ஊர்ப்புதினம்

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி: பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை

1 month 1 week ago

பொலிஸ் அதிகாரிகள் எனக் கூறி பண மோசடி: பொதுமக்களுக்கு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் எச்சரிக்கை

Published By: Digital Desk 1

23 Feb, 2026 | 11:42 AM

image

பொலிஸ் அதிகாரிகள் போன்று நடித்து பொதுமக்களிடமிருந்து நிதி மோசடி செய்யும் பாரிய கும்பல் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் அதன் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த மோசடி தொடர்பாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே சில சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்தக் கும்பல் மிகவும் திட்டமிட்ட முறையில் பொதுமக்களை ஏமாற்றி வருகின்றமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலங்கையின் நிலையான தொலைபேசி எண்களை ஒத்த வெளிநாட்டு எண்களிலிருந்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களைத் தொடர்பு கொள்கின்றனர்.

ஆரம்பத்தில் வங்கி அதிகாரிகள் போலப் பேசி, உங்கள் கணக்கு தொடர்பாக முறைப்பாடுகள் வந்துள்ளதாகக் கூறி பயமுறுத்துகின்றனர்.

பின்னர், சட்ட நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, பொலிஸ் அதிகாரிகள் போன்ற ஆடை அணிந்த நபர்களுடன் வட்ஸ் ஊடாக வீடியோ அழைப்புகளை ஏற்படுத்துகின்றனர்.

இந்த வீடியோ அழைப்புகளின் போது, தாங்கள் பொலிஸ் நிலையத்தில் இருப்பது போன்ற ஒரு சூழலை உருவாக்கி, பொதுமக்களை விசாரணை செய்வது போலவும் வாக்குமூலங்களைப் பதிவு செய்வது போலவும் நடித்து அவர்களை நம்ப வைக்கின்றனர்.

உங்களது வங்கி கணக்கைப் பாதுகாப்பதாகவோ அல்லது சரிபார்ப்பதாகவோ கூறி, அவர்கள் வழங்கும் பல வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றச் சொல்கின்றனர். இவ்வாறு பெறப்படும் பணம், பின்னர் இடைத்தரகர்கள் மூலம் கிரிப்டோகரன்சியாக மாற்றப்படுவதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில்,

வங்கி விபரங்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP எண்களை எவருக்கும் பகிர வேண்டாம்.

இலங்கை பொலிஸார் ஒருபோதும் வட்ஸ் வீடியோ அழைப்புகள் மூலம் விசாரணைகளை நடத்தி பணப் பரிமாற்றங்களைக் கோருவதில்லை.

இவ்வாறான சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் வந்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது பொலிஸ் தலைமையகத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும்.

இந்த மோசடி தொடர்பில் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் இருக்குமாறும், இவ்வாறான நிதி இழப்புகளைத் தவிர்க்க ஒத்துழைக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

https://www.virakesari.lk/article/239356

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு

1 month 1 week ago

images-4-2-1.jpg?resize=296%2C170&ssl=1

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க பாரிய நிதி ஒதுக்கீடு.

தபால் திணைக்களம் இந்த ஆண்டில் 15,000 மில்லியன் ரூபா வருமான இலக்கை எளிதாக அடைய முடியும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

5.1 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்ட மடவல உல்பத்த தபால் நிலையத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் 13,450 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. இந்த ஆண்டு அதனை 15,000 மில்லியன் ரூபாவாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தபால் சேவையை டிஜிட்டல் மயமாக்க அரசாங்கம் பாரிய நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளது.

மத்திய தபால் பரிமாற்றத்துக்கு 27 மில்லியன் ரூபா செலவில் 209 பாதுகாப்பு கெமராக்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கணினி மயமாக்கல் திட்டத்தில் 225 கணினிகளுக்காக 74 மில்லியன் ரூபாவும், 1,500 டப்லெட் கணினிகளுக்காக 101 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வரவைப் பதிவு செய்ய 657 கைரேகை இயந்திரங்களை 31 மில்லியன் ரூபா செலவில் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மட்டக்களப்பு, பொலன்னறுவை, தபால் தலைமையகம் மற்றும் மத்திய தபால் பரிமாற்றம் ஆகிய கட்டடங்களில் 24 மில்லியன் ரூபா செலவில் சூரிய சக்தி மின்சாரத் தொகுதிகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவையில் இப்பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1465881

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!

1 month 1 week ago

யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!

23 February 2026

1771825265_4298220_hirunews.jpg

யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் அமையவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத்தின் அனைத்து நிர்மாணப் பணிகளையும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கும் வரை உடனடியாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபை உத்தரவிட்டுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு நடைமுறையின் ஒரு பகுதியாக, 'திட்ட வரைபு அறிக்கை' ஒன்றை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கபில மஹேஷ் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மைதானத்திற்காக ஒதுக்கப்பட்ட 48 ஏக்கர் காணி, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிக்குள் வரவில்லை என்பதை வனப் பாதுகாப்புத் திணைக்களம் உறுதிப்படுத்தியுள்ளது.

இருப்பினும், முறையான சுற்றுச்சூழல் மதிப்பீட்டு அறிக்கையை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சமர்ப்பிக்கும் வரை பணிகளைத் தொடர முடியாது.

சுற்றுச்சூழல் அனுமதி பெறப்படுவதற்கு முன்னரே அங்கு நிலத்தை சமப்படுத்தும் பணிகள் நடைபெற்றுள்ளதாகக் கிடைத்த புகார்களையடுத்து, யாழ்ப்பாண அலுவலக அதிகாரிகள் சோதனைகளை மேற்கொண்டனர்.

1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், அனுமதி இன்றி இத்தகைய திட்டங்களை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும்.

இதன்படி, கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி பணிகளை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கம், இந்தத் திட்டம் கட்டாய சுற்றுச்சூழல் அனுமதியின்றி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதனை உடனடியாக நிறுத்துமாறு அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Hiru News
No image previewயாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத...
யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு உத்தரவு!. Most visited website in Sri Lanka.

புதிய பயங்கரவாதச் சட்டம் வலுவானதாக இருக்க வேண்டும் : பேராசிரியர் ரொஹான் குணரத்ன

1 month 1 week ago

புதிய பயங்கரவாதச் சட்டம் வலுவானதாக இருக்க வேண்டும் : பேராசிரியர் ரொஹான் குணரத்ன

23 Feb, 2026 | 05:05 AM

image

(ஆர்.ராம்)

புலம்பெயர் தேசங்களில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் வேர்களாக இருக்கும் அமைப்புக்கள் வலுவாக இருக்கின்போது பயங்கரவாதம் குறித்த சட்டங்கள் பலவீனமாக இருந்தால் அவை மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக பேராசிரியர் ரொஹான் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமானது வலுவானதாக இருக்க வேண்டும் என்பதோடு அது தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும்' சர்ச்சைக்குரிய சட்டவரைவானது ஐக்கிய நாடுகள் சபையின் முகவரகங்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உள்நாட்டு சிவில் அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட பின்னூட்டங்களின் அடிப்படையில் மேலதிக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சர்வதேச நியமங்களுக்கு அமைவாக வரைவு இறுதி செய்யப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையில் கருத்து வெளியிட்டுள்ள பேராசிரியர் ரொஹான் குணரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையின் நீண்டகால ஸ்திரத்தன்மைக்கு வலுவான சட்டங்கள் அவசியமாகும். பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள் எக்காரணம் கொண்டும் நீர்த்துப்போகச் செய்யப்படக்கூடாது. அரசியல் தலைவர்கள் ஆட்சிக்கு வருவதற்காகப்பேசும் சொல்லாடல்களுக்கு அப்பால் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அச்சுறுத்தல் தற்போது நிலத்தடியில் இருக்கும் புற்றுநோய் போன்றதாகும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். புலம்பெயர் தேசங்களில் அந்த அமைப்பின் வேர்களாக உள்ள வலையமைப்புகள் தற்போதும் வலுவாக இருக்கின்றன. அவ்வாறான நிலையில் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் பலவீனமான இருக்கும்போது அவை மீண்டும் தலைதூக்கக்கூடும் ஆபத்துக்கள் உள்ளன.

அதேநேரம், சர்வதேசத்துக்கு பயங்கரவாத அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய குழுக்களான அல்-கொய்தா மற்றும் ஐ.எஸ் ஆகியவற்றின் ஊடுருவல்களைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் தேவையாக உள்ளன. இணையவெளியின் ஊடாக முன்னெடுக்கப்படும் தீவிரவாதப் பிரசாரங்கள் மற்றும் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த வலுவான சட்டங்களும் நவீன புலனாய்வுத் திறன்களும்; அவசியமாகும்.

தற்போதைய நிலையில் நிறுத்தப்பட்டுள்ள புனர்வாழ்வுத் திட்டங்களை அரசாங்கம் உடனடியாக மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். மதத் தலைவர்கள் சதித்திட்டக் கோட்பாடுகளைப் பரப்பாமல் இருப்பதோடு தீவிரவாதத்தைத் தடுப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/239337

தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் நாட்டுக்கு பலகோடி நட்டம்; எரிவாயு விநியோகத்திலும் முறைகேடு - புபுது ஜயகொட குற்றச்சாட்டு

1 month 1 week ago

தரமற்ற நிலக்கரி கொள்வனவினால் நாட்டுக்கு பலகோடி நட்டம்; எரிவாயு விநியோகத்திலும் முறைகேடு - புபுது ஜயகொட குற்றச்சாட்டு

22 Feb, 2026 | 05:23 PM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

ஊழலற்ற ஆட்சியை உருவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், நிலக்கரி மற்றும் எரிவாயு கொள்வனவு விவகாரங்களில் பாரிய மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள கட்சித் தலைமையகத்தில் சனிக்கிழமை (21) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்த கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலம் கூறுகையில்,

நிலக்கரி கொள்வனவு தொடர்பில் அரசாங்கம் முன்வைக்கும் விலை குறைப்பு என்ற வாதம் மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரமாகும். உலக சந்தையில் நிலக்கரிக்கு என பிரத்யேக விலை சுட்டெண்கள் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் விலை சுட்டெண்களை அடிப்படையாகக் கொண்டே கொள்முதல் விலைகள் தீர்மானிக்கப்பட வேண்டும். 2018 மற்றும் 2020 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் உலக சந்தையில் நிலக்கரி விலை உயர்ந்து காணப்பட்டது, ஆனால் தற்போது விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இச்சூழலில் பழைய விலையுடன் ஒப்பிட்டு தற்போது மலிவாக வாங்கியிருப்பதாகக் கூறுவது அபத்தமானது. குறிப்பாக, உயர் தரம் கொண்ட நிலக்கரிக்கு பதிலாக குறைந்த தரம் கொண்ட நிலக்கரியையே அரசாங்கம் கொள்வனவு செய்துள்ளது.

உலக சந்தையில் மெட்ரிக் தொன் ஒன்று 70 டொலர்களுக்குக் கிடைக்கக்கூடிய தரம் குறைந்த நிலக்கரியை, அரசாங்கம் 98.53 டொலர்களுக்கு வாங்கியுள்ளது. இதன் மூலம் ஒரு கப்பலுக்கு மாத்திரம் சுமார் 20 மில்லியன் டொலர்கள் வரை மேலதிக இலாபத்தை ஒரு தனியார் நிறுவனம் ஈட்டியுள்ளது. இதுவரை வந்துள்ள 8 கப்பல்கள் மூலம் நாட்டுக்கு சுமார் 240 மில்லியன் டொலர் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் தனது பதவி விலகல் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முறைகேடுகள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.

அரிசி இறக்குமதியில் மோசடி செய்ததாகக் கணக்காய்வாளர் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட நிறுவனங்களுக்கே தற்போது நிலக்கரி ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் சர்வதேச அளவில் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்கள். எரிவாயு தட்டுப்பாடு குறித்த அமைச்சரின் விளக்கங்கள் முற்றிலும் முரணானவை. மக்கள் பீதியடைந்து எரிவாயுவைச் சேகரிப்பதாகக் கூறுவது வேடிக்கையானது, ஏனெனில் எரிவாயுவை உருளைகளில் மட்டுமே நிரப்ப முடியும்.

உண்மையில், ஓமான் நிறுவனத்திடம் இருந்து எரிவாயு பெற்று வந்த லிட்ரோ நிறுவனம், தற்போதைய ஆட்சியின் கீழ் திடீரென விநியோகத் திறனற்ற ஒரு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விநியோக உரிமையை மாற்றியுள்ளது. இலங்கைக்கு மாதம் நான்கு கப்பல்கள் தேவைப்படும் நிலையில், குறித்த நிறுவனத்திடம் இரண்டு கப்பல்கள் மட்டுமே உள்ளன. இத்தகைய திட்டமிடப்படாத தீர்மானங்களாலேயே இன்று நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் புதிய மின்சாரக் கொள்கைகள் நுகர்வோர் மீது பாரிய சுமையை ஏற்றும் ஒரு நடவடிக்கையாகும். இப்புதிய கொள்கையின்படி, மின்சாரத்திற்கான அனைத்து மானியங்களும் நிறுத்தப்படவுள்ளதோடு, குறைந்த அலகு மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏழை நுகர்வோர் கூட இனி மாதம் 1900 ரூபாய் வரை மின்சாரப் பட்டியலைச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். சூரிய சக்தி மின்சார உற்பத்தியை ஊக்குவிப்பதாகக் கூறிக்கொண்டு, சாதாரண மக்களின் உற்பத்திகளுக்குத் தடையாக இருக்கும் வகையில் மின்சாரக் கட்டமைப்புகள் பேணப்படுகிறது.

பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் இத்தகைய மக்கள் பிரச்சினைகளில் மௌனமாக இருக்கின்றனர். அவர்கள் அரசாங்கத்தின் அதே பொருளாதாரக் கொள்கைகளையே பின்பற்றுகின்றனர், பாராளுமன்றத்திற்கு வெளியே ஒரு வலுவான மக்கள் எதிர்க்கட்சியை கட்டியெழுப்ப வேண்டியது காலத்தின் கட்டாயம். மக்கள் மீது சுமத்தப்படும் இந்த அநீதியான பொருளாதாரச் சுமைகளுக்கு எதிராக அடுத்த வாரம் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு முன்பாகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் புபுது ஜயகொட இதன்போது மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/239320

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும்; அதற்கான வரைவு ஏப்ரலில் வெளியாகும் - அமைச்சர் ஹர்ஷன

1 month 1 week ago

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் ஸ்தாபிக்கப்படும் ; அதற்கான வரைவு ஏப்ரலில் வெளியாகும் - அமைச்சர் ஹர்ஷன

22 Feb, 2026 | 05:38 PM

image

(ஆர்.ராம்)

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்துக்கான வரைவு எதிர்வரும் ஏப்ரலில் வெளியிடப்படுமென நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் குறித்த விடயம் சம்பந்தமாக மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் குற்றவியல் வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீன சுயாதீனு வழக்குத்தொடுநர் எனும் புதிய கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்ப வரைவுப் பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படும்.

இந்த புதிய கட்டமைப்பானது தற்போதுள்ள சட்டமா அதிபர் திணைக்களத்தை கலைப்பதற்கான முயற்சி அல்ல என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

சட்டமா அதிபர் தனது தற்போதைய பணிகளைத் தொடர்வார் அதில் எவ்விதமான பிரச்சினைகளும் இருக்காது. எனினும் குற்றவியல் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்கு ஒரு சுயாதீனமான நிறுவனம் உருவாக்கப்படும்.

அந்த சுயாதீன வழக்குத்தொடுநர் அரசாங்கத்தின் கொள்கைகளால் அன்றி, சாட்சியங்கள் மற்றும் சட்ட ரீதியான காரணிகளால் மட்டுமே வழிநடத்தப்படுவார்.

உயர் நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட தலைமையிலான குழு, சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து, குறித்த கட்டமைப்புக்கான அதிகாரங்கள் தொடர்பிலான ஆய்வுகளும், ஆலோசனைகளும் நடத்தப்படுகின்றன. அக்கட்டமைப்புக்கான ஏப்ரல் மாதம் வரைவு தயாரானதும் அது பொதுமக்களின் கருத்துக்களுக்காக முன்வைக்கப்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/239327

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் ; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

1 month 1 week ago

சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் ; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

22 Feb, 2026 | 03:37 PM

image

(நா.தனுஜா)

வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் நம்பத்தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவியினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

29 குழந்தைகள் உள்ளடங்கலாக வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையையும், அவர்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலையும் வலியுறுத்தி வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் அமைதிப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு 9 ஆண்டுகள் பூர்த்தியடைந்திருப்பதை முன்னிட்டு உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறோம்.

2017 ஆம் ஆண்டு பெப்ரவரி 20 ஆம் திகதி இந்தக் கவனயீர்ப்புப் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களால் தொடர் போராட்டங்கள், ஆவணப்படுத்தல் முயற்சிகள் மற்றும் சர்வதேச பொறிமுறைகளுடனான தொடர்புகள் எனப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எமது இந்தப் போராட்டத்தின் ஊடாக எமக்குப் பதிலளிக்குமாறு கோரப்படுவதுடன் மாத்திரமன்றி, வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான சர்வதேச மனித உரிமைகள் நியமங்கள் மற்றும் கடப்பாடுகளைப் பின்பற்றிச் செயற்படுமாறும் வலியுறுத்தப்படுகிறது.

எமது இந்தத் தொடர் போராட்டமும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட சர்வதேசப் பொறிமுறைகளுடனான நிலையான தொடர்புகளும் சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமைகள் நியமங்களைப் பாதுகாப்பதிலும், நடைமுறைப்படுத்துவதிலும் நாம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

மறுபுறம் தொடர் வலியுறுத்தல்களின் பின்னரும் நம்பத்தகுந்ததும், பக்கச்சார்பற்றதும், செயற்திறன் மிக்கதுமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு உள்நாட்டு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. அதன்விளைவாக வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கான உண்மை, நீதி மற்றும் சர்வதேச நியமங்களுக்கு அமைவான இழப்பீடு என்பன உறுதிசெய்யப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும், பாதிக்கப்பட்டோருக்கான நீதியை நிலைநாட்டுவதற்கும் நம்பத்தகுந்த சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான முயற்சிகளை வலுப்படுத்துமாறு உங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோன்று இறுதிக்கட்டப்போரின்போது எமது உறவுகள் சரணடைந்த மற்றும் நாமாகக் கையளித்த சோதனைச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தவும், அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அத்தோடு உள்ளகப்பொறிமுறைகள்மீது நம்பிக்கை இழந்து, அவற்றை நிராகரித்திருக்கும் பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாட்டுக்கு மதிப்பளிக்கப்படவேண்டும். மேலும் தமிழ்மக்களின் இனப்பிரச்சினைக்கு நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஆதரவளிக்கவேண்டும் என அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/239307

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்

1 month 1 week ago

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம்

22 Feb, 2026 | 04:28 PM

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குட்பட்ட மாந்தீவு பகுதிக்குள் ஏற்கனவே புகுந்திருந்த கட்டு யானைகள் ஞாயிற்றுக்கிழமை (22) திருப்பந்துறை பிரதேசத்திற்குள் நுழைந்து அட்டகாசம் ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஐந்து தினங்களாக தொடர்ந்து அப்பகுதியில் காட்டு யானைகள் உட்பகுந்து நெற்பயிர்கள் மற்றும் ஏனைய பயிர் வகைகளையும் துவம்சம்  செய்வதாக அப்பகுதி பொதுமக்கள்  கவலை தெரிவிக்கின்றனர்.

யானைகள் மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு இதுவரையில் எட்டப்படவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.

இதேவேளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள உத்தியோகஸ்த்தர்களும், அப்பகுதி பொதுமக்களும் இணைந்து குறித்த காட்டு யானைகளை அப்பகுதிகளிலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இவ்வாறு காட்டு யானைகளில் அட்டகாசத்தாலும் நடமாட்டத்தாலும்,   வழமை போன்று தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட முடியதுள்ளதாகவும், மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே  தாம் நடமாடுவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்தனர்.

pho_elephant__6_.png

pho_elephant__15_.png

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் தொடரும் காட்டு யானைகள் அட்டகாசம் | Virakesari.lk

நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!

1 month 1 week ago

நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்!

written by admin February 22, 2026

Gtn2-6.png?fit=900%2C1200&ssl=1

யாழ்ப்பாணத்துப் பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவினார் மலாயாவின் முஸ்லிம் மன்னர்!

1927 இல், மலாயாவில் வெளியான புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல் ஒன்று, இம்மாதம் யாழ்ப்பாணத்தில் மீளவும் அச்சிடப்பட்டு வெளியாகின்றது.

சாம்பசிவம் – ஞானாமிர்தம் என்ற இந்த நாவலுக்குக் கதைக்களம் அன்றைய மலாயா-சிங்கப்பூரும் இலங்கையும். நாவலை எழுதியவர், யாழ்ப்பாணம், காரைநகர், சம்பந்தர்கண்டியைச் சேர்ந்த அருணாசலம் நாகலிங்கம் (1901-1979). அவர், அப்பொழுது, கோலப்பிலா திறைசேரியில் முதன்மை எழுதுவினைஞராகப் பணியாற்றிக்கொண்டிருந்தார்.

நாவல், கோலாலம்பூரின் லாஸர் அண்ட் சன்ஸ் அச்சகத்தில் 1000 பிரதிகள் அச்சிடப்பட்டது. இந்த நாவலின் விற்பனையால் வரும் பணத்தில், காரைநகர், மருதடிப் பிள்ளையார் கோயிலின் பாழடைந்த திருக்குளத்தைச் சீரமைத்துக் கட்ட நாவலாசிரியர் எண்ணியிருந்தார்; செய்துமுடித்தார்.

கோயில் என்பதற்கு அப்பால், இக்குளத்தின் ஊர்ப்பயன்பாடு, நீர்ப்பயன்பாடு, கால்நடைகளின் பயன்பாடு என்பன அவர் சிந்தனையில் முன்னின்றதை நூன்முகத்தால் அறிந்துகொள்ளலாம்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் எழுத்தை ஊக்குவித்து, அக்காலத்தில் 100 வெள்ளி பணம் கொடுத்து, பிள்ளையார் கோயில் திருப்பணிக்கு உதவியவர், அன்றைய மலே கூட்டாட்சி அரசுகளின் (Federated Malay States) நகரி செம்பிலான் (Negeri Sembilan) மன்னராக இருந்த, சேர். முகமது ஷா.

பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியரான, R. P. சேதுப்பிள்ளை; அக்காலத்தில் ஈழத்து முன்னணி நாவலாசிரியரும் இந்துசாதனப் பத்திராசிரியருமான (உலகம் பலவிதம்) ம. வே. திருஞானசம்பந்தப்பிள்ளை; யாழ்ப்பாண வரலாற்றாய்வாளர், செ. இராசநாயக முதலியார்; புனித பத்திராசிரியர் கல்லூரித் தமிழ்ப் பண்டிதர், வ. சு. இராச ஐயனார், ஆகியோர் நாவலுக்கு முன்னுரை வழங்கியிருந்தனர்.

சாதி, சமயம், சமூகம், சீதனம், மதுவையும் புலாலையும் தவிர்த்தல், பண்பாட்டு அடிமைத்தனம், பயிர்த்தொழில், உள்ளூர் உற்பத்தி போன்ற விடயங்களில், காந்தியக் கருத்துக்களை, தமிழ்ச் சிந்தனை மரபுப் பின்னணியுடனும், இலக்கிய மேற்கோள்களுடனும் நாவலாசிரியர் முன்வைக்கிறார்.

இரண்டாம் உலகப்போரின் யப்பானிய ஆட்சிக்காலத்தில், கோலப்பிலா மருத்துவ மனைக்கு முதன்மை எழுதுவினைஞராகப் பணிமாறிய அவர், சிங்கப்பூரில் நிறுவப்பட்ட சுபாஸ் சந்திர போஸின் இந்திய அரசுக்கும் ஆதரவளித்துள்ளார். 1947 இல் காரைநகர் திரும்பிவிட்டார்.

கோலப்பிலாவில் தமிழ்ப்பள்ளி நிறுவி அதன் முகாமையாளராகவும், முருகன் கோயில் முகாமையாளராகவும் இயங்கிய இந்த நூலாசிரியர், ஊரிலும் காரைநகர்ச் சிவன் கோயில் குடமுழுக்கு (1970), அனைவருக்கும் ஆலய வழிபாட்டுரிமை, நூற்பதிப்புகள் என, பல்வேறு சமய, சமூகப் பணிகளில் பங்குகொண்டு, 1979 இல் இயற்கை எய்தினார். 25-02-1901 இல் பிறந்த நாகலிங்கம் அவர்களுக்கு இது 125 ஆவது ஆண்டு.

அவரை, 1975 இல் மல்லிகை பத்திரிகை பேட்டிகண்டு, அட்டைப்படத்துடன் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. படங்களுடன் வெளியான முதலாவது ஈழத்தமிழ் நாவல் அவருடையது என சில்லையூர்ச் செல்வராசன் குறிப்பிட்டுள்ளார். இந்த நாவல் ஏற்கனவே வலைத்தளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. இப்பொழுது மீளச்சில் வெளியிடுபவர், நா. பாலக்கிருஷ்ணன், சம்பந்தர்கண்டி,காரைநகர்.

அம்பலம்.

நூற்றாண்டை எட்டும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் நாவல்! - Global Tamil News

36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

1 month 1 week ago

36 ஆண்டு கால ஏக்கம் – மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா?

written by admin February 22, 2026

Gtn2-7.png?fit=900%2C1200&ssl=1

மயிலிட்டி மக்களின் ஆன்மீக அடையாளமான புனித காணிக்கை மாதா ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு, கடந்த 36 வருடங்களாக அனுமதி மறுக்கப்பட்டு வரும் அவலநிலை தொடர்கிறது. இம்முறையாவது திருவிழாவை நடத்த அனுமதி கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் மக்கள் காத்திருக்கின்றனர்.

<span class=📍" width="16" height="16" style="box-sizing: border-box; outline: 0px; margin: 0px; padding: 0px; border: 0px; max-width: 100%; vertical-align: top; height: auto;"> இந்த ஆலயம் 1850 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட மிகப்பழைமையான கத்தோலிக்க ஆலயமாகும். சுமார் 52 பரப்பு நிலப்பரப்பில் ஆலயம், மயிலிட்டி றோ.க பாடசாலை, கன்னியர் மடம், பங்கு பணிமனை மற்றும் தோட்டக்காணிகள் அமைந்துள்ளன.

1990-ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக மக்கள் வெளியேறிய பின், இப்பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில் திருவிழாவை ஆலயத்திலேயே கொண்டாடுவதற்கு அனுமதி கோரி ஜனாதிபதி, கடற்தொழில் அமைச்சர், வடமாகாண ஆளுநர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இராணுவத் தளபதி எனப் பல தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், இதுவரை இராணுவத் தரப்பிலிருந்து முறையான சாதகமான பதில்கள் கிடைக்காததால், இம்முறையும் திருவிழா தடைபட்டு விடுமோ என்ற அச்சத்தில் மயிலிட்டி மக்கள் உள்ளனர்.

“எம் பாட்டன் பூட்டன் தொழுத ஆலயம், எம் மண்ணின் அடையாளம் மீண்டும் எமக்குக் கிடைக்க வேண்டும்” – இதுவே மயிலிட்டி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.

36 ஆண்டு கால ஏக்கம் - மயிலிட்டி காணிக்கை மாதா ஆலயத்திற்கு அனுமதி கிடைக்குமா? - Global Tamil News

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் – மாநகர உறுப்பினர் எச்சரிக்கை!

1 month 1 week ago

Screenshot-2026-02-22-144158.jpg?resize=

யாழ்.மாநகர சபையிடம் தீயணைப்பு வாகனங்கள் இல்லை: அனர்தம் ஏற்பட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும் – மாநகர உறுப்பினர் எச்சரிக்கை!

யாழ். குடாநாட்டில் தீ அனர்த்தம் ஒன்று ஏற்பட்டால் அது பாரிய அழிவுகளை ஏற்படுத்தும் என யாழ் மாநகர சபை உறுப்பினர் முத்துக்குமார் உதயசிறி எச்சரித்துள்ளார்.

யாழ்.சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், தீ அனர்த்தத்தை எதிர்கொள்ளக்கூடிய சக்தியுடன் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்,யாழ்.மாநகர சபையிடம் தற்போது தீயணைப்பு வாகனங்கள் எவையும் இல்லையெனவும், நீர் விநியோகிக்கும் வானகம் ஒன்றே தற்காலிக தீயணைப்பு பணியில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

1983 ஆம் ஆண்டு யாழில் ஏற்பட்ட தீ விபத்தைப் போன்று அதன்பின்னர் ஏற்படவில்லை எனவும், ஆனால் அவ்வாறானதொரு அனர்த்தம் ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்தும் சக்தி யாழ்.மாநகர சபையிடம் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஆகவே, யாழ்.மாநகர சபையின் கீழ் இயங்கும் தீயணைப்பு பிரிவை தனியான பிரிவாக அமைத்து அதற்கான வசதிகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்” என்றார்.

https://athavannews.com/2026/1465808

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம்

1 month 1 week ago

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மிக விரைவில் சாத்தியம்

adminFebruary 22, 2026

Gtn1-13.png?fit=900%2C1200&ssl=1

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தேசிய மக்கள் சக்தி கரிசனை கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிபவானந்தராசா தெரிவித்துள்ளார்.  வெலிக்கடை சிறைச்சாலையில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவை சேர்ந்த தமிழ் அரசியல் கைதியான நிமலன் என்பவரை சிறையில் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

பல வருட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான முயற்சிகளில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அது தொடர்பிலான முக்கிய நகர்வுகளையும் எடுத்து வருகிறது.

அந்நிலையில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சிறைச்சாலைக்கு சென்று அவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி வருவதுடன் அவர்களது கோரிக்கைகள் பிரச்சனைகள் தொடர்பிலும் கேட்டறிந்து , உரிய தரப்புக்களுக்கு அவை தொடர்பில் அறிவித்துள்ளேன்.

கடந்த இரு வாரங்களுக்கு முன்னரும் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு சென்று .  அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினேன். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் மிக விரைவில் சாத்தியமாகும் என தான் நம்புவதாக மேலும் தெரிவித்தார் .

https://globaltamilnews.net/2026/229559/

ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு ஈ.பி.டி.பி, இராணுவமே காரணம்..! எம்.கே.சிவாஜிலிங்கம்

1 month 1 week ago

ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி, இராணுவமே காரணம்..! எம்.கே.சிவாஜிலிங்கம்

கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசந்திரன் படுகொலைக்கு இ.பி.டி.பி மற்றும் இராணுவமே காரணம் என வல்வெட்டிதுறை நகரபிதாவும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

கடத்தி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் ராமசாந்திரனுக்கு நீதி வேண்டி வடமராட்சி ஊடக இல்லத்தால் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பலரது படுகொலைகள்

போர் நடைபெற்று கொண்டிருந்த காலத்திலும் சரி அதற்கு பின்னரும் சரி ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறைகள் குறிப்பாக அப்போது ஜனாதிபதியாக இருந்த மகிந்த ராஜபக்ச காலத்தில் தொடங்கிய விடயங்கள், இன்றைக்கு தென்னிலங்கையில் சிங்கள ஊடகவியலாளர்களது விடயங்களை கிழப்புபவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களது விடயங்களில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

அது யாராக இருக்கட்டும், நிமலராஜன் படுகொலையாக இருக்கட்டும் எந்த படுகொலையாக இருக்கட்டும் எதற்கும் நீதி இல்லை என்கின்ற நிலைதான் இருந்துகொண்டிருக்கிறது.பலரது படுகொலைகள் இடம்பெற்றிருக்கிறது.

வடக்கு கிழக்கு பூராகவும் பலரது படுகொலைகள் நடைபெற்றன. இது 2007 ம் ஆண்டிலே மணல் கொள்ளைக்கு எதிராக குரல் கொடுத்த இந்த ஊடகவியலாளர் ராமசந்திரன் அவரது கட்டுரை தினக்குரல் பத்திரிக்கையில் வெளியாகிய இரண்டாவது நாள் அவர் கடத்தப்படுகின்றார் என்றால் இராணுவமும், இ.பி.டி.பி யும் தான் பொறுப்பு.

அது மட்டுமல்ல அவர் இராணுவ முகாமில் தடுத்து வைக்கபட்டிருந்தபோது இராணுவத்தினரின் தொலைபேசியில் குடும்பத்தாருடன் பேசியிருக்கின்றார். கடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள், சாட்சியங்கள் ஒவ்வொன்றாக இல்லாதுபோகின்றது.

அவரது தந்தையார், தாயார் இறந்துகொண்டிருக்க கூடிய நேரத்திலே கிராம சேவகர் கூட அவரை நான் பார்த்தேன் என்று கூறியிருக்கிறார். இவர்கள் காலம் கடத்துகின்றனர்.

நிலைமாறு கால நீதி கிடைக்காமல் எல்லாம் சுத்துமாத்தாக நீத்து போக செய்கின்ற நிலைதான். ஆகவே உடனடியாக சர்வதேசம் தலையிட்டு இதற்கு நீதி கிடைக்க செய்ய வேண்டும் என்பதுதான் எமது விருப்பம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://tamilwin.com/article/epdp-and-army-reason-murder-journalist-1771742845

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

1 month 1 week ago

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேராளர் மாநாடு

adminFebruary 22, 2026

2-2.jpeg?fit=1170%2C658&ssl=1

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் முதலாவது பேராளர் மாநாடு சாவகச்சேரி நகர சபையின் பொன்விழா மண்டபத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களால் மங்கள விளக்கு ஏற்றி மாநாடு ஆரம்பிக்கப்பட்டது.

இவ் பேராளர் மாநாட்டில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இனைத்தலைவர்கள் கட்சியின் மாவட்ட இணைப்பாளர்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

2-1.jpeg?resize=800%2C450&ssl=1 2-3.jpeg?resize=800%2C450&ssl=12-4.jpeg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2026/229553/

இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை

1 month 1 week ago

இருபார்வைகளையும் இழந்த மாணவர்கள் யாழ்.பல்கலையில் பட்டம் பெற்று சாதனை

adminFebruary 22, 2026

Gtn1-12.png?fit=900%2C1200&ssl=1

இரு பார்வைகளையும் இழந்த இரண்டு மாணவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமது பட்டப்படிப்பினை நிறைவு செய்து,  பொதுக்கலைமாணிப் பட்டம் பெற்றமைக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நான்கு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாம் நாள் அமர்வில் இரு பார்வைகளையும் இழந்த வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக்கலைமாணிப்பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களுள் துரைராசா அருண்குமார் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர் தரத்தில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகம் சென்றவர் எ

வாழ்வக வரலாற்றில் புலமைப் பரிசில் பரீட்சையில் சாதாரண மாணவர்களுக்கு இணையான புள்ளிகள் பெற்று சித்திபெற்ற ஒரேயொரு  மாணவன் என்ற பெருமையும் இற்றைவரை இவருக்கே உரியதாகின்றது.

இருபார்வையினையும் இழந்த இரண்டு மாணவர்களும் நீண்ட இடர்பாடுகளுக்கு மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையில், பலரும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

 IMG-20260221-WA0052.jpg?resize=800%2C450IMG-20260221-WA0053.jpg?resize=800%2C450

https://globaltamilnews.net/2026/229548/

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு

1 month 1 week ago

யாழ்.பல்கலை பட்டமளிப்பு விழா நிறைவு

adminFebruary 22, 2026

1Q9A0605-scaled.jpg?fit=1170%2C637&ssl=1

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு வைபவத்தின் நிறைவு நாள் அமர்வுகள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய பொதுப் பட்டமளிப்பு வைபவம் கடந்த நான்கு நாள்களில் 12 அமர்வுகளாக நடைபெற்று இன்றைய தினத்துடன்  நிறைவடைந்தது. இம்முறை 3 ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த பிப்ரவரி 19ம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமான இந்நிகழ்வு மொத்தம் 12 அமர்வுகளாக நான்கு நாட்கள் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இறுதி அமர்வுடன் இனிதே நிறைவுற்றது. இம்முறை சாதனை அளவாகப் பெருமளவிலான மாணவர்கள் தங்களது கல்வித் தகமைகளை உறுதிப்படுத்திக் கொண்டனர்.மொத்தமாக 3,252 பட்டதாரிகள் பட்டங்களைப் பெற்றுக் கொண்டனா். இதில் கலாநிதி (PhD), முதுகலை (Masters), இளங்கலை (Bachelor’s) பட்டங்கள் மற்றும் டிப்ளோமா தகமைச் சான்றிதழ்கள் உள்ளடங்குகின்றன.

ஒவ்வொரு நாளும் பட்டதாரிகள் ஊர்வலமாக அழைத்து வரப்படும்போது, நாதஸ்வர மற்றும் மேள வாத்தியங்களுடன் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழகத்தின்  இந்த 40-ஆவது பட்டமளிப்பு விழா, கோவிட் காலத்திற்குப் பிந்தைய கல்விச் செழுமையை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்தது. இம்முறை விசேட தேவையுடைய மாணவர்கள் மற்றும் பல்வேறு துறைகளில் தங்கப் பதக்கம் வென்ற மாணவர்களின் சாதனைகள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1Q9A0605.jpg?resize=800%2C435&ssl=11R0A0619.jpg?resize=800%2C524&ssl=11R0A0624.jpg?resize=800%2C512&ssl=1

https://globaltamilnews.net/2026/229562/

வடக்கில் தேசிய மக்கள் சக்தி காலூன்றியது எப்படி? - ஆர்வத்துடன் செவிமடுத்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி

1 month 1 week ago

வடக்கில் தேசிய மக்கள் சக்தி காலூன்றியது எப்படி? - ஆர்வத்துடன் செவிமடுத்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி

22 Feb, 2026 | 02:45 PM

image

(நா.தனுஜா)

முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி வடக்கில் காலூன்றுவதற்கு வழிவகுத்த பின்னணிக் காரணங்கள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமி சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் ஆர்வமாகக் கேட்டறிந்துள்ளார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த வாரம் நாட்டுக்கு வருகைதந்திருந்த பிரித்தானிய பிரதி பிரதமர் டேவிட் லமிக்கும் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற சந்திப்பில் சிவில் சமூகத்தின் சார்பில் கலாநிதி அகிலன் கதிர்காமர், ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ரணிதா ஞானராஜா, சட்டத்தரணி கௌதமன், பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் நபீலா இக்பால் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின்போது 'தித்வா' சூறாவளியினால் ஏற்பட்ட தாக்கங்கள் மற்றும் அவற்றிலிருந்து நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முயற்சிகள், சிறுபான்மையின மக்களின் உரிமைகள், பயங்கரவாதத்தடைச்சட்டம் மற்றும் அதற்குப் பதிலீடாக முன்மொழியப்பட்டுள்ள புதிய வரைவு, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் இன்னமும் உறுதிப்படுத்தப்படாமை, மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதில் தொடரும் காலதாமதம், புதிய அரசியலமைப்பு உருவாக்க விவகாரத்தில் நிலவும் பின்னடைவு, முஸ்லிம் விவாக, விவகாரத்துச்சட்டம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

அதேவேளை முன்னெப்போதுமில்லாத வகையில் சிங்கள தேசிய கட்சிகளில் ஒன்றான தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களின்போது வடக்கில் காலூன்றுவதற்கு வழிகோலிய காரணிகள் குறித்து பிரித்தானிய பிரதி பிரதமருக்கு விளக்கமளிக்கப்பட்டது.

அதனை அவ்வப்போது கேள்விகள் எழுப்பி ஆர்வத்துடன் கேட்டறிந்த பிரதி பிரதமர் டேவிட் லமி, இம்மாற்றத்தின் வெவ்வேறு பரிமாணங்கள் தொடர்பிலும் கேட்டறிந்தார்.

https://www.virakesari.lk/article/239301

டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம்

1 month 1 week ago

டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் சுரேஷ் பிரேமசந்திரன் சந்தேகம்

22 Feb, 2026 | 12:51 PM

image

(நா.தனுஜா)

இந்திய விஜயத்தின்போது 13 ஆவது திருத்தம் குறித்தோ, அதிகாரப்பகிர்வு குறித்தோ பேசப்படவில்லை என தேசிய மக்கள் சக்தி கூறுவதில் எந்தளவுக்கு உண்மை இருக்கிறது என்று எமக்குத் தெரியாது. ஆனால் இந்தியாவின் வலியுறுத்தலுக்கு அப்பால் மாகாணசபைத்தேர்த்லை விரைந்து நடாத்தவேண்டிய கடப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது என ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

அண்மையில் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின்போது அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றிக் கருத்துரைத்த சுரேஷ் பிரேமசந்திரன், வழமையாக இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடனான சந்திப்புக்களின்போது அழுத்தமாகவும், அன்றேல் மேலோட்டமாகவேனும் இவ்விடயங்கள் குறித்து இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கும் நிலையில், இம்முறை இதுபற்றிப் பேசப்படவில்லை என அரசாங்கத்தின் பிரதிநிதிகள் கூறுவது எந்தளவுக்கு உண்மையாக இருக்கக்கூடும்? என சந்தேகம் வெளியிட்டார்.

அதேவேளை டில்வின் சில்வாவின் கருத்து தொடர்பில் இந்தியாவே பதிலளிக்கவேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் இவ்விடயத்தில் இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்தாலும், பிரயோகிக்காவிட்டாலும் மாகாணசபைத்தேர்தல்களை உடனடியாக நடாத்தவேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு இருப்பதாகவும், அதனை விரைந்து நிறைவேற்றவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

https://www.virakesari.lk/article/239282

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே "பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்" - சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர்

1 month 1 week ago

அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே "பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்" -  சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர்

Published By: Digital Desk 3

22 Feb, 2026 | 10:02 AM

image

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் சனிக்கிழமை (21) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடை சட்டத்திற்க்கு எதிராக மக்கள் போராடிய போதும் , அதனையும் மீறி அந்த சட்டத்தை அமுல் படுத்தினர். பின்னர் அந்த பயங்கரவாத தடை சட்டத்தால் தற்போது ஆட்சியில் உள்ளவர்களும் பல இன்னல்களை எதிர்கொண்டனர்.

பயங்கரவாதத்தை இல்லாதொழிப்போம் என வாக்குறுதி வழங்கி தற்போது ஆட்சி அமைத்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறி , தற்போது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை அமுல் படுத்த முயல்கின்றனர். இது மிகவும் பயங்கரமான சட்டமாக வரவுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் போது . பயங்கரவாத தடை சட்டத்தினால் தடுக்க முடியாது. அதற்கு அந்த சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் போதாமையால் உள்ளதால் தற்போது, பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக அந்த போராட்டங்களை கட்டுப்படுத்தவே புதிய சட்டமூலத்தை கொண்டு வருகின்றனர்.என மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/239264

இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

1 month 1 week ago

இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

Feb 22, 2026 - 12:28 PM

இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக  பட்டமளிப்பில் நெகிழ்ச்சி!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழாவில், வாழ்வகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர்.

மூன்றாம் நாளான நேற்று (21) நடைபெற்ற ஒன்பதாம் அமர்வில், வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி. சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர்.

இவர்களுள் துரைராசா அருண்குமார், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, 1S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமன்றி, வாழ்வக வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் ஏனைய மாணவர்களுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றுச் சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இன்றுவரை இவருக்கே உரித்தாகின்றது.

பார்வைத்திறனற்ற இந்த இரு மாணவர்களும், தமது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

-யாழ். நிருபர் பிரதீபன்-

https://adaderanatamil.lk/news/cmlxe43pw0003356pl60yv84b

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr