppara. Vijay and his companions, however, acted barbarously and the hospitable reception soon turned into hostile reaction. They fled the place, and landed again at Bharukaccha. They misbehaved again and had to leave the place. Suppara and Bharukaccha are ancient trading ports on the western coast of India, in Maharashtra and Gujarat, and Asoka’s edicts are found nearby these places. The Mahavamsa omitted the second landing at Bharukaccha. The chapter 6 of the Mahavamsa deals with the Vijaya’s birth and his arrival. The descriptive narrative given in this chapter of the Mahavamsa is not in the Dipavamsa. Mahanama, author of the Mahavamsa, fabricated a story for the serene joy and emotion of the pious. The Rajavaliya also consist of narrative of Vijaya’s birth and marriage more elaborate than given in the Mahavamsa. Vijaya and his companions drifted straight to Lanka as per the Rajavaliya without landing at any other places, contrary to the other two chronicles, and landed at Tammantota. There is no clue where Tammantota was! Seacoasts around Lanka are not copper coloured soils, but are sandy soils washed clean at some places and not clean at the rest of the places. The Dipavamsa claims that the place they landed was copper coloured soils and the place was called Tambapanni, 9 - 30. The Mahavamsa says that they landed at a region called Tambapanni 6 - 47. See the map below showing the extent of Asoka’s empire in which Suppara (Sopara) and Bharukaccha (Bharukacha) are shown.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 09 தொடரும் / Will Follow

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

3 weeks 4 days ago

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே!”

செம்மணியில் புதைக்கப்பட்டவர்களே துயிலாத சடலங்களே

கண்மணி மழலைகளும் கதறாத மௌனங்களே

செம்மண்ணும் அவர்களைத் தழுவ மறுக்குதே

காடையர்கூட்டம் அதன்மேல் கும்மாளம் அடிக்குதே!

பாடசாலை சிறுமி சிதறிக் கிடக்கிறாளே

பக்கத்தில் இன்னும் அவளின் புத்தகப்பையே

புத்தர் போதித்தது மண்ணோடு மண்ணாகிற்றே

அப்பாவி உடல்கள்மேல் வழிபாடு நடக்குதே!

விலங்குக்கும் சில பண்பாடு உண்டே

விபரம் அறிந்தால் நன்மை கிடைக்குமே

விளக்கம் இல்லாத மதபோதனை எனோ

களங்கப் படுத்துதே புண்ணியப் பூமியை!

வரிசையில் எலும்புகள் அவலத்தைச் சொல்லுதே

இடையில் சின்னஞ்சிறுசுகள் பாதகத்தைக் காட்டுதே

பாவத்தை அழிக்கத் தோன்றிய கௌதமபுத்தனே

சிலைசிலையாய் மண்ணைக் கவர்வது எதற்க்கோ!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 07

3 weeks 5 days ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 07

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" [In Tamil & English]

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 07 / 'பண்டைய கபிலவஸ்து நகரின் சாக்கியர்கள்'

கௌதம புத்தரின் பிறப்பு காரணமாக இந்த 'சாக்கியர்கள்' என்ற பழங்குடி நன்கு அறியப்படுகிறது. "சாக்கியர் (Shakya) " என்ற வார்த்தையின் சொற்பிறப்பியல் அநேகமாக சமஸ்கிருத மூலமான śak (शक् / சாக்) (śaknoti (शक्नोति), அல்லது śakyati (शक्यति) அல்லது śakyate (शक्यते)) என்பதிலிருந்து பெறப்பட்டது. அதாவது ''முடிந்தவராக, தகுதியானவராக, சாத்தியமானவராக அல்லது நடைமுறைப்படுத்தக் கூடியவராக [‘to be able, worthy, possible or practicable’]'' என்று பொருள்படும். உதாரணமாக, சமசுகிருதத்தில் சாக்கியம் என்பது ஆற்றலுடையவர் என்று பொருள் படுகிறது. பிராமணர்களை விட சத்திரியர்களின் [Kshatriyas] மேன்மை குறித்து புத்தர் பிராமண அம்பத்தருடன் விவாதித்தபோது, இவர்களுக்கான ‘சாக்கியர்’ [‘Shakya’] என்ற பெயரின் தோற்றம், அம்பத்த சுத்தத்தில் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த அம்பத்தசுத்த, சாதியின் கொள்கைகளையும் பிராமணர்களின் பாசாங்குகளையும் கண்டிக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது. பழங்குடியினரின் மரபுகளின்படி, ஒக்காக்கா மன்னர் [King Okkaka], அவருக்கு விருப்பமான மற்ற ராணியின் மகன் ஜந்துகுமாருக்கு [Jantukumara] அரச அதிகாரத்தை வழங்கும் பொருட்டு, முதல் ராணி பெற்ற தனது ஒன்பது குழந்தைகளை நாட்டைவிட்டு வெளியேற்றினார். வெளியேற்றப்பட்ட குழந்தைகளில் பிரியா, சுப்ரியா, ஆனந்தா, விஜிதா, விஜிதாசேனா ஆகிய ஐந்து இளவரசிகளும் உக்கமுக, கரண்டு, ஹஸ்தினிகா, சினிசுரா ஆகிய நான்கு இளவரசர்களும் [five princesses namely Priya, Supriya, Ananda, Vijitha, Vijithasena and four princes namely Ukkamukha, Karandu, Hastinika and Sinisura.] அடங்குவர். அவர்கள் இமயமலை நோக்கிச் சென்று கபில முனிவர் தானமாக வழங்கிய நிலத்தில் கபில்வஸ்து என்ற கிராமத்தை நிறுவினர். அவர்கள் தங்களை சத்திரியர்களின் உயர்ந்த இனமாகக் கருதியதால், நான்கு இளவரசர்களும் இளவரசிகளும் தங்கள் மூத்த சகோதரி பிரியாவுக்கு தாய் பட்டத்தை அளித்து அவர்கள் தங்களுக்குள் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், இந்த எட்டு குழந்தைகள் மற்றும் அவர்களின் சந்ததியினர், பண்டைய இந்தியாவின் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில், சாக்கியர் என்று அழைக்கப்பட்டனர் என்று புராணக் கதைகள் கூறுகின்றன.

எனினும் இப்படியான புராணக்கதைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வேத காலத்தின் பிற்பகுதியில் கபிலவஸ்து பகுதியில் குடியேறிய இந்தோ - ஆரியப் பழங்குடியினரை, வரலாற்றாசிரியர்கள் சத்திரியர் என கண்டறிந்தனர். புத்தரின் தாய், தேவ்தா கிராமத்தைச் [village Devdah] சேர்ந்த சத்திரியர் குலத்தைச் சேர்ந்தவர். இளவரசர் சித்தார்த்தாவை மணந்த இளவரசி யசோதரா கூட தேவ்தா கிராமத்தின் சத்திரியர் குலத்தைச் சேர்ந்தவர் ஆகும்.

சகோதர சகோதரிகளால் தாய் அந்தஸ்தைப் பெற்ற மூத்த சகோதரி பிரியா அல்லது சீதா தொழுநோயால் பாதிக்கப்பட்டார். சத்திரிய சகோதரர்கள் அவளைத் தங்கள் பிரதேசத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்று, அவள் தங்குவதற்கு ஒரு பெரிய நிலத்தடி அறையைத் தோண்டி, அதில் நிறைய உணவு மற்றும் தண்ணீருடன் தங்க வைத்தனர். இதற்கிடையில், பெனாரஸ் [காசி அல்லது வாரணாசி] மன்னர் ராமருக்கும் தொழுநோய் ஏற்பட்டது. தன் மகனுக்கு அதிகாரத்தை கொடுத்து விட்டு காட்டிற்குச் சென்றான். காட்டு விலங்குகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கோலா மரத்தின் துளைக்குள் [hollow of a Kola tree] வாழத் தொடங்கினார். ஒரு நாள், பிரியாவின் குழிக்குள் புலி நுழைய முயன்றபோது, அவள் அலறும் சத்தத்தை ராமர் கேட்டார். மறுநாள் காலை அந்த இடத்தைப் பார்க்கச் சென்ற ராமர், அதற்குள் பிரியாவைக் கண்டார். அவளைப் பற்றி விசாரித்தபோது, அவள் முழு கதையையும் சொன்னாள். ராமர் அவளைக் குணப்படுத்த முன்வந்தபோது, அவள் தன் குடும்பம், சாதி மற்றும் இனத்தை இழிவுபடுத்துவதை விட, இறப்பதை விரும்புவதாகக் கூறி மறுத்தாள். என்றாலும் ராமர் தன்னை பெனாரஸின் சத்திரிய மன்னர் என்று அறிமுகப்படுத்தினார். ராமரின் பரம்பரையை அறிந்த பிரியா ஒன்றாக வாழ சம்மதித்தார். அவள் மெதுவாக குணமடைந்தாள். இதற்கிடையில் 32 மகன்களைப் பெற்றெடுத்தாள் என்கிறது இந்தக் கதை.

Part: 07 / 'Shakyas of Kapilvastu'

The tribe is well known due to the birth of Gautam Buddha in the same. The etymology of the word “Shakya” is probably related to the Sanskrit word Sak which means ‘to be able, worthy, possible or practicable’. The origin of ‘Shakya’ name for them is well recorded in Ambattha Sutta when Buddha debated with Brahmin Ambattha on the superiority of Kshatriyas over Brahmins. According to Buddha, as per traditions prevalent in the tribe, King Okkaka banished his nine children from first queen to give royal power to Jantukumara, son of his favorite other queen. The expelled children included five princesses namely Priya, Supriya, Ananda, Vijitha, Vijithasena and four princes namely Ukkamukha, Karandu, Hastinika and Sinisura. They went towards Himalaya and founded the village of Kapilvastu on the land donated by sage Kapil. As they considered themselves superior races of Kshatriya, the four princes and princesses married among them after giving the title of mother to their elder sister Priya. Then onwards, eight children and their descendants were known as Sakya in the social and political circles of ancient India. Keeping legends aside, historians have traced Shakyas as a warrior Indo-Aryan tribe who migrated and settled in the region of Kapilvastu in the late Vedic period. The mother of Buddha belonged to the Shakya clan of village Devdah. Even princesses Yashodhara, married to prince Siddhartha, belonged to the Shakya clan of village Devdah.

The elder sister, Priya or Sita, who was given the status of mother by rest brothers and sisters contracted leprosy. The Shakya brothers then took her out of their territory and dig a big underground room for her stay with lots of food and water stored in it. Meanwhile, King Rama of Benares also contracted leprosy. He abdicated the power to his son and left for the forest. He started living in the hollow of a Kola tree to protect himself from the wild things. One day, he heard the screams of Priya when a tiger was trying to enter her pit. Next morning, he went to see the location and found Priya inside it. When he enquired about her, she told the entire story. When Rama offered to cure her, she refused saying that she will prefer to die than to disgrace her family, caste and race. Rama then introduced himself as Kshatriya King of Benares who started living in the forest due to leprosy. Knowing Rama’s lineage, Priya agreed to live together. She was slowly cured and meanwhile gave birth to 32 sons

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 08 தொடரும் / Will Follow

அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 06

4 weeks 2 days ago

அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 06

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 06 / 'விஜயாவின் தந்தை சிங்கபாகு (சிங்க = சிங்கம், பாகு = கை) யார்?'

விஜயனின் தந்தை சிங்கபாகுவின்பிறப்பு உயிரியல் ரீதியாக சாத்தியமற்றது. சிங்கபாகுவும் அவரது சகோதரி சிங்ஹசீவலியும் (சீவாலி / சிங்கவல்லி) சிங்கத்திற்கும் மனித இளவரசிக்கும் பிறந்தவர்கள். சிங்கம் மற்றும் மனிதர்களில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை பொருந்தவில்லை. ஆகவே, எந்த சந்ததியும் இருந்திருக்க முடியாது. அண்ணனுக்கும் தங்கைக்கும் இடையே தகாத திருமணம் மூலம், அவர்களுக்கு முப்பத்திரண்டு மகன்கள் பிறந்ததாக தீபவம்சம் கூறுகிறது. ஆனால் அவர்களுக்கு பதினாறு முறை இரட்டைக் குழந்தைகளாக பிறந்ததாக மகாவம்சம் கூறுகிறது. இந்த கதை வடகிழக்கு இந்தியாவில் நடந்தது என்று கூறியிருந்தாலும், இந்தியாவின், அந்தப் பகுதிகளில், இந்த நிகழ்வுகள் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை? விஜயா மற்றும் சுமித்தா இரட்டையர்களில் மூத்தவர்கள். மீதமுள்ளவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. இப்படியான, காணாமல் போகும் சம்பவங்கள், இந்த நூல்களில் அடிக்கடி நிகழ்கிறது.

பதினாறு இரட்டையர்களின் கதை அம்பத்தாவின் புத்த புராணத்திலிருந்து [Buddhist Legend of Ambattha] நகலெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கு, அந்த புராணத்தில், நான்கு சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகளுக்கு இடையே திருமணங்கள் நடந்தன. ஐந்து சகோதரிகள் இருந்தனர், மூத்தவர் திருமணம் செய்து கொள்ள யாரும் இல்லாமல் இருந்தார். அவள் தொழுநோயால் பாதிக்கப்பட்டு காட்டில் விடப்பட்டாள். அதே நேரத்தில் பெனாரஸின் [காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி] மற்றொரு மன்னரான ராமரும் தொழுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் காட்டில் சில இலைகளை சாப்பிட்டு, தொழுநோயை குணப்படுத்தினார். அவ்வேளையில், தொழுநோயால் பாதிக்கப்பட்ட மூத்த சகோதரியை தற்செயலாக அவர் சந்திக்க நேர்ந்தது. தகுந்த இலைகளை உண்ணுமாறு ராமர் அவளுக்கு அறிவுறுத்தியதால், அவளும் நோய் நீங்கினாள். அவர்கள் பின்னர் திருமணம் செய்து பதினாறு இரட்டையர்களைப் பெற்றனர். மேலும், இரண்டு கதைகளும் புத்தர் பழங்குடியினரை விஜயனின் பழங்குடியினருடன் இணைக்க ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதா அல்லது அந்த கதையில் இருந்து பதினாறு இரட்டையர்களைப் பற்றிய நகலெடுக்கப்பட்டதா? எனக்குப் புரியவில்லை. இராசாவலிய இதை விவரிக்கிறது. இராசாவலியின் பக்கங்கள் 10 முதல் 13 வரை பார்க்கவும்

[அவர்கள் ஒவ்வொருவரும் நான்கு சகோதரிகளில் ஒருவரை மனைவியாகக் கொண்டு, மூத்த சகோதரியைத் தங்கள் தாயாகக் கருதி, அரச அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினர். மேற்கூறிய நான்கு இளவரசர்களின் மூத்த சகோதரி தொழுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்கிடையில், பாரனேஸ்? [city of Baranes?] நகரத்தில் ஆட்சி செய்த மன்னன் ராமன், தொழுநோயால் பாதிக்கப்பட்டு, தனது மகனுக்கு அரியணையை ராஜினாமா செய்துவிட்டு, ஒரு காட்டில் நுழைந்து, இறக்கத் தீர்மானித்தார். குழிக்குள் ஒரு மனிதனைப் பார்த்து அவர் "நீங்கள் யார்?" என்று கேட்டார். "நான் ஒரு பெண்," என்று பதில் வந்தது, இப்படி கதை தொடர்கிறது.].

மேலும் பண்டைய இலங்கை நாளிதழ்கள் முழுவதிலும் ஒரு கொடூரமான தர்க்கமும் காணப்படுகிறது. அது எவ்வளவு கெட்டவராக இருந்தாலும் அல்லது தீயவராக இருந்தாலும், அவர் புத்த மதத்திற்கு மாறிய தருணத்தில் அவர் மகிமைப்படுத்தப்படுவார் என்பதே ஆகும்; முன்பு செய்த பாவங்கள் அனைத்தும் கழுவப்படுகின்றன. புத்தரின் அனைத்து நினைவுச்சின்னங்களும், இந்த கொடூரமான தர்க்கத்தைக் கேட்டு, அவர்களின் புனித நினைவுச் சின்னங்களுக்கான கொள்கலன்களில் [reliquaries], அழுது நெளிந்து கொண்டிருக்கும் என்று எண்ணுகிறேன்!

Part:06 / 'Who is Vijaya’s father, Sinhabahu (Sinha = Lion, Bahu = Arm)?'

The birth of Vijaya’s father, Sihabahu, is biologically impossible. Sihabahu and his sister Sihasivali (Sivali) are born to a lion and to a human princess. The number of chromosomes in lion and humans do not match, and there could not have been any offspring, an illogical invention. There is an incestuous marriage between the brother and the sister. The Dipavamsa says they had thirty-two sons, but the Mahavamsa says that they had twins sixteen times. The narration took place North-Eastern India, and there is no mention of these events in that part of India. Vijaya and Sumitta was the eldest of the twins. There is no information about what happened to the rest. This happens very often in the chronicles.

The story of sixteen twins must have been copied from the Buddhist Legend of Ambattha. There, in that legend, also incestuous marriages took place between four brothers and four sisters. There were five sisters and the elder one was without any one to marry. She became afflicted with leprosy and she was left in a jungle. At the same time another king of Benares, Rama, was also afflicted with leprosy. He happened to eat some leaves in the jungle, and cured of leprosy. He happened to meet the elder sister who was afflicted similarly with leprosy, a happy coincidence again. Rama advised her to eat the appropriate leaves and she too became cured of the disease. They then married and had sixteen twins, all boys. The incestuous marriage and having sixteen twins seems to be quite regular in the chronicles. Also, both story may be easily guessed that an attempt has been made to link Buddha tribe with the tribe of Vijaya and followers of both sides or just copied? Rajavaliya narrates this, but not as the legend of Ambattha. See the pages 10 to 13 of the Rajavaliya. There is a cruel logic running throughout the Lanka chronicles that however bad or evil one may be, but he would be glorified the moment he converted to the Buddhism; all the sins committed earlier are washed off. All the relics of the Buddha’s must be writhing in their reliquaries on this cruel logic!

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 07 தொடரும் / Will Follow

முஸ்லிம்கள் பக்க நியாயப்பாடுகள் : முஸ்லிம்களின் அவல நிலை என்ன?

1 month ago

முஸ்லிம்களின்/ இஸ்லாமியத் தமிழர்களின்/ சோனகர்களின் பக்க நியாயப்பாடுகளை தமிழர்களாகிய நாம் அறிந்து கொள்ள கீழுள்ள நூலினை வாசித்து அறிதல் இன்றியமையாததொன்றாகும்.

அவர் தம் நியாயப்பாடுகளை அறிய நான் தேடி திரிந்த பொழுதில் நான் கண்டெடுத்த முக்கிய இனவாதமற்ற வரலாற்று நூல் இதுவாகும்.

  • நூலின் பெயர்: ஈழத்தின் இன்னுமொரு மூலை (1992,சம்மாந்துறை வெளியீட்டுப் பணியக வெளியீடு)

  • https://noolaham.net/project/121/12037/12037.pdf

இந்நூலில் 1954 இல் நடந்த தமிழர்களின் வீரமுனை ஊர் எரிப்புத் தொடக்கம் 1991 வரை நடைபெற்ற கெட்ட நிகழ்வுகள் தொடர்பான அவர்தம் பக்க நியாயப்பாடுகள் எழுதப்பட்டுள்ளன.

வீரமுனையை எரித்தமைக்கு நூலாசிரியர் மன்னிப்புக் கோரவில்லையாகினும் அங்கிருந்த முஸ்லிம்கள் அக்காலத்திலேயே அழுது மன்னிப்புக்கோரியுருந்ததாக, எல்லாம் எரித்தழிக்கப்பட்ட பின்னர்(!!), குறிப்பிட்டுள்ளார். மேலும் எரித்தழிக்கப்பட்டமைக்கும் வருத்தமின்றி இதில் நியாயம் எழுதப்பட்டுள்ளது.

இன்னூலில் 1985இல் எரியூட்டப்பட்ட அம்பாறை காரைதீவு பற்றி மன்னிப்போ இல்லை வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை. எனினும் அது நடப்பதற்கு முன்னர் "தமிழர்கள் செய்த" ஓரிரு நிகழ்வுகள் தொடர்பில் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் அத்தாக்குதல் தொடர்பில் மூச்சுக்கூட இல்லை.

பின்னாளில் ரெலோ, புளட், தமிழ் தேசிய ராணுவம் போன்ற இந்திய ஏவல் படைகளின் நாச செயல்களும் இதில் எழுதப்பட்டுள்ளது.

சம்மாந்துறையில் புலிகளால் செய்யப்பட்டதென்று 12 கொலைகளும் (உள்வீட்டுச் சிக்கல்களால் 6 முஸ்லிம் பொதுமக்கள் மற்றும் 6 முஸ்லிம் காவல்துறையினர்) இதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதை வாசிப்பதன் மூலம் அக்கலத்திய அவர்தம் நிலைப்பாடுகளை நாம் அறிய முடியும். எனினும் இதில் முஸ்லிம்களால் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட 1985ம் ஆண்டு காரைதீவு அழிப்பு, 1990களிற்குப் பின்னர் சம்மாந்துறையில் நடந்த பல படுகொலைகள் குறித்து கிஞ்சித்தும் மூச்சுக் கூட விடவில்லை. இன்னும் சொல்லப்போல் வீரமுனை ஊரை எரித்தமைக்குக்கூட இதில் நியாயப்பாடுகள் கற்பிக்கப்பட்டுள்ளன என்பது வேதனையான செய்தியாகும்.

சம்மாந்துறையில் 1990இல் நடந்த சில படுகொலைகள்:

  • 21.6.90: 20 தமிழர்கள்‌ சுடப்பட்டனர்‌. பின்‌ வீரமுனையில்‌ கைது செய்யப்‌பட்ட 90 தமிழர்கள்‌ சம்மாந்‌துறை சந்தியில்‌ வைத்து எரிக்கப்பட்டனர்‌. 60 வீடுகள் எரிக்கப்பட்டன.

  • வீரமுனையில்‌ கைதுசெய்‌யப்பட்ட 40 தமிழர்கள்‌ சம்‌மாந்துறை காவல்‌ நிலையத்‌திற்கு அருகில்‌ உள்ள வீதிகளில்‌ எரிக்கப்பட்டனர்‌.

  • 25.6.90 சம்மாந்துறையில்‌ 80 தமிழ்‌ மக்கள்‌ வெட்டியும்‌, சுட்டும்‌ கொல்லப்பட்டனர்‌.

  • 1.7.90 சம்மாந்துறையில்‌ 52 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 40 வீடுகள்‌ எரிக்கப்‌பட்டன.

  • 12.08.90 சம்மாந்துறைப்‌ பகுதியில்‌ உள்ள வீரமுனைக்‌ கிராமத்‌தில்‌ கோயில்‌ ஒன்றில்‌ தஞ்சம்‌ புகுந்திருந்த தமிழ்‌ அகதிகளில்‌ 21 பேரை (ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள்) முஸ்லிம்கள்‌ சிலர்‌ தாக்கிக்‌ கொலைசெய்தனர்‌. மேலும் 140 பேர் படுகாயமடைந்தனர்

  • 19.08.90 வீரமுனைப் பகுதியில் 91 தமிழர்கள் சுட்டுக்கொலை! 125 பேர் வரை காயமுற்றனர். (இவர்களில் அடையாளம் காணப்பட்டோரில் எட்டு வயதுக்கு உட்பட்ட 22 சிறுவர்கள்‌, 16 வயதுக்கும்‌ 18 வயதுக்கும்‌ உட்பட்ட 9 பெண்கள்‌, திருமணமான பெண்கள்‌ 33பேர்‌, மற்றும்‌ வயோதிபர்கள்‌ உட்பட 19 ஆண்கள்‌ இந்தச்‌ சம்பவத்தில்‌ குத்தியும்‌, வெட்டியும்‌, சுட்‌டும் கொல்லப்பட்டிருந்தனர்.)

  • 27.6.90 வீரமுனையில்‌ 360 வீடுகள்‌ எரிக்கப்பட்டன. 69 தமிழர்கள்‌ கொல்லப்பட்‌டனர்‌. 

சம்மாந்துறையில் 1998இல் நடந்த படுகொலைகள்:

  • 06.01.98 வீரமுனையில் இரு தமிழ் இளைஞர்கள் முஸ்லிம்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இவற்றை வரலாறாக்கிவிட்டு இரு இனமும் அரசியலுக்கு அப்பாலும் 1960இற்கு முன்பிருந்தது போன்று ஒன்றாக சமயபேதமின்றி தமிழராக வாழ வேண்டும் என்பது எனது அவா.

முஸ்லிம்களின் தமிழர்கள் மீதான படுகொலைகள் பற்றி மேலும் அறிய:

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05

1 month ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 05

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 05 / 'அசோகன் என்பவன் யார்?

மத்திய இந்தியாவில் உள்ள உஜ்ஜயினிக்கு, தந்தை பிந்துசாரர் ஆட்சியில் இருந்தபோது, பேரரசரின் பிரதிநிதியாக அசோகன் அனுப்பப்பட்டார். அங்கு விதிஷாவில் உள்ளூர் தொழிலதிபரின் அழகான மகள் மகாதேவி சாக்ய குமாரி மீது அசோகன் காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டார். அவள் வணிகர் சாதியைச் சேர்ந்தவள். மகிந்த என்ற மகனையும் சங்கமித்தா என்ற மகளையும் பெற்றெடுத்தார். அசோகன், தீபவம்சம் 6 - 22 இன் படி தனது நூறு சகோதரர்களையும், மகாவம்சம் 5 - 20 இன் படி தொண்ணூற்றொன்பது சகோதரர்களையும் அரியணை ஏறுவதற்கான போரில் கொன்றார். என்றாலும் பல வரலாற்று அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். ஒரு சில கொலைகள் ஒருவேளை நடந்து இருக்கலாம்?, ஆனால் நூறு ஆக முடியாது என்கின்றனர். மன்னன் அசோகர் முடிசூடப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புத்த மதத்திற்கு மாறியதாகக் கூறப்படுகிறது; தீபவம்சம் 6-18 பார்க்கவும். இது அசோகரின் பெரும்பாறைக் கல்வெட்டு 13 உடன் நேரடியாக முரண்படுகிறது. அந்த ஆணையில் : 'தேவர்களின் பிரியமான பியாதாசி [பியதசி / Piyadasi.], முடிசூட்டுக்கு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கலிங்கத்தை வென்றார் என்று வரலாற்று குறிப்பு பதியப்பட்டுள்ளது. [It reads, in part: “Beloved-of-the-Gods, King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. One hundred and fifty thousand were deported, one hundred thousand were killed and many more died (from other causes)]. கலிங்கத்தை வெற்றி பெற்ற பிறகு, கடவுளுக்குப் பிரியமான அசோகன், தம்மத்தின் [தம்மம் என்பது புத்தரின் போதனைகளைக் குறிக்கும் ஒரு பௌத்தக் கோட்பாடு] மீது வலுவான விருப்பத்தை உணர்ந்தார். முடிசூட்டப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தான், தம்மத்தை நோக்கி உணர ஆரம்பித்ததாக அசோகன், தானே கூறுகிறார். இருப்பினும், தீபவம்சம், 6-18, முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு என்று, அசோகனின் கூற்றுக்கு மாறாக, கூறுகிறது? அவருடைய பிள்ளைகளான மகிந்தவும் சங்கமித்தமும் கூட கற்பனையான பாத்திரங்கள் என்று பல வரலாற்று அறிஞர்கள் நம்புகிறார்கள். மொகாலிபுத்த தீசர் கூட ஒரு கண்டுபிடிக்கப்பட்ட பாத்திரமாக இருக்க வேண்டும்?; பிரம்மாவின் உலகத்தில் இருந்து எவரும் வந்திருக்க முடியாது, அப்படி ஏதாவது ஒரு உலகம் இருந்தால் தானே! மகிந்த மற்றும் சங்கமித்தா, அவர்களின் தாய் தேவி மற்றும் மொகாலிபுத்த தீசர் ஆகியோரைப் பற்றிய குறிப்புகள் அவர்கள் பிறந்த இடத்தில் உள்ள இந்திய ஆதாரங்களில், இதுவரை ஒன்றுமே இல்லை. அசோக மன்னன் பாறைகள் மற்றும் தூண்கள் மீதான தனது ஆணைகளுக்கு மிகவும் பிரபலமானவர், ஆனால் இந்த மூன்று நூல்களிலும் இந்த ஆணைகள் குறித்து ஒன்றுமே இல்லை. கலிங்கப் போரின் கொலைகளும் பயங்கரமான விளைவுகளும் அவரது வாழ்விலும் ஆட்சியிலும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்த ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கலிங்கர்கள் அவருடைய இரத்த உறவுகள் இல்லாத போதிலும், அவரது மன வருத்தம் பதின்மூன்றாவது பாறை ஆணையில் பொறிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால், அசோகன் தனது நூறு சகோதரர்களைக் கொன்றதற்கு கட்டாயம் அவர் வருத்தம் தெரிவித்திருக்க மாட்டாரா? என்று உங்களை கேட்கத் தோன்றுகிறது.

Part: 05 / 'Who is Asoka?'

The Emperor Asoka married a woman of no royal blood, Devi, when he was in Ujjain as sub king; she belonged to merchant caste. She gave birth to a son Mahinda and a daughter Sanghamitta. Asoka, as per the chronicles, murdered his one hundred brothers, as per the Dipavamsa 6 – 22, and ninety-nine brothers as per the Mahavamsa 5 - 20, to ascend the throne. Many scholars dispute this. A few killings would have taken place, but could not be hundred. It is claimed that the King Asoka converted to Buddhism three years after his coronation; see Dipavamsa 6-18. This is in direct conflict with the Asoka’s Major Rock Edict 13. It is stated in that Edict: ‘Beloved of the Gods King Piyadasi, conquered the Kalingas eight years after his coronation. After the Kalingas had been conquered, Beloved of the Gods came to feel strong inclination towards the Dhamma. Asoka says that he started feeling towards Dhamma eight years after his coronation, however, the Dipavamsa, 6-18, states that it was three years after the coronation. Many scholars believe that his children Mahinda and Sanghamitta are fictitious characters. Even Moggaliputta Tissa too must be an invented character; no one could have descended from Brahma’s world, if at all there is any such world! There are no references to Mahinda and Sanghamitta, their mother Devi and Moggaliputta Tissa in the Indian sources in their birthplace. The king Asoka is very famous for his edicts on rocks and pillars, but all the three chronicles are silent on these edicts. The killings and the terrible consequence of the Kalinga war is a watershed event in his life and reign. The Kalingas were not his blood relations. His remorse is etched on the Thirteenth Rock Edict, which is still being heard by many. Would not Asoka have expressed remorse of his previous killing of his one hundred brothers?

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 06 தொடரும் / Will Follow

514322945_10229809923295055_765012965722

514162415_10229809923335056_429698083921


இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது

1 month ago

இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது

June 26, 2025

 இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் நீண்டகால வரலாற்றைக் கொண்டது

சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள் (International Day in Support of Torture Victims), என்பது உலகெங்கணும் உடல் உள முறையில் பல்வேறு சித்திரவதைகளுக்கு (துன்புறுத்தலுக்கு) ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் அவையினால் ஆனி 26ம் (26 June) நாளன்று விழிப்புணர்வூட்டும் ஒரு சிறப்பு நாளாகும்.மனித சமூகத்தின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்படுவதன் மூலமே உலகில் விடுதலை, அறம் நீதி, மற்றும் அமைதி ஏற்பட வாய்ப்புண்டு என்பதை இத்தீர்மானம் எடுத்துக்காட்டுகின்றது. இன்றைய  நாளில் சித்திரவதையினால் பாதிப்பட்டவரகளுக்கு அரச மற்றும் அரசார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து உளச்சமூகப் பணியாற்றிவரும்  உளநல ஆலோசகர் மற்றும் உளச்சமூகப்பணியாளர் நிலவனுடன் இன்றைய சந்திப்பை மேற்கொள்கின்றேன்.

அமுதன்  :- இன்று இனப்படுகொலை என்று பேசப்படும் இந்த வார்த்தையின் விளக்கத்தை தருவீர்களா அத்தோடு இலங்கையில் இனப் படுகொலையானது எவ்விதம் நடந்தேறியது?

நிலவன்:- ரஃபேல் லெம்கின்னின் கூற்றுப்படி, ‘இனப்படுகொலை என்பது ஒரு தேசத்தை அல்லது தேசிய இனத்தை அழிப்பது. பொதுவாக, இனப்படுகொலையின் அர்த்தம் ஒரு தேசத்தை உடனடியான அழிப்பது அல்ல. அதன் மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகக் கொல்லும் போது மட்டுமே இப்படி அர்த்தம் கொள்ள முடியும். மாறாக இனப்படுகொலை என்பது ஒரு தேசிய மக்கள் குழுவின் வாழ்வாதாரங்களைக் குறிவைத்தழிக்கும் வெவ்வேறு நடவடிக்கைகளைக் கொண்ட திட்டமிட்ட செயல்பாட்டையே குறிக்கிறது’. ‘இத்தகைய செயற்பாடுகள் ஒரு மக்கள் கூட்டத்தை முழுமையாகவோ அதன் ஒரு பகுதியையோ குறிவைக்கலாம்’ என இன அழிப்புக் குற்றத்தைத் தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சாசனம் மேலும் தெளிவு படுத்துகிறது. ஆகவே இன அழிப்பு என்பதன் வரைவிலக்கணம் ஒரு மக்கள் கூட்டத்தின் பொது அடையாளத்தையும் அவர்களை முழுமையாகவோ அவர்களில் ஒரு பகுதியினரையோ அழிப்பதற்கான திட்டமிட்ட செயற்பாடுகளையும் குறிப்பிடுகிறது.

உலக வரலாற்றுப் பட்டறிவினூடு நோக்குகையில் அரசுகளும் அரசுகளால் இயக்கப்படுகின்ற சக்திகளுமே இன அழிப்பினை அரங்கேற்றி இருக்கின்றன. இன அழிப்பிற்கெதிரான ஐ.நா சாசனம் இன அழிப்பு நடவடிக்கையின் கூறுகளை பின்வருமாறு வரையறை செய்கின்றது: ஒரு தேசிய இனத்தின் அல்லது குழுமத்தின் உறுப்பினர்களைக் கொல்வது. ஒரு இனத்திற்கு அல்லது குழுமத்திற்கு வலிந்தும் திட்டுமிட்டும் பாரிய உடல் – உள ரீதியான இன்னல்களை விளைவிப்பது. சொந்த வாழ்விடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றுவது. இனத்தின் மத்தியில் குழந்தைகள் பிறக்காத வகையில் (இன விருத்தியைத் தடுக்கும் வகையில்) கொடுமைகளைப் புரிதல். பண்பாட்டு வாழ்வியலின் தனித்துவங்களை, அடையாளங்களை அழித்தல். இன அழிப்பு நடவடிக்கைகளாக கருதப்படுபவை எவை என்பதை எடுத்துரைக்கும் சட்ட அடிப்படையிலான விளக்கங்களாக மேற்கூறப்பட்டவை உள்ளன.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை முற்று முழுதாக நசுக்குவது பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் மூலோபாயமாக இருந்து வந்துள்ளது. மாறி மாறி ஆட்சிக்கு வந்த  இனவாதச்  சிங்களத் தலைமைகள் பாரிய எண்ணிக்கையில் நிகழ்த்திய படுகொலைகளை   மட்டும் குறிப்பதல்ல இனப்படுகொலை.   திட்டமிடப்பட்ட ஒரு சமூகத்தின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தை அழிப்பதற்காக  கட்டமைக்கப்பட்ட வகையில்தமிழர்களின் இருப்பைக் கேள்விக்கு உள்ளாக்குவதற்குரிய மூலோபாயத் திட்டங்களை வகுத்து, படிப்படியாக அவற்றை நடைமுறைப்படுத்தி வந்திருக்கின்றது. கல்லறைகள், நூலகங்கள், சுவடிக்காப்பகங்கள், மற்றும்  இன அழிப்பின் பௌதீக சாட்சியங்கள்  உட்பட எந்தவொரு செயற்பாட்டுத் தொகுதியும் இனப்படு கொலைதான்.

ஈழத்தில் தமிழின அழிப்பு என்பது காலனித்துவக் காலம் (1948 வரை): இலங்கை ஒற்றையலகு அரசாகப் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியாளர்களால் கட்டியெழுப்பப் பட்டு, சிங்களப் பெரும்பான்மையின் ஆட்சி நிறுவப்படுகிறது. இலங்கையில் இனவாதத்தின் தொடக்கம். தமிழ் மக்களின் வாழ்வில் பல ஆண்டுகளாக மாறி மாறி பதவிக்கு வந்த பௌத்த சிங்கள பேரினவாத  அரசுகளால் தொடர்ந்து இன்றுவரை நடாத்தப்பட்டே வருகின்றது. 1956, 1958, 1961, 1974, 1979, 1981, ஜுலை 1983,1989,1990,  1995,  1997,  2000,  2009 என தமிழர்களுக்கு எதிராக வெடித்த இனக்கலவரங்கள் மற்றும் இன அழிப்பு போர் கலகத்தில் ஈடுப்பட்டிருந்த சிங்களவர்களுக்கு வெளிப்படையாக தமிழர்களை சித்திரவதை, பழிவாங்கும் வாய்ப்பை வழங்கியிருந்தது.

இலங்கைத் தீவில் 2006 மாவிலாறில் ஆரம்பிக்கப்பட்ட இனவழிப்பின் கொடுரயுத்தம் உக்கிரமடைந்து தமிழர் என்ற இனம் வாழ்ந்ததற்கான அடையாளம் ஒரு சிறிதும் இன்றி முற்றிலுமாக துடைத்தழிப்பதில் இலங்கை அரசு முனைப்புடன்  செயற்பட்டு 2008 -2009 மே மாதம் வரை நடைபெற்றது. தமிழ் மக்களைக் கொன்றழித்து, பாரிய இனப் படுகொலையை அரங்கேற்றின. வேதியல் ஆயுதங்கள் (Chemical Weapons), நச்சுக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (Cluster bombs) என உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட அனைத்து நாசகார ஆயுதங்களையும் பேரினவாத அரசு  போரில் பயன் படுத்தியுள்ளது. இலங்கை அரசால் நிறுவப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்களுக்கும் நல் இணக்கத்திற்குமான ஆணைக் குழுவின் (LLRC) முன்னால் சான்று வழங்கிய மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்  1,46,679 தமிழர்கள் பற்றிய எந்தத் தகவல்களும் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.  இந்த எண்ணிக்கையை இலங்கை அரசால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வத் தரவுகளிலிருந்து பெற்ற புள்ளி விபரங்களில் இருந்து  பெறப்பட்டதையும் ஆதாரங்களுடன் நிறுவித்திருந்தார்.மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப் அவர்களின் இந்த கூற்று, போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் உயிரிழப்புகள் பற்றிய விவாதங்களுக்கு உட்பட்டது.

அமுதன்  :- இலங்கையில் இனவழிப்பை சிங்களப் பேரினவாதம் எவ்வாறு மேற்கொண்டது என்பதை விளங்கப் படுத்தவும் ?

நிலவன்:- சிங்கள ஆட்சியாளர்கள் தமிழர் மீதான அழிப்பினை மிக நுட்பமாகத் திட்டமிட்டு செயற்படுத்தி வந்துள்ளனர். தமிழர் தாயகப் பிரதேசங்களில் 1940 களிலிருந்து சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிட்ட முறையில் நிறுவப்பட்டன. தாயகப் பிரதேசங்களை அபகரித்து சிங்களவர்களின் பரம்பலை அதிகரிப்பதன் மூலம், தமிழர்கள் சிறுபான்மையினர் என்ற கருத்துருவாக்கத்தை வேரூன்றச் செய்வதே பேரினவாத அரச இயந்திரத்தின் நோக்கம். தொடர்ச்சியான நிலப்பரப்பைக் கொண்ட வடக்கும் கிழக்கும் இணைந்ததே தமிழர்களின் பாரம்பரிய தாயகம் என்ற யதார்த்தத்தினை மறுதலித்து வடக்கினையும் கிழக்கினையும் துண்டாடும் சூழ்ச்சிக்கு திட்டமிட்ட குடியேற்றம் கருவியாய் கைக் கொள்ளப்பட்டது.

 1949 இல் மலையகத் தமிழர் குடியுரிமைப் பறிப்பிலிருந்து இன்றைய முட்கம்பி வேலி வதைமுகாம்கள் வரை தொடர்கின்றது பௌத்த – சிங்கள இன மேலாதிக்கத்தின் தமிழின அழிப்பு. 1956 இல் ‘சிங்களம் மட்டும்’ (Sinhala Only) சட்டம் மூலம் தமிழ் மக்களின் மொழி உரிமையைப் பறித்தது. மொழியுரிமை பறிப்பு என்பது இனத்துவ அடையாளம், சமூக பண்பாட்டு வாழ்வியல் ஆகியவற்றின் தனித்துவத்தை இழக்கச் செய்யும் சூட்சும் கொண்டதாகும். 1958-ம் (அதன் பின்பும்) நடைபெற்ற இனக் கலவரம் அங்கீகரிக்கப்பட்ட பொருளாதார சரீர இனப்படுகொலை ஆகும். 1970இல் கல்வித் தரப்படுத்தல் சட்டமாக்கப்பட்டது. சிங்கள மாணவர்களை விட தமிழ் மாணவர்கள் அதிக மதிப் பெண்களைப் பெற்றால் மட்டுமே பல்கலைக்கழக உள்நுழைவுக்கு தெரிவாக முடியுமென்ற பாரபட்ச நிபந்தனை கல்வித் தரப்படுத்தல் சட்டம் மூலம் கொண்டுவரப்பட்டது. 1972 ல் கொணரப்பட்ட குடியரசு யாப்பின் மூலம், இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடாகப் பிரகடனப்பட்டது. 1981 இல் நிகழ்ந்த யாழ் நூலக எரிப்பென்பது, தமிழ்க் கல்விச் சமூகத்தைச் சிதைக்கும் திட்டமிட்ட இன அழிப்பு நோக்கம் கொண்டது.

1983 ஆம் ஆண்டு ஜூலைப் படுகொலைகளை அடுத்து தொடர்ச்சியாக தமிழர் பிரதேசங்களில் – கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய பிரதேசங்களிலும், வடக்கில் – மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலும் அடுத்தடுத்து எண்ணிலடங்காத படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. 1985 இல் திருகோணமலையில் ‘நிலாவெளிப் படுகொலைகள்’, அதே ஆண்டு ‘கந்தளாய்ப் படுகொலை’, 1990 இல் ‘திரியாய்ப் படுகொலை’, 1987 இலும் 1991 இலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட மட்டக்களப்பு ‘கொக்கட்டிச்சோலைப் படுகொலை’, 1990 இல் கிழக்குப் பல்கலைக்கழகப் படுகொலை, அதே ஆண்டு நடந்தேறிய ‘வந்தாறுமூலைப் படுகொலை’, ‘சத்துருக்கொண்டான் படுகொலை’, 1990 இல் அம்பாறையில் ‘வீரமுனைப் படுகொலை’ இவ்வாறு படுகொலைகள் வடக்கு கிழக்கு மாகாணங்களில்    கோரமான முறையில் பல படுகொலைகள் நடாத்தப்பட்டுள்ளன. இப்படியே இன்னும் இந்தப் பட்டியல் நீண்டு செல்லுகின்றது. முள்ளிவாய்க்கால் பேரழிவு வரை.

வடக்கும் கிழக்கும் இணைந்த தொடர்ச்சியுடைய நிலப்பரப்பைக் கொண்ட தமிழர் தாயகம் கோட்பாட்டை உடைப்பதும், வடக்கு – கிழக்கு மக்கள் தம்மை ஒரு தேசமாக (Nation) அடையாளப்படுத்துவதை முறியடிப்பதுமே சிங்களத்தின் மூலோபாயம். நிர்வாகம் மற்றும் நில அமைவிடம் ஆகிய இரு நிலைகளிலும் தமிழர் தாயகக் கோட்பாட்டை மழுங்கடிப்பதே இனவாதத்தின் இலக்கு ஒரு இனத்தை திட்டமிட்டு ஓரங்கட்டுவதற்காக மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகளின் சட்ட ஏற்பாடுகளே . சிறிலங்கா அரசு, தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் பாரிய மனிதப் பேரவலங்களையும், சமூகச் சிதைவுகளையும், பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது. வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவம் எனலாம்.

அமுதன்  :-ஈழதேசத்தில் சிங்களப் பேரினவாதம் மேற் கொண்ட இனவழிப்பு பற்றிய விபரங்களை பதிவு செய்ய முடியுமா?

நிலவன்:- தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையானது. முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சொந்த நிலங்களில் மீளக் குடியேற வழியின்றி அல்லற்படுவோர், உடல் உறுப்புகளை இழந்தோர், வாழ்க்கைத் துணையை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் எனப் பெரும் மனித அவலங்களை எதிர் கொண்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள் அடிப்படை மனித உரிமைகள், அரசியல் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மை இடத்துக்கு வருகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றி கொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட   தமிழ் இன அழிப்பின் திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகும்.

நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்களப் பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறு கால கட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு, இனச் சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் தமிழ் இன அழிப்பு மறுப்பை தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  தமிழ் மக்கள் இன – மொழி – அரசியல் – சமூக – பொருளாதார – கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப் படுத்தப் பட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இலங்கை பௌத்த சிங்கள அரச பேரினவாதம்  தமிழர்களை திட்டமிட்டு  பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்பட்ட தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வன் புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்துள்ளார்கள்.  கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை  பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை (STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்கு மூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை முதலிய தரப்புக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.. அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாதத் தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்பு முகாம்களில்  இராணுவத்தினரும் இராணுவ புலனாய் வாளர்களினாலும் சித்திரவதை நடைபெறும் தளங்களில்  தடுத்து வைக்கப்பட்டவர்களிற்கு நடைபெற்ற உடல், உள, பாலியல் , சித்திரவதைகளையும் வன்கொடுமைகளையும் அந்நேரத்தில் அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலிகள்.

அமுதன்  :- இலங்கையில் பயங்கரவாதத் தடைச் சட்ட அங்கீகாரம் தமிழர்களை வஞ்சிக்கும் வகையில் எவ்வாறு செயற்படுகிறது?

நிலவன்:- பயங்கரவாத சந்தேக நபர்கள் என்ற பெயரில் தமிழர்களைக் கைது செய்வது இலங்கை அரசின் சட்ட அங்கீகாரம் கொண்ட நடைமுறையாகும். இலங்கையின் குற்றவியல் சட்டத்தின்படி ஒருவரை கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிபதியின் முன் ஒப்படைக்க வேண்டும். ஆனால் 1979-ல் கொண்டு வரப்பட்ட தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்படி, கைது செய்யப்படும் எந்த நபரையும் மூன்று மாதத்திற்கு நீதிபதியிடமும் தெரிவிக்காமல் தடுப்புக் காவலில் வைத்திருக்கலாம். மூன்று மாதத்திற்கு பிறகும் அமைச்சரின் பரிந்துரைப்படி, காவலில் வைத்திருப்பதை புதுப்பிக்கலாம் என்பதே நடைமுறையாக இருக்கிறது. சட்ட சரத்துக்கள் மூலம் மனித வதைகளைச் செய்ய பயங்கரவாதத் தடைச் சட்டம் இடமளிக்கின்றது.

 நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படாமலும், சில நாட்களில் இருந்து ஓராண்டு வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாமலும் அவர்களை இலங்கை பாதுகாப்புப் படையினர் தடுப்புக் காவலில் அடைத்திருக்கிறார்கள். ஒரே ஒருவர் மீது மட்டுமே குறிப்பிட்ட குற்றம் செய்ததாக வழக்கு போடப்பட்டு, மற்ற யாவரையும் சட்டவிரோதமாக அடைத்து வைத்து விசாரணைக் கைதிகளாகவே சித்திரவதை செய்திருக்கின்றனர். ஜனாதிபதிக்கான நிறைவேற்று அதிகாரங்கள்  தமிழ் இனத்தின் மீதான அடக்குமுறைகளைக் கடந்து  தமிழர்களின் வாழ்வியலை கேள்விக்குள்ளாக்கி கொலைகளையும் செய்யும் துணிவினைக் கொடுத்துள்ளது. இலங்கையில் பல தசாப்தங்களாக நடைபெறும் கொடுமைகள் சாட்சிகளற்று இரகசியமான முறையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. கடத்தல்கள், தடுப்புகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்கள் இந்த மீறல்கள் எவ்வளவு முறையான மற்றும் பரவலானவை என்பதை நிரூபிக்கின்றன.

இலங்கையில் வதைமுகாம்கள், சித்திரவதைகள் என்பதுகூட நீண்டகால வரலாற்றைக் கொண்டது. ஒரு இனத்தின் உரிமைகளையும், சம அந்தஸ்த்தையும், விடுதலையையும் மறுப்பதுகூட ஒருவகையில் சித்திரவதையின் மறுவடிவங்கள் தானே . சித்திரவதைகளையும், ஆட்கடத்தல்களையும் உண்மையில் தடுக்க வேண்டுமாயின் இலங்கை அரச படைக் கட்டமைப்பில் முழுமையான மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு, அரசியல் விருப்பம் மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.

அமுதன்  :- இலங்கையில் நடந்தேறிய தமிழினச் சித்திரவதைகளை சில தரவுகளின் ஊடாக குறிப்பிட்டுக் காட்ட முடியுமா?

நிலவன்:- தமிழ் இன அழிப்பு, வரலாற்றுச் செயன்முறையோடு .முள்ளிவாய்க்காலில் உச்சந் தொட்டு இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைகின்றன. சொந்த நிலங்களில் மீளக் குடியேற வழியின்றி அல்லற்படுவோர், உடல் உறுப்புகளை இழந்தோர், வாழ்க்கைத் துணையை இழந்தோர், பெற்றோரை இழந்த பிள்ளைகள், பிள்ளைகளை இழந்த பெற்றோர் என பெரும் மனித அவலங்களை எதிர் கொண்ட தமிழர் தாயகப் பிரதேச மக்கள் அடிப்படை மனித உரிமைகள், அரசியல் வாழ்வுரிமைகள் மறுக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கின்றனர். இனப்படுகொலை தொடர்பான பேச்சுக்கள் மறுபடியும் முதன்மையிடத்துக்கு வருகின்றன. சிங்கள-பௌத்த பேரினவாதம் தமிழர்களை அழிக்கவும் அடக்கியாளவும் வெற்றிகொள்ளவும் கடந்த எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட வகையில் செய்துவரும் கட்டமைக்கப்பட்ட   தமிழ் இன அழிப்பானது திரட்சித் தன்மைமிக்க ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி ஆகும்.

நாட்டின் அரசியல் யாப்பு தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் இல்லாது உருவாக்கப்பட்டதாகும். சிங்களப் பேரினவாத, பௌத்த மதவாத அரச இயந்திரமாகவே அது இயக்கப்பட்டு வந்திருக்கின்றது. பல்வேறு காலகட்டங்களிலும், பல வடிவங்களில் இன அழிப்பு, இன சிதைப்பு மேற்கொள்ளப்பட்டது என்பதையும் தமிழ் இன அழிப்பு மறுப்பைத் தற்போதைய அரசாங்கமும் தனது அரசியல் நாடகத்தில் தக்க வைத்துக் கொண்டுள்ளது.  தமிழ் மக்கள் இன – மொழி – அரசியல் – சமூக – பொருளாதார – கல்வி அடிப்படைகளில் பல முனைகளிலும், நிறுவனமயப்படுத்தப் பட்ட ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இலங்கை பௌத்த சிங்கள அரச பேரினவாதம்  தமிழர் மீதான திட்டமிட்ட  பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர். துப்பாக்கி முனையில் அம்மணமாக்கப்பட்ட தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்துள்ளார்கள்.  கிருசாந்தி தொட்டு, இசைப்பிரியா வரை  பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இலங்கை பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), இலங்கை இராணுவம், இலங்கை இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பணியகம், 2004 காலப்பகுதியில் கருணா குழு (அரசாங்க முகவர்களுடன் இணைந்து செய்த சித்திரவதைகள் இதில் அடங்கும்) போன்றவர்கள் இருந்திருக்கின்றனர். அவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்குமூலங்களிலும், வெற்றுத்தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை முதலிய தரப்புக்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றார்கள்.. அரசினால் கொண்டு வரப்பட்டிருந்த பயங்கரவாத தடுப்பு சட்டம் மனித உரிமை மீறலுக்கான சித்திரவதைகளின் எல்லா வாயில்களையும் இலங்கையில் திறந்து விட்டிருந்தது என்றுதான் சொல்ல வேண்டும்.

சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளை தடுப்பு முகாம்களில்  இராணுவத்தினரும் இராணுவ புலனாய்வாளர்களினாலும் சித்திரவதை நடைபெறும் தளங்களில் தடுத்து வைக்கப் பட்டவர்களிற்கு நடைபெற்ற உடல், உள, பாலியல் , சித்திரவதையும் வன்கொடுமைகளையும் கடுமையான சித்திரவதைகளை  அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலிகள்.

அமுதன்  :- இலங்கை ஆட்சியாளர்களாகிய அரசியல் வாதிகளின் கபடமுகமான செயற்பாடு எவ்வாறு இருந்திருக்கிறது…?

நிலவன்:- இலங்கை இராணுவத்தரப்பு பாலியல் குற்றச்சாட்டுகளை புரிந்தது என்று புகைப்பட ஆதாரங்கள் வெளிவருகின்றன. ஆனால் நீதி கிடைக்குமா?

தமிழர்களை 77 ஆண்டுகளாக ஒடுக்கிய சிங்கள-பௌத்த வன்முறையின் அதே கட்ட மைப்புகளினால் தான் இன்றும் கட்டமைக்கப்பட்டுள்ளது. இலங்கை சர்வதேசத்திடம் ஒரு முகம், தமிழ் மக்களிடம் ஒரு முகம், இராணுவத்திடம் ஒரு முகம் என்று பல்வேறு முகங்களை இலங்கையின் ஆட்சியாளர்கள் நன்றாகவே கடைப்பிடித்து வருகின்றார்கள். இலங்கை அரசு ஒருபோதும் வன்முறையற்றதாக இருந்தது இல்லை. இனப்படுகொலை, மற்றும் இன அழிப்பு உச்ச கட்டத்தை அடைந்த போர் வரை தமிழ் மக்களைத் திட்டமிட்டு அழிப்பதன் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டு செயற் படுத்தப்பட்டது.

2009 இல் தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதை வேண்டுமென்றே மறைக்கும்செயல். ஆனால் இது ஒரு சம்பவம் அல்ல – இது பல தசாப்தங்களாக அரசால் மேற் கொள்ளப்பட்ட இன அழிப்புகளின் உச்சக்கட்டமாகும். தமிழர்களுக்கு எதிரான ஒருதலைப்பட்சமாக சர்வதேச சக்திகளின் ஆதரவுடன் இலங்கை அரசு தனது முழு இராணுவ பலத்தையும் பயன்படுத்தி பொதுமக்களைப் படுகொலை செய்தது. பாதுகாப்பு வலையங்கள் கொலைக் களங்களாக மாறியது. 165,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப் பட்டனர். பொதுமக்களுக்கான “பாது காப்பு வலையங்கள்” என்று அழைக்கப் பட்ட வலையங்களுக்குள் மக்கள் கூட்டமாக அழைத்துச் செல்லப் பட்டனர், ஆனால் அதன் மீது இலங்கை இராணுவம் இடை விடாமல் குண்டுகளை வீசியது. மருத்துவமனைகள் மீது ஷெல் வீசப்பட்டன, பெண்கள் பாலியல் வன் கொடுமை செய்யப் பட்டனர், சரணடைந்த தமிழர்கள் நேரடியாகச் சுட்டுக் கொல்லப் பட்டனர். குழந்தைகள் தங்கள் தாய்மார்களின் கைகளில் இருந்து பிடுங்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

முள்ளிவாய்க்காலில் பாரிய கிடங்குக்குள்…  இசைப்பிரியா தொடங்கி முக்கிய தளபதிகளை நிர்வாணமாக்கி கொலை செய்த காட்சிகள் தற்போதும் சமூகவலைத்தளங்களின் உலாவருகின்றன.

இலங்கையின் இராணுவ முப்படையினரும் அரசு மற்றும் சர்வதேச சமூகத்தால் பாதுகாக்கப்பட்ட இனவழிப்பு குற்றவாளிகள். 2009 ஆம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் முழு உயர் கட்டளை மையங்களும் தமிழ் இனவழிப்புக் குற்றவாளிகளால் ஆனது,  அவர்கள் பொறுப்புக் கூறப்பட வேண்டும்.  உயிருடன் பிடிக்கப்பட்ட தமிழ் பெண்கள் மற்றும் விடுதலைப் புலிப் போராளிகள் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு  பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு சிதைக்கப்பட்டனர். புகைப்பட ஆதாரங்களும் நேரில் கண்ட சாட்சியங்களும் அதற்கு சான்றாகும். சாவடைந்தவர்களை பாலியல் வன்புணர்வு செய்யுது தமிழ் பெண்களை இழிவுபடுத்தவும் அவர்களின் அடையாளத்தை அழிக்கவும் இராணுவம் வேண்டுமென்றே பாலியல் பலாத்காரத்தைப் பயன்படுத்தியதை அவை உறுதிப் படுத்துகின்றன.

இலங்கை அரசு எப்படியும்   திட்டமிட்ட அழிப்புக்   குற்றத்தை ஒப்பு கொள்ளாது. மழுப்பும் நடவடிக்கையையே கையாண்டு கொண்டே காலப்பயணத்தில் மறக்கடிக்க வைக்கும் திசை திருப்பும் செயலிலேயே இப்போது ஈடுபட்டு வருகின்றது. தமிழ் இனப்படு கொலையை மறுக்க, சிதைக்க மற்றும் நிராகரிக்க மேற்கொள்ளப்படும் இலங்கையின் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். பொறுப்புக் கூறலைத் தவிர்ப்பதற்கும், சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்கும், தற்போதைய அடக்குமுறை நிலையைப் பேணுவதற்கும் இலங்கை அரசு மேற்கொள்ளும் ஒரு திட்டமிட்ட நடவடிக் கையாகும்.

சர்வதே நாடுகள்  இலங்கையை ஒரு இனப்படுகொலை நாடாக அல்லாமல் ஒரு கூட்டாளியாகக் கருதி வருகிறது.  இலங்கை இராணுவ அதிகாரிகள் மீது தடைகளை விதிக்கவும் அவர்களின் குற்றங்கள் குறித்து  சுயாதீனமான சர்வதேச விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவும் காணாமல் போனவர்களின் தலைவிதியை வெளிப்படுத்தவும் மனிதப் புதைகுழிகள் குறித்து சுயாதீன விசாரணைகளை அனுமதிக்கவும் இலங்கை  அரசிற்கும் இராணுவத்திற்கும அழுத்தம் கொடுக்காது சித்திரவதை முகாம்களை கொத்தடிமை மையங்களாகவும் சிங்கள அரசு நடத்தலாம் என்பதற்குச் சட்ட பாதுகாப்பை வழங்கியிருக்கின்றது. ஜெனீவாவில் இலங்கையை பற்றி விவாதிக்கும் போது பாதுகாப்பு படையினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் முதன்மை பெறல் வேண்டும். இதையெல்லாம் சர்வதேச சமூகம் செய்யதவறுமாயின் இத்தகைய மனித உரிமை மீறல்களை சிங்கள பௌத்த பேரினவாத அரசு தொடர்ந்து செய்ய ஊக்கமளிக்கும் விதமாகவே சர்வதேசத்தின் செயல்பாடுகள் அமையும் நிலமையாகக் காட்டும்.

அமுதன்  :- இலங்கையில் சித்திரவதைகள் இதுவரை காலமும் எவ்வாறு அரங்கேறின என்பதன் உண்மைத் தன்மை என்ன ?

நிலவன்:- கைது செய்யப்படுபவர்கள் விசாரணைகளின்போது சித்திர வதைக்கு உள்ளாகின்றனர். விசாரணைகளின்போது நிர்வாணமாக்குதல்,  தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு இரும்புக் கம்பிகளால் தாக்குதல், தடி,தடித்த வயர் போன்றவற்றால் அடித்தல், சூடான இரும்புக்கம்பி, எரியும் சிகரட்டால் சுடுதல், மின் அழுத்தியால் சுடுதல், சிகரெட்டுகள், சூடாக்கப்பட்ட உருக்குக் கம்பியால் உடல்களில் சூடு வைத்தல்.  விரல் நகங்களைப் பிடுங்குதல், விரல்களில் கட்டித் தூக்குதல், மூட்டுக்கள் வலிக்குமாறு கைகளைப் பின்புறமாகக் கட்டி தூக்குதல்,தலைகீழாகக் கட்டித்தொங்க வைத்து அடித்தல், பெற்றோல் நிறம்பிய பொலித்தீன் பையால் தலையை மூடி மூச்சுத் திணறவைத்தல், தலையைத் தண்ணீரில் மூழ்கடித்து மூச்சுத் திணறவைத்தல் போன்ற சித்திர வதைகள் பிரபலியமானவை.

 பெண் சந்தேக நபர்களுக்கு பாலியல் வதைக் கூட்டு வன்புணர்வு என்பனவும் ஆண்களுக்கு பாலியல் வதைகள் பாலுறுப்புக்களில் புண்விளைவித்தல் விபரிப்பதற்கு முடியாத அளவுக்கு இடம் பெற்றுள்ளது. நெகிழிப் பைகளால் முகத்தை மூடி மூச்சுத் திணற வைப்பது, பூட்சுக் காலினால் மிதிப்பது, சிகரெட்டினால் உடலின் அனைத்து இடங்களிலும் சூடு வைப்பது, கயிற்றில் கட்டி தலைகீழாகத் தொங்கவிடுவது மற்றும் இரும்புக் கம்பிகளை பிறப்புறுப்பில் திணிப்பது, , ஆண்குறிகளில் உலோக வயர்கள் திணித்தல் , பல சமயங்களில் ஐஸ்கட்டிகள்,  மதுபான போத்தல் முகப்புக்களை  மல வாசல் துவாரத்தினுள் புகுத்ததல் . ஆண்கள், பெண்கள் எனப் பாராமல் வாய்வழி வன்புணர்ச்சி, அந்தரங்க உறுப்புகளைச் சிதைப்பது என நினைத்துப் பார்க்கவே அச்சம் தரும் வகையில் கொடூரங்களை நிகழ்த்தியுள்ளனர்.

இதைவிடக் குறடுகளைப் பயன்படுத்தி கால்நகங்களைப் பிடுங்குதல், நகத்தின் சதைக்கு இடையில் ஊசிகள் புகுத்தல்  யோனி துவாரத்தில் மிளாகாய்த்தூள் தடவுதல் , மூச்சுத் திணறித்துடிக்கும் அளவுக்கு நீரில் அமிழ்த்தல் . மின்சார வயர்களை உடல் மீது வைத்துக் குறிப்பிட்ட நபர் மரணிக்கும் அளவு மின்சாரத்தை அவர்களது உடலில் பாய்ச்சுதல் , பட்டினிபோடுதல், சிகிச்சையளிக்காமல்  தவிக்கவிடுதல், இருட்டறையில் போடுதல் போன்றவைகளும் இவற்றுள் அடங்கும். மிகவும் பயங்கரமான பாலியல் ரீதியான சித்திரவதைகள் ஆண், பெண் என்ற வேறுப்பாடு இன்றி நடந்துள்ளது. மலவாசலிலும் யோனியிலும், ஆண்குறியிலும்  செய்யப்பட்ட சித்திரவதைகள் மரணவலியுடையது என வார்த்தைகளினால் சொல்ல முடியாத   சித்திரவதைக்கு உள்ளாகிய பலர் குறிபிட்டார்கள் என்பது உண்மையின் சான்றே.

அமுதன்  :- தடுப்பு முகாம்களின் பரவலாக்கமும் பாதிப்பும் கைதானவர்கள் மத்தியில் எவ்வாறான தாக்கத்தை விளைவித்தன?

 நிலவன்:- இலங்கையில் தடுப்பு முகாம்கள் வடக்கிலும், கிழக்கிலும் மட்டுமன்றி, இலங்கை முழுவதிலும் உள்ள அத்தனை இராணுவ முகாம்களும், ஏதோ ஒரு காலகட்டத்தில், கைது செய்யப்பட்டவர்களை விசாரிக்கும் முகாம்களாகவே இருந்தன. ஒவ்வொரு இராணுவ முகாமிலும்  பின்புறமாக ஒரு இடத்தில் விசாரணைக் கூடம் இருக்கும். கைது செய்யப்பட்டவர்களைத் தடுத்து வைத்திருக்கும் இடங்களிலும் இருக்கும். இது  பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்துள்ளது.

25இற்கும் மேற்பட்ட தடைமுகாம்களும் 10 இரகசிய முகாம்களும், பூசா, போஹம்பர, வெலிக்கட, 04ம் மாடி, 06ம் மாடி, மிகுந்தலை இராணுவ முகாம் போன்ற இடங்களிலும் அச்சுவேலி – அச்செழு இராணுவ முகாம், யாழ்ப்பாணத்தில் உள்ள ஜோசப் இராணுவ முகாம், வவுனியா  குறிசுட்ட குளத்திற்கு அருகில் இருந்த ஒரு இராணுவ தளம், அருகில் இருந்த இன்னொரு கடற்படைத்தளம், தற்காலிக தடுப்பு நிலையங்களாகத் தொழிற்பட்ட புனர்வாழ்வு நிலையங்களான – செட்டிக்குளம் முகாம், வவுனியாவில் ஒரு முன்னைய தொழில் நுட்பக் கல்லூரி, வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரி, பம்பைமடுக் கல்லூரி, வவுனியா பூந்தோட்ட முகாம், முன்னைய கல்வி நிறுவனம் , வவுனியா இராம நாதன் (மெனிக்பாம்) இரும்பைக் குளம் மகளிர் கல்லூரி, திருகோணமலை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை, புதுக்கடை பொலிஸ் நிலையம், கொழும்பு, கல்முனை, கடவத்தை, பொலிஸ் நிலையம், கொழும்பு குற்றவியல் புலனாய்வு திணைக்கள நிலையம், வேப்பங்குளம் (CID) முகாம், கொழும்பு விமான நிலையத்திற்கு அருகில் இருக்கும் பயங்கரவாத புலனாய்வுத் திணைக்களம், பூசா தடுப்புமுகாம் (காலி). அடங்கலாக 48 சித்திரவதை முகாம்கள் அமைந்திருந்தன. இதுபோன்று இன்னும் பல இடங்கயில் இரகசியமாக இருந்துள்ளது.

வெலிக்கடயில் மாத்திரம் 1000- 1500மேற்பட்ட போராளிகள் அடைக்கப் பட்டிருந்தார்கள். விசரனையில் இருந்து தரம் பிரிக்கப் பட்டவர்கள் பொலனறுவை, திருகோணமலை இரகசிய தடுப்புமுகாம், மிகுந்தலை, யோசப் முகாமிற்கும் அழைத்து செல்லப்படுவார்கள். இவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக, இராணுவத்தினரின் தமிழ் ஆயுத ஒட்டுக் குழுக்களும் தமிழ் ஆயுத அரசியல் கட்சிகளில் உள்ள ஒருசிலரும் பயன்படுத்தப் பட்டார்கள். ஈ.பி.டி.பி கருணா, பிள்ளையான் குழுவில் உள்ளவர்களும் போராளிகளைக் காட்டிக்கொடுக்கும் பணியிலும் விசாரணைகளையும் சித்திரவதை செய்வதிலும் ஈடுபட்டடார்கள். வட்டுவாகல் பாலம், ஓமந்தை, தாண்டிக்குளம், மெனிக்பாம், இடம் பெயந்த மக்கள் தங்கவைக்கப்பட்ட பாடசாலைகள் இடைத்தங்கல் முகாம்  உட்பட ஏனைய தடுப்பு முகாம்களிலும் இராணுவத்திற்கு ஒட்டுக்குழுக்களாகச் செயற்பட்ட இவ்வியக்கங்கள் தலையாட்டிகளாகக்கூட காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையில் செயற்பட்டார்கள்.

அமுதன்  :- இலங்கையில் நடந்தேறிய படுகொலைகள் சித்திரவதைகள் சம்பந்தமான சில தடயசான்று பகிரும் விடயங்களைப் பகிர முடியுமா?

நிலவன்:- சிறிலங்காவில் சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் இருந்து உயிர் தப்பியோர்- 2009- 2015 என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில்,40 ற்கும் மேற்பட்ட இரகசிய தடுப்பு நிலையங்களின் பெயர்களும் 60ற்கும் மேற்பட்ட பாலியல் குற்றவாளிகள் மற்றும் துன்புறுத்தலாளர்களின் பெயர்களும் பதிவு செய்யப் பட்டுள்ளன.

ஜோசப்முகாமின் தளபதியாகத் தற்போது மேஜர் ஜெனரல் அமல் கருணசேகர மற்றும் மேஜர் ஜெனரல்களான போனிவிகா பெரேரா, சுமேதா பெரேரா, கமல் குணரத்ன மற்றும் ஜகத் ஜெயசூரிய ஆகியோர் ஜோசப்முகாமின் தளபதியாக2009 இற்குப் பின்னர் இருந்துள்ளனர். பாதுகாப்புத் தரப்பின் உள்ளிருந்து ஐந்தாவதுP இக்கு கிடைத்த தகவலின் படி லெப்டினன்ட் ஜெனரல் கிருசாந்திடி சில்வா என்பவர் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட போராளிகள் தொடர்பான விவகாரங்களை கையாண்டுள்ளார். இதன்போதே பல போராளிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளார்கள். உயிர் தப்பியவர்களின் சாட்சியப் படி, கட்டளைத்தளபதி கெ.சி. வேலகெதர என்பவர் திருகோணமலையில் உள்ள இரகசிய முகாமின் கடற்படை புலானாய்வு அதிகாரியாக 2010 வரை இருந்துள்ளார்.

பின்னர் கட்டளைத்தளபதி ரணசிங்க என்பவர் இதற்கான பொறுப்பை ஏற்றுள்ளார். முன்னாள் கடற்படை ஊடகப் பேச்சாளர்தளபதி டி.கெ.பி. திசநாயக்க, தளபதி சம்பத் முனசிங்க, ரணசிங்க ஆராய்ச்சிகே, கெட்டி ஆராச்சி மற்றும் ரணசிங்க பிடிகே சுமித்ரணசிங்க போன்றோர் 28 மக்கள் காணாமல் போனதற்கு காரணமாயிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பெயரில் இவர்களுக்கு வெளிநாடு செல்லத் தடையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த ஆண்டு ஏப்ரலில் பிறப்பித்தது பலருக்குத் தெரியாத விடையமாக உள்ளது.

இலங்கை இராணுவம், இராணுவத்தின் 53, 58, 58 வது படையணிகள், இராணுவ, இராணுவ பொலிஸ், இராணுவ புலனாய்வுப் பிரிவு, தேசியப் புலனாய்வு பணியகம்,  குற்றவியல் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (CID), பொலிஸ், விசேட அதிரடிப்படை(STF), பயங்கரவாத புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (TID), அரசுடன் இணைந்த தழிழர்களைப் படுகொலை செய்த மக்கள் ஜனநாயகக் கட்சி Eelam People’s Democratic Party (EPDP),  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் The People’s Liberation Organisation of Tamil Eelam (PLOTE), (   2004 காலப்பகுதியில் கருணா குழு பிள்ளையான் குழு, அரசாங்க முகவர்களும் இணைந்து செய்த சித்திரவதைகள் கொஞ்ச நஞ்சமில்லை. இவர்கள் முன்னமே தயாரித்து வைத்திருந்த குற்ற வாக்கு மூலங்களிலும், வெற்றுத் தாள்களிலும் கையொப்பமிடச் சொல்லியே அனேகமான சித்திரவதைகளை அரங்கேற்றினார்கள்.

அமுதன்  :- சித்திரவதை முகாம்களில் பாதிக்கப் பட்டவரின் வார்த்தைகள் எவ்வாறானதாக இருந்தது?

நிலவன்:- இலங்கையில் உள்ள முகாமிலிருந்து சித்திர வதைக்கு ஆளான போராளிகள் சொற்களால் வடிக்க முடியாத கொடூரங்களை அனுபவித்துள்ளார்கள். பாலியல் வன்புணர்வு முதலான பல்வேறு கடுமையான துன்புறுத்தல்களுக்கு ஆளானவர்களாக போராளிகள் காணப் படுகின்றார்கள். சித்திரவதை முகாம்களில் இருந்த பலர் மன நோய்களிளால் பாதிக்கப் பட்டுள்ளார்கள்.   வதை முகாம்களில் இருந்து தப்பியுள்ளவர்களில் பலர் இன்று வடக்கு கிழக்கில் உள்ள   மனநோயாளர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

அங்கு நிகழ்த்தப்பட்ட சித்திரவதைகள் ஒவ்வொன்றும் சட்டத்திற்கு புறம்பானது, மனித உரிமைகளை கேள்விக்கு உட் படுத்துவதாகும். பாலியல் துஷ்பிரயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்வது, இனத் துவேசத்தைத் தீர்த்துக் கொள்ள முன்பே தயாரிக்கப்பட்ட சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த குற்ற வாக்குமூலங்கள், மற்றும் சில கோப்புகள் அவர்கள் கைவசம் இருந்திருக்கின்றன. விசாரணை மேற் கொள்கிறேன் எனும் பெயரில் இந்த சித்திரவதைகளை மேற்கொண்டவர்கள். ஒவ்வொரு நாளும் இவர்களிடம் விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இருப்பதாகச் சந்தேகித்து,  உண்மையைச் சொல்லுமாறு அடித்து துன்புறுத்தி, அவர்களின் மீது பாலியல் ரீதியான வன்புணர்வுகளை செய்து, மரணத்தை விட வேதனையான இழிசெயல்களை இலங்கையின் விசாரணை அதிகார வெறியர்கள் நிகழ்த்தியுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட தகவல்களையோ, அல்லது குற்ற வாக்குமூலத்தையோ பெறுவதற்காகச் சித்திரவதைப் படுத்தப்பட்ட கைதிகளின் நிலை கொடூரமாக இருந்தது. சிங்கள மொழியில் எழுதப்பட்ட வாக்குமூலங்களிலும் வெள்ளைத் தாள்களிலும்  சித்திரவதை செய்து கையொப்பமும் வாங்கியுள்ளனர். போராளிகளை வைத்து புலிகளுக்கெதிரான பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கும், போராளிகளிடமிருந்து பல பெய்யான தகவல்களை தாங்களே வழங்கி  அத் தகவல்களைப் போராளிகளிடம் இருந்து பெறுவது போன்று காணொளிப் பதிவுகளைப் பதிவு செய்துள்ளார்கள். ஒவ்வோர் நாளும் தமது விசாரணையின் போது போதிய தகவல்களை வழங்காதோரை அல்லது தாங்கள் சொல்லும் விடயங்களைச் செய்ய மறுப்பவர்களுக்கு வழங்கப்படுகின்ற அதிகமான சித்திரவதைகளைச் செய்து கொலை செய்வதும் இந்த முகாம் அதிகாரிகளின் பொறுப்பாக இருந்துள்ளது.

அமுதன்  :- இலங்கையின் தீவிரவாதத் தடுப்புச் சட்டமும் பாலியல் கொடுமைகளும் எவ்வாறு இணைந்து காணப்பட்டது…? நீங்கள் சந்தித்த  பாலியல் சித்திரவதையினால் பாதிக்கப்பட்ட  துணைநாடிகள் தொடர்பில்  கூற முடியுமா ?

நிலவன்:- சுற்றிவளைப்புகளிலும், தேடுதல்களிலும், கொல்லப்பட்டவர்கள் போக, பிடித்துச் செல்லப் பட்டவர்களில் பல ஆயிரம் பேர் மீண்டு வரவேயில்லை. எனினும் பெரும்பாலானவர்கள் மீண்டு வந்தனர் என்பதில் சந்தேகமில்லை.மீண்டு வந்தவர்களும், மீளவராதவர்களும், இராணுவ முகாம்களில் விசாரணை என்ற பெயரில், சித்திரவதை செய்யப்பட்டனர். இராணுவ விசாரணை என்பது சித்திரவதையோடு இணைந்த ஒன்றுதான். இரகசியமாகவோ, வெளிப்படையாகவோ தடுத்து வைப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு முகாம்களின் பின்னாலும் சித்திரவதைகள் பற்றிய ஆயிரக்கணக்கான கதைகள் இருக்கும்.

சிங்கள அதிகாரிகள் தங்களின் பாலியல் வக்கிரத்திற்கு அப்பாவி இளைஞர்களை இரையாக்குவதற்கு, புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டைப் பயன்படுத்தித் தடுப்புக் காவலில் அடைத்திருக்கின்றனர் என்பதும், இலங்கை அரசு இந்த வெறியர்களுக்கு பாலியல் தீனி போடவே தீவிரவாதத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையுமே இந்தக் கொடுமைகள் அனைத்தும்  நிரூபிக்கின்றன.

சம்பவம் 1

சித்திரவதைக்கு உட்படுத்த பட்டவரின் பெயரை மற்றும் அவர் வாழ்விடத்தை  குறிப்பிடுவது  தொழில் நிலைக்குப் பொருத்தமற்றது  இருப்பினும் சில பாதிக்கப்பட்டவர்களின்   வயது பால் சம்பவங்கள் போன்றவற்றை குறிப்பிடுகின்றேன். ஒரு தமிழ் இளைஞன் 23வயது நிறைந்தவன்  இலங்கை விசேட புலனாய்வு அதிகாரிகளால் பிடிக்கப்பட்டு 25 நாள் ரகசிய தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டு பல சித்திரவதைகளின் பின்னர் விடுதலை செய்யப் பட்டான்.

இராணுவ ரகசிய முகாமில் இனத் துவேசத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் “ உப தமிழ் கொட்டியா (நீ தமிழ் புலி ) , தமிழ் பள்ளா ( தமிழ் நாய்” , “தமிழ் பறையர்”, இன்னும் சிங்கள மொழியில் வழமையில் உள்ள துர்வசனங்களை  அடிக்கடி பேசினார்கள். அது ஒரு மூடிய அறை கதவினைத் திறக்கும் போது சற்று வெளிச்சம் உள்தெரியும். அறை முழுவதும் இரத்த வடையாகவே  இருந்தது.  அதே நேரம் பெற்ரோல் மணம் மூக்கை அரித்துக் கொண்டிருந்தது சுவர்கள் முழுவதும் இரத்தக் கறைகள் சிதறிக் கிடந்தன.  அடிப்பதற்கான உலோகக்கம்பிகள்,  எசிலோன் பைப்புகள் பொல்லுகள், நீரில் அமிழ்த்தி சித்திரவதை செய்வதற்கான தண்ணீர் நிறைத்த பீப்பாய்கள்,  என எல்லாமே இருந்தன.

கைகளைப்   பின்புறாமாக கட்டினார்கள். கண்கள் கட்டப் பட்டேன். ஆடையை அவிழ்த்து ஒட்டுத் துணியும் இல்லாமல் என்னை அம்மணம் ஆக்கினார்கள்.  சிங்கள அதிகார வெறியர்கள் என்மீது  சிறுநீரைக்  கழித்தார்கள். தொங்கவிடும் கம்பத்தில்  தலை கீழாகத் தொங்க விடப்படும் போது அவர்கள் சொல்வதை செய்ய மறுக்கும்  போதும் தலைப் பகுதியை அந்த தண்ணீர்    பீப்பாக்கள் உள்ளே விட்டார்கள். தலை கீழாகத் தொங்க விடப்பட்டு ஒருவர் பின் ஒருவராக என் வாயினில் அவர்களின் ஆணுறுப்பைத் திணித்தார்கள். எவ்வளவு மன்றாடியும் அந்த வெறியர்கள் விடவில்லை.

 தாகம் எடுக்க  தண்ணீர் கேட்டபோது   அவர்களின் சிறுநீரை என்னை வலுக் கட்டாயமாகக் குடிக்க வைத்தார்கள். உணவுகள் தரையில் கொட்டப்பட்டு நாய் போல நக்கிச் சாப்பிட சொன்னார்கள். தரையில்  இருந்த இரத்தக்கறைகள் இருந்த இடத்தினையும் நக்க வைத்தார்கள். இப்படி மனரீதியாகப் பலவீனப்பட்டு  அவர்கள் சற்தேகத்தின் பேரில் என்மேல் சுமத்தும் பெய்யான குற்றச் சாட்டால் வாழ்க்கை வெறுத்துப்போய் வலிய சித்திரவதைகளை விட அவற்றை ஏற்றுக் கொள்லாம் என்னும் மன நிலைக்கு தள்ளி இருந்தார்கள்.   கடவுளிடம் மரணத்தைக் கெஞ்சிக் கேட்கிற அளவு அங்கு கொடுரமான சித்திரவதைகள் நடந்தது என அவன் கூறினான். அந்த செயலுக்குப் பின் இனித்தான் எதற்காக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலிடுவதாக  நாளந்தம் சித்திரவதைகளின் பின்னர் ஏற்பட்ட மனவடு நோயில் பாதிக்கப்பட்ட ஒருவனாக உளவள நிலையத்திற்கு வந்தான். “உண்மையாக, நான் சந்தித்தவற்றில் பாலியல் அடிமைத்தனம் பற்றிய மோசமான சம்பவம் இதுவாகும்.

சம்பவம் 2

2008ஆம் ஆண்டு இலங்கை இராணுவம் சந்தேகத்தின் பேரில் கைது செய்து 35 நாட்கள் வதை முகாமில் தடுத்து வைத்து தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகள் பற்றி  25 வயது இளைஞன் கூறுகையில்.

புலிகள் அமைப்புடன் தொடர்புடையதாக இந்த வெறியர்கள் சந்தேகித்தார்கள். சந்தேகத்தின் பேரில் கைது செய்து ஒரு இராணுவ முகாமிற்குக் கொண்டு சென்றார்கள். அந்த முகாமில் இருந்த இராணுவ சிப்பாய்கள் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள். அவர்கள் சொல்வதைச் செய்ய சிங்கள அதிகார வெறியர்கள் ஆண் பாலுறுப்புகளை  கடுமையாக தாக்கினார்கள். பிடித்து நசுக்கினார்கள். கம்புகளை கொண்டு ஆண்குறிகளைத் தாக்கினார்கள்.  ஓரினச்சேர்கைக்கு வலுக்கட்டாயமாக உட்படுத்தினார்கள். ஒருவர் பின் ஒருவராக அவன் வாயினில் அவர்களின் ஆணுறுப்பை திணித்துள்ளனர். வாய்மூலமான பாலுறவுக்கு உட்படுத்திக் கொண்டே இருந்திருந்தார்கள்.

 விசாரணைகளின் போது நிர்வாணமாகவே வைக்கப்பட்டேன். அவர்கள் கூட்டாக பல முறை செய்த வன் கொடுமைகளை வார்த்தைகளினால் சொல்லமுடியாது.  கொடுமை என்ன வென்றால் வாய் மற்றும் மலவாசல் வழிய அவர்கள் உறவு கொண்டார்கள். தாங்க முடியாமல் நகர்ந்ததால் சிகரெட்டால் வெறித்தனமாகப் பின் முதுகில் சூடு வைத்தார்கள். மலவாசல் வழியாக பெரிய இரும்புக் கம்பி மற்றும் போத்தலைச் செருகினார்கள். பின்புறத்திலிருந்து இரத்தம் வழிந்து. அது கொடுமையான வலியை ஏற்படுத்தியது.

மயங்கி விழுந்து கண் விழித்த போது உட்காரக்கூட முடியாத அளவிற்கு பிறப்புறுப்பில் இருந்து இரத்தம் கொட்டியது. சிங்கள அதிகார மிருகங்கள் மயக்க நிலையில்  ஓரினச் சேர்க்கை  வன்புணர்ச்சி செய்தார்கள். எவ்வளவு மன்றாடியும் அந்த வெறியர்கள் விடவில்லை. நிர்வாணமான உடல்களைப் படம் பிடித்து, ஒளிப்பதிவு செய்தார்கள். அந்த செயலுக்குப் பின் இனி, தான் எதற்காக வாழ வேண்டும் என்கிற எண்ணமே மேலிடுவதாக அந்த இளைஞன் உளவளத் துணைக்கு வந்திருந்தான். இது ஒரு வகையில் உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதைகளாக மட்டும்தானே இருக்க முடியும்.

சிங்கள அதிகாரிகள் தங்களின் பாலியல் வக்கிரத்திற்கு அப்பாவி இளைஞர்களை இரையாக்குவதற்கு, புலிகளுடன் தொடர்பு என்ற குற்றச்சாட்டை பயன்படுத்தி தடுப்புக் காவலில் அடைத்திருக்கின்றனர் என்பதும், இலங்கை அரசு இந்த வெறியர்களுக்கு பாலியல் தீனி போடவே பயங்கதவாதத் தடுப்புச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறது என்பதையுமே இந்த கொடுமைகள் அனைத்தும்  நிரூபிக்கின்றன. கொடூர சித்திர வதையினால்  பல மரணமான  சம்பவங்கள் கூட நிகழ்ந்துள்ளன.

சம்பவம் 3

வதை முகாமில் 3வருடங்கள் தடுத்து வைத்து தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகள் பற்றி  24 வயது இளைஞன் கூறுகையில். 2009ம் ஆண்டு வைகாசி மாதம் 18ம் நாள் அன்று வட்டுவாகலில் பாலம் நோக்கி இராணுவத்தினரிடம் சரணடையும் நோக்கில் ஊன்று கோல் உதவியுடன் சென்று கொண்டிருந்தேன். அங்கு சென்று கொண்டிருக்கும் போது இராணுவத்தின் துப்பாக்கி ரவைகளுக்கு மக்கள் இரையாகிக் கொண்டிருந்தார்கள். வட்டுவாகல் பாலம் நோக்கிச் செல்லும் வழிகளில் ஓரே பிணங்களும், மணங்களும் இலையானின் ஆக்கிரமிப்புக்கு மத்தியில் இராணுவத்தினரின் தோட்டாக்களும் ஆங்காங்கே வந்து கொண்டிருந்தன. 

சன நெரிசலில் குழந்தைகள் முதியவர்கள் என்னைப் போன்று இயலாதவர்கள் என்று பலரும் இருந்தனர்.  என்னால் கையில் ஊன்று கோல் ஊன்றிச் சரியாக நடக்கக் கூட முடியவில்லை. காரணம் எனது உள்ளங் கைகள் காயமாகி விட்டன. வலிக்கு மேல் வலிகளைப் பொறுத்து கொண்டு வட்டுவாகல் பாலத்தை நோக்கிச்  சென்று  கொண்டிருந்தோம். மீண்டும் சில காட்சிகள் அப்பாலத்துக்கு அருகாமையில்  இராணுவத்தினரின் கண்ணி வெடியில் சிலர் சிக்கித் தங்கள் அவயங்களையும் உயிரையும் இழந்து பரிதாபநிலையை அடைந்தனர். இராணுவத்தினரால்  சந்தேகிக்கப் படுபவர்கள்  மீதான சித்திரவதைகள் அங்கிருந்தே அரங்கேறத் தொடங்கின. பாலத்தினூடாகச் செல்லும் போது பிணங்கள் மிதந்தன. தாகம் நேர்ந்தது பிணங்கள் மிதந்த தண்ணீரையும் அருந்தினோம்.

நாங்கள் இராணுவத்தினரால்  முள்வேலிகளுக்குள் அடைக்கப்பட்டோம்.  அங்கு இரு நாட்கள் தங்க வைக்கப்பட்டோம். பசி தாகம் எம்மை  ஆட்கொண்டது.  குப்பைத் தொட்டியில் சாப்பாடு போடுவது போல் இராணுவத்தினர் சாப்பாடு தண்ணீர் போன்றவற்றைகக் கொண்டு வந்து எறிவார்கள். அதில் கூடுதலான பகுதி தரையில் விழுந்து யாருக்கும் உதவாமலே போனது. மலசலகூட வசதிகள் இருக்க வில்லை, பல தொற்று நோய்கள் பரவின. ஆண், பெண் என்று இல்லாமல் அனைவரும் வெளியே கழிவுகளைக் கழிக்க  வேண்டிய  ஒரு  நிலைக்கு உள்ளாகினோம். இனவெறி பிடித்த சிங்களப் படையினர் வெள்ளைக்கொடியோடு வந்த நடேசன், புலித்தேவன் மற்றும் அவர்களுடன் வந்த போராளிகளையும் எல்லோரது கண் முன்னிலையிலும் அழைத்து சென்று அடித்தும், சித்திரவதை செய்தும், சுட்டுக் கொள்ளப் பட்டார்கள். பெண் போராளிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள்.

2009ம் ஆண்டு வைகாசி மாதம் 20ம் நாள் அன்று  இராணுவத்தின் தனியான வெள்ளை வேன் மற்றும் பஸ்களின் மூலம் போராளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் ஏற்றப்பட்டனர்.  என்னையும் அத்துடன் சிலரையும் பஸ்சில் ஏற்றி ஓமந்தைக்குக் கொண்டு சென்றனர்.  பின்னர் ஓமந்தையில் தடுத்து வைத்தனர். அங்கு போராளிகள் வேறு மக்கள் வேறு உதவியாளர்கள் வேறு என்று பிரிக்கப்பட்டு வேறு வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு பஸ்ஸில் என்னுடன் 60ற்குமேல்  போராளிகள் ஏற்றப்பட்டு ஓமந்தை மத்திய கல்லூரியின் தடுப்புக்குக் கொண்டு செல்லப்பட்டோம்.

அங்கு எங்களைத் தரையில் இருக்க வைத்து எங்களுடைய விசாரணை ஆரம்ப கட்டமாகவே அங்கிருந்து தொடங்கியது. பின்னர் எங்களுடைய தனிப்பட்ட அறிக்கைகள் எல்லாம் முடிந்தவுடன்  பாடசாலையின் வகுப்பறை ஒன்றில் 20-25 பேர் வரையில் அடைக்கப்பட்டோம். அந்த நேரம் எங்களுக்குச் சரியான உடைகள் கூட இருக்கவில்லை.  குளித்து விட்டு அதே  உடையைக் கழுவி உலர வைத்த பின் அணிந்தோம். அடிக்கடி விசாரணைகள், மிரட்டல்கள், சித்திரவதைகள், என்று நாளுக்கு நாள் அனுபவித்தோம். விசாரணையின் போது நீர் ஒரு போராளியா ? எங்கு ஆயுதங்கள் இருக்கின்றதன  என்று எல்லாம் கேட்கப்பட்டு நாங்கள் மறுக்கின்ற வேளையில் தடியடி, உடலை அம்மணப் படுத்தல், மிளகாய் சாக்கில் தலையை விட்டுத் தண்ணீரை ஊற்றுதல், உதைத்தல், எச்சில் துப்புதல், அறைதல்  போன்ற செயற்பாடுகள் இன்னும் சொல்ல முடியாத உடல் உள பாலியல் ரீதியான சித்திரவதைகளையும் அரங்கேற்றினார்கள்.  பலரின் பால் நிலை உறுப்புக்களையும் சேதப் படுத்தினார்கள். இவ்வாறான சித்திர வதைகளுக்கு எவரும் விதிவிலக்கல்ல. அனைவரும்  அங்கே நரக வாயிலைக் கண்டோம்.  பின்னர் கை அடையாளங்கள் எடுக்கப்பட்டு  போராளிகள்  என்று  முத்திரை  குத்தப் பட்டோம். எவ்வாறாவது வெளியில் போக வேண்டும் எனும் நோக்கம் எம்முள் இருந்தது.

அரசின் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகள், பெரும்பாலும் ஊர் அடங்கிப் போன பின்னர், இரவு அங்கு விசாரணைகள் தொடங்கும், நள்ளிரவு தாண்டியும் அந்த விசாரணைகள் தொடரும். இது தான் வடக்கு கிழக்கில் இருந்த இராணுவ முகாம்களில் நாளாந்தம் நடந்தது. இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டவர்கள் எவ்வாறு நடத்தப் பட்டார்கள், எவ்வாறு விசாரணை செய்யப்பட்டார்கள் என்பது உலகறிந்த உண்மை. விசாரணைகளின், பின்னர் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப் பட்டனர்.

அமுதன்  :- புனர்வாழ்வு, தடுப்பு முகாம்களில் நடந்த கொலைச் சம்பவங்கள் சிலதை ஆதாரப் படுத்த முடியுமா தங்களால்?

நிலவன்:- விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற பெயரில் கைது செய்யப்படுகின்ற ஆண் மற்றும் பெண்கள் சட்டத்துக்கு முரணாக சிறிய சுதந்திரம் கூட இன்றி தடுத்து வைக்கப் பட்டார்கள். எனினும் இந்த செயற்பாடுகளை புனர்வாழ்வு என்ற பெயரில் அரசாங்கம் மறைத்து வருகின்றது. இந்த குற்றச்சாட்டுகளை இராணுவப் பேச்சாளர்  2010ஆம் ஆண்டு பிரிகேடியர் உதய நாணயக்கார நிராகரித்துள்ளார். அவர்களில் பெரும் பாலானவர்கள் பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடைந்தவர்கள் ஆகையால் அவர்களைத் துன்புறுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் நியூயோர்க்கைத் தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண் காணிப்பகம் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஓரிரு தினத்திலேயே… இராணுவப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வென்ற பெயரில் சித்திரவதைச் சிறை முகாம்களை அமைத்து அங்கு தமிழீழ விடுதலைப் புலி போராளிகளுக்கு கடுமையான சித்திரவதைகளைச் செய்துவரும் சிங்களக் காடைய ராணுவத்தினர் 2011-03-22 அன்று ஒரு போராளியின் மரணத்துக்கு காரணமாகவோ அல்லது இந்த கொலையையே திட்டமிட்டு செய்துள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. பொலநறுவை மாவட்டத்தின் வெலிக்கந்தை புனர்வாழ்வு முகாமில் சிகிச்சை பெற்றுவந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான கிளிநொச்சியைச் சேர்ந்த கந்தசாமி நடேசலிங்கம் (26வயது)என்ற போராளியே தான் சிகிச்சை பெற்று வந்திருந்த அறையில் 22.03.2009 செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை மர்மமான முறையில் மரணித்திருந்தார். வெலிக்கந்தை சிறை முகாமில் ஒரு போராளி மர்மமான முறையில் மரணம்?அல்லது கொலையா? என்ற சந்தேகம்       இன்றுவரை  நிலவுகின்றது.

வவுனியா 4ம் கட்டை தொழில்நுட்பக் கல்லூரி கட்டிடத் தொகுதியில் இயங்கி வந்த இந்தப் பயிற்சி முகாமில் 2009 ஆம் ஆண்டு மே இறுதிப் போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் பலர் தங்கவைக்கப்பட்டு புனர்வாழ்வு அளிக்கப்பட்டு வந்த வேளை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒரு மாதம் வரை இருந்து பின்னர் சுகவீனம் காரணமாக புலிகளினால் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருந்த இந்த இளைஞர் ஓமந்தை முகாமில் வைத்து இராணுவத்தினரிடம் சரணடைந்து பின் முன்னாள் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாமில் பல மாதங்களாக இருந்து வந்த இளைஞர் ஒருவர் 21.04.2011 திங்கட்கிழமை  அன்று  காலையில் தற்கொலை செய்து கொண்டார்.

கிளிநொச்சி மாவட்டம் பல்லவராயன்கட்டு கரியாலை நாகபடுவானைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசீர்வாதம் நியூஸ்டன் என்ற இவ்விளைஞர் கிணற்றில் பாய்ந்து தற்கொலை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துத்தார்கள். ஆறு சகோதரர்களுடன் பிறந்த இவரது குடும்பத்தில் பெண் பிள்ளைகள் உள்ளமையாலும் குடும்பத்தினைப் பார்ப்பதற்கு எவரும் இல்லை, என்ற காரணத்தினாலும் தன்னையும் தன்னைப் போன்ற போராளிகளையும் விடுதலை செய்யுமாறும் தடுப்பு முகாமிற்கு பொறுப்பான அதிகாரிகளிடம் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இவரது இரண்டு சகோதரிகள் தமது கணவன்மாரை இழந்திருந்தனர். இவர் புனர்வாழ்வு பெற்று வந்த முகாமில், 38 அடி ஆழமுடைய பாதுகாப்புக்காக மூடப்பட்டிருந்த கிணறு ஒன்றிலேயே இவர் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப் பட்டது. தான் உயிரிழக்கப் போவதாகவும் தனது மரணம் மூலமாவது ஏனைய போராளிகளுக்கு தீர்வு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தனது நண்பர்களிடம் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் காவல் துறையில் பணியாற்றிய குடும்பத் தலைவர். மன்னார் வெள்ளாங்குளம் கணேசபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்­வரன் (வயது40) என்ற குடும்பத் தலைவர். 12.11.2014 இரவு 8.30 மணியளவில் இனந்­தெரியாத நபர்களினால் சுட்டுக்­கொல்லப்பட்டார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் தனது வீட்டில் இருந்த­போது அங்கு வந்த ஆயுததாரிகள் அவரை அழைத்து சென்று சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்­பட்டதை அடுத்து படையினரிடம் சரணடைந்த இவர் அரசாங்­கத்தினால் புனர்­வாழ்வு அளிக்கப்­பட்ட நிலையில் 2012ம் ஆண்டு சமூகத்துடன் இணைத்துக்­ கொள்ளப் பட்டார். அன்று முதல் உயிரிழக்கும் வரை சுயதொழில் ஈடுபட்டு வந்தார்.

வடக்கில் நீண்டகாலமாக வன்முறைச்  சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. புனர்­வாழ்வு பெற்று சமூகத்­துடன் இணைந்த கிருஷ்ணசாமி நகுலேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டமையை மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை வன்மையாகக் கண்டித்திருந்தார். இச்சம்பவமானது கொடிய போரால் பாதிக்கப்பட்ட வடக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்த ஆயுததாரிகள் முயற்சிப்பதையே எடுத்துக்காட்டியுள்ளது. இந்நாட்டில் இன்று நீதி தோற்றுப்போய்விட்டது. நீதிக்குப் புறம்பான செயல்கள்தான் இடம்பெற்று வருகின்றன.

2015ம் ஆண்­டுக்­கானவரவு செலவுத் திட்டத்தை சமர்ப்­பித்த ஜனாதிபதி தனது உரையின் போது முன்னாள் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப் பட்டுள்ளதுடன் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதாக கூறினார். ஆனால், அதன் பின்னர் முன்னாள் போராளி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட ஏனைய போராளி­களின் பாதுகாப்­பிற்கு  உத்தரவாதம் இல்லாது போயுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள போதிலும், அவர்கள் மீண்டும் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறன. இவ்வாறான நிலையில் புனர்வாழ்வு அளிக்கப்­பட்ட முன்னாள் போராளிகள் பல்வேறு விதமான அச்சுறுத்தல்களை எதிர்நோக்கி வருகின்றானர். புனர்­வாழ்வின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்ட போதிலும், அவர்கள் தொடர்ந்தும் படைத் தரப்பினரால் கண்காணிக்கப்பட்டே வருகின்றார்கள்.

அமுதன்  :- புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் விடயத்தில் அரசு மற்றும் ஐ.நாவின் செயற்பாடுகள் எவ்விதம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

நிலவன்:- புனர்வாழ்வு அளிக்கப்பட்ட போராளிகள் எனக் கூறும் எண்ணிகையில் பல குழப்பங்கள் காணப்படுகிறது. சமூகத்தில் இணைக்கப் பட்டிருப்பதாகக் கூறப்படுகின்ற    12195 மேற்பட்டவர்கள் எனக் கூறுகின்றது அவர்கள் பெயர் விபரங்களை அரசு வெளியிட வேண்டும். அவர்கள் அனைவரையும் மருத்துவ பரிசோதனைக்கு  உட்படுத்துவதென்பது இலகுவானதொரு காரியமல்ல. இதனை உரிய முறையில் கையாள வேண்டும். வெறும் உடல் மருத்துவ பரிசோதனை மட்டும் போதுமானதொன்றாகக் கூற முடியாது. இதற்கு உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற் கொள்ளப்படவும் வேண்டும். அவர்களுக்கு சிறப்பான உளவியல் மருத்துவம் சார்ந்த மருத்துவ பரிசோதனையும், அவர்களின் உளவியல் நிலைமைக்கு ஏற்ற வகையிலான உளவியல் மருத்துவமும் அவசியம். இதனைச் செய்யத் தவறினால் சமூகம் மோசமான பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய அபாயம் ஏற்படலாம் என்பதில் எதுவித அய்யமுமில்லை. அரசப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது தங்களுக்கு விஷ ஊசி அல்லது ரசாயனம் கலந்த ஊசி மருந்து ஏற்றப்பட்டது எனப் போராளிகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.நா மனித உரிமைகளுக்கான அலுவலகம் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போராளிகள் குறித்த ஒரு வெளிப்படையான செயற்பாடு இந்த நாட்டில் உருவாக்கப்பட வேண்டும். இனஅழிப்புக்கு அனைத்துலக விசாரணையைக் கோரும் அதே சமயம் அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்கள் வாழ்வதைப் போன்று சாதாரண வாழ்க்கை நடாத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சுதந்திரமாகக் கருத்துக்களை ஊடகங்களுக்கும் ஏனை அமைப்புக்களுக்கும் வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

அமுதன்  :- அன்று தொடங்கி இன்றுவரை… போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச செயற்பாடுகள் தமி இனப் பரப்பில் எவ்வாறு காணப்படுகிறது?

நிலவன்:- சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகத் தமிழர்கள் முன்னெடுத்த அரசியல் அகிம்சை ஆயுதம் தாங்கிய போர் வரலாற்றில் தனித்துவமானது . இதற்குச் சிங்கள அரசு பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தம் எனப் பெயர் சூட்டி, ஓர் இனத்தையே கருவறுப்பதுதான் சிங்களத்தின் திட்டமாக  2009 முள்ளிவாய்க்கால் அரசப் படு கொலைகளுக்குப் பின்னர் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனம் கொண்டது. போரின் போது மனித உரிமைகளை மீறி இனப்படுகொலை யுத்தத்தில் பாதிப்பேரை மொத்தமாகக் கொன்றும், மீதிப்பேரை சிறுகச் சிறுகக் கொல்லும் சிங்கள இனப் பயங்கர வாதத்தின் கோரப்பசி இன்னமும் அடங்க வில்லை. இடம்பெயர்ந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த இடைத்தங்கல் முகாமில் இருந்த சாதாரண மக்கள் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகளைக் கூறிட வார்த்தைகள் இல்லை. சரணடைந்த பேராளிகளையும் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட இளைஞர் யுவதிகளைத் தடுப்பு முகாம்களில்  இராணுவத்தினரும் இராணுவப் புலனாய்வாளர்களினாலும் உடல் உளப்  பாலியல்  என மிகக் கடுமையான சித்திரவதைகளை  அனுபவித்தார்கள்.

அறிவியலின் பிரம்மிக்கத் தக்க வளர்ச்சி இன்று சித்திரவதையை உடலியல் சார்பிலிருந்து உளவியலுக்கு நகர்தியுள்ளது. இதற்காக மருத்துவ ரீதியில் இரசாயன கலப்புக்களை உடலினுள் செலுத்தி சித்திரவதை செய்யும் முறைமையினை காட்டலாம். போராளிகளுக்கு புனர்வாழ்வு அளிக்கின்றோம் என்ற பெயரில்  பல சித்திரவதை முகாம்கள் நிறுவப்பட்டன. இராணுவத்தினரிடம் சரணடைந்த அல்லது படையினரால் கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு முகாம்களில் வைத்து ஏற்றப்பட்டதாகக் கூறப்படுகின்ற ஊசி மருந்து இப்போது சமூகத்திலும், அரசியல் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.. போராளிகளின் தொடர் மரணங்கள் தமிழ் மக்களை உலுக்கி விட்டிருக்கின்றன. அரச புனர்வாழ்வு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்ட போராளிகளில் இதுவரை 250ற்கு மேல்  பலர் புற்றுநோய்க் காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களினால் மரணித்திருக்கின்றார்கள். சிலரின் மரணத்துக்கான காரணங்கள் அறிவிக்கப் பட்டிருக்கவில்லை என்று உறவினர்கள் கூறுகின்றார்கள்.

இராணுவ புலனாய்வு பிரிவினரால் இறுக்கமான விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். .சித்திரவதை சார்ந்த நடவடிக்கைகளுக்கும் ஆளாகியிருக்கின்றார்கள். உளவியல் பாதிப்புக்கும் உள நெருக்கீடு மிக்க உடல் உபாதைகள் கொண்ட நடைமுறைக்கும். இலங்கைப் பாதுகாப்புத் தரப்பினரின் கண்காணிப்புக்கள் மிக மோசமான மன உளைச்சலுக்கும் அச்ச உணர்வுக்கும், எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற ஒரு நிலையில் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றார்கள்.

இறுதி முச்சுவரை விடுதலைக்கான தியாகம் என்ற கொள்கையில் இறுக்கமான பற்றுறுதி கொண்டிருந்தார்கள். அந்த கொள்கைக்காகத் தமது உயிர்களையே ஆயுதமாக்குவதற்கு பக்குவப் படுத்தப் பட்டவரகள். யுத்தத் ஆயுத மௌனிப்பின் போது  அங்கேயே செத்திருக்கலாம் ஏன் இராணுவத்தினரிடம் சரணடைந்தோம் அல்லது இராணுவத்தின் தடுப்புக்குள் சென்றோம் என்று தாழ்வுச்சிக்கல் சார்ந்த மன உணர்வுகளில் ஆழ்ந்து ஆற்றாத்  பெருந் துயருடன் வாழ்கிறார்கள்.இந்த ஊசி மருந்து விடயம் என்பது மிகவும் பாதிப்புக்களை ஏற்படுத்த வல்லதொரு விவகாரமாகும். அவர்களுக்கு மிக மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தவல்ல உளவியல் பாதிப்பினை இன்றும் ஏற்படுத்தி உள்ளது.

அமுதன்  :- புனர்வாழ்வு பெற்ற பலரின் இன்றைய வாழ்வின் மனநிலையினை உங்கள் பார்வையில் குறிப்பிட முடியுமா?

நிலவன்:- இலங்கை பாதுகாப்பு படையினர் தமிழர்களை கடத்துவதும் சித்திரவதை செய்வதும் தற்போதும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. நான்காம்கட்ட ஈழப்போரி சரணடைந்தவர்களில் சிலர் விடுதலை செய்யப்பட்டார்கள். இன்னும் சிலர் சிறையிலேயே இருக்கின்றனர் சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளார்கள். வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டார்கள், ஆனால் அந்த சித்திரவதையின் பின்னர் உயிர் தப்பிப் பிழைத்தவர்களை மனரீதியாக  மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

தடுப்பு முகாம்களில் எந்தக் காரணமும் இல்லாமல் பலரை நீண்ட காலமாக அடைத்து வைத்து பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை உயிர் வாழும் காலம்வரை மனதை விட்டு அகலாத, மீளமுடியாத வாழ்நாள் சித்திரவதை. பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியில் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.

அரசின் தடுப்பு முகாம்களிலும், சிறைகளிலும், தடுத்து வைக்கப்பட்டு, கடுமையான சித்திரவதைகள், காவல்கள், விசாரணைகளின், பின்னர் அவர்கள் படிப்படியாக விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்கப்பட்ட போரளிகளில் பலர் மர்மமான முறையில் சாவடைகின்றார்கள். இவ்வாறு தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சாவுகளை  தமிழ் அரசியல் குழுக்கள்,  மனித உரிமை ஆர்வலர்கள் கண்டு கொள்ளாத நிலை காணப்படுகிறது. இவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை, மருத்துவ ஆய்வுகள், போன்றன மேற்கொள்ள வேண்டும்.

பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்கு இடையிலும் தமிழர்களை அழிப்பதை நோக்கமாக கொண்டிருக்கும் சிங்கள பவுத்த பேரின வாதத்தோடு தமிழர்கள் இனியும் இணைந்து வாழ முடியாது என்பதை சர்வதேச சமூகம் இனியாவது ஒத்துக் கொண்டு, தமிழர்களுக்கான தீர்வு என்னவென்று தெரிந்துகொள்வதற்கு தமிழர்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்தவேண்டும்.

அமுதன்  :- பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போராளிகளுக்கும் நிவர்த்தி செய்ய வேண்டிய சில வாழ்வியல் நிலைப் பாடுகள் பற்றி கூறுங்கள்?

நிலவன்:- இலங்கை அரசினால் தமிழீழ மக்கள் மீது நடத்தப்பட்ட ‘தடுப்புக் காவல் மற்றும் சித்திரவதை‘ குறித்து உளவளம் பாதிக்கப்பட்டு உளக் காயங்களுக்கு உள்ளானோர் உரிய சிகிச்சை பராமரிப்பின்றி சமூகத்தில் வாழ்கின்றார்கள். உளப்பாதிப்பு பற்றிய அரச கட்டுமானங்களின் தேவைகள் மதிப்பீடு உணரப்பட்டு சமூக நிறுவன உருவாக்கங்கள் போதியளவு நடைபெறவில்லை.  உள வளத்துணையுடன் கூடிய சமூக பொருளாதர  பராமரிப்பு என்பன போதிய அளவில் மேற் கொள்ளப்படவில்லை.  பாதிக்கப்பட்டவர்கள்  தொடர்பாக பொதுமக்களிடமும்  விழிப்புணர்வுகள் மிகவும் குறைவு . உளக்காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்ற அறிவு சமூகத்தில் இல்லை.

இலங்கையில் நடந்த இந்த சித்திரவதைகள் எல்லாம் சட்ட ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் கூட பாதிக்கப்பட்ட அந்த மக்களுக்கு எந்தவிதமான நீதி, நியாயங்களும் கிடைக்காமலேயே போய்விட்டது.  அனைத்துலக மருத்துவ குழு ஒன்றின் கீழ் இறுதி இனஅழிப்பிற்கு முகம் கொடுத்த மக்களையும் போராளிகளையும் முழுமையான மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். விதிக்கப்பட்டுள்ள தடைகள் நீக்கப்பட்டு அவர்களும் இந்த நாட்டில் உள்ள ஏனைய மக்கள் வாழ்வதைப் போன்று சாதாரண வாழ்க்கை நடாத்துவதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் சுதந்திரமாக கருத்துக்களை ஊடகங்களுக்கும் ஏனை அமைப்புக்களுக்கும் வெளியிடுவதற்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.  தமிழீழ தேசத்தின் விடிவிற்காகவும் தொடர்ந்து தமிழராய் ஒன்றிணைந்து போராட வேண்டியது எமது வரலாற்றுக் கடமையாகும்

நன்றி நிலவன்… நன்றி அமுதன்…

https://www.uyirpu.com/?p=19620

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month ago

'நம் வரலாற்றை

நாமே எழுதுவோம்'

------------------------

 

  • நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவிடுபவரிற்கும் எத்தொடர்பும் இல்லை என்பதை இதனால் உறுதியளிக்கிறேன். 

 

  • எழுதருகை (warning): ஈழத்தமிழ் வலைத்தளங்களுக்கே உரித்தான படிமங்கள் மேல் தம் பெயரை எழுதும் மலத்திலும் கீழான செயலை செய்துவிடாதீர்கள், மலத்திலும் கீழானவர்களே. இவை உங்கள் வீட்டுச் சொத்தல்ல, தமிழீழத்தின் சொத்துக்களே!

 

என்னிடம் இருக்கின்ற தரைப்புலிகளின் நிழற்படங்கள் (Photos) & படிமங்கள் (Images) & திரைப்பிடிப்புகள் (screenshots) அத்துணையையும் இங்கே இணைத்துவிடுகிறேன். விரும்பியவர்கள் பயன்படுத்துங்கள்; சேமித்துக்கொள்ளுங்கள்.

 

 

"பதிவிடப்பட்டிருக்கும் நினைவுச்சின்னங்களின் விடுபட்டுள்ள பெயர்களை தெரிவித்துதவுமாறு வாசகர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்"

இதற்குள் தமிழர்களுக்கு சிங்கள மற்றும் முஸ்லிம் இனவெறியர்களால் செய்யப்பட்ட இனப்படுகொலை தொடர்பாகவும் அதற்கு எதிராகப் போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் சார்ந்தும் 1948 முதல் 2009 மே மாதம் வரை நிறுவப்பட்ட/கட்டப்பட்ட பல்வகையான நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் தொடர்பான படிமங்கள் பதிவிடப்படும். கீழ்க்கண்ட யாவையும் இதற்குள் அடங்கும்:

  • உருவச்சிலை

  • நினைவுத்தூண்

  • நினைவுக்கல்

  • வெற்றித்தூண்

  • நினைவாலயம்

  • வீரவணக்க நினைவாலயம்

  • மாவீரர் நினைவாலயம்

  • மாவீரர் நிழலுருப்படம்

  • மாவீரர் நினைவு மண்டம்

  • மாவீரர் பொது நினைவாலயம்

  • மாவீரர் துயிலுமில்லம்

 இதே போன்று இன்னும் பல ஆவணங்களைக் காண கீழே சொடுக்கவும்:

https://yarl.com/forum3/clubs/10-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%88/

விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கண்ணிவெடிகள் - ஆவணம்

1 month ago

"தோற்றிடேல், மீறித் 

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!

 

இதற்குள் புலிகளால் உள்நாட்டில் உற்பத்திசெய்யப்பட்ட பல்வேறு வகையான கண்ணிவெடிகள் தொடர்பான தகவல்கள் உள்ளன.

முதலில் கடற்கண்ணிவெடிகள் பற்றிப் பார்ப்போம்.

  • கடற் கண்ணிவெடி (naval mine)

1)நங்கூரமிடப்பட்ட தொடுகை கடற் கண்ணிவெடி ( moored contact sea mine)

அ. பெயர்: கிட்டு 93

  • மொத்த எடை: 65.5kg

main-qimg-68b364eb216003263a8aef339aa00f63.jpg

main-qimg-0703452792d627b660ae7714a01e58de.png

ஆ.

main-qimg-a5fb03fe4f6f5c26d4b4cf63587d5717.png

  • கீழ்வரும் கண்ணிவெடிகளில் ஒன்றனது பெயர் கொலின் கடற் கண்ணிவெடி என்பதாகும்.

அது கப்டன் கொலின்ஸ் அவர்களின் நினைவாக விடுதலைப் புலிகளால் சூட்டப்பட்டது ஆகும். இது 24.71992 இற்கு முன்னரே விடுதலைப் புலிகளிடம் பயன்பாட்டில் இருந்தது.

2)

main-qimg-a9d48775190302c651f92d5b0032549d.png

3)

main-qimg-588eb432441ca2324e0950fa8cb5e0f1.png

4) Limpet கடற் கண்ணிவெடி

main-qimg-736a2d54b21831d5b30cd8c7aba83792.jpg

5) நங்கூரமிடப்பட்ட தாக்க கடற் கண்ணிவெடி ( moored impact sea mine)

கயிறு கட்டியுள்ள பக்கமே நங்கூரம் கட்டுப்பட்டிருக்கும். எதிர்ப்பக்கம் மேற்பரப்பில் மிதக்கும் .

main-qimg-12ef1597efdfaf50a54251000a08f1b6.jpg

main-qimg-c445a0bc334401aee66ff24c8bd49581.png

6) மிதக்கும் தாக்க கடற் கண்ணிவெடி ( floating impact sea mine)

main-qimg-e69614385be57d6d8254ea231480d7d1.png

main-qimg-d26e9cc7743f16a0d0656d10bc8bebeb.png

7)இது ஒரு வகையான கடற் கண்ணிவெடி

main-qimg-39c26437a8bf290138d91b1b08ce8317.png

இதன் பின்பகுதி:

main-qimg-0ad26602b2afe16f788c3dac5ca5da41.png

 

என்னவென்று தெரியவில்லை... இது கடலில் மிதந்து வெடிக்கும் வகையில் அணியமாக்கப்பட்டுள்ளது(ready). இதன் இயக்கத்தைப் பற்றிய புலனங்கள் ஏதும் இல்லை.

main-qimg-3ea9772f894788d98fa8c1b6003825fd.png

main-qimg-a710d961c8fd604dbdd04b7307ff25bd.png

 

அடுத்து தரை கண்ணிவெடிகள் பற்றிக் காண்போம்

புலிகளின் இந்த மிதிவெடிகளில் எதிரி நோக்கி வெடிக்க வேண்டிய பகுதியில் எதிரியின் பக்கம் என்றும் வெடிக்க வைப்பவர் பக்கம் 'கொல்பவன் வெல்வான்' என்று மதிவெடியின் மேற்பகுதியிலும் 'தயாரிப்பு தமிழீழம்' என்று கீழ்ப்பகுதியிலும் எழுதப்பட்டிருக்கும்.

  • ஆளெதிர்ப்பு வெடிப்பு கண்ணிவெடி/ மிதிவெடி (anti-personal blast mine)

1) ஜொனி 95 (johny 95)

புதுப்புனையபட்ட ஆண்டு: ஜூன் 1988 , இந்தியப் படைகளுக்கு எதிராக

புதுப்புனைந்தவர்: மேதகு வே.பிரபாகரன்

மொத்த நிறை : 250g

வெடிமருந்து : TNT

வெடிமருந்து நிறை : 30 g

main-qimg-d51522e601005703869dd27f85483764.png

'தாட்டும் போது இருக்கும் நிலை'

main-qimg-3c6b6102d80a97fc38eed95c65e495e1-c.jpg

'வெடிக்கும் போது இருக்கும் நிலை'

main-qimg-3de2562a18494d5cf32f6d083065065f.png

'முன்பக்கத் தோற்றம்'

main-qimg-daa566d854003ed388c9478a05ce4596.png

'பக்கவாட்டுத் தோற்றம்' இந்த ஓட்டைக்குள்தான் 2x 1.5V மின்கலங்கள் வைக்கப்படும்.

ஜொனி தகட்டில் எழுதபட்டு இருக்கும் வாசகம்: நீ ஒரு முட்டாள் .

ஜொனி 95 மிதிவெடி இலங்கையில் விடுதலைப் புலிகளால் உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டது. இது மரப்பலகையில் மின்கலத்தை இணைப்பதன் மூலம் மிதிக்கும் போது மின் இணைப்பு குறுஞ்சுற்றாக்கப்படுவதன் மூலம் வெடித்தல் நிகழ்கிறது. இதில் மின்கலம் செயலிழந்தால் வெடித்தல் நிகழாது எனினும் வளவுகளைத் துப்பரவு செய்யும் போது எரித்தால் வெடித்தல் நிகழலாம், இதனாலே சேதனப் பசளையாக்குவது பரிந்துரைக்கப்படுகிறது. இது சுமாராக 50 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும்.

இது அண்ணளவாக 8 cm நீளமும், 7 cm அகலமும் 5.5 - 6 cm உயரமும் உடையது. கூடுதலான உலோகத்தை உள்ளடக்கியபடியால் இலகுவாக மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிக்க இயலும்.

செய்முறை:

இணையத்தளத்தில் இருந்து….

'பலகையில் முன்பகுதியில் 2இஞ்சி அகலத்தில் வட்டமாக ஒன்றரை இஞ்சி ஆழத்துக்கு துளையை ஒன்றை போட்டு அதனுள் வெடிமருந்து நிரப்பப்பட்டது.

பின் அதன் அடியில் சிறு துவாரமிட்டு வெடிப்பி(டிக்நேற்றர்) பொருத்தப்பட்டது. வெடிப்பியின் வயரை இரண்டு பேன்ரோச் பற்றரியில் பொருத்தி, மிதிவெடியின் பின்பகுதியில் மேலும் கீழுமாக ஓட்டை ஒன்றை போட்டு அதனுள் பற்றரியை பாதுகாப்பாக நீர் புகாதவாறு செய்யப்பட்டது.

இப்போது இரண்டு வயர் வெளியில் நிக்கும் அது இரண்டும் தொட்டால் குண்டு வெடிக்கும். இப்போது கால் இஞ்சி தடுப்பில் பலகை ஒன்றை வெட்டி, பின் பக்கத்தை சாய்வாக சீவியபின், முன் பகுதியின் கீழ்ப்பாக்கத்தில் வெற்று பால் ரின்னை கால் இஞ்சி அகலத்தில் நீளமாக வெட்டி ஒரு வயரை ஒட்டி ஆணி கொண்டு தறையப்பட்டது.

அதன் பின் ஒரு “கெற்ரபுள்” எப்படி கட்டுவமோ அதே முறையில் ரப்பர் பாண்ட் கொண்டு நிப்பாட்டப் பட்டது. இந்த வேலைகள் அனைத்தும் முடிவு பெற்றபின் தான் பற்றரிகள் பொருத்தப்படும்.

மிதிவெடி V இருப்பதினால்,மண்ணில் புதைக்கும் போது அந்த இடையினுள் மண் புகுர்வதனால் எதிரி கால் வைக்கும் போது மேல் பகுதியும் கீழ்ப்பகுதியும் ஒன்றாவது தடைப்படும். அப்படித்தடைப்படும் போது மின்னோட்டம் தடைப்படும். இதனால் மிதிவெடி வெடிக்காது போகும். இதைச் சரி செய்ய மிதிவெடியை மண்ணில் புதைக்கும் போது, ஒரு பொலித்தீன் பாக்கினுள் வைத்து,காற்றினால் உப்பியிருக்கும் பாக்கை, காற்றை வாயில் வைத்து மெதுவாக உறிஞ்சி இழுத்தபின் அதற்கு ஒரு முடிச்சை போட்டு பின் மண்ணில் புதைத்தனர்.'

2) இளவழுதி (Ilavazuthi)

'மேயர்(Major) இளவழுதி' என்பவர் மன்னாரில் வீரச்சாவடைந்த வேவுத்தாக்குதலணி மாவீரன். அவரது நினைவாக உருவாக்கப்பட்டது. இதில் இரு விதம் இருந்தது:

  1. இளவழுதி 1

  2. இளவழுதி 2

3) தாட்சாயினி மிதிவெடி (Thaatchaayini APM)

இதற்குள் உலோகச்சன்னங்கள் மிகவும் குறைவு. இதன் தாக்கத்தால் எதிரியின் கால்களை சேதமடையும் உயிர்போகும் வாய்ப்பு குறைவு.

main-qimg-12c3c13905dd8d14ecb31ba0024a7977.jpg

4) வான்நிலா மிதிவெடி (Vaannilaa APM) 

main-qimg-c997683a72e5f7ed725f471ef3fe0b71.png

கோமது கண்ணிவெடி.jpg

5) தமிழன் மிதிவெடி (Thamizhan APM)

புதுப்புனைந்தவர்: சார்ளஸ் அன்ரனி (மாவீரர்)

இதைத் தவிர வேறு படிமங்கள் என்னிடம் இல்லை!

main-qimg-f41f97d8caff1fa94bd1a6c4e1a074d8.png

main-qimg-2a9092bdcf76288c97c38c9f5d140d14.png

main-qimg-17dc3a0bef675643479b5aef1032c13a.png

main-qimg-5beed24969865ad04a95c5a5da1b5cf6.png

 

திசைசார் துணுக்க கண்ணிவெடி( directional fragmentation mine)

  • அமுக்கவெடி (claymore)

1) செந்தூரன் 96 (senthuran 96)

தாக்கும் ஆரை: 80 பாகை

மொத்த நிறை : 10kg

வெடிமருந்து : c4

இதுவே புலிகளால் விளைவிக்கப்பட்ட முதலாவது உயர்நுட்பக் அமுக்கவெடி. புலிகளால் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட அமுக்கவெடி இதுவே. பிற்பட்ட காலத்தில் தமது சிறப்புத் தேவைகளுக்காக உருவம், நிறை, தாக்கம், வெடிமருந்து என்பவற்றை மாற்றி மாற்றி பலவிதமான அமுக்கவெடிகளை பலபெயர்களில் புலிகள் விளைவித்துப் பயன்படுத்தினர்.

main-qimg-c14d9a9b4a651963d9625aa3f0cb04af.jpg

main-qimg-fca69cd938a9ffb3a66544ba32affb23.png

2) பகலவன் (Pakalavan)

மொத்த நிறை : 2.5 kg

விடுதலைப்புலிகளின் கப்டன் முகிலன் நீண்டதூர விசேட வேவு அணியினர் காவிச் சென்று தாக்குதல் நடத்துவது. இதில் இரண்டுவகையும் உள்ளது. அதாவது, தொலையியக்கி மூலம் இயக்குவது; மின்கம்பி மூலம் இயக்குவது.

main-qimg-a27c7287296dc8443538318434e62512.png

main-qimg-9cefe984ebd82268cef0f6e711f8b314.jpg

இதற்கான தொலையியக்கிகள்:

main-qimg-f1f73b9e4bda0df7e3864dccb2a8066d.jpg

3)இராகவன் (Irakavan)

உயரம் : 100cm

விட்டம் : 75cm

மொத்த நிறை : 54kg

தாக்கும் ஆரை: 360 பாகை

வெடிமருந்து நிறை : 44kg (TNT)

ஒரு வளையத்தின் நிறை : 6kg (மொத்தமாக 7 வளையங்கள் உண்டு)

வெடிக்கவைக்கும் முறை : கட்டளைக் கம்பி (command wire)/ தொலையியக்கி (remote control)

இது ஆடியிழையால்(Fiber glass) ஆனது ஆகும். இவ்வமுக்கவெடி ஐம்பதாயிரம் சிதறு துண்டுகளைக் கொண்டது. இது வழமையான அமுக்கவெடிகள் போன்று குறிப்பிட்ட பாகையில் மட்டும் தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. மாறாக 360 பாகையுமே சிதறுதுண்டுகளைப் பாய்ச்சக்கூடியவாறு மானுறுத்தப்பட்டது ஆகும்.

இதைக் காவிக்கொண்டு எதிரியின் பகுதிக்குள் ஊடுருவதும், நகர்வதும் இயலுமான காரியமன்று. உண்மையில் இது பதுங்கித்தாக்குதலுக்கான கண்ணிவெடியன்று!

main-qimg-cac2328bcbf888d9604174b5abc39617.png

4)பெயர் அறியா அமுக்கவெடி (Name unknown claymore)

மொத்த நிறை: 25kg

main-qimg-849c989c7a64326a4b18ed24c319184f.jpg

main-qimg-1004945e5a96949088336fa41272a245.jpg

5)தோழநம்பி 2000 (Thozanampi 2000)

மொத்த நிறை: 15kg

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் விளைவிக்கப்பட்ட அமுக்கவெடி. உருக்கு உருளைகள் பயன்படுத்தப்படவில்லை. இலக்கின் பக்கமாக இருக்கும் தடித்த உருக்குத் தகடு சிதறி இலக்கைத் தாக்கும். (100 ) மீற்றர் (200 ) மீற்றர் துரத்தில் இருந்துகொண்டே இயக்கி வெடிக்க வைக்கும் தொழில்நுட்பம் இவற்றில் பயன்படுத்த படுகிறது .

main-qimg-65c45259ee975cf879aeb6792ea649d6.png

6) பவான் (ஐயா) - 99 (Pavaan (Aiyaa) - 99 )

மொத்த நிறை: 15.5 kg

இது கப்டன் பவான் ஐயா என்னும் போராளியின் நினைவாக பெயர் சூட்டப்பெற்ற ஊர்தி தகர்ப்பு வெடிமருந்து ஆகும்.

main-qimg-1bb9138e226b8dee6bd6d4245370672e.jpg

Bhavan.jpg

Bhavan 99.jpg

'இடது பக்கம் இருப்பதுவே இதுவாகும்'

 

7) பெயரிடப்படா அமுக்கவெடி

அனைத்து வெடிபொருட்களும் விளைவிக்கப்பட்டு முதலில் பல சோதனைகள் செய்யப்படும். அவற்றின் செயல்திறன் விளைவுகளை பார்த்து சரிபிழைகளை சீர்செய்த பின்னரே அவற்றிற்கு பெயரிடப்படும். பெயரிடப்படாமல் பயன்படுத்துவதற்கு கொடுக்கப்பட்டவைகளில் ஒன்றாக இது இருக்கலாம்.

main-qimg-dc36b1fafd4785ce1f85bcca2c0253

  • மின்சார துள்ளல் கண்ணிவெடி(Electronic Tilt Mine)

1) ஜொனி 99 (Johny 99)

இறுதிப்போரின் ஆரம்பத்தில் பயன்படுத்தப்பட்டாலும் வைப்பவர்களுக்கே காயத்தை உண்டுபண்ணியமையால் பின்னர் கைவிடப்பட்டது.

main-qimg-dcd88dbcc31e0134349669a2d72af4fe.png

main-qimg-23e7e7cb07afc65de2e6b9f32c2f8229.png

Jonny 99 Electric Tilt Anti- Personnel Mines

ஜொனி 99 மிதிவெடியின் பின்பக்கம்

2) டப்பி மிதிவெடி (Dappi APM)

இது வெளிநாட்டில் உள்ள வகை-72 மிதிவெடிகளை போன்று தமிழீழத்தில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்டவை ஆகும். இதை டப்பி மைன்ஸ் என்றும் அழைப்பர்.

வகை - 1:-

main-qimg-afbeb19145153bd0b95bfb92d145b055.png

வகை - 2:-

main-qimg-554fd4017dad53379cea99a936c1ae40.png

வகை - 3:-

main-qimg-f5854ebc8119ea2670a713c13e2280

  • உகளும் துணுக்க கண்ணிவெடி (Bounding fragmentation mines)

1) கீர்த்தன் (Keerththan)

இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும்.

main-qimg-53b69ba8bfec1d925a5dd8e19ba0f3b0.png

 

1)சலாகை அமுக்கவெடி (Salakai)

காவலரண்களை தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது. காவலரணின் வடிவமைப்பு, எதிரிகளின் எண்ணிக்கை போன்றவற்றிற்கு ஏற்ப பயன்படுத்தப்படும்.

main-qimg-bea9789b8b08d4cb03ae9a1ef4b0eecb.png

 

  • கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(anti tank mine)

1) அம்மா 200 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ammaa 200 anti-tank mine)

மொத்த நிறை: 11 +/- 2.2

வெடிமருந்து : TNT(45%), RDX(55%)

உயரம்: 13 cm

அம்மா 2000 விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட கவசவூர்தி எதிர்ப்பு மதிவெடியாகும். இதில் வெடித்தலை ஆரம்பித்து வைப்பது மனிதர்களுக்கு எதிரான ஜொனி 99 மதிவெடி என்பதால் கவசவூர்திகள் மாத்திரம் இன்றி ஊர்தியோ, மனிதர்களோ அல்லது பசு போனால் கூட வெடிக்கக்கூடியது. இது பொதுவாக மண்ணிறத்தில் காணப்படும்.

இது லெப்.கேணல் அம்மா (அன்பு) என்னும் போராளியின் நினைவாக சூட்டப்பெற்றது ஆகும்.

main-qimg-1655478fb2c06b2631c169a3db5b6963.png

அம்மா 200 இன் பக்கவாட்டுத் தோற்றம்:

main-qimg-c6e216e7ed17aaf771af394bf5b0d644.png

.

இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும்.

இதன் மூடியுடனான படிமத்தினை நான் ஒரு வழியாக இணையத்தளத்தில் தேடி கண்டுபிடித்து விட்டேன். கீழே இருக்கும் படிமத்தில் இரண்டாவதுதான் இதன் மூடி போட்டது ஆகும். மூன்றாவது மூடி போடாதது. முதலாவது(பச்சை) உள்ளூர் விளைவிப்புத்தான், ஆனால் என்னவென்று தெரியவில்லை.

ammaan AT.png

 

2) பொன்னம்மான் 23 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 23 anti tank mine)

லெப்.கேணல் பொன்னம்மான் நினைவாக பொன்னம்மான் கண்ணிவெடி பிரிவினரால் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஊர்தி எதிர்ப்பு கண்ணிவெடி இதுவாகும்.

இதுவே அம்மான் என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. 

இதை புதைக்கும்போது இதன் மேற்பகுதியை மூடி போட்டு மூடிவிடுவர். மேற்பரப்பு பார்ப்பதற்கு தட்டையாக இருக்கும். எப்பகுதியை அமுக்கினாலும் வெடிக்கும்.

main-qimg-897be87211816a7bfcf24ab711586742.png

3)பொன்னம்மான் 100 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Ponnammaan 100 anti tank mine).

main-qimg-97f8a2114bdcd5782ad98032c098fb76.png

4) சங்கிலியன் கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Sangkiliyan anti tank mine).

main-qimg-1084883c3bdca61813f98bbeebc4b960.png

main-qimg-1ece93b39138bc28cd88487bfb97ac6e.png

5) தாரகை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி (Thaarakai anti tank mine).

சிறியவகை ஊர்திகளுக்கான கண்ணிவெடி.

வகை-1:

main-qimg-1fb5cd9808a72efd437665cca038ce98.png

main-qimg-9b861cbae4cc7aeb11379ca315267e2d.png

வகை-2:

உயரம்: 5.5 செமீ

விட்டம்: 9 செ.மீ

இது பாக்கிஸ்தானிய P4 MK-1 மிதிவெடியைப் படி-எடுப்பதன் மூலம் உருவாக்கப்பட்டதாகக் சிலராற் கருதப்பட்டாலும் இது அதைவிட அளவிற் பெரியதுடன் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும். இது 100 கிராம் அளவிலான வெடிபொருளைக் கொண்டிருக்கும். கையாள முயற்சிக்கும்போது வெடிக்க ஒரு ஊசல்(pendulum) உள்ளது. பெரும்பாலும் பிளாஸ்டிக் கதிரைகள், ஏனைய பிளாஸ்டிக் பொருட்களை உருக்கியே இதன் வெளிப்பாகம் மானுறுத்தப்படுகிறது(manufactured). இது அம்மா 200 கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடியில் வெடித்தலை ஆரம்பித்துவைப்பதற்கும் பயன்படுகிறது.

இது பொதுவாக பிரவுன் மற்றும் பச்சை நிறத்தில் காட்சியளிக்கும். குறைவான உலோகத்தை உள்ளடக்கியபடியால் மிதிவெடிகளைக் கண்டுபிடிக்கும் கருவிகள் மூலம் கண்டுபிடிப்பது சிரம்.

main-qimg-9e0c3f8d0e4ffb2ab93f7eaf62307e72.png

main-qimg-8ad83d6cf4aaa890cf2a0f6584cb80e9.png

main-qimg-b41d1e66d4e54a5052d8dfeb09ef660c.png

அடிப்பக்கமும் மேற்பக்கமும் தெரிகிறது:

main-qimg-b2e46835f6992622858a9d05b10b6b82.jpg

main-qimg-5fc7032c628ae34a75cde3437bd2db31.jpg

இதன் உட்பாகங்கள்:

main-qimg-0cb0f264754b3195cf2383afbd99d95e.png

main-qimg-114aedb3d781fce9c8872ef1ef23c757.png

இதன் உட்பாகங்களில் ஒன்று. இப்பாகத்தைக் கழற்ற முயன்றால் இது வெடித்து அந்த மணிகள் உங்களைக் கொன்று விடும்.

main-qimg-b50da46108a36bcd32e293cf1dcc2f8e.png

main-qimg-4d69f105c23a17fc6f77b25e76fd9e96.png

  

6) சிறுத்தை கவசவூர்தி எதிர்ப்பு கண்ணிவெடி(Siruththai anti tank mine)

சிறுத்தை என்று அழைக்கப்பட்ட இது கனவகை ஊர்திகளை அழிக்க பயன்படுத்திய மதிவெடி ஆகும். நீள வடிவமானது.

main-qimg-e6af125e9326463ab3dd81e1bc252eec.png

7)பெயர் தெரியவில்லை!

main-qimg-2612a10e0569aaf90d7643b3c108b3c4.png

8)செந்தூரன் 2000 (Senthuuran 2000)

ஒருமுனை கொண்ட ஊர்தி எதிர்ப்புக் கண்ணிவெடி. பார்ப்பதற்கு அம்மானின் வடிவம் கொண்டதாக இருக்கும்.

9) அம்மான் 50

(படிமம் கிடைக்கப்பெறவில்லை)

10) 

இரண்டு அன்பு 2000 கண்ணிவெடிகளை ஒன்றாக சேர்த்து வைத்திருப்பது போன்ற வடிவம் உடையதாக உள்ளது. இதில் "கரும்புலி" என்ற பெயர் எழுதப்பட்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. இதன் வகைப் பெயர் தெரியவில்லை.

large.Ani-TankMines.png.e01a18627ecbfdcc

 

  • தடைவெடி ('Bangalore torpedo 'like torpedos)

புலிகளால் உள்ளூரில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட தடைவெடிகள். இவை காவலரண் பாதுகாப்பு வேலிகளை தகர்த்து படையணி உள்நுழைய வழிசெய்யும். மின்கலங்கள் பொருத்தப்பட்டு ஆளிகளை (switch) முடுக்கிவிட்டு வெடிக்க வைக்கப்படும் வகைகள், தொலைதூர கட்டுப்படுத்திகள் மூலம் மின்கம்பி இணைப்புக்களால் வெடிக்க வைக்கப்படும் வகைகள் என்று களமுனையின் சூழலுக்கு ஏற்ப பயன்படுத்தப்படும்.

  1. தென்னவன் தடைவெடி (Thennavan torpedo)

main-qimg-8669e5878da736db84072ff2ce336b35.png

main-qimg-0cb4c871610a021f873825b3298826ae.png

2. தென்னவன் சப்பட்டை தடைவெடி (Thennavan sappattai torpedo)

main-qimg-79dcb61365c3ccdd095df9c59b146e99.png

3)குருவி தடைவெடி (Kuruvi torpedo)

இதில் அதிக உலோக சன்னங்கள் இருக்கும், சுருள்வடிவ சிறிய கம்பிகளால்(barbed wires) ஆன பாதுகாப்பு வேலிகளை தகர்க்க பயன்படுத்தப்பட்டது.

main-qimg-703d75ce3fa1759bbb5f3ab9acae0be7.png

4) மாயவன் தடைவெடி (Maayavan torpedo)

சமாதனத்தின் பின்னர் 2006.08 மீண்டும் யுத்தம் ஆரம்பிக்கும் காலத்திற்கு இடைப்பட்ட காலத்தில் இராணுவம் தமது காவலரண்களை இரும்பு கம்பிகள் L வடிவ இரும்பு சட்டங்கள் மற்றும் சீமெந்து கொண்டு அமைத்து எதிர் தாக்குதல் நடத்தியது. அதனை வேவு புலிகள் கண்டறிந்து சமர்ப்பித்த அறிக்கையின் பின்னர் அவற்றை தகர்ப்பதற்கு ஏதுவான முறையில் வடிவமைக்கப்படவை இந்த வகையான தடைவெடிகள்.

main-qimg-da5d00941aca10748016cbbc49aa402b.png

5)சாந்தகுமாரி தடைவெடி (Saanthakumaari torpedo)

விடுதலைப்புலிகளின் பொன்னம்மான் கண்ணிவெடிப்பிரிவில் மகளிர் அணியின் தளபதிகளில் ஒருவராக இருந்து களத்தில் வீரச்சாவடைந்த லெப்.கேணல் சாந்த குமாரி நினைவாக உருவாக்கப்பட்டது.. இது அதிக உலோகச்சன்னங்களை கொண்டிருக்காது பதிலாக தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது. எரியக்கூடிய பொருட்களால் (காய்ந்த மரங்கள், பலகைகள், கடின இறப்பர் தகடுகள்) ஆனது. காவலரண்கள், பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றைத் தகர்ப்பதற்கு பயன்படுத்தப்பட்டது.

main-qimg-0691e6264c540f11102b451af1e21f10.png

6) ரங்கன் தடைவெடி (Rangkan torpedo)

ரங்கன் என்று மிதிவெடிகள் உருவாக்கப்படவில்லை. ரங்கன் தடைவெடி ஆரம்பத்தில் இருந்தது பின்பு அது பயன்பாட்டில் இல்லை. 1997ல்கரும்புலி தாக்குதலின் போது இராணுவ முகாமின் பாதுகாப்பு தடையை உடைக்க முடியாமல் இருந்த சந்தர்ப்பத்தில் தன்னையே தடைவெடியாக்கி வெடித்து தடையுடைத்த மேஜர் ரங்கன் நினைவாக உருவாக்கப்பட்டது. அதன்பின்பு கரும்புலிகளுக்கான தற்காப்பு அங்கிகளுக்கு ரங்கன் ஜக்கட் என்று பெயர் சொல்லி அழைக்கப்பட்டது.

 

  • புலிகளால் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட எனக்குப் பெயர் தெரியாத கண்ணிவெடிகள்:

இவற்றைப் பற்றிய பெயர்க் குறிப்புகள் யாருக்கேனும் தெரிந்தால் தந்துதவி எம் வரலாற்றை எழுத உதவி புரியுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

main-qimg-ca8864dc44f86d774ab76205445d8685.png

முன்பகுதி:

main-qimg-d07f59ee5a42a8b42362533dfacaf8ea.png

பின்பகுதி:

main-qimg-1fc3755f2ab024b49ae910d9a5c0a033.png

2)நீள் உருள்கலன் வடிவத்தில் இருப்பது

main-qimg-8b26d825c8855bf795b6a2ab91c00fbc.png

3) & 4)

main-qimg-708e92c59d2d9e354f5d57754690465b.png

5)

main-qimg-179a0ad16c4057306fe1e9e579e6a0d0.png

6) காந்தக் குண்டு (magnet bomb)

இது புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது ஆகும். இதற்கு சூடப்பட்ட பெயர் எனக்குத் தெரியாது.

main-qimg-3bbc35fb8080d5c21c30aca6ae0f1b7d.png

 

  • செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம் (Improvised Explosive Device)

1) பந்து வடிவ செ.வெ.வ. (ball shaped IED )

இதற்குப் புலிகள் வைத்த பெயர் தெரியவில்லை!

main-qimg-b6d9cf7b3991165f987186e4efb21f00.png

2) உருள்கலன் செ.வெ.வ. (barrel IED)

வெடிமருந்து: TNT

main-qimg-7ae39638f290780f3e7f34f452f9abc3.png

main-qimg-d60d94f9f969258c59ade7b06467a32c.png

3)

main-qimg-b977a39e4e73b895e34d861a6c30a80f.png

4)

main-qimg-396e25ff0ff093666fbac7624d8a0d14.png

5)

main-qimg-8eb42ab6f0916509aa0364f7704b3847.png

6)

main-qimg-be4f117fad4d97092904ca4ed4258cac.png

7)

main-qimg-62f5b72af293d508a20af2d99d549da2.png

8 )

main-qimg-8ec5c2b8cd26905b907d0428dd768659.png

9)கைப்பெட்டி வெடிபொருள்(suitcase explosive)

main-qimg-4193a2b438dda5688e79cb1844b4bbc6.png

10)152மி.மீ தெறோச்சி எறிகணை செ.வெ.வ. (152 mm artillery shell IED)

main-qimg-8ec214d22b2fdd0e5b45c467d505468a.jpg

11)

அநுராதபுரத்தில் வானூர்திகளை தகர்க்க கரும்புலிகள் கொண்டு சென்ற செம்மைப்படுத்தப்பட்ட வெடிபொருள் கரணம்.

main-qimg-664babd70a84fd6533219a7e7dd40350.jpg

 

  • வெடிக்க வைக்கப் பயன்படும் தொழில்நுட்பம்:

இது பற்றி மேலும் அறிய: https://www.unog.ch/80256EDD006B8954/(httpAssets)/19F3DA0F78C6EDE8C1257B58007ECAE8/$file/Sri+Lanka_IEDs+2013.pdf

main-qimg-0a01e894f493b92be535fc9971ea4318.png

main-qimg-bda2b2c2b3cbd8a2739db01d284765b0.png

 

  • சூழ்ச்சிப் பொறி (booby traps)

1) இது கைப்பற்றப்பட்டபோது தரையில் இருந்து ஒரு ஆளின் நெஞ்சளவு உயரதில் ஒரு மரத்தோடு சேர்ந்து பிணைக்கப்பட்டிருந்தது. இதன் தலைப்பகுதியில் தான் இழுவூசி உள்ளது. அதில் கொழுவப்பட்டிருந்த மெல்லிய கம்பியானது அருகில் உள்ள ஓர் மரத்தோடு சேர்த்து கட்டப்பட்டிருந்தது.

(நன்றாக் உத்துப் பார்த்தீர்கள் என்றால் வெள்ளி நிற இழுவூசி தெரியும்)

main-qimg-2c6d966722168f05bbe00655c2a7f175.png

2) 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறி (81 mm mortar booby trap)

main-qimg-c2edb3d1a71a2abe27dd3cb55dac53bc.png

main-qimg-04481a25c5e7cd7cf2ff00357efc59c0.png

'பெருந்தொகையான 81mm கணையெக்கி சூழ்ச்சிப் பொறிகள்'

main-qimg-9415ddc0d65bf69e0cbb693ffef97b25.png

'ஆயத்தநிலையில் உள்ள சூழ்ச்சிப் பொறி'

3) HG-84 கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (HG-84 hand grenade booby trap)

main-qimg-f8e799eb630773eff993c010709e3117.jpg

4) குணா குண்டு சூழ்ச்சிப்பொறி (Kunaa hand grenade booby trap)

புதர்கள் மற்றும் புல்லுகள் நிறைந்த வெளிப்பிரதேசங்களில் நகரும் இராணுவத்தினரை தடுக்க பயன்படும் பொறிவெடி. எல்லாப்பக்கமும் சிதறும் வகையில் ஈயம், சிறு இரும்பு துண்டுகள், துவிச்சக்கரவண்டிகளின் சங்கரங்களின் சுழல்பொறி உராய்வுநீக்கி உருண்டைகள் (சைக்கிள் போல்ஸ் என்று ஊர் பேச்சுவழக்கில் சொல்லுவோம்) போன்றவற்றையும்TNT வெடிமருந்து, ஆரம்பவெடிப்பி (ரிக்னேட்டர்) ஆகியனவோடு செய்யும் ஒரு பொறிவெடி. உருமறைக்கப்பட்ட நூல்கள் கம்பிகளை தாண்டும் போது இழுவிசை உந்தப்பட்டு வெடிக்கும்.

main-qimg-823e7eb1c0498fdeabb1677ab30f784e.jpg

5) கைக்குண்டு சூழ்ச்சிப்பொறி (unknown hand grenade booby trap)

main-qimg-9e162d9f2ded88d6e0ef113069dd8f83.jpg

6) பன்றிக்கை - ஒரு வகையான சூழ்ச்சிப்பொறி. இது கறள் பிடித்த இரும்பால் ஆனது. இது தாக்கினால் சிங்களவன் உடனடியாகச் சாகாவிட்டாலும் பின்னாளில் ஏற்பாக்கி துன்பப்பட்டு இறப்பான்.

7)பண்டிச்சக்கை - இது இந்திய அமைதிப்படைக் காலத்தில் அவர்களை அவர்களை விரட்டி அடிக்க பயன்படுத்தப்பட்டதாகும். தமது விளைவிப்பில் உருவாப கண்ணிவெடிகளை அதிகளவு வெடிமருந்தால் நிரப்பி தகரி எதிர்ப்பு கண்ணிவெடியாக மாற்றியிருந்தார்கள். இந்த கண்ணிவெடிகளில் சிக்கி இந்தியப்படையின் அன்றைய களமுன்னனி தகரியாக விளங்கிய T - 72 வகை தகரிகள் பல அழிந்துபோயின. வலிகாமம் மேற்கு சங்கானை சந்திக்கு அண்மையில் 1987 இல் நடைபெற்ற தாக்குதலில் T- 72 வகை தகரி 10 அடி துரத்திற்கு கூட தூக்கி வீசப்பட்ட்டது குறிப்பிடத் தக்கது.

 

  • குறிப்பு: இது ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் என்னால் எழுதப்பட்ட "விடுதலைப்புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் - ஆவணம்" என்ற ஆவணத்தின் நீளத்தை குறைப்பதற்காக அங்கிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனியாக உருவாக்கப்படும் ஆவணமாகும்.

படிமப்புரவு

உசாத்துணை

  • முன்னாள் விடுதலைப் போராட்ட வீரர்கள் வழங்கப்பட்ட தகவல்களுடன் எனது பட்டறிவையும் தொகுத்து வழங்கியுள்ளேன்.

ஆக்கம் & வெளியீடு

நன்னிச் சோழன்

செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை - காணாமல் போனவர்களும் செம்மணியும்

1 month ago

செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை

காணாமல் போனவர்களும் செம்மணியும்

Jun 26, 2025 - 12:57

 0  355

செம்மணி : புதைந்து கிடக்கும் தமிழனின் இரத்தக்கறை

"அடேய் சோமரத்ன மண்வெட்டியை எடுத்து வாடா "

சொன்னது இராணுவ கப்டன் லலித் ஹேவா

சோமரத்ன மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நிற்கிறாள் . பக்கத்தில் அவள் கணவன்.

அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான்.

சோமரத்ன கெண்டுபோன மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்கிறான்.

பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைக்க சோமரத்ன உதவுகிறான்.

புதைக்கப்பட்ட இடம் செம்மணி!

இதை சொன்னது வேறு யாருமல்ல 

சோமரத்ன ! 

சோமரத்ன கிருசாந்தி கொலை வழக்கின் பிரதான குற்றவாளி .

1995-96 இராணுவம் யாழ்ப்பாணத்தை இராணுவம் கைப்பறுகிறது.

அந்தக் காலத்தில் குறுகிய காலப்பகுதியில் யாழ்பாணத்தில் அண்ணளவாக 600 பேர் காணாமல் போகிறார்கள்.

அப்போது அரியாலையில் இருந்த இராணுவ முகாமில் கடமையில் இருந்தவர்தான் சோமரத்ன.

செம்மணியில் உள்ள இராணுவ காவலரணில் சோமரத்ன தலைமையில் இருந்த குழு கிருசாந்தியை ரேப் பண்ணி கொலை செய்தது உறுதியான போது சோமரத்னவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கின் போது சோமரத்ன , தான் கிருசாந்தியை கொலை செய்யவில்லை , மேலதிகாரிகள் கொலை செய்த பின் உடலை புதைத்தது மட்டுமே நான் என்கிறார் சோமரத்ன.

அத்தோடு மட்டும் நிறுத்தவில்லை சோமரத்ன !

என்னால் மேலதிகாரிகள் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்களை கொலை செய்து புதைத்த இடத்தை செம்மணியில் அடையாளம் காட்ட முடியும் என்று நீதிமன்றில் நீதிபதிகள் முன்பே சொல்கிறார்.

1997 - 1998 காலம். சந்திரிக்கா பண்டாரநாயக்கா ஜனாதிபதியாக இருந்த காலம்.

சோமரத்ன இப்படி ஒரு பெரிய குண்டை நீதிமன்றின் முன் தூக்கி போட்டது ஜுலை 1998 ஆனாலும் அது பெரிய அதிர்வலைகளை நீதிமன்றில் ஏற்படுத்தவில்லை.

மாறாக அப்போது இலங்கை அரசுக்கு கடும் சிக்கலை உருவாக்கி இருந்த கிருசாந்தி கொலைவழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்குவதிலேயே எல்லோரும் குறியாக இருந்தார்கள்.

சோமரத்ன சொன்ன 600 பேர் புதைக்கப்பட்ட செம்மணி அமைதியாக உறங்கிய படி இருந்தது.

சோமரத்னவிடம் வாக்குமூலம் பெறவேண்டும் செம்மணியில் அகழ்வு நடக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட பலமான அழுத்தம்.

ஆனாலும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் ஒரு வருடகாலம் ஓடியது.

அந்தக்காலம் பகுதியில் விசாரணைக்காக மூன்று நீதிபதிகள் வெவ்வேறு காலங்களில் நியமிக்கப்பட்டார்கள்.

மூன்று நீதிபதிகளும் அச்சுறுத்தல் என்று அந்த விசாரணையை மேற்கொள்வதில் இருந்து விலகி விட்டார்கள்.

கடைசியாக மன்னாரில் வேலை செய்த ஒரு நீதிபதி வழக்கை பொறுப்பெடுத்தார் 

யாழ்ப்பாண நீதிமன்றம் கூடியது.

சோமரத்ன கொழும்பு சிறையில் இருந்து யாழ்பாணம் அழைத்து வரப்பட்டார்.

கொழும்பில் இருந்து 40 ஊடகவியலாளர்களும் விசேட விமானம் மூலம் யாழை அடைந்தனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம்

ஜுன் மாதம் 1999

சோமரத்ன நீதிமன்றுக்கு அழைத்து வரப்படுகிறார் .

அங்கே சோமரத்ன ஒரு மணிநேர வாக்குமூலத்தை நீதிபதி முன் சொல்கிறார்.

சோமரத்ன சொன்ன வாக்குமூலம் முழுவதுமாக கீழே, 

" நான் அரியாலையில் உள்ள முகாமில் வேலை செய்துகொண்டு இருந்தேன். அப்போது எனது கடமை ஊரில் உள்ள ஆட்களின் விபரத்தையும் அட்ரசையும பதிவு செய்வதும் , முகாமுக்கு கொண்டு வரப்படும் தமிழர்களின் விபரங்களை பதிவு செய்வதுமாகும்.

ஒருநாள் கப்டன் லலித் ஹேவாவும், அதிகாரி விஜயவர்த்தனவும் புலிகள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பெயர் லிஸ்டை தந்து அவர்களின் வீட்டை கண்டுபிடிக்க உதவி கேட்டனர். 

எனக்குப் பழக்கமான இடம் என்பதால் வீடுகளை காட்டினேன். அங்கே ஒரு படையணி சென்று பல இளைஞர்களை பிடித்து வந்தது.

அந்த இளைஞர்கள் ஒரு முகமூடி போட்ட ஆட்காட்டி முன் நிறுத்தப்பட்டு புலிகளா என்று கேட்கப்பட்டனர். 

ஆட்காட்டி புலி என்று சொன்ன இளைஞர்கள் கிட்டத்தட்ட 50 பேரை மேஜர் வீரக்கொடியும், குணசேகரவும் வேறாக முகாமுக்கு அழைத்துப் போனார்கள்.

சிலரை பாடசாலை ஒன்றில் அடைத்து வைத்தார்கள் .

இதற்கான கட்டளையை கொடுத்தது இராணுவ அதிகாரிகளான லலித் ஹேவா , விஜேவர்த்தன மற்றும் துடுகல.

ஒரு நாள் செல்வரத்னம் என்ற கல்வித்திணைக்கள அதிகாரியை காணவில்லை என அவருடைய மனைவி தேடி வந்தாள். அப்போது செல்வரத்னம் எங்கே எனக்குத் தெரியாது.

பிறகு சித்ரவதை செய்யும் இடத்துக்கு சென்றபோது சித்திரவதைக்கு உள்ளாகிக்கொண்டிருந்த 25 பேரில் ஒருவராக செல்வரத்னம் இருந்தார். செல்வரத்னத்தை தலைகீழாக கட்டி தொங்க விட்டிருந்தனர்.

செல்வரத்னம் தனக்கும் புலிகளுக்கும் தொடர்பில்லை என்னை விடுங்கள் என்று கெஞ்சினார். அவரை விடச் சொல்லி லலித் ஹேவாவிடம் சொன்னேன். ஆனால் அடுத்தநாள் செல்வரத்னம் உட்பட 10 பேரின் பிணத்தைக் தான் கண்டேன்.

அடுத்த நாள் உதயகுமார் என்ற நபரை பிடித்து வந்தனர்.

அவரது குடும்பம் அவரைத் தேடிவந்து கெஞ்சியது. அவரை விடச் சொல்லி மேலதிகாரி விஜேவர்த்தனவிடம் சொன்னேன். ஆனால் உதயகுமார் அன்றிரவு வேறு முகாமுக்கு மாற்றப்பட்டார். அவரை விடச் சொல்லி மேலிடத்தில் இருந்து கோரிக்கை வந்தது. ஆனாலும் உதயகுமார் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு விடுவிக்க பட முடியாத நிலையில் இருந்ததால் அன்றிரவு கொலை செய்யப்பட்டார்.

அங்கே சித்ரவதை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களைக் கூட என்னால் அடையாளம் காட்ட முடியும்.

ஒருநாள் கப்டன் லலித் ஹேவா ஒரு மண்வெட்டி எடுத்து வரச் சொன்னார்.

நான் மண்வெட்டியோடு போன போது அங்கே ஒரு பெண் நிர்வாணமாக நின்றாள். பக்கத்தில் அவள் கணவன்.

அந்தப் பெண்ணை கப்டன் லலித் ஹேவா ஏற்கனவே ரேப் பண்ணியிருந்தான்.

 மண்வெட்டியை வாங்கிய லலித் ஹேவா அந்த மனைவியையும் கணவனையும் மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்தார்.

பின் அந்த உடல்களை மண்தோண்டி புதைத்தோம்.

என்னால் செம்மணியில் உடல்கள் புதைக்கப்பட்ட 10 இடங்களைக் காட்ட முடியும். என்னோடு கிருசாந்தி வழக்கத்தில் தண்டனை பெற்றவர்களால் மேலும் ஆறு இடங்களைக் காட்ட முடியும் .

ஒரு கராஜில் வேலை செய்த இரு இளைஞர்களை கொலை செய்தது புதைத்தது தெரியும் அந்த இடத்தையும் என்னால் காட்ட முடியும்.

கிருசாந்தியை நான் கொலை செய்யவில்லை. மேலதிகாரிகள் கொலை செய்தபின் உடலை புதைத்தது மட்டுமே நான்.

இராணுவத்துக்கு எதிராக நான் இந்த கருத்துக்களை சொல்லக்கூடாது என்று எனக்கும், என் குடும்பத்துக்கும் அச்சுறுத்தல் விடுக்கிறார்கள்.

இலங்கை நீதிமன்றில் எனக்கு நீதி கிடைக்காது விட்டால் நான் சர்வதேச நீதிமன்றுக்கு செல்வேன்."

இதுவே யாழ் நீதிவான் நீதிமன்றில் சோமரத்ன கூறிய முழுமையான வாக்கு மூலம்.

வாக்கு மூலம் முடிந்ததும் சோமரத்ன

செம்மணி க்கு அழைத்நுச்செல்லப்படார். அங்கே அவர் மனித பீதைகுழிகளை அடையாளம் காட்டினார்.

அன்று நேரமாகி விட்டதால் புதைகுழிகளை தோண்டுவது அடுத்த நாளுக்குப் பிற்போடப்பட்டது.

17 June 1999

நான்கு மணிநேரம் தோண்டிய பின் முதலாவது உடலின் பாகங்கள் கிடைத்தது.

முழங்கால் பகுதி எழும்பும் அதைச்சுற்றி இருந்த ட்ரவுசரின் பகுதியும் முதலாவதாக கிடைத்தது.

அன்று பின்னேரம் இரண்டு முழுமையான எழும்புக்கூடுகள் கிடைத்தன.

image_870x_685cf0a6cbfd4.jpg

படம் : செம்மணி அகழ்வு 1999

இரண்டு எழும்புக்கூடுகளும் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்தன. இரண்டு எழும்பு கூடுகளுக்கும் இடையே தண்டவாளங்களுக்கிடையே இருக்கும தடி இருந்தது.

ஒரு எழும்புக்கூட்டின்.கை பின்னால் கட்டப்படு இருந்தது. மற்ற எழும்பு கூட்டின். கண்கள் கட்டப்பட்ட துணி காணப்பட்டது.

மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அடையாளம் காண அடுத்தநாள் யாழ் பொலிஸ் நிலையத்தில் 300 பேர் கூடினார்கள்.

அந்த இரு எழும்புக்கூடுகளும் சுப்பையா ரவி கராஜில் வேலை செய்த ராசையா சதீஸ்குமார் மகேந்திரன் பாபு என்ற இளைஞர்கள் என்று அடையாளம் காணப்பட்டது. அவர்கள் அரியாலை முகாமில் 19/8/1996 அன்று கைது செய்யப்பட்டவர்கள். உடலை கராஜ் உரியையாளரும், கொலையான வரின் மனைவியும் அடையாளம் காட்டினார்கள்.

அதன்பிறகு செம்மணி புதைகுழி தோண்டப்படுவதை அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்தியது . எதையையோ மூடிமறைக்க அரசு முனைந்தாதா?

image_870x_685cf0e4c1483.jpg

படம் : செம்மணி புதைகுழிகள் இருந்த இடத்திற்கான வரைபடம் 1999

அதன்பிறகு செப்டம்பர் மாதம் மீண்டும் அங்கே புதைகுழிகள் தோண்டப்பட்டு மெத்தனமாக 6 புதைகுழி தோண்டப்பட்டது. ஒவ்வொரு புதைகுழியிலும் 1 தொடக்கம் ஆறு உடல்களுகான எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தமாக 15 உடல்களில் பத்து உடல்களின் எச்சங்கள் கண்கள் கட்டப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டதை உறுதி செய்தது.

அதன்பின் அரசாங்கம் சோமரத்ன சொன்னபடி மேலதிக புதைகுழிகள் அங்கே இல்லை என்று அறிவித்து புதைகுழி தோண்டுவதை நிறுத்தியது.

image_870x_685cf12f97431.jpg

படம் : செம்மணி தோண்டப்பட ஆயத்தம் 1999

image_870x_685cf4366586a.jpg

சோமரத்ன 20 இராணுவ அதிகாரிகளை இந்த படுகொலைகளுக்கு காரணமாக சொல்லியிருந்த போதும் 2000 ஆம் ஆண்டு வெறுமனே 7 பேர் மீது மட்டும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது . பிறகு ஏழு பேருமே பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

2006 ஆம் ஆண்டு CID சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக காத்திருப்பதாக அறிவித்தது. இந்த தாமதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என கொழும்பு நீதிமன்றம் 2006 அறிவித்தது.

2007 யில் கிருசாந்தி விடயத்தை பேசுபொருளாக்கி அரசுக்கு அழுத்தம் ஏற்பட காரணமாக இருந்த S.T. ஞானநாதன் என்பவர் அரியாலை இராணுவ முகாமுக்கு அருகில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

 ஆனாலும் அதற்கு பிறகு அந்த வழக்குக்கு என்ன நடந்தது என்று தகவலை அறிய முடியவில்லை.

சோமரத்ன சொன்னது போல் அங்கே புதைகுழிகள் இல்லை என்று இலங்கை அரசாங்கம் மூடி மறைத்தது.

அப்படியே கிட்டத்தட்ட கால்நூற்றாண்டு கடந்தபின் ,

13 பிப்ரவர் 2025

அரியாலை சிந்தபதி மயானத்திற்கான கட்டுமான வேலைக்காக தோண்டியபோது மனித உடல்களின் எச்சங்கள் தென்பட்டது.

விடயம் நீதி மன்றுக்கு போக நீதிமன்றம் அதை மனித புதைகுழி என அடையாளப்படுத்தி அதை சட்ட ரீதியாக தோண்டுவதற்கு ஆணை பிறப்பித்தது.

இதுவரை 19 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதில் மூன்று ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் என சந்தேகிக்கப்படுகிறது.

இப்போதைய கேள்வி :

சோமரத்ன வெளிக்காட்டிய 20 பேரும் யார்?

2000 ஆம் ஆண்டு பிணை வழங்கப்பட்ட ஏழு இரானுவத்தினரூக்கு எதிரான வழக்குக்கு என்ன நடந்தது ?

இத்தனை காலமாக இது பற்றி எந்த தமிழ்தலைவராவது கேள்வி எழுப்பி உள்ளனரா ?

https://tjsnews.online/Chemmani-mass-grave?fbclid=IwQ0xDSwLJ-otleHRuA2FlbQIxMQABHjwnZ5lJNOZl9EZ_-iiOYfK7CuyCb-Vc8lMPw3RxJcJMfamZql8mMD9V1gBe_aem_lhyvrtVjQaUBxYQnBn1h_g

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 04

1 month 1 week ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 04

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 04 / 'இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று பௌத்த சபைகள் யாவை?'

இந்தியாவில் நடந்ததாகக் கூறப்படும் மூன்று புத்த சபைகள் பற்றிய விவரங்கள் இங்கு கூறப்பட்டு உள்ளன. முதல் சபையின் விவாதம் ஏழு மாதங்கள் நீடித்தது. இரண்டாவது சபையில் எட்டு மாதங்கள் விவாதம் நடந்தது. மூன்றாவது சபை ஒன்பது மாதங்கள் நீடித்தது; தீபவம்சத்தின் 5-5, 5-29 மற்றும் 7-59 ஐப் பார்க்கவும். சபைகளின் காலங்கள் ஏழு, எட்டு மற்றும் ஒன்பது மாதங்கள் என்ற ஒரு நேர்த்தியான ஏறுவரிசையில் உள்ளன என்று ஒருவர் ஆச்சரியப்படலாம்? ஆனால், தற்செயல் நிகழ்வுகள், அதிசய நிகழ்வுகள், அற்புதமான நிகழ்வுகள் மற்றும் பறத்தல், முன்னோக்கிப் பார்த்தல், தொலைநோக்குப் பார்வை, முன்னறிவித்தல் மற்றும் கணித்தல் [coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting] போன்ற அதீத மனித திறன்கள் இந்த நூல்கள் மூன்றிலும் காணப்படுகின்றன. இவை மத நூல்களில், ஒரு அலங்காரங்களாக அல்லது ஒப்பனையாக கூறுவது மிகவும் வழக்கமானவை. உதாரணமாக, ஒருவரின் ஆடை மணிகளால் அலங்கரிக்கப்பட்டதாக விவரிப்பது அல்லது கட்டிடத்தை சிற்பங்களால் அலங்கரித்ததாக கூறுவது போன்ற ஒரு அலங்கரிப்பையே இங்கு காண்கிறோம். ஆனால் இவை உண்மையான வரலாற்று நிகழ்வுகள் அல்ல என்பதை நீங்கள் உணரவேண்டும்!

பிரம்மாவின் உலகில் இருந்து மொகாலிபுத்த தீசர் (Moggaliputtatissa; கிமு 327–247), [ஏன் இந்து கடவுள் உலகத்தில் இருந்து?] கீழே இறங்கி வந்து ஒரு பிராமண குடும்பத்தில் பிறப்பார் [ஏன் பிராமண குடும்பத்தில் இருந்து?], மேலும் ஒரு சிறந்த ஆசிரியராக புத்த மதத்திற்கு மாறுவார் என்றும் இரண்டாவது பௌத்த சபையின் முடிவில் முன்னறிவித்தார்கள். இவர் மகிந்தவை அதிகாரப்பூர்வமாக மதத் தலைவராக்கினார். இரண்டாவது பௌத்த சபைக்கு, நூற்று பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, மூன்றாவது பௌத்த பேரவை நிகழும் என்றும் இங்கு முன்னமே எதிர்கூறப்பட்டது. இந்த மூன்றாவது சபை, மகிந்த மற்றும் மொகாலிபுத்த தீசர் பற்றி பின்னர் விவாதிப்போம்.

Part: 04 / 'What are the three Buddhist Councils, which allegedly took place in India?'

There are details about three Buddhist Councils, which allegedly took place in India. The deliberations in the first council lasted seven months. The deliberations in the second council lasted eight months. That in the third council lasted nine months; see 5-5, 5-29 and 7-59 of the Dipavamsa. One might wonder that the durations of the councils are in a neat ascending order of, seven, eight and nine months. There are so many coincidences, miraculous happenings, fabulous events, and super human abilities like flying, foreseeing, farseeing, foretelling, and predicting in the chronicles. These are quite usual as religious adornments or embellishments, but these are not genuine historical events.

Theros foresaw at the end of the second Buddhist Council that Moggaliputta Tissa from Brahma’s world [Why Hindu god's world?] would come down and would be born into a Brahman family [Why Brahman family?], and would convert to the Buddhism to become a great teacher. He ordained Mahinda. The Third Buddhist Council was also predicted to occur one hundred and eighteen years after the second Buddhist Council. We will discuss more about this Third council, Mahinda, and the Moggaliputta Tissa later.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 05 தொடரும் / Will Follow

511615078_10229748085069138_367831327629

510643251_10229748084869133_426564431388


"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 03

1 month 1 week ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 03

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 03 / 'புத்தர் தனது முதல் இரண்டு வருகைகளின் போது, இலங்கையின் பூர்வீக குடிமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதற்காக, உண்மையில் ஒரு பயங்கரவாதியாக நடந்து கொண்டாரா?'

புத்தர் தனது முதல் வருகையின் போது இலங்கையின் பூர்வீக குடிமக்களைப் பயமுறுத்தினார். மேலும் அவர்களை வேறு ஒரு தீவுக்கு, திரும்பி வர முடியாதவாறு கட்டாயப்படுத்தி துரத்தினார். புத்தரின் இந்த செயல்கள் மற்றும் தந்திரோபாயங்களால், அவர்கள் மிகவும் பயந்தனர்; அவர்கள், புத்தரால் காட்டப்பட்ட வேறு ஒரு தீவுக்கு திரும்பி பார்க்காமல் ஓடினார்கள்.

இரண்டு நாக இளவரசர்களுக்கு இடையில் [மாமா மருமகனுக்கு இடையில்] அரியணைக்காக நடக்கும் சண்டையை முடிவுக்கு கொண்டுவர, புத்தரின் இரண்டாவது இலங்கை வருகை நடைபெற்றதாக மகாவம்சம் கூறுகிறது. அப்பொழுது அவரே அந்த அரியணையை பெற்றார் என்கிறது. இது அவரது குணாதிசயத்தின் மீதான அவமதிப்பு போல் தெரிகிறது [It is sacrilege on his character], ஏனென்றால், அவர் தனது உரிமையான அரியணையையே துறந்தவர். அது மட்டும் அல்ல, பிம்பிசாரன் [a contemporary king, Bimbisara] அரியணை கொடுத்த பொழுதும், அதை ஏற்காதவர் அவர். அதாவது, இரு தரம் அரியணையை துறந்தவர். எப்படி இதற்கு உரிமைகோருவார்?. யாராவது, சொந்தபுத்தி உள்ள மற்றும் உண்மையான புத்த தர்மத்தை அறிந்த சமய வாதிகள், இதற்குப் பதில் சொல்லட்டும்.

இதே போன்ற நிகழ்வு தமிழ் காவியமான ‘’மணிமேகலை’ யிலும் விவரிக்கப்பட்டுள்ளது. அனால் எந்த பிரச்சனையும் இல்லாமல் மரியாதையுடன் இங்கு அது முடிவுக்கு வந்தது என்பது குறிப்பிடத் தக்கது. ஏனேன்றால் அந்தப் பிரச்சனை சிம்மாசனத்துக்காக அல்ல, புத்தர் அமர்ந்து உபதேசம் செய்யும் இருக்கைக்காக மட்டுமே. இரண்டு நாக இளவரசர்களில் எவராலும் அதை தூக்கி எடுக்க முடியவில்லை, அதே நேரத்தில் அதற்காக சண்டையை நிறுத்தவும் அவர்கள் விரும்பவில்லை. அவ்வேளையில் தான் புத்தர் வந்து, அவர்களின் சண்டையை நிறுத்தி, அதன் மீது அமர்ந்து அவர்களுக்கு உபதேசித்தார் என்கிறது தமிழில் பொது ஊழி (CE) ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்ட மணிமேகலை.

மற்றும் ஒன்றையும் நான் குறிப்பிடவேண்டும். புத்தர் இலங்கைக்கு 500 பிக்குகளுடன், கல்யாணியை ஆட்சி செய்த நாக அரசனின் [Naga (Serpent) king at Kalyani] அழைப்பை ஏற்று, தனது மூன்றாவது வருகையில், காற்றில் பறந்து வந்தார் என்று கூறுகிறது. எப்படி ஒரு நாக அரசன், 2500 ஆண்டுகளுக்கு முன்பு, 1500 மைலுக்கும் அப்பால் இருக்கும் புத்தருக்கு அழைப்பு விட்டார் என்பது, யாருக்காவது தெரியுமாயின் எனக்கும் சொல்லவும்?

மேலும் இந்த பெரும் தூரத்தை 501 பேர், புத்தரையும் சேர்த்து, காற்றில் பறந்து இருந்தால், கட்டாயம் அது ஒரு கண்கவர் கட்சியாக இந்தியாவில் இருக்கும் பலருக்கு இருந்து இருக்கும். ஆனால், எந்த வரலாற்று குறிப்புகளிலோ, அல்லது இந்தியா புராணங்களிலோ அது என்றும் பதியப்படவில்லை.

பிந்தைய அத்தியாயம் ஒன்றில், மன்னன் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தீசன் மகிந்த தேரரிடம் பல தேரர்கள் அங்கு இருக்கிறார்களா என்று விசாரிப்பது ஆச்சரியமாக இருக்கிறது! தீபவம்சம் 12-55 மற்றும் மகாவம்சம் 14-13 யை இது சம்பந்தமாக பார்க்கவும். புத்தரின் மூன்றாவது இலங்கை வருகையின் போது அவருடன் ஐந்நூறு தேரர்கள் பறந்து வந்த அந்த பயணத்தை எப்படி மறந்தார்களோ நான் அறியேன் பராபரமே! ஒருவேளை மன்னருடன் மக்களும் மிகக் குறுகிய நினைவுகள் கொண்டவர்களாக இருக்கலாம்?. மேலும் இராசாவலிய நூலில், புத்தரின் இலங்கை வருகை பற்றிய கால விவரங்களில், சிறிய வேறுபாடுகள் காணப்படுகின்றன.

ஆனால் 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', என்ற குறிப்பின்படி, புத்தர் மத்திய கங்கை சமவெளியிலும் அதைச் சுற்றியும் முன்னும் பின்னுமாக நடந்து, குறுக்கே நடந்து, மிகக் குறைந்த பகுதியில் அறிவுரை வழங்கினார் [உபதேசித்தார்]. கல்கத்தாவிலிருந்து பெனாரஸ் மற்றும் அலகாபாத் வழியாக, இன்றைய டெல்லியின் கிராண்ட் டிரங்க் சாலையின் [Grand Trunk Road] தெற்கே வரை கூட அவர் அன்று வரவில்லை என்கிறது அந்த வரலாற்று ஆய்வு நூல்.

புத்தர் என்றால் ஞானம் பெற்றவர் என்று பொருள். சித்தார்த்தா என்பது பிறக்கும்போது அல்லது பிறந்த சிறிது நேரத்திலேயே கொடுக்கப்பட்ட பெயர். புத்தர் மிகவும் நேர்மையான மற்றும் அற்புதமான மனிதர், சோகம், துன்பம் மற்றும் மனித வாழ்க்கையில் சிக்கிய அவலங்கள் ஆகியவற்றிற்கான பதில்களைக் கண்டுபிடிக்க பாடுபட்டார். இளவரச வாழ்க்கையின் சுகங்களை அறிந்த ஒரு நபராக இருந்தும், அவ்வற்றை முற்றாக துறந்த ஒருவர். அவர் நாடு அல்லது மொழி என்பனவற்றில் சிக்காமல், அதை பொருட்படுத்தாமல் ஒரு உலகளாவிய ஆசிரியராக இருந்தார். மேலும் ஒரு புதிய மதத்தை உருவாக்க அவர் என்றும் கூட நினைக்கவில்லை. இருப்பினும், மனுவின் கோட்பாட்டில் உள்ள அசிங்கமான நிலை அளவுக்கு இல்லாவிட்டாலும், அவர் ஒரு சாதி அமைப்பை நம்பியதாகத் தோன்றுகிறது. இந்த புத்தரின் உண்மையான குணத்தை, இயல்பை வைத்து, அவர் எந்த நேரத்திலும் தீவிரவாதியாக, பயங்கரவாதியாக இருந்து இருப்பாரா என்று சற்று சிந்தித்துப் பாருங்கள்.

Part: 03 / 'Is really The Buddha behaved as a terrorist to strike fear in the original inhabitants of Lanka on his alleged first two visits?'

He terrorised the original inhabitants of Lanka in his first visit, and uprooted them to another island, never to return. They were so terror stricken because of the Buddha’s actions and tactics; they ran to the other island shown to them. The Buddha struck fear and terror in the two Naga (serpent) princes, uncle and nephew, and in their soldiers who were fighting for a throne in his second visit. He obtained the throne for himself. It is sacrilege on his character, as he renounced his legitimate throne and another throne offered to him by a contemporary king, Bimbisara. Having renounced throne twice, would he have claimed any throne, which did not belong to him? Similar event is described in the Tamil Epic ‘’Manimekalai’, and it respectfully ended the issue. It was not for a throne but for a seat on which the Buddha used to sit and preach. Any one of the two Naga princes could not take it, at the same time unwilling to stop fighting for it. Then the Buddha came, sat on it and preached them.

The Buddha came, by flying, with five hundred Theras on his third visit to Lanka on the invitation of the Naga (Serpent) king at Kalyani. One may wonder how the Serpent king sent an invitation to the Buddha who was more than one thousand five hundred travel miles away! One high school geography textbook indicates the sea travel distance from Calcutta to Colombo as two thousand three hundred Kilometres. Five hundred Theras too flew along with the Buddha. It would have been a spectacular sight to see the five hundred and one to fly! In a later chapter, the king Devanampiya Tissa would inquire from Mahinda Thero whether many Theros were there! See 12-55 of the Dipavamsa and 14-13 of the Mahavamsa in this regard. People, along with the king, had very short memories to forget the flying visits of the five hundred Theros who accompanied the Buddha on his alleged third visit to Lanka. There are minor differences in details about time of Buddha’s visits in the Rajavaliya.

But as per the Reference 'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends', The Buddha preached in a very limited area, walking back and forth and crisscrossing, in and around the central Gangetic plain. He never came down far south of the present day Grand Trunk Road from Calcutta to Delhi via Benares and Allahabad '.

The Buddha means the person who attained enlightenment. Siddhartha is the given name at birth or shortly after the birth. The Buddha is a very sincere and wonderful person who strived to find answers for tragedy, suffering, and sadness entangled with human life. A person, who knew the comforts of the princely life, renounced it never to return. He was a universal teacher, irrespective of the country or the language, and never intended to create a new religion. However, he seemed to have believed in the caste system, though not to the ugly level as in the Code of Manu. With these Buddha's real character, please think, whether He would have terrorist any one at any time?

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 04 தொடரும் / Will Follow

511014401_10229693355780940_731997098414

510817867_10229693355660937_865200700124

510746560_10229693355820941_699716966622


"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02

1 month 1 week ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 02

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 02 / 'புத்தரின் வருகைக்கு முன்பே இலங்கையில் மனித இனம்'

புத்தர் நிர்வாணம் அடைந்து, அதாவது பேராசை, வெறுப்பு மற்றும் அறியாமை ஆகியவற்றை நீக்கி, ஞானம் அடைந்து ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, வான்வழியாகப் பறந்து, இலங்கைக்கு தன் முதல் வருகையை நிகழ்த்தினார் என்று இந்த நூல்கள் கூறுகின்றன. ஆனால், புத்தர் எங்களைப்போல் ஒரு மனிதர், கட்டாயம் தன்பாட்டில் இலங்கைக்கு பறந்திருக்க முடியாது. பௌத்தர்கள் அதை நம்புவது அவர்களைப் பொறுத்தது. ஏனெனில் இந்தியாவில் இருந்து, புத்தருக்கு முன்பே, அனுமன் ஒரு மலையைச் சுமந்து இலங்கைக்கு பறந்தார் என்று இன்னும் பல இந்துக்கள் நம்புவது போல, அவர்களும் நம்பலாம். அவ்வளவுதான்! மற்றும்படி அது உண்மை நிகழ்வாக இருக்க முடியாது. ஆனால், இந்துக்கள் அதன் அடிப்படையில், இலங்கை தமக்கே உரிமை என்று என்றும் கோரவில்லை.

'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' பக்கம் 8ல் தெளிவாகக் கூறுகிறது, 'எந்த நேரத்திலும் அவர் (புத்தர்) காசி [வராணசி / பெனாரஸ்] யில் இருந்து 250 மைல்களுக்கு மேல் செல்லவில்லை என்று குறிப்பிடுகிறது. புத்தர் பறந்து இலங்கைக்கு வந்த பயணங்கள் உண்மையற்றதுடன் வரலாற்று சிறப்புகள் கொண்டதும் அல்ல. அவரது முதல் வருகையின் நோக்கம், அந்த நேரத்தில் அங்கு வாழ்ந்து கொண்டு இருந்த உயிரினங்களை அகற்றுவதன் மூலம், இலங்கையை மனிதர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதாகும். சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன், புத்தரின் காலத்தில், இலங்கையில் கோரமா [கோரமான விலங்குகள்] போன்ற இயக்கர்கள், அரக்கர்கள், போன்ற மனிதனுக்கு கீழான உயிரினங்கள் வாழ்ந்ததாகக் கூறுவது பரிதாபகரமான பொய் ஆகும். புத்தரின் வருகைக்கு முன்னர் இலங்கையில் மனித இனம் இருந்ததற்கான பல தொல்பொருள் சான்றுகள் இன்று கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன. அவைகளின் சில மாதிரிகள் கீழே தரவுள்ளேன். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன், புத்தர் காலத்தில், இயக்கர், அரக்கர், பூதம் [Yakkhas, Rakkhasas and Bhutas] போன்ற உயிரினங்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் கூறுவது, அறிவியல் ரீதியான பரிணாமக் கருத்துக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.

'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' என்ற நூலில், சுமார் 174 செமீ (ஐந்தடி எட்டரை அங்குலம்) உயரம் கொண்ட பலாங்கொட மனிதன் சுமார் 28,000 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் வாழ்ந்ததாக கூறுகிறது. அவரது எலும்புக்கூடு 1950 களில் கண்டு பிடிக்கப்பட்டது. 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001' என்ற நூலின் பக்கம் 77 இன் படி இது உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதனுக்கு உடையது என்கிறது. 'உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்' [‘First Farmers in Global Perspective’] என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில் திரு. ஆர். பிரேமதிலகாவின் ஆய்வு கட்டுரையில்: "குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி மற்றும் நெல் சாகுபடி உள்ளிட்ட ஆரம்பகால இரும்புக் கால பண்பாட்டின் ஆரம்ப சான்றுகள், நாட்டின் புராதன நகரமான அனுராதபுரத்தில், கி.பி. 900 இல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதே தாளில்; பார்லி மற்றும் ஓட்ஸின் [barley and oats] ஆரம்ப மேலாண்மை ஹார்டன் சமவெளியில் [இலங்கையின் மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள ஓட்டன் சமவெளி / Horton Plains] 15,500 B. C. இல் நடந்தது என்பது தெளிவாகிறது, இது விஜயனின் வருகைக்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பே என்பது குறிப்பிடத் தக்கது. மேலதிக குறிப்புகளுக்கு, 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake' என்ற ஆய்வின் கட்டுரையைக் பார்க்கவும். இது இந்தியாவின் லக்னோவில் நடந்த ‘உலகளாவிய பார்வையில் முதல் விவசாயிகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கில், 18 – 20 ஜனவரி 2006 இல் இந்த கட்டுரை சமர்ப்பிக்கப்பட்டது. இது சம்பந்தமாக. பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கா தனது ‘விஜயனுக்கு முந்தைய விவசாயம் [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] ’ என்ற கட்டுரையில், “இலங்கையில் 300,000 முதல் 40,000 ஆண்டுகளுக்கு முன்பு வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இருந்தன என்று கூறுகிறது. மேலும் ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தீபகற்பத்தின் [தீபகற்பம் என்பது முழுதும் நீரால் சூழப்படாமல் உள்ள நிலம். தீவு போல் தோன்றும் தீவு அல்லாதது தீபகற்பம் ஆகும்] தென்கோடி முனைக்கு நடந்து பரவியிருக்கலாம். பின்னர் ஒரு காலம் அது பிரிந்து இலங்கையாக மாறியிருக்கலாம் என்கிறது. அதுமட்டும் அல்ல, இறுதிப் பிரிவிற்குப் பிறகும், கடல் மட்டம் குறையும் போதெல்லாம் தரைப்பாலங்கள் உருவாக்கப்பட்டு, கடந்த 50,000 ஆண்டுகளில் படகுகள் மூலம் பாக்கு நீரிணை கடக்கப்பட்டு இருக்கும். எனவே தென்னிந்தியா மற்றும் இலங்கையில் வாழ்ந்த வரலாற்றுக்கு முந்தைய மக்களிடையே தடையற்ற மரபணு ஓட்டமும் மற்றும் பாலியல் உறவுகள் அல்லது இனப்பெருக்கம் கூட நடந்து இருக்கும். தென்னிந்தியாவின் பாம்பன் கடற்கரையில் (இது தம்பபன்னி கடற்கரைக்கு நேர் எதிரே உள்ளது. தம்பபன்னி எனும் பெயர் தாம்ரபரணி அல்லது தாம்ரவர்ணி எனும் சமற்கிருதப் பெயரிலிருந்து ஏற்பட்டதாகும். இது விஜயனும் அவனது தோழர்களும் வந்திறங்கிய இடத்தில் அவர்கள் தொட்ட மண் செப்பு நிறத்தில் அல்லது வெண்கல நிறத்தில், அஃதாவது தாமிர நிறத்தில் காணப்பட்டதனாலாகும் என அறியப் படுகிறது) இருந்த இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் மற்றும் இலங்கையின் இடைக்கற்கால மக்களின் கருவிகளுக்கும் இடையே குறிப்பிடத்தக்க ஒற்றுமை உள்ளது.

இந்த இரண்டு கடற்கரைகளிலும், முத்து குளித்தலும் மற்றும் கடல் அடியில் உள்ள உற்பத்திப் பொருட்களும் எடுக்கப்பட்டன. இலங்கையில் சேகரிக்கப்பட்ட முத்துக்கள் மற்றும் சங்குகள் பெரியதாக இருந்தன, இது தென்னிந்திய மக்களை இலங்கைக்கு அழைத்து வந்திருக்கலாம்? பேராசிரியர் டி. டபிள்யூ. விக்ரமநாயக்கவின் கட்டுரை, விஜயனின் வருகைக்கு முன்னர் மக்கள் இருந்ததை உறுதிப்படுத்தக் கூடிய, மேல் அதிகமான தரவுகளையும் அது வழங்குகிறது. இது தொடர்பாக 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake'' என்ற குறிப்பைப் பார்க்கவும். R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, தனது குறிப்பில், ‘சிங்கள மக்கள் தென்னிந்தியாவின் தமிழர்கள் மற்றும் கேரளர்களுடனும், வங்காளத்தின் உயர் சாதிக் குழுக்களுடனும், குஜராத் மற்றும் பஞ்சாப் மக்கள் தொகையை விட நெருக்கமாக உள்ளனர்’ என்கிறது. The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia , என்ற குறிப்பைப் பார்க்கவும். (இதில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து ஆய்வுகளும் 1980 களுக்கு முந்தியவை என்பதால், இந்த கட்டுரை 1970 களின் நடுப்பகுதி அல்லது பிற்பகுதியில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்).

வரலாற்று நினைவுகளுக்கு முந்திய காலப் பகுதியிலிருந்தே, 65610 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு தீவான, இலங்கை அதன் இயற்கை அழகு மற்றும் செழிப்பான பன்முக கலாசாரம் என்பனவற்றின் காரணமாக உலகம் முழுவதும் இருந்து பயணிகளை கவர்ந்த ஒரு நாடாகும். மேலும் ஐரோப்பாவுக்கும் தூரகிழக்கு நாடுகளுக்கும் இடையிலான பிரதான வர்த்தக பாதையின் அரைவாசியில் இலங்கை அமைந்துள்ளது இதற்கு முக்கிய காரணமாகும். இதனால் தான் பல பயணிகளும், புவியியலாளர்களும், கிருஸ்துக்கு முன்பே இருந்து இலங்கைக்கு வருகை தந்தது காண முடிகிறது. உதாரணமாக, மெகஸ்தெனஸ் (மெகெஸ்தெனீஸ்) (Megasthenes) (கிமு 350 - கிமு 290) ஒரு கிரேக்கப் பயணியும், புவியியலாளரும் ஆவார். இவர் ஒரு தீவை தப்ரபேன் அல்லது தப்ரொபானா (Taprobana) என்று குறிப்பிட்டுள்ளார். அங்கு வாழும் மக்களை பட்சிவ்கோணி [Patcvgoni], அதாவது பாளியின் வழித்தோன்றல்கள் [“descendants of the Pali”] என குறிப்பிடுகிறார். தற்காலத்தில் இது இலங்கையையே குறிப்பதாகப் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது எனினும், அவ்வப்போது இது குறித்த ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உதாரணமாக சுமாத்திராவை குறிப்பதாக சிலர் வாதிடுகின்றனர். மாதோட்டமே இலங்கையின் முதன்முதல் துறைமுகமாகும். மாதோட்டத்தின் தலைநகராக மாந்தை இருந்தது. கி. பி. 2ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க பூகோள விஞ்ஞானியான பிடோலேமி அல்லது தொலமியின் வரைபடம் [Ptolemy's map], கிருஸ்துக்கு முன், இலங்கையின் சில நகரங்களின் பெயர்களை காட்டுகிறது. உதாரணமாக, அதில் குறிக்கப்பட்ட சில இடங்களின் பெயர்கள் இன்றைய நயினாதீவு, மாந்தை அல்லது மாந்தோட்டை, திருகோணமலை, அனுராதபுரம் [ Nainativu, Manthai, Trincomalee and Anuradhapura,] என அடையாளம் காணக்கூடியதாகவும் உள்ளது. உதாரணமாக அவர் மாதோட்டத்தை மாதொட்டு [Modutu] என்றும் அதை அண்டிய பிரதே சத்தை (மாந்தையை), மாந்தொட்டு எனவும் குறித்துள்ளார். அது மட்டுமின்றி மாதொட்டு, [முன்] பெரிய வர்த்தகத் தளமென குறித்து உள்ளார்.

உரோம மாலுமிகளால் கையேடு போன்று பயன்படுத்தப்பட்ட செங்கடல் அல்லது எரித்திரேயன் கடல் செலவு / கடல் வழிப் பயணம் (The Periplus of the Erythraean Sea or Periplus of the Red Sea) என்ற கையேட்டில் தமிழக வட இலங்கை துறைமுகங்கள் பற்றிய விரிவான குறிப்புகள் உள்ளன. இந்த செங்கடல் கையேட்டு நூல் முதலாம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்கலாம் என நம்பப் படுகிறது. இது முத்துக்குளித்தல், மீன் பிடித்தல் ... போன்ற வேலை செய்யும் பரவர் ["Parawa"] என்னும் சமூக குழு, மன்னார் வளைகுடாவின் இந்தியாவின் ஒரு பகுதியான பாண்டியர்களின் இரண்டாவது பெரிய நகரமான கொற்கையில், முத்துக்குளித்தலை விவரிப்பதுடன், பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிடுகிறார் [refers to "Kolkhoi," which was "Korkai"], அதன் இலங்கை பகுதியான மன்னாரை அவர் எபிடோரஸ் [Epidorus] என்று குறிப்பிடுகிறார். அது மட்டும் அல்ல அங்கு பெறப்பட்ட முத்துக்கள் மட்டுமே துளையிடப்பட்டு சந்தைக்கு தயாரிக்கப்பட்டது என்றும் கூறுகிறார் [only the pearls obtained in the fishery at the island of Epidorus (Mannar) are perforated and prepared for the market]. எனவே மன்னார் வளைகுடாவின் இரண்டுபக்கமும் பரதவர், பரவர், அல்லது பரதர் கிருஸ்துக்கு முன்னரே இருந்தது உறுதி செய்யப்படுகிறது. அத்துடன் அந்த இரு பகுதி பரவர்களுக்கும் இடையில் கட்டாயம் தொடர்பு இருந்து இருக்கும் என்பதில் ஐயம் இருக்காது.

Part: 02 / 'Human occupation in Sri Lanka before the alleged visits of Buddha'

The Buddha’s alleged first visit, by flying through air, to Lanka took place, as per the chronicles, nine months after his attaining Nirvana; the enlightenment. The Buddha was a human, and he could not have flown to Lanka. It is perfectly all right for the Buddhists to believe in it, as Hindus from India also believe that Hanuman flew to Lanka carrying a mountain in their Epic Ramayana. But the Hindus have never claim sole ownership over Lanka based on it as it happened as per epic, before Buddha’s alleged first visit.

'The Harvard Oriental Series, Volume 28, Buddhist Legends' clearly says on page 8 that ‘At no time did he (Buddha) go farther than 250 miles from Benares. Buddha’s flying visits to Lanka are not true and have no historical merits. The alleged purpose of his first visit was to make Lanka fit for men by removing the beings existed at that time. It is a pathetic lie to say that there were sub-human beings in Lanka at the time of the Buddha, about 2500 years ago. There are many archaeological evidences for the human occupation of Lanka prior to the alleged visits of Buddha, and a few samples are given below. It is against the evolutionary concept to say that sub humans like Yakkhas, Rakkhasas and Bhutas inhabited Lanka about two thousand five hundred years ago, during the time of the Buddha.

'The Life And Times of Balangoda Man by Himal Kotelawala dated 15 June 2017' says that The Balangoda man of about 174 cm (five feet and eight and a half inch) in height lived in Lanka about 28,000 years ago. His skeletal remains were found in the 1950s. This belongs to an anatomically modern human as per the page 77 of Reference 'The Journey of Man – A Genetic Odyssey by Spencer Wells, 2001'. Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’: “The earliest evidence of the Early Iron Age culture including horse breeding, iron production, and paddy cultivation found at Anuradhapura, ancient city of the country has been dated around 900 B. C.’. In the same paper, the author says; ‘It is clear that incipient management of barley and oats occur around 15,500 B. C. in the Horton Plains’, well before the arrival of Vijaya. See the Reference 'The emergence of early agriculture in the Horton Plains, central Sri Lanka: linked to late Pleistocene and early Holocene climatic changes by R. Premathilake. This paper was presented in the International seminar on the ‘First Farmers in Global Perspective’, Lucknow, India. 18 – 20 January 2006' in this regard. Prof T. W. Wikramanayake says in his article ‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’ Quote “Pre-historic settlements existed in Sri Lanka 300,000 to 40,000 years ago. Homo sapiens would have walked to the southern-most tip of the peninsula that later separated to become Sri Lanka. Even after the final separation, land bridges created whenever the sea level dropped, and crossing the Palk Straight by sea craft during the past 50,000 years would have led to an unimpeded gene flow and complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka. There is a remarkable resemblance between tools of the Mesolithic people of the Pamban coast of South India (which is directly opposite the Tambapanni Coast) and Sri Lanka. In both coasts, there were fishing for pearls and other marine products. The pearls and chanks collected in Sri Lanka were larger, and this would have brought the people of South India to Sri Lanka”. Unquote • Prof T. W. Wikramanayake’s article gives other data too to confirm the existence of people prior to the alleged arrival of Vijaya. See the Reference 'Pre-Vijayan Agriculture in Sri Lanka by Prof. T. W. Wikramanayake' in this regard. R. L. Kirk of the Department of the Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia, says in the abstract ‘Sinhalese population are closer to the Tamils and Keralites of South India and the upper caste groups of Bengal than they are to the populations in Gujarat and the Panjab’. See the Reference 'The Legend of Prince Vijaya – A Study of Sinhalese Origins by R. L. Kirk, Department of Human Biology, The John Curtin School of Medical Research, Canberra ACT 2601, Australia (This paper must have been published in the mid or late 1970s as all the studies referenced in it are pre 1980s)' in this regard.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 03 தொடரும் / Will Follow

508718590_10229614250163349_475357283161

509349028_10229614249603335_410920183408

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

1 month 2 weeks ago

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

[This detailed Tamil article is based on Chapter 2: "Ceylon Chronicles" from the historical book "History of Sri Lanka", written by my late friend Mr. Kandiah Easwaran, a civil engineer. We were classmates at Jaffna Central College and later at the Faculty of Engineering, University of Peradeniya. He had completed seven chapters of the book, aiming for a comprehensive work on the history of Sri Lanka. Unfortunately, he passed away suddenly on 15th June 2024 in Scarborough, Canada, before he could complete and publish the book. However, the English summary included under this Tamil article was written by the late Mr. Kandiah Easwaran himself. He had worked in Sri Lanka as well as in a few foreign countries before retiring several years ago. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, "History of Sri Lanka" என்ற வரலாற்றுப் புத்தகத்தின் இரண்டாவது அத்தியாயமான "Ceylon Chronicles" ஐ அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. இந்த புத்தகத்தை என் பள்ளித் தோழரும், பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீட நண்பருமான, மறைந்த கட்டடப் பொறியியலாளரான திரு கந்தையா ஈஸ்வரன் எழுதியிருந்தார். ஒரு முழுமையான வரலாற்றுப் புத்தகத்தை உருவாக்கும் நோக்கத்தில், அவர் இதுவரை ஏழு அத்தியாயங்களை முடித்திருந்தார். ஆனால் இந்தப் புத்தகத்தை முடித்து, பொது வெளியீட்டுக்காக அச்சிடும் முன்பே, 15 ஜூன் 2024 அன்று கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டமான ஸ்கார்பரோவில் திடீரென உயிரிழந்தார். இருப்பினும், இந்த தமிழ் கட்டுரையின் கீழ் உள்ள ஆங்கில சுருக்கம் அவரே எழுதியதாகும். திரு கந்தையா ஈஸ்வரன் இலங்கையிலும், சில வெளிநாடுகளிலும் பணியாற்றி, சில ஆண்டுகளுக்கு முன் ஓய்வுபெற்றிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.]

பகுதி: 01 / 'அறிமுகம்'

தீபவம்சம், மகாவம்சம், சூளவம்சம், மற்றும் இராசாவலிய (மன்னர் வரிசை எனப் பொருள்படும்) போன்ற இலங்கையின் பண்டைய காலவரிசைப்படி [Sri Lankan chronicles such as The Dīpavamsa, Mahāvaṃsa, Cūḷavaṃsa, and Rājāvaliya] நிகழ்வுகளை பதிவு செய்த புராண நூல்களின் அடிப்படையில், சிங்கள பௌத்தர்கள் தங்களை இலங்கைத் தீவின் உண்மையான உரிமையாளர்கள் என்று கூறிக் கொள்கிறார்கள். எனவே தீபவம்சம், மகாவம்சம் மற்றும் இராசாவலிய போன்ற அந்த நூல்களின் வழியாகச், உண்மையை அறிவியல் ரீதியாகவும் சான்றுகள் ரீதியாகவும் அலசி, நியாயமான காரணங்களைக் கண்டறிவதே இந்த நீண்ட கட்டுரையின் நோக்கமாகும்.

மேலும் பல புத்தகங்கள் இன்று இருந்தாலும், நேரத்தையும் இடத்தையும் மிச்சப்படுத்த இந்த மூன்று பண்டைய முதன்மை புத்தகங்கள் மட்டுமே இங்கு கருத்தில் எடுக்கப் பட்டுள்ளது. மற்றவை எல்லாம் அவையின் தொடர்ச்சியே அல்லது பிரதிகளே, என்றாலும் சில சில கூடுதல் சேர்த்தல் அல்லது விடுபட்டலுடன் எழுதப்பட்டவை ஆகும். சிங்கள பௌத்த அரசியல்வாதிகள், பிக்குகள் (புத்த குருமார்கள்) மற்றும் கல்வியாளர்கள், 1920 களில் இருந்து, இலங்கையின் உண்மையான வரலாற்றின் நூலே மகாவம்சம் என மேற்கோள் காட்டி, பண்டைய இலங்கைத் தமிழர்களின் மற்றும் தமிழ் மொழியின் வரலாற்றை மறைக்க முற்படுகிறார்கள்.

தீபவம்சமும் மகாவம்சமும் விஜயனின் புராண வருகையிலிருந்து மகாசேனன் (பொ.பி. 277 - 304) மன்னனின் ஆட்சியின் இறுதி வரை ஒரே எண்ணிக்கையிலான மன்னர்களை உள்ளடக்கி உள்ளது. என்றாலும் இங்கு சம்பந்தப்பட்ட காலம், மகாவம்சத்தின்படி சுமார் எண்ணூற்று முப்பத்தைந்து ஆண்டுகள் மற்றும் தீபவம்சத்தின்படி எண்ணூற்று முப்பத்தேழு ஆண்டுகள் ஆகும். எனவே அந்த வேறுபாடு ஒரு பிரச்சனையும் இல்லை. மேலும் இராசாவலிய நீண்ட காலத்தை உள்ளடக்கியிருந்தாலும், மன்னன் மகாசேனனனின் ஆட்சியின் முடிவு மட்டுமே இங்கு நாம் கவனம் செலுத்த உள்ளோம்.

சூளவம்சம் அல்லது சூலவம்சம் (Cūḷavaṃsa) என்பது மகாவம்சத்தின் தொடர்ச்சி ஆகும். இதுவும் பாளி மொழியில் தான், சிங்கள மொழியைத் தவிர்த்து எழுதப்பட்டது ஆகும். இந்நூல், கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி குறிப்பிடுகிறது. எனவே இங்கு ஆழமாக அது அலசப்பட மாட்டாது. என்றாலும் அது தேவைப்படும் போது அல்லது பொருத்தமானதாக இருக்கும் போது, அதுவும் கவனிக்கப்படும். எனவே தீபவம்சம் மற்றும் மகாவம்சம் மற்றும் அதே காலகட்ட இராசாவலியில் மட்டுமே முதன்மையாக இங்கு கவனம் செலுத்தப்படும்.

தீபவம்சம் கிருஸ்துக்கு பின் நான்காம் நூற்றாண்டின் ஆரம்பம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டின் முதல் மூன்றாவது பகுதியில், பெயர் அறியப்படாத எழுத்தாளரால் தொகுக்கப்பட்ட நூலென நம்பப்படுகிறது. அதேவேளை, தீபவம்சம் தொகுக்கப்பட்டு சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான் மகாவம்சம், மகாநாமா தேரர் என்ற ஆசிரியரால் தொகுக்கப்பட்டுள்ளது. மேலும் தீபவம்சம் கொச்சை பாளி மொழியிலும் மகாவம்சம் தேர்ந்தெடுக்கப்பட்ட பாளி வசனங்களிலும் உள்ளது. உண்மையில், மகாவம்சமானது தீபவம்சத்தை ஒரு சிறந்த இலக்கிய பாணியுடன், விரிவுபடுத்தப்பட்டு, செறிவூட்டப்பட்டு, மறுசீரமைத்த, அதே நேரம் பல கதைகளை அல்லது வேறுபாடுகளை புகுத்திய ஒரு நூல் என்றும் கூறலாம்.

தீபவம்சத்தில் முக்கியமானவர்கள் தேவநம்பிய திஸ்ஸ அல்லது தேவநம்பிய தீசன் மற்றும் மகிந்த தேரர் ஆகியோர் காணப்படுவதுடன், அங்கே ஒப்பற்ற மன்னனாக எல்லாளன் காணப்படுகிறார். இருப்பினும், மகாவம்சத்தின் முக்கிய ஆளுமை உள்ளவராக துட்டைகைமுனு அல்லது துட்டகாமினி இருப்பதுடன், இங்கும் எல்லாளனை சிறந்த முறையில் சித்தரிக்கப் படுகிறது. என்றாலும் எல்லாளனை, துன்மார்க்கமாக அல்லது தீய நெறியில் ஆட்சி செய்ததாக இராசாவலிய கூறுகிறது. இராசாவலிய சமீபத்திய 17 ஆம் நூற்றாண்டு வரலாற்று தொகுப்பாகும். மேலும் இது விஜயன் எனும் இலங்கை மன்னனின் வரலாற்றில் இருந்து இரண்டாம் விமலதர்ம சூரியன் (கி பி 1701) எனும் கண்டி மன்னனின் வரலாறு வரை இந்நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை பற்றி தொடர்ச்சியாக எழுதப்பட்ட இலக்கிய மூலாதாரமான இது, சிங்கள மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பகுப்பாய்வின் நோக்கம், ஒரே காலகட்டத்தைச் சேர்ந்த மூன்று நாளாகமங்களின் தொனி மற்றும் உள்ளடக்கங்கள் [tone and contents], தீபவம்சத்தில் உள்ள தூய பௌத்த ஆர்வம் அல்லது விருப்பத்திலிருந்து, ராஜவலியத்தில் காட்டப்பட்டுள்ள தமிழர்களின் இறுதி வெறுப்புக்கு எவ்வாறு மாறின என்பதைக் காண்பிப்பதாகும். மகாவம்சம் சுமார் ஆயிரத்து நானூறு ஆண்டு காலப்பகுதியில், அதாவது சுமார் 300 கி.பி. முதல் 1700 கி.பி. வரை, இரண்டிற்கும் இடையில், தொனியின் மாற்றத்தின் அறிகுறியை வெளிப்படையாக காட்டுகிறது. எனவே இங்கு எமது முக்கிய நோக்கம், இவ்வற்றை, அங்கு காணப்படும் உண்மையை அலசுவதேயாகும் அல்லது வெளிப்படுத்துவது ஆகும்.

தீபவம்சமும் மகாவம்சமும் அத்தியாயங்களாகவும் அத்தியாயங்கள் செய்யுள் வசனங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, தீபவம்சம் 1-1 தீபவம்சத்தின் அத்தியாயம் 1 இன் செய்யுள் வசனம் 1 ஐக் குறிக்கிறது. அது ; "புத்தர் இலங்கைக்கு வருகை தந்ததையும், புத்தரின் நினைவுச்சின்னம் மற்றும் அரச மர [போதி மர] கிளை இலங்கைக்கு கொண்டுவந்ததையும், மறுபரிசீலனை செய்த ஆசிரியர்களின் கோட்பாடுகளையும், தீவில் நம்பிக்கையைப் பரப்புதலையும், மனிதர்களின் தலைவரின் வருகையையும் அவ்வாற்றின் வரலாற்றையும் நான் முன்வைப்பேன்." என்கிறது. மகாவம்சத்திலும் இதே போன்ற அமைப்பே உள்ளது. இந்த முதன்மை மூன்று நாளேடுகளிலும் அவற்றின் உண்மைத்தன்மை, வரலாற்று மதிப்பு மற்றும் அவற்றுக்கிடையேயான ஒவ்வுமை அல்லாது இசைவு ஆகியவற்றினை ஒப்பிடப்பட்டு, வேறுபாடுகளை சுட்டிக்காட்டி, கீழே என் கருத்துக்களை நேர்மையாக பதியவுள்ளேன்.

Part: 01 / 'Introduction'

Sinhala Buddhists claim themselves as the rightful owners of the island of Lanka based on their ancient chronicles like the Dipavamsa, the Mahavamsa, the Culavamsa, and the Rajavaliya etc. It is intended to go through the Dipavamsa, the Mahavamsa, and the Rajavaliya to see any valid reasons with consistent narratives for the rightful ownership of Lanka to the Sinhala Buddhists alone. There are other books too, but only these three books are considered here to save time and space. The Sinhala Buddhist politicians, monks (bikkhus) and academicians played havoc in the life of Tamils since 1920s citing the Mahavamsa as the beginning and the continuation of the true history of Ceylon. The Dipavamsa and the Mahavamsa cover the same number of kings, from the legendary arrival of Vijaya to the end of the reign of the king Mahasena. The period involved is about eight hundred and thirty five years as per the Mahavamsa and eight hundred and thirty seven years as per the Dipavamsa. Though the Rajavaliya covers longer period, the focus will be limited to the end of the rule of the king Mahasena. The Culavamsa is the continuation of the Mahavamsa and therefore will not be deeply analysed here but we may refer to it when it is necessary or relevant. The focus will be therefore on the Dipavamsa and the Mahavamsa, and the same period in the Rajavaliya.

The Dipavamsa is the earliest and believed to be compiled between the beginning of the fourth century A. D. , and the first third of the fifth century A. D., and by an unknown author. The Mahavamsa is compiled about one hundred to one hundred and fifty years after the compilation of the Dipavamsa, and Mahanama is the author. The Dipavamsa is in crude Pali language, but the Mahavamsa is in choice Pali verses. The Mahavamsa is conscious and intentional rearrangement of the Dipavamsa with a better literary style with much enlarged and enriched details, whether factual or not. The important personalities in the Dipavamsa are Devanampiya Tissa and Mahinda Thera. The incomparable monarch as per the Dipavamsa is Elara. However, the prominent personality in the Mahavamsa is Dutthagamani. The Mahavamsa also depicts Elara in excellent terms. The Rajavaliya, however, says Elara ruled wickedly. The Rajavaliya is a very recent compilation, and covers the period from the legendary arrival of Vijaya to the end of the reign of Wimala Dhamma Suriya (1701 A.D.). The aim of the analysis is to show the transition of the tone and contents of the three chronicles of the same period from the pure Buddhist interest or desire in the Dipavamsa to the ultimate hatred of the Tamils shown in the Rajavaliya. The Mahavamsa is falling in between the two over the period of about one thousand and four hundred years, from, say, about 300 A. D. to 1700 A. D.

The Dipavamsa and the Mahavamsa are divided into chapters and the chapters are divided into verses. Two numbers separated by hyphen are used to refer to a particular verse in a particular chapter. Thus, 2-7 makes reference to the verse seven of the chapter two. When a reference is made thus 4-36 to 39, it refers to the verses 36 to 39 of the chapter 4. Dipavamsa 1-1 refers the verse 1 of the chapter 1 of the Dipavamsa; ”I will set forth the history of Buddha’s coming to the Island, of the arrival of the relic and the Bo, of the doctrine of the teachers who made the recensions, of the propagation of the faith in the Island, of the arrival of the chief of men”. Similar reference is adopted for the Mahavamsa too. The Rajavaliya is not in the metric form, and the previously mentioned reference is not applicable.

Summaries of the Dipavamsa, the Mahavamsa and the Rajavaliya are given separately as Appendixes to this chapter, which may be referred for specific and greater detail. All the three chronicles are compared, contrasted and commented below for their truthfulness, the historical value, and the consistency among them.

நன்றி

Thanks

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

[Kandiah Thillaivinayagalingam,

Athiady, Jaffna]

பகுதி / Part: 02 தொடரும் / Will follow

507978314_10229551776681551_422240180711

505345800_10229551774201489_678869513080

506645763_10229551775641525_414755778787

506638659_10229551774921507_580485736677


மாவீரர்களின் வீரவணக்க திருவுருவப்படங்கள்

2 months 1 week ago

கடற்புலி
லெப்.கேணல் பிரசாந்தன்

வின்சன் ஜெயச்சந்திரன்

தருமபுரம், கிளிநொச்சி

13420.jpg

https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTM0MjA=

லெப்.கேணல் செல்வி

கணபதிப்பிள்ளை கலாதேவி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

19366.jpg

https://veeravengaikal.com/index.php/maaveerarkal/maaveerarlist?view=maaveerarlist&layout=detail&detail=MTkzNjY=

Checked
Sat, 08/02/2025 - 02:38
எங்கள் மண் Latest Topics
Subscribe to எங்கள் மண் feed