விளையாட்டுத் திடல்

தடகள வீரர் அருந்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை

1 month 3 weeks ago

இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை

19 AUG, 2025 | 06:16 PM

image

தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் திங்கட்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் செவ்வாய்க்கிழமை (19) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார்.

இந்த வெற்றியின் மூலம் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதரன் தக்கவைத்துக்கொண்டார்.

WhatsApp_Image_2025-08-19_at_5.00.33_PM.

WhatsApp_Image_2025-08-19_at_5.00.34_PM_

WhatsApp_Image_2025-08-19_at_5.00.34_PM_

WhatsApp_Image_2025-08-19_at_5.00.35_PM_

WhatsApp_Image_2025-08-19_at_5.00.35_PM.

WhatsApp_Image_2025-08-19_at_5.00.37_PM.

WhatsApp_Image_2025-08-19_at_5.00.36_PM.

WhatsApp_Image_2025-08-19_at_5.00.34_PM.

https://www.virakesari.lk/article/222900

பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 34 வருடங்களின் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

13 AUG, 2025 | 02:31 PM

image

(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசிப் போட்டியில் 202 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய மேற்கிந்தியத் தீவுகள் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் கைப்பற்றியது.

இதன் மூலம் பாகிஸ்தானுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒன்றில் 34 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக மேற்கிந்தியத் தீவுகள் வெற்றிபெற்றுள்ளது.

அணித் தலைவர் ஷாய் ஹோப் குவித்த ஆட்டம் இழக்காத சதமும் ஜேடன் சீல்ஸின் 6 விக்கெட் குவியலும் மேற்கிந்தியத் தீவுகளின் தொடர் வெற்றியில் பிரதான பங்காற்றின.

1308_shai_hope.png

ட்ரினிடாட், டரூபா ப்றயன் லாரா விளையாட்டரங்கில் நேற்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களைக் குவித்தது.

இந்தப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் 42ஆவது ஓவர் வரை ஓட்டங்களைப்   பெறுவதில் சிரமத்தை எதிர்கொண்டதுடன் 42ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 6 விக்கெட் இழப்புக்கு 184 ஓட்டங்களாக இருந்தது.

ஆனால், அதன் பின்னர் ஷாய் ஹோப், ஜஸ்டின் க்றீவ்ஸ் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 7ஆவது விக்கெட்டில் 50 பந்துகளில் 110 ஓட்டங்களைப் பகிரந்து மேற்கிந்தியத் திவுகளின் மொத்த எண்ணிகையை 294 ஓட்டங்களாக உயர்த்தினர்.

ஆறாவது விக்கெட் வீழ்ந்தபோது 68 பந்துகளில் 60 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்த ஷாய் ஹோப, அடுத்த 26 பந்துகளில் மேலும் 60 ஓட்டங்களைக் குவித்து 94 பந்துகளில் 10 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 120 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

ஜஸ்டின் க்றீவ்ஸ் 24 பந்துகளில் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்த இருவரைவிட எவின் லூயிஸ் 37 ஓட்டங்களையும் ரொஸ்டன் சேஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நசீம் ஷா 72 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது ஜேடன் சீல்ஸின் வேகபந்துவீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 29.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 92 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

1308_jayden_seals.png

துடுப்பாட்டத்தில் சல்மான் அகா (30), மொஹம்மத் நவாஸ் (23), ஹசன் நவாஸ் (13) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைளைத் தொட்டனர்.

சய்ம் அயூப், அப்துல்லா ஷபிக், அணித் தலைவர் மொஹம்மத் ரிஸ்வான், ஹசன் அலி, அப்ரார் அஹ்மத் ஆகிய ஐவர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.

பந்துவீச்சில் ஜேடன் சீல்ஸ் 7.2 ஓவர்களில் 18 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: ஷாய் ஹோப்; தொடர்நாயகன்: ஜேடன் சீல்ஸ்

https://www.virakesari.lk/article/222480

ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி?

1 month 4 weeks ago

தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமி

கட்டுரை தகவல்

  • க.போத்திராஜ்

  • பிபிசி தமிழுக்காக

  • 11 ஆகஸ்ட் 2025

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள்.

ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர்

தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, கேசவ் மகராஜ் உள்ளிட்டோர் விளையாடி இருந்தாலும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வீரர் ஒருவர்கூட விளையாடியதில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செனுரன் முத்துசாமி இடம் பெற்று விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.

செனுரன் முத்துசாமியின் டெஸ்ட் போட்டி அறிமுகமே அமர்க்களமாக இருந்தது. 2019ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய முத்துசாமி விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து, வாழ்வில் மறக்க முடியாத வகையில் முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது தென் ஆப்ரிக்க டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களை அதன் சொந்த மண்ணில் திணறவிட்டு, நிலைகுலைய வைப்பது எளிமையானது அல்ல. அதிலும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சுழற்பந்துவீச்சு மூலம் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஒரு பந்துவீச்சாளர் இருந்துவிட்டால் உலக கிரிக்கெட்டின் பார்வையை ஈர்த்துவிடுவார்.

அந்த வகையில் தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி இப்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளார். இடதுகை சுழற்பந்து(ஆர்த்தடாக்ஸ்) வீச்சாளரான முத்துசாமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2 நாட்களுக்கு முன் முடிந்த முதல் டி20 போட்டியில் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய முத்துசாமி 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

4 ஓவர்கள் வீசி, 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 4 ஓவர்கள் வீசி, 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

யார் இந்த செனுரன் முத்துசாமி?

செனுரன் முத்துசாமி தென் ஆப்ரிக்காவில் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ளார். முதல் தரப்போட்டிகளில் 9 சதங்கள், 20 அரைசதங்கள் உள்ளிட்ட 5,111 ரன்களையும், 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஏ லிஸ்ட் போட்டிகளில் 2,364 ரன்களையும், 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்துசாமி அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்தான் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை 5 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முத்துசாமி 173 ரன்கள் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் தென் ஆப்ரிக்க ஒருநாள், டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புப் பெற்று முத்துசாமி விளையாடி வருகிறார். 4 டி20 போட்டிகளில் ஆடிய முத்துசாமி 4 விக்கெட்டுகளை எடுத்து, 15 ரன்கள் சேர்த்துள்ளார். கீழ்வரிசை பேட்டராக, முத்துசாமி தென் ஆப்ரிக்க அணியில் களமிறங்குவதால், பேட்டிங் செய்வதற்கு பெருமளவு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஜனநாயகமும்- முத்துசாமியின் பிறப்பும்

தென் ஆப்ரிக்காவில் நாடல் மாகாணத்தில், டர்பன் நகரில் 1994ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி செனுரன் முத்துசாமி பிறந்தார். தென் ஆப்பிரிக்கா தேசம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு, 1994ம் ஆண்டுதான் ஜனநாயகத்துக்கு திரும்பியது. அந்த நேரத்தில் அந்நாட்டில் பிறந்தவர்தான் செனுரன் முத்துசாமி.

அதனால்தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.

முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.

தமிழகத்தில் நாகப்பட்டினம் பூர்வீகம்

செனுரன் முத்துசாமியின் பூர்வீகம் சென்னைதான் என்றாலும், உறவினர்கள் பலரும் இன்னும் நாகை மாவட்டம், நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார்கள். முத்துசாமியின் தந்தைவழி தாத்தா காலத்திலேயே தென் ஆப்ரிக்காவுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர். இருப்பினும், தமிழக்கத்தில் உள்ள உறவினர்களோடு முத்துசாமி குடும்பத்தினருக்கு உறவுநிலை இன்னும் தொடர்ந்து வருகிறது.

இந்த தகவலை ஒரு பேட்டியில் செனுரன் முத்துசாமியே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செனுரன் முத்துசாமி, தென் ஆப்ரிக்காவில் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருப்பதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' நாளேட்டுக்கு கடந்த 2019ம் ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மேலும், "தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றபோதிலும், தமிழகத்துக்கு இருமுறை வந்து நாகையில் உள்ள உறவினர்களை சந்தித்துச் சென்றிருக்கிறேன். என் குடும்பத்தினர் சிலர், உறவினர்கள் இன்னும் நன்றாக தமிழ் பேசினாலும், எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன். இந்தியாவுடன் எங்களுக்கு இருக்கும் பிணைப்பு அற்புதமானது, எங்கள் கலாசாரம் எப்போதும் இந்தியராகவே வைத்திருக்கிறது" என முத்துசாமி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.

"எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன்" என்றார் முத்துசாமி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, "எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன்" என்றார் முத்துசாமி

சிறுவயதிலேயே கிரிக்கெட் பயிற்சி

டர்பனில் உள்ள கிளஃப்டன் கல்லூரியில் படிப்பை முடித்த முத்துசாமி, க்வா ஜூலு நாடல் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். டர்பனில் முத்துசாமி வசித்தபோது சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆசையோடு இருந்ததால், முதல் வகுப்பு படிக்கும்போதே முறையான பயிற்சியில் பெற்றோரால் சேர்க்கப்பட்டார்.

க்வா ஜூலு நாடல் மாகாணத்தில் 11 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் செனுரன் முத்துசாமி சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றார், பள்ளிப் போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் முத்துசாமியின் ஆட்டம் பிரமாதப்படுத்தியது.

முத்துசாமியின் திறமையான ஆட்டம் அவரை தென் ஆப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்குள் தேர்வு செய்ய வைத்தது. இவரின் ஆட்டத்தைப் பார்த்த டால்பின் அணி, 2015-16ம் ஆண்டு அணியில் ஒப்பந்தம் செய்தது.

அதன்பின் க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி இடம் பெற்று விளையாடினார், 2017ம் ஆண்டு டி20 குளோபல் லீக் தொடரில் கேப்டவுன் நைட் ரைடர்ஸ் அணிக்காக முத்துசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

2018ம் ஆண்டு நடந்த ஆப்ரிக்க டி20 கோப்பைத் தொடருக்காக க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2021, ஏப்ரல் மாதத்தில் நார்த்வெஸ்ட் அணியிலும் முத்துசாமி இடம் பெற்றார்.

2021-22ம் ஆண்டு நடந்த சிஎஸ்ஏ எனப்படும் கிரிக்கெட் சவுத் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரில் முத்துசாமி தனது முதல் சதத்தை மேற்கு மாகாணத்துக்கு எதிராகப் பதிவு செய்தார். இதுதான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முத்துசாமியின் முதல் சதமாக அமைந்தது.

சங்கக்கராவால் ஈர்க்கப்பட்டவர்

2016-17ம் ஆண்டில் டால்பின் அணியில் நிரந்தரமாக முத்துசாமிக்கு இடம் கிடைத்தது. பேட்டிங்கைப் பொருத்தவரை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககராவை பின்பற்றி அவரைப் போல் பேட்டிங் செய்ய முத்துசாமி ஆர்வமாகினார், அவரின் பேட்டிங் ஸ்டைலைப் போலவே பல ஷாட்களையும் முத்துசாமி தனது ஆட்டத்தில் கொண்டு வந்தார்.

முத்துசாமிக்கு திருப்புமுனையாக அமைந்தது 2017-18ம் ஆண்டு சீசன்தான். இதில் நைட்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரராக ஆடிய முத்துசாமி 181 ரன்கள் குவித்தார். அதன்பின் தனது பேட்டிங் வரிசையை கீழ்வரிசைக்கு மாற்றிய முத்துசாமி, சுழற்பந்துவீச்சில் கவனத்தைச் செலுத்தினார். அந்த ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி, 4 விருதுகளையும், அந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார்.

2018ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட முத்துசாமிக்கு சுழற்பந்துவீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு இந்தியப் பயணத்துக்கு தயார் செய்யப்பட்டார்.

2017-18ஆம் ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 2017-18ஆம் ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி

மறக்க முடியாத முதல் விக்கெட்

இதற்கிடையே க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமியின் ஆட்டத்தைப் பார்த்த தென் ஆப்ரிக்க அணியின் தேர்வாளர்கள், 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் முத்துசாமியை தேர்வு செய்தனர்.

இதையடுத்து, 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துசாமி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதி நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார்.

முத்துசாமிக்கு டெஸ்ட் அறிமுகம் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. டெஸ்ட் வாழ்க்கையில் தனது முதல் விக்கெட்டாக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை 20 ரன்னில் காட்அன்ட் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து முத்துசாமி மறக்க முடியாத நினைவுகளைப் பெற்றார்.

அதன்பின் தென் ஆப்ரிக்க அணியில் மீண்டும் இடம் பெற முத்துசாமிக்கு நீண்ட இடைவெளி காத்திருக்க நேர்ந்தது. கேசவ் மகராஜ், ஷம்சி உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களின் கடும் போட்டியால் 6 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டிலிருந்து மீண்டும் அணிக்குள் முத்துசாமி வாய்ப்புப் பெற்றார்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்க அணியில் முத்துசமி இடம் பெற்றாலும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.

"இதற்காகத்தான் காத்திருந்தேன்"

தென் ஆப்பிரிக்க அணிக்குள் மீண்டும் வந்தது குறித்து முத்துசாமி கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் "மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தது அற்புதமான தருணம். இந்த வாய்ப்புக்காகத்தான் நான் இதுவரை காத்திருந்தேன், கடந்த சில மாதங்களாக சீரான வாய்ப்புக் கிடைப்பது சிறப்பானது.

அணிக்குள் இருந்தாலும், வீரர்களுக்கு குளிர்பானங்கள் அளிக்கும் வேலையே செய்தபோதிலும் என்னால் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனால்தான் என்னால் அணிக்குள் வர முடிந்தது. வித்தியாசமான தளங்களில் விளையாடும் பக்குவத்தை பெற முடிந்தது" எனத் தெரிவித்தார்.

பயிற்சியாளர் கான்ராட்டின் முயற்சி

தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்றபின் அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக புதிய பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் புதிய வீரர்களை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளித்து வருகிறார். அதில் முக்கியமானவர் முத்துசாமி.

முத்துசாமிக்கு திறமை இருந்தபோதிலும் போதுமான வாய்ப்புக் கிடைக்காமல் சர்வதேச அளவில் 8 ஆட்டங்களில் மட்டுமே ஆடி இருந்தார். அவருக்கு தொடர்ச்சியாக கடந்த பாகிஸ்தான், ஜிம்பாப்பே தொடரிலிருந்து வாய்ப்புகளை வழங்கி பயிற்சியாளர் கான்ராட் ஊக்கப்படுத்தி வருகிறார்.

இந்தியாவை ஒப்பிடும்போது தென் ஆப்ரிக்காவில் திறமையான இளம் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், இங்கிலாந்தை விட தொழில்முறை நிலை (professionalism) குறைவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது பொதுமக்களின் கவன ஈர்ப்பு மிகக் குறைவாக வைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுகிறது. சமவாய்ப்பு வழங்குவது, நிதி சிக்கல் மற்றும் பிற வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட யதார்த்தங்களை மீறி தென் ஆப்ரிக்கா முத்துசாமி போன்ற வீரர்களை வளர்த்தெடுத்து வெற்றி பெறுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c62wwjqjvd8o

யாழில் நவீன வசதிகளைக்கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்படும் என்கிறார் விளையாட்டுத்துறை அமைச்சர்

2 months 1 week ago

30 JUL, 2025 | 10:46 PM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணம் பிரதேசத்தை மையமாகக் கொண்டு நவீன வசதிகளைக் கொண்ட உள்ளக விளையாட்டரங்கம் ஒன்றை நிருமாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்தார்.

இதுவரை உள்ளக விளையாட்டரங்குகள் நிர்மானிக்கப்படாத பகுதிகளில் தரமான உள்ளக விளையாட்டரங்குகளை அமைப்பதற்கு எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.

'யாழ்ப்பாணம் பிரதேசத்தில் உள்ளக அரங்கு இல்லை என்பதை யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் அதுதான் உண்மை. எனவே, இந்த வருடம் யாழ்ப்பாணம் உட்பட பல பகுதிகளில் உள்ளக விளையாட்டு அரங்குகளை நிருமானிப்பது குறித்து நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டரங்கை இந்த வருடம் நிருமாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது' என்றார் அவர்.

நாடு முழுவதும் விளையாட்டுகளை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த வருடம் 100 விளையாட்டரங்குகளின் மேம்பாட்டுப் பணிகளை ஆரம்பிக்க விளையாட்டுத்துறை அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த  வருடம் சமர்ப்பிக்கப்படவுள்ள பட்ஜெட்டில் இருந்து நிதி ஒதுக்கி 2 உயர்தர செயற்கை ஓடு பாதைகளை நிர்மாணிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. கண்டியில் ஒரு செயற்கை ஓடுபாதை மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது, மற்றொன்று கிளிநொச்சி அல்லது அனுராதபுரத்தில் நிருமாணிக்கப்படும்.

பாடசாலைகளில் விளையாட்டுத்துறை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் அதன் கீழ் விளையாட்டுத்துறை உபகரணங்கள் ஏற்கனவே விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தரமான மைதானங்களை நிர்மாணிப்பது அத்தியாவசியமாகும். அதன் மூலம் இளம் சமுதாயத்தினரின் ஆற்றல்களை அதிகரிக்கச் செய்து சர்வதேச அரங்கில் பிரகாசிக்க செய்யமுடியும் எனவும் அமைச்சர் கூறினார்.

https://www.virakesari.lk/article/221407

இந்திய மகளிர் செஸ் உலகில் புதிய வரலாறு: உலகக்கோப்பை பைனலில் 2 இந்தியர்கள் பலப்பரீட்சை

2 months 2 weeks ago

கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கோனேரு ஹம்பி மற்றும் திவ்யா தேஷ்முக் ஆகியோர் சதுரங்க உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள்.

கட்டுரை தகவல்

  • மனோஜ் சதுர்வேதி

  • பிபிசி இந்தியின் மூத்த விளையாட்டு பத்திரிகையாளர்.

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

கிராண்ட் மாஸ்டர் கோனேரு ஹம்பியோ அல்லது அவரது வயதில் பாதி வயதுடைய திவ்யா தேஷ்முக்கோ, சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலக சதுரங்கக் கோப்பையில் வென்றால், இது இந்திய மகளிர் சதுரங்க வரலாற்றில் ஒரு முக்கிய சாதனையாக அமையும்.

ஏனென்றால், இதுவரை எந்த இந்திய வீராங்கனையும் ஃபிடே உலக சதுரங்கக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றதில்லை. ஆனால் இப்போது, இந்த இரு வீராங்கனைகளும் இந்தியாவுக்கான வெற்றியை உறுதி செய்துள்ளனர்.

கோனேரு ஹம்பி, கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண். கேண்டிடேட்ஸ் தொடருக்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக தகுதி பெற்ற முதல் இந்திய வீராங்கனையும் இவர் தான்.

கேண்டிடேட்ஸ் தொடரில் இந்தியா சார்பில் 2 வீராங்கனைகள் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். திவ்யா தேஷ்முக், இந்த தொடரில் ஏற்கெனவே தகுதி பெற்றுள்ளார்.

உலக சாம்பியனுடன் போட்டியிடுவது யார் என்பது கேண்டிடேட்ஸ் தொடரில் தீர்மானிக்கப்படும்.

பட்டத்தை வெல்லப் போவது யார் ?

ஹம்பிக்கும் திவ்யாவுக்கும் இடையில் பட்டத்தை வெல்வதற்கான போட்டி என்பது, இரண்டு தலைமுறைகளுக்கு இடையிலான போராட்டமாக வர்ணிக்கப்படுகிறது.

திவ்யா தனக்கு எதிராக விளையாடப் போகும் ஹம்பியின் வயதில் பாதி வயதே உடையவர். அதாவது, ஹம்பிக்கு 38 வயது, திவ்யாவுக்கு 19 வயது.

2014-ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட ஹம்பிக்கு , அஹானா என்ற மகள் உள்ளார். அஹானா பிறந்த பிறகு அவர் இரண்டு ஆண்டுகள் போட்டியில் இருந்து விலகி இருந்தார்.

ஹம்பி நீண்ட காலமாக சதுரங்க போட்டிகளில் விளையாடி வந்தாலும், அவரது மகள் பிறந்த பிறகுதான் அவர் பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

2017 இல் அவரது மகள் பிறந்த பிறகு, 2019 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உலக ரேபிட் செஸ் பட்டங்களை வென்றார் ஹம்பி.

இப்போது சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு (FIDE) நடத்தும் மகளிர் உலகக் கோப்பை பட்டத்தை வெல்லும் தருவாயில் உள்ளார்.

மோசமான சூழல் காரணமாக ஓய்வு பெற நினைக்கும் போதெல்லாம், ஏதாவது ஒரு அதிசயம் நடப்பதாகவும், அது தன்னை தொடர்ந்து விளையாடத் தூண்டுவதாகவும் கூறுகிறார் ஹம்பி .

கடந்த வருடம் தனது 37 வயதில் ஓய்வு பெறுவது பற்றி யோசிக்கத் தொடங்கியிருந்தார். அந்த நேரத்தில் பெரிதாக வெற்றி ஏதும் கிடைக்கவில்லை.

ஆனால், உலக ரேபிட் செஸ் பட்டத்தை வென்ற பிறகு, ஹம்பி தனது சதுரங்க பயணத்தை தொடர வேண்டும் என்று முடிவு செய்தார்.

ஹம்பி போராட்டம்

ஹம்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஹம்பி 2002 ஆம் ஆண்டு 15 வயதில் கிராண்ட்மாஸ்டர் ஆனதன் மூலம் தனது திறமையை நிரூபித்தார். இந்த சாதனையை 2008 ஆம் ஆண்டு சீனாவின் ஹூ யிஃபான் முறியடித்தார்.

கோனேரு ஹம்பியும், திவ்யா தேஷ்முக்கும் அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனைகளைத் தோற்கடித்தனர்.

ஆனால் திவ்யாவை எதிர்த்து வெற்றி பெற, ஹம்பி போராட வேண்டியிருந்தது.

ஹம்பி தற்போதைய உலக ரேபிட் சாம்பியனாக உள்ளார். ஆனால் ஆரம்ப ரேபிட் ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி செயல்பட முடியாமல் சீனாவின் டிங்ஜி லீக்கு எதிராக தோல்வியடைந்தார்.

கடைசி ரேபிட் ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம், ஹம்பி போட்டியை 'டை பிரேக்கர்ஸ்' எனப்படும் பிளிட்ஸ் ஆட்டங்களுக்கு கொண்டு சென்றார்.

இந்தப் போட்டிகளில் ஹம்பி முழு நம்பிக்கையுடன் விளையாடியதைக் காண முடிந்தது. இரண்டு ஆட்டங்களிலும் வென்ற ஹம்பி, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இந்திய சதுரங்க வரலாற்றில் ஒரு பொன்னான வாய்ப்பு

திவ்யா தேஷ்முக்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, திவ்யா தேஷ்முக் 2013 ஆம் ஆண்டு தனது ஏழு வயதில் சாதனை படைத்தார்.

இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு பேசிய கோனேரு ஹம்பி, "இந்திய சதுரங்க வரலாற்றுக்கு இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இந்த உலகக் கோப்பைப் போட்டியில் திவ்யா மிகச் சிறப்பாக செயல்பட்டதால் இறுதிப் போட்டி மிகவும் கடினமாக இருக்கும்" என்றார்.

மேலும் "டிங்ஜிக்கு எதிரான ரேபிட் செஸ் போட்டியின் ஆரம்பப் போட்டி மிகவும் கடினமாக இருந்தது. என்னால் நன்றாக விளையாட முடியவில்லை. ஆனால் பிளிட்ஸ் விளையாட்டுகளில் நான் முழு நம்பிக்கையுடன் விளையாடினேன்" என்றும் கூறினார்.

கோனேரு ஹம்பி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2021 ஆம் ஆண்டில், கோனேரு ஹம்பி பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை பட்டத்தை வென்றார்.

சாதனை படைத்த திவ்யா

திவ்யாவின் சதுரங்கப் பயணம் சாதனைகளால் நிறைந்தது.

அவர் 2013 ஆம் ஆண்டு 7 வயதில் பெண்கள் ஃபிடே (FIDE) மாஸ்டர் ஆனார். இளம் வயதில் இந்த மைல்கல்லை எட்டிய வீராங்கனை என்ற பெருமையும் அவருக்குச் சொந்தமானது.

ஜார்ஜியாவின் படுமி நகரில் நடைபெறும் இந்த உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் அந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் திவ்யா பெற்றார்.

இதன் மூலம், 34 ஆண்டு வரலாற்றில் கேண்டிடேட்ஸ் தொடரில் விளையாட தகுதி பெற்ற இளம் வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரராக உள்ளார் திவ்யா .

அது மட்டுமின்றி, கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான தகுதியையும் அவர் நெருங்கியுள்ளார். கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கு அவருக்கு இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை.

அவ்வாறு வெற்றி பெற்றால், கிராண்ட்மாஸ்டரான நான்காவது இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் திவ்யா படைப்பார்.

இதற்கு முன்பு, கோனேரு ஹம்பி, டி. ஹரிகா மற்றும் வைஷாலி ரமேஷ்பாபு ஆகியோர் மட்டுமே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற இந்திய பெண்கள்.

திவ்யா சதுரங்க வீராங்கனையானது எப்படி?

சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்தது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்வத்தால், அவரும்  ஒரு சதுரங்க வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2012 ஆம் ஆண்டு தேசிய சதுரங்கப் போட்டியில் திவ்யா 7 வயதுக்குட்பட்ட பிரிவில் பட்டத்தை வென்றார்.

தற்செயலாகவே தாம் சதுரங்க வீராங்கனை ஆனதாக திவ்யா கூறுகிறார்.

"என் அக்கா பூப்பந்து விளையாடுவாள், என் பெற்றோர் அக்காவுடன் செல்வார்கள். அப்போது எனக்கு நான்கு-ஐந்து வயது இருக்கும், நானும் அவளுடன் செல்ல ஆரம்பித்தேன். நானும் பூப்பந்து விளையாட முயற்சித்தேன், ஆனால் வலையை கூட எட்ட முடியவில்லை. அதே ஹாலில் சதுரங்கம் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான் அதனைப் பார்க்கத் தொடங்கினேன்" என்று திவ்யா தெரிவித்தார்.

சதுரங்கம் விளையாடுவதைப் பார்த்தது அவருக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆர்வத்தால், அவரும் ஒரு சதுரங்க வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.

திவ்யாவின் சகோதரி சிறிது காலத்திற்குப் பிறகு பூப்பந்து விளையாடுவதை நிறுத்திவிட்டார், ஆனால் அவரது அர்ப்பணிப்பால், திவ்யா இதற்கு முன்பு எந்த இந்திய வீராங்கனையும் எட்டாத நிலையை அடையப் போகிறார்.

சதுரங்கத்தின் மீதான திவ்யாவின் ஆர்வத்தைக் கண்டு, அவரது தந்தை ஜிதேந்திராவும் தாய் நம்ரதாவும் நாக்பூரில் உள்ள தங்கள் வீட்டிற்கு அருகில் அமைந்துள்ள சதுரங்க அகாடமியில் அவரது பெயரைப் பதிவு செய்தனர்.

இரண்டு வருட பயிற்சியிலேயே தனது திறமையை வெளிப்படுத்தத் தொடங்கிய திவ்யா, 2012 ஆம் ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப்பில் 7 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் பட்டம் வென்றார்.

இதன் பிறகு, திவ்யாவுக்கு வெற்றிமேல் வெற்றிதான். அதன் நீட்சியாக, சர்வதேச சதுரங்க அரங்கில் பிரகாசிக்கத் தொடங்கினார்.

'ஆனந்தின் குறிப்புகள் எனக்கு சரியான திசையைக் கண்டறிய உதவின'

விஸ்வநாதன் ஆனந்த்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த சாதனை திவ்யாவுக்கு மிகப்பெரியது என்கிறார் விஸ்வநாதன் ஆனந்த்.

2020 ஆம் ஆண்டு வாக்கில், இந்திய ஒலிம்பியாட் அணியின் உறுப்பினரான திவ்யா, நாட்டின் சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகக் கருதப்பட்டார்.

இதனால் விளைந்த நன்மையாக, விஸ்வநாதன் ஆனந்திடமிருந்து அவருக்கு தொடர்ந்து குறிப்புகள் கிடைக்கத் தொடங்கின.

அவரது விளையாட்டில் ஏற்பட்ட முன்னேற்றத்தால், அவர் முதலில் 2023 இல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனார். பின்னர் சர்வதேச மாஸ்டர் ஆனார்.

இப்போது அவர் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறும் தருவாயில் இருக்கிறார்.

"இது ஒரு மிகப்பெரிய சாதனை. உண்மை என்னவென்றால், அவர் ஜு ஜினர், டான் சோங்ஜி மற்றும் ஹரிகா போன்ற சிறந்த வீராங்கனைகளை தோற்கடித்துள்ளார். திவ்யா சிறந்த ஆற்றல் கொண்ட வீராங்கனை. எனவே இது எதிர்பாராதது அல்ல. மக்கள் இதை அவரிடமிருந்து எதிர்பார்த்தனர், அதை அவர் நிரூபித்துள்ளார்" என்று திவ்யாவைப் பற்றி விஸ்வநாதன் ஆனந்த் கூறுகிறார்.

இந்திய சதுரங்கத்தின் பொற்காலம்

கடந்த சில வருடங்களாக இந்திய சதுரங்கம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

விஸ்வநாதன் ஆனந்த் பல முறை உலகளவில் பட்டங்களை வென்று சதுரங்க உலகில் இந்தியாவின் நற்பெயரை உயர்த்தியுள்ளார் என்பது உண்மை தான்.

கடந்த ஆண்டு, இந்திய சதுரங்க வரலாற்றில் முதல் முறையாக, டி. குகேஷ், அர்ஜுன் எரிகேசி, ஆர். பிரக்ஞானந்தா மற்றும் அரவிந்த் ஆகிய நான்கு வீரர்கள் உலக தரவரிசையில் முதல் பத்து இடங்களுக்குள் வந்தனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா முதல் முறையாக இரட்டை தங்கம் வென்றது. அப்போது, ஆனந்துக்குப் பிறகு உலக சாம்பியனான இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை டி. குகேஷ் பெற்றார்.

இப்போது திவ்யா தேஷ்முக் மற்றும் கோனேரு ஹம்பி ஆகியோர் புதிய வரலாற்றை உருவாக்கும் தருணம்.

'பிடே' பெண்கள் உலகக் கோப்பை செஸ் சாம்பியன் யார் என்பதை தீர்மானிக்க இருவரும் இன்று மீண்டும் மோதுகிறார்கள். இரு ஆட்டங்கள் கொண்ட இறுதி சுற்றில் நேற்றைய போட்டி டிரா ஆனது. இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறுபவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவார். மாறாக ஆட்டம் டிராவில் முடிந்தால், டைபிரேக்கர் முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்படுவார்.

யார் வெற்றி பெற்றாலும், இந்தியா நிச்சயமாக தலை நிமிர்ந்து நிற்கும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyrg2jrp9eo

23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது

2 months 2 weeks ago

விந்தைமிகு தருணத்தில் உத்தியோகபூர்வ க்ளாஸ்கோ 2026 சின்னம் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டது

24 JUL, 2025 | 05:00 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய இராச்சியத்தின் க்ளோஸ்கோவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள 23ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான உத்தியோகபூர்வ ஃபின்னி சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது.

1_glasgow_2026_mascot_finney.png

2026 ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவின் 23ஆவது அத்தியாயம் க்ளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழா என அழைக்கப்படுகிறது.

இந்த விழா ஆரம்பமாவதற்கு சரியாக ஒரு வருடத்திற்கு முன்னர் இந்த சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும்.

தூய்மை, அப்பாவித்தனம், ஆண்மை மற்றும் சக்தியைப் பிரதிபலிக்கும் பெருமைமிகு க்ளாஸ்வேஜியன் யுனிகோன் ஃபின்னி என அழைக்கப்படும் இந்த சின்னம், ஜூலை 23ஆம் திகதி விடியற்காலை வேளையில் க்ளைட்சைட் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஃபின்னிஸ்டன் பாரத்தூக்கியின் அருகில் வைத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

2_finney_was_introduced_neat_crane.jpg

இந்த விந்தையான சின்னம், கிளாஸ்கோ முழுவதும் உள்ள பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 24 பாடசாலைகள் கல்வி பயிலும் 76 பிள்ளைகளின் கற்பனையால் உருவாக்கப்பட்டது. அவர்கள் சின்னம் தயாரிப்பாளர்கள் என அழைக்கப்படுகிறார்கள்.

மிக உயரமான பாரத்தூக்கியில் சின்னம் தொங்கவிடப்பட்டதன் மூலம் க்ளாஸ்கோ பொதுநலவாய விளையாட்டு விழாவுக்கான இறங்குமுக கணிப்பை கொண்டாடும் நாளாக ஜூலை 23ஆம் திகதி அமைந்தது.

இதன் போது பொதுநலவாய விழா 10,000 மீற்றர் ஓட்ட சம்பியன் ஈலிஷ் மெக்கோல்கன், ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும் கிளாஸ்கோ 2014 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஸ்கொட்லாந்து அணியின் கொடியை ஏந்தியவருமான ஈலித் டொய்ல், ஸ்காட்லாந்து கூடைப்பந்தாட்ட வீரர் கீரன் அச்சாரா, ஜூடோ பதக்கம் வென்ற சாரா அட்லிங்டன் மற்றும் காமன்வெல்த் பாரா பௌல்ஸில் தங்கப் பதக்கம் வென்ற போலின் வில்சன் உள்ளிட்ட ஸ்காட்லாந்து விளையாட்டு வீர, வீராங்கனைகள் ஃபின்னியாக காட்சிக்கொடுத்த நபரை சந்தித்தனர்.

ஸ்காட்லாந்தின் பிரதி முதலாவது அமைச்சர் ஜோன் ஸ்வின்னி, கிளாஸ்கோவின் பிரபு புரோவோஸ்ட் ஜெக்குலின் மெக்லெரன் ஆகியோருக்கும் சின்னத்தை தயாரித்தவர்களுக்கும் ஃபின்னி அறிமுகப்படுத்தப்பட்டார்.

3_gasgow_2026_mascot_finney_meats.png

அறிமுக விழாவுடன் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில்,

'அடுத்த கொடை காலத்தில் கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவில் ஒரு சிரிப்பு, ஒரு அலை, ஒருவேளை ஒரு சிறு நடனம் கூட இருக்கும். உணர்ச்சிகளை உற்சாகமாக மாற்றவும், ஆரவாரங்களைத் தூண்டவும், கிளாஸ்கோ 2026 பொதுநலவாய விளையாட்டு ஆரம்பமானவுடன் ஒவ்வொரு தருணத்தையும் ஏதோ ஒரு விந்தையாக மாற்ற உதவவும் நான் இங்கே இருக்கிறேன்' ஃபின்னி சார்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

2026 ஜூலை மாதம் தொடக்க விழாவிற்கு முன்னதாக, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் சமூக கொண்டாட்டங்களில் பங்கேற்கும் ஒரு பரபரப்பான அட்டவணையை ஃபின்னியாக காட்சி கொடுக்கும் நபர் ஆரம்பித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/220847

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

2 months 2 weeks ago

WWE மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

WWE மல்யுத்த உலகில் முக்கிய வீரராகத் திகழ்ந்த ஹல்க் ஹோகன் (Hulk Hogan), உண்மையான பெயர் டெர்ரி ஜீன் பொல்லியா (Terry Gene Bollea), 71 வயதில் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக அமெரிக்காவில் காலமானார். 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலம், கிளியர்வாட்டரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (24) அதிகாலை அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

ஹல்க் ஹோகன் 1980களில் WWF (இப்போது WWE) இல் தனது "ஹல்கமேனியா" (Hulkamania) பாத்திரத்தின் மூலம் மல்யுத்த உலகை புரட்சிகரமாக மாற்றினார். ஆறு முறை WWE உலக சாம்பியனாகவும், ஆறு முறை WCW உலக ஹெவிவெயிட் சாம்பியனாகவும், மற்றும் ஒரு முறை IWGP ஹெவிவெயிட் சாம்பியனாகவும் இருந்தவர். 1996 இல் "Hollywood Hulk Hogan" என்ற வில்லன் பாத்திரத்தில் New World Order (nWo) குழுவை வழிநடத்தி மல்யுத்த உலகில் புதிய பரிமாணத்தை உருவாக்கினார். அவர் 2005 மற்றும் 2020 (nWo உறுப்பினராக) ஆகிய ஆண்டுகளில் WWE Hall of Fame இல் இடம்பெற்றார். 

மல்யுத்தத்திற்கு வெளியே, ஹோகன் ‘ராக்கி III’ (1982), ‘நோ ஹோல்ட்ஸ் பார்ட்’ (1989) போன்ற திரைப்படங்களில் நடித்தார் மற்றும் ‘Hogan Knows Best’ என்ற ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றினார். அவரது கவர்ச்சியான ஆளுமை மற்றும் மல்யுத்த நிகழ்ச்சிகள் மூலம் மல்யுத்தத்தை குடும்ப பொழுதுபோக்காக மாற்றினார். 


f_webp

கடந்த 10 ஆண்டுகளில், ஹோகன் 25-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை (முதுகு, முழங்கால், இடுப்பு, தோள்பட்டை) மேற்கொண்டிருந்தார். மே 2025 இல் அவர் கழுத்து அறுவை சிகிச்சை செய்து கொண்டு மீண்டு வருவதாக அவரது மனைவி ஸ்கை டெய்லி (Sky Daily) தெரிவித்திருந்தார். ஜூன் 2025 இல், அவர் கோமாவில் இருப்பதாகவும், மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் பரவிய வதந்திகளை அவரது மனைவி மறுத்திருந்தார். 

2015 இல், இனவெறி பேச்சு சர்ச்சையில் சிக்கியதால், WWE அவரை தற்காலிகமாக நீக்கியது, ஆனால் 2018 இல் மீண்டும் Hall of Fame இல் இணைத்தது. 2024 இல், அவரது Real American Beer விளம்பர நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

https://adaderanatamil.lk/news/cmdhm1zxe01lyqp4kbj6mjsup

அடுத்த 3 உலக டெஸ்ட் சம்பின்ஷிப் இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்தில் நடத்த ஐ.சி.சி. தீர்மானம்

2 months 3 weeks ago

21 JUL, 2025 | 03:15 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நடத்தப்படும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அடுத்த மூன்று அத்தியாயங்களினது இறுதிப் போட்டிகளையும் இங்கிலாந்திலேயே நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுச் சபைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்க அமைய 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அத்தியாயங்களினதும் இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் அரங்கேற்றப்படும்.

2021, 2023, 2025 ஆகிய மூன்று வருடங்களில் நடைபெற்ற இறுதிப் போட்டிகளை இங்கிலாந்து மற்றம் வேல்ஸ் கிரிக்கெட் சபை வெற்றிகரமாக நடத்தியதை கருத்தில் கொண்டே அடுத்த மூன்று அத்தியாயங்களுக்கான இறுதிப் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதியை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கு ஐசிசி வழங்கியுள்ளது.

இந்தக் கூட்டத்தின்போது இடம்பெயர்ந்துள்ள ஆப்கானிஸ்தான் வீராங்கனைகளுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் ஆராயப்பட்டது.

ஐசிசியின் பிரதித் தலைவர் இம்ரான் கவாஜாவின் மேற்பார்வையில் ஐசிசி, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபை, கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஆகியன கூட்டிணைந்து இதற்கான முயற்சியைத் தொடர்கின்றன.

இந்த திட்டம் உயர் செயல்திறன் கொண்ட முயற்சிகள், உள்நாட்டு விளையாட்டு வாய்ப்புகள் மூலம் கட்டமைக்கப்பட்ட ஆதரவு வழங்குவதையும் இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ணம், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம் உட்பட முக்கிய ஐசிசி உலகளாவிய நிகழ்ச்சிகளில் ஆப்கானிஸ்தானை பங்குபற்றச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனத்தின் முந்தைய நிலைப்பாட்டை உன்னிப்பாக அவதானித்து வருவதாக ஐசிசி கூறியுள்ளது.

அடுத்த மூன்று மாத காலத்திற்குள் விரிவான நிருவாக சீர்திருத்தங்களை செய்வதுடன் சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலை நடத்த வேண்டும் எனவும் ஐசிசி வலியுறுத்தியுள்ளது. 

இதேவேளை, ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவனமானது பொருத்தமானதாகக் கருதும் நடவடிக்கைகளை எடுக்கும் உரிமையை  ஐக்கிய அமெரிக்க கிரிக்கெட் நிறுவன ம் கொண்டுள்ளதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/220543

49ஆவது தேசிய விளையாட்டு விழா - மரதன் ஓட்டம்: மத்திய மாகாணத்தின் சண்முகேஸ்வரனுக்கு தங்கம்

2 months 3 weeks ago

Published By: VISHNU

20 JUL, 2025 | 09:24 PM

image

(நெவில் அன்தனி)

விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைகளமும் இணைந்து காலியில் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக பங்குபற்றிய அட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.

shanmugeswaran.jpg

மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தை சண்முகேஸ்வரன் பெற்றார்.

இவர் கடந்த வருடம் மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.

காலி மரதன் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. சந்தன (2:25:18) வெள்ளிப் பதக்கத்தையும் கிழக்கு மாகாண வீரர் ரி. டபிள்யூ. ரத்னபால (2:30:46) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் மத்திய மாகாணத்திற்கு தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களும் கிடைத்தது.

மதுவன்தி ஹேரத் (2:53:42) தங்கப் பதக்கத்தையும் எஸ். ஹேரத் (3:00:21) வெள்ளிப் பதக்கத்தையும் ஊவா மாகாண வீராங்கனை நிமேஷா நிதர்ஷனி (3:02.32) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

பெண்கள் பிரிவில் போட்டியிட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வேலு கிருசாந்தினி (3:14:15) ஏழாம் இடத்தைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/220497

எதிர்நீச்சல் போட்டு அல்காரஸை வெற்றிகொண்டு சின்னர் முதல் தடவையாக விம்பிள்டன் பட்டத்தை சுவீகரித்தார்

2 months 4 weeks ago

Published By: DIGITAL DESK 2

14 JUL, 2025 | 12:46 PM

image

(நெவில் அன்தனி)

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்களுக்கான (Gentlemen) ஒற்றையர் பிரிவில் இத்தாலி வீரர் யனிக் சின்னர் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சூடினார்.

இதன் மூலம் இந்த வருட விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சீமான்கள் மற்றும் சீமாட்டிகளுக்கான ஒற்றையர் பிரிவுகளில் புதிய இருவருர் சம்பியன்களாகி இருப்பது விசேட அம்சமாகும்.

சனிக்கிழமை (12) நடைபெற்ற சீமாட்டிகளுக்கான   ஒற்றையர்    இறுதிப் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு சம்பியனானார்.

சீமான்கள் ஒற்றையருக்கான இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் ஸ்பானிய வீரர் கார்லோஸ் அல்காரஸிடம் கடும் சவாலை எதிர்கொண்ட ஸ்பானிய வீரர் யனிக் சின்னர் எதிர்நீச்சல் போட்டு 3 - 1 என்ற செட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சம்பினானார்.

ஒரு மாத்திற்கு முன்னர் நடைபெற்ற பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் இறுதிப் போட்டியில் கார்லோஸ் அல்காரஸிடம் அடைந்த தோல்வியை விம்பிள்டனில் ஈட்டிய வெற்றி மூலம் யனிக் சின்னர் நிவர்த்தி செய்துகொண்டார்.

லண்டனில் அமைந்துள்ள ஆல் இங்லண்ட் டென்னிஸ் கழக புற்தரையில் ஞாயிற்றுக்கிழமை (13) நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதலாவது செட்டில் 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கார்லோஸ் அல்காரஸ் வெற்றிபெற்றார்.

இதன் காரணமாக அல்காரஸ் அடுத்தடுத்து இரண்டு க்ராண்ட் ஸ்லாம் சம்பியன்களை வென்றெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

ஆனால், அடுத்த மூன்று செட்களிலும் 6 - 4, 6 - 4, 6 - 4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யனிக் சின்னர் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

sinner_hugs_alcaras.png

https://www.virakesari.lk/article/219949

விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியன் பட்டத்தை முதல் தடவையாக சூடினார் இகா ஸிவியாடெக்

2 months 4 weeks ago

13 JUL, 2025 | 02:42 PM

image

(நெவில் அன்தனி)

விம்பிள்டன் சீமாட்டிகள் (Ladies) ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார்.

ஒரு வருடத்திற்கு முன்னர் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனை என்ற தரவரிசை பட்டத்தை இழந்த ஸ்வியாடெக், லண்டன், ஆல் இங்லண்ட் லோன் டென்னிஸ் சங்க புற்தரையில் சனிக்கிழமை நடைபெற்ற சீமாட்டிகள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் அமண்டா அனிசிமோவாவை இலகுவாக வெற்றிகொண்டு சம்பினானார்.

57 நிமிடங்கள் மாத்திரம் நீடித்த இறுதிப் போட்டியில் 6 - 0: 6 - 0 என்ற புள்ளிகளைக் கொண்ட 2 நேர் செட்களில் இகா ஸ்வியாடெக் வெற்றிகொண்டு  சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.

கடந்த இரண்டு வாரங்களில் ஸ்வியாடெக் ஈட்டிய 6ஆவது இரண்டு நேர் செட் வெற்றி இதுவாகும்.

இறுதிப் போட்டியில் ஸ்வியாடெக்கின் வியூகங்கள் நிறைந்த அதிசிறந்த ஆற்றல்களால் திக்குமுக்காடிப்போன அனிசிமோவா போட்டி முடிவில் தோல்வியைத் தாங்க முடியாதவராக தேம்பித் தேம்பி அழுதார்.

பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ் போட்டியில் நான்கு தடவைகளும் (2020, 2022, 2023, 2024), ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் ஒரு தடவையும் (2022) சம்பியனான இகா ஸ்வியாடெக், இந்த வருடம் முதல் தடவையாக விம்பிள்டன் சீமாட்டிகள் ஒற்றையர் சம்பியனானார்.

மாபெரும் டென்னிஸ் போட்டிகளில் (Grand Slam Tennis) அவர் வென்றெடுத்த 6ஆவது சம்பியன் பட்டம் இதுவாகும்.

இதன்மூலம் களிமண் தரை, கடின தரை, புற்தரை ஆகிய மூன்று வகையான தரைகளிலும் சம்பியனானவர்கள் என்ற வரலாற்றுச் சாதனை ஏடுகளில் இகா ஸ்வியாடெக் இணைந்துகொண்டார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் வெண்மையின் அடையாளமாக நடத்தப்படுவதால் சகல போட்டியாளர்களும் வெள்ளை ஆடைகளை அணிந்தே விளையாடுவர். அத்துடன் ஆண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமான்கள் எனவும் பெண்களுக்கான ஒற்றையர் போட்டிகள் சீமாட்டிகள் எனவும் அழைக்கப்படுகிறது. வீர, வீராங்கனைகளின் பைகள் கூட வெள்ளை நிறத்தில் தயாரிக்கப்படுகிறது.

Iga-Swiatek-dominates-USAs-Amanda-Anisim

iga-swiatek_.jpg

https://www.virakesari.lk/article/219868

லாராவின் சாதனையை முறியடிக்காத முல்டர்

3 months ago

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

தென் ஆபிரிக்க அணியின் துடுப்பாட்டவீரர் வியென் முல்டர் கிரிக்கெட் உலகின் கவனத்தை தன்பால் ஈர்த்துள்ளார்.

மிகவும் அரிய உலக சாதனையொன்றை நிலைநாட்டக்கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பினை முல்டர் நிராகரித்துள்ளார்.

கிரிக்கெட் உலகம் போற்றும் ஜாம்பவான்களில் ஒருவரான மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் தலைவர் பிரயன் லாராவின் சாதனையை முறியடிக்க முல்டருக்கு வாய்ப்பு கிடைக்கப் பெற்றது.

தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி கூடிய ஓட்டங்கள் என்ற சாதனையை பிரயன் லாரா நிலைநாட்டியுள்ளார்.

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Mulder Lara Keeping That Record

கடந்த 2004ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக பிரயன் லாரா ஆட்டமிழக்காது 400 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார்.

சிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முல்டர் ஆட்டமிழக்காது 367 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட போது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டார்.

இந்தப் போட்டியில் முல்டர் தென்னாபிரிக்க அணியின் பதில் தலைவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்டர் சாதனை முயற்சியை தவிர்த்தார்

பிரயன் லாரா ஓர் ஜாம்பவான் எனவும் அவரது சாதனையை தாம் முறியடிப்பது பொருத்தமற்றது எனவும் லாராவின் சாதனை அப்படியே நீடிக்க வேண்டும் அதுவே முறை எனவும் முல்டர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் உலகை மெய்சிலிர்க்கச் செய்த நெகிழ்ச்சி சம்பவம் | Mulder Lara Keeping That Record

அணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் தாம் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும் இந்தப் போட்டியில் முல்டர் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியுள்ளார்.

தென் ஆபிரிக்க அணியின் சார்பில் வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டங்களை முல்டர் பெற்றுக்கொண்டுள்ளார்.

தனது நாட்டு வீரர் அல்லாத ஓர் கிரிக்கெட் ஜாம்பவானின் சாதனையை முறியடிக்கக் கூடாது அவரது பெயர் வரலாற்றில் நிலைத்திருக்க வேண்டுமென முல்டர் சாதனை முயற்சியை கைவிட்டமை அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

https://tamilwin.com/article/mulder-lara-keeping-that-record-1751937909

சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி இறுதிப் போட்டிக்குத் தெரிவு - வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான கடினப்பந்திலான துடுப்பாட்டம்

3 months 1 week ago

2025ஆம் ஆண்டு வடமாகாண பாடசாலைகளுக்கு இடையிலான பெருவிளையாட்டுக்களில் கடினப்பந்திலான துடுப்பாட்டம் (Leather ball cricket) யாழ்ப்பாணமத்திய கல்லூரி, பரியோவான் கல்லூரி , புனிதபத்திரிசியார் கல்லூரி ஆகிய மைதானங்களில் 01,02/07/2025 ஆகிய இரு தினங்களில் 10 பந்துப் பரிமாற்றங்கள் கொண்ட போட்டி நடைபெற்றது.

எமது விக்ரோறியாக் கல்லூரி துடுப்பாட்ட அணி வடமாகாணத்தின் துடுப்பாட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அணிகளினை வெற்றி கொண்டு இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளது.

இறுதிப் போட்டியினை யாழ் பரியோவான் கல்லூரியுடன் மோதவுள்ளது.

இப்போட்டியில் நகரப் புறப் பாடசாலையின் ஆதிக்கத்தில் இருந்து முதன்முறையாக வேறு பாடசாலை இறுதிப்போட்டிக்குத் தெரிவானது இதுவே முதல் தடவையாகும்.

அணிக்காக உழைத்த அனைவருக்கும் கல்லூரிச் சமூகத்தின் பாராட்டுக்கள்!

514722634_122320356506003509_38835880497

https://www.facebook.com/61550105270847/posts/122320356524003509/?rdid=uIRiwNPYoFHeoH2U#

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

3 months 1 week ago

25-6860cd8f18194.png?resize=600%2C375&ss

RCB வீரர் மீது பாலியல் குற்றச் சாட்டு: இந்திய கிரிக்கெட் சபையில் பரபரப்பு!

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான ‘யாஷ் தயாள்‘ மீது உ.பி மாநிலம் காஜியாபாத்தை சேர்ந்த ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவரது புகாரில் கூறியிருப்பதாவது: யாஷ் தயாள் என்னை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து என்னிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டார். ஊட்டிக்கு அழைத்து சென்று என்மீது பாலியல் அத்துமீறல் புரிந்தார். நான்கரை ஆண்டுகளாக நாங்கள் தொடர்பில் இருந்துள்ளோம். யாஷ் தயாள் வீட்டில் நான் 15 நாட்கள் தங்கி இருந்தேன். அவருடைய குடும்பத்தினருடனும் நெருங்கி பழகி வந்தேன்.

ஆனால், என்னை திருமணம் செய்யாமல் அவர் ஏமாற்றி விட்டார். அவருக்கு மேலும் பல பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் நான் அதிர்ச்சி அடைந்தேன். எனக்கு பணம் தந்து பிரச்சினையை திசை திருப்ப அவர் முயன்றார். தனக்கு உள்ள செல்வாக்கையும், புகழையும் பயன்படுத்தி என்னை மிரட்டி வருகிறார். ஆனால், எனக்கு சட்டத்தின் மீது முழு நம்பிக்கை உள்ளது ”இவ்வாறு அப் பெண் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இவ் விவகாரம் தொடர்பாக யாஷ் தயாளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார்  கூறியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விவகாரம், இந்திய  கிரிக்கெட் அரங்கில்  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1437699

சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!

3 months 1 week ago

சர்வதேச கிரிக்கெட்டில் ட்விஸ்ட்… ஐசிசி புதிய விதிமுறைகள் வெளியானது – முழு விபரம்!

27 Jun 2025, 5:02 PM

icc set new rules in cricket

சர்வதேச கிரிக்கெட்டில் புதிய விதிமுறைகளை ஐசிசி இன்று (ஜூன் 27) அறிவித்துள்ளது.

சௌரவ் கங்குலி தலைமையிலான ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் கவுன்சில் இந்த புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிகள் நடப்பு (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) சுழற்சியின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வருகிறது. ஏற்கெனவே இலங்கை-வங்கதேசம் மற்றும் இங்கிலாந்து-இந்தியா டெஸ்ட் போட்டிகளில் புதிய விதிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஒருநாள் தொடருக்கான ஐசிசி விதிகள் வரும் ஜூலை 2 முதல் அமலுக்கு வருகின்றன.

புதிய நிபந்தனைகள் விவரம்!

ஓவர் பிரேக் 60 வினாடிகள்!

ஒருநாள், டி20 போட்டியைத் தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலும் பந்துவீச்சு அணி ஒரு ஓவர் நிறைவடைந்த 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவரை தொடங்க வேண்டும்.

ஒரு இன்னிங்ஸில் மூன்றாவது முறையாக (இரண்டு எச்சரிக்கைகளுக்குப் பிறகு) அவ்வாறு செய்யத் தவறினால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். இது ஒவ்வொரு 80 ஓவர்கள் கடந்த பிறகு, ஒரு புதிய பந்து கிடைக்கும்போது அமலாகும்.

எச்சில் தடவினாலும்…

பந்தின் மீது எச்சில் தடவுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், எச்சில் தடவியது கண்டறியப்பட்டால் நடுவர்கள் பந்தை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. பந்தை மாற்றுவற்காக இந்த தந்திரம் கடைபிடிக்கப்படலாம் என்பதால் இந்த விதி கொண்டு வரப்பட்டுள்ளது.

கிரீஸை தொடாமல் ரன் ஓடினால்…

வேண்டுமென்றே ஓடி ரன் எடுக்கும்போது, பேட்ஸ்மேன் கிரீஸை தொடாமல் சென்றுவிட்டால், அந்த ரன் வழங்கப்படாது. பேட்டர்கள் இருந்த இடத்துக்கே செல்ல வேண்டும். பவுலிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்படும். மேலும், இருவரில் அடுத்த பந்தை எந்த பேட்டர் எதிர்கொள்ள வேண்டும் என்பதை பவுலிங் அணி கேப்டன் தேர்வு செய்ய முடியும்.

DRS முறையீடு!

Wide, Out உள்ளிட்டவைகளுக்கு ஒரே நேரத்தில் பேட்டர் அல்லது பவுலிங் கேப்டன் DRS கோரினால் யார் முதலில் கேட்டார்களோ அவரின் முறையீடே முதலில் ஏற்றுக்கொள்ளப்படும்.

No Ball கேட்ச்!

No Ball பந்தை பேட்டர் அடித்து அது கேட்ச் பிடிக்கப்பட்டால், அது முறையான கேட்ச் எனும்பட்சத்தில் ஒரு ரன் வழங்கப்படும். முறையாக பிடிக்கப்படவில்லை எனில், பேட்டர்கள் ஓடி எடுத்த ரன்கள் வழங்கப்படும்.

ஒரு ODI இன்னிங்ஸில் புதிய பந்துகள்…

ஒரு ODI இன்னிங்ஸின் முதல் 34 ஓவர்களுக்கு இரண்டு புதிய பந்துகள் பயன்படுத்தப்படும், அதன் பிறகு ஃபீல்டிங் அணி மீதமுள்ள ஓவர்களுக்கு பந்துகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்.

பவுண்டரி கேட்சுகள்

பவுண்டரி எல்லையில் பறந்து சென்று கேட்ச் செய்யும்போது, மீண்டும் ஒருமுறை மட்டுமே களத்திற்குள் வந்து கேட்ச் செய்ய முடியும். பந்தை பிடித்த பிறகு மீண்டும் பவுண்டரி லைனுக்கு வெளியே சென்றால் அது கேட்சாக கருதப்படாது.

டி20 பவர்பிளே மாற்றம்!

பிரத்யேகமாக டி20 ஆட்டத்தில் ஆட்டம் மழையால் பாதிக்கப்படும்போது, 5 ஓவரில் இருந்து 19 ஓவர்கள் வரை ஆட்டம் குறைக்கப்பட்டால், எத்தனை ஓவர்கள் பவர் பிளே இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp-Image-2025-06-27-at-16.41.36_88

வேண்டுமென்றே விக்கெட் கேட்டால்…

சில நேரங்களில் பீல்டர்கள் தெளிவான கேட்ச் பிடிக்காமல் வேண்டுமென்றே விக்கெட்டை கேட்பார்கள். அது போன்ற சூழ்நிலையில் கேட்ச் தெளிவாக இல்லையென்று கண்டறிந்தால் நடுவர் அதை நோ-பால் என்று அறிவிப்பார்.

எல்பிடபிள்யூ ஆ? அல்லது ரன் அவுட் ஆ?

ஒரு பந்தில் ஒரு பேட்ஸ்மேன் எல்பிடபிள்யூ மற்றும் ரன் அவுட்டாகிறார் என்றால் அந்த இரண்டையும் தனியாக ரிவ்யூ எடுக்கலாம். ஆனால் முதலில் எல்பிடபிள்யூ என்று தெரிய வந்தால் அது டெட் பால் என்று முடிவெடுக்கப்பட்டு விக்கெட் வழங்கப்படும். ரன் அவுட் சோதிக்கப்பட மாட்டாது.

மாற்று வீரருக்கு பேட்டிங், பவுலிங் செய்யலாம்!

அதுபோக உள்ளூர் போட்டிகளில் ஒரு வீரர் முழுமையாக காயத்தை சந்திக்கும்போது புதிதாக வரும் மாற்று வீரர் பேட்டிங், பவுலிங் உள்ளிட்ட அனைத்தையும் செய்யலாம். அதை நடுவர் சோதித்து முடிவெடுப்பார்.

https://minnambalam.com/icc-set-new-rules-in-cricket/#google_vignette

Checked
Sat, 10/11/2025 - 17:51
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed