வாழும் புலம்

விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?

12 hours 56 minutes ago
விமான நிலையம் அருகே டிரோன்கள் பறக்க தடை விதித்த அமெரிக்கா - காரணம் என்ன?

 

 
breaking

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. அம்மாகாணத்தின் டேடன் நகரில் அமைந்துள்ள இந்த விமானப்படைத்தளம் உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும்.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. அதேபோல், நியூயார்க், நியூஜெர்சி, யுடா உள்பட பல்வேறு மாகாணங்களில் விமான நிலையங்கள், விமானப்படைத்தளங்கள் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன.

 

இந்த டிரோன் நிகழ்வில் வெளிநாட்டு நபர்களின் சதி இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டின் நியூயார்க், நியூஜெர்சி போன்ற மாகாணங்களில் விமான நிலையங்கள், துறைமுகங்கள் அருகே டிரோன்கள் பறக்க ஒருமாதத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்களை பறக்கவிடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.thaarakam.com/news/3f180f22-dbcc-490f-9a35-8eeb6a4ace9c

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு 37வருட சிறை

2 days 10 hours ago

அவுஸ்திரேலியாவில் இலங்கையருக்கு 37வருட சிறை
adminDecember 19, 2024
aust.jpg

அவுஸ்திரேலியாவில்  அவரது  பிள்ளைகளின் முன்னால் , மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த  குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவருக்கு 37 வருட சிறைத்தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 47 வயதுடைய தினுஷ் குரேரா என்ற நபருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொலை தொடா்பான விபரங்கள் நேற்றையதினம் விக்டோரியா மாநில உயர் நீதிமன்றத்தில்  விவரிக்கப்பட்ட நிலையில்  30 வருடங்களுக்குப் பின்னரே  தினுஷ் குரேராவுக்கான மன்னிப்பு குறித்து பரிசீலிக்கப்பட வேண்டும் எனவும் நீதிபதி அமண்டா ஃபாக்ஸ் கூறியுள்ளார்.

சுமார் 2வருடங்களுக்கு முன்பு, குரேரா தனது மனைவியும்  மூன்று பிள்ளைகளின் தாயான  43 வயதுடைய  நெலோமி பெரேராவை கோடரியால் தாக்கி கொலை செய்திருந்தார். நெலோமி , கணவரை பிரிந்து செல்ல தயாராகி இருந்ததாகவும்  நீதிமன்றத்திற்கு  தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

 

https://globaltamilnews.net/2024/209434/

 

திருவள்ளுவருடைய சிலை 07.12.24 அன்று திறந்து வைக்கப்பட்ட விழா - டோட்முண்ட் , யேர்மனி

1 week 2 days ago

டோட்முண்ட் நகரத்திலே பெரும்பாலும் தமிழரது கடைத்தொகுதிகள் அமைந்துள்ள Marten சுரங்கரயில் தரிப்பிடத்திற்கு அருகாமையில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவருடைய சிலை திரைநீக்கம் செய்யப்பட்ட விழா தொடர்பான காணொளி.

நன்றி-யூரூப்

டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?

1 week 5 days ago

டியாகோ கார்சியா: ரகசிய ராணுவத் தீவில் சிக்கித் தவித்த இலங்கை தமிழ் பெண் - குழந்தைகளுடன் உயிர் பிழைத்தது எப்படி?
9 டிசம்பர் 2024
டியாகோ கார்சியா
டியாகோ கார்சியா தீவில் தற்காலிக முகாமில் இருக்கும் கூடாரங்கள்

"டியாகோ கார்சியா" - இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள சாகோஸ் தீவுக்கூட்டத்தின் தொலைதூரப் பவளத் தீவு. இது பிரிட்டனின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு தீவு. பிரிட்டன்- அமெரிக்க ராணுவத்தின் ரகசிய தளம் இந்த தீவில் அமைந்துள்ளது.

இங்கு ஒரு தற்காலிக முகாமில் சாந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஒரு காலை வேளையில் சாந்தியின் கணவர், தங்கள் பிள்ளைகள் பாதுகாப்பு வேலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததை கவனித்தார். அங்கு ரோந்துப் பணியில் அதிகாரி ஒருவர் ஈடுபட்டிருந்தார், கூடவே காவல் நாய் ஒன்றும் இருந்தது.

அந்த குழந்தைகள் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தது அந்த காட்சியை தான். "நாய்களுக்குக் கூட நம்மை விட அதிக சுதந்திரம் உள்ளது" என்று அவர்கள் தந்தையிடம் கூறினர். 

 

"அவர்கள் சொன்னது என்னை மனதளவில் கடுமையாக பாதித்தது. நான் மனம் உடைந்துபோனேன்" என்று அவர் விவரித்தார்.

இது அவர்களின் குடும்பம் இக்கட்டான சூழலில் இருந்ததை பிரதிபலிக்கிறது. அவர்கள் தற்செயலாக ஒரு மர்மமான ராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களுக்கு 5 வயதில் மகனும், ஒன்பது வயதுடைய ஒரு மகளும் இருந்தனர்.

 

இலங்கையில் இருந்து தப்பிக்க முயற்சி

 

டியாகோ கார்சியா
டியாகோ கார்சியா

சாந்தியின் (அவரது உண்மையான பெயர் அல்ல) குடும்பத்தினர் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த சிறிய முகாமில் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருந்த போதிலும், தங்களால் முடிந்த அளவுக்கு இயல்பாக இருக்க முயன்றனர். குடும்பமாக மகிழ்ந்திருப்பதிலும், படிப்பதிலும், செடிகளை வளர்ப்பதிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். 

ரகசிய ராணுவ தீவான டியாகோ கார்சியாவில் தனது குழந்தைகளுக்கு இயல்பான உணர்வை உருவாக்க சாந்தி தன்னால் முடிந்தவரை முயற்சி செய்தார்.

சாந்தி பிற இலங்கை தமிழர்களுடன் சேர்ந்து 12,000 கி. மீ. தொலைவில் இருக்கும் கனடாவுக்கு செல்ல ஆசைப்பட்டு, ஒரு சட்டவிரோத முகவரிடம் தன் மொத்த சேமிப்புப் பணத்தையும் (சுமார் ரூ. 4.23 லட்சம்), தனது தங்க நகைகள் அனைத்தையும் வழங்கியதாக கூறுகிறார்.

கடந்த 2009இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினர் உடனான தொடர்புகள் காரணமாக, துன்புறுத்தல் செய்யப்படுவோம் என்ற அச்சத்தில், அவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து தப்பிக்க நினைத்ததாகக் கூறினர். 

 

 

மோசமான சூழலிலும் குழந்தைகளுக்கு கல்வி

 

இலங்கை
சாந்தியும் அவரது குடும்பத்தினரும் 2021 இல் இலங்கையை விட்டு வெளியேறினர்

அவர்கள் சென்ற மீன்பிடி படகு நடுக்கடலில் சேதமடைந்தது. அதன் விளைவாக, ராயல் கடற்படை அவர்களைக் காப்பாற்ற நேர்ந்தது. கடற்படை அவர்களை அக்டோபர் 2021இல் டியாகோ கார்சியாவுக்கு அழைத்துச் சென்றனர். மேலும், அவர்கள் வேலியிடப்பட்ட புலம்பெயர்ந்தோர் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

அந்த முகாமிற்கு அழைத்து வரப்பட்ட போது, "கனடா வந்துவிட்டோமோ என்று மகன் கேட்டது" சாந்திக்கு நினைவுக்கு வந்தது.

டியாகோ கார்சியா தீவை அடைந்த முதல் ஆறு மாதங்கள், அவரது பிள்ளைகள் தீவில் முறையான கல்வியைப் பெறவில்லை. எனவே, பயிற்சி பெற்ற ஆசிரியயையான சாந்தி, அந்த முகாமில் உள்ள குழந்தைகளுக்கு ஆங்கிலப் பாடங்களைக் கற்று கொடுக்கத் தொடங்கினார். இதன்மூலம் அவரின் பிள்ளைகளும் பயனடைந்தனர்.

"ஆங்கில எழுத்துக்கள், பெயர்ச்சொற்கள், வினைச்சொற்கள் என அடிப்படையான பாடங்களுடன் நாங்கள் கற்பிக்கத் தொடங்கினோம்" என்று அவர் கூறுகிறார்.

அதன் பின்னர், சாந்தியின் கணவர் அந்த கூடாரத்தில் வீட்டுப்பாடம் செய்ய ஏதுவாக, மரத்தாலான பலகைகளை வைத்து மேசையை உருவாக்கினார். 

 

 

கூண்டுக்குள் அடைப்பட்ட வாழ்க்கை

 

டியாகோ கார்சியா
டியாகோ கார்சியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் முகாம் "கூண்டுக்குள்" வாழ்வது போன்றது என்று சாந்தி கூறினார்

கல்வி கற்க ஒரு சிறிய பாதை உருவானப் போதிலும், மாலை நேரங்களில் குழந்தைகள் சலிப்பை உணரத் தொடங்கினர். எனவே, இந்திய பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தில் பயிற்சி பெற்ற சாந்தி, நடனப் பாடங்களையும் கற்றுக் கொடுக்கத் தொடங்கினார். மேலும், அவரது தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப்பட்ட பாடல்களை வைத்து நடன அசைவுகளை சொல்லிக் கொடுத்தார்.

இந்த குடும்பம் முகாமுக்கு வந்து மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், அவர்கள் இறுதியாக இந்த வாரம் பிரிட்டனுக்கு அனுப்பப்பட்டனர். அவர்களின் நலன்களுக்காக அரசாங்கம் இதை "விதிவிலக்கானது" என விவரித்து, அவர்களை அனுப்பியது.

"அந்த முகாம் ஒரு திறந்தவெளி சிறை போன்றது. நாங்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் வேலியிடப்பட்ட ஒரு கூடாரத்தில் வாழ்ந்தோம்" என்கிறார் சாந்தி. 30 வயதுகளின் முற்பகுதியில் உள்ள பெண்ணான அவர், லண்டனில் இருந்த போது அளித்த பேட்டியில் இதனை கூறினார்.

"ஒவ்வொரு நாளும் எங்கள் வாழ்க்கை ஒரே மாதிரியாக இருந்தது. ஒரு கூண்டுக்குள் வாழ்வது போல் இருந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார்.

பாதுகாவலர்கள் கண்காணித்துக் கொண்டே இருப்பார்கள். ராணுவ ஜெட் விமானங்கள் அவ்வப்போது தலைக்கு மேல் கர்ஜிக்கும். இதனையடுத்து , சாந்தியும் மற்ற இலங்கை தமிழர்களும் தீவில் உள்ள பிரிட்டிஷ் படைகளை அணுகி, பாதுகாப்பான நாட்டிற்கு அனுப்புமாறு கடிதம் கொடுத்ததாக சாந்தி கூறுகிறார். இந்தப் பிராந்தியத்தில் புகலிடம் கோரி கடிதம் கொடுப்பது இதுவே முதல் முறை.

இது பிரிட்டனில் 6,000 மைல்களுக்கு அப்பால் ஒரு நீண்ட சட்டப் போராட்டத்துக்கு வழிவகுத்தது. சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் நடக்க, சாந்தியும் மற்றவர்களும் அந்த தீவில் தங்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்யத் தொடங்கினர்.

முகாமில் இருந்த தமிழர்கள் அவர்களுக்கான உணவை சமைக்க அனுமதிக்கப்படவில்லை. எனவே, அவர்கள் சில காய்கறிகளை விளைவிக்கத் தொடங்கினர். அங்கு, தென்னை மரங்கள் நிறைந்திருந்தன. அதிலிருந்து கிடைக்கும் தேங்காய் நாரை பயன்படுத்தி, சாந்தியும் மற்றவர்களும் மிளகாய், பூண்டு மற்றும் வெள்ளரி போன்ற காய்கறிகளை பயிரிட்டனர். 

முகாமில் விவசாயம் செய்தது எப்படி?

 

முகாமில் மிளகாய் விதைகளும் வெள்ளரி விதைகளும் எப்படி கிடைத்தது என்பதை விவரித்த சாந்தி, "அவர்கள் சில சமயங்களில் சிவப்பு மிளகாயைக் கொடுப்பார்கள். நாங்கள் அவற்றை வெயிலில் காயவைத்து விதைகளைச் சேகரித்து பயிரிட்டோம்." என்றார்.

மேலும், "எங்களுக்குக் கொடுக்கப்படும் சாலட்டில் சில சமயங்களில் வெள்ளரித் துண்டுகள் இருக்கும். அவற்றில் இருந்து விதைகளை சேகரித்து சூரிய ஒளியில் வைத்தோம். அவை காய்ந்த பிறகு விதைத்துப் பயிரிட்டோம்" என்றார்.

அவர்கள் ஒவ்வொரு நாளும், தேங்காய் மற்றும் மிளகாயை பிசைந்து 'சம்பல்' என்னும் உணவை தயாரித்தனர். அது இலங்கையின் பிரபலமான உணவு.

முகாமில் தங்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க உணவை சாப்பிட சாந்தி உள்ளிட்டோர் சிரமப்பட்டனர். மேலும், காய்கறிகளை பூண்டு மற்றும் மிளகாயுடன் வெந்நீரில் போட்டு குழம்பாக சமைக்க முயற்சித்தனர்.

முகாமில் இருந்தவர்களுக்கு ஆடை பற்றாக்குறையும் இருந்தது. குறிப்பாக, அங்குள்ள 16 குழந்தைகளுக்கும் போதுமான ஆடைகள் வழங்கப்படவில்லை. எனவே, சாந்தி மற்றும் பிற பெண்கள் படுக்கை விரிப்பை கிழித்து ஆடைகளை தைத்தனர்.

கிறிஸ்துமஸ் சமயத்தில், அவர்கள் காகித நாப்கின்களை (Tissue paper) பூக்களாக மாற்றி, ஒரு மரத்தை அலங்கரித்தனர்.

முகாமில் இருந்த காவலர்களுடன் தமிழர்களுக்கு அடிக்கடி பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஆனாலும், "நல்ல உள்ளம் கொண்ட அதிகாரி எங்களுக்கு பிரியாணி கொண்டு வந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில், ஒரு காவலர் ஆவலாக தன் பிறந்தநாளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த என் மகனின் பிறந்தநாளுக்கு கேக் கொண்டு வந்தார்" என்கிறார் சாந்தி.

 

 

எலிக்கடி தொல்லை

 

டியாகோ கார்சியா
புயல் காலங்களில் கூடாரங்கள் மழை நீரால் நிரம்பி வழியும்

"என்னதான் எங்களின் தேவைகளை நாங்களே பூர்த்தி செய்து கொண்டாலும், நாட்கள் செல்ல செல்ல, உதவியற்று நிற்பது போன்ற உணர்வுகள் அதிகரித்தன" என்கிறார் சாந்தி. 

"முகாமில் வாழ்க்கை கூண்டுக்குள் இருப்பது போல இருந்தது. யுக்ரேன் மற்றும் மத்திய கிழக்கில் வெடித்த பெரும் போர்கள் பற்றிய செய்திகள் முகாம் காவலர்கள் வாயிலாக எங்களுக்கு தெரிய வந்தது."

சாகோஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான இந்த தீவுக்கான அணுகல் பெரிதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

1970களின் முற்பகுதியில் இருந்து பிரிட்டன் அங்கு வசிக்கும் அனைத்து மக்களையும் வெளியேற்றியது முதல், இது அதிகாரப்பூர்வமாக குடியிருப்பு மக்கள்தொகையைக் கொண்டிருக்கவில்லை. இதன்மூலம், அங்கு ராணுவத் தளத்தை உருவாக்க முடியும் என்பதே இதன் நோக்கம்.

"முதல் நாள் முதல் நாங்கள் அங்கிருந்து புறப்பட்ட நாள் வரை, ஒவ்வொரு நாளும் நாங்கள் எலிகளுடன் வாழ்ந்தோம்," என்கிறார் சாந்தி.

"சில நேரங்களில் எலிகள் எங்களின் குழந்தைகளின் கால், கை விரல்களை கடிக்கும். அவை, எங்களின் உணவை உட்கொண்டன. இரவில் சில நேரங்களில் அவை எங்கள் போர்வைகள் மற்றும் தலையின் மீது ஊர்ந்து செல்லும்." என்று விவரித்தார்.

"ராட்சத தேங்காய் நண்டுகள் மற்றும் வெப்பமண்டல எறும்புகள் கூட முகாமுக்குள் ஊர்ந்து செல்லும். புயல் போன்ற இயற்கை சீற்றங்களின் போது, தார்பாயால் போடப்பட்ட கூடாரங்களின் துளைகள் வழியாக மழை நீர் உள்ளே வரும். மேலும், இந்த கூடாரங்கள் இதற்கு முன்னர் தொற்றுநோய் சூழலின்போது கோவிட் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது." என்றார்.

கடந்த ஆண்டு இறுதியில் ஐக்கிய நாடுகளின் புலனாய்வாளர்கள் முகாமுக்குச் சென்றபோது, குழந்தைகள் அவர்களிடம் "சுற்றுலா செல்வது, சைக்கிள் ஓட்டுவது, ஐஸ்கிரீம் சாப்பிடுவது" போன்ற கனவுகள் இருப்பதாகக் கூறினார்கள்.

இந்த ஆண்டின் முற்பகுதியில், ஒரு மருத்துவ அதிகாரி இங்கு பெருமளவிலான தற்கொலை முயற்சி சம்பவங்கள் நடந்ததை குறிப்பிட்டு, இந்த முகாம் "முழுமையாக நெருக்கடியில்" இருப்பதாக விவரித்தார்.

"என் மகள் நடந்த அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள், அவள் என்னிடம் 'அம்மா அவர்கள் தங்களைத் தாங்களே வெட்டிக் கொண்டார்கள்' என்றாள்.

நானும் அப்படி செய்து கொள்ள வேண்டுமா?' என்று கேட்டாள். 'இல்லை, இல்லை. அப்படி செய்யக் கூடாது என்று நான் புரிய வைத்தேன். அவளின் கவனத்தை மாற்ற பேப்பர் எடுத்து ஓவியம் வரைய சொன்னேன்'' என்று அந்த சம்பவத்தைக் கண்ணீருடன் நினைவு கூர்ந்தார் சாந்தி.

இரண்டு முறை தங்கள் மகள் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டதைப் பற்றி சாந்தியும் அவரின் கணவரும் நினைவு கூர்ந்து கண்கலங்கினர்.

"என் மகள் இரண்டு முறை தன்னை தானே காயப்படுத்திக் கொண்டாள். அது மிகவும் மோசமான தருணம். ஏன் இப்படி செய்தாய் என்று என் மகளிடம் கேட்டதற்கு, தான் இப்படி செய்தால், அவளின் சகோதரன் பாதுகாப்பான மூன்றாம் நாட்டிற்குச் செல்வார் என்ற நம்பிக்கையில் இதைச் செய்ததாகச் சொன்னாள்" என்று சாந்தி கூறுகிறார். 

`உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்’

 

முகாமில் இருக்கும் பிற புலம்பெயர்ந்தோரால் தங்களுக்கு பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் நடப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. குழந்தைகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.

"மூன்று வருடங்களாக நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டோம். உயிர் பிழைத்ததே பெரிய விஷயம்" என்கிறார் சாந்தி.

தீவில் தமிழர்கள் வாழ்ந்த காலம் முழுவதும், பிரித்தானிய அதிகாரிகள் அது அவர்களுக்கு ஏற்ற இடம் அல்ல என்பதை ஒப்புக்கொண்டதுடன், நீண்டகாலத் தீர்வுகளைத் தேடுவதாகவும் கூறினர். அங்கிருந்த மக்களின் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அரசாங்கம் கூறியது.

"அவர்கள் பிரிட்டனுக்கு அழைத்து வரப்படுவார்கள் என்றும், அங்கு ஆறு மாதங்கள் தங்குவதற்கு அவர்களுக்கு உரிமை வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்தபோது எங்களுக்கு நிம்மதியாக இருந்தது. எங்களின் மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது" என்கிறார் சாந்தி. மகிழ்ச்சியில் அன்று இரவு முகாமில் யாரும் தூங்கவில்லை என்றும் கூறினார்.

"பிரிட்டனுக்கு வந்தவுடன், குளிர்ச்சியான சூழல் எங்களை உற்சாகப்படுத்தியது. இத்தனை நாள் கோமாவில் இருந்துவிட்டு, எழுந்தது போல் உணர்ந்தேன். மொபைல் ஆப்ஸ்-ஐ பதிவிறக்குவது, வாட்ஸ்அப் செய்திகளை அனுப்புவது, கடைகளில் பணம் செலுத்துவது எப்படி என்பதை முழுமையாக மறந்துவிட்டேன்" என்கிறார்.

சாந்தியின் குழந்தைகள் பள்ளியைத் தொடங்குவது, நண்பர்களை உருவாக்குவது மற்றும் இரட்டை அடுக்கு பேருந்தில் செல்வது பற்றி பேசி கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.

ஆனால், குடும்பத்தின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது.

அவர்கள் எஞ்சியிருக்கும் நம்பிக்கையில் இப்போது பிரிட்டனில் புகலிடம் கோரியுள்ளனர். கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்.

வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக, சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைக்க பிரிட்டன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது.

இன்னும் கையொப்பமிடப்பட வேண்டிய இந்த ஒப்பந்தத்தின் கீழ், டியாகோ கார்சியா பிரிட்டன் - அமெரிக்க ராணுவத் தளமாகத் தொடர்ந்து செயல்படும், ஆனால் எதிர்காலத்தில் குடியேறுபவர்களின் வருகைக்கு மொரீஷியஸ் பொறுப்பேற்க வேண்டும்.

சாந்தி, டியாகோ கார்சியாவிலிருந்து ஒரு சிப்பியை கொண்டு வந்தார். அங்கிருந்ததன் நினைவாக, அதை தன் செயினில் போட்டு கழுத்தில் அணியப் போவதாகக் கூறுகிறார்.

சுவாமிநாதன் நடராஜன் வழங்கிய கூடுதல் தகவல்களுடன் 

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
 

 

https://www.bbc.com/tamil/articles/cly4n9nng04o

 

பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது!

1 week 6 days ago
பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது! பல கொலைகளுடன் தொடர்புடைய இலங்கையர் கனடாவில் கைது!

யாழ்ப்பாணத்தில் செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என சந்தேகிக்கப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அஜந்தன் சுப்ரமணியம் என்று அழைக்கப்படும் 32 வயதான பிரசன்ன நல்லலிங்கம் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர் என கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டு பிரான்ஸில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இவர், இலங்கையிலும் பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அதேநேரம், சந்தேகநபரை கைது செய்ய இலங்கையின் பாதுகாப்புப் படையினர் சர்வதேச பிடியாணை பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கையிலிருந்து தப்பிச் சென்ற இவர், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்து கனடாவுக்கு வந்த போது கனேடிய பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர‍ை மேலதிக விசாரணைகளுக்காக பிரான்சிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு தரப்பினர் அறிவித்துள்ளனர்.

பிரசன்ன நல்லலிங்கம் தற்போது காவலில் வைக்கப்பட்டு, நாடு கடத்துவது தொடர்பான முடிவுக்காக காத்திருக்கிறார்.

அவரது விசாரணை 2025 மே மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1411450

அகதி அந்தஸ்த்து கோரல் செயன்முறை கடினமாக்கப்பட்டுள்ளது; விளம்பர பிரசாரத்தை ஆரம்பித்தது கனடா

2 weeks 3 days ago

 

அகதி அந்தஸ்த்து கோரல் செயன்முறை கடினமாக்கப்பட்டுள்ளது; விளம்பர பிரசாரத்தை ஆரம்பித்தது கனடா

Published By: Vishnu

05 Dec, 2024 | 02:03 AM
image

சர்வதேச ரீதியில் புலம்பெயர்வோரையும், அகதிகளையும் பெரும் எண்ணிக்கையில் உள்வாங்கும் நாடாக இருந்துவரும் கனடா, தற்போது அகதி அந்தஸ்த்து கோரும் செயன்முறை கடினமாக்கப்பட்டிருப்பதாக எச்சரிக்கும் வகையிலான இணையவழி விளம்பர பிரசாரமொன்றை உலகளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளது.

இந்த விளம்பர பிரசாரமானது ஸ்பானியமொழி, உருது, உக்ரேனிய மொழி, இந்தி மற்றும் தமிழ் உள்ளடங்கலாக 11 மொழிகளில் எதிர்வரும் மார்ச் மாதம் வரை முன்னெடுக்கப்படவிருப்பதாக கனடாவின் குடிவரவுத்திணைக்களம் 'ரொயிட்டர்' செய்திச்சேவைக்குத் தெரிவித்துள்ளது.

 அகதி அந்தஸ்த்து கோரலை மட்டுப்படுத்தும் நோக்கிலேயே பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசாங்கத்தினால் இப்பிரசாரம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்த 4 மாத இணையவழி விளம்பர பிரசாரத்துக்காக கடந்த 7 வருடங்களுக்கும் மேலாக இதனைப்போன்ற விளம்பரங்களுக்காக செலவிடப்பட்ட மொத்தத்தொகையில் மூன்று பங்கு தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

  •  

https://www.virakesari.lk/article/200452
 

 

த‌மிழீழ‌ த‌னி நாட்டு கோரிக்கையை நாம் கைவிட‌ வில்லை

2 weeks 3 days ago

இன்னொரு போர் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம் என்ர‌ முடிவு ஈழ‌ ம‌ண்ணில் வாழும் எம் ம‌க்க‌ள் இன்னொரு துய‌ர‌த்தை ச‌ந்திக்க‌ கூடாது என்ப‌த‌ற்காக‌ 2009 இன‌ அழிப்பின் தாக்க‌ம் இப்பவும் இருக்கு.................க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌னி நாடு அட‌ந்த‌வ‌ர்களும் இருக்கின‌ம்....................ஏதோ ஒரு நாள் த‌மிழீழ‌ம் கிடைக்கும் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு அதை கால‌ம் தான் முடிவெடுக்கும்...................முன்பெல்லாம் சுவாசிப்ப‌து காற்றாய் இருந்தாலும் நேசிப்ப‌து த‌மிழீழ‌மாய் இருந்த‌ ப‌டியால் தான் யாழில் இணைந்தோம்......................இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை நினைக்கையில் க‌வ‌லை தான் வ‌ருது.....................

ப‌ல‌ உற‌வுக‌ள் யாழ்க‌ள‌த்திலும் ச‌ரி ம‌ற்ற‌ சோச‌ல் மீடியாக்க‌ளிலும்  சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சுக்கு எதிராக‌ எழுதும் போது ஈழ‌த்து உற‌வுக‌ளின் நின்ம‌திக்காக‌ பொறுமைய‌ க‌டைபிடித்து க‌ட‌ந்து சென்று இருக்கிறேன்.....................2009க்கு முத‌ல் எங்க‌ளுக்கு நேர்மையான‌ த‌லைவ‌ர் இருந்தார் இளைஞ‌ர்க‌ள் தாங்க‌ளாக‌வே விரும்பி போராட்ட‌த்தில் இணைந்து சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சை எதிர்த்து போர் செய்தார்க‌ள்....................இப்போது எங்க‌ட‌ நிலைய‌ நினைக்க‌த் தான் ப‌ரிதாவ‌மாய் இருக்கு........................கெட்ட‌திலும் ஒரு ந‌ல்ல‌து ந‌ட‌க்கும் என்பார்க‌ள் 2009இன‌ அழிப்பு த‌மிழ‌க‌ ம‌க்க‌ளுக்கு தெரிந்து விட்ட‌து
த‌மிழ‌க‌ இளைஞ‌ர்க‌ளுக்கும் சிங்க‌ள‌ இன‌வாத‌ அர‌சின் மீது க‌டும் கோவ‌ம் இருப்ப‌தை பார்க்க‌ முடியுது................2013ம் ஆண்டு லையோலா க‌ல்லூரி மாண‌வ‌ர்க‌ள் ப‌ற்ற‌ வைத்த‌ தீ அது த‌மிழ‌க‌ம் எங்கும் ப‌ர‌விய‌து எம‌க்கு சாத‌க‌மான‌ நிலை வ‌ரும் போது மீண்டும் ம‌க்க‌ள் புர‌ட்சி வெடிச்சால் மாற்ற‌ம் வ‌ரும்

எல்லாம் அவ‌ன் செய‌ல்
ந‌ன்றி🙏..........................

இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன்

2 weeks 4 days ago

 

இலங்கை விவகாரத்தில் முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளை இப்போது ஈடேற்றுவீர்களா? பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் %E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் மற்றும் கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தல் என்பன குறித்து முன்னர் கொண்டிருந்த கடப்பாடுகளைத் தற்போது நிறைவேற்றுவீர்களா என பிரிட்டனின் வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கடந்த வாரம் (27) நடைபெற்ற வெளிவிவகாரக்குழுக் கூட்டத்திலேயே இலங்கையைப் பூர்விகமாகக்கொண்ட பிரிட்டன் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன், வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமியிடம் மேற்கூறப்பட்ட விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

‘இன்றை தினம் (27) உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு முக்கியமான நாளாகும்’ என்று சுட்டிக்காட்டிய உமா குமரன், ‘கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழர்களுக்குத் தோள் கொடுக்குமாறும், மிகமோசமான மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை பரிசீலிக்குமாறும் நீங்கள் பிரிட்டன் அரசாங்கத்தை வலியுறுத்தியிருந்தீர்கள்.

அதுமாத்திரமன்றி ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் சர்வதேச நீதிப்பொறிமுறை தொடர்பான பரிந்துரையைப் பரிசீலிக்குமாறு அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் வலியுறுத்தியிருந்தார். இப்போது நீங்கள் வெளிவிவகார செயலாளர். அவர் பிரதமர். எனவே நீங்கள் உங்களது முன்னைய கருத்துக்களின்படி செயற்படுவீர்களா? மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடையவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைப்பீர்களா?’ என டேவிட் லெமியிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த வெளிவிவகார செயலாளர் டேவிட் லெமி, ‘தற்போது இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிபீடமேறியிருக்கிறது. அத்தோடு கடந்தகால மனித உரிமை மீறல்களுடன் தொடர்புபட்ட விடயத்தில் முன்னேற்றகரமான சமிக்ஞைகள் தென்படுகின்றன. அதேவேளை கடந்தகால மீறல்களுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு கொள்கைகள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம். மேலும் அத்தகைய மீறல்களில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்படுவது மிக அவசியமாகும்’ என்று தெரிவித்தார்.

 

 

https://akkinikkunchu.com/?p=301559

சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற  தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2024!

2 weeks 6 days ago

சுவிசில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2024

 

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது. இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில்  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

hIi8mxH72fqSEVEOGlwU.jpg

 

 

 

nGGrFE3PJMbY8HW7H6cm.jpg

 

தமிழீழ விடுதலைக்காகவும், தமிழர்களின் சுதந்திர வாழ்வுக்காகவும் தம்மை முழுமையாக அர்ப்பணித்து இறுதிவரை களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அமைப்பின் ஒழுங்கின் அடிப்படையில் அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

 

pdY5gLYLksPW0WjaC13h.jpg

 

 

31ypEST79GGJJJoKrLK3.jpg

 

 

தமிழீழத்தின் பல்வேறு மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து சேகரிக்கப்பெற்ற புனித மண்ணையும், கல்லறைக் கற்களையும், சீருடையின் சாட்சியாக எம்மிடம் சேர்க்கப்பெற்றவற்றையும் மாவீரர்களின் பிள்ளைகளால் அரங்கிற்கு எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் உணர்வுடன் ஆரம்பமாகின.

prpa6Ehmh55QC4txps1O.jpg

 

தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 2008ஆம் ஆண்டின் தேசிய மாவீரர் நாள் உரை முழுமையாக அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது. சங்கொலி, பறையிசை, மணியொலி எழுப்பலுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம்  18:07 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. மக்களால் மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில் மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் காணிக்கைப்படுத்தப்பட்டன. 

 

1aMdlFNrrZs0q91LMXs9.jpg

 

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் சுவிஸ் நிகழ்வில், சுவிசின்  அனைத்து மாநிலங்களிலிருந்தும் கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.

 

மிகப் பிரமாண்ட அரங்கில்  1700 இற்கு மேற்பட்ட  மாவீரர்களின் திருமுகங்கள் ஏற்றப்பட்ட சுடர்களிலே ஒளிவீச, முதன்மை கோபுரமும் அடிக்கற்களின் தடையகற்றிகளின் கோபுரமும் நடுகல்நாயகர்களின் கோபுரமும் கரும்புலிகளின் கோபுரங்களும் நிமிர்ந்து நிற்க, நாட்டுப்பற்றாளர், மாமனிதர்கள் திருவுருவப்படங்கள்  உணர்வோடு சங்கமிக்க, முள்ளிவாய்க்கால் நினைவு மக்கள் தூபி தமிழின அழிப்பின் சாட்சியாய் நிற்க, தமிழீழத் தேசியச் சின்னங்கள் அரங்கு முழுவதையும் எழுச்சியூட்ட, தமிழீழத்தேசியக்கொடி பட்டொளி வீச, மாவீரர் குடும்ப உறவுகளின் உணர்வலைகள் மாவீரம் சொல்ல குழந்தைகள், சிறுவர், இளையோர், உணர்வாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்களென எல்லோரும் மாவீரர் நினைவுகளோடு உறைந்திருந்து உறுதி எடுத்துக்கொண்ட காட்சி மாபெரும் வரலாற்றுப் பதிவாகும்.

 

தமிழீழ விடுதலைப்புலிகளின் 2024 மாவீர்ர் நாளின் உத்தியோகபூர்வ அறிக்கையின் உரைவடிவம் ஒலிக்கவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து,தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் கொள்கை விளக்கப்பேச்சும் நிகழ்த்தப்பட்டதுடன், தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டது.

 

எத்தடை வரினும் அத்தடை உடைத்து தமிழீழத் தேசியத் தலைவரது வழிகாட்டலை ஏற்ற மக்களாக தமிழீழத்தை மீட்போம் என்ற உறுதியுடன் 'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி கையேற்றல், தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நிறைவுபெற்றன. 

 

தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ் கிளை

 

 

Gq5EawbQaNedho6V8nrN.jpg
4BqMHFXg5jha4FhZBpU3.jpg
XozyS4pdiJOBDa4s8ZOK.jpg
D1emywJdOoyeqU5c2vz0.jpg
jcCC6Ee416jE10CaMt64.jpg
54yw41iqu19hUkkbv9U8.jpg
VBf1wmiOexTeEyFjeBSf.jpg
cQ1HkHrg0Qiis6fDGKW8.jpg
0VJ3mnboCdaRnQ5Frqi5.jpg
ZQE9lwpiUN3Lea3BLmti.jpg
WvpKrIzLVeTM7tRtLceW.jpg
x0xbqqheX60YYUMmtInV.jpg
k93LC6vb5bLE2hzmTHvP.jpg
lnTpRHNlm3MrtLHnUt8F.jpg
QnxDWAbZU2XQqejKIWZw.jpg
QIwVGCYOEaNb6emTaRUb.jpg
S4rfzA2XGfiJFOMn9DmX.jpg
OIxJbIA3i4KhohgXTS2z.jpg
vwMDgRCVPRjDwkxgtyU5.jpg
JgWYGVP7wYDo73BR8aKa.jpg
DFMbQdGjhfx8xkMJ7y8R.jpg
XK1a41WujTPz5cah1v17.jpg
UyP3JfQ5rWLLaM65az0F.jpg
WGoBcTA4xbogweaNxopj.jpg
CF0TZYFp2jYIOAhDelCu.jpg
Sn8E8ZdHchof5OZpwc7S.jpg
qcpAK0OHiGz6JNHa8twd.jpg
HbcHIQMZaOUO299X2Ad0.jpg
2b14tfDYSSnWHc4gfYFG.jpg
yt5NVu08TyMVjdnVVOTO.jpg
Qbma08aw6Vmv2DjpcLO2.jpg
w7pKNTNxPWQ5c28GiVUt.jpg
mHVbMChLjlpT0R4uq4M3.jpg
O3xgwynLCgRRE1FTpF7V.jpg
odb9rZIrqfkRpVp6BaNl.jpg
wGEpvvzC6wUMgOhrtE3J.jpg
CGF9XD6uTGAKakNBW7At.jpg
xyEQNkNuFskiR3g6PpFc.jpg
zaONUA1KXVUH6dtj2mqk.jpg
Wd3Zd4QcVrK2NDq3wGLA.jpg
DwCJfDRZ8XdbyvmWpc4W.jpg
pyQqEHzMlycp59s9j1zG.jpg
L5J8dMqfN5kMcDqutDKt.jpg
5t0TTuRQFFPtdpINe8fR.jpg

https://www.thaarakam.com/news/08a5b5e3-6ab3-470f-be0e-fe2ab036bedb

பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு!

3 weeks 1 day ago

பாரிஸில் ஆரம்பமான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வு!
Vhg நவம்பர் 30, 2024
1000387330.jpg

 

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காவது தவணைக்காலத்தின் இரண்டாவது நேரடி அரசவை அமர்வு ஆரம்பமாகியுள்ளது.

குறித்த அமர்வு நேற்று (29-11-2024) பாரிஸ் புறநகர் பகுதியான Mairie de Le Blanc Mesnil 1 Place Gabriel Péri 93150 Blanc Mesnil நகரசபை மண்டபத்தில் தொடங்கியுள்ளது.

அத்தோடு, இன்றைய தினமும் (30-11-2024) மற்றும் டிசம்பர் முதலாம் திகதியும் அமர்வு இடம்பெறவுள்ளது.

இந்நதிலையில், இன்று (30-11-2024) மாலை 6.30 மணிக்கு 5 Rue Roger Le Maner 93270 SEVRAN மண்டபத்தில் மக்கள் அரங்க நிகழ்வுகளும் நடைபெற உள்ளது.

குறித்த அமர்வில், அநுரவின் ஆட்சியில், தமிழ்த்தேசியத்திற்கான சவாலும்சந்தர்ப்பங்களும் மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் மேற்கொள்ளப்படும் சர்வதேச நீதி என்பவை தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

இன்றைய நிகழ்வில் பன்னாட்டுஅரசியல், சமூக அமைப்புகளின் பங்களிப்புக்கள் மற்றும் கலைநிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

அத்தோடு, தந்தைசெல்வா,நெல்சன் மண்டேலா,மாமனிதர் துரைராஜா, தியாகதீபம் திலிபன் நினைவு விருதுகள்,மற்றும் இளம்தலைமத்துவத்திற்கான விருது என்பன தேர்வாளர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்படவுள்ளன.

மேலும், இந்நிகழ்வில்தமிழீழ தேசிய உதைபந்தாட்ட அணியினரும் கௌரவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://www.battinatham.com/2024/11/blog-post_565.html

தேசியத் தலைவரின் 70வது அகவை! பலெர்மோ கேக் வெட்டி கொண்டாட்டம்!

3 weeks 1 day ago
Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3

தமிழீழத் தாய் பெற்றெடுத்த சூரியதேவன், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 70வது அகவைதினக் கொண்டாட்டம் பலெர்மோவில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. மக்கள் எல்லோரும் இனிப்புப் பண்டங்கள் வழங்கி, மகிழ்ச்சியாக தலைவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்

Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.2 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3 Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3

Immagine-WhatsApp-2024-11-26-ore-22.47.3

https://firetamil.com/?p=5799

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு

4 weeks ago
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கான நகர்வுகளை மேற்கொள்ளுங்கள் - கனேடிய அரசாங்கத்தை வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
23 NOV, 2024 | 09:10 PM
image

(நா.தனுஜா)

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ஊடாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என வலியுறுத்தும் முன்மொழிவு அந்நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர் ஷோன் சென்னால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒன்ராரியோ மாகாணத்தைச்சேர்ந்த புலம்பெயர் தமிழரான நிருஜன் ஞானகுணாலனால் தயாரிக்கப்பட்டு, அந்நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் பரந்துபட்டு வாழும் புலம்பெயர் தமிழர்கள் 636 பேர் கையெழுத்திட்டிருக்கும் ஈ-5058 இலக்க முன்மொழிவையே பாராளுமன்ற உறுப்பினர் ஷான் சென், கடந்த வாரம் (20) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.

இலங்கையில் தமது பாரம்பரிய தாயகமான தமிழீழத்தில் 75 வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இனவழிப்புக்கு முகங்கொடுத்திருக்கும் ஈழத்தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் வாழும் 'புலம்பெயர்ந்தோரின் வீடாக' கனடா திகழ்வதாகவும், இலங்கை அரசினால் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மீறப்பட்டிருப்பதாகவும் அம்முன்மொழிவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி '1956 இல் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்திலிருந்து 2009 மேமாதம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட 'இனவழிப்பு' யுத்தம் வரை தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன்கூடிய இனப்படுகொலை பல்வேறு வழிகளில் முன்னெடுக்கப்பட்டுவந்திருக்கிறது' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கையில் இடம்பெற்ற தமிழினப்படுகொலை தொடர்பில் அதற்குப் பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நகர்வுகளை கனேடிய அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும், சுதந்திர தமிழீழ உருவாக்கம் தொடர்பில் இலங்கைவாழ் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சர்வதேச சமூகத்தின் தலையீட்டுடனான பொதுசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என்றும் அந்த முன்மொழிவில் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/199508

கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்

4 weeks 1 day ago

கனடாவில் கொடூரம் - தந்தையைக் கத்தியால் குத்திக் கொன்ற மகன்! தமிழினப் பற்றாளர் மதி மரணம்
Oruvan

தந்தையை மகன் கத்தியால் குத்திக் கொலை செய்த அதிர்ச்சி தரும் துயரச் சம்பவம் கனடாவில் கடந்த வியாழக்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

மகனைக் கனேடியப் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

யாழ்ப்பாணம், அரியாலையைச் சேர்ந்த 66 வயதுடைய குலத்துங்கம் மதிசூடி என்பவரே இவ்வாறு குத்திக் கொலை செய்யப்பட்டவராவார்.

தமிழினப் பற்றாளரும் கனேடியத் தமிழ் வானொலி, பத்திரிகைத் துறையின் முன்னோடி பிரபல சமூக சேவையாளருமான குலத்துங்கம் மதிசூடி கடந்த 40 வருடங்களாக கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.

அவ்வப்போது இலங்கைக்கு வந்து பலவிதமான சமூக சேவைகளை வடக்கு, கிழக்கில் வழங்கி வந்தவர். வருடமொருமுறை காரைதீவு வந்து செல்கின்றவர். அம்பாறை மாவட்டத்தில் பல சமூக செயற்பாடுகளைச் செய்தவர். அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

அவரது மகன் இளங்கோ காதல் முறிவு காரணமாக மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தவர் என்று சொல்லப்படுகின்றது.

கடந்த வியாழக்கிழமை இரவு தாயை ஒரு அறையில் பூட்டிவிட்டு தந்தையைக் கத்தியால் குத்தி கொலை செய்திருக்கின்றார் என்று அவரது சகோதரி வாக்குமூலம் அளித்துள்ளார்.

உடனடியாகக் கனடா பொலிஸார் அவரைக் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். பொலிஸ் விசாரணைகள் தொடர்கின்றன.

கனேடிய ஊடகங்கள் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன.
 

https://oruvan.com/sri-lanka/2024/11/22/brutal-incident-in-canada-son-stabs-father-to-death-with-knife

ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி.

1 month ago

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தேசிய மக்கள் சக்திக்கு, கனேடிய தமிழ் காங்கிரஸ் (CTC) தமது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் காங்கிரஸ், உத்தியோகபூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சியினர் பெற்ற மகத்தான மற்றும் வரலாற்று வெற்றிக்கு கனேடிய தமிழ் காங்கிரஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

மாற்றத்தக்க ஆட்சிக்கான தேசிய மக்கள் சக்தியின் பார்வையில் இலங்கை மக்களின் நம்பிக்கையின் பிரதிபலிப்பாக இந்த முக்கிய ஆணையை பார்ப்பதாக காங்கிரஸ் குறிப்பிட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு

இந்தநிலையில், வெளிப்படையான, பொறுப்புடைமையை உள்ளடக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கான தேசிய மக்கள் சக்தியின்; உறுதிமொழியையும் காங்கிரஸ் பாராட்டியுள்ளது.

அத்துடன் புதிய அரசாங்க நிர்வாகம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கையை காங்கிரஸ் தமது கடிதத்தில் வெளிப்படுத்தியுள்ளது.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை அகற்றிவிட்டு, ஜனநாயகத்திற்கும் தமிழ் மக்கள் உட்பட அனைத்து சமூகத்தினரின் உரிமைகளையும் பாதுகாப்பதற்கு முன்னுரிமையளிக்கும் புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தியின் முன் இருக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பத்தை தமது கடிதத்தில் காங்கிரஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி | Ceylon Tamil Congress Congratulate Anura

 

தேர்தல் அறிக்கையின்படி, நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்ய உடனடி நடவடிக்கைகளை எடுக்கும்போது, அனைவருக்கும் நீதி, உள்ளடக்கம் மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யுமாறு அரசாங்கத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை நல்லிணக்கம் மற்றும் தேசிய ஐக்கியத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக எஞ்சியுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவிக்குமாறு அரசாங்கத்தை கனேடிய தமிழ் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துடன் தொடர்புடைய நீண்டகால அநீதிகளை வலியுறுத்தி, தேசிய மக்கள் சக்தியின், தமது தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, அந்த சட்டத்தை ரத்து செய்வதன் முக்கியத்துவத்தை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

 

இராணுவ ஈடுபாடு

தற்போது இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை மீளப் பெற்றுக் கொடுக்கவேண்டும். அத்துடன் சட்டவிரோத காணி சுவீகரிப்புகளை நிறுத்துமாறும், நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்பவேண்டும் என்றும் காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் சமூகத்தின் கலாசார மற்றும் மத பாரம்பரியத்தைப் பாதுகாக்க, தமிழ் வழிபாட்டுத் தலங்கள் ஆக்கிரமிக்கப்படுவதைத் தடுக்கவேண்டும். அத்துடன் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதிய பௌத்த கோயில்கள் கட்டப்படுவதை நிறுத்தவேண்டும் என்று கனேடிய காங்கிரஸ் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதிக்கும், தேசிய மக்கள் சக்திக்கும், கனேடிய தமிழ் காங்கிரஸ் அனுப்பியுள்ள செய்தி | Ceylon Tamil Congress Congratulate Anura

புதிய அரசியலமைப்பு அங்கீகரிக்கப்படும் வரை, 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதுடன், உள்ளூராட்சி பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தவும், பிராந்திய நிர்வாகத்தை வலுப்படுத்தவும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதன் முக்கியத்துவத்தையும் அந்த காங்கிரஸ் கோடிட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவப் பிரசன்னத்தை நாட்டின் ஏனைய பகுதிகளுடன் சீரமைக்க வேண்டும்.

அத்துடன், உள்ளூர் வர்த்தகங்கள் மற்றும் விவசாயிகளுக்கு இடையூறாக விவசாயம் மற்றும் விருந்தோம்பல் போன்ற வர்த்தக முயற்சிகளில் இராணுவ ஈடுபாட்டை நிறுத்த வேண்டியதன் அவசியத்தையும் கடிதம் வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், இலங்கையில் நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தியை ஊக்குவிக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க தாம் தயாராக உள்ளதாக, கனேடிய தமிழ் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது. 

https://tamilwin.com/article/ceylon-tamil-congress-congratulate-anura-1731803743

 

தொடங்கீட்டாங்கையா தொடங்கீட்டாங்க.

 @Kapithan னை உடனடியாக மேடைக்கு அழைக்கிறோம்.

கனடா விசிட்டர் வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

1 month 1 week ago

கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,) ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை கனேடிய குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடி உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

விசிட்டர் வீசா 

அத்துடன், கனேடிய மத்திய அரசாங்கத்தின் இணையதளத்திலும் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் விசிட்டர் வீசா மூலம் 10 ஆண்டுகள் வரையில் நாட்டுக்குள் வந்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

கனடா விசிட்டர் வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு | Canada Multiple Entry Visas

புதிய நடைமுறை

எனினும், புதிய நடைமுறைகளின் பிரகாரம் பத்தாண்டு கால வீசா அனுமதி வழங்கப்படாது எனவும் ஒவ்வொரு விண்ணப்பதாரியின் விண்ணப்பங்களும் தனிப்பட்ட ரீதியில் மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் வீசா வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடா விசிட்டர் வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு | Canada Multiple Entry Visas

அந்த வகையில், என்ன காரணத்திற்காக அவர்கள் வருகை தருகிறார்கள், அவர்களது நிதிநிலை மற்றும் உடல் ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கருத்தில் கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

https://ibctamil.com/article/canada-multiple-entry-visas-1731399459#google_vignette

தமிழ் முதியோருக்கு உதவ உருவான இல்லம்- பிரான்ஸ்

1 month 1 week ago

இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்..

https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1

 

 

சுவிட்சர்லாந்தில் ஜனவரி முதல் முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம்

1 month 1 week ago

முகத்தை முழுமையாக மூட தடை; மீறினால் அபாராதம் face-close.jpg

சுவிட்சர்லாந்தில் அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் முகத்தை முழுமையாக மூடியவாறு பொது வெளிகளில் நடமாடுவது தடைசெய்யப்படவுள்ளது. இந்த சட்டத்தை மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு எதிர்ப்புகளையும் தாண்டி, சுவிட்சர்லாந்து நாட்டில் முகத்தை மூடியபடி பொது வெளிகளில் நடமாட அடுத்தாண்டு ஜனவரி முதலாம் திகதிமுதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அறிவித்துள்ள சுவிட்சர்லாந்து அரசாங்கம், இந்த தடையை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில், இது தொடர்பான தீர்மானம் கடந்த 2021 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு அந்நாட்டிலுள்ள முஸ்லிம் அமைப்புகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்த நிலையிலேயே, தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

எனினும், விமானங்களுக்குள், தூதரக, தூதரக வளாகங்களில் இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தளங்களிலும் இந்த உத்தரவு பொருந்தாது என்றும் அந்நாட்டை ஆளும் பெடரல் கவுன்சில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ளலாம் என்றும் ஆனால், மத ரீதியாக அல்லது தட்ப வெப்ப நிலை காரணமாக இதனை செய்யக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

அத்தோடு, பொது வெளியில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத நபர்கள் முகத்தை மூடிக்கொள்ள முன் அனுமதி பெறலாம் என்றும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

 

https://akkinikkunchu.com/?p=298467

கனடாவில் இடம்பெற்ற சூரசம்ஹார நிகழ்வின் போது கீழே விழுந்த குருக்கள் தீவிர சிகிச்சையில்...!

1 month 1 week ago

கனடா (Canada) - டொர்ன்டோ (Toronto) நகரில் உள்ள இந்து ஆலயம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்த குருக்கள் ஒருவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கனேடிய நேரப்படி, இன்றைய தினம் (08.11.2024) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் அனுமதி  

இதன்போது, இந்து மத வழக்கப்படி மேற்கொள்ளப்பட்ட சூரசம்ஹார நிகழ்வின் ஒரு கட்டத்தில் அந்நிகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது தெரியாமல் இடிபட்டு குறித்த குருக்கள் கீழே விழுந்துள்ளார்.

இந்நிலையில், அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், இந்த நிகழ்வின் போது பதிவு செய்யப்பட்ட காணொளி ஒன்றும் வெளியாகியுள்ளது.

https://tamilwin.com/article/tamil-iyyar-fell-off-in-toronto-in-tamil-event-1731068969

Checked
Sun, 12/22/2024 - 06:57
வாழும் புலம் Latest Topics
Subscribe to வாழும் புலம் feed