-
இரசித்த.... புகைப்படங்கள்.
El Toro Photo Sponsorisé · Clown Frogfish.......! 😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
Abu Farhana Suggestions ·il y a un jour1 j · அதீத புழுக்கத்தின் காரணமாக இரண்டு நாட்களாக அறையில் சமைக்கவில்லை. மீன் சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. சரி மார்க்கெட்டுக்கு போயி ஏதாவது நல்ல மீன் இருக்கானு பார்த்துட்டு இன்றைக்காவது ஏதாவது சமைக்கலாம்னு மீன் கடை பக்கம் கரையொதுங்கி விட்டேன். எல்லா மீன்களும் நல்ல மீன்கள் தான். ஆனால் நம்மவர்கள் சில மீன்களை தான் சாப்பிடுவார்கள். துண்டு துண்டாக இருக்க வேண்டும், முள் இருக்க கூடாது , குறிப்பாக சுவையாக இருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் உண்டு. இந்த நிபந்தனைகளில் தேர்ச்சி பெறுவது சீலா, ஊளி, வாவல் மீன்கள் தான். சேட்டன் கடையில் சீலா சரியில்லை.. ஊளியில் ஒளியில்லை.. கருப்பு வாவல் கட்டுப்படியாகாது. அதனால் பாறை மீன் பக்கம் பார்வையை கொண்டு போயாச்சு. பெரிய பாறை மீன் ஒன்றரை கிலோ. பாதி மீனை ஆணத்துக்கு சிறிய துண்டுகளாகவும் மீதியை பொரிக்க ஏற்ற மாதிரி துண்டு போடுமாறு சொல்லியாச்சு !!! சேட்டன் மீனுடன் கதகளி ஆடிட்டு இருக்கையில் நமது கண்கள் அங்கிருந்த நண்டு பக்கம் தாவியது. வெயில் காலம் முடிந்து குளிர்காலம் ஆரம்பிக்க போவதால் பெரும்பாலானோருக்கு சளி காய்ச்சல் தொல்லை இருக்கிறது. எனவே ஒரு நண்டு ரசம் போடுவோம். சளிக்கு அது தான் பாயாசம். அதில்லாமல் நண்பர்களின் விருப்ப பட்டியலில் நண்டு ரசமும் ஒன்று !!! ஆறேழு பெரிய நண்டுகளை எடுத்து அதையும் சுத்தம் செய்து வாங்கியாச்சு. மாங்காய், முருங்கைகாய் போட்டு மீன் ஆணம் சமைக்க வேண்டுமென ரொம்ப நாட்களாக நினைத்துக்கொண்டிருந்தேன். மீன் வாங்கிவிட்டு வரும் வழியில் காய்கறி சந்தையில் மாங்காயும் முருங்கைகாயும் வாங்கிட்டு வந்தாச்சு... மாங்காயின் பச்சை வாசத்தை நுகர்கையிலேயே குடலில் சிட்ரிக் அமிலம் சிறகடிக்கிறது... வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு எல்லாவற்றையும் இலேசாக வதக்கி அதோடு ஊர் மசாலா சேர்த்து இறக்கியாச்சு. ஆறியதும் அதனை மையாக அரைத்து வைத்தாச்சு. அடுத்து பாறை மீனின் இளஞ்சிவப்பு துண்டுகளுக்கு மசாலா தடவணும்.. வத்தத்தூள், மஞ்சள் தூள், சிக்கன் 65 மசாலா , பொடிப்பொடியாக வெட்டிய கறிவேற்பிலை, உப்பு , எண்ணெய் சேர்த்து விரவும் போதே அம்புட்டு வாசம். மசாலா தடவியதும் மீன் துண்டுகளின் அழகு கூடிவிட்டது. எண்ணெய்யில் குளிப்பதற்கு முன் சிறிது நேரம் மசாலாவை கிரகித்துக் கொள்வதற்காக மீனை தொந்தரவு செய்யாமல் மூடி போட்டு வைத்தாச்சு. மசாலா தடவிய கைகளுக்கு பிரத்யேக வாசம் உண்டு. உணர்ந்தவர்கள் ஞானிகள் !! இரண்டு அடுப்புகளில் பாத்திரம் வைத்து ஒன்றில் மீன் ஆணத்திற்கும் மற்றொன்றில் நண்டு ரசத்திற்கும் தாளிப்பை தொடங்கியாச்சு.. கொஞ்சமா எண்ணெய் ஊற்றி வெங்காயம், நைத்து வைத்திருக்கும் பூண்டு, பச்சை மிளகாய் , கறிவேற்பிலை மற்றும் தக்காளியை போட்டு வதக்கி பின்னர் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிளகு தூள் , ஜீரக தூள் சேர்த்து கொதிக்க விட்டாச்சு. நண்டு சாப்பிடாத நண்பர்களுக்காக கொதித்த மிளகு ரசத்தை தனியாக ஒரு கிண்ணியில் எடுத்து வைத்து விட்டு பின்னர் நண்டை உள்ளே இறக்கி உப்பு சேர்த்து 10 நிமிடங்களுக்கு கொதிக்க விட்டு இறக்கியதும் நண்டு ரசம் ரெடி.. இறக்குவத்ற்கு முன் உப்பும் கொத்தமல்லி இலையும் சேர்த்தாச்சு... வழிநெடுக காட்டு மல்லி வாசம் போல, அடுக்களை தாண்டி அறை முழுவதும் நண்டு ரசம் வாசம் தான்.. உப்புக்காரம் பார்க்கையில் உள்ளே சென்ற ரசம் பசிக்கு பச்சை விளக்கு காட்டி விட்டது. நண்டு ரசத்திற்கு நாக்கின் சுவையூக்கிகளையும் மூக்கின் நுகர் உணர்விகளையும் கிளர்த்தெழ செய்யும் அற்புதமான சக்தி இருக்கிறது. ஆம் அதுவரை அடைத்திருந்த மூக்கு திறந்து விட்டது... இன்னொரு சட்டியில் சிறிது எண்ணெய் சேர்த்து வெந்தயம், பாதி வெங்காயம், பாதி தக்காளி, நாலு பல் பூண்டு சேர்த்து இலேசாக வதக்கி அரை கரண்டி வத்தல் தூள் சேர்த்து இரண்டு தடவை அங்கேயிங்கேன்னு ஆப்பையை சட்டிக்குள்ள ஆட்டிட்டு, அரைத்து வைத்த மசாலாவை சேர்த்தாச்சு. இலேசாக கொதித்ததும் வெட்டி வைத்த மாங்காய் துண்டுகளையும் முருங்கைகாயையும் சேர்த்து கொதித்ததும் மீன் சாப்பிடாதவர்களுக்கு ஆனத்தை எடுத்து விட்டு மீனை ஆணத்தில் இறக்கி விட்டேன்.. மீன் சேர்த்ததும் ஆனத்தின் வாசமும் சுவையும் இரட்டிப்பாக மாறி விட்டது. ஆணம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது பாறை எனும் கடல் அழகி. ஆனம் கொதிக்கையில் சமையற்கட்டு முழுவதும் அம்புட்டு வாசம். எண்ணெய் பிரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து மூடி போட்டாச்சு. மீன் சால்னாவிற்கு சுடுசோறு தான் பெஸ்ட் காம்போ. ஆனால் இரவில் சோறு சாப்பிடுவதில்லை என்பதால், சப்பாத்தியும் மீன் சால்னாவும் சாப்பிட்டேன். ஒரு புடி சப்பாத்தி ஒரு மிடரு நண்டு ரசம் !!! ப்பா சரியான ஜோடி ... நண்டு ரசம் தொண்டையை கடக்கையிலேயே சளி எல்லாம் பெட்டி படுக்கையோடு வெளியேற காத்திருக்கிறது. மிளகு காரத்தில் மூக்கு, நெற்றி எல்லாம் வியர்வையில் குளிக்கிறது. சுடுசோறு + மீன் ஆனம் + நண்டு ரசம் + பொரித்த மீன் வைத்து சாப்பிட்ட நண்பன் சொன்னான், மச்சி நைஸ்டா.. You done a Good Job.. You stole my heart ❤️" வயிறு மட்டுமில்லை மனதும் நிறைந்து விட்டது... அல்ஹம்துலில்லாஹ் அபு பர்ஹானா Voir moins......!
-
களைத்த மனசு களிப்புற ......!
சிடான் பிரான்சின் பயிற்றுவிப்பாளராய் பங்கேற்று முதலாவது விளையாட்டு பிரான்சிக்கும் துருக்கிக்கும் நடந்தது . ..... அதில் பிரான்ஸ் - 01....... 00 துருக்கி ......! அந்த ஒரு கோலும் எம்பாப்பே அடித்தார் .........! 👍
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : பி. பீ . ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : ஆண்டொன்று போனால் பெண் : வயதொன்று போகும் ஆண் : அதற்கு முன்னாலே இருவர் : வா வா வா வா பெண் : அழகுடன் இளமை ஆண் : தொடர்ந்து வராது இருவர் : இருக்கின்ற போதே வா வா வா ஆண் : {வாலிபம் என்பது தோட்டம் வண்ண மலர்களின் கூட்டம் வாடிய பின்னே மலராது பெண் : கண்களில் பொங்கும் வெள்ளம் கலகலவென்னும் உள்ளம் அடங்கிய பின்னே ஆடாது} (2) பெண் : {என்னென்ன இன்பம் எங்கெங்கு உண்டோ அங்கங்கு செல்வோம் வா வா வா ஆண் : இரவென்ற ஊரில் உறவென்ற தேரில் துயில் கொண்டு வாழ்வோம் வா வா வா} (2)......! ...... ஆண்டொன்று போனால் .......
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆண்டொன்று போனால் ....... போலீஸ்காரன் மகள் ....... பாலாஜி & சகுந்தலா ......! 😍
-
குட்டிக் கதைகள்.
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 Sarathkumar Dhanlakshmi ·14 septembre à 15:56 · ஸ்காட்லாந்தில் ஒரு மிக எளிய யோசனை, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களின் பயன்பாட்டைக் குறைத்து வருகிறது. மக்களுக்குத் தேவையான இடத்திலேயே இலவசமாக குடிநீரை வழங்குவது! 💧" 2018ஆம் ஆண்டு முதல், நாட்டின் குடிநீர் விநியோகத்துக்குப் பொறுப்பான பொதுத்துறை நிறுவனமான Scottish Water, மக்கள் அதிகம் கூடும் தெருக்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் “Top Up Taps” எனப்படும் குடிநீர் குழாய்களை நிறுவத் தொடங்கியது. இதன் செயல்பாடு மிகவும் எளிமையானது. மக்கள் தங்களுடைய மறுபயன்பாட்டு தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டு, அருகிலுள்ள இந்தக் குடிநீர் குழாயைத் தேடி, இலவசமாக சுத்தமான குடிநீரை நிரப்பிக்கொள்ளலாம். ஆப் தேவையில்லை. பதிவு செய்ய வேண்டியதில்லை. தாகம் எடுத்தவுடன் புதிதாக ஒரு பிளாஸ்டிக் பாட்டில் வாங்க வேண்டிய அவசியமும் இல்லை. ♻️" இந்த முயற்சி மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு நேரடியான பதிலாக உருவானது. உலகம் முழுவதும் தினமும் கோடிக்கணக்கான பிளாஸ்டிக் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. அவற்றில் கணிசமான அளவு குப்பைக் கிடங்குகள், ஆறுகள் அல்லது கடல்களில் சென்று சேர்கின்றன. 🌊" பிளாஸ்டிக் குப்பையாக மாறிய பிறகு அதைச் சமாளிப்பதற்குப் பதிலாக, அந்த பாட்டிலையே மக்கள் வாங்க வேண்டிய தேவையை ஆரம்பத்திலேயே குறைக்க வேண்டும் என்பதுதான் ஸ்காட்லாந்தின் அணுகுமுறை. பல ஆண்டுகளாக இந்தக் குடிநீர் குழாய்களின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 132 பொது இடங்களில் இவை உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, இதுவரை சுமார் 2 கோடி ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு இணையான பயன்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது. 🌱" இந்த முயற்சியை சுவாரஸ்யமாக்குவது அதன் எளிமைதான். புரட்சிகரமான புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க வேண்டியதில்லை. இலவசமான குடிநீரை மக்கள் எளிதாகப் பெறக்கூடிய இடத்தில் கிடைக்கச் செய்தாலே போதும். சில நேரங்களில் மிகப்பெரிய பிரச்சினைகளுக்கான தீர்வு சிக்கலானதாக இருக்க வேண்டியதில்லை. சரியான இடத்தில் வைக்கப்பட்ட ஒரு குடிநீர் குழாயிலிருந்தே அந்த மாற்றம் தொடங்கலாம். 💧" object-fit: fill;"> #PlasticFree #Sustainability #CleanWater— en pleine forme, à Inde. Voir moins..........!
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
- இனித்திடும் இனிய தமிழே....!
- ஏட்டிடை எழுத…….. வா 😜
கனகாலத்துக்கு பின் நல்லதொரு குட்டிக் கவிதையுடன் வந்திருக்கிறீர்கள் ....... மிக்க மகிழ்ச்சி ...........! 😂- உணவு செய்முறையை ரசிப்போம் !
ப்ரோக்கோலியை இப்படி செய்து சாப்பிட்டுப் பாருங்கள் ....... செமையா இருக்கும் ...........! 😂- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
- குட்டிக் கதைகள்.
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 கு.மயூரன் கு.மயூரன் ·il y a 5 jours5 j · 1884 ஆண்டு நம் நாட்டில் கடுமையான பஞ்சம். பட்டினி சாவு சுமார் 50 லட்சத்தை தாண்டியது. பசியால் எலும்பும் தோலுமாக மாறிவிட்ட குழந்தைகளுக்கு ஒருவேளை கூட சாப்பாடு இல்லாத நிலைமை..!! அதனால், அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்தவ அமைப்புகள் நமக்கு மருத்துவ சிகிச்சை, உணவு தருவதற்காக கப்பலில் இந்தியா வந்தன. அப்படி நம்முடைய ராணிப்பேட்டைக்கு வந்தவர்தான் டாக்டர் ஜான். இவரது 14 வயது மகள் ஐடா ஸ்கடர்..! ஒரு நாள் இரவு கதவு தட்டப்படுகிறது. ஐடா கதவை திறக்கிறார். ஒரு பிராமணர் நின்று கொண்டிருந்தார். "அம்மா, என் மனைவி பிரசவ வலியால் துடிக்கிறாள்... உதவி வேணும் உடனே வாங்க" என்று பதறுகிறார்..! ஐடாவோ, "நான் டாக்டர் இல்ல என் அப்பாதான் டாக்டர், கொஞ்சம் இருங்க அவரை எழுப்பறேன்" என்கிறார். "இல்லம்மா. என் மனைவிக்கு 14 வயசு தான் ஆகுது. நாங்க பிராமணாளுங்க பெண்ணை ஒரு ஆம்பள தொட அனுமதி இல்லை" என்று சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். கொஞ்ச நேரத்தில் ஒரு முஸ்லிம் நபர் கதவை தட்டுகிறார். மனைவிக்கு பிரவச வலி என்பதால் உடனே வருமாறு அழைத்தார். ஐடா தன் தந்தையை பற்றிக்கூற, "வேண்டாம்மா... நாங்கள் இஸ்லாமியர்கள்... எங்க வீட்டு பொண்ணை ஆண்கள் பார்க்கவே கூடாது" என்று அவரும் சோகத்துடனே திரும்பிவிடுகிறார். அந்த பெண்களுக்கு என்ன ஆச்சோ என்று இரவெல்லாம் பதட்டத்துடன் துடித்து பதறுகிறாள் ஐடா... மறுநாள் காலை அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள், தன் வீட்டை கடந்து கொண்டு செல்லப்படுவதை பார்த்து அதிர்ந்து போய், தேம்பி தேம்பி அழுகிறாள் ஐடா. "என்ன தேசமிது? பெண்களை படிக்க வைக்க மாட்டாங்களாம், ஆனால் பெண்ணுக்கு பெண்தான் பிரசவம் பார்க்க வேண்டுமாம்? இந்த நாட்டில் பெண்களை படிக்கவிடவில்லை என்றால் என்ன, நான் படித்துவிட்டு வந்து இந்த பெண்களை காப்பாற்றுவேன்" என சபதமேற்று அமெரிக்கா சென்று படிக்கிறார். டாக்டராகிறார்..! இதனிடையே, சக நண்பர் ஒருவர் ஐடாவை காதலிக்கிறார். ஆனால் ஐடா அந்த காதலை நிராகரிக்கிறார். மருத்துவம் படித்து முடித்ததுமே அமெரிக்காவிலேயே நல்ல வேலை வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஐடா அதையும் நிராகரிக்கிறார். தமிழகத்தில் இறந்து போன அந்த கர்ப்பிணிகளின் சடலங்கள் மட்டுமே அவர் கண்முன் வந்து வந்து போயின..!! ஆனால், வெறும் படிப்பை மட்டும் வைத்துக் கொண்டு எவ்வளவு பேரை தமிழ்நாட்டில் காப்பாற்ற முடியும் என்று நினைத்து, ஒரு ஆஸ்பத்திரி தேவை என்பதை உணர்கிறார். பல நாடுகளில் இந்தியாவின் அவலத்தை சொல்லி பிச்சை எடுக்காத குறையாக, நிதி உதவி கேட்கிறார். ஓரளவு நிதியும் சேர்கிறது...! இனி ஒரு கர்ப்பிணியைகூட சாக விடமாட்டேன் என்ற உறுதியுடன் 1900-ம் ஆண்டு, ஜனவரி மாதம், தமிழகத்தில் மீண்டும் கால் பதிக்கிறார் ஐடா. ஆஸ்பத்திரி கட்டும் பணியை ஆரம்பிக்கிறார். படாதபாடு பட்டு, இறுதியில் 40 படுக்கை வசதியுடன் அந்த மருத்துவமனை ஒருவழியாய் கட்டி முடிக்கப்பட்டு விட்டது. பெண்ணுரிமை என்ற பேச்சுக்கே இடமில்லாத நேரத்தில், பெண்களுக்காகவே ஒரு மருத்துவமனையையே கட்டி முடித்தார் இளம்பெண் ஐடா! அதுதான் ஆசியாவிலேயே தனிப்பெருமை வாய்ந்து. நூற்றாண்டையும் கடந்து இன்றும் பிரம்மாண்டமாய் நிற்கும் வேலூர் "சிஎம்சி" ஆஸ்பத்திரி! ஐடாவின் பணி இத்துடன் முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக் கதவையும் தட்டி, உங்கள் வீட்டு இளம்பெண் பிள்ளைகளை படிக்க அனுப்புங்கள் என்று கெஞ்சி கூத்தாடினார். இறுதியில் 5 இளம்பெண்களை மட்டுமே அவரால் திரட்ட முடிந்தது. அவர்களுக்கு மருத்துவ பயிற்சி தந்து, முறைப்படி தேர்வு எழுதி, தேர்ச்சியும் பெற வைத்தார் ஐடா..! இவர்கள் தான் நம் தமிழகத்தின் முதல் 5 நர்ஸ்கள்..! நம்முடைய பெண்கள் மருத்துவம் படிக்க விதை போட்டதே, இந்த ஐடா தான் என்பதை எத்தனை பேர் நன்றியுடன் இன்று நினைத்து பார்க்கிறார்களோ தெரியவில்லை..! ஆனால், யார் இந்த பெண்? இவர் ஏன் நமக்காக அழுதார்? இவர் ஏன் நமக்காக உருகினார்? இவர் ஏன் நமக்காகவே கடைசிவரை வாழ்ந்தார்? எங்கேயோ பிறந்து, எங்கேயோ வளர்ந்து, நம் தமிழ்நாட்டுக்காக, தன் வாழ்க்கையையே மொத்தமாக அர்ப்பணித்த ஐடா, அன்னை தெரசாவுக்கே "வழிகாட்டி" என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?!! ஆனால், ஒரு பெண் தனி ஆளாக நின்று ஏற்றிய மெழுகுவர்த்தி, இன்று பிரகாசமாக, உலகத் தரத்தோடு, வேலூரில் இன்னமும் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உயிர் தந்து கொண்டுமிருக்கிறது..! Voir moins.......!- இரசித்த.... புகைப்படங்கள்.
- கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
ஊரில எல்லாவற்றிற்கும் நாலுபேர் நாலுவிதமாய் சொல்லுவார்கள்தான், அதைக் கணக்கில் எடுக்காமல் நீங்கள் தனிவழியில் செல்லுங்கள் .......! 😂- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : எஸ் ஐ லவ் திஸ் இடியட் ஐ லவ் திஸ் லவ்வபில் இடியட் ஆண் : காதல் கவிதைகள் படித்திடும் நேரம் இதழோரம் இனி காமன் கலைகளில் பிறந்திடும் ராகம் புது மோகம் இதயம் இடம் மாறும் இளமை பரிமாறும் அமுதும் வழிந்தோடும் அழகில் கலந்தாட ஆண் : கை வீசிடும் தென்றல் கண் மூடிடும் மின்னல் இது கனியோ கவியோ அமுதோ சிலையழகோ பெண் : பண்பாடிடும் சந்தம் உன் நாவினில் சிந்தும் அது மழையோ புனலோ நதியோ கலையழகோ ஆண் : மேகம் ஒன்று நேரில் இங்கு வாழ்த்த வந்ததடி தாகம் கொண்ட பூமி நெஞ்சில் சேர்த்துக்கொண்டதடி பெண் : இது தொடரும் வளரும் மலரும் இனி கனவும் நினைவும் உனையே பெண் : பூமாலைகள் கொஞ்சும் பாமாலைகள் கெஞ்சும் உனை மனதால் நினைத்தால் அணைத்தால் அது இனிமை ஆண் : தோள் சேர்ந்திடும் கங்கை செவ்வாழையின் தங்கை எனை ஒரு நாள் பல நாள் தொடர்ந்தாள் அது புதுமை பெண் : கோவிலுக்குள் ஏற்றி வைத்த தீபம் அல்லவோ காதலுக்கு காத்திருந்து காட்சி தந்ததோ ஆண் : இனி வருவாய் தருவாய் மலர்வாய் எனை உயிராய் உறவாய் தொடர்வாய் .........! ........ இதம் தரும் காதல் கவிதைகள் ........ - இனித்திடும் இனிய தமிழே....!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.