Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kadancha

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Kadancha

  1. அர்ச்சனாவின் அணுகுமுறையில் நம்பிக்கை இல்லைத்தான், அர்ச்சுனா தனியே என்பதால், அர்ச்சுனா பிழைத்தாலும் தமிழரின் அரசியல் நிலைக்கு பாதகம் இல்லை. இருக்கும் ஏதாவதை பாரிய அளவில் இழக்கும் சத்திய கூறு இருந்தால் தான் இதில் பெரிய ஆபத்து. சிறிய ஆபத்தும் இருக்கிறது என்பதை மறுக்கவில்லை. அர்ச்சுனா சில சிறு நன்மைகளை அவரின் தொகுதிக்கு கிடைக்க வைத்தால், அர்ச்சுனாவின் போக்கு மக்கள் மத்தியிலேயே பாரிய அளவில் பரவி விடுமா என்பது. (அர்ச்சுனா தனி நலனுக்கும் இதை செய்யலாம்)
  2. அர்ச்சுனவின் உரை சில இடங்களில் சிங்களத்தை தாக்குவதாக இருக்கிறது. ஆனால். அதில் வஞ்சப்புகழ்ச்சியும் இல்லை. சிங்கள (தலைவர்களின்) உரைகளும் அநேகமாக இப்படியான போக்கிலேயே இருப்பவை, முன்னுக்குப்பின் முரணாக, தொடர்பு படுத்துவது மிக கடினம். ஆனால். அர்ச்சுனா சிங்களத்தை வசப்படுத்தி தமிழர்களுக்கு ஏதாவது செய்யலாம் என்ற எண்ணமாக இருக்கலாம் அனால், சிங்கள தலைமைகள் விரும்பினாலும், சங்கம் விடாது. ஆகவே, சங்கத்தையும் வசப்படுத்த அர்ச்சுனவின் எண்ணமோ தெரியாது. எனது வேறு அனுபவத்தையும் கொண்டு (அதில் நாங்கள் வேண்டுவதை வேண்டா,ம் என்றே வெளியில் காட்டிக்கொள்ளவேண்டும் என்றும்,),, அர்ச்சுனவின் அணுகுமுறையை உணர்ச்சி இல்லாது, விளைவுகளின் அடிப்படையில் அவதானித்து வரவேண்டும் என்பது எனது இப்போதைய நிலைப்பாடு.
  3. செக்கே தெரியாது ... உழுவத்துக்கு வெளிக்கிட்டால் ... வந்த விளைவு. ஆனால், செக்கில் பிழிந்த்து எடுக்கும் எண்ணெய், cold pressed என்று தேடப்படுவது. (செக்கில் உழுவது இல்லை என்பதை அறிந்து கொள்ளவும்)
  4. நான் சொல்லி இருந்தது, சங்கீதா உட்பட, உத்தியோகபூர்வ கரணம் இன்றி, அப்படி 'செய்யக் கூடாது' என்று. சுருக்கமாக, சிங்களவர் சொல்லும் மிழருக்கு அரச / ஆட்சி கலை அகன்றுவிட்டது என்று சிங்களவர் சொல்லும் பரிகாசதையும், உங்களுக்கு தெரியவில்லை (சொல்லியும் புரியவில்லை) என்பதை தெட்டத்தெளிவாக காட்டுகிறது. ஆனால், உங்களுக்கு சட்டப்பரீட்சயம் என்று சொல்லி கொண்டு, தெரியாமல், புரியாமல் இருப்பது முரண்பாடு. சிங்களவர் ஆண் - பெண் உறவில் தமிழரை விட மிகவும் தாராள போக்கு இருந்தாலும், அரசு / அரசாங்கத்துக்கு வரும் போது இப்படி நடத்தை இருக்காது, அரச எந்திரமும் விடாது, (இதை விட, சங்கீதா, அஜித் உடன் படம் எடுக்கும் காட்சி ஒன்றும் இருக்கிறது - ai, உண்மை தெரியாது) எவரையும், எப்போதும் சந்திக்கலாம் என்ற நிலைக்கு தமிழ்நாடு அரச நிலையை கொண்டுவந்து விட்டுள்ள (கூத்தாடி) முஹலமைச்சர்.
  5. எல்லாவற்றையும் விட்டாலும், இதில் உள்ள பிரச்சனை, விஜே ஐ மிகவும் நேசிக்கும் (என்று விஜே கருதும்) விசிறியும் சந்திக்க இடம் அளிக்க வேண்டும் என்று வரும். அனால், நான் இங்கு அவ்வப்போது சொல்லி வரும் அரச நிலை கனதி / இறுக்கம், அது தான் அரச நிலை என்பதை உருவாக்குவது. நீங்கள் பார்ப்பது தனிப்பட்ட உறவின் அடிப்படையில், ஆனல், விஜயின் நிலை எப்போதும் அதுக்கும் மேலான உன்னத பொறுப்பு, குறிப்பாக (பகிரப்பட்ட) இறைமையின் பொறுப்பான பாதுகாப்பாளரும், பிரயோகிப்பவரும். மற்றது, இது விஐய்ன் முடிவு மட்டும் அல்ல, தமிழ்நாடு அதிகார பீடங்களும் இணங்க வேண்டும். (bureaucratic decision (making)). (ஏனெனில், சங்கீகா, பிள்ளைகள் சாதாரண பொதுமக்கள்.) ( சிங்களர் சொல்வது சரி. சொந்த அரசு நெடுங்காலம் இல்லாமல், அரசகலை, ஆட்சிக்கலை போன்றவை தமிழரிடத்தில் பெரும்பாலும் இல்லை, அகன்றுவிட்டது. அதை இங்கே சிலர் படம் போட்டும் காட்டுகின்றனர். )
  6. நெடுங்காலம் அரசு இல்லாத விளைவில் ஒன்று. சிங்களவார்கள் தமிழர்களை பற்றி சொல்லும் (சரியான) பரிகாசத்தில் ஒன்று. அதை தொடர்ந்து பொல்லை கொடுத்து காட்டி வருவது, வேறு பல காரணங்கள் (பாதுகாப்பு, அரச வளங்களை தனிப்பட்ட பாவிப்பு ..) வேறு பல காரணங்கள் (பாதுகாப்பு, அரச வளங்களை தனிப்பட்ட பாவிப்பு ..) இருப்பினும் protocol இன் படி 1. தனிப்பட்டது - நிகழ்ச்சி நிரலில் தனிப்பட்ட என்பது ஒரு போதும் இருப்பது இல்லை 2. நிலை - சங்கீதா / பிள்ளைகள் - சாதாரண நிலை. உத்தியோகபூர்வத்தில் சமநிலை இல்லை. (உத்தியோகபூர்வ காரணங்களுக்கு) சந்திக்க வேண்டுமாயின், அவர்களை அந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும். ஒரே வழி, சங்கீதா விண்ணப்பித்து, விஜே முதலமைசகராக அனுமதி வழங்க வேண்டும். அப்படி, இந்திய தூதரகத்தில் மட்டுமே சந்திப்பு நடக்க முடியும் (ஆனால்,, இதெல்லாம் உங்களுக்கு புண்ணாக்கு)
  7. தெரியாது (அது ஆச்சரியம் அல்ல) உத்தியோக பூர்வத்தில், அப்படி அல்லாதது (சங்கீதா / பிள்ளைகள்) பகுதியாக இருக்க முடியாது.
  8. அதிகார பூர்வ (உத்தியோக பூர்வ) பயணம். அதனால், (பிரிந்த) சட்ட நிலையை மீறக்கூடாது. . (உரிய உத்தியோக பூர்வ / சட்ட காரணம் இல்லாது சங்கீதாவை மற்றும் பிள்ளைகளை, விஜே சந்திக்க கூடாது)
  9. அது எப்படி எம்மை பார்த்ததோ தெரியாது. பொதுவாக பாம்பை அடிப்பது இல்லை. (பாம்பு தாக்கும் மூர்க்கமாக இருந்தால் கூட முதலில் அதை அகற்றுவதில் தான் கவனம்) வீட்டின் பாம்பு வரும் பகுதி எப்போதும் நிழல், குளிர்மை மகிழ மரத்தால், அதுவும் காரணமாக இருக்கலாம். அந்த இடத்தில் தண்ணீர் வசதியும் இருந்ததால். (மகிழம் பூவின் வாசத்தால் மகிழமரத்துக்கு பாம்பு வரும் என்பது அங்கெ பொதுவாக சொல்லப்படுவது). ஒரே பாம்புதான் வந்தது என்று இதுவரை எண்ணியது. (வேறு வேறு பாம்பாகவும் இருக்கலாம் என்பது இடம் இருக்கிறது).
  10. அதை நாங்கள் தான் கொம்பேறி மூக்கன் என்று விளங்கியது , தோற்றத்தில் நுணக்கமான வேறுபாடு கண்டுபிடிக்க தெரியாததால். ஆகவே, வேறு வகை பாம்பாக இருபதுக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது.
  11. எதை கொண்டு இதை சொல்லுகிறீர்கள்? சிறிய விசிறி அடித்தலை இலங்கையில், வீட்டுக்கு வழமையாக வரும் கொம்பேறி மூக்கன் ஒரு முறை காட்டியது. எனவே, பாம்புகளில் விஷத்தை பாய்ச்சும் தன்மையை மாற்றக்கூடியவையும் இருக்கிறன்றன. நன் நினைக்கிறன் பாம்பு அதன் பாதுகாப்பில் எவ்வளவு அழுத்தம் என்று உணர்கிறதோ, அந்த நிலையில் விஷத்தை பாய்ச்சும் தன்மையை மாற்றக்கூடிய தன்மையை அடையும் என்று. அல்லது கொம்பேறி மூக்கன் போன்ற தோற்றம் உலா வேறு வகை பாம்பாகவும் இருக்கலாம்.
  12. பாம்பின் விடம் என்றால் ஒரேயயொரு வாய்ப்பே இருக்கிறது. அந்த இடத்தில பாம்புக்கும், வேறு ஏதாவது பாம்பு அல்லது பாம்பை துரத்தி / சண்டையிடதில், பாம்பு விடத்தை விசிறி அடித்து இருக்க கூடிய சாத்தியக்கூறு. அப்படி பாம்பு விசிறி அடித்த விடம் நாவல் பழத்தில் பட்டு இருக்கலாம். விசிறி அடிக்கப்படும் விடத்துக்கு முன்பு சொல்லிய அழற்சி, புண் ஏற்படுத்தும் தன்மை கூட, ஏனெனில் பாம்பு விடத்தை விசிறி அடிப்பது முக்கிய பகுதிகளை (குறிப்பாக கண்கள்) காயப்படுத்தி, தப்புவதற்கு, இரையாயின் தாக்குவதற்கு. ( பாம்பின் விடதை உட்கொண்டால் சமிபாடு அடையும் என்பது தியரி. ஏனெனில், பாம்பின் விடத்தின் அடிப்படை கட்டமைப்பு புரதமும், (பெரும்பாலும்) நொதியமும். இந்த நொதியமே (கிட்டத்தட்ட சமிபாடு தொழிற்பாட்டால்) அளற்சி, புண்களை (வெட்டுவது போல) ஏற்படுத்துவது ஆகவே, விடத்தில் உள்ள நொதியம், பாதிக்கப்படும் (உடம்பின்) வெளிப்பகுதியை உடனடியாக (அறுத்து) திறக்கிறது. விடத்தில் உள்ள புரதம் குருதி, நரம்பு, ஆழமான tissue போன்றவற்றில் ஊடுருவி, கலம் அளவில் பிணைந்து தாக்குகிறது. விடத்தில் உள்ள நொதியத்தின் அளவு வெளித்தோல் , வெளி தசையை அறுபதுக்கு கூடாவாக இருந்தால், தொடர்ந்து உள்ளே அறுத்து செல்லும். முழுமையாக புரதம் மட்டும் விடமாக கொண்ட பாம்புகளும் இருக்கலாம். இதில் தான் உட்கொண்டால் சமிக்கும் என்ற கருத்து ஏற்படுகிறது (என்று நினைக்கிறேன்). ஏனெனில், அப்படியான புரதம் ஆகக்குறைந்தது பிணைக்கும் , ஓட்டும் தன்மை உள்ளது. இந்த புரதத்தின் பிணைக்கும், ஓட்டும் தன்மையால் தான் குருதியின் (குருதிக்கு போனால்) பாகுத்தன்மை கூடி, ஓட்டம் குறைந்து, தொடர் விளைவுகள் மூச்சு குறைதல், மயக்கம் .... (இப்படியான பிணைக்கும் , ஓட்டும் புரதம் சமையல் கலையில் வேறு வேறு மாமிச பகுதிகளை ஓட்டுவதுக்கும் பாவிப்பது) அப்படியான சமையல் முறையில் முகம் முழுமையாக மூடப்பட வேண்டும். ஏனெனில் மிகச்சிறிய அளவு கண்கள், இதழ்கள் மூக்கு துவாரத்தை, காது கூட ஓட்டிவிடும் இதை binding protein என்றே சமையல் துறையில் அழைப்பது. )
  13. சில பாம்பின் விடம் (காலில் உள்ள தடித்த) தோலில் கூட அளற்சி ஏற்படுத்தி (ஆழமான) புண்களை ஏற்படுத்தும். பின்பு, விடத்தின் அளவை பொறுத்து குருதியில் சேர்வது. இதுவும் ஒரு கரணம் பாம்பு விடம் என்றால், பாதிக்கப்பட்ட பகுதியை சுற்றவுள்ள பகுதியை சுத்தம் செய்வது. சில பாம்பு விடத்தை விசிறி அடிப்பது. அப்படி பாம்பு விசிறி அடித்தது தெரிந்த்து இருந்தால் இயலுமானவரை முழு உடம்பும் (முக்கியமாக முகப்பகுதி , கண்கள், வாய் ... கழுத்து போன்ற பகுதிகள் ) சுத்தம் செய்யபடவேண்டும், வைத்திய சேவையை நாடும் வேளையில்
  14. இத கரும்பொருளை விளங்குவதும், விளங்கப்படுத்துவதும் சிக்கலானது. ஆனால், ஒரு விடயத்தை கொண்டு, விளங்க முயற்றசிக்கலாம். அந்த விடயம் gravitational lensing. gravitational lensing என்பது சொல்லளவில் சிக்கல் என்றாலும், விடயம் அளவில் அவ்வளவு சிக்கல் இல்லை பொதுவாக சொல்வதற்கும், விளக்கத்துக்கும். கண்ணாடி வில்லை ஊடக ஒளி செல்லும் போது முறியும், இது lensing எனப்படுகிறது. (எமது கண்ணிலும் இந்த lensing விளைவு இருக்கிறது, அது பிழைக்கும் போது இடம் மாறி தெரிவது போன்றவை உருவாகும்) ஆகவே, gravitational lensing என்பது, (மிகவலுவாவன) ஈர்ப்பு மண்டலத்தின் (gravitational field) ஊடு ஒளி செல்லும் போது முறிவடையம் (உண்மையில் வளைகிறது) விளைவே. இப்படி (மிகவலுவாவன ஈர்ப்பு மண்டலத்தின் (gravitational field) ஊடு ஒளி செல்லும் போது ) ஒளி வளையும் என்பதை, ஐன்ஸ்ட்டீன் எதிர்வு கூறி இருந்தார், அவரின் பொது சார்பு கோட்பாட்டை வைத்து. மிகவலுவாவன ஈர்ப்பு மண்டலத்தின் (gravitational field) ஊடு ஒளி செல்லும் போது ஒளி வளைவை கொண்டே பொது சார்பு கோட்பாடு முதலில் பரிசோதிக்கப்பட்டது. இந்த பரசோதனையில் அந்த மிக வலுவான ஈர்ப்பு மண்டலத்தை கொண்ட, (அந்த நேரத்தில் நன்கு அறியப்பட்ட) சூரியன் பரிசோதனை ஈர்ப்பு மண்டலமாக தெரியப்பட்டது. இந்த பரிசோதனையில், சூரியன் ஒரு குறித்த நட்சத்திரத்துக்கு அண்மையாக வரும் வேளையில், நட்சத்திரத்தில் இருந்து (சூரியனின் திணிவு ஈர்ப்பினால் வளைக்கப்பட்ட ) ஒளி, பூமிக்கு வந்த நேர்கோட்டு பாதை பாதையில் பின்னோக்கி பார்த்தால் ( line of sight), உண்மையான பாதை வளைந்து இருப்பதால், பூமிக்கு வந்த ஒளியின் நேர்கோட்டு பாதை ( line of sight) நட்சத்திரத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் (நட்சத்திரத்தை அடையாக கூடாது). இதுவே பாரிய திணிவு ஈர்ப்பு ஒளியை வளைகிறது என்ற பொது சார்பு கோட்பாடு முடிவின் முதல் பரிசோதனைக்கு வைக்கப்பட்ட எடுகோள். (அப்படி நட்சத்திரத்தில் இருந்து உருவாகி, சூரியனின் ஈர்ப்பினால் வளைக்கப்பட்டு , பூமியை அடைந்த ஒளியின் பாதை, நட்சத்திரத்தில் இருந்து விலகியே இருந்தது பரிசோதனை தரவில்) இந்த ஒளி வளை (பகுதியாக) கொண்டே கரும்பொருள் இருப்பதும் எதிர்வு கூறப்பட்டது. அதாவது மிகவும் தூரமனா நட்சத்திரத்தில் இருந்து பூமிக்கு வரும் ஒளியின் பாதையை (பின்பற்றி சென்றால்) அந்த பாதை நட்சத்திரத்தில் இருந்து விலத்கிறது, பாதையின் இடையில் (அறிந்த வரையில்) பாரிய ஈர்ப்பு மண்டலம் இல்லை. எனவே வேறு ஏதோ (நாம் இதுவரை) அறியாத பாரிய திணிவு (கரும்பொருள்) (பாரிய) ஈர்ப்பு மண்டலத்தை உருவாக்குகிறது, அது நட்சத்திரத்தில் இருந்து வரும் ஒளியை வளைக்கிறது.
  15. இதில் இரான் ஒன்றும் விளையாடவில்லை. சுருக்கமாக, ஈரான் எய்தப்பட்ட ஒப்பந்தத்தின் படியே நடந்தது. அமெரிக்கா, (சேட்டை) விளையாட்டை கொண்டு, புவிசார் அரசியல் அதிகாரம், பலத்தின் படத்தை மாற்றலாம் என்று எண்ணமே (அதை முன்னாள் அமெரிக்கா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எழுதியும் உள்ளார்), இந்த ருஷ்யா - உக்கிரைன், அமெரிக்கா - ஈரான் யுத்தத்துக்கு காரணம். ஆனால், அமெரிக்க இப்பொது காலனித்துவத்தை வெளிப்படையான கொள்கையாக கொண்டுள்ளது. அதை ரூபியோ சொல்லி இருப்பதை (வேறு திரியில் இணைத்து இருக்கிறேன்), ஐரோப்பா அதை ஆமோதித்து வரவேற்றது. வெனிசுவேலா முதல் உதாரணம் . ( காலனித்துவதில் இருந்து விடுபட்ட இலங்கை போன்ற நாடுகள் காலனித்துவம் பின்கதவால் புகுந்து விடும் என்ற ஒரு மிக முக்கிய கரிசனையே, வேறு நாட்டு பிரசா உரிமை பெற்றால் இலங்கை பிரசா உரிமையை நீக்குகிறது. மீண்டும் பிரசா உரிமை கொடுப்பது அரசின் முடிவு, கொடுக்கப்பட வேண்டும் என்ற காட்டாயம் இல்லை. )
  16. அறிந்தோ, அறியாமலோ, அந்தப் பெண் சுறாவின் முகத்ன்6 மேற்றப்பகுதியில் அலகு நீண்டு கூம்பு வடிவத்தில் மூக்கு போல நீண்டு இருக்கும் பகுதியில் குறிப்பாக மூக்கைபோல கூரியதாக இருக்கும் மருங்குப் பகுதில் குத்தி இருக்கிறார் (போல)இருக்கிறது அந்தப் பகுதியே சுறாவின் சமநிலை, மணம் மற்றும் 6ம் உணர்வான மின் சமிக்ஞையை கொண்டு சூழ்நிலை, சமநிலை, மிதப்பு,அசைவை ஒருங்குபடுத்தும் நரம்புகள் தொடங்குவதும், ஒன்று சேர்வதும். சுறாவின் மூளையில் குத்து நேரடியாக விழுகிறது என்று சுறா சமநிலை குழம்பி இருக்கும். ஆயினும், பெண் சுறாவின் வாயில் அகப்படாமல் இதை செய்தது அதீத துணிச்சல் தான். வேறு பகுதியில் சுறாவை (பொதுவாக எந்த சாகச மீனையும் - பாய் மீன், சீலா போன்றவை ) குத்தினால் , அவைக்கு உடனடியாக நோகாது.
  17. தினசரி தமாஷாவுக்கு குறைவில்லை,டிரம்ப் இருக்கும் வரையிலும்
  18. பெரிய தொடைகள் வலிமையான தொடைகள் அல்ல என்பதை ஆக்கம் சொல்கிறது. வலிமையான தொடைகள் (கால்கள்) - (தடக்குதல், தவறுதல் போன்ற இக்கட்டான நிலையில்) சமநிலை எய்தக்கூடிய, நிலைநிறுத்த கூடிய இயங்கு நிலை (mobility), பலம் (strength), நெகிழ்வு தன்மை (flexibility) கொண்ட தொடை (கால்கள்). (மூங்கிலை போல)
  19. 100 வீதம் நிச்சயம் இல்லாவிட்டாலும் - சுயாதீன அசைவுகள் செய்யக் கூடிய நிலைக்கு, வலிமையான கால்கள் (இதற்காக்க மேற்பகுதி உடம்பின் வலிமையின் அவசியத்தை புறக்கணிக்கவில்லை) இருப்பது அவசியம். சுயாதீன அசைவு - நலமான மனநிலையுடன், வேறு பல வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாத ஊக்கத்தை கொடுப்பதுடன், வலிமையை தக்கவைக்கும் வாய்ப்புகள்அதிகம். எதையும் வாழ்க்கையில் கட்டி எழுப்பி ஒரு குறிபிட நிலையை அடைவற்கு காலம், முயற்சி தேவை போல, வலிமைக்கும் தேவை, தொடர்ந்து பேணவும் காலம், முயற்சி அவசியம். எமது சமயம், கலாசாரம் ஒரு பபகுதி உடம்பை சுமையாக போதிக்கிறது, வேறு பகுதி போற்றுகிறது. அனால், போதனைகள் உடம்பை சுமையாக கொள்வதை மையமாக வைத்தே செய்யப்படுகிறது. ஆயினும், எமது சித்தர்கள் உடம்பின் வலிமையை போதித்தார்கள். அதாவது உடலின் வலிமை, மனநலதின் வகிபாகத்திலும், அவசியத்துக்கும். (உடலுறவில் கூட சித்தர்கள் விந்து கட்டுதலுக்கு போதித்தார்கள்)100 வீதம் நிச்சயம் இல்லாவிட்டாலும் - சுயாதீன அசைவுகள் செய்யக் கூடிய நிலைக்கு, வலிமையான கால்கள் (இதற்காக்க மேற்பகுதி உடம்பின் வலிமையின் அவசியத்தை புறக்கணிக்கவில்லை) இருப்பது அவசியம். சுயாதீன அசைவு - நலமான மனநிலையுடன், வேறு பல வாழ்க்கைக்கு வேண்டிய இன்றியமையாத ஊக்கத்தை கொடுப்பதுடன், வலிமையை தக்கவைக்கும் வாய்ப்புகள்அதிகம். எதையும் வாழ்க்கையில் கட்டி எழுப்பி ஒரு குறிபிட நிலையை அடைவற்கு காலம், முயற்சி தேவை போல, வலிமைக்கும் தேவை, தொடர்ந்து பேணவும் காலம், முயற்சி அவசியம். எமது சமயம், கலாசாரம் ஒரு பபகுதி உடம்பை சுமையாக போதிக்கிறது, வேறு பகுதி போற்றுகிறது. அனால், போதனைகள் உடம்பை சுமையாக கொள்வதை மையமாக வைத்தே செய்யப்படுகிறது. ஆயினும், எமது சித்தர்கள் உடம்பின் வலிமையை போதித்தார்கள். அதாவது உடலின் வலிமை, மனநலதின் வகிபாகத்திலும், அவசியத்துக்கும். (உடலுறவில் கூட சித்தர்கள் விந்து கட்டுதலுக்கு போதித்தார்கள்)
  20. இதில் ஒன்றும் நகைப்புக்கு இடம் இல்லை. Trump அவரின் macho தோற்ற சவாடலை தவிர்த்து, உளவு துறையின் அறிவுரையை ஏற்று நடந்தே சரியான தலைமைப்பண்பு. ஆனால், டிரம்ப் அதிபராக இருக்கும் வரை ஊடகங்களுக்கு (ஏன் அநேகமா மற்ற எல்லா அரசுகளுக்கும்) தினம்தோறும் கூத்தும், தமாஷாவும். அமெரிக்கா அரச கலையில் (statecraft) புதிய பல (முற்)போக்குகளை அறிமுகப்படுத்தியது. டிரம்ப் மூலமாக அரச கலையின் வழமையான தோற்றப்பாட்டு இறுக்கத்தை தளர்த்தும் போக்கை கொண்டுவரலாம்.
  21. இதை எல்லா எஎண்ணெய் / வள நாடுகளும் எதிர்க்கும். ஏனெனில், இஹை ஏற்றுக்கொண்டால், அவைகளுக்கும் இந்த நிலை வரலாம். எல்லா நாடுகளும், மேற்கித்திற்கு எண்ணெய் / வாயுவை ஏற்றுமதி செய்வதை தடுத்தால்,அமெரிக்காவின் கதை கூட கந்தல். (அஆனால் மெரிக்காவிடம் எண்ணெய் இருக்கிறது, ஆனால் பெரும்பான்மை சுத்திகரிப்பு வசதி பழையது, heavy மசகு எண்ணெய்க்கே பொருத்தம். மாற்ற காலம் தேவை. அத்துடன், heavy crude oil, டொலர் இன் நிலைத்தன்மை, பாவனை போன்றவற்றின் அடிநாதம்.) அதிலில் இப்போது இரான், அமெரிக்கா /இஸ்ரேலுக்கு எ ஏறுமதி ண்ணெய் / வாயு / உரம் (இது வாயு சுத்திகரிப்பின் பக்க விளைவு) அரபு நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்வதை தடுக்கும் (கப்பல்களுக்கு தடை போட்டு) என்கிறது. அமெரிக்கா, பஞ்சத்தைக் கொண்டு வந்து, (பிரித்தானியா அப்போதைய இந்தியாவில் பஞ்சத்தை தூண்டியது, பிடியை வைத்து இருப்பதற்கு போல), மேலாண்மையை நிலைநாட்ட சிந்திக்கிறது போல இருக்கிறது?
  22. அமெரிக்கா.மேற்றகில் பணவீக்கம் கூடுவது, வாழ்க்கைத்தரமும் குறைவது உடனடி விளைவு. ஏனெனில், எண்ணிலடங்கா அன்றாட தேவை பொருட்களுக்கு மாற்றீடு இல்லை. அமுலுக்கு வருவதற்கு மேலும்படிமுறைகள் இருந்தாலும், இது நிச்சயமற்ற நிலையை உருவாக்கின்றது.
  23. இரானுக்கு இவை உதவி செய்தாலும், அது உதவி மட்டுமே. இராணுவ பலத்தை எப்படி வளர்ப்பது, திட்டமிடுவது, இயக்குவது, போரை எப்படி நடத்துவது போன்றவை எல்லாமே ஈரான். பொதுவாக எந்த நாடும்,அரசும் எவரிலும் தங்கி இருப்பதை,குறிப்பாக இராணுவ பலத்துக்கு, விரும்பாது. இரான் அப்படி ங்கியிருக்க கூடாது என்பதில், மற்றநாடுகளை விட இறுக்கம். இந்த யுத்தத்தில் ஈரான் தாக்குதல் என்று மட்டும் திட்டமில்லை, அமெரிக்காவின் .மேற்கின் பாவிக்கக்கூடிய முக்கிய ஆயுதங்களின் (ஏவுகணைகளின்) உற்பத்தி model ஐ குறிவைத்தும் (ஈரான் சமயத்தை முக்கிய அரச அம்சமாக கொண்டு வந்ததின் அடிப்படை காரணம், இறைமைக்குள் எவரும் தலையிடுவதை தவிர்ப்பதற்கும்) குறிப்பாக, ரஷ்யாவுடன், வெளியில் தெரியும் உறவின் நெருக்கதிலும், உள்ளே ருஸ்சியாவில் இருந்த்து இரான் விலகியே உறவை வைத்துள்ளது. (இதுக்கு இரானின் வரலாறும் ஒரு காரணம் - 1200 களில், மொங்கோலியரால் அழிக்கப்பட்டது, 1300 பின்பகுதி துருக்கி அன்றைய மன்னர், 1500 உஸ்பெக் இல் இருந்த நாடோடிகளால், 16 - 18 நூற்றண்டிகளில் ஒட்டோமான் இராச்சியதால், 1700 முன்பகுதியில் ஆப்கானில் இருஙக இராச்சியதால், 1907 - 1941 வரையில் ரஸ்யா (வில் தொடங்கி பின்பு சோவியத் யூனியன்), பிரித்தானியாவால் பங்கு போடப்பட்டது. பின், (us, மேற்கு, சோவியத் யூனியன்) சதாமை ஏவி.) ஈரானில் - அமெரிக்கனுடன் கை குலுக்கினால், விரல்களை எண்ணி சரிபார்த்து கொள்ளவேண்டும் - என்ற ஒரு வாய் பேச்சு இருப்பதாக சொல்லப்படுகிறது. (ஆனால், இரான் பெரிய புவியியல் பிரதேசமென்பதால், எந்த அளவுக்கு பரவி இருக்கிறது என்பது தெரியாது)
  24. ஹோர்மோர்ஸ் நீரினை (அமெரிக்கா . மேட்ற்கு தோற்றத்தை காட்டுவது போல), ஈரானுக்கு வசதியை கொடுக்கவில்லை. உண்மையில், ஹோர்மோர்ஸ் நீரிணையில்லாது, அதற்கு பதிலாக தரை இருக்கும் என்றால், யுத்த நிலை இப்போதுள்ளது போன்றே இருக்கும். அந்த நிலையில் மற்ற நாடுகளின்(குழாய் வெளியான) எண்ணெய் வினியோகத்தை குறிவைப்பது இரானுக்கு மேலும் இலகு. அமெரிக்கா தரைஆக்கிரமிப்புக்கும் ஒப்பீட்டளவில் இலகு. irgc அப்படிப்பட்ட யுத்த்தில் மிகவும் அனுபவமுள்ளது. மரபுவழி, மரபு சாராத படைகளை, ஒரேநேரத்தில் ,ஒரே களத்தில் பாவித்து யுத்தம் நடத்துவதில். அமெரிக்கா படை நகர்த்த்தல், தாக்குதல் அனுபவத்தை சிரியாவில் பெற்றுக்கொண்டது. (பார்க்க போனால்ம, மத்திய கிழக்கில் ஆகப்பிந்திய, வெவ்வேறுவகை யுத்த அனுபவத்தை கொண்டது இரான் irgc மட்டுமே) ஈரானின் போர்த்திட்டமிடலும், போர் நடத்தும் தந்திரமே அமெரிக்காவை, மேற்கை முடக்குகிறது.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.