புதிய பதிவுகள்2

இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?

1 month 1 week ago
"ஆதவன்" செய்தித் தளத்தின்.... மில்லியனையும், பில்லியனையும் நாங்கள் முழுதாக நம்பி விட முடியாது. என்றாலும்... மேலுள்ள இடம் கொழும்பு நகரின் மிக முக்கிய பகுதியில் உள்ளதுடன் பிரமாண்டமான கட்டிடத் தொகுதியை பார்க்க பெரும் பொருட் செலவில் கட்டியிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

1 month 1 week ago
1979 இல் ஈரானில் இடம்பெற்ற இஸ்லாமியப் புரட்சியின் பின்னரே ஈரான் மீதான தடைகளை அமெரிக்கா கொண்டுவந்தது. ஒருவருடமாக தடுத்துவைக்கப்பட்ட அமெரிக்க பணயக் கைதிகளை ஈரான் விடுதலை செய்தபின்னர் இத்தடைகள் மீளப்பெறப்பட்டபோதிலும், 1980 களின் போது அமெரிக்க மற்றும் பன்னாட்டு கப்பற்போக்குவரத்து மீது ஈரான், வளைகுடா கடற்பரப்பில் நடத்திய அடுத்தடுத்த தாக்குதல்கள், இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கான ஈரானின் உதவிகள் என்பவற்றால் மீளவும் கொண்டுவரப்பட்டன. இத்தடைகள் ஈரான் யுரேனியத்தைச் செறிவூட்டும் தனது நடவடிக்கைகளைக் கைவிட மறுத்தமையினால் மேலும் இறுக்கப்பட்டன. இடையிடையே அமெரிக்க அரசுகள் இத்தடைகளைத் தளர்த்திப் பேச்சுக்களில் ஈடுபட்டபோதிலும், ஈரானின் அணுவாயுதக் கனவுத் திட்டத்தை அது முழுமையாக நிறுத்த விரும்பாததனால் தடைகள் தற்போது அமுலில் உள்ளன. அணுவாயுதத் திட்டத்தைக் கைவிடாமை, மத்திய கிழக்கில் இஸ்லாமிய அடிப்படைவாதப் பயங்கரவாதிகளுக்குத் தொடர்ந்தும் நிதியுதவியும், ஆயுதங்களும் வழங்கி வருகின்றமை என்பனவே ஈரான் மீதான் பொருளாதாரத் தடைகளுக்கு முக்கியமான காரணங்கள் என்று நினைக்கிறேன். கியூபா மீதான‌ தடைக்குப் பல காரணங்கள் இருக்கின்றன. 1950 களின் இறுதிப்பகுதியில் கியூபாவில் ஆட்சியில் இருந்த பட்டிஸ்ட்டா அரசின் சோவியத் மீதான நட்பு, நாட்டினைச் சோசலிசப் பாதையில் வழிநடத்தியமை, கியூபாவில் இயங்கிய அமெரிக்க நிறுவனங்களைக் கைப்பற்றியமை, அமெரிக்க இறக்குமதிகள் மீதான பாரிய வரி, மனிதவுரிமை மீறள்களில் ஈடுபட்டமை, ரஸ்ஸியாவின் அணுவாயுத ஏவுகணைகளை இரகசியமாகக் கொண்டுவந்து அமெரிக்காவை அச்சுருத்தியமை போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

1 month 1 week ago
நீங்கள் குறுக்கிடவில்லை அண்ணை. கேட்டதற்காகச் சுருக்கமாக சில பதில்கள். 1950 இல் இடம்பெற்ற கொரிய யுத்தத்துடன் அமெரிக்கா வடகொரியா மீது முதலாவது முறையாக பொருளாதாரத் தடைகளைக் கொண்டுவந்திருந்தது. இத்தடைகள் 1980 களின் இறுதிக்காலப் பகுதியில் மேலும் இறுகின. இதற்கு தென்கொரிய தூதரகங்கள், அதிகாரிகள், தென்கொரிய விமானங்கள் மீது வடகொரிய அரசாங்கத்தின் முகவர்கள் நடத்திய குண்டுத் தாக்குதல்களின் பின்னர் இறுக்கமடைந்தன. ஆனாலும் 1990 களுக்குப் பின்னர் தென்கொரிய அரசுகள் வடகொரியாமீதான தடைகளைத் தளர்த்தி சுமூகமான உறவைப் பேண முனைந்தன. 1994 இல் அமெரிக்க அரசாங்கம் முதல்த் தடவையாக வடகொரியா மீதான தடைகளைத் தளர்த்தி அணுவாயுதத் திட்டத்தை வடகொரியா கைவிடவேண்டும் என்ற நிபந்தனையில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. ஆனால் பேச்சுக்கள் நடந்துகொண்டிருக்கும்போதே வடகொரியா அடுத்தடுத்து நான்கு அணுவாயுதப் பரீட்சிப்புக்களை நடத்தியதுடன் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளையும் பரீட்சிக்கத் தொடங்கியது. இதனாலேயே அமெரிக்கா மட்டுமே விதித்திருந்த தடைகள், ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையினால் மேலும் விரிவாக்கப்பட்டு பன்னாட்டுத் தடைகளாக மாறின. வடகொரியாவுக்கு தனது அணுவாயுதத் திட்டத்தைக் கைவிட்டு, தென்கொரியா போன்று மக்களாட்சியை நடத்தும் சந்தர்ப்பங்கள் பலமுறை வழங்கப்பட்டும், கிம்மின் சர்வாதிகார குடும்ப ஆட்சியைப் பாதுகாப்பதற்காக ஒட்டுமொத்த மக்களையும் பகடைகளாகப் பாவித்தும், வடகொரியாவை அமெரிக்காவின் ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவே அணுவாயுதம் தயாரிக்கிறோம் என்றும் கிம்மின் குடும்பம் கூறி வருகிறது.

செம்மணி மனிதப் புதைகுழியை உரிய முறையில் ஆய்வு செய்தால் பல விடயங்கள் அம்பலமாகும் - சுமந்திரன்

1 month 1 week ago
அதற்காகத்தான் இவ்வளவு உறுமலும். அவருக்கு பாராளுமன்ற கதிரை இல்லாமல் இருக்க முடியாது.

நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials

1 month 1 week ago
மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் வீரவணக்க நினைவாலயம் மட்டு படிமக்காலம்: 25/08/2003 25/08/1995 அன்று அம்பிளாந்துறையிலிருந்த விசேட அதிரடிப்படையினரின் படைமுகாம் தகர்ப்பின் போது வீரச்சாவடைந்த மேஜர் ஜோன்சன் உள்ளிட்ட 29 போராளிகளின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச் சின்னமாகும்.

இலங்கை வரும் போலிவூட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான்?

1 month 1 week ago
1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களா? 1200 மில்லியன் அமெரிக்க டொலர்கள். நம்பக்கூடிய மாதிரி இல்லையே. இவ்வளவு முதலீட்டை எப்படி பெற்றார்கள்? இந்த நிர்மாணிப்பு எங்கே இடம்பெறுகின்றது? 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றால் நிச்சயம் பிரமாண்டமானாக அமையும் என ஊகிக்கலாம்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

1 month 1 week ago
சிறிதரனுக்கு, பார் லைசென்ஸ் கறுப்புப் புள்ளி வருவதற்கு முதலே பல ஊழல், உள்ளடி வேலைகளில் "நல்ல பெயர்"😎 இருக்கிறது. இங்கே யாழிலேயே பாதிக்கப் பட்ட ஆட்கள் தேசியம் கருதி பம்மிக் கொண்டிருக்கிறார்கள். சிறியர் அரசியலுக்கு வந்தது சுமந்திரன் போல தன் தகுதியைப் பாவித்து தீர்வை நோக்கி நகர்வதற்காக அல்ல. தான் ஒரு புலிகளின் முக்கிய தளபதியின் உறவினர் என்ற அறிமுகத்தோடு கையில் காசு பார்க்க மட்டும் தான். இது போன்ற குற்றச்சாட்டுகள் சுமந்திரனிடம் இல்லை. வேறு குறைகள் அவரை எதிர்க்கும் மக்கள் மனங்களில் இருக்கலாம், ஆனால் சிறிதரன் போல ஊழல் பேர்வழி அல்ல சுமந்திரன்.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

1 month 1 week ago
சிறிதரன் ஆதரவாளர்கள் இந்த நிகழ்வில் நடந்து கொணடது பிழைதான். ஆனால் இதை லவத்து சுமத்திரனுக்கு வெள்ளையடிக்க பலர் அரும்பாடு படுகிறார்கள். வினை விதைத்தவன் வினை அறுப்பான். சிறிரனும் சுமத்திரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்.

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

1 month 1 week ago
இடையில் குறுக்கிடுவதற்கு மன்னிக்கவும். தற்போது அணு ஆயுதத்தை கையில் எடுத்துள்ள நாடுகளுக்கு என்ன பிரச்சனை என்பதையும் சிந்திக்க வேண்டும். ஏன் மேற்குலகு மீது அஜாரகங்களை மேற்கொள்கின்றார்கள் என்பதையும் ஆராய வேண்டும். தனியே மேற்குலகு பக்கம் நின்று சிந்தித்தால் இவர்கள் செய்வதெல்லாம் சரியாகத்தான் தெரியும். எனது பார்வையில் மேற்குலகு அவர்கள் மீது விதித்துள்ள பொருளாதார தடைகளே முக்கிய காரணம் என நினைக்கின்றேன். கியூபா இன்று என்ன பாவம் செய்தது? மாறுபட்ட அரசியல் கொள்கையை தவிர.....

வடகொரிய கடற்கரையில் பிரமாண்ட ரிசார்ட் திறந்த கிம் ஜாங் உன்

1 month 1 week ago
அணுவாயுதம் என்பது தன்மீது எவராவது தாக்குதல் நடத்தினால் அணுவாயுதத்தைப் பாவிப்போம் என்று அச்சுருத்துவதனூடாக அத்தாக்குதல்களைத் தடுப்பதற்காகப் பாவிக்கும் ஒரு கருவியாகத்தான் இதுவரையில் அணுவாயுதத்தை வைத்திருக்கும் நாடுகள் பார்க்கின்றன. ஆனால் வடகொரியாவோ ஈரானோ அவ்வாறல்ல. அவை அணுவாயுதத்தை உருவாக்குவதற்கும், வைத்திருப்பதற்கும் இருக்கும் காரணங்கள் வேறு. கிம்மைப் பொறுத்தவரை தனது சர்வாதிகாரத்தனமான ஆட்சியை, சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையினை ஒரு நாடோ அல்லது கூட்டாக சில நாடுகளோ தன்மீது எடுக்கலாம், ஆகவே தனது தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவதில் இருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளவே அணுவாயுதத்தை வைத்திருப்பது போலத் தெரிகிறது. ஆனால் ஈரான் அப்படியல்ல. ஈரானின் அணுவாயுதத்தின் முதன்மை நோக்கம் இஸ்ரேலை அழிப்பது, பின்னர் தனது சட்டவிரோத நடவடிக்கைகளுக்காகத் தன்மீது நடக்கலாம் என்று அஞ்சும் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்பது.

அணையா விளக்கு: யுரியூப்பர்களும் தமிழ் அரசியல்வாதிகளும் – நிலாந்தன்.

1 month 1 week ago
இப்போது வரும் பல கட்டுரைகளில் எங்கே ஒரு வாய்ப்பு கிடைத்தாலும், சுமந்திரனின் பெயரை இழுத்துவிட்டு அவரை ஒரு தடவையாவது விமர்சிக்காமல் கட்டுரையாளர்கள் போக மாட்டார்கள். யாருடைய கட்டுக்குள்ளும் மனுசன் அகப்பட மாட்டார் என்பது புரிகிறது. ஜனாதிபதி தேர்தலில் ‘சங்கு’ பெற்ற துன்பம் நிலாந்தனுக்கும் இருக்கும். அதனால், சுமந்திரனை விமர்சிக்க வாய்ப்பு கிடைத்தால், அவர் அமைதியாக இருக்க மாட்டார். ஆனால், "தமிழ் கட்சிகள் ஒன்றாகவேண்டும்" என்று எழுதுவதை மட்டும் விட மாட்டார். ‘அணையா விளக்கு’ நிகழ்ச்சியின் கடைசி நாளில் நடந்த அவதூறு நிகழ்ச்சிக்கு சிறீதரன் தான் காரணம் என்று நேராகச் சொல்லவில்லை என்றாலும், அதைப் புரிந்து கொள்ளலாம். நிலாந்தனும் அந்த விஷயத்தை மெதுவாக தொட்டுச் செல்கிறார். உண்மையில் குற்றம் சுமந்திரனிடம் அல்ல, சிறீதரனிடம் தான். "அனைவரும் வருங்கள்" என்று சொல்லி, சமூக நலவாதிகள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில், சுமந்திரனை நேரடியாக எதிர்க்கத் தைரியம் இல்லாத,தனது கட்சிக்குள்ளேயே ஆளுமையை நிலைநாட்ட முடியாத ஒருவர், தனக்கு வேண்டாதவர்களை அவமதிக்க முயன்றிருக்கிறார். அவ்வளவுதான். சிறீதரன் ஒரு விசச் செடி என்பது சிந்தித்தால் புரியும். அவருக்கு அவரது அரசியல் நலன்தான் முக்கியம், பொதுநலமல்ல. ஒட்டுமொத்தமாகச் சொன்னால், அவருக்கு ஆசிரியர் வேலையும் சரியாக வந்திருக்காது. அவர் அரசியலில் இருப்பது தமிழருக்கும் நன்மை பயக்காது. அவர் பேசாமல் ஒரு வியாபாரியாகவே இருந்து விடலாம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர்

1 month 1 week ago
இந்த வழக்கின் பிரகாரம்...இசுலாமியர் ....சிங்களவர் தப்ப வைக்கப்படுவர்...பரிசோதானை எலியாக அகப்பட்ட பிள்ளையான் ..குற்றவாளியாக்கப்படுவார்

ஒழுக்கம் மற்றும் மனிதாபிமான வாழ்வியலுக்கு உயிரூட்டுவதன் மூலம் ஆன்மீக வளர்ச்சியுடன் கூடிய ஒரு சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும் - ஜனாதிபதி

1 month 1 week ago
Published By: VISHNU 30 JUN, 2025 | 09:44 PM அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும். கல்னேவா மகாவலி மைதானத்தில் திங்கட்கிழமை (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார். உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை செவிசாய்த்த ஒரு நாட்டிற்கு இன்று நேர்ந்துள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். எனவே, ஒழுக்கமான மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தாமதமின்றி ஒன்றிணைந்து அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். பௌத்த மதத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதில் உபசம்பதா போன்றன மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார். மேலும், சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக அரசியல்வாதிகளன்றி வடக்கிலும் தெற்கிலும் உள்ள அப்பாவி பெற்றோர்களின் பிள்ளைகளே பலியானதாகவும் தெரிவித்தார். இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்றும், அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் திறன் இருந்தாலும், இனவாதம் மீண்டும் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார். எனவே, இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் என்றும், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார். பிக்குமாரின் ஒழுக்கம் குறித்த கருத்தாடல் குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார். அதில் மகாநாயக்க தேரர்கள் ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டினால் அந்த கருத்தாடலை அரசாங்கம் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்றும் கூறினார். விஹார தேவாலகம் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான கோரிக்கை புத்தசாசன அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஏற்கனவே சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். இங்கு உரை நிகழ்த்திய இலங்கை ராமான்ய மகா நிக்காயவின் மகாநாயக் தேரர் அதி வணக்கத்திற்குரிய மக்குலேவே ஸ்ரீ விமல தேரர், சாசனத்தில் மிகச் சிறிய குழுவினர் செய்த தவறான செயல்கள் சமூக ஊடகங்கள் மூலம் பெரிதுபடுத்திக் காண்பித்து முழு பிக்கு சமூகத்தையும் அவதூறு செய்யப்படுவதன் ஊடாக பக்தியுள்ள மக்கள் மகா சங்கத்திலிருந்து தூரமாக அது வழிவகுத்துள்ளதாகக் கூறினார். இந்த நாட்டின் பிக்கு சமூகத்தைப் பாதுகாப்பதிலும், நாட்டிற்குத் தேவையான பல்துறை மற்றும் ஒழுக்கமான பிக்குகளின் தலைமுறையை உருவாக்குவதிலும் இத்தகைய உபசம்பதா முக்கியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். வடமத்திய மாகாணத்தின் பிராந்திய பிக்கு சபைகள் மற்றும் உபசம்பதா மஹோத்சவ குழுவின் ஏற்பாட்டில் கலாவெவ, கலாகரம்பாவ மற்றும் ஸ்ரீ வித்யாதர மஹா பிரிவேனாவை மையமாகக் கொண்டு இவ்வருடம் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நிகாயாவின் உபசம்பதா நிகழ்வு இன்று (30) முதல் ஜூலை 08 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா பீடம் ஸ்தாபிக்கப்பட்ட பின்னர், 1864 ஆம் ஆண்டு ஜூலை மாதம் காலி வெலிவத்தை விஜயானந்த பிரிவேனையை மையமாகக் கொண்டு மஹமோதர உதகுக்கேப பிரதேசத்தில் முதலாவது உபசம்பதா நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்த முறையும், பண்டைய பாரம்பரியத்தின்படி, இலங்கை ராமான்ய மகா பீடத்தின் மகாநாயக்க தேரர் மகுலேவே ஸ்ரீ விமல தேரரின் தலைமையில் நடைபெற்றதோடு, 400 பிக்குகள் உபசம்பதா பெற்றனர். "சசுன" உபசம்ப மலர் , "பதிபதா" தொகுப்பு மற்றும் இலங்கை ராமான்ய மகா பீடத்தின் "உருமயக அபிமான" புத்தகம் ஆகியவையும் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டன. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உன்னதமான மத மற்றும் ஆன்மீக சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கை ராமன்ய பீட பிக்குமார்களுக்கு கௌரவப் பட்டங்களையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் ஜனாதிபதி வழங்கி வைத்தார். இலங்கை ராமான்ய மகா பீட முக்கிய மகாசங்கத்தினர் , புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி , வெளிநாட்டலுவல்கள் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், வர்த்தக, வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், வடமத்திய மாகாண ஆளுநர் ஜினதாச விமலசிறி, அநுராதபுர மாவட்டச் செயலாளர் கே.ஜி.ஆர். விமலசூரிய உள்ளிட்ட அரச அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர் ஸ்தானிகர்கள், பொது மக்கள் உட்பட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருந்தினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/218884

நியூயோர்க்கில் சரித்திரம் படைத்த ஜனநாயக்கட்சி மேயர் வேட்பாளர்.

1 month 1 week ago
Decode | Zohran Mamdani | அமெரிக்க அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய மம்தானி | New York Mayor | N18G Zohran Mamdani | அமெரிக்க அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்திய வம்சாவளி மம்தானி | டிரம்ப் முதல் நடிகை கங்கனா வரை பலரின் எதிர்ப்பை சந்தித்து வரும் மம்தானி யார் தெரியுமா? | New York Mayor Zohran Mamdani | Donald Trump | America

ஐரோப்பிய நாடுகளுக்கு தனி ராணுவம் சாத்தியமா? - நேட்டோவின் நிலை என்னவாகும்?

1 month 1 week ago
பட மூலாதாரம்,PIER MARCO TACCA/GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டின் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது, ஐரோப்பாவில் நீடித்த அமைதி ஏற்பட ஒரு வழி இருப்பதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகள் ஒன்றிணைந்து ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இது ஒரு புதிய யோசனை அல்ல, ஏனென்றால் நேட்டோவின் ராணுவம் ஏற்கனவே உள்ளது, இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல, ஐரோப்பிய நாடுகளல்லாத நாடுகளும் அடங்கும். ஆனால் ஐரோப்பாவைச் சுற்றி ஆபத்து சூழ்ந்து வரும் நிலையில், ஐரோப்பா ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்ற யோசனையைக் குறித்து மீண்டும் விவாதங்கள் நடைபெற தொடங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய நட்பு கூட்டணியும் நம்பகமானதாக இல்லை. இந்நிலையில், சில ஐரோப்பிய தலைவர்களும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது அவசியம் என கருதத் தொடங்கியுள்ளனர். ராணுவக் கட்டுப்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனில் நேட்டோ பயிற்சிகளில் அமெரிக்க வீரர்கள் பங்கேற்கின்றனர். ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் யோசனை 1950 களில் இருந்து தோன்றியது என்று கூறுகிறார் நெதர்லாந்தில் உள்ள கிளிங்கெண்டேல் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் தலைவரான டிக் சாண்டி. "இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஜெர்மனியைப் பற்றியும் கவலை இருந்தது, ஆனால் ஜெர்மனியில் ஜனநாயக அரசு நிறுவப்பட்ட பிறகு இந்தக் கவலை மறைந்துவிட்டது. இருப்பினும், 1950 ஆம் ஆண்டு கொரியப் போர் தொடங்கிய பிறகு, சோவியத் யூனியனிடமிருந்து மிகப்பெரிய அச்சுறுத்தல் வருகிறது என்பது தெளிவாகியது. அதைச் சமாளிக்க, ஐரோப்பிய நாடுகளின் கூட்டுப் படையை உருவாக்குவது குறித்து பேச்சுவார்த்தை தொடங்கியது" என்று டிக் சாண்டி கூறுகிறார். இந்தக் கூட்டுப் படைக்கு 'ஐரோப்பிய பாதுகாப்புச் சமூகம்' என்று பெயரிடப்பட்டது. லக்சம்பர்க், மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் இத்தாலி ஆகிய நாடுகள் அதனை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால் பிரெஞ்சு நாடாளுமன்றம் இந்த திட்டத்தை நிராகரித்தது. பின்னர் இந்த லட்சியத் திட்டம் தோல்வியடைந்தது. 1949 இல் நேட்டோ நிறுவப்பட்டதும், இந்த திட்டத்தை பாதித்தது. அந்தக் கூட்டணி தொடங்கப்பட்டபோது, அமெரிக்காவும் கனடாவும் அதன் முக்கிய உறுப்பு நாடுகளாக இருந்தன. 1980களில் சோவியத் யூனியனின் அச்சுறுத்தல் குறைந்திருந்தது, ஆனால் பின்னர் சூழல் மீண்டும் மாறத் தொடங்கியது . 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை ரஷ்யா இணைத்துக்கொண்ட பிறகு, குறிப்பாக 2022 ஆம் ஆண்டு யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு நிலைமை முற்றிலும் மாறிவிட்டது என்று டிக் சாண்டி கருதுகிறார். 1990 களில் ரஷ்யாவுடனான நட்பு தொடரும் என்று தோன்றியது. ஆனால் தொடர்ந்து அப்படியான சூழல் நிலவவில்லை. யுக்ரேன் போர் முழு ஐரோப்பாவையும் பாதிக்கிறது. அமெரிக்கா பசிபிக் பெருங்கடல் பகுதி மற்றும் ஆசியாவில் அதிக கவனம் செலுத்துகிறது என்று டிக் சாண்டி கூறுகிறார். அதே நேரத்தில், சீனா ஒரு பெரிய சக்தியாக வளர்ந்து வருகிறது. எனவே, டிரம்ப் அமெரிக்காவின் அதிபராக இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐரோப்பா அதன் பாதுகாப்பை முன்பை விடவும் மிகத் தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும். 2018 ஆம் ஆண்டில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோனும் ஐரோப்பிய ராணுவத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். ஆனால் பல நாடுகளும் அதற்கு எதிராக உள்ளன. "கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல நாடுகள் இதற்கு எதிராக உள்ளன, ஏனெனில் இது அமெரிக்காவை ஐரோப்பாவிலிருந்து தூர விலக்கும் என்று அவர்கள் கருதுகிறார்கள். நெதர்லாந்து மற்றும் வடக்கு ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு ஆதரவாக இல்லை" என்கிறார் டிக் சாண்டி. "இருப்பினும், அவர்கள் நிச்சயமாக ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான ராணுவ ஒத்துழைப்பை ஆதரிப்பார்கள். ஆனால் ஆஸ்திரியா மற்றும் அயர்லாந்து போன்ற நாடுகள், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதை ஆதரிக்கின்றனவா என்பது குறித்து எந்தத் தெளிவும் இல்லை. அவர்கள் ஐரோப்பாவில் ஒரு ராணுவ அமைப்பை உருவாக்குவதை கடுமையாக எதிர்க்கலாம்." மேலும் ஐரோப்பிய ராணுவம் எந்த வடிவத்தை எடுக்க வேண்டும் என்பது ஒருபோதும் தெளிவாகத் தெரியவில்லை என்பதையும் டிக் சாண்டி குறிப்பிடுகிறார். மிகப்பெரிய படை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த வாரம், நேட்டோ உச்சி மாநாடு நெதர்லாந்தின் ஹேக்கில் நடைபெற்றது. அனைத்து ஐரோப்பிய நாடுகளும் ஒன்றிணைந்து ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கினால், அது அமெரிக்க ராணுவத்திற்கு சமமாகவும், ரஷ்ய ராணுவத்தை விட பெரியதாகவும் இருக்கும் என்று பாரிஸைத் தளமாகக் கொண்ட ஐரோப்பிய வெளியுறவு கவுன்சிலின் மூத்த ஆராய்ச்சியாளரான டாக்டர் உல்ரிக் ஃபிராங்க் கருதுகிறார். ஆனால், "துரதிர்ஷ்டவசமாக, இது அவ்வளவு எளிதானது அல்ல. அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை சேகரித்து, தேவைக்கேற்ப அவற்றை நிலைநிறுத்துவது பல சவால்களை முன்னிறுத்துகிறது " என்று அவர் கூறுகிறார். ஐரோப்பாவில் 40க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தாலும், ஒரு சில நாடுகளில் மட்டுமே அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் போன்ற வளங்கள் உள்ளன. "ஐரோப்பாவில் மூன்று அல்லது நான்கு நாடுகளில் மட்டுமே பெரிய ராணுவப் படைகள் மற்றும் கனரக ராணுவ உபகரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக பிரிட்டனும் அடங்கும், ஆனால் இப்போது அது ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்தில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் போலந்து ஆகியவை முக்கிய ராணுவ வளங்களைக் கொண்டுள்ளன" என்று முனைவர் பிரான்கி குறிப்பிடுகிறார். பிரிட்டன் மற்றும் பிரான்சிடமும் அணு ஆயுதங்கள் உள்ளன. ஐரோப்பா போருக்கு எந்தளவுக்கு தயாராக உள்ளது என்று முனைவர் பிராங்கியிடம் கேட்டபோது, தெளிவான பதில் இல்லை என்றும், ஆனால் ஐரோப்பாவிடம் நிச்சயமாக போதுமான ராணுவ வளங்கள் இருப்பதாகவும் கூறினார். "எந்த ஒரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்புநாடு தாக்கப்பட்டாலும், அந்த தாக்குதலின் தன்மையைப் பொறுத்து மற்ற நாடுகள் பதிலளிக்கும். பல நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்களை அனுப்பியுள்ளன. அதே நேரத்தில், தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தேவையான அளவு ஆயுதங்களையும் அவர்கள் வைத்திருக்கிறார்கள்" என்று அவர் விளக்குகிறார். முனைவர் உல்ரிக் ஃபிராங்கேவின் கூற்றுப்படி, நேட்டோவிற்கு தனக்கென ஒரு நிரந்தர ராணுவம் இல்லை. அதன் ராணுவத் திறன் அதன் உறுப்பு நாடுகளின் படைகளைச் சார்ந்துள்ளது. நேட்டோ ஒப்பந்தத்தின் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், அது முழு கூட்டணியின் மீதான தாக்குதலாகவே கருதப்படுகிறது. "ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 உறுப்பு நாடுகள் உள்ளன. ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தின் பிரிவு 42.7 இன் கீழ், ஒரு உறுப்பு நாடு தாக்கப்பட்டால், மற்ற அனைத்து உறுப்பினர்களும் அதற்கு உதவ கடமைப்பட்டுள்ளனர். இதைத் தவிர, பல ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே இருதரப்பு ராணுவ ஒப்பந்தங்களும் உள்ளன" என்கிறார் முனைவர் பிரான்கி. இருப்பினும், போர் போன்ற சூழ்நிலையில், உறுப்பு நாடுகளுக்கு இடையே உத்தி சார்ந்த ஒருங்கிணைப்பு, வீரர்களை அனுப்புதல் மற்றும் ஆகியவை பெரும்பாலும் நேட்டோவின் மூலம் நடைபெறுகின்றன. அதனால் தான், நேட்டோ இல்லாமல் போரின் சவால்களை சமாளிப்பது கடினம் எனக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ராணுவம் எவ்வாறு செயல்படும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அனைத்து நாடுகளின் ராணுவங்களையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. மற்றொரு பரிந்துரை என்னவென்றால், ஒவ்வொரு நாடும் தங்களது சொந்த ராணுவத்தை வைத்திருக்கலாம், ஆனால் அதே நேரத்தில் ஐரோப்பிய ராணுவத்திற்காக ஒரு தனி படையையும் உருவாக்கலாம் என்பதாக உள்ளது. ஆனால் இந்த யோசனையுடன் தொடர்புடைய பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக, ஐரோப்பிய ராணுவத்தை யார் வழிநடத்துவார்கள்? எந்த நாடு எவ்வளவு வளங்களை வழங்கும், எவ்வளவு செலவை ஏற்கும் என்பதை தீர்மானிப்பதும் சிக்கலானது. இது ஒரு பெரிய பிரச்னை, இதைத் தீர்ப்பது எளிதல்ல என்று முனைவர் உல்ரிக் ஃபிராங்கே கூறுகிறார். ராணுவ அதிகாரத்தில் சமநிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நேட்டோ உச்சிமாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் மற்றும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ. குறைந்தபட்சம் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது சாத்தியமில்லை என்று ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட்டின் மூத்த ஆராய்ச்சியாளரும் முன்னாள் நேட்டோ செய்தித் தொடர்பாளருமான ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார். மேலும், அமெரிக்காவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான உறவுகள் விரைவில் முறிந்து விடுவதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை என்று லுங்கெஸ்கு கூறுகிறார். "எதிர்காலத்தில் நேட்டோவில், ஐரோப்பாவின் பங்கு அமெரிக்காவை விட முக்கியமானதாக இருக்கும் வகையில் சமநிலைப்படுத்தப்படும் என்று நான் நினைக்கிறேன்.இதில், ஐரோப்பிய ராணுவமும் அதன் திறன்களும் மேம்படுத்தப்படும். மேலும், ஐரோப்பா-நேட்டோ ஒருங்கிணைப்பும் வலுப்படுத்தப்படும். இது ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் பயனளிக்கும்" என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். இருப்பினும், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் முரண்பாடு இருக்கலாம். கடந்த காலத்தில், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்கும் யோசனையை ரஷ்யாவின் பிரச்சார இயந்திரம் ஆதரித்தது, ஏனெனில் இந்த விஷயத்தில் ஐரோப்பிய நாடுகளிடையே பிளவு ஏற்பட வேண்டும் என்பதே அதன் நோக்கம் என்று ஓனா லுங்கெஸ்கு விளக்குகிறார். அவரைப் பொறுத்தவரை, உண்மை என்னவென்றால், ஐரோப்பிய ஒன்றியத்தின் வலுவான ராணுவத் திறன் ரஷ்யாவுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால் இதைப் பற்றி அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தான் கேள்வியாக உள்ளது. ஐசனோவர், நிக்சன், கென்னடி மற்றும் ஒபாமா போன்ற அமெரிக்க அதிபர்களின் காலத்தில் பல ஆண்டுகளாக, ஐரோப்பா தனது சொந்த பாதுகாப்புக்கு அதிகளவில் பொறுப்பேற்க வேண்டும் என்பதில் அமெரிக்கா தெளிவாக இருந்தது என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். "இப்போது அதிபர் டிரம்பும் அதையே மீண்டும் மீண்டும் கூறுகிறார். ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பை தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அமெரிக்கா ஏன் அதிக செலவு செய்ய வேண்டும் என்ற அவரது கேள்வி நியாயமானது தான்" என்றும் லுங்கெஸ்கு கூறுகிறார். தொடர்ந்து பேசியபோது, ஐரோப்பிய ஒன்றியம் தனக்கென ஒரு தனி ராணுவத்தை உருவாக்கினால், அது அமெரிக்காவிற்கும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உறவுகளில் சில பதற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் லுங்கெஸ்கு குறிப்பிடுகிறார். ஆனால், போர் ஏற்பட்டால் ஐரோப்பிய ராணுவத்தால் ஐரோப்பாவைப் பாதுகாக்க முடியாவிட்டால், முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களின் போது நடந்தது போல் அமெரிக்கா நிச்சயமாக அதன் உதவிக்கு வரும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐரோப்பா நேட்டோவிற்கு தனது பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தி வருகிறது (குறியீட்டு படம்) இந்த ஆண்டு ஸ்பெயின் பிரதமர், ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தார். ஆனால் சமீபத்தில், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, தற்போது யாரும் ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவது குறித்து பேசவில்லை என்பதை தெளிவுபடுத்தியதாக ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தின் ராணுவத் திறன்களை வலுப்படுத்த வேண்டும் என்றும், நேட்டோவுடன் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் அனைத்துத் தலைவர்களும் வலியுறுத்துகின்றனர். மேலும், ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா உலகின் பிற பகுதிகளில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், ஐரோப்பாவுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஆனால் ஜூன் 2025 இல், ஐரோப்பாவில் நேட்டோ மற்றும் அமெரிக்கப் படைகளை வழிநடத்த ஒரு மூத்த அமெரிக்க ஜெனரலை நியமித்துள்ளார் அதிபர் டிரம்ப். 1951 முதல், நேட்டோவில் ஐரோப்பிய கட்டளைக்கான பொறுப்பு ஒரு அமெரிக்க ராணுவ அதிகாரியிடம் இருப்பது ஒரு பாரம்பரியமாக இருந்து வருகிறது. இந்தப் பதவிக்கு ஒரு அமெரிக்க ஜெனரலை நியமித்திருப்பது, அமெரிக்கா நேட்டோவுக்கு உறுதியாக இருக்கிறது என்பதையும், ஐரோப்பாவின் பாதுகாப்பில் அக்கறை கொண்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்று ஓனா லுங்கெஸ்கு கருதுகிறார். அமெரிக்க நிர்வாகமும் நேட்டோவை வலுவாக ஆதரிக்கும் அதே நிலைப்பாட்டையே முன்னெடுக்கிறது. ஆனால், ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் தங்கள் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டும் என்றும், அதன்மூலம் நேட்டோவின் வலுவான கூட்டாளிகளாக மாற வேண்டும் என்றும் அமெரிக்கா விரும்புகிறது. இந்த மாதம் ஹேக்கில் நடைபெறும் நேட்டோ உச்சிமாநாட்டிலும் அதிபர் டிரம்ப் பங்கேற்பார். இந்த உச்சிமாநாட்டின் முக்கிய கவனம் பாதுகாப்பு முதலீடுகளில் இருக்கும். அடுத்த சில தசாப்தங்களுக்கு ஐரோப்பிய நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) குறைந்தது ஐந்து சதவீதத்தை பாதுகாப்பு பட்ஜெட்டுக்காக செலவிட வேண்டும் என்பதை இது வலியுறுத்தும் என்று ஓனா லுங்கெஸ்கு கூறுகிறார். "ஐரோப்பாவில் பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவது மிகவும் முக்கியம், ஏனெனில் தற்போது ஐரோப்பா தேவையான அளவு ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய முடியாமல் தவிக்கிறது. ஆனால் இதற்கான நிதியை திரட்டுவது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது" என்று அவர் கூறுகிறார். விநியோக சவால் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நேட்டோ 1949 இல் வாஷிங்டன் டிசியில் நிறுவப்பட்டது. தற்போது ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியமும் பாதுகாப்புத் துறையில் முதலீட்டை அதிகரித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார் பெல்ஜியத்தின் கென்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் ஸ்வென் பிஷப். பனிப்போர் முடிந்த பிறகு, மேற்கு ஐரோப்பிய நாடுகள் பாதுகாப்புத் துறை தொடர்பான தங்களது செலவுகளைக் குறைத்ததாகவும், பல நாடுகளில் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) ஒரு சதவீதமாக மட்டுமே குறைந்துள்ளதாகவும் அவர் விளக்குகிறார். "ஆனால் பாதுகாப்புத் துறையை சுறுசுறுப்பாக வைத்திருக்க இது போதாது. ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணங்களை நவீனமயமாக்குவதை இது கடினமாக்குகிறது." ஐரோப்பாவில் போலந்து தான் பாதுகாப்புத் துறையில் அதிக முதலீடு செய்கிறது. இந்த ஆண்டு அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட ஏழு மடங்கை, பாதுகாப்பு பட்ஜெட்டுக்கு ஒதுக்கியுள்ளது. அதே போல், லிதுவேனியா அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதன் பாதுகாப்பு பட்ஜெட்டை ஐந்து முதல் ஆறு சதவீதம் வரை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. ரஷ்யாவுக்கு மிக அருகில் இருக்கும் நாடுகள் இவை என்றும், மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை உணர்கின்றன என்றும், அதனால் தான் இந்த நாடுகள் தங்கள் பாதுகாப்பு பட்ஜெட்டை விரைவாக அதிகரித்துள்ளன என்றும் முனைவர் பிஷப் கூறுகிறார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஒருங்கிணைந்த ராணுவப் படைகள் மற்றும் ஆயுதக் குவியல்கள் மிகப் பெரியவை, ஆனால் அமெரிக்காவை விலக்கிவிட்டால், ஐரோப்பாவிற்கு குறைவான வளங்களே மிஞ்சும். "உதாரணமாக, ராணுவ செயற்கைக்கோள்கள், நவீன ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்கள் போன்ற வளங்கள் தேவை. ஆனால் தனியாக இந்த முழு செலவையும் ஏற்பது என்பது ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு கடினமான விஷயம். இந்த குறைபாடுகளை எவ்வாறு ஈடுசெய்வது என்பதே மிகப்பெரிய சவால்" என்கிறார் முனைவர் பிஷப். கூடுதல் நிதி எவ்வாறு திரட்டப்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நேட்டோ வீரர்கள் (மாதிரி புகைப்படம்) பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரிக்க, அரசாங்கங்கள் மற்ற துறைகளில் இருந்து பணத்தை எடுத்து, பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வேண்டும் என்று முனைவர் ஸ்வென் பிஷப் கூறுகிறார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக இல்லை என்றாலும், நேட்டோவில் உறுப்பினராகவே உள்ளது. பாதுகாப்புக்கான செலவுகளை அதிகரிக்க அதன் வெளிநாட்டு உதவித் திட்டங்களைக் குறைப்பது குறித்தும் பிரிட்டன் பரிசீலித்து வருகிறது. 11 ஆண்டுகளுக்கு முன்பு, நேட்டோ உறுப்பு நாடுகள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது இரண்டு சதவீதத்தை பாதுகாப்புக்காக செலவிட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்தன. நேட்டோவின் கூற்றுப்படி, அதன் 32 உறுப்பு நாடுகளில் 23 நாடுகள் இந்த இலக்கை அடைந்துள்ளன. இப்போது நேட்டோ இந்த இலக்கை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாக முனைவர் பிஷப் கூறுகிறார். "பாதுகாப்பு செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் குறைந்தது 5% ஆக இருக்க வேண்டும். இது ஐரோப்பாவை பாதுகாப்பில் தன்னிறைவு பெற உதவும். இந்த இலக்கை எட்ட என்ன செய்ய வேண்டும் என்பதை பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்கள் அறிவார்கள். அமெரிக்காவின் கவனம் உலகின் பிற பகுதிகளுக்கு திரும்பினால், போர் ஏற்பட்டால் ஐரோப்பா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும்" என்று அவர் கூறுகிறார். விரைவில் ஒரு ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்க முடியுமா என்ற முக்கிய கேள்வியைக் குறித்து இப்போது ஆராய்ந்தால், அதற்கான பதில் இல்லையென்பதாகவே உள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் தங்கள் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டங்களை அதிகரித்திருந்தாலும், அவை அமெரிக்காவைக் கைவிடத் தயாராக இல்லை. ஐரோப்பிய ராணுவத்திற்காக பரப்புரை செய்யும் நாடுகள், தேவையான பணத்தை திரட்ட மற்ற பகுதிகளில் செலவுகளைக் குறைக்க வேண்டியிருக்கும். அது ஐரோப்பிய ஒன்றிய சார்பு குழுக்களால் கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக இருக்கும். இது வெறும் பொருளாதாரச் சுமையைப் பற்றிய விஷயம் மட்டுமல்ல. ராணுவத்தின் செயல்பாடுகள் மற்றும் முடிவெடுக்கும் செயல்முறையைக் கட்டுப்படுத்துவது குறித்தும் கடுமையான அரசியல் கேள்விகள் எழும். ராணுவத்தின் இத்தகைய முடிவுகள் நாடுகளின் இறையாண்மையைப் பாதிக்கலாம். ஐரோப்பிய ராணுவத்தை உருவாக்குவதற்கு அனைத்து உறுப்பு நாடுகளிடையேயும் முழுமையான ஒற்றுமை தேவைப்படுகிறது. தற்போது, நடைமுறைக்கு மாறான யோசனையாக உள்ள இதனைக் குறித்து, ஐரோப்பிய நாடுகளிடையே ஆழமான வேறுபாடுகளும் காணப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7ll33zx99o

இரான் மீது அமெரிக்கா தாக்குதல்

1 month 1 week ago
அமெரிக்கா தாக்கிய போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் கட்டுமான பணிகள் - செய்மதிபடங்கள் காண்பிப்பதாக பிபிசி தெரிவிப்பு 30 JUN, 2025 | 03:48 PM அமெரிக்காவின் தாக்குதலிற்கு இலக்காகிய ஈரானின் போர்டோ அணுஉலை அமைந்துள்ள பகுதியில் மீண்டும் கட்டுமானப்பணிகள் இடம்பெறுவதை செய்மதிகள் காண்பித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. மக்சார் தொழில்நுட்பத்தின் செய்மதி படங்கள் கட்டுமானப்பணிகள் தீவிரமாக இடம்பெறுவதை காண்பித்துள்ளன என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதலிற்கு உள்ளான போர்டோ அணுஉலையின் அருகில் அகழ்வு இயந்திரமும் கிரேன்களும் இருப்பதை செய்மதி படங்கள் காண்பித்துள்ளன.புல்டோசர் லொறி போன்றவையும் காணப்படுகின்றன. இந்த செய்மதி படங்களை ஆய்வு செய்துள்ள அணுவாயுத நிபுணர் டேவிட் அல்பிரைட்டின் குண்டுவீச்சினால் ஏற்பட்ட பள்ளங்களை நிரப்புதல்,பொறியியல் சேதமதிப்பீடுகளை மேற்கொள்ளுதல் ,கதிரியக்க மாதிரிகளை ஆய்வு செய்தல் ஆகியவை இடம்பெறலாம் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை முற்றாக சேதப்படுத்த தவறியுள்ளது என தெரிவித்துள்ள ஐநாவின் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவர் ஈரான் யுரேனியத்தை செறிவூட்டும் நடவடிக்கைகளை அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கலாம் என தெரிவித்துள்ளார். இந்த கருத்தின் மூலம் ரபேல் க்ரோஸி ஈரானின் அணுசக்தி திட்டம் பல தசாப்தகால பின்னடைவை சந்தித்துள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதியின் கருத்திற்கு எதிரான கருத்தினை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/218853

ஆப்பரேசன் சிந்தூர் - பாகிஸ்தானுக்குள் இந்தியா தாக்குதல்

1 month 1 week ago
போர் விமானத்தை இழந்தோம்’ - கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்! 30 JUN, 2025 | 02:03 PM 'சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் போர் விமானங்களை இந்திய விமானப்படை இழந்ததாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தோனேசியாவில் தெரிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது. பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்காமல் தீவிரவாதிகளின் கட்டமைப்பை மட்டுமே இலக்காக கொண்டு தாக்க வேண்டுமென்ற கட்டளை காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 10-ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் உரையாற்றினார். அப்போது தான் இதை சொல்லியதாக தகவல். இந்த வீடியோ நேற்று (ஜூன் 29) கவனம் பெற்றது. இந்நிலையில், அண்டை நாடுகளை போல் இல்லாமல் இந்திய பாதுகாப்பு படை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் சேவை புரிவதாக மட்டுமே அவர் தெரிவித்ததாக இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் போர் விமான இழப்பு தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரியின் பேச்சை சுட்டிக்காட்டி ஆளும் அரசு தேசத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. “கருத்தரங்கில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்த கருத்துக்கு மாறாக அது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஊடக செய்திகள் அதை தவறாக சுட்டிக்காட்டி உள்ளன. மற்ற அண்டை நாடுகளை போல் அல்லாமல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் தலைமையின் கீழ் பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை தாக்கி அழிப்பதுதான்” என இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. பாகிஸ்தான் நாட்டு ராணுவ நிலைகளை தாக்க வேண்டாம் என்ற கட்டளையின் காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டியதானது என அந்த பாதுகாப்புப் படை அதிகாரி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார். அதன் பின்னர் தாக்குதல் உத்தியை மாற்றி அங்குள்ள ராணுவ நிலைகளையும் குறிவைத்தோம். அதன் பின்னர் தான் தரையிலிருந்து வானத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தினோம் என அவர் விவரித்தார். கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் “இழப்புகள் முக்கியம் அல்ல, முடிவுகள்தான் முக்கியம்” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஆபரேஷன் சிந்தூர்: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. முதலில் தீவிரவாத கட்டமைப்புகளை இந்தியா தாக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. அதை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. அதோடு பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும் தாக்கி அழித்தது. இந்நிலையில், மே 10-ம் தேதி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டது. https://www.virakesari.lk/article/218836
Checked
Fri, 08/08/2025 - 12:43
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed