பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்
பாட்டாளி வர்க்கத்தின் அதிகாரத்தை வென்றெடுப்போம்; முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாட்டில் அறைகூவல்
Published By: Vishnu
02 Mar, 2026 | 04:04 AM
![]()
(க.சிவலிங்கமூர்த்தி)
இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக பாட்டாளி வர்க்கத்தை மையப்படுத்திய புதிய அரசியல் வேலைத்திட்டமொன்றை முன்னிறுத்தி முன்னிலை சோசலிச கட்சியின் 4 ஆவது தேசிய மாநாடு கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (1) எழுச்சியுடன் நடைபெற்றது. வர்க்கத்திற்கு அதிகாரம் - அதிகாரத்திற்கு கட்சி தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில் நவதாராளவாத பொருளாதார கொள்கைகள் மற்றும் சர்வதேச தலையீடுகள் தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இலங்கையின் வடக்கு கிழக்கு தெற்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட அனைத்து மாகாணங்களில் இருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான கட்சி ஆர்வலர்களின் பங்கேற்புடன் இம்மாநாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்களை நிறைவேற்றியது.South Asians & Diaspora
இந்த மாநாட்டில் நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு ஒன்பது பிரதான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
1. மக்கள் போராட்ட அனுபவத்தைக் கொண்டு பாட்டாளி வர்க்கத்திற்கான பலமான அரசியல் கட்சியை கட்டியெழுப்புதல்Politics
2. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் பிடியில் இருந்து பொருளாதாரத்தை விடுவித்தல்
3. நவதாராளவாதத்திற்கு மாற்றாக சோசலிச பொருளாதாரக் கொள்கைகளை முன்னெடுத்தல்
4. தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதை நிறுத்துதல்
5. நாடு தழுவிய ரீதியில் மக்கள் போராட்ட சபைகளை நிறுவி மக்கள் அதிகாரத்தை உறுதிப்படுத்துதல்Beaches & Islands
6. இலங்கையின் இறைமையைப் பாதிக்கும் இந்திய மேலாதிக்க ஒப்பந்தங்களை இரத்து செய்தல்
7. திருகோணமலை துறைமுகம் உள்ளிட்ட முக்கிய வளங்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்
8. ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராக சர்வதேச பாட்டாளி வர்க்கம் ஒன்றிணைதல்
9. முதலாளித்துவத்தினால் ஏற்படும் சூழல் பாதிப்புகள் மற்றும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுதல் ஆகிய ஒன்பது கோரிக்கைகளும் இங்கு வலியுறுத்தப்பட்டன.South Asians & Diaspora
மாநாட்டின் ஆரம்ப நிகழ்வில் கட்சியின் முக்கிய உறுப்பினர்களான சேனாதீர குணதிலக்க புபுது ஜயகொட நிரோஷா குருகே ரவிந்து முதலகே குமார் குணரத்னம் சமீர கொஸ்வத்த ஹேமமாலி அபேரத்ன மற்றும் துமிந்த நாகமுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். மேலும் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிச கட்சி சார்பில் எஸ்.கே. செந்திவேல் மற்றும் சோசலிச மக்கள் சம்மேளனம் சார்பில் கல்ப ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டு தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.
சர்வதேச ரீதியில் பல நாடுகளின் பிரதிநிதிகள் இம்மாநாட்டிற்கு தமது வாழ்த்துகளையும் ஆதரவையும் வழங்கினர். இத்தாலியின் பிரான்டே பொப்பலாரே அமைப்பின் சார்பில் அலேசியோ அரேனா அர்ஜென்டினாவின் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் லூசியானோ ரவனெட்டி பங்களாதேஷின் மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஷோயப் பச்சாவார்ஜி பிரான்சின் புதிய ஏகாதிபத்திய எதிர்ப்பு கட்சியின் சுலைமான் ஸ்டானிஸ்லாஸ் நேபாளத்தின் விஞ்ஞான சோசலிச கம்யூனிஸ்ட் கட்சியின் ஜகத் ரமாலி மற்றும் சர்வதேச சோசலிச லீக்கின் ஸ்டீவ் மேக்ஸ்வினி ஆகியோர் நேரடியாகவும் காணொளி மூலமும் உரையாற்றினர்.
கியூபா தூதுவர் பட்ரிசியா லசாரா பெகோ கியூபா கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் ஜெர்மனியின் ஹான்ஸ் பீட்டர் அன்டன் ஸ்பெக்ட் நேபாளத்தின் வின்சென்சோ வசாலோ இத்தாலியின் நிக்கோலோ சகேட்டி யேமன் நாட்டின் மவுரிக் மிலியா இந்தியா சார்பில் சுபாஷ் தர்ஷ்குப்தா இங்கிலாந்தின் ரோஜர் சில்வர்மேன் மற்றும் துருக்கியின் அமினா ஆகியோர் தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தினர். மாநாட்டின் இறுதியில் அனைத்து தீர்மானங்களும் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.













