உச்சிதனை முகர்ந்தால் – திரை விமர்சனம் இலங்கை இராணுவத்தால் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு ஈழச்சிறுமியின் கதைதான் ‘உச்சிதனை முகர்ந்தால். தென்தமிழீழம் மட்டக்களப்பில் நிகழ்ந்த சம்பவமொன்றினை மையமாகக் கொண்டு இத்திரைப்படத்தை உருவாக்கி நெறிப்படுத்தியுள்ளார் இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள். தன் விருப்பத்தின் வழியில் மட்டுமே இத்திரைப்படம் முழுவதும் அவர் பயணித்திருக்கிறார். பாத்திரங்களின் ஆளுமை சிதறடிக்கப்படாமலும் , அவை அதன் எல்லைகளை தாண்டிச் செல்லாமலும், இத் திரைக்கதையை