ஊர்ப்புதினம்

ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

2 months 4 weeks ago

ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

Published By: Vishnu

06 Jan, 2026 | 05:05 AM

image

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின்  வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13 சதவீதம் மாத்திரமே செலவிட முடியும். அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு,மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (05) முற்பகல்  நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின்  வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13மூ மாத்திரமே செலவிட முடியும்.அதில் குறைந்தபட்சம் 4மூ மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும்.அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு.முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,மற்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/235325

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்!

2 months 4 weeks ago

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்!

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்து தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்து தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேசசபையினரும் தெரிவித்துள்ளனர்.

எனவேஇவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து, வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=355085

10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது

2 months 4 weeks ago

10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது

By Batticaloa


சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் ஆணொருவரும் பெண்ணொருவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துன்னளர்.

சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

https://www.battinews.com/2026/01/10_6.html

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம்

2 months 4 weeks ago

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம்

06 January 2026

1767664708_7087515_hirunews.jpg

2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(06) நடைபெறவுள்ளது. 

அதன்படி, இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதனையடுத்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கடற்றொழில் சார்ந்த விடயங்களும், கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு குறித்த விடயங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கான குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. 

அந்தக் குழு மாகாண சபை தேர்தல் தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://hirunews.lk/tm/439271/progress-regarding-the-provincial-council-elections-parliamentary-session-begins-today

“500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை”

2 months 4 weeks ago

“500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை”

இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரிகளில் பலர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரியஇந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியுள்ளதாவது, நேர்மையை நிலைநிறுத்தவும், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார், பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஏனைய பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை விட மிக அதிகம், அத்துடன், அவை பொது நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த அதிகாரங்களை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுவதுடன், படைக்குள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை பெறவேண்டும்

மேலும், பொலிஸ் துறையில் தற்போது 31,000 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்குள் 40,000 ஆக உயரும் என்றும் கூறினார். இதை நிவர்த்தி செய்ய, இந்த ஆண்டு 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/500-பொலிஸ்-அதிகாரிகள்-மீது-ஒழுக்காற்று-நடவடிக்கை/175-370632

கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?

2 months 4 weeks ago

கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?

Jan 6, 2026 - 10:21 AM

கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?

கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். 

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

"சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது. அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். 

இவ்வேளையில் அரசாங்கமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு உதவவே நாம் எதிர்பார்த்தோம். மாறாக இது அரசாங்கத்துடனான ஒரு டீலோ அல்லது ஜனாதிபதியுடனான டீலோ அல்ல. அப்படி இல்லை. ஜனாதிபதி குறைந்தபட்சம் என்னிடம் இதிலிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை. 

தங்கத்தை சரியான முறையில் விற்பனை செய்வேன், அதற்கான 100 வீத பொறுப்பை நான் ஏற்கிறேன். இந்தத் தங்கத்தை குறைந்த விலைக்கு விற்க இடமளிக்க மாட்டேன். 100 வீதம் சரியான விலைக்கே விற்கப்படும். அது குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக நான் அறிவிப்பேன். 

விற்பனை விலை, விற்பனை செய்வதாயின், பௌத்த விவகார ஆணையாளரின் அனுமதியுடன் விற்பனை செய்வதாயின், அதனை 100 வீதம் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய நான் எதிர்பார்க்கிறேன். எந்த வகையிலும் மோசடி செய்ய நான் எதிர்பார்க்கவில்லை. 

நான் ஆலயத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக யாராவது கூறினால், கடந்த நான்கு வருடங்களிலும் எனக்கு கிடைக்கும் பாதுகாவலர் கொடுப்பனவையோ, எந்தவொரு ஊதியத்தையோ நான் விஷ்ணு ஆலயத்திலிருந்து இதுவரை பெறவில்லை. நான் கதிர்காம ஆலயத்திலிருந்தும் பெறமாட்டேன்," என அவர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmk243gm703kno29n8ihcpciv

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!

2 months 4 weeks ago

Drink.jpg?resize=750%2C375&ssl=1

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!

வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் பின்னர்  அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தின் மூலத்தைக் கண்டறிய மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

https://athavannews.com/2026/1458531

வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

2 months 4 weeks ago

New-Project-21.jpg?resize=750%2C375&ssl=

வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், 

பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணுதல் மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. 

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

மேலும் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் உரையாடல் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புகளான ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலும் இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1458491

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

2 months 4 weeks ago

loan.jpg?resize=750%2C375&ssl=1

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.

நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலியான மொபைல் செயலி மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1458518

எரிபொருள் விலைகளில் மாற்றம்

2 months 4 weeks ago

எரிபொருள் விலைகளில் மாற்றம்

Jan 5, 2026 - 09:14 PM

எரிபொருள் விலைகளில் மாற்றம்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று(05) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

335 ரூபாவாக இருந்த ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 340 ரூபாவாகும். 

இதேவேளை 277 ரூபாவாக இருந்த ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 279 ரூபாவாகும். 

இதேவேளை, 318 ரூபாவாக இருந்த சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 05 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 323 ரூபாவாகும். 

மேலும், மண்ணெண்ணெய் 02 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 182 ரூபாவாக விற்பனை செய்யப்படவுள்ளது. 

ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலையில் எந்த மாற்றமும் மேற்கொள்ளபடாது 294 ரூபாவிற்கே விற்பனை செய்யப்படவுள்ளது. 

இதேவேளை, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு சமாந்திரமாக லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலைகளை திருத்தியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmk1c01yy03jxo29nuenuc8gb

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துக - ரவிகரன்

2 months 4 weeks ago

Published By: Vishnu

05 Jan, 2026 | 07:45 PM

image

வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சிதைக்கின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வன்னிமாவட்டாநாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தியுள்ளார். 

பாராளுமன்றில் திங்கட்கிழமை (05) இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள்பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். 

இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வடக்கில் யாழ்ப்பாணம், தீவகம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. 

குறிப்பாக வடபகுதி கடற்பரப்பில் கடற்கரைகளை அண்மித்து இந்திய இழுவைப்படகுகள் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டு கடல்வளங்களை சூறையாடுவதுடன், வடபகுதி மீனவர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்திச் செல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது. 

வடபகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த யுத்தகாலப்பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை கொண்டுசெல்வதற்கே பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், இந்திய இழுவைப்படகுகளின் இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகள் வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 

அதேவேளை இந்திய இழுவைப்படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் தொடர்ச்சியாக முறையீடுகளைச் செய்துவருவதாகவும், கடற்றொழில் பிரதியமைச்சர் முல்லைத்தீவிற்கு வரும்போதும் இவ்விடயம்தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது நினைவுபடுத்தினார். இருப்பினும் தற்போதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் தெரிவித்தார். 

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசிற்கு இராஜதந்திர ரீதியான சிக்கல்நிலை இருந்தாலும், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு நிலையை கருத்திற்கொண்டு இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது வலியுறுத்தப்பட்டது. 

இந்நிலையில் இந்திய இழுவைப்படகுகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென தன்போது கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் ஆகியோரால் பதிலளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கும் இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துக - ரவிகரன் | Virakesari.lk

கொழும்பில் அமெரிக்க தூதரகம் முன் வெனிசுவேலா எண்ணெய் ஆக்கிரமிப்பை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம்

2 months 4 weeks ago

Published By: Vishnu

05 Jan, 2026 | 09:11 PM

image

வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளையடிப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்ட ஆக்கிரமிப்பை வன்மையாக கண்டிக்கிறோம்  என எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்ட இயக்கத்தின் உறுப்பினர்கள் கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் முன்னிலையில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

7Q8A7913.jpg

7Q8A7925.jpg

7Q8A7893.jpg


கொழும்பில் அமெரிக்க தூதரகம் முன் வெனிசுவேலா எண்ணெய் ஆக்கிரமிப்பை எதிர்த்து கவனயீர்ப்பு போராட்டம் | Virakesari.lk

அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை!

2 months 4 weeks ago

அரச வைத்தியசாலையில் முதல் முறையாக உணவுப் பிரிவு ஆரம்பிக்க நடவடிக்கை!

05 Jan, 2026 | 05:04 PM

image

அரசாங்க வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உரிய சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்காக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கத்துடன் இணைந்து ஒரு விசேட திட்டத்தை ஆரம்பித்து உள்ளது. மேலும் அதன் முன்னோடி திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (06) மஹரகம வைத்தியசாலையில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவின் தலைமையில் ஆரம்பிக்கபட உள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சம், நோயாளிக்கு அரிசி, காய்கறிகள், ஊறுகாய், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை தனித்தனியாக வழங்குவது ஆகும். உணவை ஒரு நோயாளி பார்த்தவுடன், சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதாக பணிபுரியும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது, மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு உணவு மற்றும் பானங்கள் தயாரிக்க கூடிய நவீன சமையலறை அமைக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த சமையலறையும் இந்த திட்டத்துடன் சேர்த்து திறக்கப்பட உள்ளது. 

வைத்தியசாலையின் சமையலறையின் பெயர் 'உணவு மற்றும் பானங்கள் துறை' என வழங்கப்பட்டுள்ளது.

நவீன முறையில் உணவு மற்றும் பானங்களை தயாரித்து பரிமாற நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு சிறப்பு பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது. 

மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் நிர்வாகம், சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம், இலங்கை ஊட்டச்சத்து நிபுணர்கள் நிறுவனம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்கள் சங்கம் ஆகியவற்றின் தலைமையில் செயல்படுத்தப்படும் இந்த விசேட திட்டத்திற்கு, ருஹுணு மகா கதிர்காம தேவாலயம் இலங்கை இராணுவம், லேடி ஜே நிறுவனம், ஹைட்ராமணி நிறுவனம் மற்றும் கிராண்ட் மோனார்க் ஹோட்டல் ஆகியவை தங்கள் ஆதரவினை வழங்குகின்றன. 

இந்தத் திட்டம் குறித்து மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையின் தலைவரும் ஒருங்கிணைப்பாளருமான ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் சஜித மல்லவராச்சி தனது கருத்துக்களைத் தெரிவித்து, நோயாளிகளுக்கு சத்தான மற்றும் சுவையான உணவை வழங்குவது மிகவும் முக்கியம் என்றும், சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவு நோயாளிகளுக்கு ஏற்படும் பல சிக்கல்களைக் குறைக்கும் என்றும் கூறினார். 

வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவுக்கு  சமமான அல்லது சிறந்த, அளவு, சுவையான மற்றும் அதிக ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்களைக் கொண்ட தரமான உணவை வழங்குவதே இந்த திட்டத்தின் முதன்மை நோக்கம் என்று அவர் மேலும் கூறினார். 

சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சகம் எதிர்காலத்தில் இந்த திட்டத்தை தீவு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

https://www.virakesari.lk/article/235270

ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை

2 months 4 weeks ago

05 Jan, 2026 | 06:05 PM

image

(எம்.நியூட்டன்)

வெளிநாட்டுச் சுற்றுலாப்பயணிகள் தமது விடுமுறையை மகிழ்ச்சியாகக் கழிப்பதற்கு, வடக்கு மாகாணம் மிகவும் பாதுகாப்பானதும் அமைதியானதுமான ஒரு பிரதேசமாகும். எனவே, ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளின் வருகையை வடக்குக்குத் திருப்ப உதவுவதுடன், எமது மாகாணத்தில் உள்ள முதலீட்டு வாய்ப்புகளில் ரஷ்ய முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதையும் ஊக்குவிக்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யனிடம் கோரிக்கை விடுத்தார்.

இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் லெவன் எஸ்.ஜகார்யன், வடக்கு மாகாண ஆளுநரை இன்று திங்கட்கிழமை (5) ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

IMG-20260105-WA0059.jpg

பல தசாப்தங்களுக்குப் பின்னர் ரஷ்யத் தூதுவர் ஒருவர் யாழ்ப்பாணத்துக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டமை மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டு ஆளுநர் அவரை வரவேற்றார்.

இச்சந்திப்பின்போது கருத்துத் தெரிவித்த ரஷ்யத் தூதுவர், 

ரஷ்யச் சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு அதிகளவில் வருகை தருகின்றனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனினும், வடக்கு மாகாணத்துக்கான ரஷ்யச் சுற்றுலாப்பயணிகளின் வருகை மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு வரும் ரஷ்யப் பயணிகளை ஈர்க்கும் வகையில் வடக்கு மாகாணம் தனது சுற்றுலாத் திட்டங்களை முன்னெடுப்பது சிறப்பாக அமையும் எனச் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த ஆளுநர், இந்தியாவுடனான நேரடி விமான சேவை காரணமாக அதிகளவான இந்தியச் சுற்றுலாப் பயணிகள் வடக்கு மாகாணத்துக்கு வருகை தருகின்றனர். 

வடக்கு மாகாணமானது சுற்றுலாப்பயணிகள் தங்கிச் செல்வதற்கு மிகவும் பாதுகாப்பான சூழலைக் கொண்டுள்ளது. இதனைத் தாங்கள் ரஷ்ய மக்களுக்குத் தெரியப்படுத்துவதன் மூலம் அவர்களின் வருகையை அதிகரிக்க உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

வடக்கு மாகாணத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக ரஷ்ய முதலீட்டாளர்களை இங்கு முதலீடு செய்வதற்கு ஊக்குவிக்குமாறும் ஆளுநர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, ரஷ்ய கலாசார நிலையத்தின் ஊடாக இலங்கையர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்துத் தெளிவுபடுத்திய தூதுவர், இவ்வாய்ப்புகளை வடக்கு மாகாண மாணவர்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

ரஷ்ய முதலீட்டாளர்கள் வடக்கில் முதலீடு செய்வதற்கு ஊக்குவியுங்கள் - ரஷ்ய தூதுவரிடம் வடக்கு ஆளுநர் கோரிக்கை  | Virakesari.lk

மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்

2 months 4 weeks ago

மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்

Jan 5, 2026 - 06:17 PM

மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்

பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் காணப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி மூலம் கிடைக்கும் நிதியில் குறித்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவனம் வடக்கு மாகாண விவசாய அமைச்சிற்கு வழங்கும் சமூக பொறுப்பு நிதி 19.9 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் பிரதேச சபை வளாகத்தில் பாரம்பரிய உணவகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (05) நடைபெற்றது. 

இதன் போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரையாற்றிருந்தார். 

புலம்பெயர்ந்து வாழ்கின்றவர் இங்கு மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும் தென்னிலங்கையிலிருந்து இங்கு இருக்கின்ற வளங்களை எவ்வாறு பயன்படுத்தி இலாபம் அடையலாம் என யோசித்து இங்கு வந்து தொழில் நிறுவனங்களை அமைக்கின்றனர். 

ஆனால் எமது புலம்பெயர்ந்த உறவுகள் கோடிக்கணக்கில் காணிகளை வாங்கி விட்டு அதில் மேல்மாடிகளை கட்டிவிட்டு வெளிநாட்டில் இருக்கிறார்கள் இவ்வாறான முதலீடுகள் செய்வதன் மூலம் எமது பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு தொழிலை வழங்கி எமது பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்ல முடியும் என தெரிவித்தார்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://adaderanatamil.lk/news/cmk15op2b03jmo29nhbphh488

வடக்கு, கிழக்கு வானிலை குறித்த விசேட எச்சரிக்கை அறிவிப்பு

2 months 4 weeks ago

எதிர்கால வானிலை குறித்த விசேட அறிவிப்பு

Jan 5, 2026 - 04:46 PM

எதிர்கால வானிலை குறித்த விசேட அறிவிப்பு

எதிர்கால வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 

நாட்டிற்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள வளிமண்டல கீழ்த்தளத் தளம்பல் நிலை மேலும் வலுவடையக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரணமாக, ஜனவரி 8 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் நாட்டின் குறிப்பாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

குறித்த அறிவிப்பு இன்று (05) மாலை 3.30 மணியளவில் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmk12eqyd03jeo29nqci0xzap

weather-09-10.jpg

10-01-25-Jaff-weather.jpg

9, 10 ஆம் திகதிகளில் கடும் மழைக்கான வாய்ப்புள்ளதாக தரவுகள் எச்சரிக்கின்றன.

முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது

2 months 4 weeks ago

முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது

05 January 2026

1767579054_8175458_hirunews.jpg

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். 

அதன்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. 

அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. 

இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார். 

முழுமையான அறிக்கை கிடைத்ததன் பின்னரே முறைமைசார் விசாரணைக்கான பணிப்புரைகளை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். 

சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். 

இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://hirunews.lk/tm/439109/mullaitivu-girls-death-expert-committees-action-report-released

தையிட்டி விகாரைக்கெதிராக  போராடியவா்களுக்கு  சொந்தப் பிணை

2 months 4 weeks ago

தையிட்டி விகாரைக்கெதிராக  போராடியவா்களுக்கு  சொந்தப் பிணை

adminJanuary 5, 2026

r-2.jpeg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம், தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டுமானத்திற்கு எதிராகப் போராடிய வேலன் சுவாமிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிரான வழக்கில் இன்று (ஜனவரி 5, 2026) முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தையிட்டி விகாரை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட வேலன் சுவாமிகள், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் உள்ளிட்ட ஐவருக்கு எதிராக காவல்துறையினா் இன்று புதிய குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தனர்.

இதனையடுத்து ஏற்கனவே கைது செய்யப்பட்டு பிணையில் இருந்த ஐவர் மற்றும் புதிதாகக் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்ட வலிகாமம் வடக்கு தவிசாளர் சோ. சுகிர்தன் உள்ளிட்ட அனைவரையும் சொந்தப் பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதிவாதிகள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான நல்லதம்பி சிறிகாந்தா, குமாரவடிவேல் குருபரன் தலைமையில் 13 சட்டத்தரணிகள் கொண்ட குழு முன்னிலையானது. போராட்டக்காரர்கள் நீதிமன்றக் கட்டளையை மீறினர் என்றும், இன நல்லிணக்கத்திற்குப் பங்கம் விளைவித்தனர் என்றும் கூறி காவல்துறைத் தரப்பு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.

அமைதியாகப் போராடுவது மக்களின் ஜனநாயக உரிமை. காவல்துறையினரே அங்கு சட்டத்தை மீறி வன்முறையைத் தூண்டியுள்ளனா் எனத் தொிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன்  தவிசாளர் நிரோஷ் காவல்துறையினரால் தாக்கப்பட்டதற்கான மருத்துவ அறிக்கையையும் அவர் சமர்ப்பித்தார்

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் இத்தகைய தற்காலிக கட்டளைகள் 14 நாட்களுக்கு மேல் செல்லுபடியாகாது என்பதைச் சுட்டிக்காட்டி வழக்கை முடிவுக்குக் கொண்டுவருமாறு சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரன்  வாதிட்டார்.

“பொதுத் தொல்லை” (Public Nuisance) தொடர்பான சட்டம். இதனை மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கப் பயன்படுத்த முடியாது என்றும், காவல்துறையினா் மேலிடத்து உத்தரவின் பேரில் இவ்வாறு செயற்படுகின்றனர் என்றும் சட்டத்தரணி நல்லதம்பி சிறிகாந்தா சாடினார்.

🔍 பின்னணி:
தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்துச் சட்டவிரோதமாக விகாரை கட்டப்படுவதாகக் கூறி தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன. இதில் வேலன் சுவாமிகள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

612104141_10225510334384464_205955717804



https://globaltamilnews.net/2026/225683/

ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை

2 months 4 weeks ago

ரிஷாட் பதியுதீன் இலஞ்சம் ஊழலுக்கெதிரான ஆணைக்குழுவில் முன்னிலை  :

adminJanuary 5, 2026

risath.jpg?fit=1170%2C681&ssl=1

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) இன்று (ஜனவரி 5, 2026, திங்கட்கிழமை) காலை இலஞ்சம் ஊழலுக்கெதிரான  ஆணைக்குழுவில் (CIABOC) முன்னிலையாகியுள்ளாா். கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் அமைச்சராகப் பதவி வகித்தபோது இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடு தொடர்பாக இந்த விசாரணை முன்னெடுக்கப்படுகிறது.

ராஜகிரிய பகுதியில் விவசாய அமைச்சகத்தின் (Ministry of Agriculture) அலுவலகத்தை அமைப்பதற்காக ஒரு தனியார் கட்டிடத்தை வாடகைக்கு எடுத்ததில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் போது அரசாங்கத்தின் விதிகளுக்குப் புறம்பாக அதிகப்படியான வாடகைத் தொகை செலுத்தப்பட்டமை மற்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பான ஒப்பந்தங்கள் மற்றும் நிதிப் பரிமாற்றங்கள் குறித்த ஆவணங்களுடன் அவர் முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

விவசாய அமைச்சகத்திற்காக ராஜகிரியவில் உள்ள குறித்த கட்டிடத்தை வாடகைக்கு எடுத்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு மட்டங்களில் விசாரணைகள் நடைபெற்று வந்தன. இதில் அமைச்சரவையின் அனுமதி மற்றும் கேள்விப்பத்திர நடைமுறைகள் (Tender Procedures) சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது குறித்து ஆணைக்குழு தற்போது தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.


https://globaltamilnews.net/2026/225679/

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

2 months 4 weeks ago

அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அதிருப்தி - முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

05 Jan, 2026 | 08:35 AM

image

தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகம் மற்றும் கொள்கை ரீதியான தீர்மானங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (04) மாலை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நாட்டின் தற்போதைய நிலைமை மிகவும் பயங்கரமாகத் தோன்றுவதாகக் குறிப்பிட்டார்.

விசேடமாக, அரசாங்கம் தற்போது கல்வித்துறையையும் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சுமத்திய அவர், நாட்டின் அனைத்துத் துறைகளும் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவித்தார்.

அரசாங்கத் தரப்பினர் கடினமாக உழைப்பதாகக் கூறிக்கொண்டாலும், நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 இதேவேளை, அரசாங்கத்தின் மின்கட்டண அதிகரிப்புத் திட்டம் குறித்து வினவியபோது, அது பொதுமக்களால் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு சுமை என அவர் தெரிவித்தார்.

மேலும், ஜனாதிபதி பதவி விலக வேண்டும் எனப் பல தரப்பினரால் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் வினவியபோது, அது பற்றித் தான் எவ்விதக் கருத்தையும் கூற விரும்பவில்லை எனத் தெரிவித்து அந்தப் பதிலைத் தவிர்த்துக்கொண்டார். நாட்டின் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு நிலவுவதாகவும், அது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/235232

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr