Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Kavi arunasalam

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Kavi arunasalam

  1. உலகம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அதன் எங்கேயோ ஒரு மூலையில் நாம் வாழ்ந்து கொண்டிருந்தாலும், நம் மனதுக்குப் பிடித்தமான ஒருவர் எவ்வளவு தொலைவில் இருந்தாலும், சில சந்திப்புகள் நடந்தே தீர வேண்டும் என்று காலம் காத்திருக்கிறதோ என்று சில சம்பவங்களைப் பார்க்கும்போது தோன்றுகிறது. அப்படிப்பட்ட ஒரு சம்பவத்தின் நாயகிகள்தான் மீனாவும் மீனலும். இந்தியாவில் குழந்தைகளாக இருந்தபோதே இருவரும் தனித்தனியாக அனாதை இல்லங்களில் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் இரண்டு வெவ்வேறு நெதர்லாந்துக் குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டனர். இருவரும் நெதர்லாந்தில் வளர்ந்தனர். அவர்களுடைய வளர்ப்புக் குடும்பங்களின் வீடுகள் சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்தன. 1996-ல், தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்காக நடைபெற்ற ஒரு ஒன்றுகூடலில், பதின்ம வயதிலிருந்த மீனாவும் மீனலும் முதன்முறையாகச் சந்தித்தனர். ஏறக்குறைய ஒரே மாதிரியான தோற்றமும், ஒரே நிறமும் இருந்ததால் அவர்கள் இலகுவாக நண்பர்கள் ஆகிவிட்டார்கள். பின்னர் குறுஞ்செய்திகள் மூலம், பள்ளி, நண்பர்கள், பையன்கள், வெளியே செல்வது, நடனம், இசை, தங்களுக்குப் பிடித்த இசைக்குழுக்கள் என்று அந்த வயதுப் பெண்கள் பேசக்கூடிய எல்லா விஷயங்களையும் பேசிக்கொண்டனர். ஒரு கட்டத்தில் இருவரும் தங்களுக்கான வாழ்க்கைத் துணைகளைத் தேடிக்கொண்டனர். வாழ்க்கையின் வேகம் அவர்களை வெவ்வேறு திசைகளில் அழைத்துச் சென்றது. மீனா நெதர்லாந்திலேயே தங்கிவிட்டார். மீனலின் குடும்பம் பிரான்சுக்குப் போனது. அவர்களுடைய தொடர்பும் மெதுவாகக் குறைந்து, இறுதியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளாமல் போய்விட்டனர்.15 ஆண்டுகளுக்குப் பிறகு, 2026 ஏப்ரல் மாதத்தில், பிரான்சில் தனது வீட்டில் சோபாவில் அமர்ந்திருந்த 44 வயதான மீனலின் மொபைலுக்கு ஒரு அறிவிப்பு வந்தது. அவர் செய்திருந்த MyHeritage DNA பரிசோதனையின் முடிவுகள்தான் அந்தச் செய்தி. ஆவலுடன் மொபைலைப் பார்த்தார். அதில் இருந்தது,“Mina: Sister”, மீனலால் அதை நம்பவே முடியவில்லை. “மீனா, சகோதரி?”. யார் அந்த மீனா? மீனால் தேட ஆரம்பித்தார். அந்த மீனா 1996ல் சந்தித்த அதே மீனாதான் என்பது அவருக்குத் தெரியவில்லை. பின்னர் சமூக ஊடகங்களில் மீனாவின் புகைப்படங்களைப் பார்த்தபோதுதான் உண்மை மெதுவாக அவருக்குத் தெளிய ஆரம்பித்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு பதின்ம வயதில் சந்தித்த அந்த நண்பியே, அவளது உடன்பிறந்த சகோதரி. DNA பரிசோதனையில் கிடைத்த பொருத்தம் சாதாரணமானதல்ல. 100 சதவீதப் பொருத்தம். “பல ஆண்டுகளாக என் இதயத்தில் ஒரு வெற்றிடம் இருப்பதை உணர்ந்தேன். இப்போது காணாமல் போன ஒரு puzzle piece கிடைத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது” என்று மீனால் பத்திரிகை நேர்காணலில் சொல்லியிருக்கிறார். மீனாவும் தனது வாழ்க்கையில் அன்பு குறைந்திருக்கவில்லை என்று கூறுகிறார். நெதர்லாந்தில் தன்னை வளர்த்த பெற்றோரும், அவர்களுடைய பிள்ளைகளும் தன்னை அன்புடன் வளர்த்தார்கள். ஆனால், தனது பிறந்த குடும்பத்தைப் பற்றிய எந்தத் தகவலும் இல்லாததால், அந்த அன்புக்கு நடுவிலும் விளக்க முடியாத ஒரு தனிமை இருந்ததாக அவர் கூறுகிறார். இப்போது அந்த வெற்றிடத்துக்கு ஒரு பதில் கிடைத்துவிட்டது. இருவரும் மீண்டும் சந்தித்தபோது கண்ணீர், கட்டிப்பிடித்தல், சிரிப்பு என அந்தச் சந்திப்பு உணர்ச்சிபூர்வமாக இருந்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு சகோதரிகளாக எடுத்துக்கொண்ட முதல் selfie-யும் அன்றுதான். இப்போது அவர்கள் தினமும் பல மணி நேரம் தொலைபேசியிலும் குறுஞ்செய்திகளிலும் பேசிக்கொள்கிறார்கள். “நாங்கள் சகோதரிகளாக மாறுவதற்கு முன்பே நண்பிகளாக இருந்தோம். உண்மையில் நாங்கள் எப்போதுமே சகோதரிகள்தான், ஆனால் அது எங்களுக்குத் தெரியவில்லை.” என்கிறார் மீனால். ஒரே தாயின் வயிற்றில் பிறந்த இரண்டு குழந்தைகள், இந்தியாவில் பிரிக்கப்பட்டார்கள். வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டார்கள். ஒரே நாட்டில் 130 கிலோமீட்டர் இடைவெளியில் வளர்ந்தார்கள். பின்னர் பதின்ம வயதில் சந்தித்தார்கள்.நண்பிகளானார்கள். 15 ஆண்டுகள் தொடர்பில்லாமல் இருந்தார்கள். ஆனால் அவர்கள் மறுபடியும் சந்தித்துக்கொண்டார்கள். சில உறவுகளை நாம் தேட வேண்டியதில்லை.அவை எங்கோ நம்மைத் தேடிக்கொண்டிருக்கின்றன. சரியான நேரம் வரும்போது, நம்மிடம் வந்து சேர்ந்துவிடுகின்றன.
  2. அலாஸ்காவின் வடமேற்குப் பகுதியில், அமெரிக்க நிலப்பரப்பிலிருந்து வெகு தொலைவில், ரஷ்யாவுக்கு அருகில் அமைந்துள்ள St. Lawrence Island தீவில் உள்ள Savoonga என்ற சிறிய குடியிருப்பைச் சேர்ந்த 15 வயதான Parker என்ற சிறுவன், தனது 35 வயது அண்ணனுடனும், உறவினர் ஒருவருடனும் மீன்பிடிப்பதற்காக பேரிங் கடலுக்குச் சென்றிருக்கிறான். மூன்று நாட்கள் மீன்களை பிடித்து விட்டுத் திரும்புவதே அவர்களது எண்ணமாக இருந்தது. ஆனால் அவர்கள் சொன்ன நாளில் திரும்பவில்லை. குடும்பத்தினர் கவலையடைந்து காவல்துறைக்கும் மீட்புப் படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். அமெரிக்கக் கடலோரக் காவல்படையும் Alaska Air National Guard-ம் இணைந்து பெரிய அளவிலான தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கின. மோசமான வானிலை காரணமாக அவர்களின் தேடுதல் நடவடிக்கை தொடங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது. பின்னர், பேரிங் கடலில் St. Lawrence Island-க்கு சுமார் நான்கு மைல் தொலைவில், கவிழ்ந்துபோன தனது சிறிய மீன்பிடிப் படகின் மேல் Parker மண்டியிட்டபடி அமர்ந்திருப்பதை வானிலிருந்து மீட்புக் குழுவினர் கண்டுபிடித்தனர். அவன் கடும் குளிரிலும், உணவும் குடிநீரும் இல்லாமலும், இரவையும் பகலையும் அந்தக் கவிழ்ந்த படகின் மேல் கழித்திருந்தான். மீட்புக் குழுவினர் விமானத்திலிருந்து உயிர்காக்கும் மிதவைப் படகையும் தேவையான உபகரணங்களையும் கீழே அனுப்பினர். ஆனால் Parker மிகவும் பலவீனமாக இருந்ததால், அவனால் அதைச் சென்றடைய அவனால் முடியவில்லை. அதனால் அருகில் இருந்த Northwest Explorer என்ற மீன்பிடிப் படகைத் தொடர்புகொண்டு, சிறுவன் இருந்த இடத்துக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அந்தப் படகும் சுமார் 39 மைல் தொலைவில் இருந்தது. கடல் நிலைமை, பனிமூட்டமாக மோசமாக இருந்ததால், Parker இருந்த இடத்தைச் சென்றடைய அவர்களுக்கு சுமார் நான்கு மணித்தியாளங்கள் தேவைப்பட்டது. விமானத்திலிருந்து சிவப்பு நிற ஒளிச் சமிக்ஞைகள் கொடுக்கப்பட்டு, அந்தச் சமிக்ஞைகளைப் பின்பற்றி படகு சிறுவன் இருந்த இடத்தை அடைந்தது. கடைசியில், மீட்புக் குழுவினர் அவனைப் பாதுகாப்பாகப் படகுக்குள் கொண்டு வந்தனர். Parkerஇன் மூத்த சகோதரரான டூலி, தங்கள் குடும்பத்தினர் வணிக ரீதியான மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், பெரும்பாலும் நீண்ட காலம் கடலில் செலவிடுவதாகவும் கூறினார். படகின் மோட்டாரில் மீன்பிடி வலை சிக்கிக்கொண்டதாகவும், அதை அவர்களால் விடுவிக்க முடியவில்லை என்று தனது சகோதரன் Parker, தன்னிடம் சுன்னதாக டூலி கூறியிருக்கின்றார். மோசமான வானிலையால் படகு கவிழ்ந்தபோது, தனது மற்றைய சகோதரன் படகின் கீழே சிக்குண்டதால் கடலில் மூழ்கி விட்டதாகவும், Parkerம், உறவினரும் மட்டுமே படகின் மேல் பகுதிக்கு ஏற முடிந்தது என்றும் தனது உறவினர் ஒரு கட்டத்தில் பயமடைந்து படகிலிருந்து குதித்ததாகவும், சில அடி தூரம் நீந்திய நிலையில் அவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகவும் Parker தன்னிடம் சொன்னதாக டூலி தெரிவித்தார். பார்க்கர் தனியாக விடப்பட்டதாகவும், மீட்கப்படும் வரை அவன் பிரார்த்தனை செய்துகொண்டே இருந்ததாகவும் டூலி மேலும் சொல்லியிருக்கிறார். Northwest Explorer படகின் கப்டன் Adam White அவனைப் பார்த்தபோது சொன்ன வார்த்தைகள், “That’s one tough kid.”அதாவது, “இவன் உண்மையிலேயே மனஉறுதி கொண்ட ஒரு சிறுவன்”
  3. ஏ.எம்.ராஜா சிவாஜி கணேசனுக்குப் பாடியது குறைவு. அவருக்கு அநேகமாக சிதம்பரம் ஜெயராமன்தான் பாடுவார். ஒரு காலத்தில் காதல் பாடலுக்கு ஏ.எம். ராஜா, பி.பி. சிறீநிவாஸ் என்று மென்மையான குரலையே பயன்படுத்தினார்கள். ரி.எம்.எஸ்ஸை எழுச்சிப் பாடலுக்கு மட்டும் பயன் படுத்துவார்கள். மெதுமெதுவாக அந்த நிலையை உடைத்து மெலடிப் பாடல்களையும் ரி.எம்எஸ் பாடத் தொடங்கினார். காதலி இந்த ஆட்டம் போட்டால், காதல் சுவைக்குமா? ஆனலும் கேட்பதற்கு நல்லதொரு இனிமையான பாடல். நான் விரும்பிக் கேட்கும் பல பழைய பாடல்கள் ஏ.எம். ராஜா பாடிய பாடல்கள். நன்றி suvy!
  4. ‘சீமான் ஈழத்தமிழர் சம்பந்தமாக பெரிய அரசியல்வாதி அல்ல’ என்ற உங்கள் கூற்றில் ஒரு சின்ன மாற்றம். ‘சீமான், ஈழத்தமிழர் சம்பந்தமான ஒரு அரசியல்வாதி அல்ல’ என்பதே சரி. அவர் தனது அரசியலை தமிழ்நாட்டுக்குள் வைத்துக் கொள்ளட்டும். ஈழம்,தாயகம், தமிழ் தேசியம் எல்லாம் ‘கப்சா’. அவையாவும் அவரது வியாபாரப் பொருட்கள். அவர் அந்தப் பொருட்களை விற்பனை செய்வதில்லை. காட்சிப் படுத்தி காசு பார்க்கிறார். ராத்திரிக்கு தூங்க வேணும்
  5. யேர்மனியின் Neustadt நகரில் 64 வயதான ஒருவர் தனது சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக காவல்துறை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார்.அங்கு சென்ற அவருக்கு ஒரு ஏமாற்றம் காத்திருந்தது. “உங்கள் சாரதி அனுமதிப் பத்திரத்தை இப்போது தர முடியாது” என்று காவல்துறையினர் கூறிவிட்டார்கள். ஆள் மிகுந்த ஏமாற்றத்துடன் வீட்டுக்குத் திரும்பிவிட்டார். இதுபற்றி காவல்துறைப் பொறுப்பதிகாரி பின்னர் விளக்கம் கொடுத்திருக்கிறார். அந்த முதியவர் தவறாக வாகனம் ஓட்டியதற்காக, அவரது சாரதி அனுமதிப் பத்திரம் ஒரு மாதத்திற்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது. தடை முடிவதற்கு இன்னும் நான்கு மணி நேரமே இருந்த நிலையில், அவர் காவல்துறை அலுவலகத்துக்கு வந்து தனது அனுமதிப் பத்திரத்தைக் கேட்டிருக்கிறார். “சரி… இன்னும் நான்கு மணி நேரம்தானே இருக்கிறது. நான்கு மணி நேரம் கழித்து வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்கலாமே?” என்று கேட்கப்பட்டபோது, காவல்துறை அதிகாரி சொன்ன பதில்,“அவர் இங்கே வந்து தனது சாரதி அனுமதிப் பத்திரத்தைக் கேட்டது சரிதான். ஏனென்றால், அது எங்களிடம்தான் இருக்கிறது. தடை முடிந்ததும் நாங்கள்தான் அதை அவரிடம் திருப்பிக் கொடுக்க வேண்டும். அவரிடம் விசாரித்தபோது, அவர் தனியாகத்தான் வந்ததாகச் சொன்னார். “எப்படி வந்தீர்கள்?” என்று கேட்டோம். “எனது மோட்டார் சைக்கிளில் வந்தேன்” என்றார். “யார் மோட்டார் சைக்கிளை ஓட்டினார்கள்?” என்று கேட்டோம். அதற்கு,”வேறு யார்? தனியாக வந்தேன் என்றால் நான்தானே ஓட்டினேன் என்று அர்த்தம்” என்றார். ஒரு மாதத்திற்கு வாகனம் ஓட்டத் தடை. தடை முடிவதற்கு இன்னும் நான்கு மணி நேரம் இருக்கிறது. அப்படியிருக்கும்போது, அந்த நான்கு மணி நேரத்துக்கு முன்னரே மோட்டார் சைக்கிளை எப்படி ஓட்ட முடியும்? இப்போது, தடை காலம் முடிவதற்கு முன்னரே வாகனம் ஓட்டியதற்காக அவர் மீது இன்னொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அனுமதிப் பத்திரத்தை வாங்குவதற்காகச் சென்றவர், அதற்குப் பதிலாக இன்னொரு வழக்கை வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பியிருக்கிறார். எங்கள் ஊரில் ஒரு பழமொழி இருக்கிறது,“ஆக்கப் பொறுத்த மச்சானுக்கு, ஆறப் பொறுக்கவில்லை” என்று. இங்கே ஆறு நாட்களோ, ஆறு மாதங்களோ இல்லை, ஆறப் பொறுக்காதது வெறும் நான்கு மணி நேரம்தான்.
  6. நூறாண்டு காலம் வாழ்க! நோய்நொடியில்லாமல் வாழ்க!🥂
  7. “உங்கள் அடையாளஅட்டை எங்கே?” என்று இனி யாராவது உங்களைக் கேட்டால், சட்டைப் பையில் அல்லது பணப்பையில் தேட வேண்டிய அவசியமில்லை. மொபைலைக் காட்டினால் போதும். 2027 ஜனவரி 2ஆம் தேதி முதல், யேர்மனியின் தேசிய அடையாள அட்டையை (Personalausweis) மொபைலில் டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தும் வசதி அறிமுகமாக இருக்கிறது. இதற்கான APP குறித்த தகவல்களும் இப்போது வெளியாகியிருக்கிறது. அடுத்த ஆண்டு முதல், தங்களுடைய அடையாள அட்டையை மொபைலில் வைத்திருக்க விரும்புபவர்களுக்கு “d-you” என்ற APP தேவைப்படும். இந்தச் APP பச்சை மற்றும் நீல நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் ஓரத்தில் கருப்பு, சிவப்பு, தங்க நிறங்களும் இடம்பெற்றுள்ளன, அதாவது யேர்மனியக் கொடியின் நிறங்கள். இதில் இருக்கும். “d” என்பது digital மற்றும் Deutschland (யேர்மனி) என்பதையும், “you” என்பது செயலியைப் பயன்படுத்தும் பயனரையும் குறிக்கிறது. இது தனியாக யேர்மனி உருவாக்கும் ஒரு திட்டம் இல்லை. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் செயல்படுத்தப்படவுள்ள EUDI Wallet எனப்படும் டிஜிட்டல் அடையாளத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அடுத்த கட்டமாக இது அமைகிறது. முதலில் பொதுமக்கள் தங்களுடைய டிஜிட்டல் அடையாள அட்டையை மொபைலில் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள முடியும். பின்னர் படிப்படியாக, கார் லைசன்ஸ் போன்ற பிற ஆவணங்களையும் அதில் சேர்த்துக்கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட இருக்கிறது. அப்படியானால் ஒரு நாள், அடையாள அட்டை,லைசன்ஸ்,வேறு ஆவணம், எல்லாமே மொபைலில் நகலாக இருக்கும். அசல் ஆவணங்கள் வீட்டிலேயே பாதுகாப்பாக பெட்டகத்துக்குள் இருக்கும். மேலும், இணையத்தில் ஒருவருடைய அடையாளத்தை நிரூபிப்பதும் எளிதாகும். புதிய வங்கிக் கணக்கைத் திறப்பது, மொபைல் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது, ஒன்லைனில் ஒரு காரை வாடகைக்கு எடுப்பது போன்றவற்றையும் விரைவாகச் செய்ய முடியும். இதில் முக்கியமான ஒரு பாதுகாப்பு அம்சமும் இருக்கிறது. ஒவ்வொரு முறையும் எங்களுடைய முழுத் தகவல்களையும் கொடுக்க வேண்டியதில்லை. குறிப்பிட்ட சேவைக்குத் தேவையான தகவல் மட்டும் பகிரப்படும். உதாரணமாக, இணையத்தில் மதுபானம் வாங்கும்போது, வாங்குபவருக்குத் தேவையான வயது இருக்கிறதா? என்பதை நிரூபிக்கும் தகவல் மட்டும் வழங்கப்படும். எங்களுடைய பிறந்த தேதி, முகவரி போன்ற தேவையில்லாத தகவல்களை ஒவ்வொருவரிடமும் காட்ட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் இதிலும் ஒரு சிறிய கவலை ஒன்று இருக்கிறது. மொபைலை வீட்டிலே வைத்துவிட்டு மறந்து விட்டால் பரவாயில்லை ஓரளவு சமாளித்துக்கொள்ளலாம். ஒருவேளை தொலைத்துவிட்டால், அடையாள அட்டையுடன் சேர்த்து நாங்களும் கொஞ்சம் அடையாளம் தெரியாமல் போய்விடுவோம். தொலைபேசி இலக்கங்களை மொபைலில் பதிவேற்றிவிட்டு, எங்களுடைய தொலைபேசி இலக்கங்களையே மறந்து போகிறவர்கள் நாங்கள்.
  8. ஞாயிற்றுக்கிழமையன்றே வாஷிங்டனில் யேர்மனி சாக்சோனி-அன்ஹால்ட்டில் நடந்த தேர்தல் வாஷிங்டனிலும் கவனிக்கப்பட்டிருக்கின்றது என்பது டிரம்ப் வெளியிட்டிருக்கும் வாழ்த்துச் செய்தியில் இருந்து தெரிகிறது. டொனால்ட் டிரம்ப், சாக்சோனி-அன்ஹால்ட் தேர்தலில் AfD பெற்ற வெற்றிக்கு Truth Social தளத்தில் வாழ்த்துத் தெரிவித்ததோடு, அது "எழுச்சி பெற்று வரும்" ஒரு இயக்கம் என்றும் “ஜெர்மனியின் ஜனரஞ்சகக் கட்சிக்கு இது ஒரு மிகச் சிறந்த இரவாக அமைந்தது," என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இருப்பினும் அவர் AFD கட்சியின் பெயரை நேரடியாக Truth Social தளத்தில் குறிப்பிடவில்லை. அவரது அந்தப் பதிவின் முடிவில், "MGGA!!!" என்று டிரம்ப் முடித்திருக்கின்றார். அதன் அர்த்தம் இப்படித்தானே இருக்கவேண்டும், Make Germany Great Again!!!
  9. உங்களுக்கு இசை ஞானம் இருக்கிறது. எல்லா இசையமைப்பாளர்களும் அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து. விதவிதமாகப் பணியாரம் சுடுவார்கள். ஒரு கோழிதான் , அதைவைத்து சுக்கா,குருமா, டிக்கா, டெவில்… என்று சமைப்போமே அப்படி. ஆனாலும் இசையமைப்பாளர்கள் ரசிக்கும்படிக் கொடுக்கிறார்கள். நாங்கள் சுவைக்கிறோம்.😃

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.