ஊர்ப்புதினம்

நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ்

2 weeks 1 day ago

நான் சொன்னதை கேட்டிருந்தால் அழிவுகளும் இழப்புக்களும் ஏற்பட்டு இருக்காது – டக்ளஸ்

adminMarch 18, 2026

2-4.jpg?fit=1170%2C658&ssl=1

கிடைத்த சந்தர்ப்பங்களில் எமது மக்களுக்கு பெற்றுக்கொடுத்த ஒவ்வொன்றையும் சேவையாக அல்லாது நான் கடமையாகவே  முன்னெடுத்திருந்தேன். மாறாக அவற்றை ஒருபோதும் சுயநல அரசியலுக்காக முன்னெடுத்திருக்கவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் பல்கலைக் கழக ஜனநாயக ஊழியர் சங்கத்திற்கான புதிய நிர்வாகம் குறித்த தொழிற் சங்கத்தின் ஸ்தாபகரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தாவின் பிரசன்னத்துடன் இன்றைய தினம் யாழில் உள்ள தனியார் மண்டபத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப போராளிகளில் ஒருவனாக இருந்தவன். போராட்டம் பலவீனப்பட்டு திசைதிரும்பிய போது இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு அதனூடாக13 ஆவது திருத்தச் சட்டத்தை உருவாக்கி மாகாண சபை முறைமையை கொண்டுவரப்பட்டது. போராட்டம் பலவீனமடைந்து போன நிலையில் உருவாக்கப்பட்ட இந்த மாகாணசபை முறைமைக்கு ஊடாகத்தான் நாம் எமது நகர்வுகளை முன்கொண்டு செல்ல வேண்டும் என அன்றிலிருந்து இன்றுவரை நான் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கின்றேன்.

ஆனால் எனது அந்தக் கருத்துக்கள் மக்கள் மத்தியில் முழுமையாகக் கொண்டு செல்லப்படாத நிலை காணப்பட்டது. மாறாக வன்முறையுடனான கருத்துக்களே வலுவாக முன்கொண்டு செல்லப்பட்டுருந்தது. ஆனால் நான் அன்று சொன்ன கருத்துக்கள் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலை காணப்படுகின்றது.இதை அன்றே ஏற்றுக்கொண்டிருந்தால் இத்தனை அழிவுகளும் இழப்புக்களும் உருவாகியிருந்திருக்காது என்பதுதான் எனது வலுவான கருத்து.

இதேநேரம் நான் முன்வைத்திருந்த அரசியல் இலக்கு  மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதாகும். இதுதான் சமஸ்டியும் கூட. இந்த கருத்துக்கு தென்னிலங்கையில் எந்த எதிர்ப்பும் கிடையாது. இதை அடைவதே எமது நோக்கமும் ஆகும்.வரலாற்று கற்பிதங்கள் மூலம் நான் கண்ட அனுவங்களின் ஊடாகவே அரசியல் கருத்துக்களை நான் திரும்பத் திரும்ப கூறி வருகின்றேன்.
ஆனால் இதை சிலர் எனது குறைபாடாக கருதலாம். ஆனால்  அவ்வாறு கூறுவது, ஜதார்த்தமான நடைமுறைச் சாத்தியமான விடையங்கள் மக்களிடம் ஆழமாகப் பதிந்து செயலுருவம் பெறவேண்டும் என்பதற்காகவே என மேலும் தெரிவித்தார்.

2-1.jpg?resize=800%2C600&ssl=12-2.jpg?resize=800%2C413&ssl=12-3.jpg?resize=800%2C554&ssl=1 2-5.jpg?resize=800%2C630&ssl=1


https://globaltamilnews.net/2026/230647/

விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்!

2 weeks 1 day ago

விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் யாழ். பல்கலை மாணவர்கள்!

Published By: Digital Desk 1

19 Mar, 2026 | 07:34 AM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டமையை கண்டித்து இன்றையதினம் விரிவுரைகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தீர்மானித்துள்ளனர்.

கடந்த பெப்ரவரி மாதம் 04ம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் யாழ் மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து குறித்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

பொலிஸாரால் அழைப்பு விடப்பட்ட மூன்று யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் இன்றையதினம் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரின் அலுவலகத்தில் ஆஜராகவுள்ளனர்.

இந்த நிலையில் யாழ் பல்கலைக்கழக முன்றலில் இன்று வியாழக்கிழமை (19) காலை 10 மணிக்கு குறித்த போராட்டம் நடைபெறவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் அனைத்து தரப்புகளையும் கலந்து கொண்டு வலுசேர்க்குமாறு மாணவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/241324

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

2 weeks 1 day ago

கைப்பற்றப்படும் போதைப்பொருட்களை விரைவாக அழிப்பதற்கான சட்ட திருத்தங்களை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு

18 Mar, 2026 | 06:11 PM

image

போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவதில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி சாதகமானது என்றும், அவ்வாறு கைப்பற்றப்படும் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது குறித்து பொதுமக்களுக்கும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள குழுக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவது முதன்மையான தேவை என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இதற்கான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துமாறு சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கினார்.

இந்த நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, சட்டத் திருத்தத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுடன் கலந்துரையாடி, சட்டவாக்கப் பணிகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

போதைப்பொருள் பேரழிவை ஒழிப்பதற்கான ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டு சபை புதன்கிழமை (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் அவ்வப்போது பல்வேறு சமூக மற்றும் பொருளாதார நிலைமைகள் உருவான போதிலும், எந்தவொரு சவாலுக்கும் மத்தியில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் வேலைத்திட்டம் முடங்கக் கூடாது என்று ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினார்.

போதைப்பொருள் விநியோகம் மற்றும் விநியோக வலையமைப்புகளை முறியடித்தல், புனர்வாழ்வு மற்றும் நீதித்துறை நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட தயாரிக்கப்பட்டுள்ள திட்டங்களை வேகமாகவும் கைவிடாமலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இது குறித்து சமூகத்துடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்களைப் பேணி, இந்த தேசிய வேலைத்திட்டத்தை வெற்றிகரமான முடிவை நோக்கி கொண்டு செல்ல அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கில் 2025 ஒக்டோபர் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாட்டின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள இந்த வேலைத்திட்டம் தற்போதைய அரசாங்கம் குறித்து மக்கள் நம்பிக்கை கொள்வதில் முக்கியமானதொரு காரணியாக அமைந்துள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படும் அளவு பெருமளவில் அதிகரித்துள்ளதாக சம்பந்தப்பட்ட பிரிவினர் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இங்கு சுட்டிக்காட்டினர்.

‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு ஆரம்பிக்கப்பட்ட 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இன்று வரை 124,412 கைதுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 4520 கிலோ கிராம் கஞ்சா, 1066 கிலோ 352 கிராம் ஹெரோயின், 558,300 சட்டவிரோத சிகரெட்டுகள், 1930 கிலோ கிராம் ஐஸ் போதைப்பொருள், 270 கிலோ கிராம் கொக்கைன் மற்றும் 983,143 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்த கொக்கைன் தொகையானது வரலாற்றில் அதிகூடிய மற்றும் அதிக விலையுடைய கொக்கைன் தொகை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து, போதைப்பொருள் தொடர்பான தகவல்கள் 1818 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு அதிகளவில் கிடைத்து வருவதாகவும், அது தொடர்பான நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்கள் உள்ளதாகவும், அவர்களில் 1772 சிறுவர்களும் 81 சிறுமிகளும் அடங்குவதாகவும் இங்கு குறிப்பிடப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்களில் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான சந்தேக நபர்கள் 196 பேரும், தடுப்புக் காவலில் 2268 பேரும் உள்ளதோடு, தற்போது 1840 பேர் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

புனர்வாழ்வு அளிப்பதில் நிலவும் சட்ட ரீதியான பலவீனங்களால் அந்தப் பணிகள் தாமதமான போதிலும், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழு இது குறித்து கலந்துரையாடி எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அதேபோல், அமுலில் உள்ள புனர்வாழ்வு சட்டத்தில் உள்ள சில கட்டுப்பாடுகள் காரணமாக போதைக்கு அடிமையானவர்களை முறையாக சமூகமயப்படுத்துவதில் உள்ள தடைகள் மற்றும் அந்த மையங்களின் கொள்ளளவு போதுமானதாக இல்லாமை குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. புனர்வாழ்வு சட்டத்தை தற்காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக திருத்தம் செய்வதற்கும், அதற்கான முன்மொழிவுகளை மிக விரைவாகப் பெற்று நிறைவு செய்யுமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

தற்போது கைப்பற்றப்படும் போதைப்பொருள் மாதிரிகளைப் பரிசோதித்து அறிக்கை பெறுவதற்கு நீண்ட காலம் எடுப்பதால் வழக்கு நடவடிக்கைகள் தாமதமாவது குறித்தும், அது தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், அது தொடர்பான நீதித்துறை செயல்பாடுகளை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது. போதைப்பொருள் குற்றங்களுக்காக தனி நீதிமன்றம் மற்றும் நீதித்துறை நடைமுறையை நிறுவுதல், மாகாண மட்டத்தில் போதைப்பொருள் தொடர்பான தனி நீதிமன்றங்களை நிறுவுதல், போதைப்பொருள் குற்றங்களுக்காக பொலிஸ் சட்டப் பிரிவுகளை வலுப்படுத்துதல் போன்ற ஆலோசனைகள் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டது.

போதைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பாக சுகாதார அமைச்சு அனைத்து தரப்பினரையும் இணைத்துக் கொண்டு பல வேலைத்திட்டங்களைத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

போதைக்கு அடிமையானவர்களுக்கு வெளிநோயாளர் பிரிவில் அடிப்படை சிகிச்சைகளைப் பெறுவதற்கான சூழலை உருவாக்குதல், மனநல மருத்துவ சிகிச்சைகளுக்காக வருபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், தங்குமிட சிகிச்சை அளித்தல் மற்றும் சமூக அடிப்படையிலான புனர்வாழ்வு, மீளாய்வு போன்ற 06 பிரதான உத்திகளின் ஊடாக அந்த வேலைத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதாகச் செயலாளர் இதன்போது தெரிவித்தார்.

அதேபோல், போதைக்கு அடிமையான இளைஞர்கள், சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காகத் தனித்தனியான வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த முழுமையான செயல்பாட்டைக் கண்காணிப்பதற்கான வேலைத்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படுவதாகவும், 'சமூக சக்தி' வேலைத்திட்டத்தின் பங்களிப்பையும் இதற்காகப் பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

அதேபோல், பாடசாலை மாணவர்களைப் போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடசாலை மட்டத்தில் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் மற்றும் பாடசாலைகளை அண்டியதாக மேற்கொள்ளப்படும் சோதனைகள் மற்றும் அதன் புதிய போக்குகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. மேலும், அரச நிறுவனங்களுக்குள் செயல்படுத்தப்படும் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

மேலும், இந்தப் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்திற்காகவே ஒதுக்கப்பட்ட மத ரீதியான நிகழ்ச்சிகளை வழிபாட்டுத் தலங்களை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன் போது சுட்டிக்காட்டினார்.

போதைப்பொருள் சார்ந்த கைதுகள் தொடர்பாக ஊடகங்களில் வழங்கப்படும் பிரசாரத்தைப் போன்றே அந்தப் போதைப்பொருள் கையிருப்புகளை அழிப்பது மற்றும் போதைக்கு அடிமையானவர்களைப் புனர்வாழ்வளிப்பதற்காகச் செயல்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கும் பிரசாரம் வழங்கப்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டது.

ஸ்ரீலங்கா ராமஞ்ஞ மஹா நிகாயவின் அனுநாயக்க வணக்கத்திற்குரிய வலேபொட குணசிறி அனுநாயக்க தேரர், வணக்கத்திற்குரிய குப்பியாவத்தே போடானந்த தேரர் மற்றும் அருட்தந்தை டிலான் பெர்னாண்டோ, அருட்தந்தை ஜூட் பேர்னார்ட் ரொட்ரிகோ, சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள் உள்ளிட்ட மதத் தலைவர்களும், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொன்தா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

WhatsApp_Image_2026-03-18_at_5.41.55_PM.

https://www.virakesari.lk/article/241318

கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு – அமைச்சரவை தீர்மானம்

2 weeks 1 day ago

கையடக்க தொலைப்பேசி பணப் பரிமாற்றங்களுக்கு தீவிர கண்காணிப்பு – அமைச்சரவை தீர்மானம்

18 Mar, 2026 | 05:31 PM

image

இசிகேஷ் மற்றும் எம்கேஷ் (eZcash and mCash) போன்ற இலத்திரனியல் பணப்பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பணப்பரிமாற்றங்களைத் தடுப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான முன்மொழிவை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேயபால அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

அதற்கமைய சட்டவிரோத பணப்பரிமாற்றங்களை கண்காணிப்பதற்கும் அவற்றில் ஈடுபடுபவர்களை அடையாளம் கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இலங்கை மத்திய வங்கி, இலங்கை பொலிஸ் தலைமையகம், இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் ஒன்றிணைந்து ஒரு புதிய தரவு தளத்தை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுவோர் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் இலகுவாகப் பணப்பரிமாற்றம் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சின் தலைமையில் ஏற்கனவே ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அக்குழுவினரால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் கையடக்க தொலைப்பேசி பணப்பரிமாற்றங்கள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும்.

https://www.virakesari.lk/article/241315

மின்சாரக் கட்டணத்தை 13.56 வீதத்தால் அதிகரிக்கக் கோருகிறது இலங்கை மின்சார சபை

2 weeks 1 day ago

மின்சாரக் கட்டணத்தை 13.56 வீதத்தால் அதிகரிக்கக் கோருகிறது இலங்கை மின்சார சபை 

18 Mar, 2026 | 03:32 PM

image

( இணையத்தள செய்திப் பிரிவு )

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டுக்கான மின்சாரக் கட்டணங்களை 13.56 சதவீதத்தினால் அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்மொழிந்துள்ளது. இது தொடர்பான மதிப்பாய்வு அறிக்கையினை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) வெளியிட்டுள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்கு மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் உயர்த்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் மின்சார சபை அனுமதி கோரியுள்ளது.

இந்த கட்டண முன்மொழிவினை மின்சார சபையானது, 2009ஆம் ஆண்டின் 20ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30ஆவது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, கடந்த பெப்ரவரி 13ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்தது.

அதன் அடிப்படையில் மின்சார சபையின் கணிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சுமார் 15.8 பில்லியன் ரூபாய் வருமானப் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிதிப் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்காகவே இந்தக் கட்டண உயர்வினை மின்சார சபை கோரியுள்ளது.

இந்த முன்மொழிவில் இறுதிப் பயனர் கட்டணங்கள் மற்றும் மொத்த விநியோகக் கட்டணங்கள் குறித்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் மதிப்பாய்வு ஆவணங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும், மின்சார கட்டணம் தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படுவதற்கு முன், உரிய தரப்பினர் தங்கள் கருத்துக்களை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கலந்தாலோசனை ஆவணத்தை வெளியிட்டுள்ளது. 

அந்த ஆவணத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது 

11.jpg

222.jpg

333.jpg

https://www.virakesari.lk/article/241291

இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா

2 weeks 1 day ago

இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா

Mar 18, 2026 - 05:13 PM

இணைய மோசடிகளை ஒழிக்க இலங்கையுடன் கைகோர்க்கும் சீனா

தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகளை ஒடுக்குவதில் தமது வலுவான உறுதிப்பாட்டை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, இலங்கையுடனான சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதாகவும் உறுதியளித்துள்ளது. 

இலங்கை சட்ட அமுலாக்க அதிகாரிகளால் சீனப் பிரஜைகள் உட்பட இணையவழி மோசடிகளில் ஈடுபட்ட பல வெளிநாட்டுச் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டமை குறித்த அண்மைக்கால அறிக்கைகளைத் தாம் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக சீனா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இவ்வாறான குற்றங்கள் பாரிய சமூகத் தீங்குகளை விளைவிப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள சீனா, சட்டத்திற்கு இணங்கச் சந்தேக நபர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதேவேளை, அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுப்பதில் இலங்கை அதிகாரிகளுக்குத் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. 

தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகள் உலகம் முழுவதும் வேகமாக விரிவடைந்து, பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அந்த அறிக்கையில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறான குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு மியன்மார், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட பல நாடுகளுடன் சீனா அண்மைக்காலமாக விரிவான ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. 

இதன் மூலம் பல குற்றக் கும்பல்கள் அழிக்கப்பட்டு தீர்க்கமான முடிவுகள் எட்டப்பட்ட போதிலும், அதன் விளைவாகச் சில குற்றக் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கு நகர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் மேம்பட்ட தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு, மூலோபாய ரீதியிலான புவியியல் இருப்பிடம், ஒப்பீட்டளவில் தளர்வான விசா கொள்கைகள் மற்றும் மக்களின் விருந்தோம்பல் ஆகியவை நாடுகடந்த மோசடி குழுக்களுக்கு இலங்கையை ஒரு இலக்காக மாற்றியுள்ளன. 

இதன் விளைவாக, இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகள் இலங்கையில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. 

இந்த விடயம் குறித்து சீனா அதிக முக்கியத்துவம் அளிப்பதுடன், இலங்கை சட்ட அமுலாக்க முகவர்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணி வருகிறது. 

கூட்டு முயற்சிகளின் பலனாக, 2024 ஆம் ஆண்டில் மோசடியில் ஈடுபட்ட பல சீனப் பிரஜைகள் இலங்கை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, பின்னர் 2025 ஆம் ஆண்டில் தொகுதிகளாக மீண்டும் சீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது தொடர்பான ஒத்துழைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகாலப் பங்களிப்பை மீள உறுதிப்படுத்தியுள்ள சீனா, எல்லை தாண்டிய குற்றங்களைக் கையாள்வதில் கூட்டு விசாரணைகள் மற்றும் ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளது. 

இவ்வாறான முயற்சிகள் இரு நாட்டு மக்களின் பாதுகாப்பு மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதோடு, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பன்முக ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்குச் சிறந்த சூழலை உருவாக்கும் என்றும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmvz2aqc000l356plghn8l33

வேலணையில் மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

2 weeks 2 days ago

மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

Mar 18, 2026 - 04:10 PM

மாணவிகளை அவதூறு பரப்பிய மாணவனுக்கு நேர்ந்த கதி!

சமூக ஊடகம் ஒன்றில், பாடசாலை மாணவிகளை அவதூறு செய்த யாழில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவரை 14 நாள்கள் சிறுவர் நன்னடத்தை மையத்தில் தடுத்துவைக்க ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அத்துடன் குறித்த அவதூறு பரப்பியதை நியாயம் கேட்கச் சென்ற பாதிக்கப்பட்ட மாணவிகளின் உறவினர் ஒருவரை கூரிய ஆயுதமொன்றால் தாக்கி காயப்படுத்திய குற்றத்துக்காக குறித்த மாணவனின் தந்தையையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர் வேலணைப் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கற்கும் மாணவன், மாணவி ஒருவரது புகைப்படத்தையும் மற்றுமொரு மாணவியின் தாயாரது தொலைபேசி இலக்கத்தையும் டிக்டொக் சமூக ஊடகத்தில் அவதூறு பரப்பும் வகையில் பதிவிட்டிருந்ததாக கூறப்படுகின்றது. 

இந்நிலையில் குறித்த அவதூறால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவரது உறவினர்கள் அவதூறு பரப்பியவரின் வீட்டிற்குச் சென்று குறித்த மாணவனிடம் இது தொடர்பில் வினவியுள்ளனர். 

இதன்போது அவதூறு பரப்பிய மாணவனின் தந்தை நியாயம் கேட்கச் சென்ற ஒருவரை கூரிய ஆயுதம் ஒன்றால் தாக்கி காயப்படுத்தியுள்ளார். 

சம்பவத்தில் காயமடைந்த நபர் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். 

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை சிறுகுற்றப் பிரிவு பொலிஸில் இரு மாணவிகளின் பெற்றோரும் முறைப்பாடு செய்திருந்தனர். 

இதனையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில். ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர். 

இந்நிலையில் மாணவனை சிறுவர் சீர்திருத்த மையத்தில் 14 நாட்களும், மாணவனின் தந்தையை 14 நாட்களும் தடுத்து வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-யாழ். நிருபர் கஜிந்தன்-

https://adaderanatamil.lk/news/cmmvwr4rd000i356p5yii0qf1

இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு

2 weeks 2 days ago

இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு

Mar 18, 2026 - 12:28 PM

இரண்டு அரச பேருந்துகள் மோதி கோர விபத்து: நால்வர் உயிரிழப்பு

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 

இச்சம்பவத்தில் மேலும் 40 பேர் காயமடைந்துள்ள நிலையில், காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கொழும்பிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த பேருந்தும், திஸ்ஸமஹாராமயவிலிருந்து கராப்பிட்டிய நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (இ.போ.ச) சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmvow92m0009356pvjk8amp3

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர்

2 weeks 2 days ago

லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை எவரது தலையீடுமற்ற சுயாதீன நிறுவனமாகச் செயற்படுத்துவதே எமது நோக்கமாகும் - பிரதமர்

Published By: Vishnu

17 Mar, 2026 | 08:51 PM

image

லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவானது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உட்பட எவரது அழுத்தங்களுமின்றி, ஒரு சுதந்திரமான, சுயாதீனமான நிறுவனமாக இயங்குவதற்குத் தேவையான அனைத்துப் பின்னணிகளையும் உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் எனப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ,மார்ச் 17, பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், லஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிப்பது தொடர்பான இடைக்கால முன்மொழிவு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர்,

கௌரவ சபாநாயகர் அவர்களே, இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ள லஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளின் ஊதியம் மற்றும் சேவை நிபந்தனைகளைத் தீர்மானிக்கும் முன்மொழிவானது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவாகும் என நான் கருதுகின்றேன்.

2023ஆம் ஆண்டில் ஊழல் எதிர்ப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்ட போதிலும், அது தொடர்பான ஆணைக்குழுவொன்று இருப்பதை நாம் 2025ஆம் ஆண்டிலிருந்தே உணரத் தொடங்கினோம். அதன் பின்னர், இந்த ஆணைக்குழுவைச் செயற்படுத்துவதில் பல சவால்களை எதிர்கொண்டோம். குறிப்பாக, பணியாளர்களை இணைத்துக்கொள்வதில் காணப்பட்ட கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களினால் ஆணைக்குழுவின் தேவைக்கேற்பச் செயற்படுவதைத் தடுக்கும் ஏராளமான தடைகளும் சவால்களும் இருந்து வந்தன.

குறிப்பாக, ஆணைக்குழுவின் செயற்பாடுகளின் போது, தனது பணியாளர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிப்பதற்கான சுதந்திரம், செயற்பாட்டிற்குத் தேவையான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளை வரையறுப்பதற்கான சுதந்திரம், அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான சுதந்திரம் மற்றும் அவர்களின் வருடாந்தத் திட்டங்களுக்கு அமைவான நிதி ஒதுக்கீட்டு மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல் போன்ற பல நடைமுறைச் சாத்தியமான நிலைமைகளையும் நிபந்தனைகளையும் உருவாக்க வேண்டிய தேவை இருந்தது. புதிய பணிப்பாளர் நாயகம் பதவியேற்ற போது, சுமார் 4,000-இற்கும் அதிகமான கோப்புகள் விசாரணைகள் முடிந்த நிலையிலும் வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் தேங்கிக் கிடந்தன. மேலும், அங்கு வெறும் 31 சட்ட அதிகாரிகள் மாத்திரமே பணியில் இருந்தனர்.

இந்த முன்மொழிவு நிறைவேற்றப்படுவதன் மூலம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களைத் தெரிவு செய்யும் அதிகாரம், அவர்களுக்கான கொடுப்பனவுகளைத் தீர்மானிக்கும் சுதந்திரம், நிதி விவகாரங்களில் சுயாதீனமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை ஆகியவை ஆணைக்குழுவிற்கு வழங்கப்படுகின்றன. இதன் மூலம் புதிய அரசியல் கலாசாரத்தினுள் ஊழலற்ற, லஞ்சத்துக்கு எதிரான சுத்தமான அரச சேவையை உருவாக்குவதற்கான மிக முக்கியமானதொரு அடித்தளம் இடப்படுகின்றது, என அவர் தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்;

தற்போதைய உலகளாவிய சூழ்நிலைக்கு மத்தியில், எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் எரிசக்தித் துறை ஆகியன பல சவால்களை எதிர்கொண்டுள்ளன. தொடர்ச்சியாக மாற்றமடைந்து வரும் இவ்வாறான நிலைமைகளை எம்மால் முன்கூட்டியே கணிக்க முடியாதுள்ளது. இப்பாதிப்புகள் நிமிடத்திற்கு நிமிடம் மாறிக்கொண்டிருக்கும் ஒரு தருணமாகும். இருப்பினும், அரசாங்கம் என்ற ரீதியில் இம்மாற்றங்களை இனங்கண்டு, அதன் மூலம் எமது பொருளாதாரத்திற்கு ஏற்படும் தாக்கங்களை முகாமைத்துவம் செய்வதே எமது பொறுப்பாகும். அதற்காக, நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நான்கு விசேட குழுக்களை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டது.

அதற்கமைய,அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி மக்களுக்கு வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காக நிலைமைகளை முகாமைத்துவம் செய்வதற்கான குழு. அரசத் துறையில் எரிசக்தி முகாமைத்துவத்தைப் பேணி, சேவைகளைத் தடையின்றி முன்னெடுப்பது தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான குழு. தேசிய கொள்முதல் ஆணைக்குழுவுடன் கலந்துரையாடி, எரிசக்தியைப் பெற்றுக்கொள்வதில் தற்போதுள்ள முறைகளுக்கு மேலதிகமாகப் புதிய வழிமுறைகளைக் கண்டறிந்து செயற்படுவதற்கான குழு. இந்த நெருக்கடியால் ஏற்படக்கூடிய சமூகத் தாக்கங்கள், குறிப்பாகச் சமூகத்தின் நலிந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளுக்கு நியாயமான தீர்வுகளைக் காணுதல் மற்றும் நலன்புரி உதவிகளை வழங்குவதற்கான குழு ஆகிய குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இவை நாம் ஒரு நாடாகக் கூட்டாக எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளாகும். இதற்காக எமது அரச சேவையினரும், தனியார் துறையினரும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பேதமின்றி அரசியல் அதிகாரத் தரப்பினரும், நாட்டு மக்களும் ஒன்றிணைய வேண்டும். கடந்த காலங்களில் சவால்களை எதிர்கொண்டது போலவே, இப்போதும் நாம் கூட்டாக இணைந்து செயற்பட வேண்டும். சரியான தலைமைத்துவம் மற்றும் முகாமைத்துவத்தினூடாக, தேவையான தருணத்தில் உரிய தீர்மானங்களை மேற்கொண்டு இந்த இக்கட்டான நிலைமையை வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு, எனப் பிரதமர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/241233

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை

2 weeks 2 days ago

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரை - நேரலை

Published By: Vishnu

17 Mar, 2026 | 07:40 PM

image

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விசேட உரையாற்றுகிறார்.

நாட்டின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக நிலைமைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை முன்வைத்து ஜனாதிபதியின் உரை அமைகின்றது.

சமீபத்திய தேசிய மற்றும் சர்வதேச சூழ்நிலைகளை முன்னிட்டு இந்த உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், ஜனாதிபதி வரவிருக்கும் வெள்ளிக்கிழமை (20) பாராளுமன்றத்திலும் உரையாற்ற திட்டமிட்டுள்ளார் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

https://www.virakesari.lk/article/241230

இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

2 weeks 2 days ago

இணையவழி மோசடி கும்பல் மீது சுற்றிவளைப்பு: பல சீனர்கள் உள்ளிட்ட 134 வெளிநாட்டவர்கள் கைது

Published By: Digital Desk 3

17 Mar, 2026 | 05:06 PM

image

ஒழுங்கமைக்கப்பட்ட இணையவழி மோசடி வலையமைப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் 134 வெளிநாட்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல்களின் அடிப்படையில், இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவினரும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளும் இணைந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் போது, இரு பகுதிகளிலும் அமைந்திருந்த ஐந்து தங்குமிட விடுதிகளில் ஒருங்கிணைந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இவ்விடுதிகளில் தங்கியிருந்து இணையவழி மோசடி செயல்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டோரில் 126 பேர் சீன நாட்டவர்கள் எனவும் 4 பேர் மியான்மர் நாட்டவர்கள் எனவும் 4 பேர் தாய்வான் நாட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, மோசடி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல மடிக்கணினிகள், கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

https://www.virakesari.lk/article/241211

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன்

2 weeks 2 days ago

மட்டக்களப்பில் டெங்கு பரவல் அதிகரிப்பு : அலட்சியம் காட்டுவோருக்கு கடும் சட்ட நடவடிக்கை ; வைத்தியர் வி.முரளிஸ்வரன்

17 Mar, 2026 | 12:05 PM

image

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்து வருகிறது. எனவே பொதுமக்கள் உங்கள் வீடுகளையும் சூழலையும் சுத்தமாக வைத்திருக்கவும் அதேவேளை டெங்கு நுளம்பு உருவாக்கூடியவாறு துப்பரவு இன்றி உள்ள வெற்று காணிகளின் உரிமையாளர்கள் சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். அதை மீறி அலட்சியம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் வி.முரளிஸ்வரன் தெரிவித்தார்.

மட்டு சுகாதார பிராந்திய சேவைகள் பணிமனையில் திங்கட்கிழமை (16) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மை காலமாக டெங்கு நுளம்பு நோய் தாக்கம் அதிகரித்துள்ளதுடன் செங்கலடி, மட்டக்களப்பு, வவுணதீவு பிரதேசங்களில் டெங்கு நுளம்பு நோய் தாக்கத்தால் அதிகமானோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

எனவே டெங்கு நோய் தாக்கத்தில் இருந்து சுற்றாடலை பாதுகாப்பதற்கான நடவடிக்கையை எடுக்கும் அதே நேரத்தில் உங்கள் அயலில் காணப்படுகின்ற டெங்கு நுளம்பு காணக்கூடிய வெற்று காணிகளை அடையாளம் கண்டு சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கவும்.

ஏற்கனவே டெங்கு நுளம்புகள் உருவாகக்கூடிய வெற்று காணிகள் இருக்கும் இடங்களை சுகாதார வைத்திய அதிகாரிகள் பொது சுகாதார பரிசோதகர்கள் இணைந்து மாநகர சபை உதவியுடன் அந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதில் சில காணிகள் மாநகர சபையினால் சுவீகரிக்க பட்டுள்ளது.

வெற்று காணிகளை வைத்திருக்கும் சிலர் அதனை துப்பரவு செய்யாது டெங்கு நுளம்பு உருவாக கூடிய நிலையில் வைத்திருக்கும் சமூக உணர்வு இல்லாத காரணத்தால் துப்பரவாக வைத்திருக்கும் அப்பாவி பொதுமக்கள் இந்த டெங்கினால் பாதிக்கப்படுகின்றன

அதேவேளை சுகாதார அதிகாரிகள் பொது சுகாதார உத்தியோகத்தர்களின் அறிவுறுத்தல் வழங்கியும் சிலர் அடாவடியாக தமது காணிகளை துப்பரவு செய்யாமலும் சிலர் வெளிநாடுகளில் இருந்து கொண்டு எந்தவித அக்கறையும் இல்லாது அலட்சியமான போக்கில் இருக்கின்றனர். எனவே வெற்று காணி வைத்திருப்பவர்கள் சமூக அக்கறையுடன் செயற்படவும்.

டெங்கு பரவக்கூடிய வெற்றிக் காணிகளை காணி சுகாதார வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி செயற்படாமல் விட்டால் அவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்து ஆலையங்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் எங்களது டெங்கு ஒழிப்பு தொடர்பான அறிவுறுத்தல்களை ஆலயங்களில் உள்ள ஒலி பெருக்கி ஊடாக காலை, மதியம், இரவு ஆகிய நேரங்களில் அறிவித்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை பெரும்பாலான ஆலையங்கள் இந்த டெங்கு நோய் தொடர்பான அறிவுறுத்தல்கள் செய்வதில்லை, ஆகவே எங்கள் சமய நிறுவனங்கள் சமயத்தை மட்டும் வளர்ப்பதை குறிக்கோளாக கொண்டிராது சமூக நலனோடு செயல்பட வேண்டும்.

அண்மையில் செங்கலடி பிரதேசத்தில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஒரு பிரபல ஆலையத்தை தொடர்பு கொண்டு ஆலைய சூழலை துப்பரவாக வைத்திருக்குமாறும் எங்களது டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு அறிவுறுத்தலை வழங்குமாறு கேட்டபோது அவர்களது ஒத்துழைப்பு கிடைக்கவில்லை.

அதே நேரத்தில் அந்த ஆலய மதகுரு உட்பட ஆலய சூழல் டெங்கு நோய் பரவும் சூற்றாடல் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை வந்தது.

எனவே எல்லா ஆலையங்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள் சமூக உணர்வோடு இந்த டெங்கு நுளம்பு அழிப்பதற்கு உங்கள் ஆளணிகள் மற்றும் ஆலையங்களில் இருக்கும் அந்த ஒலிபெருக்கி வசதிகளையும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

அண்மை காலமாக தற்கொலை அதிகரித்து காணப்படும் சூழ்நிலையில் பாடசாலை ஆசிரியர்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தல் பயிற்சி நெறிகள் அளித்து வருகிறோம்.

இருந்தபோதும் சில பாடசாலைகளின் அதிபர்கள் இது சம்பந்தமான எந்தவிதமான அக்கறையும் இல்லாத உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சி பெற்ற ஆசிரியர்களுக்கு அந்த பாட வேளைகளை வழங்காது தொடர்ந்து மாணவர்களை ஒரு அழுத்தமான சூழ்நிலைக்குள் கொண்டு செல்வதாக முறைப்பாடுகள் கிடைக்கிறது.

எனவே கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட அந்த உளவள ஆசிரியர்களுக்கு நாங்கள் பயிற்சி வழங்கியுள்ளோம். எனவே மாணவர்களின் உளநலத்தை பேணுவதற்காக வாரத்தில் ஒரு நாளாவது ஒரு பாட வேளையை வழங்கி மாணவர்களுக்கு கற்பிக்க இடம் வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

அதேவேளை தற்கொலையை தடுப்பதற்கான நுண் கடன் வழங்கும் வங்கிகளை அனுகியுள்ளோம், வங்கிகள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு பொதுமக்களுக்கு நிதி நிலைமைகள் தொடர்பாக சரியான விதத்தில் வழிகாட்ட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/241177

இலங்கையை வந்தடைந்தது எரிபொருள் கப்பல்!

2 weeks 2 days ago

இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

Mar 17, 2026 - 04:53 PM

இலங்கைக்கு வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.


ஹொங்கொங் நாட்டுக்குச் சொந்தமான 'சீஃபிரண்டியர்'  எனும் எரிபொருள் கப்பலே இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.


இக்கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட எரிபொருளை இறக்கும் பணிகள் இன்று காலை முத்துராஜவெல (கெரவலப்பிட்டிய) எரிபொருள் களஞ்சியகத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும், அதன் மற்றுமொரு தொகுதி இன்று பிற்பகல் கொழும்பு துறைமுகத்தின் டொல்பின் இறங்குதுறை ஊடாக கொலன்னாவை களஞ்சியகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அமைச்சு மேலும் கூறியுள்ளது.


இந்தக் கப்பலில் 17,000 மெட்ரிக் தொன் 90 ஒக்டேன் பெற்றோல், 18,000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 2,800 மெட்ரிக் தொன் சூப்பர் டீசல் ஆகிய எரிபொருட்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmuiwcmr000w356px10448qj

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

2 weeks 3 days ago

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

திங்கள், 16 மார்ச் 2026 02:43 PM

இந்துக்களுக்கு பைபிள் வழங்க முயற்சித்தால் கொளுத்துவோம் - சிவ சேனை எச்சரிக்கை..

வடமாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளர் பிரட்லியின் செயற்பாடுகளை வடமாகாண ஆளுநர் வேடிக்கை பார்ப்பாராயின் பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு வழங்கும் பைபிள்களை வாங்கி கொளுத்துவோம் என இலங்கை சிவசேனை அமைப்பின் சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன் ஆகியோர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 யாழில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.

மேலும் தெரிவிக்கையில்,

 வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளரின் செயற்பாடு மதங்களுக்கு இடையில் முறுகல்களை ஏற்படுத்துவதாக அமைகிறது.

பைபிள் என்கின்ற கிறிஸ்தவ நூலினை வட மாகாண பாடசாலைகளுக்கு வழங்குவதற்கு அனுமதித்தமை இந்து மாணவர்களையும் பைபிள் நூலை பெறுவதற்கு திணிப்பதாக அமைகிறது.

குறித்த நூலினை வழங்குவதற்காக அனுமதி கோரிய கிறிஸ்தவ அமைப்பு தொடர்பில் விசாரித்தபோது அவ்வாறான அமைப்பு ஒன்று இலங்கையில் பதிவு செய்ததாக அறியப்படவில்லை. 

அவ்வாறான அமைப்பு வடமாகாணத்தில் சுமார் ஒன்றரை இலட்சம் பைபிள்களை வழங்கப்போவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளது. 

வடமாகாண ஆளுநரின் அனுமதி இல்லாமல் மேலதிகமாக மாகாண கல்வி பணிப்பாளர் வழங்குவதற்கு சிபாரிசு செய்தமை ஏதோ ஒரு பின்புலத்தை அடிப்படையாக கொண்டதாக பார்க்கிறோம். 

குறித்த விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கும் எழுத்தம் மூலம் தெரியப்படுத்தியுள்ள நிலையில் பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளோம். 

ஆகவே குறித்த விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுநர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இல்லாவிட்டால் இந்து மாணவர்களுக்கு பைபிளை வழங்க வழங்க முற்பட்டால் அதனை வாங்கி பாடசாலைகளுக்கு முன்பாக கொளுத்துவோம் என  மேலும் தெரிவித்தனர்

https://jaffnazone.com/news/55614

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்!

2 weeks 3 days ago

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனிதப்புதைகுழி: நீதிபதி உள்ளிட்ட குழுவினர் விசேட கள விஜயம்!

Vhg மார்ச் 17, 2026

AVvXsEj2AxfP7HmAbyTALkf-kt_sFyobxQxf7qlFCuml6bNNDRDkXLeYeln73HYpqnSaFFVO16M3eYjwaUvRh3cqbRIgKMcXLNjqkyWXnLhDWqmr_gpILx1oqSuPziVS2TOntRqHmNEzvNp1DjRPS_xzhmhNoUc30G8BsowLZ9hAt6OMmhRmq-yMWFB4C6012JJ6

குருக்கள்மடம் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி இடத்தினை களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் உள்ளிட்ட குழுவினர் இன்று (17.03.2026) ஆம் திகதி நேரடி கள விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டனர்.

கடந்த 1990 ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரையை முடித்துவிட்டு, கல்முனை வழியாக காத்தான்குடி நோக்கிப் பயணித்த முஸ்லிம்கள் ஆயுததாரிகளால் இடைமறிக்கப்பட்டு, குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டு அப்பகுதியில் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீண்டகாலமாக வழக்கு நடைபெற்று வருகின்றது.

AVvXsEhPiSjMATzdsd05Rn6-VGNUz0bXjmuF44e0NLwYKKtfMNEpi7rLXmsBX_zk_jAOuRX0fFD8Z2GVOwRGWnoDaLPtEoVIP2o-cWd_xme47t4s-tTNEWbl0lHmfbjddX7Fl8XtP7-A_XPuwECwUT67JNYmJva5rF5-yga_nwz4-ZY4b5JZQstDeZtPY_j3WgFd

AVvXsEgQFTwlhWCLER4HrOSrMLjylTr8mexC02NzGXyWlBpAEkPpW7GgnLDmZb_JsRtPBcH7LgWC1nD1hze5vmBIQnWJ0zIIFDvn1HY_qzD8Rp39MnwKZqmE4nlRJRKb7dzqfoOW-lrJPb3f8CHEjI6T9EEfjodCJR3Nvwn55luDIwgZ5g5DOVQIx0AyZLLJN036

இந்த வழக்கின் ஒரு கட்டமாக, இன்று களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.பிரதீபன், பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர். 

தற்போது இந்த இடம் பலத்த பாதுகாப்பு வலயமாக அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், குருக்கள்மடம் மனிதப்புதைகுழியின் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் எதிர்வரும் மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்தார்.

நீதிமன்றின் உத்தரவிற்கமைய இந்த அகழ்வாய்வு பணிகள் நடைபெறவுள்ள நிலையில், இன்றைய இந்த விசேட கள விஜயம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

https://www.battinatham.com/2026/03/blog-post_499.html

மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை

2 weeks 3 days ago

மத்திய கிழக்கு நெருக்கடி : இலங்கையின் மீன் ஏற்றுமதி முடக்கம் - உள்நாட்டில் வீழ்ச்சியடைந்த மீன் விலை

17 March 2026

1773721387_6032778_hirunews.jpg

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்துப் பாதைகளில் ஏற்பட்டுள்ள தடைகள், இலங்கையின் மீன் ஏற்றுமதியைப் பாரியளவில் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, ஏற்றுமதி செய்யப்பட வேண்டிய மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு விநியோகிக்கப்படுவதால், மீன் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோலித கமல் ஜினதாச தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை காரணமாக, நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு தலபத் மற்றும் கெலவல்ல போன்ற பிரபலமான மீன் வகைகளை மீண்டும் கொள்வனவு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கெலவல்ல தற்போது ஒரு கிலோகிராம் சுமார் 1,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாக பல நாள் மீன்பிடி படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல நாள் மற்றும் ஒரு நாள் மீன்பிடிப் படகுகளுக்குத் தேவையான எரிபொருளைத் தடையின்றி வழங்குவதற்குத் தற்போதைய நிலையில் அமைச்சு தயாராக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நெருக்கடியால் விமானப் போக்குவரத்துப் பாதைகள் பாதிக்கப்பட்டுள்ளமை ஏற்றுமதித் துறையில் பாரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.

ஏற்றுமதி தடைப்பட்டதால் அதிகளவான மீன்கள் உள்நாட்டுச் சந்தைக்கு வருவதே இந்த விலை வீழ்ச்சிக்குக் காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இறால் தொழில்துறை குறித்துக் கருத்துத் தெரிவித்த ஜினதாச, இதுவரை எரிபொருள் தட்டுப்பாட்டால் அத்துறையில் பெரிய பாதிப்புகள் ஏற்படவில்லை எனத் தெரிவித்தார்.

எனினும், மின்சாரம் தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் ஏற்பட்டால், இறால் உற்பத்தித் துறை சவால்களைச் சந்திக்க நேரிடும் என அவர் எச்சரித்துள்ளார்.

https://hirunews.lk/tm/453648/middle-east-crisis-sri-lankas-fish-exports-freeze-domestic-fish-prices-fall

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

2 weeks 3 days ago

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த குற்றவாளிக்கு 15 வருட கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு!

Published By: Vishnu

17 Mar, 2026 | 05:43 AM

image

வவுனியா, ஒமந்தை பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்குட்பட்ட சிறுமியை பாலியல் வல்லுறவு புரிந்த தாயின் சகோதரரான குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2013 ஆம் ஆண்டு வவுனியா, ஓமந்தை, பகுதியைச் சேர்ந்த 15 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததாக அதே இடத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயின் சசோகதரான 47 வயது சந்தேக நபரை பொலிசார் கைது செய்து பி அறிக்கை மூலம் வவுனியா நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி வழக்கு தொடரப்பட்டது.

தொடர்ந்து 2013 பாலியல் வன்புணர்வு புரிந்ததாக சந்தேக நபருக்கு எதிராக சட்டமா அதிபர் திணைகடகளத்தால் குற்றப் பகிர்வுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு அரச சட்டவாதி ஸ்ரீ.சிவஸ்கந்தஸ்ரீ அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட நிலையில், குறித்த வழக்கின் சந்தேக நபரான வவுனியா ஓமந்தை பகுதியில் வசித்து வந்த 47வயது நபர் தொடர்பான இரு குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்றுக்கொண்டார்.

குறித்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்புக்காக திகதிடப்பட்டிருந்த நிலையில் எதிரியின் குற்ற ஒப்புதலை அடிப்படையாகக் கொண்டு குறித்த தீர்ப்பினை வவுனியா மேல் நீதிமன்றம் வழங்கியது.

இதன்போது, வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி அ.அ.ஆனந்தராஜா திறந்த நீதிமன்றில் தீர்ப்பினை வாசித்துக் காட்டினார். குறித்த குற்றவாளிக்கு முதலாவது குற்றச்சாட்டுக்கு 15 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கியதுடன், 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும், தவறின் 6 மாதகால சாதாரண சிறைத் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மூன்று இலட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் எனவும் தவறின், 2 வருட சிறை தண்டனையும் வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது.

அத்துடன், இரண்டாவது குற்றத்திற்காக 15 வருட சிறைத் தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் தண்டப்பணமும் செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.

குறித்த இரு சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/241150

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய

2 weeks 3 days ago

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய

Mar 17, 2026 - 11:40 AM

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய

Update 12.00

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கிருந்து வௌியேறியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

https://adaderanatamil.lk/news/cmmu7qro9000h356psmwttfl1

இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு

2 weeks 3 days ago

இரு நிறுவனங்களால் 300-க்கும் மேற்பட்ட கேபிள் டிவி உரிமையாளர்கள் பாதிப்பு

 

image_5601d178ff.jpg

பூ.லின்ரன்   

இலங்கையில் இரு பிரதான நிறுவனங்களின் சுயநலப் போக்கினால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கேபிள் தொலைக்காட்சி சேவை உரிமையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். தமக்கான நீதியை அரசாங்கம் தாமதமின்றி வழங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அகில இலங்கை கேபிள் டிவி ஓப்பரேட்டர்கள்   சங்கப் பிரதிநிதிகள் இவ்விடயத்தைத் தெரிவித்தனர்.

  இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், "சுமார் இரு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையின் பல பாகங்களிலும் நாம் கேபிள் தொலைக்காட்சி சேவையை முன்னெடுத்து வருகின்றோம். குறிப்பாக யாழ்ப்பாணத்தில் 110 பேரும், மலையகத்தில் 54 பேரும் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் 300-க்கும் மேற்பட்டோர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், இலங்கையில் இரு குறிப்பிட்ட நிறுவனங்களைத் தவிர ஏனையோருக்கு இதற்கான முறையான உரிமங்கள் (Licenses) வழங்கப்படுவதில்லை. இதனால் எமது தொழில் நடவடிக்கைகள் முற்றாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது," என்றனர்.

 தேசிய தொலைத்தொடர்பு ஆணைக்குழுவிடம் (TRC) உரிமம் கோரி விண்ணப்பித்தும் இதுவரை தகுந்த தீர்வு கிடைக்கவில்லை என அவர்கள் சுட்டிக்காட்டினர்.

"உரிமக் கட்டணமாக சுமார் 70 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்ட தொலைத்தொடர்பு ஆணைக்குழு, அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது. ஆனால், குறித்த இரு பெரு நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை இடைநிறுத்தப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ள நாம், தற்போது தொழிலும் இன்றி முதலீட்டையும் இழந்து நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம்," என அவர்கள் ஆதங்கம் வெளியிட்டனர்.

  குறித்த இரு நிறுவனங்களின் பிடியில் சிக்குண்டுள்ள கேபிள் தொலைக்காட்சிச் சேவையை மீட்டு, சிறிய அளவிலான உரிமையாளர்களின் நலன்களைப் பாதுகாக்க உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/இரு-நிறுவனங்களால்-300-க்கும்-மேற்பட்ட-கேபிள்-டிவி-உரிமையாளர்கள்-பாதிப்பு/175-374039

குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை

2 weeks 3 days ago

குருந்தூர் மலையிலிருந்து சிவனொளிபாத மலைக்கு நடைப்பயண யாத்திரை

image_cbf6d00d3f.jpg

 செ.தி.பெருமாள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலைப் பகுதியிலிருந்து பௌத்த துறவிகள் மற்றும் சிவில் சமூகத்தினர் இணைந்து முன்னெடுத்துள்ள விசேட நடைப்பயண யாத்திரை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

 கடந்த 14.03.2026 அன்று முல்லைத்தீவு குருந்தூர் மலை விகாரையிலிருந்து இந்த யாத்திரை ஆரம்பமானது. ஹிறிகத்பவன் வெவ உப நிதாலங்கார பௌத்த மதகுருவின் தலைமையில், 6 பௌத்த துறவிகள் மற்றும் 10 பேர் அடங்கிய சிவில் சமூகத்தினர் இந்த ஆன்மீக நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளனர்.

  நீண்ட தூர நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ள இக்குழுவினர், நேற்று (16) இரவு நுவரெலியா மாவட்டம், அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கிரிவன்எளிய பௌத்த விகாரையில் தங்கியிருந்தனர். இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு, சிவனொளிபாத மலை அடிவாரத்தில் உள்ள 'கிரீன் வீவ்'   விடுதியை வந்தடைந்தனர்.

  இன்று தங்கியிருக்கும் இடத்திலிருந்து நாளை (18 ஆம் திகதி) அதிகாலை வேளையில் சிவனொளிபாத மலை உச்சிக்குச் சென்று மலையடிச் சுவட்டைத் தரிசனம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவிலிருந்து நுவரெலியா வரையான இந்த நீண்ட நெடிய ஆன்மீகப் பயணம் அப்பகுதி மக்களிடையே அவதானத்தைப் பெற்றுள்ளது

https://www.tamilmirror.lk/மலையகம்/குருந்தூர்-மலையிலிருந்து-சிவனொளிபாத-மலைக்கு-நடைப்பயண-யாத்திரை/76-374042

Checked
Fri, 04/03/2026 - 12:36
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr