Everything posted by satan
-
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் சத்தியாக்கிரகம்!
திமிர் பிடித்த திருட்டுக்கும்பலை அவ்வளவு எளிதாக அடக்கிவிட முடியாது. நாட்டின் சகல துறைகளையும் ஜனாதிபதிக்கு எதிராக கிளப்பி தங்கள் நோக்கத்தை நிறைவேற்றுவார்கள். அவர்களது அடுத்த குறி போலீசார், இராணுவத்தினரை ஜனாதிபதிக்கெதிராக கிளப்புவது. இராணுவத்தினரை காட்டிக்கொடுத்ததே மஹிந்ததான். இராணுவத்தினருக்காக நான் தூக்குமேடைக்குப்போவேன் என்று சொன்னால் அர்த்தம் என்ன? கோத்தா, தான் எந்த குற்றச்செயலுக்கும் கட்டளையிடவில்லை என்று சொல்லிவிட்டார். இப்போ கடைசி முயற்சி படையினரை அனுராவிடமிருந்து தூர விலக வைப்பது. இவர்கள் என்ன தந்திரம் செய்தாலும், முயற்சி எடுத்தாலும் அது அவர்களுக்கு எதிராகவே திரும்பும்.
-
கொழும்பில் அரசுக்கு ஆதரவாக, மாபெரும் மக்கள் பேரணி.!!
படம் சூப்பர் சிறியர்! அருகுக்களம் என்று நான் குறிப்பிட்டது, பிக்குகளின் எதிர்ப்பையே கத்தியின்றி ரத்தமின்றி ஓட வைத்துவிட்டார் இந்த இரண்டுவருட அனுபவத்தில். சண்டித்தனம் என்று வந்தால் மிகுதிக்காலம் எப்படியமையும்? இனி அரசியல் சண்டியர்களெல்லாம் அடக்கி வாசிப்பர். அதுசரி..... பிக்குகளுக்கு, ஊழலுக்கு எதிராக இந்த மாற்றம் எப்படி திடீரென்று சாத்தியமானது?
-
டக்ளஸுக்கு எதிரான விசாரணையை கைவிட்டது இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு!
டக்கிளஸ் சரணடைந்து விட்டாரா? எல்லாவற்றிலும் ஒரே நேரத்தில் கை வைக்க விரும்பாமல் இருக்கலாம். முதலில் பெரிய முதலைகள்.
-
கொழும்பில் அரசுக்கு ஆதரவாக, மாபெரும் மக்கள் பேரணி.!!
இருபத்தொன்பதாம் ஆண்டு ஜனாதிபதிக் கனவில் மிதப்பவர்கள் ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அருகுக்களம் இப்படியென்றால் நடுக்களம் எப்படியிருக்குமென்று.
-
கொழும்பில் அரசுக்கு ஆதரவாக, மாபெரும் மக்கள் பேரணி.!!
சிறியர்! எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிந்தாக வேண்டும். நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார்?
-
கொழும்பில் அரசுக்கு ஆதரவாக, மாபெரும் மக்கள் பேரணி.!!
அனுராதான் உண்மையான புத்தன். தற்போதைய ஜனாதிபதிக்கு எதிராக கூடும் கூட்டம் இரண்டாக பிரியும், போடும் திட்டம் உடையும். இவர்களே தாங்கள் விரித்த வலையில் விழுந்துவிட்டார்கள். அரசியல் விழாக்களில் பங்குபற்ற மாடடோம் என மிரட்டியவர்கள் எந்தக்காலத்திலும் அழைக்கப்படப்போவதுமில்லை. திருகோணமலை புத்தரோடு விளையாடி வென்றவர்கள் நினைத்திருப்பார்கள், சின்னப்பெடியன்தானே மிரட்டி பணிய வைக்கலாமென. அதன் பலம் என்ன என்பது இப்போ புரிந்திருக்கும். ஞானசார தேரரின் சட்ட நடவடிக்கையை போராடி இறுக்கிவிட்டதுதான் கண்ட மிச்சம். ஒவ்வொரு சங்கத்திலும் இருந்து ஐம்பது பேர் வாங்கோ என்று கூவிக்கூவி அழைத்தார்கள், ஒருவர் காதிலும் விழவில்லை. அச்சுறுத்திப்பார்த்தார்கள் மசியவில்லை, இனி ஜனாதிபதியின் காலடியில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை. ஜனாதிபதி எதை நினைத்தாரோ அதை இந்தச்சண்டியர்கள் இலகுவாக்குவர் என்று ஜனாதிபதி கனவே கண்டிருக்க மாட்டார். நல்லது செய்ய நினைத்தால் நல்லது நடக்கும். புத்தர் பெயரால் அரங்கேறிய நாட்டின் சாபம் தீரும். உண்மையான பௌத்தம் மலரும். நாங்கள் யாரும் பௌத்தத்திற்கு எதிரானவர்களல்லர் ஆனால் மதத்தின் பெயரால் நடக்கும் கொடூரங்களையே வெறுக்கிறோம் அது எந்த மதமாக இருந்தாலும். இவ்வளவு மக்களும் இத்தனை காலமும் பேசப்பயந்து இருந்திருக்கிறார்கள்.
-
கொழும்பில் அரசுக்கு ஆதரவாக, மாபெரும் மக்கள் பேரணி.!!
இந்த போலிப்பிக்குகளையும் போலி அரசியல் வாதிகளையும் முறியடிக்கும் இந்த நிலையை ஏற்படுத்திய அசிங்கப்பிக்குகளுக்கும் தோற்றுப்போன அரசியல்வாதிகளுக்கும் நன்றி வரலாற்றில் இல்லாத சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியை ஏற்படுத்திக்கொடுத்திருக்கிறார்கள் அவர்கள் அனைவரின் போலிக்காவிகளை களையுங்கள் வீட்டிற்கு அனுப்புங்கள் அனுராவுக்கு ஜெயவீவா. இனவாத, மதவாத மரத்தின் அடியில் கோடரி வைத்தாயிற்று.
-
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் சத்தியாக்கிரகம்!
திருகோணமலை புத்தர் சிலை வைப்பு விவகாரத்திலும் இந்த கஸ்ஸப்ப நுள்ளான் தேரர் கையோங்கி போலீசாரை தாக்கிவிட்டு, போலீசார் தன்னை தாக்கியதாக வைத்தியசாலையில் படுத்தவர் கண்டியளோ. பிறகு போலீசாரே சிலையை மீண்டும் வைக்க வைத்து பெருமை பேசியவர். இப்போ, தான் கல்லில் இடறி விழுந்து போட்டு, போலீசார் தாக்கியதாக நாடகமாடி நாடகத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்துள்ளார். நிலைமை விபரீதமானவுடன் தானே வைத்தியசாலையில் இருந்து திரும்பிவிட்டார். கடிவாளம் இல்லாத இந்தக்குதிரை அரசவிழாக்களை புறக்கணிக்கப்போகுதாம். பின்னர் எதற்கு இவர்களுக்கு முன்னுரிமை. இது போகாவிட்டால் அரச விழா மிக அமைதியாக நடைபெறும். இவரை கைது செய்து சரியாக விசாரித்தால் இவர் யார், இவர் எந்த நிக்காயாவின் ஏவல் பிராணி என்பது வெளிவரும். எனக்கென்னவோ இது கம்மன்பிலவின் ஏவல் போலத் தெரியுது. நான் மஹிந்தவின் நிக்காய என்றால் அடிமை என்பது பொருள். மொத்தத்தில் இவர்கள் எல்லாம் அரசியல் அடிமைகள்.
-
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் சத்தியாக்கிரகம்!
ஒரு பிக்குவும் உண்ணாவிரதம் இருந்து சாகமாட்டான். நேற்று இந்த கூட்டம் போலீசாருடன் தர்க்கம் செய்யும்போது, ஒருவன், அவன் பிக்குவல்ல திலீபனைப்பற்றியும் ஏதோ சொன்னான் என்னவென்று புரியவில்லை.
-
சிராந்தி ராஜபக்ஷவுக்கு பிணை – நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!
கண்டிப்பாக அறுவை சிகிச்சை செய்து அறிக்கை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும், இல்லையேல் சிராந்தி ****வேண்டும். சும்மா ரணிலுக்கு அவசர சிகிக்சை என்று சொன்னவர் தொழில் வாய்ப்பை இழந்து விட்டார், ஆனால் ரணிலுக்கு இன்னும் சத்திர சிகிச்சை செய்யவில்லை. தப்பிப்பதற்காக பொய் சொல்லி நீதிமன்றத்தை ஏமாற்றக்கூடாது.
-
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கொழும்பில் பிக்குகள் தொடர் சத்தியாக்கிரகம்!
யாரும் இவர்களை தொந்தரவு செய்யக்கூடாது, தாங்களாகவே கிளம்பிப்போவார்கள். "கடல் வற்றும் கடல் வற்றுமென காத்திருந்த நரியொன்று உடல் வற்றி செத்ததாம்." ஜானாதிபதி வேண்டுமானால் எதுவும் செய்யலாம் என்பதற்காக கடந்தகால ஜனாதிபதிகள் போல் கொலைகாரருக்கும் தீவிரவாதிகளுக்கும் மன்னிப்பும் பதவியும் கொடுத்து கௌரவப்படுத்த, சட்டத்திற்கு முரணானதை செய்ய அவர் ஒன்றும் திருட்டுக்குடும்பத்தில் பிறக்கவில்லை, பிக்குகளை வைத்து பணம் பரிமாறி ஜனாதிபதியாகவில்லை, மக்களின் நம்பிக்கையில் ஜனாதிபதியானவர். தூய்மையான துறவிகளாக இருக்க முடிந்தால் தொடரலாம் இல்லையேல் வெளியேறி தங்கள் துஸ்பிரயோகங்களைத்தொடரலாம் யாரும் தடுக்கப்போவதில்லை. இவர்களால் நாட்டிற்கும் மதத்திற்கும் அவமானம். ஊடகவியாளர் மேல் விரைவில் கை வைப்பார்களாகில் அள்ளிகொண்டுபோய் போட வேண்டியது.
-
மகா சங்கத்தினரை அவமதிக்கும் சமூக ஊடகப் பிரச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – மல்வத்து மகாநாயக்கர்
எங்கட பிக்குகள் அங்கே போய் கூத்தடிக்குதுகள் என்றால், அங்க இருக்கிறதுகள் எப்பிடி இருக்குங்கள்? அதுதான் பாத்தோமே போதைப்பொருள் கடத்திய பிக்கு எங்கே என்ன செய்து கொண்டிருந்தது என்று.
-
மகா சங்கத்தினரை அவமதிக்கும் சமூக ஊடகப் பிரச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – மல்வத்து மகாநாயக்கர்
அமைதியையும் அன்பையும் மன்னிப்பையும் காருண்யத்தையும் மதங்கள் போதிக்கின்றன, பகைவனையும் அன்பு செய் என்கிறது. ஆனால் பாவம் புத்தர், இந்தக்காவாலிகளின் கையில் சிக்கி சின்னாபின்னப்படுகிறார். எனக்கென்னவோ இந்த பிக்குகளை கண்டால் வெறுப்பு. காரணம் அறிவு தெரிந்த வயதிலிருந்தே இந்தக்கண்ணறாவிகளின் சொல்லும் செயலும் வெறுத்துப்போய்விட்டது. நல்லதொரு மதத்தை சுயநலத்திற்காக நரகமாக்கி வைத்திருக்கிறார்கள். இது போலி பௌத்தத்தின் அழிவு காலம் போற்தான் எனக்கு தோன்றுகிறது. மற்றவர்களை குறை கூறுவதற்கு முதல், உங்களைத்திருந்துங்கடா. உங்கள் செய்கைகளை புத்தரே அருவெறுப்பார்.
-
மகா சங்கத்தினரை அவமதிக்கும் சமூக ஊடகப் பிரச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – மல்வத்து மகாநாயக்கர்
அதில்லை சாமியார், இந்தளவு லீலைகளையும் செய்து கொண்டு தாங்கள் புனிதர், உலக தெய்வங்கள் எல்லாம் தங்களை வணங்குகின்றனர் என்றதும், தங்கள் ஆடை புனிதம் என்று சொன்னதும் தப்பு. அதை பெடியள் சான்றுகள் அளித்து நிரூபிக்கின்றனர் என்று நான் நினைக்கிறேன். இந்த ஆதாரங்கள் எல்லாம் வெளிவர போராடியதும் சம்பந்தப்பட்ட பிக்குகளே. "நுணலும் தன் வாயாற் கெடும்." என்பார்களே அதுபோல.
-
மகா சங்கத்தினரை அவமதிக்கும் சமூக ஊடகப் பிரச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – மல்வத்து மகாநாயக்கர்
நன்றி சிறியர். ஆமாம் தேரர்களுடன் பொருத வேண்டாம், அவர்களின் லீலைகளை அம்பலப்படுத்தி, இப்போ காவி எங்கே போனது, அதை யார் கழற்றியது, யார் மதத்தையும் காவியையும் இழிவு படுத்தியது என விளம்பரப்படுத்த வேண்டும். நான் சொல்லல, இந்த போராட்டத்திற்கு பின் நிற்கிற எல்லோரின் பின்னணியையும் விசாரித்து பகிரங்கமாக காவியை உருவ வேண்டும். கஸ்ஸப்ப தேரரின் குற்றவியலை அறிய ஆவலாக உள்ளேன். அடுத்தவர் குடும்பத்தை கலைப்பது, குழந்தைகளை துஸ்பிரயோகம் செய்வது இதற்கு அவர்களுக்கு உதவுவது காவிக்கள்ளர்.
-
முன்னாள் போராளி எக்னலிகொட வழக்கில் தெரிவித்த திடுக்கிடும் தகவல்கள்...
போர் முடிவடைந்து புலிகள் முறியடிக்கப்பட்டதன் பின் எப்படி ஜனாதிபதி பயணம் செய்யும் விமானத்திற்கு ஏவுகணை அடிக்க முடியும்? பிரச்சனைகள் மாறக்கூடாது என்பதற்காகவே புலிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டனர்.
-
புலிகளின் தலைவரின் ஆன்மா சாந்தியடையவே மகிந்த பழிவாங்கப்படுகின்றார்!
ஏதோ.... மகிந்தவை தண்டித்தால்த்தான் நம் தலைவரின் ஆன்மா சாந்தியடையுமாம். யார் இதைபோதித்திருப்பார்? அப்போ, மகிந்தவின் ஆன்மா சாந்தியடைய யாரை பழிவாங்குவது? இதுகளெல்லாம் சட்டத்தரணி, பேச்சாளர்.
-
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு இருதய பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!
வழக்கின் ஒவ்வொரு திகதிக்கும் ஒவ்வொரு அறுவை சிகிச்சை செய்து ஆளை அனுப்பிவிடுங்கோ. அடுத்ததடவை நீதிமன்றத்திற்கு சக்கர நாற்காலியில் வருவாராக மதிப்பிற்குரிய நாட்டின் முதற் பெண்மணி சிராந்தி. ஏழைகளின் பணத்தை கொள்ளையடித்து ஆரோக்கியமாக வாழ்ந்தவர் யாருமிலர்.
-
புலிகளின் தலைவரின் ஆன்மா சாந்தியடையவே மகிந்த பழிவாங்கப்படுகின்றார்!
அவர்கள் செய்தது தப்பில்லை. அவர்களை தண்டிப்பதுதான் தப்பு. தாங்கள் எது செய்தாலும் புலிகளை வைத்து தமிழரின் சொத்துக்களை, உயிர்களை அழித்து தப்பி விடலாமென்கிற கலாச்சாரம் மாறி குற்றமிழைத்தவருக்கு தண்டனை என்கிற யதார்த்தத்தை ஏற்க மறுத்து மீண்டும் எண்ணெய் ஊற்ற முயற்சிக்கிறார். ராஜபக்சக்களை தண்டிக்க வேண்டுமென்று மக்கள் எப்பவோ முடிவெடுத்தே, மஹிந்தவை தேர்தலில் புறக்கணித்தார்கள், கோத்தாவை விரட்டினார்கள், அனுராவை தேர்ந்தெடுத்தார்கள். வேறு யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசியல் சதுரங்க விளையாட்டுத்தொடரும் என்பது மக்கள் நன்கே அறிந்திருந்தனர். என்ன செய்வது? விதி வலியது. அதைத்தான் கர்மா என்று புத்தர் போதித்தார். இது கூட தெரியாத பௌத்தர்கள் நம்நாட்டில் பௌத்தம் போதிக்கிறார்கள். "முற்பகல் செய்ய பிற்பகல் விளையும்." வரலாற்றில் எழுதப்படுமென நினைத்து விளம்பர படங்கள் வரைந்தார்கள், தன்னைத்தொடர்ந்து நாமல் ஜனாதிபதியாவார் என்று கனவு கண்டார், அரசியலமைப்பை மாற்றினார், தனது குடும்பமே இனி நாட்டின் தலைவர் பதவிக்குரியவர் என்று பல கொலைகளை செய்தார்கள். அந்த வேகத்திலேயே விரட்டி விட்டனர் மக்கள். இதுதான் வரலாற்றில் பதியப்படும் கசப்பான உண்மை! வரலாற்றில் பதிவது இருக்கட்டும், மக்கள் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள். சிலநேரம் காவாலிப்பிக்குகள் தங்கள் புத்தகங்களில் எழுதக்கூடும் நன்மை பெற்றதன் பயனாக.
-
"ஞானசார தேரருக்கு இனவாதி என முத்திரை குத்த வேண்டாம்" – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!
ஞான சார தேரர் குற்றமிழைக்கவில்லையாம் அதே நேரம் பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கட்டாம். அவர் குற்றவாளி என்றால் நீதிமன்றத்தில் தண்டனைக்குறைப்பு கேட்டு கோரிக்கை வைக்கலாம், குற்றமற்றவர் என்றால் மேன்முறையீடு செய்யலாம். அதைவிட்டு சண்டித்தனம், அச்சுறுத்தல் எதற்கு? அச்சுறுத்தியதாலேயே இன்று பலர் சிறையில் வாடுகின்றனர். ஞானசார தேரர் மட்டுமில்லை கடந்த அரசியல் கட்சிகள், தேரரில் எண்பத்தைந்து வீதமானோர் இந மற்றும் மதவாதிகளே. அவர்களை எப்படி அழைப்பது? ரணிலும் இருதய சிகிச்சைபெறவேண்டும் என்றார்கள். அவரோ புத்தகமும் கையுமாக வெளியே வந்தார், வந்தவுடன் அரசியல் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார். இன்றுவரை அப்படி ஏதும் சிகிச்சை பெறவில்லை. அது என்ன இதுவரை இல்லாத நோய் சிறை சென்றவுடன் திடீரென்று அரசியல்வாதிகளுக்கு வருகிறது? வீட்டிற்கு வந்தவுடன் எல்லாம் சுகமாகிவிடும். புதுசு புதிதாக ஒவ்வொரு காரணத்தை கண்டுபிடிப்பார்கள் .
-
இன்று கொழும்பில் கூடும் பௌத்த தேரர்கள்? நடைபயணப் பேரணி தொடர்பில் தகவல்!
இதற்கிடையில் ஒரு தமிழன் வந்து, பௌத்தத்தை காப்பாற்றப்போறாராம் என சீன்ஸ் போடுறார். தமிழர் அழியும்போது ஒரு பிக்குவாவது எதிர்த்து குரல் கொடுத்தாரா? இராணுவத்திற்கு பிரித் ஓதி நூல் கட்டி அனுப்பிவிட்டவர்கள் தமிழரை அழிக்க. ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் கூடி இன்னொரு அரகலய ஏற்படுத்துவதற்கு தண்ணிபோத்தல்கள், சாப்பாடு என கூடாரமடித்தவர்கள் கலைந்து போயினர். அவர்கள் ஒரு கலவரத்தை திட்டமிட்டே வந்தனர் கைகூடவில்லை.
-
இன்று கொழும்பில் கூடும் பௌத்த தேரர்கள்? நடைபயணப் பேரணி தொடர்பில் தகவல்!
காவாலிப்பிக்குகள் நீதிமன்ற தடை உத்தரவை கிழித்து எறிந்து போட்டுதுகள். இப்போ நீதிமன்றத்தை நோக்கி நகர்ந்து பின் சமய அமைச்சை நோக்கி திரும்புதுகள் போலிருக்கு. நுள்ளான் மாதிரி இருந்துகொண்டு கஸ்ஸப்ப தேரர் தான் இப்போ நாட்டில் பல இடங்களில் பிரச்சனையை உருவாக்குது. இதன் பின்னணியை ஆராய வேண்டும். இன்னொரு தேரர் குழு இந்த குப்பையளுக்கு எதிராக குரல் எழுப்புகிறார்கள். சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி போல கொஞ்சம் கிளம்பி இவர்களுக்கு அளிக்கப்பட்ட முன்னுரிமையை இழக்க வற்புறுத்துகிறார்கள் என நினைக்கிறன். இதுகள் ஒரு கலவரத்தை ஏற்படுத்தாமல் ஓய மாட்டார்கள். இரத்த தாக்கம் எடுத்துவிட்டது. எதற்காக போராடுகிறோம் என்பதே தெரியவில்லை. ஒரு குற்றவாளியின் காவியை கழற்றியது தவறாம், எத்தனை காவிகளை தெருவில் இழுத்து கூடாரம் கட்டியிருக்கிறார்கள், இது இழுக்கில்லையா? தங்களுக்கு சிறையில் தனிப்பட்ட வசதி, இடம் வேண்டுமாம். அப்போ என்ன நடக்கும்? பிக்குகளின் குற்றங்கள் அதிகரிக்கும், தண்டனையில்லை, எல்லா வசதிகளும் உண்டு, குற்றம் செய்வதற்கு தடையென்ன? சஜித் சொல்கிறார், சிறை செல்லும் பிற மத குருக்களுக்கும் இப்படியான வசதி செய்து கொடுக்கப்படுமாம். எந்த மதத்தவனாவது குற்றவாளிக்கு சலுகை கேட்டு தெருவில் போராட மாட்டார்கள். நீதிமன்றம் என்று செல்வதற்கு முன்னே அந்த மதத்தின் தலைமை அவர்களை துறவறத்திலிருந்து வெளியேற்றி விடுவார்கள். அப்படி குற்றம் செய்வதையே அவமானமாகக் கருதுவார்கள். நாடெங்கும் பிக்குகளின் அடாவடியையே பேசுகிறார்கள், ஊடகங்களும் செய்திகளை வெளியிடுகின்றன, அவ்வாறு செய்பவர்களையும் தூற்றுகிறார்கள், மக்கள் சிரிக்கும்படி தெருவில் நின்று ஊளையிட்டுக்கொண்டு சிரிப்பவர்களையும் திட்டுகிறார்கள், தங்களுடைய அக்கிரமங்கள் போதாதென்று புத்தர் சிலையையும் காவிக்கொண்டு அசிங்கப்படுத்துகிறார்கள். இதில இன்னொரு பிக்கு விகாரையில் உள்ள பொருட்களுக்கு பாதுகாப்பில்லையாம், தனது உயிருக்கு பாதுகாப்பில்லையாம் என்று அது வேறு எச்சரிக்குது. இதுகள் இப்போதைக்கு அடங்காதுகள். ஒன்று நாடு அழியும் இல்லை நாட்டை அழித்த போலிப்பௌத்தம் அழியும்.
-
இரத்து செய்யப்பட்டது அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை
ரிஸானா சவுதியில் வேலை செய்தவர், அந்நாட்டு சட்டங்கள் எப்படியான கொடூரமானவை என்பது அவருக்கு தெரிந்திருக்கும், இந்நிலையில் ரிஸானா குழந்தையை வேண்டுமென்றே கொலை செய்ய எண்ணியிருப்பாரா? குழந்தைக்கு புட்டிப்பால் பருக்கிக்கொண்டிருந்தார் ரிஸானா, குழந்தையின் தாய் அவரை தன் காலால் உதைத்திருக்கிறார், குழந்தைக்கு பால் புரைக்கேறி பேச்சு மூச்சின்றி இருந்திருக்கிறது. அதை அவதானித்த ரிஸானா, தன் எசமானியிடம் விடயத்தை கூறி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்படி கூறியிருக்கிறார், அதை கருத்திற்கொள்ளாமல் றிஸானாவை தாக்குவதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறார். தாக்குதலை நிறுத்தியபின் நிலையை உணர்ந்த அந்த எஜமானி, றிஸானாவே குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டி மீண்டும் அவரை தனது செருப்பால் தாக்கி போலீசில் கொடுத்திருக்கிறார். வேலைக்கு செல்லும் பெண்களை, தங்கள் அடிமையாகவே நடத்துகிறார்கள். ஓய்வு இல்லாத வேலை, தூக்கமே சிறிது நேரந்தான், என்ன செய்வது? ஏழ்மை காரணமாக எங்கள் பெண்கள் படும் கஸ்ரம். எத்தனை பெண்கள் மனரீதியாக, உடல்ரீதியாக பாதிக்கப்பட்டு, ஊதியம் கூட இல்லாமல் நடைப்பிணங்களாக திரும்பி வந்திருக்கிறார்கள்.
-
இன்று கொழும்பில் கூடும் பௌத்த தேரர்கள்? நடைபயணப் பேரணி தொடர்பில் தகவல்!
தேரருக்கு மரணதண்டனை கொடுக்கவில்லையே என்று வருந்துகிறார்கள் போலுள்ளது! இந்த அசிங்கங்கள் அதை எதிர்பார்த்துதான் கிளம்பியிருக்கிறானுகள். அவனுகளுக்கு தெருவில் நின்று கடைகளை கொழுத்தவேணும், மக்களை அடித்து கொன்று ரத்தம் குடிக்க வேண்டும், இல்லையேல் தெருவில நின்று ஊளையிட வேண்டும். அதை சுட்டிக்காட்டும் பத்திரிகைகளை தடை செய்ய வேண்டுமாம். ஒரு குற்றவாளிப்பிக்குவிற்காக நாடே அல்லோல கல்லோலப்படுகிறது என்றால்; நாடு முழுவதும் குற்றவாளிகள் பெருகி, விகாரைகள், பாராளுமன்றம், இராணுவ முகாம், நிரம்பி எங்கும் குற்றவாளிகளே இயங்கியுள்ளனர். இப்போ, மக்களை அழைக்கின்றனர் கலவரத்தை தொடங்க. தொடங்கினால் தெரியும், காவியில் வந்தவர்கள் யாரென்று. இவனுகளை அடிக்கவும் வேண்டாம், கொல்லவும் வேண்டாம், அசிங்கப்படுத்தவும் வேண்டாம், அவகளுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அதே நேரம் மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். மக்களே இவர்களை துரத்துவார்கள் அல்லது இவர்களை விட்டு விலகுவர், அதுதான் இவர்களுக்கு செய்ய வேண்டும். ஒவ்வொரு பிக்குவும் என்னென்ன குற்றத்திலீடுபட்டார்கள், சமூக சீர்கேடுகளை ஏற்படுத்தினார்கள் என்பதை மக்களுக்கு வெளிப்படுத்தினால், தாங்களாகவே கலைந்து விடுவர்.
-
மகா சங்கத்தினரை அவமதிக்கும் சமூக ஊடகப் பிரச்சாரத்தை ஒழிக்க வேண்டும் – மல்வத்து மகாநாயக்கர்
பௌத்தம் தூய்மையானது, காவியுடை புனிதமானது என்று நிறுவுவதற்காக போராட வெளிக்கிட்டு, அந்த மதத்தின் அசிங்கங்கள் வெளிக்கொணரப்பட்டு நாறடிக்கப்படுகிறது அவர்களாலேயே. இன்னும் அதற்குள் இருக்கும் அசிங்கங்கள், குற்றவாளிகள் வெளிவரவேண்டும், பௌத்தம் சுத்தமாக்கப்படவேண்டும். இந்த மதத்திற்கு ஒரு தலைமை, ஒழுங்கு விதிகள், பயிற்சிகள் இருப்பது போல தோன்றவில்லை. நினைத்தால் இராணுவ சீருடையுடன் முகாம்களுக்குள்ளும் காவியுடன் விகாரைக்குள்ளும் மறைந்து தேசிய வீரர் என்றும் மதத்தை காப்பவர்கள் என்றும் மக்களை ஏமாற்றி தண்டனைகளிலிருந்து தப்பித்தவர்கள் போலுள்ளதே.