Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

satan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. இன்று காலை போலீசார் அவரின் உருவச்சிலையை அகற்றி எடுத்துச்சென்றுள்ளனர்.
  2. முதலில் கொடுத்த பொது மன்னிப்புக்கே அவர் மதிப்பளிக்கவில்லை, நாவை அடக்கவில்லை, இனி மன்னித்தால் மட்டும் அடங்கி விடப்போகிறாரா? எனினும் இது ஜனாதிபதியின் முடிவு. ஒரு குழுமத்திற்கு வழிகாட்டி இவர், இவரது முன்மாதிரி இவரை பின்பற்றுவோருக்கு எதை போதிக்கிறது, வழிகாட்டுகிறது? ஒரு தெளிந்த பார்வையற்றவன் இன்னொரு பார்வையற்றவனுக்கு வழிகாட்ட முடியுமா? தலைமைத்துவம் மிகவும் தெளிவான பார்வை, செயல் கொண்டதாக இருக்க வேண்டும். அது இல்லாத தலைவர்கள், நாட்டுக்கு தலைமை ஏற்றதால் நடந்த கொடூரங்களை அனுபவித்தவர்கள், அதிலிருந்து மீள முடியாமல், மாற்றம் அடைய முடியாமல் நாடு தவிக்கிறது. ஆகவே இவர்கள் தங்கள் பொறுப்புகளை களைந்து வெளியேற, வெளியேற்றப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட கருத்து. இவர்களை சீண்டியதாலேயே இவருக்கு இந்த நிலை. இவர், தனது செயலுக்காக மனம் வருந்தி, மன்னிப்பு கேட்டால்; கேட்பாரா இவர்?
  3. ஆமாம். தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம், பேரணி, உண்ணாவிரதம் என்று எதையெதையோ சொல்கிறீர்கள், செய்கிறீர்கள் எல்லாமே உங்களுக்கு எதிராகவே திரும்புகிறதே. எதை வேண்டுமானாலும் செய்யுங்கள், அது அனுராவுக்கு ஆதரவாகவே மக்களை தூண்டுகிறீர்கள். இதற்கு பேசாமல் நீங்களும் அவரோடேயே சேர்ந்து விடுங்களேன். எதற்கு நேரத்தை விரையம் செய்கிறீர்கள்? இல்லையேல் அரசியலில் இருந்து காணாமற் போய்விடுவீர்கள்.
  4. இனி என்ன செய்யப்போகிறார்கள் எதிர்க்கட்சியினர்? இந்த அரசாங்கத்தை எதிர்த்து ஒன்று சேரும் கட்சிகளும் ஒரே நோக்கில் இல்லை, கூட்டங்களும் ஒரே கருத்தை பிரதிபலிக்கவில்லை, பிசுபிசுத்துப்போகின்றன அல்லது அவர்களுக்கு எதிராகவும் அனுராவுக்கு ஆதரவாகவும் மாறுகின்றன. அனுராவுக்கு எதிராக திரண்டவர்கள், நாமல் திருடன் என்கிறார்கள். அனுரா சர்வாதிகாரி என்று கூப்பாடு போட்ட கூட்டத்தில் ஜனநாயகம் பேணப்பட்டதாக அறிக்கை விடுகிறார். ஆகவே இவர்கள் பேசாமல் வீட்டிலிருக்க வேண்டும் இல்லையேல் அனுராவுடன் இணைந்து செயற்படவேண்டும். தங்களது கட்சியை தாங்களே குழிதோண்டி புதைத்துக்கொண்டிருக்கிறார்கள். நல்ல நோக்கந்தானே. வழக்குதாக்குதல் செய்தவர் இறந்தாலும் விசாரணை, தீர்ப்பு நடைபெறுவதில்லை. பின்னர் வழக்கு பேசிய சட்டத்தரணியும், எதிராளியும் இறந்துவிடுவா.ர் அந்த வழக்கு அவரது பிள்ளைக்களுக்கு கடத்தப்படுகிறது, வேறொரு சட்டத்தரணி பொறுப்பெடுக்கிறார். பணம், நேரம் விரையம், மன உழைச்சல். அதே போல் ஒரு வழக்கு எத்தனை மாதத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பளிக்க வேண்டும், வழக்காளி, எதிராளியிடம் எவ்வளவு பணம் வசூலிக்க வேண்டுமென்பதையும் தீர்மானிக்கும் சட்டம் கொண்டுவரப்படவேண்டும். நல்ல நோக்கத்திற்காக மக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாற்றப்படும், ஏற்படுத்தப்படும் சட்டங்களுக்கு ஆர்ப்பாட்டம், எதிர்ப்பு, விமர்சனம் எழுப்புபவர்கள், ஜனநாயகத்திற்கு எதிராக மக்களை ஒடுக்க ஏற்படுத்திய பயங்கரவாதச்சட்டம், தங்களது பதவிகளை நீண்ட காலத்திற்கு மாற்றும் சட்டங்களை இயற்றும் போது எதிர்ப்போ, போராட்டமோ, விமர்சனமோ செய்வதில்லையே. அது ஏன்?
  5. அந்த கட்டடத்தை தடயவியல் நிபுணர்கள் சோதனையிட்டால் எதிர்பாராத சில பல கொலைகளுக்கானபழைய தடயங்களும் சிக்கலாம். இது மட்டுமல்ல, நாட்டை கொள்ளையடித்த, தலைவர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்களின் கதையும் இதுதான். அதன் லட்ஷணந்தான் ஒன்றொன்றாக வெளிவருகிறதே. அவர்களே குற்றவாளிகள், எப்படி குற்றத்தை தடுப்பார்கள்? ஆளாளுக்கு நாட்டை கோடிக்கணக்கில் கொள்ளையடித்து பதுக்கினார்கள், இப்போ பதுங்குகிறார்கள். நாட்டை நேசித்தவர்கள் என்கிறார்கள், இப்போ நாட்டை விட்டு தப்பி ஓடுகிறார்கள். முதுமை, நோய், தனிமையில் கணவன். சிறையில் மகன். அடுத்த மகன்களும் எந்நேரத்திலும் கைதுசெய்யப்படலாம். அம்மா இதயசிகிக்சைக்காக சிங்கப்பூர் போவதாக சொன்னார்கள், இப்போ கண்சத்திர சிகிச்சையாம். போகும்போது ஒரு காரணம், போனபின் வேறொரு காரணம், உண்மைக்காரணம் வேறு. விசாரணை என்று வந்தவுடன் அரசியல் வியாதிகள், கொள்ளைக்காரர், கொலைகாரர், சிறுவர் பாலியல் துஷ்பிரயோகிகள் எல்லோருக்கும் தீராத நோய் வந்து வைத்தியசாலையில் படுத்துவிடுவார்கள். அதாவது உள்நாட்டு மருத்துவர்களால் குணமாக்க முடியாத விசித்திரமான நோய். நாடே விசித்திரமான நாடு.
  6. தொழிலுக்கு போகும்போதும் வாளோடு செல்கிறார்கள். தற்காப்புக்காக போலுள்ளது.
  7. சுடுகாட்டையா குறிப்பிடுகிறீர்கள் நீங்கள்? அங்கே, இவருக்குத்தான் பஞ்சாயத்து நடக்கும், இவருக்கு ஆதரவளிக்க யாருமே இருக்கமாட்டார்கள் அங்கு.
  8. இவவும் ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக வெடித்தவ தான் இப்போ, அதை இங்கே சொல்கிறதன் தேவையென்ன? கடந்த காலங்களில் இவைகள் நடைபெறவில்லையா? ஊடகவியலாளர்கள் பட்டப்பகலில் நடுவீதியில் கொல்லப்பட்ட போது இவர் எங்கே தூங்கிக்கொண்டிருந்தார்? அல்லது மறைந்திருந்தார்? அவர்களுக்கு எதிராக ஏன் கருத்து சொல்ல முடியவில்லை இவரால்? அந்தகாலம்தான் மக்கள் சுதந்திரம் அனுபவித்தனர் என்பாரானால் இவர் எப்படியானவர்?
  9. இன்று, உலகில் மதங்களின் பெயரால் நடத்தப்பெறும் கொலைகளே அதிகம். அழைக்கும் பெயர்கள், வழிபாடுகள் வேறானாலும் இறைவன் ஒருவனே, போதனைகள் ஒன்றே. மன்னிப்பு, அன்பு, இரக்கம் இதுவே முதன்மையானது. இறைவன் சொல்வது ஒன்று, அவர் பெயரால் நடத்தப்பெறுவது வேறொன்று. "மன்னிக்க தெரிந்தவன் இறைவனடா." என்பார்கள். இறைவன் சினம்கொள்ளத்தாமதிப்பவர், தவறுக்கு தண்டிப்பதற்கு முன் தன் இரக்கத்தை வெளிப்படுத்துபவர். தான் எதை போதித்தாரோ, அதை செயலில் காட்டினார். எதை செய்தாரோ அதை தொடரும்படி தமது அடியவரை பணித்தார். தன்னை துன்புறுத்தியவரை "பிதாவே இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இவர்களை மன்னியும்." என்று வேண்டினார். தன் தவறுக்காக வருந்திய ஒருவரை "இன்றே நீ என்னுடன் வான் வீட்டிலிருப்பாய்." என்றார். தவறு செய்தவர் மனம்வருந்தி, மனந்திரும்ப அழைக்கிறார், காத்திருக்கிறார். மறைந்த பரிசுத்த பாப்பரசரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டார், அதிஷ்டவசமாக காயங்களோடு தப்பி, சிகிச்சை பெற்றார். சிகிச்சை முடிந்து திரும்பியவுடன் சிறைச்சாலைக்கு சென்று குற்றவாளியை மனமார மன்னித்து விட்டேன் எனக்கூறி கட்டியணைத்தார். அனோஜனின் விடுதலைக்காக உழைப்போர் அனைவருக்கும் விசேடமாக அனுரா அரசாங்கத்திற்கும் நன்றிகள்.
  10. சிறீதர் தியேட்டரில் இவர் பாவித்த மின்னிலுவை கோடிக்கணக்கில் செலுத்தப்படாமல் இருந்தது, அதையும் சேர்த்து இவரிடம் அறவிடவேண்டும். இதுவே ஓசியில பாவித்தவர், தனது கட்சி உறுப்பினர்களை இராணுவத்தில் இணைத்து பல ஆயிரக்கணக்கில் கொள்ளையிட்டவர், இந்த சிறப்பில மக்களுக்கு சேவை செய்தவராம். கொள்ளையடிப்பது மக்கள் பணத்தை, மக்களுக்கு சேவை செய்தவன் தான் என வீண் தம்பட்டம் அடிப்பது.
  11. பாவம் சஜித். என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறார் எல்லாம் தோல்விகளாகத்தான் முடிகிறது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் பௌத்த ஆதரவாளனாக தன்னைக்காட்ட முயற்சித்தார் ஒன்றும் மாறவில்லை. இப்போ ஆர்ப்பாட்டத்தில் இறங்கினார் உடனே அரசாங்கம் அதை தடுக்கும் அதை வைத்து மக்களிடம் செல்வாக்குப்பெற நினைத்தார், பாதையை மறித்து கண்ணீர்புகைக்குண்டுகளோடு பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீசாரை அவற்றை விலக்கி அவர்களுக்கு இடையூறு இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்த உத்தரவிட்டார். தடைகளை புரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய முனைந்தவர்கள், இதில் அனுராவின் சதி இருக்கிறதென குற்றம் கூறி தங்கள் வரையறைக்குள் நின்று ஆற்பாட்டம் நடத்தினர். இனி வருங்காலத்தில் இவைகள் நடைபெறாமலும் போகலாம் காரணம், இவர்களது எதிர்ப்புகளால் அனுராவின் மேலுள்ள மதிப்பு மரியாதை மக்களிடத்தில் அதிகரிக்கலாம். ஆமாம் இதுவரை காலமும் இவர் கட்சியில் இருந்தார் என்று எதற்காவும் குரல் எழுப்பாதவர், இப்போ ஏன் வீறு கொண்டு எழுகிறார் என்று தெரியவில்லையே? மஹிந்தவின் காலத்தில் அடக்கி வாசித்தவர்களெல்லாம் வீரர்களாக தம்மை காட்டிக்கொள்கின்றனர், ஒன்று திரள்கின்றனர். அவர்கள் அடக்குமுறையால் நாட்டை ஆண்டனர், இவரது நடவடிக்கை அதற்கு எதிர்மாறாக இருப்பதால் ஜனாதிபதி கனவிலுள்ளவர்கள் அது என்றுமே நிறைவேறாத கனவாகிவிடுமென அஞ்சுகின்றனர் போலும்.
  12. கண்டிப்பாக இதுவும் தீர்ப்பில் சேர்க்கப்படவேண்டும்! ராசி கைமாறுவதால் இனிப்பிச்சைதான் எடுக்கவேண்டும் இவர். அதோடு இவரும் ஆயுதங்களை சட்டத்திற்கு முரணான குழுக்களிடம் கொடுத்தது, திணைக்களங்களுக்குள் முறையற்ற ஊழல், ஆட்சேர்ப்பு போன்ற பல வழக்குகளை எதிர்கொள்வார். பல திருடர் அனுரா பக்கம் தாவ பகீரதப் பிரயத்தனம் மேற்கொண்டார்கள் ஆனால் காரியம் கைகூடவில்லை. அப்படி திருடர்களை, சந்தர்ப்பவாதிகளை சேர்த்துக்கொண்டால் முன்னாள் ஆட்சியாளர்களுக்கும் தற்போதைய ஆட்சிக்கும் என்ன வேறுபாடு இருக்கப்போகிறது?
  13. அமைச்சரவை அந்தஸ்தை பயன்படுத்தி மக்களின் ஆதனம், கட்டடங்களை அடாத்தாக பிடிப்பது, மணல் கொள்ளையிடுவது, இனாமாக மின்சாரம் பாவிப்பது இப்படி பல்வேறு மக்களை பாதிக்கக்கூடிய செயல்களில் ஈடுபட்டவர், தன் பதவிக்காலத்தில் அரசாங்கத்தோடு இணைந்து மக்களுக்கு நல்லது செய்தவராம் ஆனால் மக்கள் தனக்கு வாக்கு போடவில்லையாம் என்பது இவரது குற்றச்சாட்டு. முன்னாள் திருட்டு ஜனாதிபதிகள் செய்த குற்றங்களில் எந்தளவில் இவர் சளைத்தவர்? மஹிந்தா, ரணில் என்று இவர்களுடன் சூழ இருந்ததின் காரணம் இதுதான். இவர்களோடு கூட இருந்து ரத்தம் குடித்தவர்கள் இவர்கள்.
  14. இவ்வளவு காலமும் லஞ்சம் பெற்றவர்களும் கொடுத்தவர்களும் பாதுகாப்பாக எந்தப்பிரச்சனையுமில்லாமல் உயர் பதவிகளில் இருந்திருக்கிறார்கள். மக்களின் பணத்தில் இவ்வளவு சுகபோகம் அனுபவித்தவர்கள் இப்போ, மக்களுக்காக வருந்துகிறார்களாம். முன்னாள் கனவு ஜனாதிபதி தான் பதவிக்கு வருமுதலே என்னென்ன செய்யவேண்டும் எப்படி செய்ய வேண்டுமென பயிற்சி பெற்றிருக்கிறார். இவர் பதவிக்கு வருவாரானால் ஊழலில் தன் முன்னோர்களையே விழுங்கி சாதனை படைப்பார்.
  15. இப்போதான் இந்த நாடகத்தின் முதற்காட்சி, இது தொடரும். இவர்கள் மதச்சலவை செய்யப்பட்டவர்கள், இவர்களை எய்தவர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இதனோடு சம்பந்தப்படாதவராயின் கோத்தா ஏன் முந்திக்கொண்டு தன்னை பயங்கரவாதச்சட்டத்தில் கைது செய்யவேண்டாமென நீதிமன்றத்தில் கோரிக்கையை தாக்கல் செய்தார்? வழக்கில் சம்பந்தப்படாத சுரேஷ் சலே ஏன் சான்றுகளை மறைக்க முயல்கிறார், மௌனம் காக்கிறார், நோயாளிபோல் நடிக வேண்டும்? தண்டனை பெற்றவர்கள் தங்களுக்கு உள்ள குடும்பப்பொறுப்புகளையும், தாங்கள் சிறையில் இருப்பதால் குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்புகளையும் குறிப்பிட்டனர். இந்த பொறுப்புகள் தாக்குதலுக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும்போது இருக்கவில்லையா? அல்லது தண்டனை அனுபவிக்கும்போதுதான் ஏற்பட்டதா? தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் இந்த பொறுப்புகள் இருந்தனவே, அவர்கள் யாதொரு குற்றமும் இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு இழைக்காதவர்கள், ஏன் குறி வைக்கப்பட்டார்கள்? இப்படியான கொலைகளை செய்தால் அல்லாஹ் சொர்க்கத்தில் இடம் தருவாராம் என்று சொல்கிறார்களே, அதற்காகத்தானே இந்த செயலில் ஈடுபடுகிறார்கள், பின் ஏன் வருந்துகிறார்கள்? சுவர்க்கம் போகபயப்படுகிறார்களோ? 'நாலும் நடந்து முடிந்த பின்தான் நல்லது கெட்டது புரிகிறது." நீதிபதியின் பதவிஉயர்வுக்காக இந்த தீர்ப்பு வழங்கப்பட்டதாக தண்டனை அறிவிக்கப்பட்டவர் கூறுகிறார். அதற்காக ஏன் இவ்வளவு காலம் செலவழித்திருக்க வேண்டும்? சிலரை விசாரணை அடிப்படையில் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்திருக்கிறார்களே, அது எப்படி சாத்தியமாகும்? இந்த தீர்ப்பினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இவர்களை பாவித்தவர்கள் இழப்பீடு வழங்கி, அவர்களின் குடும்பங்களை பராமரிக்க வேண்டும். இவர்களை பாவித்து, கொலைகளை புரிந்து, பதவிகளை அனுபவித்தவர்கள் விசாரிக்கப்படும்போது அவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படவேண்டும். உங்கள் நிஞாயமான ஆதங்கம் புரிகிறது, ஆனால் நாம் வன்முறையை ஆதரிக்கவோ, தூண்டவோ தயாராகவில்லை.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.