முஸ்லீம் ஊர்காவல்படையினரால் தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தில் இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.   கடந்த 21வருடங்களுக்கு முதல் 1990ஆம் ஆண்டு யூலை 20ஆம் திகதி முஸ்லீம் ஊர்காவல்படையினராலும் சிறிலங்கா இராணுவத்தினராலும் இணைந்து  குழந்தைகள், பெண்கள் வயோதிபர்கள் என 55 அப்பாவி தமிழ் மக்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வீரமுனை பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடி ஏற்றத்துடன் ஆரம்பமானது. 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் மட்டும் வீரமுனையில் முஸ்லீம்களாலும், சிங்கள படைகளாலும் 172அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 21வருடங்கள் கடந்த போதிலும் அந்த சோகங்களிலிருந்து மீள முடியாதவர்களாக உள்ள வீரமுனை மக்கள் தங்களை காக்கும் தெய்வமென நம்பும் வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலய உற்சவத்தை நடத்தி வருகின்றனர்.  வரலாற்று சிறப்புமிக்க வீரமுனை சிந்தாயாத்திரைப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்   கொடியேற்றத்துடன்  இம்மாதம்  உற்சவம் ஆரம்பமாகிறது.   குறிப்பு 1990ஆம் ஆண்டு யூலை மாதத்தில் இந்த ஆலயத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவாக இந்த ஆலயத்திற்கு முன்னால் அமைக்கப்பட்ட நினைவு தூபியையும், இன்று நடைபெற்ற உற்சவ காட்சிகளையும் படங்களில் காணலாம். http://www.thinakkathir.com/?p=12886