ஊர்ப்புதினம்

கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் வனவள திணைக்களம் அத்துமீறல் ; பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார் சத்தியலிங்கம்

1 week ago

கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளில் வனவள திணைக்களம் அத்துமீறல் ; பொதுமக்களின் முறைப்பாடுகளை பெற்றுக்கொண்டார் சத்தியலிங்கம்

27 Mar, 2026 | 11:26 AM

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கனகராயன்குளம், புளியங்குளம் ஆகிய பகுதியில் வனவள திணைக்களத்தினால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான பொதுமக்களின் முறைப்பாடுகளை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் புதன்கிழமை  (25) பொதுமக்களுடன் நேரில் கலந்துரையாடி பெற்றிருந்தார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த மக்களுடன் ஏ9 வீதி, பரசங்குளம், புளியங்குளத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வவுனியா வடக்கு மக்கள் தொடர்பகத்தில் குறைகேள் கலந்துரையாடலில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர், இதன்போது கனகராயன்குளம், புளியங்குளம் பகுதிகளிலிருந்து வருகைதந்திருந்த பொது மக்களினால் பிரதானமாக முன்னிலைப்படுத்தப்பட்ட வனவள திணைக்களத்தினரால் அடாத்தாக கையகப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ள மக்களுக்கு சொந்தமான காணிகள் தொடர்பிலான முறைப்பாடுகளையும், அதற்குரிய ஆவனங்களையும் பெற்றுக்கொண்டார். 

மேலும் மக்களால் தெரிவிக்கப்பட்ட தமதுபக்க நியாயாதிக்கத்தையும் கேட்டறிந்து கொண்டார். அத்துடன் விரைவில் குறித்த காணிகளை நேரில் வருகைதந்து பார்வையிடுவதாகவும் தெரிவித்தார்.

மேற்படி விடயங்கள் தொடர்பில் மக்களால் கையளிக்கப்பட்ட ஆவனங்களை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர், விடயத்தை அரசாங்க அதிபர், வனவள திணைக்களம், பிரதேச செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்குரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

IMG_3951.jpeg

IMG_3952.jpeg

IMG_3923.jpeg


https://www.virakesari.lk/article/242058

பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம்

1 week ago

பாழ்கிணற்றுப் படுகொலை: ’’ சட்டத்தரணிகள் ஆஜராகக் கூடாது’’ :கண்டனப் போராட்டம்

image_070e28ab7a.jpg

ரீ.எல். ஜவ்பர்கான்

மட்டக்களப்பு, நெல்லிக்காடு பகுதியில் இடம்பெற்ற கொடூரக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு ஆதரவாக சட்டத்தரணிகள் எவரும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது என வலியுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைக் கோரியும்   மட்டக்களப்பு நகரில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம்   வெள்ளிக்கிழமை (27) முன்னெடுக்கப்பட்டது.

வெல்லாவெளி 40ஆம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடந்த 20ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லிக்காடு வயல் பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். அதே கிணற்றிலிருந்து மற்றொரு பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவம் மட்டக்களப்பில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த பாரிய கொள்ளை மற்றும் கொலைகளின் பின்னணியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது. இது தொடர்பாக மூவர் உட்பட ஆறு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 23ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டவர்களில், மூவரை நான்கு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், ஏனைய இருவரை மார்ச் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு இன்று (27) மீண்டும் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காந்தி பூங்காவிலிருந்து பழைய கச்சேரி (மாவட்ட செயலகம்) வரை பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்கள்:

“இக்கொடூரக் குற்றச்செயல்களில் ஈடுபட்ட சந்தேக நபர்களுக்கு ஆதரவாக எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றில் முன்னிலையாகக் கூடாது”, “குற்றவாளிகளுக்கு உச்சகட்டத் தண்டனை வழங்கப்பட வேண்டும்”.“பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளைத் தடுக்க பொலிஸார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்” ஆகிய  கோரிக்கைகளை முன்வைத்தனர்.

"கொலைக்குற்றவாளிகளுக்குத் துணை போகாதே!", "பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்!", "பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீது கை வைக்காதே!" போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட செயலகத்தின் முன்பாகத் திரண்ட மக்களைச் சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், அவர்களுடன் கலந்துரையாடினார். இதன்போது, இனிவரும் காலங்களில் இத்தகைய சம்பவங்கள் இடம்பெறாதிருப்பதை நீதித்துறை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, அரசாங்க அதிபரிடம் போராட்டக்காரர்களால் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், ஞானமுத்து ஸ்ரீநேசன், வைத்தியர் இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோருடன் பிரதேச சபைத் தவிசாளர்கள், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

image_9c8e6e8371.jpgimage_4daea24ee4.jpgimage_8229681338.jpg

https://www.tamilmirror.lk/செய்திகள்/பாழ்கிணற்றுப்-படுகொலை-சட்டத்தரணிகள்-ஆஜராகக்-கூடாது-கண்டனப்-போராட்டம்/175-374634

’’தலைமையே பதவி விலகு; ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்!

1 week ago

’’தலைமையே பதவி விலகு; ரெலோ தலைமைக்கு எதிராக போராட்டம்!

image_905a7ca6e6.jpg  எஸ். கீதபொன்கலன்

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலைமைத்துவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கட்சியின் 12-வது தேசிய மகாநாட்டை உடனடியாகக் கூட்டி புதிய நிர்வாகிகளைத் தெரிவு செய்ய வலியுறுத்தியும் இன்று (27) திருகோணமலையில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

திருகோணமலை மாவட்ட தமிழீழ விடுதலை இயக்க அங்கத்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டம், கட்சியின் மாவட்டக் காரியாலயத்திற்கு முன்பாக ஆரம்பமானது. அங்கிருந்து பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாகச் சென்ற அங்கத்தவர்கள், திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள வெலிக்கடை தியாகிகள் அரங்கிற்கு முன்பாகத் தொடர்ந்து தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

போராட்டத்தின் போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த கட்சியின் மூத்த உறுப்பினர் கௌரிதாஸ் பத்மலோஜினி கூறியதாவது:

"கட்சியின் யாப்பு விதிகளின்படி, தற்போதைய தலைவர் உள்ளிட்ட உயர்மட்ட நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த 23.03.2026 அன்றுடன் நிறைவடைந்துள்ளது. எனவே, தாமதமின்றி கட்சியின் 12-வது தேசிய மகாநாடு கூட்டப்பட வேண்டும் என்பதே எமது பிரதான கோரிக்கையாகும்."

மேலும் அவர் குறிப்பிடுகையில், வடக்கு மற்றும் கிழக்கின் எட்டு மாவட்டங்களிலும் கட்சியின் புதிய நிர்வாகிகள் யாப்பு விதிகளின்படி தெரிவு செய்யப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்ட நிர்வாகிகளின் தெரிவும் கட்சியின் தலைமைக் குழு முன்னிலையிலேயே நடைபெற்றது. இருப்பினும், இந்தத் தெரிவு யாப்புக்கு முரணானது என தற்போது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் பின்னணியில் கட்சியின் தலைமைத்துவத்தின் ஆசீர்வாதம் இருப்பதாகத் தாம் சந்தேகிப்பதாகவும், உட்கட்சி ஜனநாயகத்தை மீறும் இச்செயற்பாட்டை உடனடியாக நிறுத்தி, வழக்கை மீளப்பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அவற்றுள் சில:
• "தலைமைக் குழுவே! தேசிய மகாநாட்டை உடனே நடத்து!"
• "தங்கண்ணா, சிறி அண்ணா கட்டிக்காத்த கட்சியைச் சீரழிக்காதே!"
• "கட்சித் தலைமையே! இரட்டை வேடம் போடாதே, ரெலோவை அழிக்காதே!"
• "பதவி ஆசை போதும்; சாகும் வரை நீங்களா பதவியில் இருப்பீர்கள்?"
• "தலைமைக்குழு உறுப்பினர்களே! பதவி ஆசைக்காகவா அன்று ஆயுதம் தூக்கினீர்கள்?"

கட்சியின் புதிய நிர்வாகிகளின் தெரிவை அங்கீகரித்து, ஜனநாயக ரீதியாக மகாநாட்டை நடத்தி புதிய தலைமையை உருவாக்க வழிவிடுமாறு போராட்டக்காரர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/தலைமையே-பதவி-விலகு-ரெலோ-தலைமைக்கு-எதிராக-போராட்டம்/175-374635

10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை – தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்- சான்று பொருட்கள் அரசுடமையாக்கம்

1 week ago

10 இந்திய மீனவர்களுக்கு 10 வருட சிறை – தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம்- சான்று பொருட்கள் அரசுடமையாக்கம்

adminMarch 27, 2026

WhatsApp-Image-2026-03-27-at-7.05.35-AM-

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 இந்திய மீனவர்களையும், எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறைத் தண்டனை வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் கடந்த மாதம் 19 ஆம் திகதி அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்ட இந்திய 10 மீனவர் களின்  வழக்கு விசாரணை நேற்றைய தினம் வியாழக்கிழமை (26) மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இலங்கை கடற்பரப்பில் வைத்து 2 படகுகளுடன் குறித்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்திய போது குறித்த மீனவர்களை நேற்று வியாழக்கிழமை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த மீனவர்கள் 10 பேர் நேற்றைய தினம் வியாழக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்ட

போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 12 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 10 வருட சிறை தண்டனை வழங்கி விடுவித்தார். மேலும் ஒவ்வொரு மீனவர் களுக்கும் தலா 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதோடு வழக்கின் சான்று பொருட்களை அரசுடமையாக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

WhatsApp-Image-2026-03-27-at-7.05.35-AM-WhatsApp-Image-2026-03-27-at-7.05.35-AM.WhatsApp-Image-2026-03-27-at-7.05.36-AM-


https://globaltamilnews.net/2026/231091/

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

1 week ago

3-1.jpeg?resize=750%2C375&ssl=1

யாழில் முக்கிய கூட்டம்: குவிக்கப்பட்ட மேலதிக படையினர்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்று வரும் நிலையில் , மாவட்ட செயலக சூழலில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு , பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இன்றைய தினம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனின் இணை தலைமையுடன் , நடைபெற்று வருகிறது.

அதேநேரம் ஆசிரியர்கள் இடமாற்றம் தொடர்பில் ஆசிரியர்களால் மாவட்ட செயலகம் முன் போராட்டம் நடத்தப்படவுள்ளதாகவும் , காணி விடுவிப்பு கோரி காணி உரிமையாளர்களும் மாவட்ட செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , மாவட்ட செயலக சுற்று வட்ட பகுதிகளில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1470146

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது

1 week ago

மட்டக்களப்பில் பெண்களை கடத்தி கொலை செய்து கும்பலிடம் இருந்து சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மீட்பு - ஒருவர் கைது

Published By: Vishnu

27 Mar, 2026 | 04:52 AM

image

மட்டக்களப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மயக்க மருந்து கொடுத்து பெண்களை கடத்தப்பட்டு தாலி உள்ளிட்ட தங்க ஆபரணங்களை கொள்ளையிட்டு கிணற்றில் வீசி எறிந்து கொலை செய்து வந்த கும்பலுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சந்தேக நபரான 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை வியாழக்கிழமை (26) இரவு மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரே யருடன் கைது செய்ததுடன் கொள்ளைச் சம்பவத்துக்கு பயன்படுத்தி வந்த சத்திர சிகிச்சைக்கு பாவிக்கும் மயக்க மருந்துகள் மற்றும் ஸ்பிரே,மாத்திரைகள்  என்பவற்றை  மீட்டுள்ளதாக கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தெய்வநாயகம் மேனன் தெரிவித்தார்.

IMG_1116.JPG

கடந்த 20ம் திகதி கொக்கட்டிச்சோலை நெல்லிக்காட்டு வயல் பிரதேசத்தில் பாழடைந்த கிணற்றில் இருந்து வவுணதீவு கொத்தியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயது இளம் தாய் ஒருவர் உயிருடனும் ஏற்கனவே காணாமல் போனதாகக் கருதப்பட்ட மற்றொரு  பெண் ஒருவர் சடலமாக கிணற்றில் இருந்தும். மற்றும் இளம்தாயின் 3 வயதும் 4 மாதம் கொண்ட சிறுமி வயல் பகுதியில் உயிருடனும் மீட்கப்பட்டனர்.

WhatsApp_Image_2026-03-27_at_00.08.48__1

இச் சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வர்ண ஜயசுந்தரவின் வழிகாட்டலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தினவின் நேரடி கண்காணிப்பில் கிழக்கு மாகாண பெரும் குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் அதிரடி விசாரணை முன்னெடுத்தனர்.

WhatsApp_Image_2026-03-27_at_00.08.49.jp

இதன்போது வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய  பெண் அவரது 34 வயதுடைய கணவர் அவரது 22 வயதுடைய தம்பியார் மற்றும் கொள்ளையிடப்பட்ட தங்க ஆபரணங்களை வாங்கிய ஊறணி, திருகோணமலை, வீதிகளைச் சேர்ந்த இரு நகைக்கடை உரிமையாளர்கள் இருவர் உட்பட 5 பேரை  24 மணித்தியாலத்தில் பொலிசார் கைது செய்தவுடன் இரு ஆட்டோக்கள் கார் ஒன்று மற்றும் கோடாரி, கூரிய ஆயுதங்களை மீட்டனர்.

IMG_1118.JPG

இதில் கைது செய்யப்பட்ட இவர்களை கடந்த 22 ம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது  தங்க ஆபரண கடைகளின்  உரிமையாளர் இருவரையும் 27 வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொலை கொள்ளையில் ஈடுபட்டிருந்த  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரையும்  72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணைக்கு செய்வதற்கு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபரின் நேரடி வழிகாட்டலில் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்களிடம்  தொடர் விசாரணைகளின் போது   கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டின் பகுதியில் நிலத்தில் மயக்க மருந்துக்களை புதைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கடந்த இரண்டு மாதத்துக்கு முன்னர் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரிடம் மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் வழங்கி வைத்துள்ளதாகவும் வெளி மாவட்டத்தில் உள்ள ஒருவரிடம் இருந்து இந்த மயக்க மருந்தை  பல ஆயிரம் ரூபா பணம் செலுத்தி பெற்றுக் கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது.

IMG_1111.JPG

இதையடுத்து நேற்று வியாழக்கிழமை இரவு கொள்ளையர்களின் காஞ்சிரம்குடா வீட்டை முற்றுகையிட்டு நிலத்தில் இரண்டு அடி ஆழத்தில் பாதுகாப்பாக பொலித்தீன் பைகளில் சுற்றி வைக்கப்பட்டிருந்த  வைத்தியசாலைகளில் சத்திர சிகிச்சையின் போது  பாவிக்கப்படும் 6 மயக்க மருந்துகளை கொண்ட போத்தல் மற்றும் மயக்க மாத்திரைகள், மருந்துகள் மீட்டனர்.

அதனை தொடர்ந்து கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வீடு ஒன்றை முற்றுகையிட்டு 37 வயதுடைய ஆட்டோ ஓட்டுனர் ஒருவரை கைது செய்ததுடன் அவரது வீட்டின் நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த  கொள்ளையர்கள் வழங்கிய மயக்கத்துக்கு பாவிக்கும் ஸ்பிரேயர் போத்தல் ஒன்றையும் குற்ற செயலுக்கு பயன்படுத்திய ஆட்டோ ஒன்றையும் மீட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை இந்தக் கொடூரச் சம்பவத்தையடுத்து மட்டக்களப்பு மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிப்பதுடன் இக்கொலைகளின் பின்னணியில் உள்ள முழுமையான வலையமைப்பை கண்டறியும் நோக்கில் கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றதுடன் குறித்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணைகள் வெள்ளிக்கிழமை (27) மீண்டும் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/242030

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஒரு பகுதியில் எவ்வித சிக்கல்களும் கண்டறியபடவில்லை - சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா

1 week ago

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஒரு பகுதியில் எவ்வித சிக்கல்களும் கண்டறியபடவில்லை - சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா

Published By: Vishnu

27 Mar, 2026 | 04:33 AM

image

(செ. சுபதர்ஷனி)

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களில் ஒரு பகுதியை விசாரணை செய்வதற்குத் தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததாகவும், அந்தப் பகுதியில் எவ்வித முறைகேடுகளும் கண்டறியப்படவில்லை என சுங்க ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவித்தார்.

வியாழக்கிழமை (26) நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முழுநாடும் ஒன்றாக" போதைப்பொருள் ஒழிப்பு தேசியவேலைத் திட்டத்தின் கீழ் இலங்கை சுங்கப் திணைக்களம் பாரிய பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன்படி, 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் பல்வேறு வகையான போதைப்பொருள் கடத்தல்கள் தொடர்பான 147 சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டு, 5.8 பில்லியன் ரூபா பெறுமதியான 435 கிலோ கிராம் போதைப்பொருள் சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. தான் பணிப்பாளராகக் கடமையாற்றும் தடுப்புப் பிரிவிக்கு குறித்த கொள்கலன்களில் ஒரு தொகுதி விசாரணைகளுக்காகக் கிடைத்தது.

இதன்போது முன்னெடுக்கப்பட்ட கணாய்வு மற்றும் தணிக்கைகளின் போது, அந்த கொள்கலன்களை இறக்குமதி செய்த நிறுவனங்கள் தொடர்பில் எவ்வித சட்டவிரோத நடவடிக்கைகளும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், குறித்த 323 கொள்கலன்கள் தொடர்பான முழுமையான அறிக்கைகள் கிடைத்த பின்னரே இது குறித்த இறுதித் தீர்மானத்தை வழங்க முடியும். தற்போது தான் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தான் பரிசோதனை செய்த கொள்கலன்களுக்கு மாத்திரமே செல்லுபடியாகும் என்றார்.

https://www.virakesari.lk/article/242029

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

1 week ago

ஐ.நா வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையிலான சந்திப்பு

26 Mar, 2026 | 06:26 PM

image

(எம்.நியூட்டன்)

ஐ.நா. வதிவிட பிரதிநிதிக்கும் தமிழ்த் தேசிய பேரவையினருக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

கடந்த ஒரு வாரகாலமாக வடக்கில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினரை சந்தித்து வரும் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநிதி. மார்க் அன்றி பிரான்சிக்கும் தமிழ்த் தேசியப் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (26) யாழ்ப்பாணம் தாவடிப் பகுதியில் அமைந்துள்ள பொக்ஸ் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இந்த சந்திப்பில் தமிழ்த் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமாகிய செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண சபை அமைச்சருமான பொ.ஜங்கரநேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தருமலிங்கம் சுரேஸ், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை பரப்புச் செயலாளரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

https://www.virakesari.lk/article/242015

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

1 week ago

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

Mar 26, 2026 - 07:51 PM

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு

பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலைச் சம்பவம் தொடர்பில், குற்றம் சாட்டப்பட்டிருந்த கடற்படை சிப்பாய்கள் உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) ரத்து செய்துள்ளது. 

அத்துடன், இந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

குறித்த பிரதிவாதிகளை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரணை செய்த பின்னரே, நீதியரசர்களான சஷி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmn7k8hgf0000356p9amhajf6

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம்

1 week ago

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்க ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இணக்கம்

26 Mar, 2026 | 07:40 PM

image

(இராஜதுரை ஹஷான்)

இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஷ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

002.png

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாட்டுக்கு வருகைத் தந்துள்ள ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் உட்பட தூதுக்குழுவினர் நேற்று வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி, தொழில் அமைச்சர் அனில் ஜயந்த மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இலங்கை மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான வலுசக்தி துறையின் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.மேலும்இ இலங்கை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பிற்கு இடையிலான நீண்டகால ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தல்இகுறிப்பாக எரிபொருள் விநியோகம் வலுசக்தி பாதுகாப்பு மற்றும் நீண்டகாலப் பங்காளித்துவத்துக்கான புதிய வாய்ப்புகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்படப்பட்டது.

இதற்கமைய இலங்கைக்கு சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை வழங்குவதற்கு ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் றோமன் மார்ஷவின் உட்பட ரஸ்ய தூதுக்குழுவினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

மத்திய கிழக்கு நாடுகளில் மோதல் நிலை தீவிரமடைந்த காரணத்தால் நாட்டுக்கு வருகைத்தரவிருந்த எரிபொருள் கப்பல்கள் தாமதமடைந்ததால் கடந்த  வாரங்களில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக ரஸ்யாவிடமிருந்து 'அரசாங்கம் -அரசாங்கம்| என்ற அடிப்படையில் எரிபொருளை  கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் இராஜதந்திர மட்டத்தில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது.இதற்கமைவாகவே ரஷ்யாவின் வலுசக்தி பிரதி அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.

https://www.virakesari.lk/article/242022

எதிர்கால சுகாதார தேவைக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் போதுமானதாக இல்லை – வைத்தியர்கள் எச்சரிக்கை

1 week ago

எதிர்கால சுகாதார தேவைக்கு வைத்தியசாலைகளில் படுக்கைகள் போதுமானதாக இல்லை – வைத்தியர்கள் எச்சரிக்கை

26 Mar, 2026 | 01:29 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் தற்போது சுமார் 85,000 படுக்கைகள் இருந்தாலும், எதிர்கால சுகாதார தேவைகளைப் பூர்த்தி செய்ய இது போதுமானதாக இருக்காது என வைத்தியர்கள் மற்றும் சிவில் உரிமைக்கான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2012 ஆம் ஆண்டு 12% ஆக இருந்த வயோதிபர் தொகை, 2024 ஆம் ஆண்டில் சுமார் 18% ஆக அதிகரித்துள்ளதுடன், 2040 ஆம் ஆண்டளவில் அது 25% ஆக அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாட்டின் மொத்த மக்கள் தொகை 2024 ஆம் ஆண்டில் 21,763,170 ஆக பதிவாகியுள்ளது.

சனத்தொகை அதிகரிக்கும் வேகத்திற்கு ஏற்ப வைத்தியசாலைக் கட்டில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் சுகாதார அமைப்பு பாரிய நெருக்கடியைச் சந்திக்கும் என வைத்தியர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாட்டில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கை ஏற்கனவே சுகாதார அமைப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாள 10,000 நோயாளிகள் இதய அறுவை சிகிச்சைக்காகவும், மேலும் 10,000 பேர் சிறுநீரக அறுவை சிகிச்சைக்காகவும் காத்திருக்கின்றனர். அதேபோல், சுமார் 40,000 புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் உள்ளது.

இந்த தேவைகளை சமாளிக்க, தேசிய மருத்துவமனைகள், போதனா வைத்தியசாலைகள் மற்றும் முக்கிய அடிப்படை வைத்தியசாலைகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/241968

யாழ் - கிளிநொச்சியின் 'ஆட்டக்காரி' நெல்லினத்திற்கு அரச அங்கீகாரம்: பிராந்திய ரகமாகப் பரிந்துரை!

1 week 1 day ago

யாழ் - கிளிநொச்சியின் 'ஆட்டக்காரி' நெல்லினத்திற்கு அரச அங்கீகாரம்: பிராந்திய ரகமாகப் பரிந்துரை!

26 Mar, 2026 | 01:26 PM

image

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்தை 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் புதன்கிழமை ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. அதன் போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு,

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் பாரம்பரிய 'ஆட்டக்காரி' நெல்லினத்துக்கு விவசாயத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ பரிந்துரை இதுவரை இல்லாத காரணத்தால், அதற்கான நியாயமான நிர்ணய விலையைத் தீர்மானிப்பதிலும், விவசாயக் காப்புறுதியைப் பெற்றுக்கொள்வதிலும் விவசாயிகள் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தனர்.

இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணும் முகமாக ஆட்டக்காரியை ஒரு 'பிராந்திய நெல்லினமாக' உடனடியாகப் பரிந்துரைப்பதற்கான சாதகமான நடவடிக்கைகளை எடுப்பதாகப் பணிப்பாளர் நாயகம் உறுதியளித்தார்.

அதேநேரம் வடக்கு மாகாணத்தின் ஊடான ஏற்றுமதிகளை ஊக்குவிப்பதற்கும், நோய்த்தாக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் பலாலி சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றை மையப்படுத்திய 'தாவர தனிமைப்படுத்தல் அலுவலகத்தை' முழுமையாக இயங்கச் செய்வது தொடர்பில் ஆராயப்பட்டது.

வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக இந்தியாவிலிருந்து) கொண்டுவரப்படும் வாழைக் கன்றுகள் ஊடாக 'பனாமா' போன்ற கொடிய நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், சுங்க அதிகாரிகளுடன் இணைந்து கடுமையான கண்காணிப்புகளை மேற்கொள்ளவும், ஏற்றுமதியாளர்களுக்கு இலகுவாகச் சான்றிதழ்களை வழங்குவதற்குமான வசதிகளை மேம்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் , விதைச் சான்றிதழ்களைப் பெறுவதற்காக வடக்கிலிருந்து தெற்குக்கு விதைகளை அனுப்பிவிட்டு மாதக்கணக்கில் காத்திருக்கும் நிலையை மாற்றுவதற்காக, வடக்கு மாகாணத்துக்குள்ளேயே 'விதைப் பரிசோதனைச் சிறிய ஆய்வுகூடங்களை' விரைவாக நிறுவுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், விவசாயத்தில் இளைஞர்களை ஈர்ப்பதற்காகப் பரந்தன் மற்றும் வவுனியா விவசாயக் கல்லூரிகளில் டிப்ளோமா கற்கை நெறிகளை விரிவுபடுத்துதல், இளைஞர்களுக்கான 4 சதவீத குறைந்த வட்டியிலான கடன் திட்டங்களை இலகுபடுத்துதல் மற்றும் பயன்படுத்தப்படாத அரச காணிகளை இளைஞர்களின் விவசாய முயற்சிகளுக்கு வழங்குதல் தொடர்பிலும் கொள்கை ரீதியாக ஆராயப்பட்டது.

அத்துடன், அனுமதியற்ற மற்றும் காலாவதியான விவசாய இரசாயனங்கள் சந்தையில் விற்கப்படுவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தவும், அவ்வாறு ஈடுபடும் வர்த்தக நிலையங்களின் பதிவுகளை உடனடியாக ரத்துச் செய்யுமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/241967

சனிக்கிழமை விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள் சங்கம்

1 week 1 day ago

சனிக்கிழமை விடுமுறை கோரும் மருத்துவ நிபுணர்கள் சங்கம்

26 Mar, 2026 | 12:45 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

நாட்டில் நிலவி வரும் எரிபொருள் நெருக்கடி சுகாதாரத்துறையில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களுக்கு கடுமையான சுமையாக மாறியுள்ள நிலையில், சனிக்கிழமையை அதிகாப்பூர்வ விடுமுறை நாளாக அறிவிக்குமாறு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் தொடர்ச்சியாக உயர்ந்து வரும் விலைகள், குறிப்பாக வெளிமாவட்டங்களில் பணியாற்றும் மருத்துவர்களை தீவிரமாக பாதித்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல மருத்துவ நிபுணர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல தினசரி பலமுறை நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இதனால், போக்குவரத்து செலவுகள் அதிகரித்து, அது சமாளிக்க முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு சில பொதுத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளைப் போல, மருத்துவ நிபுணர்களுக்கு போக்குவரத்துச் செலவுகளுக்கான போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நிலைமை மருத்துவர்களிடையே அதிருப்தியை அதிகரித்து வருவதாகவும், இதன் விளைவாக தொலைதூர மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வழங்கப்படும் நிபுணத்துவ மருத்துவ சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்ற அச்சமும் எழுந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவ நிபுணர்கள் சங்கம் சனிக்கிழமையை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்து, வாராந்திர பணிநாட்களை மாற்றியமைத்தல் வேண்டும் என்றும் போக்குவரத்து செலவுகளுக்கான நியாயமான இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் கூடுதல் பணிகளுக்கான கொடுப்பனவுகளுக்கு நிலையான கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்றும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

தற்போதைய நெருக்கடியை சமாளித்து சுகாதார சேவைகள் இடையூறு இன்றி தொடர்வதை உறுதி செய்யும் வகையில், உடனடி தீர்வுகளை கண்டறிய அதிகாரிகளுடன் அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/241959

விலங்குகளுக்கும் வெப்ப அபாயம்: போதியளவு தண்ணீர் வழங்குவது அவசியமாகும் - கால்நடை வைத்தியர்

1 week 1 day ago

விலங்குகளுக்கும் வெப்ப அபாயம்: போதியளவு தண்ணீர் வழங்குவது அவசியமாகும் - கால்நடை வைத்தியர்

Published By: Digital Desk 3

26 Mar, 2026 | 01:28 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

நாட்டில் அதிகரித்து வரும் வெப்ப நிலையினால் செல்லப்பிராணிகள் மற்றும் பண்ணை கால்நடைகள் மற்றும் பறவைகள் வெப்பபக்கவாதம், உடலில் நீர்ச்சத்து குறைதல் போன்ற பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதாகக் கால்நடை வைத்தியர் உதித்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

விலங்குகளைப் பாதுகாப்பது தொடர்பில் வைத்தியர் உதித்த விஜேசிங்க விடுத்துள்ள முக்கிய ஆலோசனைகள்,

செல்லப்பிராணிகள் ஆரோக்கியமாக இருக்க குறைந்தது 150 மில்லி லீற்றர் நீர் பருபுவதை உறுதிப்படுத்த வேண்டும்.

பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வீட்டில் விட்டுச் செல்பவர்கள், மின்விசிறிகளை இயங்கவிடுவதுடன் போதிய காற்றோட்டத்தை உறுதி செய்ய வேண்டும்.

பறவைகள் மற்றும் ஏனைய விலங்குகளுக்கு எப்போதும் சுத்தமான குடிநீர் மற்றும் வெப்பத்திலிருந்து தப்பிக்க நிழலான இடங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

பிராணிகளின் உரோமங்களை நனைப்பது அல்லது அவற்றைக் குளிக்க அனுமதிப்பதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியும்.

கடும் வெப்பம் நிலவும் நேரங்களில் விலங்குகளைக் கடினமான உடற்பயிற்சிகள் அல்லது வேலைகளில் ஈடுபடுத்துவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாகக் குட்டிகள், வயதான விலங்குகள் மற்றும் நோய்வாய்ப்பட்ட விலங்குகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட வேண்டும் என வைத்தியர் விஜேசிங்க வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/241958

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

1 week 1 day ago

New-Project-5-18.jpg?resize=750%2C375&ss

போலி விமான டிக்கெட்டுகள் தள்ளுபடிகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை!

விமான டிக்கெட்டுகளுக்கு மலிவான அல்லது சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவதாகக் கூறி, சமூக ஊடகங்களில் தற்போது பரவி வரும் மோசடிச் செய்திகள் குறித்து மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை பொலிஸார் பொதுமக்களை எச்சரித்துள்ளனர்.

இந்த விளம்பரங்கள் தவறான தகவல்கள் மூலம் வாடிக்கையாளர்களை ஏமாற்றி பணத்தைத் திருடும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

எனவே, பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் அதிகாரிகள் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளனர்:

சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்: 

தள்ளுபடிகளை விளம்பரப்படுத்தும், அறியப்படாத அல்லது சரிபார்க்கப்படாத இணையதள இணைப்புகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களைத் திருடப் பயன்படுத்தப்படலாம்.

வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம்: எந்தவொரு முறையான விமான நிறுவனமோ அல்லது நம்பகமான முகமையோ, அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் உங்கள் OTP-கள், கடவுச்சொற்கள் அல்லது முக்கியமான நிதித் தகவல்களைக் கோராது.

அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் சரிபார்க்கவும்: சலுகைகளை எப்போதும் விமான நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது சரிபார்க்கப்பட்ட சமூக ஊடகப் பக்கங்கள் மூலம் சரிபார்க்கவும்.

நம்பகமான முகவர்களை அணுகவும்: பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்வதற்கு முன், பதிவுசெய்யப்பட்ட மற்றும் நற்பெயர் பெற்ற பயண முகவரிடம் விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும்.

எந்தவொரு முறையான விமான நிறுவனமோ அல்லது நம்பகமான முகமையோ, அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகள் மூலம் முக்கியமான நிதித் தகவல்களைக் கோராது என்று பொலிஸார் மேலும் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், பொதுமக்கள் மோசடிகளுக்குப் பலியாக வேண்டாம் என்றும், விழிப்புடன் இருக்குமாறும், மற்றவர்களைப் பாதுகாக்க விழிப்புணர்வைப் பரப்புமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

https://athavannews.com/2026/1470040

வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

1 week 1 day ago

வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

வட மாகாண ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

மாகாண கல்வித் திணைக்களம் தமது இடமாற்றக் கோரிக்கைகளைப் பரிசீலனை செய்யாது, மீண்டும் மீண்டும் ஒரே ஆசிரியர்களுக்கே இடமாற்றம் வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்து வட மாகாண ஆசிரியர்கள் இன்றையதினம் (26) போராட்டமொன்றை முன்னெடுத்தனர். 

வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு முன்பாக ஒன்றுகூடிய ஆசிரியர்கள், பல்வேறு பதாதைகளைத் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பினர். 

ஏற்கனவே கஷ்டப் பிரதேசங்களில் பணிபுரிந்தோர், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் குடும்பச் சூழல் காரணமாகத் தூர இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள் எனப் பாதிக்கப்பட்ட பல ஆசிரியர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

தமது இடமாற்றம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து மாகாண கல்வித் திணைக்களத்திற்கு மேன்முறையீடு செய்தும், அந்த விண்ணப்பங்களை மாகாண கல்வித் திணைக்களம் பொதுச்சேவைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கவில்லை என ஆசிரியர்கள் இதன்போது குற்றம் சுமத்தினர். 

இதனைத் தொடர்ந்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப செயலாளர் தீபன் திலீசன் உள்ளிட்ட பிரதிநிதிகள், வட மாகாண பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளை ஸ்ரீ என்பவரைச் சந்தித்துக் கலந்துரையாடினர். 

இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த தீபன் திலீசன், "மாகாண கல்வித் திணைக்களத்தின் ஊடாக எந்தவொரு மேன்முறையீடும் தமக்கு அனுப்பப்படவில்லை என்றும், அவ்வாறு அனுப்பப்பட்டால் மட்டுமே தம்மால் அவற்றைப்பரிசீலிக்க முடியும் என்றும் செயலாளர் தெரிவித்தார்" எனக் குறிப்பிட்டார். 

பொதுச்சேவைகள் ஆணைக்குழுவின் பதிலைத் தொடர்ந்து, ஆசிரியர்கள் தமது போராட்டத்தை வட மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகத் தொடர்ந்தனர். 

தமது மேன்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு வழங்கப்படும் வரை, தற்போது பணியாற்றும் பாடசாலைகளிலேயே தொடர்ந்து பணியாற்ற அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும், அவ்வாறில்லாத பட்சத்தில் போராட்டங்கள் பல்வேறு வடிவங்களில் தொடரும் எனவும் ஆசிரியர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

https://adaderanatamil.lk/news/cmn73j6rd0002356p9ed32igh

அந்தரத்தில் தொங்குகிறது இலங்கை - மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்

1 week 1 day ago

அந்தரத்தில் தொங்குகிறது இலங்கை

மே மாதம் நடுப்பகுதி வரை தட்டுப்பாடின்றி எரிபொருள் விநியோகம்: இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

எதிர்வரும் மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருளைத் தட்டுப்பாடுகளின்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார தெரிவித்துள்ளார். எரிபொருள் கையிருப்பு மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "எரிபொருள் தட்டுப்பாடு குறித்த பொதுமக்களின் கவலைகளுக்கு மத்தியில், மே மாதப் பாதி வரை போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 31-ஆம் திகதி வரை எரிபொருள் கப்பல்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் ஏப்ரல் 6-ஆம் திகதி முதல் 29-ஆம் திகதி வரை மேலதிக விநியோகங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான அளவை விட 10% க்கும் அதிகமான மேலதிக எரிபொருளை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவு செய்துள்ளது" எனக் குறிப்பிட்டார்.

இதேவேளை, சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருளைப் பதுக்கி வைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நடைமுறைச் சிக்கல்களைக் காரணம் காட்டி, சில நிலையங்கள் ஆறு மாதங்களுக்குத் தேவையான எரிபொருளைச் சேமிக்கும் நோக்கில் சுமார் 18 எரிபொருள் தாங்கிகளைக் கோரியுள்ளன. இவ்வாறான பதுக்கல் நடவடிக்கைகள் சாதாரண வாகன ஓட்டுநர்களுக்கு எரிபொருள் கிடைப்பதைக் கடினமாக்கும் எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. இத்தகைய செயற்பாடுகளை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் முறையாகக் கண்காணிக்கிறதா என விமர்சகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என அதிகாரிகள் கூறினாலும், சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காணப்படும் நீண்ட வரிசைகள், தட்டுப்பாடு குறித்த பயத்தினால் மக்கள் எரிபொருளைச் சேமிக்கத் தொடங்கியுள்ளதை உறுதிப்படுத்துகின்றன. இது கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழிகள் மீதான நம்பிக்கையைக் குறைப்பதாக அமைந்துள்ளது. வரவிருக்கும் மாதங்களை எதிர்கொள்ள இலங்கை உண்மையிலேயே தயாராக உள்ளதா அல்லது மறைமுகமான எரிபொருள் நெருக்கடி ஒன்று உருவாகிறதா என்ற கேள்வி பலரிடையே எழுந்துள்ளதாக விமர்சகர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/அந்தரத்தில்-தொங்குகிறது-இலங்கை/175-374574

570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்

1 week 1 day ago

570 மீட்டர் நீளமான வீதியை புனரமைக்க 76 நாட்கள்

adminMarch 25, 2026

யாழ்ப்பாணத்தில் சுமார் 500 மீற்றர் வீதியினை புனரமைக்க 76 நாட்களுக்கு மேல் சென்றதாகவும் , ஒப்பந்தக்காரரின் பொறுப்பற்ற செயல் தொடர்பிலும் , அதிகாரிகளின் பாராமுகம் தொடர்பிலும் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளார்.

தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்றைய தினம் திங்கட்கிழமை ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.ஸ்ரீபவானந்தராசா தலைமையில் நடைபெற்றது. அதன் போதே பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் குறித்த குற்றச்சாட்டுக்களை முன் வைத்திருந்தார்.

 

43 வீதிகள் புனரமைப்பு.

வலி.வடக்கு பிரதேச சபைக்கு சொந்தமான 43 வீதிகள் கடந்த வருடம் 2025ஆம் ஆண்டு பிரதேச செயலகம் ஊடாக நிதி விடுவிக்கப்பட்டு , பிரதேச செயலகத்தின் நேரடி கண்காணிப்பில் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதில் மாங்கொல்லை வீதியானது 570 மீற்றர் நீளமும் , 3.90 மீற்றர் அகலமும் கொண்ட வீதியாகும். அதன் புனரமைப்பு பணியினை சிவா கட்டடத்தாரர் ஒப்பந்த அடிப்படையில் வீதி புனரமைப்பு பணிகளுக்கான வேலையினை பெற்றிருந்திருந்தனர்.

570 மீட்டர் நீள வீதியை புனரமைக்க 76 நாட்கள் 

வீதியின் புனரமைப்பு பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த டிசம்பர் 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டது. அதன் பின்னர் வேலையை ஆரம்பிக்காது காலம் தாழ்த்தி வந்த ஒப்பந்தக்காரர் , வீதியின் புனரமைப்பு பணிகளை முடித்து வீதியின் இரு மருங்கிலும் மண் இட்டு வேலையை பூர்த்தி செய்தது கடந்த 13ஆம் திகதியே. அதன் அடிப்படையில் 570 மீற்றர் நீளமான வீதியினை புனரமைக்க ஒப்பந்தக்காரருக்கு 76 நாட்கள் தேவைப்பட்டுள்ளன.

குறித்த வீதியின் புனரமைப்புக்கு 76 நாட்கள் எடுத்திருந்த நிலையிலும் , வீதியின் புனரமைப்பில் திருப்தி இல்லை என அயலவர்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில்  ,நேற்றைய தினம் நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் வீதி புனரமைப்பு தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார்

கூட்டத்தில் அது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது,

மாங்கொல்லை வீதி புனரமைப்பு பணிக்காக டிசம்பர் மாதம் 27ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்டது. அதன் பின்னர் பணிகள் ஆரம்பிக்கப்படாத நிலையில்  ,பிரதேச செயலருடன் அது தொடர்பில் பல்வேறு தடவைகள் தொடர்பு கொண்டு பணிகள் ஆரம்பிக்கப்படாதமை குறித்து தெரிவித்து வந்தேன்.

அவரும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் பொங்கலுக்கு முன் பணிகள் நிறைவு பெறும் என வாக்குறுதிகள் வழங்கினார். ஆனால் அவை எவையும் நடைபெறவில்லை.

அதேநேரம் மாங்கொல்லை வீதியின் நடுவில் இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான மின் கம்பத்தினை இழுத்து கட்டியிருந்த கம்பி காணப்பட்டது. வீதி புனரமைப்பின் போது அதனை அகற்றி ,வீதியினை புனரமையுங்கள் என பிரதேச செயலகத்திடம் கோரிக்கை வைத்தேன்.

அதேநேரம் மின்சார சபையிடமும் அது தொடர்பில் கோரிக்கை வைத்தேன். அவர்கள் வீதியின் நடுவில் உள்ள கம்பியை தாங்கள் அகற்றுவது எனில் தமக்கு அதற்கான செலவீனங்களை தர வேண்டும் அதனை யார் தருவார்கள் என என்னிடம் கேள்வி எழுப்பினார்கள்.

இது தொடர்பில் நான் பிரதேச செயலகத்திடம் மீண்டும் கம்பியை அகற்றி விட்டு பணியை தொடருமாறு கோரிய போது , என்னையே கடிதம் கொண்டு வருமாறு அலைக்கழித்தனர்.

பின்னர் ஒருவாறு அந்த கம்பி கழட்டப்பட்ட பின்னர் , வீதி புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவில்லை. இது தொடர்பில் பிரதேச செயலர் உள்ளிட்ட உத்தியோகஸ்தர்களிடம் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தேன்.

ஒரு கட்டத்தில் ஒப்பந்தக்காரர் வேலையை முடித்து தருகிறார் இல்லை. நீங்களே அவருடன் கதைத்து உங்கள் வீதி வேலையை முடியுங்கள் என எனக்கு அவரின் தொலைபேசி இலக்கத்தை தந்தனர்.

அவரிடம் அது தொடர்பில் தொடர்பு கொண்டு கதைத்த போது விரைவில் முடித்து தருவேன் என உறுதி அளித்து , வீதியில் கற்களை பரவி விட்டு ,ஆட்கள் வர மாட்டார்கள், அந்த வீதியால் பயணித்தவர்கள் வீதியில் கொட்டப்பட்ட கற்களுக்கால் சிரமத்துடன் பயணித்தனர். தொடர் இழுபறிகளுக்கு மத்தியிலையே வீதி புனரமைக்கப்பட்டது.

அடிக்கல் நாட்டி, வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து 76 நாட்கள் சென்ற பின்னரே 570 மீட்டர் நீளமான வீதியினை புனரமைத்து முடித்துள்ளனர்.  76 நாட்களாக புனரமைக்கப்பட்ட வீதியின் தரத்தில் கூட எமக்கு திருப்தி இல்லை. எனவே பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்ட 43 வீதிகளின் புனரமைப்பு பணிகளையும், அந்த வீதிகளின் தரத்தினையும் மீள் சோதனை செய்ய வேண்டும்  என கோருகிறேன் என தெரிவித்தார்.

அதனை அடுத்து வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் மீள் கணக்காய்வு செய்யப்பட வேண்டும் எனவும் , வீதிகளின் தரம் தொடர்பில் மீள் சோதனை செய்யப்பட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது .

4-1-1.jpg?resize=800%2C450&ssl=14-2-1.jpg?resize=800%2C450&ssl=1 4-4-1.jpg?resize=800%2C450&ssl=14-5.jpg?resize=800%2C450&ssl=1

https://globaltamilnews.net/2026/231009/

இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்குப் புதிய உத்தரவு

1 week 1 day ago

இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்குப் புதிய உத்தரவு

Mar 26, 2026 - 06:57 AM

இனி நினைத்தவுடன் கைது செய்ய முடியாது!- பொலிஸாருக்குப் புதிய உத்தரவு

சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் சந்தேகநபர்களைக் கைது செய்யும் போது பின்பற்ற வேண்டிய புதிய வழிகாட்டுதல்களைப் பொலிஸ் மா அதிபர் வெளியிட்டுள்ளார்.


அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு இது தொடர்பான எழுத்துப்பூர்வ அறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.


குறித்த சட்டப்பிரிவுகளின்படி, ஒருவரது பேச்சு அல்லது அறிக்கை மூலம் போரைத் தூண்டுதல், அல்லது பாகுபாடு, பகைமை அல்லது வன்முறைக்கு வழிவகுக்கும் தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல் போன்ற காரணிகள் உள்ளனவா என்பதை ஆராய்ந்த பின்னரே ஒருவரைக் கைது செய்ய முடியும் எனப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.


அவ்வாறு ஒருவரைக் கைது செய்வதாக இருந்தால், அதற்கு முன்னதாகச் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி, சட்டப் பிரிவின் பணிப்பாளருக்குத் தெரியப்படுத்தி, முன்முயற்சியாக எழுத்துப்பூர்வ அனுமதியைப் பெற வேண்டும் எனப் பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.


குறிப்பாக, தனிநபர்களுக்கோ அல்லது குழுக்களுக்கோ பொதுச் சமூகத்தில் மனவருத்தம் அல்லது அவமதிப்பு ஏற்பட்டாலோ, அல்லது தெய்வ நிந்தனை இடம்பெற்றாலோ, அதனை மாத்திரம் ஐசிசிபிஆர் சட்டத்தின் 3-வது பிரிவின் கீழ் கைது செய்வதற்கான காரணமாகக் கருதக்கூடாது என அந்த வழிகாட்டுதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த விதிமுறைகளை மீறிச் செயற்படுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmn6sdgqp0012356p3x3hkfhd

நாட்டில் 5,000 பேர் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில்: விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை!

1 week 1 day ago

நாட்டில் 5,000 பேர் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில்: விழிப்புணர்வுடன் இருக்குமாறு வைத்தியர்கள் எச்சரிக்கை!

Published By: Digital Desk 1

26 Mar, 2026 | 11:09 AM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

நாட்டில் தற்போது 5,000 நோயாளர்கள் சிறுநீரக நோயின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆண்டொன்றுக்கு சுமார் 300 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகவும் அந்தப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில், சிறுநீரக நோய் விசேட வைத்திய நிபுணர் நாலக ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,

நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், வருடத்திற்கு ஒரு முறையாவது தங்களது சிறுநீரகங்களை பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.

சிறுநீரக நோய்க்கான பிரதான காரணங்களாக நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தமே காணப்படுவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

ஆரம்பக்கட்டப் பரிசோதனைகள் இன்மையால், பல நோயாளர்கள் இந்நோயின் இறுதிக்கட்டத்தை எட்டிய பின்னரே தமக்கு நோய் இருப்பதை கண்டறிகின்றனர்.

சிறுநீரக நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, முறையான மருத்துவ ஆலோசனைகளைப் பின்பற்றுவதன் மூலம், சிறுநீரக செயலிழப்பு அபாயத்தைக் குறைத்து நோயாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/241949

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr