Jump to content

Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Published:Today at 7 AMUpdated:Today at 7 AM
wounded Rakus

wounded Rakus

மனிதர்களே… தங்களது நோய்களுக்கும், காயங்களுக்கும் சிகிச்சைகளை எடுத்துக் கொள்வதுண்டு. அதுவே விலங்குகள் சிகிச்சைகளை எடுத்துக் கொள்கிறதா என்பது தெரியாது. 

ஆனால், சமீபத்தில் ஓராங்குட்டான் ஒன்று தனது காயத்திற்கு தானே சிகிச்சை எடுத்திருப்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். அதாவது சில விலங்குகள் காடுகளில் உள்ள மருத்துவ தாவரத்தின் மூலம் வைத்தியம் பார்த்து தங்களது நோய்களையும், காயங்களையும் குணப்படுத்திக் கொள்வதாக அவர்கள் கூறியுள்ளனர். 

ரகுஸ் (Rakus) எனப் பெயரிடப்பட்ட ஓராங்குட்டானின் கண்ணிற்குக் கீழே ஒரு பெரிய காயம் இருந்துள்ளது. இந்த ஓராங்குட்டான் தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் வலி மற்றும் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தும் மருத்துவ தாவரத்தின் இலைகளை மென்று அதன் சாற்றைக் காயத்தின் மீது தடவியுள்ளது. 

அதன்பின் மென்ற தாவரத்தை பேண்டேஜ் கட்டுவது போலக் காயத்தின் மீது வைத்து அழுத்தியுள்ளது. உடலில் எந்த ஒரு பாகத்திற்கும் அந்த சாற்றைத் தடவாமல், காயத்தின் மீது மட்டும் தடவியுள்ளதால், இது ஒரு சுய சிகிச்சை முறை என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஒரு மாதத்திற்குள் அதன் பெரிய காயம் மூடி குணமடைந்தது.

இதற்கு முந்தைய ஆராய்ச்சியில் பல வகையான குரங்குகள் காடுகளில் மருந்துகளைத் தேடுகின்றன என ஆவணப்படுத்தப் பட்டிருந்தன. ஆனால், அவை எப்படி தன்னை குணப்படுத்திக் கொள்கின்றன என்பது ஆவணப்படுத்தப்படவில்லை. 

முதல்முறையாக விஞ்ஞானிகள் விலங்குகள் தங்கள் காயங்களுக்கு எவ்வாறு சிகிச்சை எடுத்துக் கொள்கின்றன என்பதை ஆவணப்படுத்தியுள்ளனர். 

2022-ல் ஓராங்குட்டானின் நடத்தைகள் வீடியோவாக ரெக்கார்டு செய்யப்பட்டது. இந்தோனேசியாவின் மேடானில் உள்ள சுவாக் திட்டத்தின் இணை ஆசிரியரும் கள ஆய்வாளருமான உலில் அஸாரி இதனை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
Orangutans: தனக்கு சுய மருத்துவம் செய்த குரங்கு... முதல்முறையாக ஆவணப்படுத்திய விஞ்ஞானிகள்! | Scientists found, orangutan used a medicinal plant to treat a wound - Vikatan

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Orangutan ஆச்சர்யம்: ஒரே வாரத்தில் காணாமல் போன காயம்; மூலிகை சிகிச்சை செய்த ஒராங்குட்டான் குரங்கு

 

இந்த ஒராங்குட்டான் குரங்கின் முகத்தில் பெரிய காயம் இருந்தது. ஆனால், ஒரு மாதம் கழித்து அந்தக் காயம் மறைந்துவிட்டது. அந்த ஒராங்குட்டான் குரங்கே தன்னுடைய காயத்தை ஆற்றிக் கொண்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தக் குரங்கின் பெயர் ரக்கூஸ். மற்ற ஆண் குரங்குகளுடன் சண்டையிடும்போது பெரும் சத்தத்தை எழுப்பியது. அந்தச் சத்தத்தை வைத்துத்தான் இந்த குரங்குக்குக் காயம் ஏற்பட்டதை விஞ்ஞானிகள் ஊகித்தனர்.

காயத்தை ஆற்றுவதற்காக, இக்குரங்கு மருத்துவ குணம் கொண்ட தாவரத்தின் இலைகளை மென்று, அதை பேஸ்ட் போன்று செய்து பின்னர் காயத்தில் தடவியுள்ளது.

இதனால், அந்தக் காயம் ஒரு மாதத்தில் ஆறியுள்ளது. வனவிலங்கு ஒன்று தன் காயத்திற்கு மருத்துவ தாவரங்கள் மூலம் தானே சிகிச்சை எடுத்துக் கொண்டதை ஆவணப்படுத்தியது இதுவே முதன் முறை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்தறிவு இருந்தாலும்  இயற்கை மருத்துவத்தின் மகிமையை  ஓராங்குட்டான் தெரிவித்து விட்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 8/5/2024 at 16:47, குமாரசாமி said:

ஐந்தறிவு இருந்தாலும்  இயற்கை மருத்துவத்தின் மகிமையை  ஓராங்குட்டான் தெரிவித்து விட்டார்.

இயற்கை மருத்துவத்தில் நம்பிக்கை இல்லாத ஆட்கள் எங்கிருந்தாலும்  ஓடி வரவும் 😁

  • Haha 1
Link to comment
Share on other sites

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, நிழலி said:

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

நாங்கள் வளர்த்த நாய்களும் இப்படிச் செய்வதை அவதானித்துள்ளேன். ஆனால். காரணம் தெரியாது.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nochchi said:

நாங்கள் வளர்த்த நாய்களும் இப்படிச் செய்வதை அவதானித்துள்ளேன். ஆனால். காரணம் தெரியாது.

நன்றி

ஆடு மாடுகளும் உடல் நிலை சரியில்லா விட்டால்......சீரான நிலைக்கு வரும் வரைக்கும் தண்ணி கூட குடிக்காது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

நான் அந்த நாய்களை கண்டதில்லை😁, ஆனால் எங்கள் வீட்டு நாய் செய்ததை கண்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நந்தன் said:

நான் அந்த நாய்களை கண்டதில்லை😁, ஆனால் எங்கள் வீட்டு நாய் செய்ததை கண்டுள்ளேன்.

 நந்தன் எனும் தெய்வத்தை கண்டதில் மிகப்பெரிய சந்தோசம்.🙏🏼
ஏன் எழுதுவதில்லை தலைவா?👈🏽
எழுதுங்கள் வாசிக்க காத்திருக்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
3 hours ago, நிழலி said:

ஊரில் நான் வளர்த்த நாட்டு நாயும், அங்கு இருந்த அதே போன்ற சில நாட்டு நாய்களும் சில நாட்கள், பச்சைபுல்லைச் சாப்பிட்டு விட்டு, சில மணித்தியாலங்களின் பின், பச்சையாகவே சத்தி (வாந்தி) எடுத்து இருக்கும். ஏன் அப்படி செய்கின்றன என்று எனக்கு இதுவரைக்கும் புரியவில்லை.

நீங்கள் எவராவது இப்படி கண்டு இருக்கின்றீர்களா? ஏன் இவை இப்படி செய்கின்றன என்று தெரியுமா?
 

இந்த விடயத்தை நான் பலமுறை அவதானித்துள்ளேன். 

வயிற்றில் சமிபாட்டுப்(?) பிரச்சனை இருப்பதால் அவை அவ்வாறு செய்கின்றன என நான் நம்புகிறேன். 

Edited by Kapithan
  • Like 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரான் ஜனாதிபதியின் ஜனாசா நல்லடக்கம் இன்று sachinthaMay 23, 2024 ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட ஈரான் ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் மற்றும் ஏனையவர்களுக்காக அந்நாட்டு உயர்மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி காமெய்னி நேற்று தொழுகை நடத்தினார். ஈரானிய கொடி போர்த்திய இறந்தவர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் டெஹ்ரான் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டு பெரும் எண்ணிக்கையான மக்களுக்கு முன் உயர்மட்டத் தலைவர் ஜனாஸா தொழுகையை நடத்தினார். ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் மேலும் ஆறு பேர் சென்ற ஹெலி கடந்த ஞாயிற்றுக்கிழமை அசர்பைஜான் நாட்டு எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் ஒருவரும் உயிர் தப்பவில்லை. ‘இறைவனே நாம் அவரிடம் நன்மையைத் தவிர வேறு எதனையும் பார்க்கவில்லை’ என்று உயர்மட்டத் தலைவர் பிரார்த்தனையின்போது தெரிவித்தார். தொடர்ந்து அந்த பேழைகள் மக்களால் சுமந்து செல்லப்பட்டதோடு வெளியே ‘அமெரிக்கா ஒழிக’ என்ற கோசமும் எழுப்பப்பட்டது. இந்த இறுதிக் கிரியையில் பல வெளிநாட்டு தலைவர்களும் பங்கேற்றனர். ஈரான் ஜனாதிபதியின் இறுதிக் கிரியை கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் தெற்கு கொராசன் மாகாணத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அவரது சொந்த ஊரான மஷாத்துக்கு எடுத்து வரப்படவுள்ளது. இன்று (23) மாலை இறுதிச் சடங்குகளுக்குப் பின்னர் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.   https://www.thinakaran.lk/2024/05/23/world/62483/ஈரான்-ஜனாதிபதியின்-ஜனாச/
    • இதெல்லாம் ரணிலுக்கு வாக்கு போட சொல்லும் ஒரு யுக்தி , மொக்கு சிங்களவனுக்கு சொல்லும் செய்தி 
    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.