ஊர்ப்புதினம்

கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்!

3 weeks 5 days ago

கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்!

Published By: Digital Desk 1

07 Mar, 2026 | 03:14 PM

image

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின நினைவு சாலை ஓட்டம் - 2026, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு கவுன்சில் மற்றும் இலங்கை கடற்படையின் ஒருங்கிணைப்பிலும், இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரோட்ரிகோவின் தலைமையிலும், சனிக்கிழமை (07) காலை கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் வெற்றிகரமாக நடைபெற்றது.

சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் பிரான்சில் 1948 பெப்ரவரி 18 ஆம் திகதி நிறுவப்பட்டதுடன், இது மாநிலங்களுக்கு இடையிலான மோதல்களைத் தீர்க்கவும், விளையாட்டின் மூலம் அமைதியைக் கட்டியெழுப்பவும், நட்பை மேம்படுத்தவும் "விளையாட்டின் மூலம் நட்பு" என்ற குறிக்கோளுடன் உருவாக்கப்பட்டதுடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் தலைமையகம் பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸில் அமைந்துள்ளதுடன், சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் உலகின் மிகப்பெரிய பல்துறை அமைப்பாகும்,

இது பெல்ஜியம், டென்மார்க், லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்தின் முன்னோடிப் பணிகளுடன் நிறுவப்பட்டது.

இது உலகெங்கிலும் உள்ள 140 நாடுகளின் ஆயுதப்படைகளுக்கான பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் ஒரு உலகளாவிய விளையாட்டு அமைப்பாகும்,

மேலும் இது உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையிலான விளையாட்டு நிகழ்வுகளை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

கவுன்சில் நிறுவப்பட்டதை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு உறுப்பு நாடும் பெப்ரவரி 18 அல்லது அதைச் சுற்றி சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் நினைவு தின ஓட்டத்தை ஏற்பாடு செய்கிறது.

அதன்படி, 2026 சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் நினைவு தின ஓட்டம் கொழும்பு காலி முகத்திடலின் அருகே தொடங்கி காலி முகத்திடல் சுற்றுவட்டத்தில் 02 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கடந்து, மீண்டும் கொழும்பு காலி முகத்திடலின் அருகே முடிவடைந்தது.

மேலும், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ மற்றும் விமானப்படைத் தளபதி ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, முப்படைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஸ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் பிற அணிகள் மற்றும் ஊனமுற்ற போர்வீரர்கள் குழுவுடன் இந்த நினைவு பயணத்தில் பங்கேற்றனர்.

கொழும்பு காலி முகத்திடலில் முப்படைகளின் பங்கேற்புடன் சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் தின ஓட்டம்!

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான் சாகசக் கண்காட்சி ஆரம்பத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

3 weeks 5 days ago

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான் சாகசக் கண்காட்சி ஆரம்பத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

Published By: Vishnu

07 Mar, 2026 | 05:27 AM

image

இலங்கை விமானப்படையின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் வெள்ளிக்கிழமை (06) பிற்பகல் ரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.0969.

விமானப்படைத் தளத்திற்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.144.j

பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார்.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.088.j

விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.044.j

இலங்கை விமானப்படையின் 75 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்த கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்ப அரங்குகளையும் இது கொண்டுள்ளது.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.054.j

இலங்கை விமானப்படையின் விமானங்களை மிக அருகில் சென்று பார்க்கவும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி அறியவும் இது வாய்ப்பை வழங்குவதுடன், விமானப்படையின் அனைத்து தொழில்முறையிலான தனித்தனி அரங்குகள் மற்றும் வான்வழிப் பறப்பிற்காக ஏராளமான இலங்கை விமானப்படை விமானங்கள் மற்றும் சிவில் விமானங்கள் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.043.j

மேலும், விமானப்படை ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் வான்வழி சாகசங்கள், இரவு நேர ட்ரோன் காட்சிகள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள், விமானப்படை விசேட பிரிவினால் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்பு காட்சிகள், பரிசூட் காட்சிகள் மற்றும் அங்கம்பொர சண்டை காட்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகளை இன்று (06) முதல் மார்ச் 08 வரை, தினமும் பிற்பகல் 02.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை பொதுமக்கள் கண்டுகளிக்கலாம்.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.18.jp

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அனுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2026-03-06_at_20.15.15.jp

WhatsApp_Image_2026-03-06_at_20.15.14.jp

WhatsApp_Image_2026-03-06_at_20.15.08.jp

WhatsApp_Image_2026-03-06_at_20.15.06.jp

WhatsApp_Image_2026-03-06_at_20.15.05.jp

விமானப்படை 75ஆம் ஆண்டு விழா: வான் சாகசக் கண்காட்சி ஆரம்பத்தில் ஜனாதிபதி பங்கேற்பு

சாய்ந்தமருதில் மூழ்கிய கோடி ரூபாய் பெறுமதியான பாரிய மீன்பிடிப் படகு!

3 weeks 5 days ago

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

Mar 6, 2026 - 10:00 AM

சாய்ந்தமருதில் மூழ்கிய பாரிய மீன்பிடிப் படகு!

அம்பாறை, கல்முனை பிராந்தியத்திற்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில், இயந்திரம் மற்றும் வலைகளுடன் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த ஒரு கோடி ரூபாய் பெறுமதியான பாரிய ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்று கடலில் மூழ்கியுள்ளது. இச்சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த படகு கடற்கரை ஓரமாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத விதமாக இயந்திரம் மற்றும் வலைகளுடன் கடலில் மூழ்கியுள்ளது.

சாய்ந்தமருதைச் சேர்ந்த மீனவர் ஒருவருக்குச் சொந்தமான இந்தப் படகில் இருந்த பல லட்சம் ரூபாய் பெறுமதியான இயந்திரம் மற்றும் வலைகள் சேதமடைந்துள்ளதாகக் தெரிவிக்கப்படுகிறது.

-அம்பாறை நிருபர் ஷிஹான்-

சாய்ந்தமருதில் மூழ்கிய கோடி ரூபாய் பெறுமதியான பாரிய மீன்பிடிப் படகு!

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்

3 weeks 6 days ago

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும் யாழ். இராணுவ படைத் தலைமையகத்தை அகற்ற தீர்மானிக்கவில்லை - பாதுகாப்பு பிரதி அமைச்சர்

06 Mar, 2026 | 02:18 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிப்பின் போது சகல விடயங்களும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளித்ததன் பின்னரே காணிகள் விடுவிக்கப்படுகின்றன என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

தித்வா புயல் தாக்கம் ஏற்பட்டவுடன் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பேரிடரை முகாமைத்துவம் செய்வதற்கும் 2025.11.28 ஆம் திகதி பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைகளின் பிரகாரம் அவசரகால சட்டம் ஜனாதிபதியால் அமுல்படுத்தப்பட்டது.

சட்டத்தின் உறுப்புரையின் பிரகாரம் அமுல்படுத்தப்பட்ட அவசரகால காலம் ஒவ்வொரு மாதமும் நீட்டிக்கப்பட வேண்டும். மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பதற்ற நிலைமையை தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் நேற்று (நேற்று முன்தினம்) கூடிய பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.இதற்கமைவாகவே இம்முறையும் அவசரகால சட்டத்தின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் ஆகியவற்றுக்கு எதிராக அவசரகால சட்டத்தை அமுல்படுத்தவில்லை. மக்களுக்கு எதிராக செயற்பட வேண்டிய தேவை எமக்கு கிடையாது. அவசரகால சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். ஆனால் அந்த குற்றச்சாட்டை ஆதாரபூர்வமாக நிரூபிக்கவில்லை. வெறும் குற்றச்சாட்டுக்களை மாத்திரமே முன்வைக்கிறார்கள்.

யாழ்ப்பாணம் இராணுவ படைத் தலைமையகத்தை அகற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளியாகிய செய்தி முற்றிலும் பொய்யானது. குறுகிய அரசியல் இலாபம் தேடும் அரசியல்வாதிகளின் செயற்பாடே இது என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி விடுவிக்கப்படும் போது சகல காரணிகளும் விரிவாக ஆராயப்படுகிறது. தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி தான் காணிகள் விடுவிக்கப்படுகின்றன. காணிகள் விடுவிக்கப்பட வேண்டும். என்ற கொள்கையை நெருக்கடிக்குள்ளாக்கவே ஒரு தரப்பினர் போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்.

யுத்தம் முடிவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் தேசிய பாதுகாப்பு மற்றும் சமூக கட்டமைப்பு குறித்து எம்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் தரப்பினர் 5 ஆண்டுகால கொள்கைத் திட்டத்தை உள்ளடக்கி மூன்று தடவைக்கு செயற்படுத்தியிருந்தால் நாடு முன்னேற்றமடைந்திருக்கும், பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கப்பெற்றிருக்கும் என்றார்.

வடக்கு கிழக்கில் காணி விடுவிப்பின் போது தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமையளிக்கப்படும்

இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு!

3 weeks 6 days ago

MediaFile.webp?resize=750%2C375&ssl=1

இலங்கைக்குக் கிடைக்கும் வெளிநாட்டுப் பணம் அதிகரிப்பு: பெப்ரவரி மாதத்தில் 729 மில்லியன் டொலர் வரவு!

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, வெளிநாட்டுத் தொழிலாளர் பணப்பரிமாற்றத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ள இலங்கையர்களிடமிருந்து 729 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது கடந்த 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்துடன் (548.1 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் 180.9 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது சுமார் 33 சதவீத வளர்ச்சியாகும்.

கடந்த ஜனவரி மாதத்தில் 751.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகப் பதிவாகியிருந்தது. அதனுடன் ஒப்பிடும்போது பெப்ரவரி மாதத்தில் பணப்பரிமாற்றத்தில் சிறிய அளவிலான வீழ்ச்சி காணப்பட்டாலும், வருடாந்த அடிப்படையில் இது ஒரு பாரிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் (ஜனவரி மற்றும் பெப்ரவரி) மொத்தமாக 1.48 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றமாக இலங்கைக்குக் கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 32 சதவீத அதிகரிப்பு என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு முதுகெலும்பாக விளங்கும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் இவ்வாண்டு ஆரம்பத்திலேயே பில்லியன் கணக்கில் அதிகரித்திருப்பது நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்புக்கு வலுசேர்ப்பதாக அமைந்துள்ளது.

https://athavannews.com/2026/1467446

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க

3 weeks 6 days ago

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க

06 Mar, 2026 | 05:17 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.அமெரிக்காவின் செயற்பாடுகள் இலங்கைக்கும் அச்சுறுத்தலாக அமையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (6) நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஈரான் கப்பல் விவகாரம் தொடர்பில் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் குறிப்பிட்ட கருத்துக்களை முன்னிலைப்படுத்தி ஆளும் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். எதிர்க்கட்சியின் உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இலங்கையை அண்மித்த கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீது அமெரிக்கா தாக்கப்பட்டமை தற்போது பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் இலங்கை மீதும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் என்ன உள்ளடக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கத்திடம் பலமுறை கேட்டும் இதுவரையில் அந்த ஒப்பந்தம் பகிரங்கப்படுத்தப்படவில்லை. இலங்கை கடற்பரப்பில் தாக்குதல் நடத்தும் போது இலங்கை அமைதியாக இருக்க வேண்டும், தாக்குதலுக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

அதேபோல் இந்தியாவுடன் 08 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்களும் இதுவரையில் பகிரங்கப்டுத்தப்படவில்லை. அமெரிக்கா மற்றும் இந்தியாவுடனான ஒப்பந்தங்களின் இரகசியத்தன்மையை பாதுகாப்பதன் பின்னணி என்ன? என்று கேள்வியெழுப்பினார்.

அமெரிக்காவுடன் கைச்சாத்திட்ட பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும் - சுஜீவ சேனசிங்க

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் - சர்வதேச விசாரணையை நடத்தினால் சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

3 weeks 6 days ago

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

Mar 2, 2026 - 09:51 AM

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

இந்த அரசாங்கத்தினால் சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய ஒரு விசாரணையை நடத்தினால் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லையெனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்திற்குட்பட்ட ரமேஷ்புரம், கணபதி நகர், ஐயன்கேணி ஆகிய அறநெறி பாடசாலைகளில் கல்வி கற்கும் 6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (01) நடைபெற்றது.

ரமேஷ்புரம் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஏறாவூர்ப்பற்று பிரதேசசபை உறுப்பினரும் ஊடகவியலாளருமான செல்வகுமார் நிலாந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் ஏறாவூர்ப்பற்று நகரசபை உறுப்பினர் ரகு உட்பட ஆலய நிர்வாக சபையினர், கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் சங்க, மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மேலும் கருத்துதெரிவித்த அவர்,

உத்தியோகபூர்வமாக அவர்களுடன் சேர கூறி எங்களுடைய கட்சியிடம் பேசியதாக நான் அறியவில்லை. அவ்வாறான ஒரு அழைப்புகள் வந்தால் அது கட்சியினுடைய உயர்மட்ட குழுக்கள் மத்திய செயற்குழுக்கள் தான் அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும். இருந்த போதும் என்னுடைய அறிவுக்கு எட்டிய வகையில் மொட்டு, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி போன்ற கட்சிகளுடன் கூட்டுக் கட்சியாக அல்லது கூட்டணியாக இலங்கை தமிழரசு கட்சி செல்லும் என்பதற்கு எந்த வாய்ப்பு இருக்கும் என நான் நம்பவில்லை. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து ஆனால் இது தொடர்பாக கட்சியினுடைய உயர்மட்டம்தான் முடிவு எடுக்க வேண்டும்.

அரசாங்கத்தை பொருத்தவரையில் இந்த சுரேஷ் சலேனுடைய கைது சம்பந்தமாக உண்மையில் நான் 2023 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் பல விடயங்களை நாங்கள் வெளிப்படுத்தி இருந்தோம். சர்வதேச விசாரணை வந்தால் தான் எங்களுடைய சாட்சியங்களை சர்வதேச விசாரணை இடம்பெற்றால் ஒப்படைக்கலாம் என்று இன்றும் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருந்தாலும் கூட இன்றும் சாட்சிகள் வழங்குவதற்கு பலர் இருக்கின்றார்கள்.

சுரேஷ் சலே கைதுக்கு பின்னர் இலங்கை வரலாற்றில் நடக்காதவாறு நடந்திருக்கின்றது. அரசாங்கத்தில் இந்த நல்ல விடயங்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், நல்ல விடயங்களை நாங்கள் மறுப்பது அல்ல அந்த வகையில் சுரேஷ் சலே போன்று உயர்மட்ட ராணுவ புலனாய்வுத்துறை ராணுவ அதிகாரிகளை கைது செய்வது இந்த அரசாங்கம் செய்துள்ள பெரியதொரு விடயம்.

ஆனால் இன்னமும் பலர் இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தில் நான் நினைக்கின்றேன் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதோடு அதனை தொடர்ந்து ராணுவ புலனாய்வுத்துறை செய்த பல விடயங்கள் தொடர்பாக பலர் கருத்துக்கள் முன் வைத்திருக்கின்றார்கள். நாங்களும் பாராளுமன்றத்தில் இந்த விடயங்களையும் கூறி இருக்கின்றோம்.

இந்த விடயங்கள் தொடர்பாகவும் சர்வதேச மேற்பார்வையுடன் ஒரு விசாரணையை இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அரசுக்கு ஒரு நிரந்தரமான வெற்றி கிடைக்கும், அது ஒரு புறம் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான விடயமாக இருக்கட்டும், பொறுப்பு கூறல் விடயமாக இருக்கட்டும் நிரந்தரமான ஒரு தீர்வை அரசு வழங்கக் கூடியதாக இருக்கும் சர்வதேச அங்கீகாரத்துடன் ஒரு விசாரணையை நடத்தினால்.

அந்த வகையில் இவ்வாறான ஒரு பின்னணியில் நான் ஏன் கூறுகின்றேன் என்றால் மொட்டு கட்சியை சேர்ந்தவர்கள் சுரேஷ் சலே இராணுவ வீரர் தமிழ் மக்களை அழித்ததில் அவருக்கும் பங்கு இருக்கின்றது என்கின்ற போது தமிழரசு கட்சி இவ்வாறான ஒரு கூட்டணியில் சேருமா என்ற கேள்வி கேட்பது பிழை என்பதை சொல்லுவதற்காகதான் கூறுகின்றேன் என தெரிவித்தார்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

சாட்சிகள் சொல்ல இன்றும் பலர் தயார்!

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!

3 weeks 6 days ago

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!

06 Mar, 2026 | 03:47 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது என எதிர்க்கட்சி உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்தக்கு நீடித்துக்கொள்ளும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாட்டின் தற்போதைய நிலையில் குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பதற்கு நாங்கள் முயற்சிப்பதில்லை. ஆனால் அரசாங்கம் இன்று எதிர்க்கட்சியில் இருந்திருந்தால், இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம், போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கும். இந்தியாவுக்கு எதிராக நீங்கள் தெரிவித்த விடயங்கள் எங்களுக்கு தெரியும். ஆனால் இந்த சபையில் இருக்கும் அதிகமானவர்கள் இந்தியாவுக்கு எதிராக கதைக்கமாட்டார்கள். ஆனால் நான் அப்படியல்ல. கடற்படை பயிற்சி முகாம் எமது நாட்டில் நடத்தவில்லை. கடந்த மாதம் 18ஆம் திகதி இந்திய விசாலாப்பட்டினத்திலே இடம்பெற்றது.

ஆனால் ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விடயத்தில் இந்தியா லாவகமாக எமது நாட்டுக்கு அதனை திசை திருப்பி இருக்கிறது. இந்தியாவுடன் உங்களது ஜனாதிபதிக்கு தோல்மேல் கை போட்டுக்கொண்டு இருக்கக் சொல்லுங்கள். ஆனால் முதுகில் குத்தும்வரை தெரியாமல் இருக்கும். ஈரானின் இரண்டாவது கப்பலை இந்தியா எடுப்பதாக நீங்கள் இந்த சபையில் தெரிவித்து வந்தீர்கள். ஆனால் இரண்டாவது கப்பலையும் இந்தியா எமக்கு தள்ளிவிட்டார்கள்.

கடற்படையின் பயிற்சி எமது நாட்டிலா இடம்பெற்றது என கேட்கிறேன். இந்தியாவில் தானே இடம்பெற்றது. இந்தியா லாவகமாக இரண்டு கப்பல்களையும் எமது பக்கம் தள்ளிவிட்டார்கள். ஈரான் தூதரகத்துக்கு நாங்கள் நேற்று (நேற்று முன்தினம்) சென்றோம்.

அப்போது தூதுவர் எங்களிடம் தெரித்த விடயம்தான், கடற்படை தளபதி இந்தியாவில் இடம்பெற்ற பயிற்சியில் இருந்துள்ளார். அப்போது, இலங்கைக்கு வருமாறு ஈரான் கடற்படைக்கு வாய்ப்பேச்சாக தெரிவித்திருக்கிறார்.,இதுதொடர்பாக கடற்படை தளபதி பொறுப்புடனா தெரிவித்தார் என்பது தொடர்பில் விசாரித்து, பாதுகாப்பு அமைச்சர் பாராளுமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இந்தியா என்பது எம்மை போன்று சிறிய நாடு அல்ல. உலகில் இருக்கும் பலம் பொருந்திய நாடுகளில் ஒன்று. அப்படியான நாடு, இந்த விடயத்தில் மெளனம் காத்து, பந்தை எமது பக்கம் எறிந்துவிட்டு தப்பித்துக்கொள்ள பார்க்கிறார்கள்.என்றாலும் ஈரானின் இரண்டாவது கப்பலை பாதுகாத்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தியாவின் அழைப்பில் வந்த ஈரான் கப்பலை இந்தியா நினைத்தால், அங்கு நிறுத்தி வைத்திருக்கலாம். இந்தியாவுக்கு அதற்கான உரிமை இருந்தது. ஆனால் இந்தியா, அதனை எமது பக்கம் திருப்பிவிட்டு, தப்பித்துக்கொண்டுள்ளது. அதனால் அரசாங்கம் யாரையும் அதிகம் நம்பி செயற்படக்கூடாது.

அதேநேரம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி என பலர் தெரிவிக்கப்பட்டனர். முன்னாள் சட்டமா அதிபர் தப்புலலிவேராவின் பதவிக்காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடித்து தருமாறு கோட்டாபய ராஜபக்ஷ்விடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதனை கோட்டாபய ராஜபக்ஷ் நிராகரித்ததாலே, தப்புலலிவேரா ஓய்வு பெற்றுச்செல்லும்போது, இந்த தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஒருவர் இருக்கிறார் என தெரிவித்தார். ஆனால் அது தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வருமாறு தெரிவித்தபோது, அவர் செல்லாமல் மறைந்திருந்தார் என்றார்.

இந்தியா தப்பித்துக்கொண்டது, இலங்கை சிக்கியுள்ளது: ஈரான் கப்பல் விவகாரத்தில் சாமர சம்பத் தஸநாயக்க சாடல்!

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர

3 weeks 6 days ago

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர

06 Mar, 2026 | 06:37 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

இலங்கை கடற்பரப்பில் மார்ச் 2ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களை இந்த அரசாங்கம் முழுமையாக செயற்படுத்துகிறது

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம் அமுலாக்கம் நீட்டிப்பு தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அவசரகால சட்டத்தின் அமுலாக்க காலத்தை நீட்டிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வர்த்தமானிக்குரிய ஒழுங்குவிதிகள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இதனை பற்றி கேட்பதற்காகவே காலையில் உரையாற்றுவதற்கு அனுமதி கேட்டேன்.ஆனால் நாங்கள் பேசினால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் வெளிவருமோ என்ற அச்சத்தில் சபாநாயகர் எமக்கு பேசுவதற்கு இடமளிப்பதில்லை.

சட்டம் அனைவருக்கும் சமம் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். ஆனால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை முன்னிலைப்படுத்தியா இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு செயற்படுகிறது என்ற சந்தேகம் காணப்படுகிறது.

வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழு எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விவகாரத்தில் வழமைக்கு மாறாக துரிதமாக செயற்பட்டு நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்தது.ஆகவே ஆணைக்குழு குமார ஜயகொடிக்கு ஒரு வகையிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிறிதொரு வகையிலும் செயற்படுகிறது.

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது விடயத்தில் பயங்கரவாத தடைச்சட்டமும் மீறப்பட்டுள்ளது.தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை பார்க்க வருபவர்கள் பொலிஸ் அறிக்கை பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சுரேஷ் சலேவுடன் சட்டத்தரணி உரையாடும் போது அந்த இடத்தில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளார்கள்.இதுவொரு புதுமையான சட்டம்.

ஈரான் கப்பலை ஜனாதிபதி மனிதாபிமான அடிப்படையில் பாதுகாத்தார், அந்த கப்பலில் இருந்தவர்களை மீட்டார் என்று குறிப்பிடுவதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இலங்கை கடற்பரப்பில் மார்ச் 02 ஆம் திகதியில் இருந்து அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.இது தொடர்பான உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.இந்த உளவு தகவல்களுக்கு அமைவாகவே ஈரான் கப்பல் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

மக்கள் விடுதலை முன்னணியினர் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதாக குறிப்பிட்டார்கள்.ஆனால் ஆட்சிக்கு வந்தவுடன் அமெரிக்காவுடன் இணக்கமாகவே செயற்படுகிறார்கள். கடந்த கால ஒப்பந்தங்களை முழுமையாக செயற்படுத்துகிறார்கள் என்றார்.

அமெரிக்காவின் இரண்டு உளவுக் கப்பல்களால் இலங்கை கடற்பரப்பு கண்காணிக்கப்படுகிறது ; உண்மையை அரசு பகிரங்கப்படுத்த வேண்டும் - தயாசிறி ஜயசேகர

ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!

3 weeks 6 days ago

ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!

07 Mar, 2026 | 11:09 AM

image

இலங்கைக் கடற்பரப்பில் மூழ்கிய ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து மீட்கப்பட்டு, தற்போது இலங்கையின் வசம் உள்ள ஈரானிய மாலுமிகளை மீண்டும் ஈரான் நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.

அண்மையில் இலங்கைக்கு அப்பால் உள்ள சர்வதேசக் கடற்பரப்பில் ஈரானுக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' என்ற போர்க்கப்பல் மூழ்கியது.

அதிலிருந்து மீட்கப்பட்ட மாலுமிகள் மற்றும் தற்போது இலங்கையின் பொறுப்பில் உள்ள 'ஐரிஸ் புஷெர்' என்ற மற்றொரு ஈரானியக் கப்பலின் பணியாளர்கள் ஆகியோரை மீண்டும் ஈரானுக்கு அனுப்பக் கூடாது என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் இலங்கை அதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

குறித்த மாலுமிகளை ஈரான் தனது பிரசார நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், அவர்களைத் திருப்பி அனுப்பும் விடயத்தில் இலங்கை மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் மார்ச் 06 ஆம் திகதியிடப்பட்ட அமெரிக்காவின் உள்நாட்டுத் தகவல் பரிமாற்றக் குறிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் நிலவி வரும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில், இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த மாலுமிகள் விவகாரம் தற்போது சர்வதேச அரசியலில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் அல்லது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஈரானிய மாலுமிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம்: இலங்கைக்கு அமெரிக்கா அழுத்தம்!

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

3 weeks 6 days ago

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

Published By: Vishnu

06 Mar, 2026 | 08:18 PM

image

சர்வதேச ரீதியில் ஈரானுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழுத்தங்கள் மற்றும் போர் அச்சுறுத்தல்களைக் கண்டித்து, கொழும்பு தேவட்டகா பள்ளிவாசலுக்கு முன்பாக இன்று பாரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. 'பாலஸ்தீனத்தின் நண்பர்கள்' (Friends of Free Palestine) அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், இலங்கைக்கான ஈரானிய தூதுவர் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-03-06_at_19.18.43.jp

WhatsApp_Image_2026-03-06_at_19.18.42.jp

ஈரானுக்கு எதிரான ஆக்கிரமிப்பை நிறுத்து! கொழும்பில் பாரிய கவனயீர்ப்பு போராட்டம்

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது

3 weeks 6 days ago

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது 

06 Mar, 2026 | 05:55 PM

image

சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளை தடுப்பதற்காக உள்ளூர் கடல் பகுதிகளில் கடந்த பெப்ரவரி 16 முதல் 28 வரை கடற்படையினர் எடுத்த நடவடிக்கைகளில் 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், 2 டிங்கிகள், 3 படகுகள் மற்றும் 7 பாரம்பரிய படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கிழக்கு மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளால் திருகோணமலை கதிரவேளி, கோட்பே, கோகிலாய், மூதூர், நோர்வே தீவு மற்றும் மன்னார் தால்பாடு மற்றும் இரணைதீவு ஆகியவற்றின் தெற்கு கடற்கரை மற்றும் கடல் பகுதிகளில் கடற்படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டபோதே குறித்த 19 பேரும் பிடிபட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர்கள் 19 பேரும், புல்முடை பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை, வாழைச்சேனை, கோட்பே, மூதூர், கிண்ணியா மற்றும் மன்னார் மீன்வள ஆய்வு அலுவலகங்கள் மற்றும் முலன்காவில் பொலிஸ் நிலையம் ஆகியவற்றிடம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

unnamed__1_.jpg

unnamed__3_.jpg

unnamed__2_.jpg

unnamed__4_.jpg

unnamed.jpg

சட்டவிரோத மீன்பிடியை தடுக்க கடற்படையினர் நடவடிக்கை - 19 பேர் கைது

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

3 weeks 6 days ago

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 05:06 PM

image

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் 50 வீட்டு திட்டப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை (04) இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான பெண் உட்பட நான்கு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பெருந்தொகை பணத்தையும் மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அந்த வீட்டின் உரிமையாளர் நேற்று வியாழக்கிழமை (05) மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் படி, வீட்டிலிருந்து தாலிக்கொடி, சங்கிலி, காப்பு உள்ளிட்ட சுமார் 15 பவுன் தங்க நகைகள் மற்றும் 4 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில், மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி யூ.என். கெட்டியாராச்சி அவர்களின் பணிப்புரையின் பேரில், மன்னார் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பரிசோதகர் பத்தே விதான தலைமையிலான பொலிஸ் குழு விசேட தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தது.

WhatsApp_Image_2026-03-06_at_4.20.06_PM_

இதன் போது பிரதான சந்தேகநபரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மேலும் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களிடமிருந்து சுமார் 56 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 பவுன் தங்க நகைகள் மற்றும் பணம் முழுமையாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நான்கு பெண்களும் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்கள் மற்றும் மீட்கப்பட்ட நகைகள், பணம் ஆகியவற்றை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் வீடொன்றில் திருட்டு: பல இலட்சம் மதிப்புள்ள நகை, பணத்துடன் 4 பெண்கள் கைது

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

4 weeks ago

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

Published By: Digital Desk 3

06 Mar, 2026 | 10:43 AM

image

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் அமெரிக்க - இஸ்ரேலிய படைகளுக்கிடையில் தீவிரமடைந்து வரும் போர் காரணமாக, உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிரடியாக அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. இதன் நேரடித் தாக்கம் இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச காப்புறுதி நிறுவனங்களான கார்ட், ஸ்கல்ட், மற்றும் லண்டன் பி&ஐ கிளப் போன்றவை பாரசீக வளைகுடா பிராந்தியத்திற்கான 'போர் கால இடர் காப்புறுதியை' மார்ச் மாதம் 05 ஆம் திகதி முதல் இரத்து செய்துள்ளன.

கடந்த வாரம் கப்பல் பெறுமதியில் 0.2 சதவீதமாக இருந்த காப்புறுதி கட்டணம், தற்போது 1 சதவீதமாக உயர்ந்துள்ளது.

உதாரணமாக, 100 மில்லியன் டொலர் பெறுமதியான கப்பல் ஒன்றுக்கான காப்புறுதி கட்டணம் 02 இலட்சம் டொலரிலிருந்து 10 இலட்சம் டொலர் வரை அதிகரித்துள்ளது.

காப்புறுதி கட்டண அதிகரிப்பு மற்றும் கப்பல்கள் மாற்றுப் பாதையில் பயணிப்பதால் ஏற்படும் மேலதிக செலவுகள் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை இலங்கையில் அதிகரிக்கக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் பேச்சாளர் ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

கப்பல்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துவதால் இலங்கையை வந்தடைவதற்கு மேலதிகமாக 10 முதல் 14 நாட்கள் வரை தாமதமாகும்.

ஆடை மற்றும் இறப்பர் ஏற்றுமதியாளர்கள் சர்வதேச சந்தையில் போட்டித்தன்மையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

உலகின் 20 சதவீத மசகு எண்ணெய் விநியோகம் ஹோமுஸ் நீரிணை ஊடாகவே இடம்பெறுகிறது. தற்போது இப்பாதை மூடப்பட்டுள்ளதால், மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 90 டொலரைக் கடந்துள்ளது.

இது இலங்கையின் மின்சாரக் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் கப்பல் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பு: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் அபாயம்

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு

4 weeks ago

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு

Published By: Vishnu

06 Mar, 2026 | 06:05 AM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

நாட்டின் தற்போதைய எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடுகள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டவை. ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் உண்மையான நிலையை மறைப்பதாகவே அமைந்துள்ளன என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தேசிய நுகர்வோர் முன்னணி காரியாலயத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்;

கடந்த காலங்களில் மக்கள் எரிவாயுவுக்காக நீண்ட வரிசைகளில் நின்றனர். புதிதாகத் திருமணம் செய்யும் தம்பதியினர் கூட ஒரு எரிவாயு சிலிண்டரைப் பெற்றுக்கொள்ள அடகுக்கடைக்குச் செல்லும் நிலையே காணப்பட்டது. தற்போது ஜனாதிபதி ஒரு இலட்சம் எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விடுவிப்பதாகக் கூறுகிறார். இதனை நாம் வரவேற்கிறோம் ஆனால் இந்த முடிவை அவர் முன்னரே எடுத்திருக்க வேண்டும்.

அதேநேரம், தற்போது சந்தைக்கு வரும் சிலிண்டர்களில் எரிவாயுவின் அளவு குறைவாக இருப்பதாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இதனை உறுதிப்படுத்த நாம் வரும் நாட்களில் தராசுகளைப் பயன்படுத்தி சிலிண்டர்களின் வெற்று எடை மற்றும் எரிவாயுவின் எடையை அளவிட்டு நாட்டு மக்களுக்கு பகிரங்கமாக நிரூபிப்போம். லாஃப்ஸ் போன்ற நிறுவனங்கள் தமது இலாபத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சரியான விலையில் தரமான சேவையை வழங்க வேண்டும்.

தற்போது காணப்படும் எரிபொருள் வரிசைகளுக்குப் பின்னாலும் ஜே.வி.பி உள்ளிட்ட தரப்பினரின் கைவரிசை உள்ளது. கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் எரிபொருளைப் பதுக்கி வைத்து போத்தல்களில் 2000 ரூபாவுக்கு விற்றவர்கள் இவர்களே. இவர்களது ஆதரவாளர்களே எரிபொருள் நிலையங்களுக்கு முன்னால் வரிசைகளில் நின்று தேவையற்ற அச்சத்தை மக்கள் மத்தியில் உருவாக்குகின்றனர்.

தற்போது நாட்டில் எரிபொருள் கையிருப்பு தாராளமாக உள்ளது. எனவே அரசாங்கம் உடனடியாக ஜே.வி.பி உறுப்பினர்களின் வீடுகளைச் சோதனையிட வேண்டும். அங்கு சட்டவிரோதமான முறையில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருப்பதை காண முடியும். மக்கள் இத்தகைய அரசியல் சூழ்ச்சிகளில் சிக்கி எரிபொருளைத் தேவையற்ற முறையில் சேமிக்க வேண்டாம் என்றார்.

எரிபொருள், எரிவாயு தட்டுப்பாடு திட்டமிட்டது – அசேல சம்பத் குற்றச்சாட்டு

ஈரானிய கடற்படை பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

4 weeks ago

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

Published By: Vishnu

06 Mar, 2026 | 06:57 AM

image

இலங்கையின் கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரானிய கடற்படை கப்பலான IRIS Bushehr-இல் பணியாற்றியிருந்த 208 கப்பற் பணியாளர்களையும் இலங்கை கடற்படை பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

WhatsApp_Image_2026-03-06_at_06.43.15.jp

இலங்கை கடற்படையினரின் தகவலின்படி, இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் ஏற்பட்ட அவசர நிலையைத் தொடர்ந்து குறித்த ஈரானிய கடற்படை கப்பலில் இருந்த அனைத்து 208 பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

WhatsApp_Image_2026-03-06_at_06.43.13.jp

மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கப்பலில் இருந்த பணியாளர்கள் தற்போது கொழும்பு நோக்கி கரைக்கு கொண்டு வரப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் இலங்கை கடற்படையினரால் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், IRIS Bushehr கப்பலை இலங்கை கடற்படை தற்காலிக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அதை திருகோணமலை துறைமுகத்திற்குக் கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நடவடிக்கை பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான காரணங்களை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கப்பலில் ஏற்பட்ட அவசர நிலைமை குறித்த விவரங்களை உறுதிப்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் இருந்த ஈரான் கடற்படை கப்பல் : 208 கப்பற் பணியாளர்களை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்த இலங்கை கடற்படை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

4 weeks ago

மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

Mar 5, 2026 - 08:16 PM

மூன்றாவது சந்தேகநபராக பெயரிடப்பட்ட சுரேஷ் சலே

தற்போது தடுப்புக்காவலில் உள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக இன்று (05) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பெயரிடப்பட்டுள்ளார்.

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, கடந்த பெப்ரவரி 25ஆம் திகதி பேலியகொடையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளின் கீழ் சுரேஷ் சலேயை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அனுமதி பெற்றுக்கொண்டது.

இந்த சூழலில் போதுமான ஆதாரங்கள் இன்றி தனது கட்சிக்காரர் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள உத்தரவை மேல் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்துவதற்காக, இது தொடர்பான வழக்குக் கோப்புகளின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை வழங்குமாறு சுரேஷ் சலேயின் சட்டத்தரணிகள் நேற்று (04) கோட்டை நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.

தனது கட்சிக்காரரைச் சந்திப்பதற்கு மேலதிக ஒரு நாளை ஒதுக்கித் தருமாறும், அவருக்கு வீட்டிலிருந்து உணவு கொண்டு வருவதற்கு அனுமதி அளிக்குமாறும் சட்டத்தரணிகள் கோரினர்.

வழக்குக் கோப்புகளின் பிரதிகளை வழங்க நீதவான் உத்தரவிட்ட போதிலும், ஏனைய கோரிக்கைகளை நிராகரித்தார்.

சுரேஷ் சலேயைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் அதுவரை நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்காததே இதற்குக் காரணமாக அமைந்தது.

இவ்வாறானதொரு பின்னணியில், சுரேஷ் சலேயைத் தடுப்புக்காவலில் வைத்திருப்பது குறித்து குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விடயங்களை அறிக்கையிட்டது.

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பப்பட்டமை, சாய்ந்தமருது வீட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடையதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள 35882/24 இலக்க வழக்கின் மூன்றாவது சந்தேக நபராக சுரேஷ் சலே பெயரிடப்பட்டுள்ளார்.

தற்போது தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் சந்தேக நபரை, நீதவான் பொருத்தமான ஒரு நாளில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருகை தந்து பார்வையிடுமாறும் திணைக்கள அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், இதற்கான விடயங்களை எழுத்துப்பூர்வமாகப் பதிவு செய்ய உத்தரவிட்டதுடன், விரைவில் அங்கு சென்று சந்தேக நபரைப் பார்வையிடுவதாகவும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmmdk45af0005356p4812ol20

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்

4 weeks ago

WhatsApp-Image-2026-03-06-at-10.49.12.jp

குருநகர் இறங்குதுறையிலிருந்து புறப்பட்ட படகு விபத்து…! நீரில் மூழ்கிய பலர் – மீட்பு நடவடிக்கை தீவிரம்.

குருநகர் இறங்குதுறையிலிருந்து புதிய அந்தோனியர் ஆலயத்திற்குப் புறப்பட்ட படகு ஒன்று நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்துச் சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில் “ஆலயத்திற்குச் சென்ற பயணிகள் படகு ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த படகில் முதியவர்கள், சிறுவர்கள், பெண்கள் எனப் பலர் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், அவர்களை மீட்கும் நடவடிக்கைகளில் அப்பிரதேச கடற்றொழிலாளர்கள் உடனடியாக ஈடுபட்டுள்ளனர்.

இதில் மூன்று பேர் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும், தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1467362

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

4 weeks ago

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

Published By: Digital Desk 1

06 Mar, 2026 | 10:52 AM

image

இலங்கை மின்சார சபையின் செயல்பாடுகள் மற்றும் கடமைகளைத் தனித்தனியாகப் பிரித்து, ஆறு துணை நிறுவனங்களை நிறுவுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி வெளியிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலின்படி, இந்த மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வரவுள்ளது

அதன்படி, மின்சார உற்பத்தி, கடத்தல் (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு செயல்பாடுகள் ஆகியவற்றை நிர்வகிக்கும் வகையில் ஆறு தனித்தனி துணை நிறுவனங்கள் உருவாக்கப்படவுள்ளன.

சில குறிப்பிட்ட சரத்துக்களைத் தவிர, 2024ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் ஏனைய அனைத்து விதிகளும் எதிர்வரும் 09ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.

இதன் மூலம் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட இலங்கை மின்சாரசபையின் மறுசீரமைப்பு பணிகள் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன.  

WhatsApp_Image_2026-03-06_at_10.18.40.jp

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு: 6 புதிய துணை நிறுவனங்கள் உருவாக்கம்!

வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்

4 weeks ago

வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்

Published By: Vishnu

06 Mar, 2026 | 05:39 AM

image

( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

வடக்கு மாகாண கால்நடை விவசாயத்தை ஒரு 'மௌனப் பேரழிவு' தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சியான மழை காரணமாக, கடந்த 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகள் கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும். என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இல் விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

அண்மைய காலநிலை பேரழிவைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தில் குறிப்பாக மன்னார். முல்லைத்தீவு வவுனியா,கிளிநொச்சி,மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நெருக்கடி நிலை குறித்து, விவசாய,கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரின் அவசர கவனத்திற்கு கொண்டு வர விரும்புகின்றேன்.

நாடு பயிர்ச் சேதங்கள் குறித்து கவனம் செலுத்தி வரும் வேளையில்,எமது கால்நடை விவசாயம் மீது ஒரு 'மௌனப் பேரழிவு' தாக்கியுள்ளது. திடீர் வெப்பநிலை குறைவு மற்றும் தொடர்ச்சிய மழை காரணமாக, 48 மணி நேரத்திற்குள் ஆயிரக்கணக்கான கால்நடைகளும் ஆடுகளும் மற்று கோழிகள் உயிரிழந்துள்ளன. இது வெறும் விலங்குகளின் இழப்பு மட்டுமல்ல, ஆயிரக்கணக்க குடும்பங்களின் கிராமியப் பொருளாதாரத்தின் முழுமையான வீழ்ச்சியாகும்.

ஆரம்பகட்ட அறிக்கைகளின்படி, வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக் மாடுகள் மற்றும் எருமைகளும், மற்றும் ஆடுகளும் உயிரிழந்துள்ளன.இறப்புக்கு சராசரி வெப்பநிலையை விட கணிசமாகக் குறைந்த கடும் குளிர் மற்றும் மேய்ச்சல் நிலங்களில் இருந்த கால்நடைகளுக்குப் போதிய தங்குமிட வசதி இல்லாமையுமே இதற்குக் காரணம் என கால்நடை மருத்துவ அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.

நீண்டகால பால் உற்பத்தி இழப்பைத் தவிர்த்து,நேரடியாக கால்நடைகளின் பெறுமதி மட்டும் சுமார் 150 மில்லியன் ரூபாவிற்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.எனவே உயிரிழந்த கால்நடைகள் குறித்து அமைச்சு முறையான கணக்கெடுப்பை நடத்தி,ஒரு தெளிவான தரவுத் தொகுப்பை உருவாக்கியுள்ளதா?

வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மாடு மற்றும் எருமை உரிமையாளர்கள் கோழிபாண்ணையாளர்களுக்கும், அதேபோல் தொடர்புடைய பண்ணை உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு அமைச்சு எவ்வளவு இழப்பீடு வழங்கியுள்ளன? ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டு வரும் விவசாயிகளுக்கு, உயிரிழந்த ஒவ்வொரு கால்நடைக்கும் உடனடி இழப்பீட்டுத் தொகுப்பை வழங்க அரசாங்கம் முன்வருமா?

பலவீனமான நிலையில் இருக்கும் எஞ்சிய கால்நடைகளுக்கு அவசர விற்றமின்கள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்க கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? இது போன்ற அனர்த்தங்களுக்கு உள்ளாகும் வடக்கு மேய்ச்சல் நிலங்களில், வானிலையைத் தாங்கக்கூடிய கால்நடைத் தொழுவங்களை அமைப்பதற்கு மானியங்களை வழங்க அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தைக் கொண்டுள்ளதா?இந்த விவசாயிகளே எமது குழந்தைகளின் பசியைத் தீர்க்கும் பாலை வழங்குகிறார்கள். அவர்கள் தம்மால் கையாள முடியாத ஒரு காலநிலை பேரழிவினால் மேலும் கடனாளிகளாக மாற நாம் அனுமதிக்க முடியாது என்றார்.

வடக்கில் கால்நடை விவசாயத்திற்கு ‘மௌனப் பேரழிவு’ – எம்.பி. அடைக்கலநாதன்

Checked
Fri, 04/03/2026 - 09:35
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr