Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Surveyor

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

  1. இப்பொழுது சில ரெஸ்டாரண்ட்ஸ், அரசிடம் அனுமதி பெற்று, நோன்பு நாட்களிலும் "Take away" மட்டும் பகலில் செய்கின்றார்கள். இரவில் வழமை போல இயங்கும்.
  2. முகநூல் மற்றும் சோசியல் மீடியாவால் சில கலியாணங்களும் கைகூடி இருக்குது அதே நேரம் பல குடும்பங்களுக்குள் பிரச்சினைகளும் வந்துகொண்டு இருக்குது.
  3. 36 - செருத்துணை நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள் : ஆவணி பூசம்அவதாரத் தலம் : கீழ்த்தஞ்சை முக்தித் தலம் : ஆரூர் வரலாற்று சுருக்கம்: நின்மலராகிய சுவாமிக்குப் பூசையில் அர்ப்பணிக்கப்படுவன அனைத்தும் சகலவிதத்திலும் நிர்மலமாயிருக்க வேண்டுமென்பது; அவையொவ்வொன்றும் அசுத்தமற்ற சூழ்நிலையிலிருந்து சமயாசார ரீதியான அகப்புறச் சுத்தி உடையோரால் எடுக்கப்பட்டுச் சிவ சிந்தனையோடு கையாளப்படவேண்டும் என்பது பூசைநியம விதிகளில் ஒன்று. அவற்றின் மணங் குணங்களில் ஈடுபட்டு வாயூறுதலும் மூக்குளைந்து முகரவிழைதலும் கண்டிப்பாக விலக்கப்பட்டொழிந்தனவாம். அது, பூசைத் திரவியங்களை நாக்கு மூக்குத் தள்ளியெடுத்துக் கொள்ளவேண்டும் என நடைமுறை வழக்கிலிருந்து வரும் விதியால் சூசகமாக அறிவிக்கப்பட்டிருத்தல் காணத்தகும். இனி, அவ்வகையிற் பூசைக்கெனச் சங்கற்பித்தெடுக்கப்பட்டவை தற்செயலாக வழுவி விழுந்து கிடக்கும் நிலையிலும் பூசைப்பொருள்களே எனக் கொள்ளுதல் பூசைத் திரவிய மகிமையைப் பேணும் நெறியாம். அது, பூசை செய்து கழித்த பத்திர புஷ்பங்களாகிய நின்மாலியங்களை மிதித்தலாகாது என்ற வரையறை போல்வதோர் நெறியாகும். ஆதலின், தற்செயலாக நழுவிக்கிடக்கும் அவற்றைத் தானும் இரசனையுணர்வு முகர்வுணர்வுகளுக்கு விஷயமாக்குதலும் பழுதேயாம். சோழமண்டலத்திலே, மருகனாட்டிலே, தஞ்சாவூரிலே வேளாளர் குலத்திலே, சைவசிரோமணியாகிய செருத்துணை நாயனாரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் திருவாரூரை அடைந்து, காலந்தோறும் வன்மீகநாதரை வணங்கித் திருத்தொண்டுகள் செய்துகொண்டிருந்தார். இருக்கு நாளிலே. அங்கே சுவாமி தரிசனஞ் செய்யவந்த கழற்சிங்கநாயனாருடைய மாதேவி பூமாலை கட்டும் மண்டபத்தின் பக்கத்திலே விழுந்து கிடந்த ஒரு பூவை எடுத்து மோந்தாள் என்று நினைத்து, கத்தியினாலே அவளுடைய மூக்கை அரித்தார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
  4. 35 - சுந்தரமூர்த்தி நாயனார்பெயர்: சுந்தரமூர்த்தி நாயனார்குலம்: ஆதி சைவர்பூசை நாள்: ஆடிச் சுவாதி அவதாரத் தலம்: திருநாவலூர் முக்தித் தலம்: திருநாவலூர் வரலாறு சுருக்கம்: திருக்கயிலைமால் வரையில் சிவபிரானுடைய அடியார்களில் ஒருவர் ஆலாலசுந்தரர். இறைவனுக்கு மலர் கொய்தலும் மாலை தொடுத்தணிதலும் திருநீற்றை ஏந்தி நிற்றலுமாகிய தொண்டினை மேற்கொண்டவர். அவர் ஒரு நாள் வழக்கம்போல் நறுமலர்கொய்துவரத் திருநந்தவனத்தை அடைந்தார். அங்கு அனிந்திதை, கமலினி என்னும் பெயர்களையுடைய நங்கையர் இருவர் முன்னரே மலர் கொய்து கொண்டிருந்தனர். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் இவ்விருவரையும் கண்டார். அந்நங்கையர் இருவரும் ஆலாலசுந்தரர் தம் அழகில் ஈடுபட்டு ஆசை கொண்டனர். மகளிர்பாற் சென்ற மனத்தை மீட்டுச் சுந்தரர் இறைவனுக்குரிய நல்மலர்களைக் கொய்துகொண்டு பெருமான் திருமுன் சென்றார். அம்மகளிரும் அவ்வாறே மலர் கொய்து சென்றனர். எல்லா உயிர்களுக்கும் உள்நின்று அருள்சுரக்கும் பெருமான், ஆலாலசுந்தரரின் எண்ணத்தை அறிந்தார். சுந்தரரை விளித்து "நீ மாதர்மேல் மனம் வைத்தாய். ஆதலால் தென்னாட்டில் பிறந்து அம்மகளிருடன் மணந்து மகிழ்ந்து பின்னர் இங்கு வருக" என்று பணித்தார். சுந்தரர் அதனைக்கேட்டு மனம் கலங்கிக் கைகளைத் தலைமேல் குவித்து "எம்பெருமானே! தேவரீருடைய திருவடித்தொண்டிலிருந்து நீங்கி மானுடப்பிறப்பை அடைந்து மயங்கும்போது அடியேனைத் தடுத்தாட்கொண்டருள வேண்டும்" என வேண்டிக்கொண்டார். சிவ பெருமானும் சுந்தரருடைய வேண்டுகோளுக்கு இசைந்தருளினார். ஆலாலசுந்தரர் இறைவன் திருவருளால் தென்தமிழ் நாட்டில் பிறந்தார். * பிறப்பு மற்றும் வளர்ப்பு : திருமுனைப்பாடி நாட்டின் தலைநகராகிய திருநாவலூரில் மாதொருபாகனாருக்கு வழிவழி அடிமை செய்யும் ஆதிசைவ வேதியருள் சிறந்தவராகிய சடையனார்க்கு அவர்தம் அருமைத் திருமனைவியார் இசைஞானியார்பால் தீதகன்றுலகம் உய்யத் திருஅவதாரம் செய்தருளினார். சிவபிரான் அருளால் தோன்றிய தம் குழந்தைக்கு நம்பியாரூரர் என்று திருப்பெயரிட்டனர் பெற்றோர். நம்பியாரூரர் நடைபயிலத் தொடங்கித் தெருவீதியில் சிறுதேர் உருட்டி விளையாடிக்கொண்டிருந்த காலத்து அந்நாட்டு அரசர் நரசிங்கமுனையரையர் கண்டார். நம்பியாரூரர் அறிவொளி திகழும் திருமுகப் பொலிவினைக் கண்டு மகிழ்ந்து பெற்றோர்களிடம் சென்று நட்புரிமையால் நம்பியாரூரரை வேண்டிப் பெற்றுத் தம் அரச பதவிக்குரிய தம் அரசிளங்குமரராகக் கருதி அன்போடு வளர்த்து வருவாராயினார். அரசரின் அபிமானப் புதல்வராய் வளர்ந்த நம்பியாரூரர் அந்தணர்மரபுக்கேற்ப முந்நூல் அணிந்து அளவற்ற கலைகளில் வல்லவராய் விளங்கினார். இவ்வாறு இளம் பருவத்திலேயே திருவும் கல்வியும் வாய்க்கப்பெற்ற நம்பியாரூரர் இளவரசராயிருந்து பழகித் திருமணப்பருவத்தை அடைந்தார். சடையனார் தம் மைந்தர்க்குத் திருமணம் செய்ய எண்ணினார். திருநாவலூரை அடுத்த புத்தூரில் சைவ அந்தணர் மரபில் வந்த சடங்கவி சிவாசாரியார் என்னும் பெரியாரின் திருமகளை மணம் பேசி வரப் பெரியோர்களை அனுப்பினார். தம்முடைய திருமகளை மணம் செய்து தர இசைந்தார். முதியோரும் சென்று இம்மகிழ்ச்சியைச் சடையனாருக்குத் தெரிவித்தனர். அதனைக்கேட்டு மகிழ்ந்த சடையனார் திருமண நன்னாளை உறுதிசெய்து நம்பியாரூரரது அரச பதவிக்கு ஏற்பச் சுற்றத்தார் நண்பர் முதலானோர்க்குத் திருமணத் திருமுகம் அனுப்பினார். புத்தூரில் சடங்கவி சிவாசாரியாரும் திருமணம் நிகழ்த்தற்கு வேண்டிய எல்லாவற்றையும் குறைவறச் செய்தார். * தடுத்தாட் கொள்வது: மன்னன் நரசிங்கமுனையரையர், சடையனார் மற்றும் இசைஞானியார் ஆகியோர் நம்பியாரூரர் திருமணம் ஏற்பாடு சிறப்பாக செய்தனர். மணநாளன்று முதியவர் ஒருவர் வடிவம் கொண்டு வந்த சிவபெருமான். சுந்தரமூர்த்தி நாயனார் திருமணத்திற்கு வந்தார். முதியராய் வந்தவர் அங்குள்ளவர்களைப் பார்த்து "வேதியர்களே! நான் சொல்லுவதைக் கேளுங்கள்" என்றார். அதனைக் கேட்ட வேதியர் அவரை வரவேற்றுத் "தாங்கள் கூற வந்ததைக் கூறுங்கள்" என்றனர். அந்தணர் நாவலூர் நம்பியை நோக்கி "எனக்கும் உனக்கும் ஒரு பெருவழக்குள்ளது; அதனை முடித்தபின் திருமணத்தைச் செய்ய முயலுக" எனக் கூறினார். நம்பியாரூரர் அந்தணரைப் பார்த்து "உமக்கும் எமக்கும் வழக்கு இருப்பது உண்மையானால் அதனை முடிக்காமல் நான் திருமணஞ் செய்து கொள்ளேன்; உம் வழக்கினைக் கூறும்" என்றார். முதியவர் அவையோரை நோக்கி "நான் திருவெண்ணெய் நல்லூரிலிருந்து வருகிறேன்; நம்பியாரூரர் எனக்கு வழி வழி அடிமையாவன். இதுவே நான் சொல்லவந்த வழக்கு" என்றார். சபையில் இருந்த அனைவரும் சிரித்தனர்... "அக்காலத்தில் நம்பியாரூரர் பாட்டன் எழுதிக் கொடுத்த அடிமை ஓலை என்னிடம் இருக்கையில் நீ நகைப்பதன் பொருளென்ன?` எனக் கேட்டார் முதியராய் வந்த சிவபெருமான். "ஐயா! அடிமை ஓலை இருக்கிறதென்று கூறினீரே. அதனைக் காட்டும்; உண்மையை அறிவேன்" என்றார் நம்பியாரூரர். "நீ அவ்வோலையைக் காணுதற்குத் தகுதி உடையவனா? அதனை அவையோர் முன்னிலையில்காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்திய நிலையில் எனக்கு நீ அடிமைத் தொழில் செய்தற்கே உரியவன்" என்றார் அந்தணர். அம்மொழிகேட்டு வெகுண்ட நம்பிகள் விரைந்தெழுந்து ஓலையோ பிடுங்கி "பித்தனே அந்தணர்கள் வேறோர் அந்தணர்க்கு அடிமையாதல் என்ன முறை" என்று சொல்லிக் கொண்டு அவ்வோலையைக் கிழித்து எறிந்தார். அதை கண்ட அந்தணர் "நம்பியாரூரனாகிய இவன் என்கையிலுள்ள ஓலையை வலியப் பிடுங்கிக் கிழித்தெறிந்துவிட்டான். அதன் மூலமாக அவன் என் அடிமை என்ற உண்மையை உறுதிப்படுத்திவிட்டான்" என்றார். இதை கேட்ட நம்பியாரூரர் முதியவரை நோக்கி "நும்முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராய் இருக்கு மானால் உமது பிழைபட்ட வழக்கை அங்கேயே பேசித் தீர்த்துக்கொள்வோம்" என்றார். முதியவர் "நீ திருவெண்ணெய் நல்லூர்க்கு வந்தாலும் நான்மறை உணர்ந்த அவையத்தார் முன்னிலையில் உன் பாட்டன் எழுதிக்கொடுத்த மூல ஓலையைக் காட்டி நீ எனக்கு அடிமை என்பதை உறுதிப்படுத்துவேன்" என்று கூறிக் கோலை ஊன்றிக் கொண்டு முன்னே சென்றார்.அவரைப் பின்தொடர்ந்து நம்பியாரூரரும் சென்றார். * திருவெண்ணெய்நல்லூர் அவையில்: திருவெண்ணெய்நல்லூர் சபையில் நடந்த சம்பவத்தை நம்பியாரூரர் மற்றும் முதியவர் வேடம் தரித்த சிவபெருமான் இருவரும் கூறினார்கள். அந்தணர் நிறைந்த பெரும் சபையின் முன் மூலஓலை சுவடியே அளித்தார் முதியவர். அதை படித்த திருவெண்ணெய் நல்லூர் சபையின் அந்தணர்கள் ஓலை சுவடியில் இருக்கும் கையொழுத்தை ஒப்பிட்டு பார்த்து நம்பியாரூரர் அந்தணருக்கு அடிமை என தீர்ப்பளித்தனர். நம்பியாரூரரும் அந்த தீர்ப்புக்கு கட்டுப்பட்டார். அதன்பின் அவையினர் அந்தணரை நோக்கி "நும் முடைய ஊர் திருவெண்ணெய்நல்லூராக ஓலையில் குறிப்பிடப் பெற்றுள்ளதே, இவ்வூரில் உமது வீட்டையும், வாழ்க்கைச் செல்வத்தையும் எங்களுக்குக் காட்டுக" என்றனர். அதை கேட்ட அந்தணர் வேடம் தரித்த சிவபெருமான் "உங்களில் ஒருவரும் என்னை அறியீராயின் என்னுடன் வருக" என்று சொல்லி நம்பியாரூரரும் அவையத்தாரும் தம்மைப் பின் தொடர்ந்து வரத் திருவெண்ணெய் நல்லூரிலுள்ள திருவருட்டுறை என்னும் திருக்கோயிலுட் புகுந்து மறைந்தார். பின் சென்றார் யாவரும் அவரைக்காணாது திகைத்து நின்றனர். உடன் சென்ற நம்பியாரூரர் "என்னை அடிமைகொண்ட மறையவர் கோயிலுள் புகுந்து மறைந்தது என்கொலோ" என்று வியப்புற்று அவரைத் தொடர்ந்து சென்று கதறி அழைத்தார். * சிவபெருமான் காட்சியளித்தல்: மறையவராய் வந்து தடுத்தாட் கொண்டருளிய சிவபெருமான் உமை அம்மையாருடன் இடப வாகனத்தில் எழுந்தருளிக்காட்சி அளித்து "நம்பியாரூரனே! நீ முன்னமே நமக்குத் தொண்டன். அப்போது மாதர்பால் மனம் வைத்தாய்; ஆதலால் நம் ஏவலால் மண்ணுலகில் பிறந்தாய். இவ்வுலகியல் வாழ்வு உன்னைத் தொடர்ந்து வருத்தாவண்ணம் நாமே உன்னைத் தடுத்தாட் கொண்டோம்" என்று உண்மை உணர்த்தியருளினார். நம்பியாரூரர் பெரும் மகிழ்ச்சி அடைந்தார் மெய்சிலிர்க்க சிவபெருமானை வணங்கினார். "நம்மிடம் நீ வன்மை பேசினமையால் வன்றொண்டன் என்ற பெயரைப் பெற்றாய். நமக்கு அன்பினாலே சிறந்த அர்ச்சனை பாடல்களே ஆகும். ஆதலால் இவ்வுலகில் நம்மை, செந்தமிழ்ப் பாடல்களால் பாடிப் போற்றுக" எனப் பணித்தருளினார் பரமேஸ்வரன். அவ்அருளுரையைச் செவிமடுத்த நம்பியாரூரர் "என்னை வழக்கினால் வெல்ல வேதியனாய் வந்த கோதிலா அமுதே! நாயேன் நினது திருவருட் பண்பாகிய பெருங்கடலுள் எதனைத் தெரிந்து எத்தகைய சொற்களால் பாடுவேன்" என்று கூறி உளங்கசிந்து நின்றார். அன்பனே! யான் ஓலைகாட்டி நின்னை ஆட்கொள்ள வந்தபோது நீ என்னைப் பித்தன் என்று கூறினாய். ஆதலால் என்பெயர் "பித்தன் என்றே பாடுக" என்று இறைவன் அருளிச்செய்தார். நம்பியாரூரர் தம்மை ஆண்டருளிய வள்ளலாரின் பெருங்கருணைத் திறத்தைப் "பித்தா பிறைசூடீ" என்று தொடங்கும் திருப்பதிகத்தால் பாடியருளினார். இத்திருப்பதிகத்தைச் செவிமடுத்து மகிழ்ந்த "இறைவன் இவ்வுலகில் இன்னும் இவ்வாறே நம் பொருள் சேர் புகழைப் பாடிப் பரவுக" என்று கூறி மறைந்தருளினார். திருவதிகையில் திருவடி சூட்டப் பெறுதல்:ஒரு முறை சித்தவடம் என்னும் மடத்தில் தங்கினார்.உடன் வந்த அடியார்களோடு அதிகைவீரட்டானேஸ்வரரை இடைவிடாது எண்ணிய வண்ணம் துயின்றார். இறைவன் முதிய அந்தணர் வடிவம் பூண்டு யாரும் அறியாதபடி புகுந்து சுந்தரர் தலையின் மேலே தமது திருவடி படும்படியாக வைத்துத் துயில் கொள்வாரைப் போன்று இருந்தார்.உடனே நம்பியாரூரர் விழித்து எழுந்து "அருமறை யோனே! உன் அடிகளை என் தலைமேல் ஏன் வைத்தனையே" என்று கேட்டார்."நீர் துயிலும் திசையை அறியாவகை செய்தது என் முதுமை" என்றார் அந்தணர்.நம்பிகள் வேறொரு திசையில் தலையினை வைத்துத் துயில்கொள்ளத் தொடங்கினார். மீண்டும் அந்தணர் நம்பியாரூரர் தலைமேல் தம் திருவடிகளை நீட்டிப் பள்ளி கொண்டார். நம்பியாரூரர் எழுந்து "இவ்வாறு பலதடவை மிதிக்கும் நீர் யார்?" என்று சினந்து கேட்டார்.உடனே அந்தணர் "என்னை நீ இன்னும் அறிந்திலையோ" என்று கூறியவாறு மறைந்தருளினார்.அம்மொழி கேட்ட ஆரூரர் தம் முடியில் திருவடி வைத்தருளியவர் சிவபிரானே என்று தெளிந்து தம் பொருட்டு எளிவந்தருளிய எம்பெருமானைக் காணப்பெற்றும் "அறியாமையால் இறுமாந்து இகழ்ந்துரைத்தேனே" என்று வருந்தித் 'தம்மானை அறியாத சாதியார் உளரே' என்று தொடங்கித் திருப்பதிகம் பாடித்துதித்தார்.தில்லைப் பதியின் எல்லையை அடைந்தார்.* தம்பிரான் தோழராதல்:திருவாரூரில் கோயில்கொண்டருளிய இறைவர் அடியார்கள் கனவில் தோன்றி "நம் ஆரூரனாகிய வன்றொண்டன் நாம் அழைக்க இங்கு வருகின்றான். நீங்கள் மகிழ்ந்து அவனை எதிர்கொண்டழைத்து வருக" எனக் கட்டளையிட்டார்.தொண்டர்கள் பெருமான் கட்டளையை யாவர்க்கும் அறிவித்தார்கள். திருவாரூரை அலங்கரித்து எல்லோரும் கூடி மங்கல வாத்தியங்களுடன் சென்று வன்றொண்டரை எதிர் கொண்டழைத்தார்கள்.நம்பியாரூரரும் தம்மை எதிர்கொண்டழைத்த அடியார்களைத் தொழுது, "எந்தையிருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்" என்ற கருத்துக்கொண்ட :கரையும் கடலும்" என்று தொடங்கும் திருப்பதிகம் பாடிக் கொண்டு திருக்கோயில் வாயில் அணுகினார்.அப்பொழுது யாவரும் கேட்க வானில் "நம்பி யாருரனே! தோழமையாக உனக்கு நம்மைத் தந்தனம். நீ எம்மால் தடுத் தாட்கொள்ளப்பெற்ற அந்நாளில் கொண்ட திருமணக் கோலத்தையே எப்பொழுதும் மேற்கொண்டு இந்நிலவுலகில் இன்புற்று வாழ்வாயாக" என்ற அருள்வாக்குத் தோன்றிற்று.அசரீரி கேட்ட சுந்தரர் பெருமானது கருணையை வியந்து போற்றி வாழ்த்தினார். அன்று முதல் அடியார்களெல்லாம் அவரைத் "தம்பிரான் தோழர்" என்று அழைத்தனர்.இறைவன் கட்டளைப்படி திருமணக் கோலத்தோடு தூய தவ வேந்தராய்ப் பூங்கோயிலமர்ந்த பிரானை நாடோறும் வழிபட்டு இன்னிசைத் தமிழ்மாலை பாடியிருந்தார் சுந்தரர்.* பரவையார் திருமணம்:திருக்கயிலாய மலையில் ஆலாலசுந்தரரால் காதலிக்கப்பெற்ற மகளிர் இருவருள் ஒருவராகிய கமலினி என்பார் திருவாரூரில் உருத்திர கணிகையர் குலத்துட் பிறந்து பரவையார் என்னும் பெயரைப் பெற்றுத் திருமகளே இவள் என்று சொல்லுமாறு பேரழகோடு வளர்ந்து திருமணபருவம் எய்தினார்.பரவையார் தம் தோழியர்களுடன் வழக்கம் போல் திருவாரூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வரும் நாட்களில் ஒருநாள் சுந்தரர் சிவபிரானை வணங்கிக்கொண்டு அடியார்கள் சூழத் திரும்பி வரும் போது ஊழ்வினை பரவையாரைக் கண்டார்.இருவரும் அன்பு கொண்டனர்.இருவரும் வன்மீகநாதரிடம் தங்கள் விருப்பத்தை வேண்டினார்கள்.நடப்பவை ஈசன் செயல் அல்லவா! சிவபெருமான் அன்றிரவே அடியார்கள் கனவில் தோன்றிப் பரவையாரைச் சுந்தரர்க்குத் திருமணம் செய்து கொடுக்குமாறு பணித்தருளினார்.பொழுது புலர்ந்தது, அடியார்கள் திரண்டு வந்து சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் பரவையார்க்கும் வேத நியமனபடித் திருமணம் செய்து வைத்து மகிழ்ந்தனர்.சுந்தரர் பரவையாருடன் சிவாலயம் சென்று செந்தமிழ்ப் பதிகங்கள் பாடிச் சிவபிரானைப் போற்றி மகிழ்ந்திருந்தார்.* திருத்தொண்டத்தொகை பாடியருளியது:ஒருமுறை தேவாசிரிய மண்டபத்திலே அடியார்கள் பலர் கூடியிருப்பதைக் கண்டார். "இவர்களுக்கெல்லாம் நான் அடியவனாகும் நாள் எந்நாளோ?" என்று எண்ணிக்கொண்டே இறைவன் திருமுன் சென்றார்.தியாகேசப் பெருமான் நம்பியாரூரர் கருத்தறிந்து அவர் முன் காட்சி வழங்கி அடியார்களின் பெருமையை அவர்க்கு உணர்த்த விரும்பிச் சுந்தரரை நோக்கி "அடியார் பெருமையை எடுத்துக்கூறி பாடல் பாடி இத்தகைய அடியார்கள் கூட்டத்தை நீ அடைவாயாக" என்றருளிச் செய்தார்.நம்பியாரூரர் "அடியார்களுடைய வரலாற்றையும் அன்பின் பெருமையையும் அறியாதேனாகிய நான் எவ்வாறு பாடித் துதிப்பேன். அத்தகுதியை அடியேனுக்குத் தந்தருள வேண்டும்" என்று வேண்டினார்.சிவபெருமான் வேதம் விரித்த தம் திருவாயால் "தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்" என்று அடியெடுத்துக் கொடுத்துப் பாடும்படிப் பணித்தருளி மறைந்தார்.நம்பியாரூரர் தேவாசிரிய மண்டபத்தை அடைந்து அங்கு எழுந்தருளியிருந்த அடியவர்களை வணங்கி அடியார் பெருமையை விளக்கித் திருத்தொண்டத்தொகை என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்.* குண்டையூரில் நெல்மலை அளிக்கப் பெற்றது:குண்டையூர் என்னும் ஊரில் வேளாண் குடியில் விழுமிய பெரியார் ஒருவர், சுந்தரரிடத்தில் பேரன்பு கொண்டு அவர் அமுது செய்யும் வண்ணம் செந்நெல், பருப்பு முதலிய பொருள்களைப் பரவையார் திருமாளிகைக்குத் தவறாமல் அனுப்பி வரும் நியமத்தை மேற்கொண்டிருந்தார். இவ்வாறு குண்டையூர்க் கிழார் தொண்டாற்றிவரும் காலத்தில் ஒருசமயம் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. குண்டையூர்க் கிழார் சுந்தரர்க்கு அனுப்பப் போதிய படித்தரங்களில்லாமைக்கு மனம் வருந்தி உணவுகொள்ளாது அன்றிரவு துயின்றார்.சிவபெருமான் அவர் கனவில் தோன்றி "ஆரூரனுக்குப் படி அமைக்க உனக்கு நெல்தந்தோம்" என்றருளிச் செய்து குபேரனை ஏவியிடக் குண்டையூர் முழுதும் நெல் மலை வானவெளியும் மறையும்படி ஓங்கிநின்றது.குண்டையூர்க்கிழார் காலையில் எழுந்து நெல்மலையைக் கண்டு வியந்து திருவாரூருக்குச் சென்று சுந்தரரிடம் "இறைவன் கருணையை கூறி; அந்நெல்மலை மனிதர்களால் எடுத்துவரும் அளவினதன்று. தாங்கள் எவ்விதமேனும் அதனை ஏற்றருள வேண்டும்" என்று வேண்டினார்.அதனைக்கேட்ட சுந்தரர் தாமும் அவரோடு குண்டையூருக்கு எழுந்தருளி நெல்மலையைக் கண்டு வியந்து திருக்கோளிலி என்னும் தலத்திற்கு வந்து "நீளநினைந் தடியேன்" என்னும் திருப்பதிகம்பாடி நெல்லையெடுத்துச் செல்ல ஏவலாட்களைத் தரும்படி வேண்டிக்கொண்டார்."இன்று பகற் பொழுது நீங்கியபின் நம்முடைய பூத கணங்கள் திருவாரூர் முழுவதும் நெல்லைக்கொண்டுவந்து குவிக்கும்" என்று அசரீரி சிவபெருமானருளால் எழுந்தது.அன்றிரவு பூதகணங்கள் குண்டையூரிலிருந்து நெல்லை வாரிக்கொண்டுவந்து திருவாரூரில் பரவையார் மாளிகையிலும், திருவீதிகளிலும் நிரப்பின, காலையில் நெற்குவியலைக் கண்டு வியந்து மகிழ்ந்த மக்களனைவரும் சுந்தரர் புற்றிடங்கொண்ட பெருமானை வணங்கி மகிழ்ந்திருந்தார்.* மன்னன் அளித்த பரிசுகளை பறித்துக் கொள்வது:இறைவனும் இவர் மற்றொருவரிடம் பொருள் பெற அனுமதித்ததில்லை.சேரமான் பெருமானை இவர் சந்தித்து திரும்பும் போது, அம்மன்னர் பொன்,பொருள்,மணியிழைகள், ஆடைகள் போன்ற பல பொருட்களையும் இவருடன் அனுப்பி வைத்தார்.திருமுருகன்பூண்டியில், இறைவன் அவற்றை எல்லாம் தமது பூதகணங்களை வேடர்களாக மாற்றி அவர்களைக் கொண்டு பறித்துக் கொண்டார். சுந்தரர் "கொடுகு வெஞ்சிலை வடுகவேடுவர்" எனத்துவங்கும் பதிகம் பாடி இறைவனிடம் இருந்து பொருட்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டார். திருமுருகன்பூண்டி சிவபெருமான் கோவிலில் பைரவர் சந்நிதி அருகிலுள்ள குழியில் தான் சுந்தரரிடமிருந்து கவர்ந்த பொருட்களை இறைவன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.சுந்தரமூர்த்தி நாயனார் அற்புதங்கள் :* செங்கற்களைப் பொன்னாகப் பெற்றுக் கொண்டது.* பரவையார் சினம் தீர சிவபெருமான் தூது சென்று சினம் தீர்த்தது.* சிவபெருமான் கொடுத்தருளிய பன்னீராயிரம் பொன்னைவிருத்தாச்சலத்தில் உள்ள ஆற்றிலே போட்டு திருவாரூர்க் குளத்தில் எடுத்தது.* காவிரியாறு பிரிந்து வழிவிடச் செய்தது.* அவிநாசியில் முதலை விழுங்கிய பிராமணக் குழந்தையை அம்முதலையின் வாயின்று மூன்றாண்டு வளர்ச்சியுடன் அழைத்துக் கொடுத்தது.* வெள்ளை யானையில் ஏறி திருக்கைலாசத்திற்கு எழுந்தருளியது.என பலவற்றை கூறிக்கொண்டே செல்லலாம்.* திருப்பாட்டு :சுந்தரர் அருளிய திருப்பதிகங்களை ’திருப்பாட்டு’ என்று அழைப்பது மரபு. இவர் அருளியவை முப்பத்து எண்ணாயிரம் அவற்றில் கிடைத்த பதிகங்கள் 101.சிவத் தலங்கள் தோறும் சென்று தேவாரப் பதிகங்கள் பாடி இறைவனைப் பணிந்தார்.சிவபெருமான் மேல் இவர் கொண்டிருந்த பக்தி "சக மார்க்கம்" என்று சொல்லப்படுகின்ற தோழமை வழியைச் சார்ந்தது. இறைவனைத் தனது தோழனாகக் கருதித் தனக்குத் தேவையானவற்றை எல்லாம் கேட்டுப் பெற்றுக் கொண்டு கயிலை அடைந்தார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
  5. 34 - சிறுத்தொண்ட நாயனார் பெயர்: பரஞ்சோதியார் குலம்: மாமாத்திரர் பூசை நாள்: சித்திரை பரணி அவதாரத் தலம்: திருச்செங்காட்டங்குடி முக்தித் தலம்: திருச்செங்காட்டங்குடி வரலாறு சுருக்கம்: செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன் திருத்தொண்டத் தொகை * பரஞ்சோதியார் அறிமுகம்: காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர், யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர். * சேனாதிபதியாக பதிவி: நரசிம்ம பல்லவரிடம் சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை , குதிரை , முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தை புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை" என்றனர். பரஞ்சோதியார் சிவபக்தி கேள்வியுற்ற வேந்தன் அவருக்கு நிறைந்த பொற்காசுகள் அளித்து "நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக" என விடைகொடுத்தனுப்பினார். * சிவ தொண்டு: மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் சந்தனத்தாதியார் நங்கையை மணம் முடித்தார். சந்தனத்தாதியார் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். இதனால் ஈசன் அருளால் சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். * சிறப்பு பெயர்: பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பி பொழுது அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் "சிறுத்தொண்டர்" என அழைக்கப்பட்டார்.அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். சிறுத்தொண்டருடன் நண்பினால் மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம்பாடிய "பைங்கோட்டு மலர்புன்னை" என்னும் திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார். * இறைவனின் திருவிளையாடல்: சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய சிவபெருமான் , பைரவ அடியாராக வேடந்தாங்கித் திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து "தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ?" என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட சந்தனத்தாதியார் முன்வந்து வணங்கி "அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். வீட்டினுள் எழுந்தருள்வீராக" என வேண்டினார். வந்த பைரவ சுவாமியார் அவரை நோக்கி "மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்" என்றார். அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து "எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம்பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக" என இறைஞ்சினார். அதுகேட்ட பைரவர் "மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக" எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார். அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர் அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார் பைரவ அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் விருப்புடன் விரைவாகச் சென்று ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார். பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார். சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி திருநீறு , உருத்திராக்கமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும் சிவனடியார்கள் கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறிப் பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அழுது செய்தருளல் வேண்டும்" என வேண்டிக் கொண்டார். * நிபந்தனைகள்: அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, "தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது" என்று கூறினார். "தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன்" என்று சிறுத்தொண்டர் உரைத்தார். அதனைக் கேட்ட பைரவப் கோலப் பெருமான் "எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறுமாதத்திற்கு ஒருதடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது" என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் "மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. பெரியீர், உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து போய் சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன்" என்று கைதொழுதார். பைரவர் அவரை நோக்கி "நாம் உண்ணக் கொல்லும் பசு நரபசு உண்பது அஞ்சு பிராயத்துள்; அது உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்" எனக் கூறினார். இதை கேட்ட சிறுத்தொண்டரும் "யாதும் அரியதில்லை அருளிச்செய்யும்" என்றார். "ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை நாம் உண்பது" என மேலும் ஒன்றை பைரவர் கூறினார். அதைக் கேட்ட சிறுத்தொண்டர் "எம்பெருமான் அமுது செய்யப்பெறில் அதுவும் அரிதன்று" என்றார். அடியவர் இசையப்பெற்ற களிப்பால் அவர் திருவடிகளை வணங்கி வீட்டை அடைந்தார். வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு வந்த அடியாரைப் பற்றி வினவினார். சிறுதொண்டர் சிவபக்தியே உலகிற்கு புகட்ட சிவபெருமான் பைரவர் வேடம் கொண்டு சிறுதொண்டர் இல்லம் சென்று "ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறிசமைத்தால் தாம் திருவமுது செய்வதாகக்" கூறினார். சிவனாடியார்க்கு செய்யும் தொண்டு சிவனுக்கு செய்யும் தொண்டு எனும் கருத்துடைய சிறுதொண்டர் "தங்கள் விரும்பிய படி கறிசமைத்து தருகிறோம்" என கூறி பைரவரை இல்லம் அழைத்து சென்று அமர வைத்தார். * சந்தனத்தாதியார் சம்மதம்: பைரவர் கூறிய நிபந்தனைகளை தன் மனைவி சந்தனத்தாதியாரிடம் எடுத்துரைத்தார் சிறுதொண்டர். அதுகேட்ட மனைவியார் "பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம்" எனத் தமது சம்மதத்தை தெரிவித்தார். "ஆனால் தங்கள் கூறிய ஒருவனாகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு? என வினவினார். சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி "பிள்ளையை நினைவு நிரம்பிய நிதி கொடுத்தாலும் தருவார் இல்லை? நேர் நின்று தம்பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்கமாட்டார்கள். ஆகவே நான் உய்ய நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம் பைரவர் அடியார் அமுதுக்கு உணவாக பரிமாருவோம்" என்றார். * மகனை அழைத்து வருவது: மகன் வேதம் படிக்கும் இடம் சென்று "மகனே" என அன்புடன் அழைத்தார் சிறுதொண்டர். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளதேவர் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர்ச்சென்று வாங்கிய சிறுத்தொண்டர் மனைவியார் பிள்ளையைத் தலைசீவி, முகம்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார்.நடக்க விருப்பது யாதும் அறியாத அந்த ஐந்து வயது பிள்ளை தந்தையிடம் சென்றார். பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர் அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது யாரும் இல்லாத தனி இடம் சென்றார். * மகனின் உடலை அருப்பது: தந்தையார்(சிறுதொண்டர்) பிள்ளையின் தலையைப் பிடித்தார். தாயார் (சந்தனத்தாதியார்) பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி கடைசியாக நகைத்தனன். தன் ஒரே மகனைத் தந்தையார் கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரியசெயல் செய்தனர். அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று சிறுதொண்டர் கழித்து அதனை மறைந்தார். * கறியமுது படைப்பது: மற்ற உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார் சந்தனத்தாதியார். சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று பைரவ சுவாமிகளை வணங்கி "தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்" என்று ஆர்வத்தோடு அழைத்தார். "திருவமுது படைக்கும் வகை எவ்வாறு" என வினவினார் பைரவர் அடியார். "இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க" என்று கூறினார் சிறுதொண்டர்; கறியமுது படையலை வாழையிலையில் பரிமாறினார் சந்தனத்தாதியார். * ஈசனின் சோதனை: அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி "சொன்ன முறையிற் கொன்று உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?" என்றார். "தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்" என்றார் சிறுதொண்டர். "அதுவும் கூட நாம் உண்பது" என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார் "அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்" என்று சொல்லி எடுத்துக்கொடுத்தார். * இறுதி சோதனை: சிறுத்தொண்டரைப் பார்த்து "இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்" என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி "இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் திருநீறு இடுவாரைக் கண்டு இடுவேன்" என்றார். அதுகேட்ட பைரவர் "உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்" என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி "நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும்" என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் "இப்போது அவன் உதவான்" என்றார். * கறியமுது படைத்த மகன் மீண்டும் உயிர் பெற்று வருவது: "நாம் அவன் வந்தாலே உண்ண முடியும் புறத்தே சென்று அவனை நாடி அழையும்" என்றார் பைரவர். அச்சொற்கேட்டு சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியார் "செய்மணியே! சீராளா! வாராய்; சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்" என்று ஓலமிட்டழைத்து அழுதார். அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடுவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார் "சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்" என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார். * பரமேஸ்வரன் திருவருள் புரிவது: வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து நின்றார்; வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது மயங்கினார் நடப்பது புரியாமல் வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது பரமேஸ்வரன் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற சிறுதொண்டரும் அவர் மனைவியாரும் சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள். சிவபெருமான் உமாதேவியாரும் முருகவேளும், அங்குத் தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
  6. 33 - சிறப்புலி நாயனார்பெயர்: சிறப்புலி நாயனார்குலம்: அந்தணர்பூசை நாள்: கார்த்திகை பூராடம் அவதாரத் தலம்: ஆக்கூர் முக்தித் தலம்: ஆக்கூர் வரலாறு சுருக்கம்: "மந்திரம் நான்மறையாகி வானவர் சிந்தையுள் நின்றவர் தம்மையாள்வன (அஞ்செழுத்துமே)" தேவாரத்தின் வரிகள். இதன் பொருள்: மந்திரங்கள் பலகோடி யுண்டேனும் அனைத்து மந்திரங்கட்கும் மூலமாயிருத்தலின் மூலமந்திரம் எனப்படுவதும் மந்திரவிரிவு கூறும் யசுர்வேதத்தின் மையத் தானத்தில் இடம் பெற்றுள்ளதும் ஆனகாரணங்களால், அனைத்து மந்திரங்களும் அனைத்து வேதங்களுமாய் உயர்ந்தோருள்ளந்தோறும் நிலை பெற்றிருந்து அவரவர்க்கு முத்தி சாதனமாக உதவும் மகிமைக்குரியது அஞ்செழுத்துமே. அவ்வாறு ஐந்தெழுத்து மகிமை உணர்ந்த சிறப்புலி நாயனார் பற்றி காணலாம். “சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன்” திருத்தொண்டத் தொகை பொன்னி நன்னாட்டில் இன்மையாற் சென்று இரந்தவர்களுக்கு இல்லையெனாது ஈயும் தன்மை உடையவர்கள் வாழும் ஊர் திருஆக்கூர். அவ்வூரிலே அந்தணர் குலத்தில் தோன்றியவர் சிறப்புலி நாயனார். இப்பெருந்தகையார் “நிதி மழை மாரி போல்” ஈந்து உவக்கும் வள்ளலாய் திகழ்ந்தார். 1.சிவசாதாக்கியம், 2.அமுர்த்திசாதாக்கியம், 3.மூர்த்தி சாதாக்கியம், 4.கர்த்திருசாதாக்கியம், 5.கர்மசாதாக்கியம் என்னும் பஞ்சசாதாக்கியங்களுள், கர்மசாதாக்கியமாகிய சிவலிங்கத்தின் மகிமையை உணர்ந்து பரமேஸ்வரனை அனுதினமும் வழிபட்டார் சிவனடியார்கள் மேல் பேரன்புடையவராக விளங்கினார். அடியார்களை எதிர்கொண்டு வணங்கி இன்சொல் கூறித் திருவமுது அளிப்பார். அவர்கள் விரும்புவதை குறைவறக் கொடுத்து மகிழ்வார். இவர் திருவைந்தெழுத்தொதிச் சிவபெருமான் திருவடி நீழலை அடைந்தார் http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
  7. இந்த தகவல் சரியான தகவல் இல்லை எண்டு நினைக்கிறன். எனனென்றல், பெரும்பாலான விமான நிறுவனங்கள் (கத்தார் ஏர்வேஸ், எமிரேட்ஸ் airline, Ethiad airline ....) தங்களது இணையத் தளத்தில், ஏப்ரல் முதல் வாரத்துக்கு பின்னர், காலை 8.30கு பிறகும் கொழும்பில் தரையிறங்கும் விமானங்களிற்கான thicketsஐ விற்பனைக்கு விட்டுள்ளன. அந்தந்த விமான நிறுவனங்களின் இணையத் தளத்தில் இதை செக் பண்ண முடியும்.
  8. நான் வழமையாக 2 கிழமைக்கு ஒருக்கா சலூனிலை போய் சேவ் எடுக்கிறானான் (கிளீன் சேவ் இல்லை). கீழ உள்ள படத்தில் உள்ளதுபோல கட்டிங். வீடில்லை இப்படி கட் பண்றது கஷ்டம். வீட்டிலை ட்ரிம்மிங் மட்டும்தான்.
  9. 32 - சாக்கிய நாயனார்பெயர்: சாக்கிய நாயனார்குலம்: வேளாளர்பூசை நாள்: மார்கழி பூராடம் அவதாரத் தலம்:திருச்சங்கமங்கை முக்தித் தலம்: திருச்சங்கமங்கை வரலாறு சுருக்கம்: வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்க்கும் அடியேன் திருத்தொண்டத் தொகை சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். எவ்வுயிர்க்கும் அருளுடையாராய்ப் பிறவாநிலை பெற விரும்பிக் காஞ்சிநகரத்தை அடைந்து புத்தசமயத்தை மேற்கொண்டிருந்தார். இறைவன் திருவருள் கூடுதலாற் புத்தம் முதலியன புறச்சமயச் சார்புகள் அல்ல என்றும், ஈறில் சிவநன்நெறியே பொருளாவதென்றும் துணியும் நல்லுணர்வு கைவரப்பெற்றார். “செய்யப்படும் வினையும், அவ்வினையைச் செய்கின்ற உயிரும், அவ்வினையின் பயனும், அப்பயனைச் செய்த உயிர்க்கே சேர்ப்பிக்கும் இறைவனும் எனச் சைவசமயத்தில் கூறப்பட்ட பொருள் நான்காகும். இப்பொருட்பாகுபாடு சிவநெறியல்லாத பிறசமயத்தில் இல்லை” எனத்தெளிந்து கொண்டார். உயிர்களை உய்விக்கும் மெய்ப்பொருள் சிவமே, எந்த நிலையில் நின்றாலும் எக்கோலங்கொண்டாலும் சிவனடியினை மறவாது போற்றுதலே உறுதிப்பொருளாகும்” என்று ஆராய்ந்து துணிந்து தாம் கொண்ட புத்தசமய வேடத்துடனேயே சிவபெருமானை மறவாது போற்றுவராயினர். அருவமாகியும், உருவமாகியும் உள்ள எல்லாப் பொருள்களுக்கும் காரணமாய் இறைவனுக்குத் திருமேனியாகிய சிவலிங்கத்தின் பெருமையுணர்ந்து நாள்தோறும் அதனை வழிபட்ட பின்னரே உண்ணுதல் வேண்டும் என விரும்பினார். தாம் இருக்கும் இடத்திற்கு அண்மையில் வெட்ட வெளியிலே அமைந்துள்ள சிவலிங்கத்தினைச் சென்று கண்டு பெருமகிழ்ச்சி கொண்டவராய், அம்மகிழ்ச்சியின் விளைவாய் ஒன்றுந் தோன்றாது அருகிற்கிடந்த செங்கற்சல்லியை எடுத்து லிங்கத்தின் மேல் எறிந்தார். இளம்புதல்வர் இகழ்வனவே செய்தாலும் அச்செயல் தந்தையார்க்கு உவப்பனாற்போன்று, சாக்கியர் செய்த இதுவும் சிவபெருமானுக்கு உவப்பாயிற்று. இறைவன் அவர் அன்பினால் எறிந்த கற்களை நறுமலர்களாகவே ஏற்றுக்கொண்டார்.சாக்கியர் ஆச்சர்யம் அடைந்தார். சாக்கியர் அன்றுபோய் மறுநாள் அங்கு வந்தபொழுது முதல்நாள் தாம் சிவலிங்கத் திருமேனியின் மேல் செங்கல் எறிந்த குறிப்பினை எண்ணி, ‘நேற்று இந்த எண்ணம் நிகழ்ந்தது இறைவன் திருவருளே’ என்று துணிந்து அதனையே தாம்செய்யும் வழிபாடாகக் கருதி எப்பொழுதும் அப்படியே செய்து வந்தார். ஒருநாள் சாக்கியர் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத வேட்கையால் ஒரு கல்லை எடுத்து அதன்மேல் எறிந்தார். அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
  10. 31 - சத்தி நாயனார் பெயர்: சத்தி நாயனார் குலம்: வேளாளர் பூசை நாள்: ஐப்பசி பூரம் அவதாரத் தலம்: வரிஞ்சையூர் முக்தித் தலம்: வரிஞ்சையூர் வரலாறு சுருக்கம்: “கழற்சத்தி வரிஞ்சையார் கோ னடியார்க்கும் மடியேன்” திருத்தொண்டத் தொகை மெய்யுணர்வுற்றோ ரல்லாதோருஞ் சிவனாகிய தன்னை உணரவைக்கும் பொருட்டாகச் சிவபெருமான், விபூதி உருத்திராக்கம் சடைமுடி யாகிய தனது திருவேடத்தைச் சிவனடியார்பால் நிறுத்தி அச்சிவனடியார்கள் மேலும் தன்னில் இலயித்திருக்கும் பொருட்டாக அவர்களைத் தான் தன்னுள்ளடக்கி நிற்கும் பாங்கில் அவர்களிடத்தில் இவர், தயிரின்கண் நெய்போல் விளங்கித் தோன்றுதலுண்டாகலின் அவர்கள் தாங்கும் வேடம் மெய்ம்மையான சிவவேடமே ஆகும். எங்கும் சிவம் எதிலும் சிவம் என்பதற்கு இனங்க அச்சிவனடியார்களை துன்புறுத்தியும் இகழ்ந்து பேசுவதும் மாபெரும் குற்றமாகும். அவ்வாறு செய்பவர்கள் நகரத்தில் துன்புறுவர். சோழநாட்டிலே, வரிஞ்சியூரிலே, வேளாளர் குலத்திலே, சத்திநாயனாரென்பவரொருவர் இருந்தார். அவர் பரமசிவனுடைய திருவடித்தாமரைகளைச் சிறிதும் மறவாது திருத்தொண்டு செய்பவர். சிவனடியார்களை சிவ ரூபமாக வணங்கி திருவமுது செய்வித்து அவர்கள் தேவையான அனைத்தையும் தந்து உதவுவார். சத்தி நாயனார் சிவனடியார்களை இகழ்ந்து பேசும் அதிபாதகிகளுடைய நாக்கைத் தண்டாயத்தால் இடுக்கித் தமது கையிற் கத்தியினால் அரிதலாகிய அருமை பெருமைத் திருத்தொண்டை, நெடுங்காலம் அன்பினோடு செய்தார். அன்பினாற் செய்யும் இந்த அரிய ஆண்மைத் திருப்பணியைப் பலகாலம் வீரத்தாற் செய்திருந்து சிவனடியார்களை காத்தமையால் பரமசிவனுடைய திருவடி நிழலை அடைந்தார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
  11. நான் கடந்தவருடம் ஒரு அலுவலக அலுவலாக சுவிஸ் வந்த பொது, எனக்கு தெரிந்த ஒருவரிடம் சலூன் ஏதாவது நான் நிக்கும் இடத்துக்கு கிட்டாவாக இருக்குதா எண்டு கேட்டேன். நான் நிக்கும் இடத்துக்கு அருகில் ஒரு தமிழ் பொடியள் நடத்துற சலூன் இருக்குது எண்டு கூறி போவதற்கான பாதையையும் தெளிவாக கூறினார். நானும் ஒருவாறாக அந்த சலூனுக்கு போய் சேவ் எடுத்த பின்பு (முடி வெட்டவில்லை) எவ்வளவு காசு எண்டு கேட்ட பொது 7 சுவிஸ் பிராங்க் எண்டார். எனக்கும் அங்கயுள்ள விலை விபரம் தெரியாததாலும், நான் வசிக்கும் நாட்டிலும் கிட்டத் தட்ட இதே அளவு காசுதான் சேவ் எடுக்க கொடுப்பதாலும், 7 பிராங்க்ஐ கொடுத்துவிட்டு வந்துவிட்டேன்.
  12. 30 - சண்டேசுவர நாயனார் பெயர்: விசாரசருமர் குலம்: அந்தணர் பூசை நாள்: தை உத்திரம் அவதாரத் தலம்: திருசேய்ஞலூர் முக்தித் தலம்: ஆப்பாடி வரலாறு சுருக்கம்: சோழமண்டலத்திலே, திருச்சேய்ஞலூரிலே, பிராமணகுலத்திலே, காசிபகோத்திரத்திலே, எச்சதத்தன், பவித்திரை என்ற தம்பதியினர் இருந்தனர். அவர் மனைவியாகிய பவித்திரை வயிற்றிலே, விசாரசருமர் என்பவர் திருவவதாரஞ் செய்தார். அவருக்கு ஐந்துவயசிலே, வேதங்களையும் பூர்வசன்மத்து அறிவுத் தொடர்ச்சியினாலே கற்பிப்பார் இன்றித் தாமே அறிவுமறிவு உண்டாயிற்று, தந்தை தாயார் அவருக்கு ஏழுவயசிலே உபநயனச்சடங்கு செய்தனர். தகுந்த ஆசாரியர்களைக்கொண்டு வேதத்தியயனஞ் செய்விப்பிக்கத் தொடங்கினார்கள். அவ்வாசாரியர்கள் வேதங்களையும் பிறகலைகளையும் ஓதுவித்தற்கு முன்னமே அவ்விசாரசருமருக்குத் தாமே அறிந்துகொள்ளும்படி அமைந்திருக்கின்ற புத்தியின் திறத்தைக் கண்டு, ஆச்சரியம் அடைந்தார்கள். ஒருநாள் மறை ஓதும் மழலைப்பட்டாளத்துடன் விசாரசருமர் விளையாடிக்கொண்டிருந்தார். பசுக்கூட்டங்களுடன் மேய்ந்துகொண்டிருந்த அப்போதுதான் கன்றை ஈய்ந்த ஒரு பசு இடையனை கொம்பினால் முட்டப்போயிற்று. வெகுண்டெழுந்த இடையன் தன்கையிலுள்ள கோலால் அப்பசுவை அடித்தான். பசுவை அடிப்பதைக் கண்டு பதைபதைத்த விசாரசருமர் இடையனைத்தடுத்து ஐயா! பசுக்கள் தம்முடலுறுப்புக்களில் தேவர்களையும், முனிவர்க்ளையும் புண்ணியதீர்த்தங்களையும் உடையனயாயுள்ளன. ஈஸ்வரனிறு பஞ்சகவ்யம் அளிக்கும் அப்பசுக்களை மேய்ப்பது சிறந்த தொழிலாகும் அதுவே சிவபெருமானை வழிபடும்நெறி என்று இடையனிற்கு எடுத்துத்துரைத்தார்.மேலும்அந்தப்பசுக்களைத் தாமே மேய்க்க விரும்பினார். அவ்விடையனை நோக்கி, "இப்பசுநிரையை இனி நீ மேய்க்கவேண்டியதில்லை. நானே மேய்ப்பேன்" என்றார் இடையன் அதைக்கேட்டுப் பயந்து கும்பிட்டுக் கொண்டு போய்விட்டான். விசாரசருமர் பசுக்களை அவ்வற்றிற்குரிய பிராமணர்களின் சம்மதிபெற்று, தினந்தோறும் மண்ணியாற்றங்கரையில் இருக்கின்ற காடுகளிலும் வயரோரங்களிலும், புல்லு நிறைந்திருக்கும் இடத்திற் கொண்டுபோய் வேண்டுமட்டும் மேயவிட்டும்... தண்ணீரூட்டியும், வெய்யிலெறிக்கும்பொழுது நிழலிருக்குமிடங்களிலே செலுத்தியும், நன்றாகக் காப்பாற்றி, சமித்துக்கள் ஒடித்துக்கொண்டு அஸ்தமயனத்துக்குமுன் அவ்வப்பசுக்களை அவரவர் வீட்டுக்கு ஓட்டிக்கொண்டு போய்விட்டு, தம்முடைய வீட்டுக்குப் போவார். இப்படிச் செய்யுங்காலத்திலே, பசுநிரைகளெல்லாம் அழகோடு மிகப்பெருகி, போசனபானங்களிலே குறைவில்லாமையால் மகிழ்ச்சியடைந்து, இராப்பகல் மடிசுரந்து பாலை மிகப் பொழிந்தன. பசுவின் பால் வளமுடன் பெருகிவருவதைக் கண்ட விசாரசருமர் நாம் ஏன் அப்பாலை சிவலிங்கத்திற்குத் திருமஞ்சனம் செய்யக் கூடாது எனச் சிந்தித்தார். சிந்தையில் உதித்ததைச் செயலிலும் செய்தார். மணியாற்றின் கரையில் ஒர் மணல் திட்டில் அத்திமரத்தின் நிழலில் சிவலிங்கம் ஒன்றை வெம்மண்ணில் சமைத்தார். பசுவின் பாலினால் திருமஞ்சனம் செய்தார், ஆடினார், பாடினார், அன்பினால் கசிந்து கண்ணீர் விட்டார். தொடர்ந்து நாள் தோறும் சிவபூஜையும் அபிஷேகமும் நடத்தி வந்தார். இது தவறாக புரிந்துக் கொண்ட ஒருவன் ஊருக்குச் சென்று பசுவின் சொந்தக்காரர்களிடம் விசாரசருமன் பாலை வீணாக்கித் தரையில் கொட்டுகின்றான் எனப் பழி கூறினான். அதுகேட்டு வெகுண்ட அந்தணர்கள் எச்சத்தனிடம் விசாரசருமரைக் கடிந்து " உனது மகன் எங்கள் பசுக்களின் பாலை கீழே ஊற்றி வீண் செய்கிறான்" என கூறினர். அவர் தந்தையார் அவர் பொருட்டு மன்னிப்பு வேண்டி தன் மகனைத் தண்டிப்பதாகக் கூறினார். மறுநாள் விசாரசருமரும் பசுக்களை மேய்ப்பதற்குச் சென்றார். வழக்கம் போல மணியாற்றில் நீராடி சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து. மலர்களை கொய்து மாலையாக் கட்டி குடங்களில் பாலைச் சேர்த்துக் வைத்துக் கொண்டு சிவபூசையைத் தொடங்கினார்.பாற்குடங்களை எடுத்து சிவனிற்கு அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்யலானார். சற்றுத் தூரத்தில் ஓர் மரத்தின் மேல் ஏறி ஒளிந்து கொண்டு நிகழ்வதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எச்சத்தன் பாலாபிஷேகத்தைக் கண்டவுடன் வேகமாக இறங்கி ஓடி வந்து, தன் கையிலுள்ள கோலால் விசாரசருமரை அடித்து உதைத்தார். கடுஞ்சினம் கொண்ட தகப்பனார் அபிஷேகத்திற்கு வைத்திருந்த பாற்குடங்களை எட்டி உதைத்து கீழே கொட்டினார். இடையூறு செய்தவர் தன் தந்தை என்பதை அறிந்தும், அவர் செய்தது சிவாபாராதமாகையால் அவரது பாசத்தைக் களையவேண்டும் எனக் கருதி தமக்கு முன்னே கிடந்த கோலை எடுத்தார் விசாரசருமர் அது உடன் ஓர் மழுவாயிற்று. அதைக் கொண்டு தன் தந்தையின் கால்களைத் துணிந்தார். எச்சத்தன் உயிர்நீத்தான். முன்போல் அவர் சிவபூஜை செய்ய முனைந்தார். விசாரசருமரின் பூஜைக்கு மகிழ்ந்த இறைவன் உமையம்மையோடு காட்சியளித்தார்.விசாரசர்மர் அவரைத் தொழுது, பின் வீழ்ந்து வணங்கினார். சிவபெருமான் தன் திருக்கரங்களால் அவரை எடுத்து "நம்பொருட்டு பெற்ற தந்தையின் கால்களை வெட்டியெறிந்து இறக்கச்செய்தாய் ஆதலின் இனிமேல் நாமே உமக்குத் தந்தையானேம்" என்றருள் புரிந்து மார்போடு அணைத்து தழுவி உச்சிமோந்தார். சிவபெருமான் திருக்கரம் தீண்டப்பெற்ற விசாரசருமன் பேரொளியோடு திகழ்ந்தார். அவரைத் தொண்டர்களுக்கெல்லாம் தலைவராக்கினார். "தாமுண்ட அமுதும் பரிவட்டம் மற்றும் மாலைகள் உனக்கே ஆகுக" என்றுரிமையாக்கி "சண்டீசன்" என்ற பதவியையும் தந்து அருள்பாலித்து தம்முடியில் இருந்து கொன்றை மலர்மாலையை எடுத்து விசாரசருமருக்குச் சூட்டினார். விசாரசருமர் "சண்டேஸ்வர நாயனார்" ஆனார். சண்டீச பதவியும் பெற்றார். எச்சத்தன் சிவபராதம் செய்ததாலும், சண்டேஸ்வர பெருமானால் தண்டிக்கபட்ட பாசம் நீங்கப் பெற்று சுற்றத்தோடு சிவலொகம் சென்றார். http://thalabhathi85.blogspot.qa/2011/10/blog-post_21.htm
  13. எங்கயப்பா ஸ்ரீலங்கா ஏர்போர்ட்ல ஒரு பிரச்சினையும் இல்லை எண்ட ஆட்களை காணல????

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.