விளையாட்டுத் திடல்

மகளிர் விளையாட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வராத்தை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறுமுகப்படுத்துகிறது

2 days 1 hour ago

09 Oct, 2025 | 12:28 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் முதல் தடவையாக ஐசிசி மகளிர் கிரிக்கெட் வாரத்தை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட்டின் உலகளாவிய கொண்டாட்டமாக அமையும் இந்த நிகழ்வு அக்டோபர் 16ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை நடைபெறும். இந்த கொண்டாட்டம் ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கிண்ணம் 2025 உடன் இணைந்து நடத்தப்பட உள்ளது.

இந்த புதுமையான முயற்சியானது, ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டுடன் இணைத்தவாறு உலகளாவிய கிரிக்கெட் சமூகத்தை ஒன்றிணைக்கவும், பெண்கள் கிரிக்கெட்டின் வளர்ச்சியை வெளிப்படுத்தவும் ஆதரிக்கவும்; கிரிக்கெட் சபைகள் அர்த்தமுள்ள மற்றும் உள்ளூர் ரீதியாக பொருத்தமான வழிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம், இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் உலகக் கிண்ணத்தின்போது தொடங்கி, உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டில் பெண்களின் தெரிவு நிலை, சுயவிபரம் மற்றும் பங்கேற்பை கணிசமாக மேம்படுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையுடன் ஆண்டுதோறும் நடைபெறும்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட ஐ.சி.சி தலைவர் ஜெய் ஷா,

'இந்த வருடம் மகளிர் கிரிக்கெட் ஏற்கனவே ஒரு திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சாதனை படைக்கும் வகையில் விளையாட்டு அரங்குகளில் நிரம்பி வழிகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுவதுடன் கிரிக்கெட் விளையாட்டின் மீதான உத்வேகம் அதிகரித்துள்ளது.

'ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் வாரம் அறிமுகமாவதன் மூலம் மற்றொரு பெருமைமிகு மைல்கல் பதிவாகிறது. கிரிக்கெட் அரங்கில் உள்ள வீராங்கனைகள் மட்டுமல்ல, துடுப்பை அல்லது பந்தை கையில் எடுக்கும் ஒவ்வொரு பெண்ணையும் சாத்தியமானதைப் பற்றி கனவு காண்பதைக் கொண்டாட வைக்கிறது. இது பூரண மற்றும் இணை உறுப்பு நாடுகளுக்கு உலகளாவிய நிகழ்வில் பங்கேற்கவும், தங்களது சொந்த சமூகங்களில் பெண்கள் விளையாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கவும் ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்குகிறது' என்றார்.

இது இவ்வாறிருக்க, உலகக் கிண்ணத்தில் பங்கேற்கும் வரவேற்பு நாடு அல்லாத பல பூரண அங்கத்துவ நாடுகள் ஏற்கனவே புதுமையான நிகழ்ச்சிகளை நடத்தி கொண்டாடியுள்ளன.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை, நியூஸிலாந்து கிரிக்கெட் சபை ஆகியன ஏற்கனவே சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தன..

கிரிக்கெட் சவுத் அப்ரிக்கா (தென் ஆபிரிக்கா கிரிக்கெட் நிறுவனம்) தமது தேசத்தில் உள்ள உயர்நிலைப் பாடசாலை ஒன்றில் ஒரு முழு நாள் நிகழ்வை நடத்தவுள்ளது. இதில் குழு விவாதம், மினி-கிரிக்கெட் போட்டிகள் மற்றும் முன்னாள் தென் ஆபிரிக்க வீராங்கனைகள் பங்கேற்கும் போட்டி ஆகியவை அடங்கும்.

அது மட்டுமல்லாமல் பெர்முடா முதல் ஹொங்கொங் வரை ஒவ்வொரு கண்டத்திலும், 45க்கும் மேற்பட்ட ஐ.சி.சி இணை உறுப்பு நாடுகள் மகளிர் கிரிக்கெட் வாரத்தில் ஈடுபட தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/227305

மகளிர் கிரிக்கெட்டின் வரலாறு

6 days 2 hours ago

ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல; மகளிர் கிரிக்கெட்டின் தலையெழுத்து மாறியது எப்படி?

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரசிகர்களுடன் செல்ஃபி எடுக்கும் மிதாலி ராஜ் (கோப்புப் படம், 2017)

கட்டுரை தகவல்

  • தினேஷ்குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 அக்டோபர் 2025

நடப்பு மகளிர் உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் என்பது பெரும்பாலான கிரிக்கெட் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது. ஒருகாலத்தில் இந்திய ஆடவர் அணியின் நிழலில் ஒதுங்கியிருந்த இந்திய மகளிர் அணி, இன்று உலகின் வலிமையான அணிகளுள் ஒன்று.

விராட் கோலி, ரோஹித் சர்மாக்களுக்கு இணையாக இன்று, ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் ரசிகர்களின் அபிமானத்தை பெற்றுள்ளனர். ஆடவர் கிரிக்கெட்டுக்கு சச்சின் எப்படியோ, அதேயளவு மிதாலி ராஜும் ஆதர்சமாக திகழ்கிறார். எள்ளி நகையாடப்பட்ட இந்திய மகளிர் அணி எழுச்சி பெற்றது எப்படி?

இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சியை புரிந்துகொள்வதற்கு, மகளிர் கிரிக்கெட்டின் ஆதிவரலாற்றை உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அது எப்படி இந்தியாவில் உள்வாங்கப்பட்டது என்பதையும் தொடக்க காலத்தில் ஏற்பட்ட பின்னடைவுகள் என்னவென்பதையும் அதன் முன்னத்தி ஏர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டில் ஆதியிலே பெண்கள் இருந்தார்கள்

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஸ்மிருதி மந்தனா

கிரிக்கெட்டும் ஆதியில் சமத்துவத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது. பதினான்காம் நூற்றாண்டை சேர்ந்த யோகன் டி கிரிஸின் (Johann de Grise) ஓவியங்கள் அதற்கு இன்றளவும் சான்றாக உள்ளன.

கிராமங்களில் வளர்ந்த ஆட்டம் என்பதால், ஒருசில கட்டுப்பாடுகள் தவிர்த்து அனைத்துத் தரப்பு மகளிரும் பொழுதைப் போக்கும் ஆட்டமாகத்தான் கிரிக்கெட் பதினேழாம் நூற்றாண்டு வரை இருந்தது.

அதுநாள் வரை மகளிர் கிரிக்கெட் என்பது சேவல் சண்டையைப் போல, பாதுகாப்பு கவசங்கள் இல்லாத குத்துச் சண்டையைப் போல, குட்டைப் பாவாடை அணிந்து கொண்டு மகளிர் ஆடும் ஒரு சாகச ஆட்டம்; அவ்வளவுதான். பாதுகாப்பற்ற எக்குத்தப்பான களங்களில் மகளிர் ஆடுவதாலே அது ஒரு அதிசாகச ஆட்டமாக வர்ணிக்கப்பட்டது.

அதனால் இயல்பிலேயே சூது, குடி உள்ளான கேளிக்கைகளுக்கு ஏற்றதாகவும் தீவிர அபிமானம் கொண்ட ரசிகர்கள் சண்டையிட்டுக் கொள்வதற்கு ஏதுவான பேசுபொருளாகவும் அது அமைந்தது.

எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், ஆரம்பத்தில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆங்கில ஆட்டமாக இருக்கவில்லை. விக்டோரிய யுகத்தில்தான் யார்யார் மட்டைப் பிடிக்க வேண்டுமென்ற எழுதப்படாத விதி ஒன்று உருவானது.

சொல்லி வைத்தது போல அப்போதுதான் எம்சிசி (MCC) அமைப்பும் ஆட்டம் தொடர்பான விதிகளும் உருப்பெறத் தொடங்கின. உயர்குடி அல்லாத மகளிர் குறித்தான அந்தக் காலத்திய மதிப்பீடு 'அற்பத்தனமானது ; வளர்ச்சிக்கு வழியில்லாதது ; நன்நெறிகளுக்கு உட்படாது' என்றே இருந்தது என்கிறார் Playing the Game புத்தகத்தை எழுதிய காத்லீன் இ.மேக்ரோன்.

1998இல் தான் எம்சிசி நிறுவனம் மகளிர் கிரிக்கெட்டை முழுமையாக அங்கீகரித்தது.

ஆண்களின் குறுகிய உலகம்

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (இடமிருந்து முதலில் இருப்பவர்) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார்.

காலப்போக்கில் இந்த சமத்துவமின்மை மகளிர் கிரிக்கெட்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்கியது. ஆனாலும் ஆண்மயக் கண்ணோட்டத்திலிருந்து அது பார்க்கப்படுவது தொடர்ந்தபடியே இருந்தது.

கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான லென் ஹட்டன் (Len Hutton) மகளிர் கிரிக்கெட்டை 'அபத்தம்' எனச் சாடினார். கிரிக்கெட் எழுத்தின் மணிமகுடம் என சொல்லத்தக்க 'The Art and science of Cricket' புத்தகத்தை எழுதிய பாப் ஊல்மர் அவன்/அவள் சிக்கல் தொடர்பான அரசியல் சரித்தன்மையை நியாயப்படுத்தும் பொருட்டு தனது முன்னுரையில் இப்படி எழுதுகிறார். "இந்தப் புத்தகம் அனைவருக்கும் பயன்படக் கூடியது என்றாலும் ஆடவர் கிரிக்கெட்டை மட்டுமே முன்னிறுத்தி எழுதப்பட்டது." இதே அர்த்தம் தொனிக்குமான ஒரு உரையை தனது 'On Form' புத்தகத்தில் இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக் பிரயர்லியும் எழுதுகிறார்.

மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு ஆண் வர்க்கம் தொடர்ந்து முட்டுக் கட்டைகளை – தெரிந்தோ தெரியாமலோ – ஏற்படுத்தினாலும் அது ஆரம்ப காலம் தொட்டே ஒட்டுமொத்த கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும் வழிகாட்டி வந்துள்ளது.

அது டபிள்யூ.ஜி.கிரேஸிடமிருந்து (W. G. Grace) தொடங்குகிறது. நவீன பேட்டிங்கில் பெரும் தாக்கத்தை செலுத்திய கிரேஸின் கிரிக்கெட் குரு வேறு யாருமல்ல; அவருடைய தாய் மர்தா கிரேஸ்தான்.

இன்னும் கொஞ்சம் காலத்தை பின்னோக்கி நகர்த்தினால் 1820களில் கிறிஸ்டியானோ பந்தை தூக்கிப் போட்டு சிரித்துக் கொண்டிருக்கிறார். அவர்தான் கிரிக்கெட்டில் தற்போது நடைமுரையில் உள்ள 'Overarm' பாணியில் முதல்முறையாக பந்துவீசியவர்.

ஆனால் வழக்கம் போல வரலாற்றில் அவர் பெயர் மறைக்கப்பட்டு அவருடைய சகோதரரான ஜான் வைல்ஸின் (John Willes) கல்லறையில் 'Overarm பந்துவீச்சின் பிதாமகன்' என பொறிக்கப்பட்டது.

ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை தொடர் நடத்துவதற்கு முன்னுதாரணமாக நின்று வழிகாட்டியவர் கேப்டன் ரேச்சல் ஹேஹோ பிளின்ட் (Rachael Heyhoe Flint). இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி கேப்டனான அவர் 1973இல் முதல் மகளிர் உலககோப்பை கிரிக்கெட் தொடரை வெற்றிகரமாக நடத்தியும் காட்டினார். பேட்டிங் திறன் அடிப்படையில் அவரை மகளிர் கிரிக்கெட்டின் முதல் உச்ச நட்சத்திரம் என சொல்லலாம்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டபிள்யூ.ஜி.கிரேஸ்

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்

18ஆம் நூற்றாண்டிலேயே இந்தியாவில் கிரிக்கெட் நுழைந்தாலும், மகளிர் கிரிக்கெட் முழுமையான வடிவம் எடுக்க 250 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது.

1973இல் தான் The Women's Cricket Association of India தொடங்கப்பட்டது. அக்காலத்திய மகளிர் கிரிக்கெட் என்பது பம்பாய், டெல்லி, கல்கத்தா மாதிரியான பெருநகரங்களில் வாழ்பவர்களுக்கான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.

அன்றைய இந்திய மகளிர் கிரிக்கெட்டின் போக்கிற்கும் வர்க்க பார்வைக்கும் சரியான உதாரணமென பம்பாயின் 'த அல்பீஸ் கிளப்'பை (The Albees Club) சொல்லலாம். பெரு மதிப்பு வாய்ந்த அந்த கிளப்பின் வீரர்களில் ஒருவர் நூதன் கவாஸ்கர். இவர் லிட்டில் மாஸ்டர் சுனில் காவஸ்கரின் தங்கை.

70களில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சி குறிப்பிடத்தகுந்ததாக இருந்தது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவும் ஒரு முக்கிய பங்காற்றியது என்பதை மறுக்க முடியாது.

அன்றைய காலகட்டத்தில் நட்சத்திர வீரர்கள் என இருவரை அறுதியிட்டு சொல்ல முடியும். ஒருவர் சாந்தா ரங்கஸ்வாமி. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் முதல் ஆல்ரவுண்டர் இவர்தான். இன்னொருவர் இடக்கை சுழலரும் அதிரடி மட்டையாளருமான டயானா எடுல்ஜி (Diana Edulji).

குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிட்டினாலும் கூட 90களின் இறுதிவரை வரை உச்ச நட்சத்திரம் என சொல்லும்படியான ஒரு ஆட்டக்காரர் இந்திய மகளிர் கிரிக்கெட்டில் உருப்பெறவில்லை. 2006இல் தான் The Women's Cricket Association of India அமைப்பு பிசிசிஐ உடன் முறையாக இணைக்கப்பட்டது.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கபில் தேவுடன் சாந்தா ரங்கஸ்வாமி (நடுவில்)

ஒப்பீடு என்னும் இழிவு

மகளிர் கிரிக்கெட்டில் போய் ஆடவர் கிரிக்கெட்டை தேடாமல் இருக்க வேண்டும். அதுதான் மகளிர் கிரிக்கெட்டை ரசிப்பதற்கான அடிப்படை பால பாடம். இந்தப் புரிதல் இல்லாமல் போகும் போதுதான், அது வேகமில்லாத, ஆக்ரோஷம் குறைவான, சுறுசுறுப்பு இல்லாத ஆட்டமாக மட்டுப்படுகிறது.

மகளிர் கிரிக்கெட், காணும் ஒவ்வொருவருக்கும் தனித்துவமான உணர்வெழுச்சியை உண்டாக்கவல்லது. ஒரு கலை வடிவத்தைப் போல. ஆடவர் கிரிக்கெட்டின் போலி தேசியவாத சலம்பல்களுக்கு மத்தியில் மகளிர் கிரிக்கெட் ஒரு ஆறுதல் என்கிறார் கிரிக்கெட் எழுத்தாளர் முகுல் கேசவன்.

மகளிர் கிரிக்கெட்டை புரிந்துகொள்ள திறந்த மனதும் அறிவுசார்ந்த நேர்மையான கற்பனை வளமும் தேவை என்கிறார் கார்த்திகேய தத்தா. இங்கிலாந்தின் முன்னாள் நட்சத்திர பேட்டர் சாரா டெய்லர், தனது ஆட்டத்திறனை விஸ்தீகரிக்கும் பொருட்டு ஓர் உள்ளூர் ஆடவர் அணியில் இணைந்து மட்டையாடினார். ஆனால் இது போன்ற முயற்சிகள் எல்லாம் மகளிர் கிரிக்கெட் மீதான கடந்த காலக் கற்பிதங்களை உறுதிப்படுத்துவதற்குத்தான் உதவும்.

ஒருமுறை மிதாலியிடம் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் எனக் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் யோசிக்காமல் அவர் சொன்ன பதில் "ஒரு ஆண் கிரிக்கெட் வீரரிடம் உங்களுக்கு பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் எனக் கேட்பீர்களா?"

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெமிமா ரோட்ரிக்ஸ்

WPL என்னும் கேம் சேஞ்சர்

ஒருகாலத்தில் கிரிக்கெட்டை பின்தொடரும் பெண்களுக்கு இருந்த பிரச்னை, மகளிர் கிரிக்கெட்டில் அவர்களுக்கு என்று ரோல் மாடல்கள் இருக்கமாட்டார்கள். ஆடவர் கிரிக்கெட்டில் இருந்து தங்களுக்கான ரோல் மாடல்களை அவர்கள் வரித்துக்கொண்டாக வேண்டும்.

ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. மிதாலி ராஜை தொடர்ந்து ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ் போன்றோர் நாடறிந்த பிரபலங்கள் உள்ளனர்.

மகளிர் கிரிக்கெட்டின் நிலை தற்போது நிறையவே மாறியிருக்கிறது என்கிறார் இந்திய முன்னாள் வீராங்கனை நிரஞ்சனா நாகராஜன். தமிழகத்தை சேர்ந்த ஆல்ரவுண்டரான இவர், மகளிர் டெஸ்ட், மகளிர் ஒருநாள், மகளிர் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார்.

"முன்பு மகளிர் கிரிக்கெட்டர்கள் பெரும்பாலும் ஆடவர் கிரிக்கெட்டில் இருந்துதான் ரோல் மாடல்களை தேடுவார்கள். நான் 10 வயதிலேயே கிரிக்கெட் விளையாடத் தொடங்கிவிட்டேன். எங்கள் தெருவில் உள்ள பையன்களுடன் சேர்ந்து விளையாடுவேன். எனக்கு அப்போது சச்சின்தான் ஆதர்சம்.

மகளிர் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டாரான மிதாலி ராஜ் குறித்து அப்போது நான் அறிந்திருக்கவிலை. கிரிக்கெட்டில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்ற பிறகுதான், மிதாலி ராஜ் யார் என்பது எனக்கு தெரியவந்தது.

பிறகு அவருடன் இணைந்து விளையாடியதுடன், நெருங்கிப் பழகும் வாய்ப்பையும் பெற்றேன். ஆனால், இன்று அப்படியில்லை. ஸ்மிருதி மந்தனா இன்று வெளியே சென்றால், அவரை காண்பதற்கு ஒரு மிகப்பெரிய கூட்டம் காத்திருக்கிறது" என்கிறார்.

முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது. முன்னர் ரயில்வே அணியில் இருந்து பெரும்பாலான மகளிர் கிரிக்கெட்டர்கள், இந்திய அணிக்கு தேர்வானதை குறிப்பிட்டாக வேண்டும். வேலை உத்தரவாதம் கிடைப்பதால், தத்தமது மாநில அணிகளை விட ரயில்வே அணிக்கு விளையாடவே மகளிர் கிரிக்கெட்டர்கள் விரும்பினர். ஆனால், இன்று சூழல் வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்பு கிரிக்கெட்டை ஒரு கரியராக பெண்கள் தேர்வு செய்ய முடியாத சூழல் இருந்தது என்கிறார் நிரஞ்சனா நாகராஜன்.

திருப்புமுனை தந்த 2017 உலகக்கோப்பை

"2017 மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் இந்திய அணி பைனல் வரைக்கும் முன்னேறியது. இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில், அதுவொரு திருப்புமுனை தருணம் என்றே சொல்லவேண்டும். அதன்பிறேகே மகளிர் கிரிக்கெட்டை ரசிகர்கள் பெரியளவுக்கு பின்தொடர ஆரம்பித்தனர்.

2022இல் ஆடவருக்கும் மகளிருக்கும் சரிசமமான ஊதியம் என்பதை பிசிசிஐ உறுதிசெய்தது. ரோஹித் சர்மாவுக்கு எவ்வளவு ஊதியமோ, இன்று அதேயளவு ஹர்மன்பிரீத் கவுரும் பெறுகிறார். WPL அறிமுகமான பிறகு, பெண்களுக்கு கிரிக்கெட் விருப்பம்(passion) என்பதை கடந்து ஒரு கரியராகவும்(career) மாற்றமடைந்துள்ளது.

நல்ல ஊதியம் கிடைப்பதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பயிற்சி முறைகள், டயட் போன்றவை முன்னேற்றம் அடைந்துள்ளன. இது களத்தில் இந்திய அணியின் வெற்றிகளில் எதிரொலிக்கிறது" என்கிறார்.

சரிசமமான ஊதியம், WPL போன்றவை வளர்ச்சிக்கு வித்திட்டாலும், ஆடவர் கிரிக்கெட்டுக்கு கிடைக்கும் லைம்லைட், பெருந்திரள் ரசிகர் கூட்டத்தில் பாதியை கூட மகளிர் கிரிக்கெட் எட்டவில்லை. ஆனால், இந்த வாதத்தை முழுவதுமாக நிரஞ்சனா நாகராஜன் மறுக்கிறார்.

"நீங்கள், மகளிர் கிரிக்கெட்டை ஆடவர் கிரிக்கெட்டுடன் ஒப்பிடுவதே தவறு. மரபியல்ரிதியாக இரு தரப்புக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக மகளிர் ஆட்டத்திலும் இப்போது பெரிய சிக்சர்கள் எல்லாம் பறக்கின்றன. ஊடக வெளிச்சம், ரசிகர்கள் ஆதரவு இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். நடப்பு உலகக்கோப்பையில் இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தை காண 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள்(22,843) கவுகாத்தி மைதானத்தில் குவிந்தனர். இந்த எண்ணிக்கையை கடந்த காலங்களில் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது." என்றார்.

கிரிக்கெட், மகளிர் கிரிக்கெட், சமூகம், இந்தியா, வரலாறு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹர்மன்பிரீத் கவுர்

அடுத்த பத்தாண்டுகள் எப்படி இருக்கும்?

மகளிர் கிரிக்கெட்டின் சமீபத்திய வளர்ச்சிக்கு பிசிசிஐ அளித்த பங்களிப்பை மறுக்க முடியாது என்கிறார் கிரிக்கெட் வர்ணனையாளர் வித்யுத் சிவராமகிருஷ்ணன். CSK அணிக்காக தோனி தலைமையில் விளையாடிய வித்யுத், 11வது வீரராக களமிறங்கி ரஞ்சி கோப்பையில் சதமடித்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரர்.

"கடந்த காலங்களில் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டுக்கு சரியான கட்டமைப்பு கிடையாது. ஊதியமும் மிகவும் சொற்பம் என்பதால், யாரும் கிரிக்கெட்டை ஒரு கரியர் வாய்ப்பாக பார்க்கவில்லை. ஆனால், WPL, ஆடவருக்கு இணையான ஊதியம் போன்றவற்றால் நிலைமை முற்றிலுமாக மாறியுள்ளது.

உள்கட்டமைப்பை மேம்படுத்தியுள்ளதால், மகளிர் கிரிக்கெட்டர்களின் பீல்டிங், உடற்தகுதி போன்றவை கடந்த பத்தாண்டுகளில் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் பங்கேற்கும் WPL, இந்திய மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். சமீப காலமாக நட்சத்திர வீராங்கனைகள் மட்டுமன்று உள்ளூர் கிரிக்கெட்டர்களும் WPL இல் முத்திரை பதித்துவருகின்றனர்." என்றார்.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா நிறைய உலகக்கோப்பைகளை கைப்பற்றும் என்று வித்யுத் சிவராமகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

"நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிகபட்ச வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ தரும் கட்டமைப்பு வசதிகளை பயன்படுத்தி, நவீன கிரிக்கெட்டுக்கு இன்றியமையாத அம்சங்களான பவர் ஹிட்டிங் (power hitting) உள்ளிட்டவற்றை இந்திய மகளிர் கிரிக்கெட்டர்கள் மேம்படுத்திக் கொண்டுவருகிறார்கள்" என்றார்.

அங்கீகாரம் மறுக்கப்பட்டது அந்த காலம்

அரை நூற்றாண்டுக்கும் மேலாக கிரிக்கெட் இதழாளராக உள்ள ஆர். மோகனிடம் இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிப் போக்கு பற்றி பேசினோம். 2006 இல் இந்திய மகளிர் கிரிக்கெட்டை பிசிசிஐ அமைப்பின் கீழ் முறையாக கொண்டுவந்த பிறகே நிலைமை மாறத் தொடங்கியது என்று கூறினார்.

"70–80களில் எல்லாம் மகளிர் கிரிக்கெட்டை யாரும் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். சாந்தா ரங்கஸ்வாமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்களை கிரிக்கெட் வட்டாரம் அறிந்திருந்தது. ஆனால், அவர்களுக்கு பெரியளவில் வாய்ப்புகளை அங்கீகாரமோ கிடைக்கவில்லை. கவாஸ்கர் போன்றவர்கள் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை ஊக்குவிக்க வேண்டுமென விரும்பினர். ஆனால், நிறுவனங்களின் துணையின்றி தனிநபர்களால் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. உலகளவில் மகளிர் கிரிக்கெட்டில் ஏற்பட்ட மாற்றங்கள், 2006 இல் பிசிசிஐ மகளிர் கிரிக்கெட்டை அரவணைக்க வழிவகுத்தன. WPL, சரிசமமான சம்பளம் என தற்போது அது உச்சத்தை எட்டியுள்ளது" என்றார்.

நடப்பு உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றினால், அது இந்திய மகளிர் கிரிக்கெட் வரலாற்றில் மைல்கல்லாக பார்க்கப்படும். ரசிகர்களின் நம்பிக்கையை பூர்த்தி செய்யுமா இந்திய அணி?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c5yqv93q634o

2026 கால்பந்து உலகக் கிண்ணம் : வெளியிடப்பட்டது புதிய பந்து 'ட்ரையோண்டா'

6 days 8 hours ago

03 Oct, 2025 | 02:38 PM

image

கனடா, மெக்சிக்கோ மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்தும் 2026 ஃபிபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிக்கான உத்தியோகபூர்வ பந்தான 'ட்ரையோண்டா' (TRIONDA)வை ஃபிபா (FIFA) அமைப்பு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ட்ரையோண்டாவின் சிறப்பம்சங்கள்

அடிடாஸ் (Adidas) நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட இந்தப் பந்து, மூன்று நாடுகளின் ஒற்றுமை மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

1. பெயரின் பின்னணி:

'ட்ரையோண்டா' என்ற பெயரானது, ஸ்பானிய மொழியில் "மூன்று அலைகள்"(Three Waves) என்று பொருள்படும்.'ட்ரை' (Tri) என்பது போட்டியை நடத்தும் மூன்று நாடுகளையும், 'ஓண்டா' (Onda) என்பது அலை அல்லது உற்சாகத்தையும் குறிக்கிறது.

2. வடிவமைப்பு மற்றும் நிறங்கள்:

பந்தில் பயன்படுத்தப்பட்டுள்ள சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்கள் போட்டியை நடத்தும் நாடுகளான கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்காவின் வர்ண்ணங்களைப் பிரதிபலிக்கின்றன.

மேலும், கனடாவின் மேப்பிள் இலை, மெக்சிகோவின் கழுகு, அமெரிக்காவின் நட்சத்திரம் போன்ற ஒவ்வொரு நாட்டின் சின்னங்களும் வடிவமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளன. உலகக்கிண்ணத்தின் வெற்றிக் கிண்ணத்தைக் குறிக்கும் வகையில் தங்க நிற அலங்காரங்களும் இடம்பெற்றுள்ளன.

3. முன்னோடித் தொழில்நுட்பம் (Connected Ball Technology):

ட்ரையோண்டா பந்தின் உள்ளே அதிநவீன 500Hz மோஷன் சென்சார் சிப் (Motion Sensor Chip) பொருத்தப்பட்டுள்ளது. இந்தச் சிப் பந்தின் அசைவுகள் குறித்த துல்லியமான தகவல்களை வீடியோ உதவி நடுவர் (VAR) முறைமைக்கு நிகழ்நேரத்தில் அனுப்பும். இதன் மூலம் ஓப்சைட் மற்றும் பந்து கையால் அடிக்கப்பட்டதா போன்ற முடிவுகளை நடுவர்கள் விரைவாகவும் துல்லியமாகவும் எடுக்க முடியும்.

4. மேம்படுத்தப்பட்ட செயல்பாடு:

இந்தப் பந்து நான்கு பேனல் (Four-panel) வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. இது பந்து காற்றில் செல்லும்போது நிலைத்தன்மை மற்றும் கட்டுப்பாட்டை மேம்படுத்தும் வகையில் ஆழமான தையல் கோடுகளைக் (deep seams) கொண்டுள்ளது.ஈரமான அல்லது பனிமூட்டம் நிறைந்த சூழலில் பந்தை உதைக்கும்போது பிடியை (Grip) அதிகரிக்க, அதன் மேற்பரப்பில் நுண்ணிய சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஃபிபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ இந்த வெளியீட்டின் போது, "2026 உலகக்கிண்ணத்தின் அதிகாரப்பூர்வ பந்து இங்கே உள்ளது, அது ஒரு அழகு! இந்தப் பந்தின் வடிவமைப்பு போட்டியை நடத்தும் நாடுகளின் ஒற்றுமையையும் ஆர்வத்தையும் உள்ளடக்கியது" என்று பெருமிதமாக தெரிவித்தார்.

48 அணிகள் பங்கேற்கவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் 2026ஆம் ஆண்டு ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ளது.

https://www.virakesari.lk/article/226788

ரோஹித் கேப்டன் பதவி பறிப்பு: பிசிசிஐ முடிவால் எழும் கேள்விகள் - முன்னாள் வீரர்கள் கூறுவது என்ன?

6 days 13 hours ago

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய ஒரு நாள் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியும் ரோஹித் சர்மாவும் இடம்பெற்றுள்ளார்கள். இருவரும் சுப்மன் கில் தலைமையின் கீழ் விளையாட உள்ளனர்.

ரோஹித் சர்மா நீக்கம் பற்றி பிசிசிஐ தேர்வு குழுவின் தலைவர் அஜித் அகர்கரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது 2027 ஒருநாள் உலக கோப்பையை மனதில் வைத்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்தார்

இந்த முடிவு பற்றி ரோஹித் சர்மா தற்போது வரை எந்தக் கருத்தும் தெரிவிக்காத நிலையில் சமூக ஊடகங்களில் யூகங்கள், விமர்சனங்கள், ஆதரவுகள் என விவாதிக்கப்பட்டு வருகின்றன.

கேப்டனாக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள சுப்மன் கில், "ஒருநாள் உலக கோப்பைக்கு முன்பாக 20 போட்டிகள் உள்ளன. 2027-ல் தென் ஆப்ரிக்காவில் நடக்கவுள்ள உலக கோப்பை தொடரை வெல்வது தான் எங்களின் மிகப்பெரிய இலக்கு." எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா, அஜித் அகர்கர் இடையே என்ன நடந்தது?

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Gareth Copley/Getty Images

படக்குறிப்பு, அஜித் அகார்கர்

ரோஹித் சர்மாவிடம் இந்த முடிவு தெரிவிக்கப்பட்டதா என்கிற கேள்விக்குப் பதிலளித்த அகர்கர், அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்கு முன்பாக அவரிடம் தெரிவிக்கப்பட்டது என்றார்.

கேப்டன்சி முடிவுக்கு ரோஹித்தின் எதிர்வினை பற்றிய கேள்விக்கு, "அது எனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உரையாடல். அதனைப் பொதுவெளியில் தெரிவிக்க விருப்பமில்லை." எனத் தெரிவித்தார்.

எதிர்கால திட்டத்தின் ஒரு அங்கமாக புதிய கேப்டனுக்கு தன்னை அந்தப் பொறுப்பில் நிரூபித்துக் கொள்ள போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டியது முக்கியமானது என்றும் கூறினார்.

"அடுத்த உலக கோப்பைக்கு இரண்டு ஆண்டுகள் உள்ளன. அதற்குள் புதிய கேப்டன் அணியுடன் கூடுதல் நேரம் செலவழித்து திட்டங்களை மேற்கொள்ள போதுமான வாய்ப்பு கிடைக்கும். அதனால் தான் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டது." என்கிறார் அகார்கர்.

ஒவ்வொரு வடிவத்திற்கும் (டெஸ்ட், ஒருநாள், டி20) வெவ்வேறு கேப்டன்கள் இருப்பது எளிதல்ல எனக் கூறும் அவர், "அது திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு பணிகளைக் கடுமையாக்குகிறது. ரோஹித் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்று விட்டார். ஆகவே, ஒருநாள் கேப்டன்சியையும் இளம் வீரர்களிடம் கொடுக்கலாம் என தேர்வாளர்கள் எண்ணினர்." எனத் தெரிவித்தார்.

ரோஹித் சர்மா 2023 ஒருநாள் உலக கோப்பை இறுதி போட்டிக்கு இந்திய அணியை வழிநடத்திச் சென்றார். இந்த ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் வென்று கொடுத்தார். அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கும் முடிவு எளிதானது அல்ல என்பதை அகர்கர் ஒப்புக்கொள்கிறார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Gareth Copley/Getty Images

படக்குறிப்பு, ஹர்பஜன் சிங்

ரோஹித் சர்மா நீக்கப்பட்டது தனக்கு ஆச்சரியமளித்ததாக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் சாம்பியன்ஸ் டிராபி வென்ற அவருக்கு ஆஸ்திரேலியாவில் அணியை வழிநடத்த தகுதியுள்ளது என்றும் கூறினார்.

இந்த முடிவு பற்றி ஜியோ ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் ஹர்பஜன் பேசியதாக பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.

"சுப்மன் கில்லுக்கு வாழ்த்துக்கள். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை சிறப்பாக வழிநடத்துகிறார். தற்போது மேலும் ஒரு பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ரோஹித்தின் இடத்தில் சுப்மன் கில் வைக்கப்பட்டுள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறந்த சாதனைகளை கொண்ட வீரர் ரோஹித்."

"ரோஹித்தை கேப்டனாக பார்க்காமல் இருப்பது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நீங்கள் ரோஹித்தை அணியில் தேர்வு செய்கிறீர்கள் என்றால் அவரை கேப்டன் ஆக்குங்கள், ஏனென்றால் சமீபத்தில் தான் அவர் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்று கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் அவர் கேப்டனாக இருந்திருக்க வேண்டும். அணி தேர்வாளர்கள் 2027 ஒருநாள் உலக கோப்பையைப் பற்றி யோசிக்கிறார்கள் என்றால் அதற்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது." என்றார்.

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆகாஷ் சோப்ரா

முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா பெரிய தொடர்களுக்கு முன்பாக ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கப்பட்டதைப் போல சுப்மன் கில்லுக்கும் வழங்கப்படுவது சரியே என்கிறார்.

"ரோஹித் 2022 டி20 உலககோப்பையில் கேப்டனாக இருந்தார், அதே போல் 2024 உலக கோப்பையிலும் கேப்டனாக இருந்தார். உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப அணியைக் கட்டமைக்குமாறு அவரிடம் கூறப்பட்டது. நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் அணியில் எடுக்கப்பட்டார்கள், முடிவாக கோப்பை கிடைத்தது. அதன் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. ரோஹித் சர்மாவுக்கு போதிய நேரம் வழங்கினீர்கள். ரோஹித் சர்மாவுக்கு நேரம் வழங்கப்பட்டால் சுப்மன் கில்லுக்கும் நேரம் வழங்கப்பட வேண்டும்." எனத் தெரிவித்தார்.

இந்திய அணியின் முன்னாள் உதவி பயிற்சியாளரான அபிஷேக் நாயர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசுகையில், இந்த முடிவு பற்றி ரோஹித்தும் தேர்வாளர்களும் பேசிக் கொள்வது முக்கியமானது எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொருத்தவரை, தேர்வாளர்கள் ரோஹித் சர்மாவிடம் பேசினார்களா என்பது மட்டுமே முக்கியமானது. ரோஹித் சர்மாவும் தேர்வாளர்களும் கில்லுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கலாம் என ஒப்புக்கொண்டால், இது சரியே. இதற்கான பதிலை ரோஹித் சர்மா மட்டுமே கொடுக்க முடியும். ஒரு கேப்டனாக அவர் 2027 உலக கோப்பைக்கு தயாராகி வந்தார். எனவே இதைப்பற்றி உரையாடல் நடைபெற்றிருக்கும் என்றும், இந்த முடிவில் ரோஹித்தும் தேர்வாளர்களும் ஒப்புக் கொண்டிருப்பார்கள் என்றும் நம்புகிறேன்." எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ மீது எழுப்பப்படும் கேள்விகள்

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில், பிசிசிஐ, கிரிக்கெட், கேப்டன்சி மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்களைக் கடந்து இந்த முடிவு சமூக ஊடகங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

விஷால் என்பவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில், "5 ஐபில் கோப்பைகள் மற்றும் பல வருட கடின உழைப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான். 2 தொடர் ஐசிசி கோப்பைகளும் பல வருட வெற்றிகளுக்கும் பிசிசிஐ கொடுத்தது என்ன? அவமரியாதையும் துரோகமும் தான்." எனப் பதிவிட்டுள்ளார்.

தனய் என்பவர், "ரோஹித் சர்மாவை கேப்டன்சியிலிருந்து நீக்கியதற்கு பிசிசிஐ ஒரு காரணம் கொடுங்கள்." என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் சிலர் பிசிசிஐயின் முடிவை நியாயப்படுத்தியும் பேசுகின்றனர்.

'கில் தி வில்' ('Gill The Will') என்கிற கணக்கில், "ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு சுப்மன் கில்லை தற்போது கேப்டன் ஆக்கியதற்கு நீங்கள் (ரோஹித் சர்மா ரசிகர்கள்) அனைவரும் சோகமாக இருப்பீர்கள் என எனக்குத் தெரியும். நீங்கள் கில்லை விமர்சிப்பதற்கு முன்பாக ஒன்றை யோசியுங்கள். விராட் கோலிக்குப் பிறகு ரோஹித் சர்மா கேப்டன் ஆன போது நீங்கள் முழுமையாக அவரை ஆதரித்தீர்கள் தானே? தற்போது அதே மரியாதை சுப்மன் கில்லுக்கும் வழங்கப்பட வேண்டும். கேப்டனான சிறந்த நினைவுகளைத் தந்ததற்கு நன்றி ரோஹித் சர்மா!" எனப் பதிவிடப்பட்டுள்ளது.

பாவ்னா என்பவர், "சுப்மன் கில்லுக்கு வாழ்த்துகள். ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா இடத்தை நிரப்புவது எளிதான காரியம் அல்ல. அவர் மிகப்பெரிய பாரம்பரியத்தை விட்டுச் செல்கிறார், அதனைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது கில்லுக்கு மிகப்பெரிய பொறுப்பாக இருக்கும்." என எழுதியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 19, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனைத் தொடர்ந்து அக்டோபர் 29 முதல் நவம்பர் 8 வரை நடைபெற உள்ள 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgl1jgwe0x3o

இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் போட்டிகள்

1 week ago

இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்திய இந்திய அணி - பேட்டிங், பந்து வீச்சு இரண்டிலும் ஜொலித்த ஜடேஜா

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஆமதாபாத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

ஆமதாபாத்தின் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 2) தொடங்கியது.

முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. 286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 0 - 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ரோஸ்டன் சேஸ்

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜான் கேம்பல் மற்றும் டேகனரின் சந்தர்பால் களமிறங்கினர்.

சந்தர்பால் 3வது ஓவரில், ரன்கள் ஏதும் எடுக்காமல் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்ததாக 6வது ஓவரில், 8 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஜான் கேம்பல், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு சீரான இடைவெளியில், விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. கேப்டன் ரோஸ்டனும் 24 ரன்கள் மட்டுமே எடுத்து, சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். 44.1 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்திய பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சு, வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களைத் திணறடித்தது.

குறிப்பாக, முதல் இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் யாருமே 50 பந்துகளுக்கு மேல் எதிர்கொள்ளவில்லை. ஜஸ்டின் கிரீவ்ஸ் மட்டுமே 32 ரன்கள் எடுத்திருந்தார், மற்ற அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் 30 ரன்களை தாண்டவில்லை.

இந்திய அணியில், முகமது சிராஜ் 14 ஓவர்களில் 40 ரன்கள் கொடுத்து, 4 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் எடுத்திருந்தனர்.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ்

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தில், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

சிறப்பான முறையில் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடிய இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்தது. பின்னர் வெஸ்ட் இண்டீஸ் வீரர் சீல்ஸ் பந்தில், 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார் ஜெய்ஸ்வால்.

அதன்பிறகு களமிறங்கிய சாய் சுதர்சன், 7 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் பந்தில் ஆட்டமிழந்தார்.

மறுபுறம், சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் சதத்தை பூர்த்தி செய்தார். இந்தியாவில் நடக்கும் ஒரு டெஸ்ட் போட்டியில் ராகுல் சதமடிப்பது இது இரண்டாவது முறை. இதற்கு முன்னர், 2016இல் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அவர் 199 ரன்கள் எடுத்திருந்தார்.

197 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து, வாரிக்கன் பந்தில் ஆட்டமிழந்தார் கே.எல்.ராகுல்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார்.

ராகுல் மட்டுமல்லாது, துருவ் ஜூரெல் (125 ரன்கள்), ரவீந்திர ஜடேஜா (104 ரன்கள்) ஆகியோரும் சதமடித்தனர். குறிப்பாக துருவ் ஜூரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்தியாவின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 128 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் எடுத்தநிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது.

ஜடேஜா 104 ரன்களுடனும், வாஷிங்டன் சுந்தர் 9 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரோஸ்டன் சேஸ் இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் சீல்ஸ், ஜோமல் வாரிக்கன், காரி பியர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்திய அணியின் வெற்றி

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

286 ரன்கள் பின்தங்கிய நிலையில் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

100 ரன்களைக் கடப்பதற்கு முன்பாகவே 8 விக்கெட்டுகளை இழந்திருந்த வெஸ்ட் இண்டீஸ் அணி, இறுதியில், 45.1 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் அலிக் அதனேஸ் மட்டுமே 38 ரன்கள் எடுத்திருந்தார். மற்ற அனைவருமே 30 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்திருந்தனர். இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் சிராஜ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் 104 ரன்களும், 2வது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளையும் எடுத்த ஜடேஜா ஆட்டநாயகன் விருதைப் பெற்றார்.

இந்தியா, டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி, ஜடேஜா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வெஸ்ட் இண்டீஸ் அணி

இந்த வெற்றியின் மூலம் இந்த டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடிய கடைசி 5 டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியிடம் தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், இந்த ஐந்து டெஸ்ட் போட்டிகளில் எதுவும் மூன்றாம் நாளைத் தாண்டி நீடிக்கவில்லை.

அதேபோல, 2002க்குப் பிறகு இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நடந்த அனைத்து டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடப்பு டெஸ்ட் தொடரின் 2வது போட்டி அக்டோபர் 10 - 14 தேதிகளில் டெல்லியில் நடைபெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg40xj07k2o

யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025

1 week 6 days ago

28 Sep, 2025 | 05:23 PM

image

இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை  (28) நடைபெற்ற 'யாழ்ப்பாணம் விக்சித் பாரத் ஓட்டம் 2025' இன் நிகழ்வில், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகரன், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஆகியோர் கலந்து கொண்டு, ஓட்ட நிகழ்வைத் தொடக்கி வைத்ததுடன் வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கிக் கௌரவித்தனர்.

உலகளாவிய அளவில் 150 இற்க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் நடைபெற்ற விக்சித் பாரத் ஓட்டம் 2025, இந்தியாவின் முன்னேற்றப் பயணத்தை கொண்டாடுவதோடு, சேவை, மனவொற்றுமை மற்றும் நிலைத்தன்மையை ஊக்குவித்து, உலகம் முழுவதும் சமூகங்களை இணைக்கும். இந்தியாவின் முன்னேற்றத்தையும் பண்பாட்டு மதிப்புகளையும் இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. 

IMG-20250928-WA0011__1_.jpg

IMG-20250928-WA0000.jpg

IMG-20250928-WA0010.jpg

IMG-20250928-WA0009.jpg

IMG-20250928-WA0008.jpg

IMG-20250928-WA0006.jpg

https://www.virakesari.lk/article/226340

பெலன் டி'ஓர் விருது விழா 2025: அதிசிறந்த வீரர் உஸ்மான் டெம்பிலி, அதிசிறந்த வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி

2 weeks ago

Published By: Vishnu

24 Sep, 2025 | 07:22 PM

image

(நெவில் அன்தனி)

பிரான்ஸ் நியூஸ் மெகஸின் (பிரான்ஸ் செய்தி சஞ்சிகை) மற்றும் பிரெஞ்சு கால்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றினால் வருடாந்தம் வழங்கப்படும் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழக வீரரும் பிரான்ஸ் தேசிய வீரருமான உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார்.

அதி சிறந்த வீராங்கனைக்கான பெலன் டி'ஓர் விருதை மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்தார்.

பிரான்ஸ் தேசத்தில் பாரிஸ் நகரில் அமைந்துள்ள தியேட்டர் டு சாட்லே அரங்கில் கடந்த திங்கட்கிழமை இரவு 69ஆவது பெலன் டி'ஓர் விருது விழா கோலாகலமாக நடைபெற்றது.

இவ் விழாவில் அதி சிறந்த வீரருக்கான பெலன் டி'ஓர் விருதை உஸ்மான் டெம்பிலி வென்றெடுத்தார். இந்த விருதை அவர் முதல் தடவையாக வென்றதுடன் அவ்விருதை கன்னீர்மல்க பெற்றுக்கொண்டார்.

நடந்து முடிந்த 2024 - 2025 கால்பந்தாட்ட பருவ காலத்தில் தனது அதிசிறந்த கால்பந்தாட்ட நுட்பத்திறன்மூலம் பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகத்திற்கு நான்கு சம்பியன் பட்டங்களை உஸ்மான் டெம்பிலி கிடைக்கச் செய்திருந்தார்.

ஐரோப்பிய சுப்பர் கிண்ணம், ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், உள்ளூர் இரட்டைப் பட்டங்களான லீக் 1, கூப் டி பிரான்ஸ் ஆகிய நான்கு சம்பியன் பட்டங்களையே பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் வென்றிருந்தது.

மூன்றாவது தொடர்ச்சியான விருது

பார்சிலோனா மற்றும் ஸ்பெய்ன் வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி மூன்றாவது தொடர்ச்சியான வருடமாக பெலன் டி'ஓர் விருதை வென்று வரலாறு படைத்தார்.

2014இலிருந்து பார்சிலோனா கழகத்தில் தொடர்ந்து விளையாடி வரும் பொன்மாட்டி, நடந்து முடிந்த கால்பந்தாட்ட பருவகாலத்தில் தனது கழகத்தின் மூன்று பிரதான வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார்.

லீகா எவ், கொப்பா டி லா ரெய்னா, சுப்பர்கோப்பா ஆகிய சம்பியன் பட்டங்களை பார்சிலோனா கழகம் வென்றிருந்தது.

அத்துடன் 2025 யூரோ கிண்ண இறுதிப் போட்டிக்கு ஸ்பெய்ன் முன்னேறுவதில் பொன்மாட்டி முக்கிய பங்காற்றி இருந்தார்.

2023 பீபா மகளிர் உலகக் கிண்ண சம்பியனான ஸ்பெய்ன் அணியில் இடம்பெற்ற பொன்மாட்டி, மகளிர் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் பட்டங்களை 3 தடவைகள் வென்றெடுத்த பார்சிலோனா அணியிலும் அங்கம் வகித்திருந்தார்.

ஏனைய விருதுகள்

* உயிராபத்துக்களை எதிர்நோக்கும் சிறுவர்களுக்கும் இளையவர்களுக்கும் உதவும் காருண்ய மன்றத்துக்கான சொக்ரேட்ஸ் விருது - ஸானா காருண்ய மன்றம்

* வருடத்தின் அதிசிறந்த ஆடவர் கழகம் - பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன்

* வருடத்தின் அதிசிறந்த மகளிர் கழகம் - ஆர்சனல் கழகம்

* அதிக கோல்களைப் போட்ட வீரருக்கான ஜேர்ட் முல்லர் விருது - விக்டர் ஜியோக்ரஸ் (ஸ்போட்டிங் சி பி ஃ சுவீடன் - 52 போட்டிகளில் 59 கோல்கள்) அவர் இப்போது ஆர்சனல் கழகத்திற்காக விளையாடி வருகிறார்.

* அதிக கோல்களைப் போட்ட வீராங்கனைக்கான ஜேர்ட் முல்லர் விருது - ஈவா பஜோர் (பார்சிலோனா ஃ போலந்து - 46 போட்டிகளில் 43 கோல்கள்)

* வருடத்தின் அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - லூயி என்ரிக் (பாரிஸ் செய்ன்ட் ஜேர்மெய்ன் கழகம் - 4 சம்பியன் பட்டங்கள்)

* வருடத்தின் அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநருக்கான ஜொஹான் க்ருய்வ் விருது - சரினா வீக்மான் (இங்கிலாந்து - ஐரோப்பிய கிண்ண சம்பியன்)

ousman_dembele_1st_ballon_d_or_winner.pn

aitana_bonmati_1st_ballon_d_or_winner.pn

both_ballon_d_or_winners_men_and_women.j

https://www.virakesari.lk/article/225994

கைகுலுக்காத சர்ச்சை: ரெஃப்ரி மீது பாகிஸ்தான் ஆவேச புகார் - பிசிசிஐ கூறியது என்ன?

3 weeks 4 days ago

போட்டியின் போது எடுக்கப்பட்ட பாகிஸ்தான் அணியின் புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, துபையில் நடந்த போட்டியின் போது பாகிஸ்தான் அணி

4 மணி நேரங்களுக்கு முன்னர்

"இந்திய அரசு, பிசிசிஐ மற்றும் நாங்கள் மூவரும் ஒரே பக்கத்தில் இருந்தோம். நாங்கள் இங்கு வந்தோம், ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாட மட்டுமே வந்தோம் என்று நினைக்கிறேன், நாங்கள் அவர்களுக்குச் சரியான பதிலைக் கொடுத்தோம்."

ஆட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவிடம் எதிரணி வீரர்களுடன் கை குலுக்காதது குறித்துக் கேட்கப்பட்டபோது, அவர் தெளிவாகப் பதிலளித்தார்.

ஆசியக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தைப் பற்றிப் பேசப்படாததை விட, டாஸின் போதும், சூர்யகுமார் யாதவ் வெற்றி ஷாட்டை அடித்த பிறகும் நடந்த விஷயங்கள் குறித்துதான் அதிகம் பேசப்பட்டது.

ஆட்டம் முடிந்ததும், பாகிஸ்தான் வீரர்கள் கை குலுக்க முன்னேறினர். ஆனால், அதற்குள் இந்திய வீரர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குத் திரும்பிவிட்டனர். டாஸின் போதும் சூர்யகுமார் மற்றும் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இடையே சடங்குபூர்வமான "கை குலுக்கல்" நடக்கவில்லை.

போட்டிக்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் ஆகாவுக்குப் பதிலாகப் பயிற்சியாளர் மைக் ஹெசன் கலந்து கொண்டார். "ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம். ஆனால், எதிரணி அவ்வாறு செய்யாதது எங்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது" என்று கூறினார் அவர்.

ஹெசன் மேலும் கூறுகையில், "நாங்கள் கை குலுக்க முன்னேறினோம், ஆனால் அதற்குள் அவர்கள் டிரெஸ்ஸிங் அறைக்குச் சென்றுவிட்டனர். இது ஏமாற்றமளிக்கும் முடிவு. நாங்கள் எங்கள் ஆட்டத்தால் ஏற்கனவே ஏமாற்றமடைந்திருந்தோம், ஆனால் கை குலுக்க நாங்கள் தயாராக இருந்தோம்."

ரெஃப்ரியை குறிவைக்கும் பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான டாஸின்போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, துபையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி டாஸின் போது இரு கேப்டன்களும் போட்டி நடுவரும்

இந்த சர்ச்சையை மேலும் வளர்த்து, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) இப்போது போட்டி ரெஃப்ரி குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐசிசி) புகார் அளித்துள்ளது.

பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வி, எக்ஸ் தளத்தில், "ஐசிசி நடத்தை விதி மற்றும் கிரிக்கெட்டின் உணர்வு தொடர்பான எம்சிசி விதிகளை மீறிய போட்டி ரெஃப்ரி குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது" என்று எழுதினார்.

"எனக்கு நம் நாட்டின் மரியாதையை விட முக்கியமானது எதுவும் இல்லை" என்று நக்வி மேலும் எழுதினார்.

டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்க வேண்டாம் என்று போட்டி ரெஃப்ரி ஆண்டி பைக்ரோஃப்ட் கூறியதாகப் பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. எனினும் போட்டி ரெஃப்ரி தரப்பில் இருந்து அத்தகைய அறிவுறுத்தல் எதுவும் வழங்கப்படவில்லை என்று இந்திய அணியின் வட்டாரங்களை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

டாஸின் போது இரு அணி கேப்டன்களும் கை குலுக்குவதும், போட்டி முடிந்த பிறகு இரு அணிகளின் அனைத்து வீரர்களும் ஒருவருக்கொருவர் கை குலுக்குவதும் நீண்ட கால பாரம்பரியமாகும். கோவிட் காலகட்டத்தில் இது சிறிது காலம் நிறுத்தப்பட்டது, ஆனால் அது தவிர இந்த பாரம்பரியம் தொடர்ந்து நடந்து வருகிறது.

துபையில் நடைபெற்ற போட்டியின் போது சூர்யகுமார் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

கை குலுக்காதது குறித்து இந்தியக் கேப்டன் சூர்யகுமார் யாதவ், "சில விஷயங்கள் விளையாட்டு உணர்வை விட பெரியவை" என்று போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கிடையில், இந்தியக் கேப்டனோ அல்லது அணியோ கை குலுக்காததன் மூலம் எந்த விதியையும் மீறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு மூத்த அதிகாரி பிடிஐ செய்தி நிறுவனத்திடம், ஆட்டத்திற்குப் பிறகு கை குலுக்குவது ஒரு "நல்லெண்ண சைகை" மட்டுமே என்று கூறினார்.

"நீங்கள் விதிகளைப் படித்தால், எதிரணியுடன் கை குலுக்குவது குறித்து எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இது உலகம் முழுவதும் விளையாட்டு உலகில் காணப்படும் ஒரு நல்லெண்ண சைகை, ஒரு பாரம்பரியம், ஆனால் இது ஒரு சட்டம் அல்ல" என்றார் அந்த மூத்த அதிகாரி.

"சட்டம் இல்லாதபோது, எதிரணியுடன், குறிப்பாக, மோசமான உறவுகளின் வரலாறு கொண்ட ஒரு எதிரணியுடன் கை குலுக்க இந்திய அணிக்கு எந்தக் கட்டாயமும் இல்லை," என அவர் மேலும் கூறினார்.

எம்.சி.சி விதிமுறைகள் என்ன சொல்கின்றன?

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் டாஸ் வீசிய சூர்யகுமார்

பட மூலாதாரம், Getty Images

கிரிக்கெட் எந்த நாட்டில் விளையாடப்பட்டாலும், எந்த நாடுகள் விளையாடினாலும், சில விதிகளின்படிதான் விளையாடப்படும். அந்த விதிகளைத் தீர்மானிப்பது எம்சிசி ஆகும். எம்சிசி என்றால் மெரிலெபோன் கிரிக்கெட் கிளப் (Marylebone Cricket Club) ஆகும்.

இது உலகின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் கிளப். லார்ட்ஸ் மைதானத்தின் உரிமையாளர் இந்த கிளப் ஆகும். இதுவே கிரிக்கெட் விளையாட்டின் விதிகளை உருவாக்கி பாதுகாக்கிறது

அந்த கிளப்பின் வலைத்தளத்தில் தேடியபோது, கை குலுக்குதல் அல்லது கை கொடுப்பது பற்றி குறிப்பாக எந்த விதியும் இல்லை. ஆனால், அதன் முன்னுரையின் (preamble) கீழ் சில முக்கிய அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

  • மரியாதை, கிரிக்கெட்டின் உணர்வில் மையமாக உள்ளது.

  • உங்கள் கேப்டனின் அதிகாரம், எதிரணி மற்றும் நடுவருக்கு மரியாதை கொடுங்கள்.

  • நேர்மையாக விளையாடுங்கள்.

  • உங்கள் நடத்தையின் மூலம் நேர்மறையான சூழலை உருவாக்குங்கள், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும்.

  • சூழ்நிலைகள் உங்களுக்கு எதிராக இருந்தாலும் ஒழுக்கத்தை நிலைநாட்ட வேண்டும்.

  • எதிரணிக்கு வெற்றி கிடைக்கும்போது வாழ்த்துங்கள், உங்கள் அணிக்கு வெற்றி கிடைக்கும்போது கொண்டாடுங்கள்.

  • போட்டி முடிந்த பிறகு, முடிவு எதுவாக இருந்தாலும், அதிகாரிகள் மற்றும் எதிரணிக்கு நன்றி சொல்லுங்கள்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0jq7v35l08o

உலக தடகள செம்பியன்ஷிப் - 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் அமெரிக்கா மற்றும் ஜமைக்கா வீரர்கள் வெற்றி

3 weeks 6 days ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெறும் 2025 ஆம் ஆண்டுக்கான உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில், அமெரிக்காவின் மெலிசா ஜெபர்சன் வூடன், பெண்கள் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்யை 10.61 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.

இதற்கிடையில், ஜமைக்காவின் ஒப்லிக் செவில்லே ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியை 9.77 வினாடிகளில் நிறைவு செய்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmfjr9skw00e9qplpmdrbz4zp

இருபதுக்கு - 20 கிரிக்கெட் : புதிய சாதனை படைத்த இங்கிலாந்து வீரர் பில் சால்ட்!

4 weeks ago

Published By: Digital Desk 1

13 Sep, 2025 | 02:06 PM

image

இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே, மான்செஸ்டரில் நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில், இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 304 ஓட்டங்களை பெற்று, சர்வதேச இருபதுக்கு - 20 வரலாற்றில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற புதிய சாதனையை படைத்துள்ளது.

இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்டக்காரராகக் களமிறங்கிய, பில் சால்ட், 60 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 15 பவுண்டரிகள் உட்பட 141 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

அவர் 39 பந்துகளில் இந்த சதத்தை எட்டினார். 

இதற்கு முன்பு, லியாம் லிவிங்ஸ்டன் 42 பந்துகளில் சதம் அடித்திருந்ததே இங்கிலாந்தின் அதிவேக சதமாக இருந்தது.

இந்தப் போட்டியின் சதம், பில் சால்ட்டிற்கு சர்வதேச இருபதுக்கு 20 கிரிக்கெட்டில் நான்காவது சதமாகும். 

இதன் மூலம், அதிக சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் அவர் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவுடன் இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். 

இந்த இரு வீரர்களும் தலா 4 சதங்கள் அடித்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் தலா 5 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளனர்.

இந்நிலையில், இங்கிலாந்து அணியின் மற்றொரு ஆரம்ப ஆட்டக்காரரான ஜோஸ் பட்லர், 30 பந்துகளில் 7 சிக்ஸர்கள் மற்றும் 8 பவுண்டரிகள் உட்பட 83 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

முதல் விக்கெட்டுக்கு இருவரும் 126 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய தென் ஆப்பிரிக்க அணி, 158 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

இதன் மூலம் இங்கிலாந்து அணி 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

WhatsApp_Image_2025-09-13_at_14.03.38.jp

https://www.virakesari.lk/article/224991

வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!

1 month ago

1375793.jpg

தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம்.

பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியிருக்கிறது? எப்படி உணர்கிறோம் என்று யாரும் எங்களிடம் நேரடியாகக் கேட்பது கூட கிடையாது. ஆனால் நான் என் உடல்தகுதியை சுயமாகவே பரமாரிக்கிறேன்.

விளையாடுவதற்குத்தானே எல்லாம். விளையாடாமல் ஆட்டத்திலிருந்து விலகுவதற்காகவா இருக்கிறோம்? ஆனால் சிலபல இடைவெளிகளும் ஓய்வுகளும் அவ்வப்போது அவசியமாகிறது. ஏனெனில் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் பணிச்சுமை பற்றியெல்லாம் பேச முடியாது. அங்கு ஆட்டச்சூழ்நிலையில் நாம் மூழ்கி விடுவோம்.

ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நம்மால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து தான் ஆகவேண்டும். ஆனால் ஆட்டத்திற்கு இடையே ஓய்வு முக்கியம். அந்த ஓய்வில்தான் உடல்நிலையைப் பாதுகாக்க முடியும், பரமாரிக்க முடியும். ஆட்டத்தில் நமக்கு பெரிய ரோல் இல்லை என்றால் வலையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிக்கலாம். ஆனால் ஆட்டத்தில் முழுச்சுமையும் உங்கள் மேல் இருக்கும் போது வலையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார்.

அவர் இப்படிக் கூறக் காரணம், பும்ராக்களையும் ஷமிக்களையும் யோசிக்கும் நிர்வாகம், சலுகை அளிக்கும் நிர்வாகம் ஷர்துல் தாக்கூர்களைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர் கடந்த 11 மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார். கடந்த அக்டோபரில் இரானி கோப்பையில் தொடங்கிய சீசன் அவருக்கு 2024-25 ரஞ்சி சீசன், விஜய் ஹஜாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, முதலில் விற்கப்படாமல் போனாலும் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆட நேரிட்டது, பிறகு இந்தியா ஏ தொடர் என்று வரிசையாக அவர் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிவருகிறார். எனவே பணிச்சுமை விவகாரம் சில எலைட் வீரர்களுக்கு ஒருதலைப்பட்சமாகச் சாதகமளிக்கும் வேளையில் ஷர்துல் தாக்கூர் போன்ற விளிம்பில் இருக்கும் வீரர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை.

https://www.hindutamil.in/news/sports/1375793-there-is-no-concern-about-the-health-of-the-players-shardul-thakur-1.html

பந்துவீச்சில் ஆகாஷ் தொடர்ச்சியாக பிரகாசிப்பு, இளையோர் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது இலங்கை

1 month ago

Published By: Digital Desk 3

05 Sep, 2025 | 02:33 PM

image

(நெவில் அன்தனி)

மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷ் தொடர்ச்சியாக பந்துவீச்சில் பிரகாசிக்க, மேற்கிந்தியத் தீவுகளுடனான 3ஆவது போட்டியில் 8 விக்கெட்களால் இலங்கை அபார வெற்றியீட்டியது.

இந்த வெற்றியுடன் 7 போட்டிகளைக் கொண்ட இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது.

இந்தத் தொடரின் முதல் 2 போட்டிகளில் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றிய ஆகாஷ், இந்தப் போட்டியில் 19 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தார்.

அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய சாமிக்க சமுதித்த 33 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

அன்டிகுவா கூலிஜ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 39.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இயர்சின்ஹோ ஃபொன்டெய்ன் 51 ஓட்டங்களையும் ஜொஷுவா டோர்ன் 29 ஓட்டங்களையும் டைரிக் ப்றயன் 24 ஓட்டங்களையும் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 22 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

விரான் சமுதித்த ஆட்டம் இழக்காமல் 64 ஓட்டங்களையும் கவிஜ கமகே ஆட்டம் இழக்காமல் 28 ஓட்டங்களையும் புலிஷ திலக்கரத்ன 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஆர்'ஜாய் கிட்டன்ஸ் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/224283

சர்வதேச ரி20 பந்துவீச்சில் ராஷித் கான் உலக சாதனை

1 month 1 week ago

03 Sep, 2025 | 05:07 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீரர் என்ற உலக சாதனையை ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் ராஷித் கான் படைத்துள்ளார்.

download.png

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் சர்வதேச ரி20 மும்முனை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிராக திங்கட்கிழமை நடைபெற்ற போட்டியில் 3 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது மொத்த விக்கெட் எண்ணிக்கையை 165ஆக உயர்த்திக்கொண்டார்.

இதன் மூலம் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை ராஷித் கான் நிலைநாட்டினார்.

ஒட்டுமொத்த ரி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த சில மாதங்களாக தன்னகத்தே கொண்டிருந்த ராஷித் கான், இப்போது சர்வதேச ரி20 போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற மற்றொரு உலக சாதனையை தனதாக்கிக்கொண்டுள்ளார்.

சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் 164 விக்கெட்களை வீழ்த்தி முதலிடத்தில் இருந்த நியூஸிலாந்தின் ஓய்வுநிலை வீரர் டிம் சௌதியை சில மாதங்களுக்கு முன்னர் சமப்படுத்திய ராஷித் கான் தனது 98ஆவது போட்டியில் 165ஆவது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் புதிய உலக சாதனை நாயகனானார்.

நேற்று நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டி வரை 99 சர்வதேச ரி20 போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் இதுவரை மொத்தமாக 167 விக்கெட்களைக் கைப்பற்றியுள்ளார்.

இதேவேளை, சகலவிதமான ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற உலக சாதனையை கடந்த பெப்ரவரி மாதம்  ராஷித் கான்  நிலைநாட்டியிருந்தார்.

490 ரி20  கிரிக்கெட்  போட்டிகளில் விளையாடியுள்ள ராஷித் கான் 666 விக்கெட்களை மொத்தமாக கைப்பற்றி முதலிடத்தில் இருக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் ட்வேன் ப்ராவோ 631 விக்கெட்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்திலுள்ளார்.

https://www.virakesari.lk/article/224130

49ஆவது தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டியில் அசத்திய வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள்

1 month 1 week ago

Published By: Vishnu

02 Sep, 2025 | 09:08 PM

image

(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறை அமைச்சும், விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களமும் இணைந்து ஏற்பாடு செய்த 49ஆவது தேசிய விளையாட்டு விழா காலி தடெல்ல மைதானத்தில் கடந்த வார இறுதியில் நிறைவடைந்தது.

விளையாட்டு விழாவில் மிகவும் முக்கியமானதும் கடைசியுமான மெய்வல்லுநர் போட்டிகளில் வடக்கு, மலையக, கிழக்கு வீர, வீராங்கனைகள் பதக்கங்கள் வென்று அசத்தியிருந்தனர்.

கோலூன்றிப் பாய்தலில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் வட மாகாணத்தைச் சேர்ந்த அருந்தவராசா புவிதரனும் நேசராசா டக்சிதாவும் தத்தமது சொந்த சாதனைகளை முறியடித்து புதிய போட்டி சாதனைகளை நிலைநாட்டி தங்கப் பதங்கங்களை சுவீகரித்து பலத்த பாராட்டுதல்களைப் பெற்றனர்.

மெய்வல்லுநர் போட்டிகளில் இந்த இருவர் மாத்திரமே புதிய சாதனைகளை நிலைநாட்டினர்.

1_puvitharan.jpg

2_daksitha.jpg

ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் புவிதரன் 5.12 மீற்றர் உயரத்தைத் தாவி புதிய போட்டி சாதனையைப் படைத்தார்.

கடந்த வருடம் தன்னால் நிலைநாட்டப்பட்ட 5.11 மீற்றர் என்ற சாதனையை முறியடித்தே புவிதரன் இம் முறை புதிய சாதனையைப் படைத்தார்.

பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் டக்சிதா 3.52 மீற்றர் உயரம் தாவி, 2024இல் நிலைநாட்டப்பட்ட 3.51 மீற்றர் என்ற தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையைப் படைத்தார்.

மிதுன்ராஜுக்கு 2 தங்கப் பதக்கங்கள்

ஆண்களுக்கான தட்டு எறிதல் (48.08 மீற்றர்), குண்டு எறிதல் (15.40 மீற்றர்) ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளிலும் வெற்றியீட்டிய எஸ். மிதுன்ராஜ் 2 தங்கப் பதக்கங்களை வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுத்தார்.

3_mithunraj.jpg

4_ilango_vikirthan__2_.jpg

வட மாகாணத்தைச் சேர்ந்த மற்றொரு வீரரான இளங்கோ விகிர்தன் ஒரு தங்கப் பதக்கத்தையும் ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான 10000 மீற்றர் ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 36.02 செக்கன்களில் நிறைவுசெய்த விகிர்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

அதற்கு முன்னர் ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் (15:02.45) வெள்ளிப் பதக்கத்தை விகிர்தன் வென்றிருந்தார்.

5_abishalini.jpg

பெண்களுக்கான  கோலூன்றிப்  பாய்தலில் வட மாகாண வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி (3.10 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

வக்சனுக்கு தங்கம் உட்பட 2 பதக்கங்கள்

மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட மலையக விளையாட்டுத்துறை நட்சத்திர மைந்தர்களில் ஒருவரான விக்னராஜ் வக்சனுக்கு ஒரு தங்கப் பதக்கத்துடன் ஒரு வெள்ளிப் பதக்கமும் கிடைத்தது.

6_vignaraj_vakshan.jpg

7_k_shanmugeswaran.jpg

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை 15 நிமிடங்கள், 00.72 செக்கன்களில் நிறைவு செய்த தலவாக்கொல்லையைச் சேர்ந்த வக்சன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியில் (3:55.48) வக்சனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.

தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் சுவீகரித்த கே. ஷண்முகேஸ்வரனுக்கு   10000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய நேரிட்டது.

அப் போட்டியை 32 நிமிடங்கள், 10.40 செக்கன்களில் நிறைவுசெய்த ஷண்முகேஸ்வரன் 2ஆம் இடத்தைப் பெற்றார்.

8_saad_faleel.jpg

ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய மத்திய மாகாண வீரர் சாத் பலீல், அப் போட்டியை 10.68 செக்கன்களில் நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

அதிவேக வீராங்கனை ஷபியா யாமிக்

தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் அதிவேக ஓட்ட வீராங்கனை என்ற கௌரவத்தை மத்திய மாகாண வீராங்கனை பாத்திமா ஷபியா யாமிக் பெற்றுக்கொண்டார்.

9_fathima_shafiya_yamick.jpg

பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 24.33 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்த ஷபியா யாமிக், 100 மீற்றர் ஓட்டப் போட்டியை 11.87 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது தங்கப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார்.

கிழக்கு மாகாணம் சார்பாக பிரகாசித்த ரதுசன், நிப்ராஸ்

கிழக்கு மாகாணம் சார்பாக போட்டியிட்ட தமிழ் பேசும் வீரர்களான ரதுசன் வெள்ளிப் பதக்கத்தையும் ஆர். எம். நிப்ராஸ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 70.47 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்த ஆர். ரதுசன் வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.

10_r_m_nifraz.jpg

ஆண்களுக்கான 1500 மீற்றர் ஓட்டப் போட்டியை 3 நிமிடங்கள், 55.48 செக்கன்களில் நிறைவுசெய்த ஆர்.எம். நிப்ராஸுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

https://www.virakesari.lk/article/224058

16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்டக் குழாத்தில் மன்னார் வீரர்கள்

1 month 1 week ago

02 Sep, 2025 | 12:51 PM

image

சீனாவில் நடைபெறவுள்ள 16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் கால்பந்தாட்ட அணியும் பங்குபற்றவுள்ளது.

இதனை முன்னிட்டு நடத்தப்பட்ட திறன்காண் தேர்வின்போது 16 வயதுக்குட்பட்ட பூர்வாங்க இலங்கை பாடசாலைகள் குழாத்தில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையைச் சேர்ந்த என். கெஸ்ரோன், கே. ஜெனிஸ்ரன் ஆகிய இருவரும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

திறன்காண் தேர்வின்போது அவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி திறமையை வெளிப்படுத்தியதன் அடிப்படையில் 16 வயதுக்குட்பட்ட இலங்கை பாடசாலைகள் குழாத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

16 வயதுக்குட்பட்ட டியான்யூ லியூபங் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி இம் மாதம் 20ம் திகதியிலிருந்து 28ம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இப் போட்டிக்கான மேலதிக பயிற்சிகள் கொழும்பில் இம் மாதம் 4ம் திகதியிலிருந்து நடைபெறவுள்ளது.

இம் மாணவர்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் இருந்து தமது கல்வி கற்றுவருகின்ற நிலையில்  இந்த மாணவர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர் அதிபர் ஊடாக உதவிகளை வழங்கி அந்த மாணவர்களின் திறமைக்கான அங்கீகாரம் பெறுவதற்கு உதவுமாறு பாடசாலை சமூகம் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

download.jpg

download__1_.jpg

https://www.virakesari.lk/article/224010

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025

1 month 1 week ago

ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் பணப்பரிசு நான்கு மடங்காக அதிகரிப்பு; சம்பியன் அணிக்கு 134 கோடி ரூபா

Published By: Digital Desk 3

01 Sep, 2025 | 05:12 PM

image

(நெவில் அன்தனி)

இந்தியாவிலும் இலங்கையிலும் இந்த மாதம் பிற்பகுதியில் ஆரம்பமாகவுள்ள 8 அணிகளுக்கு இடையிலான ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மொத்த பணப் பரிசாக 418 கோடியே 5 இலட்சத்து 74,000 ரூபா (13.88 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்படவுள்ளது.

இதன் படி இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான மொத்த பணப் பரிச நான்கு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

நியூஸிலாந்தில் 2022இல் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்  (50 ஓவர்) போட்டியில் மொத்த பணப்பரிசாக 105 கோடியே 42 இலட்சத்து 83,000 ரூபா (3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) வழங்கப்பட்டது.

இந்த வருடம் சம்பியன் அணிக்கு 134 கோடியே 93 இலட்சத்து 49,000 ரூபாவும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கு 67 கோடியே 46 இலட்சத்து 74,000 ரூபாவும் அரை இறுதிகளில் தோல்வி அடையும் அணிகளுக்கு தலா 33 கோடியே 73 இலட்சத்து 37,000 ரூபாவும் பணப்பரிசாக கிடைக்கும்.

குழு நிலை லீக் சுற்றில் ஒவ்வொரு வெற்றிக்கும் சுமார் ஒரு கோடியே 3 இலட்சம் ரூபா பணப்பரிசாக வழங்கப்படும்.

5ஆம், 6ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 21 கோடியே 8 இலட்சம் ரூபாவும் 7ஆம், 8ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு தலா 8 கோடியே 43 இலட்சம் ரூபாவும் பணப்பரிசாக வழங்கப்படும்.

அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆபிரிக்கா, இலங்கை ஆகிய 8 நாடுகள் பங்குபற்றும் 13ஆவது ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி செம்டெம்பர் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எட்டு அணிகளும் ஒன்றையொன்று ஒரு தடவை எதிர்த்தாடும் இந்த சுற்றுப் போட்டியின் ஆரம்பப் போட்டியில் இந்தியாவும் இலங்கையும் குவஹாட்டியில் விளையாடவுள்ளன.

லீக் சுற்றில் 28 போட்டிகள் நடைபெறுவதுடன் அரை இறுதிப் போட்டிகள் அக்டோபர் 29, 30ஆம் திகதிகளிலும் இறுதிப் போட்டி நவம்பர் 2ஆம் திகதியும் நடைபெறும்.

icc_women_s_world_cup_prize_money.png

https://www.virakesari.lk/article/223953

ஐ.பி.எல். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுகிறார் அஸ்வின்!

1 month 1 week ago

27 Aug, 2025 | 11:02 AM

image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரும், தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வின், ஐ.பி.எ.ல் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றிருந்த நிலையில், இந்த அறிவிப்பு அவரது இரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வின், ஐ.பி.எல். மற்றும் உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஐ.பி.எல். போட்டிகளிலிருந்து மட்டுமல்லாமல், அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.

539426767_2151500442255026_5034643967082

இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அஸ்வின், “ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு புதிய ஆரம்பம் இருக்கும் என்பார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் வீரராக எனது காலம் இன்றுடன் முடிவடைகிறது. ஆனால், உலகம் முழுவதும் உள்ள பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடும் எனது காலம் இன்று தொடங்குகிறது” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னுடன் பணியாற்றிய அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும், ஐ.பி.எல். மற்றும் பி.சி.சி.ஐ.-க்கும் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

அஸ்வின் ஐ.பி.எல். வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ், ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் என பல்வேறு அணிகளுக்காக விளையாடியுள்ளார். 

தனது ஐ.பி.எல். பயணத்தில், 200க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் இடம்பிடித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/223471

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு!

1 month 1 week ago

New-Project-277.jpg?resize=750%2C375&ssl

2025 ஆசியக் கிண்ணத்துக்கான இலங்க‍ை அணி அறிவிப்பு!

அடுத்த ஆண்டு ஐ.சி.சி ஆடவர் டி:20 உலகக் கிண்ணத்தை இந்தியாவுடன் இணைந்து நடத்தத் தயாராகி வரும் இலங்கை, 2025 ஆசியக் கிண்ணத்துக்கான தனது அணியை அறிவித்துள்ளது.

16 பேர் கொண்ட இந்த அணியினை சரித் அசலங்க வழிநடத்துகிறார்.

இதில் நட்சத்திர சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான உள்நாட்டு தொடரின் போது சுழற்பந்து வீச்சாளரும், துடுப்பாட்ட வீரருமான ஹசரங்க காயமடைந்தார்.

இதனால், இன்று (29) ஆரம்பமாகும் சிம்பாப்வே சுற்றுப்பயணத்திலும் அவர் இடம்பெறவில்லை.

ஆனால், அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் ஆரம்பகவுள்ள ஆசியக் கிண்ணத்துக்கு அவர் தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் ஹொங்கொங் அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஹசரங்காவைத் தவிர, ஆசியக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் சாமிக கருணாரத்ன, முன்னாள் தலைவர் தசுன் ஷனக உள்ளிட்ட பல வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர்களும் உள்ளனர்.

இதற்கிடையில், மஹீஷ் தீக்ஷன மற்றும் துனித் வெல்லலகே ஆகியோருடன் சேர்ந்து, ஹசரங்க இந்த போட்டிக்கான அவர்களின் முதன்மையான சுழற்பந்து வீச்சாளராக இருப்பார்.

போட்டிகள் செப்டெம்பர் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கை அணி செப்டம்பர் 13 ஆம் திகதி பங்களாதேஷுக்கு எதிரான ஆட்டத்துடன் தனது 2025 ஆசியக் கிண்ணத் தொடரை ஆரம்பிக்கும்.

ஐசிசி ஆசியக் கிண்ண அரங்கில் இரண்டாவது வெற்றிகரமான அணியாக இலங்கை உள்ளது.

அவர்கள் ஆறு முறை கிண்ணத்தை வென்றுள்ளனர்.

இறுதியாக அவர்கள் தசுன் ஷானக தலைமையில் 2022 ஆம் ஆண்டில் வெற்றி கொண்டனர்.

இலங்கை அணி

சரித் அசலங்க (தலைவர்), பத்தும் நிஸ்ஸங்க, குசல் மெண்டீஸ், குசல் ஜனித் பெரேரா, நுவனிது பெர்னாண்டோ, கமிந்து மெண்டீஸ், கமில் மிஷாரா, தசுன் ஷானக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, சாமிக கருணாரத்ன, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பினுர பெர்னாண்டோ, நுவான் துஷார மற்றும் மதீஷா பத்திரன.

GzctDTjWYAAuOg3?format=jpg&name=medium

https://athavannews.com/2025/1445115

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா

1 month 2 weeks ago

வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான 16 ஆவது விளையாட்டுத்திருவிழா : மன்னார் புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி சாதனை படைப்பு

23 AUG, 2025 | 02:26 PM

image

2025 ஆம் ஆண்டுக்கான வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு இடையிலான 16வது விளையாட்டுத்திருவிழா 16.08.2025 தொடக்கம் 20.08.2025 வரை ஐந்து நாட்கள் வெகு விமர்சையாக நடத்தப்பட்டது.

இதில் மன்/ புனித சவேரியார் ஆண்கள் கல்லூரி 05 தங்கப்பதக்கம், 03 வெள்ளிப்பதக்கம், 04 வெண்கலப்பதக்கம், 02 நான்காம் இடம், 03 ஐந்தாம் இடம், 01 ஆறாம் இடத்தினை பெற்று மொத்தமாக 102 புள்ளிகளை பெற்று ஆண்கள் பிரிவில் முதலாவது இடத்தினைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.

மேலும் அஞ்சல் ஓட்ட சம்பியன் ஆகவும் 14 வயது மற்றும் 20 வயது பிரிவில் வடமாகாண சிறந்த அணி என்னும் விருதையும் தட்டி சென்றுள்ளது.

மேலும் 14 வயது 4×100 மீற்றர் அஞ்சல் அணி 51.9 செக்கன்களில் ஓடி புதிய சாதனை படைத்துள்ளது.

https://www.virakesari.lk/article/223182

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025

1 month 3 weeks ago

ஆசிய கோப்பை அணியில் ஸ்ரேயாஸ் இடம்பெறாதது குறித்து கிரிக்கெட் ஜாம்பவான்கள் கூறுவதென்ன?

ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 20 ஆகஸ்ட் 2025, 01:57 GMT

    புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணி நேற்று ( ஆகஸ்ட்19) அறிவிக்கப்பட்டது. இதில் டி20 அணிக்குள் சுப்மன் கில் மீண்டும் துணைக் கேப்டன் அந்தஸ்துடன் வந்துள்ளார்.

இதற்கு முன் துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேலிடமிருந்து பதவி பறிக்கப்பட்டு, கில்லிடம் தரப்பட்டுள்ளது. அதிரடி தொடக்க வீரர் ஜெய்ஸ்வால், நடுவரிசைக்கு பலம் சேர்க்கும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இதில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் ஜெய்ஸ்வால் இடம் பெற்ற நிலையில் திறமையான வீரரான ஸ்ரேயாஸுக்கு அதில்கூட இடமில்லை.

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், 2024 ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சாம்பியன் பெற்றுக் கொடுத்து சிறந்த கேப்டனாக வலம்வந்த ஸ்ரேயாஸ் ஐயர் தொடர்ந்து புறக்கணிப்படுவதாக சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும்?

தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் தலைமையில் ஆசியக் கோப்பைக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.

இளம் வீரர்கள், அனுபவம் மிகுந்த வீரர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் இருக்கும் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

15 வீரர்கள் கொண்ட இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டு, துணைக் கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் நீக்கப்பட்டு, சுப்மன் கில்லிடம் அந்தப் பதவி தரப்பட்டுள்ளது.

15 பேர் கொண்ட இந்திய அணியில் தொடக்க வீரர்களுக்கான தேர்வாக, அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சஞ்சு சாம்ஸன் ஆகியோர் இருக்கிறார்கள். சுப்மன் கில் வருகையால் டாப் ஆர்டரில் அபிஷேக் அல்லது சாம்ஸன் இருவரில் யாருக்கு வாய்ப்பு மறுக்கப்படும் எனத் தெரியவில்லை.

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் துணை கேப்டனாக இருந்த அக்ஸர் படேல் அந்த பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு,சுப்மன் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரேயாஸ் பற்றிய கேள்விக்கு பதில் என்ன?

இந்திய அணியின் தலைமைத் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியின் போது ஜெய்ஸ்வால் மற்றும் ஸ்ரேயாஸ் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அப்போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது ஏன் என்று கேட்டபோது, அதற்கு அகர்கர் " ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது வருத்தம்தான், ஆனால், அவரை சேர்த்தால் யாரை அணியில் இருந்து நீக்குவீர்கள்?

அவர் மீதும் தவறு இல்லை, எங்கள் மீதும் தவறு இல்லை. இந்த நேரத்தில் நாங்கள் 15 வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளோம், ஆதலால் வாய்ப்புக்காக ஸ்ரேயாஸ் காத்திருக்கவேண்டியதுதான்" எனத் தெரிவித்தார்.

அபிஷேக், ஜெய்ஸ்வால் குறித்து அகர்கர் பேசுகையில் " ஜெய்ஸ்வால் இடம் பெறாதது துரதிர்ஷ்டம்தான். ஆனால், அபிஷேக் கடந்த ஓர் ஆண்டாக சிறப்பாக விளையாடி வருகிறார், சிறிது பந்துவீசும் திறமையுடையவர். அந்த வாய்ப்பு இருப்பதால், 6வது பந்துவீச்சாளராகவும் பயன்படுத்தலாம் என்பதால் அவர் இடம் பெற்றார்" எனத் தெரிவித்தார்.

கில் இடம் பெற்றது குறித்து கேப்டன் சூர்யகுமார் கூறுகையில் " டி20 உலகக் கோப்பைக்குப்பின் கில்லுக்கு டி20 அணியில் பெரிதாக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இலங்கைக்கு எதிரான தொடரில்தான் கடைசியாக கில் துணைக் கேப்டன் பொறுப்பில் என்னுடன் ஆடினார்.

அதன்பின் கில் டெஸ்ட் தொடரிலும், சாம்பியன்ஸ் டிராஃபியிலும் பரபரப்பாக ஈடுபட்டிருந்தார். இதனால் அந்நாட்களில் அவரின் பெயரை பரிசீலிக்க முடியவில்லை. இப்போது அணிக்குள் கில் மீண்டும் வந்தது மகிழ்ச்சிதான்" எனத் தெரிவித்தார்.

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ், தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் டி20 போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுபவர்களின் பட்டியலை மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அறிவித்தனர்.

ஸ்ரேயாஸ் குறித்து அஸ்வினின் கணிப்பு

கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி குறித்து ஊகப் பட்டியலை வெளியிட்டிருந்தார்.

அதில் ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான வீரராக இருந்தபோதும், ஷிவம் துபே இடம் பெற்றால் ஸ்ரேயாஸுக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினம் என்று பேசியிருந்தார்.

அவரின் கணிப்பிலிருந்து சற்றும் மாறாமல் ஃபார்மில் இல்லாத துபே இடம்பெற்றார், வெற்றிக் கேப்டனாக ரசிகர்களால் புகழப்படும் ஸ்ரேயாஸ் கண்டு கொள்ளப்படவில்லை.

ஸ்ரேயாஸ் புறக்கணிக்கப்படக்கூடியவரா?

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் இடம் பெறவில்லை.

ஸ்ரேயாஸ் ஐயர் திறமையான பேட்டர், பீல்டர், கேப்டனாக ஐபிஎல் தொடர்களிலும், இந்திய அணியிலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தன்னை நிரூபித்திருக்கிறார். கடந்த இரு ஐபிஎல் சீசன்களிலும் இரு அணிகளுக்கு கேப்டனாக இருந்த ஸ்ரேயாஸ், இருமுறை இறுதிப்போட்டிக்கு அழைத்துச் சென்ற வெற்றிகரமான கேப்டன்.

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பல ஆட்டங்களில் நடுவரிசையில் சிறப்பான ஆட்டத்தை ஸ்ரேயாஸ் வழங்கியபோதிலும் "அன்சங் ஹீரோவாகவே" வலம்வந்தார். ஸ்ரேயாஸ் இன்னும் எதையெல்லாம் நிரூபித்தால் இந்திய அணிக்குள் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரியவில்லை.

2025 ஐபிஎல் சீசனில் ஸ்ரேயாஸ் 17போட்டிகளில் 604 ரன்கள் குவித்து 50 ரன்கள் சராசரியும், 175 ஸ்ட்ரைக் ரேட்டும் வைத்திருந்தார், இதில் 6 அரை சதங்களும் அடங்கும். கடந்த 2024 சீசனில் கொல்கத்தா அணிக்கு கேப்டனாக இருந்து 350க்கும் மேல் ரன்களைக் குவித்தார் ஸ்ரேயாஸ்.

இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் ஸ்ரேயாஸ் 26 டி20 போட்டிகளில் விளையாடி 949 ரன்கள் குவித்து 179 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதில் ஒரு சதம், 7 அரைசதங்களும் அடங்கும். ஸ்ரேயாஸ் தலைமையில் மும்பை அணி சயத் முஸ்தாக் அலி கோப்பையையும் வென்றது. டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் தனது பேட்டிங் திறமையை நிரூபித்த போதிலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்படுகிறது.

இந்திய அணியில் கடைசியாக 2023, டிசம்பர் 3ம் தேதி பெங்களூருவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் ஆடினார், 37 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்த ஸ்ரேயாஸ் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதன்பின் ஏறக்குறைய 2 ஆண்டுகளாகியும் அவருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை.

சமூக வலைத்தளத்தில் கொந்தளிப்பு

ஸ்ரேயாஸ் ஐயர்

பட மூலாதாரம், GETTY IMAGES

மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் தனது எக்ஸ் தளத்தில் "கடந்த ஆண்டில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் ஸ்ரேயாஸ் ஐயர் அளவுக்கு எந்த வீரரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. ஆனாலும் ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கான இடம் இன்னும் இல்லை. ஸ்ரேயாஸை யாருக்கோ பிடிக்கவில்லை என்பது மட்டும தெரிகிறது" எனத் தெரிவித்திருந்தார்.

முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்தில் " ஸ்ரேயாஸ் டி20 அணியில் இருக்க வேண்டும் என்பதில் என் மனதில் எந்த சந்தேகமும் இல்லை, அது மட்டுமல்லாமல் கேப்டனுக்குரிய தகுதிப்பட்டியலிலும் ஸ்ரேயாஸ் இருப்பவர். இந்த நேரத்தில் ஸ்ரேயாஸுக்கு பொறுமைதான் முக்கியமான கருவியாக இருக்கும்" எனத் தெரிவித்திருந்தார்.

வழக்கமான வீரர்கள்

நடுவரிசை மற்றும் கீழ்வரிசை பேட்டிங்கிற்கு கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ஆகியோர் உள்ளனர். இதில் கடந்த ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங் ஃபார்மிலேயே இல்லை, ஆனால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் சாம்ஸன், ஜிதேஷ் சர்மா என இரு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் கீழ்வரிசையிலும், நடுவரிசையிலும் ஜிதேஷ் சர்மா சிறப்பாக ஆடக் கூடியவர், நல்ல ஃபினிஷிங் தரக்கூடியவர், சாம்ஸன் தொடக்க வீரராகவும், ஒன்டவுனிலும் சிறப்பாக பேட் செய்யக்கூடியவர்.

இதில் டாப் ஆர்டரில் அபிஷேக், கில் களமிறங்கினால், சாம்ஸன், ஜிதேஷ் இருவரில் யாரேனும் ஒருவர் வெளியே அமரவைக்கப்படுவார்கள். இதில் யாருக்கு வாய்ப்புக் கிடைக்கப்போகிறது என்பதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை அபிஷேக் சர்மா அமரவைக்கப்பட்டால் சாம்ஸன், கில் கூட்டணி டாப்ஆர்டராக களமிறங்கலாம். ஜிதேஷ் அமரவைக்கப்பட்டு கூடுதலாக பேட்டர் அல்லது பந்துவீச்சாளர் வரலாம்.

இரு தமிழக வீரர்கள்

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

வேகப்பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்சித் ராணா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர், சுழற்பந்துவீச்சுக்கு குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேல் ஆகிய 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதில் ஆல்ரவுண்டர்களாகவும், நடுவரிசை பேட்டிங்கை ஸ்திரப்படுத்த ஹர்திக் பாண்டியா, அக்ஸர் படேலுக்கு வாய்ப்புக் கிடைத்தால், வேகப்பந்துவீச்சில் ராணா அமரவைக்கப்பட்டு அர்ஷ்தீப், பும்ரா மட்டுமே இடம் பெறக்கூடும். சுழற்பந்துவீச்சுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் வருண், அக்ஸர், குல்தீப் இடம் பெறலாம்.

ரிசர்வ் வீரர்களாக 5 பேர் இடம் பெற்றுள்ளனர். ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வாலுக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை, ஆனால், ரிசர்வ் வீரர்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளனர். இவர் தவிர பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

சுப்மன் கில் வருகை ஏன்?

Asia Cup T20

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஆசிய கோப்பை டி20 போட்டிக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம் பெற்றுள்ளார்.

சுப்மன் கில் கடைசியாக 2024 ஜூலையில் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் விளையாடினார் அதன்பின் இந்திய டி20 அணியில் இடம் பெறவில்லை. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் மட்டும் கில்லுக்கு இந்திய அணி நிர்வாகம் முக்கியத்துவம் அளித்தது.

இதனால், இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் நடந்த டி20 தொடரில்கூட துணைக் கேப்டனாக அக்ஸர் படேல் நியமிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், சாம்பியன்ஸ் டிராஃபி, இங்கிலாந்துக்கு எதிரான சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் தொடரை சமன் செய்தது போன்றவற்றில் கில்லின் அற்புதமான ஆட்டம் வெளிப்பட்டதையடுத்து, அவருக்கு மீண்டும் டி20 அணியில் வாய்ப்புக் கிடைத்தது.

கடந்த ஐபிஎல் சீசனில்கூட கில் 650 ரன்கள் குவித்து 155 ஸ்ட்ரைக் ரேட் வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி விவரம்

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), சுப்மன் கில்(துணைக் கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஷிவம் துபே, அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்சித் ராணா, ரிங்கு சிங், சஞ்சு சாம்ஸன்

ரிசர்வ் வீரர்கள்( பிரசித் கிருஷ்ணா, வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், துருவ் ஜூரெல், யஷஸ்வி ஜெய்ஸ்வால்)

17-வது ஆசியக் கோப்பை

17-வது ஆசியக் கோப்பை டி20 தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி நகரங்களில் செப்டம்பர் 9 முதல் 28ம் தேதி வரை நடக்கிறது.

இதில் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் முழு உறுப்பு நாடுகளான நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியவை தேர்வு பெற்றநிலையில், இந்த முறை 2024 ஆசிய ப்ரீமியர் கோப்பையில் முதல் 3 இடங்களைப் பிடித்த ஐக்கிய அரபு அமீரகம், ஹாங்காங், ஓமன் அணிகளும் என மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த 8 அணிகளும் குரூப் ஏ, குரூப் பி என இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பிரிவிலும் தலா 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்,ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்களின் குரூப்பில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும், முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்குத் தகுதி பெறும். இந்த சூப்பர் 4 சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். இந்த சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்லும்.

இந்தியா-பாக். போட்டி

இந்திய அணி செப்டம்பர் 10ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணியையும், 14ம் தேதி துபாயில் நடக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணியையும் எதிர்கொள்கிறது. 19ம் தேதி நடக்கும் கடைசி லீக்கில் ஓமன் அணியை இந்திய அணி எதிர்கொள்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c0r7jjp1jxro

Checked
Sat, 10/11/2025 - 17:51
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed