ஊர்ப்புதினம்

”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது” - இளையதம்பி சிறிநாத்

3 months ago

”சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை தமிழரசுக் கட்சி கைவிடாது”

தமிழ் மக்களின் மிக முக்கிய கோரிக்கையான சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் கைவிடாது என பாராளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பிராந்திய அரசியலில் இந்தியாவை மீறி எந்த விடயங்களையும் செய்ய முடியாது என்பது கடந்த கால அரசியல் போராட்ட வரலாற்றில் எங்களுக்கு நன்றாக தெரியும்.

எனவே குறைந்த தீர்வாக இந்தியா கொண்டு வந்த 13வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாண சபை அதிகாரத்தை பெற்று அதை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட நகர்வுகளை செய்ய வேண்டும்.

அதேவேளை தமிழ் மக்களின் மிக முக்கியமான கோரிக்கை சமஸ்டி முறையிலான தீர்வாகும்.

அதனை ஒருபோதும் இலங்கை தமிழரசுக் கட்சி விட்டுக்கொடுக்காது.

புதிய ஆண்டு பிறக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கான அரசியல் எதிர்பார்ப்புக்கள், அபிவிருத்தி வாழ்வாதாரங்கள் முற்றுமுழுதாக கொண்டு செல்லப்பட்டுள்ளதா? என்று பார்த்தால் ஒரு ஏமாற்றமான நிலைமையே மிஞ்சி இருக்கின்றது.

2025 புயல் ஏற்பட்டு தமிழ் மக்களுடைய பிரதேசங்களிலும் மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

போர்க்காலப் பகுதியில் சிதைக்கப்பட்ட கட்டுமானங்கள் இன்னும் மீண்டெழ முடியாத அளவுக்கு தமிழ் மக்களின் வாழ்வாதாரங்களை பெரிதும் பாதித்திருக்கின்றன.

தற்போது இந்த புயல் காரணமாகவும் மக்களின் நிலை மேலும் மோசமாகியுள்ளது.

அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆகக் குறைந்த தீர்வாக 13வது திருத்தத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய மாகாண சபை அதிகாரங்கள் கூட பாரியளவில் இழுத்தடிப்பு செய்யப்பட்டிருக்கின்றது

மிக இலகுவாக பாராளுமன்றத்தின் அனுமதியுடன் செய்யக்கூடிய சூழ்நிலை இருக்கின்றது.

13வது திருத்தத்தின் ஊடான இந்த மாகாண சபையை நாம் முதல் மிக வெற்றிகரமாக அதன் முழுமையான அதிகாரங்களை பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வாக செய்ய வேண்டும் என்பதே யதார்த்த கள அரசியல் ஆகும் என தெரிவித்துள்ளார்.

https://www.samakalam.com/சமஸ்டி-முறையிலான-அரசியல/

சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️

3 months ago

சொத்து சேர்த்தது எப்படி? 6 அமைச்சர்களிடம் அதிரடி விசாரணை! ⚖️

adminDecember 28, 2025

தற்போதைய அரசாங்கத்தின் 5 அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் ஒரு பிரதி அமைச்சர் உட்பட 6 பேருக்கு எதிராக, அறிவிக்கப்படாத சொத்துக்கள் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்க இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

🔍 விசாரணைக்குள்ளாகும் அமைச்சர்கள்:

  • பிமல் ரத்நாயக்க

  • வசந்த சமரசிங்க

  • குமார ஜெயக்கொடி

  • சுனில் ஹந்துன்னெத்தி

  • நளிந்த ஜெயதிஸ்ஸ

  • சுனில் வட்டகல (பிரதி அமைச்சர்)

ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்கள் அதிகாரத்தின் தலைவர் ஜமுனி கமந்த துஷார செய்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக வாக்குமூலங்களை வழங்குவதற்காக அவர் நாளை (டிசம்பர் 30, செவ்வாய்க்கிழமை) ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

சொத்துக்கள் எவ்வாறு திரட்டப்பட்டன என்பது குறித்து பணமோசடி சட்டத்தின் கீழ் இந்த விசாரணைகள் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை சட்டத்தின்படி, மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொரு ஆண்டும் தங்களது சொத்து மற்றும் கடன் விபரங்களை (Asset Declaration) சமர்ப்பிப்பது கட்டாயமாகும். இதில் ஏதேனும் முரண்பாடுகள் அல்லது கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் கண்டறியப்பட்டால், இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு தன்னிச்சையாகவோ அல்லது முறைப்பாட்டின் அடிப்படையிலோ விசாரணை நடத்தும் அதிகாரம் உண்டு.



https://globaltamilnews.net/2025/225152/#google_vignette

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது

3 months ago

மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் வியாபாரம் – பெண் உட்பட நால்வர் கைது:

adminDecember 28, 2025

jaffna-drugs-arrest.jpg?fit=1170%2C878&s

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் நீண்ட காலமாக திட்டமிட்டு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த ஒரு பெண்ணையும், அவருடன் தொடர்புடைய மூவரையும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நீண்ட காலமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் விநியோகித்து வந்துள்ளார்.

இது தொடா்பில் பொதுமக்கள் வழங்கிய இரகசியத் தகவல்களின் அடிப்படையில், காவல்துறையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் குறித்த பெண் ஐஸ் போதைப்பொருளுடன் கையும் மெய்யுமாகக் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து சட்டவிரோத போதை மாத்திரைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் போதை தரக்கூடிய ‘மாவா’ பாக்கு வகைகளுடன் மேலும் ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் நீண்டகாலமாக இந்த வலையமைப்பை நடத்தி வந்துள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவர்களுக்கு போதைப்பொருள் எங்கிருந்து கிடைக்கிறது மற்றும் இதன் பின்னணியில் உள்ள முக்கிய புள்ளிகள் யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://globaltamilnews.net/2025/225120/

அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்

3 months ago

அலையோடு உறவாடு… உணவுத் திருவிழா கோலாகலம்

adminDecember 28, 2025

3-2-3.jpeg?fit=1170%2C658&ssl=1

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை (KKS) கடற்கரையில், உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) இந்த விசேட ” அலையோடு உறவாடு ” உணவுத் திருவிழா ஆரம்பமாகியுள்ளது.

வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நிகழ்வில் வடக்கு மாகாணத்திற்கே உரிய தனித்துவமான பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் கடலுணவுப் பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

அத்துடன் கிராமிய உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்கள் மற்றும் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் சந்தையும் இதில் இடம்பெறுகிறது. மேலும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மகிழ்வூட்டும் நிகழ்ச்சிகள், பண்பாட்டு விழுமியங்களை பறைசாற்றும் கலாச்சார நிகழ்வுகள்,இரவு நேரத்தை உற்சாகப்படுத்த பிரம்மாண்டமான இன்னிசை கச்சேரி ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.

இன்று இரவு வரை நீடிக்கவுள்ள இந்தத் திருவிழா, காங்கேசன்துறை கடற்கரைப் பகுதிக்கு ஒரு புத்துயிரைத் தந்துள்ளதுடன், ஏராளமான மக்கள் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.

https://globaltamilnews.net/2025/225120/

யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!

3 months ago

download-15.jpg?resize=275%2C183&ssl=1

யாழ் உள்ளக விளையாட்டு அரங்கு நிதி கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றம்!

யாழ் மாவட்டத்தில் உள்ளக விளையாட்டு அரங்கினை நிர்மாணிப்பதற்காக அமைச்சினால் ஒதுக்கப்பட்ட சுமார் 169 மில்லியன் ரூபாய் நிதி செலவு செய்யப்படாமல் கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றப்பட உள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான கேள்வியின் போது பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, உள்ளக விளையாட்டு அரங்கு தொடர்பான வழக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தில் இடம் பெற்றுவரும் நிலையில் நீதிமன்ற வழக்கு இடம்பெறுகின்ற காரணத்தினால் வழக்கு நிறைவடையாமல் கட்டுமானங்களை மேற்கொள்ள முடியாத நிலையில் குறித்த நிதியை கட்டடங்கள் திணைக்களத்துக்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பில் கட்டுவதற்குரிய உத்தரவு கிடைக்குமாயின் அதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்படும் அல்லாவிட்டால் மாற்றுக்காணி ஒன்றை தேர்வு செய்து உள்ள விளையாட்டு அரங்கினை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1457475

2026 இல் உள்ள அரச விடுமுறைகள்

3 months ago

2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ...

Dec 28, 2025 - 12:07 PM

2026 இல் உள்ள அரச விடுமுறைகள் இதோ...

2026 ஆம் ஆண்டு ஆரம்பமாவதற்கு இன்னும் 03 நாட்களே உள்ளன. 

புதிய ஆண்டிற்கான நாட்காட்டிகள் ஏற்கனவே வௌிவந்துள்ளன. 

இந்நிலையில் 2026 ஆம் ஆண்டிற்கான நாட்காட்டியை அரசாங்க அச்சுத் திணைக்களமும் வெளியிட்டுள்ளது. 

இதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 26 அரசாங்க விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியாக தலா 4 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. 

2026 ஆம் ஆண்டின் தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு ஏப்ரல் 14 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மலரவுள்ளது. 

அத்துடன், வெசாக் பௌர்ணமி தினம் மே 01 ஆம் திகதியும், நத்தார் டிசம்பர் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் இடம்பெற்றுள்ளன. 

2026 ஆம் ஆண்டின் அரச விடுமுறைகள், 

ஜனவரி - 03 சனிக்கிழமை – துருத்து முழுநோன்மதி தினம் 

ஜனவரி - 15 வியாழக்கிழமை – தைப்பொங்கல் பண்டிகை 

பெப்ரவரி - 01 ஞாயிற்றுக்கிழமை – நவம் முழு நோன்மதி தினம் 

பெப்ரவரி - 04 புதன்கிழமை – சுதந்திர தினம் 

பெப்ரவரி - 15 ஞாயிற்றுக்கிழமை –  மகா சிவராத்திரி விரதம் 

மார்ச் - 02 திங்கட்கிழமை –  மெதின் முழுநோன்மதி தினம் 

மார்ச் - 21 சனிக்கிழமை – ரமழான் பண்டிகை 

ஏப்ரல் - 01 புதன்கிழமை – பஃக் முழுநோன்மதி தினம் 

ஏப்ரல் - 03 வெள்ளிக்கிழமை –  பெரிய வெள்ளி தினம் 

ஏப்ரல் - 13 திங்கட்கிழமை –  சிங்கள, தமிழ் புத்தாண்டு தினத்திற்கு முந்திய தினம் 

ஏப்ரல் - 14 செவ்வாய்க்கிழமை – சிங்கள, தமிழ் புத்தாண்டு 

மே - 01 வெள்ளிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினம் 

மே - 01 வெள்ளிக்கிழமை – உலக தொழிலாளர் தினம் 

மே - 02 சனிக்கிழமை – வெசாக் முழு நோன்மதி தினத்திற்கு அடுத்த தினம் 

மே 28 வியாழக்கிழமை – ஹஜ் பெருநாள் 

மே 30 சனிக்கிழமை – அதி பொசன் முழு நோன்மதி தினம் 

ஜூன் - 29 திங்கட்கிழமை – பொசொன் முழுநோன்மதி தினம் 

ஜூலை - 29 புதன்கிழமை –  எசல முழுநோன்மதி தினம் 

ஒகஸ்ட் - 26 புதன்கிழமை – மீலாதுன் நபி (நபிகள் நாயகத்தின் பிறந்த தினம்) 

ஒகஸ்ட் 27 வியாழக்கிழமை – நிக்கினி முழுநோன்மதி தினம் 

செப்டம்பர் 26 சனிக்கிழமை – பினர முழுநோன்மதி தினம் 

ஒக்டோபர் 25 ஞாயிற்றுக்கிழமை – வஃப் முழுநோன்மதி தினம் 

நவம்பர் 08 ஞாயிற்றுக்கிழமை – தீபாவளிப் பண்டிகை 

நவம்பர் 24 செவ்வாய்க்கிழமை – இல்புர முழுநோன்மதி தினம் 

டிசம்பர் 23 புதன்கிழமை – உந்துவப் முழுநோன்மதி தினம் 

டிசம்பர் 25 வெள்ளிக்கிழமை – நத்தார் பண்டிகை

https://adaderanatamil.lk/news/cmjpcwz3m0379o29nx5mkv94r

முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

3 months ago

முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

Dec 27, 2025 - 09:51 PM

முதல் 11 மாதங்களில் அரச வருமானம் 4900 பில்லியனை கடந்தது

2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் அரசாங்கத்தின் மொத்த வரி வருமானம் 4,613 பில்லியன் ரூபாய் என நிதி அமைச்சு வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை சுங்கத்தின் ஊடாக 2,223 பில்லியன் ரூபாய் வருமானமும், உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாக 2,105 பில்லியன் ரூபாவும், மதுவரித் திணைக்களத்தின் ஊடாக 213 பில்லியன் ரூபாவும், ஏனையவை ஊடாக 70 பில்லியன் ரூபாவும் வருமானமாக பெறப்பட்டுள்ளது. 

2025 இன் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதி மூலம் ஈட்டப்பட்ட வரி வருமானம் 410.5 பில்லியன் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. 

இது கடந்த 2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 355 பில்லியன் ரூபாவினால் அதிகரித்துள்ளது. 

2024 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வாகன இறக்குமதியின் ஊடாக 54.6 பில்லியன் ரூபாய் வருமானமாக பெறப்பட்டிருந்தது. 

இதேவேளை 2025 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் மொத்த அரச வருமானம் 35.5% இனால் அதிகரித்து 4,945.8 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. 

2024 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தத் தொகை 3,650.9 பில்லியன் ரூபாவாகக் காணப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmjoica7w036vo29ndf1gzlsj

எமது காணிகளை மீட்டு தாருங்கள் - நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் கோரிக்கை

3 months ago

எமது காணிகளை மீட்டு தாருங்கள் - நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டி விகாரைக்காக காணி இழந்தவர்கள் கோரிக்கை

27 Dec, 2025 | 05:48 PM

image

தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விஹாரதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவிப்பது தொடர்பில் கலந்துரையாடி உள்ளனர்.

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை அடாத்தாக கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது.

குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி அநுர குமார திஸ்ஸ நாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் " மக்களின் காணி மக்களுக்கே " என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதி அளித்திருந்தார். ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை. 

இந்நிலையில் நயினாதீவு நாக தீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி, அந்த காணியினை அவர்களிடமே மீள் அளிப்பதே அறம் என கூறி இருந்தார்.

அதனை அடுத்து, காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன், காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதேவேளை, தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட, தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறி இருந்தமை குறிப்பிடத்தக்கது. 

4__3___1_.jpg

4__1_.jpg

https://www.virakesari.lk/article/234548

பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

3 months ago

பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

Dec 27, 2025 - 10:13 PM

பாலத்தின் கீழ் காணாமல் போனவரின் சடலம் மீட்பு

பரந்தன் - முல்லைத்தீவு A-35 வீதியில் இந்திய இராணுவத்தினரால் அண்மையில் தற்காலிகமாக புனரமைக்கப்பட்ட பாலத்தின் கீழ் பகுதியில் தவறிவீழ்ந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் 

குறித்த நபர் மாடு மேய்ப்பதற்காக சென்ற போது இன்று (27) மாலை 4 மணியளவில் தவறி நீருக்குள் வீழ்ந்து காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதனையடுத்து காணாமல் போனவரை தேடும் பணிகளில் பிரதேச மக்கள் ஈடுபட்டிருந்தனர். 

பின்னர் பொலிஸாரும், பிரதேச மக்களுடன் இணைந்து தீவிர தேடுதலில் ஈடுபட்டிருந்தனர். 

இந்நிலையில் காணாமல் போனவர் உயிரிழந்த நிலையில், அவரது சடலம் இன்றிரவு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

-முல்லைத்தீவு நிருபர் தவசீலன்-

https://adaderanatamil.lk/news/cmjoj4sq1036wo29np6kg9fw5

வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம்

3 months ago

வவுனியாவில் விகாரை அமைக்கும் தொல்பொருள் திணைக்களம் - பிரதேசமக்கள் விசனம்

27 Dec, 2025 | 03:14 PM

image

வவுனியா சமணங்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் அப்பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார்  ஆலயத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளவிடாது தடுத்து வந்த தொல்பொருள் திணைக்களம் சில ஆண்டுகளுக்கு முன் தொல்பொருள் பிரதேசம் என பெயர் பலகை இட்டிருந்ததோடு அங்கு உள்ள பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடுகளுக்கு மாத்திரமே அனுமதி வழங்கி இருந்தது.

அங்கிருந்த பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகளையும் இடைநிறுத்தி இருந்ததோடு எவ்வித புனரமைப்பு பணிகளையும் மேற்கொள்ள விடாது தடை செய்திருந்தது.

எனினும் ஊர்வலங்கள் கடும் பிரயத்தனத்தின் மூலம் கடந்த ஆட்சிக்காலத்தில்  அமைச்சின் அனுமதிய  பெற்று பிள்ளையார் ஆலயத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பித்தன. 

இந் நிலையை சாதகமாக பயன்படுத்திய தொல்பொருள் திணைக்களம் அங்கிருந்த எண்கோண மண்டபத்தின் தாம் புனரமைத்தால்  மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்பதனை அறிந்து ஐங்கோண மண்டபத்தில் விகாரை அமைக்கும் பணியை மேற்கொண்டு மேற்கொண்டு வருகின்றது.

இதேவேளை, குறித்த எண்கோண மண்டபம் இருந்த பகுதியில் இருந்து கடந்த காலத்தில் எண்கோண வடிவிலான சிவலிங்கம் ஒன்று மீட்கப்பட்டு அது எல்லப்பமருதன்குளம் குளக்கட்டு பகுதியில் கண்டெடுக்கப்பட்டு தற்போது எல்லப்பமருதங்குளம் பகுதியில் அது கோவில் கொண்டு எழுந்தருளி இருப்பதாகவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் நிலையில் குறித்த மண்டபம் அமைந்திருந்த பகுதியிலேயே தற்போது விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

குறித்த எண்கோண வடிவிலான சிவலிங்கம் கிளிநொச்சி,  குறுந்தூர்மலை மற்றும் இந்தியாவின் கும்பகோணம் பகுதிகளிலும் ஆய்வுகளகன் போது காணப்பட்டதாகவும் தொல்பொருளாளர்கள் தெரிவிப்பதோடு அதேபோன்றதான சிவலிங்கமே குறிப்பிட்ட சமணங்குளம் பகுதியில் காணப்பட்டதாகவும் அந்த எண்கோண வடிவிலான சிவலிங்கமே குறித்த எண் கோண மண்டபத்தில் வைத்து புராதன காலங்களில் வழிபட்டு இருக்கலாம் என்கின்ற வரலாறுகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையிலையே குறித்த இடத்தில் விகாரை அமைக்கும் பணியை தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1000733567.jpg

1000733587__1_.jpg

1000733535.jpg

https://www.virakesari.lk/article/234534

மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது!

3 months 1 week ago

27 Dec, 2025 | 11:48 AM

image

மட்டக்களப்பு வாவியில் நீண்ட காலமாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்த ராட்சத முதலை ஒன்று, உயிரிழந்த நிலையில் காத்தான்குடி ஆற்றங்கரை பகுதியில் சனிக்கிழமை (28) கரையோதுங்கியுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

சுமார் 15 அடி நீளமுடைய இந்த ராட்சத முதலை, மட்டக்களப்பு வாவிக்கரை அண்மித்த பகுதிகளில் அடிக்கடி தென்பட்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காத்தான்குடி வாவியில் ஒருவர் முதலைக் கடிக்கு இலக்காகி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியுள்ள முதலையை பார்வையிடுவதற்காக சம்பவ இடத்தில் அதிகளவில் பொதுமக்கள் கூடியுள்ளமை குறிப்பிடப்படுகிறது.

மட்டக்களப்பு வாவியில் அச்சுறுத்தலாக காணப்பட்ட முதலை உயிரிழந்த நிலையில் கரையோதுங்கியது! | Virakesari.lk

பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்தார் “பெக்கோ சமனின்” மனைவி!

3 months 1 week ago

27 Dec, 2025 | 02:12 PM

image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவியான ஷானிகா லக்ஷானி பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கெஹெல்பத்தர பத்மே', 'கொமாண்டோ சலிந்த' , 'பாணந்துறை நிலங்க' மற்றும் “பெக்கோ சமனின்” மனைவி உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது.

கைதுசெய்யப்பட்ட பாதாள உலக கும்பலில் இருந்த “பெக்கோ சமன்” என்பவரின் மனைவி ஆகஸ்ட் 29 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதையடுத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்lதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து அவரை  5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணை மற்றும் 150,000 ரூபா பெறுமதியான ரொக்க பிணையில்  விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம ஒக்டோபர் 31 ஆம் திகதி உத்தரவிட்டிருந்தார்.

இதனையடுத்து “பெக்கோ சமனின்” மனைவி நேற்று வெள்ளிக்கிழமை (26) தனது பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்து விளக்கமறியலில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

பிணை நிபந்தனைகளை முழுமையாக பூர்த்தி செய்தார் “பெக்கோ சமனின்” மனைவி! | Virakesari.lk

நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் - பிரகலாதன் வலியுறுத்து

3 months 1 week ago

27 Dec, 2025 | 11:16 AM

image

புதிய நீர் தேக்கங்களை அமைக்க நடவடிக்கை எடுப்பதை விடுத்து, வேலணை - மண்கும்பானில் ஏற்கனவே இருக்கின்ற, சீரமைக்கப்படாத குளங்களை சீர் செய்து தீவகத்தின் நன்னீர் நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் பிரதேச சபையின் உறுப்பினருமான சுவாமினாதன் பிரகலாதன் வலியுறுத்தியுள்ளார்.

வெள்ளிக்கிழமை (26) வேலணை சபையில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மண்கும்பானில் ஏற்கனவே பிரதேச சபைக்குரிய 5 குளங்கள் இருக்கின்றன. இவற்றில் இரு குளங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனையவையும் கடுமையான பாதிப்புக்களுடனேயே இருக்கின்றன.

இவற்றை சீரமைத்தால் மண்கும்பானின் மழை காலங்களில் ஏற்படும் பிரச்சினைக்கும் ஓரளவு தீர்வு காணமுடியும். அதுமட்டுமல்லாது இது விவசாய தேவைகளுக்கும் சாதகமாக அமையும்.

வேலணைக்கே நன்னீர் கொடுக்கும் நன்நீர் வளம் மிக்க எமது மண்கும்பானில் மழை நீரை அதிகளவில் சேகரித்தால் மேலும் நன்னீர் இருப்பை மேம்படுத்திக் கொள்ளலாம்.

அந்த குளங்களுக்கு நிதியை செலவு செய்வது வீண் விரையமற்ற ஆரோக்கியமான ஒரு விடயம். இதை விடுத்து புதிய இருக்கின்ற நீர் நிலைகளை கைவிட்டு புதியவற்றை உருவாக்க முயற்சிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

அதே நேரம் சாட்டிப் பகுதியின் பாதுகாப்பு அவசியமானது. அதற்கான முயற்சி எடுக்கப்படுமானால் அதை வரவேற்போம் என்றார்.

நன்னீரை பாதுகாக்க மண்கும்பானில் இருக்கும் குளங்கள் சீரமைக்கப்பட வேண்டும் - பிரகலாதன் வலியுறுத்து | Virakesari.lk

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல்

3 months 1 week ago

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல்

Dec 27, 2025 - 12:15 PM

2026 வாக்காளர் கணக்கெடுப்பு பெப்ரவரி முதல்

2026 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு பணிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் (PAFFREL) அமைப்பு தெரிவித்துள்ளது. 

முந்தைய ஆண்டுகளைப் போலன்றி, கணக்கெடுப்பு உத்தியோகத்தர்கள் இம்முறை ஒவ்வொரு வீட்டிற்கும் வருகை தரமாட்டார்கள் என அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

புதிதாகச் சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களைக் கொண்ட 'A' மற்றும் 'Aa' பட்டியல்களைப் (Lists) புதுப்பிப்பது தொடர்பான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் வருகை தருவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே உத்தியோகத்தர்கள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு கூறுகிறது. 

பெப்ரல் அமைப்பின்படி, அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படும் முறையை அவதானிக்க வாய்ப்பு அளிக்கப்படும். 

அத்துடன், தகவல்கள் சேகரிக்கப்பட்ட பின்னர் ஒருவர் வாக்காளராகப் பதிவு செய்யத் தகுதியானவரா இல்லையா என்பது குறித்த உத்தியோகத்தர்களின் பரிந்துரைகளையும் அவர்கள் கண்காணிக்க முடியும். 

ஏதேனும் முறைகேடுகள் அவதானிக்கப்பட்டால், பிரதிநிதிகள் அது குறித்து கணக்கெடுப்பு உத்தியோகத்தருக்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்க முடியும் என்றும், அத்தகைய அறிவிப்பின் பிரதியொன்றை சம்பந்தப்பட்ட மாவட்ட பிரதி அல்லது உதவித் தேர்தல் ஆணையாளருக்கு உடனடியாக அனுப்ப முடியும் என்றும் பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjnxslof036eo29nm7a76nq4

தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -

3 months 1 week ago

321952309_3532462620318145_2243795967503

தமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர். - சுமந்திரன் அதிரடி. -

கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதமானது, அக்கட்சியின் பொதுச்செயலாளரான எம்.ஏ சுமந்திரனால் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலகத்தின் தெரிவித்தாட்சி அலுவலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்தில் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படுவதனால், வறிதாக்கப்படும் உறுப்பினர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச சபையின் பாதீட்டிற்கு எதிராக தமிழரசுக் கட்சியினர் எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருந்த நிலையில், லோகேஸ்வரன் ஆதரவாக வாக்களித்ததையடுத்து இந்த நீக்கம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

வாக்கெடுப்பின் போது குறித்த பாதீடு தேசிய மக்கள் சக்தியின் ஆளுகையில் தயாரிக்கப்பட்டது என விமர்சனங்கள் வலுத்திருந்ததாக கூறப்பட்டிருந்தது.

Athavan News
No image previewதமிழரசுக் கட்சி உறுப்புரிமையிலிருந்து அதிரடியாக நீக்கப்பட...
கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்கு, உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்பட்டிருந்த சின்னராசா லோகேஸ்வரன் என்பவரை கட்சி உறுப்புரிமையிலிருந்த நீக்குவதாக தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான கட

தமிழ் – சிங்கள இளைஞர்களுக்கிடையில் ‘மொழிப் பாலம்

3 months 1 week ago

தமிழ் – சிங்கள இளைஞர்களுக்கிடையில் ‘மொழிப் பாலம்

adminDecember 27, 2025

WhatsApp-Image-2025-12-26-at-6.10.59-PM.

தமிழ் மற்றும் சிங்கள இளைஞர்களுக்கிடையில் மொழி மற்றும் கலாச்சாரப் புரிதலை ஏற்படுத்தும் நோக்கில் விசேட பரிமாற்றத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன்னார், மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் (பாலையடி புதுக்குளம்). டிசம்பர் 26 (வெள்ளிக்கிழமை) முதல் டிசம்பர் 29 (திங்கட்கிழமை) வரை நடைபெறுகின்றது

கம்பஹா மாவட்டத்திலிருந்து வருகை தந்த 20 இளைஞர், யுவதிகள் மற்றும் மாந்தை மேற்குப் பகுதி இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ள நிலையில்   அருட்தந்தை செல்வநாயகம் பீரிஸ், உதவி பிரதேச செயலாளர் டிலக்ஸன், மாவட்ட இணைப்பாளர் அசோக்க முனசிங்க மற்றும் அரசு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனா்

இந்த 4 நாட்கள் தங்கியிருக்கும் திட்டத்தின் மூலம், இரு வேறுபட்ட சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மொழித் திறன்களைப் பகிர்ந்து கொள்வதோடு, கலாச்சார விழுமியங்களையும் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்துவதற்கான ஒரு முக்கிய படியாகக் கருதப்படுகிறது.

WhatsApp-Image-2025-12-26-at-6.10.57-PM.WhatsApp-Image-2025-12-26-at-6.10.59-PM-WhatsApp-Image-2025-12-26-at-6.10.59-PM-WhatsApp-Image-2025-12-26-at-6.10.59-PM.WhatsApp-Image-2025-12-26-at-6.11.00-PM-WhatsApp-Image-2025-12-26-at-6.11.00-PM.WhatsApp-Image-2025-12-26-at-6.11.01-PM-WhatsApp-Image-2025-12-26-at-6.11.01-PM.

https://globaltamilnews.net/2025/225059/

🚩 சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்!

3 months 1 week ago

🚩 சர்ச்சையில் அமைச்சர்: கொட்டும் மழையில் குடை பிடித்தபடி தேசியக் கொடி ஏற்றம்!

adminDecember 27, 2025

IMG_2664.jpeg?fit=1170%2C663&ssl=1

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற தேசிய பாதுகாப்பு தின நிகழ்வின் போது நடந்த இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. ஆழிப்பேரலையின் 21-வது ஆண்டு நினைவேந்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள்  நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வின் ஆரம்பத்தில் கொட்டும் மழையில் நனையாமல் இருப்பதற்காக, கடற்தொழில் அமைச்சர் ஒரு கையால் குடை பிடித்தபடி தேசியக் கொடியை ஏற்றியுள்ளார். அதன் போது கூட மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா ஆகியோரும் உடனிருந்தனர்.

தேசியக் கொடியை ஏற்றும் போது அதற்குரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்றும், மழையில் நனைந்தாவது கொடியை ஏற்றியிருக்க வேண்டும் அல்லது குடையை மற்றவர்கள் பிடித்திருக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

தேசியக் கொடி ஏற்றப்படும் போது கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் மீறப்பட்டதாகப் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர்.

IMG_2665.jpeg?resize=800%2C533&ssl=1IMG_2666.jpeg?resize=800%2C533&ssl=1

https://globaltamilnews.net/2025/225069/

2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம் - வடமாகாண ஆளுநர் வேதநாயகன்

3 months 1 week ago

2026 ஐ அபிவிருத்தியின் புதிய அத்தியாயமாக மாற்றியமைப்போம்

adminDecember 27, 2025

4-5-1.jpeg?fit=1170%2C819&ssl=1

அண்மைய இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, புதிய அபிவிருத்தி அத்தியாயத்தை நோக்கி வடக்கு மாகாணத்தை நகர்த்துவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்த பாதிப்புகள் குறித்தும், அதற்காக முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண மற்றும் தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. அத்தோடு, மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட அபிவிருத்தி நிதிகளின் பயன்பாடு மற்றும் திட்டங்களின் முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.

கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநரால் மூன்று முக்கிய முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன.

1. தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, அங்குள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மட்டும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையுடன் இணைப்பது குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.

2. கல்வித்துறையை மேம்படுத்தும் நோக்கில், வட்டுக்கோட்டை வலயக் கல்வி அலுவலகத்தை புதிதாக உருவாக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

3. மத்திய சுகாதார அமைச்சின் நிதியுதவியுடன், பெண் நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை (Sterilization) மேற்கொள்ளும் விசேட பொறிமுறைக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் சி.சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அரச உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
4-2-4.jpeg?resize=800%2C534&ssl=14-4-2.jpeg?resize=800%2C468&ssl=14-6-2.jpeg?resize=800%2C490&ssl=14-1-6.jpeg?resize=800%2C500&ssl=14-3-2.jpeg?resize=800%2C600&ssl=1 4-7-1.jpeg?resize=800%2C600&ssl=1

https://globaltamilnews.net/2025/225074/

டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டார்.

3 months 1 week ago

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவத்தால் வழங்கப்பட்ட பிஸ்டலை அமைப்பு முறை குற்றவாளி மகந்துரே மதுஷுக்கு கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், சிஐடியினால் கைது செய்யப்பட்டார்.

- Arun Hemachandrea ( Deputy foreign minister)

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

3 months 1 week ago

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 

2001 ஆம் ஆண்டு இராணுவத்தால் அவரது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி, 2019 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்ட குற்றவாளியான மாகந்துரே மதுஷிடம் முன்னெடுத்த விசாரணையின் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய முன்னாள் அமைச்சர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

குறித்த துப்பாக்கியின் இலக்கங்களைப் பரிசோதித்த போது, அது டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கி என்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அந்தத் துப்பாக்கி எவ்வாறு காணாமல் போனது என்பது குறித்து விளக்கம் அளிக்க அவர் தவறியுள்ளார். 

இதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmjmvpnmk035so29nsghseyvc

Checked
Fri, 04/03/2026 - 15:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr