ஊர்ப்புதினம்

வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

3 weeks 3 days ago

Published By: Digital Desk 3

09 Mar, 2026 | 12:56 PM

image

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு வெற்றிலை மென்று கொண்டு வெதுப்பக வண்டியில் வெதுப்பக உணவுப் பொருட்களை விற்பனைக்குக் கொண்டு சென்ற நபர் ஒருவருக்கு எதிராக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையில் குறித்த வண்டியின் சாரதி மருத்துவ சான்றிதழையும் பெற்றிருக்கவில்லை எனவும் பிரதேச சபைத் தவிசாளர் தெரிவிக்கின்றார்.

இந்நிலையில் வெதுப்பக வண்டிகளில் சினிமா பாடல்களை பெரும் சத்தமாக ஒலி எழுப்பிச் செல்வதனால் அதிக சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதனால், வெதுப்பக வண்டிகளுக்கென பிரத்தியேகமானதொரு ஒலியை ஏற்கனவே வழங்கியிருந்த போதிலும் அதனை அவர் கடைப்பிடிக்காததனாலும், பொதுச் சுகாதார பரிசோதகர் ஊடாக  அதற்காகவும், சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு எவராவது செயற்படுவார்களாயின் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ் மேலும் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட அனைத்து வெதுப்பக உரிமையாளர்களுடனும், விசேட கலந்துரையாடல் கூட்டம் கடந்த மாதம் பிரதேச சபையில் இடம்பெற்று இருந்த நிலையில், அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பொதுச் சுகாதார பரிசோதகர்களின் ஆலோசனைக்கமைய சுகாதார விதி முறைகளுக்கு அமையவே வெதுப்பக உணவுப் பொருட்களை வியாபாரம் செய்ய வேண்டும் என அப்பிரதேச சபையின் தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜினால் ஏற்கனவே சகல வெதுக்கப உணவு விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

வெற்றிலை மென்றுகொண்டு வெதுப்பக வியாபாரத்தில் ஈடுபட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை | Virakesari.lk

யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி ; இருவர் கைது

3 weeks 3 days ago

09 Mar, 2026 | 04:35 PM

image

யாழ்ப்பாணத்தில் இருந்து பெருந்தொகை தங்கத்தை கடத்தி செல்ல முற்பட்ட இருவரை கடற்படையினர் திங்கட்கிழமை (09) கைது செய்துள்ளனர். 

மாதகல் கடல் வழியாக இந்தியாவிற்கு படகொன்றில் தங்கம் கடத்தி செல்லப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த படகினை கடலில் வழிமறித்து கடற்படையினர் சோதனையிட்ட வேளை படகில் இருந்து 6 கிலோ 865 கிராம் தங்க கட்டிகளை கைப்பற்றியுள்ளனர். 

அதனை அடுத்து படகில் இருந்து இருவரையும் கடற்படையினர் கைது செய்தனர்.   

கைது செய்யப்பட்ட இருவரையும் , கைப்பற்றப்பட்ட தங்கத்தையும் , தங்கத்தை கடத்தி செல்ல பயன்படுத்தப்பட்ட படகினையும் மேலதிக விசாரணைகளுக்காக காங்கேசன்துறை சுங்க அதிகாரிகளிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர். 

யாழ். கடல் வழியாக தங்கம் கடத்தல் முயற்சி ; இருவர் கைது | Virakesari.lk

உலகளாவிய மசகு எண்ணெய் விலை அதிர்வுகளை சமாளிக்க இலங்கை தயாராக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

3 weeks 3 days ago

09 Mar, 2026 | 04:47 PM

image

உலக சந்தையில் நிலவும் மசகு எண்ணெய் விலை மாற்றங்களை எதிர்கொள்ளும் பலமான நிலையில் இலங்கை தற்போது உள்ளதாகவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில், மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,  

2022 ஆம் ஆண்டு தொடக்கம் 2023 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிலவிய பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிடுகையில், இலங்கை தற்போது மிகச் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.

குறிப்பாக, அக்காலத்தில் 70 சதவீதமாகக் காணப்பட்ட பணவீக்கம் தற்போது 1.6 சதவீதமாகக் குறைந்துள்ளதுடன், மத்திய வங்கியின் 5 சதவீத இலக்கை விடவும் சாதகமான நிலையில் உள்ளது.

மேலும், பூச்சிய நிலையை நெருங்கியிருந்த நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு, தற்போது 7 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமாக உயர்ந்துள்ளமை பொருளாதார அதிர்ச்சிகளைத் தாங்குவதற்கான ஒரு முக்கிய கவசமாக அமைகிறது.

எவ்வாறாயினும், மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் போன்ற புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, சுற்றுலாத் துறையில் சரிவு மற்றும் விநியோகச் சங்கிலித் தடங்கல்கள் போன்ற சவால்கள் ஏற்படக்கூடும்.

இவ்வாறான அழுத்தங்களைக் கட்டுப்படுத்தவே மத்திய வங்கி நாணய மாற்று விகிதத்தை பயன்படுத்துகின்றது. இதன் மூலம் தேவையற்ற கேள்வி மற்றும் செலவு அழுத்தங்களை கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளை செய்ய முடியும்.

எத்தகைய உலகளாவிய சவால்கள் ஏற்பட்டாலும், முறையான பணம், நிதி மற்றும் வெளிநாட்டு பொருளாதார கொள்கைகள் ஊடாக நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையைத் தொடர்ந்து பலப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்று குறிப்பிட்டார்.

உலகளாவிய மசகு எண்ணெய் விலை அதிர்வுகளை சமாளிக்க இலங்கை தயாராக உள்ளது – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு | Virakesari.lk

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது - சிறீதரன்

3 weeks 3 days ago

09 Mar, 2026 | 05:27 PM

image

(எம்.நியூட்டன்)

சர்வதேச போர் விதிகளை மீறி ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசு நிகழ்த்திய அதே கொடூரமான கொத்துக்குண்டுத் தாக்குதல்களை, இன்று ஈரான் இஸ்ரேல் மீது கட்டவிழ்த்து விட்டுள்ளது எனப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கவலை வெளியிட்டுள்ளார்.

சுதந்திரப்பறவைகள் மகளிர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற சர்வதேச  மகளிர் தின நிகழ்வில்,  முதன்மை விருந்தினராக  கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை  தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஈழப் போராட்ட வரலாற்றில் பெண்கள் வெறும் சாட்சிகளாக மட்டுமல்ல, களத்தில் நின்ற போராளிகளாகவும், குடும்பத்தைத் தாங்கும் தூண்களாகவும் விளங்கியவர்கள்.

உலகமே வியந்து பார்த்த ஒரு போரியல் வாழ்வை வாழ்ந்தவர்கள் ஈழத்தமிழ்ப் பெண்கள். இன்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்காக எட்டு ஆண்டுகள் கடந்தும் தாய்மார்கள் வீதியில் நின்று போராடுகிறார்கள்.

2009-ல் முல்லைத்தீவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொத்துக்குண்டுகள் வீசப்பட்டு தமிழினம் அழிக்கப்பட்டபோது, அதன் சிதைவுகளையும் ஆவணங்களையும் உலகுக்கு வெளிப்படுத்தியதில் பெண்களின் துணிச்சல்மிக்க பங்களிப்பு மகத்தானது.

ஈரான் இன்று இஸ்ரேல் மீது கொத்துக்குண்டுகளை வீசுவதாக அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ள சூழலில், அன்று 22 நாடுகளின் துணையோடு தமிழினத்தின் மீது இழைக்கப்பட்ட அநீதியை உலகம் மறந்துவிடக்கூடாது.

குறிப்பாக, ஐநா சபையில் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை எனத் தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, அதனை எதிர்த்த ஈரானின் நிலைப்பாட்டையும், ஆதரவு வழங்கி அதனை நிறைவேற்றிய அமெரிக்காவின் தமிழர்கள் மீதான சார்பு நிலைப்பாட்டையும் நாம் நினைவில் வைத்து இராஜதந்திர ரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் வாக்களிக்கும் உரிமை கூட இல்லாத ஒரு இருண்ட யுகத்தை நாம் கடந்து வந்திருக்கிறோம். உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் எங்களை மீண்டும் பின்னோக்கித் தள்ளினாலும், எமது பெண்கள் தாய், தாரம், பிள்ளை எனப் பல பரிமாணங்களில் சமூகத்தை வழிநடத்துகிறார்கள் என்றார்.

ஈரானின் தற்போதைய போக்கு ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலையினை மீளவும் நினைவுபடுத்துகிறது - சிறீதரன் | Virakesari.lk

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் 12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை

3 weeks 3 days ago

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு பன்னிரெண்டு வயதுச் சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றவாளிக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் 10 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு நாயாறு பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய குற்றச் சாட்டுத் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரையும் சான்றுப் பொருட்கள்  என்பவற்றையும் முல்லைத்தீவு  மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால்  கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இன்று (09)குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி A.G அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது  குறித்த குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 இலட்சம் ரூபா இழப்பீட்டை செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் இரண்டு வருட சாதாரண சிறைத்தண்டனையும், அத்துடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் மூன்று மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

12 வயது சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் ; குற்றவாளிக்கு பத்து வருட கடூழிய சிறை | Virakesari.lk

தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு

3 weeks 4 days ago

தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்; இலங்கையர் ஒருவரின் வருடாந்த சீனியின் நுகர்வு 34 கிலோவாக அதிகரிப்பு

Published By: Vishnu

09 Mar, 2026 | 03:53 AM

image

இலங்கையின் 5ஆவது தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி ஆரம்பிக்கச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவ்வாறான கணக்கெடுப்புகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.South Asians & Diaspora

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 10 ஆயிரம் பேரிடம் முன்னெடுக்கப்படவுள்ள இக்கள ஆய்வின் மூலம், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெரியவர்களின் வாய் சுகாதார நிலை தரவுகள் சேகரிக்கப்படவுள்ளன. இதற்காக வீடுகளுக்கும் பாடசாலைகளுக்கும் வருகை தரும் மருத்துவக் குழுவினருக்குப் பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கணக்கெடுப்பு குறித்து விளக்கமளிக்கும் விசேட ஊடக சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. இதன்போது கருத்துத் தெரிவித்த சுகாதார அதிகாரிகள், நபரொருவர் ஆரோக்கியமாக வாழ ஆண்டுக்கு 10 கிலோ சீனியை மாத்திரமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ள போதிலும், இலங்கையில் நபரொருவர் ஆண்டுக்குச் சராசரியாக 34 கிலோ சீனியைப் பயன்படுத்துவதாக தெரிவித்தனர்.

கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் வாய் சுகாதாரத்தில் முன்னேற்றம் காணப்பட்டாலும், 5 வயது சிறுவர்களின் பற்சிதைவு வீதம் 63 சதவீதமாகவும், பெரியவர்களின் பல் ஈறு பாதிப்பு 50 சதவீதமாகவும் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. இக்கணக்கெடுப்பிற்காகச் சுமார் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசிய வாய் சுகாதாரக் கணக்கெடுப்பு மார்ச் 10 ஆரம்பம்

மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம்.

3 weeks 4 days ago

மன்னாரில் தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பம் பயிற்சி ஆரம்பம்.

adminMarch 9, 2026

8fb88961-80e0-4fbf-be2a-90c7d19ef968.jpe

 

தமிழர்களின் பாரம்பரிய  கலையான சிலம்பம் பயிற்சியானது நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (8) மன்னாரில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.   ஆசிரியர் மெல்சின்  தலைமையில்   தமிழர்களின் பாரம்பரிய கலையான  சிலம்பம் கலை விழா  ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கடந்த 35 ஆண்டுகளாக சிலம்பம் மற்றும் பல பாரம்பரிய கலைகளில் அனுபவம் பெற்றவருமான பிரபல ஆசான் சூசைநாதர் யசோதரன் அவர்கள்  VMCT கலை மன்றத்தின் இயக்குநர்  பொறியியலாளர் சூசைப்பிள்ளை விமலேஸ்வரன் அவர்களது நெறிப்படுத்தலில்  VMCT கலை மன்றத்தில் நேற்றைய தினம்  ஞாயிற்றுக்கிழமை காலை 11  மணியளவில் ஆரம்பிக்கப்பட்டது. மேற்படி ஆரம்ப விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் சிலம்பு பயிற்சிகள்   தலைமை ஆசிரியர்  அன்ரன் பெசன்பேர்க் மெல்சின்   தலைமையில்  வார  இறுதி நாள் சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது

3ba0aef4-cdfc-48de-8b5a-9b563e5133b1.jpe7c67852a-9412-47cb-8230-ffbb30ef984e.jpe8fb88961-80e0-4fbf-be2a-90c7d19ef968.jpe921306b2-373c-4f6f-9f74-5f1a3eb77f3e.jpec7cb1a39-4bf4-4362-983a-dd728ed8c7e5.jpe

#MannarSilambam #TraditionalArt #VMCTArtClub (VMCT #MartialArtsTraining #TamilCulture

https://globaltamilnews.net/2026/230218/

சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து

3 weeks 4 days ago

சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து

Published By: Vishnu

09 Mar, 2026 | 12:52 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 'சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை' எனும் தொனிப்பொருளில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் ஏற்பாடு செய்த விசேட மாநாடு ஞாயிற்றுக்கிழமை (08) கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நடைபெற்றது. 115 ஆவது சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மாநாட்டில் பெண்களின் உரிமைகள் தற்போதைய அரசியல் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பெண்களின் உண்மையான விடுதலைக்கான வழிமுறைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

நிகழ்வில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கத்தின் ஒழுங்கமைப்புச் செயலாளர் ஹேமமாலி அபேரத்ன அங்கு உரையாற்றுகையில்

பெண் விடுதலை என்பது தானாகக் கிடைத்த ஒன்றல்ல. மனித வரலாற்றில் பெண்கள் தங்களது கல்வி உரிமை கருக்கலைப்பு உரிமை இனப்பெருக்க உரிமை மற்றும் தொழில் உரிமை என்பவற்றை நீண்ட போராட்டங்கள் மூலமே வென்றெடுத்தனர். ஜனநாயகத்தின் அடிப்படை அங்கமான வாக்குரிமை கூட போராட்டத்தின் மூலமே எமக்குக் கிடைத்தது. எப்படியிருப்பினும், இத்தனை உரிமைகளைப் பெற்ற பின்னரும், இந்த 115 ஆவது சர்வதேச மகளிர் தினத்தில் பெண்கள் இந்த உலகில் ஒரு முழுமையான மனிதனாக வாழும் உரிமை கிடைத்துள்ளதா? என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டியுள்ளது.

பெண்கள் இன்றும் சமூகத்தில் இரண்டாம் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர். சமூகம் வகுத்துள்ள பொதுவான மரபுகள் மதக் கட்டுப்பாடுகள் மற்றும் கலாச்சாரம் என்ற பெயரிலான தடைகளை உடைக்க நாம் இன்னும் தயாராகவில்லை. பிள்ளைகளைப் பெறுவதும், சமையலறையில் முடங்கிக்கிடப்பதும் மட்டுமே பெண்ணின் கடமை என்று கருதும் வரை பெண்கள் நசுக்கப்பட்டே வாழ்வார்கள். இந்த நிலை மாற வேண்டும். பெண்கள் ஒரு மனிதனாக வாழ்வதற்கான உரிமையை உரக்கச் சொல்லும் காலம் வந்துவிட்டது.

இன்று சந்தை வாய்ப்புக்களில் பெண்கள் ஈடுபடுவதால் அவர்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டதாக ஒரு மாயை உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மை அதுவல்ல. முதலாளித்துவப் பொருளாதாரம் பெண்களை வேலைத்தளங்களுக்கு அழைத்து வந்ததன் உண்மையான நோக்கம் அவர்களின் மலிவான உழைப்பைச் சுரண்டுவதாகும்.

இன்று நவதாராளவாதப் பொருளாதாரக் கட்டமைப்பிற்குள் பெண்கள் ஒரு சந்தைப் பொருளாக மாற்றப்பட்டுள்ளனர். எம்மை ஒடுக்குவது ஆண்கள் அல்ல் மாறாக இந்த நிலவும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பே எமது உண்மையான எதிரி. இந்த முறையை மாற்றியமைக்காமல் பெண் விடுதலை பற்றிப் பேசுவதில் அர்த்தமில்லை.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உட்பட கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அனைத்துக் கட்சிகளும் பெண்களைத் திரட்டியது தங்களது வாக்கு வங்கியைப் பலப்படுத்துவதற்காக மட்டுமே. தேர்தலுக்குப் பின்னர் பெண்களுக்காக எவரும் ஆக்கபூர்வமான எதனையும் செய்யவில்லை. எமது வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள், இறுதியில் பெண்களின் பாதுகாப்பை அச்சுறுத்தும் சட்டங்களையே நிறைவேற்றினர்.

எனவே தேர்தல் அரசியலை நம்பி ஏமாறாமல் நிலத்தில் இறங்கிப் போராடும் பெண்களை நாம் உருவாக்க வேண்டும். அநீதி இழைக்கப்படும் போது அச்சப்பட்டு ஒடுங்காமல் உரிமைகளுக்காக முன்னின்று குரல் கொடுக்கும் போராட்டக் குணமிக்க பெண்களை உருவாக்க எமது இயக்கம் முன்னின்று செயற்படும். இதற்காக நாட்டின் அனைத்துப் பெண்களும் உழைக்கும் மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

இந்த மாநாட்டில் நாடளாவிய ரீதியிலிருந்து பெருமளவிலான பெண்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

சோசலிசமே பெண் விடுதலையின் உண்மையான பாதை எழுச்சி மாநாட்டில் சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் வலியுறுத்து

பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

3 weeks 4 days ago

Screenshot-2026-03-08-162858.jpg?resize=

பலநாள் மீன்பிடி படகிலிருந்து 2.8 பில்லியன் ரூபா மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

இன்றையதினம் தெற்கு கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்ட பலநாள் மீன்பிடிப் படகில் இருந்த போதைப்பொருட்களின் பெறுமதி சுமார் 2.8 பில்லியன் ரூபா என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த மீன்பிடிப் படகு மற்றும் போதைப்பொருள் தொகுதி திக்ஓவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு சோதனையிடப்பட்டது.

இதன்போது அதிலிருந்து 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கேய்ன் ஆகியன பாதுகாப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் அவ்விடத்திற்கு நேரில் வருகை தந்து சோதனையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்:

“தற்போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஹெரோயின் மற்றும் கொக்கைனின் மொத்த அளவை உறுதிப்படுத்தியுள்ளது. 103 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் சுமார் ஒரு கிலோகிராம் கொக்கைன் காணப்படுகின்றது. இதன் பெறுமதி 2.08 பில்லியன் ரூபாவாகும். இது ஒரு மிகப்பெரிய அளவாகும். அத்துடன், இது தொடர்பில் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.”

https://athavannews.com/2026/1467616

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

3 weeks 5 days ago

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

March 8, 2026 3:30 pm

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

சர்வதேச மகளிர் தினமான இன்று, முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம், வட்டுவாகல் பாலத்தில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.

இன்றுடன் தமது தொடர் போராட்டத்தின் ஒன்பதாவது ஆண்டில் கால் பதிக்கும் இவ்வுறவுகள், இறுதிப் போரின் போது கையளிக்கப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களுக்கு நீதி கோரி இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

இறுதிப் போரின் போது ஆயிரக்கணக்கானோர் இராணுவத்திடம் சரணடைந்த மற்றும் கையளிக்கப்பட்ட இடமான வட்டுவாகல் பாலம், வலி சுமந்த ஒரு அடையாளமாகப் பார்க்கப்படுகின்றது.

அங்கு கூடியிருந்த பெருந்திரளான தாய்மார்கள் மற்றும் பெண்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளின் புகைப்படங்களை ஏந்தியவாறு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கோஷங்களை எழுப்பினர். ‘எமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது?’ என்ற கேள்விக்கு உரிய பதிலும், சர்வதேச ரீதியிலான நீதியும் கிடைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.

https://oruvan.com/massive-protest-in-mullaitivu/

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; ரவிகரன் கடிதம்!

3 weeks 5 days ago

கொக்குத்தொடுவாயில் தமிழர் காணிகளில் சிங்கள வர்த்தகரின் அத்துமீறிய உப்பளம் அமைக்கும் முயற்சி; ரவிகரன் கடிதம்!

ravikaran-mp.jpg

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவில் குஞ்சுக்கால்வெளி பகுதியிலுள்ள தமிழ்மக்களின் பூர்வீக தனியார்காணிகளை, மகாவலி அதிகார சபை தென்பகுதியைச் சேர்ந்த சிங்கள வர்த்தகருக்கு சட்டவிரோதமாக குத்தகைக்கு வழங்கியுள்ளது.

இந்நிலையில் மகாவலி அதிகாரசபையிடமிருந்து சட்டவிரோத குத்தகை அனுமதியைப் பெற்றுக்கொண்ட குறித்த பெரும்பான்மையின வர்த்தகர் தமிழ்மக்களின் தனியார்காணிகளில் அத்துமீறி நுழைந்து உப்பளம் அமைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதால் இனமுறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இந்த சட்டவிரோதமான அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் மாகாவலி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகத்திற்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.

தனியார் காணிகளில் அத்துமீறி உப்பளம் அமைத்தல் தொடர்பானது எனத் தலைப்பிடப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

மேற்படி விடயம் தொடர்பாக, கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவு பகுதியில் அமைந்துள்ளதும் நில அளவையாளர் நாயகம் அவர்களால் பேணப்பட்டுவரும் TOPO PP70 இலக்க நில அளவை வரைபடத்தின் Inset 17, 18, 19 ஆகிய பகுதிகளுக்குரிய தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளும் அதற்கு இடைப்பட்ட மேய்ச்சல் தரை நிலங்களும் மகாவலி அதிகார சபையால் தென்பகுதியைச் சேர்ந்த ஒரு சிங்கள வர்த்தகருக்கு உப்பளம் அமைப்பதற்காக தற்பொழுது நாட்டில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களுக்கு முரணான வகையில் குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேற்படி நடவடிக்கை அப்பகுதிக்குரிய மக்களிடையே அதிருப்தியையும் இரண்டு இனங்களுக்கு இடையேயும் முறுகல் நிலையை தோற்றுவித்தது. மக்களின் முறைப்பாட்டைத் தொடர்ந்து கடந்த 2026.02.27 அன்று குறித்த பகுதிக்கு நேரில் சென்று மேற்படி அத்துமீறிய செயற்பாட்டை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.

இதன் தொடர்ச்சியாக, அதே நாள் (2026.02.27 மாலை 03.00 மணி) முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் மாவட்டச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தனியார் காணிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மேற்படி உப்பளச் செய்கையை அடுத்துவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெறும் வரையிலும் நிறுத்திவைக்குமாறு மகாவலி அதிகார சபைக்கு கடிதம் அனுப்பப்படும் என மாவட்டச் செயலாளர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.

எனினும், 2026.03.06 ஆம் நாளாகிய நேற்று தொடக்கம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி குறித்த பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை இவ்வாறு பறித்தெடுக்க முயலும் நடவடிக்கைகள், அப்பகுதி மக்களிடையே மனவேதனையையும் அரசின் மீதும் அரச நிர்வாகத்தின் மீதும் நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்துகின்றன.

எனவே சட்டத்துக்கு புறம்பாக மேற்கொள்ளப்படும் இவ் அத்துமீறிய செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எனக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கடிதம் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் விசாயம், கால்நடை, காணிமற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த, முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் உபாலி சமரசிங்க, வடக்கு மாகாண ஆளுநர், முல்லைத்தீவு மாவட்டசெயலாளர், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் ஆகியோருக்கும் பிரதியிடப்பட்டுள்ளது.

https://akkinikkunchu.com/363276/

யுத்தத்தில் காணாமல் போன உறவுகளின் நிலையை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

3 weeks 5 days ago

யுத்தத்தில் காணாமல் போன உறவுகளின் நிலையை கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு – நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

08 Mar, 2026 | 11:29 AM

(இராஜதுரை ஹஷான்)

thumb_large_54.jpg

யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவர், பிள்ளைகள்,சகோதரர்கள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு. நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை. காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.காணாமல் போனோர் பற்றியவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியையும், தமது உறவுகளுக்கு நேர்ந்தது என்னவென்பதையுமே கேட்கிறார்கள்.இந்த விடயம் தனித்துவமானதுடன், உணர்வுபூர்வமானது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடுகள் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம்  விசாரணைக்குழு  தலைவர்கள் மற்றும் குழு உறுப்பினர்கள்  தெரிவு செய்யப்படும் முறைமைகள் குறித்து விளக்கமளிக்கும் இரண்டாவது தொகுதி பயிற்சியாளர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சி  நேற்று முன்தினம் இராஜகிரியவில் உள்ள காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.

காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் கட்டமைப்பிற்குள் விசாரணைகளின் நோக்கங்களைப் புரிந்துகொள்வது விசாரணைக் குழுக்களின் பங்கு காணாமல் போனோர் அலுவலகத்தால் வழங்கப்படும் நிறுவன ஆதரவு விசாரணை செயல்பாட்டில் உள்ள படிநிலைகள் விசாரணை நடைமுறைகள் மற்றும் ஆரம்ப விசாரணை  உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.

 காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலக சிரேஷ்ட அதிகாரிகள்இ ஆரம்ப விசாரணைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.இந்நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துத் தெரிவித்த நீதியமைச்சர்,

காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகியன நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பிரதான அலுவலகங்களாக காணப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் காணாமல் போனோர் பற்றி தொடர்ச்சியாக பேசப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சர்வதேச நாடுகள் இந்த விடயத்தில் உன்னிப்பாக அவதானம் செலுத்தின.இருப்பினும் முறையான நடவடிகைகள் தேசிய மட்டத்தில் துரிதமாக முன்னெடுக்கப்படவில்லை.

காணாமல் போனோர் பற்றி விவகாரம் தனித்துவமானது. இதற்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் நிதி ஒத்துழைப்பு போதுமானதாக கிடைக்கப்பெற வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இவ்விரு ஒத்துழைப்புக்களும் காணாமல் போனோர் அலுவலகத்துக்கு போதுமானதாக கிடைக்கப்பெறவில்லை.

காணாமல் போனோர் தொடர்பில் நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கி ஆட்சிக்கு வந்தோம். காணாமல் போனோர் விவகாரம் வடக்கு,கிழக்கு, தெற்கு என சகல மாகாணங்களுக்கும் விரிவாக்கப்பட்டதொரு பிரச்சினையாகவே காணப்படுகிறது.

எவருக்கும் நாங்கள் எவ்விடத்திலும் சிறப்பு சலுகை வழங்கவில்லை. உண்மையை வெளிக்கொண்டு வரவும், நீதியை நிலைநாட்டவும் சட்டத்தின் பிரகாரம் செயற்படுகிறோம். பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக இரத்துச் செய்யப்படும்.மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படும்.

நாட்டில் இனவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு இனியொரு போதும் கிடையாது. இதனால் தான் 30 வருடகால யுத்தம் தோற்றம் பெற்றது.அதன் தாக்கங்களும் இன்றளவில் தொடர்கின்றன. யுத்தம் அல்லது வேறேதும் காரணிகளால் ஒரு குடும்பத்தின் உறுப்பினர் காணாமலாக்கப்பட்டால் அந்த குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கி அவர்களை திருப்திப்படுத்த முடியாது.

காணாமல் போனோரின் உறவுகளின் வலி மற்றும் உணர்வுகளை எம்மால் விளங்கிக் கொள்ள முடியும்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குச் செல்கையில் எம்மால் இதனை உணர முடிகிறது. அவர்களுடன் உரையாடும் போது 'எமது உறவுகளுக்கு என்னவாயிற்று, எப்போது வருவார்கள்' என்று தான் கேட்கிறார்கள்.

கடந்த கால அரசியல் காரணிகளால் காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் மீது நம்பிக்கையின்மை காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.மக்களின் நம்பிக்கையுடன் ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. நிலைமையும் மாற்றமடைந்துள்ளது.தற்போது கட்டம் கட்டமாக காணிகள் விடுவிக்கப்படுகின்றன.

வலிந்து காணாமலாக்கபட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானோர் இழப்பீடு கோரவில்லை. நீதியை கேட்கிறார்கள்.தமது தந்தை, தாய், சகோதரர்கள் மற்றும் பிள்ளைகளுக்கு நேர்ந்தது என்ன, நீதி என்ன என்றே கேட்கிறார்கள்.அது நியாயமானதே,மனித புதைகுழிகள் அகழ்வு மற்றும் அடுத்தக்கட்ட விசாரணைகளுக்கு தேவையான நிதி  நீதிமன்றத்தின் உத்தரவு ஊடாக விடுவிக்கப்பட்டுள்ளன. உண்மை வெளிவர வேண்டும், நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்ற வெளிப்படையான நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது.

காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாட்டையும், அதன் ஊழியர்களின் சேவையையும் உச்ச அளவில் எதிர்பார்க்கிறோம்.நடைமுறைக்கு சாத்தியமான வகையில் காணாமல் போனோர் பற்றிய அலுவலக உத்தியோகத்தர்களுக்கு பயிற்சியளிக்கிறார்கள்.

 தள்ளாடும் வயதில் உள்ள பெற்றோர்களும் தமது பிள்ளைகளுக்காக எதிர்பார்த்துள்ளார்கள்.இதுவொரு தனித்துவமானதொரு விடயம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.காணாமல் போனோர் பற்றிய விவகாரம் உணர்வுபூர்வமானது என்பதை விளங்கிக் கொண்டு விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

காணாமல் போனோர் பற்றிய விவகாரத்தில் சர்வதேச கட்டமைப்பு அல்லது பொறிமுறை ஊடாக நீதியை பெற்றுக்கொள்ள முடியாது.காணாமல் போனோர் பற்றிய அலுவகத்தின் ஊடாக மாத்திரமே தீர்வு காண முடியும்.யுத்தத்தின் போது இராணுவம் மற்றும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட தமது கணவன், பிள்ளைகள் மற்றும் உறவுகள் எங்கே என்று கேள்வி கேட்கும் உரிமை உறவுகளுக்கு உண்டு.நாங்கள் இதனை மறுதழிக்கவில்லை.

காணாமல் போனோர் பற்றி விவகாரத்தை உணர்வுபூர்வமாக பார்க்க வேண்டும். தேவையான வளங்களை நாங்கள் வழங்குகிறோம்.இந்த விடயத்தில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது என்றார்.

https://www.virakesari.lk/article/240431

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை

3 weeks 5 days ago

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை

08 Mar, 2026 | 02:13 PM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

இலங்கையின் அந்நியச் செலாவணி ஈட்டும் பிரதான துறையான தேயிலை கைத்தொழில் தற்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. குறிப்பாக ஈரானுக்கான தேயிலை ஏற்றுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளமை மற்றும் கடல் வழிப் போக்குவரத்துத் தடைகள் என்பன இத்துறையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளாதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா ஆகியோர் இக்கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனல் ஹேரத் கூறுகையில்,

இலங்கையின் கீழ் நாட்டு தேயிலை உற்பத்தியில் 150 மில்லியன் கிலோவுக்கும் அதிகமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இதில் 10 முதல் 15 வீதமான உயர் ரக தேயிலை ஈரானுக்கு அனுப்பப்படுகின்றது. தற்போதைய போர்ச் சூழல் காரணமாக ஈரான் தேயிலை கொள்வனவை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கான கடல் வழிப் போக்குவரத்துகளிலும் தடைகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலைமை தொடருமானால் வாராந்தம் முற்பணத்தைப் பெற்றுக்கொள்ளும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு கொடுப்பனவுகளை வழங்க முடியாமல் போகும். இலங்கையில் சுமார் ஐந்து இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 10 வீதமான சுமார் இரண்டு மில்லியன் மக்கள் இத்துறை மூலமே வாழ்வாதாரத்தைப் பெற்று வருகின்றனர். தேயிலை விற்பனை பாதிக்கப்படுவது இவர்களது வாழ்வாதாரத்தை ஒரு நெருக்கடிக்குள் தள்ளும் என்றார்.

மேலும் பேராதனை பல்கலைக்கழக சிரேஷ்ட பேராசிரியர் பிரசன்ன பெரேரா குறிப்பிடுகையில்

மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் வெளிநாடுகளில் பணிபுரிபவர்களிடமிருந்து கிடைக்கும் வருமானம் குறைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு வான்பரப்பு வான்வழிப் பயணங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளதால் விமானப் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டு சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடல் வழிப் போக்குவரத்துகளும் மிகவும் ஆபத்தான நிலையை எட்டியுள்ளதால் ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடையும் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்து வருவதுடன் எண்ணெய் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறான உலகளாவிய நெருக்கடிகளில் இருந்து இலங்கை போன்ற சிறிய நாடுகள் தப்பிப்பது கடினம். இதனால் 2026 ஆம் ஆண்டுக்கான பொருளாதார சவால்களை முறியடிப்பது மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/240451

எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர்

3 weeks 5 days ago

எமது அரசியல் பெண்களுக்காகவே - பிரதமர்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கைப் பெண்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துத் துறைகளுக்காகவும் தானும் தனது குழுவினரும் அரசியலில் ஈடுபட்டு வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னிலைப்படுத்துவதற்காகத் தாம் அரசியலில் ஈடுபடவில்லை என்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

"இந்த நாட்டில் உள்ள அனைத்துப் பெண் பிள்ளைகளுக்கும், அனைத்துப் பெண்களுக்கும் முன்மாதிரியாகப் பெண்கள் எவ்வாறு அரசியல் செய்ய வேண்டும் என்பது குறித்து நாளுக்கு நாள் கட்டியெழுப்பப்படும் ஒரு இயக்கமே இது. அதையிட்டு நாம் பெருமையடைகிறோம்.

பெண்கள் அரசியலில் நாம் அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்வதுடன், இந்நாட்டின் பெண்கள் எந்தத் துறையில் எங்கே இருக்கிறார்களோ, அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தவே நாம் அரசியல் செய்கிறோம். வேறு ஒரு தலைமையையோ அல்லது வேறு ஒரு இயக்கத்தையோ முன்னுக்குக் கொண்டு வருவதற்காக நாம் இங்கே எதனையும் செய்யவில்லை. எமது பெண்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அவற்றை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமே நாம் இந்த அரசியலைச் செய்கிறோம்." https://adaderanatamil.lk/news/cmmhdu8tn000k356pk4n2bnxq

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

3 weeks 5 days ago

குணமடைந்த 22 ஈரானிய மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு மாற்றம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தாக்குதலுக்குள்ளான IRIS Dena கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த 22 மாலுமிகள் கொக்கல விமானப்படை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்தில் இருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் விபத்துக்குள்ளான ஈரான் கடற்படைக்குச் சொந்தமான இக்கப்பலில் இருந்த 35 பேரை இலங்கை கடற்படையின் மீட்புக் குழுவினர் கரைக்கு அழைத்து வந்தனர். 

பின்னர் அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

 இவர்களில் மேலும் 10 பேர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

IRIS Dena கப்பல் மீதான தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் மாலுமிகளின் உடல்கள் மீதான மரண பரிசோதனைகள் கடந்த சில நாட்களாக காலி தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டன.

 அதேவேளை, சிகிச்சை பெற்று வரும் மாலுமிகளில் 8 பேர் அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 'மிலன் 2026' கூட்டுப் பயிற்சியில் பங்கேற்கச் சென்ற ஈரானின் மூன்று கப்பல்களில் ஒன்றான 'IRIS Bushehr' என்ற போர்க்கப்பல், கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாணந்துறைக்கு அப்பால் உள்ள இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நுழைந்தது.

 அதற்கமைய, கடந்த மார்ச் 5ஆம் திகதி இரவு அந்தப் போர்க்கப்பலின் ஊழியர்கள் உட்பட 204 மாலுமிகளை இலங்கை கடற்படையினர் கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்தனர். 

இவர்களில் 53 அதிகாரிகள், 54 கடற்படை பயிலுநர்கள், 48 சிரேஷ்ட மாலுமிகள் மற்றும் 23 மாலுமிகள் அடங்குகின்றனர். 

இவர்கள் வெலிசர கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, ஈரானியக் கப்பல்கள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதில் இலங்கையின் இறைமையை வொஷிங்டன் மதிப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மேலும், IRIS Bushehr கப்பல், அதன் ஊழியர்கள் மற்றும் மீட்கப்பட்ட மாலுமிகள் தொடர்பில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இலங்கையின் உள்நாட்டுச் சட்டங்கள் மற்றும் சர்வதேச சட்டக் கடப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கே உள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmhbem07000f356p4bcih8bt

யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்!

3 weeks 5 days ago

யாழ்.பல்கலை ஊடககற்கைகள் மாணவர்களின் சஞ்சிகை வெளியீடும் – குறுந்திரைப்பட திரையிடலும்!

adminMarch 7, 2026

1002819426-1.jpg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சஞ்சிகை ‘கனலி’ – இதழ் 06 வெளியீடும், குறுந்திரைப்பட விழாவும் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

ஊடகக் கற்கைகள் துறையின் தலைவர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். சி.சிறிசற்குணராசாவும், சிறப்பு விருந்தினர்களாக கலைப்பீடத்தின் பதில் பீடாதிபதி கலாநிதி கி.சண்முகநாதனும் ஊடகத் துறைப் பேராசிரியர் சி.ரகுராமும் கலந்து சிறப்பித்தனர்.

கனலி சஞ்சிகை வெளியீட்டைத் தொடர்ந்து சஞ்சிகைக்கான கருத்துரையினை கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நிகழ்த்தினார். சஞ்சிகை வெளியீட்டினைத் தொடர்ந்து மாணவர்களால் இயக்கப்பட்ட குறும்படங்களின் திரையிடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://globaltamilnews.net/2026/230162/

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!

3 weeks 5 days ago

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்!

adminMarch 7, 2026

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளின் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 28 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்த சேவை, சுமார் நான்கு மாதங்களின் பின்னர் நேற்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து 77 பயணிகளுடன் புறப்பட்ட “சிவகங்கை” பயணிகள் படகு, யாழ்ப்பாணம் காங்கேசன்துறை துறைமுகத்தை வெற்றிகரமாக வந்தடைந்தது. அதன் பின்னர், 92 பயணிகளுடன் மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி பயணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையேயான மக்கள்-to-மக்கள் தொடர்பை வலுப்படுத்தும் முக்கியமான கடல் போக்குவரத்து இணைப்பாக இந்த சேவை கருதப்படுகிறது. சுற்றுலா மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் இது ஊக்கமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பயணிகள் படகு சேவை வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த மற்ற 6 நாட்களிலும் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு வழி பயணத்திற்கான கட்டணம் 28,500 இலங்கை ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2026/230174/

டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி

3 weeks 5 days ago

டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி

Published By: Digital Desk 1

08 Mar, 2026 | 08:14 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அண்மையில் மேற்கொண்ட முதலாவது இந்தியப் பயணத்தை அடுத்து, கட்சிக்குள் நடத்தப்பட்ட முக்கிய கலந்துரையாடலில் மாகாண சபைத் தேர்தல் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தியப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய ரில்வின் சில்வா, தனது பயணம் தொடர்பான விவரங்களைக் கட்சியினருக்குத் தெளிவுபடுத்தியுள்ளார். அதன் இறுதியில், மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கு கட்சி உடனடியாகத் தயாராக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் பிரகாரம் அரசாங்கம் தற்போது மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானித்துள்ளதாக அவர் கட்சிக்குத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதன் முதற்படியாக, இன்று ஞாயிற்றுகிழமை கொழும்பில் நடைபெறவுள்ள பெண்கள் தினக் கொண்டாட்டப் பேரணி, மாகாண சபைத் தேர்தலுக்கான ஜே.வி.பியின் களம் இறங்கும் ஆரம்பப் புள்ளியாக அமைய உள்ளது. கடந்த சில காலங்களாக மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜே.வி.பி தலைமையகம் மட்டுமன்றி, இந்தியாவிலும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை நிச்சயம் நடத்துவோம் என இந்தியாவிற்கும் ஏனைய தரப்பினருக்கும் தற்போதைய அரசாங்கம் வாக்குறுதி அளித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்திலோ மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்தின் தற்போதைய செல்வாக்கு 20 வீதம் - 30 வீதம் ஆக வீழ்ச்சியடைந்துள்ளதாக வெளியாகும் கருத்துக்களால் கட்சித் தலைமை கவலையடைந்துள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தல் பின்னடைவுகளின் போது பெலவத்தைக்குத் தெரியாத இந்த அதிர்வு, இப்போது நாடு முழுவதிலும் இருந்து கிடைக்கும் தகவல்களால் உணரத் தொடங்கியுள்ளது.

இதனைச் சரிசெய்ய அரசாங்கம் சில முக்கிய நடவடிக்கைகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது. அதாவது எதிர்வரும் 6-7 மாத காலப்பகுதிக்குள் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை விரைவாக நிறைவேற்றவும், பின்னடைவைச் சந்தித்துள்ள துறைகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி, 'திருடர்களைப் பிடிக்கும்' பணிகளைத் தீவிரப்படுத்த அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுத்துள்ளது. இந்த அனைத்து நகர்வுகளும் இறுதியாக மாகாண சபைத் தேர்தலை மையப்படுத்தியே அமையப்போகிறது. எவ்வாறாயினும் மார்ச் 8 கொழும்பு மகளிர் பேரணி, ஜே.வி.பியின் பலத்தைக் காட்டும் ஒரு பிரம்மாண்டமான அரசியல் நகர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டில்வின் சில்வாவின் இந்தியப் பயணத்தின் பின் மாகாண சபைத் தேர்தலுக்குத் தயாராகும் ஜே.வி.பி

நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை!

3 weeks 5 days ago

நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை!

Published By: Digital Desk 1

07 Mar, 2026 | 03:53 PM

image

மேற்கு கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்த ஜப்பானிய தற்காப்புப் படையின் போர்க்கப்பலில் திடீரென நோய்வாய்ப்பட்ட வீரர் ஒருவர், இலங்கை கடற்படையினரின் துரித நடவடிக்கையினால் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஜப்பான் கடல்சார் தற்காப்புப் படைக்குச் சொந்தமான "JMSDF ONAMI" என்ற போர்க்கப்பல் இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் மேற்கு கடலில் பயணித்துக் கொண்டிருந்தபோது, அதில் பணியாற்றிய குழு உறுப்பினர் ஒருவர் திடீர் உடல்நலக்குறைவுக்கு உள்ளானார். அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டதையடுத்து, கப்பல் தரப்பிலிருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அவசர உதவி கோரப்பட்டது.

இந்த அறிவிப்பு கிடைத்தவுடன், கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் பேரில், மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு போர்க்கப்பல் மருத்துவக் குழுவுடன் உடனடியாக குறித்த பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நடுக்கடலில் வைத்து நோயாளியைப் பொறுப்பேற்ற இலங்கை கடற்படையினர், அவருக்குத் தேவையான அடிப்படை முதலுதவிகளை கப்பலிலேயே வழங்கினர்.

குறித்த நபர் 06ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு விரைவாகக் கொண்டு வரப்பட்டார்.

துறைமுகத்தை வந்தடைந்ததும், அவர் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மேலதிக தீவிர சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் ஆபத்தில் சிக்கித் தவிக்கும் சர்வதேச கப்பல் பணியாளர்கள் மற்றும் உள்நாட்டு மீனவ சமூகத்திற்குத் தேவையான உடனடி நிவாரணங்களை வழங்க கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் எப்போதும் தயார் நிலையில் உள்ளதாக கடற்படைத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் திடீர் உடல்நலக்குறைவு: ஜப்பானியப் படை வீரரை துரிதமாக மீட்டெடுத்த இலங்கை கடற்படை!

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

3 weeks 5 days ago

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

Mar 7, 2026 - 04:32 PM

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

அஸ்வெசும திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023 ஆம் ஆண்டுகளில்) விண்ணப்பித்த, நன்மைகளைப் பெறுவோர் மற்றும் பெறாதோர் என அனைவரினதும் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 23 ஆம் பிரிவின் பிரகாரம், நலன்புரி நன்மைகளைப் பெறும் நபர்களின் பெயர் பட்டியலை வருடாந்தம் புதுப்பிப்பது கட்டாயமாகும் என்பதால் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இச்செயன்முறைக்காகத் தகுதியுடைய 2,993,558 நபர்கள் ஏற்கனவே தமது தகவல்களைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அவர்களின் தகவல்களை உறுதிப்படுத்தும் மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் தற்போது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்தச் சபை குறிப்பிட்டுள்ளது.

அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் பயனாளிகளின் வீடுகளுக்குச் சென்று, அவர்கள் வழங்கிய தகவல்களை உறுதிப்படுத்துவார்கள். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் மார்ச் மாதம் 28 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளன.

கணக்கெடுப்பு உத்தியோகத்தர் வீட்டிற்கு வரும்போது, தேவையான ஆவணங்களைச் சரிபார்ப்பதற்காகத் தயாராக வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குடும்பத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து உறுப்பினர்களினதும் தேசிய அடையாள அட்டைகள், கடந்த 3 மாதங்களுக்கான மின்சாரப் பட்டியல்கள், காணி உரிமையை உறுதிப்படுத்தும் உறுதிப்பத்திரங்கள், வாகன உரிமைப் பத்திரங்கள் (இருப்பின்), மருத்துவச் சான்றிதழ்கள் போன்ற ஆவணங்களை உத்தியோகத்தர்களிடம் சமர்ப்பிக்கத் தயாராக வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், முதியோர் கொடுப்பனவு, ஊனமுற்றோர் கொடுப்பனவு மற்றும் சிறுநீரக நோயாளர் உதவித் தொகை கோரி விண்ணப்பித்தவர்களின் தகவல்களும் இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் உள்ளடக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக எவரேனும் தவறான தகவல்களை வழங்கினால், நலன்புரி சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் அது தண்டனைக்குரிய குற்றமாகும். அத்தகைய சந்தர்ப்பத்தில், நீதவான் முன்னிலையில் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு 5,000 ரூபாவிற்கு மிகாத அபராதம் அல்லது ஓராண்டு கால சிறைத்தண்டனை அல்லது இவ்விரண்டு தண்டனைகளையும் விதிக்க அதிகாரம் உள்ளதாக அந்தச் சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

அஸ்வெசும முதற்கட்ட பயனாளிகளின் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகள் ஆரம்பம்

Checked
Fri, 04/03/2026 - 09:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr