-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
எனக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்து வாழ்த்திய ஈழப்பிரியன் அண்ணா, ஏராளன்,nunavilan,சிறி, நிலாமதி, பெருமாள், புங்கையூரன், suvy அவர்களுக்கு எனது நன்றிகள். கடந்த பத்து நாட்களாக அம்மா மற்றும் சகோதரங்களுடன் மருமகனின் கல்யாண வீட்டுக்கு கனடா வந்திருப்பதால் யாழ் பக்கம் வந்து பார்க்க பிந்தி விட்டது.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சும்மா பகிடிக்குதான். சீரியஸ் ஒன்றும் இல்லை சுவி
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
ஒகே Lol 😂. நன்றி 🙏. இம்முறை நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன். இது சத்தியம்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
வேலை மாற்றம் ஊர் மாற்றம் என்று பல பிராக்கினால் என்னென்ன நிலுவைகள் இருக்கென்று மறந்துவிட்டேன் யாயினி. என்னென்று ஞாபகப்படுத்த முடியுமா? இப்ப விடுமுறை தொடங்கப்போகுது . அதனால் எழுதலாம். மடகஸ்கார் பற்றி எழுதி வந்தேன். ஒருவரும் வாசிப்பதாக தெரியவில்லை என்று அதைப்பற்றி தொடர்ந்து எழுதுவதை நிப்பாட்டிவிட்டேன். clear சனிக்கிழமை நிச்சயம் பதிவிடுவேன் சிறி. எனது அனுபவத்தை பகிர மிகவும் ஆவலாக இருக்கிறேன்
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
மிகவும் அரிய இனிமையான சந்திப்பு. நான் சிறியின் மகளின் கலியான வீட்டுக்கு இந்தமாதம் Germnay போகும்போது குசா அண்ணாவையும் பாஞ் அண்ணாவையும் சந்திக்கலாம் என்று இருந்தேன். பாஞ் அண்ணா வந்திருந்தார் குசா அண்ணாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை. யாழில் கலியான வீடு மற்றும் எனது பார்வையில் ஜேர்மன் மற்றும் யூரோப் தமிழ் மக்கள் பற்றி இந்தக்கிழமை முடிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
-
குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு.
சிறியின் மகளின் கலியாணத்துக்கு இந்த மாதம் ஜெர்மனி சென்று இருந்தபோது குசா அண்ணாவை எப்படியாவது சந்தித்து விடவேண்டும் என்று ஆவலுடன் இருந்தேன். அவரது வெளிப்படையான, நகைச்சுவையான பதிவுகள், பதில்களை தாண்டி நல்ல உள்ளம் கொண்ட ஆளுமையான மனிதர் என்று நான் கணித்ததால் கட்டாயம் ஒருமுறையாவது சந்தித்து பேச வேண்டும் என்று இருந்தேன். ஏமாற்றம் என்றாலும், இன்னுமொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம் என்று நம்புகிறேன். கு சா அண்ணா, நாங்கள் நாலு யாழ் களத்து உறுப்பினர்கள் ஒரு get together வைக்கலாம் என்று இருந்தோம். முடிந்தால் நிச்சயம் வந்திருப்பீர்கள்தானே?
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வைகோ வர வர கருணாநிதி மாதிரி வெளிக்கிட தொடங்கிட்டார் போல. இப்ப கறுத்த மாதிரி இருக்கு. முந்தி மனுசன் நல்ல வெள்ளை. நேரில் பார்த்திருக்கிறேன். மருமகள் என்னுடன் படித்தவ. தெலுங்கு ஆக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
வைகோ இப்ப இப்படி இருக்கிறார் என்று கன நாளா ஒரு பேப்பர்லயும் பார்க்காதபடியால் கருணாநிதியென்று நினைத்தேன். இப்ப பார்க்க, வயசுபோன வைகோ போலத்தான் இருக்கு.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
கருணாநிதியின் வெளிறிய பேய் சிலை
-
இரசித்த.... புகைப்படங்கள்.
😂 இதைத்தான் பேக்காட்டிறது எண்டு சொல்லறது.
-
இறைவனிடம் கையேந்துங்கள்
ஹனிபா நல்ல ஒரு மனிதரும் கூட உடையார்.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
ஏசியன் கடையில் பிரெஷ் கிழங்கு வேண்டி சமைத்துப்பார்க்கிறேன் சிறி. அந்தநேரத்துக்கு பெலனாகத்தான் இருந்திச்சு🤣
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பச்சைச்சத்தண்ணியில குழைச்ச இடியப்ப மாவுக்கவு முன்னம் ஒரு தண்ணியும் செல்லுபடியாகாது.😎 போனகிழமை பசியில் வேலையால வந்து கிழிஞ்ச நீத்துப்பெட்டியில புட்டு அவிக்க வெளிக்கிட்டு, புட்டுப்பானையை திறந்து பார்த்தால் பானைக்குள் களிதான் இருந்தது.பசியில் கொஞ்சத்தை மாசி சம்பலுடன் சாப்பிட்டேன்.😂
-
புட்டின் அருமை தெரியுமா ஞானத்தங்கமே 🤣
அம்மாவின் கைப்பக்குவதுடன் மிகவும் ருசியாக இருந்திருக்கும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தங்கச்சி மரக்கறிக்காரி ( நான் கடலுணவு சாப்பிடுவேன்). அவதான் இது இல்லாம நல்லா சமைப்பா. சாப்பிட்டுப்பார்க்கிறேன். இந்த செய்முறை நல்லதா சிறி ? ரெண்டு கோப்பை சாப்பிட்டால் குண்டம்மாவாகத்தான் வரவேணும். சிறி ஒருநாளைக்கு மட்டும் சாப்பிட்டு பார்க்க சொல்லி இருப்பார்😁