Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

colomban

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

  1. எனக்கு கனடாவில் இருக்கும்போது கடும் சளியும் காய்ச்சலும் ஏற்பட்டது. பனடோல் எந்த இடத்திலும் இல்லை. ட்ய்ல்டொல் என்னும் ஒன்றை கொண்டுவந்து நண்பன் கொடுத்தான் ஆனாலும் பனடோல் போல் வலுவான மருந்து அல்ல.
  2. இப்படியான பகுதிகள் எங்கு டொரொன்டொவில் அதிகம் இருக்கின்றது? போன ஜூன் முழுவதும் அங்குதானே இருந்தேன். யாரும் சொல்லவே இல்லை.
  3. எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் கண்டுள்ளேன் பெல்லி டான்ஸ் ஆடும் பெண்களை நோக்கி பண நோட்டுக்களை எறிவார்கள். இது டிப்ஸா என்று தெரியவில்லை?
  4. முஸ்லிம் சமூகம் அவர்களது தனித்துவ இன அடையாளமான “முஸ்லிம்கள்” என்று அழைப்பதனை "இனவாதம்" என்றும், “தமிழ் பேசும் மக்கள்” என்றுதான் அழைக்க வேண்டுமென்ரெல்லாம் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிடுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் ஓர் தனியான இனம் என்பதனை தமிழ் தலைமைகள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் விதமாக விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்தினை கடந்த மூன்றாவது பதிவிலும், தமிழர் விடுதலை கூட்டணியின் அங்கீகாரத்தினை இங்கே நான்காவது தொடரில் பதிவிடுகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டணி - முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உடன்பாடும், கூட்டறிக்கையும். தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம்களின் பிரத்தியேகமான தனித்துவத்தை அங்கீகரிக்கின்றது. முஸ்லிம்கள். நாடு முழுவதிலும் சிறுபான்மையினராகவே உள்ளனர். இதை உணர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி பின்வருவனவற்றை விதைந்துரைக்கின்றன. 1. காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, தம்பலகாமம் (முள்ளிப் பொத்தான) எருக்கலம்பிட்டி, முசலி ஆகிய ஒவ்வோர் இடங்களிலும் முஸ்லிம்களைப் பெருமான்மையாகக் கொண்ட உப அரசாங்க அதிபர் பிரதேச சபைகளை - பிரிவுகளை ஏற்படுத்துதல், ஒவ்வோர் பிரிவிலும் எந்தெந்த பிரதேசங்கள் என்பனவற்றின் அடிப்படையில் பாரம்பரிய வாழ்விடங்கள், நிலம், மூலவளங்கள் என்பனவற்றின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் நடத்தி முடிவு செய்யப்படும். 2. கல்முனையில் ஒரு மாநகரசபை ஏற்படுத்தப்படுவதுடன் சம்மாந்துறை, காத்தான்குடி, கிண்ணியா ஆகிய இடங்களில் நகரசபைகளை நிறுவுதல். 3. தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப் படுத்துவதற்காக, மாகாண சபைக்கான அங்கத்தவர்களின் தெரிவு ஆல்புல ரீதியான தேர்தல் தொகுதிகள் அமைதல் வேண்டும். வடக்க கிழக்கு மாகாண சபை 71 அங்கத்தவர்களைக் கொண்டதாக அமையும், அதாவது வட மாகாணத்துக்கு 36 அங்கத்தவர்களும் கிழக்கு மாகாணத்துக்கு 35 அங்கத்தவர்களும் இருப்பர். முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் 32.27% மற்றும் வடக்கு மாகாணத்தில் 4.74% உள்ளனர். த.வி.கூட்டணி, முஸ்லிம் தூதுக் குழுவினருடன் விரிவாக விவாதித்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் 12க்கு குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர்களும், வட மாகாணத்தில் 5க்கு குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர்களும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறது. 4. வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந்தாலன்றி, குறித்த மாகாண சபையின் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒரு அமைச்சர் உட்பட அமைச்சர்கள் சபையில் 25 வீதத்துக்கு குறைவில்லாத அமைச்சர்கள் முஸ்லிம்களாக இருப்பதற்காக வகைசெய்யும் விதத்தில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 5. வருங்கால அரச காணிப் பங்கீடுகளில் முஸ்லிம்களுக்கு உரித்துடைய காணிப்பங்கு விகிதம் கிழக்கு மாகாணத்தில் 35% குறைவில்லாமலும், மன்னார் மாவட்டத்தில் 30% குறைவில்லாமலும், வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 10% குறைவில்லாமலும் இருத்தல் வேண்டும். 6. வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை முஸ்லிம்கள் கொண்டிருப்பவர்கள். 7. பல்கலைக்கழகமட்டம் வரையிலான பிரத்தியேக கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் அனுமதியின்போது கல்வியில் பின்தங்கியிருக்கும் குழுக்கள், பிரதேசங்கள், பாடசாலைகள் என்பனவற்றிற்கு விசேட கவனிப்பு செலுத்தப்படும். 8. முஸ்லிம்களது உரிமைகளைப் பாதிக்கக்கூடிய எதுவித சட்டவாக்கங்களும் அவற்றிக்கு முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி, வடக்கு கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படலாகாது. 9. முஸ்லிம்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் உட்படுத்தப்பட்டிருந்த ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது கருத்துக்களை நாம் தெரிவித்துள்ளோம். இவ்விடயங்கள் இரு பகுதியினராலும் மேலும் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. இந்த கூட்டறிக்கையானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ. அமிர்தலிங்கமும், அதன் தலைவர் எம். சிவசிதம்பரமும் 03.10.1987 திகதி ஒப்பமிட்டு வெளியிட்டனர். தொடரும்.................... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_972.html
  5. கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் நாங்கள் நேரடியாக அறிந்துகொண்ட பல வரலாற்றுச் சம்பவங்களின் உண்மைகள் மறைக்கப்பட்டு, வரலாற்றுத் திரிபுகளாக சிலரது மனோ இச்சைக்கு ஏற்ப முகநூல்களில் பதிவிடுகின்றனர். இவ்வாறு சிலரது மனோநிலைக்கு ஏற்ப எழுதுகின்ற கற்பனைகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் உண்மை என்று நம்புகின்றனர். இன்றைய நாகரீகமான உலகில் நாங்கள் வாழும்போதும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், அச்சு ஊடகங்கள் இருக்கின்ற காலத்திலேயே இவ்வாறான பொய்யான வரலாறுகளை பரப்ப முடியுமென்றால், பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை, எந்தவித சந்தேகமுமின்றி துல்லியமாக உண்மையான வரலாறாக நம்பலாமா என்ற அச்சம் ஏற்படுகின்றது. மனித நாகரீகங்கள், கண்டுபிடிப்புக்கள் எதுவும் இல்லாத பண்டைய காலத்து கதைகளில் எத்தனையோ திரிபுகளும், குளறுபடிகளும், கற்பனைகளும் ஊடுருவி இருக்கலாம் என்பது தற்போதைய வரலாற்று திரிபுகள் மூலம் எண்ணத் தோன்றுகிறது. வரலாறு என்பது வரலாறுதான். நடந்தது நடந்ததுதான். வரலாற்று சம்பவங்களை எழுதுகின்றவர்கள், அவர்களது இனத்துக்காகவும், மதத்துக்காகவும், பக்கச்சார்பாக எதனையும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. அவ்வாறு திரிபுபடுத்துவது பொய்யான வரலாறாகும் என்பதனை இன்றைய இளைய சமுதாயத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிஹாத் இயக்கத்தினரும் தமிழ் கிராமங்களுக்குள் புகுந்து ஏராளமான தமிழ் மக்களை கொலை செய்தார்கள் என்ற செய்தியை ஆரம்பத்தில் ஓரிரு ஊடகங்கள் பரப்பியது. பின்பு அந்த ஊடகச் செய்திகளை ஆதாராமாகக் கொண்டு கொலைப் பட்டியலையும், திரிபுக் கதைகளையும் பலர் எழுதி வருகின்றனர். கடந்தகால தமிழ் – முஸ்லிம் மக்களின் கசப்புணர்வுகளை அறிந்துகொள்ளாத இன்றைய இளைய சமுதாயத்தினர், இவைகளை உண்மை என்று நம்புகின்றனர். விடயங்களை அறிந்தவன் என்றரீதியில் மட்டுமல்லாது, வரலாறுகளை அலசி ஆராய்ந்து உண்மைகளை இன்றைய இளைய சமுதாயதினர்களுக்கு எத்திவைப்பது எனது கடமையாகும். எனவே அடுத்துவரும் பதிவுகளில் இதுபற்றி ஆராய்வோம். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_548.html தமிழ் ஆயுத இயக்கங்களும், முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலும். ஆரம்பத்தில் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு இருக்கவில்லை. அவர்கள் தனிதுவமிழந்து ஒற்றுமைப்பட முடியாமல் அரசியல் ரீதியில் பலகூறுகளாக பிரிந்திருந்தார்கள். சிங்கள தேசிய கட்சிகள், தமிழ் கட்சிகள், பின்பு தமிழ் ஆயுத இயக்கங்கள் ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிட்டு கல்முனை தொகுதியில் 1956 இல் எம்.எஸ். காரியப்பரும், பொத்துவில் தொகுதியில் எம்.எம். முஸ்தபாவும், 1960 இல் எம்.சி. அஹமட் கல்முனை தொகுதியிலும், எம்.ஈ.எச். முஹமட் அலி மூதூர் தொகுதியில் 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றம் சென்றிருந்தனர். 1970 காலங்களில் தலைவர் அஷ்ரப் அவர்கள் தந்தை செல்வாவின் அரசியலில் ஈர்க்கப்பட்டு இலங்கை தமிழரசு கட்சியிலும் (ITAK), பின்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) ஆகியவற்றில் பயணித்ததுடன், 1976 இல் நடைபெற்ற தமிழரசு பிரகடன வட்டுக்கோட்டை மாநாட்டிலும் அஷ்ரப் அவர்கள் கலந்துகொண்டார். “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தை பெற்றுத் தராவிட்டால், நான் பெற்றுத்தருவேன்” என்று 1977 ம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தலைவர் அஷ்ரபின் பேச்சு பிரபலமாக பேசப்பட்டது. அதாவது அன்றைய காலங்களில் தமிழர்களுக்கென்று தனியாக தமிழீழம் அமைவதனை அஸ்ரப் அவர்கள் ஆதரித்திருந்தார் என்பது இதன் மூலம் புரிகின்றது. 1977 ம் ஆண்டின் பொது தேர்தலில் தமிழர் ஐக்கிய முண்ணியுடன் அஸ்ரப் அவர்கள் MUF என்னும் கூட்டணி அமைத்து சூரியன் சின்னத்தில் கல்முனை, சம்மாந்துறை, மூதூர், புத்தளம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசிய கட்சியின் அலையினால் “சூரியன்” சின்னத்தில் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பளர்களினாலும் வெற்றிபெற முடியவில்லை. 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை (DDC) தேர்தலுக்காக TULF, கிழக்கு மாகாண வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட வேண்டும் என்று அஸ்ரப் கோரியிருந்தார். ஆனால் அஸ்ரப்பின் கோரிக்கையை TULF ஏற்கவில்லை. ஏற்கனவே பல விடயங்களில் முரண்பாடுகள் இருந்த நிலையில், அவைகள் படிப்படியாக அதிகரித்ததுடன், முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் முதன்மை வேட்பாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டதானது அரசியல் திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்களுக்கு தமிழ் கட்சிகளையும், சிங்கள தேசிய கட்சிகளையும் தவிர்த்து, தனியான பாதையில் செல்வதற்கு தீர்மானித்தார். இந்த தீர்மானத்துக்கு தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் உதவிபுரிந்தன. அது பற்றி அடுத்துவருகின்ற பதிவுகளில் அலசி ஆறாய்வோம். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_812.html “முஸ்லிம்களும் தனித்துவமான இனம்” – புலிகளின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் “முஸ்லிம்கள் ஒரு தனியான சமூகமல்ல, தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவர்கள் போன்று அவர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்கள்” என்பதுதான் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர்களது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு பின்பு பல விட்டுக்கொடுப்புக்களுடன் LTTE யினர் முஸ்லிம் தரப்பினருடன், வரலாற்றில் முதன் முதலில் உடன்படிக்கை ஒன்றினை செய்தனர். அந்த உடன்படிக்கையின் காரணமாக ஐ.தே.க. அரசாங்கம் விழித்துக் கொண்டதுடன், தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் நிரந்தர பகைமையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழீழ போராட்டத்தினை தோற்கடிப்பதற்கான தந்திரோபாயங்களை மேகொள்ள ஆரம்பித்தனர். விடுதலை புலிகளுக்கும், வட-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவின் சென்னை நகரத்தில் புலிகளுக்கும் முஸ்லிம் தரப்பினர்களுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதில், தமிழீழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும், அவர்கள் வேறுபட்ட தனியான இனம் என்றும், வட-கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு எவ்வாறு பாரம்பரிய தாயகமாக உள்ளதோ, அதேபோல முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகமாகும். தாயகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றார்களோ, அதேபோல் முஸ்லிம்களும் அனுபவிக்க முழு உரிமையும் உண்டு. நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் அச்சம், பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதத்தினையும் புலிகள் சட்டரீதியாக உறுதிப்படுத்துவார்கள் என்றும், கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள், வட-கிழக்கு இணைப்பின் காரணமாக 17 வீதமாக குறைக்கப்பட்டார்கள். அதனால் மாகாணசபையில் 30 வீதத்துக்கு குறையாத பிரதிநித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன், அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கும் சட்ட ஏற்பாடுகளை செய்தல். அரச காணிப் பங்கீட்டில் கிழக்கில் 35 வீதத்துக்கு குறையாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறையாமலும், வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 5 வீதத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும். கல்வியில் சமவாய்ப்புக்கள் பேணப்படுகின்ற அதேநேரம், விகிதாசாரப்படி வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காக தனியான இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். வடகிழக்கு மாகாணசபையில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை களையும் பொருட்டு ஒரு குடியகழ்வு கொள்கையினை உருவாக்குதல். போன்ற விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டிருந்தது. 1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு இறுதியில் 21.04.1988 திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது. பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் விடுதலை புலிகளின் சார்பில் “கிட்டு” என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களும் கையொப்பமிட்டார்கள். 1990 இல் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்து, இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கும் வரைக்கும் LTTE யினர் முஸ்லிம் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதுபற்றி தொடர்ந்து ஆராய்வோம்........ முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_287.html
  6. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான், எப்போதும் தனது ஆவேசமான பேச்சுகளாலும் அரசியல் கருத்துகளாலும் செய்திகளில் இடம்பிடிப்பவர். ஆனால், தற்பொழுது அவர் அரசியல் மேடைகளைத் தாண்டி, தனது புதிய உடலமைப்பால் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளார். சென்னையில் உள்ள முன்னணி உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் தனது தனிப்பட்ட பயிற்சியாளர்களுடன் இணைந்து, அவர் எடுத்த சிக்ஸ் பேக் புகைப்படம் தற்பொழுது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் சீமான் சிக்ஸ் பேக் என்ற பெயரில் இந்த புகைப்படம் முதன்முதலில் வெளியானது. புகைப்படத்தில் சீமான் தனது சட்டையை உயர்த்தி, மிகத் துல்லியமாகத் தெரியும் தனது சிக்ஸ் பேக் உடலமைப்பைக் காட்டியபடி புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார். 59 வயதைக் கடந்த நிலையிலும், இளைஞர்களுக்கே சவால் விடும் வகையில் அவர் கொண்டுவந்துள்ள இந்த மாற்றம் ஃபிட்னஸ் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. சீமான் திடீரென இந்த உடலமைப்பைப் பெறவில்லை; அவர் நீண்ட நாட்களாகவே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நாள்தோறும் காலையில் வாக்கிங், ஜாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமான், ஜிம்மில் மிகக் கடுமையான ஹெவி வெயிட் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவரது ஒொர்க்அவுட் வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வந்தன. அதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது இந்த சிக்ஸ் பேக் ரிசல்ட் கிடைத்துள்ளது. தம்பிகள் கடின உழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வரும் சீமான் தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களையும் கட்சித் தொண்டர்களையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி சீமான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், இந்த வயதிலும் அண்ணனின் அர்ப்பணிப்பும், கட்டுக்கோப்பும் வியக்க வைக்கிறது எனப் பாராட்டி, புகைப்படத்தை மிக வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு புறம், சீமானின் அரசியல் எதிர்ப்பாளர்கள் இதைக் கலாய்த்தும், மீம்கள் மூலமாகவும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அவரது வழக்கமான மேடைப் பேச்சுகளுடன் ஜிம் கலாச்சாரத்தை இணைத்து பல நகைச்சுவையான மீம்கள் இணையத்தில் உலா வருகின்றன. 50-களின் இறுதியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவர், தனது உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக மாற்றி சிக்ஸ் பேக் வைப்பது சாதாரண விஷயமல்ல. சீமானின் இந்த பிட்னஸ் பயணம் வயது என்பது வெறும் எண்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது https://tamil.samayam.com/tamil-nadu/news/seeman-six-pack-how-the-59-year-old-ntk-leader-achieved-a-ripped-physique/articleshow/133199706.cms?story=9
  7. ஆடை சர்ச்சையை எதிர்நோக்கிய முஸ்லிம் பெண் ஊழியர்கள் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மாலையிட்டு வரவேற்பு https://www.importmirror.com/2026/08/blog-post_483.html
  8. அதே ஆடையுடன் வேறு வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஏன் முடியாது?” – சட்டத்தரணி முஅஸ்ஸம் கேள்வி நூருல் ஹுதா உமர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களின் சீருடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்றது. வைத்தியசாலை நிர்வாகத்துக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றது. விசாரணையின்போது முறைப்பாட்டாளர்கள் அனைவரும் பிரசன்னமாகியிருந்ததுடன், அவர்களது சார்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆஜராகியிருந்தார். பிரதிவாதிகள் ஐவரில் வைத்தியசாலை பணிப்பாளரைத் தவிர்ந்த நால்வரும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்ததுடன், அவர்களது சார்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் காப்பு உத்தியோகத்தராகப் பங்கேற்றிருந்தார். விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், குறித்த சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான விளக்கங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்ததாக தெரிவித்தார். குறிப்பாக அரசியலமைப்பின் உறுப்புரைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த வைத்தியசாலை தரப்பு, அரசாங்கத்தின் தாபன விதிக்கோவை, சுற்றறிக்கைகள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் குறிப்பிட்டார். அதேவேளை, அரசியலமைப்புக்கு முரணானதாக ஏதேனும் சுற்றறிக்கைகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும், அது தொடர்பான இறுதி தீர்மானங்களை சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியசாலை தரப்பு தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும், இவ்விடயம் தொடர்பில் தாம் உரிய உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்ததாக சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு வேறு ஒரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்தத் தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், இடமாற்றக் கடிதமும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். இந்நிலையில், அவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு எந்த ஆடையுடன் பணிக்கு சமூகமளித்தார்களோ, அதே ஆடையுடன் வேறு ஒரு வைத்தியசாலையில் பணிக்கு அறிக்கையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுவது பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். “குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஆடையாக இருந்திருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு ஒரு வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட முடியும்?” என அவர் கேள்வியெழுப்பினார். வேறு ஒரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்படுவதன் மூலம் குறித்த ஆடை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு நிலைப்பாடு உருவாகிறது எனவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான நிலையில், அதே ஆடையுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மட்டும் அவர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். “இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. அல்லது இலங்கையின் ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு பிரதேசத்தில் இந்த வைத்தியசாலை அமைந்துள்ளதா என்ற கேள்வியையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். ஒரே பணியாளர்கள் ஒரே ஆடையுடன் வேறு ஒரு அரச வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏன் செயல்வடிவம் வழங்க முடியவில்லை என்பதை அரசாங்கம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சுற்றறிக்கைகளை மேற்கோள் காட்டி அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அதிகாரிகள் விலக முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தும் வகையில் அறிந்தும் அறியாமலும் செயற்படும் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற பதிவுகள் மற்றும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவது ஆரோக்கியமான, கற்றறிந்த சமூகத்துக்கு பொருத்தமானதல்ல என அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தாம் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதாகவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். சுற்றறிக்கைகளுக்கும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் முரண்பாடு தொடர்பில் உரிய அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து, நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினை குறித்த சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை என்றும், சுகாதார சேவையில் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இந்த விடயத்தை பரந்துபட்ட அடிப்படையில் ஆராய்ந்து, அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய தெளிவானதும் நிரந்தரமானதுமான கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் வலியுறுத்தினார். ஊடக விடயங்களில் சட்டத்தரணிகளான எம்.என்.எம். நப்ரத் மற்றும் எம்.இசட்.எம். றியாஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர். https://madawalaenews.com/45952/ கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட இடமாற்றம் ஒரு தவறான முன்னுதாரணம் கல்முனை வைத்தியசாலையில் வைத்திய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக உருவான சர்ச்சைக்கு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்றை வழங்குவதற்குப் பதிலாக, இடமாற்றத்தை தீர்வாக முன்வைத்திருப்பது இன்ர அரசாங்கத்தின் நிர்வாக இயலாமையை தெளிவாகக் காட்டுகிறது. ஒரு கலாச்சார ஆடை தொடர்பான நிர்வாகப் பிரச்சினை, இன்று ஒரு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பிரச்சினையை ஆரம்பத்திலேயே உரிய முறையில் கையாளத் தவறிய அரசின் நிர்வாக அணுகுமுறையே. அரசாங்கத்தின் பொறுப்பு, ஒரு பிரச்சினை எழுந்தவுடன் அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்லது இடமாற்றம் செய்வது அல்ல. மாறாக, உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து, சட்டம், நிர்வாக விதிமுறைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்வு காண்பதாகும். குறிப்பாக, இங்கே இடமாற்றத்தை ஒரு தீர்வாகப் பயன்படுத்தியிருப்பது மிகவும் பிழையான முன்னுதாரணத்தை உருவாக்க்குவதுடன் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற ஒரு வாய்ப்பாகவும் அமையும். நாளை எந்தவொரு அரச நிறுவனத்திலும் ஒரு கொள்கை அல்லது நடைமுறை தொடர்பாக ஊழியர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இடமாற்றம் செய்வது வழக்கமாகிவிட்டால், அது நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக இருக்காது. மேலும், இது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே “எங்களுடைய பிரச்சினைகளை நியாயமாகக் கேட்காமல் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்ற மனநிலையை உருவாக்கக்கூடும். குறிப்பாக இன, மத உணர்வுகள் தொடர்புபடக்கூடிய விடயங்களில் அரசாங்கம் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது முடிவை மீளாய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த கலாச்சார ஆடைகளை அணிவதற்கான நியாயமான தீர்வொன்றை வழங்க வேண்டும். இது கல்முனை வைத்தியசாலையில் பணிபுரியும் சில ஊழியர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. எதிர்காலத்தில் அரச நிறுவனங்களில் நிர்வாகம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாகவும் இது அமைகிறது. அதனால், இந்த விவகாரத்தில் பழிவாங்கும் மனப்பான்மையோ, அரசியல் அழுத்தமோ இல்லாமல், நல்லாட்சி, சமத்துவம், நீதி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வே வழங்கப்பட வேண்டும். சாதாரண பிரச்சினைக்குக் கூட நியாயமான தீர்வு வழங்க முடியாமல், இடமாற்றத்தைத் தீர்வாகக் காட்டுவது இவ்வாட்சியின் பலத்தை அல்ல நிர்வாகத்தின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. ஹிதாயத் சத்தார் – மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர். https://madawalaenews.com/45933/ உண்மையில் ர‌வூப் ஹ‌க்கீம், ரிசாத் ப‌தியுதீன் போன்ற‌ முட்டாள் முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் உல‌கில் இருக்க‌ முடியாது ; முபாற‌க் மெளலவி இந்த‌ நாட்டின் வ‌ர‌லாற்றில் எந்த‌க்க‌ட்சி நிறைவேற்று அதிகார‌ம் கொண்ட‌ ஜ‌னாதிப‌தியாக‌ இருக்கிறாரோ அவ‌ரின் க‌ட்சிதான் பொதுத்தேர்த‌லில் வெல்லும். ஜே ஆர், ச‌ந்திரிக்கா, ம‌ஹிந்த‌ போன்றோரின் க‌ட்சிக‌ள் இப்ப‌டித்தான் ஆட்சியில் இருந்த‌ன‌. அதனை மீறி எதிர்க்க‌ட்சி ஆட்சியை பிர‌ட்டி ஆட்சிக்கு வ‌ந்தாலும் நீடிக்க‌ முடியாது என்ப‌த‌ற்கு 2003 ர‌ணிலின் ஆட்சி க‌லைப்பு சொல்கிற‌து. இதுவெல்லாம் தெரிந்தும் 2024ம் ஆண்டு ஜ‌னாதிப‌தி தேர்த‌லில் அநுர‌குமார‌ வென்று ஜ‌னாதிப‌தி ஆன‌தும் இந்த‌ முஸ்லிம் க‌ட்சிக‌ள் என்ன‌ செய்திருக்க‌ வேண்டும்? புத்தி இருந்தால் அநுர‌ குமார‌ க‌ட்சியுட‌ன் இணைந்து பொதுத்தேர்த‌லில் போட்டியிட்டிருக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் த‌னித்து போட்டியிட்டிருக்க‌ வேண்டும். அப்ப‌டி செய்யாம‌ல் தோற்றுப்போன‌ ஜ‌னாதிப‌தி வேட்பாள‌ரின் க‌ட்சியில் இணைந்து பொதுத்தேர்த‌லில் போட்டியிட்ட‌மை எவ்வ‌ள‌வு பெரிய‌ முட்டாள்த‌ன‌ம். அந்த‌ நேர‌த்தில் நான் ரிசாத் பதியுதீனுக்கு போன் செய்து இந்த‌ ய‌தார்த்த‌த்தை சொன்னேன், கேட்க‌வில்லை. த‌னித்து போட்டியிட்டு வென்றிருந்தால் ச‌ஜித்தின் அடிமை க‌ட்சி என‌ இல்லாம‌ல் அர‌சிட‌ம் ஒரு கௌர‌வ‌ம் இருந்திருக்கும். அப்ப‌டி சுத‌ந்திரமான‌ க‌ட்சிக‌ளாக‌ பாராளும‌ன்றில் இருந்திருந்தால் க‌ல்முனை ஆதார‌ வைத்திய‌சாலையில் ந‌டை பெற்ற‌ முஸ்லிம் பெண் ஊழிய‌ர்க‌ளுக்கு எதிரான‌ இன‌வாத‌ செய‌ல்க‌ளுக்கு அர‌சிட‌ம் கௌர‌வ‌மான‌ தீர்வை பெற்றிருக்க‌ முடியும். ர‌வுப் ஹ‌க்கீம் அடிக்க‌டி சொல்லும் வார்த்தைதான் நாங்க‌ள் க‌ண்ணை திற‌ந்து கொண்டு படுகுழியில் விழுந்து விட்டோம் என்ப‌து. அவ‌ர் பின்னால் போன‌ ரிசாத் ப‌தியுதீனும் அதே ப‌டு குழியில் விழுந்து ப‌டு குழியில் விழுந்த‌ யானை வெளிவ‌ர‌ முடியாம‌ல் த‌விப்ப‌து போல் த‌விக்கிறார். முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ளிடம் ப‌ண‌ம், ப‌த‌விக்கான‌ வெறி இருக்கும் வ‌ரை ச‌மூக‌ அர‌சிய‌லில் வெல்ல‌ முடியாது. முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி த‌லைவ‌ர் இல‌ங்கை உல‌மா க‌ட்சி, ஸ்ரீல‌ங்கா ஜ‌ம்மிய‌த்துல் உல‌மா க‌வுன்சில். https://madawalaenews.com/45928/
  9. ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் விரோத போக்கு காரணமாகத்தான் முஸ்லிம்கள் தம் பாதுகாப்புக்காக சிங்கள ராணுவத்தை ஆதரித்தனர். இப்போது யுத்தம் முடிந்து ஆயுதம் அழிந்த பின்னும் கல்முனையில் சில இனவாத தமிழர்கள் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை சீண்டுகிறார்கள். முஸ்லிம்க‌ளும் த‌மிழ‌ர்க‌ள் என‌ சொல்லிக்கொண்டே முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இன‌வாத‌ த‌மிழ‌ர் செய‌ற்ப‌டுவது முறையா? அப்ப‌டியானால் சிம்க்க‌ள‌வ‌ரின் இன‌வாத‌ம் ப‌ர‌வாயில்லையே. அவ‌னின் மொழியும் ம‌த‌மும் வேறு. த‌மிழ‌ர்க‌ளின‌தும் முஸ்லிம்க‌ளின‌தும் மொழி ஒன்று. இர‌ண்டுமே இந்நாட்டின் சிறுபான்மை. இருவ‌ரும் அடிவாங்கிய‌து சிங்க‌ள‌த்திட‌ம். அப்ப‌டியிருந்தும் இன்ன‌மும் புத்தி வ‌ர‌வில்லையா? இச்செயல்க‌ள் மீண்டும் சிங்கள அரசை முஸ்லிம்கள் நெருங்குவதற்கே வழி வகுக்கும். கிழ‌க்கு மாகாண‌ ச‌பையிலும் சிங்க‌ள‌ அர‌ச‌ க‌ட்சியே சிற‌ந்த‌து என‌ முஸ்லிம்க‌ள் சிந்திக்க‌ வேண்டி வ‌ரும். அப்போது முஸ்லிம்க‌ளை பார்த்து சிங்க‌ள‌ க‌ட்சியிட‌ம் கிழ‌க்கை ஒப்ப‌டைத்து விட்ட‌தாக‌ ஒப்பாரி வைக்க‌ வேண்டாம். இந்த‌ உண்மையை த‌மிழ் க‌ட்சிக‌ளும் முஸ்லிம் க‌ட்சிக‌ளும் புரிந்து கொள்ள‌ வேண்டும். முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி த‌லைவ‌ர் இல‌ங்கை உல‌மா க‌ட்சி. https://madawalaenews.com/45541/
  10. சிங்கத்த இழுக்காம இரிக்க ஏலாவா எங்களுக்கு ஐசே பட்ட சிரிப்புவா, பெளறு வலிக்கிதுவா
  11. அல்வாயன் ஐயா ஜுன் மாதம் முழுவதும் கன‌டாவில் தான் இருந்தேன், ஸ்கார்பரோ, மார்கம் ஸ்டீல், பிரம்டன் பகுதிகளில் அலைந்து திரிந்தேன். எனக்கு கொத்து நாதத்துடன் அடிக்க தெரியாது ஆனால் விசிட் விசா தந்தார்களே.
  12. ஏன் இவர்கள் இப்படியான தவறான வழிகளை தேர்ந்தெடுத்து போகின்றார்கள்? பிறகு ஏஜசிக்காரர்களை சபிக்கின்றோம். இந்த காசை வங்கியில் போட்டிருந்தால் 10% வட்டி வரும்
  13. ரசோ நான் சமீபத்தில் USA வந்த்போது இங்கு ஒருவரிடம் கேட்டேன். நியுயோர்க்கில் பிறந்து வள‌ர்ந்து வசிக்கும் ஒருவ்ர் Connecticut இருக்கும் yale பல்கலைகழகத்தில் படிக்க 3 மடங்கு செலுத்தி படிக்க வேண்டும் (வெளி நாட்டு மாணவர்களை போல்) என்று சொன்னார். இது உண்மையா? அப்ப்டியானால் ஒரே நாட்டுக்குள், வேறு ஒரு மாநில‌த்திற்கு சென்று படிக்க ஏன் அவ்வளவு பணம் கட்ட வேண்டும்? இரு நியாமற்றது அல்லவா?
  14. ஒவ்வொருவரின் அனுபவங்களையும் கேட்கும்போது மிகவும் பயங்கரமாக இருக்கின்றது. இப்படியெல்லாம் இலங்கையில் நடந்ததா என நம்ப முடியவில்லை. 1987ல் நான் 9ம் தரம் படிக்கும் காலத்தில் ஜேவிபி போரட்டம் நடந்து கொண்டிருந்தது என நினக்கின்றேன். நிறைய பேர் வெளிநாடுகளுக்கு செல்ல கொழும்பில் ஏஜெசிக்கு காசு கட்டி வந்து நிற்பார்கள். பலர் கொழும்பிலும் பிடிபட்டு சிறைக்கு இழுத்து செல்லப்படுவார்கள். மறக்க முடியாத காலங்கள்.
  15. மிகவும் கவலையான செய்தி. இவ்ர் உணர்ச்சிவசப்பட்டு எழுதிவிட்டர் என நினக்கின்றேன். பல நல்ல இதயம் கொண்ட‌ முஸ்லீம்கள் இவரை விடுதலை செய்ய எடுத்த முயற்சி பாராட்டதக்கது. அரபு நாடுகளில் பல‌ காலம் வேலை செய்தேன். நான் பல முஸ்லீம்களுடன் ஒரே அரையில் வசித்தபோது பல சந்தர்ப்பங்களில் விவாதிததுண்டு முரண்படுவதுண்டு. ஆனால் மிகவும் கவனமாக இருப்பேன். இவர் செய்தது மிகவும் பாரதூரமான குற்றம். இந்தளாவோடு இவரை விட்டார்கள் என நினைத்து சந்தோசப்படுகின்றேன்.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.