-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
அர்ச்சனாவின் அணுகுமுறையில் நம்பிக்கை இல்லைத்தான், அர்ச்சுனா தனியே என்பதால், அர்ச்சுனா பிழைத்தாலும் தமிழரின் அரசியல் நிலைக்கு பாதகம் இல்லை. இருக்கும் ஏதாவதை பாரிய அளவில் இழக்கும் சத்திய கூறு இருந்தால் தான் இதில் பெரிய ஆபத்து. சிறிய ஆபத்தும் இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. அர்ச்சுனா சில சிறு நன்மைகளை அவரின் தொகுதிக்கு கிடைக்க வைத்தால், அர்ச்சுனாவின் போக்கு மக்கள் மத்தியிலேயே பாரிய அளவில் பரவி விடுமா என்பது. (அர்ச்சுனா தனி நலனுக்கும் இதை செய்யலாம்)
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
அர்ச்சுனவின் உரை சில இடங்களில் சிங்களத்தை தாக்குவதாக இருக்கிறது. ஆனால். அதில் வஞ்சப்புகழ்ச்சியும் இல்லை. சிங்கள (தலைவர்களின்) உரைகளும் அநேகமாக இப்படியான போக்கிலேயே இருப்பவை, முன்னுக்குப்பின் முரணாக, தொடர்பு படுத்துவது மிக கடினம். ஆனால். அர்ச்சுனா சிங்களத்தை வசப்படுத்தி தமிழர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணமாக இருக்கலாம் அனால், சிங்கள தலைமைகள் விரும்பினாலும், சங்கம் விடாது. ஆகவே, சங்கத்தையும் வசப்படுத்த அர்ச்சுனவின் எண்ணமோ தெரியாது. எனது வேறு அனுபவத்தையும் கொண்டு (அதில் நாங்கள் வேண்டுவதை வேண்டா,ம் என்றே வெளியில் காட்டிக்கொள்ளவேண்டும் என்றும்,),, அர்ச்சுனவின் அணுகுமுறையை உணர்ச்சி இல்லாது, விளைவுகளின் அடிப்படையில் அவதானித்து வரவேண்டும் என்பது எனது இப்போதைய நிலைப்பாடு.
-
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
செக்கே தெரியாது ... உழுவத்துக்கு வெளிக்கிட்டால் ... வந்த விளைவு. ஆனால், செக்கில் பிழிந்த்து எடுக்கும் எண்ணெய், cold pressed என்று தேடப்படுவது. (செக்கில் உழுவது இல்லை என்பதை அறிந்து கொள்ளவும்)
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
இப்படி நடக்கலாம் என்று இங்கே சந்தேகம் / எதிர்பார்ப்பு இருந்தது தானே.
-
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
நான் சொல்லி இருந்தது, சங்கீதா உட்பட, உத்தியோகபூர்வ கரணம் இன்றி, அப்படி 'செய்யக் கூடாது' என்று. சுருக்கமாக, சிங்களவர் சொல்லும் மிழருக்கு அரச / ஆட்சி கலை அகன்றுவிட்டது என்று சிங்களவர் சொல்லும் பரிகாசதையும், உங்களுக்கு தெரியவில்லை (சொல்லியும் புரியவில்லை) என்பதை தெட்டத்தெளிவாக காட்டுகிறது. ஆனால், உங்களுக்கு சட்டப்பரீட்சயம் என்று சொல்லி கொண்டு, தெரியாமல், புரியாமல் இருப்பது முரண்பாடு. சிங்களவர் ஆண் - பெண் உறவில் தமிழரை விட மிகவும் தாராள போக்கு இருந்தாலும், அரசு / அரசாங்கத்துக்கு வரும் போது இப்படி நடத்தை இருக்காது, அரச எந்திரமும் விடாது, (இதை விட, சங்கீதா, அஜித் உடன் படம் எடுக்கும் காட்சி ஒன்றும் இருக்கிறது - ai, உண்மை தெரியாது) எவரையும், எப்போதும் சந்திக்கலாம் என்ற நிலைக்கு தமிழ்நாடு அரச நிலையை கொண்டுவந்து விட்டுள்ள (கூத்தாடி) முஹலமைச்சர்.
-
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
எல்லாவற்றையும் விட்டாலும், இதில் உள்ள பிரச்சனை, விஜே ஐ மிகவும் நேசிக்கும் (என்று விஜே கருதும்) விசிறியும் சந்திக்க இடம் அளிக்க வேண்டும் என்று வரும். அனால், நான் இங்கு அவ்வப்போது சொல்லி வரும் அரச நிலை கனதி / இறுக்கம், அது தான் அரச நிலை என்பதை உருவாக்குவது. நீங்கள் பார்ப்பது தனிப்பட்ட உறவின் அடிப்படையில், ஆனல், விஜயின் நிலை எப்போதும் அதுக்கும் மேலான உன்னத பொறுப்பு, குறிப்பாக (பகிரப்பட்ட) இறைமையின் பொறுப்பான பாதுகாப்பாளரும், பிரயோகிப்பவரும். மற்றது, இது விஐய்ன் முடிவு மட்டும் அல்ல, தமிழ்நாடு அதிகார பீடங்களும் இணங்க வேண்டும். (bureaucratic decision (making)). (ஏனெனில், சங்கீகா, பிள்ளைகள் சாதாரண பொதுமக்கள்.) ( சிங்களர் சொல்வது சரி. சொந்த அரசு நெடுங்காலம் இல்லாமல், அரசகலை, ஆட்சிக்கலை போன்றவை தமிழரிடத்தில் பெரும்பாலும் இல்லை, அகன்றுவிட்டது. அதை இங்கே சிலர் படம் போட்டும் காட்டுகின்றனர். )
-
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
நெடுங்காலம் அரசு இல்லாத விளைவில் ஒன்று. சிங்களவார்கள் தமிழர்களை பற்றி சொல்லும் (சரியான) பரிகாசத்தில் ஒன்று. அதை தொடர்ந்து பொல்லை கொடுத்து காட்டி வருவது, வேறு பல காரணங்கள் (பாதுகாப்பு, அரச வளங்களை தனிப்பட்ட பாவிப்பு ..) வேறு பல காரணங்கள் (பாதுகாப்பு, அரச வளங்களை தனிப்பட்ட பாவிப்பு ..) இருப்பினும் protocol இன் படி 1. தனிப்பட்டது - நிகழ்ச்சி நிரலில் தனிப்பட்ட என்பது ஒரு போதும் இருப்பது இல்லை 2. நிலை - சங்கீதா / பிள்ளைகள் - சாதாரண நிலை. உத்தியோகபூர்வத்தில் சமநிலை இல்லை. (உத்தியோகபூர்வ காரணங்களுக்கு) சந்திக்க வேண்டுமாயின், அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஒரே வழி, சங்கீதா விண்ணப்பித்து, விஜே முதலமைசகராக அனுமதி வழங்க வேண்டும். அப்படி, இந்திய தூதரகத்தில் மட்டுமே சந்திப்பு நடக்க முடியும் (ஆனால்,, இதெல்லாம் உங்களுக்கு புண்ணாக்கு)
-
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
தெரியாது (அது ஆச்சரியம் அல்ல) உத்தியோக பூர்வத்தில், அப்படி அல்லாதது (சங்கீதா / பிள்ளைகள்) பகுதியாக இருக்க முடியாது.
-
முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக தமிழக முதல்வர் விஜய் இன்று லண்டன் பயணம்!
அதிகார பூர்வ (உத்தியோக பூர்வ) பயணம். அதனால், (பிரிந்த) சட்ட நிலையை மீறக்கூடாது. . (உரிய உத்தியோக பூர்வ / சட்ட காரணம் இல்லாது சங்கீதாவை மற்றும் பிள்ளைகளை, விஜே சந்திக்க கூடாது)
-
பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உட்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
அது எப்படி எம்மை பார்த்ததோ தெரியாது. பொதுவாக பாம்பை அடிப்பது இல்லை. (பாம்பு தாக்கும் மூர்க்கமாக இருந்தால் கூட முதலில் அதை அகற்றுவதில் தான் கவனம்) வீட்டின் பாம்பு வரும் பகுதி எப்போதும் நிழல், குளிர்மை மகிழ மரத்தால், அதுவும் காரணமாக இருக்கலாம். அந்த இடத்தில் தண்ணீர் வசதியும் இருந்ததால். (மகிழம் பூவின் வாசத்தால் மகிழமரத்துக்கு பாம்பு வரும் என்பது அங்கெ பொதுவாக சொல்லப்படுவது). ஒரே பாம்புதான் வந்தது என்று இதுவரை எண்ணியது. (வேறு வேறு பாம்பாகவும் இருக்கலாம் என்பது இடம் இருக்கிறது).
-
பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உட்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
அதை நாங்கள் தான் கொம்பேறி மூக்கன் என்று விளங்கியது , தோற்றத்தில் நுணக்கமான வேறுபாடு கண்டுபிடிக்க தெரியாததால். ஆகவே, வேறு வகை பாம்பாக இருபதுக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது.
-
பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உட்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
எதை கொண்டு இதை சொல்லுகிறீர்கள்? சிறிய விசிறி அடித்தலை இலங்கையில், வீட்டுக்கு வழமையாக வரும் கொம்பேறி மூக்கன் ஒரு முறை காட்டியது. எனவே, பாம்புகளில் விஷத்தை பாய்ச்சும் தன்மையை மாற்றக்கூடியவையும் இருக்கிறன்றன. நன் நினைக்கிறன் பாம்பு அதன் பாதுகாப்பில் எவ்வளவு அழுத்தம் என்று உணர்கிறதோ, அந்த நிலையில் விஷத்தை பாய்ச்சும் தன்மையை மாற்றக்கூடிய தன்மையை அடையும் என்று. அல்லது கொம்பேறி மூக்கன் போன்ற தோற்றம் உலா வேறு வகை பாம்பாகவும் இருக்கலாம்.
-
பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உட்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
பாம்பின் விடம் என்றால் ஒரேயயொரு வாய்ப்பே இருக்கிறது. அந்த இடத்தில பாம்புக்கும், வேறு ஏதாவது பாம்பு அல்லது பாம்பை துரத்தி / சண்டையிடதில், பாம்பு விடத்தை விசிறி அடித்து இருக்க கூடிய சாத்தியக்கூறு. அப்படி பாம்பு விசிறி அடித்த விடம் நாவல் பழத்தில் பட்டு இருக்கலாம். விசிறி அடிக்கப்படும் விடத்துக்கு முன்பு சொல்லிய அழற்சி, புண் ஏற்படுத்தும் தன்மை கூட, ஏனெனில் பாம்பு விடத்தை விசிறி அடிப்பது முக்கிய பகுதிகளை (குறிப்பாக கண்கள்) காயப்படுத்தி, தப்புவதற்கு, இரையாயின் தாக்குவதற்கு. ( பாம்பின் விடதை உட்கொண்டால் சமிபாடு அடையும் என்பது தியரி. ஏனெனில், பாம்பின் விடத்தின் அடிப்படை கட்டமைப்பு புரதமும், (பெரும்பாலும்) நொதியமும். இந்த நொதியமே (கிட்டத்தட்ட சமிபாடு தொழிற்பாட்டால்) அளற்சி, புண்களை (வெட்டுவது போல) ஏற்படுத்துவது ஆகவே, விடத்தில் உள்ள நொதியம், பாதிக்கப்படும் (உடம்பின்) வெளிப்பகுதியை உடனடியாக (அறுத்து) திறக்கிறது. விடத்தில் உள்ள புரதம் குருதி, நரம்பு, ஆழமான tissue போன்றவற்றில் ஊடுருவி, கலம் அளவில் பிணைந்து தாக்குகிறது. விடத்தில் உள்ள நொதியத்தின் அளவு வெளித்தோல் , வெளி தசையை அறுபதுக்கு கூடாவாக இருந்தால், தொடர்ந்து உள்ளே அறுத்து செல்லும். முழுமையாக புரதம் மட்டும் விடமாக கொண்ட பாம்புகளும் இருக்கலாம். இதில் தான் உட்கொண்டால் சமிக்கும் என்ற கருத்து ஏற்படுகிறது (என்று நினைக்கிறேன்). ஏனெனில், அப்படியான புரதம் ஆகக்குறைந்தது பிணைக்கும் , ஓட்டும் தன்மை உள்ளது. இந்த புரதத்தின் பிணைக்கும், ஓட்டும் தன்மையால் தான் குருதியின் (குருதிக்கு போனால்) பாகுத்தன்மை கூடி, ஓட்டம் குறைந்து, தொடர் விளைவுகள் மூச்சு குறைதல், மயக்கம் .... (இப்படியான பிணைக்கும் , ஓட்டும் புரதம் சமையல் கலையில் வேறு வேறு மாமிச பகுதிகளை ஓட்டுவதுக்கும் பாவிப்பது) அப்படியான சமையல் முறையில் முகம் முழுமையாக மூடப்பட வேண்டும். ஏனெனில் மிகச்சிறிய அளவு கண்கள், இதழ்கள் மூக்கு துவாரத்தை, காது கூட ஓட்டிவிடும் இதை binding protein என்றே சமையல் துறையில் அழைப்பது. )
-
பாம்பின் விஷம் பட்ட நாவல் பழத்தை உட்கொண்ட சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு
சில பாம்பின் விடம் (காலில் உள்ள தடித்த) தோலில் கூட அளற்சி ஏற்படுத்தி (ஆழமான) புண்களை ஏற்படுத்தும். பின்பு, விடத்தின் அளவை பொறுத்து குருதியில் சேர்வது. இதுவும் ஒரு கரணம் பாம்பு விடம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றவுள்ள பகுதியை சுத்தம் செய்வது. சில பாம்பு விடத்தை விசிறி அடிப்பது. அப்படி பாம்பு விசிறி அடித்தது தெரிந்த்து இருந்தால் இயலுமானவரை முழு உடம்பும் (முக்கியமாக முகப்பகுதி , கண்கள், வாய் ... கழுத்து போன்ற பகுதிகள் ) சுத்தம் செய்யபடவேண்டும், வைத்திய சேவையை நாடும் வேளையில்
-
'நம்ப முடியாத உற்சாகமான தருணம்' - கரும்பொருளின் முதல் தடயத்தை நெருங்கியதாக கூறும் விஞ்ஞானிகள்
இத கரும்பொருளை விளங்குவதும், விளங்கப்படுத்துவதும் சிக்கலானது. ஆனால், ஒரு விடயத்தை கொண்டு, விளங்க முயற்றசிக்கலாம். அந்த விடயம் gravitational lensing. gravitational lensing என்பது சொல்லளவில் சிக்கல் என்றாலும், விடயம் அளவில் அவ்வளவு சிக்கல் இல்லை பொதுவாக சொல்வதற்கும், விளக்கத்துக்கும். கண்ணாடி வில்லை ஊடக ஒளி செல்லும் போது முறியும், இது lensing எனப்படுகிறது. (எமது கண்ணிலும் இந்த lensing விளைவு இருக்கிறது, அது பிழைக்கும் போது இடம் மாறி தெரிவது போன்றவை உருவாகும்) ஆகவே, gravitational lensing என்பது, (மிகவலுவாவன) ஈர்ப்பு மண்டலத்தின் (gravitational field) ஊடு ஒளி செல்லும் போது முறிவடையம் (உண்மையில் வளைகிறது) விளைவே. இப்படி (மிகவலுவாவன ஈர்ப்பு மண்டலத்தின் (gravitational field) ஊடு ஒளி செல்லும் போது ) ஒளி வளையும் என்பதை, ஐன்ஸ்ட்டீன் எதிர்வு கூறி இருந்தார், அவரின் பொது சார்பு கோட்பாட்டை வைத்து. மிகவலுவாவன ஈர்ப்பு மண்டலத்தின் (gravitational field) ஊடு ஒளி செல்லும் போது ஒளி வளைவை கொண்டே பொது சார்பு கோட்பாடு முதலில் பரிசோதிக்கப்பட்டது. இந்த பரசோதனையில் அந்த மிக வலுவான ஈர்ப்பு மண்டலத்தை கொண்ட, (அந்த நேரத்தில் நன்கு அறியப்பட்ட) சூரியன் பரிசோதனை ஈர்ப்பு மண்டலமாக தெரியப்பட்டது. இந்த பரிசோதனையில், சூரியன் ஒரு குறித்த நட்சத்திரத்துக்கு அண்மையாக வரும் வேளையில், நட்சத்திரத்தில் இருந்து (சூரியனின் திணிவு ஈர்ப்பினால் வளைக்கப்பட்ட ) ஒளி, பூமிக்கு வந்த நேர்கோட்டு பாதை பாதையில் பின்னோக்கி பார்த்தால் ( line of sight), உண்மையான பாதை வளைந்து இருப்பதால், பூமிக்கு வந்த ஒளியின் நேர்கோட்டு பாதை ( line of sight) நட்சத்திரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் (நட்சத்திரத்தை அடையாக கூடாது). இதுவே பாரிய திணிவு ஈர்ப்பு ஒளியை வளைகிறது என்ற பொது சார்பு கோட்பாடு முடிவின் முதல் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட எடுகோள். (அப்படி நட்சத்திரத்தில் இருந்து உருவாகி, சூரியனின் ஈர்ப்பினால் வளைக்கப்பட்டு , பூமியை அடைந்த ஒளியின் பாதை, நட்சத்திரத்தில் இருந்து விலகியே இருந்தது பரிசோதனை தரவில்) இந்த ஒளி வளை (பகுதியாக) கொண்டே கரும்பொருள் இருப்பதும் எதிர்வு கூறப்பட்டது. அதாவது மிகவும் தூரமனா நட்சத்திரத்தில் இருந்து பூமிக்கு வரும் ஒளியின் பாதையை (பின்பற்றி சென்றால்) அந்த பாதை நட்சத்திரத்தில் இருந்து விலத்கிறது, பாதையின் இடையில் (அறிந்த வரையில்) பாரிய ஈர்ப்பு மண்டலம் இல்லை. எனவே வேறு ஏதோ (நாம் இதுவரை) அறியாத பாரிய திணிவு (கரும்பொருள்) (பாரிய) ஈர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது, அது நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை வளைக்கிறது.
Kadancha
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited