-
வவுனியா வெடுக்குநாறிமலையில் புத்தரின் சிலை வைக்கப்பட்டு வழிபாடு ; பெருமளவான பௌத்தமக்கள் பங்கெடுப்பு
நீயா , நானா ஒரு கை பார்ப்போம். இதுவே ஆன்மீக தேடல். படைத்தவன் என்று ஒருவனை படைத்து, அங்கும் வெறுப்புகளை வளர்ககும் அதி உயர் ஆன்மீகம் தேடல்.
-
ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
இலங்கையின் முக்கிய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நாடக கலைஞர். அசோக ஹந்தகம அவர்களின் பதிவு. நேற்று Netflix-ல் Best of the Best என்ற படத்தைப் பார்த்தேன். இது மிகவும் அழகான ஒரு இளையோர் திரைப்படம். அதில் நடித்திருக்கும் இளம் நடிகர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அவர்களுடைய நடிப்பு மிகவும் இயல்பாகவும் அழகாகவும் இருக்கிறது. அவர்களைப் பார்ப்பதே ஒரு மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு முக்கிய கதாபாத்திரங்கள் உள்ளனர் — அஞ்சலி மற்றும் மாயா. மாயா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மைத்ரேயி ராமகிருஷ்ணன் (Maitreyi Ramakrishnan), மிகவும் வசீகரமான, அன்பான இளம் நடிகை. சமீபத்தில் எங்கள் Facebook-ல் சிலர் அவர் ஒரு நேர்காணலில் தனது தேசிய அடையாளத்தை “Tamil Eelam” என்று குறிப்பிட்டதைப் பற்றி மிகவும் கொந்தளிப்பதாகத் தெரிகிறது. அவருடைய பெற்றோர் போரின் காரணமாக இலங்கையை விட்டு கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். எனவே, அவர்கள் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள். மைத்ரேயி கனடாவில் பிறந்தவர்; அதிகாரப்பூர்வமாக அவர் கனடியர். (ChatGPT அவரை இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகிறது.) போர் அல்லது வேறு சூழ்நிலைகளின் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்குக் குடிபெயர்ந்தவர்களின் குழந்தைகள் பலரும் இதுபோன்ற ஒரு கேள்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது: நான் எந்த நாட்டுக்குரியவன்/உரியவள்? நான் இப்போது வாழும் நாட்டுக்கா, அல்லது என் பெற்றோர் பிறந்து வளர்ந்த நாட்டுக்கா? சிலர் தங்களுடைய அதிகாரப்பூர்வ தேசிய அடையாளத்தை ஏற்றுக்கொண்டு, அதைப் பற்றி அதிகம் சிந்திக்காமல் தங்கள் வாழ்க்கையைத் தொடர்கிறார்கள். ஆனால் மைத்ரேயியைப் போன்ற ஒருவர் ஒரு பொது நபராக இருக்கும்போது, அடையாளம் குறித்த கேள்விகள் சில சமயங்களில் சிக்கலானதாக மாறக்கூடும். அவர் தன்னைத் தமிழராக அடையாளப்படுத்திக் கொள்கிறார்; அவர் தமிழ் பேசாவிட்டாலும் கூட. அவருடைய தோற்றத்தில் அவரது தெற்காசியப் பாரம்பரியத்தின் அடையாளங்கள் தெரிகின்றன. அவருடைய பெற்றோர் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலையால் அங்கிருந்து வெளியேறியவர்கள். மேலும், அவர் வளர்ந்தபோது தமது குடும்பத்தின் கடந்தகாலம் மற்றும் இலங்கை பற்றிய கதைகளைக் கேட்டே வளர்ந்திருக்கலாம். அந்தக் கதைகளும் அனுபவங்களும் அவருடைய சொந்த அடையாள உணர்வை உருவாக்கியிருக்கலாம். அது அவருடைய உரிமைதானே. அதனால் நமக்கு ஏன் அது தொந்தரவாக இருக்க வேண்டும்? எனக்கு எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால், என் படங்களில் அவரை நடிக்க வைப்பேன். அவர் மிகவும் திறமையான நடிகை. அசோக ஹந்தகம (Asoka Handagama) இலங்கையின் முக்கிய திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், நாடக கலைஞர். Asoka Handagama https://www.facebook.com/share/1BjMXHK8nP/?mibextid=wwXIfr
-
ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
https://www.imdb.com/de/title/tt16478058/?ref_=ttrt_ov_bk Rate in this page. 10 / 10 - I think you need to have an Amazon Prime accont. Please create a trial accont. Sorry, can`t write in tamil
-
ஈழத் தமிழ் பெண் என அடையாளப்படுத்தியதற்காக மைத்ரேயி ராமகிருஷ்ணனுக்கு எதிரான பேரினவாத இணையத் தாக்குதல்களும், ‘ரேட்டிங் பாம்பிங்’ அரசியலும்
மைத்திரேயி தனது பெற்றோரின் பூர்வீகம் ஶ்ரீலங்கா என்பதை தெரிவித்து, “கனேடியத் தமிழ் என்பதே எனது அடையாளம் என்று கூறியுள்ளார். பெற்றோரின் பூர்வீகம் ஶ்ரீலங்கா என்பதால் அவர் தன்னை ஶ்ரீலங்கன் என்று அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு இல்லை. “என் பெற்றோர் இலங்கையைச் சேர்ந்தவர்கள்; ஈழத்தமிழர் எனது பண்பாட்டு அடையாளம்; நான் பிறந்து வளர்ந்து குடியுரிமை பெற்ற நாட்டின் தேசிய அடையாளம் கனடா” என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். இவை மூன்றும் எந்த வகையிலும் ஒன்றுற்கொன்று முரணாணவை அல்ல. அத்துடன், மைத்திரேயி தனது அடையாளம் தமிழ் என்பதை இப்போது ஒன்றும் புதிதாக்க் கூறவில்லை. 2019 ம் ஆண்டிலேயே, தனது 17 வயதில், தன்னை “தமிழ் கனேடியர்” என்று தெளிவாக அடையாளப்படுதிய விடயம் கனேடிய பத்திரிகைகளில் கூட அன்று வெளிவந்தது. சிங்கள மக்களை வெறுக்கிறேன் என் றோ, புலிகளை ஆதரிக்கிறேன் என்றோ அவர் கூறவில்லை. அத்துடன் ஈழம் என்பது இலங்கையை குறிக்கும் பண்டைய சொல். இதை கூட சிங்கள இனவாதிகளுக்கு புரியவில்லை. ஈழசிரோண்மணி என்ற வாசகம் ஶ்ரீலங்கா தேசிய கீதத்திலேயே உள்ளது பொதுவாக, கடும் தேசியவாத மனநிலையில் இருப்பவர்களின் இயல்பு அவர்கள் எந்த இனத்தை சேர்தவர்கள் என்றாலும் அறிவுபூர்வமாக சிந்திக்கமாட்டார்கள். தாம் சிந்திக்கும் கோணத்தில் மட்டுமே மற்றவர்களும் சிந்திக்க வேண்டும் என்றே எப்போதும் அடம் பிடிப்பார்கள். தாம் சிந்திக்கும் கோணத்தில் சிந்திக்காத தனது இன மக்களை நோக்கி கூட அவதூறுகளை வீசுவார்கள். இங்கும் அது தான் நடந்துள்ளது. அதன் வெளிப்பாடே மைத்திரேயி மீதான சிங்கள இனவாதிகளின் சமூக ஊடக தாக்குதல்களையும் இந்த கோணத்திலேயே பார்கக வேண்டியுள்ளது. இந்த சில்லறை தாக்குதல்களுக்கு உணர்சசிவசப்பட்ட எதிர்வினையாற்றுவதற்குஒ பதிலாக அறிவுபூர்வமான நிதானமான SMART எதிர்வினையுடன் கடந்து போவதே சரியானதும், வினைதிறனானதுமாகும். மைத்திரேயி தமிழ் இனத்திற்கு பெருமை சேர்தத ஒரு அடையாளம். நான் எப்போதும் கூறிவருவது போல, போல எமது தமிழ் இளம் சமூகம் இவரை போல பல உலகத்தின் முன்னிலையில் பல்வேறு துறைகளில அவர்கள் மிளிரவேண்டும். புலம் பெயர் நாடுகளில் மட்டுமல்ல தாயகத்திலும் கூட மந்தைகள் போல் ஒரே கோணத்தில் சிந்திக்காது இவரை போல சுயமாக சிந்திக்கும், உலகத்தின் போக்குடன் ஒத்திசைந்து இயங்கும், ஒரு ஒரு அறிவார்ந்த சிந்தனையுடன் உலகத்தின் முன்னால் தலை நிமிர்ந்து நிற்கும் ஒரு அறிவுசார் தமிழ் சமூகத்தை கட்டியெழுப்புவதன் மூலமே இலங்கை தீவில் தமிழர்கள் தமது அடையாளத்துடன் கெளரவமாவும் தன்னம்பிக்கையுடனும், ஒரு உயர்தர அரசியலை முன்னெடுக்கக் கூடிய எதிர்காலத்தை உருவாக்க முடியும். .
-
விடுதலைப் புலிகள் அமைப்பை அரசியல் ரீதியாகவும் கட்டமைப்பு ரீதியாகவும் உடைத்தது நான்தான் - ரணில்
தமிழ் மக்களின் எதிர்காலம், அவர்களின் அரசியல் பலம் என்பன எப்படி நாசமாய்ப் போனாலும் பரவாயில்லை, நம்ம கபாலியை காப்பாறினா போதும். இதுவே தமிழ் தேசியம் பேசுவதாக கூறிக்கொள்வோரின் உண்மையான நோக்கம்.
-
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
இப்படியான மனிதாபிமானம் அற்ற சட்டங்கள் இருக்கும் நாடுகளுக்கு தமது மக்களை வேலைக்கு அனுமதிக்காத பொது கொள்கை ஒன்று தெற்காசிய நாடுகள் அனைத்தும் எடுக்க வேண்டும். அதன்படி சட்டம் மூலம் இதனை தடை செய்ய வேண்டும் . இதனால் ஏற்படும் அந்நிய செலாவணி இழப்பை ஈடுகட்ட வேறு வருமான வழிவகைகளை ஏற்படுத்தலாம். வேறு வகையில் வேலை வாய்பபுகளை தமது பிரஜைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் . ஏற்கனவே ரிசானா என்ற 18 வயதிற்கு குறைந்த பெண் தெரியாமல் செய்த தவறுக்காக அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட போதே இலங்கை விழிப்படைந்திருக்க வேண்டும். அமெரிக்கா தனது குடிமக்கள் யாராவது சவுதியில் குற்றம் இழைத்தால் அவர்களைக்கு அமெரிக்க சட்டப்படி தண்டனை வழங்க அமெலிக்காவுக்கு அனுப்பும் வகையில் ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. அதற்காக அமெரிக்கா போல் நாம் வலுவான நாடு அல்ல என்பதால் வேறு வகையில் தடை நடவடிக்கைகளை ஏற்படுத்த வேண்டும்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
அவ்வாறு நான் கூறவில்லையே! பிறகும் ஏன் அதை திரும்ப கூறுகின்றீர்கள்? தமிழர்கள் தமது தனித்துவமான அடையாளத்தையும் உரிமைகளையும் பாதுகாத்துக் கொண்டு அரசியல் செய்யக்கூடாது என்று நான் கூறவில்லை. நான் கேட்பது, அந்த அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய தலைமை, கடந்தகாலத் தலைமைகளின் தோல்விகளில் இருந்து எதைக் கற்றுக்கொண்டுள்ளது என்பதுதான். தமிழர் அரசியல் இன்று எதிர்கொள்ளும் இக்கட்டான நெருக்டியான நிலையை நோக்கி அழைத்து சென்றதே முன்னைய தலைமைகள் தான். அப்படியிருக்க, அதே தவறுகளை நியாயப்படுத்தியபடி அதை புனிதப்படுத்தபடி, அதே தவறுகளுடன் தற்போதைய தலைமையும் பயணிக்கும் போது அநு தமிழ் மக்களை மேலும் நெருகடிக்குள் தள்ளும். அந்த நெருக்கடிகள் அவர்களது வாழ்வியல் தேவைகள் என்பன எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதன் விளைவே, கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் என்பதைத் நீங்கள் உணரவில்லையா? தமது வாழ்வியல் தேவைகளை எல்லாம் கடுமையான யுத்தம் நடந்த வேளைகளில் கூட நிறைவாக நிறைவேற்றி விட்டு இன்று பேரக்குழந்தைகுடன் கொஞ்சிக்கொண்டிருக்கும் வயதான புலம்பெயர் தீவிர தமிழ் தேசியவாதியின் காலாவதியான மனநிலையை போல் தாயகத்தில் தற்போது வளர்ந்துவரும் இளம் சமுதாயத்தின் மன நிலை இருக்காது. அது விரக்தியுறும் போது போது தமிழர் எதிர்காலத்துக்கு பாதகமான அரசியல் நிலைமையே அங்கு ஏற்படும் என்ற எச்சரிக்கை உணர்வு நமக்கு வேண்டாமா? தமிழராக உணர்வது என்பதும் ஒரு குறிப்பிட்ட தேசியவாத அரசியல் உத்திகளை ஆதரிப்பது என்பதும் ஒன்றல்ல. எனது வாதம், “தமிழராக இருப்பதை விடுத்து இலங்கையராக வாழுங்கள்” என்பதல்ல. மாறாக எனது வாதம்” தமிழராக இருப்பதையும் தமிழ் மக்களுக்காக அரசியல் செய்வதையும் தொடரலாம். ஆனால், அதற்காக கடந்தகாலத்தில் தோல்வியடைந்த அரசியல் முறைகளே மீண்டும் மீண்டும் பின்பற்ற வேண்டிய கட்டாயம் இல்லை என்பதாகும். அடையாளத்தை பாதுகாப்பது வேறு, அந்த அடையாளத்தின் பெயரில் ஒரு குறிப்பிட்ட அரசியல் உத்தியை புனிதப்படுத்தி அதன் நடைமுறை சாத்தியத்தை கூட உணராது அதை விமர்சனமின்றி தொடர்வது வேறு.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
@goshan_che கடந்த 3 பதிவிலும் நீங்கள் என்னிடம் கேட்ட கேள்விகளின் சராம்சம் , புலிகள் வேறு மக்கள் வேறு, புலிகள் விட்ட தவறுக்கு தமிழ் மக்கள் சிலுவை சுமக்க வேண்டுமா என்பதாகும். கோஷான், நானும் அதை தானே எனது பதிவுகளில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறேன். இன்றைய தமிழ் மக்கள், புலிகள் தவறுக்காக மட்டுமல்ல, முன்னைய அனைத்து தமிழ் தலைமைகளின் தவறுகளுக்காகவும் சிலுவை சுமக்க வேண்டும் என்றுமே நான் கூறவில்லை. ஆனால் புலிகளின் அரசியலை இன்றும் ஆதரிக்கும், அல்லது போற்றும் தலைவர்களின் அரசியல் பொறுப்பை நாம் கேள்வி கேட்கக்கூடாதா? மக்கள் மீது கூட்டுக் குற்றப்பொறுப்பு சுமத்துவது அநியாயம்; ஆனால் அரசியல் தலைமை மீது வரலாற்றுப் பொறுப்பையும் கொள்கைத் தொடர்ச்சியையும் பற்றி கேள்வி எழுப்புவது ஜனநாயகத்தின் இயல்பான பகுதியாகும். நான் தமிழ் மக்களை புலிகளின் தவறுகளுக்காக தண்டிக்க வேண்டும் என்று கூறவில்லை. மாறாக, புலிகள் என்று மட்டுமலல்லாது, அதற்கு முந்தைய தலைமைகளின் தவறுகளிலிருந்தும் இன்றைய தமிழ் அரசியலை கொண்டு செல்லும் புலம் பெயர் , தாயக அரசியல் தலைமைகள் அரசியல் பாடங்களை கற்றுக்கொண்டு தம்மை திருத்திக் கொள்ள வேண்டும் என்பதைத்தான் கூறுகிறேன். புலிகளின் தவறுகளுக்காக இன்றைய தமிழர்கள் பொறுப்பல்ல என்றால், புலிகளின் அவர்களின் அரசியல் மரபை இன்றைய தமிழ் தலைமை தனது அரசியல் நியாயப்படுத்தலுக்காக பயன்படுத்தி அந்த தவறுகளை நியாயப்படுத்தியவாறு தமது அரசியலை செய்யும் போது , அந்த மரபின் தவறுகளையும் ஏன் விமர்சனத்துக்கு உட்படுத்தக்கூடாது? தமிழர்களின் உரிமைக் கோரிக்கைகள் தனித்துவமான நியாயத்தை உடையவை. அந்த நியாயத்தை புலிகளின் அரசியல் முறைகளிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும் என்ற உங்கள் கூற்றுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். அதேபோல, இன்றைய தமிழ் அரசியலும் புலிகளின் வரலாற்றை விமர்சனமின்றி பின்பற்றாமல், அதன் வெற்றிகளையும் தோல்விகளையும் மதிப்பீடு செய்து புதிய ஜனநாயகப் பாதையை உருவாக்க வேண்டும். அதை வெளிபடையாக செய்ய தற்போதைய தமிழ் தேசியம் பேசுவோர் தயாரா? இல்லை என்பது பதிலானால், இவர்கள் தமிழ் மக்களின் எதிர்காலத்தைபற்றி கிஞ்சித்தும் கவலைப்படாது தமது சுயநல அரசியலை மட்டும் செய்கிறார்கள் என்று அர்த்தம்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
@goshan_che நீங்கள் கூறுவது போல், எந்த அரசியல் தீர்வும் இன்றி இலங்கை தேசியத்துக்குள் கரையும் கருத்தியலை நான் கொண்டிருக்கவில்லை. அப்படி நான் எங்கும் எழுதவும் இல்லை. என்னை அடிப்பதற்கான ஆயுதமாக, நான் அவ்வாறான கருத்தியலை கொண்டிருப்பதாக நீங்கள் பல முறை கூறியுள்ளதால், அவ்வாறான தொனிபட எங்காவது எனது கருத்துக்கள் இங்கு வந்ததா என்பதும் எனக்கு ஞாபகம் இல்லை. அப்படி ஏதாவது வந்திருந்தால் எனது மன்னிப்பை உங்களிடம் கோருகிறேன். ஆனால், இந்த நிலை வந்ததற்கு இதுவரையான அத்தனை அரசியல் தலைமைகளுமே காரணம். அவர்களிடம் தான் உங்கள் அதிருப்தியைக் காட்ட வேண்டுமேயன்றி என்னிடம் அல்ல. இன்று வரை அவர்கள் தமது போக்கை மாற்றாது அதே தவறுகளுடன் தான் பொறுப்பற்று பயணிக்கின்றார்கள். அது நீங்கள் விரும்பாத அந்த நிலையை நோக்கியே தமிழ் அரசியலை தள்ளுகிறது. புலம் பெயர் தாயக அரசியல் செய்வோர் ஒன்றாக சேர்ந்து தமது கற்பனாவாதங்களை களைந்து நடைமுறை சாத்தியமான ஒரு தீர்வை நோக்கிய உள்ளூர் மற்றும் சர்வதேச அரசியலை செய்யவேண்டும். அந்த அரசியல் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வை கடந்து செல்ல முடியாத ஒரு இக்கட்டான இராஜதந்திர அழுத்தத்தை இலங்கை அரசுக்கு ஏற்படுத்துவதாக அமையவேண்டும், அதே வேளை வட கிழக்கு அபிவிதித்திகளுக்கு முட்டுகட்டை போடுவதாக அமைய கூடாது. என்பதே எனது கருத்தாகும். ( சோறா சுதந்திரமா என்ற உசுபேற்றல்கள் வேண்டாம்) தமிழ் மக்களின் ஆரோக்கியமான இருப்பை வட கிழக்கில் பலப்படுத்துவதே இன்றைய நிலையில் மிக முக்கியபானதே தவிர தமது சொந்த திருப்திக்காகவும் பொழுது போக்கிற்காகவும் முக்கியமாக புலம் பெயர் அரசியல் செய்வோர் மேற்கொள்ளும் கற்பனாவாத அரசியல் அல்ல என்பதே எனது கருத்து. இதை மேற்கூறிய தரப்புகள் தொடர்வார்களானால், நீங்கள் கூறிய இலங்கைக்குள் கரையும் நிலை விரைவு படுத்தப்படும். என்னை நோக்கிய உங்கள் மேலதிக கேள்விகளுக்கான பதில்களை எழுத நேரமின்மை மற்றும் அவசரத்தில் எழுதும் போது தவறாக விளங்கி கொள்ளும் பதிலாக அமைந்துவிடலாம் என்ற காரணமாக பின்பு அதை எழுதுகிறேன்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
தமிழ் ஆயுத இயக்கங்கால் காணாமல் ஆக்கப்பட்டோர் படுகொலை செய்யப்பட்ட அப்பாவிகளின் உறவுகளுக்கு நியாயம் கிடைக்காதது போல இதற்கும் பதிலோ நியாயமோ கிடைப்பதற்கான சந்தர்பபம் குறைவு. தமிழரின் கவலைக்குரிய இருண்ட காலங்கள் அவை. எதிர் காலத்தில் தமிழருக்கு இவ்வாறான நிலை வரக்கூடாது.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
தமிழரின் நியாயமான கோரிக்கைகளை தீர்ககிறோம் என்று புறப்பட்டு அதை மேலும் பலவீனப்படுத்தி சிக்கலாக்கிய அரசியலை செய்து தமது உசுபேற்றல் உதவாக்கரை அரசியலால் குழி தோண்டி புதைத்தவர்களை நோக்கியே எனது கேள்விகள். தமது செயல்களால் விளைந்த விளைவுகளுக்கு கூட மனம் வருந்தாமல் அந்த விளைவுகளை வைத்தே அரசியல் நடத்தும் சுயநல கும்பல்களை நோக்கியே எனது விமர்சனம்.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
இவை அனைத்தும் ஆயுத போராட்டம் நடத்தியவர்களின் அரசியல் தவறுகளின் விளைவுகளே. 1990 வரை பலலி இராணுவமுகாம் வேலியை அண்மித்து தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள். 13 ம் திருத்த சட்டத்தை அமுல்படுத்த முடிந்திருக்க கூடிய உரிய சாதகமான வேளையில் அதைக் காலால் எட்டி உதைத்து விட்டு, உதவாக்கரை அரசியலால் காலத்தைக் கடத்திவிட்டு, இப்போது காலம் கடந்த பின், அதை அமுல் படுத்த வைக்க முடியுமா என்று என்னைப் பார்தது சவால் விடுவது என்ன வகையில் நியாயம் கோஷான். நான் பாவம் இல்லையா?
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
அப்படியா! அந்த வலி தந்த தாக்கதால் தான் தமக்கு சம்பந்தம் அற்ற அடுத்தவன் தாட்டின் அரசியலுக்குள் நுளைந்து தமிழ் நாட்டில் மண்ணின் மைந்தர்களாக பல தலைமுறையாக வாழ்ந்து வரும் மக்கள் மீது கூட இனவாதத்தை ஈழத்தமிழ் தேசியர்கள் கொட்டுகிறார்களா?
-
சவூதியில் அனோஜனுக்கு மரண தண்டனை விதிப்பு
மாற்றம் என்று நான் கூறியது, அதன் மூலம் உலகின் முக்கிய பொருளாதார நாடுகள் என்ற நிலையில் இருந்து இறங்கி இந்த மதவாத நாடுகள் ஒரு மூலைக்குள் தள்ளப்படும் நிலை வரும் போது இவர்களை வைத்து மதவெறியை உலகம் முழுவதும் பரப்பு நிலை பலவீனம் அடையும். நீங்கள் கூறியது போல், வறுமை காரணமாக அங்கு சென்று தொழில் செய்ய வேண்டிய நிலை அருகுவது உலகிற்கு ஒரு சாதகமான விளைவு தானே.
-
தமிழ் ஈழம் எனக்கு வேண்டாம் கேட்கவும் மாட்டேன், சிங்கள மக்கள் தான் எனக்கு வேண்டும் - மகிந்தவின் அனுராதபுர கூட்டத்தில் அர்ச்சுனா.
தனி மனிதனாகிய என்னிடம் இவ்வாறு கேள்வி கேட்பது இலகுவானது. ஆனால் நீங்கள் கூறிய காரணங்களை வைத்து, உசுபேற்றி உசுபேற்றி கடந்த 75 வருடங்களில் தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அவர்களின் வழித்தோன்றல்களான ஆயுதம் தாங்கியவர்கள் செய்த அரசியலால் தமிழ் மக்கள் மேலும் பலவீனப்பட்டார்களே தவிர எதையும் பெறவில்லை. தமிழர்களின் சனத்தொகையும், அரசியல் பலத்தையும், பொருளாதார பலத்தையும் குறைத்ததை மட்டுமே அவர்கள் செய்தார்கள். (புலம் பெயர் நாடுகளுல் தேசியர்களின் பொருளாதார பலம் உயர்ந்தது என்பதை நான் மறுக்கவில்லை) தமிழீழம் என்ற கோட்பாட்டை எடுத்தவர்கள், அதை உலகின் முன்னால் நியாயப்படுத்துவதற்கு பதில் எதிர்மாறான வேலைகளை தொடர்சசியாகச் செய்து உலக நாடுகளால் முழுமையாக வெறுக்கப்படும் நிலையையே செய்தனர். அதன் விளைவே, 2009 அழிவில் உலக நாடுகளால் கூட திரும்பி பார்கப்படாமல் விட்ட நிலை. உலகில் சக்திவாய்ந் நாடுகளின் சம்மதம் இன்றி தமிழீழம் மட்டுமல்ல, எமது சுயாட்சி கோரிக்கை கூட பெற முடியாது என்ற, இயல்பான யதார்ததத்தை கூட புறம் தள்ளித் தான்தோன்றித் தனமாக செய்ற்பட்டதற்கு சாதாரண தமிழ் மக்கள் பொறுபேற்க முடியாது. அவர்களுக்கு தலைமை வகித்தவர்கள் மட்டுமே முழுப் பொறுப்பும் எடுக்க வேண்டும். இன்று தமிழீழம் மட்டுமல்ல, சமஸ்டி கூட சாத்தியமற்றதாகவே மாறிக்கொண்டு செல்கிறது என்ற கவலை நீங்கள் கூறும் தீவிர தமிழ் தேசியவாதிகளுக்கு அறவே கிடையாது . அவர்களைப் பொறுத்தவரை தாம் வழிபட்டவர்களை கேள்வி கேட்காது தொடர்ந்து வழிபடுவதும் தொடர்ந்தும் அதே களிமண் மண்டையுடன் அதே நிலைப்பாட்டை வைத்து அரசியல் நடத்தி தாம் வாழும் வரை பொழுது போக்கிவிட்டு மண்டையை போட்டுவிடவேண்டும் என்பது மட்டுமே. தாங்கள் செத்தவுடன் எவன் எக்கேடு கெட்டால் என்னகென்ன, என்ற சிந்தனையிலேயே தமிழ் தேசியவாதிகள், ஏன் புலிகள் கூட செயற்பட்டனர் என்பதே உண்மை. இலங்கை இராணுவம் உங்களை அழித்துவிடும் என்று மக்களுக்கு கூறி இருமுறை பாரிய இடப்பெயர்வை (1995,2009 மக்களைச் செய்யவைத்த புலிகள் , இவ்வளவு காலம் பல ஆண்டுகள் ஆக்ரோஷமாக போரிட்ட நாம் அழிந்தால் அதன் பிறகு தமிழரின் நிலை என்பதை கூட புலிகளின் கொள்கை வகுப்பிளர்கள் சிறிதளவு கூட சிந்தித்து பார்ககவில்லை. முடிவுகளை நாம் எடுப்போம், விளைவுகளை மக்கள் சந்திக்கட்டும் என்ற பொறுபற்ற மனப்பாங்கே அங்கு இருந்தது. உலகில் எந்த பிரச்சனைகளும் இருதரப்பும் நல்லிணக்கமான சூழ் நிலைகளை ஏற்படுத்தி, தொடர்சசியான நம்பிக்கைகளை கட்டியெழுப்பி, தொடர்சசியான பேச்சுவார்ததைகள் மூலம் தீர்ககப்பட்டிருகிறதே தவிர, இவ்வாறான வெறுப்பு விரோதங்களை வளர்பபதன் மூலமோ தீர்ககப்படவில்லை. இதுவரை பிரச்சனைகளை தீர்ககமுடியாத சூழ்நிலைகளை ஏற்படுத்தியதில் சிங்கள தரப்புக்கும் தமிழ் தரப்புக்கும் சம பங்கு உள்ளது. எதிர் காலத்திலவது அதை மாற்ற வேண்டும் என்பதே எனது கருத்து. அதை விடுத்து இந்த துரோகி தியாகி அரசியலை மேலும் தொடர்வதே சரியென நீங்கள் உட்பட கருதினால் அதன் விளைவுகளை அனுபவிக்க எம்மைப் போல் மீண்டும் எமது எதிர்கால சந்திதி உள்ளது. அதுவே தமிழ் தேசிய நச்சுவட்டம்.