ஊர்ப்புதினம்

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை

2 months 4 weeks ago

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை

Jan 5, 2026 - 09:49 AM

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ FCID யில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று (5) காலை முன்னிலையாகியுள்ளார். 

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக அவர் நிதிக் குற்ற விசாரணை பிரிவுக்கு இன்று அழைக்கப்பட்டுள்ளார். 

அதற்கமையவே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்றைய தினம் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார். 

அவர் கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் சதொச நிறுவனத்தின் போக்குவரத்து முகாமையாளராக பணியாற்றிய இந்திக ரத்னமலல நேற்று கைதானார். 

அவர் வத்தளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை, முன்னாள் அமைச்சருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளில் ஈடுபடுத்துவதற்காக, அவரது மகன் ஜொஹான் பெர்னாண்டோவிற்கு போலி ஆவணங்களைத் தயாரித்துக் கொடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmk0nj1jj03ilo29nxi2h1ips

இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்

2 months 4 weeks ago

இந்திய இராணுவத் தளபதி உபேந்திர திவேதி இலங்கை வருகிறார்

Published By: Vishnu

05 Jan, 2026 | 03:57 AM

image

இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி எதிர்வரும் ஜனவரி 7 ஆம் திகதி இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

இருநாள் உத்தியோகபூர்வ வருகையின் போது, அவர் இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட உயர்தர தலைவர்களோடு சந்தித்து பன்முக பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

பாதுகாப்பு பயிற்சி ஒத்துழைப்பு, திறன் மேம்பாடு மற்றும் பிராந்திய பாதுகாப்பு போன்ற இருதரப்பு பணிகளில் கலந்துரையாடல்கள் நடைபெறும்.

இந்த விஜயம், இந்தியா – இலங்கை பாதுகாப்பு மற்றும் இராணுவத் திறன் ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/235226

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் கருத்து!

2 months 4 weeks ago

Harini-Amarasuriya.jpg?resize=750%2C375&

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் கருத்து!

திங்கட்கிழமை (05) முதல் ஆரம்பமாகும் புதிய கல்வி ஆண்டில், தரம் 1 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 29ஆம் திகதியும், தரம் 6 மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தை ஜனவரி 21ஆம் திகதியும் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (4) இடம்பெற்ற கல்விச் சீர்திருத்தங்கள் குறித்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் ,

புதிய கல்வி சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவது மட்டுமன்றி, அதற்கு இணையாக இந்த புதிய முறைக்கு மாணவர்களை பழக்கப்படுத்துவதற்கான திட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், பெற்றோர்களுக்கும் இது குறித்த அறிமுகத்தை வழங்குவதற்கான புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பாடத்தெரிவுகளுக்கு மாணவர்களைப் பழக்கப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து விடயங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆசிரியர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன.

இதுவரை 7,181 பயிற்சியாளர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் ஊடாக 132,580 ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, புதிய பாடத் தொகுதிகளுடன் (Modules) தொடர்புடைய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் 93 சதவீதமானோருக்கு தற்போது பயிற்சிகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

இவற்றுக்கு இணையாக, இந்த புதிய சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2026/1458331

பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு

2 months 4 weeks ago

பருத்தித்துறை நீதிமன்றில் களஞ்சியப்படுத்தப்பட்ட 600 கிலோ கேரளா கஞ்சா தீயிட்டு அழிப்பு

Published By: Vishnu

04 Jan, 2026 | 07:18 PM

image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை நீதாவன் நீதிமன்றில் சான்று பொருட்களாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த சுமார் 600 கிலோ கிராம் கேரளா கஞ்சா நீதவான் முன்னிலையில் தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

IMG_3047.jpeg

பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நியாயதிக்க எல்லைகளுக்குள் கடந்த காலங்களில பல்வேறு சந்தர்ப்பங்களில் கைப்பற்றபட்ட கஞ்சா போதைப் பொருட்கள் வழக்கின் சான்று பொருட்களாக நீதிமன்றில் பதிவாளரின் பொறுப்பில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தன.

IMG_3049.jpeg

அந்நிலையில் அவற்றில் வழக்குகள் முடிவுற்று, நீதவானினால் அழிக்க உத்தரவிட்டப்பட்ட சுமார் 600 கிலோ கேரளா கஞ்சா நீதாவனின் நேரடி கண்காணிப்பில் பொலிகண்டி குப்பைத்திடலில் அவை தீயிட்டு அழிக்கப்பட்டன.

IMG_3050.jpeg

https://www.virakesari.lk/article/235214

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல்

2 months 4 weeks ago

பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் மோசமான பல கூறுகள் புதிய வரைவிலும் உள்ளன ; வரைவை உடன் வாபஸ் பெறுமாறு அரசாங்கத்திடம் சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தல்

04 Jan, 2026 | 02:21 PM

image

(நா.தனுஜா)

பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள், அதற்குப் பதிலீடாகப் புதிதாக வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இப்புதியவரைவை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு வலியுறுத்தியுள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத்தடைச் சட்டத்துக்குப் பதிலாக பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம்  எனும் புதிய சட்டத்தைக் கொண்டுவருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்ட வரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதுடன், அதுபற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பிவைக்குமாறு நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்தும் நோக்கில் சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் இணைந்து உருவாக்கிய சமூக ஊடகப் பிரகடனத்துக்கான கூட்டிணைவு எனும் அமைப்பு இப்புதிய வரைவு தொடர்பான தமது கரிசனைகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவானது, தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டத்துடன் ஒப்பிடுகையில் அடையப்பட்டிருக்கும் மனித உரிமைகள் சார்ந்த பெருவெற்றி போல் காண்பிக்கப்படுகின்றது.

அந்த பிம்பத்தின் விளைவாக நிர்வாக ரீதியான தடுத்துவைப்பு, இராணுவ அதிகாரங்கள், கருத்து வெளிப்பாட்டுச்சுதந்திரம் சார்ந்த குற்றங்கள் என்பன உள்ளடங்கலாக அவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ள மிகமோசமான அடிப்படைகள் பற்றிய தெளிவற்ற தன்மை நிலவுகின்றது.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நிராகரிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்த பல்வேறு அடிப்படைக் கூறுகள் இவ்வரைவில் உள்வாங்கப்பட்டுள்ளன. பயங்கரவாதக்குற்றங்கள் தொடர்பில் குற்றவியல் சட்டத்துடன் அவசியமேற்படும் பட்சத்தில் அவசரகால வழிகாட்டல்களை இணைந்துப் பிரயோகிப்பதை விடுத்து, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் பிரயோகிக்கப்படுமாயின், அது சம்பந்தப்பட்ட நபருக்கான பாதுகாப்பு

தளர்த்தப்பட்ட குற்றவியல் அடிப்படையுடன், பரந்துபட்ட நிறைவேற்றதிகாரப் பிரயோகத்துக்கும் இடமளிக்கும். பரந்துபட்ட அதிகார வழங்கலுக்கு வாய்ப்பளிக்கும் இச்சட்ட வரைவின் அடிப்படை நோக்கம், அதன் பெயரில் உள்ளவாறு பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதே தவிர, வன்முறைகளிலிருந்து சாதாரண மக்களைப் பாதுகாப்பது அல்ல.

ஜனநாயகக் கோட்பாடுகள் வலுவிழப்பதைப் புறந்தள்ளிவிட்டு, தேசிய பாதுகாப்பை மாத்திரம் தனித்து முன்னிலைப்படுத்த முடியாது. எனவே இவ்வரைவை உடன் வாபஸ் பெறுமாறும், சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்புடையவாறு புதிய சட்டத்தை உருவாக்குவது குறித்து சகல தரப்பினருடனும் பரந்துபட்ட கலந்துரையாடல்களை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/235179

2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

2 months 4 weeks ago

2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

Jan 4, 2026 - 08:50 AM

2026 கல்வி ஆண்டு நாளை ஆரம்பம்: கல்வி அமைச்சு அறிவிப்பு

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணையின் முதற்கட்ட நடவடிக்கைகளுக்காக அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) திறக்கப்படவுள்ளன. 

இதற்கமைய, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் நாளை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.  

2026ஆம் கல்வி ஆண்டின் முதல் தவணை நடவடிக்கைகள், கடந்த டிசம்பர் 09ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைவாக முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கான 2025ஆம் கல்வி ஆண்டு கடந்த டிசம்பர் 22ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26ஆம் திகதியும் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjz5z4m303hko29ny8bybbd3

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு

2 months 4 weeks ago

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு

ஞாயிறு, 04 ஜனவரி 2026 08:31 AM

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடும் அநுர அரசு

கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.  40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 

பாடசாலைகள் நிறைவடையும் நேரம் மீண்டும் 1.30 என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்காலிக தீர்மானம் என சுற்று நிரூபத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தற்காலிக தீர்மானம் என்போது நிரந்தர தீர்மானமாகும்? அண்மைக் காலங்களில் கல்வி மறுசீரமைப்புக்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபங்களை ஒன்று சேர்த்தால் புத்தகமொன்றை அச்சிட முடியும்.

நேர அட்டவணை தொடர்பில் மாத்திரம் 4 சுற்றுநிரூபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. 

தற்போது வெளியிடப்பட்டுள்ள  தற்காலிக சுற்றுநிரூபத்தை மாற்றி பிரிதொன்று வெளியிடப்படும் போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். 

கல்வி மறுசீரமைப்பு பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறாகவே முன்னெடுக்கப்படுகின்றன.

நாட்டின் கல்வி முறைமைக்கு மறுசீரமைப்பு அவசியம் என்பது இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வர முன்னரிலிருந்தே வலியுறுத்தப்படும் ஒரு விடயமாகும்.

2023ஆம் ஆண்டு மாற்றப்பட்டிருக்க வேண்டிய பாடத்திட்டங்கள் மாற்றப்படவில்லை. ஆனால் அரசாங்கம் அது குறித்து கவனம் செலுத்தவுமில்லை. தற்போது நடைமுறைப்படுத்தப்படுவது தேசிய மக்கள் சக்தியின் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த கல்வி திட்டம் அல்ல.

40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் அரசாங்கம் விளையாடிக் கொண்டிருக்கிறது. 

ஆங்கிலப் பாடத்தொகுதியை தயாரித்தவர்களது பெயர் விபரங்கள் மிகத் தெளிவாகவுள்ளன. கல்விஅமைச்சு அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் அதனை விடுத்து காலத்தைக் கடத்துவதற்காகவே குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றுள்ளனர். மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடாமல் இந்த பிரச்சினைக்கு உடனடித்தீர்வினை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம் என்றார்.

https://jaffnazone.com/news/53930

பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்

2 months 4 weeks ago

பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்

January 3, 2026

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

www.ilakku.org
No image previewபிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் | Januar...
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ்

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!

2 months 4 weeks ago

சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!

Vhg ஜனவரி 04, 2026

AVvXsEhMB7wXPUsONIWHnDGB2SsqVZYBqBQi69BMMA4cC-0kPHrqkUc4jpuF0IqsjnqnK1S92qz3IGoadUvivvV9z-O9b8mwogHTFBQ8adww4Z7TerSLeckKCvR1yerUAxjfZIVrfTawwyZK9UoS55pdZR5MzChkWjtf-w_B6T2eqOrWB5UFfkFgogKP2C2qwKbZ

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். 

அவர் நாளை (05.01.2026) ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். 

பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான் , கடந்த காலங்களில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில்....

கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21.11.2025)  ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற  பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை (02.01.2026) ஆந் திகதியன்று பதவி நீக்கம் செய்துள்ளது.

https://www.battinatham.com/2026/01/blog-post_330.html

நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

2 months 4 weeks ago

நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

04 Jan, 2026 | 02:50 PM

image

பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர்.

மேற்படி விஜயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச்செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர், தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்புசார் தொடர் இனவழிப்பைத் தடுப்பதற்கு தாயகமும் புலம்பெயர் தேசமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளனர்.

அதன்படி இன்றைய தினம் (4) மாலை ஒஸ்லோவில் புலம்பெயர் தமிழர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ள இக்குழுவினர், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர்.

இச்சந்திப்பின்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் தமிழர்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளிட்ட  பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்ஆராயப்படவுள்ளது.

https://www.virakesari.lk/article/235184#google_vignette

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்

2 months 4 weeks ago

நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்

அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை  அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன்  வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக   ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி),  கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தலைமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு வெளி சக்திக்கும் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியது.

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்றும், எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகள் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதவை

அந்த வகையில், வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை  சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது என்று நாங்கள் நம்புகிறோம்.

அதன்படி, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No image previewநிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்
அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை  அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித

🏥 யாழில்    கனடா வாசி நிமோனியாவால் உயிாிழப்பு

2 months 4 weeks ago

🏥 யாழில்    கனடா வாசி நிமோனியாவால் உயிாிழப்பு

adminJanuary 4, 2026

கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த குடும்பத்தலைவர் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் வட்டுக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமநாயகம் திவாகர் (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கனடாவில் வசித்து வந்த இவர், புத்தாண்டு மற்றும் விடுமுறையைக் கழிப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது உறவினர்களுடன் தங்கியிருந்துள்ளார். கடந்த டிசம்பர் 31-ஆம் திகதி இவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 3, சனிக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்குத் தீவிரமான நிமோனியா (Pneumonia) காய்ச்சலே காரணம் என வைத்தியர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் காலந்தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

https://globaltamilnews.net/2026/225613/

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

3 months ago

அரசியலமைப்பு பேரவையில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன்  பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதென இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் அரசியல் குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் பதில் செயலாளர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தாயகம் அலுவலகத்தில் இன்று(03) இடம்பெற்றது.

இதன்பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…

பகிரங்கமாக சவால் 

அரசாங்கம் எல்லைமீள் நிர்ணயம் செய்தபின்னர் தான் மாகாணசபை தேர்தல் என்று கூறுவதை நாம் ஏற்கமுடியாது. தேர்தல் முறை மறுசீரமைப்பு என்பது ஒரு விடயம்.

ஆனால் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்பதற்காக தேர்தலே நடத்தாமல் இருப்பது ஏற்க முடியாத ஒரு விடயம். அதனை அரசுக்கு சொல்லியிருக்கிறோம். அப்படி பார்த்தால் கடந்த இரு நாடாளுமன்ற தேர்தல்கள் நடாத்தியிருக்க முடியாது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

எனவே தேர்தலை உரிய காலத்தில் நடாத்துவது அடிப்படையான விடயம். அரசானது தேர்தலுக்கு முகம் கொடுக்க பயந்துகொண்டு மாகாணசபை தேர்தலை காலவரையின்றி பிற்போட்டுக்கொண்டிருப்பதாக தெரிகின்றது.

முடிந்தால் மாகாணசபை தேர்தலை உடனடியாக நடாத்துங்கள் என்று பகிரங்கமாக சவால் விடுக்கின்றோம். வடகிழக்கில் அரசின் செல்வாக்கு பாரிய அளவு சரிவடைந்துள்ளது. மக்கள் தெளிவடைந்துள்ளனர்.

அதனை நடத்தினால் மண் கௌவ்வுவீர்கள் என சவாலாக  கூறுகின்றோம்.

நல்லூர் பிரதேசசபை உறுப்பினர்

அத்துடன் பயங்கரவாத தடுப்புச்சட்டம் முற்றுமுழுதாக நீக்கப்படவேண்டும். மாற்றீடாக எந்த சட்டமும் தேவையில்லை என்று எங்களை விட தீவிரமாக இருந்தவர்கள் இந்த ஜேவிபியினர். கடந்தகாலங்களில் மாற்று வரைபுகள் வந்தபோது இவர்கள் அந்த கூட்டங்களுக்கே வரமாட்டார்கள்.

அதனை நீக்குமாறு நாங்கள் நடாத்திய போராட்டங்களில் ஒவ்வொரு மாவட்டங்களில் இருந்தும் அவர்கள் சார்ந்த முக்கியமான ஒருவர் பங்கு கொண்டிருந்தார். எனவே ஆட்சிக்கு வந்தவுடன் இருப்பதை விட மோசமான ஒரு வரைபு தற்போது வெளிவந்துள்ளது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாப்பதற்காகவாம் என்று கூறப்படுகின்றது. இது ஒரு நகைப்பிற்குரிய விடயம். அவ்வாறு எனில் மக்களை பாதுகாப்பதற்காக இல்லை. இதனை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் உள்ள விடயங்கள் தொடர்பாக கட்சி சில கலந்துரையாடல்களை நடாத்தும்.அந்த வரைபை முற்றாக எதிர்க்கிறோம். கட்சியில் இருந்து நீக்கம் நல்லூர் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இது ஒரு மோசமான குற்றச்சாட்டு. சட்டத்தின் முன் குற்றம் நிரூபிக்கப்படும் வரைக்கும் அவர் நிரபராதியாக இருந்தாலும் கூட ஒரு பொறுப்பான அரசியல் கட்சி என்ற ரீதியிலே இந்த செயற்பாட்டிற்கு இடம்கொடுக்க கூடாது.

எனவே உடனடியாக அவரை கட்சியில் இருந்து நீக்குவது என்ற தீர்மானம் எடுத்திருக்கிறோம்.

அரியநேந்திரன்

அத்துடன் எங்களுடைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களின் நடத்தை தொடர்பாக பேசியிருக்கிறோம்.

குறிப்பாக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அரியநேந்திரனை கட்சியின் நிகழ்வு ஒன்றில் முக்கியத்துவம் வழங்கியதான குற்றச்சாட்டு ஒன்று மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீநேசன் மீது இருந்தது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

கட்சி தீர்மானத்திற்கு மாறாக செயற்ப்பட்டமையால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவரே அரியநேந்திரன். அந்த தீர்மானத்துடன் இணைந்து செயற்ப்படவேண்டியது கட்சியில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமை.எனவே அவ்வாறு செயற்ப்பட இடமளிக்க முடியாது என்ற விடயத்தையும் வலியுறுத்தியுள்ளோம்.

சிறீதரன் மீது குற்றச்சாட்டு

அத்துடன் தேசிய ரீதியில் ஒரு குற்றச்சாட்டு ஒன்று எமது நாடாளுமன்றக்குழுத்தலைவர் சிவஞானம் சிறீதரன் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு பேரவையில் அரசுடன் இணைந்து அனைத்திற்கும் வாக்களித்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. விசேடமாக கணக்காளர் நாயகம் நியமனத்தில் ஒரு இராணுவ அதிகாரிக்கு சார்பாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டிற்கான அலுவலகத்திற்கும் இராணுவ அல்லது பாதுகாப்புத்தரப்பின் பின்புலத்தை சேர்ந்த இரண்டு பேருக்கு சிறீதரன் சார்பாக வாக்களித்தமை மட்டுமல்லாமல் அவர்களை தெரிவுசெய்கின்ற நேர்முக பரீட்சையிலும் தேர்வுசெய்துள்ளார். என்ற குற்றச்சாட்டுக்கள் இருந்தது.அதனை அவர் மறுத்திருந்தார். ஆனால் அது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

அந்த இருவரையும் நியமிக்கக்கூடாது என்று கட்சி ஜனாதிபதிக்கு கடிதம் எழுத வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டு எழுதிவைத்திருந்தோம். எனவே அது ஒரு தர்மசங்கடமான நிலைமையை கட்சிக்கு ஏற்ப்படுத்தியுள்ளது. இவர்களை நியமிக்க கூடாது என்று கட்சி கடிதம் எழுதியுள்ளது. ஆனால் கட்சியை சேர்ந்தவர் அவர்களை தெரிவுசெய்துள்ளார்.

அத்துடன் அதற்கு முன்னரும் கூட இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நியமனம் தொடர்பாக மத்தியகுழு கூட்டத்தில் அவரிடம் விளக்கம் கேட்டிருந்தோம். கூடிய புள்ளி எண்ணிக்கையை பெற்றவருக்கு அந்த பதவியை வழங்காமல் இரண்டாவதாக வந்தவருக்கு அரசாங்கம் கொடுத்தபோது அரசுடன் இணைந்து அவர் வாக்களித்ததாக சொல்லப்பட்டது.

ஒழுக்காற்று விடயங்கள் 

அதற்கான நியாயப்பாடுகளை கட்சிக்கூட்டத்தில் அவர் சொல்லியிருந்தார். மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பதவி தொடர்பான வாக்கெடுப்பிலும் அப்படி செயற்ப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது.

கணக்காளர் நாயகம் விடயத்தில் மூன்று தடவைகள் அவ்வாறு நடந்துள்ளது. இறுதியாகவே அந்த இராணுவ அதிகாரியும், அதற்கு முன்பு ஜனாதிபதி தனது நெருங்கிய நண்பரையும் பின்னர் இரண்டாம் நிலையில் இருக்கும் ஒருவரையும் பரிந்துரை செய்திருந்தார். இருப்பினும் அந்த மூன்றும் நிறைவேறவில்லை.

ஏனெனில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இருவரும் சிவில் சமூகத்தை சேர்ந்த மூவரும் சேர்ந்து அந்த பிரேரணைகளிற்கு எதிராக வாக்களித்திருந்தனர். அவர்களுக்கு சார்பாக சிறீதரனின் வாக்கு உட்பட நான்கு வாக்குகள் கிடைத்தது. எனவே அரசுடன் இணைந்து இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டது தொடர்பான குற்றச்சாட்டு அவருக்கு இருந்தது.

சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம் | Sritharan Resigns From Parliament Position Sumanth

ஏற்கனவே இது தொடர்பாக நாடாளுமன்றில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரச்சனையை எழுப்பியிருந்தார். சிறீதரன் பிரதிநிதித்துவப்படுத்துவது பிரதான எதிர்க்கட்சி தவிர்ந்த மற்றய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதி. எனவே அப்படியாக இருப்பவர் எல்லா விடயங்களிலும் கண்ணை மூடிக்கொண்டு அரசுக்கு சார்பாக வாக்களிப்பது தொடர்பான குற்றச்சாட்டு எட்டாவது தடவையாக நடந்துள்ளது.

எனவே கட்சியையும் சங்கடப்படுத்தாமல் அவரையும் சங்கடத்திற்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக அரசியலமைப்பு பேரவையில் இருந்து அவர் பதவிவிலக வேண்டும் என்று பணிப்புரை வழங்குவதாக தீர்மானம் எடுத்துள்ளோம் என்றார்.

அத்துடன் கட்சியின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பாக பிரதேச சபை உறுப்பினர்களுக்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கட்சியின் உத்தரவு மீறப்படும் சந்தர்ப்பத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது அவர்களுக்கு ஞாபகமூட்டப்பட்டிருக்கின்றது.


https://tamilwin.com/

தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!

3 months ago

%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D.-%E

தையிட்டியில் மீண்டும் புத்தர் சிலை!

தையிட்டிக்கு கொண்டு வரப்பட்டிருந்த புத்த சிலை இராணுவ சிற்றுண்டி சாலையில் இருந்து எடுப்பட்டுள்ளது என kks பொலிஸ்சார் தெரித்துள்ளனர். இன்னிலையில் அதனை கொண்டு வந்த மதகுருவிடம் வாக்குமூலம் பெறவுள்ளது.

மேலும்  இன்று  யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1458192

டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?

3 months ago

டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?

கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

ஆனால் அவர் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென அரசு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கைவிரிக்கப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தொடர்பான கடந்த கால மோசடிகள் மற்றும் காணி ஒதுக்கீடுகளைச் சுட்டிக்காட்டும் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளுக்கு அரச நிலங்கள் வாடகை செலுத்தப்படாமல் ஓதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இவை சுமார் நாலாயிரம் ஏக்கர் நிலங்களாகவும், முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், முறையற்ற அரச காணிகள் மற்றும் மாதாந்தம் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கான குற்றச்சாட்டுகள் காணித்திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக எழுந்துள்ளன.

இதனால் முன்னாள் வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் தற்போதைய வடமாகாண சபை அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு தரப்பின் தகவலின்படி, கடலட்டை பண்ணைகளின் நிலங்களை பிரதேச செயலகங்கள் வழியாக ஒதுக்குதல் செய்யாமல், முன்னாள் அமைச்சர் தன்னிச்சையாக தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியதாகவும், இந்நிலையில் அதற்கு தொடர்புடைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது அரசு டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது விசுவாச அதிகாரிகளையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளது.

https://www.samakalam.com/டக்ளஸ்-மீது-பாயும்-புதிய/

தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்!

3 months ago

தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்!

adminJanuary 3, 2026

attack.jpg?fit=696%2C488&ssl=1

தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாரந்தனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , தீவகம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் , மற்றும் மாடுகள் களவாட்டப்பட்டு , இறைச்சியாக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார்.

குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடுகளை களவாடி இறைச்சியாக்க முற்பட்ட கும்பல் ஒன்றினை மடக்கி பிடித்து , அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கடையொன்றுக்கு சென்ற சமயம் , மாடுகளை களவாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் மது போதையில் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

தாக்குலுக்கு இலக்கான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு ,  ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவற்துறையினரர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://globaltamilnews.net/2026/225550/

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!

3 months ago

யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!

adminJanuary 3, 2026

5J.jpeg?fit=1170%2C659&ssl=1

தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கைகோர்த்துள்ளனர்.

தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில், இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிகிரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்துகளில் பெருமளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர்.

சிகிரியாவிலிருந்து புத்தர் சிலையுடன் வருகை தந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை காவல்துறையினர் இடைமறித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், தையிட்டி விகாரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பேருந்து மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

தமது நில உரிமையை மீட்டெடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதியுடன் உள்ளனர்.

https://globaltamilnews.net/2026/225560/

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது

3 months ago

திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை : 20ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடற்கரையில் நடைபெற்றது

Published By: Vishnu

02 Jan, 2026 | 07:24 PM

image

திருகோணமலை கடற்கரையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட 5 மாணவர்களின் 20 ஆவது நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (02) மாலை 6.00 மணியளவில் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட திருகோணமலை கடற்கரையில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக இடம்பெற்றது. இதன்போது படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நிழற்படங்களுக்கு மலர்தூவி, வளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

WhatsApp_Image_2026-01-02_at_18.39.40.jp

திருகோணமலை பிரதான கடற்கரைச் சந்தியிலுள்ள காந்தி சிலைக்கு அருகாமையாக மாலைப் பொழுதில் தினமும் இளைஞர்கள் நின்று கதைப்பது வழக்கம். 02.01.2006 அன்றைய மாலைப் பொழுதும் மாணவர்கள் பலர் அவ்விடத்தில் கூடிநின்று கதைத்துக்கொண்டிருந்தனர். அப்போது ஆட்டோ ஒன்றில் வந்த இனம் தெரியாத நபர்கள் அந்த இளைஞர்கள் மீது கைக்குண்டை வீசிவிட்டுக் கோட்டைப் பக்கமாகச் சென்றனர்.

WhatsApp_Image_2026-01-02_at_18.39.41.jp

கைக்குண்டு வெடித்ததில் திருமலை புனிதஜோசப் கல்லூரி மாணவரான யோகராஜா பூங்குழலோன் என்பவர் காயமடைந்தார். இவரை ஏனைய மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்ல முற்பட்டபோது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் அங்கு சுமார் 10 நிமிடங்கள் வரை துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

WhatsApp_Image_2026-01-02_at_18.39.411.j

இதனால் கடற்கரையில் நின்ற மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடத்தொடங்கினர். இதற்கிடையில் காயமடைந்த மாணவர்களுக்கு அருகில் விரைந்த கடற்படையினர் அவர்களை நிலத்தில் விழுத்தி கண்மூடித்தனமாகத் தாக்கினர். மாணவர்கள் இச்சம்பவம் பற்றி தமக்கு ஏதும் தெரியாது எனக் கூறியபோதும் மாணவர்களைச் சப்பாத்துக் கால்களால் மிதித்து முழங்காலில் நிக்க வைத்து சுட்டுக் கொன்றதாக அக்காலத்தில் வெளிவந்த பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

இத்தகைய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் லோகிதராசா ரொகான், சண்முகராஜா சஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகியோர் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் செய்தி செளியிட்டிருந்த சுகிர்தராஜன் என்ற ஊடகவியலாளரும் படுகொலை செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/235073

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்

3 months ago

விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிராக ஒத்துழைப்பு வழங்கிய சிலர் கைது - சாகர காரியவசம்

02 Jan, 2026 | 05:26 PM

image

(நமது நிருபர்)

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்களென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

 2026 ஆம் ஆண்டு நாட்டு மக்களுக்கு சிறந்ததாக அமைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறோம். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

 விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/235061

நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

3 months ago

நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்

02 Jan, 2026 | 01:15 PM

image

நயினாதீவு விகாரை விகாராதிபதி நவதலக பதும தலைமையிலான பௌத்த பிக்குகள் இன்றைய தினம் (2) தையிட்டிக்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்த பௌத்த பிக்குகள் அங்குள்ள காணி உரிமையாளர்கள் மற்றும் பொது மக்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

குறித்த விகாரையானது தனியார் காணிகளை சுவீகரித்து சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்து தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நாளைய தினமும் (3) ஒரு போராட்டம் நடத்தப்படவுள்ளது.

கடந்த போராட்டமொன்றில் கலந்துகொண்ட சைவ மதகுரு, பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் என ஐவர் கைது செய்யப்பட்ட விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வகையில் குறித்த குழுவானது இன்றைய தினம் அங்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

download__2_.jpg

https://www.virakesari.lk/article/235025

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr