புதிய பதிவுகள்

ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி Published By: DIGITAL DESK 7   17 MAY, 2024 | 11:15 AM image   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும்
Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 10:26 AM image   யாழ்ப்பாணம், ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (16) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.  ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மன விரக்தியடைந்த அவர் இன்றையதினம் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி கமராவில் பதிவாகியுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர்
டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 1000243405.jpg புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமையான காயங்களுக்கு உள்ளான
ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி Published By: DIGITAL DESK 7   17 MAY, 2024 | 11:15 AM image   யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன. இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183751
சீனா, ரஷ்யா, விளாதிமிர் புதின், ஷி ஜின்பிங், யுக்ரேன் போர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா பிக்கர் பதவி, பிபிசி சீனா செய்தியாளர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சீனாவுக்குச் சென்றிருக்கிறார். அங்கு அவர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்திக்கிறார். புதின் ஐந்தாவது முறை ரஷ்யாவின் அதிபராகப் பதவியேற்றபின்னர் இந்த
வீராணம் ஏரி படக்குறிப்பு,தண்ணீர் இல்லாமல் காய்ந்து கிடைக்கும் வீராணம் ஏரி. கட்டுரை தகவல் எழுதியவர், க.மாயகிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழுக்காக 16 மே 2024 சோழ இளவரசர் ராஜாதித்தனால் 1100 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட பிரம்மாண்டமான வீராணம் ஏரி மழைக்காலத்தில் கடல் போல காட்சியளிக்கும். கோடைக்காலத்தில் அவ்வளவு வனப்பாக இல்லையென்றாலும், ஓரளவுக்கு நீர் இருப்பு காணப்படும்
டென்மார்க்கில் தமிழ் அர்ச்சகர் மீது கொடூரத் தாக்குதல் Vhg மே 17, 2024 1000243405.jpg புலம்பெயர் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டுவருகின்ற டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் தமிழ் அர்ச்சகர் நேற்று முன்தினம் கடுமையானமுறையில் தாக்கப்பட்டுள்ளார். டென்மார்க் கோவிலில் தமிழில் வழிபாடுகளைச் செய்வதற்காக இலங்கையில் இருந்து வருகைதந்திருந்த தம்பிரான் சுவாமிகள் மிதே இந்தக் கொடூரத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. டென்மார்க் அருள்மிகு வேல்முருகன் திருக்கோவிலின் அறங்காவலருடைய வேண்டுதலுக்கு இணங்க அவர் கோவிலில் தங்கியிருந்தபோதே, நள்ளிரவில் கோவில் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்நுழைந்த நான்குபேர் அர்ச்சகர் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. கடுமையான காயங்களுக்கு உள்ளான அர்ச்சகர் தற்போது வைத்தியசாலையின் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றார்.   https://www.battinatham.com/2024/05/blog-post_468.html
காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை அல்ல, களப்பணியாளர்களையே May 16, 2024 காலம் கோருவது  வெறும் கருத்து உருவாக்கிகளை  அல்ல, களப்பணியாளர்களையே — கருணாகரன் — “முள்ளிவாய்க்கால் கஞ்சி“ யை வழங்கினார்கள் என்ற குற்றச்சாட்டில் திருகோணமலை – மூதூரில், மூன்று பெண்களைப்  பொலிஸார்  கைது செய்திருக்கின்றனர். கைது செய்யப்பட்ட முறை மிகத் தவறானது. இந்தக் காட்சி பதிவு செய்யப்பட்டு, சமூக வலைத்தளங்களிலும் பகிரப்பட்டுள்ளது. நீதிமன்ற விசாரணையின்போதும் இது சமர்ப்பிக்கப்படலாம்.  இரவு வேளையில் வீட்டில் அணிந்திருக்கும் ஆடைகளோடு கிரிமினல் குற்றவாளிகளைப் போல குற்றம்சாட்டப்பட்ட பெண்களை ஆண் பொலிஸார் கொற இழுவையாக இழுத்துச் செல்கின்றனர். குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் இந்தக் கைதுக்கு முறைப்படியான நீதிமன்ற ஆணை பெறப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தேநீர், காபியை பாலுடன் சேர்த்துக் குடிப்பதால் என்ன ஆபத்து? சரியாகப் பருகுவது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தேநீர். இந்தத் தேநீருக்குத்தான் இன்ஸ்டாவில் எத்தனை ரீல்ஸ், எத்தனை பாடல்கள், எத்தனை ரசிகர்கள். உடல் நடுங்கும் குளிரில் தொடங்கி கொளுத்தும் வெயில் வரை தேநீருக்காக ஏங்கும் மக்கள்
Tamil baker Tharshan Selvarajah, who arrived in France from Sri Lanka in 2006, will be the first Eelam Tamil to carry the Olympic torch at this year’s relay.   Selvarajah will be one of 10,000 people to carry the torch.   Speaking to France 24, Selvarajah said the decision came as a “good surprise” and said he was “very lucky” to be selected.   The torch will be travelling through over 400 French towns and territories including Guadeloupe, Martinique, New Caledonia and Réunion before the opening ceremony of the Paris Olympic Games on 26 July.   Last year, Selvarajah won the title of having the best baguette in Paris. Selvarajah beat off 176 other baguettes and bagged a €4,000 prize. He is currently delivering the bread to the presidential palace. Credit @
spacer.png 1958 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் சிலோன் (இலங்கை) இடையே தொடங்கப்பட்ட இந்த பேருந்து சேவை உலகின் இரண்டாவது மிக நீண்ட பேருந்து பயணமாக கருதப்படுகிறது. பயணத்தின் போது இந்த பேருந்து இந்தியாவின் ராமேஸ்வரத்தில் இருந்து கப்பலில் பேருந்தை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு பயணித்தது. 42 நாட்கள் 20000 கிலோமீட்டர் பயணம் செய்த இந்தப் பயணம் எவ்வளவு அற்புதமாக இருந்திருக்கும்? Vino Rajacholan VII
438260417_459187366485700_75223251224214 முதியோர் இல்லத்திற்கு அன்னதானம்  •••••••••••••••••••••••••••••••••••••••••••••••••• செய்யப்  போறீங்களா,  •••••••••••••••••••••••••••••• ஒரு நிமிடம் இதை படியுங்கள். ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன்.  எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்தச்  சமயத்தில் அங்கு வந்த ஒரு நன்கொடையாளர், தன் மகளின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வேளைக்கு மட்டும் அன்னதானம் அளிக்க விரும்புவதாகக் கூறினார்.  மேலும் "குறித்தநாளில் பகல் 12 மணிக்கு வாழைப்பழம், Sweet, பீடா, வடை, பாயாசத்தோடு சாப்பாடு முதியோர் இல்லத்துக்கு வந்துவிடும். உணப்பொருட்களை கொண்டு வந்த  பாத்திரங்களை திரும்பவும்  ஓட்டலுக்கு கொடுக்கும் போது மிகவும் சுத்தமாக துலக்கி
மகள் சோம. அழகு 'திண்ணை' இணையத்தில் எழுதிய, 'மகிழ்' என்று தலைப்பிட்ட சிறுகதையை இங்கே மீள்பதிவு செய்கிறேன். அரசியல் சமூகம்                   மகிழ் !                                       -------சோம. அழகு     OIG2-2.jpeg உவன் பணிக்குச் சென்ற பின் சுடச்சுட போர்ன்விட்டாவுடன்(உவள் ஒரு ‘tea’totaller! ஏன்? தேநீர் என்று எழுதினால்தான் எழுத்துக்குரிய இலக்கணமும் உணர்வும் பெறுமா? தேநீரின் ஒவ்வொரு
spacer.png 1950களில் வீரகேசரி நாளிதழின் அலுவலகம்.  இந்தப் புகைப்படம் தொடர்பாக ஒரு அன்பரின் கருத்து இதோ... வீரகேசரி நிறுவனம் 1930 ஆம் ஆண்டு சுப்ரமணிய செட்டியாரால் செட்டியார் தெருவில் ஆரம்பிக்கப்பட்டது. வீரகேசரி என்பது அவரது மகனின் பெயர். சில மாதங்களே செட்டியார் தெரு அலுவலகம் செயற்பட்டது. பின்னர் சில காலங்கள் மருதானையில் செயற்பட்டது. பின்னரே கிராண்ட்பாஸ் கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு இன்று வரையும் இயங்கி வருகின்றது. மருதானையில் அலுவலகம் செயற்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட படமே இது. இப்படத்தில் தோளில் கருப்பு துண்டுடன் நிற்பவர் இலங்கை திராவிட கழகச் செயலாளராகவும் இந்திய இலங்கை தொடர்பாளராகவும் விளங்கிய ஏ.எஸ்.மணவைத் தம்பி ஆவார். இந்த படம் அவரிடமே இருந்தது. தற்போது இலங்கை இந்திய தொடர்பாளராகவும் சிறந்த பண்பாளராகவும்
நிலா, அமெரிக்கா, சீனா, இந்தியா, விண்வெளி ஆராய்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி
"விசுவாசம்"     நான் சாதாரண வகுப்பில் தமிழ் கற்கும் ஒரு மாணவன். எமது ஆசிரியர் இன்று எம்மை  'விசுவாசம்' பற்றி கவிதை எழுதும்படி பணித்தார். எமது இனத்தின் இருப்பை, அடையாளத்தை, பண்பாட்டை  காட்டுவது தாய் மொழி என்று அதே ஆசிரியர் நேற்று கூறியது ஞாபகம் வருகிறது. இன்று விசுவாச [višvāsa] என்ற வடமொழியை, நல்ல தமிழ் சொற்களான உண்மை, நம்பிக்கை, மாறாத பற்று போன்றவை இருக்கும் பொழுதே   பயன் படுத்துகிறார் என்பது எனக்கு கோபமாக வந்தது. என்றாலும் அதை நான் வெளிக்காட்டவில்லை.    இலங்கையில் தமிழ் பேசும் மக்கள், எந்த மதத்தை பின்பற்றுபவர்கள் என்றாலும்  என்றும் தம் தாய் மொழியில் மாறாத பற்று கொண்டவர்களாகவே அநேகமாக இருக்கிறார்கள். அப்படியான குடும்பம் ஒன்றில் தான் நான் பிறந்தேன். எனக்கு மொழி, நாடு இரண்டிலும் நல்ல பற்று உண்டு என்றாலும் என் மேல் அதிலும் கூடிய நம்பிக்கை உண்டு. உன்னை அறிந்தால் தான் உலகம்  அறிவாய், அது போலவே பற்றும் என்பது என் வாதம்.   ஒரு நாள் நான் என் குட்டி தங்கையுடன் ஒரு பாலத்தை கடக்க வேண்டி இருந்தது. அந்த பாலம், பல ஆண்டுகளாக திருத்தப் படாமல், அரசால் கவனிக்கப்படாமல் இருக்கிறது. ஆனால் எமக்கு, எம் கிராமத்துக்கு அது ஒன்று தான் எம்மை பட்டணத்துடன் இணைக்கும் குறுகிய வழி. தேர்தல் காலத்தில் மக்களிடம் நாம் உங்களில் பெரும் பற்றுடன் இருக்கிறோம் என்று கூறி வரும் அரசியல் வாதிகள், தேர்தலின் பின், தங்கள், தங்கள் குடும்பத்தின் வருமானத்தை பெருக்குவதிலேயே முழு பற்றாக இருக்கிறார்கள். ஆமாம், வருமானத்துக்காக பற்று இல்லாமல் தமிழ் படிப்பிக்கும் என் ஆசிரியர் போல!    எனக்கு பாலத்தை கடக்கும் பொழுது, மூன்று மாதத்துக்கு முன், ஒரு சிறுமி அங்கு தவறி விழுந்து மரணித்தது ஞாபகம் வந்தது
"நவீன சமுதாயம் வீழ்ச்சியடைகிறதா?" [சீரழியும் சமுதாயம்] பகுதி: 09     1] பாலியல் நோக்குநிலை [sexual orientation]     பாலியல் நோக்குநிலை என்பது நீங்கள் யார் மீது ஈர்க்கப்படுகிறீர்கள் மற்றும் உறவு வைத்திருக்க விரும்புகிறீர்கள் பற்றிய உங்கள் பாலியல் நடத்தை ஆகும் எனலாம் [Sexual orientation is about who you’re attracted to and want to have relationships with]. அந்த பாலியல் நடத்தைக்கு ஒரு அங்கீகாரம் வழங்கி அவர்களை ஒன்றாக குடும்பமாக வாழ வைப்பது திருமணம் ஆகிறது.   எனவே தனிப் பட்டவர்களுக்கு குடும்பங்கள் ஒரு முக்கிய ஆதரவு அமைப்பை - குழந்தை பருவத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரிகள், மாமா, மாமி .... என தொடங்கி வாழ்க்கை முழுவதும் பல்வேறு நிலையில் வழங்குகிறது. இப்படியான வெவேறு பல தனிப்பட்டவர்கள் பரஸ்பர நன்மைக்காக ஒன்றாக வேலை செய்யும் பொழுது அங்கு ஒரு சமூகம் உதயமாகிறது.   அது சிறிதோ பெரிதோ, அவர்களிற்கு இடையான தொடர்பு அல்லது இணைப்பு அந்த சமூகத்தை ஒன்றாக பிணைக்கிறது. அது மட்டும் அல்ல குடும்பங்கள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறை வரை ஒரு கலாச்சாரத்தின் மதிப்பைக் [culture's values] கடத்தும் ஒரு கட்டமைப்பாகவும் செயல்படுகிறது. இப்படியான குடும்பத்தின் பாத்திரங்கள் [roles] கலாச்சாரத்தை தொடர்ந்து நூற்றாண்டுகளாக வாழ,
"இன்றே இணைவோம் ஒற்றுமையாய்"     "இன்றே இணைவோம் ஒற்றுமையாய் நாம் இழந்த உரிமைக்கு குரல் கொடுப்போம்! இளிச்ச வாய்கள் இனி வேண்டாம் இடித்து கூறுவோம் துணிந்து நிற்போம்!"   "காட்டிக் கொடுத்து கோட்டை கட்டியது காலம் கடத்தி நீதி ஏமாற்றியது காவலனாக இருந்தே வேலி மேய்ந்தது காணும் இனி விலகி நில்!"   "முரசு முழங்கு தானை மூவருங்கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் தமிழர் ஒன்றாய் கூடித் திரண்டால் சிறைகள் எங்கே வெற்றி எமதே! "     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   [முரசு முழங்கு தானை மூவருங்கூடி - வெற்றி முரசு முழங்கும் படையையும் உடைய மூவேந்தர்கள் ஒன்றாகக் கூடி]
Published By: RAJEEBAN   16 MAY, 2024 | 04:35 PM image   18 வயது விமல் யோகநாதன் சமீபத்தில் பான்ஸ்லி  கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்- இதன் மூலம் இங்கிலாந்து கால்பாந்தாட்ட அணிகளில் விளையாடும் முதலாவது தமிழ் தொழில்சார் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தனது பயணம் குறித்து தமிழ் கார்டியனுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். wimal_5.jpeg வேல்ஸின் சிறிய கிராமத்திலிருந்து விமல் யோகநாதன் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் சென்றுள்ளார். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய நாள், கடந்த பத்துவருடங்களாக உழைத்த உழைப்பின் உச்சக்கட்டம் இது வரவிருக்கும் ஒரு நீண்டவாழ்க்கையின் ஆரம்பம்  நான் இது குறித்து பெருமைப்படுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்
"ஐம்பெரும் காப்பியத்தின் இரு சுவைசொட்டும் வரிகள்"     தனது கணவனின் குற்ற மற்ற தன்மையை பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிருபித்த கண்ணகியின் சுவை சொட்டும் வரிகளை பாருங்கள்.   அதே நேரம் இப்ப இப்படி ஒரு கண்ணகி, கண்ணகியை பத்தினி தெய்வமாக போற்றும் நாடுகளிலாவது வாதிட முடியுமா? எனவும் சிந்தியுங்கள்!   "தேரா மன்னா செப்புவது உடையேன் எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன் பெரும்பெயர்ப் புகார்என் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை ஆகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு என்கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்பால் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி" (வழக்குரை காதை : 50-63)   “உண்மை தெளியா மன்னனே! சொல்லுகிறேன் கேள். தேவர்களும் வியக்கும்படி ஒரு புறாவினது துன்பத்தை நீக்கின சிபி என்னும் செங்கோல் மன்னனும்; தனது அரண்மனை வாயிலில் கட்டப்பட்ட ஆராய்ச்சி மணியை இடைவிடாது அசைத்து ஒலித்த ஒரு பசுவின் துயரைப் போக்க எண்ணி, அப்பசுவின்
தமிழீழத்தின் மிகச்சிறந்த இசையமைப்பாளர்களில் ஒருவரான யாழ். றமணன் என எல்லோராலும் அழைக்கப்படும்  இராஜேந்திரன் இராஜேஸ்வரன் அவர்களின் மறைவு எம்மை மிளாத்துயரில் ஆழ்த்தியுள்ளது.    ராஜன் என்கின்ற பெயருடன் எல்லோராலும் நன்கறியபப்பட்ட இவர்,  இசைக்குழுவில் கிற்றாருடன் தன் திறமைகளை வெளிப்படுத்தியவர்.  பட்டிதொட்டியெங்கும் இசைக்குழுவாகப் பயணித்து, பாடலிசை இசைத்துவந்த திரு. றமணன் அவர்கள் “ ஓ…மரணித்த வீரனே…” என்கின்ற எழுச்சிமிகு புரட்சிப் பாடலுடன் மிகமிகப்பிரபலமடைந்தார். இதனைத்தொடர்ந்து தாயகமக்களின் விடுதலைப்பயணத்தில் பெரும்பங்காற்றும் வாய்ப்பு றமணனை வந்தடைந்தது. 1991 நிதர்சனம் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட உதயம் என்கின்ற இசைநாடாவின் இசையமைப்பாளராக இவர் பணியாற்றினார்.    No photo description available.     தாயகத்தில் தயாரிக்கப்பட்ட பிஞ்சுமனம் திரைப்படத்தில் கவிஞர்