Everything posted by colomban
-
அதிக பாராசிட்டமால் பாவனையால் செயலிழந்த ஈரல் உள்ளிட்ட உறுப்புகள்! சிகிச்சையின் பின் மாணவருக்கு என்ன நடந்தது?
எனக்கு கனடாவில் இருக்கும்போது கடும் சளியும் காய்ச்சலும் ஏற்பட்டது. பனடோல் எந்த இடத்திலும் இல்லை. ட்ய்ல்டொல் என்னும் ஒன்றை கொண்டுவந்து நண்பன் கொடுத்தான் ஆனாலும் பனடோல் போல் வலுவான மருந்து அல்ல.
-
டிப்ஸ் கொடுப்பதா… அல்லது டிப்ஸ் கேட்கப்படுகிறதா?
இப்படியான பகுதிகள் எங்கு டொரொன்டொவில் அதிகம் இருக்கின்றது? போன ஜூன் முழுவதும் அங்குதானே இருந்தேன். யாரும் சொல்லவே இல்லை.
-
டிப்ஸ் கொடுப்பதா… அல்லது டிப்ஸ் கேட்கப்படுகிறதா?
எகிப்து, துருக்கி போன்ற நாடுகளில் கண்டுள்ளேன் பெல்லி டான்ஸ் ஆடும் பெண்களை நோக்கி பண நோட்டுக்களை எறிவார்கள். இது டிப்ஸா என்று தெரியவில்லை?
-
ஜிஹாத் அமைப்பும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், வரலாற்று திரிபுகளும்.
முஸ்லிம் சமூகம் அவர்களது தனித்துவ இன அடையாளமான “முஸ்லிம்கள்” என்று அழைப்பதனை "இனவாதம்" என்றும், “தமிழ் பேசும் மக்கள்” என்றுதான் அழைக்க வேண்டுமென்ரெல்லாம் சமூக வலைத்தளங்களில் சிலர் பதிவிடுகின்றனர். ஆனால் முஸ்லிம்கள் ஓர் தனியான இனம் என்பதனை தமிழ் தலைமைகள் ஏற்கனவே அங்கீகரித்துள்ளதற்கான ஆதாரங்களை வெளிப்படுத்தும் விதமாக விடுதலைப் புலிகளின் அங்கீகாரத்தினை கடந்த மூன்றாவது பதிவிலும், தமிழர் விடுதலை கூட்டணியின் அங்கீகாரத்தினை இங்கே நான்காவது தொடரில் பதிவிடுகிறேன். தமிழர் விடுதலைக் கூட்டணி - முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி உடன்பாடும், கூட்டறிக்கையும். தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம்களின் பிரத்தியேகமான தனித்துவத்தை அங்கீகரிக்கின்றது. முஸ்லிம்கள். நாடு முழுவதிலும் சிறுபான்மையினராகவே உள்ளனர். இதை உணர்ந்த தமிழர் விடுதலைக் கூட்டணி பின்வருவனவற்றை விதைந்துரைக்கின்றன. 1. காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி, வாழைச்சேனை, கிண்ணியா, தம்பலகாமம் (முள்ளிப் பொத்தான) எருக்கலம்பிட்டி, முசலி ஆகிய ஒவ்வோர் இடங்களிலும் முஸ்லிம்களைப் பெருமான்மையாகக் கொண்ட உப அரசாங்க அதிபர் பிரதேச சபைகளை - பிரிவுகளை ஏற்படுத்துதல், ஒவ்வோர் பிரிவிலும் எந்தெந்த பிரதேசங்கள் என்பனவற்றின் அடிப்படையில் பாரம்பரிய வாழ்விடங்கள், நிலம், மூலவளங்கள் என்பனவற்றின் அடிப்படையில் கலந்துரையாடல்கள் நடத்தி முடிவு செய்யப்படும். 2. கல்முனையில் ஒரு மாநகரசபை ஏற்படுத்தப்படுவதுடன் சம்மாந்துறை, காத்தான்குடி, கிண்ணியா ஆகிய இடங்களில் நகரசபைகளை நிறுவுதல். 3. தமிழர் விடுதலைக் கூட்டணி முஸ்லிம்களினுடைய பிரதிநிதித்துவத்தை உத்தரவாதப் படுத்துவதற்காக, மாகாண சபைக்கான அங்கத்தவர்களின் தெரிவு ஆல்புல ரீதியான தேர்தல் தொகுதிகள் அமைதல் வேண்டும். வடக்க கிழக்கு மாகாண சபை 71 அங்கத்தவர்களைக் கொண்டதாக அமையும், அதாவது வட மாகாணத்துக்கு 36 அங்கத்தவர்களும் கிழக்கு மாகாணத்துக்கு 35 அங்கத்தவர்களும் இருப்பர். முஸ்லிம்கள் கிழக்கு மாகாணத்தில் 32.27% மற்றும் வடக்கு மாகாணத்தில் 4.74% உள்ளனர். த.வி.கூட்டணி, முஸ்லிம் தூதுக் குழுவினருடன் விரிவாக விவாதித்த பின்னர் கிழக்கு மாகாணத்தில் 12க்கு குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர்களும், வட மாகாணத்தில் 5க்கு குறைவில்லாத முஸ்லிம் அங்கத்தவர்களும் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படுவதை உறுதி செய்யும் வகையிலான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்கிறது. 4. வடக்கு - கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக ஒரு முஸ்லிம் முறையாக நியமிக்கப்பட்டிருந்தாலன்றி, குறித்த மாகாண சபையின் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் விவகாரங்களுக்கான ஒரு அமைச்சர் உட்பட அமைச்சர்கள் சபையில் 25 வீதத்துக்கு குறைவில்லாத அமைச்சர்கள் முஸ்லிம்களாக இருப்பதற்காக வகைசெய்யும் விதத்தில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். 5. வருங்கால அரச காணிப் பங்கீடுகளில் முஸ்லிம்களுக்கு உரித்துடைய காணிப்பங்கு விகிதம் கிழக்கு மாகாணத்தில் 35% குறைவில்லாமலும், மன்னார் மாவட்டத்தில் 30% குறைவில்லாமலும், வடமாகாணத்தின் ஏனைய பகுதிகளில் 10% குறைவில்லாமலும் இருத்தல் வேண்டும். 6. வடக்கு கிழக்கு மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாழும் முஸ்லிம்களின் விகிதாசாரத்தின்படி பொதுத்துறை வேலை வாய்ப்புகளுக்கான உரிமைகளை முஸ்லிம்கள் கொண்டிருப்பவர்கள். 7. பல்கலைக்கழகமட்டம் வரையிலான பிரத்தியேக கல்வி வசதிகள் முஸ்லிம்களுக்காக ஏற்படுத்தப்படும். பல்கலைக்கழகங்களின் அனுமதியின்போது கல்வியில் பின்தங்கியிருக்கும் குழுக்கள், பிரதேசங்கள், பாடசாலைகள் என்பனவற்றிற்கு விசேட கவனிப்பு செலுத்தப்படும். 8. முஸ்லிம்களது உரிமைகளைப் பாதிக்கக்கூடிய எதுவித சட்டவாக்கங்களும் அவற்றிக்கு முஸ்லிம் பிரதிநிதிகளில் பெரும்பான்மையினர் சார்பாக வாக்களித்தாலன்றி, வடக்கு கிழக்கு மாகாண சபையினால் நிறைவேற்றப்படலாகாது. 9. முஸ்லிம்களால் சமர்ப்பிக்கப்பட்ட மகஜரில் உட்படுத்தப்பட்டிருந்த ஏனைய விடயங்கள் தொடர்பில் எமது கருத்துக்களை நாம் தெரிவித்துள்ளோம். இவ்விடயங்கள் இரு பகுதியினராலும் மேலும் பரிசீலிக்கப்பட வேண்டியவைகளாக உள்ளன. இந்த கூட்டறிக்கையானது தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ. அமிர்தலிங்கமும், அதன் தலைவர் எம். சிவசிதம்பரமும் 03.10.1987 திகதி ஒப்பமிட்டு வெளியிட்டனர். தொடரும்.................... முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_972.html
-
ஜிஹாத் அமைப்பும், முஸ்லிம் ஊர்காவல் படையினரும், வரலாற்று திரிபுகளும்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் நாங்கள் நேரடியாக அறிந்துகொண்ட பல வரலாற்றுச் சம்பவங்களின் உண்மைகள் மறைக்கப்பட்டு, வரலாற்றுத் திரிபுகளாக சிலரது மனோ இச்சைக்கு ஏற்ப முகநூல்களில் பதிவிடுகின்றனர். இவ்வாறு சிலரது மனோநிலைக்கு ஏற்ப எழுதுகின்ற கற்பனைகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் உண்மை என்று நம்புகின்றனர். இன்றைய நாகரீகமான உலகில் நாங்கள் வாழும்போதும், பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள், அச்சு ஊடகங்கள் இருக்கின்ற காலத்திலேயே இவ்வாறான பொய்யான வரலாறுகளை பரப்ப முடியுமென்றால், பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற சம்பவங்களை, எந்தவித சந்தேகமுமின்றி துல்லியமாக உண்மையான வரலாறாக நம்பலாமா என்ற அச்சம் ஏற்படுகின்றது. மனித நாகரீகங்கள், கண்டுபிடிப்புக்கள் எதுவும் இல்லாத பண்டைய காலத்து கதைகளில் எத்தனையோ திரிபுகளும், குளறுபடிகளும், கற்பனைகளும் ஊடுருவி இருக்கலாம் என்பது தற்போதைய வரலாற்று திரிபுகள் மூலம் எண்ணத் தோன்றுகிறது. வரலாறு என்பது வரலாறுதான். நடந்தது நடந்ததுதான். வரலாற்று சம்பவங்களை எழுதுகின்றவர்கள், அவர்களது இனத்துக்காகவும், மதத்துக்காகவும், பக்கச்சார்பாக எதனையும் கூட்டவோ, குறைக்கவோ முடியாது. அவ்வாறு திரிபுபடுத்துவது பொய்யான வரலாறாகும் என்பதனை இன்றைய இளைய சமுதாயத்தினர் புரிந்துகொள்ள வேண்டும். முஸ்லிம் ஊர்காவல் படையினரும், ஜிஹாத் இயக்கத்தினரும் தமிழ் கிராமங்களுக்குள் புகுந்து ஏராளமான தமிழ் மக்களை கொலை செய்தார்கள் என்ற செய்தியை ஆரம்பத்தில் ஓரிரு ஊடகங்கள் பரப்பியது. பின்பு அந்த ஊடகச் செய்திகளை ஆதாராமாகக் கொண்டு கொலைப் பட்டியலையும், திரிபுக் கதைகளையும் பலர் எழுதி வருகின்றனர். கடந்தகால தமிழ் – முஸ்லிம் மக்களின் கசப்புணர்வுகளை அறிந்துகொள்ளாத இன்றைய இளைய சமுதாயத்தினர், இவைகளை உண்மை என்று நம்புகின்றனர். விடயங்களை அறிந்தவன் என்றரீதியில் மட்டுமல்லாது, வரலாறுகளை அலசி ஆராய்ந்து உண்மைகளை இன்றைய இளைய சமுதாயதினர்களுக்கு எத்திவைப்பது எனது கடமையாகும். எனவே அடுத்துவரும் பதிவுகளில் இதுபற்றி ஆராய்வோம். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_548.html தமிழ் ஆயுத இயக்கங்களும், முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலும். ஆரம்பத்தில் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு இருக்கவில்லை. அவர்கள் தனிதுவமிழந்து ஒற்றுமைப்பட முடியாமல் அரசியல் ரீதியில் பலகூறுகளாக பிரிந்திருந்தார்கள். சிங்கள தேசிய கட்சிகள், தமிழ் கட்சிகள், பின்பு தமிழ் ஆயுத இயக்கங்கள் ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருந்தார்கள். அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிட்டு கல்முனை தொகுதியில் 1956 இல் எம்.எஸ். காரியப்பரும், பொத்துவில் தொகுதியில் எம்.எம். முஸ்தபாவும், 1960 இல் எம்.சி. அஹமட் கல்முனை தொகுதியிலும், எம்.ஈ.எச். முஹமட் அலி மூதூர் தொகுதியில் 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றம் சென்றிருந்தனர். 1970 காலங்களில் தலைவர் அஷ்ரப் அவர்கள் தந்தை செல்வாவின் அரசியலில் ஈர்க்கப்பட்டு இலங்கை தமிழரசு கட்சியிலும் (ITAK), பின்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) ஆகியவற்றில் பயணித்ததுடன், 1976 இல் நடைபெற்ற தமிழரசு பிரகடன வட்டுக்கோட்டை மாநாட்டிலும் அஷ்ரப் அவர்கள் கலந்துகொண்டார். “அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தை பெற்றுத் தராவிட்டால், நான் பெற்றுத்தருவேன்” என்று 1977 ம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தலைவர் அஷ்ரபின் பேச்சு பிரபலமாக பேசப்பட்டது. அதாவது அன்றைய காலங்களில் தமிழர்களுக்கென்று தனியாக தமிழீழம் அமைவதனை அஸ்ரப் அவர்கள் ஆதரித்திருந்தார் என்பது இதன் மூலம் புரிகின்றது. 1977 ம் ஆண்டின் பொது தேர்தலில் தமிழர் ஐக்கிய முண்ணியுடன் அஸ்ரப் அவர்கள் MUF என்னும் கூட்டணி அமைத்து சூரியன் சின்னத்தில் கல்முனை, சம்மாந்துறை, மூதூர், புத்தளம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அன்றைய ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசிய கட்சியின் அலையினால் “சூரியன்” சின்னத்தில் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பளர்களினாலும் வெற்றிபெற முடியவில்லை. 1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை (DDC) தேர்தலுக்காக TULF, கிழக்கு மாகாண வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட வேண்டும் என்று அஸ்ரப் கோரியிருந்தார். ஆனால் அஸ்ரப்பின் கோரிக்கையை TULF ஏற்கவில்லை. ஏற்கனவே பல விடயங்களில் முரண்பாடுகள் இருந்த நிலையில், அவைகள் படிப்படியாக அதிகரித்ததுடன், முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் முதன்மை வேட்பாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டதானது அரசியல் திருப்புமுனையாக அமைந்தது. முஸ்லிம்களுக்கு தமிழ் கட்சிகளையும், சிங்கள தேசிய கட்சிகளையும் தவிர்த்து, தனியான பாதையில் செல்வதற்கு தீர்மானித்தார். இந்த தீர்மானத்துக்கு தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் உதவிபுரிந்தன. அது பற்றி அடுத்துவருகின்ற பதிவுகளில் அலசி ஆறாய்வோம். முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_812.html “முஸ்லிம்களும் தனித்துவமான இனம்” – புலிகளின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றம் “முஸ்லிம்கள் ஒரு தனியான சமூகமல்ல, தமிழ் பேசுகின்ற கிறிஸ்தவர்கள் போன்று அவர்களும் தமிழ் பேசும் முஸ்லிம்கள்” என்பதுதான் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் அவர்களது நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. இலங்கை - இந்திய ஒப்பந்தத்துக்கு பின்பு பல விட்டுக்கொடுப்புக்களுடன் LTTE யினர் முஸ்லிம் தரப்பினருடன், வரலாற்றில் முதன் முதலில் உடன்படிக்கை ஒன்றினை செய்தனர். அந்த உடன்படிக்கையின் காரணமாக ஐ.தே.க. அரசாங்கம் விழித்துக் கொண்டதுடன், தமிழ் - முஸ்லிம் இனங்களுக்கிடையில் நிரந்தர பகைமையை ஏற்படுத்துவதன் மூலம் தமிழீழ போராட்டத்தினை தோற்கடிப்பதற்கான தந்திரோபாயங்களை மேகொள்ள ஆரம்பித்தனர். விடுதலை புலிகளுக்கும், வட-கிழக்கில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப் படையினர்களுக்கும் இடையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், இந்தியாவின் சென்னை நகரத்தில் புலிகளுக்கும் முஸ்லிம் தரப்பினர்களுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதில், தமிழீழத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் தமிழ் மொழியை பேசினாலும், அவர்கள் வேறுபட்ட தனியான இனம் என்றும், வட-கிழக்கு மாகாணம் தமிழர்களுக்கு எவ்வாறு பாரம்பரிய தாயகமாக உள்ளதோ, அதேபோல முஸ்லிம்களினதும் பாரம்பரிய தாயகமாகும். தாயகத்தில் தமிழர்கள் எவ்வாறு அரசியல் உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவிக்கின்றார்களோ, அதேபோல் முஸ்லிம்களும் அனுபவிக்க முழு உரிமையும் உண்டு. நிராயுதபாணிகளான முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதுடன், அவர்கள் அச்சம், பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கான அனைத்து உத்தரவாதத்தினையும் புலிகள் சட்டரீதியாக உறுதிப்படுத்துவார்கள் என்றும், கிழக்கில் 33 வீதமாக இருந்த முஸ்லிம்கள், வட-கிழக்கு இணைப்பின் காரணமாக 17 வீதமாக குறைக்கப்பட்டார்கள். அதனால் மாகாணசபையில் 30 வீதத்துக்கு குறையாத பிரதிநித்துவத்தை முஸ்லிம்களுக்கு வழங்குவதுடன், அமைச்சரவையில் இடம் வழங்கப்படுவதற்கும் சட்ட ஏற்பாடுகளை செய்தல். அரச காணிப் பங்கீட்டில் கிழக்கில் 35 வீதத்துக்கு குறையாமலும், மன்னார் மாவட்டத்தில் 30 வீதத்துக்கு குறையாமலும், வடமாகாணத்தின் ஏனைய பிரதேசங்களில் 5 வீதத்துக்கு குறையாமலும் இருக்க வேண்டும். கல்வியில் சமவாய்ப்புக்கள் பேணப்படுகின்ற அதேநேரம், விகிதாசாரப்படி வேலை வாய்ப்புக்களை வழங்குவதுடன், முஸ்லிம்களுக்காக தனியான இஸ்லாமிய பல்கலைக்கழகம் உருவாக்கப்படும். வடகிழக்கு மாகாணசபையில் பிரதி முதலமைச்சராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்படும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், தாயகத்தில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தின் காரணமாக தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பினை களையும் பொருட்டு ஒரு குடியகழ்வு கொள்கையினை உருவாக்குதல். போன்ற விடயங்கள் அந்த ஒப்பந்தத்தில் பிரதானமாக குறிப்பிடப்பட்டிருந்தது. 1988 ஏப்ரல் மாதம் 15,16,19 ஆகிய திகதிகளில் நீண்ட கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு இறுதியில் 21.04.1988 திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு கூட்டறிக்கையும் வாசிக்கப்பட்டது. பதினெட்டு (18) அம்சங்களைக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில் விடுதலை புலிகளின் சார்பில் “கிட்டு” என்று அழைக்கப்பட்ட சதாசிவம் கிருஷ்னகுமாரும், முஸ்லிம்கள் சார்பில் எம்.ஐ.எம். மொஹிதீன் அவர்களும் கையொப்பமிட்டார்கள். 1990 இல் புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்து, இரண்டாவது ஈழப்போர் ஆரம்பிக்கும் வரைக்கும் LTTE யினர் முஸ்லிம் பொதுமக்களுக்கு எதிரான வன்முறைகளில் ஈடுபட்டதற்கான எந்தவித ஆதாரங்களும் கிடைக்கவில்லை. இதுபற்றி தொடர்ந்து ஆராய்வோம்........ முகம்மத் இக்பால் சாய்ந்தமருது https://www.importmirror.com/2026/08/blog-post_287.html
-
59 வயதில் சிக்ஸ் பேக் வைத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வைரல் புகைப்படம் இணையத்தை அதிரவைத்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குனருமான சீமான், எப்போதும் தனது ஆவேசமான பேச்சுகளாலும் அரசியல் கருத்துகளாலும் செய்திகளில் இடம்பிடிப்பவர். ஆனால், தற்பொழுது அவர் அரசியல் மேடைகளைத் தாண்டி, தனது புதிய உடலமைப்பால் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளார். சென்னையில் உள்ள முன்னணி உடற்பயிற்சிக் கூடம் ஒன்றில் தனது தனிப்பட்ட பயிற்சியாளர்களுடன் இணைந்து, அவர் எடுத்த சிக்ஸ் பேக் புகைப்படம் தற்பொழுது பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் சீமான் சிக்ஸ் பேக் என்ற பெயரில் இந்த புகைப்படம் முதன்முதலில் வெளியானது. புகைப்படத்தில் சீமான் தனது சட்டையை உயர்த்தி, மிகத் துல்லியமாகத் தெரியும் தனது சிக்ஸ் பேக் உடலமைப்பைக் காட்டியபடி புன்னகையுடன் போஸ் கொடுத்துள்ளார். 59 வயதைக் கடந்த நிலையிலும், இளைஞர்களுக்கே சவால் விடும் வகையில் அவர் கொண்டுவந்துள்ள இந்த மாற்றம் ஃபிட்னஸ் பிரியர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. சீமான் திடீரென இந்த உடலமைப்பைப் பெறவில்லை; அவர் நீண்ட நாட்களாகவே உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். நாள்தோறும் காலையில் வாக்கிங், ஜாக்கிங் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள சீமான், ஜிம்மில் மிகக் கடுமையான ஹெவி வெயிட் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவரது ஒொர்க்அவுட் வீடியோக்கள் ஏற்கனவே இணையத்தில் வைரலாகி வந்தன. அதன் தொடர்ச்சியாகவே தற்பொழுது இந்த சிக்ஸ் பேக் ரிசல்ட் கிடைத்துள்ளது. தம்பிகள் கடின உழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி வரும் சீமான் தன்னைச் சுற்றியுள்ள இளைஞர்களையும் கட்சித் தொண்டர்களையும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி சீமான் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார். நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், இந்த வயதிலும் அண்ணனின் அர்ப்பணிப்பும், கட்டுக்கோப்பும் வியக்க வைக்கிறது எனப் பாராட்டி, புகைப்படத்தை மிக வேகமாகப் பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு புறம், சீமானின் அரசியல் எதிர்ப்பாளர்கள் இதைக் கலாய்த்தும், மீம்கள் மூலமாகவும் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, அவரது வழக்கமான மேடைப் பேச்சுகளுடன் ஜிம் கலாச்சாரத்தை இணைத்து பல நகைச்சுவையான மீம்கள் இணையத்தில் உலா வருகின்றன. 50-களின் இறுதியில் இருக்கும் ஒரு அரசியல் தலைவர், தனது உடலை இவ்வளவு கட்டுக்கோப்பாக மாற்றி சிக்ஸ் பேக் வைப்பது சாதாரண விஷயமல்ல. சீமானின் இந்த பிட்னஸ் பயணம் வயது என்பது வெறும் எண்தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது https://tamil.samayam.com/tamil-nadu/news/seeman-six-pack-how-the-59-year-old-ntk-leader-achieved-a-ripped-physique/articleshow/133199706.cms?story=9
-
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் தீர்மானத்துக்கு வரவேண்டும்!
ஆடை சர்ச்சையை எதிர்நோக்கிய முஸ்லிம் பெண் ஊழியர்கள் அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் மாலையிட்டு வரவேற்பு https://www.importmirror.com/2026/08/blog-post_483.html
-
முஸ்லிம் பெண்களின் ஆடை விவகாரத்தில் அரசாங்கம் தீர்மானத்துக்கு வரவேண்டும்!
அதே ஆடையுடன் வேறு வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், கல்முனை ஆதார வைத்தியசாலையில் ஏன் முடியாது?” – சட்டத்தரணி முஅஸ்ஸம் கேள்வி நூருல் ஹுதா உமர் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களின் சீருடை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பான விசாரணை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் இன்று (18) இடம்பெற்றது. வைத்தியசாலை நிர்வாகத்துக்கு பொறுப்பான அதிகாரி மற்றும் மேற்பார்வை அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றது. விசாரணையின்போது முறைப்பாட்டாளர்கள் அனைவரும் பிரசன்னமாகியிருந்ததுடன், அவர்களது சார்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் ஆஜராகியிருந்தார். பிரதிவாதிகள் ஐவரில் வைத்தியசாலை பணிப்பாளரைத் தவிர்ந்த நால்வரும் ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகியிருந்ததுடன், அவர்களது சார்பில் விசேட வைத்திய நிபுணர் ஒருவர் காப்பு உத்தியோகத்தராகப் பங்கேற்றிருந்தார். விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், குறித்த சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களின் சீருடை விவகாரம் தொடர்பில் இலங்கை அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளமை தொடர்பான விளக்கங்களை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னிலையில் சமர்ப்பித்ததாக தெரிவித்தார். குறிப்பாக அரசியலமைப்பின் உறுப்புரைகள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தாம் சுட்டிக்காட்டியதாகவும் அவர் கூறினார். இதற்கு பதிலளித்த வைத்தியசாலை தரப்பு, அரசாங்கத்தின் தாபன விதிக்கோவை, சுற்றறிக்கைகள் மற்றும் அவற்றில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தங்களின் அடிப்படையிலேயே குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்ததாகவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் குறிப்பிட்டார். அதேவேளை, அரசியலமைப்புக்கு முரணானதாக ஏதேனும் சுற்றறிக்கைகள் காணப்படுகின்றனவா என்பது தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை எனவும், அது தொடர்பான இறுதி தீர்மானங்களை சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட உரிய அதிகாரிகளே மேற்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியசாலை தரப்பு தெரிவித்ததாக அவர் கூறினார். மேலும், இவ்விடயம் தொடர்பில் தாம் உரிய உயர் அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் வைத்தியசாலை தரப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் தெரிவித்ததாக சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், குறித்த சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு வேறு ஒரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், இந்தத் தகவல் இதுவரை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுடன், இடமாற்றக் கடிதமும் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை எனவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். இந்நிலையில், அவர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு எந்த ஆடையுடன் பணிக்கு சமூகமளித்தார்களோ, அதே ஆடையுடன் வேறு ஒரு வைத்தியசாலையில் பணிக்கு அறிக்கையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுவது பல கேள்விகளை எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். “குறித்த ஆடை அனுமதிக்கப்படாத ஆடையாக இருந்திருந்தால், அதே ஆடையுடன் அவர்கள் வேறு ஒரு வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கு எவ்வாறு அனுமதிக்கப்பட முடியும்?” என அவர் கேள்வியெழுப்பினார். வேறு ஒரு வைத்தியசாலைக்கு இடமாற்றம் வழங்கப்படுவதன் மூலம் குறித்த ஆடை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், அனுமதிக்கப்பட்டதாகவும் ஒரு நிலைப்பாடு உருவாகிறது எனவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான நிலையில், அதே ஆடையுடன் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மட்டும் அவர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பில் தெளிவான விளக்கம் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார். “இலங்கையின் அதியுயர் சட்டமான அரசியலமைப்பை நடைமுறைப்படுத்த முடியாத நிலையில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை நிர்வாகம் இருக்கின்றதா என்ற கேள்வி எழுகிறது. அல்லது இலங்கையின் ஆட்சி எல்லைக்கு அப்பாற்பட்ட ஒரு பிரதேசத்தில் இந்த வைத்தியசாலை அமைந்துள்ளதா என்ற கேள்வியையும் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது” என சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். ஒரே பணியாளர்கள் ஒரே ஆடையுடன் வேறு ஒரு அரச வைத்தியசாலையில் பணியாற்ற முடியும் என்றால், அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட உரிமைகளுக்கு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் ஏன் செயல்வடிவம் வழங்க முடியவில்லை என்பதை அரசாங்கம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். சுற்றறிக்கைகளை மேற்கோள் காட்டி அரசியலமைப்பினால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து அதிகாரிகள் விலக முடியாது என்றும் அவர் தெரிவித்தார். இவ்விவகாரத்தை மேலும் பெரிதுபடுத்தும் வகையில் அறிந்தும் அறியாமலும் செயற்படும் அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் கேட்டுக்கொண்டார். குறிப்பாக சமூக ஊடகங்களில் பொறுப்பற்ற பதிவுகள் மற்றும் தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுவது ஆரோக்கியமான, கற்றறிந்த சமூகத்துக்கு பொருத்தமானதல்ல என அவர் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பில் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் கருத்துக்களை பதிவிடுபவர்கள் மிகவும் அவதானத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார். இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட சுகாதார சேவைப் பணியாளர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் தாம் தொடர்ந்து விழிப்புடன் செயற்படுவதாகவும் சட்டத்தரணி முஅஸ்ஸம் தெரிவித்தார். சுற்றறிக்கைகளுக்கும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கும் இடையில் உருவாகியுள்ளதாகக் கூறப்படும் முரண்பாடு தொடர்பில் உரிய அமைச்சுக்கள் மற்றும் அரச திணைக்களங்களுக்கு எழுத்து மூலம் அறிவித்து, நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். இந்தப் பிரச்சினை குறித்த சுகாதார சேவை கனிஷ்ட பணியாளர்களுக்கு மாத்திரம் வரையறுக்கப்படவில்லை என்றும், சுகாதார சேவையில் தாதிய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட ஏனைய பணியாளர்களுக்கும் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். எனவே, சுகாதார அமைச்சு, சுகாதார சேவைகள் திணைக்களம் உள்ளிட்ட உரிய அதிகாரிகள் இந்த விடயத்தை பரந்துபட்ட அடிப்படையில் ஆராய்ந்து, அனைத்து சுகாதாரப் பணியாளர்களுக்கும் பொருந்தக்கூடிய தெளிவானதும் நிரந்தரமானதுமான கொள்கைத் தீர்வை வழங்க வேண்டும் என சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் வலியுறுத்தினார். ஊடக விடயங்களில் சட்டத்தரணிகளான எம்.என்.எம். நப்ரத் மற்றும் எம்.இசட்.எம். றியாஸ் ஆகியோரும் இணைந்திருந்தனர். https://madawalaenews.com/45952/ கல்முனை வைத்தியசாலை ஆடை விவகாரத்தில் அரசாங்கம் மேற்கொண்ட இடமாற்றம் ஒரு தவறான முன்னுதாரணம் கல்முனை வைத்தியசாலையில் வைத்திய உதவியாளர்களின் ஆடை தொடர்பாக உருவான சர்ச்சைக்கு, சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி நியாயமானதும் நடைமுறைக்கு ஏற்றதுமான தீர்வொன்றை வழங்குவதற்குப் பதிலாக, இடமாற்றத்தை தீர்வாக முன்வைத்திருப்பது இன்ர அரசாங்கத்தின் நிர்வாக இயலாமையை தெளிவாகக் காட்டுகிறது. ஒரு கலாச்சார ஆடை தொடர்பான நிர்வாகப் பிரச்சினை, இன்று ஒரு அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினையாக மாறியிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் பிரச்சினையை ஆரம்பத்திலேயே உரிய முறையில் கையாளத் தவறிய அரசின் நிர்வாக அணுகுமுறையே. அரசாங்கத்தின் பொறுப்பு, ஒரு பிரச்சினை எழுந்தவுடன் அதில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிப்பது அல்லது இடமாற்றம் செய்வது அல்ல. மாறாக, உண்மையில் என்ன நடந்தது என்பதை ஆராய்ந்து, சட்டம், நிர்வாக விதிமுறைகள் மற்றும் ஊழியர்களின் உரிமைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தீர்வு காண்பதாகும். குறிப்பாக, இங்கே இடமாற்றத்தை ஒரு தீர்வாகப் பயன்படுத்தியிருப்பது மிகவும் பிழையான முன்னுதாரணத்தை உருவாக்க்குவதுடன் எதிர்காலத்தில் பல பிரச்சினைகள் இடம்பெற ஒரு வாய்ப்பாகவும் அமையும். நாளை எந்தவொரு அரச நிறுவனத்திலும் ஒரு கொள்கை அல்லது நடைமுறை தொடர்பாக ஊழியர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக இடமாற்றம் செய்வது வழக்கமாகிவிட்டால், அது நல்ல நிர்வாகத்தின் அடையாளமாக இருக்காது. மேலும், இது குறிப்பிட்ட சமூகத்தினரிடையே “எங்களுடைய பிரச்சினைகளை நியாயமாகக் கேட்காமல் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்ற மனநிலையை உருவாக்கக்கூடும். குறிப்பாக இன, மத உணர்வுகள் தொடர்புபடக்கூடிய விடயங்களில் அரசாங்கம் மிகவும் பொறுப்புடனும் நிதானத்துடனும் செயற்பட வேண்டும். இந்த விவகாரத்தில் அரசாங்கம் தனது முடிவை மீளாய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள், சுகாதார அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசாங்கம் ஏற்கனவே அறிவித்த கலாச்சார ஆடைகளை அணிவதற்கான நியாயமான தீர்வொன்றை வழங்க வேண்டும். இது கல்முனை வைத்தியசாலையில் பணிபுரியும் சில ஊழியர்களின் பிரச்சினை மாத்திரமல்ல. எதிர்காலத்தில் அரச நிறுவனங்களில் நிர்வாகம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பதற்கான ஒரு முன்னுதாரணமாகவும் இது அமைகிறது. அதனால், இந்த விவகாரத்தில் பழிவாங்கும் மனப்பான்மையோ, அரசியல் அழுத்தமோ இல்லாமல், நல்லாட்சி, சமத்துவம், நீதி மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட தீர்வே வழங்கப்பட வேண்டும். சாதாரண பிரச்சினைக்குக் கூட நியாயமான தீர்வு வழங்க முடியாமல், இடமாற்றத்தைத் தீர்வாகக் காட்டுவது இவ்வாட்சியின் பலத்தை அல்ல நிர்வாகத்தின் பலவீனத்தையே வெளிப்படுத்துகிறது. ஹிதாயத் சத்தார் – மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர். https://madawalaenews.com/45933/ உண்மையில் ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் போன்ற முட்டாள் முஸ்லிம் அரசியல்வாதிகள் உலகில் இருக்க முடியாது ; முபாறக் மெளலவி இந்த நாட்டின் வரலாற்றில் எந்தக்கட்சி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக இருக்கிறாரோ அவரின் கட்சிதான் பொதுத்தேர்தலில் வெல்லும். ஜே ஆர், சந்திரிக்கா, மஹிந்த போன்றோரின் கட்சிகள் இப்படித்தான் ஆட்சியில் இருந்தன. அதனை மீறி எதிர்க்கட்சி ஆட்சியை பிரட்டி ஆட்சிக்கு வந்தாலும் நீடிக்க முடியாது என்பதற்கு 2003 ரணிலின் ஆட்சி கலைப்பு சொல்கிறது. இதுவெல்லாம் தெரிந்தும் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார வென்று ஜனாதிபதி ஆனதும் இந்த முஸ்லிம் கட்சிகள் என்ன செய்திருக்க வேண்டும்? புத்தி இருந்தால் அநுர குமார கட்சியுடன் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் தனித்து போட்டியிட்டிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் தோற்றுப்போன ஜனாதிபதி வேட்பாளரின் கட்சியில் இணைந்து பொதுத்தேர்தலில் போட்டியிட்டமை எவ்வளவு பெரிய முட்டாள்தனம். அந்த நேரத்தில் நான் ரிசாத் பதியுதீனுக்கு போன் செய்து இந்த யதார்த்தத்தை சொன்னேன், கேட்கவில்லை. தனித்து போட்டியிட்டு வென்றிருந்தால் சஜித்தின் அடிமை கட்சி என இல்லாமல் அரசிடம் ஒரு கௌரவம் இருந்திருக்கும். அப்படி சுதந்திரமான கட்சிகளாக பாராளுமன்றில் இருந்திருந்தால் கல்முனை ஆதார வைத்தியசாலையில் நடை பெற்ற முஸ்லிம் பெண் ஊழியர்களுக்கு எதிரான இனவாத செயல்களுக்கு அரசிடம் கௌரவமான தீர்வை பெற்றிருக்க முடியும். ரவுப் ஹக்கீம் அடிக்கடி சொல்லும் வார்த்தைதான் நாங்கள் கண்ணை திறந்து கொண்டு படுகுழியில் விழுந்து விட்டோம் என்பது. அவர் பின்னால் போன ரிசாத் பதியுதீனும் அதே படு குழியில் விழுந்து படு குழியில் விழுந்த யானை வெளிவர முடியாமல் தவிப்பது போல் தவிக்கிறார். முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் பணம், பதவிக்கான வெறி இருக்கும் வரை சமூக அரசியலில் வெல்ல முடியாது. முபாறக் அப்துல் மஜீத் முப்தி தலைவர் இலங்கை உலமா கட்சி, ஸ்ரீலங்கா ஜம்மியத்துல் உலமா கவுன்சில். https://madawalaenews.com/45928/
-
ஒன்றாக இணைந்து வாழ்ந்து கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தமிழர் செயற்படுவது முறை இல்லை… சிங்கள அரசை முஸ்லிம்கள் மீண்டும் நெருங்கி சிங்கள கட்சியிடம் கிழக்கை ஒப்படைத்து விட்டால், பின்னர் ஒப்பாரி வைக்க வேண்டாம் ; முபாறக் அப்துல் மஜீத்
ஆயுதம் ஏந்திய தமிழ் இயக்கங்களின் முஸ்லிம் விரோத போக்கு காரணமாகத்தான் முஸ்லிம்கள் தம் பாதுகாப்புக்காக சிங்கள ராணுவத்தை ஆதரித்தனர். இப்போது யுத்தம் முடிந்து ஆயுதம் அழிந்த பின்னும் கல்முனையில் சில இனவாத தமிழர்கள் மீண்டும் மீண்டும் முஸ்லிம்களை சீண்டுகிறார்கள். முஸ்லிம்களும் தமிழர்கள் என சொல்லிக்கொண்டே முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத தமிழர் செயற்படுவது முறையா? அப்படியானால் சிம்க்களவரின் இனவாதம் பரவாயில்லையே. அவனின் மொழியும் மதமும் வேறு. தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் மொழி ஒன்று. இரண்டுமே இந்நாட்டின் சிறுபான்மை. இருவரும் அடிவாங்கியது சிங்களத்திடம். அப்படியிருந்தும் இன்னமும் புத்தி வரவில்லையா? இச்செயல்கள் மீண்டும் சிங்கள அரசை முஸ்லிம்கள் நெருங்குவதற்கே வழி வகுக்கும். கிழக்கு மாகாண சபையிலும் சிங்கள அரச கட்சியே சிறந்தது என முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டி வரும். அப்போது முஸ்லிம்களை பார்த்து சிங்கள கட்சியிடம் கிழக்கை ஒப்படைத்து விட்டதாக ஒப்பாரி வைக்க வேண்டாம். இந்த உண்மையை தமிழ் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும். முபாறக் அப்துல் மஜீத் முப்தி தலைவர் இலங்கை உலமா கட்சி. https://madawalaenews.com/45541/
-
யாழில். மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலாசார மற்றும் உணவுத் திருவிழா
சிங்கத்த இழுக்காம இரிக்க ஏலாவா எங்களுக்கு ஐசே பட்ட சிரிப்புவா, பெளறு வலிக்கிதுவா
-
யாழில். மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள கலாசார மற்றும் உணவுத் திருவிழா
அல்வாயன் ஐயா ஜுன் மாதம் முழுவதும் கனடாவில் தான் இருந்தேன், ஸ்கார்பரோ, மார்கம் ஸ்டீல், பிரம்டன் பகுதிகளில் அலைந்து திரிந்தேன். எனக்கு கொத்து நாதத்துடன் அடிக்க தெரியாது ஆனால் விசிட் விசா தந்தார்களே.
-
கனடா வேலைவாய்ப்பு மோசடி: மனிதக் கடத்தல் வலையமைப்பின் பிரதான சந்தேகநபர் கைது!
ஏன் இவர்கள் இப்படியான தவறான வழிகளை தேர்ந்தெடுத்து போகின்றார்கள்? பிறகு ஏஜசிக்காரர்களை சபிக்கின்றோம். இந்த காசை வங்கியில் போட்டிருந்தால் 10% வட்டி வரும்
-
மாரியம்மன் ஆலயத்தில் ஆலய அன்னதான வேளையில் வாள்வெட்டுத் தாக்குதல் ; 4 பேர் படுகாயம் ; ஒருவர் பொதுமக்களால் மடக்கிப்பிடிப்பு ; ஏனையோர் தப்பி ஓட்டம்
ரசோ நான் சமீபத்தில் USA வந்த்போது இங்கு ஒருவரிடம் கேட்டேன். நியுயோர்க்கில் பிறந்து வளர்ந்து வசிக்கும் ஒருவ்ர் Connecticut இருக்கும் yale பல்கலைகழகத்தில் படிக்க 3 மடங்கு செலுத்தி படிக்க வேண்டும் (வெளி நாட்டு மாணவர்களை போல்) என்று சொன்னார். இது உண்மையா? அப்ப்டியானால் ஒரே நாட்டுக்குள், வேறு ஒரு மாநிலத்திற்கு சென்று படிக்க ஏன் அவ்வளவு பணம் கட்ட வேண்டும்? இரு நியாமற்றது அல்லவா?
-
உதவி தேவை: 1987 விடுதலை நடவடிக்கை (ஒபரேசன் லிபரேசன்) காலத்தில் நீங்கள் பட்ட வேதனைகள், அனுபவங்கள் எத்தகையது?
ஒவ்வொருவரின் அனுபவங்களையும் கேட்கும்போது மிகவும் பயங்கரமாக இருக்கின்றது. இப்படியெல்லாம் இலங்கையில் நடந்ததா என நம்ப முடியவில்லை. 1987ல் நான் 9ம் தரம் படிக்கும் காலத்தில் ஜேவிபி போரட்டம் நடந்து கொண்டிருந்தது என நினக்கின்றேன். நிறைய பேர் வெளிநாடுகளுக்கு செல்ல கொழும்பில் ஏஜெசிக்கு காசு கட்டி வந்து நிற்பார்கள். பலர் கொழும்பிலும் பிடிபட்டு சிறைக்கு இழுத்து செல்லப்படுவார்கள். மறக்க முடியாத காலங்கள்.
-
சவூதியில் இலங்கையருக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனை; சமூக ஊடக பதிவு தொடர்பில் தீர்ப்பு
மிகவும் கவலையான செய்தி. இவ்ர் உணர்ச்சிவசப்பட்டு எழுதிவிட்டர் என நினக்கின்றேன். பல நல்ல இதயம் கொண்ட முஸ்லீம்கள் இவரை விடுதலை செய்ய எடுத்த முயற்சி பாராட்டதக்கது. அரபு நாடுகளில் பல காலம் வேலை செய்தேன். நான் பல முஸ்லீம்களுடன் ஒரே அரையில் வசித்தபோது பல சந்தர்ப்பங்களில் விவாதிததுண்டு முரண்படுவதுண்டு. ஆனால் மிகவும் கவனமாக இருப்பேன். இவர் செய்தது மிகவும் பாரதூரமான குற்றம். இந்தளாவோடு இவரை விட்டார்கள் என நினைத்து சந்தோசப்படுகின்றேன்.
-
ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!
ஐசே டொரண்டோல இரிக்க தமிழ் மக்களிடம் கேட்டேன்வா? இங்க சிங்கள்வன் இரிக்கான்கலாவே என்று சிங்கள்வன் பீ பயமான்வா தமிழனுக்கு. தமிழ்ன் சிங்களவனுக்கு அடித்து போடுவானாம்வா? நானும் பயந்திட்டன்வா எனக்கு அடிச்சிட்டான்கள் என்றால் அதுவேற நசல் ஆகிரும்வா?
-
ஐக்கிய இராச்சியத்தின் 59 ஆவது பிரதமராக Andy Burnham இன்று உத்தியோகபூர்வமாகப் பதவியேற்பு!
ஜஸ்டின் ஐயா, நான் இங்கு நியுயோர்க் நகரத்தில் குயிண்ஸ் என்னும் இடத்திற்கு வந்திருந்தேன் இங்கு நிறைய ஹிந்தியன்ஸ் வசிக்கின்றர்கள் போல தெரிகின்றது. அதேபோல் ஜமைக்கா என்னும் இடத்தையும் கடந்து வந்தேன் நிறைய கரீபியன் மக்கள் வசிக்கின்றார்கள். long lsland ல் நிறைய இலங்கையர்கள் வசிக்கின்றார்க்ள் என நினக்கின்றேன். ஆனால் CT, Rohd Island, போன்ற இடங்களில் அவ்வாறில்லை வெள்ளைகள் அதிகமாக வசிக்கின்றார்கள். அதுபோல் கனடாவின் Scarborough, Markam, Brampton பகுதிகளில் சில வாரங்கள் தங்கியிருந்தேன் நிறைய தமிழ் கடைகள் / ரெஸ்டரண்டுகள் உள்ளன. இடியாப்பம், பிட்டு எல்லாம் அந்த மாதிரி இருக்கின்றது. Tim Horton இன் கோப்பியின் வெனிலா ருசி வை பரவாயில்லை ரகம். அதிவிட எகிப்தில் தள்ளு வண்டியில் விற்கும் அதே வெனிலா கோப்பியின் சுவை அந்த மாதிரி இருக்கும். இலங்கையில் உள்ள எல்ல பொருட்களும் கிடைக்கின்றன. ஒர் சிறிய யாழ்பாணம் போல உள்ளது. எனவே ஒரு குறிப்பிட்ட இனம் குழுமம் அதிகரிக்கும்போது அது எமக்கு பழக்கமான இடம்போல தெரிகின்றது.
-
உலகமே எதிர்பார்த்த அமெரிக்க ஈரான் உடன்படிக்கை வெள்ளிக்கிழமை கைச்சாத்தாகிறது.
ஈரானின் ஆட்சியை மாற்ற வந்தவர்கள், இஸ்ரேலின் ஆட்சியை மாற்ற முனைவதேன்…? தான் அடிக்க அழைத்து வந்தவர், தனக்கே அடிக்கும் நிலை…? ரானின் ஆட்சியை மாற்ற வந்தவர்கள், இஸ்ரேலின் ஆட்சியை மாற்ற முனைவதேன்…? தான் அடிக்க அழைத்து வந்தவர், தனக்கே அடிக்கும் நிலை…? ஈரானின் ஆட்சியை மாற்றுவோம் என மார் தட்டிக்கொண்டு, உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி கப்பல்களோடு அமெரிக்கா வந்தது. ” வா ஈரானுக்கு அடிப்போம் ” என இஸ்ரேல் தான் அமெரிக்காவையும் அழைத்து வந்தது. இப்படி ஈரான் அவர்களை எதிர்கொள்ளுமென அவர்கள் சிறிதும் நினைக்கவில்லை. ஈரான் நிதானமாக களத்தில் ஆடியது. ஈரானின் ஆட்டத்தால் சர்வதேசமே அதிர்ந்தது. இனியும் தொடர முடியாதென அமெரிக்கா யுத்தத்தை நிறுத்தி, ஒப்பந்தமொன்றை செய்தது. இந்த ஒப்பந்தத்தால், அமெரிக்காவுக்கு மதிப்பிழப்பை தவிர வேறு நஸ்டமில்லை. ஆனால், இந்த ஒப்பந்தம் இஸ்ரேலின் இருப்பையே கேள்விக்குட்படுத்தும். தற்போது இஸ்ரேல் அமெரிக்காவுக்கு எதிராக பேச தொடங்கியது. இஸ்ரேலிய அமைச்சர்கள் டிரம்ப்பை கிழித்தெடுத்தார்கள். ” எங்கள் விடயங்களில் தலையிட நீ யாரடா..?” என கேட்காத குறையாக கேட்டார்கள். டிரம்ப் யார், விடுவாரா..? இவர்களது ஆட்சியை மாற்ற எதிர்கட்சிகளிடம் அமெரிக்கா பேசி வருகிறதாம் என உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் கூறுகின்றன. ஈரானின் ஆட்சியை மாற்ற இஸ்ரேல் அழைத்து வந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேலின் ஆட்சியை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளது. காலம் எப்படி மாறிவிட்டது பார்த்தீர்களா? இஸ்ரேலில் தேர்தல் மணம் வீச ஆரம்பித்துள்ளது. இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவின் மீது வெறுப்பில் உள்ளனர். இந் நிலையில் அவர்களோடு டிரம்பும் சேர்ந்தால் தற்போதைய நெதன்யாகு தலைமையிலான ஆட்சி இலகுவாகவே துடைத்தெறியப்படும். இஸ்ரேல் ஒரு முழுமையான அடிமை நாடாக மாற்றப்படும். மத்திய கிழக்கின் முழுச் சமன்பாடும் தலை கீழாக மாறப்போகிறது. ஏ.கே மிஸ்பாஹுல் ஹக், சம்மாந்துறை. https://madawalaenews.com/43341/
-
காத்தான்குடி பொலிஸ் பிரிவில் இடம்பெறும் சம்பவங்களை காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் என தலைப்பிடும் சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகவியளாலர்களுக்கு பகிரங்க கண்டனம்.
ஊடக தர்மத்தை மீறும் செய்தித் தலைப்புகள், காத்தான்குடி மக்களின் நிம்மதியைக் குலைக்கும் ‘பொலிஸ் எல்லை’ சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பின் பகிரங்க கண்டனம். அண்மைக்காலமாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்கள், பொலிஸ் சுற்றிவளைப்புகள் மற்றும் கைது நடவடிக்கைகள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகும் விதம் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. செய்திகளை வெளியிடும் பிரதான ஊடக நிறுவனங்கள், சுயாதீன ஊடகவியலாளர்கள் மற்றும் பிராந்திய சமூக வலைத்தளப் பக்கங்கள் இச்செய்திகளுக்குத் தலைப்பிடும் போது காட்டும் அலட்சியப்போக்கு, ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மீது குறிப்பாக “முஸ்லிம் சமூகத்தின் மீது” திட்டமிட்ட அவதூறைப் பரப்புவது போல் அமைந்துள்ளதாக சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு தனது கடுமையான கண்டனத்தை விடுத்துள்ளது. ருமாறு, ஊடகங்கள் மற்றும் முகநூல் பக்கங்களை நடத்துவோர் செய்யும் மிகப்பெரிய தவறு அல்லது திட்டமிட்ட அலட்சியம் என்னவெனில், ‘காத்தான்குடி பொலிஸ் பிரிவு’ (Kattankudy Police Division) என்ற நிர்வாக எல்லையையும், ‘காத்தான்குடி’ (Kattankudy) என்ற ஊரையும் ஒன்றாகக் குழப்பிக் கொள்வதாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் மிக நீண்டதொரு பரப்பளவைக் கொண்டதே காத்தான்குடி பொலிஸ் பிரிவாகும். இது கல்லடிப் பிரதேசம் தொடக்கம் களுவாஞ்சிக்குடி எல்லை வரையான நீண்ட கடலோர மற்றும் உள்நாட்டுப் பகுதிகளைத் தன்னுள் அடக்கியுள்ளது. இப்பொலிஸ் பிரிவின் கீழ் கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கிராமங்களும் (ஊர்கள்) 51 கிராம சேவகர் பிரிவுகளும் (G.N. Divisions) நிர்வாக ரீதியாக இணைக்கப்பட்டுள்ளன. இந்த 20 ஊர்களில் காத்தான்குடி என்பது வெறும் ஒரு பகுதி மாத்திரமேயாகும். ஏனைய 19 ஊர்களும் வெவ்வேறு சமூகங்கள், கலாச்சாரங்கள் மற்றும் மக்கள் வாழும் பகுதிகளாகும். கல்லடி, நாவற்குடா, ஆரையம்பதி அல்லது களுவாஞ்சிக்குடி எல்லைக்குட்பட்ட ஏதோவொரு கிராமத்தில் ஒரு கஞ்சா வியாபாரியோ, திருடனோ அல்லது சட்டவிரோத செயலில் ஈடுபட்டவரோ கைது செய்யப்பட்டால், ஊடகங்கள் வைக்கும் தலைப்பு இவ்வாறு அமைகிறது “காத்தான்குடியில் பெரும் போதைப்பொருள் கடத்தல்: ஒருவர் கைது!”அல்லது “காத்தான்குடியில் குற்றச்செயல்!” இவ்வாறான பொறுப்பற்ற, பரபரப்புக்காக இடப்படும் தலைப்புகள் சமூகத்தில் பின்வரும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. குற்றம் செய்த நபர் வேறு ஊரைச் சேர்ந்தவராக இருந்தாலும், தலைப்பில் ‘காத்தான்குடி’ என்று வருவதால், அந்த ஊரில் வாழும் ஒட்டுமொத்த மக்களும் குற்றவாளிகள் போன்றதொரு பிம்பம் பொதுவெளியில் உருவாக்கப்படுகிறது. சட்டத்தை மதித்து, அமைதியாக வாழும் பல்லாயிரக்கணக்கான காத்தான்குடி மக்கள், வெளி ஊர்களுக்குச் செல்லும் போதோ அல்லது ஏனைய சமூகத்தினருடன் பழகும் போதோ தங்களைச் குற்றப்பின்னணி உள்ளவர்கள் போல சமூகம் பார்க்கிறதோ என்ற தேவையற்ற மன நெருக்கடிக்கும், நிம்மதியற்ற சூழலுக்கும் தள்ளப்படுகிறார்கள். பிற சமூகங்களைச் சேர்ந்த மக்கள் மத்தியில் காத்தான்குடி பிரதேசம் பற்றிய ஒரு தவறான அச்சத்தையும், வெறுப்பையும் இச்செய்தித் தலைப்புகள் விதைக்கின்றன. இது மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகப் பேணப்பட்டு வரும் இன, சமூக நல்லிணக்கத்திற்குப் பெருமச்சுறுத்தலாக அமைகிறது. தொடர்ச்சியாக ஏனைய ஊர்களில் நடக்கும் குற்றங்களை வேண்டுமென்றே காத்தான்குடியோடு முடிச்சுப் போட்டுச் செய்தி பரப்புவது, தற்செயலான அறியாமை அல்ல, மாறாக ஒரு பிரதேசத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் திட்டமிட்ட பிரசாரமா என்ற பலத்த சந்தேகத்தையும் சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு எழுப்புகிறது. ஊடக சுதந்திரம் என்பது நாட்டின் சட்ட ஒழுங்கையும், மக்களின் தனிமனித கௌரவத்தையும் மதித்து நடப்பதே ஆகும். எனவே, செய்தி ஊடகங்கள் உடனடியாகப் பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு வலியுறுத்துகிறது. குற்றச்சம்பவம் எங்கு நடந்ததோ, அந்த குறிப்பிட்ட கிராமத்தின் அல்லது வீதியின் பெயரைத் தலைப்பில் குறிப்பிட வேண்டும். பொலிஸ் பிரிவின் பெயரைக் குறிப்பிட வேண்டிய சட்டத் தேவை இருப்பின், தலைப்பிலோ அல்லது செய்தியின் முதலாவது பந்தியிலோ, “காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்…” என்று வாசகர்களுக்குத் தெளிவாகப் புரியும் வகையில் எழுத வேண்டும். குறிப்பாக முகநூல் (Facebook), யூடியூப் (YouTube) மற்றும் டிக் டொக் (TikTok) போன்ற தளங்களில் அவசர அவசரமாகப் ‘வியூஸ்’ மற்றும் ‘லைக்குகளைப்’ பெறுவதற்காக ஒரு பிரதேசத்தின் கௌரவத்தைச் சூறையாடும் தலைப்புகளை இடுவதை இளைய தலைமுறை ஊடகவியலாளர்கள் முற்றாகத் தவிர்க்க வேண்டும். குற்றவாளிகளுக்கு எந்தவொரு ஊரோ, மதமோ அல்லது சாதியோ கிடையாது. குற்றம் செய்தவர் சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவரே. ஆனால், அவர் செய்யும் குற்றத்திற்காக அவர் வாழும் அல்லது கைது செய்யப்பட்ட பொலிஸ் பிரிவின் பெயரால் ஒட்டுமொத்தப் பிரதேச மக்களையும் பழிவாங்குவது நாகரீகமான ஊடகவியல் அல்ல. சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பின் இந்த வேண்டுகோளானது, வெறுமனே ஒரு ஊருக்கான குரல் அல்ல; இது ஒட்டுமொத்த ‘காத்தான்குடி பொலிஸ் பிரிவில்’ வாழும் மக்களுக்கானதாகும். இனிவரும் காலங்களிலாவது பிராந்திய மற்றும் தேசிய ஊடகங்கள் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டு, பொறுப்புடன் செய்தி வெளியிடும் என நாம் எதிர் பார்க்கின்றோம். சமூக அரசியல் உரிமைகளுக்கான அமைப்பு. ஊடகப் பிரிவு https://madawalaenews.com/43338/
-
யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2026
உலக கிண்ண போட்டிகளை பார்த்து ரசிக்க ஏதாவது இலவச link ஏதும் யாருக்கவது தெரியுமா? அல்லது ஏதும் app's உள்ளாததா ? யாரும் தெரிந்தவர்கள் / பயனாளார்கள் உதவி செய்யவும்
-
இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானார் - சோகத்தில் திரையுலகம்
ஆழ்ந்த இரங்கல்கள் ஐயா. பல படங்கள் நேற்று பார்த்ததுபோல் கண்முன் நிற்கின்றது. அப்பொழுது வீ சீ ஆர் இல் படம்பார்க்கும் காலம். என் பதின்ம வயதில் இவருடைய சில படங்கள் கிளர்ச்சியை ஏற்படுத்திட்டுள்ளது டிக் டிக் டிக் என்றொரு படம் மாதவியை பார்த்து ஏங்கியுள்ளேன். முதல் மரியாதையையில் வயசான கிழவனுக்கு இப்படியும் நடக்குமா என யோசித்ததுண்டு அனால் எனக்கும் அதே போல் வாழ்வில் நடந்தது. காதுல நரைச்ச முடி கன்னத்துல குத்துது குத்துது சுழியில படகு போல என் மனசு சுத்துது சுத்துது பருவம் தெரியாம மழையும் பொழிஞ்சாச்சு! வெவரம் தெரியாம மனசும் நனைஞ்சாச்சு சென்று வாருங்கள் ஐயா !
-
ஆண்குறிகள் அழுக்கானவை - நீலாவணை இந்திரா
இங்கு எகிப்தில் மர்யம் என்னும் பெயர் பொதுவானது. எனக்கு இங்கு ஒரு மர்யம் இருகின்றாள்
-
சுவிற்சர்லாந்து மாநிலமொன்றின் முதல்வராக ஈழத்தமிழர்.
செபஸ்டியான் என்றால் சீமான?
-
வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியது விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய வடு – முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம்.. ஆனால் மன்னிக்க முடியாது; ரவூப் ஹக்கீம் Photo of Madawala News Madawala News
தமிழர்களின் அடிப்படை அபிலாஷைகளுக்கு முஸ்லிம்கள் முரணாக இல்லை யாழ் முஸ்லிம்கள் பற்றிய நூல் வெளியீட்டில் மு.கா. தலைவர் ஹக்கீம் தெரிவிப்பு “ஈழத் தமிழர்கள் தங்களுடைய தலைநகராக என்றும் போசித்துக் கொண்டாடுகிற யாழ் நகரில் முஸ்லிம்களும் வாழ்ந்தார்கள்” என்று ஒரு கடந்த கால நிகழ்வாக அதை சொல்லுகிற ஒரு துர்ப்பாக்கியம் நிகழ்ந்தது என்பது எங்கள் எல்லோருக்கும் மிகுந்த வருத்தத்தைத் தருகின்ற விடயம். இன்றும் வாழ்கிறார்கள் என்பதும் அன்றிருந்த ஒஸ்மானியா கல்லூரியின் இன்றைய நிலையை பார்த்தால் அதைவிடவும் கூட வருத்தப்படுகிற ஒரு நிலைமையில் நாங்கள் இருக்கிறோம்.” என்றார் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி. கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்மையில் நடைபெற்ற,கலாபூஷணம் பரீட் இக்பால் எழுதிய “முத்திரை பதித்த யாழ் முஸ்லிம்கள் ” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய மு.கா தலைவர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது, ஒஸ்மானியா கல்லூரி என்பது இலங்கை முஸ்லிம்களின் கல்வியின் கலங்கரைவிளக்கம் என்று சொல்லுகிற அளவிற்கு புகழ்பெற்ற ஒரு கலைக்கூடமாக இருந்த இடம்,இன்று குறுகிப்போய் இருக்கிற ஒரு நிலைமையை பார்க்கிறோம். ஒஸ்மானியா கல்லூரிக்கு அருகில் ஜின்னாஹ் மைதானம் என்று ஒன்று இருக்கிறது. ஜின்னாஹ் மைதானம் சாமான்யமான இடமல்ல, முஹம்மது அலி ஜின்னாஹ் வந்துபோன இடம் என்று சொல்லப்படுகிறது. அதனால்தான் அந்த பெயர் அதற்கு சூட்டப்பட்டது என்றும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஆனால் இந்த சூழலில் கடந்தகால விடயங்களைப் பற்றி பேசுவது மனதிற்கு ஒரு சுமையான விடயம். 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 30 திகதி வடபுலத்திலிருந்து முஸ்லிம்களை விரட்டுவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து இங்கு தலைமை வகிக்கிற சகோதரர் என்.எம் அமீன் , விடுதலைப் புலிகளின் தலைவரிடம், அவர் சமாதான பேச்சுவார்த்தைக்கு வந்த சூழலில் அன்றைய செய்தியாளர் மாநாட்டில் ஒரு பிரபலமான கேள்வியை யெழுப்பினார். அந்த கேள்வி எழுப்பப்பட்டபோது விடுதலைப் புலிகளின் தலைவர் அங்குமிங்குமாக பார்த்துவிட்டு, அவருடைய மதியுரைஞர் அண்டன் பாலசிங்கத்திடம்கூட எதையும் பேசவில்லை,எடுத்ததெடுப்பில் சொன்ன விடயம் “அது ஒரு துன்பியல் சம்பவம்,அதைப்பற்றி நாங்கள் இதற்குமேல் எதுவும் சொல்வதற்கில்லை” என்பது இன்று ஒரு வரலாற்று பதிவாக மாறிவிட்டது. அன்றிலிருந்தது இன்றுவரை யாழ் முஸ்லிம்கள் எல்லோரும் அதை மறப்போம் ; ஆனால் மன்னிக்கமுடியாது என்ற நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள். இதை மாறிமாறி வருகிற தற்கால அரசியல் தலைமைகளும் ஆங்காங்கே ஏதாவது சொல்லப்போனால் ஏட்டிக்குபோட்டியாக அவர்கள் மீதும் சீறிப்பாய்கிற ஒரு கூட்டம் இன்னும் இருக்கிறது என்பதுதான் கவலைகுரிய விடயம் . இன்னுமொரு சுவாரஸ்யமான சம்பவத்தை நான் உங்களிடத்தில் சொல்லவேண்டும், வேறு எந்த பொதுமேடையிலும் இதை சொன்னதாக எனக்கு ஞாபகமில்லை, தனிப்பட்டமுறையில் பலரிடம் இதை நான் சொல்லியிருக்கிறேன். விடுதலைப் புலிகளின் தலைவரை நான் சமரசப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களின் சார்பில் அவரையும்,அவருடைய குழுவினரையும் சந்திப்பதற்கான ஏற்பாட்டை நோர்வே சமாதான ஏற்பாட்டாளர்கள் செய்த சமயத்தில் எங்களுக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது. கிளிநொச்சியில் ஒரு சாமான்யமான வரவேற்பு அல்ல. ஒரு நாட்டுத் தலைவரை வரவேற்கிறமாதிரி எங்களுக்கு வீதியெங்கிலும் இரு புறத்திலும் புலிகளுடைய பெண் போராளிகள் அவர்களுடைய மரியாதை நிமித்தம் ,எல்லோரும் அடிக்கிற சலியூட் அல்ல வலது கையை நெஞ்சுக்கு நேராக செங்குத்தாக வைத்து சலியூட் தெரிவித்தார்கள்.இப்படி ஒவ்வொரு 50 அடி தூரத்திலும் ஒருவராக நின்று எங்களுக்கு பெரியதொரு மரியாதையளிக்கப்பட்டது. கைலாகு கொடுத்து விடுதலைப் புலிகளின் தலைவரை நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை தொடங்கி கிட்டத்தட்ட நான்கு-ஐந்து மணித்தியாலங்கள் நாங்கள் கதைத்திருப்போம். யாரும் எதிர்பார்க்காத மிகப் பெரிய ஒரு விருந்துபசாரமும் நடந்தது. பேச்சுவார்த்தை நடுவில் இன்னுமொரு முக்கியமான விடயமும் நடந்தது. நண்பகல் 12.20 மட்டில் பேச்சுவார்த்தையின் இடை நடுவில் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார் “இப்பொழுது நாங்கள் பேச்சுவார்த்தையை கொஞ்சம் இடைநிறுத்தி உங்களுடைய தொழுகைக்கான நேரம் வந்துவிட்டது, நீங்கள் தொழுவதற்கான ஏற்பாடுகளை செய்திருக்கிறோம், தொழுதுவிட்டு வாருங்கள்” என்று சொன்னார். நாங்களும் ஆச்சரியப்பட்டுப்போனோம். எங்களுக்கு தூரபயணம் என்ற காரணத்தினால் கஸ்ர்,ஜம்மு அதாவது சேர்த்தும்,சுருக்கியும் செய்துகொள்ளலாம் என்ற நோக்கத்தில் இருந்த எங்களுக்கு உரிய (வக்து )நேரத்தில் தொழுவதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் எங்களிடம் சொல்லுகிறாரே என்று நாங்களும் கொஞ்சம் பிரமித்துப்போனோம். தொழுகை முடிந்த பிறகு எங்களுக்கு விமர்சையான ஒரு விருந்துபசாரம் நடந்தது.அதில் எல்லாவிதமான மாமிசங்களும் இருந்தன. எங்களுக்கு கொஞ்சம் தயக்கம் விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்: “யோசிக்கவேண்டாம் ,அது உங்களுடைய மார்க்கப்படி நாங்கள் அதை தயார் பண்ணியிருக்கிறோம் ” என்றாலும் கொஞ்சம் தயங்கினோம்,”கொஞ்சம் இருங்கள் அவரைகூப்பிடுங்கோ” என்றதும், நீண்ட தாடி,வெள்ளை சேர்ட்டோடு ஒருவர் வந்தார், கொஞ்சம் சந்தேகமாக இருந்ததால் நாங்கள் “அஸ்ஸலாமு அலைக்கும்” என்றதும் வலைக்கும் ஸலாம் சேர்’ என்றார். அத்துடன், “நான்தான் சேர், தலைவருடைய சமையல்வேலையெல்லாம் பார்க்கிறேன், இவ்வளவு காலமும் அவரோடுதான் இருக்கிறேன்”என்றார். பிரபாகரனும் “அவர்தான் எனக்கு சமைப்பவர், அவருடைய கைகளால்தான் உங்களுக்கும் சாப்பாடு என்றார். எங்களுடைய வன்னி அமைச்சராக இருந்த நூர்தீன் மஷூரும் வந்திருந்தார்,அதாவுல்லாஹ் வந்திருந்தார்,மசூர் மௌலானா போன்றவர்கள் இருந்தார்கள். நாங்கள் ஐந்து,ஆறு பேர் போயிருந்தோம். இவற்றையெல்லாம் நான் சொல்கிறேன் . இன்னுமொரு விடயத்தையும் விடுதலைப் புலிகளின் தலைவர் எனக்கு சொன்னார், தான் இந்தியப் படையினரிடம் தப்பி ஓடி ஒழிந்து அலைந்து திரிந்து கொண்டிருக்கிறபோது சிலாபத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் தன்னை பாதுகாப்பாக ஒழித்துவைத்திருந்ததாகவும்,அதைத் தான் வாழ்வில் ஒரு போதும் மறக்கப் போவதில்லை என்றும் சொன்னார். இவற்றையெல்லாம் பார்கிறபோது ஏன் இந்த விதமாக விடுதலைப் புலிகள் நடந்து கொண்டார்கள் என்பதிலும் எங்களுக்கும் கொஞ்சம் சந்தேகம்தான். அதையெல்லாம் கேட்கிற நிலைமையில் இல்லை,நாங்கள் இந்த விடயங்கள் சம்பந்தமாக எங்களுடைய பேச்சுவார்த்தையில் மிக அழுத்தம் திருத்தமாக நாங்கள் சொன்ன விடயம், வடபுலத்து முஸ்லிம்கள் எல்லோரையும் மீளக்குடியமர்வதற்கு விடுதலைப் புலிகள் எல்லாவற்றையும் செய்யவேண்டும்,அது மாத்திரமல்ல அந்த நேரம் நடந்துகொண்டிருந்த இன்னுமொரு மிக கஷ்டமான ஒரு விடயத்தை நாங்கள் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சொன்னோம். ஏனென்றால், விடுதலைப் புலிகள் வடக்கிலும்,கிழக்கிலும் முஸ்லிம் வியாபாரிகளிடம் வரி விதிக்கிற ஒரு நடைமுறை இருந்தது.ஏனென்றால், புலிகள் சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் எல்லா தமிழ் பிரதேசங்களும் அவர்களுடைய ஆதிக்கம் இயல்பாகவே வந்துவிட்டது என்றொரு நிலையில் ,எல்லா இடத்திலும் வரி வசூலிக்கிற மாதிரி முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கிற ஒரு நிலைவரம் இருந்தது ஒரு பெரிய சர்ச்சைக்குரிய விடயமாக இருந்தது. அதை நாங்கள் அவரிடத்தில் எடுத்துச் சொன்னோம் ,அதற்கு விடுதலைப் புலிகளின் தலைவர் சொன்னார்.”நாங்கள் இந்த போராட்டத்திற்கு வரி வசூலிக்கிற ஒரு நடைமுறை இருக்கிறது. வடக்கிலும்,கிழக்கிலும் இருக்கிற பிரதானமான நகரங்களில் நான்கு,ஐந்து தமிழ் கடை இருந்தால் இன்னுமொரு முஸ்லிம் கடை இடையில் இன்னுமொரு முஸ்லிம் கடை அப்படி இருக்கும் போது தனிய தமிழ் கடைகளுக்கு போய் நாங்கள் வரி வசூலிப்பது எங்களுக்கு கொஞ்சம் சங்கடமான விடயம், எனவே அதை நீங்கள் கொஞ்சம் பொருந்திக்கொள்ளவேண்டும்” என்றார். அதற்கு நான் அவரிடத்தில் சொன்ன விடயம், “முஸ்லிம்களை பொறுத்தமட்டில், உங்களுடைய போராட்டம் முஸ்லிம்களுக்காகவும் சேர்த்து செய்யப்படுகிறது என்ற உணர்வு இல்லாத ஒரு சூழல் நிலவுகிறது, இந்த சூழலில் நீங்கள் அவ்வாறு வரி வசூலிப்பது வரியாக இல்லாமல் கப்பமாக பார்க்கப்படுகிற ஒரு நிலைவரம் இருக்கிறது ” என்பதையும் நான் கொஞ்சம் தயக்கத்தோடாவது சுட்டிக்காட்டவேண்டிய ஒரு நிலைவரம் இருந்தது. சொன்ன மாத்திரத்திலேயே “நீங்கள் சொன்னது சரிதான். நாளையிலிருந்து எந்த முஸ்லிம்களிடத்திலும் வரி வசூலிக்கப்படமாட்டாது” என்றார். அப்பொழுது பக்கத்திலிருந்த கிழக்கு தளபதிகள் கொஞ்சம் அதில் விருப்பக்குறைவுமாதிரி தென்பட்டாலும் கூட, தலைவர் சொல்லிவிட்டார் என்றவுடனே வேறு யாரும் மறுத்துப் பேசவில்லை. அதற்கு பிறகு தலைவருடைய கட்டளையை மீறி அவ்வாறு சில இடங்களில் நடந்தபோது, நான் அடிக்கடி தமிழ் செல்வனோடு தொலைபேசியில் உரையாடி முறையிடுகிற நிறைய நிகழ்வுகளும் நடந்தன .இவற்றையெல்லாம் நான் ஏன் நினைவுகூறுகிறேன் என்றால் இந்த பின்னணியில் நல்லதொரு உடன்பாடு முஸ்லிம்களுக்கும்,தமிழர்களுக்கும் இடையில் வரவேண்டும் என்பதில் நாங்கள் மிக கவனமாக பல விடயங்களை கையாண்டோம் என்பதற்காகத்தான்.துரதிர்ஷ்ட வசமாக அந்த நிலையெல்லாம் தலைகீழாக மாறி ,இன்று வரலாறு வேறு விதமாக விடயங்களைத் தீர்மானித்துவிட்டது. இவையெல்லாம் நான் எதையும் நியாயப்படுத்துவதற்காக சொல்லுகிற விடயமல்ல, குறிப்பாக முஸ்லிம்களுடைய,வடமாகாணத்தின் வெளியேற்றம் என்பது புலிகளுடைய போராட்ட வரலாற்றில் மிகப் பெரிய ஒரு வடு என்பதை புலிகளே உணர்ந்திருந்தார்கள் என்பது தெட்டத்தெளிவான விடயம் மாத்திரமல்ல ,அடிக்கடி நேர்மையான தமிழ் தலைமைகள் அதைப்பற்றி பேசுகிறார்கள். நான் இங்கு பெயர் சொல்லி எதையும் சொல்லவரவில்லை.ஆனால் இதுதான் இன்றிருக்கிற நிலைவரம், அதைத்தான் நான் சொன்னேன். முஸ்லிம்கள் மத்தியில் இது மறக்கப்பட்டாலும் மன்னிக்கப்படமுடியாத ஒரு விவகாரம் என்ற உணர்வோடு முஸ்லிம்கள் இருந்துகொண்டிருக்கிறார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் என்னுடைய மறைந்த தலைவர் காலத்திலிருந்து இன்றுவரை தமிழர்களுடைய போராட்டங்களின் அடிப்படை அம்சங்களில் எங்கு முஸ்லிம்கள் குறித்த விவகாரங்களில் சில முரண்பாடுகள் வருகின்றனவோ நாங்கள் அதைப்பற்றி பேசுகிறபோதும் இவர்களுடைய அடிப்படை அபிலாஷைகளுக்கு முரணாக அது வந்துவிடக்கூடாது என்பதில் நாங்கள் மிகக் கவனமாகத்தான் இருந்து வந்திருக்கிறோம். எதிர்வரும் 24 ஆம் திகதி கனடாவில் இருக்கிற எல்லா ஈழத் தமிழ் அமைப்புகள் சார்பிலும் நான் தைப்பொங்கள் விழாவில் பிரதம அதிதியாகவும் அழைக்கப்பட்டிருக்கிறேன். ஆனால் எங்கு போனாலும் இந்த விவகாரங்களில் இருக்கிற சில துல்லியமான உண்மைகளை நாங்கள் மனம் விட்டுபேசாமல் இருப்பது என்பது நாங்கள் செய்கிற மிகப்பெரிய வரலாற்று தவறாகப் போய்விடும் என்பதற்காகத்தான் இந்த ஒருசில விடயங்களை நான் இங்கு சொல்லிவைக்கிறேன். இவற்றை சொன்ன பிறகும் விமர்சிப்பவர்கள் இரு புறத்திலும் இருப்பார்கள், இதுதான் இருக்கிற நடைமுறைச் சிக்கல், இனத்துவ அரசியலில் இப்படியான விவகாரங்களை ஜீரணித்துக்கொள்வது என்பது சில தரப்புகளுக்கு மிகவும் சங்கடமான, கஷ்டமான விவகாரமாகும். யாழ்ப்பாண முஸ்லிம்களின் மிகப்பெரும் ஆளுமைகளில் சிலரைப் பற்றிய விடயங்களை கொண்டாடுகிற விதமாக இந்த நூல் எழுப்பட்டிருக்கிறது. அறிஞர் ஏ.எம்.ஏ அஸீஸ் அடிக்கடி என்னுடைய நினைவுக்கு வருபவர்.அவரது புதல்வர் நண்பர் அலி அஸீஸ் ஒருமுறை என்னை ஏ.எம்.ஏ அஸீஸ் நினைவு பேருரையாற்றுவதற்கு அழைத்திருந்தார்.அந்த உரையை நான் கவனமாக தயார் செய்தபோது ,எனக்கு கைதந்த ஒரு நூல் அவருடைய மகன் வெளியிட்டுவைத்த “ஏ.எம்.ஏ அஸீஸ் செனட் உரைகள்” என்ற ஒரு தொகுப்பு. இலங்கையின் செனட் சபையின் உறுப்பினராக10,12 ஆண்டுகள் இருந்தவர். ஸாஹிராவின் அதிபராக, இலங்கையின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட நிருவாக சேவை அங்கத்தவராக என்றெல்லாம் இருந்தவர். அதுவும் நிருவாக சேவை அங்கத்தவர் என்ற பதவியை ஸாஹிரா கல்லூரி அதிபர் பதவியை எடுப்பதற்காக இராஜினாமா செய்தவர், அப்படியான ஒரு மிகப் பெரிய தியாகத்தை யாரும் செய்யமுடியாது.ஸாஸாஹிராவுடைய பொற்காலம் அஸீஸுடைய காலம் என்று அடிக்கடி நாங்கள் கேள்விப்படுகிறோம்; பேசுகிறோம். அவருடைய நினைவு பேருரைக்காக அவருடைய செனட் உரைகளுடைய தொகுப்பை நான் இன்றும் கூட என்னுடைய கைநூல் போன்று வைத்துக்கொண்டிருக்கிறேன்.அவர் செனட் சபையில் கதைத்த பேச்சுக்களுடைய கனதி என்பது என்னைப்பொறுத்தவரையில் அவருக்கு முன்பும்,பின்பும் எவருடைய பேச்சுக்களுக்கும் எந்தத்தரத்திலும் குறைவில்லாததாக, தரமான ஆய்வின் அடிப்படையிலான உரைகளை அவர் நிகழ்த்தியிருந்தார் என்பதை வாசிப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். அவர் இலங்கை வை.எம்.எம்.ஏ இயக்கத்துடைய ஸ்தாபகர் .அவர் மடவளைக்கு வந்து அந்த காலத்தில் ,50 களில் என நினைக்கிறேன். அதன் கிளையை அங்கு ஆரம்பித்தபோது என்னுடைய தகப்பனாரும் அதனுடைய செயலாளராக இருந்திருக்கிறார் என்பது எனக்கு பெருமைக்குரிய விடயம். அதேபோன்று, நான் இன்னும் பெருமைப்படுகிற விடயம் அதாவது யாழ் மக்கள் பெருமைப்பட்டுக்கொள்கிற விடயம் அடுத்த நிருவாக சேவை உத்தியோகத்தர் மறைந்த மக்பூல் . மக்பூல் அவர்கள் நான் கல்வி கற்ற கலகெதர ஜப்பார் மத்திய வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றியவர் என்பதும் எனக்கு பெருமை தருகிற அடுத்தவிடயம். ஏன் இவர்களையெல்லாம் நாங்கள் கொண்டாடுகிறோம். இப்படி கொண்டாடப்படக்கூடிய அந்தஸ்தில் இருக்கிற மிகப் பெரிய ஆளுமைகளை உருவாக்கிய ஒரு மண் இன்று வெறிச்சோடிப்போய் இருக்கிறது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இதற்கு எப்படி உயிரோட்டம் அளிப்பது? அன்று யாழ் முஸ்லிம்கள் வியாபாரத்தில் உச்சநிலையில் இருந்தார்கள் என்பது மட்டுமல்ல ,சில துறைகளில் அவர்கள்தான் அங்கு யாழ்ப்பாணத்தில் தையல் கடை என்றால் எல்லாம் முஸ்லிம்கள்தான்.இரும்பு வியாபாரிகள் என்றால் முஸ்லிம்கள்தான். இப்படியாக அவர்களுக்கென்றே தனித்துவமான வியாபார நோக்கங்கள் இருந்தன. செயல்பாடுகளும் இருந்தன. இவற்றையெல்லாம் பெருமையாகப் பேசுகிறபோது, நாங்கள் யாழ்ப்பாணம் போகிறபோது பொம்மைவெளிக்கு போனால் மூர் வீதிக்குபோனால் அங்கிருக்கிற கட்டிடங்கள் மீண்டும் உயிரோட்டமாகத் தென்பட்டாலும் இடைக்கிடையில் பாலடைந்த இல்லங்களைப் பார்க்கிறபோது அவை ஒரு தனியான வரலாற்றைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. எங்களுக்கு அந்த வலியைச் சுமந்த உணர்வு மற்றும் அந்த கொடூரமான ஓக்டோபர் 1990 இன் நினைவுகள் இன்றும் வருகிறமாதிரிதான் நாங்க மூர் வீதிக்கு போனால்,பொம்மைவெளிக்கு போனால் எங்களுக்கு வருகிறது என்பது ஒரு விடயம். அனால் இவற்றையெல்லாம் அந்த விவகாரங்களைக்கூட இங்கு எவற்றையும் நண்பர் பரீட் இக்பால் சொல்லியிருக்கமாட்டார் ஆனால் சொல்லியாகவேண்டும்.ஏ,னென்றால் அதை தவிர்த்து நாங்கள் யாழ் முஸ்லிம்களின் வரலாற்றைப் பேசமுடியாது. அந்த மண் முஸ்லிம்கள் வாழ்ந்த மண் மீண்டும் உயிர்த்தெழவேண்டும் .அதற்கு இன்றும் கூட பலவிதமான சிக்கல்கள் இருந்துகொண்டிருக்கின்றன. அவை நிருவாக ரீதியாக இருந்தாலும் சரி, அரசியல் ரீதியாக இருந்தாலும் சரி சிக்கல்கள் இல்லாமலில்லை. மீள்குடியேற்றம் என்று பேசுகிறபோது யாழ் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு விசேடமான மீள்குடியேற்ற செயலணி ஒன்றை அமைக்கிற பொறுப்பும்,கடமையும் எங்கள் தரப்பிலிருந்து மாத்திரமல்ல ,தமிழர் தரப்பிலிருந்தும் வரவேண்டும். அவற்றையெல்லாம் தாண்டிப்போய், சந்ததிகள் பல கடந்து விட்ட நிலையில் யாழ் முஸ்லிம்கள் அங்குமிங்குமாக சில்லாங்கொட்டை சிதறின மாதிரி வாழுகின்ற ஒரு நிலைமையில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அடைவு எதிலும் பெரிதாக குறைந்துபோய்விடவில்லை என்றார். https://madawalaenews.com/35691.html
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
கண்ணீர் அஞ்சலிகள்