- கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்: புதிய திசைகள்
-
கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும்: புதிய திசைகள்
கசப்படைந்து வரும் தமிழர் முஸ்லிம் உறவும் எதிர்காலமும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப் பட்ட பின் வடக்கிலிருந்து வெளியேற்றப் பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே முஸ்லிம்கள் குடியிருந்த பகுதிகளில் நடத்தப் பட்ட நியாயமான குடியேற்றங்கள் தமிழ் மக்களின் அனுசரணையுடனேயே நடந்தேறின. ஆனாலும் இவை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் தமிழ் பகுதிகளின் குடிப்பரம்பலையே முஸ்லிம்களுக்கு சாதமாக மாற்றியமைத்து தமிழ் மக்களின் நில வளங்களை கபளீகரம் செய்யும் நிலைக்குச் சென்ற பின்பே தமிழர் தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வர ஆரம்பித்தன. கடந்த பத்தாண்டு காலமாக முஸ்லிம்களால் போரினால் பாதிக்கப் பட்ட தமிழ் மக்கள் மீதும் பழங்குடி மக்கள் மீதும் திட்டமிட்ட வகையில் கூட்டாக இணைந்து நடத்தப் பட்டு வரும் நில ஆக்கிரமிப்புகள், சமூக சதிவேலைகள் மூலமாக வேலைவாய்ப்பு, கல்வி புறக்கணிப்புகள் அப்பட்டமாக தொடரும் நிலையில் இதற்கு மேல் பொது நியாயம் பேசும் அரசியல் காலம் வேகமாக முடிவிற்கு வந்து கொண்டிருக்கிறது. குடும்பங்களாகவும், விவசாயிகளாகவும், நிலச்சொந்தக்காரர்களாகவும், அலுவலக வேலைகள் மற்றும் கல்வி துறையாளர்களாகவும், வியாபாரிகளாகவும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தமிழ் மக்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பாரிய அளவிலானவை. சிவில் நிர்வாக அலகுகளான பிரதேசசபை, நகரசபை, மாநகரசபை என்பன திட்டமிட்ட முறையில் முஸ்லிம் பகுதிகளுக்கு சாதகமாக எப்படி இலங்கை அரசின் நிர்வாக உதவியுடன் நிறைவேற்றபட்டிருக்கிறது; இன்னும் வரும் தேர்தல்களில் எப்படி தமிழ் பகுதிகள் கபடத் தனமாக புறக்கணிக்கப்பட்டு முஸ்லீம்களின் பகுதிகள் முன்னுரிமை பெறும் வகையில் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கபட்டுள்ளன என்பதையும் தமிழ் மக்கள் ஆதாரத்துடன் முன் வைக்கிறார்கள். பழங்குடி மக்களின் பாரிய நிலங்களும் சில இடங்களில் முழு கிராமங்களே எப்படி முஸ்லிம்களால் ஏமாற்றப்பட்டு பறிக்கபட்டுள்ளன என்பதை அவர்கள் குமுறலுடன் முன்வைக்கிறார்கள். வடக்கில் மன்னார் மாவட்டத்தில் அரச ஆதரவு, அன்னிய நிதி மூலதனத்துடன் நடந்துவரும் முஸ்லிம் குடியேற்ற திட்டங்கள் அம்மாவட்டத்தின் குடிப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டம் கொண்டது. கூடவே கரையோர மாவட்டம் என்னும் முஸ்லிம்களது கோரிக்கைக்கு மன்னாரை விழுங்கும் திட்டமும் கொண்டது. இன அழிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றைய வன்னி மாவட்டங்களில் வியாபார பகுதிகளை திட்டமிட்டு கைப்பற்றுவதும், அரச துணையுடன் காடுகளை அழித்து குடியேற்றங்களை செய்வதற்கு தொடர்ந்து முயற்சிகள் நடந்து வருகிறன. இலங்கை தீவில் "நாம் எல்லோரும் இலங்கையர்" என்று கூறிக்கொண்டு எப்படி இலங்கை அரசின் ஆசியுடன் சிங்கள கடும்போக்கு தலைமைகள் தமிழ் மக்கள் மீது தொடர்ந்தும் ஆக்கிரமிப்பை செய்து வருகிறார்களோ அதிலிருந்து சிறிது வேறுபட்டு; தமிழர்களுக்குள் வாழ்ந்து கொண்டு சகோதரர்கள் என்று கூறிக்கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அத்தமிழ் சமூகத்தை அரித்து வருவதாக தமிழ் மக்கள் உணர்கிறார்கள். சமகால சமூகங்களின் வாழ்நிலைகளுடனும், கலாச்சாரங்களுடனும் சமாந்தர பாதையில் பயணிக்கமுடியாத மூடியவகை சமூக அமைப்பை கொண்டிருப்பதுடன், பழங்கால தீவிர மத அடிப்படைவாத வாழ்முறையை உள்வாங்கிக்கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம்; மற்றைய சமூகங்களில் இருந்து அன்னியப்பட்ட வாழ்முறைகளை கொண்டிருப்பதும், அது பின்பற்றும் குழுவாத வாழ்முறையே படிப்படியாக மற்றைய சமூகங்களை தங்களை நோக்கி இழுக்க முயற்சி செய்வது அல்லது குழுநிலை நலனுக்கு ஏற்ப ஆக்கிரமிப்பது என்னும் நிலைக்கு செல்வது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது. இந்த சமூகம் தனது மதம் சார்ந்த குழுவாத வாழ்நிலையில் இருந்து வெளிவராதவரை, சகமக்கள் பிரிவினருக்கு பெரும் சவாலாகவே இருக்கப்போகிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். தமிழ் சமூகம் பல வழிகளிலும் தனது முறைப்பாடுகளை முஸ்லிம் சமூகத்தை நோக்கியும், தலைவர்களை நோக்கியும் உரக்க கத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில், முஸ்லிம் தரப்பில் இருந்து தமிழ் மக்களை நோக்கி ஒரு நியாமான குரலும் கேட்டதாக தெரியவில்லை. இதற்கு மாறாக "தந்திரமாக செயற்பட்டு தமிழரை ஏய்த்தோம்", "வடக்கு கிழக்கு இணைந்தால் இரத்த ஆறு ஓடும்" என்று முஸ்லிம் தலைமை பிதற்றுவது எரியும் நெருப்பில் எண்ணை ஊற்றும் வேலையாகும். தமிழர்கள் இதற்கு மேல் முஸ்லிகளின் இந்த சமூக சந்தர்ப்பவாதத்தை அனுமதிப்பதாக இல்லை. தமிழர்கள் நடத்துவது தமது வளங்கள், உரிமைகள் மீதான தற்காப்பு நடவடிக்கை. முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பை செய்து கொண்டு தமிழரிடம் அதீத ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. தற்காப்பு பற்றி பேசுவது இனவாதமாக அர்த்தப் பட்டுவிடும் என்ற மயக்கத்தில் தமிழர்கள் தொடர்ந்தும் வீழ்ந்து கிடக்க வேண்டிய அவசியம் இல்லை. அதேசமயம், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களை வெறியூட்டி காரியம் சாதிக்க நினைக்கும் இந்து மதவெறி, பெளத்த மதவெறி சக்திகள், இலங்கை அரசின் தமிழ் தொங்கு தசைகள், முஸ்லிம்களை வெறுக்கும் தமிழ் இனவாத சக்திகளிடம் தமிழ் மக்களின் மிகுந்த எச்சரிக்கை அவசியமாகிறது. இச்சக்திகள் வேண்டுமென்றே நிலைமைகளை ஊதிப்பெருக்கி அதை மதப்பிரச்சனையாகவோ அல்லது இனப்பிரச்சனையாகவோ உருவாக்கி தமிழர்களின் நியாமான போராட்டங்களையும், முஸ்லிம்களின் நியாயமான இருப்பையும் அழித்து ஒழிக்கும் நோக்கம் கொண்டவை. வனத்துறை, கடல் அபிவிருத்தி துறை, இராணுவம், கடல்படை, விமானப்படை, தொல்பொருள் ஆய்வுதுறை என்ற பெயரில் சிங்கள பெளத்த அரசால் தமிழ் மக்களின் உரிமைகள், வளங்கள் பெருமளவில் பறிக்கப்பட்டு, அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இக்கட்டான காலகட்டத்தில்; கூடவே வாழ்ந்து கொண்டு சகோதர இனம் என்ற ஒரு உயரிய நிலையில் இருந்து தமிழர்கள் மீது முஸ்லிம்கள் செய்துவரும் அத்தனை அநியாயங்களையும் நிறுத்தாவிடின் நிலைமைகள் மோசமடைவது தவிர்க்க முடியாதது. இன்று முஸ்லிம் எதிர்ப்பு என்பது தமிழ் சமூகத்தின் பிரதான பொதுப்புத்தியாக மாறிவருவதை முஸ்லிம்கள் அவதானிக்கத்தவறி தொடர்ந்தும் இதேவகை ஆக்கிரமிப்பு போக்கை மேற்கொள்ளுவார்களேயானால், வர இருக்கும் மோசமான நிலைமைகளுக்கும் அவர்கள்தான் பொறுப்பாளிகள். இன்றைய கால கட்டத்தில் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் இருக்கும் இந்த பாரிய முரண்பாடு பற்றியும், அதில் உள்ள நியாயங்கள் பற்றியும் பேசாதவர்கள் இனிவரும் காலங்களில் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி பேசுவதற்கு அருகதை அற்றவர்கள். மறுபக்கம் தமிழ் மக்களை வெறியூட்டி தவறான திசைவழியில் பயணிக்க வைக்க முயற்சிக்கும் தலைமைகள் முற்றாகப் புறக்கணிக்கப் படவேண்டியவர்கள். தமிழ் மக்களே! உங்கள் நிலத்தை ஆக்கிரமித்துள்ளவர்களை வெளியேற்றுங்கள் உங்களின் உண்மை பத்திரங்களின் முன் போலிப் பத்திரங்கள் செல்லுபடியாகதவை, உங்கள் நிலத்திற்காக தொடர்ந்து போராடுங்கள் முஸ்லிம் பெயரிடப்பட்டிருக்கும் ஆக்கிரமிக்கப்பட்ட பழங்குடி மக்களின் கிராமங்கள் பிரதேச சபைகளுக்குள் அடக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட அனுமதிக்கப்படக்கூடாது இன்றிருக்கும் தமிழ் தலைமைகளில் நம்பிக்கை வைத்து ஏமாறாது, போராட்டத்தை உங்கள் கைகளில் எடுத்துக்கொள்ளுங்கள் நீங்கள் உருவாக்கும் அமைப்பு வடிவங்கள் மட்டுமே உங்களை பாதுகாக்கும் வல்லமை கொண்டவை முஸ்லிம் மக்களே! கிழக்கிலும், வடக்கிலும் தமிழர்களுடனான ஜனநாயாக வாழ்முறை என்பது உங்களின் உயிர்நாடி என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் எவர் செய்தாலும், தவறை தவறென்றும் சரியை சரியென்றும் பேசும் தன்மையயற்ற ஒரு இருண்ட, மூடிய நிலையில் இருந்து வெளியே வாருங்கள் இஸ்லாம் என்பது உங்கள் மார்க்கம் அதில் தலையிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. அதன் வழி உருவாகும் உங்களின் வாழ்முறையின் சமூக நீட்சி என்பது சகசமூகங்களின் இருத்தலை கேள்விக்கு உள்ளாக்கும் போது, உங்களின் வாழ்முறை பேசுபொருளாக்கப்படுவது தவிர்க்கமுடியாது போய்விடுகிறது உங்களில் சமூக அக்கறை, ஜனநாயக கூறுகளில் அக்கறை உள்ளவர்கள் வெளிப்படையாக பேச வேண்டியதும் செயலாற்ற வேண்டியதுமான காலமிது. நிலைமைகள் தீவிரமடைந்தபின் அவை நம் கட்டுப்பாட்டை மீறியவையாக மாறிவிடுகின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் ஆக்கிரமிப்பு முஸ்லிம்களே! ஆக்கிரமித்துள்ள தமிழர்களின், பழங்குடிகளின் நிலங்களை விட்டு வெளியேறுங்கள்! அத்துமீறி குடியேறி அராஜகம் செய்யும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப் படுவீர்கள் கிழக்கில் அரசியல்வாதி, அதிகாரி கூட்டில் நடைபெறும் சதி அம்பலத்திற்கு வந்துள்ள நிலையில், இது தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் சிவில் நிர்வாக அமைப்புகளில் செய்யப்படும் சதி வேலைகள் உரிய அமைப்பு முறைமூலம் எதிர்கொள்ளப்படும் மத சமூகமாக குழுவாத அடிப்படையில் இயங்கும் வர்த்தக ஆக்கிரமிப்புகள் இனியும் தொடர முடியாது புதிய திசைகள்
-
“புலிகளின் கொடூரத்திற்கு, உள்ளான முஸ்லிம்களின் கடமை”
வடகிழக்கு தமிழர்கள் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இந்த மதவாத அரபு மயமாக்கலைத் தடுக்க முடியும்.
-
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் : புதிய திசைகள்
மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் மயானங்கள் தேச உருவாக்கமானது பல்வேறு அடையாளங்களைக் கொண்ட மக்கள் கூட்டின் பரிமாணங்களை தன்னகத்தே கொண்டு தான் வளர்ச்சி பெறுகிறது. ஒரு தேசத்தின் அங்கமாக இருக்கும் வெவ்வேறு மக்கள் திரளின் தனித்துவங்களும் அவர்களது அடையாளங்களும் அவர்கள் சார்ந்த தேசத்திற்குட் பட்டதாக மட்டுமே எப்போதும் பார்க்கப் படவேண்டுமென்ற ஒற்றைப் பரிமாணப் பார்வையானது அடிப்படையில் அந்த மக்களின் உரிமையை மறுக்கும் சிந்தனையே; ஒரு தேசத்தின் பன்முகத் தன்மையை மறுக்கும் இறுக்கமான போக்காகவே பார்க்கப் பட வேண்டும். தமிழ் தேசத்தின் அக முரண்பாடுகளைப் பற்றிப் பேசுவது அல்லது ஒடுக்கப் பட்ட மக்கள் தமது உரிமைப் போராட்டங்களை முன்னெடுப்பது தமிழ் தேசத்தை பலவீனப் படுத்தும் செயலாக பொதுப் புத்தி மட்டத்தில் தவறாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையில், அக ஒடுக்குமுறை பற்றி பேசுவோரையும் குரல் எழுப்புவோரையும் நோக்கி "தமிழன்" எனும் ஏக பரிமாணத்தை மட்டும் ஏற்கும் படி வற்புறுத்துவது ஒரு மக்கள் கூட்டம் தனது அடையாளம் என்னவென்பதை தானே தீர்மானிக்கும் உரிமையை மறுதலிப்பதாகும். இந்த பின்னணியில், மக்கள் குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மயானங்கள் அகற்றப்படும் வரை பல்வேறு தரப்பின் ஆதரவுடன் சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பினரால் பல வகைகளில் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளுக்கும், இறந்தவர்களின் உடல்களை குறித்த மயானத்தில் எரிப்பதற்கும் யாழ் மேல் நீதிமன்றத்தால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புத்தூர் மேற்கு கிந்துசிட்டி மயானத்தைச் சுற்றி மக்கள் குடியிருப்புகள் இருப்பதைப் போன்ற நிலை யாழ் குடா நாட்டின் ஏனைய பகுதிகளிலும் உள்ளமையைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சனைகளுக்கான பொதுத் தீர்வை எட்ட வேண்டிய தேவை உள்ளது. மயானம் அருகே குடியிருப்புகள் என்பது வேறு வழியில்லாத விளிம்பு நிலை மக்களின் தெரிவாகவே உள்ளமையைப் புரிந்து கொண்டு இவ்விடயத்தை வெறுமனே சட்டப் பிரச்சனையாக அல்லாமல் மனிதாபிமான அடிப்படையில் அணுகுவதே தமிழ் தேசத்தின் நலனில் அக்கறை கொண்ட அனைத்து சக்திகளின் செயலாக இருக்க முடியும். மயானங்கள் நவீன மயப் படுத்தப் பட்டு மக்கள் குடியிருப்புகள் இல்லாத பகுதிகளில் அமைக்கப் படுவதன் மூலம் சுமுகமான தீர்வு சாத்தியமாகும். இந்த வகை நவீன மயானங்களைப் பயன்படுதுவதன் மூலம் தேவைக்கதிகமாக உள்ள, அரிதாக இயங்கி வரும் அல்லது கைவிடப் பட்ட மயானங்கள் சார்ந்த நிலப் பகுதிகள் மக்கள் குடியிருப்பு நிலங்களாக மாற்றப் படலாம். இதற்கு மாறாக தமிழ் தலைமைகளின் பாராமுகமும் புத்தூர் மக்களின் போராட்டம் குறித்த வடமாகாண சபையின் அக்கறையற்ற போக்கும் கண்டனத்திற்குரியவை. "மயானம் முதல் வந்ததா அல்லது குடியிருப்புகள் முதல் வந்தனவா" என்ற விவாதங்களுக்குள் சிக்குண்டு போகாமல் தேச அக்கறையுடன் கூடிய மனிதாபிமான முறையிலான அணுகுமுறையே இங்கு பொருத்தமாக இருக்கும். தமிழர்களின் கல்வி, பொருளாதார வளங்கள் மட்டுமல்லாது பெருமளவிலான தமிழர் நிலங்கள் இனவாத அரசினாலும் அவர்களது பங்காளிகளாலும் திட்டமிட்ட வகையில் சூறையாடப் படும் நிலையில் தேசமாக எமது கவனம் அவ்விடயங்கள் குறித்து குவிவதை திசை திருப்பும் வகையில் பெருந்தேசிய வாதிகள் தமது கைங்காரியங்களைச் செய்வார்கள் என்ற அவதானம் எமக்குத் தேவை. தமிழ் தேசமானது இனவாதம், சாதிய ஒடுக்குமுறை, பிரதேசவாதம், மதவாதம் இன்னும் பல அக முரண்பாடுகளை தன்னகத்தே கொண்டிருக்க, இம்முரண்பாடுகளில் ஒன்றை அல்லது சிலவற்றை தேசிய ஒடுக்குமுறைக்கு எதிராக நிறுத்தி பெளத்த சிங்கள பெருந்தேசியத்திற்கு மறைமுகமாக வழிசமைத்து கொடுக்கும் அடையாள அரசியல் இத்தேசத்தில் அரங்கேற்றப்படுகிறது. இது தலித்தியமாக, சாதியமாக, பிரதேசவாதமாக, மதவாதமாக முன்னிறுத்தப்படுகின்றது; குறிப்பான நிகழ்வுகளை பொது உண்மையாக காட்டும் இவ்வகை கவர்ச்சி அரசியலும் சரியாக அடையாளம் காணப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் ஆதிக்க சக்திகள் தமிழ் தேசத்தைப் பிளவு படுத்துவதிலும் ஏற்கனவே இருக்கக் கூடிய உள் முரண்பாடுகளை மேலும் கூர்மையடையச் செய்வதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இலங்கை இனவாத அரசின் அங்கமாக இருந்து தமிழ் மக்களை அழிப்பதில் எல்லா வகையிலும் முன்னின்ற ஜேவிபி அணிகள் கூட அதே தமிழ் மக்களின் நலனிற்காக குரல் கொடுக்கிறோம் என்று ஓடிவருவதன் பின்னணி புரிந்து கொள்ளத் தக்கதே. ஆனால் அதையே காரணமாக வைத்து கலைமதிக் கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தரப் பின்னிற்பதாகக் கூறும் தமிழ் சக்திகளின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. சாதியம் சில அரசியல் தலைமைகளின் வாக்கு வங்கியாக உள்ளமையால் அந்தக் கட்டமைப்பை அப்படியே காப்பாற்றுவதிலும் தாமே அம்மக்களின் ஏகபிரதிநிதிகள் என்று நிறுவ முயல்வதும் அந்த சக்திகளின் நடைமுறையாக உள்ளது. இந்த வகை தலைமைகளால் ஒரு தரப்பு மக்கள் மற்றைய மக்களின் நலன்களுக்கு எப்போதும் நேரெதிரானவர்கள் என்ற தோற்றப்பாடு ஏற்படுத்தப் படுகிறது. இதனை விட இனவாத அரசின் நேரடி மற்றும் மறைமுக முகவர்கள் சமூக வலைத் தளங்களிலும் ஏனைய ஊடகங்களிலும் வெவ்வேறு மக்கள் பிரிவிற்கு கொம்பு சீவிவிடும் வேலையைக் கச்சிதமாகச் செய்து வருகின்றனர். ஒரு தேசம் தனக்குள் இருக்கும் அக ஒடுக்குமுறைகளைக் களையாமல் தனக்குள் ஐக்கியப் படுவதென்பது சாத்தியமில்லை என்ற புரிதலுடன் தமிழ் தேசத்தில் புரையோடிப் போயிருக்கும் அனைத்து அகமுரண்பாடுகளையும் பேசு பொருளாக்குவோம். அக ஒடுக்கு முறைக்குள்ளாகும் மக்கள் மத்தியில் எழும் போராட்டங்கள் எமது சமூகத்தை அடுத்த நிலைக்கு வளர்த்துச் செல்லும் பண்புகளைக் கொண்டிராத பட்சத்தில் அவை பேரினவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழக் கூடிய ஆபத்தையும் இங்கு குறித்துக் கொள்வது பொருத்தமாக இருக்கும். நன்றி புதிய திசைகள் 25 - 09 -2017
-
இலங்கையில் 6000 வருடங்களுக்கு முன்னர் மனிதன் வாழ்ந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிப்பு
6000 வருடங்களுக்கு முன் இன்றுள்ளமத வியாதிகள் எதுவும் மனிதனைப் பீடித்திருக்க வாய்ப்பில்லை.
-
எத்தனை அம்புகள் எறிந்தாலும் அத்தனையையும் தாங்கிக் கொண்டு பணிகளை தொடருவேன்! – ரிஷாத்
எத்தனை அம்புகள் எறிந்தாலும் காணி திருடும் திருப்பணியை தொடர்வேன் - ரிஷாத்
-
முஸ்லிம்களை மிதிக்க நினைப்பது ஏன்..? முல்லைத்தீவில் றிஷாட் முழு விபரம்:
திருடன் ரிசாத் அபிவிருத்தி என்ற பெயரில் அடித்த கொள்ளையைத் தான் இங்கு பட்டியல் போடுகிறார்
-
தமிழர்களை, முஸ்லிம்களிடம் இருந்து மீட்க போராட்டம் – கருணா கொக்கரிப்பு
வட கிழக்கில் முஸ்லிம்களின் திட்டமிட்ட கபளீகர செயல்கள் நிறுத்தப் படா விட்டால் தமிழர்கள் கருணா போன்ற குழுக்களின் பின்னால் கூட அணிதிரள்வார்கள். இது இரு தரப்பிற்கும் நல்லதல்ல.
-
(படங்கள்) காத்தான்குடியில் சவூதி அரேபிய நாட்டின் இளவரசர் .
மத்திய கிழக்கை, குறிப்பா சிரியாவை, ரொம்ப அபிவிருத்தி பண்ணிட்டாங்க இந்த வகாபிகள். இனி ஆசியா தான்.
-
தமிழர், முஸ்லீம் உறவும் எதிர்காலமும்
தமிழர், முஸ்லீம் உறவும் எதிர்காலமும் இலங்கை இனவாத அரசின் மொழிவாரியான அடக்குமுறை தீவிரம் கொண்ட காலம் முதல் அதன் எதிர்வினையாகத் தோற்றம் பெற்ற தமிழ் மக்களது தேசிய விடுதலை போராட்ட வாழ்முறையுடன் பல முஸ்லீம்கள் தங்களை இணைத்துக் கொண்டார்கள். தமிழ் தேசிய வீரர்பட்டியலிலும் பலர் இடம் பிடித்திருந்தனர்; தமிழ் தேசிய படையணிகளும், போர்வீரர்களும் முஸ்லீம் பெயர்களை பெருமையுடன் தாங்கி நின்றிருக்கின்றன. தமிழீழ தேசிய விடுதலை போராட்டத்தின் அங்கமாக முஸ்லீம்கள் இணைந்திருந்தார்கள். முஸ்லீம் மக்களை பொறுத்தவரை, தமிழ் மக்களில் இருந்து மாறுபட்டு ஒரு தனித்தன்மை அவர்களிடம் ஆரம்பம் முதலே இருந்து வந்துள்ளது என்பது வரலாற்று உண்மையாகும். தாம் தனித்தன்மை கொண்ட ஒரு மக்கள் பிரிவு என்பதை முஸ்லீம்கள் பலமுறை, பலவழிகளில் மற்றைய சமூகங்களுக்கு அறைந்து கூறிய பின்னரும் இலங்கை முஸ்லீம்களை "இஸ்லாமிய தமிழர்" என்று இன்னும் கருதுவதை தமிழ் மக்கள் நிறுத்திக்கொள்வது முறையாக இருக்கும். பலமுறை மன்னிப்பு கேட்கப்பட்டு, மீள்குடியேற்றத்திற்கும் அழைப்பு விடுக்கப்பட்ட தமிழீழ விடுதலை புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட முஸ்லீம்கள் மீதான அந்த பலவந்த வெளியேற்றம் என்பது ஒரு வரலாற்று தவறாக அமைந்ததுடன்; இரு சமூகங்களிடையேயும் பெரும் இடைவெளியை உருவாக்கி, எதிர்நிலைகளிலும் கொண்டு சென்று நிறுத்தியது. முஸ்லீம்களின் வெளியேற்றம் என்பது தமிழ் சமூகத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விடயமாக இருக்கவில்லை. பல எதிர்ப்பு குரல்கள் அன்றிலிருந்து இன்றுவரை ஒலித்தவண்ணம்தான் இருக்கின்றன. கடந்த தசாப்தங்களாக பெரும்பாலும் இலங்கை ஆளும் பிரிவுடன் கைகோர்த்திருக்கும் முஸ்லீம் மக்களின் அரசியல் தலைமை, தமிழ் மக்களின் தேசிய அபிலாசைகளுக்கும், அரசியல் உரிமைகளுக்கும் எதிரான தமது வர்த்தக நலனுடனும் மற்றும் சந்தர்ப்பவாதத் தன்மையுடனும் இருந்து வந்திருக்கின்றமை இன்றைய யதார்த்தமாக உள்ளது. இரு சமூகங்களிடையேயும் ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவங்கள் ஒருவரையொருவர் திட்டமிட்டு படுகொலை செய்வது என்கின்ற கொடுமையான வடிவங்களைக் கூட எடுத்திருக்கிறது. காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை என்றவடிவங்களில் புலிகளின் நடவடிக்கைகள் அமைய, முஸ்லீம் துணைப்படைகள், கூலிப்படைகளின் திட்டமிட்ட படுகொலைகள் என்கின்ற வடிவங்களில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். முஸ்லீம்கள் மீதான புலிகளின் படுகொலைகள் பேசம்படும் அளவிற்கு தமிழ் மக்கள் மீது முஸ்லீம் கூலிப்படைகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் பேசப்படுவதில்லை. புலிகளின் தவறுகள் தமிழரின் தவறுகளாக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் தமது உயிர்களை இழந்து, காணாமல் ஆக்கப்பட்டு, நிலங்களை, கிராமங்களை இழந்து, உடமைகளை இழந்து நிற்கும் தமிழ் மக்கள்; தொடர்ந்தும் முஸ்லீம் தலைமைகளால் குற்றவாளிகள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு இன அழிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு போராடிக்கொண்டிருக்கும் தமிழ் சமூகத்திடம் அதனுடன் கூடவாழும் முஸ்லீம் சமூகம்” எரியும் வீட்டில் பிடுங்கியது இலாபம்” என்னும் வகையில் வடகிழக்கின் பலபகுதிகளில் அணுகிக்கொண்டிருப்பது என்பது, எதிர்கால பேரவலத்தின் அறிகுறி என்றுதான் கணிக்கப்பட வேண்டும். பெளத்த சிங்கள பேரினவாத சக்திகள் அம்பாறையிலும் திருகோணமலையின் எல்லை பகுதிகளிலும் முஸ்லீம் மக்களின் நிலங்களை அபகரிக்கரிப்பதற்கு எதிராக முறையாக போராடாமால், சகோதர இனம் எனக்கூறிக்கொண்டு "நலிந்து" போயிருக்கும் தமிழ் சமூகத்தின் நிலங்களை அதே பகுதிகளில் முஸ்லீம்கள் சதித்தனமாக ஆக்கிரமிப்பதும்; அதிலும் குறிப்பாக மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவாகிய பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களின் செய்யறு நிலையைப் பயன்படுத்தி ஏமாற்றி நயவஞ்சகமாக ஆக்கிரமிப்பதை தமிழ் சமூகம் அடையாளம் கண்டு வருகிறது. அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் முஸ்லீம் அரசியல்வாதிகள், அதிகாரிகளின் கூட்டு திட்டமிடலில் தமிழர் நிலங்கள் தொடர்ந்து ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வருகின்றன. அம்பாறையில் இது ஒரு அடாவடித்தனமாக மாறியிருப்பது என்பது தீவிர மதவாத சிந்தனைகளால் ஆட்கொள்ளப் பட்ட முஸ்லீம்கள் பெரும்பான்மையாக மாறும் பகுதிகளில் மற்றைய மக்களின் நிலை எப்படி அமையும் என்று முஸ்லிம் அல்லாத மக்கள் அனைவரையும் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது . தமிழர்களின் யுத்த அவலங்களையும், வறுமையையும் பயன்படுத்தி நிகழும் திட்டமிட்ட இஸ்லாமிய மதமாற்றங்கள் என்பன சமூகங்களிடையே முரண்பாடுகளையும், நம்பகமற்ற நச்சு சூழலையும் உருவாக்கி வருகின்றன. வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிரான அரசியல் என்பது முஸ்லீம் தலைமைகளால் தேவையான நேரங்களில் கையாளப்பட்டுவதுடன், அரசியல் செல்வாக்கு மற்றும் அதிகாரிகள் துணையுடன் கிழக்கின் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படுகிறது. அதிகாரத்துடன் ஒட்டிய தலைமை; சந்தர்ப்பம் உள்ள இடங்களில் அதிகாரம், ஆக்கிரமிப்பு; பலமற்ற இடங்களில் ஐக்கியம் பற்றி பேசுவது அல்லது ஒரே மக்களாக பேசுவது என்னும் வகையில் முஸ்லீம் சமூகத்தின் கணிசமான பகுதி, அடிப்படையில் “சமூக சந்தர்ப்பவாதம்” என்னும் ஆபத்தான கூறை தன்னகத்தே கொண்டிருப்பதாக ஏனைய சமூகங்களால் பார்க்கப்படுகிறது. தமிழ் மக்களுடன் இணைந்து வாழும் ஒரேமொழி பேசும் முஸ்லீம் சமூகத்தின் ஒரு பிரிவு உலக இஸ்லாமிய அடிப்படை வாதமாகிய "வஹாபிச" மார்க்கத்தை வரித்துக் கொண்டிருப்பதும், தீவிர அரபுக் கலாச்சாரத்தைப் பேண முனையும் போக்குகள் என்பன இலங்கை தீவில் வாழும் மற்றைய சமூகங்களில் இருந்து தங்களை அன்னியப்படுத்தும் நிலைமைகளையே முஸ்லீம் மக்களுக்கு தோற்றுவித்திருக்கிறது என்பது ஒரு கசப்பான உண்மையாகும். மன்னாரில் சிலாவத்துறையிலும், தற்பொழுது முல்லைத்தீவிலும் அரச நிலங்களில் திட்டமிட்டு உருவாக்கப்படும் முஸ்லீம் கிராமங்கள் இன்று முக்கிய கவனத்தைப் பெறுகின்றன. ரிசாத் பதியுதீன், அவரது உறவினர்கள் படையணியின் வியாபார மற்றும் ஓட்டு வங்கியை அடிப்படையாக வைத்து முஸ்லீம்களின் இனப்பரம்பலை தமிழ் பகுதிகளில் அதிகரிப்பது என்னும் திட்டமும் நிறைவேற்றப்படுகிறது. மத்திய அரசின் துறைசார் செல்வாக்கு, மந்திரிகள் செல்வாக்கு இன்னும் இலங்கையை ஆளும் பிரிவுகளின் செல்வாக்குகளுடன் இவர்களின் அரேபிய வியாபார நண்பர்கள், உலக இஸ்லாமிய விரிவாக்கலின் நண்பர்களின் பெரும் நிதிப்பங்களிப்புடனும் இத்திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை கேள்விகேட்கும் அரசியல் வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ பணமும் செல்வாக்கும் தான் பதிலாக இருக்கிறது. முஸ்லீம்கள் ஒரு தனியான தேசிய இனத்தவர்கள் என்ற வகையில், அவர்களது மீள்குடியேற்றத்தை மீறிய, இனப்பரம்பலை மாற்றியமைக்கக் கூடிய திட்டமிட்ட குடியேற்றங்கள் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் தரவல்லன என்பதை முஸ்லீம்கள் புரிந்து கொள்ள வேண்டும். அம்பாறையில் இலங்கை அரச ஆக்கிரமிப்பு முஸ்லீம்களுக்கு என்ன அச்சுறுத்தலைத் தருகிறதோ அதே நிலைதான் திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னாரிலும், முல்லைத்தீவிலும் தமிழர்களுக்கு ஏற்படுகிறது என்பதை முஸ்லீம்கள் உணரவேண்டும். இலங்கையை பெளத்த சிங்கள மயமாக்க துடிக்கும் ஶ்ரீ லங்கா அரசும்; கூடவே இன, மத முரண்பாட்டினூடாக பிரிவினையை வளர்த்து ஆளநினைக்கும் இந்திய அரசும் ஒடுக்கப்படுபவர்களாகிய எமக்கிடையே இருக்கக்கூடிய முரண்பாடுகளை பயன்படுத்தக் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். கிழக்கில் முஸ்லீம்களின் நில ஆக்கிரமிப்பை நிறுத்துவதற்கு ஆதரவு கேட்டு தமிழ் மக்கள் பௌத்த பிக்குகளிடம் செல்ல விளைவது ஒரு தற்செயல் நிகழ்வாக நாம் பார்க்க முடியாது. தமது தலைமையால் கைவிடப்பட்ட கையறு நிலையில் மக்கள் தூக்கும் கடைசி ஆயுதமாகவே நாம் அதனைக் கருதலாம். பெளத்தமும், இந்துத்துவமும் ஒரணியிலே நின்று இஸ்லாத்தை எதிர்க்கும் போக்காக தெற்காசியாவில் வளர்ச்சி கண்டு வரும் புதிய போக்கிற்கு தீனிபோடுவதாகவே இந்த முயற்சிகள் அமையும். முஸ்லீம் மக்கள் மீது தமிழ் மக்களின் ஒரு பிரிவினர் காட்டும் இனவாத அணுகுமுறைகளும், அவதூறுகளும் நிறுத்தப்பட்டு, முஸ்லீம் மக்களுடனான பிரச்சனையை தமிழ் மக்கள் அவர்களுடன் முறையான உரையாடல் தளங்கள் ஊடாகவே தீர்த்துக்கொள்ள வேண்டும். தமிழ், முஸ்லீம் பரஸ்பர உரையாடல்கள் அந்தந்த மக்களின் மதத் தலைவர்களுடனான சந்திப்பாக இல்லாமல்; சிவில் சமூகத் தளங்களில் நடைபெறுவதே ஆரோக்கியமானதாக இருக்கும். ஶ்ரீ லங்கா அரசோ, இந்திய அரசோ அல்லது தீவிர மத வாதிகளோ எந்தக்காலத்திலும் எமது பிரச்சனைகளைத் தீர்த்துவைக்கப் போவதில்லை. மாறாக எம்மைக் கூறு போட்டு தமது நிகழ்ச்சி நிரலிற்கேற்ப எம்மை பயன்படுத்துவதில் தான் அவர்களது அக்கறை இருக்கும். முஸ்லிம்களின் நியாயமான மீள்குடியேற்றத்திற்கு தமிழ் மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தொடர்ந்து வழங்கப் பட வேண்டும் நய வஞ்சகமான முறையில் தமிழர் பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றியமைக்கக் கூடியவகையில் முஸ்லீம்களால் நிகழ்த்தப்படும் திட்டமிட்ட குடியேற்றங்கள் நிறுத்தப் படவேண்டும் நன்றி புதிய திசைகள்
-
மட்டக்களப்பில் தமிழர் காணிகளை அபகரிக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர்
வட கிழக்கு தமிழர்கள் ஒன்றுபட்டு இந்த ஆபத்தை எதிர்கொள்ளா விட்டால் நாளை நமது சமூகம் மிகவும் பரிதாபத்திற்கு சமூகமாக மாறி விடும்.
-
காவல்துறையின் ஆதரவுடன் மன்னாரில் முஸ்லிம்கள் அட்டகாசம் – பின்னணியில் றிசாட் பதியுதீன்!
திருடன் ரிசாத் தலைமையில் தான் தமிழர் நிலங்கள் பல இடங்களில் அபகரிக்கப் பட்டு வருகின்றன.
-
தமிழ் சிறுமிகள் மூவர் துஷ்பிரயோகம்! இளைஞர்களை கட்டி வைத்து தாக்கிய பொது மக்கள் - திருகோணமலையில் பெரும் பதற்றம்
திருமலையில் தமிழர் நிலங்கள் முஸ்லிம்களால் திட்டமிட்ட வகையில் கபளீகரம் செய்து வரப் படும் நிலையில் இப்போது இவ்வாறான மிருகத் தனமான செயல்களிலும் சில முஸ்லிம்கள் இறங்கி விட்டார்கள்
-
பெண்ணை 100 முறை தென்னம்மட்டையால் அடிக்க உத்தரவிட்ட பள்ளிவாசல் பரிபாலன சபையினர் கைது
ஆண்டவன் நமக்களித்த இனிப்பான ஷரியா சட்டம். 21ம் நூற்றாண்டின் அதிசயம்.
-
அமைச்சர் றிசாத்தின் பார்வையில் கூட்டமைப்பின் எம்.பிக்கள் படிப்பறிவில்லாதவர்களாம்
மாசற்ற மாணிக்கம் ரிஷாத்