Everything posted by நன்னிச் சோழன்
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
//You can say thousand things, in Jaffna, Aruchuna is the Northern provicial primeminister favourite.// Rajalingam Janahan ஊர்காவற்துறையைச் சேர்ந்த புளட் உறுப்பினர்
-
யாழில். அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தில்
எனக்கு விளங்கேலை... சுமந்திரனையே சொல்லுறியள்?
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
பொன். ராமநாதன் .... லக்ஸ்மன் கதிர்காமர்.... எம். ஏ. சுமந்திரன்.... அருச்சுனா ராமச்சந்திரன்.... எல்லாம் படித்தவர்கள். படித்த மேட்டுக்குடி எனப்படுவோரால் மட்டும் தான் இனத்திற்கு கோடாரிக்காம்புகளாகவும் புல்லுருவிகளாகவும் வாழ முடியும் என்ற கருத்தை நூற்றாண்டுகள் கடந்தும் நிலைநிறுத்துகின்றனர். இந்த கழுத்தறுப்புகளை தொடக்கிவைத்த பொன். ராமநாதன் செய்த நாச வேலைகளில் முதன்மையானது தமிழர் - சோனகர்களை பிளவுபடுத்தியமையாகும். பொன். ராமநாதன் என்ற ஈனத்தமிழன் வாக்கிற்காக மட்டும் தான் சோனகர்களை தமிழர்கள் என்று தான் கூறிவருகின்றேன் என்பதை பிரித்தானியா சென்று முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் மிண்டிய சிங்களவரை விடுவித்தன் மூலம் நிரூபித்தான். இதனால் தமிழரும் சோனகரும் வேறுபட்டவர்கள் என்ற அப்போதைய தென்னிலங்கை சோனகர்களின் கொள்கை சரியென்று நிரூபிக்கப்பட்டது. சோனகர்களை தமிழர்கள் என்று கூறிய இவனின் நாறல்வாய் அக்கருத்தை இவனின் மனதிலிருந்து தெரிவித்திருந்தால், எதிர்காலம் பற்றி அன்று ஒரு கணம் சிந்தித்திருந்தால், சிங்களவரை விடுவிக்க பிரித்தானியா சென்றிருக்க மாட்டான். ஒருவேளை முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேசி அந்த சிங்களவரை சிறைக்குள் அடைத்திருந்தால் வரலாறு மாறியிருக்கும். எனினும் அன்றைய சாதியவாத மேட்டுக்குடி சிந்தனையால் கவரப்பட்டிருந்த பொன். ராமநாதன் தனது மேட்டுக்குடிக்கு ஆதரவாக கொவி சிங்களவரை காப்பாற்றி இனத்தை பிளவுபடுத்தினான். முஸ்லிம்கள் மனதில் வெறுப்பை விதைத்தான். இந்த செயலால் (பின்னாளைய) தமிழீழ ஆட்புலத்திற்குள் வாழ்ந்த சோனகரும் தமிழரும் அரசியல் வழிவகையில் பிளவுபட்டு முதலாவதாக வேற்றுமையாக உணர்ந்தனர். அத்துடன் தென்னிலங்கை சோனகரின் 'முஸ்லிம்கள் தனித்த இனம்' -சோனகர்கள் - என்ற கருத்துக்குள் உள்வாங்கப்பட்டனர். அதுவரை காலமும் தோல் நிறம் மற்றும் முக சாயல் அடிப்படையில் தென்னிலங்கை முஸ்லிம்கள் மட்டுமே தனி இனம் என்ற கருத்தை தாமாகவே முன்வைத்திருந்தனர் தென். முஸ்லிம்கள். அத்தோடு வடகிழக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் தமிழர்கள் என்ற கருத்தையும் தென்னிலங்கை முஸ்லிம்கள் முன்வைத்தனர். இந்த நிலை மாறத்தொடங்கியது, இந்த ராமநாதன் என்ற கோடாரிக்காம்பின் ஈனச்செயலால்! இதே போன்றுதான் இன்றைய அருச்சுனா ராமநாதனும் பிரதேசவாதத்தை ஏவல்செய்து மலையக தமிழரை கீழ்க்குடி என்ற கருத்துப்பட விளித்தான். சோனகர்களையும் கேவலமாக அழைத்தான். இன்று திறந்ததாக சிங்களவரோடு கைகோர்த்து தமிழரை கீழே தள்ளிவிழுத்தி விட்டான். ஆயினும் தொடர்ந்தும் சாவகச்சேரி அன்ரிமாரும் சாதிவாதிகளும் இவனுக்கு ஆதரவளிப்பினம் என்று நம்புகிறேன் 😜 வரலாறு நீள்கிறது... ஈழத்தமிழரோ திருந்தவில்லை!
-
யாழில். அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதத்தில்
நாப்பதுபேர் தான் இப்பெல்லாம் "மாபெரும்" என்ற சொல்லின் பொருளாம்
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
அதே போன்று முஸ்லிம் ஆக்கள் வெற்றி பெற்று விட்டு பிற கட்சிகளுக்கு தாவியபோது "தொப்பி பிரட்டிகள்" என்று விளிக்கப்பட்டனர் என்பது வரலாறு. தரமான கேலி ஓவியம்
-
சத்துருக்கொண்டான் படுகொலை: இராணுவ முகாமில் அகழ்வாய்வு நடத்த மாநகரசபையில் தீர்மானம்!
இப்படுகொலையினை முஸ்லிம் ஊர்காவல் படையினர் சிங்களப் படையினரோடு இணைந்து மேற்கொண்டனர்.
-
கிழக்கில் 350 முஸ்லிம்கள் பொலிஸாரினால் கைது | பழைய செய்தி ஆவணக்காப்பிற்காய்
அது யாழை தலைமையாகக் கொண்டு வெளியான எந்தவொரு நாளேடுகளிலும் (ஈழநாதம், உதயன், ஈழநாடு) செய்தியாக்கப்படவில்லை. என்னைப் பொறுத்தவரை, அதுவொரு கருப்பான நிகழ்வு என்பதை புலிகள் அப்போதே உணர்ந்தமையாலோ என்னவோ எதிர்காலத்திற்கு அதையொரு செய்தியாக விட்டுச் செல்லாமல், வரலாற்றில் இருந்து மறைக்கவே, நாளேடுகளில் செய்தியாக்காமல் புலிகள் தடுத்திருக்கலாம் என்று எண்ணுகிறேன்.
-
கிழக்கில் 350 முஸ்லிம்கள் பொலிஸாரினால் கைது | பழைய செய்தி ஆவணக்காப்பிற்காய்
மூலம்: உதயன் 16 - 3 - 1992 மட்டக்களப்பு, மார்ச் 16 மன்னம்பிட்டிப் பகுதியில் புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வந்த 350 முஸ்லிம்கள் பொலன்னறுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். ஏறாவூரைச் சேர்ந்த இந்த முஸ்லிம்கள் பல வருட காலமாக மன்னம்பிட்டிப் பகுதியில் வாடி அமைத்து புகையிலைச் செய்கையில் ஈடுபட்டு வந்தனர் என்றும் — சில தினங்களுக்கு முன்னர் இவர்களைச் சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேகத்தின் பேரில் 350 பேரை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்றும் — அறிய வருகின்றது. இவர்களை விடுவிக்க நீதி, உயர்கல்வி அமைச்சர் ஏ.சி.எஸ். ஹமீட், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம். எச். எம் அஷ்ரப் ஆகியோர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். [த-122]
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
"முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ நாமல் ராஜபக்ச போன்ற இளைஞர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வரவேண்டும்" மு.கா. தலைவர் ரவூப் ஹக்கிம்...🤔🫣
-
தமிழ் போராட்டமும் அரசியலும் ஏன் தோல்வியடைகிறது? வடக்கு கிழக்கை ஆளும் அரசுகள் வீழ்த்தும் தந்திரமும் இதுதான்! | குணா. கவியழகன்
இதில் குணா கவியழகன் ஆளும் சிங்கள அரசுகள் எவ்வாறு தமிழர் தாயகத்தை தொடர்ந்து தென்னிலங்கை மீது சார்ந்திருக்கும் அதே நேரம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருக்கும் மாகாணமாக வைத்திருக்கிறது என்பதை எடுத்தியம்புகிறார்.
-
முல்/ புதுக்குடியிருப்பிலிருந்த இந்தியப்படை தொடர்பான கேலி சுவரோவியம்
தகவல் வழங்குநர்: உறவினர் எழுத்தாளர்: நன்னிச்சோழன் இது 1990 ம் ஆண்டு காலப்பகுதி. புலிகளை அழிக்கவென வந்த இந்தியப் படையோ தமிழ் பெண்களின் கற்புகளை வீடுவீடாக தேடி அறுவடை செய்துகொண்டிருந்த நாளாந்த செயற்பாடுகள் மெள்ள மெள்ள குறைந்துகொண்டிருந்தன. இருந்தபோதிலும் இந்தியப்படையினர் செய்த பெரும் கொடூரங்களும் குலை நடுங்கும் அட்டூழியங்களும் தமிழ்- சோனக மக்களின் மனதிலும் ஈழமண்ணிலும் எங்கும் பரந்திருந்தன. அதே சமயம் இந்தியப்படையினர் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக்கொண்டிருந்தனர். வெளியேறும் இந்தியர்களை நக்கலடிக்கும் விதமாக புதுக்குடியிருப்புச் சந்தியில் சுவரோவியம் ஒன்றை புலிவீரர்கள் வரைந்திருந்தனர். அச்சந்தியிலிருந்த மதில் ஒன்றின் நடுப்பகுதி எறிகணை வீச்சில் உடைந்திருந்தது. அந்த பிளவின் துணையோடு மதிலை இருபிரிவாகக்கொண்டு ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. கையில் கிடைத்த நிறங்களால் தீட்டப்பட்டிருந்த ஓவியத்தின் ஒருபகுதியில் கனவகை ஆயுதங்களுடன் இந்தியப்படையினர் ஈழமண்ணில் வந்திறங்குவது போன்றும் மற்றொரு பகுதியில் அவர்கள் வெளியேறுவது போன்றும் இருந்தது. இதில் கவனிக்கத்தக்கப் பகுதி அந்த வெளியேறும் இந்தியப்படையினர் தொடர்பான கேலி ஓவியமேயாகும். அதில் வெளியேறும் இந்தியப்படையினரில் சிலர் கால்களின்றி கைகளில் கிளர்ச்சஸோடும் (clutches) சிலர் தலையில் தமிழ் மக்களின் வீடுகளில் கொள்ளையடித்த தொலைக்காட்சிகள், ரங்குப்பெட்டிகளோடு செல்வது போன்றும் வரையப்பட்டிருந்தது. இரவோடு இரவாக மக்களின் கண்ணில் படாமல் வரையப்பட்டிருந்த இந்த சுவரோவியத்தை அடுத்தநாள் காலை அவ்வழியே வெளியேறிச் சென்ற இந்தியப் படையினர் பார்த்தபடி சென்றதாக எனது உறவினர் நினைவுகூர்ந்தார். கேலியான இந்த சுவரோவியத்தின் படிமம் எங்கும் கிடைக்கப்பெறவில்லை.
-
இலங்கை சோனகர்களை தனி இனக்குழுவாக ஏற்று உடன்படிக்கையில் ஒப்பமிட்டனர் புலிகள் | 1988 ஏப்ரல்
வாசகர்களே, இந்த உடன்படிக்கையினை தமிழர்களின் நிகராளிகளான புலிகளுடன் போட்ட பதியுதீன் மஃக்மூது தான் 1970 களில் பல்கலைக்கழக சார் தரப்படுத்தலை கொண்டுவந்தவர். இந்த தரப்படுத்தலானது பௌத்த- சிங்கள பேரினவாதத்தின் திட்டமாக இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியது சோனக இனத்தைச் சேர்ந்த, தென்னிலங்கை முஸ்லிமான, இவரே ஆவார். தமிழர்களிடமிருந்து பிறிம்பானதும் அதே நேரம் மற்றொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவனுமான இவன் தமிழ் குமுகாயத்தின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியதும் தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கிய தார்மீக பொறுப்பையும் தன்தலைமீது சூடிக்கொண்டார். இது எவ்வகையிலும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
அருச்சுனாவின் Facebook பக்கத்தில் வரும் ஆதரவு கனமாக உள்ளது. அது வாக்காக மாறலாம்
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
அந்த இளந்தாரி ஆண்களில் ஒருவரின் பெயர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாம். அன்னாரின் பெயர் அட்டாளைச்சேனையை சேர்ந்த றிஃவ்கான் என்பதாகும் ... யாஅல்லாஹ்!! (Facebook இல் கண்ட தகவல்) ஓம் புராணக் கதைகளில் கறுப்பு ஜூலை வருகிறது...
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
மட்டுமல்லாது கொழும்பைச் சேர்ந்த சில தமிழ் பெண்களும் (சொறி, தெமில சுந்தரி) இளந்தாரி ஆண்களும் (2 பேர் கண்டேன்) நாமலுக்கு ஆதரவாக இரவிரவாக குரல் எழுப்புகின்றனர்... 83 மாதிரி ஒரு கலவரம் வந்தால் இந்த தெமில சுந்தரிகள் எல்லாம் நாசமாக்கப்பட்டு தெருத்தெருவாக ஆடையற்று கிடப்பினம் என்பது கடந்தகால வரலாற்றில் இருந்து கற்றுக்கொண்ட அனுபவங்கள் .... கொழும்பு வன் நேசன் காரர் திருந்தாயினம்.... வடக்கில என்னென்ன கூத்து நடக்க போகுதோ...
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
மாண்புமிகு நாமல் அவர்கள் (ﷺ/peace be upon him) எதிர்வரும் 12 ம் திகதி அநுராதபுரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டிருந்தார். அதை நடாத்தவிடாமல் அதிபர் அநுரா கைது செய்துவிட்டார் என்று சிங்கள இனவாத கணக்குகள் கொக்கரிக்கின்றன. கைதை தோப்பூரை சேர்ந்த சோனகர்கள் ஒன்றுகூடி ஒரு காணொளி வெளியிட்டு எதிர்த்துள்ளனர். அதில் 2029 இல் நிச்சயம் அன்னாரை அதிபர் ஆக்குவோம் என்று உறுதிபூண்டுள்ளனர். போதாக்குறைக்கு ஆமத்துறு ஒன்றும் நடுவில் பிள்ளையார் போன்று அமர்ந்திருந்தது😉 குறிப்பிடத்தக்கது. நாமலின் அதே நாளில் "சின்னக்கதிர்காமர்" என்று மக்களால் பாசமாக 😜அழைக்கப்படும் சுமந்திரன் என்ற கோடாரிக்காம்பின் அல்லக்கையான சின்னராசா லோகேஸ்வரனும் ஒரு அடையாள உண்ணாவிரதத்தை வடக்கில் நடாத்த உள்ளதாக தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்!!!! சிங்களவனும் சின்னக்கதிர்காமரும் என்றுமே ஒன்றுதான்....
-
நாமல் ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது
நாமல் கைதுக்கு இனத்தின் கோடாரிக் காம்புகளில் ஒன்றான அருச்சுனா நேரடியாக சிறைக்கே சென்று சந்தித்தாராம்!
-
விமர்சனம்: தமிழீழக் குறும்படங்கள்
தாயகக்கனவு (குறும்படம்) - ஒரு ரசனைப் பகிர்வு தமிழீழத்தின் இன்றைய சூழலில் 'வீடியோ' என்ற சாதனத்தின் மூலமான கலையாக்க முயற்சிகள் ஆரம்ப நிலையினின்றும் முன்னோக்கித் தொடருதலை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. இரண்டாம் கட்ட ஈழப்போரின் பின்பு 'இனியொரு விதி' என்ற குறும்படத்துடன் ஆரம்பமான இந்த 'வீடியோ' சாதனத்தூடான எமது கலை முயற்சிகள் ‘தமிழோசை', 'இது எங்கள் தேசம்' எனத் தொடர்ந்து, இப்பொழுது 'தாயகக் கனவு’ வரை வந்துள்ளது. (கண்ணீர் என்ற குறும்படமும் பார்க்கக் கிடைத்தது. அதனை இன்னொரு சந்தர்ப்பத்தில் நோக்கலாம்.) 'தாயகக் கனவு' கிட்டத்தட்ட அரைமணி நேரம் கொண்டது. இது கரும்புலிகளின் இயல்புகள் மற்றும் நடவடிக்கைகள் என்ற அம்சங்களைச் சுட்டுகின்றது. இதனால் 'கரும்புலிகள்' பற்றிய எமது எண்ணங்களை இப்படம் ஒரு சரியான செல்திசையில் வைக்க முனைந்துள்ளது எனலாம். அவர்களின் வாழ்க்கை, அவர்களுடைய சிந்தனைகள், உணர்வுகள் என்பவற்றை அடிப்படையாக அல்லது வெளிப்படுத்துவதாக இப்படம் சித்திரிக்கிறது. சாதாரண குடும்பத்தின் ஒரு இளைஞன் எவ்விதம் போராட்டத்துடன் இணைந்து ஆயுதம் ஏந்துகிறான் என்பதையும், அவன் கரும்புலியாகி விடுவதையும் சூழ்நிலைக் காரணங்களை உணர்த்தி வெளிப்படுத்துகின்றது இப்படம். ஒரு நாள் குண்டுவீச்சு விமானங்கள் நடத்திய தாக்குதலினால் வீடுகள் இடிந்து மனிதர்கள் சிதறிப் பலியாகிறார்கள். இந்த இடத்தில் நெறியாளரின் காட்சிப்படுத்தல் திறனைப்பற்றிச் சுருக்கமாகக் குறிப்பிடுதல் பொருத்தமானது. தமிழீழத்தின் மீது நிகழ்த்தப்படும் கண்மூடித்தனமான இராணுவ நடத்தையை இந்தக் காட்சிப்படுத்தல் சிறப்பாக்கியுள்ளது. விமானங்கள் இரையும் போது ஆறுவயதிருக்கும் ஒரு பெண் பிள்ளையும், ஒரு வயோதிபப் பெண்ணும் பயத்தில் பரிதவிக்கும் காட்சி. பிள்ளை பதுங்குகின்றது. வயோதிபப் பெண் நின்றுகொண்டே தலையின்மேல் கைகூப்பி வணங்கியபடி தன் உயிருக்காக கடவுளை மன்றாடுகின்றாள். (இந்த முரண் தலைமுறை இடைவெளியையும் சுட்டுகின்றது.) ஆனால் இருவரும் பலியாகின்றார்கள். தாக்குதல் முடிந்ததும் இந்த இளைஞன் அந்த இடத்துக்கு ஓடிவருகின்றான். வந்து கண்ட அந்த நிகழ்வுகளின் பாதிப்பு அவனை மனஉந்துதற்படுத்தி போராட்டத்தில் இணைக்கின்றது. அவன் கரும்புலியாகி எதிரிகளின் முகாமை அழிக்கத் தன் தோழரிடம் விடைபெற்றுச் செல்லும்போதும். அந்த விமானத் தாக்குதலில் பலியான அந்தக் காட்சிகள்தான் அவன் நெஞ்சுக்குள் மிதந்து மிதந்து வருகின்றன. அந்தக் காட்சிகளின் நினைவு உக்கிரம் அவனை உறுதியுடனும், துணிவுடனும், ஆக்ரோஷத்துடனும் உந்தித் தள்ளுகின்றன. மக்களின் துயரங்களை நினைத்தபடியே ஒவ்வொரு போராளியும் மரணத்தைத் தழுவுகின்றான் என்பதை இது தெளிவாக்குகின்றது. கரும்புலிகளின் உறவு, அவர்கள் அடிக்கும் 'பம்பல்', அவர்களின் அன்பு, பிரிவுத்துயர், தேசப்பற்று, தலைமைத்துவ மதிப்பு, தலைவரின் மேல் அலாதியான ஈடுபாடு, ஒழுங்கு என்பனவற்றை உணர்த்தும் ஒவ்வொரு காட்சியும் படத்தில் இயல்போட்டமாகப் பொருந்தியுள்ளன. இரவு தாக்குதலுக்குப் போகவிருக்கும் கரும்புலியுடன் மற்றவர்களும் சேர்ந்து சாப்பிட இருக்கிறார்கள். அவன் எவ்வித சலனமுமின்றிச் சாப்பிடுகின்றான். மற்றவர்கள் அவனையே பார்த்தபடியே கண்ணீர் வடித்துத் துயரத்துடன் .. அவன் குறும்புத்தனமாக தன் தோழரை மறுபக்கம் புதினம் காட்டி முகம் திரும்ப வைத்துவிட்டு, அவர்களின் சாப்பாட்டில் அள்ளிக்கொள்கின்றான். மற்றவர்கள் - அவர்கள் கரும்புலிகளாக இருப்பினும் - கண்ணீர் சொரிந்தபடி இருத்தல், உறைந்திருக்கும் மௌனம் - இது ஓர் உருக்கமான காட்சி. இன்னொரு இடத்தில், தான் 'இரவு தாக்குதலுக்குச் செல்கின்றேன்' என்ற பின்பு தனது பாவனைப் பொருட்களை சக தோழரிடம் பகிர்ந்து கொடுக்கும் இடம்; தோழர்கள் வரிசையாக - மௌனமாகத் துயருடன் நிற்கிறார்கள். அவன் தன்னுடைய பொருட்களை ஒவ்வொருவருக்கும் பகிர்ந்து அவர்களின் தோளின்மேல் போட்டபடி வருதல். பொருட்கள் முடிகின்றன. பை (Bag) மட்டும் எஞ்சுகின்றது. அதனையும் ஒரு தோழனின் கழுத்தில் மாட்டிவிடுகின்றான். இன்னொரு தோழனுக்கு எதுவுமில்லை. அவனுக்குத் தான் மிகப் பிரியமாக வைத்திருந்த (Mouth Organ) இசைக்கருவியை இறுதியாக ஒரு தரம் ஊதிவிட்டுக் கொடுக்கின்றான். அந்தப் போராளி குனிந்தபடி விழிநீர் சொரிய முந்திய சம்பவத்தை நினைக்கின்றான். முன்னர் அந்த இசைக்கருவிக்காக இருவரும் அடிபட்டுக் கொண்டதை நினைவோட்டத்தில் காட்டப்படுகின்றது. இந்த இடங்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளன. இப்படத்தில் புதுவை இரத்தினதுரையின் இரண்டு பாடல்கள் கரும்புலிகளின் உணர்வுகளைச் சொல்லுகின்றன. இசையும் படத்தொகுப்பும் முன்னர் வந்த படங்களினின்றும் சில அனுபவ முதிர்வினைக் கொண்டுள்ளன. 'தமிழோசை' படத்தை நெறியாள்கை செய்தவரும், 'இது எங்கள் தேசம்' படத்தின் நெறியாள்கையில் இணைந்தவருமான பொ. தாசன் இப்படத்தை நெறிப்படுத்தியுள்ளார். அந்தப் படங்களினின்றும் இக்குறும்படம் உரையாடல், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என்ற அம்சங்களில். முன்னேற்றமடைந்துள்ளது எனக் கூறலாம். போராளிகளுடன் ஏனைய கலைஞர்களும் இணைந்து இதில் நடித்துள்ளனர். எனினும் இந்தப் படங்களைத் தொடர்ந்து அவதானிக்கும் பொழுது 'நாடக நடிகர்கள்' என அறியப்படுபவர்கள் (யதார்த்த விரோத நாடகப்பண்பு நடிகர்) கமெராவின் முன் நிற்கும்போதும் நாடகத்தன்மையான நடிப்பு மற்றும் உரையாடல் என்பன வருவது தெரிகிறது. (இது ஆரம்பகால தென்னிந்திய தமிழ் சினிமாவிலும் காணப்பட்டது. அக்கால சினிமா நடிகர்கள் மேடை நாடக நடிகர்களாக இருந்ததனால்) ஆனால் போராளிகள் இயல்பாகச் செய்வதும் குறிப்பிடத்தக்கது. சேரலாதன், கணேஸ், செல்வராசா, மாதவன், கஸ்ரோ என்று பலருக்கு முகம் தெரிந்த போராளிகளே பாத்திரங்களாக்கப் பட்டிருப்பது 'கற்பனையல்ல இந்தக் கலைப் படைப்பு' என்ற உண்மையை உணரச் செய்கிறது. இது ஒரு யதார்த்தச் சித்திரிப்பு. விடுதலைப் புலிகள் கலை, பண்பாட்டுக் கழகம் 'கரும்புலிகள்' நாளையொட்டி இப்படத்தைத் தயாரித்துள்ளது. கரும்புலிகள் எமது போராட்டத்தில் ஒரு புதிய வடிவமான போருபாயம் என்று அறியப்பட்டுள்ளது. ஒவ்வொரு கரும்புலியும் ஒவ்வொரு சக்திமிக்க போராயுதம் என்பதை இப்படத்தைப் பார்க்கும் போது உணரமுடிகின்றது. தமிழீழக் கலையாக்க முயற்சியில் இன்னுமொரு புதிய பாய்ச்சல் 'தாயகக் கனவு'. இசை, பாடல், நடிப்பு, தொழில்நுட்பம் என்று கலை, இலக்கிய ஆக்கத்திறன்களில் இன்று போராளிகளும் முழுமை பெற்று எல்லாமுமாகின்ற வளர்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த வளர்முகத்தில் 'வீடியோ' என்ற சாதனத்திலும் சாதனைகள் நிகழ்கின்றன. - கருணாகரன் - தகவல் மூலம்: வெளிச்சம் இதழ் 1993.07 பக். 27-29
-
நாச்சிக்குடா பாடசாலை பெயர் மாற்ற விவகாரம் - ஆவணங்களை சமர்ப்பிக்க கால அவகாசம்
இந்த நாச்சிக்குடா சிக்கல் 2024. இலும் வந்து பின்னர் தணிந்திருந்தது. இப்போது மீளவும் தலைதூக்குகிறது. சோனகர்கள் இந்த சிக்கலை பைத்தியர் அருச்சுனாவிடம் எடுத்துச்செல்லக்கூடும் - இவன் சாதிவெறியன், கிளிநொச்சி சனத்தை பிடிக்காது - அதனால் அவர்களை எதிர்த்து தனது வாக்குவங்கியிற்காக ஆதரவு கொடுக்கக்கூடும். கடும் கவனமாக இருக்க வேண்டும், இந்த பாம்போடு. நாச்சிக்குடா முஸ்லீம் கலவன் பாடசாலை என மாற்றப்பட்ட பெயர் ஏற்கப்படாது! April 28, 2024 கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் பெயரில் சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது அதே பெயரையே உத்தியோகபூர்வமாக பயன்படுத்துமாறு வட மாகாண கல்வி திணைக்களம் பணிப்புரை வழங்கியுள்ளது. நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை என்ற பெயர் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் திருத்துமாறு வடக்கு மாகாண கல்வி திணைக்களம் கடிதம் அனுப்பியுள்ளது. இப்பெயர் மாற்றம் தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தால் அறிக்கையும் கோரப்பட்டுள்ளது. இதேவேளை, ‘கிளிநொச்சி நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை’ என்ற பெயரே உத்தியோகபூர்வமானது” என மாகாண கல்வி பணிப்பாளர் குயின்ரஸ் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். பாடசாலையின் தற்போதைய அதிபர், நாச்சிக்குடா அரசினர் முஸ்லிம் தமிழ் கலவன் பாடசாலை என்ற இறப்பர் முத்திரையை பயன்படுத்தி க.பொ.த. சாதாரண தர பரீட்சை மாணவர்களின் அனுமதி அட்டைக்கு கையொப்பம் இட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். | LBC Tamil - Sri Lanka Tamil News - IBC Tamil https://share.google/QHwBVkmnxkFkVb3mb
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
வான்புலிகள் பராக்குடையில் (parachute) குதித்து பயிற்சி எடுக்கின்றனர் செப்டெம்பர் 19, 1998
- 73 replies
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces
-
avro.jpg
From the album: தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் படிமங்கள் | Tamil Tigers images
"சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
-
avro.jpg
-
sky tigers - during flight observation (4).jpg
-
sky tigers - during flight observation (3).jpg
-
sky tigers - during flight observation (2).jpg
-
sky tigers - during flight observation (1).jpg
-
TrincoHeroesDay_ 2003.jpg
-
yokan father.jpg
-
sea tigers (2).jpg
-
kutti mani - ponmanach chemmal.jpg
-
kumaran.jpg
-
jegan master.jpg
-
demining.jpg
-
2nd left பாவரசன்.jpg
-
sea tigers (1).jpg
-
maaveerar.jpg
-
ltte troopers with sl army major in Chengkaladi 2002.jpg
-
lt. col. niththilan, NWF.jpg
-
demining 2.jpg
-
Banuka, polit - Nilavini - Lt.Col. SG chandrasekara.jpg
-
April 2002 vavuniya astrology hand.jpg
-
-
4 group.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
Full document:
-
4 group.jpg
-
certif (1).jpg
-
certif (3).jpg
-
certif (2).jpg
-
hindustan engineering center .jpg
-
hindustan engineering center - Copy.jpg
-
governor Ja, india, for best student.jpg
-
சங்கா்-அண்ணன்-3.jpg
-
Shot down - Aircraft of Lt. Col. Siriththiran
-
pre-2005 - Iranaimadu airstrip with an aircraft on it - credits Cerno, a Sinhala guy.jpg
-
news fb .jpeg
-
from puttalam. works in sl central bank age 55+.jpg
-
adsa.jpg
-
1954 muslim ethnic violence.jpg
-
ROTOX 503 engine used in Solos Wings Windlass trike.jpg
-
miller mom (3).jpg
-
miller mom (2).jpg
-
miller mom (1).jpg
-
6th sirpam.png
-
ramani.jpg
-
-
வான்புலிகள் இன் படிமங்கள் | LTTE Sky Tigers Images
தலைவருடன் கேணல் சங்கர் உட்பட்ட போராளிகள் வான்புலிகளின் பறப்பை நோக்குகின்றனர் 1994
- 73 replies
-
-
- 1
-
-
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
-
Tagged with:
- sky tigers
- தமிழ் வான்படை
- ltte pictures
- sri lankan airforce
- eelam kamikaze pilots
- ltte photos
- வான்புலிகள் தாக்குதல்
- tamil tigers airforce
- வான்படை வானூர்திகள்
- ltte air control room
- ltte images
- இலங்கை வான்படை
- zlin 143 ltte
- ltte skyforce
- sri lanka airforce
- வான்புலி தாக்குதல்
- வான்புலிகள்
- வான்படை
- தமிழரின் வான்படை
- tamil eelam air force
- tamil rebel airforce
- ltte airforce
- air tigers
- புலிகளின் வான்படை
- kamizkaze pilots
- srilankan airforce
- ltte gyroplane
- வான்கரும்புலிகள்
- சிங்கள வான்படை
- taf
- ltte airwing
- eelam airforce
- tamil eelam airforce
- சிறீலங்கா வான்படை
- தமிழீழ வான்படை
- tamileelam airforce
- tamil airforce
- புலிகளின் வான்பிரிவு
- வான்பிரிவு
- eelam air force
- tamil air force
- tamil tigers
- liberation tigers of tamil eelam
- ltte
- eelam
- tamil eelam
- tamil pilots
- tamil eelam de-facto
- tamil tigers images
- liberation tigers of tamil eelam images
- tigers sri lanka
- tamil guerillas
- eelam guerillas
- sri lankan guerillas
- tamil eelam guerillas
- tigers images
- tamil eelam images
- guerilla airforce
- rebel airforce
- tamil eelam rebel airforce
- taf ltte
- ltte aircrafts
- tamils planes
- tamils air force
- tamil aircraft
- tamil tigers aircrafts
- tamils aircraft
- tamil eelam aircrafts
- airforce
- tamil forces