ஊர்ப்புதினம்

அமெரிக்கா, ஈரான் கோரிக்கைகள் நிராகாித்த இலங்கை

2 weeks ago

அமெரிக்கா, ஈரான் கோரிக்கைகள் நிராகாித்த இலங்கை

adminMarch 20, 2026

TamilNews2-65.png?fit=900%2C1200&ssl=1

அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் விடுத்த இராணுவ தொடர்பான கோரிக்கைகளை நிராகரிப்பதன் மூலம், இலங்கை தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலைமையைப் பேணிவருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (20)  நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இதுகுறித்து மேலும் விளக்கமளித்த அவர்,

“ஈரானுக்குச் சொந்தமான மூன்று போர்க்கப்பல்கள் நல்லெண்ண விஜயமாக இலங்கைக்கு வர அனுமதி கோரியிருந்தன. அதேவேளை, அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. சர்வதேச விவகாரங்களில் எவ்வித பக்கச்சார்புமின்றி நடுநிலைமையைப் பேணுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் கோரிக்கைகளையும் இலங்கை அரசு நிராகரித்துள்ளது. இதன் மூலம் எமது நடுநிலைத் தன்மையை பாதுகாத்துள்ளோம்,” என அவர் தெரிவித்தார்.

https://globaltamilnews.net/2026/230711/

யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது ; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கவிதரன்!

2 weeks ago

யாழ். பல்கலைக்கழகம் சிங்கள மயமாக்கப்பட்டு வருகிறது ; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட கவிதரன்!

20 Mar, 2026 | 03:47 PM

image

யாழ்ப்பாண பல்கலைக்கழகமானது தற்போது சிங்களமயமாக்கப்பட்டு வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஊடக பேச்சாளர் கவிதரன் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழகத்துக்கு முன்பாக நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

பல்வேறு துறைசார்ந்த விரிவுரைகள் எவ்வித எதிர்ப்பும் இன்றி ஆங்கில மொழிக்கு மாற்றப்பட்டு சிங்கள மாணவர்களை உள்ளடக்கி சிங்களமயமாக்கப்பட்டு வருகிறது. இது மிகவும் ஒரு பாரதூரமான விடயமாக காணப்படுகிறது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் என்பது தமிழர்களுடைய ஒரு மரபுரிமை சின்னம். தமிழர்களின் போராட்டத்தின் ஒரு அடையாள சின்னம். தமிழர்களின் பண்பாட்டு ஒரு காவலரண். இப்படியான பல்கலைக்கழகத்தில் மேற்குறித்த மோசமான செயற்பாடுகளிடமிருந்து.

மாற்றம் வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம் மாணவர்கள் மீது காட்டுகின்ற மாற்றம் இதுதானா? முன்னைய அரசாங்கத்திற்கும் இந்த அரசாங்கத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கின்றது? என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/241475

யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!

2 weeks ago

யாழ். வரும் ஐரோப்பிய பிரதிநிதிகள் செம்மணி புதைகுழியை பார்வையிடவுள்ளதாக தகவல்!

20 Mar, 2026 | 03:16 PM

image

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் குழு ஒன்று யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளது.

குறித்த குழுவினர் செம்மணி மனிதப் புதைகுழியை பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணம் வருகை தரும் குறித்த குழுவில் நோர்வே, ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரொமேனியா போன்ற நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளடங்குகின்றனர்.

இதேவேளை ஐ.நா பிரதி நிதிகள் குழு எதிர்வரும் 26ஆம் திகதி யாழ்பாணம் வருகை தருவதாகவும் யாழ்ப்பாணம் வருகை தரும் குழுவினர் யாழில் பல தமிழ்க் கட்சி களின் தலைவர் களையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/241470

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை - நேரலை

2 weeks ago

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பாராளுமன்றில் விசேட உரை - நேரலை

Published By: Digital Desk 3

20 Mar, 2026 | 12:14 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு)

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்தில் விசேட உரையாற்றுகிறன்றார்.

https://www.virakesari.lk/article/241451

பயணிகளை இடைநடுவில் இறக்கிய தனியார் பேருந்துக்கு மூன்று நாள் சேவைத் தடை

2 weeks ago

பயணிகளை இடைநடுவில் இறக்கிய தனியார் பேருந்துக்கு மூன்று நாள் சேவைத் தடை

20 Mar, 2026 | 09:57 AM

image

(எம்.நியூட்டன்)

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

பயணி ஒருவரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார்.

எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து வேறொரு தனியார் நிறுவனத்தின் (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களை ஏற்றிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

இந்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையால் தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.

விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை பயணிகளை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும், பயணிகளை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில் இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்து 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய பதிலளிக்காது முரண்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையிலிருந்து நிறுத்தப்பட்டுள்ளார்.

மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறான தவறுகளில் அவர் ஈடுபடமாட்டார் என்பதற்கான உறுதியுரையும் அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது.

பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது.

எனவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களுடன் (ஒளிப்படம் அல்லது காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார சபையின் தலைவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/241426

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் - நிஹால் செனவிரத்ன

2 weeks ago

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் - நிஹால் செனவிரத்ன

Published By: Vishnu

20 Mar, 2026 | 05:57 AM

image

(செ. கவிஷனா)

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச்சூழல் காரணமாக இலங்கையில் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன கருத்து தெரிவிக்கையில்,

தற்போது ஏற்பட்டுள்ள போர் பதற்ற நிலவரத்தால் தற்போது சீனி மற்றும் பருப்பு ஆகியவற்றின் மொத்த விலை 1 கிலோகிராமுக்கு 2 முதல் 3 ரூபா வரை அதிகரித்துள்ளது. போர்ச் சூழல் காரணமாக கப்பல் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ளன. இதனால் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டுள்ள பொருட்களை கொண்டு வருவதற்கு மேலதிக செலவுகளை சுமக்க வேண்டியுள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றின் மொத்த விலையில் கிலோவுக்கு சுமார் 10 ரூபா குறைந்துள்ளது.

தற்போதைய சந்தையில் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லை என்றாலும் பொருட்களின் விலை ஏற்ற இறக்கத்துடனேயே காணப்படுகிறது. இதனை கருத்திற் கொண்டு வியாபாரிகள் பொருட்களை பதுக்கி வைக்க முயற்சிக்கக் கூடாது. இந்த சூழலையும் சமாளிக்க முடியும்.

அத்துடன் ஈரானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நெத்தலி கருவாடு தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படுவதில்லை. இலங்கைக்கு தேவையான நெத்தலி கருவாட்டில் சுமார் 60 சதவீதம் ஈரானிலிருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த சந்தை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் காலங்களில் அவற்றை தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்ய முடியும். மேலும், தற்போது ரின் மீன் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டு ரின் மீன் உற்பத்தியில், போதுமான அளவு கையிருப்பில் இல்லாததால், மீண்டும் ரின் மீன் இறக்குமதிக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சேமித்து வைக்கப்படாவிட்டால், பண்டிகைக் காலத்தில் பொருட்களுக்குப் பற்றாக்குறை ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்யலாம் என்றார்.

https://www.virakesari.lk/article/241413

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

2 weeks ago

PSX_20260319_153750.jpg?resize=750%2C375

லஞ்சமாக பெற்றதொகை மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டதாக வாக்குமூலம் – மிரட்டல் மூலம் பெறப்பட்டதாக சட்டத்தரணி தெரிவிப்பு!

ஏயார்பஸ் கொடுக்கல் வாங்கலின் போது இலஞ்சமாகப் பெறப்பட்ட பணத்தை, சந்தேகநபரான கபில சந்திரசேன, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் விமான போக்குவரத்து அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஆகியோருக்கு வழங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இன்று (19) கொழும்பு நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.

மேலதிகமாக, குறித்த பணம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் சபை உறுப்பினரான ஷமிந்திர ராஜபக்சவின் கணக்கிற்கும் மாற்றப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, 2015 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தலா 20 மில்லியன் ரூபாய் வீதம் மூன்று தடவைகளாக மொத்தம் 60 மில்லியன் ரூபாவை பெலியத்த இல்லம் மற்றும் கார்டன் இல்லத்தில் வைத்து மகிந்த ராஜபக்சவிடம் வழங்கியதாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் குறித்த வாக்குமூலம் குறித்து பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி
நிசாந்த தயாநந்த இவ்வாறு கருத்து தெரிவித்தார்,

இன்றைய வழக்கின் போது நானும் அங்கிருந்தேன்.

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவை இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்து விசாரணை மேற்கொண்டு இன்று நீதிமன்றத்தில் குறித்த வழக்கின் பிரமாண பத்திரத்தை கையளித்திருந்தார்கள்.

அவரை கைது செய்ததோ அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதோ சம்பந்தமாக எங்களுக்கு பிரச்சனை இல்லை ஆனால் அவரிடம் மேற்கொள்ள விசாரணை முறை தொடர்பில் தான் பிரச்சனை இருக்கிறது.

அவர் பிராண பத்திரத்தில் கூறியிருக்கிறார் லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் என்னிடம் இதில் சம்பந்தப்ட்டுள்ள அரசியல் வாதிகளின் பெயர்களை கூற சொல்லி மிரட்டல் மற்றும் அச்சுறுத்தியதால் ஏற்பட்ட மரண பயத்தைப் பயன்படுத்திக்கொண்டு, என் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதாக தெரிவித்துள்ளார்.

என்னை யார் என்று தெரியுமா என்று ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் இவரை மிரட்டியதாகவும் ஜனாதிபதி சட்டத்தரணி நீதிபதியிடம் தெரிவித்தார்.

அவரை மிக மோசமாக அச்சுறுத்தி அவரிடம் இருந்து இருந்து வாக்கு மூலங்களை பெற்றிருக்கிறார்கள்.

எதிர்காலத்தில் பல அரசியல் வாதிகளின் பெயர்கள் இதனுடாக வெளிவரும்.

காரணம் இவருக்கு மரண பயத்தை காட்டி இவரிடம் இரு பெயர்களை சொல்ல வைத்திருக்கிறார்கள்.

லஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு நீதியதியிடம் கூறுகிறார்கள் சர்ச்சைக்குரிய ஏர்பஸ் விமானப் பரிவர்த்தனையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் 60 மில்லியன் ரூபா வழங்கப்பட்டதாக இவர் தெரிவித்ததாக மறுபுறம் இவர் கூறுகிறார் உண்மைகள் என்னால் விருப்பத்துடன் கூறப்படவில்லை என்னை அச்சுறுத்தி என்னிடம் வாக்குமூலத்தை பெற்றதாக இது ஒரு மோசமான நிலை அவர் கூறியது உண்மையா என்பதை விசாரணை செய்ய வேண்டும். என தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1469270

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி

2 weeks ago

WhatsApp-Image-2026-03-19-at-18.07.42-1.

உலக முடிவு மலைத் தொடரில் ‘செல்பி’ எடுக்கச்சென்று தவறி விழுந்த மாணவி.

நுவரெலியாவில் உள்ள ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தைச் சேர்ந்த 23 வயதான மாணவி ஒருவர் செல்பி’ எடுக்கச்சென்ற போது சுமார் 50 அடி உயரம் கொண்ட பாறையிலிருந்து இன்று (19) காலை கீழே விழுந்து ஒரு மரக் கிளையில் தொங்கிக்கொண்டிருந்த போது பல மணிநேர தேடுதல் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு அவர் பாதுகாக்க மீட்கப்பட்டார் என ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு மாணவர் குழு இன்று நுவரெலியா ஹோட்டன் சமவெளி ‘உலக முடிவு’ (World’s End) சுற்றுலாத் தளத்தில் பிரதான பாறையைப் பார்வையிட வந்த போதே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி செல்பி’ எடுக்கச் முயன்ற போது தவறி கீழே விழுந்து ,ஒரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவைச் சேர்ந்த ஒரு சாரதி ஒருவர் பார்த்தவுடன் ஆபத்தைப் பொருட்படுத்தாமல், கீழே இறங்கி தொங்கிக்கொண்டிருந்த கிளையிலிருந்து அந்தப் பல்கலைக்கழக மாணவியை இழுத்து சரிவில் இருந்த ஒரு பாறையின் மீது அமர வைத்து, அம் மாணவியை மீட்க பட்டிப்பொல பொலிஸ் அதிகாரிகள், இராணுவம் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியைக் கோரினார்.

WhatsApp-Image-2026-03-19-at-18.07.41.jpeg?resize=600%2C338&ssl=1

அதன்படி, நுவரெலியாவில் உள்ள இலங்கை 3வது சிங்கப் படைப்பிரிவைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள், நுவரெலியா பொலிஸ் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள், வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பட்டிப்பொல பொலிஸ் நிலைய அதிகாரிகள் ஆகியோர் இணைந்து நடத்திய ஒரு கூட்டு நடவடிக்கைக்குப் பின்னர் ஹோட்டன் சமவெளியில் கீழ் சரிவில் இருந்த ஒரு பாறையில் இருந்த பல்கலைக்கழக மாணவியை பாதுகாக்க மீட்டு, சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கைகள் எடுத்ததாக ஹோட்டன் சமவெளி தேசிய வனப் பூங்காவின் மேலாளர் மஞ்சுலா மொனரதென்ன தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1469276

வங்கி சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

2 weeks ago

வங்கி சேவைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Published By: Digital Desk 3

19 Mar, 2026 | 04:57 PM

image

நாட்டில் நிலவும் எரிபொருள் மற்றும் எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், வங்கிக் கட்டமைப்பு ஒரு 'அத்தியாவசிய சேவை' என்பதால் வாரத்தின் அனைத்து ஐந்து நாட்களிலும் வங்கிகள் தொடர்ந்து இயங்கும் என இலங்கை வங்கிச் சங்கம் (SLBA) அறிவித்துள்ளது.

அரசாங்கத்தினால் புதன்கிழமைகள் விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், வாடிக்கையாளர்களின் நலன் கருதி வங்கிகள் பின்வரும் விசேட நடைமுறையைப் பின்பற்றும்,

எரிபொருள் சிக்கன நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், அனைத்து வணிக மற்றும் விசேட வங்கிகளும் புதன்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை மாத்திரம் இயங்கும். ஏனைய நான்கு நாட்களிலும் (திங்கள், செவ்வாய், வியாழன், வெள்ளி) வங்கிகள் வழமையான நேரப்படி இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கிளைகளுக்கு நேரில் வருவதைத் தவிர்த்து, டிஜிட்டல் வங்கிச் சேவைகளைப் (Digital & Online Banking) பயன்படுத்துமாறு இலங்கை வங்கிச் சங்கம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது:

அத்தியாவசியத் தேவைகள்: மிக அத்தியாவசியமான தேவைகளுக்காக மாத்திரம் வங்கிக் கிளைகளுக்குச் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மொபைல் அப்ளிகேஷன்கள் (Mobile Apps) மற்றும் இன்டர்நெட் பேங்கிங் ஊடாக அன்றாடப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது உலகளாவிய ரீதியில் நிலவும் எரிபொருள் விநியோகத் தடைகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகள் விரைவில் சீரடையும் என எதிர்பார்ப்பதாக வங்கிச் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் நீண்டகாலப் பாதிப்புகளின்றி மீண்டும் வழமைக்குத் திரும்பும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இலங்கையிலுள்ள அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மற்றும் விசேட வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உயர்மட்ட அமைப்பாக இலங்கை வங்கிச் சங்கம் (SLBA) விளங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/241387

ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்: 5 கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

2 weeks 1 day ago

19 Mar, 2026 | 12:33 PM

image

ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் முன்பதிவுகளும் நேற்று புதன்கிழமை (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. 

அதற்கமைய, நேற்றையதினம் 05 எரிபொருள் கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

முன்னர் மார்ச் மாத இறுதி வரை மட்டுமே எரிபொருள் கையிருப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. தற்போது ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தேவையான கப்பல்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, அடுத்த மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பில் எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாது. பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூ.ஆர் முறைமையில் நிலவிய தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது சீர்செய்யப்பட்டுள்ளன. ஒரு தொலைபேசி இலக்கம் மற்றும் ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மட்டுமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரியுள்ளார். 

ஏப்ரல் மாதம் வரை தட்டுப்பாடின்றி எரிபொருள்: 5 கப்பல்களுக்கான முன்பதிவுகள் உறுதி - இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் | Virakesari.lk

வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம்

2 weeks 1 day ago

19 Mar, 2026 | 01:45 PM

image

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

00__1_.jpg

00__2___1_.jpg

IMG_6347.jpeg

வடக்கில் வாழும் சிங்களவர்களுக்கு உரிமை கோரி யாழில் இருந்து கொழும்புக்கு நடைபயணம் | Virakesari.lk

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு : வடக்கில் மீண்டும் அச்சம் – சிறிநேசன் தெரிவிப்பு

2 weeks 1 day ago

19 Mar, 2026 | 04:00 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளமை மூலம் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் மீண்டும் அச்சமான சூழ்நிலையை உருவாகியுள்ளதது என  இலங்கைத் தமிழரசுக் கட்சி  உறுப்பினர் ஜீ.சிறிநேசன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் ஒழுங்குவிதிகள் திருத்தச் சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதனால் மீண்டும் மாணவர்கள் மத்தியிலும் வடக்கு மக்கள் மத்தியிலும் அச்சமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்களின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருப்பின் அதற்கான காரணங்களை ஆராய்ந்து அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அச்சுறுத்தலான சூழ்நிலை உருவாகியுள்ளதாக இப்போது அந்த மாணவர்கள் கூறியுள்ளனர். இந்த விடயத்தில் கவனம் செலுத்தி முற்போக்கான சிந்தனையில் அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகின்றோம் என்றார்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் தலைவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு அழைப்பு : வடக்கில் மீண்டும் அச்சம் – சிறிநேசன் தெரிவிப்பு | Virakesari.lk

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம்

2 weeks 1 day ago

19 Mar, 2026 | 04:41 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவிற்கு மிரட்டல் சூழ்நிலையில் பெறப்பட்டதாகக் கூறும் சத்தியப்பிரமாணம் அவரது வழக்கறிஞர்களால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்ததையடுத்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 

ஏயார் பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய நிதிகளில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ரூ. 60 மில்லியன் வழங்கப்பட்டதாக சந்திரசேன தெரிவித்துள்ளார் என நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, அந்த ரூ. 60 மில்லியன் மூன்று தனித்தனி சந்தர்ப்பங்களில் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், முன்னாள் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு ரூ. 20 மில்லியன் வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல்களின் அடிப்படையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் கபில சந்திரசேனவை ஏப்ரல் 2 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

ஏயார்பஸ் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய அமெரிக்க டொலர் 2 மில்லியன் இலஞ்சம் கோரல் மற்றும் பெற்றுக்கொண்டதாக அவர் முன்பு கைது செய்யப்பட்டிருந்தார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்தவுக்கு இலஞ்சம் வழங்கியதாக வாக்குமூலத்தில் வெளிப்பாடு – ஏயார்பஸ் ஊழல் வழக்கில் புதிய திருப்பம் | Virakesari.lk

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம்

2 weeks 1 day ago

19 Mar, 2026 | 05:05 PM

image

வேலணை பிரதேச சபையின் ஆழுகைக்குட்பட்ட பகுதிகளில் 1990 மற்றும் 1991 ஆம் ஆண்டு காலப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவுகூர பொதுவான நினைவுச் சதுக்கம் ஒன்றை அராலிச் சந்தியை அண்டிய பகுதியில் அமைக்க பிரதேச சபை அனுமதியளித்துள்ளது.

வேலணை பிரதேச மக்களின் நிதிப் பங்களிப்புடன் 90 மற்றும் 91 காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட தமது பிரதேச மக்களின் நினைவுகளை நினைவுகூர ஒரு பொது நினைவுச் சதுக்கம் அமைக்க எடுக்கும் முயற்சிக்கு உரிய இடத்தை அடையாளப்படுத்தி, அவ்விடத்தில் குறித்த தூபியை அமைக்க சபை அனுமதிக்க வேண்டும் என சபையின் உறுப்பினர் திருநாவுக்கரசு சிவகுமாரால் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த முன்மொழிவின் நோக்கம் வேலணை பகுதியில் படுகொலை செய்யப்பட்ட  மக்களின் நினைவுகளை மையப்படுத்தி நினைவுகூரும் வகையில் அமைக்கபடுவதால்   சபையின் உறுப்பினர்கள் அதற்கு தமது சம்மதத்தை வழங்கியமைக்கு அமைய பிரதேச சபை அனுமதியை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

90,91 களில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் நினைவாக அராலிச் சந்தியில் நினைவுச் சதுக்கம் | Virakesari.lk

பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு

2 weeks 1 day ago

19 Mar, 2026 | 05:26 PM

image

(இணையத்தள செய்திப் பிரிவு )

கொழும்பு, பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீன தரத்திற்கு உயர்த்தும் பணிகளின் முதற்கட்டம் வியாழக்கிழமை (19) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இப்பணிகள் தொடங்கப்பட்டன.

‘தூய்மையான இலங்கை’ (Clean Sri Lanka) செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், Dawoodi Bohras சமூகத்தின் நிதி பங்களிப்புடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. நிர்மாணப் பணிகளை Amic Engineering Private Limited நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

சுமார் 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களுக்குள் அனைத்து பணிகளையும் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் ரயில் நிலைய நடைமேடைகள் தரமுயர்த்தப்படுவதுடன், நவீன இருக்கை வசதிகளும் அமைக்கப்படுகின்றன. மழைநீரால் பாதிக்கப்படாத வகையில் நிலையத்தின் கூரை முழுமையாகப் புனரமைக்கப்படவுள்ளது.

மேலும், துருப்பிடிக்காத வலுவான உலோகப் படிக்கட்டுகள் அமைக்கப்படுவதோடு, நவீன மின்விளக்கு வசதிகள் மற்றும் CCTV கண்காணிப்பு அமைப்புகளும் நிறுவப்படவுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக கருதப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வகையில் விசேட அணுகுமுறைப் பாதைகள் (Easy Access Routes) உருவாக்கப்படவுள்ளன. அதேபோல், ரயில்களின் நேர அட்டவணையை துல்லியமாக அறிய நவீன காட்சிப் பலகைகள் நிறுவப்படுகின்றன.

இத்திட்டம் இலங்கை ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையில், நாடு முழுவதும் உள்ள 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

ஏற்கனவே தல்பே ரயில் நிலையம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், நாரஹேன்பிட்டி, தெஹிவளை, பொலன்னறுவை, கண்டி மற்றும் மருதானை உள்ளிட்ட முக்கிய ரயில் நிலையங்களும் விரைவில் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த திட்டம், பயணிகளின் வசதி மற்றும் பாதுகாப்பை உயர்த்துவதோடு, நாட்டின் ரயில் சேவையின் தரத்தையும் மேம்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுகிறது.

WhatsApp_Image_2026-03-19_at_17.13.00.jp


பம்பலப்பிட்டி ரயில் நிலையம் நவீனமயமாக்கல் ஆரம்பம் : 60 மில்லியன் ரூபா செலவில் 5 மாதங்களில் பணிகள் நிறைவு | Virakesari.lk

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

2 weeks 1 day ago

New-Project-6-10.jpg?resize=750%2C375&ss

சிங்கப்பூரில் ரணிலுக்கு அறுவை சிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்றில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்ததாகவும், முன்னாள் ஜனாதிபதி விரைவில் குணமடைய வாழ்த்துவதாகவும் அவர் மேலும் இதன்போது கூறினார்.

முன்னாள் ஜனாதிபதி சிங்கப்பூரில் அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

https://athavannews.com/2026/1469232

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

2 weeks 1 day ago

New-Project-1-19.jpg?resize=600%2C300&ss

தியாக தீபம் அன்னை பூபதி 38 வது நினைவேந்தல் மாதம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் ஆரம்பித்து வைப்பு!

மட்டக்களப்பில் தியாக தீபம் அன்னை பூபதியின் 38 வது நினைவேந்தல் மாதத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் நாவலடியில் உள்ள அன்னாரது நினைவு தூபியில் சுடர் ஏற்றி மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாதத்தை இன்று (19) ஆரம்பித்து வைத்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலமையில் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் அழகையா தேவகுமார், வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர் செல்வகுமார் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டு அன்னை பூபதி அம்மாவின் சமாதியில் நிழல் படத்துக்கு மாலை அணிவித்து சுடர் ஏற்றி மலர்தூவி 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தி அன்னை பூபதி மாத்தை ஆரம்பித்து வைத்தனர்.

இதனை தொடர்ந்து அன்னையில் மகள் மற்றும் உறவினர்கள் சமாதியில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

மட்டக்களப்பு ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலைய முன்றலில் கடந்த 1988 ம் ஆண்டு மார்ச் 19 ம் திகதி இந்திய இராணுவத்தை வெளியேறுமாறும் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்தை நடாத்துமாறு 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து 32 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து ஏப்பிரல் 19 ம் திகதி எயிர்நீத்தார் என்பது குறிப்பிடதக்கது.

https://athavannews.com/2026/1469167

“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை

2 weeks 1 day ago

“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை

வியாழன், 19 மார்ச் 2026 06:55 AM

“சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம்”: யாழிலிருந்து கொழும்பு வரை

வடக்கு மாகாணத்தில் வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் மற்றும் அவர்கள் எதிர்கொண்டுள்ளதாக கூறப்படும் இழப்புகள் தொடர்பாக அரசாங்க அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “சிங்ஹிந்தியா சமாதான நடைபயணம் மற்றும் வாகன ஊர்வலம்” ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இருந்து தொடங்கி கொழும்பு வரை தொடரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிகழ்வு மூலம் வட மாகாணத்தில் வாழும் சிங்கள சமூகத்தின் பிரச்சினைகள், பாதுகாப்பு, நில உரிமைகள் மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் குறித்து தேசிய மட்டத்தில் கவனம் செலுத்தச் செய்வதே முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது. 


https://jaffnazone.com/news/55670

இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு!

2 weeks 1 day ago

இயலாமையுடைய நபர்களுக்கான நிதி ஒதுக்கீடு: 12 அமைச்சுக்களுடன் பாராளுமன்ற ஒன்றியம் விசேட பேச்சு!

19 Mar, 2026 | 01:06 PM

image

இயலாமையுடைய நபர்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் குறித்து பன்னிரண்டு அமைச்சுக்களுடன் இயாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் கலந்துரையாடலை முன்னெடுத்தது.

இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இயலாமையுடைய நபர்களின் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ஏப்ரல் முதல் முன்னோடியாக இரண்டு வழித்தடங்களில் 10 தாழ்தள பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தவிருப்பதாக போக்குவரத்து அமைச்சின் அதிகாரிகள், இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தில் தெரிவித்தனர்.

ஆறு வழிடத்தடங்களில் இவ்வாறான பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்தபோதும், சக்கரநாற்காலிகளுடன் சென்று ஏறக்கூடியமை போன்ற வசதிகளைக் கொண்ட பஸ் தரிப்பிடங்களை அமைக்க வேண்டிய தேவை இருப்பதாகவும், இந்த வசதிகளைப் பூர்த்திசெய்யும் பட்சத்தில் ஏனைய வழித்தடங்களிலும் இச்சேவையை விஸ்தரிக்க முடியும் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன், இயலாமையுடைய குறைந்த வருமானத்தைப் பெறும் பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது மற்றும் அவர்களுக்குக் கல்வி வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கான விசேட திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 50 மில்லியன் ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்கல்வி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பாதுகாப்பு அமைச்சைப் பிரதிநிதித்துவப்படுத்தி வருகை தந்திருந்த ரணவிரு சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், 30 வருட யுத்தத்தில் இயலாமையுடைய நபர்களாக்கப்பட்ட முப்படையினர் மற்றும் பொலிஸார் 23,192 பேர் தமது அதிகாரசபையின் கீழ் பராமரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டனர்.

இவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ரூ.864 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிடுகையில், 16-35 வயதுக்கிடைப்பட்ட இயலாமையுடைய நபர்களுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கு 2026ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் ரூ 80 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், பார்வைக் குறைபாடுள்ளோருக்கான மறுவாழ்வு அறக்கட்டளை நிதியின் மூலம் பார்வைக் குறைபாடுள்ள பல்கலைக்கழக மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் உதவி சாதனங்கள் வழங்குவதற்காக ரூ. 17.4 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

மேலும், சுகாதார மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சை பிரதிநிதித்துவப்படுத்தி வருகைதந்திருந்த அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில், 2026 முதல் 2035ஆம் ஆண்டு வரையில் முதல் 2035 வரை செயல்படுத்தப்படவுள்ள புதிய பத்தாண்டு சுகாதாரக் கொள்கை அடுத்த ஏப்ரல் மாதம் வெளியிடப்படவிருப்பதாகவும், இந்தக் கொள்கையில் "அனைவருக்குமான சுகாதாரப் பாதுகாப்புத் திட்டத்தின்" (Universal Health Coverage) கீழ் இயாமையுடைய நபர்கள் உள்ளடங்கலாக நலிவடைந்த நபர்கள் குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

தொழில் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் இயலாமையுடைய நபர்களுக்கான விரிவான வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு அமைய, 2022 முதல் 2025-ஆம் ஆண்டு காலப்பகுதியில் 750 இயலாமையுடைய நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2026-ஆம் ஆண்டில் இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரூ. 5.75 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில் அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

டிஜிட்டல் பொருளாதார சட்டத்தில் இயலாமையுடைய நபர்களை உள்ளடக்குவதற்காக விசேட பிரிவொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இயலாமையுடைய சமூகத்தினருக்கான அணுகக்கூடிய அனைத்துத் தரவுகள் மற்றும் தகவல்களையும் உள்ளடக்கிய தனியான இணையத்தளம் உருவாக்கப்படும் என்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

2026ஆம் ஆண்டுக்காக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தின் கீழ் இயலாமையுடைய நபர்களுக்காகன கொடுப்பனவுகளை மேற்கொள்ள ரூ.19,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் ஒன்றியத்திடம் தெரிவித்தனர்.

அத்துடன், இயலாமையுடைய நபர்களுக்குக் காணப்படும் அணுகலுக்கான உரிமையை உறுதி செய்வதற்காக ரூ. 1,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஏற்பாடுகளைப் பயன்படுத்தி பிரதேச செயலகங்கள், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்கள் போன்ற பொது வசதிகளுக்கான அணுகல்கள் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

மேலும், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு ஆகியவற்றின் அதிகாரிகளும் 2026ஆம் ஆண்டில் தமது அமைச்சுக்களுக்கான ஒதுக்கீடுகளின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் குறித்து ஒன்றியத்திற்கு விளக்கமளித்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் இயலாமையுடைய நபர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் பிரதி இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) பத்மநாதன் சத்தியலிங்கம் மற்றும் ஒன்றியத்தின் உறுப்பினர்களான சுசந்த தொடாவத்த, பத்மசிறி பண்டார, சந்திம ஹெட்டியாராச்சி, சுசந்த குமார நவரத்ன மற்றும் அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

அத்துடன், ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த.த சில்வா அவர்களின் அழைப்பின் பேரில் பார்வையாளர்களாக இயலாமையுடைய நபர்களின் பிரதிநிதிகளும்,  தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IFES) அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-03-19_at_12.42.00__1

WhatsApp_Image_2026-03-19_at_12.42.00.jp

WhatsApp_Image_2026-03-19_at_12.42.01__1

WhatsApp_Image_2026-03-19_at_12.42.02__1

WhatsApp_Image_2026-03-19_at_12.42.02.jp

WhatsApp_Image_2026-03-19_at_12.42.05__1

WhatsApp_Image_2026-03-19_at_12.42.07__1

WhatsApp_Image_2026-03-19_at_12.42.07.jp

WhatsApp_Image_2026-03-19_at_12.42.03__1

WhatsApp_Image_2026-03-19_at_12.42.03.jp

WhatsApp_Image_2026-03-19_at_12.42.04__1

https://www.virakesari.lk/article/241350

இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம்

2 weeks 1 day ago

இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம்

Mar 19, 2026 - 12:12 PM

இலங்கையின் விவசாயக் கழிவுகளிலிருந்து எரிவாயு உற்பத்தி: நோர்வே ஆர்வம்

இலங்கையிலுள்ள விவசாயக் கழிவுகள் அதிகம் உள்ள பகுதிகளை அடையாளம் கண்டு, அங்கிருந்து எரிவாயு உற்பத்தி செய்யும் செயன்முறையை முன்னெடுப்பதற்கு நோர்வே அவதானம் செலுத்தியுள்ளது.

விவசாய, கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த மற்றும் நோர்வே தூதரக அதிகாரி ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் (Sturle Harald Pedersen) ஆகியோருக்கு இடையில் நேற்று (18) நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

இதன்போது, விவசாயத் துறைக்காக மீள்புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்துப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

 

பல்வேறு வழிகளில் எரிசக்தியை உற்பத்தி செய்வது தொடர்பாக நோர்வே தூதரக அதிகாரி இதன்போது கருத்துக்களை முன்வைத்தார். 

காற்றுச் சக்தி, சூரியச் சக்தி மற்றும் கடலின் அலைச் சக்தி ஆகியவற்றைப் பயன்படுத்தி எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கு இலங்கைக்கு உதவ முடியும் என அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அவர்கள் தயாரித்த திட்ட அறிக்கை ஒன்றும் இதன்போது அமைச்சரிடம் கையளிக்கப்பட்டதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கையில் பகல் நேரங்களில் சூரிய சக்தி அதிகமாக உற்பத்தி செய்யப்படுவதை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்ட தூதரக அதிகாரி, அந்த மேலதிக சூரிய சக்தியைப் பயன்படுத்தி நீரைப் மின்னாற்பகுப்பு (Electrolysis) செய்வதன் மூலம் ஹைட்ரஜனை உற்பத்தி செய்து, அதனை எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் எனச் சுட்டிக்காட்டினார். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் ஹைட்ரஜனை விவசாயத் துறை உட்பட அனைத்துத் துறைகளிலும் எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என ஸ்டர்ல் ஹரால்ட் பீடர்சன் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmmx3o1gx000j356pb7d8yhxt

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr