Jump to content

தமிழக முதலமைச்சராக மூன்றாண்டுகளை நிறைவு செய்த மு.க ஸ்டாலின்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 7

09 MAY, 2024 | 04:37 PM
image
 

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட மு க ஸ்டாலின் மூன்றாண்டுகளை நிறைவு செய்து நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறார். இதைத்தொடர்ந்து அவருக்கு கட்சியினரும், கூட்டணி கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

poli_9524_2.jpg

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரத்யேக காணொளியில், ''  இது சொல்லாட்சி அல்ல. செயல் ஆட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும் தான் இன்னும் என்னை உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன் செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். 'தலைசிறந்த மூன்றாண்டு தலை நிமிர்ந்த தமிழ்நாடு என..!'' என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக சமூக செயற்பாட்டாளர்கள் பேசுகையில், '' தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற நாளன்று அரசு பேருந்தில் மகளிருக்கு இலவச பயணம், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா நான்காயிரம் ரூபாய், ஆவின் பால் விலை குறைப்பு  உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை கைசாத்திட்டு நடைமுறைக்கு கொண்டு வந்தார்.

பாடசாலை மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி பயில்வதற்காக 'இல்லம் தேடி கல்வி', 'புதுமைப்பெண்', 'நான் முதல்வன்' என பல திட்டங்களை அறிமுகப்படுத்தியதுடன் நடைமுறை ப்படுத்தினார். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு ஆதரவாக எதிர்வரும் ஜூலை மாதம் முதல் 'தமிழ் புதல்வன்' எனும் திட்டமும் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இதனால் மாணவ மாணவிகள் மட்டுமல்லாமல் அவர்களுடைய பெற்றோர்களும் பயனடைந்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் 'காலை உணவு திட்டம்' பாரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

'மகளிர் உரிமைத் தொகை' திட்டத்தால் பயனடைந்து வரும் கோடி கணக்கிலான பெண்மணிகளும் முதல்வரை பாராட்டி வருகிறார்கள்.

கடும் நிதி சிக்கல் இருந்தும், மக்கள் நல திட்டங்களுக்கு நெருக்கடிகளிருந்தும், அழுத்தங்களிருந்தும் செயல்படுத்தும் அவருடைய சாதூரியம் மக்களால் பாராட்டப்படுகிறது.

'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற திட்டத்தையும் விளிம்பு நிலை மக்கள் பாராட்டி வருகிறார்கள்.

poli_9524.jpg

இருப்பினும் சிலிண்டர் விலை குறைப்பு, டீசல் விலை குறைப்பு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் போன்ற பல திட்டங்கள் இன்னும் நடைபெறப்படுத்தப்படாததால் முக ஸ்டாலின் மீது ஒரு பிரிவினர் அதிருப்தியும் கொண்டிருக்கிறார்கள்.

மேலும் தமிழகத்தின் கடன் சுமை தொடர்ந்து அதிகரித்து வருவதும் கவலை அளிக்கிறது. 

இந்த சூழலில் முதல்வராக பொறுப்பேற்று மூன்றாண்டை நிறைவு செய்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல்வரிடமிருந்து மேலும் பல நல்ல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாகி, அவை நடைமுறைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது': என்றனர்.‌

தமிழக அரசு மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து இதே வேகத்தில் நடைமுறைப்படுத்துமா? அல்லது இதைவிட கூடுதல் வேகத்தில் செயல்படுத்துமா? என்பது இதில் வரும் ஜூன் மாதம் நான்காம் திகதியன்று வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளை பொறுத்து இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

poli_9524_3.jpg

https://www.virakesari.lk/article/183069

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.