ஊர்ப்புதினம்

பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!

1 month ago

பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!

Published By: Digital Desk 1

28 Feb, 2026 | 10:33 AM

image

பொலிஸ் மா அதிபரின் எண்ணக்கருவிற்கு அமைவாக, நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட 02 வேன்களை பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு கையளிக்கும் நிகழ்வு, பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தலைமையில் கடந்த 02ஆம் திகதி பிற்பகல் பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவு 2010.12.02ஆம் திகதியன்று நிறுவப்பட்டதுடன், அந்த காலப்பகுதியில் அதன் கடமைகளுக்காக கெமராக்கள் பொருத்தப்பட்ட 02 வேன்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வாகனங்களின் செயல்பாடுகளை மிகவும் திறமையாகவும் பயனுள்ளதாகவும் முன்னெடுப்பதற்காக, 'பிரிமா' நிறுவனத்தின் பங்களிப்புடன் ஒரு வேன்  நவீன தொழில்நுட்ப கெமராக்களுடன் மேம்படுத்தப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன தொழில்நுட்ப கெமரா அமைப்புகளுடன் மேம்படுத்தப்பட்ட இரண்டு வேன்களுக்காக சுமார் 9,794,000 ரூபாய்  செலவிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் போக்குவரத்து விதிமீறல்களை அவதானித்து வழக்கு தொடர்தல் மற்றும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கடமைகள் உள்ளிட்ட முக்கிய செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிகழ்வில் பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் துஷார கம்லத், பொலிஸ் கண்காணிப்பு கெமரா பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மாலின் பெரேரா, குறித்த பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஐ.எம்.என்.எல்.பீ. ஏநாயக்க உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   

WhatsApp_Image_2026-02-28_at_07.15.27.jp

WhatsApp_Image_2026-02-28_at_07.15.29__1

WhatsApp_Image_2026-02-28_at_07.15.29.jp

WhatsApp_Image_2026-02-28_at_07.15.28.jp

பொலிஸ் கண்காணிப்பு பிரிவிற்கு நவீன தொழில்நுட்ப கெமரா வாகனங்கள்!

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

1 month ago

New-Project-2-24.jpg?resize=750%2C375&ss

2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி!

இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஜனவரியில் 437.07 மில்லியனாக இருந்த நிலையில், 2026 ஜனவரியில் 2.66 சதவீதம் சரிந்து 425.44 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக ஒரு தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. 

இது நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரதிபலிக்கிறது.

அதன்படி, ஜனவரி செயல்திறன் சீரற்ற உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதுடன், பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகிறது என்று கூட்டு ஆடை சங்க மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி 2.73 சதவீதம் குறைந்து 165.11 மில்லியன் டொலர்களாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி (இங்கிலாந்து தவிர்த்து) 1.93 சதவீதம் குறைந்து 126.99 மில்லியன் டொலர்களாக உள்ளது.

இங்கிலாந்துக்கான ஏற்றுமதி நிலையாக இருந்தது, 0.23 சதவீதம் அதிகரித்து 61.71 மில்லியன் டொலர்களாக இருந்தது.

அதே நேரத்தில் ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 6.07 சதவீதம் குறைந்து 71.63 மில்லியன் டொலர்களாக இருந்தது என்று JAAF தெரிவித்துள்ளது.

ஜனவரி மாத முடிவுகள் சீரற்ற உலகளாவிய தேவையைக் குறிக்கின்றன என்றும், நாட்டின் ஆடைத்துறையின் பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் JAAF கூறியது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஓரளவு வளர்ச்சி, 2026 ஜனவரி 1, முதல் அமுலுக்கு வந்த திருத்தப்பட்ட வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ் வர்த்தக சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகிறது.

இந்த மாற்றங்கள் மூலத் தேவைகளுக்கான விதிகளைத் தளர்த்தியுள்ளன, இப்போது இலங்கை உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகளவில் மூலப்பொருட்களை வாங்கும்போது கூட, வரியின்றி ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது.

மேலதிகமாக, சீரான 10% தற்காலிக அமெரிக்க வரியை அறிமுகப்படுத்துவது, முன்னர் இருந்த அதிக நாடு சார்ந்த விகிதங்களை மாற்றியுள்ளது மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக குறுகிய கால விலை நிர்ணய உறுதிப்பாட்டை வழங்குகிறது என்றும் JAAF தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1466585

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா

1 month ago

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா: குறிகட்டுவான் இறங்குதுறையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பயணம்

Published By: Vishnu

27 Feb, 2026 | 09:18 PM

image

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழாவிற்கு செல்வதற்காக, வெள்ளிக்கிழமை (27) குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து 4200 மேற்பட்ட பக்தர்கள் கச்சதீவு நோக்கி பயணாமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுடன், மொத்தமாக இலங்கையிலிருந்து 5000 மேற்பட்ட பக்தர்கள் பங்குபற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை இந்தியாவிலிருந்து 3992 பக்தர்கள் கச்சதீவுக்கு வந்தடைந்துள்ளார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும், குறிகட்டுவான் இறங்குதுறையில் அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன், பக்தர்களுக்கான பயண ஒழுங்குகளை சம்பந்தப்பட்டவர்களுடன் இணைந்து ஒருங்கிணைப்பினை மேற்கொண்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், வேலணை பிரதேச செயலாளர் த. அகிலன் மற்றும் மாவட்டச் செயலக மற்றும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கடற்படையினர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

IMG_5473.jpeg

IMG_5475.jpeg

IMG_5474.jpeg

IMG_5472.jpeg

https://www.virakesari.lk/article/239755

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!

1 month ago

பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!

Published By: Digital Desk 1

27 Feb, 2026 | 04:13 PM

image

நாட்டில் குற்றச்செயல்களைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பொலிஸ் திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட “Tell IGP” (பொலிஸ் மா அதிபருக்குக் கூறுங்கள்) எனும் இணையவழி முறைப்பாட்டுச் சேவை 2026ஆம் ஆண்டிலும் புதிய மேம்படுத்தல்களுடன் செயற்பட்டு வருகிறது.

இந்தத் திட்டத்தின் ஊடாக, பொதுமக்கள் தமக்கு ஏற்படும் அசௌகரியங்கள் அல்லது அவசர சம்பவங்கள் குறித்து நேரடியாக பொலிஸ் மா அதிபரின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.

இச்சேவையின் ஊடாக உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

இதனூடாக, திட்டமிடப்பட்ட குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் தொடர்பான தகவல்கள், ஊழல் மோசடிகள், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் குறித்துத் தெரிவிக்கலாம்.

இதன்மூலம் பதிவு செய்யப்படும் முறைப்பாடுகள் அந்தந்தப் பிரிவுகளுக்குப் பொறுப்பான அத்தியட்சகர்கள் ஊடாக உரிய பொலிஸ் நிலையங்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு, விசாரணைகள் ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், இங்கு வழங்கப்பட்ட தீர்வுகளில் திருப்தி இல்லையெனில், மீண்டும் இணையவழியில் பொலிஸ் மா அதிபருக்குத் தெரியப்படுத்தும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள், முறைப்பாடுகளை https://telligp.police.lk இணையத்தளத்தினுடாகவும் telligp@police.gov.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவும், தெரிவிக்கமுடியும்.

ஊழலற்ற மற்றும் பாதுகாப்பான சமூகத்தைக் கட்டியெழுப்ப இந்தச் சேவையைப் பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/239728

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

1 month ago

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படும் 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Published By: Vishnu

27 Feb, 2026 | 04:59 AM

image

(செ. சுபதர்ஷனி)

பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களே பாதிப்புக்குள்ளாகும் அபாயம் காணப்பட்ட போதிலும், அண்மைக்காலமாக நாட்டில் 30 – 50 வயதுக்கு இடைப்பட்டவர்களிடையே புதிய நோயாளர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் சமூக வைத்திய நிபுணர் ஹஸரெலி பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் புதன்கிழமை (25) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில்;

"இலங்கையில் மாத்திரமல்லாது உலகளாவிய ரீதியிலும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோயால் பாதிப்புக்குள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தால் வெளியிடப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான 'க்ளோபோகேன்' ஆய்வறிக்கையின்படி, 1.1 மில்லியன் புதிய புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்தோடு, 2023 ஆம் ஆண்டு மாத்திரம் சுமார் 9 இலட்சம் பேர் இந்த நோயால் உயிரிழந்துள்ளனர்.

உலகளவில் அதிக நோயாளர் மற்றும் மரண வீதத்தைக் கொண்ட நோய் பட்டியலில் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகத் தரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் வருடாந்த தரவுகளுக்கமைய, 2022 ஆம் ஆண்டில் மட்டும் இத்தகைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சுமார் 3,000 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். ஆண், பெண் என இருபாலாரும் இப்புற்றுநோய்க்கு ஆளாகின்ற போதிலும், அந்தவகையில் அவ்வாண்டு 1564 ஆண்களும், 1519 பெண்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

ஆண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் வாய் மற்றும் கழுத்துப் புற்றுநோய் முதலாவதாகவும், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் இரண்டாவதாகவும் உள்ளன. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இந்நோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகமாக இருந்த போதிலும், தற்போது 30 – 50 வயதுக்கு இடைப்பட்ட நோயாளர்களும் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர். மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்வியல் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணமாகும்.

சமிபாட்டை இலகுவாக்கும் மற்றும் அனைத்து போசாக்குகளும் அடங்கிய உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். பெருங்குடல் பகுதியில் ஏற்படும் சிறு கட்டிகள் (பொலிப்ஸ்) நாளடைவில் புற்றுநோய் கலங்களாக மாற வாய்ப்புள்ளது. உரிய பரிசோதனையின் மூலமே இதனை ஆரம்பத்தில் கண்டறிய முடியும். உடல் இயக்கமின்றி இருத்தல், உடற்பருமன், உடனடி உணவுகள் மீதான நாட்டம் மற்றும் மது அருந்துதல் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணங்களாக உள்ளன. அத்துடன், மரபணு மூலமும் ஒருவருக்கு இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/239680

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

1 month ago

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

27 Feb, 2026 | 11:51 AM

image

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தையோ அல்லது அரசைப் பாதுகாக்கும் வகையில் உருவாக்கப்படவுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தையோ ஏற்றுக்கொள்ள முடியாது என வலியுறுத்தி, வடக்கு - கிழக்கு மாகாணங்களில் திரட்டப்பட்ட ஆயிரக்கணக்கான கையொப்பங்கள் நீதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நல்லூர் சிவகுரு ஆதீனத்தில் வேலன் சுவாமியிடம் பிராந்திய சேகரிப்பாளர்களிடமிருந்து பெறப்பட்ட கையொப்பப் பட்டியல்கள் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன. அவை நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன

கடந்த பெப்ரவரி 14ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பொது அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இக்கையொப்பங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.   

IMG_5411.jpeg

IMG_5412__1_.jpeg

IMG_5413.jpeg

IMG_5414.jpeg

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிர்ப்பு : வடக்கு – கிழக்கில் சேகரிக்கப்பட்ட கையொப்பங்கள் நீதி அமைச்சுக்கு சமர்ப்பிப்பு

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

1 month ago

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

Feb 27, 2026 - 08:28 AM

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன.

2026 ஆம் ஆண்டில் இவ்வாறான சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தற்போதுள்ள அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.

அதேபோன்று, சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இன்றி, இன்று (27) அழைத்து வரப்பட்ட சந்தேக நபருடன் மொத்தம் 14 பேரை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளது.

சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இல்லாத நிலையில், அந்தந்த நாடுகளின் குடிவரவு குடியகல்வு குற்றங்கள் மற்றும் நாடுகடத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீடு மற்றும் அந்த நாடுகள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்களை எம்மால் அழைத்து வர முடிந்தது.

மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

சர்வதேச சிவப்பு அறிவித்தல் இன்றி 14 சந்தேகநபர்கள் நாட்டுக்கு

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

1 month ago

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

இலங்கை தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2026 ஜனவரி மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக் கோடு தொடர்பான தரவுகளை வெளியிட்டுள்ளது.

ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதமொன்றுக்கு குறைந்தபட்சம் ரூபா 16,730 வருமானம் அவசியமெனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி கொழும்பில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 18,044 தேவைப்படுகிறது.

பணவீக்கம்

மேலும் மொனராகலை மாவட்டத்தில் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு நபருக்கு மாதமொன்றுக்கு ரூபா 15,997 போதுமானதாகும்.

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை | Money Need Live In Sri Lanka Report

வறுமைக் கோடு என்பது ஒரு நபர் தனது அடிப்படை உணவு மற்றும் உணவு அல்லாத தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான குறைந்தபட்ச செலவினைக் குறிக்கிறது.

பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு மாற்றங்களுக்கு ஏற்ப இது மாதாந்தம் திருத்தியமைக்கப்படுகிறது.

தரவுகள் மதிப்பீடு

இந்த உத்தியோகபூர்வ வறுமைக் கோடானது 2012/13 ஆம் ஆண்டின் 'குடும்ப வருமானம் மற்றும் செலவு கணக்கெடுப்பின்' (HI&ES) அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை | Money Need Live In Sri Lanka Report

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை (NCPI) பயன்படுத்தி, மாவட்டங்களுக்கு இடையிலான விலை வேறுபாடுகளுக்கு ஏற்ப இந்தத் தரவுகள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. 

இலங்கையில் வாழ மாதத்திற்கு எவ்வளவு பணம் தேவை! புதிய அறிக்கை

நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்

1 month ago

நாமலின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் கேள்வி கேட்க முதுகெலும்பற்ற தமிழ் மாணவர் அமைப்புகள்! - சரத் வீரசேகர விளாசல்

26 Feb, 2026 | 04:02 PM

image

பிரித்தானியாவின் புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் (Oxford) மற்றும் கேம்பிரிட்ஜ் (Cambridge) பல்கலைக்கழக ஒன்றியங்களின் அழைப்பை ஏற்று அங்கு உரையாற்றச் சென்ற நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராக தமிழ் மாணவர் அமைப்புகள் முன்னெடுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்து முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

பத்தரமுல்லயில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சித் தலைமையகத்தில் இன்றைய தினம் (26) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்கும் திராணியற்ற தமிழ் மாணவர் அமைப்புகளே இந்த எதிர்ப்புகளை முன்னெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஒக்ஸ்போர்ட் ஒன்றியத்தின் தலைவியின் கூற்றுப்படி, நாமல் ராஜபக்ஷவுடன் விவாதிப்பதற்கும் கேள்விகளை எழுப்புவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தபோதிலும், தமது பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர் முன்னால் நேரடியாகக் கேள்வி கேட்க தமக்கு முடியாது என தமிழ் மாணவர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் ஆளுமைக்கு முன்னால் முதுகெலும்புடன் நின்று பேச இவர்களுக்கு முடியாது என்பது உறுதியாகியுள்ளதோடு, சுதந்திரமான பேச்சு மற்றும் விவாதங்களுக்குப் புகழ்பெற்ற இத்தகைய சர்வதேச பல்கலைக்கழகங்கள் பிரிவினைவாத தமிழ் மாணவர் அமைப்புகளின் அழுத்தங்களுக்குப் பணிந்து தமது கலாசாரத்தைக் காட்டிக் கொடுத்தமை வருத்தத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த சரத் வீரசேகர, இது கத்தோலிக்க திருச்சபையையும் ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களையும் ஏமாற்றுவதற்காக அரசாங்கம் ஆடிய ஒரு நாடகம் எனச் சாடினார்.

விவசாயிகளின் சாபம் மற்றும் நிலக்கரி மோசடிகளில் சிக்கியுள்ள அரசாங்கம், மக்களின் கவனத்தை திசைதிருப்பவே சலேயைக் கைது செய்துள்ளதாக அவர் குற்றம் சுமத்தினார்.

2018இல் சலே சஹ்ரானைச் சந்தித்ததாகச் சொல்லப்படும் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என்றும், அந்த காலப்பகுதியில் சலே மலேசியாவிலும் இந்தியாவிலும் பணியாற்றி வந்தமையால் அவர் இலங்கையிலேயே இருக்கவில்லை என்றும் அவர் விளக்கமளித்தார்.

அத்துடன், ரணில் விக்ரமசிங்க நியமித்த குழுவும் அசாத் மௌலானாவின் குற்றச்சாட்டு பொய் என்பதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், சிறந்த புலனாய்வு அதிகாரியான சலேவைச் சிறையில் அடைத்துவிட்டு, தாக்குதலுக்கு நிதியுதவி செய்த இப்ராஹிம் போன்றவர்களை வெளியே நடமாடவிடுவது நியாயமற்றது என அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் புலம்பெயர் தமிழ் அமைப்புகளை (Diaspora) திருப்திப்படுத்துவதற்காகவே செயற்படுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், டயஸ்போராவுக்கு நோகும் என்பதால் ஜனாதிபதி இன்று 'ரணவிருவா' என்ற சொல்லைப் பயன்படுத்துவதில்லை என்றும், சுதந்திர தினத்தில் இராணுவத் தளபாடங்களைக் காட்சிப்படுத்தாததற்கும் இதுவே காரணம் என்றும் தெரிவித்தார்.

சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சூழ்ச்சியாளர்களின் சொற்களைக் கேட்காமல் மஹிந்த ராஜபக்ஷ யுத்தத்தை வென்று ஈழக் கனவைத் தகர்த்த காரணத்தினாலேயே ராஜபக்ஷ குடும்பத்தின் மீது சர்வதேசமும் டயஸ்போராவும் இன்றும் வைரம் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

இவ்வாறான பிரிவினைவாத சக்திகளின் அழுத்தங்களுக்குப் பணியாமல் ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் போன்ற நிறுவனங்கள் எதிர்காலத்தில் தமது கொள்கைகளை நிலைநாட்ட வேண்டும் என தான் எதிர்பார்ப்பதாகவும் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/239646

மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை

1 month ago

மடு தேசிய பூங்காவை சரணாலயமாக பேண சத்தியலிங்கம் எம்.பி பிரேரணை

26 Feb, 2026 | 01:57 PM

image

மடு தேசிய பூங்காவை தொடர்ந்தும் சரணாலயமாக பேண அமைச்சரவையின் அனுமதியைப்பெற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் பிரேரணை ஒன்றினை முன்வைத்துள்ளார்.

மடு பிரதேச செயலாளர் பிரிவிற்கான அபிவிருத்திக்குழு கூட்டம் 25 ஆம் திகதி மடு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக வனவளத்திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தால் விடுவிக்கப்படவேண்டிய காணிகள் தொடர்பாக நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது.

இரணைஇலுப்பைக்குளம் கிராமசேவையாளர் பிரிவில் உள்ள பெரியபண்டிவிரிச்சான்- முள்ளிக்குளம் வீதியை மக்கள் பாவனைக்கு மேம்படுத்த பிரதேச செயலகத்தால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அபிவிருத்திக்குழுவின் பரிந்துரை கோரப்பட்டபோது வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர் மேலிடத்திடம் கோரிக்கை வைப்பதாக சபைக்கு அறிவித்தார். ஆனால் இவ்வீதியானது மாந்தை மேற்கு பிரதேச சபையால் வர்த்தமானியூடாக பிரகடனப்படுத்தப்பட்ட பிரதேச சபைக்கு சொந்தமான வீதி என பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் அறிவித்தார்.

அப்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் அவர்கள் விசேட வர்த்தமானி அறிவித்தலூடாக (Extraordinary No. 1920/3 on June 22, 2015) 2015ம் ஆண்டு மடு சரனாலயமாக இருந்த காடுகள் எந்தவித கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய மடு- தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இத்தேசிய பூங்காவினுள் மக்களின் வாழ்விடங்கள், வீதிகள், வணக்க நிலையங்கள் மற்றும் விவசாய நிலங்கள் உள்ளடங்கியதாக உள்ளது.

28/06/1968 ம் ஆண்டு ஐம்பதிற்கும் குறைந்த சதுர கிலோமீற்றரிற்கும் குறைவான நிலப்பரப்புடன் பிரகடனப்படுத்தப்பட்ட சரனாலயம் எந்த கலந்துரையாடலும் இன்றி 631 சதுர கிலோமீற்றர் நிலப்பரப்பை உள்ளடக்கிய தேசிய பூங்காக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதால் தற்போது அங்கு வாழும் மக்கள் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.

சரனாலயமாக உள்ளபோது அப்பிரதேசமூடாக மக்கள் பயன்படக்கூடிய அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மக்கள் அந்த சரனாலயத்தினூடாக பயணித்த பாதைகள், வயல்கள் என எந்த பயன்பாட்டையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் மேற்கொள்ளமுடியாத நிலைவரும் என எச்சரித்தார்.

எனவே 2015 ஆம் ஆண்டின் விசேட வர்த்தமானியை இரத்துச்செய்யுமாறும் தொடர்ந்தும் சரணாலயமாகவே இப்பிரதேசத்தை பேனுமாறும் முன்மொழிவை பிரேரித்து இப்பிரேரனையை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க அபிவிருத்தி குழுவின் தலைவரை கேட்டுக்கொண்டார்.

இப்பிரேரனையை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்கள் வழிமொழிந்து சபையானது ஏற்றுக்கொண்டது.

https://www.virakesari.lk/article/239626

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

1 month ago

யாழ். பல்கலை புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி தெரிவு!

Published By: Digital Desk 3

26 Feb, 2026 | 05:26 PM

image

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதியால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

வலிகாமம் கிழக்கு புத்தூரைச் சேர்ந்த இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக உயர் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதியாக செயற்பட்டு வருகின்றார்.

தற்போதைய துணைவேந்தரின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில் எதிர்வரும் 25.03.2026 தொடக்கம் பேராசிரியர் தி.வேல்நம்பி துணைவேந்தராக பதவியேற்கவுள்ளார்.

யாழ். பல்கலைக்கழகப் பதிவாளரால் கடந்த செப்ரெம்பர் முதல் வாரத்தில் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் துணைவேந்தருக்கான தேர்தலில் அதிக புள்ளிகளைப் பெற்று முதன்மை நிலையை வேல்நம்பி பெற்றிருந்தார்.

அத்துடன் கடந்த மூன்று தடவைகள் இடம்பெற்ற துணைவேந்தர் தேர்தலில் வேல்நம்பி முதல் மூன்று ஸ்தானங்களுள் தெரிவாகி இருந்தார்.

இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, பேரவையின் விசேட கூட்டத்தில் விண்ணப்பதாரிகள் பெறும் புள்ளி ஒழுங்கில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும்.

1978 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்கப் பல்கலைக் கழகங்கள் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரை ஜனாதிபதி தெரிவு செய்து துணைவேந்தராக நியமனம் செய்வார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் திருநாவுக்கரசு வேல்நம்பி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/239667

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

1 month ago

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

Feb 26, 2026 - 07:23 PM

இந்தியாவில் கைதான பொடி லெசி நாளை நாட்டுக்கு?

இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க நாளை (27) அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.

நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தார்.

பிணை வழங்கப்பட்டதை அடுத்து, அவர் சட்டத்தரணி ஒருவரின் காரிலேயே நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியேறியிருந்தார்.

இதனையடுத்து, அவர் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவின் மும்பையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகள் இந்தியாவுக்குச் சென்றுள்ளதுடன், அவர் நாளை (27) அதிகாலை நாட்டுக்குக் அழைத்துவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmm3iwrx3000f356p7xm9exso

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

1 month ago

MediaFile-21-2.jpeg?resize=750%2C375&ssl

சிற்றுண்டிச்சாலையில் இனிப்பு பொருட்களை திருடிய சிறுமிகள் கைது!

களுத்துறை வர்ணத் பெர்னாண்டோ விளையாட்டரங்கில் அமைந்துள்ள சிற்றுண்டிச்சாலையை உடைத்து, அங்கிருந்த சுமார் 40,000 ரூபா பெறுமதியான டொபிகள் மற்றும் சொக்லேட்டுகளைத் திருடிய குற்றச்சாட்டில் மூன்று சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை தெற்கு தலைமையக பொலிஸ் நிலையத்தின் குற்றப்பிரிவு பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் தினேஷ் சில்வா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த விசாரணைகளின் போதே இந்தச் சிறுமிகள் அடையாளம் காணப்பட்டனர்.
அப்பகுதியில் உள்ள சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிஸார், குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்திலேயே மறைத்து வைக்கப்பட்டிருந்த டொபிகள், சொக்லேட்டுகள், லொலிபொப்கள் மற்றும் சுயிங்கம் ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த சிறுமிகள் தங்கியிருந்த சிறுவர் இல்லத்தின் சாவியைத் திருடிவிட்டு, அதிகாலை 1.30 மணியளவில் அங்கிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர் விளையாட்டரங்க சிற்றுண்டிச்சாலையின் முன் பக்க கண்ணாடியைத் தடியால் அடித்து உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த இனிப்பு வகைகளை பொலித்தீன் பைகளில் நிரப்பிக்கொண்டு மீண்டும் சிறுவர் இல்லத்திற்குச் சென்று அவற்றை மறைத்து வைத்துள்ளமை அம்பலமாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட சிறுமிகள் 13, 14 மற்றும் 15 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுமிகள் இவ்வாறான திட்டமிட்ட கொள்ளையில் ஈடுபட்டமை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

https://athavannews.com/2026/1466375

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

1 month ago

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

"இது 300 மனித உயிர்களைப் பலிகொண்ட ஒரு காட்டுமிராண்டித்தனமான தாக்குதலாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் உயிர்த்த ஞாயிறுத் திருப்பலியில் கலந்துகொள்ளச் சென்றவர்கள். உயிரிழந்தவர்களில் அனைத்து மதங்களையும், அனைத்து இனங்களையும் சேர்ந்தவர்களும் உள்ளனர். இது ஒரு படுகொலையாகும்.

இதன் பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிவது என்பது, இந்நாட்டில் சட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை எவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். அவ்வாறு இல்லாவிட்டால், சிலர் சட்டத்திற்குப் பயப்படுவதில்லை என்பதே அதன் பொருளாகும். ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு மறைந்திருக்க முடியும் என்பது உறுதியாகிறது. எனவே, குற்றங்கள் செய்வதற்குப் பயமின்மை என்பது இதன் மூலம் நிரூபிக்கப்படுகிறது. இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவோரையும், கைது செய்யப்படுவதற்குப் பல்வேறு வியாக்கியானங்களை அளிப்போரையும் பார்க்கும் போது புரிகிறது, அவர்களின் பின்னணியில் உள்ள நிகழ்ச்சி நிரல் என்னவென்று. எனவே இதனை அரசியலாக்க வேண்டிய அவசியமில்லை. இது குற்றப்புலனாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் ஒரு சுயாதீனமான விசாரணையாகும். அந்த விசாரணைகளைச் சுயாதீனமாக முன்னெடுக்க இடமளிப்பதே சிறந்தது.

அவ்வாறின்றி இந்த விசாரணைகளைக் குழப்புவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளை, இத்தாக்குதலில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழைக்கப்படும் அநீதியாகவே நாம் பார்க்கிறோம். எனவே, நாம் அனைவரிடமும் கேட்டுக்கொள்வது என்னவென்றால், இந்த விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம். இந்த விசாரணைகள் தொடர வேண்டும். இவ்விசாரணைகள் மூலம் ஏதேனும் ஒரு பலன் கிடைக்கும் என நாம் நம்புகிறோம்.

இதன் மூலம், பலர் பேசுகின்ற அரசியல் சதியொன்று இருந்ததா இல்லையா என்பதையும், அவ்வாறு இருந்திருந்தால் அதனைச் செய்தது யார்? இத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது? போன்ற விடயங்களை நாம் கட்டாயம் கண்டறிய வேண்டும். அதற்கு எவரேனும் இடையூறு விளைவிப்பார்களாயின், அதனைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராகச் செய்யப்படும் ஒரு மாபெரும் குற்றமாகவே நாம் கருதுகிறோம். எனவே, தயவுசெய்து இந்த விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல இடமளித்து, பொறுமையுடன் காத்திருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்."

No image previewஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம்
உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்க முயற்சிக்க வேண்டாம் என அருட்தந்தை சிறில் காமினி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் 7 வாரங்களில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு

1 month ago

இலங்கையில் 7 வாரங்களில் 44 காட்டு யானைகள் உயிரிழப்பு

Published By: Vishnu

25 Feb, 2026 | 10:36 PM

image

யானை மனித மோதலில் இதுவரையான காலப்பகுதியில் 44 காட்டு யானைகளும், 10 மனித உயிர்களும் பலியாகியுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் செவ்வாய்க்கிழமை (24) வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இந்த மரணங்கள் இடம் பெற்றுள்ளதாக பதிவாகியுள்ளன. நாட்டின் மனித சமூகத்திற்கும் குறைந்து வரும் யானை கூட்டங்களுக்கும் இடையிலான நீடித்த மோதல் தொடர்ந்தும் தீவிரமடைந்து வருவதை வெளிப்படுத்துகின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள், பயிர் நிலங்களை பாதுகாக்க சட்டவிரோத மின்சார வேலிகளை அமைத்தல், விஷம் கொண்ட உணவுகளை உட்கொண்டதனால் போன்ற பல்வேறு காரணங்களால் யானைகள் பலியாவதாக பதிவாகியுள்ளது.

மேலும், ரயில்களுடன் மோதல் மற்றும் நீரில் மூழ்குவது போன்ற விபத்து சம்பவங்களும் சில உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளன.

இதே காலப்பகுதியில் மனித யானை மோதல் பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 51 நாட்களுக்குள் யானை தாக்குதல்களால் 10 பேர் உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மனித யானை மோதலை கட்டுப்படுத்துவதற்கான அவசரமான மற்றும் நீடித்த தீர்வுகள் தேவைப்படுகின்றன என்பது வலியுறுத்தப்படுகிறது.

https://www.virakesari.lk/article/239588

சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலி அறுப்பு : இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது!

1 month ago

சுன்னாகத்தில் பெண்ணின் சங்கிலி அறுப்பு : இராணுவ முகாமில் பணியாற்றியவர் கைது!

சுன்னாகம் நகரப் பகுதியில் பட்டப்பகலில் சங்கிலி திருட்டில் ஈடுபட்ட இராணுவ முகாமில் கடமையாற்றிய ஒருவர் இன்றையதினம்(25) கைது செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி இராணுவ முகாமில் பணியாற்றிய ஒருவரால் அறுக்கப்பட்டது.

சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு

குறித்த பெண் இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். இந்நிலையில்  சந்தேகநபரான, மயிலிட்டி இராணுவ முகாமில் கடமை புரியும் நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

சுன்னாகம் காவல் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர் கைது நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://ibctamil.com/article/jaffna-woman-s-chain-stolen-army-arrested-1772029201

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

1 month ago

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

தொல்புரம் - பானாவெட்டி வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி வே.குருபரனின் இடமாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கமும், பிரதேசத்திலுள்ள பொது அமைப்புகளும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

நேற்று(24.2.2026)வைத்தியசாலைக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் இவ்விடயம் தொடர்பான கோரிக்கை கடிதம் கையளிக்கப்பட்டது.

பானாவெட்டி வைத்தியசாலையானது தொல்புரம், சுழிபுரம், மூளாய், பொன்னாலை, பண்ணாகம், சித்தங்கேணி உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பயன்பெறும் வைத்தியசாலையாகும்.

வளப்பற்றாக்குறை

இது பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றது. இதனை பிரதேச வைத்தியசாலையாக தரமுயர்த்துமாறு தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை! | Do Not Transfer Doctor Tholpuram Hospital Jaffna

இந்தநிலையில் வைத்தியர் குருபரன் இந்த வைத்தியசாலையை பொறுப்பேற்ற பின்னர் இங்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது இந்த வைத்தியசாலையில் அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்று வருகின்ற அதேவேளை பொதுமக்களுக்கு சிறந்த மருத்துவ சேவையும் கிடைக்கின்றது.இதனால் தினமும் நூற்றுக்கணக்கானோர் நன்மையடைகின்றனர்.

கோரிக்கை 

இதனால் இந்தப் பணிகளை தடையின்றி முன்னெடுப்பதற்காக மருத்துவர் வே.குருபரனை குறைந்தது அடுத்துவரும் இரண்டு ஆண்டுகளாவது இங்கு தொடர்ந்து பணியாற்ற அனுமதிக்குமாறு கோரிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். தொல்புரம் வைத்தியசாலையின் மருத்துவரை இடம் மாற்ற வேண்டாம் என கோரிக்கை! | Do Not Transfer Doctor Tholpuram Hospital Jaffna

இந்த கோரிக்கை கடிதம் யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

https://tamilwin.com/article/do-not-transfer-doctor-tholpuram-hospital-jaffna-1772028405

ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு

1 month ago

ஜெனிவா அமர்வின் பக்க நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஆராய்வு

25 Feb, 2026 | 06:35 PM

image

(நா.தனுஜா)Geographic Reference

தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான அறிக்கைகள் மற்றும் விவாதங்கள் எவையும் இல்லாத நிலையில், பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் Jeunesse Etudiante Tamoule எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பக்க நிகழ்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 61 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (23) ஆரம்பமாகி, எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின்போது 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தீர்மானத்தை மேலும் இரு வருடகாலத்துக்கு நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அதன்பிரகாரம் இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் எழுத்துமூல அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 63 ஆவது கூட்டத்தொடரிலும், விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் 66 ஆவது கூட்டத்தொடரிலும் சமர்ப்பிக்கப்படும்.

ஆகவே இம்முறை நடைபெற்றுவரும் 61 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பில் அறிக்கைகள் எவையும் சமர்ப்பிக்கப்படமாட்டாது என்பதுடன் விவாதங்களும் இடம்பெறாது.

இருப்பினும் இப்பேரவை அமர்வில் இலங்கை சார்பில் பங்கேற்கும் ஜெனிவாவுக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி சுமித் தஸநாயக்க தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், ஏனைய நாடுகளின் விவகாரங்கள் தொடர்பான விவாதங்களின்போது இலங்கை சார்பில் கருத்துரைப்பர்.

அதேவேளை இக்கூட்டத்தொடரின் பக்க நிகழ்வாக பிரான்ஸை தளமாகக்கொண்டு இயங்கிவரும் துநரநௌளந நுவரனயைவெந வுயஅழரடந எனும் அரச சார்பற்ற அமைப்பினால் நாளை மறுதினம் (27) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் ஆராயப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/239580

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு

1 month ago

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு

Feb 25, 2026 - 07:16 PM

குண்டுதாரியின் தெமட்டகொடை வீட்டில் கைப்பற்றப்பட்ட தங்கம் குறித்து நீதிமன்ற உத்தரவு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் போது தெமட்டகொட மஹவில கார்டன்ஸ் வீட்டில் தற்கொலைத் தாக்குதல் நடத்திய இரண்டாவது சந்தேகநபரான இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் என்பவரது வீட்டிலிருந்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகள் மற்றும் இரத்தினக்கற்கள் உள்ளிட்ட சொத்துக்களை, அவரது சகோதரரான இஃப்லால் அஹமட்டிடம் ஒரு வாரத்திற்குள் விடுவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார இன்று (25) உத்தரவிட்டார்.

முன்னைய நீதவான் இந்தச் சொத்துக்கள் தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்ய சி.ஐ.டி-க்கு போதுமான அவகாசம் வழங்கியிருந்தும், அவர்கள் அதனைச் செய்யத் தவறியுள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

இந்த உத்தரவை ஒரு வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தாவிடில், நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் எச்சரித்தார்.

ஷங்ரிலா ஹோட்டலில் தற்கொலைத் தாக்குதல் நடத்தி உயிரிழந்த இப்ராஹிம் இல்ஹாம் அஹமட் மற்றும் தெமட்டகொட வீட்டில் குண்டு வெடித்ததில் உயிரிழந்த இன்ஷாப் அஹமட் ஆகியோரின் சகோதரரான இஃப்லால் அஹமட், குறித்த சொத்துக்கள் தனக்குச் சொந்தமானவை எனக் கூறி அவற்றை விடுவிக்குமாறு சட்டத்தரணி ஊடாகக் கோரியிருந்தார்.

தற்போது அந்தப் பொருட்கள் மத்திய வங்கியின் பாதுகாப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், அவற்றை விடுவிக்க மேலதிக அவகாசம் கோரியதுடன், இது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடுவது தவறான செயலாகும் என நீதவான் வலியுறுத்தினார்.

நீதிமன்ற உத்தரவுகளை அமுல்படுத்தத் தவறுவது குற்றவியல் சட்டத்தின் கீழ் பாரதூரமான குற்றமாகும் எனத் தெரிவித்த அவர், எக்காரணம் கொண்டும் ஒரு வாரத்திற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கில், ஏ.எச்.எம். ரிஃபாஸ் மற்றும் மொஹமட் நிலாம் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக அடுத்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmm2351h6000o356pt6q7cyo5

மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது - வடக்கு ஆளுநர்

1 month ago

மக்களின் காணிகளை விடுவிக்க வனவள திணைக்களம் மறுப்பதை ஏற்க முடியாது - வடக்கு ஆளுநர்

25 Feb, 2026 | 05:30 PM

image

மக்களின் வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதார நிலங்களுக்கான ஆவணங்கள் இல்லை என்பதைக் காரணங்காட்டி, அக்காணிகளை விடுவிக்க வனவளத் திணைக்களம் மறுப்புத் தெரிவிப்பதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், மாவட்டச் செயலகத்தால் பரிந்துரைக்கப்படும் காணிகளை வனவளத் திணைக்களம் முழுமையாக விடுவிக்கவேண்டும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குழுவின் தலைவரும் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சருமான இ.சந்திரசேகர் மற்றும் குழுவின் இணைத் தலைவரும் வடக்கு மாகாண ஆளுநருமான நா.வேதநாயகன் ஆகியோரின் இணைத் தலைமையில் இன்று புதன்கிழமை (25) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத் திறன் அபிவிருத்தி மண்டபத்தில் நடைபெற்றது.

IMG-20260225-WA0019.jpg

IMG-20260225-WA0017.jpg

கூட்டத்தின் ஆரம்பத்தில் வரவேற்புரை ஆற்றிய கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சு.முரளிதரன், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் மணல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள துரித நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார். 

கல்மடுக் குளத்திலிருந்து பெறப்பட்டுச் சுத்திகரிக்கப்பட்ட மணல், தற்போது கரைச்சிப் பிரதேச சபையின் ஊடாக மக்களின் கோரிக்கைகளுக்கு அமைவாக விநியோகிக்கப்பட்டு வருகிறது

மேலும், கடந்த 'டித்வா' பேரிடரின் பின்னர் இரணைமடுக் குளத்தின் மேலதிக நீர் வெளியேறிய ஆற்றுப் பகுதிகள், அக்கராயன் மற்றும் கல்லாறு ஆகிய ஆற்றுப் பகுதிகளில் குவிந்துள்ள மணலை பிரதேச சபைகள் ஊடாகச் சேகரித்து மக்களுக்கு விநியோகிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, கிளிநொச்சியில் உள்ள 5 குளங்களில் மண்ணைக் கழுவுவதற்கான கேள்விப்பத்திரங்கள் கோரப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 15,000 கியூப் மணல் பெற்றுக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். 

IMG-20260225-WA0035.jpg

இதனூடாக இரு மாவட்டங்களினதும் எதிர்கால மணல் தேவையை ஓரளவு பூர்த்தி செய்ய முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன்போது உரையாற்றிய அமைச்சர் சந்திரசேகர், நடப்பு ஆண்டில் மாவட்டத்தின் அபிவிருத்திக்காகப் பல்வேறு நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறவுள்ள நிலையில், அவற்றை வினைத்திறனுடன் செலவிடுவதற்கான போதிய கால அவகாசம் காணப்படுவதால், அபிவிருத்திப் பணிகளை மிகச் சிறப்பாகவும் துரிதமாகவும் முன்னெடுக்குமாறு அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டார்.

IMG-20260225-WA0016.jpg

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்கான பல்வேறு விடயங்கள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டன. பன்முகப்படுத்தப்பட்ட வரவு – செலவுத் திட்ட நிதி, மீள்குடியேற்ற அமைச்சின் ஊடான வீட்டுத் திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித் திட்டங்கள், புனரமைக்கப்பட வேண்டிய பாலங்களின் முன்னுரிமைப் பட்டியல், இடர் முகாமைத்துவத் திட்டம் மற்றும் சமூக சக்தி வறுமை ஒழிப்புத் திட்டம் ஆகியவற்றுக்கான அனுமதிகள் கோரப்பட்டபோது, நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா, பொ.கஜேந்திரகுமார் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள் ஆகியோர் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர். 

அதேவேளை, வன்னேரிக்குளம் சுற்றுலா அபிவிருத்தி, கௌதாரிமுனையில் காணி வழங்கல் மற்றும் பொருளாதார மத்திய நிலையக் கடைகள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்களுக்குக் குழுவினால் அனுமதி வழங்கி வைக்கப்பட்டது.

வனவளத் திணைக்களத்திடமிருந்து 10,821 ஏக்கர் காணியை விடுவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதிலும், வெறுமனே 1,088 ஏக்கர் காணியை மாத்திரமே விடுவிக்க வனவளத் திணைக்களம் பரிந்துரைத்துள்ளது. 

இது தொடர்பில் சுட்டிக்காட்டிய மாவட்டச் செயலாளர், கோரப்பட்ட முழுமையான 10,821 ஏக்கர் காணியையும் விடுவிக்கவேண்டும் என வலியுறுத்திய நிலையில், அக்கோரிக்கைக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு ஏகமனதாக அனுமதி வழங்கியது. 

IMG-20260225-WA0032.jpg

வனவளத் திணைக்களத்தால் விடுவிக்கப்படவுள்ள காணிகள் தொடர்பான முழுமையான விபரங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னர் ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியைப் பெற்றுச் சமர்ப்பிக்குமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாகவும் மாவட்டச் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

அதேபோன்று, கிளிநொச்சி மாவட்டத்தின் எதிர்காலக் குடிநீர்த் தேவையைக் கருத்தில்கொண்டு, இரணைமடுக் குளத்திலிருந்து குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான அனுமதியும் ஒருங்கிணைப்புக் குழுவால் வழங்கப்பட்டது. அத்துடன், கிளிநொச்சி நகர்ப்புறக் குளங்களின் ஒதுக்கீட்டுக் காணிகளை ஆக்கிரமித்துள்ளவர்களைச் சட்டபூர்வமாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. 

மேலும், கரைச்சிப் பிரதேச செயலர் பிரிவை இரண்டாகப் பிரிப்பதற்கும், சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைப் பிரித்து மீளமைப்பதற்கும் ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்கியது.

மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள சட்டவிரோத கடலட்டைப் பண்ணைகளை ஒழுங்குபடுத்துவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டது. 

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் ஆகியோரும், வடக்கு மாகாண பிரதம செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதி பிரதம செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்கள், ஆணையாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

IMG-20260225-WA0028.jpg

IMG-20260225-WA0024.jpg

https://www.virakesari.lk/article/239579

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr