ஊர்ப்புதினம்

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி ; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு

1 month 2 weeks ago

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சி; அனைவரும் அணிதிரள வேண்டும் - விமல் வீரவன்ச அழைப்பு

13 Feb, 2026 | 09:33 AM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கையின் முழு கனிம வளங்களையும் ஆராய்தல், பகுப்பாய்தல், வெட்டியெடுத்தல் மற்றும் பிரித்தெடுத்தல் ஆகியவற்றை இந்திய மாநில நிறுவனங்களுக்கு வழங்குவதற்காக இரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் திருகோணமலைத் துறைமுகம் ஆகிய துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் இந்திய மயமாக்கலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்தார்.

கொழும்பில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையின் மேற்பரப்பு மற்றும் கடல் தளத்திலுள்ள அரிய கனிம வளங்களை வரைபடமாக்குதல், அடையாளம் காணுதல் மற்றும் வெட்டியெடுப்பதை இந்திய நிறுவனங்களுக்கு ஒப்படைக்க இந்த ஒப்பந்தம் திட்டமிட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், இரு அரசாங்கங்களின் ஒப்பந்தத்துடன் இந்திய நிறுவனங்களுக்கு கனிமமயமாக்கப்பட்ட பகுதிகளை ஒதுக்கவும், இந்திய பொது மற்றும் தனியார் துறைகளின் முதலீடுகளை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளது.

சிலோன் கிராஃபைட், நீல சபையர், புல்முடே கனிம மணல் (இல்மனைட்,ரூட்டைல், சிர்கான், மோனாசைட்), உயர் தர சிலிக்கா, ராக் பாஸ்பேட், டோலமைட் மற்றும் கடலுக்கு அடியில் உள்ள கோபால்ட் படிவுகள் போன்ற வளங்களை இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியா கையகப்படுத்தும் அபாயம் உள்ளது. இந்த வளங்கள் தொழில்நுட்பத் தொழில்களுக்கு அவசியமானவை. இந்த முடிவு நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது.

இந்தத் திட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவின் இந்திய விஜயம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்துவதில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

இலங்கையில் இந்திய மயமாக்கலுக்கு எதிராகப் போராடிய ஒரு கட்சியாக மக்கள் விடுதலை முன்னணி ஆரம்பத்தில் காணப்பட்டது. இந்த நடவடிக்கை துரோகமானது, மக்கள் ஒன்றுபட்டு அதற்கு எதிராகப் போராட வேண்டும்.

காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை துறைமுகங்களை இந்தியமயமாக்கும் முடிவுகள் மற்றும் மருந்து சந்தையை இந்திய மருந்துகளால் நிரப்ப ஏழு இரகசிய ஒப்பந்தங்கள் போன்ற இந்தியா தொடர்பான பிற திட்டங்களையும் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அரசாங்கத்தின் இந்த செயற்பாடுகளுக்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைய வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238529

உங்கள் கைப்பேசி தொலைந்தால் கட்டாயம் பொலிசில் முறைப்பாடு செய்யுங்கள்

1 month 2 weeks ago

உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

Feb 12, 2026 - 10:12 PM

உங்கள் கைப்பேசி தொலைந்துவிட்டதா? இதை கட்டாயம் கவனியுங்கள்

கையடக்க தொலைபேசிகள் தொலைந்தால் அல்லது திருடப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இலங்கை பொலிஸ் திணைக்களம் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொலிஸ் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

கையடக்க தொலைபேசிகள் காணாமல் போனமை தொடர்பில் தொடர்ச்சியாக அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பல முறைப்பாடுகள் கிடைத்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு காணாமல் போன அல்லது திருடப்பட்ட கையடக்க தொலைபேசிகளின் ஊடாக சிலர் சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுக்க கூடிய வாய்ப்புள்ளதால், அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அது தொடர்பான முழுமையான அறிக்கை கீழே இணைக்கப்பட்டுள்ளது,

PRM1.jpg

PRM2.jpg

PRM3.jpg

PRM4.jpg

https://docs.google.com/viewerng/viewer?url=https://ada-derana-tamil.s3.amazonaws.com/news-articles/cmljoqb6t000g356nmnsslyak/documents/%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95+%E0%AE%B5%E0%AF%8C%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81+2026.02.12.pdf

https://adaderanatamil.lk/news/cmljoqb6t000g356nmnsslyak

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர்

1 month 2 weeks ago

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க விரும்பவில்லை - பிரதமர்

13 Feb, 2026 | 09:25 AM

image

(இராஜதுரை ஹஷான்)

எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பெலியத்த றுஹூணு விஜயபா தேசிய பாடசாலைக்கு வியாழக்கிழமை (13) விஜயம் செய்த பிரதமர், முதலாம் தரத்துக்கான புதிய கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

புதிய கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகளை சிறந்த முறையில் மேற்கொண்டுள்ளோம்.தரம் ஒன்றுக்கான கல்வி மறுசீரமைப்பு தற்போது நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அந்நடவடிக்கைகள் தொடர்பில் பாடசாலையின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்.

இலவச கல்வி தற்போதைய தொழிற்றுறைக்கு பொறுத்தமான வகையில் மறுசீரமைக்கப்படும். தொழில்நுட்ப ரீதியில் ஏற்பட்ட குறைகள் தற்போது திருத்தப்படுகிறது.

எதிர்கட்சியினர் முன்வைக்கும் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க போவதில்லை. புதிய கல்வி மறுசீரமைப்பு சிறந்த முறையில் அமுல்படுத்தப்படும்.

அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் முன்னேற்றம் எதிர்க்கட்சியினரின் தக்க பதிலாக அமையும். விமர்சித்துக் கொண்டிருப்பவர்கள் அதனையாவது சிறந்த முறையில் செய்யட்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/238528

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க

1 month 2 weeks ago

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள் சாத்தியவள அறிக்கை கிடைத்தால் அடுத்தாண்டு நிதி ஒதுகீடு - அமைச்சர் விமல் ரத்நாயக்க

12 Feb, 2026 | 02:56 PM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டை ஆகியபகுதிகளை இணைக்கும் இணைப்புப்பாலத்தை அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டுமென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் வலியுறுத்தியுள்ளார்.

கொக்கிளாய் பாலத்தை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை எதிர்வரும் மேமாதத்திற்குள் துறைசார்ந்தவர்கள் கையளித்தால் எதிர்வரும் 2027ஆம் ஆண்டிக்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப் பாலத்தை அமைப்பதற்கு தம்மால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகரஅபிவிருத்தி அமைச்சர் விமல் ரத்நாயக்க பதிலளித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில்நேற்று புதன்கிழமை 11 இடம்பெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,

எமது கோரிக்கையை ஏற்று வட்டுவாகல் பாலத்தினை அமைப்பதற்கு முன்வந்தமைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துகொள்கின்றேன்.

அதேபோல் கொக்கிளாய் - புல்மோட்டை்இணைப்புப் பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுகொள்கின்றேன்.

ஏற்கனவே கடந்த 13.08.2025 அன்று இடம்பெற்ற ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் குறித்த கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலத்தை அமைக்குமாறு கோரிக்கை முன்வைத்திருந்தேன்.

அதற்கமைய 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு சாத்திய வள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

எனவே சாத்தியவள ஆய்வுகளைத் தொடர்ந்து இந்த பாலத்தினை அமைப்பதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென துறைசார்ந்த அமைச்சர் என்ற வகையில் தங்களிடம் கோரிக்கையை முன்வைக்கின்றேன். என அமைச்சர் விமல் ரத்நாயக்கவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் குறித்த பாலத்தினை அமைப்பதற்கான சாத்தியவள அறிக்கையினை துறைசார்ந்தவர்கள் சமர்ப்பித்தால் 2027ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்டத்தில் குறித்த பாலத்தை அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென அமைச்சர் விமல் ரத்நாயக்க இதன்போது பதிலளித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் மேமாதத்திற்குள் தம்மால் கொக்கிளாய் - புல்மோட்டை இணைப்புப்பாலம் அமைப்பதற்குரியாசாத்தியவள அறிக்கை சமர்ப்பிக்கப்படுமென இதன்போது வீதி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளால் கருத்துத் தெரிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20260212-WA0001.jpg

IMG-20260212-WA0000.jpg

IMG-20260211-WA0059.jpg

https://www.virakesari.lk/article/238481

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

1 month 2 weeks ago

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

Feb 12, 2026 - 06:15 PM

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் விசாரணைக்கு தனி நீதிமன்றம்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கை விசாரணை செய்வதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்று நிறுவப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, அதன் விசாரணை நடவடிக்கைகள் கொழும்பு 07, பௌத்தாலோக்க மாவத்தையில் அமைந்துள்ள இலக்கம் C 76 எனும் முன்னாள் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தினுள் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்குத் தேவையான வசதிகளை வழங்குவதை விரைவுபடுத்துமாறு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார இன்று (12) அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களில் நீதிமன்றங்களை நிறுவும் பணிகளை இன்று (12) நேரில் கண்காணித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேபோல், முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்டு, தற்போது நீதிமன்றங்களை நிறுவுவதற்காகப் பொறுப்பேற்கப்பட்ட ஏனைய வாசஸ்தலங்களிலும் நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக வழங்குமாறு அவர் குறிப்பிட்டார்.

ஊழல் எதிர்ப்புச் செயல் திட்டத்தின் (2025-2029) கீழ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள பணிகளைச் செயற்படுத்தி, வழக்குக் காரியங்களை விரைவுபடுத்துவதற்காக முன்னாள் அமைச்சர்களினால் பயன்படுத்தப்பட்ட நான்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலங்கள் தற்காலிக அடிப்படையில் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இலக்கம் B/88, கிரகரி வீதி, கொழும்பு 07, இலக்கம் C-76, பௌத்தாலோக்க மாவத்தை, கொழும்பு 07, இலக்கம் B-108, விஜேராம வீதி, கொழும்பு 07 மற்றும் இலக்கம் B-12, ஸ்டேன்மோர் கிரசன்ட் ஆகிய முகவரிகளில் உள்ள 4 வீடுகள் நீதி அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmljgb3bx0007356n6zh1ws40

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

1 month 2 weeks ago

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

Feb 12, 2026 - 01:04 PM

கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு அவசர அறிவிப்பு: சேவைகள் இடைநிறுத்தம்!

கடவுச்சீட்டு விநியோகிக்கும் சேவைகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கணினி அமைப்பு மீண்டும் வழமைக்குத் திரும்பியவுடன் இந்தச் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது கணினி அமைப்பை மீண்டும் சீர்செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmlj576880005356nzo74yx4g

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

1 month 2 weeks ago

வடக்கு தெற்கு பிரிவினைக்கு எக்காலத்திலும் இடமளியோம்; யாழில் மேலதிக படையினரை விலக்குவோம்

bimal.jpg

வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

ஆவரங்கால் தொண்டைமானாறு வீதியை புனரமைக்கும் வேலைத் திட்டத்தை நேற்று புதன்கிழமை அச்சுவேலியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் மாவட்டத்திற்கு வீதி அபிவிருத்திக்காக 425 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையினுடைய கிராமிய வீதிகளை புனரமைக்கும் திட்டத்தில் ஆவரங்கால் தொண்டைமானாறு வீதிக்கே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாம் மக்கள் பிரச்சனைகளை விளங்கி கொள்ளும் எப்படியான அரசாங்கம் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். நாட்டு மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கினோம்.ஊழல்களை அழித்தொழிப்போம் எனத் தெரிவித்தோம். ஊழல் தர சுட்டெண்ணில் நாடு முன்னேறியுள்ளது.ஜனாதிபதி முதல் பிரதேச சபை உறுப்பினர்கள் வரை ஒரு ரூபா பணத்தையும் ஊழல் செய்வதில்லை.

வடக்கு மாகாண சபையில் விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்தபோது இரண்டு பேரை விலக்கியிருந்தார். அதற்கு காரணம் உங்களுக்குத் தெரியும் தானே? ஊழலை நாம் ஒழிப்போம்.

வாகனம், பாதுகாப்பு என்பதை எடுப்பதில்லை எனத் தீர்மானித்தோம். இங்கு எமக்கு போக்குவரத்து பொலிஸார் மட்டும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சஜித் பிரேமதாஸவுக்கு இதை விட பாதுகாப்பு வழங்கப்படும். சுமந்திரனுக்கும் பாதுகாப்பு உள்ளது.

ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது தேவையானளவு மக்களை சந்தித்தார். அரசாங்கத்தினால் அளிக்கப்படும் வரப்பிரசாதத்தை முடிந்தவரை எடுப்பதில்லை.

முப்பது வருட யுத்தம் மாத்திரம் பிரச்சினை இல்லை நூறு வருட வீதியும் பிரச்சினை தான்.

பாதுகாப்பு தரப்பினருடன் கலந்துரையாடி பாதுகாப்பு படையினரை திரும்ப பெற்றோம். மக்களின் காணிகளை மீள கையளித்து கொண்டு வருகிறோம். சில காணிகளை விடுவிப்பதில் சிக்கல் உள்ளது. சில காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாதுள்ளது.

இடத்தை கையளிக்க தயார் என்றாலும் வேலி அடைக்க பணம் இல்லை என்கிறார்கள்.

பாதுகாப்புக்கு மேலதிகமான படையினரை விலக்குவோம்.வடக்கு தெற்கு பிரிவினையை எக்காலத்திலும் ஏற்படுத்த இடமளியோம்.

நல்ல விடயம் மக்களை சென்றடையாத விதத்தில் அதனை விமர்சனத்துக்கு உள்ளாக்குகின்றனர். அதற்கு சிறந்த உதாரணம் கல்வி மறுசீரமைப்பு திருத்தம். தேசிய மக்கள் சக்தி அனைவரும் படித்தவர்கள். ஆனால் சஜித் பிரேமதாச, நாமல் ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து கல்வி மறுசீரமைப்பில் ஏற்பட்ட சிறு பிழையை காரணம் காட்டி பெரிய போராட்டத்திற்கு தயாரானார்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் கல்வி மறுசீரமைப்பு கோஷங்களுடன் இணைந்து கொண்டனர் – என்றார்.


https://akkinikkunchu.com/359632/

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

1 month 2 weeks ago

arrested.jpg?resize=724%2C375&ssl=1

ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது!

போதைப்பொருள் பயன்படுத்தி தனியார் பயணிகள் பேருந்துகளில் கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் மற்றும் பிலியந்தலை நகரின் ஊடாக பயணிக்கும் தனியார் பேருந்துகளின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருள் அருந்தியுள்ளனரா என பரிசோதிக்கப்பட்ட பின்னர் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த பரிசோதனைகள் பிலியந்தலை பிரதான பேருந்து நிலையத்தில் வைத்து, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகத்தின் விசேட பேருந்து ஒன்றின் உள்ளே மேற்கொள்ளப்பட்டன. இதன்போது 170 பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நுகேகொடை தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவகம் மற்றும் பிலியந்தலை பொலிஸார் இணைந்து சுமார் ஐந்து மணித்தியாலங்களுக்கு அண்மித்த காலம் இந்த பரிசோதனையை முன்னெடுத்துள்ளனர்.

வழி இலக்கம் 120 (கெஸ்பேவ – புறக்கோட்டை), வழி இலக்கம் 255 (கல்கிஸ்ஸ – கொட்டாவை), வழி இலக்கம் 162 (பிலியந்தலை – பண்டாரகம), வழி இலக்கம் 341 (பிலியந்தலை – மஹரகம), வழி இலக்கம் 341/2 (கரதியன ஊடாக – மஹரகம), வழி இலக்கம் 342 (பிலியந்தலை – கொட்டாவை), வழி இலக்கம் 157 (கஹபொல – பிலியந்தலை) மற்றும் வழி இலக்கம் 157/1 (பிலியந்தலை – மாகந்தன) ஆகிய மார்க்கங்களின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இவ்வாறு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.

பிலியந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2026/1464464

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

1 month 2 weeks ago

தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தல் - சந்திரிகா

11 Feb, 2026 | 07:01 PM

image

(எம்.மனோசித்ரா)

இலங்கையின் தொழில்முறை அரச சேவை சீரழிந்து வருகின்றமை கவலையளிக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நீதி மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட ஆட்சிமுறை ஆகியவை நாட்டின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :

இணையதளமொன்றில் வெளியிடப்பட்டுள்ள 'நீதி எப்போது தேர்ந்தெடுக்கப்பட்டதாக மாறுகிறது' என்ற சிறந்த கட்டுரையின் பகுதிகளைப் பகிர நான் முடிவு செய்தேன். ஏனெனில், இது இலங்கை அரசின் அடித்தளத்தையே ஆழமாகப் பாதிக்கும் ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசுகிறது.

மிகவும் சிந்தனைமிக்க மற்றும் புத்திசாலித்தனமாக எழுதப்பட்ட இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துக்களுடன் நான் எவ்வித தயக்கமும் இன்றி உடன்படுகிறேன். நான் சமன் ஏக்கநாயக்கவை அறிவேன், அவருடன் பணியாற்றியும் உள்ளேன். அவர் மிகவும் நேர்மையான, உயர்மட்டத் தொழில்முறைத் தகுதியுள்ள ஓர் அரச அதிகாரி ஆவார்.

தொழில்முறை, திறமையான மற்றும் நேர்மையான அரச சேவை இல்லாமல் ஒரு அரசாங்கம் இயங்க முடியாது. அரசியல் தலைவர்களுக்கு நீண்ட கால அனுபவமும் தொழில்முறைத் தகுதியும் இருக்க வேண்டிய அவசியமில்லை, ஆனால் அவர்களிடம் அசைக்க முடியாத நேர்மை இருக்க வேண்டும். ஒரு இயங்கும் ஜனநாயகத்தில், நாட்டை ஆட்சி செய்வதற்கு அரசியல் தலைவர்கள் ஒரு தொழில்முறை அரச சேவையையே சார்ந்திருக்கிறார்கள்.

தற்போதைய அரசாங்கம் எஞ்சியிருக்கும் நமது அரச சேவையைச் சிதைத்துவிட்டு, அதற்குப் பதிலாகக் குறைந்த தகுதியும் அனுபவமும் கொண்ட கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் நியமிப்பதில் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது. நிர்வாகம் எவ்வளவு மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதை இலங்கை மக்கள் உணர்ந்ததால்தான் 'அரகலய' போராட்டமே உருவானது. நமது மக்களிடையே அரசியல் விழிப்புணர்வு அதிகமாக உள்ளது.

இரண்டு தசாப்தகால மோசமான ஆட்சியினால் ஏற்பட்ட அழிவுகளால் நமது நாடு நிலைகுலைந்து போயுள்ளது. தற்போதைய ஆட்சி முறை மாற்றப்படாவிட்டால், அது நாட்டை முழுமையான குழப்பத்திற்குள்ளேயே தள்ளும். இதற்கான தீர்வு மக்களிடமே உள்ளது என்ற கருத்தை நான் முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன். மக்கள் கேள்வி எழுப்ப வேண்டும், அதன் பாரதூரமான விளைவுகளைப் புரிந்துகொள்ள வேண்டும், மேலும் நமது உன்னதமான தேசத்தை எவ்வாறு மீண்டும் கட்டியெழுப்புவது என்பதை ஜனநாயக ரீதியாகத் தீர்மானிக்க வேண்டும்.

https://www.virakesari.lk/article/238423

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

1 month 2 weeks ago

இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை - அரசாங்கம் அறிவிப்பு

11 Feb, 2026 | 03:22 PM

image

(எம்.மனோசித்ரா)

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் நிலவும் சட்டச் சிக்கல்கள் மற்றும் எல்லை நிர்ணயப் பணிகள் காரணமாக, இந்த ஆண்டுக்குள் தேர்தலை நடத்த வாய்ப்பில்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது. தமக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இருந்தபோதிலும், தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது என்றும் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்தாலோசித்த பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இந்தியா சென்றுள்ள நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு மாகாணசபைத் தேர்தல் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.

இது தொடர்பில் வினவிய போது பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்தியாரத்ன இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் தற்போது தடைகள் காணப்படுகின்றன. மாகாணசபை தொடர்பான சட்டம் இன்னும் முழுமையாக தயாரிக்கப்படவில்லை. அத்தோடு பழைய தேர்தல் முறைமை தற்போது நீக்கப்பட்டுள்ளது. புதிதாக தொகுதிவாரி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அதில் எல்லை நிர்ணயம் இல்லை.

தொகுதிகள் பிரிக்கப்படவில்லை. அவ்வாறெனில் புதிதாக எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு சட்டத்தை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறில்லை என்றால் இதனை மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அதனை நீக்கி, பழைய சட்டத்தை மீண்டும் நிறைவேற்ற வேண்டும். இதனை எமக்கு பெரும்பான்மை இருக்கிறது என்பதற்காக எமது தேவைக்கேற்ப செய்ய முடியாது.

இது தொடர்பில் எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்தாலோசிக்க வேண்டியுள்ளது. மக்களின் நிலைப்பாடுகளைக் கோர வேண்டியுள்ளது. இவை அனைத்தையும் குறுகிய காலத்துக்குள் நிறைவு செய்ய முடியாது. அந்த வகையில் இவ்வாண்டுக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும் என்று நான் நம்பவில்லை என்றார்.

https://www.virakesari.lk/article/238391

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை

1 month 2 weeks ago

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் : நீதி அமைச்சர் ஐரோப்பிய பிரதிநிதிகளிடம் எடுத்துரைத்ததாக அறிக்கை

11 Feb, 2026 | 06:43 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம் எடுத்துறைத்துள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார மற்றும் ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பொன்று செவ்வாய்க்கிழமை (10) மாலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சில் இடம்பெற்றது.

இந்த கலந்துரையாடலின்போது புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இந்த சட்டமூலத்துக்காக பொது மக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை எதிர்வரும் 28ஆம் திகதிவரை தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைக்க முடியும் என்பதுடன் அவ்வாறு அனுப்பப்படும் கருத்துக்கள் மற்றும் யோசனைகள் தொடர்பில் சாதகமான முறையில் ஆராய்ந்து பார்த்த பின்னர், புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஐராேப்பிய சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது அமைச்சர் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலுக்கும் ஐராேப்பிய வெளிக்கள செயற்பாட்டு சேவையின் ஆசிய மற்றும் பசுபிக் வலயத்துக்கான பதில் முகாமைத்துவ பணிப்பாளர் பாவோலா பம்பலாேனி, இலங்கைக்கான ஐராேப்பிய ஒன்றியத்தின் தூதுவர் காமென் மொரேனோ, ஐராேப்பிய ஆணைக்குழுவின் அபிவிருத்தி மேம்பாட்டு ஒத்துழைப்பு தொடர்பான செயற்பாட்டு குழுவின் பணிப்பாளர் நாயகம் மற்றும் மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, தென்னாசியா போன்ற துறைகளில் பதில் பிரதானி ஜேன் ஹொஸ்கின்ஸ், கொழும்பு ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ குழுவின் அரசியல் துறை தலைவர் பிரதிநிதிகளின் பிரதித் தலைவர் கலிஜா அகிசேவா ஆகியோரும்

ஐரோப்பிய வெளிக்கள நடவடிக்கை சேவையின் ASIAPAC.6 பிரிவின் இலங்கைக்கான அதிகாரி ஏன் வென்ஹவுட், ஐராேப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவின் கொழும்பு மேம்பாட்டு தலைவர் ஜொஹான் ஹெசே, ஐராேப்பிய ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயக அதிகாரி பீடர்ஸ் தியடோர் மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/238422

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

1 month 2 weeks ago

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

Feb 12, 2026 - 07:48 AM

வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு: கடற்படை ஈட்டியுள்ள பாரிய வருமானம்!

வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் மூலம் 4 மாதங்களுக்குள் 6 இலட்சம் அமெரிக்க டொலர்களுக்கு அண்மித்த அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த நடவடிக்கைகளை ஆரம்பித்த கடந்த வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதி முதல் நான்கு மாதங்களுக்குள் 598,250 அமெரிக்க டொலர் அந்நியச் செலாவணியை ஈட்டியுள்ளதாக பணிப்பாளர் நாயகம் (செயற்பாடுகள்) ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா தெரிவித்தார்.

இலங்கை கடற்படையானது வெளிநாட்டுத் தனியார் கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டு, வர்த்தகக் கப்பல் பாதுகாப்புக் குழுக்களுக்கு வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தது.

குறித்த நடவடிக்கைகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ரியர் அட்மிரல் ஹர்ஷ த சில்வா இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmlitscqb0003356nw9h8gvla

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்

1 month 2 weeks ago

குமாரபுரம் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம்..!

11 Feb, 2026 | 05:18 PM

image

மூதூர், கிளிவெட்டி - குமாரபுரம் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவுதினம் புதன்கிழமை (11) குமாரபுரம் கிராமத்தில் நினைவுகூரப்பட்டது பாதிக்கப்பட்ட மக்கள் நீதி கோரி நினைவு தினத்தை அனுஷ்டித்தனர் .

நினைவு நிகழ்வில் சிவில் சமூகப்பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொது மக்கள், பிரதேச அரசியல் வாதிகள் உட்பட பலர் கலந்து கொண்டு ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டனர்.

இக் கொடூர சம்பவத்தில் 26 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் பலர் காயமடைந்திருந்தார்கள்.

குறித்த படுகொலைச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு 30 ஆண்டுகள் கடந்தும் நீதி கிடைக்காத நிலையில் அதற்கான நீதியைக் கோரி குறித்த படுகொலையின் 30வது நினைவேந்தல் நிகழ்வை பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து முன்னெடுத்தனர்.

குறித்த பாதிப்பில் இருந்து மீளாத மக்கள் பொருளாதார ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டநிலையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 1996ம் ஆண்டு மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் தெகிவத்தை இராணுவ முகாமில் சேவையில் இருந்த 8 இராணுவ வீரர்கள் சாட்சியாளர்களினால் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றவியல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அன்றைய யுத்த சூழ்நிலையை கருத்தில் கொண்டு எதிரிகளின் வேண்டுகோளுக்கு அமைய சட்ட மா அதிபரின் ஆலோசனையின் பேரில் பாதுகாப்பு கருதி குறித்த வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் (பிணையில் இருந்தபோது இருவர் இறந்துவிட்டனர்) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

IMG-20260211-WA0166.jpg

IMG-20260211-WA0168.jpg

IMG-20260211-WA0173.jpg

https://www.virakesari.lk/article/238418

“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல்

1 month 2 weeks ago

“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” - நாமல்

11 Feb, 2026 | 03:30 PM

image

“நான் ஒரு சிங்கள பௌத்தன்; அதே நேரத்தில் பிற மதங்களையும் கலாசாரங்களையும் பாதுகாக்கிறேன்” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்தார்.

தான் ஒரு பௌத்தர் என்பதையும், பௌத்த தர்மம், பௌத்த சாசனம் மற்றும் மகா சங்கத்தை பாதுகாப்பது இனவாதம் அல்ல என்றும் அவர் கூறினார்.

“இந்த நாட்டில் பெரும்பான்மை பௌத்த மக்கள் வாழ்கிறார்கள். நாங்கள் சிங்கள பௌத்தர்கள். அதனால் பௌத்த தர்மத்திற்காகவும், பௌத்த கலாசாரத்திற்காகவும் நிற்பது தவறு அல்ல. அதே நேரத்தில், இந்த நாட்டில் உள்ள அனைத்து மதங்களையும், அனைத்து கலாசாரங்களையும் பாதுகாக்க நாங்கள் நம்பிக்கையுடன் செயல்படுகிறோம்” என அவர் வலியுறுத்தினார்.

இந்த நாடு பௌத்த அடித்தளத்தின் மீது கட்டமைக்கப்பட்ட நாடாக இருந்தாலும், அதுவே அனைத்து மதங்களுக்கும் பாதுகாப்பளிக்கும் திறன் கொண்டது என்றும், அதனால் தனக்கு எந்த பயமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

“நான் சிங்களன், நான் பௌத்தன். அதே சமயம், பிற மொழிகள், மதங்கள், கலாசாரங்களையும் பாதுகாக்க நான் செயல்படுகிறேன். ஒருவர் தன் மதத்தையும் கலாசாரத்தையும் நம்பினால்தான் மற்றவர்களின் கலாசாரத்தையும் பாதுகாக்க முடியும்” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,

“தன் அடையாளம், தன் நாடு, தன் இனம், தன் மதம் ஆகியவற்றை மறந்து முன்னேற முடியும் என்று யாராவது நினைத்தால், அவருக்கு உண்மையான அடையாளம் இருக்காது. முதலில் ‘நான் யார்’ என்பதை ஏற்றுக்கொண்டு, அதில் நம்பிக்கை கொண்டால்தான் மற்றவர்களை பாதுகாக்க முடியும். தன் மதத்தை தைரியமாக வெளிப்படுத்தும் மனஉறுதி இல்லாதவர், பிற மதங்களை ஒருபோதும் பாதுகாக்க மாட்டார்” என்றார்.

தன்னை பௌத்தர்களுக்காகவும், நாட்டுக்காகவும் குரல் கொடுப்பதை இனவாதமாக கூறுவது தவறு என்றும், தான் இனவாதி அல்ல என்றும் நாமல் ராஜபக்ஷ தெளிவுபடுத்தினார்.

அரசாங்கத்தை விமர்சித்த அவர்,

“தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும். என்னை சிறையில் அடைத்து தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா, அல்லது வெளியே வைத்துக்கொண்டு தேர்தலுக்கு செல்லப் போகிறார்களா என்பதையும் அவர்கள் முடிவு செய்ய வேண்டும். இந்த இரண்டுக்கிடையில் குழப்பத்தில் இருந்து என்னை குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை. எது நடந்தாலும் எனக்கு அது ஒன்றுதான்” என்றார்.

மக்கள் நாட்டின் எதிர்காலம் மற்றும் அவர்களின் தேவைகள் அடிப்படையில் தீர்மானம் எடுப்பார்கள்; JVPயின் தேவைகளின் அடிப்படையில் அல்ல என்றும் அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.

எரிபொருள் விலை உயர்வு, வாழ்வாதார செலவுகள் அதிகரிப்பு, கடலில் மீனவர்களுக்கு எதிரான தாக்குதல்கள், உர மானியம் வழங்கப்படாமை, இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படாமை ஆகியவற்றை அவர் சுட்டிக்காட்டினார்.

சுகாதார அமைச்சரை விமர்சித்த அவர்,

“டிக் டொக் பார்க்கும் வேலையை நிறுத்தி, மருத்துவர்களின் பிரச்சினைகளையும் மருந்து பற்றாக்குறையையும் கவனிக்க வேண்டும். நோயாளிகள் பெரும் அவலத்தில் உள்ளனர். சமூக ஊடகங்களில் நேரம் கழிப்பதைவிட சுகாதாரத் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

இறுதியாக, “இந்த நாட்டில் உண்மையான தலைவர்களின் பற்றாக்குறை உள்ளது. வரவிருக்கும் தேர்தல்களுக்கு அனைவரும் தயாராக வேண்டும். இறுதியில் மக்கள் நல்ல தலைவரைத் தேர்ந்தெடுப்பார்கள். இல்லையெனில், தலைமை இல்லாத பொம்மை அரசியல் உருவாகும் அபாயம் உள்ளது” என நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/238393

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

1 month 2 weeks ago

நானுஓயாவில் தோட்டத் தொழிலாளர்களைச் சந்தித்தார் ஜனாதிபதி அநுர; போதைப்பொருள் ஒழிப்புத் திட்டமும் இன்று ஆரம்பம்!

11 Feb, 2026 | 01:43 PM

image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று புதன்கிழமை (11) காலை நானு ஓயா – ரதல்ல வீதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்துச் சிநேகபூர்வமாகக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பின் போது தொழிலாளர்கள் ஜனாதிபதியை உற்சாகமாக வரவேற்றதுடன், தமது நாளாந்தச் சம்பளத்தை அதிகரித்து வழங்கியமைக்காகத் தமது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த தொழிலாளர்கள், " ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது சம்பளத்தை அதிகரித்தது மட்டுமன்றி, தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆராய்வதற்காக தங்களை நேரில் சந்தித்த ஒரே அரச தலைவரும் ஆவார் ” எனத் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நாட்டிலிருந்து சட்டவிரோத போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “ஒரே தேசமாக ஒன்றிணைவோம்” தேசியப் பிரசாரத்தின் மத்திய மாகாணத்திற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி இன்று நுவரெலியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

மலையகச் சமூகம் எதிர்கொள்ளும் பாரிய சமூகப் பிரச்சினையாகக் கருதப்படும் போதைப்பொருள் அச்சுறுத்தலிலிருந்து மக்களை விடுவிப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய விரிவான விழிப்புணர்வு மற்றும் சமூக-பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள் ஊடாக இந்த இலக்கை அடைய ஜனாதிபதி ஊடகப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், நுவரெலியாவில் நடைபெறும் இந்த நிகழ்வின் போது, போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்காற்றிய 62 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குக் கௌரவம் வழங்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

629479572_1474736024655673_9415172027934

631239899_1474735997989009_5535941705644

631501697_1474736091322333_1036760978331

633797485_1474736177988991_5710021188484

https://www.virakesari.lk/article/238378

பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர்

1 month 2 weeks ago

பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்தார் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளர்

11 Feb, 2026 | 02:46 PM

image

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) இலங்கைக்கான புதிய வதிவிடப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள Shannon Cowlin தலைமையிலான பிரதிநிதிகள் குழுவினர், திங்கட்கிழமை (10) பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவைச் சந்தித்தனர்.

பிரதிநிதிகள் குழுவினரை வரவேற்ற பிரதமர், புதிய பணிப்பாளருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நீண்டகாலமாக நிலவிவரும் கூட்டுறவை நினைவுகூர்ந்தார்.

அத்துடன், இலங்கையின் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கி காட்டிவரும் தொடர்ச்சியான ஈடுபாட்டிற்கும், வழங்கிவரும் ஒத்துழைப்பிற்கும் பிரதமர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

'டிட்வா' சூறாவளியைத் தொடர்ந்து ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கிய காலத்திற்கேற்ற உதவிகளுக்காகத் தனது நன்றிகளைத் தெரிவித்த பிரதமர், இயற்கை அனர்த்தங்களின் உடனடிப் பாதிப்புகளைக் குறைப்பதில் இத்தகைய உதவிகள் மிக முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

சூறாவளிக்குப் பின்னரான மீட்சிப் பணிகளின் போது, குறிப்பாக நாட்டை கட்டியெழுப்புதல் மற்றும் புனரமைப்பு முயற்சிகளில் இலங்கைக்கு மேலும் உதவத் தயாராக இருப்பதை ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், கல்வித் துறைக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பையும் இதன்போது வெளிப்படுத்தியது.

இந்நிகழ்வில் தெற்காசிய திணைக்களத்தின் (SARD) பதில் பணிப்பாளர் நாயகம் செல்வி சோனா ஸ்ரேஸ்தா (Ms. Sona Shrestha), ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான வதிவிடத் தூதுக்குழுவின் செயற்பாட்டுத் தலைவர் சோல்பொன் மம்பெடோவா (Ms. Cholpon Mambetova), பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்  சமந்த பண்டார, வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஆசிய அபிவிருத்தி வங்கிப் பிரிவின் பணிப்பாளர்  ரஞ்சித் குருசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர். 

WhatsApp_Image_2026-02-11_at_12.10.35_PM

WhatsApp_Image_2026-02-11_at_12.10.35_PM

WhatsApp_Image_2026-02-11_at_12.10.34_PM

https://www.virakesari.lk/article/238385

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

1 month 2 weeks ago

New-Project-6-5.jpg?resize=750%2C375&ssl

முன்னாள் எம்.பி. அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கின் தீர்ப்பு இன்று!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல, அவரது பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் மற்றும் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இன்று (11) கம்பஹா மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த சம்பவம் 2022 மே 9 அன்று நிட்டம்புவ பகுதியில் நடந்தது.

அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அதுகோரல மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரி இருவரும் ஒரு கும்பல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய பல சந்தேக நபர்கள் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையைத் தொடர்ந்து, கொலைகள் தொடர்பாக 42 நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் கம்பஹா உயர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு ஜனவரி 14 ஆம் திகதி வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. 

இருப்பினும், வழக்கை மீளாய்வு செய்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பை இன்று வரை ஒத்திவைக்க முடிவு செய்தது.

https://athavannews.com/2026/1464258

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

1 month 2 weeks ago

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் இல்லை ; இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் - அரசாங்கம்

10 Feb, 2026 | 04:56 PM

image

(எம்.மனோசித்ரா)

கிவுல் ஓயா திட்டத்தின் கீழ் எந்தவொரு இனவாத நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினையின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, 6 மடங்கு செலவு அதிகரிப்பில் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. எனவே இதனை அரசியல் மயப்படுத்த வேண்டாம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்ட மக்களின் நீர் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவதற்காகவும் குறிப்பாக விவசாய நடவடிக்கைகளுக்கு நீர்ப்பாசனத்தை வழங்குவதற்கானதுமான அத்தியாவசிய வேலைத்திட்டமாகவே இந்த கிவுல் ஓயா திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால் இது எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் அல்ல.

2011ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அப்போதைய அமைச்சரவை குறித்த கிவுல் ஓயா அபிவிருத்தி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்துக்கு வந்தது.

இதற்காக அக்காலப்பகுதியில் 4170 மில்லியன் ரூபா செலவு மதிப்பிடப்பட்டிருந்தது. இது மகாவலி எல் வலயத்துக்குள்ளேயே காணப்படுகிறது. 4 ஆண்டுகளுக்குள் இத்திட்டத்தை நிறைவு செய்வதற்கும் திட்டமிடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அந்த திட்டம் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. கொவிட் தொற்று மற்றும் அதன் பின்னரான பொருளாதார நெருக்கடிகள் உள்ளிட்ட காரணிகளால் இந்த திட்டம் இடைநடுவில் கைவிடப்பட்டது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் அத்தியாவசியமானது என இனங்காணப்பட்ட வேலைத்திட்டத்தை, தற்போது நடைமுறைப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அதற்கமைய தேசிய நிதியத்தின் ஊடாக 2026 - 2031ஆம் ஆண்டு வரை இந்த திட்டத்தை முன்னெடுத்து அதனை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளோம். எவ்வாறிருப்பினும் அன்று 4170 மில்லியன் ரூபா செலவில் இதனை நிறைவு செய்ய முடியும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், தற்போது அது 23 456 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது. ஆரம்பிக்கப்பட்ட போது மதிப்பிடப்பட்ட தொகையை விட 6 மடங்கு செலவு அதிகரித்துள்ளது.

இதற்காக சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இனத்தை அடிப்படையாகக் கொண்டு எவருக்கும் நீர் வழங்கப்படுவதில்லை. எனவே இதனை அரசியல் மயமாக்கி வாக்குகளை அதிகரித்துக் கொள்வதற்காகப் பயன்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றோம். இந்த திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கத்துக்கு வேறு எந்த நோக்கமும் கிடையாது என்றார்.

https://www.virakesari.lk/article/238334

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

1 month 2 weeks ago

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

Feb 11, 2026 - 09:36 AM

பாதைகள் திறக்கப்படாமல் இருப்பதற்கு பாதுகாப்பு காரணங்களாக உள்ளன!

மன்னார் மாவட்ட போக்குவரத்து நெடுஞ்சாலை மற்றும் உள்ளூராட்சி அபிவிருத்தி விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் நேற்று (10) மாலை மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஒருங்கமைப்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், சத்தியலிங்கம், ரவிகரன், ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

மேலும் அமைச்சின் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். 

இதன்போது மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி ஆகிய ஐந்து உள்ளூராட்சி மன்ற பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அபிவிருத்தி பணிகள் உள்ளிட்ட பல்வேறு விடைங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. 

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் வீதிகள் புனர் நிர்மாண வேலைகள், போக்குவரத்து, நகர அபிவிருத்தி மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடுகள் தொடர்பான விடயங்கள் உரிய திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டன. 

மேலும் மன்னாரில் இருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள இளவன் குளம் ஊடாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியை திறந்து மக்களின் பாவனைக்கு விடுமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. 

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, 

மன்னார் மாவட்டத்தில், போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சுடன் தொடர்புடைய ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. 

எதிர்வரும் காலத்தில், இந்த போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு கூட்டம் குறைந்தது ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறையாவது தொடர்ந்து கூடும் என நாங்கள் பெரும் நம்பிக்கை கொள்கிறோம். 

ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச செயலாளர்கள் பிரதேச சபைத் தலைவர்கள், நகர சபைத் தலைவர் இடைக்கால நிர்வாகக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தார்கள். எமது அமைச்சரவை சார்ந்த பிரச்சினைகள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. 

இதன்மூலம், ஒரு அளவிற்கு தீர்வுகளைப் பெற முடிந்ததாக நாங்கள் கருதுகிறோம். 

இந்த அரசியல் தலைவர்களும், நிர்வாக தலைவர்களும் திட்டமிட்டுள்ள வகையில் இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம். 

அத்துடன் மன்னாரில் இருந்து புத்தளம் செல்வதற்கான வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். 

சில பாதைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இதுவரை திறக்கப்படாமல் இருப்பதற்கு சுற்றுச்சூழல் மற்றும் தொல்லியல் பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. இந்தப் பாதைகள் திறக்கப்படாததால் மன்னார் மாவட்ட மக்களுக்கு பெரும் அசௌகரியம் ஏற்பட்டுள்ளதை நாம் அறிவோம். 

அதே நேரத்தில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மற்றும் தொல்லியல் சட்ட வரம்புகள் காரணமாக சில பாதைகள் திறக்க முடியாத நிலைமை இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் மக்களின் கவலைகளை அறிந்துள்ளனர். எனினும் அதற்கான சட்டம் மற்றும் நிர்வாக வரம்புகள் உள்ளன. 

இந்நிலைமை காரணமாக, வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள இந்தப் பாதைக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்து பரிந்துரைகளை முன்வைப்பதே எமது தற்போதைய நோக்கமாக உள்ளது. 

இதற்காக சுற்றுச்சூழல் அமைச்சும் எமது அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளோம். 

இவ்விடயத்தில் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை. இருப்பினும், பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளது. 

எதிர்காலத்தில் இந்த விவகாரம் தொடர்பான முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும். 

அத்துடன் நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து, அதற்கிணங்க எமது நடவடிக்கைகள் அமையும். 

இந்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட சுற்றுச்சூழல் அதிகாரிகள் பொது மக்களின் கவலைகளை அறிந்துள்ளதுடன், அதற்கான சட்ட மற்றும் நிர்வாக கட்டுப்பாடுகள் உள்ளன என்பதும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 

வில்பத்து வனப்பகுதியை ஒட்டியுள்ள பாதையை திறப்பதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, அதற்கு மாற்றாக பயன்படுத்தக்கூடிய மாற்றுப் பாதைகள் குறித்த பரிந்துரைகளை முன்வைப்பதே தற்போதைய அரசின் நோக்கம். 

இதற்கு சுற்றுச்சூழல் அமைச்சு, சம்பந்தப்பட்ட அமைச்சும் இணைந்து எதிர்காலத்தில் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அவர் கூறினார். 

சுற்றுச்சூழல் செயற் பாட்டாளர்களின் நிலைப்பாடுகள் காரணமாக சில தடைகள் இருப்பதும் உண்மை என அவர் சுட்டிக்காட்டினார். 

எனினும், பொதுமக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் சட்ட வரம்புகளையும் மதித்து தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாக அமைச்சர் வலியுறுத்தினார். 

இந்த விவகாரம் தொடர்பான எதிர்கால முடிவுகள், பொதுமக்கள் மத்தியஸ்த கலந்துரையாடல்கள், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பரிந்துரைகள் மற்றும் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை முழுமையாக மதித்து அதற்கிணங்க அரசின் நடவடிக்கைகள் அமையும் என தெரிவித்தார்.

-மன்னார் நிருபர் லெம்பட்-

https://adaderanatamil.lk/news/cmlhic48c0001356nml5v2w2k

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

1 month 3 weeks ago

வடக்கு, கிழக்கில் 100 மில்லியன் டொலர் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் - அரசாங்கம் அறிவிப்பு

10 Feb, 2026 | 06:45 PM

image

(எம்.மனோசித்ரா)

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

2026 தொடக்கம் 2031 வரையான 6 ஆண்டு காலப்பகுதிக்கு உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி இணை நிறுவனத்தால் 1,000 மில்லியன் டொலர்கள் நிதி எமது நாட்டுக்கு வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதில் 100 மில்லியன் டொலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமுல்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள பிராந்திய அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்குப் பயன்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டத்தின் கீழ் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வலய ரீதியான உற்பத்தி ஆற்றல் வளங்களை (சுற்றுலா, மீன்பிடி போன்ற) அதிகரித்தல், தொழில் வாய்ப்புக்களை உருவாக்கல், தனியார் மூதலீடுகளைக் கவர்ந்திழுத்தல் மற்றும் நிறுவன ரீதியான வலுப்படுத்தல்களுக்கு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு கவனம் செலுத்துகின்ற கருத்திட்டங்களை அமுல்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய, வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் உலக வங்கியுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கும், உத்தேச கருத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்புடைய வகையில் அமைச்சு தனது ஏனைய ஆரம்பப் படிமுறைகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/238349

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr